இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்/எங்கே கடவுள்?

விக்கிமூலம் இலிருந்து
எங்கே கடவுள்?

வழிபாடு, தொழுதல், வேண்டுதல், பூசனை அனைத்தையும் விட்டொழி; கோயிலுள்ளே கதவடைத்து யாரைத் தேடி நீ அலைகிறாய்? இருளில் புகுந்து மனத்துள்ளே யாரைக் குறித்து வழிபடுகிறாய்? கண்ணைத் திறந்து நன்றாகப்பார். கடவுள் உன் இல்லத்தில் இல்லை. உழவர் உழன்று பயனைக் காணும் வயல் வெளியில் வாழ்கிறார் அவர் உடல் வருந்தக் கல்லை உடைத்து சாலை அமைப்போரிடம் அவரைப்பார். வெயில் மழையிலும் அந்த ஏழை எளியவருடன் புழுதியில் அவர் பணி செய்வதைக் காண்!

உனது துவராடையை களைந்து எழுந்து வா! அவரைப் போல் நீயும் புழுதியில் உழலடா! வீடு, வீடு எங்குளது விடுதலை. எது வீடு? கடவுளே தன் படைப்பில் கட்டுண்டு இருப்பதைப்பார்? தியானத்தைக் கட்டி வை: பூக்குடலையைப் புறம்தள்வது! கிழிந்த கந்தலாகட்டும் உன் ஆடை தூசி படிந்து அது அழுக்கு ஏறட்டும். தொழில் புரியும் அவருடனே நீயே ஒன்றியே உழைத்திடுவாய்; நெற்றி வியர்வை நிலத்தில் சொட்டச் சொட்ட பாடுபடு. -கீ நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதே ஒரு நிலைத்த மருட்கை வியப்புதான். வாழ்க்கை என்பது அது தான். -ப.ப

பெண்ணே, இறைவனது படைப்பு மட்டுமல்ல நீ. மனிதர்களின் படைப்பும் தான் நீ. தங்கள் தங்கள் உள்ளங்களிலிருந்து இயற் பண்புகள் என்றென்றும் உனக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். நீ ஒரு பாதி பெண், மறுபாதி கனவு. -தோட்

தனக்குத் தெரிந்ததையெல்லாம் கைகழுவி விட்டு, தெரியாத ஒன்றைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறது காதல். - -ப.ப

அங்கே கூர்மதி தன்னுடைய முறைமைகளைக் காற்றாடிகளாக்கிப் பறக்க விடுகின்றது. மெய்மை உண்மை நிகழ்சிகளின் தளைகளை அறுத்து விடுகின்றது. -ப.ப

உறங்கிக் கொண்டிருக்கும் பறவைகளைக் கூடு எவ்வாறு தாங்கி நிற்கின்றதோ, அதே போன்று அமைதி உனது குரலைத் தாங்கி நிற்கிறது. -ப.ப.

இளமை கொண்ட மருட்கையுடன், நீ ஒரு நாள் என் வாழ்வில் புகுந்து கொண்டாய்.

-கா.ப


நீ விரும்புவதற்காக என்று உன் நெஞ்சத்திலிருந்து ஓர் உருவத்தை என் வாழ்க்கையோடு பிணைக்கச் சொல்லி இருந்தேன் நான். ஒரு நாள் உன்னிடம் விரைவு உண்மை, அழகு, காட்சிக்கினிமை அத்தனையும் அள்ளி வந்தாய் நீ. -கா.பொ

உனது சிறப்புகளுக்காக நான் உன்னை பாராட்ட முற்பட்டபோது, மலர்ந்தொளிரும் மரம் போல் நீ அதிர்ந்து நின்றாய். -மின்

படைப்புத் தொழிலில் தன்னையே காண்கிறான் இறைவன். -ப.ப.

காதல் சுவையில் உன் தகுதிக்கேற்ப, தீர்க்க முடியாத அளவிற்கு உனக்குக் கடன் பட்டிருக்கிறேன். -மின்

என்னிடம் கூற முடியாதவை யாவற்றையும் உன்னுடைய செம்மலர்கள் தங்களுடைய தகிக்கும் அமைதியில் கூறிவிடுகின்றன.
கா. ப

"நாள்கள் ஓடுகின்றன; ஆனால் நான் உனக்காக என்றும் காத்திருப்பேன்," என்றது காதல்.
- க.கொ

சிறிய இலைகளின் மனம் மயக்கும் அசைவில் காற்றின் கண்ணுக்குப் புலப்படாத கூடத்தை நான் காண்கிறேன் அவற்றின் மங்கிய ஒளிவீச்சில் விண்ணின் கமுக்கம் உள்ள துடிப்புகளைக் காண்கிறேன்.
- மின்

உலகனைத்தையும் தொட்டுத் தொடரும் அளவு ஒன்றே. முற்றிலுமாக இதை உணர்பவர்கள் வெகு சிலரே.
கா. ப

காதலின் மொழியை அதன் மெட்டுக்கேற்ப பாட

முடியும் என்று எண்ணினேன், ஆனால் அந்தப் பாட்டு என் நெஞ்சில் ஒலிக்கிறது; கண்கள் பேசவில்லையே.
கா. ப

நண்பனே மெட்டு என்பதே இல்லாமலிருந்தால் உன்னால் அவற்றை இனம் காண இயலுமா கூறிடு.
த.ஓ

இந்த மண்ணில் மலர்ந்த முதல் மலர் பிறக்காத பாட்டிற்குள்ளிருக்கும் அழைப்பிதழ்.
- மின்

கதவைத் திறந்திடு, காத்திருக்கிறேன் நான். இன்றைக்கான பணி முடிந்துவிட்டது. மாலை விண்மீன் தோன்றத் தொடங்கிவிட்டது.
- இ.அ

என் காதலியே எனது பணிவன்பைச் செலுத்தஉன்னிடம் இன்று தான் வந்திருக்கிறேனென்றால், என்னை மன்னித்து விடு.
கா. ப

எங்கிருந்தோ புறப்பட்டுக் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேர்கிற நீரோடை, உண்மை, நல்லவை இவற்றின் முகவர். எல்லையற்ற பரப்பிற்குத் திரும்பிச் செல்கிற அதன் எதிரொலிதான் அழகும், மகிழ்ச்சியும்.
- நினை

என் இதயமே, விரைந்திடு இன்றைய நாள் மறைவதற்குள் காதலிலேயே திளைத்திடு.
一 பா. சு

உனது மூச்சு இன்பம், துன்பம் இரண்டிலும் மாறி

மாறி என்னை முக்கியெடுக்கிறது. நாள் முழுவதும் நான் இசையையே கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்றால், நான் சிறிதும் கலங்க மாட்டேன். காரணம் இசையின்மேல் எனக்கு அத்தனை காதல்.
- தா.ஒ

அடிமை மனப்பான்மையுள்ள தூரிகை, குறுகிய சித்திரத் திரையின் அளவுக்கே உண்மையைக் குறைத்துக்

காட்டுகிறது.
மி.மி

உண்மையையும் அழகையும் வாழ்க்கை இணக்கத் தில் காண்கிறது. இதை நான் மிகைப்படுத்திச் சொல்ல வில்லை.
- ப.இ

உலகியல் நோக்கில் செல்வத்தை வைத்து மனிதன் எடை போடப்படுகிறான். தகுதியோ அன்பின் அடிப்படையில் எடைபோடப்படுகிறது. •
ப.ப

நல்லது செய்கிறவன் கோவிலின் நுழை வாயிலை அடைகிறான்; அன்பு செலுத்துகிறவன் கருவறையையே அடைகிறான்.
மின்

கொடுப்பவனின் மனத்தைச் சார்ந்திருப்பது அன்பு. ஏழையிலும் ஏழையும் கூட, இதில் வள்ளலாயிருக்கமுடியும்.
தா.ஓ
ஒருவனுக்கு மட்டுமே வழங்குவதற்காக அளிக்கப் பட்டதில்லை, இந்த எனது நெஞ்சம். பலருக்கும் வாரி வழங்குவதற்காகவே ஏற்பட்டது அது.
- தோட்

உலகின் கடற்கரையில் எனது நெஞ்சத் துடிப்புகள் அலை மோதுகின்றன. அங்கே 'உன்னை நான் விரும்புகிறேன்' என்கிற சொற்களைக் கண்ணிரால் எழுதப் பட்டுக் கையெழுத்திடப்படுகிறது.
- ப. ப


மாலைப் பொழுதின் அரையிருள் நேரத்தில், அதிகாலைப் பறவை, அமைதியாகிற எனது கூட்டிற்கு வந்து சேர்கிறது. -
- ப. ப


அன்பாகிய பேரரசில் நமது ஆன்மா இடம் பெற்றுள்ளது என்பதை எவனொருவன் தன் வாழ்க்கை மூலம் மெய்பிக்கிறானோ, அவன்தான் நமக்கு உதவி செய்கிறான்.
எ. எ

காது கொடுத்து கேட்கும் மேலுலகிடம் பேசுவதற்கு நிலம் எடுத்துக் கொள்ளும் எண்ணற்ற முயற்சிகளே மரங்கள்.
- மின்

இந்த பாழ்நிலப் பகுதியில் எனக்கு வழிகாட்ட உனது காலடியோசையையே நான் நம்பியுள்ளேன்.
-ப.சு

என்னிடம் உள்ளவற்றையெல்லாம் நான் ஈடு வைப்பேன். என்னிடமுள்ள கடைசிக் காசைத் தோற்கும் போது நான் என்னையே ஈடுவைப்பேன். எனது படுதோல்விக்குப்பின் நான் வென்றுள்ளதாக எண்ணுவேன்.
- க.கொ

மலை உச்சியில் படர்ந்திருக்கும் பனிப் பாறையை ஞாயிற்றின் முத்தம் கரைப்பது போல், உனது விழிகள் என் நெஞ்சத்தை உருக்குகின்றன.
- தா.ஓ

சித்திரை மாதத்தின் மகிழ்வான இரவில் அறிநதிராத அன்பிற்காகக் காத்திருப்பது எவ்வளவு இருண்மை படர்ந்ததோ, அது போன்றே அவன் கருநிறமுடையவன்.
-கா. பா

நமது மகிழ்ச்சியான நாள்கள் யாவையும் பணச்செல விற்கு வழி வகுத்தவை. -
-எ. எ

நிலத்தாயே, உன்னிடத்திற்கு நான் வேற்றாளாக

வந்தேன். உன் வீட்டில் ஒரு விருந்தாளியாக வாழ்ந்தேன். உன் வீட்டை விட்டு நண்பனாக வெளியேறுகிறேன்.
-ப.ப

விதையொன்றின் நெஞ்சத்தில் காத்திருக்கும் நம்பிக்கை ஒர் அற்புதத்தை வாக்களிக்கிறது. ஆனால் உடனே அந்த வாக்கை அது மெய்ப்பிக்க முடியாது.
- மின்

கடல் தன் மகிழ்ச்சியை தம்பட்டமடித்துக் கொண்டிருக்கிறது. மலர்கள் உன்னை முத்தமிடத் துடித்துக் கொண்டிருக்கின்றன. என் குழந்தாய், தாய் மண்ணின் கைகளில் உன்னிடம் விண்ணகமே பிறப்பெடுக்கிறது.
-கா. ப

கும்மிருட்டு. எனது அமைதியில் நீ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாய்.

காதலின் துயரமே, கண்விழித்திடு. ஏனெனில் வாயிலைத் திறந்திடும் வழியறியேன் நான், வெளியே காத்திருக்கிறேன்.

விழித்தெழு, காதலே, விழித்தெழுவாய். எனது வெற்றுக் குவளையை நிறைத்திடு. இசையின் மூச்சும் காற்றினால் இரவின் அமைதியை அசைத்திடு. -
-க. கோ

கன்று காலிகள் தங்கள் கொட்டிலுக்குத் திரும்புகின்றன. பறவைகள் தங்கள் கூட்டிற்குத் திரும்புகின்றன. உன் கதவைத் திறந்துவிடு. நான் காத்துக் கொண்டிருக்கிறேன். -
-இ. அ

ஓ, என் நெஞ்சமே, காதலி எங்கு வசிக்கிறாளோ, அந்த நாட்டுக்கு நாம் சென்றிடுவோம்.
一 க.பா

உனது நிழல் மாடி முகப்பைப் கடந்து செல்லும் வரை நான் காத்திருந்து கவனிப்பேன். நிறை மனத்தோடு திரும்பிடுவேன். -
க.கொ.

ஒ உலகமே, எனது இறப்பிற்குப்பின், உனது அமைதியில் எனக்காக "நான் விரும்பியிருக்கிறேன்" என்கிற சொல்லை நினைவில் இறுத்திக் கொள். முழு முகக்கண்ணாடியில், அழகி தன் முகத்தைப் பார்க்கும்போது, அழகே உண்மையின் புன்முறுவலாகக் காட்சியளிக்கிறது.
-மி.மி

என் அன்பே, வாழ்க்கை தோன்றுவதற்கு முன்னரே, எளிய கொந்தளிப்புடன் கூடிய உன் இரத்தத்துடன் இனிய கனவுகளாகிற ஏதாவதொரு அருவியின் அடியில் நீ நின்றிருந்தாய்
கா.ப

கடலில் கலக்கும் ஓர் ஆறு போல், ஒய்வு நேரத்தின் ஆழத்தில் உழைப்பு தனது நிறைவைக் காண்கிறது.
- மின்

என் நெஞ்சத்தை இழந்துவிடும் அளவிற்கு அவள் நாவிலிருந்து இத்தகைய இசையை ஏன் நான் பறித்துக் கொள்ள வேண்டும்?
- மின்

அவன் நல்லவன், கெட்டிக்காரன் என்பதற்காக நான் அவனை விரும்பவில்லை. அவன்

என் குழந்தை என்பதற்காகத்தான் நான் அவனை விரும்புகிறேன்.
- வ.பி

தடைகள் யாவற்றையும் மீறி பாட்டிசைத்தவாறே ஆறு விரைவாகச் செல்கிறது.

ஆனால் மலையோ இருந்த இடத்தில் நின்று அவளை நினைவுபடுத்திக் கொள்கிறது; அன்பு மூலம் அவளைத் தொடர்கிறது.
- வ.பி

அன்பே, என்னை நீ விரும்புவதனால் எனது மகிழ்ச்சியை மன்னித்துவிடு. எனது செருக்கை மிதித்திடு;
- தோட்

தேடுதல்களைப் போன்று, மரங்கள் விண்ணக மண்ணகத்தை கண்ணோட்டமிடுவதற்காக குதிகால்களில் நிற்கின்றன.
- மின்

அன்பின்றி உண்மை கைம் பொண்ணாகிறது.
- த.ஓ

கண்ணித் துளி அல்லது புன்னகைப்போன்று, உள் மனத்தில் நிகழ்ந்து கொண்டிருப்பதன் வெளிச்சித்திரம் தான் பாட்டு.
- நினை

தன்னிச்சை இல்லாமலேயே நினைவு கொள்ளாமல் தவித்துக் கொண்டிருக்கும் மனித ஆற்றலை வழிநடத்தி மனிதனுக்குத் தூண்டுதலாயிருப்பவள் தான் பெண்.
-ப.ஓ

தன்னிடம் கைநீட்டி இறைவன் வரும்பொழுது, மனிதன் தன் செல்வச் செழிப்பை உணர்கிறான்.
- மின்

ஆழம் காணமுடியாத இன்ப ஊற்றிலிருந்து எண்ணற்ற சிரிப்புச் சிதறல்கள் உலகம் முழுவதும் தெறித்துக் கிடக்கின்றன.
- நினை

தன் முகத்திரையை நீக்கியவாறு, ஓசையின்றி அன்பு நடைபோட்டு, நிழல் பணிவுடன் ஒளியைத் தொடர்கிறது.
-ப.ப

கண்கள் பார்ப்பதென்னவோ மண்ணையும், தும்பு தூசையும்தான்; ஆனால் உணர்வது நெஞ்சத்தின் மூலமே. மாசற்ற மகிழ்ச்சியடைகிறது அதில்.
- த.ஓ

இரவாகிய ஆழமான புதிரிலிருந்து இன்னும் ஆழமான பகலாகிய புதிருக்குள் புகுவது தான் பிறப்பு.
- மின்

பாடல் கனிகளால் என் நெஞ்சத்தை நிரப்பிடும் வகையில் உனது அமைதியின் மையத்திற்கு என்னை இட்டுச் சென்றிடு.
ப. ப

உரிமையுடன் செயல்பட, வெளி உலகின் மென்மையான அழுத்தமன்று நாம் வேண்டுவது. உலகின் சுமையை எளிதாக மட்டுமல்ல மகிழ்ச்சியுடன் தாங்குவதற்கான

உரமளிக்கும் அன்பையே நாம் வேண்டுவது.
எஎ
நிலைத்திருக்கும் அன்பு மொழியைப் பாடிக் கொண்டிருக்கின்றன விண்மீன்கள்.
- க.கொ

முடிவற்ற வைகறையின் வளையத்தில் புதிய இலை களில் புதியதாகப் பிறப்பெடுக்கிறது அதோ செங்கதிர்.
- மின்

நான் உன் கைகளைப் பற்றிக் கொள்கிறேன். உனது கரிய விழிகளில் புகுந்து கொள்கிறது என் நெஞ்சம்.
- மின்

தேவன் தன்னுலகில் இயங்கிக்கொண்டிருக்கிறார். ஆனால் தேவியோ நமது அடி ஆழ இருண்மையில் கண் துயில் கொண்டிருக்கிறாள்.
-எ.எ

அடக்கிவைக்கப்பட்ட அன்பின் ஆழமான துயரமாக மலர்கின்றன இளவேனிற் காய் மலர்கள்.
கா. ப

என்னுடைய பலமற்ற தோணியைக் கொண்டு ஆசைக் கடலைக் கடக்க நான் தவித்துத் திணறுகிறேன். என் முயற்சியும் விளையாட்டுத்தான் என்பதை மட்டும். ஐயோ, நான் மறந்தே விடுகிறேன்.

நீ எனது நெஞ்சத்தின் மையத்தில் இருந்தாய். ஆகையினால், என் நெஞ்சம் சுற்றித் திரிந்தபோது, அவள் உன்னைக் காணவேயில்லை, எனது அன்புகளிலிருந்தும், நம்பிக்கைகளிலிருந்தும் கடைசி வரை உன்னை நீயே மறைத்துக் கொண்டாய். ஏனெனில் நீ எப்பொழுதும் அவற்றிலிருந்தாய்.
- க.கொ

நான் உழைக்கும்போது இறைவன் என்னை மதிக் கிறான். நான் பாடும்பொழுது அவன் என்னை விரும்புகிறான்.
- மின்

வாழ்க்கை நமக்கு அளிக்கப்படுகிறது. மற்றவருக்கு வழங்கியே நாம் அதை அடைகின்றோம்.
- ப.ப

கட்டுப்படுத்தும் அதே சமயம் அன்பு, விடுதலையும்

அளிக்கிறது, ஏனெனில் ஒன்று சேர்ப்பது தான் அன்பு.
-எ.எ

மலரும் ஒவ்வொரு செம்மலரும் என்றும் இளவேனிலை அளித்திருக்கும் செம்மலரிடமிருந்து எனக்குக்

கிடைக்கும் வாழ்த்துகள்.
- மின்

உண்மைக்கு அப்பாற்பட்டு எவனொருவனுடைய

புகழ்பளிச்சிடாமலிருக்கிறதோ அவனே பெருமைக்குரியவன்.
- ப.ப

அன்பு செலுத்துவதனால் நாம் அடையும் மகிழ்ச்சியே

இறுதியானது. ஏனெனில் அதுவே (அன்பு செலுத்துவதே) இறுதியான உண்மை.
- ப.ஓ

உனது கரிய விழிகளில் மழையின் வருகை தனது இசையைக் காண்கிறது.
-கா. ப

பனித்துளி இலை நுனியில் அசைந்தாடுவதுபோல்,காலத்தின் விளிம்புகளில் உனது வாழ்க்கை எளிதாய் கூத்தாடட்டும்.
- தோட்

எனது காதலியிடமிருந்து எனக்குக் கடிதமொன்று வந்துள்ளது. அதில் வெளியில் சொல்ல முடியாத ஒரு தகவல் உள்ளது. இதோ, இறப்பச்சம் என்னை விட்டு அகன்று விட்டது.
- க.பா

நிலவு உன் நெஞ்சத்தில் மறைந்திருக்கும்பொழுது, உதடுகளாகிற சாளரத்தை ஊடுருவி நுழையும் நிலவொளியைப் போன்றது உனது புன்னகை.
-கா. ப

காதல் விளக்கை நெஞ்சத்தில் தாங்கியிருக்கும் பொழுது, அதன் ஒளி உன் மேல் விழுகிறது. நிழலில் நான் பின் தங்கிவிடுகிறேன்.

- க.கொ

இரவின் இருட்டு பகலுடன் இணக்கம் காண்கிறது. மூடுபனி படர்ந்த காலைப்பொழுது முரண்படுகிறது.
- மின்