இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை/பயன்பட்ட நூல்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
பயன்பட்ட நூல்கள்

1. சிலப்பதிகாரம்

2. மணிமேகலை

3. தமிழர் சால்பு - டாக்டர் வித்தியானந்தன்

4. அகநானூறு - புலியூர்க்கேசிகன் உரை

5. புறநானூறு-புலவர் அ. மாணிக்கம் உரை

6. சங்ககால மன்னர் கால நிலை - வரலாறு - டாக்டர். புருஷோத்தமன்

7. பாரதியார் கட்டுரைகள்

8. பதினெட்டுப் புராணச் சுருக்கம்

9. காவ்ய இராமாயணம் - K.S. ஸ்ரீனிவாசன்

10. மாந்தருக்குள் ஒரு தெய்வம் - 1, 2 by கல்கி

11. Nitya Sumangali by Saskia C. Kersenboom - Story Devadasi Tradition in South India.

12. Early Phase (Gandhi) by Pyarelal.

13. Education - Swami Vivekananda

14. The Position of Women in Hindu Civilization by Dr. A.S. Altekar

15. Rebellious Homemakers - by Indira Mahendra

16. Women in Vedic age - by Dr. Shakuntala Rao Shastri 17. Drama in Ancient Tamil Society - by Dr. K. Sivathamby

18. The History of Women in India - by Padmini Sengupta

19. Indian Women Writing (from 600 B.C.) 1 st Part compiled by Dr. Susie Tharu, Published by Women’s Press U.S.A.

20. History of Tamil Literature - Published by Sahitya Academy

21. History of Kannada literature - Published by Sahitya Academy

22. Mira Bai - by Usha Nilsen, Sahitya Academy

23. ஆண்டாள், by K.A. மணவாளன் Sahitya Academy

24. Karaikkal Ammaiyar, by Dr. A. Sasivalli, Published by International Institute of Tamil Studies Madras 600 113

25. Akka Mahadevi - by Gurulinga Kapse, Sahaitya Academy

26. Rg Veda - Original - Vol 1, 4, 5, 6 with Wilson Translation.

27. Maanava Samaj (Hindi) by Rahul Sankrityayan

28. Bharatiya Vivaha Samstha Ki Ithihas (Hindi) by Vishwanath Kashinath Rajwade.
‘இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை’ - ஓர் விமர்சனம்

சுசீலா கணேசன்

துணை பொதுநூலக இயக்குநர், சென்னை.


ண்-பெண் இருவரும் சமமானவர்கள் என்று இன்று பேசப்பட்டு வந்தாலும் ஆண் ஆதிக்கம் நிரம்பிய சமுதாயமாகத் தான் தொன்று தொட்டு இருந்துள்ளது என ஆணித்தரமாக எடுத்துச்சொல்லும் இந்த நூல் திருமதி. ராஜம் கிருஷ்ணன் அவர்களின் படைப்புக்களின் கோமேதகக் கற்களாகத் திகழ்கிறது.

இதிகாச காலத்திலிருந்து-இந்திரா காந்தி காலம் வரை. ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண்களின் நிலை எப்படி எல்லாம் மாறுபட்டு வந்துள்ளது என்பதை அகநானூறு, புறநானூறு. சங்க நூல்கள் மட்டும் இன்றி புராண நூல்களிலிருந்தும் ருக்வேதத்திலிருந்தும் மேற்கோள்கள் காட்டியுள்ள விதம் மிகவும் பாராட்டுதலுக்குரியது. “கடவுளின் மணவாட்டி” என்கிற அத்தியாயத்தில்—மகாபாரதத்தில் வரும் தீர்க்கமஸ் என்கிற ரிஷி—கண்ணற்றவர்—இவரது மனைவி—தன் கணவனின் இயல்பு கண்டு வெறுப்படைந்து—‘ஒருத்திக்கு ஒருவனே என்கிற விதி செய்து கணவன் மனைவி என்கிற உறவில் ஆணின் ஆதிக்கத்தைப் பெண் பொறுத்துத்தான் ஆக வேண்டும்; இல்லையேல் சபிக்கப்படுவாள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக-புராண மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

காந்தாரி ஏன் தன் கண்களைக் கட்டிக் கொண்டார்? கணவனால் பார்க்க முடியாததைத் தானும் பார்க்கக் கூடாது என்றா அல்லது குருடான கணவனைப் பார்க்க வேண்டாம் என்றா? என்று அறிவுக்குப் பொருந்தாத தகவல்களை மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்கிற சிந்தனையைத் துண்டிவிடுகிறது இந்த நூல்.

இலட்சியத் தம்பதிகளாக வாழ்ந்த காந்தி—கஸ்தூரிபாய் வாழ்கையில்—ஏற்பட்ட திருப்பு முனை நிகழ்ச்சிக்கு முன் ‘மோகன்தாஸும்’ ஒரு சாதாரண ஆண் மகனாகத்தான் இருந்தார் என்பதையும் ஜவஹர்லால் நேருவின் மகள் இந்திரா காந்தியின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளும் ஆண் ஆதிக்கத்தை எதிர்த்துப் பெண் நடத்திய போராட்டத்தின் சான்றுகளாகச் சித்தரிக்கப் பட்டுள்ளது. இருந்தாலும் இந்திரா காந்தியின் வாழ்க்கைக் குறிப்புக்கு அதிக முக்கியத்துவம் இந்நூலில் கொடுக்கப் பட்டுள்ளதாகத் தோன்றுகிறது.

துணை இழப்பு—துறவறம்—இந்த அத்தியாயத்தில் சுமங்கலி—விதவை போன்ற சொற்கள் எப்படி ஆண் ஆதிக்கத்திற்குச் சாதகமான சொற்களாக அமைந்துள்ளது என்பதைப் பல உதாரணங்களில் விளக்கியுள்ளது அருமை.

பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்பதையும் இன்றைய நாளில் அனுபவங்களில்—பெண் அதிகாரியின் கீழ் பணி புரியும் பெண்கள் தங்கள் அதிகாரி தங்களுக்கு வீட்டுக்கு சீக்கிரம் போக அனுமதி தராதபோது வசைபாடும் விதத்தையும் நகைச் சுவையோடு எடுத்துக் கூறியுள்ளது யதார்த்தமாக உள்ளது.

பெண் தன்னையே விமர்சனம் செய்து கொள்ள வேண்டும்; தான் எதற்காகப் பிறந்தோம்? ஆடை அலங்காரங்கள் செய்து கொள்ள மட்டும் தானா, கருவைச் சுமக்க மட்டும்தானா, ஆணைச் சார்ந்து மட்டுமே வாழ முடியும் என்கிற எண்ணத்தின் காரணமா—என்பதைச் சிந்தித்து அலச முற்பட வேண்டும். பெண் தன் உறவு முறைகளை மறந்து—தன் மனிதப்பிறவியை மட்டும் எண்ணி—தன்னை உணர்ந்துக்கொள்ள வேண்டும். கருப்பை செயல்பாடு— பிள்ளை பேறு என்பதற்காக மட்டுமே தான் பிறப்பு எடுத்துள்ளதாகக் காலத்திற்கு ஒவ்வாத எண்ணத்திலிருந்து மீளவேண்டும் என்கிற ஆசிரியரின் கருத்தை ஒவ்வொரு பெண்மணியும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பதினோறு அத்தியாயங்களில் 'இந்திய சமுதாயத்தில் பெண்மை' வளர்ந்துள்ள/அல்லது வீழ்ந்துள்ள விதத்தை ஆழமாக ஆராய்ந்து எழுதியுள்ளார்-முற்றிலும் புதிய கோணத்தில் எழுதப்பட்டுள்ள நூல்-ஒவ்வொரு ஆணும் பெண்ணும் படிக்க வேண்டிய நூல்.

- சுசீலா கணேசன்

(சென்னைத் தொலைக்காட்சி
'நூல்நயம்' பகுதியிலிருந்து)