இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்/அன்பை அனுப்புவாய்

விக்கிமூலம் இலிருந்து
அன்பை அனுப்புவாய்

செங்கதிர் வெப்பத்தில் உறங்கிக் கொண்டிருக்கிற மரங்களினடியில் தேங்கிக் கிடக்கிற தண்ணி இருக்கு மிடத்தில் ஒதுங்கியிருக்கிற யாராவது ஒருவரிடம் காதோடு காதாகப் பேச வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.

நீர் விடாய் கொண்டுள்ள நிலத்தை வாழ்த்து கிறதும், வீட்டிலுள்ள மண்பாண்டங்களை நிறைக்கிறதுமான மழை போன்று குளிர்ச்சியாகவும் தூய்மையுமாயிருக்கிற அன்பை எனக்கு அனுப்புவாய்.
-க.கொ
ரவில் உனது மழைப் பொழிவிற்காக நான் காத்திருக்கிறேன் அப்பொழுது திறந்த நெஞ்சத்துடன் அமைதியாக உன்னை வரவேற்பேன்.
-எ

னது அலைகளை நான் ஏற்றுக் கொள்ள முடியாது; என்கிறது கரை ஆற்றிடம்,

'னது அடிச்சுவடுகளை என் நெஞ்சத்தில் தாங்கியிருப்பேன்'.
-ப.ப

ன்பின் உயர்ந்த தீவிரத்தை எனக்கு அளித்திடு வாய். பேசுவதற்கான துணிவு, செய்வதற்கான துணிவு, உன் விருப்பப்படி தொல்லையைத் தாங்கிக் கொள்வதற்கு யாவற்றையும் ஒதுக்கித் தள்ளுவதற்கான அல்லது தனித்து நிற்பதற்கான துணிவு-இவை எனக்கு வேண்டுபவன. உன்னிடம் நான் வேண்டிக் கொள்வதும் இதுதான்.
-நா

காலைப் பொழுதின் மூடிய கண்களிடம் மறையும் இரவின் ஒரு முத்தும் காண விண்மீனில் மின்னுகிறது.

-மின்

ந்தச் சிறிய உலகின் இரைச்சல் கூட, இந்த நாள் எல்லா உலகங்களுடைய அமைதியையும் அமுக்கி விடுகிறது. -ப.பா

தன்னிடமிருந்தே சட்டென வெளிப்படுகிற, மறு படியும் தோன்றாத ஓர் இசையோசையைக் கேட்டு நீரோடை சிலிர்த் தெழுவதைப் போல், எண்ணங்கள் பெருக்கெடுத்து வழியும் போது ஒரு மின்வெட்டுப் போல் என் மனம் துள்ளி எழுகிறது.
-மின்
உனக்கு உண்மையான பணிவிடை செய்வதற்காக என் நெஞ்சத்தை எளிமையாகவும் தூய்மையாகவும் மனத்தை அமைதியாகவும் வைத்துக் கொள்வேன்.
-ஈ

உன்னுடைய அரியணையை விட்டிறங்கி, என் குழலின் வாயிலின் முன் நிற்கிறாய்.
-கீ

காதலே, உனது பாடங்களைக் கற்றுக்கொடு எளியவர்களுடைய ஆற்றலையும் , படையற்றவனுடைய படைகளையும் எனக்கு அளித்திடு.
-கோ

இரவின் மலர் போன்று உன் கைகளில் கடைசி தொடுதலும் மென்மையாயிருக்கட்டும்.
-தோ

பகலின் எல்லையை இரவு தொடும் இடத்தில் உன்னை நான் எதிர்கொள்கிறேன்.
-எ

இடைவிடாத படைப்புதான் உயிர், எல்லை காண முடியாத நிலைக்கு அது தன்னையும் மீறிய வளர்ச்சியை அடையும்போது உண்மையை உணர்த்துகிறது.
-ஆ
குளத்தில் படிந்திருக்கும் நீல நிறம் போல, பெண்ணே உனது எளிமை உனது உண்மையின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது.
-ப.ப

என் நண்பனின் உதடுகளிலிந்து புன்னகையைப் புல்லாங்குழல் திகழவிடுகிறது; அதை என் வாழ்க்கை முழுவதுமாகப் பரப்பிவிடுகிறது.
-க.கொ
வாழ்க்கை என்கிற தடமில்லா கடலிலுடே எங்களை வழி நடத்திச் செல்லும் வடமீன் ஒளி நீயே.
-ஈ

ஞாயிறு மேற்கில் மறையும் போது, காலை நேரமாகிய அவனது கிழக்கு அமைதியாக அவன் எதிரே நிற்கிறது.
-ப.ப

கனியாகப் பழுப்பதற்கு முன் எனது ஆசையாகிற மலர் மண்ணில் உதிர்வதில்லை.
-சி

வரலாற்றுப் புழுதியில் மறைந்து விடாமல் கணக்கிட முடியாத காலம் என்கிற கமுக்கத்தில் என்றும் வாழ்கிறது குழந்தை.
-மின்

எனது பரிசின் ஒரு பகுதி மட்டுமே இந்த உலகில் இருக்கிறது. மற்றப் பகுதிகள் என் கனவுகளில் உள்ளன.
-எ

அன்பு, நினைவில் உருகட்டும்; துன்பம் பாடல்களில் உருகட்டும்.
-தோ

படைப்பின் படிக்கட்டுகளில் எழுகிற ஒரு மென்மையான சிரிப்பு காலத்தினுடே விரைவாக அதை எடுத்துச் செல்கிறது.
-மின்

இரவின் கருமை ஒரு மூட்டைப் பொன்னிறமாகத் திடீரெனத் தோன்றுகிறது.
-ப.ப

தனித்தனிப் படைகள் நீண்டதொரு முடிவில்லாமையைப் கோருமானால், இசையாகிற உண்மை அழியா மையை இழக்க நேரிடலாம்.
-எ.எ

என் அன்பே, என்றாவது ஒரு நாள் நீ என் நெஞ் சத்தைக் கவர்ந்து விடுவாய். இது எனக்குத் தெரியும்.
-எ

வாழ்க்கையின் வெறுமைக்கு வானவில்லின் வண்ணங்களை அள்ளித் தருவது நமது ஆசை.
-ப.ப

தன் உண்மை நிலையைப் பிறருக்குப் புலப்படுத்தவும், மரியாதை பெறவும் ஒரு வாழ்நாள் முழுவதும் தேவைப் படுகிறது.
-சித்

உன் கூரிய விழிகளை என் கனவுகளில் ஆழமாய்ப் பாய்ச்சுகிறாய்.
-எ

என் கையில் யாரோ அன்பாகிற மலரைக் கமுக்கமாக விட்டுச் சென்றிருக்கிறார்கள்,
-எ

நிரம்பி வழிந்தோடும் இறைவனுடைய இனிமையை அவளுக்கே எவள் எப்பொழுதும் திருப்பிக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறாளோ அவளே என்றும் இளமையுடனும் விளங்கும் அழகி.
-க.கொ

தனது விளையாட்டுப் பொருள்களாகிய பொருளில் லாத முகில்கள், அழிந்து போகக் கூடிய ஒளி. நிழல்களுக்குத் தெய்வீகக் குழந்தை. அதோ புன் முறுவலித்தவாறே நிற்கிறது.
மின்

அன்பின் குறிக்கோள் துயரமோ, மகிழ்ச்சியோ அன்று அன்பு மட்டுமே.
-நா

கடலின் அருகிலுள்ள தோட்டத்திற்குள் புகுந்திடும் இலைகளே கோடை காலத்தின் வருகையை அறிவிக்கின்றன.
-கா.ப

என் நண்பனே, காலைப் பொழுதில் தனித்திருக்கும் குன்றின் பனியடர்ந்த மலைக்கோட்டையைப் போன்று கிழக்கிலிருந்து வெளிப்படும் கதிர் உதயத்தின் ஒளியாக கமழ்கிறது உனது பரந்துபட்ட நெஞ்சம்.
-ப.ப

வாழ்க்கையின் சிறப்பே அதை உதறித் தள்ளுவதில் உனக்கு அது அளிக்கும் ஆற்றலில்தான் உள்ளது. ஏனெனில் நிலைப்பேற்றின் நுழைவாயில்தான் இறப்பு.
-ஆ

ஞாயிற்றிடம் தனக்குள்ள காதலை மழலை மொழியில் மல்லிகைக் கொடி தெரிவிப்பது அதனுடைய மலர்கள் மூலமாகவே.
-மின்

தங்கத் திரை நெய்யத் தறியில் ஓயாமலோடும் சின்னஞ்சிறு நூனாழிகளைப் போல், விண்மணியின் பொற் கதிர்கள் சிற்றலைகளின்மேல் நடனம் புரியும்.
-ப.ப

என் பிறவிகள் யாவற்றிலுமே ஒரேவொரு முறை தான் இப்படியொரு மாலைப் பொழுதை நுகர்த்திருக்கிறேன் என்று எனக்குத் தோன்றுகிறது.
-ஈ

நெருப்பிலிருந்து நெருப்பு பற்றிக்கொள்வதைப் போல, காதலிலிருந்து காதல் பற்றிக் கொள்கிறது. சரி, ஆனால் முதல் பொறி எங்கிருந்து தோன்றியது.
-நா

விட்டுக் கொடுத்து கொண்டிருப்பதே வாழ்க்கையின் உண்மை. இதன் முழுமையே வாழ்க்கையின் முழுமையும்.
- ஆ

தனது ஓய்வைத் தன் இசையிலேயே காண்கிறது வாழ்வியக்கம்.
-ப.ப

இறையன்பன் அளிக்கும் பரிசுகளினாலே நமது வாழ்க்கை நிரம்புகிறது.
-ஆ

தன் சிறப்பின் கொடுமுடியில் மாந்தன் இருக்கும் பொழுது, அவன் தன்னுணர்வு இல்லாமலிருக்கிறான். முகில்களின் எதிர்ப்பினூடே வண்ணக்கோலங்களாகிற தன் களஞ்சியத்தை வெளிச்சம் அடைகிறது.
-மின்

மது வளமையிலிருந்து வாரி வாரி வழங்குவதன் மூலமே நம்மிடமுள்ளது எல்லையற்றது என்பதைப் புரிந்து கொள்கிறோம்.
-ஆ

நான் என்றுமே தேவைப்படுகிறவன் என்பது நான் இன்னமும் இருக்கிறேன் என்பதிலேயே மெய்ப்பிக்கப்படுகிறது.
-எ.எ

ழை ஓய்ந்தபின் நனைந்திருக்கும் மரம் பளபளப்பது போல் என் நெஞ்சம், கண்ணீர் சொரிந்துள்ள முந்தைய இரவை நோக்கி இன்று புன்னகை புரிகிறது.
-மின்

ங்களை வாழவிடு. பாவலன் தனது பாடல்களின் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்போது அடையும் மகிழ்ச்சியைப்போன்றதொரு மகிழ்ச்சியை வாழ்க்கையில் நாமும் பெறுவோமாக.
-ஆ

நெஞ்சத்தின் பார்வையில் தூரம் மலைப்பைத் தருகிறது.
-ப.ப

னது வாழ்க்கையைப் பயனுள்ளதாகச் செய்ததற்காகப் பயன் மரங்களுக்கு நான் நன்றி தெரிவித்திருக்கிறேன். அதே நேரத்தில், மரங்களை என்றும் பசுமை மாறாமல் வைத்திருக்கிற புல்வெளியை நினைவில் நிறுத்திடத் தவறி விட்டேனே.
மின்

னக்கு இணையில்லை என்ற நிலையை ஒருவனது வெறுமை குறிக்கிறது. அதன் மறு பகுதி உண்மை நிலையை உணர்த்துகிறது.
-ப.ப

னித சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளும் ஒருங்கிணைந்திருக்கின்றன என்பதுதான் இன்றைய மிகப் பெரிய உண்மை. நமது சிறந்த பண்பாட்டின் மூலம் இந்தச் சிக்கலைத் தீர்த்து நமது மாந்தத்தன்மையை மெய்ப்பித்துக் காட்டவேண்டும்.
-தே

னைத்திலும் நிறைந்திருக்கும் துயரத்தினூடே என்றும் நிலைத்திருக்கும் அன்னையின் மெல்லிய குரலைக் கேட்கிறேன்.
-ப.ப

ன்பே, என்னை நீ காதலிக்க முடியாவிட்டால் குறையில்லை, எனது துன்பத்தை மன்னித்துவிடு. எட்டி நின்று என்னை வெறுக்கும் வகையில் பார்க்காதே. நான் எனது மூலைக்கு ஒதுங்கி, இருட்டில் அமர்ந்திடுவேன்.
-தோ

யாரோ ஒருவன் என் நெஞ்சத்தைத் திருடிவிட்டான்; வானின் பரந்த வெளியில் அதை உதிர்த்துவிட்டான்.
-எ

ருட்டில் ஒரு குழந்தை நான். இருட்டின் மறைவில் கைகளைக் துழாவி உன்னைத் தேடுகிறேன்,தாயே.
-ப.ப

நேயத்தில் விழித்தெழுவது என்பது இனிமை நிரம்பிய உலகத்தில் கண்விழிப்பதில்லை. சிறப்பின் மூலம் நிலைப் பேற்றையடைந்து துன்பத்தில் இன்பம் காணும் கடும் முயற்சியில் உலகங்கள் கண் விழிப்பதேயாகும் அது.
-எ.எ

ன் உடன்பிறப்புகளே, உங்களது ஆற்றல் வாய்ந்த மாந்தர்களின் முன்பு எளிமையில் நின்றிட வெட்கப் படாதீர்கள்.
-தே

ன் குழந்தைகளிடம் உன் பெருமையை வெளிப்படுத்தும் தந்தையே, உன்னை நான்; நாணுறச் செய்யக் கூடாது.
- ப.ப

னத் துன்ப மதுவை உறிஞ்சி விட, மகிழ்ச்சியைப் பிழிந்து விடவில்லை நாங்கள்.
-தோ

மீட்டப்படாத இசையின் பண்ணொலியை நீ கேட்டதில்லையா?-
க.பா

வேனிற் காலத்தில் மலர்கள் பூக்கும் என்பதை, ஐயப்படாமல், என் நெஞ்சத்தின் மாரிக்கால விண்ணின் மேல் தன் புன்முறுவலைச் சிந்துகிறது பருதி ஒளி.
-ப.ப

டக்கத்தின் உறைவிடமாகவிருக்கட்டும் உனது மணிமுடி, உன் ஆன்மாவின் விடுதலையாக இருக்கட்டும் உனது விடுதலை.
-தே

நிறைவை அடைவதற்காக வறண்ட ஆண்டுகளின் பாலைவனப் பகுதிகளை நீ கடந்து செல்கிறாய்.
-ப.ப

ட்டுப்பாடுதான் நல்லவர்களின் நுழைவாயில்.
-எ.எ

றுமையாகிற வெறுமையில் அன்றாடம் இறைவனின் அரியணையை எழுப்பிடு. மலைபோன்றதெல்லாம் உயர்ந்ததுவுமில்லை, செருக்கு எனைறென்றும் நிலைத்திருப்பதுவுமில்லை என்பதையும் நீ உணர்ந்து கொள். -தே

னது பாடல்களினூடே உனது வழிகளின் அடையாளங்களை, சகடம் கட்டித் திரியும் நாடோடியே, நீ கண்டிடுவாய். ப.ப.

டும் நோவுற்றுக் கொண்டிருக்கும் இறைவனின் புதல்வியே, அமைதியின் உருவே, வருக வருக. -தே

ழகு என்பது எங்கும் நிறைந்தது. ஆகவே ஒவ்வொன்றுமே நமக்கு மகிழ்ச்சி தரும் ஆற்றல் பெற்றது. -சா

லகின் நெஞ்சத்துடிப்பை போன்று, முழு நிலவே, இவ்வளவு பனைவோலைகளிடையே ஒரு சலசலப்பு தோன்றுகிறது; கடலில் கொந்தளிப்பு ஏற்படுகிறது. இனம் தெரியாத எந்த வானிலிருந்து உனது அமைதியிலே நேயத்தின் துன்புறுத்தும் கமுக்கத்தைப் பதுக்கி வைத்திருக்கிறாய்? -ப.ப

கம்பாவம், தனது கர்வக் குறிகளைக் கல்லிலே பொறிக்கின்றது; அன்போ, மனப்பூர்வமாக மலர்களையே தந்து சரணாகதியடைகிறது.
-மி.மி

கிழக்குத் திசையின் அமைதியான, பணிவான பொறுமையான இருட்டின் பின் காலைப்பொழுது விடியக் காத்திருக்கிறது.
-தே

ன் வாழ்நாளில் எத்தனையோ இன்ப நாள்கள் வந்து போயிருக்கிறன்றன. மகிழ்ச்சி வாணர்களுடன் நான் எத்தனையோ இரவுகள் விழாக்கொண்டாடி மகிழ்ந்திருக்கிறேன்.

நான் எங்குப் பிறக்கப்போகிறேனோ, ஒளி நிரம்பிய அந்தத் தீவை, விண்மீனை என் கண்முன் காண்கிறேன். ஒய்வுப் பொழுதின், விளைந்திடும் ஆழத்தில் என் வாழ்க்கை தன் பணியைத் தொடங்குகிறது.
- ப.ப.

குருட்டுப் பாம்பு இருட்டுக் குழியில் இருக்கிறது. அது தன் தலையில் உள்ள மணி ஒளியையும் அறியாது, பரிதியின் ஒளியையும் அறியாது.
-கீ

முகத்திரை அணிந்த மணப்பெண்தான் இருட்டு போக்குக் காட்டும் ஒளி தன் நெஞ்சத்திற்குத் திரும்பிட அமைதியாகக் காத்திருக்கிறது அது.
-மின்

ந்த வாயில் வழியாகத் திரும்பிச்செல்ல வேண்டுமோ அதுவே அடைக்கப்பட்டிருக்கும்போது, மகிழ்ச்சி துன்பமாக மாறுகிறது. -சித்

மேலுலகின் காற்று வீசிக்கொண்டிருக்கிறது, நங்கூரம் வெறியுடன் சேற்றினை அணைத்துக் கொள்கிறது. எனது படகு விலங்குடன் உராய்கிறது.
-மின்

வனொருவன் இறைவனைக் கண்டும் தொட்டும் இருக்கிறனோ அவன் எல்லா அச்சத்திலிருந்தும் அவலத்தினிடமிருந்தும் விடுபடுகிறான்.
- க.பா.

கழப்பட்ட மாந்தன் வெற்றிக்காக மாந்த வரலாறு பொறுமையாகக் காத்திருக்கிறது.
-ப.ப.

புனிதமான செங்கதிர் இதயத்திற்காகப் படையல் பொருள்களைக் கொண்டு வா.
-தே

ரவின் அரவணைப்பில் கமுக்கமான ஒரு மகிழ்ச்சி இருக்கிறது.

ன் நெஞ்சத்தை அதனால் நிரம்பிக்கொள்வேனாகட்டும்; நாள் முழுவதும் அதைச் சுமந்து செல்பவனாக இருப்பேனாகுக. - - எ

வாழ்க்கையின் சேமிப்புகள் மெய்யறிவு (அறிவம்) என்கிற நிலையில் ஒன்றுபடும் பொழுது அமைதி என்கிற பள்ளத்தாக்கு எதிர்ப்படுகிறது. பகல் தேய்ந்து மறையுமுன், என் வழிகாட்டியே என்னை அங்கே சேர்த்திடு. - -ப.ப

னித்துளிகளின் ஏற்றத்தால் மலர் தலை சாய்ப்பது போல்,எனது நெஞ்சம் வழிகாட்டின் மேலீட்டினால் வளைந்து கொடுக்கிறது. - –எ

றுவடைக்குப்பின் தனித்து நிற்கும் வயல்வெளி மீது படியும் காலைப் பொழுதின் பகுதிபோல எனது பார்வை எனது நெஞ்சத்தின் மேல் படிவதை இக் கணத்தில் நான் உணர்கிறேன். - -ப.ப

றையப்போகும் ஞாயிறு தனது வெண்மையாவற்றையும் வழங்கிடும். முகில் உதயமாகும் பெண்மையை ஒரு வறண்ட தன் சிரிப்புடன் தான் வரவேற்கிறது. - -மின்