உள்ளடக்கத்துக்குச் செல்

இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்/விடுதலை செய்

விக்கிமூலம் இலிருந்து
விடுதலை செய்

எனது காதலியே! உனது, இனிமைப் பிணிப்புகளினின்று என்னை செய்வாயாக! முத்தங்களைத் திணறும்படி பொழிகின்றவெறி ஒழிய வேண்டும்!

இந்தக் கடுமையான திணறும் காதல் மணம் என் நெஞ்சத்தையே அடைக்கிறதே!

கதவைத் திறந்து, காலைக்கதிரவனின் ஒளி வெள்ளம் உள்ளே வர இடம் கொடு.

காதல்வெறியிலே உன்னைத்தழுவி நிற்கும் நான் உன்னுள்ளே மூழ்கிக்கிடக்கிறேனே!

உனது காந்தத் தழுவலினின்று என்னை விடுதலை செய்; மீண்டும் எனக்கு ஆண்மை தந்து, நான் உனக்கு முழு உரிமையான நெஞ்சத்தை வழங்கும்படி துணை செய்வாயாக!

-கா.ப

உனது வாக்கு இரவின் முகத்திரையைக் கிழித்து விட்டுள்ளது; காலைப் பொழுதின் அரும்புகள் திறந்திருக்கின்றன.

-எ

ஓ, இரவே, என்னை உனது பாவலனாக ஏற்றுக் கொள்.

உனது நிழலின் கீழ்க் காலம் காலமாகப் பேச்சு மூச்சற்றவர்களாகச் சிலர் இருக்கிறார்கள். அவர்களுடைய பாடல்களை நான் பாட விடு.

-க.கொ

நல்லவற்றைச் செய்து வருவதிலேயே ஈடுபட்டிருக்கும் அவனுக்கு நல்லவனாகயிருப்பதற்கு நேரம் இருப்பதில்லை.

-ப.ப

என்றாவது ஒரு நாள் என்னுள்ளே இடம் பெற்றுள்ள உயிரை என்னுள்ளே ஒளிந்திருக்கிற அந்த மகிழ்ச்சியை எதிர்கொள்ளவே செய்வேன்.

-க.கொ

மழையற்றிருக்கிற இலையுதிர் கால வெண்முகில் நான். நெற்கதிர் முற்றியிருக்கிற வயலில் என் முழுமையைக் காண்பாய்.

-ப.ப

றப்பின் கூறு ஒன்று; வாழ்க்கையின் கூறுகள் பல; இறைவன் இறந்தால் மதம் ஒன்றாகவே மலர்ந்துவிடும்.

-ப.ப

காற்று தண்ணிர் இவற்றின் ஒசையினிடையே சிக்கியிருக்கிற அலைகளின் மேல் பாவலனின் மனம் மிதக்கிறது கூத்தாடுகிறது.

-க.கொ

ர் எல்லைக்குள் அடங்குகிற அறிவை அதற்காக மட்டுமே தேடியலைபவன் உண்மையைக் காணமுடிவதில்லை.

-ஆ

காலைப் பறவை பாடுகிறது.

பொழுது விடிவதற்கு முன்னமேயே பொழுது புலரப் போகிறது என்பதை எங்கிருந்து அறிந்து கொண்டது; அதே போல் இரவாகிற பறவைவிலங்கு கரும் சுருள்களில் விண்ணைத் தன் பிடியில் வைத்திருப்பதையும் எவ்வாறு அறிந்து கொள்கிறது.

-க.கொ

ல்லவற்றின் மூலமே நமது உள்ளுயிர் வளர்க்கப்படுகிறது. அதுவே அவற்றின் பிணைப்பிற்கு எடுத்துக் காட்டு.

-சா

கிழக்கு முகத்தின் தூதுவனாக வந்துள்ள, காலைப் பறவையே, விண்ணின் காரிருளினூடேயும், இலைகளி னுாடேயும், ஊடுருவி எவ்வாறு அவன் உன் கனவில் புகுந்துள்ளான் என்பதைக் கூறிடுவாய்.

-க.கொ

ல்லையற்றதும், எல்லைக்கு உட்பட்டதுமாகிய இரண்டும் ஒன்றுதான். பாடலும், பாடகனும் ஒன்றுதானே.

-ஆ

பேருலகின் உள்ளத்தில் நமக்கு ஓர் இடம் உண்டு என்று விளக்குவதே நமது அரும் பணி.

-ஆ

வெளிச்சத்தின் முதல் வாழ்த்தினைப் பெற, உன் நெற்றியைத் தாழ்த்திக் காத்திரு. காலைப் பறவையுடன் இணைந்து மகிழ்ச்சியுடன் பாடு.

-க.கொ

னது உலகத்தில் தவறாகக் காலடியெடுத்து வைத்து, அதையே எனக்கு எதிராகத் திருப்பி விடாதிருப்பேனாக.

-ப.ப

றைவா, உலகின் செல்வமனைத்தையும் தூசாக மதிக்கிற செல்வத்தின் சின்னஞ் சிறிய பகுதியை எனக்களித்திடு.

-க.கொ

வெளிச்சத்தை நோக்கி, இருட்டு பயணிக்கிறது.

-ப.ப

துவுமே செய்ய வேண்டியது இல்லாமலிருக்கும் பொழுது நான் ஒன்றுமே செய்யாமலிருப்பது, தண்ணிர் அமைதியுடன் இருக்கும் பொழுது, மாலை நேரத்தில் கடற்கரை எவ்வாறிருக்குமோ அது போன்று அமைதியின் ஆழத்தில் தாக்கம் யாதொன்று மின்றி இருக்கிறது.

-ப.ப

ன் நெஞ்சமே, உன் தலைவனின் புன்முறுவலை மீறித் தனித்திருந்து, அவனிடமிருந்து விலகி எவ்வாறு அலைந்து திரிய முடியும்.

-க.பா

றிய முடியாமையே நிலையான விடுதலை.

-க.கொ

ல யுகங்களிலிருந்து புறக்கணிக்கப்பட்ட, சிதறிக்கிடக்கும் பரிதாபகரமான சிந்தனைகள், என் இதயக்குகையில் ரீங்காரமிட்டு, என்னைப்பாடவே தூண்டுகின்றன.

னது துயரமான எண்ணங்கள் தங்களது பெயர் களைக் கேட்டுக் கேட்டு என்னைத் துன்புறுத்துகின்றன.

-ப.ப

திருக்கோயிலின் உள்கதவைத் திறந்திடு, விளக்கினை ஏற்றிடு, அங்கு நம் இறைவனின் முன்னிலையில் அமைதியுடன் ஒன்று கூடுவோம்.

-க.கொ

வாழ்வு என்பது முடிவில்லாதது என்பதை அறிந்து கொள்ள மீண்டும் மீண்டும் நான் இறப்பேன்.

-ப.ப

தேய்ந்து வரும் இரவு என் வாயில்முன் தயங்கி நிற்கிறது. பாடல்களைப் பாடி என்னிடம் அவள் விடை பெறட்டும்.

-க.கொ

நாள் முடிவில் உன் முன் நான் நிற்கும் போது, நீ என் உடம்பிலுள்ள தழும்புகளைக் காணலாம். நான் காயப்பட்டிருக்கிறேன் என்பதையும், அவை குணமாகி வருகிறதென்பதையும் நீ தெரிந்து கொள்வாய்.

-க.கொ

ன் தலைவ உன் விண்மீன்களிலிருந்து இறங்கி வருகிற பண்ணிசைப்புகளில் நெஞ்சத்தை எனது வாழ்க்கைத் தந்திகளில் பொழிந்து விடு.

-க.கொ

ன்றாவது ஒரு நாள் வேறொரு உலகத்தின் விடிவெள்ளியில் உனக்குப் பாடுவேன்; நிலத்தின் வெளிச்சத்தில் மனித நேயத்தில் உன்னை முன்பே நான் பார்த்திருக்கிறேன்.

-ப.ப

குயிலுக்குத் தன்பாட்டுத்தான் பொருத்தமாகும். குயில் கிளியைப்போல எதிரொலிப்பது பொருந்தாது.

****

நான் விடை பெற்று செல்லுமுன், திரும்பத் திரும்ப வருகிற சொல்லின் மேல் கவனம் செலுத்தி, அந்த இசையை முற்றிலுமாக நிறைவு செய்வேனாக. உன் முகத்தைக் காண விளக்கைச் சுடர்விடச் செய்வேனாக, உனக்கு முடிசூட்டிட மாலை தொடுப்பேனாக.

-க.கொ

நேற்றைய இரவின் புயல் தனது பொன்மயமான அமைதியினால் காலைப் பொழுதிற்கு முடிசூட்டுகிறது.

-ப.ப

தனக்குள்ளே யாவற்றையும் அடக்கிக் கொள்ளும் நிலையான உண்மை அங்கே இருக்கிறது.

-ஆ

ந்த அளவில் உலகம் தாலாட்டப் படுகிறதோ, அந்த இசை எது?

-ப.ப

ற்ற நாள்களிலிருந்து என் வாழ்க்கையில் மிதந்து வரும் முகில்கள் மழை பொழிவதற்காகவோ, புயல் வீசுவதற்காகவோ வரவில்லை; மறையும் படுஞாயிற்றுக்கு நிறம் கொடுக்கவே அவை வருகின்றன.

-ப.ப

ன் முடிவான தீர்மானத்தைக் கூறவே வாய்மை என்னிடம் வருவதாகத் தெரிகிறது. அந்த முடிவான தீர்மானமே மற்றொன்று தோன்ற வழி செய்கிறது.

-ப.ப

ந்த மண் பாண்டத்திகுள் நிலைப்பேறுடையது குரல் கொடுக்கிறது; வேனிற்காலம் நெருங்கத் துடிக்கிறது.

-க.பா

ந்த உலகத்தை என் கண்களாலும், இதர அங்கங்களினாலும் முத்தமிட்டிருக்கிறேன், எண்ணற்ற மடிப்புகளாக என் நெஞ்சத்திற்குள் சுருட்டி வைத்திருக்கிறேன். உலகமும் எனது வாழ்க்கையும் ஒன்றாக இணையும் வரை அதன் பகல்களையும் இரவுகளையும் வெள்ளம் போல் சூழ்ந்திருக்கிறேன்.

-க.கொ

ண்ணீர்த் துளிகளில் விதைப்பதற்காகத் தோல்வி களைத் தொகுக்கிற அந்தக் காதலுக்காக நான் காத்திருக்கிறேன்.

-நா

வாழ்க்கையை நான் விரும்புகிறேன் ஏனெனில் என்னுடன் பிணைந்துள்ள விண்ணின் ஒளியை நான் விரும்புகிறேன்.

-க.கொ

எங்கு ஒளி இருளைத் தாக்கிப் பகலாக மாற்றுகிறதோ, அங்கு உன்னை நான் கண்ணுற்றிருக்கிறேன்.

-எ

வெறுமையாகவும் அமைதியாகவும் இருக்கிற வழிகள் என் வாழ்க்கையில் உள்ளன. எனது விரைவான நாள்கள் ஒளியும் காற்றும் கொண்டிருந்த வெட்ட வெளி இடங்கள் அவை.

-ப.ப

வரோ ஒருவர் அன்பாகிற மலரை என் நெஞ்சத்தில் கமுக்கமாக விட்டுச் சென்றிருக்கிறார்.

-எ

பயனற்றவை யாவற்றையும் புறந்தள்ளி விட்டு உனது பரபரப்பான அடிகள் உலகின் புழுதியை முத்தமிடுகின்றன.

-நா

ன்னுடன் இணைந்து என் நெஞ்சத்தில் வாழ்கிறான் என் இறைவன்.

-க.கொ

சைந்தசைந்து ஒளி சிந்தும் சிலம்புகள் கண்ணுக்குப் புலப்படாத கால்களைச் சுற்றிக் கொண்டு எழுப்பும் ஒத்திகைக் கட்டு என் எண்ணங்களுக்கு எழுச்சி யூட்டமளிக்கிறது.

-நா

வளிடம் நிலைத்திருத்தல் என்பது மகிழ்ச்சி கொண்டு இருபாதிகளாகப் பிரிந்துள்ளது. தன்னுள்ளே அடங்காமல் அன்பாகிற நோவாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது இந்த மகிழ்ச்சி.

-க.கொ

ர் உலகிலிருந்து மற்றோரு உலகுக்கும், ஓர் அமைப்பிலிருந்து மற்றோர் அமைப்புக்கும் ஆரவாரத்துடன் இடியோசையுடன் வரும் வெள்ளத்தின் சீற்ற ஒலியை நான் கேட்கிறேன். அந்த ஓசை தன்னுடனே துயரங்களையும் துயரத்தின் சாயல் ஒலிக்கும் பாடல்களையும் எடுத்து வந்து என்னை நிலைகுலையச் செய்கிறது.

-நா

ன்னருகில் ஒரு கண நேரம் தான் நீ நின்றிருந்தாய். படைக்கப்பட்ட பொழுதே ஆழங் காணமுடியாத ஒரு முகத்தை உள்ளடக்கிய பெண்ணாக என்னை வருடினாய்.

-க.கொ

ன் நெஞ்சமே, அலை உயர எழும்பி நிற்கிறது, காற்று வீசுகிறது, உன் விருப்பத்திற்கேற்ப, படகும் கூத்திடுகின்றது.

-நா

னதோ, வழக்கமான புழுதியில் அமர்ந்திருக்கும் விண்ணகம். எனக்காக நீ அங்கே காத்திருக்கிறாய். யாவருக்காகவும்தான் நீ அங்கே காத்திருக்கிறாய்.

-க.கொ

னது சேமிப்பைக் கரையில் நிறுத்தி வைத்திடு. பின்னர் வரையரையில்லாத வெளிச்சத்தைத் தேடி ஆழங் காண முடியாத இருட்டின் மேல் பயணம் செய்வாய்.

-நா

ளியின் வாழ்த்து கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் செல்கிறது.

-எ

காற்றையும், முகிலையும் நான் தொடர்ந்து செல்வேன். குன்றுகளுக்குப் பின்புறம் எங்குப் பகல் தலை காட்டுகிறதோ, அங்கே நான் விண்மீன்களைப் பின்பற்றிச் செல்வேன், தாங்கள் நடந்து செல்கையில் தங்கள் நாள்களை ஒரு மாலையாக்கி அதில் 'நான் விரும்புகிறேன்' என்ற சொற்களைப் பாடலாக்குகிற காதலர்களைப் பின் பற்றிச் செல்வேன்.

-நா

ன்னிளவேனிற் தென்றல் காற்று உன் ஆசையை ஒட்டுக் கேட்டிருக்கிறது. பிறவி எடுத்ததன் பயனை நீ அடையுமுன்னர் பகல் முடிவடைந்து விடாது.

-க.கொ

மரங்கள் கரைமேல் மங்கலாகப் படர்ந்திருக்கின்றன. தரையோ கடந்த காலத்திற்கே தான் உரித்தானது போல தோற்றமளிக்கிறது.

-நா

ன்னைப் பிணித்திருக்கும் தளைகள் இற்றுப் போகும். மொட்டு மலராக முகிழ்ந்துவிடும். நிறை வாழ்வு வாழ்ந்து வாழ்ந்து நீ இறக்கும் பொழுது கூட வேனிற் காலம் நிலைத்து நிற்கும்.

-க.கொ

மழை பொழியாமல் அமைதியாக இருக்கிற கோடைக் கால முகில்கள் போல் ஒரு கமுக்கமும் புதைந்திருக்க வேண்டும் என்னுள்ளே. செல்லுமிடத்தெல்லாம் நான் எடுத்துச் செல்லக் கூடியதாகவும், அமைதிக்குள் அடக்கப் பட்டுள்ளதாகவும் இருக்கிறது அந்தக் கமுக்கம். அதுவே என் விருப்பம்.

-நா

எனது பாடல் உன் கண்களின் கருமணிகளில் கலந்து எந்த செய்தியையும் ஆழமாய் ஊடுருவிப் பார்க்கும் ஆற்றலை உனக்கு அளிக்கும்.

-கா.பா

நாம் வாழ வேண்டும். தன் பாடல்களைப் பொழியும் போது ஒரு பாவலன் எத்தகைய மகிழ்ச்சியை அடைகிறானோ, அந்த மாசற்ற மகிழ்ச்சியை நாம் அடைய வேண்டும்.

-ஆ

மனவுறுதிப் பறவை இன்னும் இருண்ட இரவிலும் பாடுகிறது.

-ப.ப

லியர் பேராசையை விடுக; எளியர் துணிவு கொள்க. இஃதின்றி உலக நட்புறவு வராது.

-தா. சொ

ந்த மாலைப் பொழுதில் நிலவும் அமைதி ஒரு காலடியோசையை எதிர் பார்ப்பதாகத் தோன்றுகிறது. நீயோ என் கண்ணீருக்குக் காரணம் கேட்கிறாய்.

-நா

ன் பண் இசையின் அலைகள் உன் அடிகளைக் கழுவுகின்றன. ஆனால் அவற்றை அடைவது எப்படி என்பது தான் எனக்குத் தெரியவில்லை.

-க.கொ

டுவில் புகுந்து அங்கிருந்து வாழ்க்கையாகிற கிளை பரப்பும் மரத்திற்குக் கண்ணுக்குத் தெரியாத ஊட்டமளித்து மலர்களும், கனிகளும் தோன்றச் செய்கிற அன்பை எனக்கு அளித்திடுவாய்.

-க.கொ

ப்புயர்வற்ற ஆவியில் எத்தனை வியப்பான அமைதி உள்ளது என்று கண்டிரு. தகுதியுள்ளவனுக்கே நுகர்வின்பம் கிடைக்கும்.

-க.பா

சோர்வுற்ற காலப் போக்கில் நீ ஈட்டிய செல்வத்தைக் கண்டு களித்தது போதும். எல்லாவற்றையும் கை கழுவி விட்டோம் என்ற பாழ்பட்ட வெற்றிக் களிப்பைத் தவிர எதுவுமே மிஞ்சி நிற்காதபடி அத்தனையையும் செலவிட்டு விடு.

-நா

மது வாழ்க்கை இறைவனின் திருவருள் கொடை யால் நிறைக்கப்பட்டிருக்கிறது.

-ஆ

ன் வாழ்க்கையின் பெருமகிழ்ச்சியான நாள்களில் நீ எனக்கு பாட்டிசைத்தாய் நான் உனக்கு அவ்வாறு பாட மறந்து விட்டேன்.

-க.கொ

காதல் என்னும் மணிக் கயிற்றால் பிணைக்கப்பட்டு மகிழ்ச்சி என்னும் பெருங்கடலில் இங்கும் அங்குமாய் அசைக்கப்படுகிறேன்.

ல்லமை மிக்க ஓசையொன்று இசையாக வெளிப்படுகிறது.

-க.பா

ன் இளமைப் பருவத்தில் ஆழ்ந்த மகிழ்ச்சியாக என் உள்ளத்தில் உறைந்திருந்தாய். அந்த நிலையில் நான் திளைத்திருந்த பொழுது, அந்த மகிழ்ச்சி திடீரென மறைந்து போனது.

-க.கொ

லகம் தன் கடமைகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறது; தவறுகளும் புரிந்து கொண்டிருக்கின்றது.

னால் தங்கள் காதலிகளை அறிந்து கொள்ளும் காதலர்கள் சிலரே இருக்கிறார்கள்.

-க.பா

ழம் காண முடியாத கடலின் நெஞ்சத்திலிருந்து பொன்மயமான குரலொன்று பிறக்கிறது.

-எ

ன் இருண்ட உள்ளக் குகைகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கும் உன்றன் பாடல்கள் அவைதாமா?

-க.கொ

ன் முன்னே தூசியில் தூக்கி எறிவதற்காக இரண்டு கைகளிலும் நீ என்ன பரிசு கொண்டு வந்திருக்கிறாய்.

-நா

நீ என்னைக் கொண்டு சேர்த்திருக்கிற உலகத்தை நான் விரும்புகிறேன் என்பதைக் கண்டறிய நீ விரும்புகிறாய்.

-க.கொ

விருந்தாளி எவருக்கும் வரவேற்பளிக்க எனது வீட்டில் இடமில்லையே என்று நினைத்தபடி ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தேன். ஆனால் இனந் தெரியாத மகிழ்ச்சியினால் உந்தப் பட்டுக் கதவு திறக்கப்பட்ட பொழுது உனக்கு மட்டுமன்று, உலகனைத்திற்கும் அதில் இடமுள்ளது என உணர்கிறேன்.

-க.கொ

மாரிக் காலத்தில் ஆற்றில் வெள்ளம் முழுமையாகப் பெருகிப் பொங்குவதைப் போல, என் உள்ளமும் சுழித்தோடுகிறது. அது போன்றதுதான் அவளிடம் எனக்குள்ள காதல்.

-கா.ப