உள்ளடக்கத்துக்குச் செல்

இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்/காதல் கண்கள்

விக்கிமூலம் இலிருந்து

காதல் கண்கள்


னது நெஞ்சில் உள்ள கமுக்கத்தை என்னிடமே சொல்லிவிடு தோழி!

நீ இவ்வளவு அருமையாகப் புன்முறுவல் பூத்து நிற்கின்றாய்.

உனது நெஞ்சக் கழுக்கத்தை, என்னிடமே சொல்லிவிடு, தயங்கவே தயங்காதே; என் நெஞ்சமே அதைக் கேட்கும், என் காது கேட்காது.

இரவு இருண்டு ஆழமாக இருக்கிறது; வீடு அமைதியாகவே இருக்கிறது; பறவைகளின் கூடுகளிலும் உறக்கம் மண்டிக்கிடக்கிறது.


உனது தயங்கும் கண்ணீர்த்துளிகளின் மூலமும், தயங்கும் புன்முறுவல்களின் மூலமும், இனிய நாணம் நிறைந்த துன்பத்தின் மூலமும், உனது நெஞ்சக் கமுக்கத்தை என்னிடம் பேசித்தீர்த்துவிடு.

-எ

ரே வரலாறு தான் உள்ளது. மாந்தனுடைய வரலாறே அது. தேசிய வரலாறுகள் யாவும் பெரிய நூலின் பகுதிகளே.

-தே

கைகளோடு கைகள் இணைகின்றன, கண்கள் மேல் கண்கள் பதிகின்றன. நம் நெஞ்சங்களைப்பற்றிய பதிவு இங்குத்தான் தொடங்குகிறது.

-தோ

விண்ணைப் படைத்த இறைவன் தானே மண்ணையும் படைத்தான்?

-க.கொ

ரவில் பொழியும் மழைபோல், அவளுடைய ஆர்வம் ததும்பும் முகம் என் கனவுகளை வட்டமிடுகிறது.

- ப.ப.

டக்கம் உலகை ஆண்டிடும் என்கிற உண்மைக்கேற்ப அழகின் இசை நம் உள்ளத்தைத் தொடுகிறது.

-சா

ரு பொருளின் பல்வேறு அங்கங்களுக்கு ஒரு முழுமையின் சமநிலைமை அளிக்கும் இணக்கம்தான் உண்மை என்பது.

-தே

மாலைப் பொழுதாகிற கிண்ணம் அன்பினாலும் இசையினாலும் பொங்கி வழிகிறது. அந்நேரம் நான் யாருடனோ அமர்ந்திருந்தேன். அவனுடைய நினைவு முகத்தையும் விண்மீனில் காண்கிறேன்.

一ஈ

ண்ணில் கண்ணீர்த் துளிகளே அவளுடைய புன் முறுவல்களை மலர்ச்சியில் வைத்திருக்கின்றன.

-ப.ப.

ன் இறைவனை நான் காணும்போது தீமைகள் யாவும் என் நெஞ்சத்திலிருந்து அகன்று விடுகின்றன. -க.பா

ண்ணுக்குப் புலப்படாத சில விரல்கள் பயனற்ற தென்றல் போல, நீர்க்குமிழிகளின் இசையை என் நெஞ்சத்தில் பரப்பி வழித்துக் கொண்டிருக்கின்றன. -

ப.ப.

ண்மையின் எளிமையை எதிரொலிக்கும் உன்னை நான் தேடியலைகிறேன்.

-சித்

காலம் காலமாக அவன் எனக்காகக் காத்திருக்கிறான்.காரணம் என் அன்பிற்காக அவன் தன் நெஞ்சத்தைத் தொலைத்திருக்கிறான்.

一க.பா.

ன்னிடம் உலகம் எந்த மெல்லிய இனிய பேச்சுகளினால் அன்பு மொழிகள் பேசுகின்றதோ, அந்த மொழிகளை, என் நெஞ்சமே உன்னிப்பாய் கேள்.

- ப.ப.

ண்ணுக்குத் தெரியாததைக் கூட்டைக் காரிருளில் இசையின் தகவலைத் தன்னிடத்தில் கொண்டு ஒரு புதிராய் விலங்குகிற பறவையைப் போல அழகின் ஒவ்வொரு கணமும் என்னை அடையட்டும்.

-சித்

லகில் வாழ்ந்திட நாம் பெற்றுள்ள உரிமையின் முழு விலையையும் நான் எரிந்த பின்னரே நாம் விடுதலை பெறுகிறாய்.

-மின்

ரவின் இருட்டைப் போன்றதே படைப்பின் மறைபுதிரும்; எத்தனைப் பெருமை வாய்ந்தது அது.

-ப.ப.

லையுதிர் கால இரவின் எரிமீன்கள் போல, அக்கறையில்லாமல் நீ அளித்த வெகுமதிகள் எனது உள்ளத்தின் ஆழத்தில் தீப்பற்றி எரிகின்றன.

-மின்

நான் குழந்தையாயிருந்த காலத்திலிருந்து நீ என் நெஞ்சத்தில் வாழ்ந்து வந்திருக்கிறாய்.

-த.ஓ

ண்ணியதை அடைந்திடுவேன் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்து காத்திருந்து உன் வாழ்நாளைக் கழித்துவிடு.

-சித்

ண்டறியாத வழிகளில் பறந்து திரியும் இறங்கும் பறவைகள் போல என்னையும் உரிமையுடன் பறக்கவிடு.

–எ

டவுளை நீ கண்டிருந்தால் உன்னை முழுமையாக அவனிடம் அளித்துவிடு. உன்னிடம் அவனைக் கொணர்ந்திடு.

-க.பா.

ழகே உண்மை உண்மையே அழகு என்பதை என்றும் உணர்ந்திருப்பதே நமது வாழ்வின் குறிக்கோள்.

-சா

ல்லோருடனும் இணக்கம் கண்டிருப்பதே வாழ்க்கை என்பதை உணர்வதுதான் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய உயர்ந்த பாடம்.

- ஆ

ந்த சின்னஞ்சிறு எண்ணங்கள் இலைகளின் கலகலப்புகள் அவை மகிழ்ச்சியாக முணுமுணுப்பது என் உள்ளத்தில் தான்.

- கா.ப.

விண்ணகத்தில் முழு நிறைவான அமைதி நிலவுகிறது உலக மனத்தையும் தன் அணைப்பில் இறுத்திக் கொள்வது போன்று தோன்றுகிறது.

-ஈ

னித்துளி போல் நொய்தானது மகிழ்ந்து சிரித்துக் கொண்டிருக்கும் போதே அது மறைந்து விடுகிறது. ஆனால் துயரமோ உறுதியானது, நிலைத்திருப்பது.

துயரளிக்கும் நேயத்தை உன் கண்களில் உயிர்த் தெழட்டும்.

-தோ

ற்றெல்லா நாள்களைக் காட்டிலும் இன்று எனக்கு மிகவும் உகந்த நாள். காரணம் இன்று என் அன்பிற்குரிய இறைவன் என் வீட்டில் ஒரு விருந்தாளி.

-க.பா.

ந்த உலகில் நாம் பிறவியெடுத்திருப்பது அதைத் தெரிந்து கொள்வதற்காக மட்டுமல்ல, அதை ஏற்றுக் கொள்வதற்காகவே.

-ஆ

தாமரை இலைமேல் தத்தளிக்கும் பனித்துளிபோல் சிறப்பான காலம் என்கிற நெஞ்சத்தின் மேல் என் வாழ்க்கை தத்தளிக்கிறது.

-ஈ

லகத்தோடு தனக்குள்ள உறவு முறையைப் புரிந்து

கொள்ளாமலிருக்கும்போது, சுவர்களே அயன்மைப்பட்டுப் போகிற சிறையில்தான் மாந்தன் வாழ்கிறான்.

- சா

நேற்றைய அன்பினால் புறக்கணிக்கப்பட்ட கூட்டில் எனது இன்றைய அன்பிற்குப் புகலிடம் கிடைப்பதில்லை.

-மின்

காலத்தின் தொடக்கத்திலிருந்து முடிவுரை உனக்கும், எனக்குமிடையே காதல் உள்ளது. இந்தப் பழைய காதலை யார்தான் அணைத்திட முடியும்.

- க.பா

மைநிலத்தின் துடிப்புள்ள குரல் போல், பயன் மரங்கள் என் பலகணியை நெருங்கி வருகின்றன.

-ப.ப.

நிழல்களுக்கிடையே நடந்து செல்லும் காற்றின் கண்ணுக்குப் புலப்படாத உருவமொன்றை நீலவானில் உணர முடியாத தொடுதலை நிறுத்திவிட்டு,நீ எனக்குப் பிடிகொடாமல் மறைந்து விட்டாய்.

-மின்

தான் படைத்த காலை வேளைகளே இறைவனுக்குப் புதிய வியப்புகளாகப்படுகின்றன.

-ப.ப.

தோட்டத்தில் நாணி நிற்கின்ற நிழல்களே

அமைதியாகக் கதிரவனை விரும்பிகின்றன. மலர்கள் கமுக்கத்தை ஊகித்துக் கொள்கின்றன. புன்சிரிப்பைச் சிந்துகின்றன. இலைகள் மெல்லிய கேலிச் சொற்களை உதிர்க்கின்றன.

-மின்

கிழ்ச்சிக் கொள், ஏனெனில் இரவின் தளைகள் நொறுங்கிப் போயின; கனவுகள் மறைந்து போயின.

-எ

லையாய நிலையில் மாந்தன் அன்புடையவன் தான் நன்கு புரிந்து கொள்ளுதல் என்பதுதான் அன்றே மற்றொரு பெயர் அன்புறத்தில் தான் அவனுடைய விடுதலையே அடங்கியுள்ளது.

- சா

ம்பிக்கை என்பது முழுமையாகப் பக்குவப்படுத்தப் பட்ட நிலையில் பெண்மை வடிவில் நிலைத்துள்ளது.

-ஈ

னது இறைவன் உன்னிடத்திலேயே உள்ளான். புறக்கண்கள் திறக்கப்பட வேண்டிய தேவையென்ன?

- க.பா

ருவி பாடுகிறது, "விடுதலையில் தான் என் இசை பிறக்கிறது"

-ப.ப.

ன் நெஞ்சத்திலிருந்து வெளிப்படுகிறது, நடனமாடுகிறது.

ளிச்சிடும் களவு மின்னிய பறந்து திரிகிறது.

-தோ

லக வாழ்க்கையின் போக்கில் இணைந்தவன் நான்.

—ஈ

பெண்ணே, நீ வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருக்கும்போது, உனது அங்க அசைவுகள், கூழாங் கற்களிடையே குன்றின் நீரோடை செல்கையில் பிறக்கும் இன்னிசையை ஒத்திருக்கின்றன.

-ப.ப.

ரேவொரு மலரை அளிக்க உன்னிடம் வந்தேன். ஆனால் தோட்டத்தையே உனக்கு அளிக்க வேண்டும். தோட்டமே உன்னுடையதுதான்.

-மின்

னது நெஞ்சத்தை எளிமையாகவும், தூய்மையாகவும், மனத்தை அமைதியாகவும் வைத்துக்கொள்வேன்.

- ஈ

கிழக்கிற்குக் கடைசி வணக்கம் செலுத்திவிட்டு ஞாயிறு மேற்குக் கடலைக் கடக்க முற்படுகிறான்.

-ப.ப.

ற்றவர்களுடன் தன்னை இணைத்துக் கொள்வதன் மூலமே நமது உள்ளுயிர் தன்னைப் பற்றிய உண்மையைக் கண்டு கொள்ள முடியும்.

-சா

னது வாக்கு இரவின் முகத்திரையைக் கிழித்து விட்டிருக்கிறது. இரவின் மொட்டுகள் திறக்கப்படுகின்றன.

-எ

தம் உயிரற்று இறுகி முடங்கிப்போய், சுமைபோல அழுத்துகிறது.

-கீ

வாழ்க்கையின் நல் வாழ்த்துகள் கிழக்கிலிருந்து மேற்குக்குப் பரவுகின்றன.

-எ

துன்புறுத்தப்பட்ட நிலையில் எனது மீட்டப்படாதத் தந்திகள் இசையை இரஞ்சுகின்றன.

-மின்


துயரப்பாட்டை வழங்கிக் கொண்டு தயங்கி நிற்கும் நெஞ்சத்தின் தந்திகளைத் தாண்டிக் கொண்டு உலகம் ஓடிக் கொண்டிருக்கிறது.

-ப.ப.

மதாயிருக்கிற ஏதாவதொன்றைக் காண்பது எந்த ஒன்றையும் புரிந்து கொண்டதற்கு அடையாளம்.

一சா

சிந்தனையிலாழ்ந்திருக்கும் முடிவற்ற காலத்தில் நெற்றியில் புலப்படும் தெய்வீகத் துயரச் சாயலின் தோற்றத்தை முகில் மூட்டம் கொண்ட வானம் இன்று கொண்டுள்ளது.

-மின்

லகமளாவிய உள்ளுயிரின் வாழ்க்கையின் தாளத்துடன் கூடிய துடிப்பை எப்பொழுது மாந்தன் தனது உள்ளுயிரிலே உணர்கிறானோ, அப்பொழுதுதான் அவன் விடுதலை பெற்றவனாகிறான்.

一சா

டி ஞாயிற்றின் ஒளி வீசப் பெற்று மண்ணகம் இரவில் பறிப்பதற்கேற்ற நிலையிலுள்ள பழுத்த பழம்போல் காணப்படுகிறது.

-மின்

செம்பொருள் தன்னை உலகிற்குத் தந்து கொண்டிருக்கிறது. என்னையே நான் கண்டு உணரும் கவிதை போல அதை நான் எனக்குரியதாக்கிக் கொள்கிறேன்.

-ஆ

ளியில் நீராடியெழுந்த காலைப் பொழுதுபோல் வெண்ணிற ஆடை உடுத்தி மலர் கொய்யும் உன்னை நான் கண்டேன், நான் கூறினேன் "எனக்கு உதவிட என்னை ஏற்பதின் மூலம் எனக்கு பெருமை அளி"

-நா

மது வாழ்க்கையை அதன் மகிழ்ச்சிகளிலும், துயரங்களிலும், அதன் ஆக்கங்களிலும் தேக்கங்களிலும் அதன் எழுச்சியிலும், வீழ்ச்சியிலும் முழுமையாக விரும்புவதற்கான ஆற்றலை எங்களுக்கு அளி.

-சா

குழந்தாய், காற்றின் நீரின் மழலையையும், மலர்களின் அமைதியான கமுக்கங்களையும், முகில்களின் கனவு களையும், காலை வானத்தின் ஒசையற்ற வியப்பான பார்வையையும் என் நெஞ்சத்திற்கு நீ கொண்டு வருகிறாய்.

-மின்

குழந்தைகள் இறைவனால் விரும்பிப் படைக்கப் பட்டவர்கள்.

-ஆ

நேயத்தில் வேறுபாடு என்கிற உணர்வு அற்றுப் போகிறது. தனக்கென விதித்திருந்த எல்லையைக் கடந்து எல்லையற்ற என்கிற நிலையை எட்டி முழுமை என்கிற தனது உயர்ந்த குறிக்கோளை மாந்த உயிர் அடைகிறது.

-சா

னது சூழ்ச்சி நயத்தை, ஒதுக்கி வைத்திடு, அன்பு இதுபோன்றவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டது, உண்மையாக யார் அதனைத் தேடுகிறானோ,அவனுக்கு அது கிடைத்து விடுகிறது.

- க.பா

நெஞ்சத்தின் ஆழத்திலிருந்து அமைதியாக அவனது வாழ்த்துகள் அவள்பால் பாயும்.

-கோ

கிழ்ச்சிகளைப் பொறுத்தவரை அவை நமக்கு மட்டுமாகவே உண்மை. நன்மைகளைப் பொறுத்தவகையோ நமது கட்டுப்பாடுகள் தளர்ந்து விடுகின்றன; அவை யாவருக்கும் அரிதாகிவிடுகின்றன.

-சா

னது காதுகளில் ஏதாவது கிசுகிசுத்துவிடு. அது நமது வாழ்க்கையை இன்ப ஊற்றில் ஆழ்த்தி இறப்பை வெள்ளத்தில் முழுகடித்து அழிந்தோடுகிறது.

-ஈ

டற்பறவைகளும், கடலலைகளும் ஒன்று சேர் வதைப் போல், நாம் கூடுகிறோம், ஒருவரையொருவர் நெருங்குகிறோம்.

டற் பறவைகள் பறந்து போய்விடுகின்றன. அவை விலகி விடுகின்றன, நாம் பிரிந்து சென்று விடுகிறோம்.

-ப.ப

லையுதிர்கால காலைப்பொழுதில் என் விருந்தாளி வீடு தேடி வந்திருக்கிறார்.பாட்டிசை, என் நெஞ்சமே. அவருக்கு நல்வரவு கூறு.

-எ

னது பணி முடிந்து விட்டது. கடலிலிருந்து தரைக்கு இழுக்கப்பட்டுள்ள படகுபோன்றவன் நான். மாலைப் பொழுதில் அலையெழுப்பும் நாட்டில் இசையைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

- ப.ப.

மாந்தன் அடையும் உயர்ந்த பேறு அன்பு ஒன்றே, ஏனெனில் அதன் மூலம் அதிகமானதொரு ஆற்றல் தன்னிடம் உள்ளது என்பதையும், தான் அனைவரிடம் நெருக்கமுள்ளவன் என்பதையும் அவன் நன்குணர்கிறான்.

一சா

ந்த ஒரு படகு எல்லா உலகங்களுக்கும் புகலிடமோ, அதைத் துண்டு துண்டாக்கிவிட்டுக் கடலைக் கடக்க முடியுமா?

கீ

ன் இறைவன் அருகிலேயே இருக்கிறான். அப்படியும் அவனைக் காணப் பனை மரம் ஏறிக் கொண்டிருக்கிறாய்.

- க.பா

டர்படும் எளிய மக்களுடன்தான் எனது வாழ்க்கையும் பின்னிப் பிணைந்துள்ளது என்பதில் எனக்கு மகிழ்ச்சியே.

-க.கொ

ல்லையற்றது என்பது எல்லைக்குட்பட்டது என்கிற உண்மை விண்மீன்களடங்கிய வானத்தின் முழுமையிலோ மலரின் அழகிலோ காணப்படுவதில்லை. மனிதனின் உள்ளுயிரில்தான் அது உள்ளது.

一சா

னிமையானது ஆனால் முழுமையற்ற நெஞ்சத்தில் சிறைப்பட்டிருக்கும் மொட்டில் அழகு சிரிக்கிறது.

-மின்

குறையுள்ள ஒன்றின் அன்பைப் பெற, நிறையுள்ளது ஒன்று அழகை அணிகலனாக அணிந்துள்ளது.

-ப.ப.

நீ தனியாக வாழ்ந்த போது, உன்னையே நீ புரிந்து கொள்ளவில்லை.

-க.கொ

நான் வந்தேன், நீ எழுந்தாய் வானத்தில் ஒளி அரும்பியது.

-க.கொ

கெட்டது ஒதுங்க வேண்டியதுதான் அதனிடத்தில் நல்லது தோன்றவேண்டும்.

-சா

நாளைத் தொடங்கும் முன் உன்னைத் தொட்டுணர்வதாக உன்னிடம் வந்துள்ளேன்.

-எ

டவுளை எவன் கண்டிருக்கிறானோ, அவனுடைய பணியும், அவனுடைய ஓய்வும் இசையினால் நிரம்பியுள்ளது. அன்பின் ஒளியை அவன் எங்கும் தெளிக்கிறான்.

-க.பா

மாந்த வரலாற்றில், இறைவனின் வாழ்விசை

மாந்தனின் இசையை, ஒத்திசைவைத் தொடர்பு இருக்கின்றதை கேள்விப்பட பல வாய்ப்புகள் வந்துள்ளன.

-ஆ

} லையுதிர் கால வானத்திற்கு உள்ளார்வ வளத்தயும் மாந்தத் துடிப்பையும் அளிப்பது நமது பார்வையே.

- நினை

வானம் பொழிகிறது; என்னுள்ளம் இறைவனைக் காணத் துடிக்கிறது. உலகின் ஓசை நயம் எங்கு எழும்பித் தாழ்கிறதோ, அந்த இடத்தை என் நெஞ்சம் சென்றடைந்துள்ளது.

-க.பா