இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்/எதிர்ப்படல்

விக்கிமூலம் இலிருந்து

எதிர்ப்படல்


உலகமே, என் நெஞ்சு உன்னை அன்பால் முத்தமிடாதபொழுது, எனது ஒளியின் பெருமை முழு வதையும் நான் அறிய இயலாது போயிற்று; நீண்ட இரவு முழுதும் வானம் விளக்கை ஏந்தியவண்ணம் என்னைப் பாதுகாத்து வந்தது. தன் அன்புப் பாடலோடு என் நெஞ்சு உன்னை நெருங்கியது, கமுக்க உரைகளை நாம் பரிமாறிக் கொண்டோம் என் நெஞ்சம் உன் கழுத்தில் மாலையிட்டது. விண்மீன்களோடு நீ மதித்து வைத்துக் கொள்ளும்படியாக, அது ஏதோ ஒன்றை உனக்குத் தந்திருக்கிறது என்பதை நான் அறிவேன்.
-எ
அடக்கத்தில் நாம் உயர்ந்திருக்கும்போது, உயர்ந்தவர்கள் என்ற நிலையைக் கிட்டத்தட்ட எட்டி விடுகிறோம்.
ப. ப


காலையும் மாலையும் உன்னிடம் எத்தனையோ பாடல்கள் பாடியிருக்கிறேன். எனது கடைசிப் பாடலை, நீ செல்லுகையில் உன் குரலில் தேக்கிக் கொண்டாய்.
- கா.ப.

எனது பெயரை நான் மறந்து விடுகிறேன். பனிப் படலம் கரையும் பொழுது காலைக் கதிரவன் தெளிவுற்று இருப்பதைப் போன்று, உன் பெயரின் இனிமை என் நெஞ்சத்தில் நிறைந்து விடுகிறது.
-ப. ப

எனது இளமை வடியும்போது, எல்லாப் பொருள்களின் இசையையும் நான் கேட்க முடிகிறது. வானகம் விண்மீன்களாகிய தன் நெஞ்சத்தை என் முன்னே திறந்துவைக்கிறது.
கா. ப

தன் இயல்புக்கேற்ப, உலகம் அழகு மயமானது, மகிழ்ச்சி மயமானது.
- நினை

அமைதி கொண்டிருக்கும் இரவு, அன்னையின் அழகையும், பகல் குழந்தையின் அழகையும் தன்னிடத்து கொண்டுள்ளது.
- ப. ப

தன் அன்புக் காதலியின் முகத்தை புதிய முகத்திரை களில் அவள் கண்டிருக்கிறாள்.
ーகா. ப

இடம் விட்டு இடம் பெயரும் பாடல்கள் என்நெஞ்சத்திலிருந்து பறந்து செல்கின்றன. தங்கள் உறைவிடத்தை உன் அன்புக் குரலில் தேடுகின்றன.
- மின்

வருங்காலத்தில் வேனிற்காலம் காதலர் தோட்டத் திற்கு வந்து சேரும்.
- த.ஒ.

உன்னருகே அமைதியாக அமர்ந்திருக்க எனக்கு விருப்பம்தான். ஆனால் அதற்கான துணிச்சல் என்னிட மில்லை. எங்கே எனது உள்ளம் உதடுகளுக்கே வந்து விடுமோ என்ற அச்சம் தான் காரணம்.
- தோட்

அமைதியாக அமர்ந்திருந்து உனது ஒலியற்ற உள்ளுயிரிலிருந்து பிறக்கிற சொற்களைக் கேட்பேனாக.
-எ
மனிதனைச் சுற்றியிருக்கிற உறுதி என்கிற சிறியதீவைச் சூழ்ந்துள்ள இடையூறு ஐயப்பாடு, மறுப்பு என்கிற கடல், அவளை அறிந்திராதவற்றைத் துணிவுடன் எதிர் கொள்ள அறை கூவல் விடுக்கிறது.
- மின்

உனது ஒளியைப் பொழிந்து கொண்டு இந்த நொடிப்பொழுதை உன் மடியின் குறுக்கே நன்கு பரப்பிக் கொள்வாய்.
-எ

எல்லையற்றது என்கிற புல்லாங்குழல் இடைவெளி இல்லாமல் ஊதப்படுகிறது. அதலிருந்து பிறக்கும் ஒலியிசை காதல்.
-க. பா

காலம் காலமாக மனிதகுலம் ஒரே படைப்பில் தான் தன்னை ஈடுபடுத்தி வந்துள்ளது. ஆன்மிக வாழ்வு என்பதே அது.
-படை

என் நெஞ்சத்தைக் கமுக்கக் காதலில் அவனுக்கு அளித்து விட்டேன். நம்பிக்கையெல்லாம் வீண்போய்விடும் என்ற எண்ணத்தில் தான் நான் நாள்களைக் கடத்தி வருகிறேன்.
-இரு.அ

தவறு தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாது. நேர்மையினால் அது முடியும்.
- பப

அதோ பார், என் மன்னியே, அடிவானத்தின் கிழக்கில் பகல் மலர்கிறது. -
-இரு.அ

உனக்காக நான் பாடிய பாடல்களுக்காகப் பரி சொன்றும்’ கேட்கப் போவதில்லை நான். அவை இரவுமுழுவதும் வாழ்ந்திருந்தால் போதும், அதிலேயே எனக்கு மன

நிறைவு.
- நா

சீற்ற மின்னல் தன்னுடைய கூரிய நகங்களினால் வானத்தைக் கீறிக் கிழிக்கின்றது.
பப

மெய்யறிவு பெற்றுக் குழந்தைப் பருவத்தை மனிதன் திரும்பப் பெறுவதற்காக இறைவன் காத்திருக்கிறான்.
- பப

நட்புரிமையில் கனவுகளும் நனவுகளும் கைகோர்த்துக் கொள்ளுகிற அந்தப் பகுதியை அவள் அடைந்துவிட்டாள்.
-மு.மு

என்னுள்ளத்தில் வாழ்பவன் மட்டுமே நான் பதித்த உண்மையான வழியே என்னிடம் வர முடியும்.
- மு.மு

முழுமையான நோக்கைப் பெறத் தானாகவே நமக்குஉதவிட முன்வரும் உயிர்க்கருவியே நம்பிக்கை என்பது.ஆனால், நாம் காண்பது என்னவோ துண்டு துக்கடாக்களை மட்டிலுமே.
-எஎ

பனித்துளி, தன்னுள் மிளிர்கின்ற ஒளிப்பொரியினின்றே சூரியனை மணங்குளிர அறிந்து கொள்கிறது.
-மி.மி

அன்புப் பெருக்கில் விளையும் செல்வம்தான் தூய்மை.
- ப.ப

உனது மூச்சுக் காற்றின் மூலம் மகிழ்ச்சி, துயரம் என்கிற பண்புகளாக நான் வெளிப்படுகிறேன்.
-படை

இடையூறு எதிர்ப்படும் பணிகளுக்கு என்னை அனுப்பி என்னைத் திடப்படுத்து.
-நா

மனிதனுடைய சிந்தனைகளைப் பேச்சாக உருப் பெறச் செய்வது இறையின் அமைதி.
- கா. ப

கரைக்குக் கரை நீ தொடரும் வாழ்க்கைப் பயணத் தில் என்னை நீ மீண்டும் மீண்டும் சந்திப்பாய்.
மின்

அழகு உண்மையின் புன்னகை. தனது அசல் முகத்தை குறையற்ற கண்ணாடியில் அவள் பார்க்கிறாள்.
- மின்

பெரிய அரசுகளின் மேல் இறைவன் வெறுப்படை கிறான். ஆனால் ஒரு பொழுதும் சின்னஞ் சிறிய மலர்கள் மேல் அன்று.
ப. ப

துன்பமளிப்பது நீ எனக்குச் செய்யும் மரியாதை.
- நா

உனது அன்பு உருவெடுத்துள்ளது போன்று இந்த உலகத்தை நான் கருதுகிறேன். அப்பொழுது எனது அன்பும் அதற்குத் துணைநிற்கும்.
-ப. ப

செருக்கு அவனது வெறுப்புகளைக் கற்களினடியில் புதைத்து விடுகிறது. அன்பு தனது அடிபணிதலை மலர்களின் வாயிலாகத் தெரிவிக்கிறது.
- மின்

மனிதனின் செயல்களினால் இறைவன் மனந் தளர்வதில்லை என்கிற உண்மையை ஒவ்வொரு குழந்தையும் தெரிந்து வைத்திருக்கிறது.
-ப. ப

இனி என்றுமே நீ என் பாடல்களுக்கு முன்னே நிற்க மாட்டாய், அவற்றில் ஒன்றாக இருப்பாய்.
கா. ப

என் அன்பே, உனது கமுக்கத்தை உனக்குள்ளேயே வைத்துக் கொள்ளாதே. மாறாக எனக்குச் சொல்லிவிடு, எனக்கு மட்டுமே.
-நினை

மழையின் மங்குல், வானத்திலே ஒரு கோடி யிலிருந்து மறுகோடிவரைப் பரவி, இன்று பகல் முழுவதையுமே மூடிக் கொண்டிருக்கிறது.

வானம் தன் ஒளியை நமது நெஞ்சங்களில் பாய்ச்சுகிறது.
-எ.சு

எங்களது மலர்களை எடுத்துச் செல்ல நாங்கள் விரைகிறோம். காரணம் கடந்து செல்லும் காற்று அவற்றைக் கவர்ந்து சென்றுவிடலாமே.
-தோட்

கண்டறிந்து விடவேண்டுமென்கிற அடக்க முடியாத ஆர்வம் கொண்டுள்ள முகில்போல், குன்று உயரே உயரே இருக்கும் வானத்தை எட்டிவிடத் துடிக்கிறது.
- மின்

தனது ஆர்வத்தில் எட்டக் கூடியதை முத்தமிடுகிறது கடவுள். மனிதனோ எட்ட முடியாததை எட்டி முத்தமிடுகிறான்.
-பப

நான் ஆசைப்படுவதை அடைந்திட இந்தப் பேரண்டம் முழுவதுமே எனக்கு உதவிக் கொண்டிருக்கிறது.
எ எ

****

காதல் என்பது ஒரு விளங்காத புதிர். ஏனெனில் விளக்கத்திற்கு அப்பாற்பட்டது அது.
- மின்

****

எனது வாழ்க்கை பயனற்றது என்கிற கொடிய வறுமையினால் கந்தல் கந்தலாகக் கிழி படாமலிருக்கட்டும்.

****

இறைவன் பொழியும் மழை நீர்போல், ஒரு தகப்பனின் அன்பு தீர்ப்பு வழங்குவதில்லை, மாறாக வற்றாத ஊற்றிலிருந்து பாய்ச்சப்படுகிறது.
- நா

****

விண்மீன்கள் ஒளிவீசும் தன் கோவிலில் குடி கொண்டுள்ள இறைவன் காத்திருப்பது தனக்கு விளக்கெடுத்துவரும் மனிதனுக்காகவே.
- மின்

****

காதல் எப்பொழுதுமே ஈகம் செய்வதற்கு அணியமாகஉள்ளது என்பது நடைமுறை உண்மை. ஆனால் அதை உண்மை என்று நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.
-ப.ப

****

ஒரு மூலையில் அமர்ந்து, சிந்தனை செய்து, நீங்கள் எல்லோரும்தான் எனது உலகம் என்று பாடல்கள் புனை வது எத்தனை நலமான நுகர்வு.
-தோட்

****

தெற்கு வாயில் திறந்தே உள்ளது. என் இன்னிள வேனிலே அதன் வழி உள்ளே நுழைந்திடு.

மழலைபேசும் இலைகளாக, தங்களை ஈத்துவக்கும் கொள்ளும் மலர்களாக உள்ளே வந்திடு.
- இ.அ

****

நல்லது செய்ய விரும்புகிறவன் வாயில் கதவைக் தட்டுகிறான். அன்பு செலுத்துகிறவனுக்கு வாயில் கதவு திறந்தே இருக்கிறது.
ப. ப
என் தலைவனுடைய குழலோசை பொருள்கள்யாவற்றிலும் எங்கும் ஒலிக்கிறது.
- நா

****

வெளியிடப்படும் போது கூடக் காதல் ஒரு கமுக்க மாகவே இருந்து வருகிறது. ஏனெனில், காதலனுக்கு மட்டுமே தான், தான் காதலிக்கப்படுவது தெரியும்.
- மின்

****

இருக்கிறாய் ஓ, கனியே, என்னிடமிருந்து எவ்வளவு தொலைவில் நீ?'

நான் 'ஓ, மலரே, உன் நெஞ்சத்தில் மறைந்திருக்கிறேன்.
ப. ப

****

} உன் கண்களைத் திறந்து பார், இசையின் மூச்சுக் காற்றுத் தன் மூலம் வெளியேறுவதைப் புல்லாங்குழல் உணர்வதைப்போல் நீ இவ்வுலகை உணர்ந்திடுவாய்.

- - எ.எ

நமது ஆளுகையிலிருந்து அழகு வெளியேறுேவதை நுட்பம் வரை நம்மால் அதைக் காணமுடியாது. - -வீ.வெ

முன்னர் நான் பறித்து வைத்திருந்த மலர்களை வாடாமல் வதங்காமல் தன் கூடையில் வைத்து மாலை மயங்கும் நேரத்தில் என்னிடம் எடுத்து வருகிறான் இறைவன்.
- ப.ப.

அன்றாடக் கூலியின் மூலம் எனது பணிக்குப் பலன் கிடைத்துவிடுகிறது.

அன்பின் மூலம் எனது முழு மதிப்பு கிட்டும்வரை நான் காத்திருப்பேன்.
- மின்

தாமரை இலையின் அடிப்பாகத்தில் அரும்பி யிருக்கும் பெரிய பனித்துளி நீ, அதன் மேற்பகுதியில் துளிர்ந்திருக்கும் சிறிய பனித்துளி நான், என்றது பனித்துளி ஏரியிடம்.
- ப.ப.

கிடைக்காதவற்றைத் தேடியலைவது தான் மாந்தனிடம் உள்ள பெரிய துடிப்பு. அதுவே அவனிடமிருந்து உன்னதமான படைப்புகளை வெளிக் கொணர்கிறது.
- எ.எ
நீ ஒருவனே விருந்தாளியாக விளங்கப்போகிற விழாக் கூடமே சிறப்பானது.

ஆகவே தான் உனக்கு விடுக்கப்படும் அழைப்பிதழ் விண்ணிலிருந்து விண்ணுக்கு எழுதப்படுகிறது. - -படை

ஒரு கணத்தில் ஓசை நிலையான இசையை ஏளனம் செய்கிறது. - -ப.ப

காதல் பெருக்கில் உன்னையே நீ என்னிடம் ஒப்படைக்கிறாய். பின்னர் என்னிடம் உன் இன்னமைதி அத்தனையையும் உணர்கிறாய். - -கீ

என்னால் கடவுளை நேசிக்கமுடிகிறது. ஏனெனில் மறுப்புக்கான உரிமையை அவன் எனக்கு அளிக்கிறான். - - மின்


என் வாழ்க்கையின் தந்திகள் யாவும் மீட்டப்படும் போது, என் தலைவனே, நீ என்னைத் தொடும் ஒவ்வொரு முறையும் அன்பின் இசை வெளிப்படுகிறது. - - ப.ப

விடுதலையே கடவுள், ஏனெனில் ஒளியும் அவனே. - -எ.எ

எனது பாடல்களை உனது ஊமை நெஞ்சத்தில் பொழிகிறேன்; அதே போன்று, எனது அன்பையும் உனது அன்பில் பொழிகிறேன்.
- தோ

உன் கண்கள் கண்ட விருந்தாளியை உன் இல்லத்திற்குக் கொண்டு வராதே. உனது நெஞ்சத்தின் அழைப்பின் பேரில் அவன் உன் இல்லம் வரட்டும்.
-படை

மண், தண்ணீர் இவற்றின் நெஞ்சத்திலிருந்து பீறிடும் குரல் "நான் காதலிக்கிறேன், நான் காதலிக்கிறேன்" என்பதே.
- செம்

அமைதியாக இரு என் நெஞ்சமே, இந்த ஓங்கி உயர்ந்த மரங்கள் வேண்டுதல்கள் தாம்.

- ப.ப

மொட்டுக்களை மலரச் செய்வது உன் வேலையில்லை. மொட்டை உலுக்கிடு, உதிர்த்திடு. ஆனால் அதை மலரச் செய்வது உன் ஆற்றலுக்கு அப்பாற்பட்டது.
-க.கொ

என் மரத்தின் நிழல் வழிப்போக்கர்களுக்காக அதன் கனியோ, நான் காத்துக் கொண்டிருக்கும் அந்த ஒருவருக்காக.
- மின்

எனக்கு அன்பு மறுக்கப்பட்டால், காலைப்பொழுது ஏன் தன் நெஞ்ச வேட்கைகளைப் பாடல்கள் மூலம் வெளிப்படுத்த வேண்டும்? - -எ

விண்ணெங்கும் பரவி நிற்கும் ஒளி தனது எல்லையைப் புல்லில் படிந்திருக்கும் பனித்துளியில் காண்கிறது. - - மின்

என் நண்பனே, உன்னை நான் நெடுங்காலமாகத் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். - -படை

துயரம் நிறைந்த என் வாழ்வில் அழகையும் ஒழுங்கு முறையையும் கொண்டு வா. - -கா. ப

வழி விடு, மொட்டே, வழிவிடு, உன் நெஞ்சத்தைக் கீறி வழிவிடு. - -படை

கனவுகளின் மூலம் மண்ணகம் விண்ணுலகம் படைத்திட காலம் காலமாக வானகம் தன்னை வெறுமையாக வைத்திருக்கிறது. - -மின்

நான் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் என் தலைவியின் வீட்டில் உள்ளது.
-நா

எனது வாழ்வு மொட்டாய் அரும்பியிருந்த காலமொன்றும் இருந்தது. அதன் மனமெல்லாம் ஒரு பக்கத்தில் சேர்த்து வைக்கப்பட்டிருந்தது.
- தோ
உலகம் என் கண்முன் ஒரு சித்திரக் குவியலாகவே காட்சியளிக்கிறது; எனது ஆன்மா, இசையால், மனம் உருகவே பதிலளிக்கிறது.
-மி.மி

மனித நெஞ்சம் ஒரு விரிந்த பாழ்நிலம். கிளைகளுடன் கூட்டுச் சேர்ந்து ஒரு குழந்தையை ஆட்டுவதைப் போல இருளைத் தொட்டியிலிட்டு ஆட்டுகிறது.
- நினை

பொன்மாலைப் படுஞாயிறு இசைக்கும் இசையிலும் ஒதுக்க முடியாத இருட்டுக்கு அது அளிக்கும் புகழ்ப் பாடல்களிலும் இரவின் முகவுரை தொடங்குகிறது.
-ப.ப

உண்மையை அடைவதற்கு எதுவும் அதிக விலை யில்லை என்பது அன்பின் வலுவான முடிவு.
- எ.எ

இந்தப் பகல் ஒளியில் என் நெஞ்சம் என்ன விரும்புகிறது என்பதே எனக்குத் தெரியவில்லை.
-நினை

இந்த உலகத்தை விரும்புவது எவ்வளவு உண்மையோ, அதை விட்டுச் செல்வதும் அதே அளவு உண்மையாக இருக்கவேண்டுமென்றால், அப்பொழுது வாழ்க்கையில் கூடுவதற்கும், பிரிவதற்கும் ஒரு பொருள் இருக்கவேண்டும்.
-க.கொ

பனிக்கட்டியைத் தேக்கிவைப்பது குன்றத்தின் தலைச்சுமை; பனி உருகி நீரோட்டங்களாகப் பெருக்கெடுக் கும் போது உலகம்முழுவதும் அதைத்தாங்கியாக வேண்டும்.
- மின்

என் மனத்திற்கு இனியவனை, எங்குச் சென்று காண்பேன்?

என்னிடமிருந்து அவன் பிரிந்து சென்று விட்டான். இடத்திற்கிடம் கூற்றரிந்து அவனைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்.
-படை

தவறுகள் யாவற்றிற்கும் நீ கதவை அடைத்து விட்டால், உண்மை என்றுமே அடைபட்டுவிடும்.
-ப.ப