இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்/கோடை காலம்

விக்கிமூலம் இலிருந்து

கோடை காலம்

அன்பே, என் கண்களில் உன்னை மறைத்து வைத்துக்கொள்வேன்.

என் மகிழ்ச்சியில் ஒரு மாணிக்கம் போல் உன்னை இழையிட்டுக் கொண்டு என் மார்பில் உன்னை மாட்டி வைத்துக் கொள்வேன்.

நான் குழந்தையாகயிருந்த காலத்திலிருந்தே என் நெஞ்சத்தில் நீ குடி புகுந்துள்ளாய்.

என் இளமைக் காலத்திலிருந்தே, என் வாழ்க்கை முழுவதிலுமே, என் கனவுகளிலும் கூட, நீ என்னுடனேயே வாசம் செய்கிறாய் உறங்கும் பொழுதும் விழித்திருக்கும் பொகுதும் கூட.
-நா
குழந்தைப் பருவத்தில் இந்த வெண்ணிற மலர்களை, மணமுள்ள இந்த மல்லிகைகளை, என் கை நிறைய அள்ளிக் கொண்ட அந்த முதல் நாளை நான் மறக்கவில்லை என்றே தோன்றுகிறது.
-வ.ம

நான் மறைந்துபோன பின்பும் கூட, என்னைப் பற்றிய நினைவுகள் உனக்குத் தோன்றிக் கொண்டிருக்கட்டும், விண்மீன் அமைதியுடன் ஞாயிற்றின் மறைவு ஒன்று சேரும் போது ஒலியற்று ஒளிருவதைப்போல.
-ப.ப

மறைவிற்குப் பின்னரும் வாழ்ந்து கொண்டிருப்பதே வாழ்வின் உண்மையானப் பொருள். தன்னிடமிருந்தே அது மேலும் மேலும் வளர்ச்சி பெற்றுக்கொண்டே இருக்கிறது.
-எ.எ

அமைதியான இருட்டின் பின்னே கண்ணுக்குத் தெரியாத விருந்தாளி நடை போடுகிறான்; என் நெஞ்சம் நடுக்கம் காண்கிறது.
-எ

ஓய்வாகிற மாலை விண்மீனை என் நெஞ்சத்தில் ஏற்றி வைத்திடு. அந்த நேரத்தில் இரவு என்னிடம் காதல் மொழி பேசட்டும்.
- ப.ப

என் வலியைக் குறைத்திடு என்று உன்னிடம் இரந்திட மாட்டேன்; மாறாக என் நெஞ்சம் அதை வென்றிட அருள்புரி என்றுதான் வேண்டிடுவேன். - க.கொ

விண்ணாகிற கோவிலில் கண்ணுக்குப் புலப்படாத கொடியை ஊன்றிடு.

அது ஒளி வீசத் தொடங்குமுன் உன் மனத்தை அமைதியில் ஆழ்த்திடு. - க.பா


ன்றைய பணியை முடித்து விட்டேன். தாயே, உனது தோளில் என் முகத்தை மறைத்துவைத்துக் கொள்வாய். நான் கனவு காண வேண்டும். - ப.ப

வன் ஆட்சி செலுத்துகிற இடத்தில் இறைவனுக்கு நம் பத்தியைச் செலுத்த வேண்டும்.

அவன் அன்பு செலுத்துகிற இடத்தில் அவனைப் பார்த்து நாம் நகைப்போம். - எ.எ

ட்டற்ற பறவையே, உனது குரல் நான் உறங்கும் கூட்டினை எட்டுகிறது. அயர்ந்திருக்கும் என் சிறகுகள் முகில்களின் மேல் படர்ந்திருக்கும் ஒளி நோக்கிப் பயணம் செய்வதாகக் கனவு காண்கின்றன. - மின்

இடர்களிலிருந்து என்னைக் காக்குமாறு, உன்னை வேண்டிக் கொள்ளாமலிருப்பேனாக. மாறாக அச்சமில்லாமல் அவற்றை எதிர் கொள்ளும் ஆற்றலை அளிப்பாயாக.
-க.கொ

அதிகாலையில் என் வீட்டு வாயிலுக்கு வந்தாய், இசை பொழிந்தாய்.
-எ

கண்களை நன்கு விழித்துப் பார்க்கிறேன், புன்னகை புரிகிறேன், எங்கும் அவன் அழகைக் காண்கிறேன்.
-க.பா

அரை குறையாய் விழித்திருக்கிற குழந்தை தன் தாயை மங்கலான அதிகாலை வெளிச்சத்தில் பார்க்கிறது. அது போன்றே நான் உன்னைப் பார்த்திருக்கிறேன். அந்தக் குழந்தை புன்னகை பூக்கிறது, பின்னர் உறக்கத்தில் ஆழ்ந்து விடுகிறது.
-க.பா

இரண்டு உள்ளுயிர்களிடையே நிலவும் முடிவற்ற தூரத்தை இசை நிரப்பிவிடுகிறது.
-க.பா

அமைதியற்ற என் மனத்தை நான் சலனமின்றி செய்து விடுகிறேன், என் உள்ளம் ஒளி வீசுகிறது.
-க.பா

கூட்டத்தோடு கூட்டமாக நான் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மாடியிலிருந்து நீ புன்னகைப்பதைக் கண்டேன். நான் பாடலானேன், இரைச்சலில் யாவற்றையும் மறந்து போனேன்.
-ப.ப

அன்புடன் ஒன்றியிருக்கும்பொழுது, நமது மனவுறுதி முழுமை பெறுகிறது, ஏனெனில் அன்பே உண்மையான விடுதலையாகும்.
-எ.எ

உன் அன்பு முகத்தில் நான் கண்விழிக்கும் பொழுது நலமான எனது இரவு முடிந்துபோகிறது. புலர்காலை நெருப்பாகிற தன் உரைகல் மூலம் என் நெஞ்சத்தைத் தொடுகிறது.
-எ

அதனுடைய செல்லமாகிற சுமை உனக்கு அளிக்கப்படாததினால் என் நெஞ்சத்தை ஒரு கவலை வாட்டுகிறது.
-க.கொ

மண்ணில் கற்களை இழக்கிறபோது மடிந்து மக்கிப் போன இலைகள் வனத்தின் வாழ்க்கையில் பங்கெடுத்துக் கொள்கின்றன.
-மின்

ஆழம் கணக்கிடப்படாத கடல் போன்று அன்பின் வலி என் வாழ்வைச் சுற்றி இன்னிசை பொழிகிறது. மலர்ந்திருக்கும் சோலைகளில் பாட்டிசைக்குப் பறவைகள் போல் அன்பின் மகிழ்ச்சி இன்னிசை எழுப்புகிறது.
-ப.ப

இருட்டிலிருந்தும் ஒளியிலிருந்தும் வானம் தன் சொற்களைத் தேடுகின்றதே, அதே போல் தனது ஒலிகளிலிருந்தும் அமைதியிலிருந்தும் மனம் தன் சொற்களைத் தேடுகிறது.
-மின்

நீயே வானம், நீயே கூடு----
-கீ

முழுமையான அமைதியில் நெஞ்சத்தை நிலைக்கச் செய்யும் அன்பை எனக்கு அனுப்பிவைத்திடுவாய்.
-க.கொ

கண்ணுக்குப் புலப்படாத இருட்டு அவனது புல்லாங் குழலை இசைக்கிறது. ஒளியின் தாளம் விண்மீன்களாகவும், எண்ணங்களாகவும், கனவுகளாகவும் வடிவு எடுக்கின்றன.

-மின்

தங்களுடைய தீபங்களை அவை தாங்களே ஏற்றிக் கொள்கின்றன. தங்களுடைய ஆலயங்களில் தங்களுடைய மொழியிலேயே இசைக்கின்றன. ஆனால் பறவைகளோ உனது பெயரை உனது காலை ஒளியில் பாடுகின்றன. காரணம் உனது பெயரே, மகிழ்ச்சி தான்.
-ப.ப.

லைவனை வரவேற்க முகத்திரையை விலக்கி இன்முகம் காட்டும் மணப்பெண்ணைப் போல, காட்டிலே செல்லும் சாலையின் திருப்பத்தில், இலையுதிர் காலத்து படிஞாயிற்றின் புதுமை என்னைத் தேடி வந்து எனக்குக் காட்சியளித்திருக்கிறது.

யிர் மட்டுமே தொடக்கூடிய மலரை உடல் எவவாறு தொடமுடியும்? - -தோ

விண்ணுக்கு விண் நீரைப் பரவலாகப் பொழிந்து வரும் கோடைக் கொண்டலாக நீ என்னிடம் வருவாய். - -எ

நாம் மூச்சுவிடும், ஒவ்வொரு கணமும் இறைவனிடத்தில் நாம் உறைந்துள்ளோம் என்கிற உண்மையை நாம் உணர்வோமாக. - -ஆ

முடிவற்ற வாழ்க்கைக்கு இசைப் பாடும் தனது பொன்மயமான இசைக்கருவியை விண்மீன்களின் அமைதிக்கு உவந்தளிக்கிறது பகல் பொழுது. - -மின்

உனது ஒரு பகுதியை இறைவனுக்கும்,மற்றொரு பகுதியை வேறு யாருக்காவது அளித்தும் பிளவுபட்டிருப்பா யானால், எவையும் இடர்ப்பாடாய்ப் போய்விடும்.
-கோ

உள்ளுயிர்ப்பு உலகில் எனக்கு நம்பிக்கை உள்ளது, ஆனால் அது உலகியலிலிருந்து விலகியுள்ளது என்கிற நோக்கில்லை. அதனுடைய சூழ்ந்த உண்மைத் தன்மை யினால்தான்.
-ஆ

கொடிய புயல் காற்றுகள் வீசியடிக்கும் உலகம்தான் இசை உலகம். அதே சமயம் அழகாகிற இசையினால் கட்டுப்படுத்தப்பட்டது, அதன் கடுமை.
-ப.ப
கடவுளையன்றி வேறு எவர் ஏழைகளைக் கருத்தில் கொள்கிறவர்?
-த.ஒ

வட்டமிட்டுச் சுழலும் நாட்டியத்தின் நெஞ்சத்தில் இடைப்பகுதி அசைவற்று அமைதியாக இருக்கிறது.
-மின்

என் நெஞ்சமே, அமைதியாக அமர்ந்திரு, உன் தூசியைக் கிளப்பாதே.

உன்னை அடைவதற்கான வழியை உலகம் தானே தெரிந்து கொள்ளட்டும்.
-ப.ப

எதிர் காலப் பலன்களுக்காக இல்லாமல் இந்த நேரத்திற்கு மட்டுமே தங்கி நிற்கிற மலர்களின் இதழ்களை வேனிற்காலம் உதறி வீசுகிறது.
-மின்

பாம்பு சீறிச் சென்றிடுமுன் அம்பினிடம் வில் கிசுகிசுக்கிறது. உனது விடுதலையே எனது விடுதலையும்
-ப.ப

கனக்கற்ற பரிசுகளின் மூலம் தன்னையே தன்னிச்சையாக வழங்கி விடுகிறது அன்பு.
-சா

நிலத்தின் உறக்கமாகிற தளைகளிலிருந்து விடுபடும் மகிழ்ச்சி எண்ணற்ற இலைகளுள் பாய்கிறது; ஒரு நாள் மட்டும் காற்றில் கூத்திடுகிறது.
-மின்

உனது முத்தமாகிற தங்கப்பேழையே எனது நெஞ்சம் என்றது மறைந்திடும் கதிரவனில் வெளிப்படும் முகில் ஞாயிற்றினிடம்.
-ப.ப

காதல் என்பது வெறும் உணர்வில்லை; அதுவே மெய்யெனும் படைப்பின் அடிப்படை.
-சா

வீடைப்பற்றி கவலை யாவற்றையும் அகற்றுகிறது பெண்ணின் புன்முறுவல்; அவளுடைய அன்பு இறைவனின் அருள்.
-ஈ

தொடுவதின் மூலம் நீ இழக்கலாம்; விலகி நிற்பதன் மூலம் நீ அடையலாம்.
-ப.ப

உன் குழலைக் கீழேவைத்திரு; என்னை அணைத்துக் கொள்ள உன் தோள்கள் கட்டற்றிருக்கட்டும்.
-நா

தனித்தொரு சிரிப்புடன் சிறகுகளாகிற வியப்புகளில் எனது எண்ணங்கள் தீப்பொறிகள் போன்று கவர்ந்து செல்லட்டும்.
-மின்

வெந்து கொண்டிருக்கும் மரக்கட்டை தீக்குழலில் தவித்தவாறே அலறுகிறது. இதுவே எனது மலர் மஞ்சம், எனது விடியல்.
-ப.ப

ஆழங் காணமுடியாத இரவின் மேற்பரப்பில் மிதந்து கொண்டிருக்கும் வண்ண நீர்க்குமிழிகளே நாள்கள்.
-ப.ப