ஆலமரத்துப் பைங்கிளி/சிவன் தந்தது

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search16
சிவன் தந்தது...!

ண்ணைப் பொன்னாக்கும் வண்ணப்பொழுது; தங்கத் துகள்கள் தரணிதனை அந்தம் மிகுந்த கனவுலகாக உருமாற்றிக் கொண்டிருந்த ஆனந்தமான வேளை. பின், இளஞ் சுடரொளியிலே கனவுகள் சதிராடக் கேட்கவா வேண்டும்?

தேதிப்படத்தாளைக் கிழித்துவிட்டு, அன்றையத் தேதியையும், அது ஏந்தி நின்ற கிழமையையும் பார்த்தாள் கல்யாணி அம்மாள். இனம் புரியாத மகிழ்வும், இனம் புரிந்த இன்னலும் சமன் அளவிட்டுத் தோன்றலாயின. தும்பைப்பூ நிறப்புடவையின் முகதலைவில் கண்ணீரின் முத்துச்சரம் ஒடுங்கியது, யோகியாரின் உள்ளமென! ஆளோடியைக் கடத்தினாள் அவள். கதிர்களின் சதுராட்ட விளையாட்டு நடைப் பகுதியிலும் நடந்தது. அவள் ஏறிட்டு விழித்தாள். விழிவிரிப்பில் படர்ந்த உருவத்தைக் காண எதிர்ப்புறம் கண்ணோட்டம் செலுத்தினாள் அவள். பெரிது செய்யப்பட்ட அந்தப் புகைப்படம் அண்டியது. கால் பாதங்கள் தத்தளித்தன; தடுமாற்றம் கண்டன. தரையில் பாவிய ஸ்மரணை இல்லை. கால்விரல்கள் ஈரம் ஏந்தின. ‘அத்தான்!...நான் செஞ்சது குத்தம்தானா? இதைத்தவிர; வேறுவழி ஒண்னுமே எனக்கு மட்டுப்படலேங்களே?...நான் என்ன செய்வேன், பாவி?...’வாய்ப்புலப்பமும், சுடுநீரின் குழப்பமும் அவளு டைய அறிவுணர்வைத் தட்டிப் பறித்துக் கொண்டன போலும். தாலாட்டுப் பொம்மையைப் பறிகொடுத்த விளையாட்டுக் குழந்தை போலச் செருமிச் செருமி அழுதாள்!

‘அம்மா...!’ என்று அழைத்தபடி கோமதி வந்தாள். அவள் மட்டுந்தானா வந்தாள்? அவளைத் தொடர்ந்து அன்பும் பாசமும் வந்தன; புன்னகையும் புத்தெழிலும் வந்தன. அவள் கையில் கடிதமொன்று இருந்தது. “அத்தான் உனக்கு எழுதியிருக்காங்க, அம்மா!”

அன்னை கடிதம் ஏந்தினுள்.

ஆவணி இருபத்தேழாம் தேதி முகூர்த்தம் வைப்பதற்கு ‘வேளை’ பொருந்தியிருக்கிற தென்றும், அன்றைக்கே கலியாணத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளேச் செய்யுமாறும் எழுத்துக்கள் ஓடியிருந்தன. ஓடக் காணும் பூம்புனல் வெள்ளமாய் அவள் நிறைவு அடைந்தாள். நிறைவு ஆனந்தத்தைக் காட்டிற்று; ஆனந்தம் அமைதியைச் சுட்டியது; அமைதி கண்ணீரைக் கூட்டியது. கண்ணீரிலே தெய்வத்தைத் தரிசித்தாளோ?

சற்றைக்கெல்லாம் அவளது மனம் மீண்டும் அலை பாயத் தொடங்கிவிட்டது. தாலி கொடுத்து, ‘கொண்டவன்’ என்னும் ஸ்தானத்தை ஏந்திய ‘அந்தநாள்’நினைவில் குதித்திருக்கவேண்டும்; கொண்டவன் தாலியுடன் கொண்டோடிய ‘அந்தநாள்’ நெஞ்சத்தில் குத்தியிருக்க வேண்டும்! சதா சர்வகாலமும் சிணுங்கிக்கொண்டிருக்கும் கைக்குழந்தைகள் போலவேதான் இந்த நினைவுகளும்!

“அம்மா, ஆசாரி வந்திட்டாரு, அம்மா”!

குரல் கொடுத்தாள். கோமதி. நிலைப்படியைக் கடந்து வந்த ஆசாரியைக் கண்ட சடுதியில், அவள் தூணுக்குத் துணை ஆனாள். மார்பகச் சேலையை இழுத்துப் போர்த்திக் கொண்டாள். இமைகளில் வண்ணாத்திப் பூச்சிகள் குந்திக்கொண்டன, சிறக்கடிக்காமல் தப்புமா?

ஆசாரியைக் கண்டதும், கல்யாணி அம்மாளுக்கு அதிர்ச்சி விளைந்தது. சமாளித்துக்கொண்டாள். “வாங்க ஐயா! நகை நட்டெல்லாம் சாடாவையும் செஞ்சு முடிச்சுப்பிட்டீங்களா?” என்று கேட்டாள்.

“ஓ, ஒங்க மனசுப் பிரகாரம் சகலத்தையும் கச்சிதமாச் செஞ்சுப்பிட்டேனுங்க!...நீங்க குடுத்த பழைய நகை அம்புட்டையும் உருக்கி, ஒங்க பொண்ணு மாதிரி காட்டினது போலவே அற்புதமாச் செஞ்சிருக்கேனுங்க!... நீங்க என்னை நம்பினீங்க. அதாலேதான் எங்க விட்டோடவே பட்டறையை வச்சிக்கிட்டு அலுவல் பார்க்க ஒத்து வந்திச்சுது. இந்த நம்பிக்கை தானுங்க அம்மா எங்க மாதிரிப்பட்டவுங்களுக்குச் சொத்து சுகம் எல்லாம்!... எங்க அப்பாரு படிச்சுக் குடுத்திருக்கிற நல்ல பாடமும் இதுதானுங்க!...”

மூச்சுப் பிடிக்கப் பேசினவன், மறந்துபோகாமல் மூச்சைப் பிரித்துவிட்டான்! செய்துவந்த ஆபரணங்களை ‘வெல்வெட்’ துணிப்பெட்டியினின்றும் பிரித்தான் ஆசாரி சிங்காரம். ஜடைபில்லை, மோதிரம், கைவளை, சங்கிலி, மூக்குத்தி, லோலாக்கு என்று அணிகலன்கள் அணி வகுத்துக்கொண்டன.

கல்யாணி அம்மாளின் பெற்றமனத்தளத்தில் நின்ற பாசம் என்ற கம்பத்தில் மகிழ்ச்சி கொடிகட்டிப் பறந்தது. ஆனால் அவள் இதயம், அந்த இதயத்தின் இதயம் ஏன் அப்படி அல்லாடித் தள்ளாடுகிறது?

“ஏம்மா கோமதி, உன் மனச்சுக்குப் பிடிச்சிருக்குதாம்மா?”

“பேஷா!”

“உன் அத்தானுக்கும் பிடிச்சிருக்குமில்லே?”

“உங்க அண்ணன் பிள்ளை சமாச்சாரம் உங்களுக்குத் தானே அம்மா தெரியும்?”

“எம் பொண்ணாச்சே! பேச்சுக்குக் கேட்கனுமா?”

சிங்காரத்துக்கும் சிரிப்பு, வாய்ப்பிடியில் பிடிபட மறுத்தது.

“கணக்கு எம்பிட்டு ஆகுது”?

ஆசாரி துண்டுச் சீட்டு ஒன்றைச் சமர்ப்பித்தான். நகைகளின் மொத்த எடை, பிறகு உருக்கப்பட்டதும் உருவான தங்கக் கட்டிகளின் எடை, கழிவு―சேதார எடை, கற்கள் விலை, கூலி-இப்படிக் ‘கூட்டுப்புள்ளி’ காட்டிற்றுக் கடுதாசி.

மூன்றுநாள் கெடுவைத்தாள் வீட்டுத்தலைவி.

பதில் பேசவில்லையே சிங்காரம்!.

கூடப்பிறந்தவரிடமிருந்து வந்துசேர்ந்த கடிதம், “உன் இஷ்டப்பிரகாரமே, உன் மகள் கோமதி ஜாதகமும் என் மகன் சேதுவின் ஜாதகமும் கனகச்சிதமாய்ப் பொருக்திவிட்டது. ஆவணி பிறந்தவுடன், கலியாணத்தை முடித்துவிட வேண்டியதுதான். முகூர்த்த நாளைப்பார்த்து அப்புறம் எழுதுகிறேன்!” என்ற சேதியை அஞ்சல் செய்தது; ‘அஞ்சேல்’ என அபயம் தந்தது.

ஆவணி பிறந்ததோ, இல்லையோ, பெற்றவள் உற்ற மகளை அழைத்து அவளிடம் சொன்னாள்: “அம்மா கோமதி உன்னைப் பெத்தவகிட்ட நீ எதொண்ணையும் ஒளிவு மறைவாக வச்சுக்கிட வேணாம். உனக்கு என்னென்ன நகை நட்டு வேணுமெங்கிறதைச் சொல்லிப்பிடு. உன்னோட சிநேகிதிங்க யாரானும் போட்டிருக்கிற தினுசு

உம் மனசுக்குப் பிடிச்சிருந்தாக்க, அதுகளே வாங்கியாந்து காட்டு. செட்டிகாட்டுப் பக்கத்திலேருந்து நாணயமான ஆசாரி யாரோ வந்திருக்காராம். அவரை அழைச்சிட்டு வரச்சொல்லி, அவர்கிட்டக் காண்பிக்கலாம். உன் அப்பா இருந்து, உனக்கு வேணுமிங்கிறதைச் செஞ்சுபோட்டு அழகு பார்க்கக் கொடுத்துவைக்கலே. இதை கினேச்சாத் தான் ராத்துக்கம் பகல் தூக்கம் கொள்ளலே! ம்...பிடிச் சுப்போட்டவன் ஆட்டிப் படைக்கிருன். சரி அம்மா! நாளேக்கு நல்ல காள்தானும். நான் சொன்ன தாக்கலே மறந்துப்புடாதே”

உடன் தொடர்ந்த நாள் விடிந்தது.

தாய் வீட்டில் பீரோவிலிருந்த தன்னுடைய பழைய நகைகளேப் பெட்டியினின்றும் பிரித்தெடுத்தாள். நகையோடு நகையாக ‘அந்தத் தாலி’யும் வந்து சேர்ந்தது. அவ் வளவுதான், தன் உயிரையே யாரோ பிரித்தெடுத்தாற்போல உணரலாணுள் கல்யாணி அம்மாள். தன்னைத்தானே ஒருமுறை குனிந்து பார்த்துக் கொண்டாள். வெள்ளையுடை காட்சியளித்தது. காலச்சிமிழைப் பதமாகத் திறக்கக் கூடவில்லை. பதட்டம், ‘பொல, பொல’வென்று மணிகள் உதிர்ந்தன. கண்ணிர் மணிகளுக்கு ஒசை ஏது? உருவந்தானே உண்டு? உருவமொன்று தோன்றியது. அது அவள்புருஷனின் உருவம். சோமசேகரன் ‘ஜம்’மென்று இருந்தார். மாப்பிள்ளை அல்லவா? மனம் அறிந்து, மணம் முடித்தார்கள். கெட்டி மேள முழக்கத்தாடே திருப் பூட்டப்பட்டது. அவள் அவரது சொத்து ஆனால், காலப்பூ இதழ்கள் சிலவற்றை உதிர்த்துச் சிரித்தது. கோமதி பிறந்து சிரித்தாள்: பெற்றேர்கள் பேணிச் சிரித்தார்கள். முன் சிரிப்பு, பின் அழுகை என்பார்கள். அது கல்யாணி அம்மாள் வரை மெய்யேதானே?

இமை பிதுங்க,மனம் பிதுங்க, அந்தத் தாலியையே உறுத்துப் பார்த்தாள் அவள். மங்கலகாண்எனும் சிறப்புப் பெற்ற அந்தத்தாலி இருந்தது, ஆனால், அந்தத் தாலிக்கு உடையாளி போய்விட்டார், பாவம் பாவமும் புண்ணிய மும் ஊழ் விளையாட்டு!

நினைவு மீண்டது.

“ஆசாரி சிங்காரமுங்க அம்மா!” என்று தன்னை அறி முகம் செய்வித்து நின்றான் வந்தவன், தாலியைப் பெட்டியில் பக்தியுடன் வைத்தாள்; பிற நகைகளை வெளியே எடுத்தாள். மகள் கொண்டு வந்து காட்டிய ‘மாதிரிகளை’யும் முன்னே வைத்தாள். தன் கை வசமுள்ள நகைகளை உருக்கினால், மகள் விரும்புவது போலச் செய்ய இயலுமா வென்று கேள்விக்குறியைப் போட்டாள் அவள்.

“நகைங்களை உருக்கி எடை பார்த்துத் தானுங்க சொல்ல முடியும். நீங்க சம்மதிச்சா, நான் இதுகளை வீட்டுக்குக் கொண்டுபோய் உருக்கி, எடை போட்டுக் காண்பிக்கிறேனுங்க.. என்னைப்பத்திப் பக்கத்துத் தெரு ‘மு,லெ’ வீட்டிலே கேட்டுக்கிடுங்க அம்மா,” என்று உரைத்தான் அவன். அவன் பேச்சு அவனது நாணயத்துக்கு உரைகல் ஆனது. நம்பினாள், சென்றான். திரும்பினான். “இன்னம் இரண்டு சவரன் எடை தங்கம் தேவைப் படுதுங்க.. இரு நூறு ரூபாய் பணம் கொடுத்தாலும், தங்கம் வாங்கலாங்க!...” என்றான்; எடைப் படிக்கற்களையும் தராசையும் தரையில் வைத்தான்.

கல்யாணி அம்மாளுக்குத் திகைப்பு வளர்ந்தது. ‘தெய்வமே!’ என்று நெடு மூச்சைப் பிரித்தாள், பிரஹதீஸ்வரர் ஆலயம் மணி முழக்கம் செய்தது. அவளுக்கு ஓர் ஆலோசனை புறப்பட்டது, புறப்பட்ட நடுக்கத்தைப் போர்த்தி மூடியவளாக, உள்ளே சென்றாள். சற்றுமுன் தரிசனம் தந்த தாலியைத் தொட்டாள். தொட்ட கை நடுங்கியது. “அத்தான், என்னை நீங்க மன்னிச்சிருங்க. நம்ம பொண்ணு நல்ல காரியத்துக்குத்தான் இந்தத் தப்

பைச் செய்ய வேண்டியிருக்குது. ஆசாரி சொல்லுற பணத்துக்கு வகை இல்லீங்க. பொண்ணுப் பொறந்தவ நான் வேறே எங்கே போயுங்க பணம் புரட்டுவேன்?... இந்தத் துப்பு சம்பந்தி வீட்டுக்கு எட்டப் புடாதுங்களே?...இல்லேன்னா, ஆயிரம் ரெண்டாயிரம் கூட மறு பேச்சாடாம எங்க அண்ணன் தருமே?...பொண்னேட கல்யாணச் செலவுக்கே இந்த வீட்டை அடமானம் வச்சு தானுங்க திரனும்!..அத்தான், நீங்க தெய்வமாவே இருந்து, என்னைப் பெரிய மனசு பண்ணி மன்னிச்சுக்கிடுங்க...அத்தான், அத்தான்!...”

மகள் அறியாமல், ஆசாரியிடம் அந்தத் தாலியை நீட்டி அதையும், ‘அழித்து’ப்பயன் படுத்திக் கொள்ளுமாறு கோரினால் கல்யாணி அம்மாள். அன்றிரவு பூராவும் ஆயிரம் தரம் “அத்தான்”, “அத்தான்!” என்று நாமாவளி பாடிக் கொண்டேயிருந்தாள்!

***

முகூர்த்த தினம் கிர்ணயம் ஆனது.

மகள் கோமதியின் வதுவை விழாவுக்கான பூர்வாங்க ஏற்பாடுகளைச் செவ்வனே முடித்த நிறைவில் மனம் மகிழ்ந்து கின்றாள் கல்யாணி அம்மாள். திருமண விழாவுக் காக வீட்டை ‘அடமானம்’ வைத்துப் பணம் பெற ரகசிய ஏற்பாடுகளைச் செய்தாள் அவள். மானம்புச் சாவடியில் தெரிந்தவர் ஒருவரை வரவழைத்து விஷயத்தைச் சொன்னாள். அவர் யோசித்து முடிவு சொல்வதாகக் கூறிப் போனர். போன பெரியவர் திரும்பிய போழ்தில், வாஸ்தவ மாகவே ‘பெரிய மனிதராகவே’ வந்தார். வீட்டை அடமானம் வைக்கத் தேவையில்லே யென்றும், தேவைப்படக் கூடிய பண உதவியைச் செய்வதாகவும், மெதுவாகப் பணத்தைத் திருப்பித் தரலாமெனவும் மூன்றாம் பேருக்குத் தெரியாமல் காப்பதாயும் உத்தாரம் மொழிந்தார். அந்த வினாடியில் அவளுக்கு இரண்டு தெய்வங்கள் தோன்றினர். ஒன்று: உலகினை ஆண்டவன். அடுத்தது; அவளை ஆண்ட சோமசேகரன்!

நாடியம்மனையும் அங்காளம்மனையும் துணைக்கு அழைத்துக்கொண்டு அழைப்பிதழ்கள் சுற்றுலா புறப்படலாயின்.

‘அம்மா, எங்கழுத்திலே அத்தான் மூணு முடிச்சுப் போடட்டும். அப்புறம் பாரேன், கம்ம கஷ்டம் எல்லாம் பறந்து போயிடும்!’ என்று அடிக்கடி தேறுதல் அளித்து, துயரம் அழித்து வந்த அருமைப் புதல்வியை எண்ண எண்ண, கல்யாணி அம்மாளின் இதயம் இனித்தது. “...எங்குடும்ப கவுரவத்தைக் காப்பாத்தத்தான் எனக்கு இம்பிட்டுத் தொல்லைங்க. ஆனா, இதெல்லாம் எங்க கந்த சாமி அண்ணனுக்குப் பட்டுக் கோட்டைக்கு எட்டிப்பிடாமல் இருக்கவேனும்!...’

உருமப்பொழுது.

‘குடமிளகாய்’ சாப்பிட்டதற்கு அனுசரணையாக வெள்ளோட்டம் வந்த செஞ்சுடர்ச் செல்வன் திடுதிப்பென்று ‘ஊசி மிளகாய்’ கடித்தாற் போன்று உரைக்கத் தொடங்கினான்.

காலையில் நல்ல நேரம் கணித்து, மகளுக்குச் செய்திருந்த புது நகைகளைப் பூட்டி அழகு பார்த்து மகிழ்ந்த காட்சிக் கல்யாணி அம்மாளுக்குச் சரபோஜி மஹால் சிற்பத்தை நினைவூட்டிக் கொண்டேயிருந்தது. பெட்டகத்தில் நூறுரூபாய் நோட்டுக்களின் வாசம் வேறு அவளுக்கு இதம் அளித்த வண்ணம் இருந்தது. லாபநஷ்டக்கணக்கை எழுதிக் காட்டியவாறு இருந்த காலக் கணக்கனின் நியதிப் பொறுப்பு அவளது கண்களைப் பொசியச் செய்யத் தவறவும் இல்லை!

வாசலில் இரட்டை மாட்டு வண்டி ஒன்று வந்து தேங்கியது.

“அம்மா!”

கண் நிமிர்த்தி, நோக்கை நிமிர்த்தி விட்டாள் கல்யாணி அம்மாள். கையில் சாவிக் கொத்துக் குலுங்கியது. முந்திரிப்பருப்புத்துணுக்குகள் பற்களுக்கிடையே நசுங்கிச் சுவை காட்டின.

வாசற்புறத்தே ஆசாரி சிங்காரம் நின்றான்.

‘இவருக்குத்தான் நகை செஞ்ச கூலி அவ்வளவையும் அணா பைசா பாக்கி வைக்காம குடுத்துப்பிட்டேன்?...அப்பாலே, ஏதுக்கு இப்ப மறுபடியும் வந்திருக்காராம்...?’

தவழ்ந்து வந்த கேள்விக்குத் தக்க விடை தவழ்ந்து வந்தது!

சிங்காரத்தின் துணைகொண்டு கடந்து வந்த, ‘அந்த உருவம்’ அவளுடைய கண் நோக்கில் தென்பட்டதுதான் தாமதம்; அவளது தலை ‘தலையாட்டிப் பொம்மை’ ஆனது. “...இந்த ஆண்ட பெருமாள் ஆசாரி இத்தனை காலங் கழித்து இப்போ இங்கே ஏன் வந்திருக்கார்?...’ வினாவின் சுழிப்பில் விதிச்சுழல் நிழலாடியதா?

குடும்பச் சொந்தம் கட்டு விட்டுப்போகாமல் இருக்க வேண்டி, கல்யாணியை அவளின் மாமன் முறைமை கொண்ட சோமசேகரனுக்குக் கல்யாணம் செய்து கொடுப்பதாக, இரு தரப்புப் பெற்றாேர்களிடையிலும் கடந்த பேச்சு வார்த்தைகளின் பேரில், ஒரு முடிவு நிர்ணயம் ஆயிற்று! மாப்பிள்ளை வீட்டினர் குல வழக்கத்தை ஒட்டி, ‘முகூர்த்தத்தாலி’ செய்து, மணவறையில் வைக்கவேண்டும். அவ்வாறே தாலி செய்வதற்கு, அப்போது நற்கியாதி பூத்து விளங்கிய ஆண்ட பெருமாள், வெற்றிலை பாக்குக் காணிக்கை முதலியன வைத்தார்கள். அவர் கைராசி வாய்க்கப் பெற்றவர் என்பது ஏகப் பிரசித்தம் ஆனால், விவாக தினத்துக்கு முந்திய நாள், உருக்கப்பட்ட தங்கக் கட்டியைத் திருப்பிக் கொண்டுவந்து கொடுத்துவிட்டார் ஆசாரி. அதற்கப்புறம் அவரை அந்த வட்டாரத்திலேயே காணோம் இந்தப் பதினெட்டு வருஷங்களாக அவர் எங்கே அஞ்ஞாதவாசம் இருந்தாரோ?...

காம்புவிட்டு உதிரக் காத்திருக்கும் கனிந்த பழமென நின்றார் ஆண்டபெருமாள் ஆசாரி. தளர்ந்த உடல்; முதிர்ந்த நரம்புகள். நெற்றியில் விபூதிக் கோடுகள். நரை திரண்ட முடியை ‘அள்ளி முடிந்து’ விட்டிருந்தார்.

ஆசாரியைக் கண்ணுற்றதும், கல்யாணி அம்மாளுக்குத் துணுக்கென்றது. காலச் சவுக்கு அவள் நெஞ்சைத் தஞ்சமடையாமல் இருக்குமா, என்ன?

‘ஒருவேளை, இவர் கையாலே செஞ்ச தாலி எங்கழுத்திலே ஏறியிருந்தால், என்னோட அத்தான் பிழைச்சிருப்பாரோ?...என் மாங்கல்யம் பிழைச்சிருக்குமோ?...’ எண்ணம் பிறந்த பகைப்புலத்தில், தன் தாலி உருமாறிய நிகழ்ச்சியும் கோடு அமைத்து நகைத்தது! ‘என் விதி. ம்!...’

“அம்மா!”

“வாங்க, ஆசாரி ஐயா!”

முகப்பு வெளித் திண்ணையில் அமர்ந்தார் ஆண்ட பெருமாள் ஆசாரி.

தாம்பூலத் தட்டு ஓடி வந்தது.

“அம்மா என்னை மறந்திருக்க மாட்டீங்க நீங்க!.. உங்களுக்குத் தாலி செய்ய இருந்த வேளையிலே, எம் மகளுக்குப் பிரசவ வேதனை அதிகமானதாகத் தந்தி வந்திச்சு. ஆனபடியினாலே, நான் பொன்மலைக்கு ஓடிப் போயிட்டே னுங்க. கடவுள் புண்ணியத்தாலே எம் மகள் பெற்றுப் பிழைச்சது. ஆனா, இங்கே வந்து பார்க்கையிலே, உங்க கல்யாணம் முடிஞ்சிருக்திச்சு. பிழைப்புக்காக அலைய வேண்டி வந்திச்சு. கடைசிலே, உங்க பரிதாபமான நிலைமையைக் கேள்விப்பட்ட நான் கழுத்திலே கத்திபட்ட ஆட்டுக் கிடாமாதிரி துடிச்சிப் போனேனுங்க. எங்கையாலே உங்களுக்குத் திருமங்கலியம் செஞ்சு தரத்துக்கு எனக்கு அதிர்ஷ்டம் வாய்க்காட்டியும், உங்க பொண்ணுக்காச்சும் கட்டாயம் தாலி செஞ்சு தந்துப்பிடவேணும்னு ஆண்டவனை எண்ணி உறுதி எடுத்துக்கிட்டேனுங்க. என்னைக் கானும் ஒருநாள் உங்ககிட்ட வந்து, விவரத்தைச் சொல்லி மன்னிப்புக் கேட்கணும்னு இருந்தேன். இப்போ வேளை கூடியிருக்குதுங்க!...இந்தாலே இருக்கானே சிங்காரம். இவன் எம்மவன்!...இவன் மூலம் உங்க பொண்ணு கல்யாணச் சேதியை அறிஞ்சேன். அம்மா உங்ககிட்ட ஒரே ஒரு வரம் வாங்கிட்டுப் போகத்தானுங்க இப்போ வந்திருக்கேன். எங்க குலதெய்வத்தை கேந்துக்கிட்டு, என்னோட சொந்தத் தங்கத்திலே செஞ்ச தாலிஇது! உங்க அண்ணன் வீட்டிலேயும் என் ஆசையைச் சொல்லியனுப்பிச்சேன். இதுக்குப் பதிலா நீங்க எனக்கு யாதொண்ணும் தரப்பிடாதுங்க. இந்தத் தாலியையே உங்க மகளுக்குப் பூட்டறதுக்கு சரியின்னு ஒப்புக்கிட்டீங்கண்ணா, அப்பதானுங்கி தாயே என் மனசு ஆறும்!...”

ஆண்டபெருமாள் விம்மினார்.

“அம்மா!”

“என்னாங்க!”― கண்ணீர் பொழிந்தாள். அவளுடைய வலது கையில் புதுத்தாலிமின்னிப்பளிச்சிட்டது!

ஆசாரி இருமினார்: “இன்னொரு சேதிங்க!.. இந்தாங்க, இது உங்க தாலி!... இதைப் பத்திரமாய் வீட்டில் வச்சுக்கிடுங்க. உங்க மகளுக்குச் செஞ்ச நகைகளுக்குக் குறைஞ்ச் தங்கத்தையும் நானே வாங்கிப் போட்டுப்பிட்டேனுங்க, அம்மா! இலையும் பழுப்பும் எல்லாருக்குந்தாங்க! உங்க அன்பு மனசு இந்த ஒரு காரியத்துக்கும் மறுப்புச் சொல்லிப்புடாதுங்க. உங்க வீட்டுக்காரருதானுங்க எங்களை அந்த நாளையிலே ஆதரிச்ச தெய்வம்!... நீங்க இதை மறுக்காதீங்க. அப்பதான், இத்தனை காலம். எனக்குள்ளாற வீசிக்கிட்டிருக்கிற புயல் ஓயுமுங்க!..."

தேம்பினார் ஆசாரி.

கல்யாணி அம்மாளின் சம்மதம் கிடைத்ததும், புதுப்பிறவி பெற்ற பாவனையாகச் சிரித்தார் ஆசாரி. உந்திக்கமலம் வெளியேற்றிய சிரிப்பு அது! நீட்டிய காப்பியை நிறைவோடு குடித்தார் அவர்; தாம்பூலம் தரித்துக் கொண்டார்.

'எங்கையினாலே உங்களுக்குத் தாலிப் பொட்டு செஞ்சு கொடுத்திருந்தாக்க, ஒரு சமயம், உங்களோட தாலி நிலைச்சாலும் நிலைச்சிருக்குமோ?... நான் எங்ககடமையைச் செய்யாததற்கும், உங்க அவலக் கோலத்தை நான் கண்டதுக்கும் ஊடாலே என்னாலே இப்படித்தானுங்க ஒரு ஆறுதல் வழியை உண்டாக்கிட முடிஞ்சது, தாயே! ஊம்!... வாழ்க்கை ஒரு நாடகமாகத்தான் இருக்குது. வாழ்ந்து நொடிச்ச குடும்பத்தைக் காணவே ஆறமாட்டேங்குதே... அம்மா வீட்டை அடமானம் வச்சு, மகள் கல்யாணச் செலவைச் செய்ய இருந்திருக்காங்க. அந்தச் சேதி கிடைச்சடியும், அதுக்கும் நானே ஒரு வழியை உண்டாக்கி, திரை மறைவிலே ஒரு உபகாரம் செஞ்சுப்புட்டேன். சோமசேகரம் ஐயா குடும்பத்துக்கு ஆபத்துக்கு உதவாத என்னோட நிலபுலம் இருந்தென்ன?... பட்டினத்தார் பாடின மாதிரி, நடுவிலே வந்த சிவன் தந்த சொத்து இப்படிப்பட்ட சுபகாரியத்துக்கு உதவுகிறதே என் மனசுக்கு ஆறுதல் தரும்! ஈசனே, எல்லாம் நீ காட்டுற நல்ல பாதைதான்!...'