இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்/காதற் பாடல்

விக்கிமூலம் இலிருந்து

காதற் பாடல்


நிலப்பூ நிலத்துக்கு எவ்வளவு அண்மையிலிருக்கிறதோ அதுபோல அவள் என் மனதுக்கு அண்மையிலுள்ளாள்; ஒய்ந்த உறுப்புகளுக்கு உறக்கம் இன்பம் தருவதுபோல் அப்படி அவள் எனக்கு இன்பம் தருகிறாள். மாரிக்காலத்தில் கட்டற்ற வெள்ளம் பாயும் ஆறுபோல நான் அவளிடம் கொண்ட காதல், என் வாழ்க்கை ஆறாகக் கரையுரண்டோடுகிறது. அலைகளின் ஒசையாலும் நீரோட்டத்தின் சலசலப்பாலும், ஆறு பாடிக்கொண்டு வருவதுபோல எனது காதல் பாடல் எனது காதலியின் உயிரிலே கலந்து பெருக் கெடுத்தோடுகிறது.
-கா.ப
என் குழந்தாய், உனது இனிய உடம்பில் உறக்கம் நிறைவு காண்கிறது.
-கா.ப


மரம் தன் இலைகளை உதிர்ப்பது போல், நிலத்தில் நான் சொற்களை உதிர்க்கிறேன். வெளிவராத என் எண்ணங்கள் உனது அமைதியில் மலரட்டும்.
- மின்

எவற்றையெல்லாம் நான் விட்டுச் செல்ல வேண்டுமோ, அவற்றையெல்லாம் நான் விட்டுவிடுகிறேன். எவற்றையெல்லாம் ஏற்க வேண்டுமோ, அவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்கிறேன். உன்னுடன் சேர்ந்து நடை போட மட்டும் என்னை அனுமதித்திடு.
-படை

அருகே என்கிற தடைக் கல்லின் ஊடே புகுந்தாவது உன் அன்பு என்னைக் காணட்டும்.
- மின்

முள்களினூடே சிறிய மலரொன்று காணக்கிடைத்தது. உலகின் நம்பிக்கை மடிந்து விடவில்லை, என்று நான் உரக்கக் கூறிவிட்டேன்.
- நா

கடலலைகளின் மேல் இரவில் மின்னுகிற வெளிச் சம்தான் நமது பெயர்கள். பின்னர் தன் கையெழுத்தை விட்டுச் செல்லாமலேயே அந்த வெளிச்சம் மறைந்து விடுகிறது.
-ப.ப

படைப்பில் செலவிடும் உழைப்பு, அதில் திளைத்து மகிழ்வதற்கே.
- மின்

"நிலவின்மூலம் உனது காதல் கடிதங்களை எனக்கு அனுப்புகிறாய்," என்றது இரவு. கதிரவனிடம் 'எனது விடைகளைக் கண்ணிர்த் துளிகளாகப் புல்வெளி மீது படர விடுகிறேன்.
-ப.ப

என் தலைவனே, உண்மையின் மீது எனக்குள் நம்பிக்கை அப்பழுக்கில்லாமை பற்றிய எனது தொலைப்பார்வை இவை படைப்புத் தொழிலில் உனக்கு உதவிடட்டும்.
- மின்

தான் இயங்கும்போது ஓய்வும் உழைப்பே. கடலின் அமைதி அவற்றில் இயங்குகிறது.
-ப.ப

நம்பிக்கைதான் ஒளியை உணரும் பறவை; பகல் இன்னும் இருளாயிருக்கும் நிலையில் இது இசை எழுப்புகிறது.
-மின்

வாழ்க்கை என்னும் ஊற்று, நீரை வாரி வடிக்கிறது; சிரிப்பிலும், கண்ணிலும் நுரைத்து நிற்கிறது.
-நினை

செம்மலரைப் பார்க்க அவனுக்குக் கண்கள் உள்ளன. ஆனால் அவன் முட்களை மட்டுமே பார்க்கட்டும்.
-ப.ப

தனியாக வாழும் தன்னுரிமையை என்றுமே நாம் கோர முடியாவிட்டால், நாம் ஒரு நாளும் ஒருவர் மற்ற வருக்காக வாழமுடியாது.
-எ.எ

பகல் பொழுதின் சேவையில் எனது அன்பு தன் ஆற்றலைப் பெறட்டும்; இரவின் அணைப்பில் தன் அமைதியை அடையட்டும்.
- மின்

காதலிக்கும்போது, இலை பூவாக மலர்கிறது.
தொழும்போது, மலர் கனியாக மாறுகிறது.

- ப.ப
உனது அழைப்பை ஏற்று உனது பேரரசில் நான் நடமாடவேண்டும்.
- எ

கிளைகள் கனி அளிக்கின்றனவே என்பதற்காக நிலத்தினடியில் படர்ந்திருக்கின்ற வேர்கள் பலன் கேட்கிறதில்லை.
-ப.ப

நிலாவே வந்து விடு, கீழே இறங்கிவிடு. என் கண்மணியின் நெற்றியில் முத்தம் பதித்திடு.
-கா.ப

வாழ்க்கையில் என் சாதனைகள் அளித்துள்ள மகிழ்ச்சிகள் யாவற்றையும், விருந்தின் முடிவில் அன்புடன் உனக்கு ஈத்துவக்கிறேன்.
- மின்

தான் ஓர் ஆற்றல் என்பதன் மூலம் மாந்தன் வெளிப்படுகிறதில்லை. தான் ஓர் உயிர் என்பதிலேயே வெளிப்படுகிறான்.
-படை

வர்ச்சியின் ஈர்ப்பு, வெறுப்பின் அவலம் என்கிற எதிர் மாறான ஆற்றல்களின் பிணைப்பே படைப்பு.
-படை


விதையைப் போன்றது, சமயமும் வெறும் எண்ணமும் மட்டுமில்லை. எண்ணத்தின் வெளிப்பாடு அது.
-எ.எ

ன் கண்ணசைப்பினால் கவிஞர்களின் இசைக் கருவியிலிருந்து எழும் பாடல்கள் யாவற்றையும் கவர்ந்திடலாம்.
- தோ

, நண்பனே, உன் உடல் இறைவனின் இசைக் கருவி அதன் தந்திகளை முறுக்கி அதனிடமிருந்து தனது இன்னிசையை எடுத்துக் கொள்கிறான்.
-க.ப

விதையின் தளையிலிருந்து விடுபட்டு முன்பின் தெரியாத இடத்தினூடே வீரச்செயல்களைத் தேடிச் செல்லும் சிறகு படைத்த உயிர்தான் மரம்.
- மின்

டலைக் கடப்பது போன்றது. இந்த மனித வாழ்க்கை; அங்கு நாம் யாவரும் குறுகலான கப்பலில் சந்தித்துக் கொள்கிறோம்.
-ப.ப

நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்வதற்காகவே இறைவன் நம்மை தவிர்க்கிறான். தன் நெஞ்சத்தில் நெருக்கமாக வைத்துக் கொள்வதற்காகவே, தன்னைத் தானே ஆன்மாவில் அர்ப்பணித்துக் கொள்கிறான்.
- மின்

திகாரப் பேரரசில் அடக்கி நொறுக்கியே நாம் முன்னேறுகிறோம். ஆனால் அன்புப் பேரரசில் ஆசையை வெறுத்து ஒதுக்கியே நாம் முன்னேறுகிறோம்.
- எ.எ.

என்னைச் சுற்றிலும் நான் பார்க்கும் அமைதியான வானும், பாய்ந்து செல்லும் நீரும் என் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்புகின்றன. ஒரு குழந்தையின் முகத்தில் தவழும் புன்னகை போல மகிழ்ச்சி எங்கும் பரவி நிற்கிறது என்பதை உணர்கிறேன்.
-கா.ப