ஆலமரத்துப் பைங்கிளி/கோடிச் செம்பொன்

விக்கிமூலம் இலிருந்து

8
கோடிச் செம்பொன்

“சாவித்திரி, போயிட்டு மத்தியானத்துக்குள்ளே விட்டுக்கு வந்திடறேன்; வீட்டுக்காரர் வாடகைக்கு வந்தால், எப்படியும் இன்னிக்குள்ளே கொடுத்திடுறதாச் சொல்லு!" என்று கூறிவிட்டு வெளிக் கிளம்பினான் ராம சாமி.

கணவன் சென்று மறைந்த வழியையே விழி நோக்கப் பார்த்துக் கொண்டிருந்த சாவித்திரி நீண்ட பெருமூச்சை நிலைப்படியில் தங்க வைத்தபின் உள்ளே நுழைந்தாள். உலகாளும் மாதாவின் அருட்புன்னகையைச் சுடர் தெறித்துக் காட்டிய குத்துவிளக்கின் தெய்வ ஒளி பிரதிபலித்துக் கொண்டிருந்தது. 'தாயே! இன்றைக்காகிலும் ஏதாவது வழியைக் காட்டு’ என்று அவளது இதயம் பிரார்த்தித்தது. சேலைத் தலைப்பால் கண் இமைகளைத் துடைத்த வண்ணம் கூடத்திலிருந்து சமயலறைக்குள் பிரவேசித்தாள் அவள்.

அடுத்த பகுதியில் குடியிருந்தவர் வீட்டுக் கடிகாரம் ஒன்பது முறை ஓசை எழுப்பி அடங்கியது.

சமையல் உள்ளில் தகர டப்பாவைத் கவித போது, இரண்டு அல்லது மூன்று ஆழாக்குகள் காணும்படியாகப் பச்சரிசி தரையில் சிந்தியது. காய்கறிக் கூடையில் நாலு தக்காளிப் பழங்கள் இருந்தன; வதங்கிப் போன கத்திரிக்

காய்கள் மூன்று கிடந்தன. தட்டில் அரிசியை அள்ளிப் போட்டு அதன் மேற்பரப்பில் காய்கறிகளை எடுத்து வைத் துக்கொண்டு சமையல் செய்ய முன்னேற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கிள்ை அவள்.

அப்போது, 'அம்மா!' என்று அழைக்கும் குரல் கேட் டது. வெளியே வந்தாள் சாவித்திரி. அவள் மனம் அடித்துக் கொண்டது. அவள் எதிர்பார்த்திருந்தது போலவே, வீட்டின் சொந்தக்காரர் வாடகைக்கு வந்து நின்றிருந்தார். சுவரில் தொங்கிய காலண்டரில் பதினேந்து என்றிருந்த இலக்கங்கள் இரண்டும் அவளை அச்சுறுத் தின. -

ஐயா, இன்னிக்கு சாயந்திரத்துக்குள்ளே உங்களுக் குச் சேர வேண்டிய வாடகைப் பணத்தைக் கட்டிப்பிடு ருேம். தயவுசெஞ்சு இந்த ஒரு தடவை மட்டிலும் கோபித்துக் கொள்ளாதீங்க!’ என்று கெஞ்சிள்ை அவள்,

விட்டுக்காரனின் வெட்டரிவாள் மீசையில் கோபம் கொந்தளித்தது; நெற்றிப் பொட்டில் ஆத்திரம் கனிக் தது. ம்!...இன்னேக்குப் பொழுது படுறதுக்குள்ளாற வாடகை என் வீடு தேடி வரலேயான, என்கிட்டேயிருக் கிற உங்க அட்வான்ஸ் பணம் ஐம்பது ரூபாயிலே போன மாத வாடகையை எடுத்துக்கினு, பாக்கிப் பணம் இருபத் தஞ்சை கானே உங்களைத் தேடி வந்து வீசிப்பிடுவேன். இந்தப் பதினேஞ்சு நாள் வாடகை எனக்கு நஷ்டமானப் பாதகமில்லை. நீங்க வீட்டைக் காலி பண்ணிப்பிடுங்க அம்மா! அதுவே போதும். முனு பேருங்க வீட்டுக்கு அலையுருங்க!’ என்று நிர்த்தாட்சண்யத்துடன் எச்சரித் திார் அவர். - -

‘ஐயா, அப்படியெல்லாம் ஒண்னும் செஞ்சுடாதீங்க. பக்கத்துக் குடித்தனக்காரங்க எளனம் பண்ணுவாங்க.

பலமாப் பேசாதீங்க. நீங்க போங்க. எங்நேரமானலும் நானே பணத்தைக் கொண்டாந்து தக்துடறேன். ஆபத் தும் சம்பத்தும் யாருக்கும் உண்டுன்னு நீங்க கேட்டதில் லேயா? என்ன செய்யறது?...எங்க போருத காலம் இப் படிக் கஷ்டப்படுகிருேம்! தயவு பண்ணி இன்னிக்கு ஒரு நாள் மாத்திரம் உங்க கோபத்தைக் கட்டுப்படுத்திக்கங்க ஐயா!’

உதிர்ந்த நீர்மணிகள் வந்தவரின் இதயமற்றபேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தன.

இந்த மட்டிலாவது விஷயம் அடங்கியதே என்று ஆறுதல்கொண்ட சாவித்திரி, குனிந்த தலே கிமிராமல் அடுப்படிக்குள் சென்றாள். கைகளிலே தேங்கிய முகத் தோடு துயரத்தின் ஒருருவாக அமர்ந்தாள் அவள்.கடந்து போன காற்பத்தைந்து நாட்களின் இருட்டுப் பகுதி’ அவளது மனப்படுதாவில் ஒளிக்கோடாக விளங்கியது. ஆனல், விடிவும் விகளவும் ஒளி கொண்டிருக்கவில்லையே!.

‘அரைத் தம்ளர் காப்பி குடித்துவிட்டுப்போனவர் எங்கெங்கே வேலைக்கு அலையருரோ?...தண்டையார் பேட் டையிலிருந்து பஸ்ஸில் எங்கே சென்றிருக்கப் போருர்? அவரிடம் துட்டு எப்படி இருந்திருக்கும்? அம்பிகையின் அருளாலே இன்னிக்கானும் ஏதாச்சும் வேலை குதிர்ந்தால் எவ்வளவோ சிலாக்கியமாகிவிடும்!”

உலே வைத்தாள் சாவித்திரி. அரிசி கொதித்தமாதிரியே மனமும் கொதித்தது. அதிகாலேயில் காப்பி தயாரித்துக் கொடுத்துவிட்டு, குளித்து முழுகி, ஒன்பது மணிக்குள் சாப்பாடு போட்டுத் தன் கணவனே வேலைக்குஅனுப்பி வைத்த நாட்கள் இப்போது அவளுக்குக் கனவோ என்றுகூடத் தோன்றியன.

安· 率

கட்ட நடுப்பகல். வாசலில் வழி அமைத்துச் சென்று கொண்டிருந்த ரஸ்தாவில் தார் உருகியோடியது.

சாவித்திரி வாசலுக்கும்.உள்ளுக்குமாக நூறு தடவை நடந்தாள். தன்னுள் மூண்டெழுந்த பசித் தீயை அவள் உணர்ந்தாள். ஆனல், அதைப் பற்றிக் கருதவில்லை; கருத்திடை கொள்ளவும் இல்லை. கொண்டவனின் பசி அவள் இதயத்தில் இருந்த பசித்தியை இரட்டிப்புடன் அதி கரிக்கச் செய்தது. தன் பசியில் தன்னுடைய கணவனின் பசியின் கொடுமையைத்தான் அவள் உணர முடிந்தது; உணர்ந்தாள். இதயம் வேதனையை அனுபவிக்கையில், விழிகளும்தாம் சஞ்சலப்படுகின்றன. நெஞ்சின் கண்ணிர் நேத்திரங்களில் கூடி வருகின்ற விந்தையில் வாழ்க்கைப் புதிர் ஒளிந்துகொண்டிருக்கிறதோ?

கிழித்தெறியப்பட்டுக் காலமெனும் கு ப் ைப க் கூடைக்குள் திணிக்கப்பட்டு விட்ட நாட்காட்டித் தாள் களேத் தேடிப் பிடித்து ஒட்ட வைத்துப் பார்வையிட்டாள் சாவித்திரி. பிறந்த புண்ணிய பூமியின் பெரும்ையில் அவள் தன்னே மறந்தாள், அந்த இன்ப கினேவிலே திருநாளுர் அக்கிரகாரத்தின் வளப்பம் இருந்தது; அவளது இளமை காட்களின் எழில் இருந்தது; வான் வேட்டையின் சரிதை இருந்தது; ஆயிரம் ரூபாய் வரதட்சணை அறிமுகப் படுத்தி நிலைக்க வைத்த ராமசாமியின் அன்பும் அமைக் தது. விரலுக்குத் தகுந்த வீக்கம் என்பார்கள். அதே போல், பிறந்தகமும் புக்ககமும் அவள் வரை இதம் தந்தன. ‘மாங்குடியிலிருந்து ராமசாமி சென்னைக்கு வந்தான். எஸ். எஸ். எல். ஸி. படிப்பும் செர்வீஸ் கமிஷன் பரீட்சைத் தேர்வும் அவனுக்கு ஈரோட்டிலே ஆறு மாசத்துக்குப் பலன் தந்ததுடன் திருப்திய்டைந்தன போலும் ஆகவேதான் அவன் பட்டணத்தை நாடினன்; வேலை தேடினன். கடைசியில் தண்டையார்பேட்டையில்

மருந்துக் கம்பெனி ஒன்றில் டெஸ்பாட்சிங் கிளார்க்’ அலுவல் கிடைத்தது. தொண்ணுாறு ரூபாய்ச் சம்பளம். குடித்தனம் வைத்தான் ராமசாமி. அரிசி, புளி முதலியன கிராமத்திலிருந்து வந்தன. எப்படியோ இரண்டு வருஷங் கள் தன்னைப்போல ஒடின. ஆறு மாதங்களுக்கு முன்னர், இருவருடன் மூன்றாவது நபர் சேரும்படியான ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. ஆல்ை, அதுவும் கழுவியது. கருச் சிதைவு உண்டாக்கிய சாவித்திரியின் உடல் கலக் குறைவச் சமன் செய்யவே அவனுக்கு நூறு ரூபாய்க்கு மேல் செலவாகிவிட்டது. கடைசியில், வேலை பார்த்த இடத்திலும் அவனுக்குத் தோல்வியே கிடைத்தது. தபால் தலைகளின் வரவு செலவுக் கணக்கில் ஏற்பட்ட தவறின் விளைவாக அவன் வேலையை விட்டு நீக்கப்பட்


‘சாவித்திரி! அந்த மானேஜரின் ஒன்றுவிட்ட அத்திம் பேர் பையன் வந்திருக்கிருன். அவனுக்கு என் வேலையைக் கொடுத்துவிட்டார் மானேஜர். நீ கவலைப்படாதே. தெரிக் தவர்களைக் கண்டு எப்படியும் இன்னொரு வேலை பார்த்துக் கொள்கிறேன்!” என்றான் அவன். இடையில் நழுவிய நாட்கள் சாமான்யமானவையா? அவை ஏற்படுத்திய மனக் கவலைகள் எத்தனையோ உண்டே?

சாவித்திரி தன் கினேவு எய்தினுள். விழி நீர் கால் விரல்களில் தெறித்து விழுந்து கொண்டிருந்தது. செருப்புச் சத்தம் கேட்கவே, கண்களைத் துடைத்துக் கொண்டு தெருவைப் பார்த்தாள். பக்கத்து வீட்டுக்காரர் புடவை, பலகாரங்களுடன் உள்ளே நுழைந்தார். ஒதுங்கிக்கொண்ட அவள் தன் வீட்டுப்பகுதிக்குள் அடி யெடுத்து வைத்தாள். அருகிருந்து புறப்பட்டு வந்த பேச் சரவம் காதுகளில் ஒலித்தது. அவர்கள் மாட்னிஷோ” வுக்குப் போகப் போகிருக்கள்! கேத்திக்கு வாடகைக்குக் கொடுக்க பணம் கடன் கேட்டதுக்கு இல்லை என்றாளே கோமதி?...ம்!”

ఆ 7

வெறிச்சோடிக் கிடந்தது மனம். கடந்த ஒரு வார மாகக் காலேயில் வீட்டை விட்டுச் சென்று மறுபடியும் இரவு ஒன்பது மணிக்குத் திரும்பிவந்தான் ராமசாமி. சிபாரிசு செய்வதுடன் தனக்கு வேண்டிய சாப்பாட்டு வசதிகளேயும் செய்து கொடுத்ததாயும் அவன் மனைவி யிடம் விளக்கம் கொடுத்தான். கல்லவர்கள் நாலு பேர் இருக்கக் கண்டு தானே மழை பெய்கிறது’ என்று அவள் எண்ணி ஆறுதல் அடைந்தாள்.

வீட்டு வாடகையின் கினேவு மீண்டது. அவளுடைய மனத்தின் அடிவாரத்திலிருந்து பயம் எரிமலையாகக் கனன்று வெடித்தது. இருபத்தஞ்சு ரூபாய் எப்படிக் கிடைக்கப் போறது?...’ என்று அவள் குழப்பம் அடைய வாளுள். வேலேயின்றிக் கழிந்த இடைவேளை காட் களுக்கு உதவிய தங்க வளையல்கள், ஒரு கல் மோதிரம், கழுத்துச் சங்கிலி ஆகியவற்றை எண்ணியபோது, அவளால் துக்கத்தைக் கட்டுபடுத்த இயலவில்லை. எப்ப டியும் இன்னிக்குப் போதுக்குள்ளே வாடகை கட்டியாக அனும்’ என்ற உறுதிப்பாடு புறப்பட்டது. மண்ணடியில் வாசம் செய்து வரும் சித்தியின் ஞாபகம் வந்தது. அங்கு சென்று கிலேயை காகுக்காக விளக்கிக் கடன்வாங்கி வர வேண்டுமெனத் தீர்மானம் செய்தாள் சாவித்திரி. கண் னடியில் முகத்தைப் பார்த்து, அம்பிகையின் பூஜை அறையைத் தரிசித்து, வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம் பின

             *             *                   *
மண்ணடி முனையில் ஏமாற்றம் கேர்டிட்டுக் காட்டிய முகத்தோடு வந்து கொண்டிருந்தாள் சாவித்திரி. வேகாத வெய்யிலில் தண்டையார்ப் பேட்டையிலிருந்து நடந்து தம்புச் செட்டித் தெருவுக்கு வந்தாள். தேடிப் போன தெய்வம் அவன்த் தேடி வரவேண்டாம்; கடைசிப்

பட்சம், வீட்டிலாவது இருந்திருக்கலாகாதா? அதுவும் இல்லை. அவளுடைய சித்தி ஊருக்குப் போய் விட்டா ளாம்! சூடு கண்ட வெண்ணெய் போல அவள் மனம் உருகியது. ஒருக்கால் அவர் சாப்பாட்டு அகத்துக்கு வங் திருப்பாரோ? ஐயோ, பாவம் என்ற புதிய குழப்பம் ஏற் படவே, அவள் சற்று வேகமாக கால்களே எடுத்து வைத்து கடக்க முற்பட்டாள். குதிகால் இரண்டிலும் சூடு பற்றியது. சித்திரைக் கோடையல்லவா? தாகமாக இருந்தது. வீட்டையே குறிவைத்து அவள் விரைந்து பிராட்வே திருப்பத்தில் மடங்கியபோது, சாவித்திரி!’ என்று ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தாள் அவள். தன் முன்னே ஆடம்பரமே உருவமாக-நாகரீ கத்தின் பிரதிபிம்பமாக-அலங்கார ஆடைகளின் கூட்டுச் சக்தியாக பெண் ஒருத்தி நின்றுகொண்டிருந்தாள். காலில் ‘ஸ்லிப்பர் கையில் பெண்குடை'; பெண் பதுமையென கின்றாள். ஆனால், சாவிததிரிதான் இப்போது பேச கா வெழாமல் திகைப்புற்று நின்றுகொண்டிருந்தாள். உள் ளங் கால் குடு உச்சக்தலேக்கு ஏறிக்கொண்டிருந்ததை அவள் மட்டும்தானே உணர முடியும்?

சாவித்திரி, என்னைப் புரியவில்லையா? ‘நீங்கள்...!” வியப்புணர்ச்சிக்குறி அவள் வதனத்திலும் கொக்கி யிட்டுக்கிடந்தது. - -

‘நான்தான் மாலதி தஞ்சாவூரில் சாரதாம்பாள் ஹைஸ்கூலில் நான் உன்னேடு படிக்கவில்லையா?”

சாவித்திரி இன்னமும் தெளிவு பெற்றாள் இல்ல! “ஸ்கூல் டிராமாவிலேகூட பிரைஸ் வாங்கியிருக்கேனே நான்...? என்றாள் மாலதி, வலது கையிலிருந்த டம்பப் பையைச் சுழற்றியபடி இடது கையில் இருந்த குடை யின் நிழல் சாவித்திரிக்கும் உதவியது.

சாவித்திரி துள்ளிக் குதித்தாள். ‘ஆமா; இப்போ நெனப்பு வந்துடுத்து, மாலதி!’ என்றாள் அவள். பள்ளி வாழ்வு என்னும் பசுமைப்புல் தரையில் பணம் என்னும் மெருகு பொலிவு காட்டித் திகழ்ந்த மாலதியை எண்ணினாள்; ரங்கூனில் மர வியாபாரம் செய்து வீடு திரும்பிய மாலதியின் தந்தை செய்த ராஜோபசாரத்தை சாவித்திரியால் மறக்க முடியாது. கிழக்கத்திக் காளை பூட்டிய கூண்டு வண்டியில் தினமும் பள்ளிக்கு வந்து போகும் அவளது பழக்கத்தையும் வேளைக்கு ஓர் அலங்காரம், காளைக்கு ஓர் ஆடை என்று தோன்றிய அவளுடைய ஆடம்பரத்தையும் நினைவுக்கு கொணர்ந்தாள் சாவித்திரி, அவள் விழிகள் மாலதியைக் கூர்ந்து நோக்கின. கழுத்தில் தொங்கிய தங்கச் சங்கிலி, கைகளில் மின்னிய தங்கவளையல்கள், மோதிரங்கள், ’லோலாக்குகள் ஆகியவற்றையும் பார்த்தாள் அவள்.

‘அப்பா செளக்யமா, மாலதி! அவர் எங்கே இருக்கார்? ரங்கூனில் தானா? நீ எத்தனை நாளாகப் பட்டணத்தில்இருக்கே?’

‘இப்போது அப்பா இங்கேதான் இருக்கார்; செளக்யமாகவே இருக்கார்; மயிலாப்பூரில் இருக்கிறோம்; ஸில்க் எம்போரியம் வைத்திருக்கார்; கார் ஸெர்வீசுக்குப் போயிருக்கு; இங்கே என் சிநேகிதி ஒருத்தியைப் பார்க்க வந்தேன்!” என்று பதில் சொன்னாள் மாலதி.

“உனக்குக் கல்யாணம்...!”

‘ஆகிவிட்டது’ என்றாள் மாலதி.

இருவரும் தத்தம் கல்யாணங்களுக்கு அழைப்புக்களைப் பரிமாறிக்கொள்ள மறந்துபோன குற்றத்துக்குப் பரிகாரம் தேடனார்கள்.

‘உன் அகத்துக்காரர் எங்கே வேலையில் இருக்கார்? என்று சாவித்திரியை வினவினாள் மாலதி.

சாவித்திரியின் உதடுகளில் உண்மை உறைந்தது. ‘மாலதியிடம் என் அவல நிலையைச் சொன்னால், தன் அப்பாவிடம் சொல்லி ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்வாளே! ஆமாம், எங்கே வேலை பார்த்தால் என்ன?

விஷயத்தை விளக்கினாள் சாவித்திரி.

‘அப்படியா?...இன்றைக்கு ராத்திரியே அப்பாவிடம் சொல்லி ஆவன செய்கிறேன். நீ உன் விட்டு விலாசத்தைக் கொடு. நான் அடுத்த திங்கள் கிழமை எங்கள் காரை எடுத்துவந்து உன்னையும், உன் கணவரையும் எங்கள் வீட்டுக்கு அழைத்துப் போகிறேன். கவலைப்படாதே!

நாடக மேடையில் சம்பாஷணையை ஒப்புவிக்கும் பாங்கிலே மாலதி பேசினாள்.

சாவித்திரி அவளுக்குக் கரங் கூப்பி அஞ்சலி தெரிவித்துத் திரும்ப எத்தனித்தபோது, ‘சாவித்திரி, வா ஆளுக்கு ஒரு கப் காப்பி சாப்பிட்டுவிட்டுப் போகலாம்!’ என்றுசொல்லி அவள் கரம்பற்றி அழைத்துச் சென்றாள் மாலதி.

புதிதாகத் திறக்கப்பட்டிருந்த ‘மைசூர் பவன’த்திலே கூட்டம் நெரித்தது. பெண்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த கூடத்தில் மாலதியும் சாவித்திரியும் அமர்ந்தார்கள். மாலதியும் சாவித்திரியும் அமர்ந்தார்கள். மாலதி கைப் பையைத் திறந்து கைக் குட்டையை எடுத்து முகத்தை லேசாகப்பட்டும் படாமலும் துடைத்தாள்; பிறகு குளிர்ச்சிக் கண்ணாடியை அணிந்தாள். சாவித்திரியின் வியர்வைத் துளிகள் அவளுடைய கைத்தறிப் புடவை முன்றானையில் அடங்கின. தன் பக்கம் பறந்து விழுந்த தோழியின் நைலான் புடவைத் தலைப்பை எடுத்து அவள் வசம் தள்ளிவிட்டாள் சாவித்திரி. சற்று தொலைவில் இருந்த தம்பதி மாலதியையே இமைக்காது பார்ப்பதையும் அவள் கவனிக்கத் தவறவில்லை.

‘என்ன அம்மா வேண்டும்?’

பரிமாறும் ஆள் வந்து நின்றான்.

மாலதி தலையை நிமிர்த்திப் பார்த்தாள். அதே தருணம் சாவித்திரியும் முகத்தை உயர்த்தினாள். மறுகணம் அவளது எண்சாண் உடம்பும் கூனிக் குறுகியது.

‘என்ன சொன்னாய்?... அம்மாவா? ...என்று எரிந்து விழுந்தாள் மாலதி.

‘அம்மா என்று அழைப்பது தவறில்லையே! பெற்றொடுத்த புனித தெய்வத்துக்கு இட்டுச் சூட்டி அழைக்கப்படும் பவித்திரமான சொல்லாயிற்றே அம்மா என்பது!...இந்த ஒரு சொல்லுக்குக் கோடிச் செம்பொன் கொட்டிக் கொடுத்தாலும் ஈடாகாதே!’ என்றான் ‘செர்வர்’

‘ம்!...உங்கள் வாய்க்குத் தகுந்த மாதிரிதான் உங்கள் பிழைப்புக்கும் வழி வகுத்துக் கொடுத்திருக்கிறான் ஆண்டவன். அம்மாவாம் அம்மா!’

மாலதி பற்களைக் கடித்தாள்.

சாவித்திரிக்கு வியர்த்துக் கொட்டியது.

செர்வரின் முகம் கறுத்தது. குனிந்த தலை நிமிராமல் நின்றவண்ணம், ‘சரி; என்ன வேண்டும் உங்களுக்கு?’ என்று கேட்டான்.

‘இரண்டு கப் காப்பி!’

பரிசாரகன் வந்தான்; காப்பி கிளாஸ்; சாஸர்; இரண்டு ‘செட்’டையும் ஒன்றன் மீதொன்றாக அடுக்கியவாறு கொண்டு வந்து மேஜையில் வைத்து, மேலிருந்த ஜோடியை எடுக்கையில் கை தடுமாறவே, இரண்டு கிளாஸ் காப்பியும் மேஜைமீது சிதறி வழிந்து மாலதியின் அழகிய புடவை துணியை நனைத்தது.

‘ஏம்பா, நீ புது சப்ளையரா?...கொஞ்சமாவது மூளை இருக்க வேண்டாமா?...’ என்று பொரிந்து தள்ளினாள் மாலதி. சிவந்த முகம் மேலும் ரத்தச் சிவப்பானது.

‘கோபித்துக் கொள்ளாதீங்க; வேறே கொண்டு வந்திடறேன்!’ என்று சமாதானப் படுத்திக் கொண்டிருந்தான் ‘சப்ளேயர்’. அந்தச் சமயத்தில் ஹோட்டல் முதலாளியே வந்துவிட்டார். ‘ஏப்பா, நீ வா!’ என்று குரல் கொடுத்தார். குங்குமப்பொட்டு அணிந்து நாடகக்காரன் போன்றிருந்த ஒரு நபர் வந்து நின்றான்.

‘இரண்டு கப் காப்பி!’ என்று உத்தரவிட்டாள் மாலதி, அவன் கண்ணாடியைக் கழற்றிக்கொண்டே விழிகளைக் கூர்மைப்படுத்திய நிலையில் ஏனோ தடுமாற்றத்தின் சுவடு காணப்பட்டது. பவுடர் பூசப்பெற்ற வதனத் திரையில் பனி முத்துக்கள் கோலம் போட்டிருந்தன! காப்பி அருந்தினதும், மெளனமே உருவாக தோழிகள் இருவரும் வெளியேறினார்கள். சாவித்திரியின் வீட்டு முகவரி அடங்கிய துண்டுக் காகிதம் மாலதியின் டம்பப் பைக்குள் சென்றது; சில்லறைக் காசுகள் குலுங்கின. விடை பெற்றுப் பிரிந்தனர்.

சாவித்திரியின் இதயம் புலம்பிக் கொண்டிருந்தது. தலை கனத்துக் கிடந்தது. நொடிக்கு ஒரு முறை பெரு மூச்சுப் பிரிந்தது. கழுத்தில் ஊசலாடிய தாலிக் கயிற்றில்兴 o: ※ அவளது கண்ணீர்த் துளிகள் ஒவ்வொன்றாகச் சிதறின. ‘இருந்திருந்து இவர் ஹோட்டலில் ஸெர்வராகவா வேலை பார்க்க வேணும்?...இவ்வளவு நாளாகக் காலையில் வீட்டை விட்டுக் கிளம்பும் இவர், இரவில் வீடு திரும்பும் ரகசியம் இதுதானா? ஏன் இதை என்னிடம் சொல்லவில்லை? நான் மனம் புண் படுவேனோ என்றுதான் ஒளித்து வைத்திருந்தாரா?... கடைசியில் எப்படிப்பட்ட பயங்கர விளைவு உண்டாகிவிட்டது?... ஐயோ, தெய்வமே! என் கண் முன்னாலேயே அவரை எப்படியெல்லாம் ஏசி விட்டாள் மாலதி எல்லாம் பணத் திமிர்! ...வாட்டும்!...”

மாலதியின் மூலம் தன் கணவனுக்கு விடிவு காணச் செய்ய முடியும் எனக் கொண்டிருந்த சபலத்திலும் சலனம் கண்டது; சாவித்திரியின் நெற்றி நரம்புகள் தெறித்து விழுந்தன. சமைத்திருந்த சோறு ஆறிவிட்டிருந்தது. ஆனால், மனம் மட்டும் ஆறவில்லை.

இரவு எட்டு மணிக்கு ராமசாமி மனை புகுந்தான்.

இல்லத்தரசியின் விழிவெள்ளம் பதியின் பாதங்களை நனைத்தது. இருந்திருந்தாற்போல சாவித்திரி மயங்கிச் சாய்ந்தாள். வந்த டாக்டர் நல்ல சேதி சொன்னார்:

‘சாவித்திரி, நீ அம்மாவாகப் போகிறாய், கோடிச் செம்பொன் கொடுத்தாலும் ஈடு சொல்ல இயலாத ‘அம்மா’ என்னும் புனித பதவிக்கு கீ உயர்ந்து விடப் போகிறாய்! இன்னொரு நல்ல சேதியையும் சொல்லி விடுகிறேன். இனி மேல் நான் ஹோட்டல் சப்ளையர் அல்ல. மாம்பலத்தில் என் நண்பர் வைத்திருக்கும் டிரக் ஸ்டோரில் நான் ஒரு குமாஸ்தா. சம்பளம் நூற்றிருபது ரூபாய். இந்தா பணம் துாறு ரூபாய் முன் பணம் கிடைத்திருக்கிறது. காப்பி சாப்பிட வந்த நண்பர் அளித்த பரிசும் பதவியும் இனி நம்மைக் காப்பாற்றும். வீட்டு வாடகைப் பணத்தைக் கொடுத்துவிட்டு வருகிறேன். ஹோட்டலில் கிடைத்த சம்பளம் வீட்டு வாடகைக்கு உதவுகிறது. கடந்ததை நீ மறந்துவிடு, சாவித்திரி!’ என்று உண்ர்ச்சி வசப்பட்டுப் பேசினான் ராமசாமி.

தன் தோழி மாலதிக்காகக் காத்திருந்தாள் சாவித்திரி; தன் கணவனைச் சுடு சொல்லால் ஏசிய அவளுக்குப் பாடம் கற்பிக்கத் துடித்தாள். ஆனால், அவள் எதிர் பார்த்தபடி மாலதி வரவில்லை. அவளுக்குப் பதிலாக, அவளிடமிருந்து கடிதமொன்று வந்தது; பிரித்துப் படிக்கத் தலைப்பட்டாள் சாவித்திரி:

‘அன்புமிக்க தோழி சாவித்திரிக்கு,

உன்னுடைய மகத்தான பொறுமையின் முன் மண்டியிட்டு மன்னிப்பு வேண்டுகிறேன் நான். என்னை நீ மன்னித்துவிடு. சென்ற வாரம் ஹோட்டலில் நான் யாரை ஏசிப் பேசினேனோ அவர்தான் உன் கணவர் என்பதை நேற்று இரவுதான் நான் அறிந்தேன். சிறு வயசு முதற் கொண்டு என்னுள் ஊறியிருந்த நாடகப் பித்தின் காரணமாக நான் நடிக்க ஒப்பந்தமான ஒரு நாடகத்தின் ஒத்திகைக்குப் போய் விட்டு சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தேன். காலங் கடந்த வேளை. ரிக்‌ஷாவில் வந்து கொண்டிருக்கையில், மவுண்ட் ரோடில் சினிமாப் பார்த்துத் திரும்பிய போக்கிரி ஒருவனால் தாக்கப்பட்டேன். நல்ல வேளையாக எனக்கு ஒரு தெய்வம் உதவியது. அந்தத் தெய்வம்தான் உன் கணவர் அவரை அடையாளங் கண்டதும் என் மனம் பதறித் துடித்தது. அவரே சொன்னார் உண்மையை. உன் கணவர் மாத்திரம் இல்லையென்றால், என் நிலை என்ன ஆகியிருக்குமோ? கோடிச் செம்பொன்னுக்கும் மேலான என் ‘பெண்மை’யை ― மானத்தைக் காத்த தெய்வம் உன் கரம் பற்றியவர்! மதிப் பிடற்கரிய அந்தத் தெய்வத்தின் முன் கின்று சொல்லத் தயங்கிய இன்னொரு உண்மையையும் இப்போது வெளியிடுகிறேன். நீ அன்று கண்ட பணக்காரப் பெண் மாலதி யல்ல நான்; இப்போது நான் ஏழைப் பெண்! ஆனால், வெளிப்பூச்சும் பகட்டும் நாகரீக முலாமும் என்னை யாரிடமும் காட்டிக் கொடுக்கவில்லை. இன்று என்னை நானே உணர்ந்து கொண்டேன். வியாபாரத்தில் ஏற்பட்ட திடீர் நஷ்டம் என் தந்தையைக் கொண்டு சென்று விட்டது. ஆதரவற்றிருந்த என்னை தூரத்து உறவுக்காரர் ஒருவர் பட்டணத்துக்கு அழைத்து வந்தார். என்னூ ஓர் அழகிய இளைஞருக்குத் திருமணம் செய்து வைத்தார். அவர் யார் தெரியுமா? அன்று உன் கணவருக்குப் பதிலாக வந்த இன்னொருவர் ― நாடகக்காரர் போன்றிருந்த குங்குமப் பொட்டுக்காரர் ஒருவர் வந்து நமக்குக் காப்பி கொடுத்தாரே ― அவரேதான் என் கணவர்!...ஆனால், அவர் அந்த ஹோட்டலில் வேலை பார்ப்பதுகூட எனக்குத் தெரியாது. இரவு பகல் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்துக் கொட்டிய பணம் என் ஆடம்பரத்துக்கும் அலங்காரத்துக்கும்தான் கண்டது. நான் நாடகங்களில் நடிப்பதை அவர் வெறுத்தார். ஆனால், அன்று அவர் சொன்ன வார்த்தைகளை இன்று நான் மனப்பூர்வமாய் உணர முடிகிறது. தெய்வத்தின் சக்தி மகத்தானது. என் கண்கள் திறக்க வேண்டுமென்பதற்குத்தான் நேற்று எனக்கு அத்தகைய சோதனை நிகழ்ந்ததோ?... சினிமா பார்த்துத் திரும்பிய உன் கணவர் கார் கிடைக்காமல் நடந்து வரும்படி நேரிட்டதும் என்னேக் காப்பாற்றத்தானே? எல்லாம் விந்தையாய்த்தான் இருக் கிறது. கேற்று என்னைத் தாக்கிய போக்கிரி என் நகைகள் அனைத்தும் ‘போலி’ என்று அறிந்தால், அப்போதே என்னை அழித்திருப்பானே?...என்னையும் என் மானத்தையும் காப்பாற்றி, என் கண்களையும் திறந்துவிட்டு என்னை புதிய மாலதியாக ஆக்கி, என் அன்புக் கணவர் கையில் என்னை ஒப்படைத்துத் திரும்பிய உன் துணைவர் என் கண் கண்ட தெய்வ மனிதர்; அதுமட்டுமல்ல: அவர் என் சகோதரர்! அவரிடம் நான் மன்னிப்புப் பெற்றுவிட்டேன். இனி, நீ மன்னித்தால்தான் எனக்கு அமைதி பிறக்கும்!... நான் தம்புச் செட்டித் தெருவில்தான் இருக்கிறேன். என் ‘குட்டு’ அம்பலமாகக் கூடாதேயென்று தான் நானே உன்னைத் தேடி வருவதாய்ச் சொன்னேன். நாளை கட்டாயம் வருகிறேன், என் புதிய மன்னியைக் காண!

இப்படிக்கு,
மாலதி.’

சாவித்திரியின் உதடுகள் முனு முணுத்தன: ‘பாவம், மாலதி!’

தமிழ்ப் பண்பு சுடர் சிந்த மாலதி வந்தாள். அவள் கணவனும் உடன் வந்தான். விருந்து கடந்து முடிந்தது.

‘ராமசாமி! உங்களை நான் மறக்கவே முடியாது; உங்கள் கம்பெனியில் எனக்கு வேலை வாங்கிக் கொடுத்தீர்கள்; மாலதியும் திருத்தி அவளையும் டைப்பிஸ்டாகச் சேர்த்துவிட்டீர்கள். எங்கள் வாழ்நாள் பூராவும் உங்களுக்கு நாங்கள் இருவரும் கடமைப்பட்டவர்கள்!’

‘உஸ்; சத்தம் போடாதீர்கள் சுந்தரம்! என்னை மறந்தால்கூடப் பாதகமில்லை. என் நண்பர் என் பேச்சுக்காக போக்கிரியாக நடித்தாரே, அவரை மறந்து விடாதீர்கள்!’

அவர்களின் சிரிப்பைக் கேட்டு ஓடிவந்த மாலதியும் சாவித்திரியும் ஏதும் விளங்காமல் இப்படியே நின்று கொண்டிருந்தார்கள்!