உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலமரத்துப் பைங்கிளி/சொக்கப் பச்சை

விக்கிமூலம் இலிருந்து

3
சொக்கப் பச்சை

ளத்து மேட்டிலே பொன் விளைந்திருந்தது. மண் தந்த பரிசில் அது. பொன் விளையும் பூமி என்கிறார்களே, அது மெத்தவும் சரி. சாணம் தெளித்துச் சுத்தம் செய்யப்பட்ட தரையில் நெல்மணிகள் ஒன்றுகூடி இருந்தன. அந்தி மாலையின் வண்ண ஒளி அவற்றோடு கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தது.

திருவம்பலச்சேர்வையின் மனத்தில் மகிழ்ச்சி நிறைந்த நினைவுகள் கும்பல் சேர்ந்தன. ‘நல்லவேளை, போட்ட புள்ளி தப்பாது. எல்லாமாச் சேர்ந்து முந்நூறு கலத்துக்குத் தேறாமப்போவாது!’ என்று எண்ணமிட்டார். உழுது பயிரிட்டு உழைத்ததின் பலன் அவர் எதிர்பார்த்த வண்ணமே அமைந்திருக்கக் கண்ட அவருக்கு ஆனந்தம் அலைபாய்க் கேட்கவா வேண்டும்?

தலை முண்டாசை அவிழ்த்து உதறி முகத்தைத் துடைத்தார் சேர்வை. தூசியும் தும்பட்டையும் விலகின. புளிய மரத்தடியில் போரடித்த வைக்கோலை ஒன்று திரட்டிக்கொண்டிருந்தரர்கள் வேலையாட்கள். “ஏலே; மூக்கா! கிழக்கு முக்கத்திலே காத்தடிச்சுக் கிடத்தியிருக்கிற வைக்கல் பிசிறுகளை யெல்லாம் கவ்வல் கம்பாலே ஒண்ணு சேர்த்திடுப்பா” என்று ஆலோசனை சொன்ன திருப்தியுடன் வீட்டு வாசல் நோக்கி விரைந்தார். அவர். நொறுங்கிக் காய்ந்த கடலைக்கொடிகளைச் சாவதானமாக மென்று தின்று கொண்டிருந்த செவலைக் காளையையும் வெள்ளைக் காளையையும் அன்போடு தட்டிக் கொடுத்து விட்டுத் திரும்பினார்.

சுருக்கங்கள் பின்னல் கோலாட்டம் விளையாடிக் கொண்டிருந்த சேர்வையின் முகம் சிரிப்பை ஏந்தித் திகழ்ந்தது. உதடுகளிடைப் பிறந்த மென்முறுவல் அடர்ந்து படர்ந்து நரையோடிய மீசைக்கரையில் ஒய்வு கண்டது. “வாங்க, அத்தான்! திண்ணையிலே குந்துங்க!” என்று முகமன் கூறிய திருவம்பலம், தோளில் கிடந்த துண்டை எடுத்துத் திண்ணையில் விசிறினார்.

“மச்சான், நீயும் குந்து. மகசூல் எல்லாம் எப்படிக் கண்டிருக்கு?” என்று அன்போடு கேட்டார் வேலாயுதஞ் சேர்வை.

“தாராடி சாமி கிருபையாலே எல்லாம் நல்லபடியாகவே கிடைச்சிருக்குங்க, அத்தான். ஆமா, உங்க கண்டு முதல் முடிஞ்சிருக்குமே?...ஐந்நூறு கலம் காணுமில்லே!”

“ஓ!...அதுக்கு மிஞ்சியே கிடைச்சிருக்குது!”

அத்தானின் இதய கிறைவு மச்சானின் முகத்திரையில் பிரதிபலித்தது. ‘தங்கச்சிக்குப் பரணி நட்சத்திரம். அது தரணியாளு மிங்கறது. மெய்யாகாம இருக்கமுடியுமா?’ என்று நினைத்துப் பூரித்தது திருவம்பலச்சேர்வையின் கருணை ததும்பும் உள்ளம்.

இருள் வாசலில் கின்றது.

தீபம் திண்ணைக்கு வந்தது.

இரண்டு குவளைகளிலே நீர் நிரப்பிக் கொணர்ந்தார்கள் வள்ளியும் தேவானையும், கைவளைகள் ‘கலகல’வென இன்பப் பண் பாடின.

சொகமா, வள்ளி?”

68 உம்!”

“ஏம்மா தேவானை, செளக்கியமாயிருக்காயா?”
“ஆமாங்க!”
இருவரும் மறைந்தனர். வளையோசையின் நாத இழைகள் மட்டும் சில தங்கின. 
‘மச்சான்! தைபொறக்கப் போகுதே, நிெனைப் பிருக்குதா?”

“இருக்குங்க, அத்தான்!...இந்த வருசம் உங்களுக்கு, தங்கச்சிக்கு, எங்க மாப்பிள்ளைக்கு எல்லாருக்கும் என் வீட்டிலேதான் பொங்கல் விருந்துச் சாப்பாடாக்கும்!” என்றார் திருவம்பலச் சேர்வை.

‘அதிருக்கட்டும் திருவம்பலம். இந்தத் தையிலே என் மகன் முருகனேடே கண்ணுலம் கடந்தாகனும், ஆமாம், சொல்லிப்புட்டேன்’ என்றார் வேலாயுதம். சற்று நேரம் திருவம்பலம் முகத்தைப் பார்த்தார்.

அதுக்கென்னங்க அத்தான்?...முடிச்சிட்டாப்போ வுது. தாராடிசாமி கிருபையாலே பணம் காசு, கெல்லுப் பில்லு எல்லாந்தான் கைக்கு மெய்ப்ாயிருக்குங்களே?”

“அதான் எனக்கும் புரிஞ்ச கதையாச்சே, மச் சான்?” என்றார் அத்தான்காரர். -

“பின்னே எதுதான் அத்தான் உங்களுக்குப் புரி யலே'-பதட்டம் தந்த மன உழைச்சலுடன் அடுத்த விடிை அண்டியது. -

“உங்கிட்டே பொண்ணுங்க ரெண்டு இருக்கு: ஆன எங்கிட்டே மாப்பிள்ளை ஒண்ணே ஒண்னுதானே இருக்கு, மச்சான்?”

இதுவரை ஆளாகியிராத புதிய குழப்பத்தின் தலை வாயிலில் நிறுத்தப்பட்டார் திருவாளர் திருவம்பலம்.

“வள்ளி தேவானை ரெண்டையும் கலந்து பேசி ஜாதகம் பார்த்து முடிவு செய்யவேண்டிய விஷயம் இது. எனக்கு ஒரு கிழமை தவணை குடுங்க. இந்தத் தையிலே கட்டாயம் பையன் எங்க வீட்டு மாப்பிள்ளையாகிடுவாங்க; வீணா நீங்க மனசைப்போட்டு உளப்பிக்கிடாதீங்க, அத்தான்!” என்றார் திருவம்பலம்.

பாக்கு வெற்றிலைப் பெட்டியின் கனம் கொஞ்சம் இறங்கியது.

இளங்காலைப் பொழுது. மண்ணைப் பொன்னாக்கும் ரஸவாத வித்தையில் ஈடுபட்டிருந்தான் செஞ்சுடர்ச் செல்வன்.

திருவம்பலச் சேர்வையின் மாட்டுத் தொழுவத்தில் இருந்த தண்ணீர்த் தொட்டியில் கழுநீர் கொணர்ந்து ஊற்றினாள் வள்ளிந பிண்ணாக்குத் துண்டங்களைத் துகள்களாக்கி உதிர்த்துப்போட்டாள் தேவானை. வெள்ளைக் காளையை அவிழ்த்துவிட்ட பெருமை வள்ளிக்கு; செவலை மாட்டுக்குத் தொட்டித் தண்ணீர் காட்டிப் புண்ணியம் சேகரித்துக்கொண்ட செருக்கு தேவானைக்கு.

அது சமயம், “ஓ! மாப்பிள்ளையா? வாங்க மாப் பிள்ளை” என்ற குரல் கேட்டது.

வடித்த தண்ணீரில் தவிட்டைக் கொட்டிக் கலக்கிக் கொண்டிருந்த அதே கோலத்தில் தலை நிமிர்ந்தாள் வள்ளி கையில் அப்பியிருந்த தவிட்டுப்பொடிகளைக் கூடக் கருத்தில் கொள்ளாமல் ‘விடு விடு’ வென்று முன்னே அடியெடுத்து வைத்து நடக்கலானாள். மறுகணம் அவளின் களை பொருந்திய முகம் சாம்பியது.

இக்காட்சியைக் கண்டு மனத்துள் சிரித்துக்கொண்டாள் தேவானை; ஆனாலும் அவளுடைய வதனத்தில் கலவரத்தின் சன்னமான இழைகள் பல கோணங்களில் பின்னிக்கிடந்தன; “மச்சானே எங்கே காணோம்?”

“வள்ளி அக்கா, ஏன் திரும்பிட்டே?.மச்சானைத் தானே அப்பா அழைச்சாங்க போலிருக்குது!...” என்று தேவானை சொல்லி இன்னும் வாய் மூடவில்லை.

நாடகத்தில் வரும் ராஜபார்ட்காரன் போல வந்து நின்றான் முருகன். “தேவானை...!வள்ளி...” என்று குரல் கொடுத்தான் அவன்.

“அக்கா, இந்தாப் பார்த்தியா நம்ப மச்சானை!” என்று சின்னக்குழந்தையைப் போலக் குழைந்து கொண்டே ஓடிவந்தாள் தேவானை.

வள்ளியின் கண்களிலே அணைந்திருந்த ஏமாற்றம் பையப்பைய விடை பெற்றுக்கொண்டிருந்தது. “கொஞ்ச முந்தி நீங்க உள்ளே இருந்தீங்களா, மச்சான்?” என்று ஆவலோடு வினவினாள் வள்ளி.

‘ம்’ கொட்டினான் முருகன். அவன் கண்கள் வள்ளி ― தேவானை; சகோதரிகள் இருவரை மாறி மாறிப் பார்த்தன. .

“தேவானை இந்த பூ!...”

“வள்ளி இது உனக்கு!”

பூவையர் இருவரும் பரிசுப்பொருள்களான பூச்சரங்களின் மனத்தில் லயிக்கத் தொடங்கினர்.

“ஆசை மச்சான்!” என்று அன்போடு பாராட்டினாள் வள்ளி.

“நேச மச்சான்!” என்று வாயாறப் புகழ்ந்தாள் தேவானை.

“காலங் கார்த்தாலேயே எங்கே இந்தப் பூச்சரம் கிடைச்சுது, மச்சான்?”

“வயல் காட்டுப்பக்கம் போயிட்டுத் திரும்பயிலே, பண்டாரத்தோடத் தோட்டம் வந்துச்சு, காலையிலே நான் தான் போணி பண்ணினேன். உங்க ரெண்டு பேர் ஞாபகமும் வந்துச்சு. ஆளுக்குக் கொஞ்சம் வாங்கியாக்தேன். வெள்ளிக்கிழமையாச்சே!.குளிச்சி முழுகி மஞ்சள் பூசி தலைவாரி பூமுடிச்சுகிடுவீங்களே!...” என்று விளக்கம் தந்தான் முருகன். வள்ளி―தேவானை இருவருக்கும் ஆனந்தம் பிடிபடவில்லை. குதூகலித்தார்கள்.

தை மாதம் பிறந்துவிட்டது.

ரங்கூன்காரர் வீட்டுப் பூரணிக் காளையை மஞ்சிவிரட்டில் பிடித்து வெற்றிகொண்ட புகழின்போதை முருகனின் இதழ்களிலே நெடி பரப்பிக் காட்டிக் கொண்டிருந்தது. சல்லிக் கட்டுக் காளையின் காவி வண்ண மேனி தழுவி, கூரான சாயம் தோய்ந்த கொம்பு பற்றி, முடித்துவிட்டிருந்தப் பரிசுப் பொருளான சாயத் துணியையும் பத்து ரூபாய்ச் சலவைத்தாளையும் அவிழ்த்து எடுத்துக்கொண்ட காட்சி மனக்கண்ணில் தோன்றியது! அதை அவனால் மறக்க இயலுமா?

‘ஏமூற்றுக் கழிந்த மள்ளரை’ புறநானூறு சொனனது உண்டு. ஆனால், முருகன் முன் தோல்வி கண்டு, காளை முன் களைத்துப் போய்விட்ட கீரமங்கலத்துக் ‘காளைகள்’ இருவரையும் அவன் கண்முன் கண்டிருக்கிறான். கெலிக்கவேண்டும் என்ற ஒரே குறிப்பு நோக்கின் மையப்புள்ளியில் நின்றவாறு, முருகனுக்குப் போட்டியாகப் போராடிய காளிமுத்து, வீரமுத்து ஆகிய இரண்டு வீர இளைஞர்களை அவன் மறக்கவே முடியாது.

வெற்றித் திருவின் வீரப் பெருநோக்கிலே பெண்மையின் இருவேறு நிழல்கள் ஒளி சிந்திச் சிரித்தன; அந்த்ச் சிரிப்பினிலே ஆர்வக் கனலின் இருமனம் பேசியது; நேசம் மறக்காத நெஞ்சுகளின் இணைகுரல் தந்தது; தோன்றாமல் தோன்றி ― மறையாமல் மறைந்து கண்பொத்தி விளையாடும் காதற்கனவுகள் ஏடு விரிந்தன; உள்ளத்தின் எழிலும் உருவத்தின் அழகும் ‘அக்கா ― தங்கச்சி’ என்கின்ற பாசத்தின் பிடிப்பில் பூவிரல்களைப் பிணைத்துக் கொண்டு துள்ளிக் குதித்து ‘உப்புக்கோடு’ விளையாடின! முருகனின் இதயத் தளத்தை அடைத்திருந்த பெருமூச்சு வெளிப்போந்தது. நெடு மூச்சுக்கு இதயம் இருந்தால்; பேசத் தெரிந்தால், அவை தெரிவிக்கக்கூடிய பெயர்கள் இவைதாம், ‘வள்ளி தேவானை!’

முருகன் மண்ணில் நின்றான். ஆனால் அவன் கண்கள் விண்ணைக் காட்டின. எண்ணங்கள் உயர்ந்தால், இதயம் உயர்கிறது; கனவுகள் வாழும் சமயத்தில் மனித மனமும் வாழ்கிறது. இத்தகைய இயற்கை பின்னணியில்தான் மண்ணும் விண்ணும் ‘கழற்சிக்காய்’ ஆடின.

உருமப் பொழுது உருண்டு வந்தது.

“ஏலே முருகா! சோறு உண்ண வாப்பா. வட்டி களுவிப் போட்டிருக்கேன்!”

முருகன் விழிகளை மூடி முடித் திறந்தான். கனவுகளின் நிழல்கள் விலகி விலகித் தெரிந்தன. சிந்தனைச் சுழல்கள் தோன்றி மறைந்தன.

“இந்தாலே வாரேன் ஆத்தா!”

உணவு கொண்டு எழுந்தான் முருகன். தந்தை வந்தார்; விரிந்த குடையை மடக்காமலேயே கொணர்ந்த செய்தியை அவிழ்த்தார்.

“ஏலே முருகா ஒன் அம்மான் பொண்ணுங்க ரெண்டுபேரு சாதகமும் ஒனக்குக் கச்சிதமாப் பொருந்தியிருக்குதாம். ஆனா அந்தப் பொண்ணுங்களிலே நீ யாரைக் கொண்டுகிடப் போறியாம்?...மூத்ததையா? இல்லே, பிந்தியதையா? உடனே முடிவு சொல்லிப்பிடு.’,

இரு மனத்துள் ஒரு மனம் சுற்றியது; ஆலவட்டம் ஆடியது.

“நாளைக்கு மறுநாளு நிச்சயம் சொல்லிப்பிடறேனுங்க, அப்பா!” என்றான் முருகன்.

வெள்ளை நிலாவின் இதயம் கார்முகில்தானே? ஆம்; அவ்வாறுதான் இருக்கவேண்டும். இல்லையெனில் அவை இரண்டும் ஏன் அப்படி அந்தரங்கம் பேசிக்கொள்ளப் போகின்றன?

வேயப்பட்டிருந்த வைக்கோலின் மணம் வள்ளியின் நாசியில் புகுந்தது. ஒட்டுத் திண்ணையை ஒட்டிச் சாய்ந்திருந்த ‘முறிமேனி'யைத் தள்ளிக்கொண்டாள். சூடிய செவ்வந்திப் பூவின் வாசம் நெஞ்சுக்கு இதமும் சுகமும் தந்தது.

‘ம்.மே...’

வெள்ளைப் பசுவின் கன்று கத்தி அழைத்தது.

வள்ளி திரும்பினாள். அந்தக் கன்று தன்னுடைய மணிக்கரங்களிலே பிஞ்சுக் குழந்தை ஒன்றைக் கொடுத்து வேடிக்கைக் காட்டிய அந்தக் கற்பனைப் பின்னலை இப்போது நினைத்தாள். ‘மச்சானும் நானும் வாய் ஓயாமல் பேசிக்கினு இருப்போம்; வெத்திலைச் சருகுக் குட்டாலும் கையுமா நாங்க ரெண்டு பேரும் தாழ்வாரத்திலே குந்திக்கிட்டு இருக்கிறப்ப, புள்ளே சத்தம் காட்டும்; அவுக என்னை நையாண்டி செஞ்சு அடுப்படிக்கு அனுப்புவாக, யாரு கண்டாக!... ஒளிஞ்சிருந்து ஓடியாந்து பார்த்திடுவாகளோன்னு எனக்குச் சம்சயம் தட்டும். பாவம், எங்க ராசாவையோ இல்லே ராசாத்தியையோ இதுக்காவ அளுவவாவிடுவேன்?..ஊகூம்; மாட்டேன்...’

மனம் பலாப் பழமாக மாறியபின் நினைவுகள் ஈக்களாக உரு மாறுவது இயல்புதானே.

வள்ளியின் கழுத்துச் சங்கிலியில் பதித்திருந்த ‘டாலர்’ ஒருதரம் எம்பித் தணிந்தது. ‘மூத்தவ நான்; நியாயமா மச்சான் எனக்குத்தானே கெடைக்கோணும்?..’

வள்ளியின் கவனம் உடன்பிறப்பை நாடி ஓடியது. ஆழ்ந்து சிந்தித்தது.

‘அல்லி அரசாணி மாலை’யில் கருத்துப் பதித்திருந்தாள் தங்கச்சி. கைவிளக்கின் புகை தங்கமுகத்தை மங்கச் செய்ய முயற்சி செய்தது. வாகைமாலை புனைந்த பெருமை தேவானையின் சிந்தூர நிறத்துக்குத்தான் உடைமை.

தேவானைப் பொண்ணு! கேட்டியா கூத்தை?... ஒக்கப் பொறந்தவுக நீங்க. ஒங்க சாதகம் ரெண்டும் ஓங்க முறைக்கார் மச்சான் சாதகத்தோடு அச்சடிச்சு வச்சாப்பிலே ஒட்டுதலா இருக்குதாம். சேதி அனுப்பியிருக்குது நம்ப சம்பந்திபுரத்து வேலாயி. ஆனாக்க, இப்பதான் தாரடிசாமி வேடிக்கைக் காட்டப் போவதின்னு எம் மனசிலே ஓடுது. எந்தெரியுமா? ஒங்க ரெண்டு பொண்ணுகளிலே யாராச்சும் ஒருத்திதான் காத்தனாரு வீட்டிலே வாக்கப்பட எலும்; வள்ளி காதிலேயும் இதைப் போட்டுப் புட்டேன். ஓங்கிட்டேயும் சொல்லியாச்சு. பெத்த ஆத்தா நானு. எனக்கு நீங்க ரெண்டு பேரும் ஒண்னுதான். இந்தக் கண்ணாலம் காச்சி விசயமா உசிருக்குசிரான ஒங்களோட பாசத்திலே ரவை விரிசல்கூட காணப்படாது. அதான் ஒங்க அப்புசரு கவலையும் எங்கவலையும்;...வார திங்கக்கெழமை மாப்பிள்ளை முடிவு அனுப்புறாகளாம்!... வா, தேவானை!...சாப்பாடு தயாரா இருக்கு, அக்காளையும் ஒரு கொரல் அளைச்சிக்கிட்டு ஒரே எட்டிலே ஓடியாக்திடும்மா!...”

உணவு வட்டில் அன்னம் ஏந்தியிருந்தது. ஆனால், இந்தப் பெண் மனமோ முருகனைத் தேடியலைந்து கொண்டிருந்தது. “மச்சான், நான் இளையவள்னு சொல்லி என்னை ஒதுக்கிப்புடுவீகளா?...எங்கையாலே ஆக்கிப் படைச்சு சந்தோஷப்படலாம்னு கூத்தாடிக் கொண்டிருக்தேனே?... அந்தக் கனா பலிக்குமில்லே? பூவத்தக்குடி காளியம்மன் தேரோட்டத்துக்கு கூண்டு வண்டியிலே என்னையும் குந்தவச்சு ஓட்டிக்கிணுப்போறதா ஒருவாட்டி நெனைப்பூட்டினீங்களே?...வேலங்குடிச் செட்டித் தெருவிலே பயாஸ்கோப்பு ஆட்டத்துக்கும் என்னை அழைச்சிக்கிட்டுப் போறதாச் சொன்னீங்களே?...மச்சான் ஆள வந்த தெய்வமாச்சே நீங்க!...”

தேவானையின் கெண்டை விழிகள் கண்ணீரிலே நீந்தின. மூடிக்கொண்ட கண்கள் மூடியவாறே இருந்தன. தவம் இயற்றினாளோ?...கங்கைக் கரைதனிலே தவம் இருந்த காமாட்சியம்மனைக் கைதட்டிக் கூவி அழைத்தனளோ? வேறு என்ன மாயம்தான் செய்தாளோ?

“தங்கச்சி!...”

தேவானையின் தவம் கலைக்கப்பட்டது. திறக்கப்பட்ட விழி விரிப்பிலே விரக்தி வரிக் கோடுகள் காணப்பட்டன. வேதனையின் சூடும் அதில் அனல் வாடையை உண்டாக்கி விட்டது. ஏறிட்டுப் பார்த்தாள். மூச்சுக்கு முந்நூறு தடவை ‘அக்கா!...வள்ளி அக்கா!’ என்று வாய் நிறையக் கூப்பிட்ட அவள் ஏன் இப்படி வாயடைத்துப் போய்விட்டாள்?...

“தேவானை! முதலில் உருட்டின சோத்தை வாயிலே போட்டுக்கத் தங்கச்சி!”

விரக்தியும் வேதனையும் நினைத்த மாத்திரத்திலே புன்னகையை அணிந்து கொள்வதென்பது இயலாத செயல்! சுலபமான காரியமல்ல!

“அக்கா! ...”

உந்திக் கமலத்தில் ஒலித்த பாசத்தின் இதயக்குரல் இது. ஆனால் தேவானையின் ஊனக் கண்கள் புனைந்து காட்டிய அக்காட்சியை அவள் எங்ஙனம் நினைக்காமல் இருப்பாள்? பாவம்!... அரசாணிப்பானை, காட விளக்கு, ஓமத் தீ―ஆகியவை சாட்சி சொல்ல வள்ளியும் முருகனும் மணவறையில் கணவன் மனைவியாகத் தரிசனம் தந்தனர்!

“அக்கா!”

உடன்பிறந்தாள் ஒருமுறை விம்மினாள். சோற்றுப் பருக்கைகள் சிதறின.

கொண்டவருக்குச் சாதம் பறிமாறச் சென்று திரும்பினாள் தாயார் வீராயி.

“தேவானை! நான் மூத்தவள் எங்கிற உரிமையை முன்னே வச்சு நம்ப மச்சானை என் கைக்குள்ளே போட்டுக்கிட மாட்டேன். நம்ப குலதெய்வம் பேரிலே ஆணை வச்சுப் பேசறதாக்கல் இது. எனக்குக்கூட உட்கார ஓடலே; ஏந்திருக்க ஓடலே!...நீ வீணுக்கு மனசை உளப்பிக்கிடாதே!..மச்சான் சொல்லப்போற சொல்லுதான் நமக்கு வேதவாக்கு!...அன்னிக்கி எளுதினவன் இன்னிக்கு அளிச்சு எளுதப் போறதில்லே. நம்ப விதிப்படி நடக்கட்டும்! அதுக்காவ, நம்ப பாசம் முறிஞ்சிப்பிடாம நம்பளை நாமே காப்பத்திக்கிடனும். இதை மட்டுக்கும் முந்தானையிலே முடிபோட்டு வச்சுக்கிடு.”

பெற்றவளின் நெஞ்சம் அழுதது.

பொங்கலுக்கு முருகன் உடுத்திய கோடி வேட்டியின் ஒரத்தில் அப்பப்பட்டிருந்த மஞ்சள் இன்னமும் நிறம் மாறவில்லை. அதேமாதிரிதான் அந்திமாலையின் வண்ணத்திலும் மஞ்சள் நிறக்கதிர்கள் ஒன்றியிருந்தன.

“நாளைக்குப் பொளுது விடிஞ்சதும், அம்மான் வீட்டுக்குத் தாக்கல் சொல்லி அனுப்பணுமே?...” என்கிற எண்ணம் அவனைத் தீராத சிந்தனையில் ஈடுபாடு கொள்ளத் தூண்டியது. மாரியப்பக் கங்காணி ஊருணியினின்றும் புனலாடி, மெள்ள ஈரவேட்டியைக் காயவைத்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருக்கையில் முருகனின் உள்ளம் மறுகி மறுகிப் பின்னிக்கிடந்தது.

உதித்த செங்கதிர்ச் செல்வனின் முத்துச் சிரிப்பை அனுபவித்துக் கொண்டு வேப்பங்குச்சியும் கையுமாக மாட்டுத் தொழுவத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்தான் அவன். அப்போது, வீடு தேடி ― உரிமை நாடி ஓடிவந்தாள் தேவானை.

“மச்சான், பிஞ்சுக் கடலையை சுட்டு மடியிலே கட்டி யாந்திருக்கேனுங்க. அம்பிட்டையும் ஒடைச்சுத் தாரேன். உங்களுக்கு இதுதான் மெத்தப் புடிக்குமே?...கருப்பட்டித் துணுக்கும் வச்சிருக்கிறேன். அப்பாலே அதை வாயிலே போட்டு மெல்லுங்க. மேலுக்கு கடுகத்தனே தீம்பும் வராது” என்றாள் அவள்.

அவன் வாங்கிக் கொண்டான்.

“மதியத்துக்கு ஒம்பேரைச் சொல்லிக்கிட்டே திங்கிறேன், தேவானை!” என்று பதிலுரைத்தான் முருகன்.

வேலாயுதஞ்சேர்வையின் வருகை அவளை அங்கிருந்து பிரியச்செய்தது.

உச்சிப்பொழுது ‘தாச்சி’ சொல்லிவந்தது. உடன் வந்தாள் வள்ளி. உப்புப் போட்டு வேகவைத்த வேர்க் கடலையைச் செட்டிகாட்டுக் குட்டான் ஒன்றில் கொட்டிப்கொணர்ந்தாள் அவள். ஓடு பிரித்த சமயம் பார்த்து ஓடிவந்தார் சேர்வை. ஓட்டம் பிடித்தாள் அவள்.

அனுப் பொழுதுகூட, சோதரிகளே கினேக்காமல் அவன் இருந்தது கிடையாது. ஏன், முங்காள் கனவில் கூட அவர்கள் இருவரும் மெட் டிகுலுங்க, மிஞ்சி ஒலிக்க, மென் முறுவல் ஒளி சிந்த, மேனி எழிலை வண்ணம் பரப்ப வள்ளி தேவானேயென முருகனே நாடி வந்திருந்தார் களே?...

"மச்சான்! நானும் தங்கச்சியும் பிறக்தன்னிக்கு மன மொத்து இருந்தாப்பிலேயேதான் இன்னிக்கும் ஒண்ணடி மண்ணடியா இருந்து வாரோம். அதாலே, நீங்க சொல்லி யனுப்பிற முடிவுதான் எங்களுக்குத் தாராடிசாமி வாக் காட்டம்1.இல்லியா, தேவானே!” என்றாள் வள்ளி. ‘உம்’ கொட்டினுள் இளையவள்.

சிந்தனே மனிதனே அறிஞளுக்குகிறது என்கிரு களே?...பின், ஏன் முருகன் மாத்திரம் சிந்தனேக் குமைச் சலிலே சித்தம் குழம்பிப் பைத்தியம் பிடித்தவன் போல் கிற்கிருன்?

“அண்ணே, முருகு அண்ணே!” திருநீற்றுக்கோடுகளின் வெளிச்சத்தில் இரு உருவங் கள் தெரிந்தன.

"அடலே!.வீரமுத்து!.. காளிமுத்து!.. பாலைவனம் ஜமீந்தார் கணக்கா இருக்கிகளே?...

"மைனர் சங்கிலியும் ஒற்றைக்கல் கடுக்கணும்பொலிவு காட்டின. கின்றவர்கள் அமர்ந்தார்கள் அருகு திண்ணை யில். தாம்பூலத் தாம்பாளம் இருவரையும் உபசரித்தது.

“ஆட்டத்துக்குப் போருேம். நீங்க வாரிகளா?”

ஒருவனுக்குப் பதிலாக மற்றாெருவன் வினவினன்; அந்தக் கேள்வி ஒருவன் சார்பிலே மற்றவனுக்காகவும் அமைந்தது. 

“இல்லே! நான் வரலே!”

மஞ்சிவிரட்டுப் பந்தயத்தில் எதிர்த்தரப்பில் இயக்கிய உள்ளங்கள் அவன் வரை விடுகதை எதையும் முன் வைக்கவில்லை!

விடைபெற்றுத் திரும்பும்போது அவர்கள் இருவரும் கேட்டார்கள்: “அண்ணாச்சி!...நீங்க ஒங்க கண்ணாலத்தைப் பத்தி ரோசிச்சுப் பிட்டீங்களா?...யாரைக் கட்டிக்கிடப் போறீங்க?...வள்ளியையா?...இல்லே, தேவானையையா?...”

திண்ணை முந்தலில் பிரிந்து கிடந்த செய்தித்தாளில் ‘இருதாரத் தடுப்புச் சட்டம்’ பற்றிய ‘கதை’ இருந்தது.

முருகன் விழித்தான்.

“வள்ளி தங்கமானது!” என்றான் வீரமுத்து. அவனுடைய இதழ்களிலே எத்தகைய மகிழ்ச்சி! எப்பேர்ப்பட்ட பூரிப்பு!

“தேவானை நல்ல பொண்ணு!” என்று விளக்கவுரை ஈந்தான் காளிமுத்து. கனவின் தேக்கம் அவன் கண் கடையில் வழிந்தது!

இளஞ்சிட்டுக்கள் இரண்டும் நெஞ்சில் தெரிந்தன: ‘வள்ளி!...தேவானை!’

முருகன் இப்போது இளங்காளைகளைக் கூர்ந்துபார்த்தான்.

“ஏனுங்க முருக அண்ணாச்சி!... அக்கா தங்கச்சிங்க இரண்டு பேரிலே ஒருத்தியைவிட்டு இன்னொருத்தியைக் கொண்டு கிட்டீகண்ணா, அவுக அவுக மனசு நோவாதா?”

முருகன் மனம் அதிர்ந்தான். அடுத்தகணம், அற்புதமான ஒரு முடிவுக்கு வந்தவனப் போல் பளிச்சென்று தோற்றமளித்தான்.

மறுநாள் பொழுது விடிந்தது.

“ஆத்தா!...குளமங்கலம் மணியக்காரர் பொண்ணு அஞ்சலையை நான் கட்டிக்கிடுகிறேன்! நீ கவலைப்படாதே, ஆத்தா!”

ஈன்றெடுத்த தாய்க்கு ஏதும் புரியவில்லை. பேந்தப் பேந்த விழித்தாள்.

திருவம்பலச்சேர்வையின் வீட்டில் கடந்த திருமண விருந்தில் கலந்துகொண்டு ‘மொய்’ எழுதிவிட்டுத் திரும்பிய முருகன் என்னென்னவோ எண்ணமிட்டான்!

“என் மனசு இப்பத்தான் அடங்கியிருக்குது’ என் கடமையும் தீர்ந்திடுச்சின்னுதான் நெனைச்சிருக்கேன். ‘வள்ளி―தேவானை’ ரெண்டோட அன்பும் என் நெஞ்சிலே வாழணுமிங்கிறதுதான் என் ஆசை, கனவு, எண்ணம்―எல்லாம்!...கூடப் பொறந்தவங்க பாசத்திலே என்னாலே எந்த இடைவெளியும் உண்டாகப்புடாதின்னு தான், வள்ளியை வீரமுத்து கையிலேயும், தேவானையை காளிமுத்துக் கிட்டேயும் ஒப்படைச்சேன்!...அக்கா―தங்கச்சியை சமாதானப்படுத்தி, இந்தக் கண்ணாலங்களை முடிச்சுவைக்க நான் பட்டபாடு எனக்குத்தானே தெரியும்?...ஊரே என் நடத்தையைக் கண்டு அதிசயப்பட்டுக் கெடக்காம்! ஆனால் சொக்கப்பச்சையோட மதிப்பைக் காட்டியும், ஒசத்தியா வள்ளி―தேவானை அன்பை நான் மதிச்சிருக்கிறது அவுகளுக்கு எங்கே தெரியப்போவுது? பெத்தவுங்க என் முடிவைக் கேட்டுக் கிலேசப்படப் போறாங்க!...‘வள்ளி, தேவானை! இனிமே நீங்க ரெண்டு பேரும் காலமெல்லாம் என் நெஞ்சிலேயும் நெனைப்பிலேயும் வாழப்போறீங்க; ஓங்க நெனைப்புத்தான் என்னை அக்கரைச் சீமையிலேயும் வாழவைக்கப் போவுது...”