இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்/பாடும் பணி

விக்கிமூலம் இலிருந்து

பாடும் பணி

உன்னைப் பாடும் பணியையே பணியாகப் பெறும் பேறு பெற்றேன். எனது பாக்களில் நினது இளவேனிற்கால மலர்களின் தோற்றம் பொலிந்தது. நினது ஒசையிடும் இலைகளுக்கு, அவை தாளங்கொட்டின. நினது இரவின் அமைதியிலும் காலைப்பொழுதின் இன்னமைதியிலும் நான் பாடினேன். கோடையின் முதல் மழையின் மணம் எனது பாடல்களில் சுழன்றோடுகிறது. பயிரின் பயன்கொளும் இலையுதிர்கால ஆரவாரம், என் பாக்களில் ஒலிக்கிறது. எனது தலைவனே, நீ எனது உள்ளத்தில் கோயில் கொள்ள வரும் நாளில், எனது பாடல்கள் தடைப்படாது, உன்னை ஆவலோடு வரவேற்குமாக!

- க.கொ
செங்கதிர் ஒளிபோன்று என் அன்பு உன்னை சூழ்ந்திருக்கட்டும். அதே சமயம் ஒளிமயமான விடுதலையை உனக்கு அளிக்கட்டும்.
- மின்

ளியை வாரி வழங்கும் விண்மீன்களைக் காட்டிலும் மாந்தன் தனக்கு அளிக்கும் அகல் விளக்கின் ஒளியையே இறைவன் அதிகமாக விரும்புகிறான்.
-ப.ப

னது நினைவைக் கோருவதற்கு எனது காணிக்கைகள் தயக்கம் காட்டுகின்றன. அதன் காரணமாகவே நீ அவற்றை நினைவு கூறலாம். -
மின்

"ன் மேல் படிந்திருந்த பனித்துளியை இழந்து விட்டேனே"; என்றதாம் மலர், தன் விண்மீன்கள் யாவற்றையும் பறி கொடுத்திருந்த காலை வானிடம்.
-ப.ப

வேனில் மாதத்தில் நீ அளித்த பாடல்களாகிய விருந்தில் என் இடத்தை நான் கண்டு கொண்டேன்.
- எ

ன்னிடம் உன் பாடல்களை நீ பாடிய நாள்களும் உண்டு. அவற்றை நான் கேட்டு மகிழ்ந்து என் நெஞ்சத்தைப் பறி கொடுத்ததும் என் நினைவில் உள்ளது.
-நா

மிகச் சிறந்தது எதுவும் தனியாக வருவதில்லை.

லவற்றோடு கூட்டுச் சேர்ந்து கொண்டுதான் அது வருகிறது.
-ப.ப

ரவமற்றிருந்து அமைதியாகிற என் உள்ளுயிர் உன் சொற்களைக் கேட்கட்டும்.
-எ

புகழ் என்னை நாணச் செய்கிறது. ஏனெனில் கமுக்கமாக அதற்கு நான் ஏங்குகிறேன்.
-ப.ப

சிரித்தவாறே பாய்ந்து வரும் நீரோடையிலிருந்து பிறக்கும் மகிழ்ச்சியில் தன் தவிப்பைக் காண்கின்றன கூழாங்கற்கள். அதே போன்று, விண்ணிலிருந்து மகிழ்ச்சி கொண்டுவரும் இன்னிசைப் பாடல்களில் தன் துயரத்தைக் காண்கிறது வலி.
- எ.எ

ளந்தென்றலாக மாறி உன்னைத் தழுவி விளை யாடுவேன்; நீ குளிக்கும் நீரில் சிறு அலைகளாகத் துள்ளி வருவேன்; தவழ்ந்து வந்து உன்னை மீண்டும் மீண்டும் முத்தமிடுவேன்.
-வ.பி

கோயிலின் துயரச் சூழலிலிருந்து விடுபட்டுக்குழந்தைகள் அமர்வதற்காகப் புழுதியை நோக்கி விரைகின்றன.
-வ.பி


வை விளையாடுவதை இறைவன் கூர்ந்து கவனிக்கிறான்; பூசாரியை மறந்து விடுகிறான்.
-வ.பி

பழத்தின் பணி விலைமதிக்க முடியாதது, மலரின் பணி இனிமையாதது. பணிவான பந்தியின் நிழலிலிருக்கும் இலைகளின் பணி போன்றதாக எனது பணியிருக்கட்டும்.
-ப.ப

றைவன் நண்பர்களைத் தேடுகிறான்; அன்பைக் கோருகிறான்.
- மின்

ழந்த அன்பின் மூலம் வாழ்க்கை மேலும் வளம் பெறுகிறது.
-ப.ப

குன்றினடியில் தாழ்ந்திருக்கிறது தடாகம். வளைந்து கொடுக்காத அடிவாரத்திற்கு அன்பின் கண்ணி வேண்டுகோள்
- மின்

றைவா, உன்னைத் தவிர அனைத்தையும்

பெற்றிருப்பவர்கள் உன்னைத் தவிர வேறெதுவும் இல்லாதவர்களைக் கேலி செய்கின்றனர்.
ப.ப


நீ இல்லாமல் அனாதைபோல் நான் கழித்த நாள்கள் யாவும் மறக்கப்படட்டும்.
-எ

னது அருவியின் வழியே தொலைவிலுள்ள கடலைக் குன்று தொடுவது போல, எனது பாடல்கள் மூலம் இறைவனை நான் தொடுகிறேன்.
- மின்

ங்கிலியைத் தளர்த்து, நங்கூரத்தைத் தூக்கி எறி; விண்மீன் ஒளியில் நாங்கள் கப்பலை நடத்துவோம்.
-எ

வாழ்க்கையில் விளையாட்டு விரைவானது. வாழ்க்கையின் விளையாட்டுப் பொருள்கள் ஒவ்வொன்றாய்க் கீழே விழுகின்றதை மறக்கவும்படுகின்றன.
- மின்

து காலைப் பொழுது என்று கூறி, அதற்கு நேற்று என்ற பெயரிட்டு ஒன்றுமில்லாமல் செய்திடாதே. பெயர் வைக்கப்படாத புதிதாய் பிறந்த குழந்தையாக அதை முதன் முதலாகப் பார்த்து விடு.
-ப.ப

ழந்தது ஆற்றலை அன்று, வாடியது வாழ்க்கையில்லை. இவைதாம் அமைதி எனப்படுவது. இழந்ததும், தேய்ந்து போனதும் அவற்றின் முழுமையே.
- எ.எ

ன்னைப் பார்த்து நானே சிரித்துக் கொள்ளும்போது, என்னை அழுத்திடும் பாரம் மென்மையாகிறது.
- மின்

முகில்கள், காடு இவற்றின் இசையோடு கூட, உலகின் நெஞ்சத்தில் எனது பாடல்கள் அவற்றிற்குரிய இடத்தைப் பெறுகின்றன.
-தோ

லகம் உறங்கும் நேரத்தில் நான் உன் வாசலை அடைகிறேன். விண்மீன்கள் பேச்சற்று இருக்கின்றன. பாட நான் அஞ்சுகிறேன்.
- தோ

ன் மூலமாக நான் விடுமுறை பெற்றுக் கொள்ள வேண்டும். காரணம், உன் கண்களின் நடனத்தில் நான் ஒளியைக் காண்பதே.
-நா

ன்பு என்கிற உறவினர் மூலம் நமக்குப் பல தொடர்புகள் ஏற்படுகின்றன. வாழ்க்கையை நாம் சுவைப்பதே இதன் காரணம்.
-படை

தாமரை இலை தண்ணீரிலேயே வாழ்வது போல, நீயே என் தலைவன், நான் உனது தொண்டன்.
-க.பா

வறுகள் என்கிற வாய்க்கால் வழியாக உண்மை என்கிற நீரோடை பாய்ந்து செல்கிறது.
- ப.ப

ள்ளுயிரின் விடுதலையைப் பற்றி உணர்ச்சியுடன் பாடுகிறவர்களின் எண்ணிக்கை கொஞ்சமில்லை. ஆயினும் அவர்களுடைய பெயர்கள் வரலாற்றில் இடம் பெறப் போவதில்லை.
-எ.எ

வற்றினுடே ஒளிவிடும் மின்மினிப் பூச்சிகள் விண்மீன்களைத் திகைக்க வைக்கின்றன.
-மின்

கற் பொழுதில் பல்வேறு பயணங்கள் தொடங்கி மாலைப் பொழுதின் தனிமை வரை நீ என்னை அழைத்துச் சென்றிருக்கிறாய்.

ரவின் அமைதி மூலம் அதன் பொருளை அறிந்து கொள்ள முற்படுகிறேன்.
-ப.ப

மைதியை இரப்பவன் உண்மையிலேயே யாராக இருக்க முடியும்? ஈகம் செய்யத் அணியமாயிருப்பவர்களால் தான் அது முடியும்.
-எ.எ

பனி மூட்டத்தினால் தோல்வி கண்டாற்போல் தோற்றமளித்தாலும் மலை நிலை குலைந்து விடுவதில்லை.
- நா

இறைவா, நான் ஏன் உன்னைச் புகலடைந்திருக்கிறேன். தெரியுமா? உயர்ந்த ஆற்றலின் வழியில் வழி நடத்தப்படுவதற்காகவே.
-க.கொ

"ன்னை நான் என்றும் மறவேன்," என்று செம்மலர் செங்கதிரிடம் சொல்லிக் கொண்டிருந்த அதே வேளையில், அதன் இதழ்கள் மண்ணில் உதிர்ந்து விழுந்தன.

– மின்

திரண்ட மழைக் கொண்டல்கள் வானத்திலே முழங்கும்போது, கோடை மழை சுமந்து வரும் கீழைக்காற்றுப், புதர் நிலத்தின் மேல் பதறி வந்து. மூங்கில் காட்டிலே ஊதி முழங்குகின்றது!

ன்னை, ஏற்றருள்வாய், இறைவா, இக் கணம் மட்டுமா, என் நெஞ்சத்தின் இருண்ட கமுக்கங்களிலிருந்து உன் முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே.
- எ

"செங்கதிர்த் தேவே, உன் புகழை எப்படிப் பாடுவேன், உன்னை எப்படி வழிபடுவேன்?" என்றது அந்தச் சின்னஞ் சிறு மலர். 'உன் தூய்மையின் வழியே செங்கதிரின் விசை,
- ப.ப

மைதியின் மனங்கொண்ட மாந்தர்கள், இயற் பொருளில் ஒருக்காலும் அழியாமையைத் தேட மாட்டார்கள். -எ.எ.

னது சிறிய வட்டத்திற்குள் தான் பனித்துளி பரிதியை அறிய முடியும். -மின்

னது பிரிவின் பொழுது காற்று இசையின் முணு முணுப்புடன் கலந்து விடுகிறது. -எ

சித்திரங்களின் வாயிலாக உலகம் என்னுடன் பேசுகிறது, எனது உயிர் இசைவழியாக விடையளிக்கிறது -மின்

லகைக் காதலிக்கும்பொழுது, நாம் அதில் வாழுகிறோம். -ப.ப.

வாழ்க்கை வளர்ச்சி பெறும்போது, ஒவ்வொரு கட்டமும் முழுமை பெறுகிறது; மலரும் கனியும் போல. -எ.எ

ஞாயிற்றின் நினைவாக, தனது எண்ணற்ற விண்மீன்களை வானம் எண்ணிக் கொண்டிருக்கிறது - -மின்

றந்தவர்கள் தங்கள் புகழில் வாழட்டும். உயிரோ டிருப்பவர்கள் அன்பின் அழியாமையில் வாழட்டும்.
-ப.ப

ன்பின் அடிப்படையில் துறக்கத்தை எழுப்புவது உயிரின் பணி.
- எ.எ

ரவின் இருட்டு வலியைப்போல், ஊமையானது. பகலின் இருட்டு, ஒளியற்றதைப்போல், அமைதியானது.
- மின்

னது உண்மையின் பொருளை ஆழ்ந்து எண்ணி ஆராய்ந்துள்ளவர்கள் சிலர் உள்ளனர்; அவர்கள் உணர்ந்தவர்கள்.

னது இசையின் சிறப்பைச் சுவைக்க முயன் றுள்ளேள்; நான் அதில் மகிழ்ச்சியடைகிறேன்.
- மின்

ல பொருள்களை அடையப் பல வழிகளைக் கையாளாமல் இருப்பேனாக.
-எ

சில வண்டுகள் எழுப்பும் கீச்சிடும் ஒலி-ஒசையின் அந்தி ஒளி அது தான். என் மனத்தின் அமைதி நிரம்புவதாக நான் எண்ணுகிறேன்.
-ப.ப

தாமரை தன் அழகை விண்ணுலகத்திற்கு அளிக்கிறது; புல் தனது பணியை மண்ணுலகத்திற்கு வழங்குகிறது.
- மின்

காலமாகிற கடலில் கிடைக்கும் ஒரு மணி நேர மகிழ்ச்சிக்காக என் நெஞ்சம் பரிதவிக்கிறது.
-ப.ப

நாம் புண்படுத்தப்பட்டோம் என்கிற உண்மையை நாம் ஒதுக்கி வைத்து விடலாம். ஆனால் நாம் துணிவுள்ளவர்களாக இருந்திருக்கிறோம் என்கிற உண்மைக்குச் சிறப்பான இடமுண்டு.
-எ.எ

ரவு கும்மிருட்டாயிருக்கிறது, என் இறைவா, வழிப் போக்கனுக்குக் கண் தெரியவில்லை. அவனுக்குக் கை கொடுத்திடுவாய்.
-எ

நிலத்திலிருந்து திரும்பிய காலை ஒளியின் எதிரொலிதான் பறவையின் பாட்டு.
-ப.ப

ன் இறைவா, என் நிழல்களிலிருந்தே என்னைக் காப்பாற்றிடு. இனி வரும், நாள்களில் எதிர்ப்படும் குழப்பங்கள், தடுமாற்றங்களிலிருந்தும் என்னைக் காத்திடு.
-எ

லகம் தன்னை அறிந்து கொள்வதே நமது உணர்வு நிலையில்தான்.
-எ.எ

ன் அன்பை அளித்துள்ளாய் நீ எனக்கு . அதன் மூலம் உலகை உன் பரிசுகளால் நிரப்பி விட்டாய்.
– எ

ளியினால் முத்தமிடப் படும்போது கருமுகில்கள் விண்ணகத்தின் மலர்களாகின்றன.
-ப.ப

ரு முறையேனும், உன் கனிந்த பார்வையை என் மீது திருப்புவாயாக, இறப்பை மீறி என் வாழ்வு இனிமை யாகிவிடும்.
- தோ

மைதியான இரவின் மூலம், காலைப் பொழுதின் சோம்பித் திரியும் நம்பிக்கைகள் என் நெஞ்சக் கதவைத் தட்டுவதை நான் கேட்க முடிகின்றன.
- மின்

விளக்கின் அமைதிபோல, இரவின் ஒலியின்மை பால்வீதி ஒளியில், வெளிப்படுகிறது.
-ப.ப

மனமுவந்து நீ அளிப்பதை நான் ஏற்றுக் கொள் கிறேன். இதற்குமேல் நான் வேண்டுவது யாதென்று மில்லை.
- தோ

ழமையின் நிலையான செல்வத்தைக் கூடவே கொண்டு வருகிறது எனது புதிய நேயம்.
- மின்

ருதி ஒளியைப் பருகிக் கொண்டு குன்றுகளாகிற இதழ்களைக் கொண்ட ஒரு மலர் போன்ற தோற்றமளிக்க வில்லையா இந்த மலை?
-ப.ப

னது வெற்றியில் மட்டுமே உனது அருளைக் காணும் கோழையாக நான் இருந்து விடக்கூடாது, எனது தோல்வியில் கை தூக்கி விட முன்வரும் உனது கையின் பிடி துணையைக் காண்பேனாகுக.
- க.கொ

ன் ஆன்மாவிலிருந்து இருள்மேகம் விலகும் போது, என் புன்னகையில் இசை பிறக்கிறது.
-எ

ன் நெஞ்சமே, காற்றும் நீரும் படகு நகரத் துணை புரிகின்றன. அது போன்றே, உலகின் சுழற்சியில் உனது அழகை காண்பாயாக.
-ப.ப

ன் தெய்வமே, நீ என்னைக் காப்பாற்றும் பொழுது, உலகங்களின் நடையில் அடி வைப்புகள் மென்லென உள்ளன.
– எ

ழி முறைகளிலிருந்து மகிழ்ச்சிக்கு, அறத்தி லிருந்து அன்புக்குத் திரும்பும்பொழுது முடிவுள்ளது என்று முடிச்சை அவிழ்த்து முடிவற்றது, என்கிற நிலைக்குத் திரும்பும்போது நமக்கு விதிக்கப்பட்ட கடமையை நிறை வேற்றி முடிக்கிறோம்.
-சா

துயரத்தைக் கொணர்ந்தாலும் காதலை நம்பு. உன் நெஞ்சக் கதவை அடைத்திடாதே.
- தோ

ஓ, வானமே, எனக்கு உரித்தான பலகணியிடத்து உன்னுடன் என் மனம் இணைகிறது; உனக்கே உரிய பேரரசின் வெட்ட வெளியில்லை.
- மின்

ன்னைச் சலனப்படுத்தும் அளவிற்கு அன்பிற்கு முழு உரிமை அளிக்கப்படுவதையே நான் விடுமுறை யென்று கருதுகிறேன்.
- நா

உணர்வு நிலையின் முழுமையே அன்பு.
-சா

முடிவற்ற உள்ளுயிரே முடிவான உண்மை என்பதை நாம் எப்பொழுது உணர்கிறோமோ,அதனுடன் நாம் இணையும்பொழுது நம் உள்ளுயிரின் மகிழ்ச்சியை நாம் புரிந்து கொள்கிறோம்.
- படை

விண்மீன்கள் தோன்றுவதற்கு முன்னர் நிலவிடும் இருட்டுப்போல், தனது கடைசி இசை பிறக்கக் காத்திருக்கிறது, என் வாழ்க்கையின் வெற்று வேய்க்குழல்.
- மின்

மாந்தனை நாம் விரும்பினாலன்றி, மாந்தனை நாம் என்றுமே நன்கு புரிந்து கொள்ள முடியாது.
-சா

எல்லாப் பொருள்களும் உயிர். நாம் சார்ந்த கண் ணோட்டத்தில் தன் போன்றே இருக்கிறது என்பதை உணரும் பொழுதுதான், உலகம் பற்றிய நம் உணர்தல் முழுமை பெறுகிறது.
-படை

உனது உலகிற்கு என்னை இட்டுச் செல். என்னிடம் இருப்பவை யாவற்றையும் மகிழ்சியுடன் துறப்பதற்கான உரிமையை அளித்திடு.
-ப.ப

ஓ அரும்பே, வழிவிடு, வழி விடு, உன் நெஞ் சத்தைக் கீறிக் கொண்டு வழிவிடு. நெஞ்சத்தை விண்டு காட்ட வேண்டும் என்கிற விரைவு உணர்ச்சி உன்னிடம் புகுந்து விட்டது. இனி என்றுமே நீ அரும்பாக இருக்க முடியாதோ?
- நா

மண்ணோடு பிணைப்புண்டுள்ள மரத்திற்கு அதனிடமிருந்து பிரிந்திருப்பது விடுதலையாகாது.
- மின்

பாடங்களின் கோர்வையை அலைகளாகக் கொண்ட என் நெஞ்சம் செங்கதிர் பரந்திருக்கும் பகலாகிற பசுமை உலகை அணைத்திடத் துடிக்கிறது.
-ப.ப

அழிவில்லாத மேலுலகில் எல்லாம் நடந்து முடிந்து விட்டது. ஆனால் மண்ணில் பூத்திருக்கும் மலர்களின் மாயத் தோற்றம் இறப்பு என்கிற நிலை மூலம் என்றும் போலிவுடன் இருக்கிறது.
-தோ

மாறி மாறி சேர்ந்து கொண்டும் பிரிந்து கொண்டுள்ளவையும், வாழ்க்கையுடன் பின்னப்பட்டுள்ளவையுமான நூலிழைகளால் தான் வாழ்க்கை என்கிற சித்திரத் திரைத்

துகில் நெய்யப்படுகிறது.
- மின்

நண்பனே, ஒன்றாகவே நாம் இருவரும் இங்கே வந்தோம். இப்பொழுது எதிரும் புதிருமாய் செல்ல வேண்டிய நேரம். உனக்கு வாழ்த்து கூறி விடைபெறுகிறேன்.

உனது பாதை பரந்தது. உன்னெதிரே நேராய் தெரிகிறது. ஆனால் எனக்கோ, தெரியாத பாதைகளிலிருந்து அழைப்பு வருகிறது.

காற்றையும் முகிலையும் நான் பின் தொடர்வேன். குன்றுகளுக்குப் பின் தோன்றும் பகலுக்கு இட்டுச் செல்லும் விண்மீன்களைத் தொடர்ந்து செல்வேன். நான் காதலிக்கிறேன் என்கிற பாடலாகிய ஒரே இழையை மாலையாகத் தொடுத்து இணைந்து நடந்து செல்லும் காதலர்களைப் பின் தொடர்வேன்.

நாள்தோறும் உன் தலையை நிமிர்த்துகையில், ஒரு கடைக் கண் பார்வையின், கையசைப்பில், அலைகளின் மூலம் கடல் பேசுவதைப் போல், உன் காதல் பேசுகிறது.

-நா
சாலையோர புல் விண்மீனை விரும்புகின்றது, உனது கனவுகள் மலர்களாக வெளிப்படுகின்றன.
- ப.ப

அரும்பை முகிழ்க்க வைக்கிறவன் அதை வெகு எளிதாகவே செய்து விடுகிறான். அதை ஒரு பார்வை பார்க்கிறான். அவ்வளவு தான். அதன் நரம்புகளில் உயிர்ப் பாற்றல் ஓடத் தொடங்கி விடுகிறது.
- க.கொ

மழையின் நிழலில் என் நெஞ்சம் அமர்ந்திருக்கிறது, உன் அன்பிற்காகக் காத்திருக்கிறது.
- எ

உன்னிடம் என்னை இழப்பதைக் காட்டிலும், கரை சேர்வது சிறப்பானதா?
- நா

வெளியெங்கும் ஒலித்திடும் உரத்த குரல்களுக் கிடையே தனித்திருக்கும் ஒரு மரத்தின் அமைதியான நெஞ்சத்தில் எனது உள்ளுயிர் இன்றிரவு தன்னை இழக்கிறது.
- மின்

என் நெஞ்சமே, உறுதி தளராமலிரு. பொழுது விடியும்.
-எ

விலை மதிப்பில்லாதது அறிவு. காரணம், முழுவதுமாக நாம் அதை அடைய நேரம் கிடைப்பதில்லை.
-தோ

அமைதியாக நான் வழிபாடு செய்வதை உனக்கு நான் சொல்லும் நன்றி அழித்து விடக் கூடாது.
-மின்

இன்று பகலில் பாடவேண்டிவற்றை நான் பாடிவிட்டேன். மாலையில் புயல் வீசும் தெரு வழியாக உனது விளக்கை நான் எடுத்துச் செல்வேன்.
-ப.ப

வாழ்வின் வேட்கைகள் குழந்தைகளின் உருவத்தில் வருகின்றன.
-மின்

வீட்டிற்கு வா என்று நான் உன்னை அழைக்கவில்லை.

கரை காண முடியாத தனிமையில் நான் வாடும் போது உடனிரு, என் அன்பே
-ப.ப

வெளியில் சொல்லப்படாத அன்பு புனிதமானது. மனச் சோர்வின் இருண்மையில் மாணிக்கமாய் அது ஒளிர்கிறது.
-தோ

இளவேனிற் பருவம் ஒரேயடியாக மறைந்து விட்டதேயென்று வாடிப்போன மலர் பெருமூச்சு விடுகிறது.
-மின்

இந்த மரத்தில் நடுங்கிக் கொண்டிருக்கும் இலைகள் சிறு குழந்தையின் விரல்கள் போன்று என் நெஞ்சத்தை வருடுகின்றன.
-ப.ப


வாழ்க்கை என்கிற என் தோட்டத்தில், என்றுமே சேர்க்கப்பட்டுச் சேமிக்கப்படுத்தப் படாத ஒளி, நிழல் போன்றே என் செல்வமும் இருந்திருக்கிறது.
-மின்

உனது இசைக்கலை, ஒரு போர்வாள் போல, அங்காடிச் சந்தடியில் அதனுடைய நெஞ்சத்தில் பாய்ச் சட்டும்.
-ப.ப

ஆழ்ந்த அச்சத்தில் என்னைக் காப்பாற்றுமாறு நான் இரக்கக் கூடாது. எனது விடுதலையைப் பெற எனக்குப் பொறுமை இருக்கட்டும்.
-க.கொ

என்றுமே எனதாயிருக்கிற பழம், நீ ஏற்றுக் கொண் டுள்ள பழம்தானே.
-மின்

மண்ணிலும் விண்ணிலும் இருள் மண்டி ஒளி மங்கி வருகிறது. எந்தத் திசையில் செல்கிறோம் என்று கூடச் சொல்ல முடியவில்லை.
-வ.பி

உனது மெல்லிய குறு குறு பேச்சின் உட்பொருளை மலர்களிலும், வெஞ்சுடர் வெளிச்சத்திலும் நான் காண்கிறேன்.
-ப.ப

அடக்கத்தில்தான் இருக்கிறது அழகின் பேராற்றல் வேண்டும், அல்லது சிறு துளியும் கிடைக்கக் கூடாது. ஆகவே தான் அது எதையுமே கேட்பதில்லை.
-எ.எ

மேலுலகின் பகுதியை தன் உடன் பிறந்தோனாகக் காண்கிறது மல்லிகை.
-மின்

வாழ்க்கைக் களத்தில் துணைவர்களை நான் தேடிக்கொண்டிருக்கக்கூடாது. நான் நம்ப வேண்டியது எனக்குரிய வலிமையை மட்டுமே.
-க.கொ
இலையுதிர் கால பனிப் போர்த்திய நிலத்தின் ஆர்வம் துலங்கும் முகம் என் நெஞ்சத்தின் பேராவலைக் கிளர்ந்தெழச் செய்கிறது.
-எ

கதிரவனின் ஒளி, விசும்பு, பசுமை நிறைந்த நிலம் இவற்றை நான் கண்டு இன்புற்றிருக்கிறேன்.

நள்ளிரவைக் கிழித்துக் கொண்டு வந்த ஆற்றின் பண்ணொலியைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்.
-எ