ஆலமரத்துப் பைங்கிளி/நாதத்தந்தி

விக்கிமூலம் இலிருந்து

17

நாதத் தந்தி

வாஸந்திக்கு மூளை வெடித்துச் சிதறிவிடும் போலிருந்தது. தொடர்ந்து எதையுமே அச்சமயம் அவளால் சிந்தித்துப் பார்க்க முடியவில்லை. தூசு தட்டித் துடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த வீணையை மீண்டும் ஒருமுறை நோக்கினாள். மருட்சி தோய்ந்த அவள் விழி 'வீச்சில் அடியுண்ட மானின் ஏக்கம் - வேதனை சுடர் விட்டது. ஜன்னல் கம்பிகளினூடே பாய்ந்து ஒளி பரப்பியிருந்த அந்தி வெயிலின் செங்கதிர்கள் வீணை மீது படித்திருந்தன. அக்காட்சி அவள் நைந்த மனதை ரம்பம்போல அறுத்தது. அந்த நாட்களில் தன் அக்காள் சுலோ வீணை வாசித்து, அத்தானை மகிழ்வுறச் செய்த சம்பவங்கள் ஒவ்வொன்றையும் நினைவுப்படுத்திப் பார்த்தாள் வாஸந்தி. நெடுமூச்சு வெடித்துக் கிளம்ப இமை வட்டங்களில் நீர்த்திவலைகள் வரம்பு கட்டின.

அன்று ஞாயிற்றுக்கிழமை. விடுமுறை நாள். மத்தியானம் உண்டு முடித்ததும் அமைதி கனிய உட்கார்ந்து, வம்பளந்து வீண்பொழுது கழிக்கத் திட்ட மிட்டிருந்தான் மூர்த்தி. அதற்கு, வாஸந்தியும் பூரண சம்மதம் கொடுத்திருந்தாள். ஆனால் யார் இதோ தம்பதிகளின் ஒட்டிய இரு உள்ளங்கள், ஏகோபித்துப் போட்டிருந்த ஏற்பாடு சடுதியில் நிலை குலைந்தது. மூர்த்தி முன்கூட்டியே தயாரித்து வைத்திருந்தவன் போல. விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பித்துக் கொண்டான் தன் இதயராணியிடம். பதியின் ஆசை வேண்டுகோள் வாஸந்தியை மனமுடையச் செய்து விட்டது போலும்! இல்லையென்றால் அவள் கண்கலங்கக் காரணம்....?

"வாஸந்தி, நானும் யோசித்து யோசித்துப் பார்த்து விட்டேன். எப்படியும் திரும்பவும் ஒரு தரம் உன் தமக்கை வாசிக்கும் அந்தத் "தந்தியிலெழுவது நாதம்" என்ற பாட்டை வீணையில் இசைத்துக் கேட்க வேண்டும் என்ற அபரிமிதமான ஆசை என்னைப் பைத்தியமாக ஆட்டி வைக்கின்றது. ஆனால் அந்தப் பாட்டை சுலோ மாதிரி உன் ஒருத்தியாலேயே அத்துணை திறம்பட வாசிக்க முடியும். வாஸந்தி, மறுக்க மாட்டாயே?" என்று கேட்டுக் கொண்டான் மூர்த்தி. இயல்பான அவனது ஆணையில் - அல்ல, விண்ணப்பத்தில் கம்பீரம் ஒடுங்கி ஒலித்தது. தலையை உயர்த்திப் பார்த்தாள் கணவனை. உடனே தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். புருஷன் கொண்ட, மனைவியிடம் வேண்டுவதா என்ற இரண்டுங் கெட்டான் நிலையில் "ஆகட்டும்," என்று ஒப்புக் கொண்டாள். மூர்த்திக்கு அப்பொழுது ஆகாயத்தில் 'ஜிவ்'வென்று பறப்பது போன்ற உணர்ச்சி உடலெங்கும் ஊடுருவிப் பாய்ந்தது.



அட்வகேட் அனந்தராமனின் பெயருக்கும் புகழுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கினர் அவரது இரு புதல்விகளும். மூத்தவள் சுலோ; இளையவள் வாஸந்தி. ஒரே கிளையில் பூத்த இரு மலர்கள் அவர்கள். அழகு அரியணை வகிக்கும் கனவுப் பதுமைகள் சுலோவும் வாஸந்தியும். வளர்ச்சியும் கவர்ச்சியும் அவர்களுக்குப் பருவ எல்லையை நிர்ணயித்தது. சுலோவிற்கு வாஸந்தியைவிட ஒருவயது தான் அதிகம் என்றாலும், முதலில் சுலோவின் கல்யாணத்தைப்பற்றிய கவலைதான் அனந்தராமனுக்கு உண்டாயிற்று. ஆனால் கல்யாணத்தைப்பற்றி வரன் விஷயமாகத் துளிகூட யோசிக்க வேண்டிய நிர்பந்தமில்லை அவரைப் பொறுத்த மாத்திரத்தில். கையில் கரும்பை வைத்துக் கொண்டு கற்கண்டுக்கு யாரேனும் அலைவார்களா என்ன? தன் சகோதரி மகன் மூர்த்தியை சுலோவிற்கென்றே நீர்த்தாரணம் செய்தவர் அட்வகேட். மூர்த்தி ஒரு பி. எஸ்ஸி. படிப்பிற்குப் படிப்பு; அழகுக்கு அழகு; அந்தஸ்துக்கு. அந்தஸ்து. பின் என்ன? ஜாதகங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. ஆனால் என்றைக்கோ அவர்கள் இரண்டு இதயங்களும் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டு விட்டனவே!....

சுலோ படிக்கும்பொழுதே வீணை மீட்டக் கற்றுக் கொண்டாள். நாட்கள் செல்லச் செல்ல 'வீணைப் பைத்தியம்' வளரத்தான் வளர்ந்தது. இதுபற்றி அவள் பெற்றோர்களுக்கும் சந்தோஷமே. தமக்கை வீணையைக் கையில் எடுப்பதைப் பார்த்து விட்டால் போதும். கண்ணன் குழலோசை கேட்ட கோபியர்களைப் போல ஓடோடிச் சென்று அவள் வாசிக்கும் கானத்தை ரசிக்கத் தொடங்கி விடுவாள் வாஸந்தி. நாளடைவில் வாஸந்தியின் ரசிகத்தன்மை அவளையும் வீணை சிக்ஷை பெறத் தூண்டி விட்டது.

விரைவில் சுலோ மிஸஸ் மூர்த்தி ஆனாள். அவனும் ஒரு சங்கீதப் பித்தன். பித்தம் தெளிய மருந்து சுலோவின் இசை வெள்ளம். இப்படியல்லவா ஜோடி பொருந்த வேண்டும்? அவளும் முன்கூட்டியே வேண்டுகோள் எதுவுமின்றி, ஆனால் குறிப்பறிந்து - ஜாடை தெரிந்து வீணை வாசித்துத் தன் அத்தானைப் பரவசப்படுத்தத் தவறுவது கிடையாது.

200

சுலோவை அடுத்து அட்வகேட்டின் கவலை வாஸங் தியின் பேரில் கிலேத்தது நியாயமே ஆல்ை வரன் விஷயந்தான் அவருக்கு மட்டுப்படவில்லை. மூர்த்தி போல இன்னொரு மாப்பிள்ளையும் அமைந்துவிட வேண்டுமென் பதுதான் அனந்தராமனின் ஆசையும் ஆதங்கமும். அந்தச் சமயம்தான் அவர் மனம் இடியும் வண்ணம் சுலோவின் அகால மரணம்பற்றி தந்தி வந்தது. மணம் முடிந்து புது வாழ்வு தொடங்கி இன்னமும் ஒராண்டுகூடப் பூர்த்தி பெறவில்லை. அதற்குள் தன் ஆசை மகள் சுலோவின் பிரிவை எங்ஙனம் அவரால் சகிக்கக்கூடும்?

உயிர்த்துணை போன்ற தன் தமக்கையின் சாவினுல் புண்பட்டிருக்கும் தன் நிலையை வெளிக் காட்டிக்கொள்ள கேர்ந்தால் அப்புறம் தந்தையையும் தாயையும் எவ்விதம் தேற்ற முடியும் என்று எண்ணியே வெளியில் தன் துயரத் தைக் காட்டாமலிருந்தாள் வாஸந்தி. தன் பெற்றாேர் இஷ்டப்படி மூர்த்தியை விட்டோடு வைத்து சிசுருகை; செய்ய ஆரம்பித்தாள் வாஸந்தி. தன் மனைவியை இழந்த நஷ்டத்தையும் மாளாத துக்கத்தையும் ஓரளவு மாற்றச் சாத்தியமாயின வாஸந்தியின் அன்பு கனிந்த ஆதரவு மொழிகளும், தூய உள்ளத்துடன் செய்த பணிவிடை களும். தன் அத்தான் எப்படியும் துயரம்ங்ேகி அமைதி யுடன் இருக்க வேண்டுமென்பதே வாஸந்தியின் தனித்த கவலையாக-லட்சியமாக அமைந்தது.

ஆல்ை மூர்த்தி-வாஸந்தி இருவரிடையிலும் நிலவிய ஐக்கிய மனப்பான்மையையும் பாசத்தையும் அடிக்கடி கவனித்த அட்வகேட் எப்பாடுபட்டேனும் அவ்விருவர் களே முடிச்சுப் போட்டு கணவனும் மனைவியுமாக்கத் தீர்மானித்தார். காலமும் சமயமும் கூடின. மனம் போலல்லவா வாழ்வு? மூர்த்தி வாஸந்தியின் கைத்தலம் பற்றினன். ஒவ்வொரு அம்சத்திலும் சுலோவின் பிரதி

பிம்பமெனத் தோற்றமளித்த வாஸந்திக்கு முதல் மனேவியின் ஸ்தானம் அளிக்கப்பட்டது; ஆதரிசவாழ்வின் தொடக்கம் அழகாக, அற்புதமாக இணைந்தது; அமைந்தது.

சுலோவைப்பற்றி எண்ணும் போதெல்லாம் அவள் தினமும் வாசிக்கும் வீணேயின் ஞாபகமும் தொடர்ந்தே வரும். அப்போதெல்லாம் வாஸந்தி அந்த வீணேயைக் கண்ணுல் காணக்கூடாதென்று மறைத்து வைத்துவிடு வாள். மேலும் நீண்ட நாட்களாக வீணையைக் குறித்த பேச்சுக்கே அத்தம்பதிகளிடையே சக்தர்ப்பம் எழவும் இல்லை. ஒருவேளை தன் அத்தான் என்றாகிலும் வீணேயை மீட்டி வாசிக்கும்படி கேட்க நேர்ந்தால் என்ன ஆகும் என்று மட்டும் மனத்தில் பலமுறை சம்சயப்பட்டதுண்டு. பொங்கிக் குமுறும் துக்கத்தை மாற்றிவிட வகை இது என்பதாக ஆராய்ந்தும் இருக்கிருள் வாஸந்தி. அவ்வளவு பாசம் தமக்கை மீது. ஆனால் வாஸந்தியின் பயம் முடிவில் கிஜமாக நிகழத்தான் செய்தது. ஒருநாள் வினையை ஒரே ஒருமுறை வாசிக்கவேண்டு மென்று விண்ணப்பித்துக் கொண்டான் மூர்த்தி.

விழிக்கோடியில் உருப்பெற்றுக் கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு நெற்றியில் விழுந்து புரண்டு விளையாடும் கேசத்தை ஒதுக்கிக்கொண்டு மெல்ல எழுங்தாள் வாஸந்தி. பார்வையில் ஏக்கம் வலை பின்ன தலையை கிமிர்த்தி சுவரில் மாட்டியிருந்த சுலோவின் போட்டோவை ஒரு கணம் நோக்கிய பின் வீணே சகிதம் கீழே அமர்ந்தாள். எதிரேயிருந்த காற்காலியில் மூர்த்தி வீற்றிருந்தாள். இறந்துபோன சுலோவே உயிர்பெற்று வந்து கான மிழைக்கப் போவதாக மூர்த்திக்கு எண்ணம் ஓடியது. உடம்பு புல்லரித்தது. வாஸந்தி முகத்தில் புன்னகையை வருவித்துக் கொண்டாள்!

202

“ஆரம்பிக்கிருயா வாஸந்தி?.”

“ஆகட்டும்,' என்பதற்கு அடையாளமாக வீணேயின் கம்பிகளே கெருடிவிட்டாள். விரல்கள் தந்திகளில் இழைய கானம் காற்றில் மிதந்தது.

"‘தந்தியில் எழுவது நாதம் . சிந்தையில் எழுவது நாதம்......" தளிர் விரல்கள் வாத்தியத்துடன் விளையாடத் துவங் கின. தொடர்ந்து வாசித்துக்கொண்டேபோனள். மூர்த்தி தன்னே மறந்து, சூழ் கிலேயையும் மறந்து கான லயத்தில் ஒன்றிப்போய் ரசித்த வண்ண மிருந்தான்.

மின்னல் கொடி படரும் ஒரு விடிையில் என்ன தோன்றிற்றாே, பாட்டு முடிவதற்குள் திடீரென்று மூர்த்தி எழுந்து வெளியே போய்விட்டான். இதைக் கண்ட வாஸந்தி தணலைத் திண்டியவள் போன்று நடுங்கிப் போனள். தன் அத்தானின் இத்தகைய செய்கை வியப்பை அளித்தது. அவள் மனம் அஞ்சி அதிர்ந்தது. இந்தச் சம்பவத்தைக் குறித்து அதன் பின் தம்பதி களிடையே எவ்வித வியாக்கியானமோ அல்லது சமாதான உடன்படிக்கையோ உதயமாகவில்லை; நிகழவுமில்லை. அப் புறம் ஒன்றிரண்டு நாட்கள் வழக்கம்போல வந்தன, ஒடி விட்டன. அன்றாடம் நடக்கும்-கடக்கவேண்டிய சிரிப் பும் கேளிக்கையும் இடம் பெற்றன; களித்தனர். -

அன்று இரவு மூர்த்தி வெளியே சென்றிருந்த சமயம் வாஸந்தி தனித்திருந்த அவ்வீட்டின் பயங்கர அமைதி அவளே என்னவோ செய்ய ஆரம்பித்தது. அன்று விணே வாசிக்கையில் நிகழ்ந்த சலனம் அவள் மனத்தில் அப் படியே ஆழப் பதிந்திருந்தது. காரணமின்றி அரைகுறை வாசிப்பில் அவ்விதம் மூர்த்தி திடுதிப்பென்று வெளியே எழுந்து சென்றதன் அர்த்தம் மர்மமாகவே பட்டது 203

வாஸந்திக்கு. ரில் கணவனிடம் இதைப்பற்றிக் கேட்க வும் விரும்பவில்லை. இருப்பினும் தன்னைப்பற்றி ஏதா கிலும் தவறுபட எண்ணி விட்டிருப்பாரோ? அவள் மனம் ஒரு கிலேயில் அடங்காது அலைபாய்ந்து தத்தளித்தது.

அன்று வீணே வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது அவள் பட்டபாடு அவள் ஒருத்தியே அறிவாள். திரும்பவும் வீணேயை மீட்டிவிட்டதும், தன் தமக்கையின் நினைவு அவள் இதய வீணேயையே நெருடிவிட்டதை மூர்த்தியால் உணர்ந்திருக்க முடியுமா? ஒவ்வொரு தவணையும் கானம் கூட்டும் சமயம் அவள் உயிரே போய்த் திரும்பும். கண்கள்கலங்கும். இந்த மாற்றத்தைத் தன் அத்தான் கவனித்து விட்டால்.........?-அவள் சந்தர்ப்பத்தைச் சரிப்படுத்திக் கொண்டாள்.

வாஸந்தி எதிரேயிருந்த சுலோவின் படத்தினருகே சென்று சிறு குழந்தையைப் போலத் தேம்பினுள். திரும்பவும் ஒருநாள் தன் கணவன் அந்த வீணையை வாசிக்க உத்திரவு பிறப்பித்தால் தன் கதி என்னகும் என்பதைச் சற்று சிந்தித்துப் பார்த்தாள்; அன்று தன் கணவன் லவலேசமும் சலனமற்று ரசித்துக்கொண்டிருந்த காட்சியையும் மனத்தில் நினைவுபடுத்திக் கொண்டாள்.

ஆனால் மறுமுறை அவ்வீணேயை கையால் திண்டவும் கூடாது என்பதாக அசைக்க முடியாததொரு எண்ணத்தை உற்பவித்துக்கொண்டாள் வாஸந்தி. உடனே பித்துப் பிடித்தவள் போல உள்ளே ஓடினாள். கண்முன் காட்சி தந்த வீணேயை எடுத்து படீர் என்று அதன் தந்தி ஒன்றை அறுத்துவிட்டாள். அப்போது அவளது இதயமே அறுந்துபோனது போன்ற ஓர் உணர்வு எழுந்தது. மறு நிமிஷம், அத்தான் ஊரிலிருந்து வந்து இந்த நிகழ்ச் 204

சியைக் கண்டால் என்ன செய்வது?’ என்ற கேள்வியும் உடனடியாக மின்வெட்டிச் சென்றது. வாஸந்தி அசை யாச் சிலையாய் சமைந்து கின்றாள். கண்ணிர் பிரவகிக்க சிதைந்த உருவம் மாதிரி பொலிவிழந்து காணப்பட்ட அந்த வினையை ஆற்றாமையுடன் பார்த்தாள். சூன்யக் கோளமாகத் தோற்றமளித்த உலகமே அவள் முன் சுழன்றது. அவள் தமக்கை சுலோவின் படத்தின்கீழ் மண்டியிட்டு விம்மியழுதாள்.

கண்ணிர் கின்றுபோய் எப்பொழுதுதான் துாங்கினுள் என்பதே அவளுக்குத் தெரியாது. ஏதோ ஒரு சப்தம் அருகில் கேட்ட மாதிரி திடுக்கிட்டுக் கண் விழித்தாள். பக் கத்தில் பார்த்தாள். தன் கணவன் எழுந்து அந்த அறைக் கதவைத் திறந்து பக்கத்து அறைக்குப் போவதைப் பார் வையிட்டாள். கண்களே அகல விரித்துக்கொண்டு படுக் கையில் படுத்தவாறே அந்தப் பக்கம் நோக்கியபடியே இருந்தாள். தன் கணவன் எப்பொழுது வந்தார். இப் போது அந்த அறைக்கு எழுந்து போவானேன்! என்ப தெல்லாம் அவளுக்குத் திகைப்பாக இருந்தன. அவன் அந்த அறைக்குள் சென்று சில நிமிஷங்கள் இருக்கும். அந்த அறையில் இருந்து கிளம்பும் சப்தம் மூலம், கடப் பதை அறிய முயன்று கொண்டிருக்தாள் அவள். படீரென ஒரு சப்தம் கேட்டது. அடுத்த விடிை ஏதோ ஒன்று தெரித்த சப்தம், ஒரு கம்பி தெரித்து மற்றாெரு கம்பியில் அடித்துக் கிளம்பும் நாதம்!

அவள் சுருண்டு எழுந்து படுக்கையில் உட்கார்ந்தாள்.

ஆமாம், வீணையின் மற்றாெருகம்பியை அவர் அறுத்து விட்டிருக்கிறார். இனி அந்த வீணை பயன்படக் கூடா

தென்று, தான் செய்த அதே காரியம் அவர் மனதிலும் தோன்றியிருக்கவேண்டும்!”

வாஸந்தி எழுந்தாள். படுக்கையிலிருந்து எழுந்து அந்த அறையை நோக்கிச் சென்றாள். அதே தருணம், மூர்த்தியும் அந்த நிலைக்கு வந்து சேர்ந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

"வாஸந்தி! இனி அந்த வீணேயை நீ தொடவேண்டிய சந்தர்ப்பம் வரவே வராது!’ என்றான் அவன்.

வாஸந்தி அவனுடைய தோள்மீது கையை வைத்து லேசாகச் சிரித்தாள்.

“ஏற்கனவே அது பயன்படாததாகி விட்டது.”

"வாஸந்தி! என்ன சொல்கிறாய்?”

“தாங்கள் அறுத்துவிட்டது இரண்டாவது தந்தி, முதல் தந்தியை நானே.....”

"வாஸந்தி! நீ முந்திக்கொண்டு விட்டாயா?” என்று அவளது தோள்களில் கைவைத்து மூர்த்தி அவளே அன் பான ஆதரவுடன் அணேத்துக்கொண்டான். இருவருக்கும் நிம்மதி பிறந்தமாதிரி இருந்தது! 米