உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்/R

விக்கிமூலம் இலிருந்து

R
R ‘துல’ (துலங்கல்)
race இனம், குடி மரபு, ஓட்டப் பந்தயம், (பந்தய) ஓட்டம்
race experience இன அனுபவம்
race memory இன ஞாபகம்
racial unconscious இன நனவிலி
racket (raquet) பந்து மட்டை
radial ஆர வீச்சான
radiate ஒளி விடு
radical அடிப்படை மாற்றுநன், முளை களைநன்
radio வானொலி, ரேடியோ
radius ஆரம்
ragging துன்புறுத்தல்
rally அணி திரட்டு
ramble திரிதல்
random தற்செயலான, மனம் போன படி
range பரவல் (st.), வீச்சு
rank வரிசை, மதிப்புத் தரம்
correlation வரிசை இணைப்பு
method வரிசை முறை
rapport மனம் ஒன்றல், மன உடன்பாடு
rapture கழி மகிழ்வு
rate வீதம், விலை, தரமிடு
ratify ஒப்பு (verb)
rating தரமிடல், தரமீடு
rating sheets தரமீட்டுத் தாள்கள்
ratio விகிதம், விழுக்காடு
rational பகுத்தறிவு கூடிய
rationale காரண விளக்கம்
rationalism பகுத்தறிவுச் சிறப்புக் கொள்கை, அறிவு முதற் கொள்கை
rationalization சரி காட்டல், ஏதீடு, காரணங் கற்பித்தல்
raw score மூல மதிப்பெண்
reaction எதிர் வினை
mechanism எதிரியக்கம்
time எதிர் வினைக் காலம்
reactionary பிற்போக்கான

reader வாசகப் புத்தகம், படிப்பாளர், வாசகர், படிப்போர்
readiness, law of ஆயத்த விதி
reading படித்தல்
lip உதடசை வாசிப்பு, உதட்டு முறை வாசிப்பு
room நூற் படிப்பகம்
readjustment மீள் பொருத்தப்பாடு
readmit திரும்பச் சேர்
reality உள் பொருள்
realism புறவுண்மைக் கொள்கை, புறப் பொருட்கொள்கை, தன்மை நவிற்சி
reality principle உண்மைக் கொள்கை
reallignment மீள் தொடர்பு
rear வளர், பின்
re-arrangement test மீட்டடுக்கச் சோதனை
reason காரணம், நியாயம், புத்தி
reasoning ஆய்வு
deductive பகுத்தறி ஆய்வு
inductive தொகுத்தறி ஆய்வு
reasoning power பகுத்தறிவாற்றல்
reasoning tests ஆய்வுச் சோதனைகள்
rebuke கண்டித்தல்
recall மீட்டுக் கொணர்
recapitulation புனர் ஆக்கம், பொழிப்பு, தொகுப்புரை
recapitulatory theory புனர் ஆக்கக் கொள்கை
receipt வரவு, பற்றுச் சீட்டு
receiver பெறுநர்
recency கால அண்மை
receptacle ஏற்குங்கலம்
reception வரவேற்பு, முகமன் அளித்தல்
receptor கொள்வாய், புகுவாய், பொறி
recess ஓய்வு நேரம், ஒதுக்கிடம்
recessive character பின்னிடு பண்பு, புதை பண்பு
recidivists மீள் குற்ற விழைநர்
recipient வாங்குபவர்
reciprocal பரிமாற்ற
reciprocity பரிமாற்று மனப்பான்மை
recital இசைத்தல், கச்சேரி
recitation விவரங் கூறல், பாடங் கூறல்
reckoner கணக்கிடி, கணக்கிடு கருவி
recognition மீட்டறிதல், மீட்டறி-
recollection நினைவு படுத்தல்
recommendation பரிந்துரை
reconstruction திரும்பக் கட்டல், மீளாக்கம்
record பதிவு, பதிவு செய்
cumulative திரள் பதிவு
health சுகாதாரப் பதிவு
physical efficiency உடல் திறமைப் பதிவு
recorder பதிவர்
recreation பொழுது போக்கு
recrui ஆள் சேர்
rectangle செவ்வகம்
rectify சரிப்படுத்து, சீர்ப்படுத்து
recurrent image பன் முறைத் தோன்று விம்பம்
Red cross society செஞ்சிலுவைச் சங்கம்
red-green blindness செம்பச்சைக் குருடு
redirect திருப்பி அனுப்பு, நெறி திருப்பு, திசை மாற்றம்
reductio ad absurdum பிழைக்கு ஒடுக்கல்
reduction குறைத்தல், படி மாற்றுதல்
redundancy மிகைவு
re-edition மீள் பதிப்பு
re-education மீள் கல்வி
reef knot
re-examine திரும்பத் தேர்
referee போட்டி நடுவர், ஆட்ட நடுவர்
reference மேற்கோள், குறிப்பு
refinement நயம்
reflective thinking ஆய்வுச் சிந்தனை, ஆழ் சிந்தனை

reflex மறி வினை
chain தொடர் மறி வினை
conditioned ஆக்க நிலை ஏற்றிய மறி வினை
deconditioned ஆக்க நிலை அகற்றிய மறி வினை
reflex arc மறி வினைப் பாதை
reformatory theory சீர்திருத்தக் கொள்கை
refresher course மறுபயிற்சி
refreshment உண்டி
regard மதிப்பு
regeneration புத்துயிர் கொடுத்தல்
regimentation படை முறைப் படுத்தல்
region திணை நிலம், பிரதேசம்
register பதிவுப் புத்தகம், அட்டவணை
registrar பதிவுப்பணியாளர்
regression பின்னோக்கம் (P), மாறிகளின் தொடர்புப் போக்கு
regulation ஒழுங்கு விதி, ஒழுக்க விதி
rehearsal ஒத்துக்கை
reinforcement பலப்படுத்தல், வலுப்படுத்தல்
reiteration வலியுறுத்தல்
rejection தள்ளல், புறக்கணிப்பு, விலக்கல்
relationship சம்பந்தம், தொடர்பு
relative ஒப்பு; தொடர்புடைய, சார்பு
dispersion சார்புச் சிதறல்
relativism சார்புக் கொள்கை
relativity சார்புடைமை, ஒப்புமை
relaxation இளைப்பாறல், தளர்த்தல் (P)
relay அஞ்சல்
relay race அஞ்சலோட்டம்
re-learning திரும்பக் கற்றல்
release விடுதலை, வெளியீடு
relevancy பொருத்தம், தகுதி
reliability நம்பகம்
coefficient நம்பகக் கெழு
relic நினைவூட்டு சின்னம்
relief map மேடு பள்ளம் காட்டு படம்
religion மதம், சமயம்
religious instruction சமயப் போதனை
remainder theorem மிச்சத் தேற்றம்
remark கருத்துரை
remedial குறை தீர்
remembering நினைவூட்டுதல்
reminiscence பழநினைவு, பழைய நினைவு
remittance (பணம்) அனுப்புதல், கட்டுதல்
remodel திருத்தியமை
remorse கழிவிரக்கம்
remote தொலைவான
remuneration ஊதியம், கூலி
renaissance புது மலர்ச்சி, மறு மலர்ச்சி
renewal புதுப்பித்தல்
reorganization மீள் அமைப்பு
repair ஒக்கிடு, குடக்கெடு, குடக்கு, பழுது
repetition திரும்பச் சொல்லல், மீண்டும் மீண்டும் கூறல், கூறியது கூறல்
replacement ஈடு செய்தல், இடத்திடல்
replica மறு பகர்ப்பு
reply மறு மொழி, விடை (கூறு)
reports அறிக்கைகள்
repository களஞ்சியம்
representation பகரமாக்கல், ஆட்பேராக்கல்
representative fraction பிரதி பின்ன முறை
repression ஒடுக்குதல், நசுக்குதல், அடக்கல்
reprimand கண்டனம்
reprint மீள் அச்சு, புதிய அச்சு
reprisal பழி வாங்குதல், இழப்பீடு
reproach குற்றச்சாட்டு, கடிந்து சொல்லல், அவமானம்
reproduction பிறப்பித்தல், இனப் பெருக்கம், மீட்டு மொழிதல்
reproductive imagination மீட்டுண்டாக்கக் கற்பனை
reproof திட்டு
republic குடியரசு
repugnance மிகு வெறுப்பு, தயக்கம்
repulsion வெறுப்பு, தள்ளல்
reputation நற்பெயர், மதிப்பு
request வேண்டுகோள்
requirement தேவைப்பாடு
requisition கட்டாயக்கைப் பற்றுகை, எழுத்து மூல வேண்டுகோள்
research ஆராய்ச்சி
resentment
reserve ஒதுக்கி வை, அடக்க நடை, ஒதுக்கம்
reservoir நீர்த் தேக்கம், களஞ்சியம்
residential school உறைபள்ளி
residual எஞ்சியுள்ள
residues, method of எச்ச முறை
residuum கழிவு, மண்டி, மிச்சம்
resignation கை விடல், பணி துறத்தல்
resistance எதிர்த்தல், தடை, எதிர்ப்பு
resolution மனவுறுதி, பிரித்தல்
resonance ஒத்தொலி, அனுநாதம்
resource வளம்
respect மரியாதை, நன்மதிப்பு
response துலங்கல், மறுமொழி
response command துலங்கற் கட்டளை
responsibility பொறுப்பு
rest ஓய்வு, இளைப்பாறல்
rest pause ஓய்வு இடை நேரம்
restraint தடுத்தல், கட்டுப்படுத்தல்
restrict எல்லைக்குட்படுத்து
result விளைவு, முடிவு, பயன்
retaliation பழி வாங்கல்
retardation தாமதப்படுத்தல், வேகம் குன்றல்
retention இருத்துதல், மனத்திருத்தல், நினைவில் வைத்தல்
retentiveness மனத் திருத்து திறம்
retina விழித் திரை, பார்வைப் படலம்
retinal rivalry விழியிடைப் போட்டி
retirement ஓய்வெடுத்தல், விலகுதல்
retort சுடு சொல்
retrace தடம் திருப்பு
retributory theory பழி வாங்கற் கொள்கை
retro active inhibition பின்னோக்கத் தடை, பின் செயற்றடை
retrograde பின்னுக்குப் போகிற
retrospection பிற்காட்சி, பின்னோக்கு
return திரும்பு, திரும்பறிக்கை
revelation வெளிப்படுத்தல்
revenge வஞ்சம் தீர்த்தல்
revenue வருவாய்
reverenee பயபக்தி
reverse திருப்பு, கவிழ்
reversible perspective மாறு தோற்றம்
reversion முன்னிலையடைதல்
review திரும்பப் பார்த்தல், மீள் நோக்கு
revision சரி பார்த்தல், மீள் பார்வை
revival உயிர்ப்பித்தல், வலுப் பெறல்
revolution புரட்சி
reward பரிசு, வெகுமதி
rewrite மீண்டெழுது
rhetoric சொற்கோப்புக் கலை
rhyme எதுகை, அடியீற்றெதுகை
rhythm சந்தம், தாளம்
rhythmic activities சந்தச் செயல்கள், ஒருங்கமை செயல்கள்
commands சந்தக் கட்டளைகள்
rich செல்வ மிக்க
rickets கணைச் சூடு, கணை நோய், ரிக்கெட்சு
riddle விடுகதை, புதிர்
ridicule ஏளனம், எள்ளல்
right நேரான, சரி(யான), வலது, உரிமை
angled செங்கோண
handedness வலக்கைப் பழக்கம்
mindedness நல்லெண்ணம்
rigid உறுதியான, வளையாத
rigidity இறுக்கம்
ring வளையம், வட்ட அரங்கம், மணியடி
ring games வட்ட அரங்க ஆட்டம்

ripe முதிர்ந்த, பழுத்த, பக்குவமான
risk இடர், இன்னல்
rite சடங்கு
ritual சடங்கு முறை
rivalry போட்டி
road சாலை, பாட்டை
rods and cones கோல்களும், கூருருளைகளும்
role நடி, பங்கு
roll பெயர்ப் பட்டி, சுருள், கரணம்(P)
backward பிற்கரணம்
forward முற்கரணம்
roll black-board சுழல் கரும் பலகை
roll-call பெயரழைப்பு
room அறை, இடம்
rope-climbing கயிறேறல்
rotation சுழற்சி, வரிசைப்படி வருதல்
rote learning நெட்டுருப் போடல்
rotractor சுழல்மானி
rough value தோராய மதிப்பு
rough work சீரற்ற வேலை
roughness சொரசொரப்பு
round வட்டமான, உருண்டையான, சுற்று
routine நாள் முறைப் பழக்கம்
rubber நொய்வம், ரப்பர்
rule சட்டம், முறை, விதி, ஆட்சி செய்
ruler கோடிட உதவி
run-about age துள்ளித் திரியும் பருவம்
running ஓட்டம்
broad jump ஓடி அகலத் தாண்டல்
high jump ஓடி உயரத் தாண்டல்
rural நாட்டுப்புற
rush நெருக்கடி, பாய்ச்சல்