இராக்கெட்டுகள்/விண்வெளியில் மனிதன்

விக்கிமூலம் இலிருந்து

12. விண்வெளியில் மனிதன்

நீலவான் முகட்டை முட்டித்
தாக்கிடு வோமே - இந்த
நீண்டவெளி தன்னைச் சுற்றிக்

கொள்ளை கொள்வோமே'

என்று கவிமணி அவர்கள் மனித இனம் காணும் கனவை-அவனது விடுப்பூக்கத்தை (Curiosity)-வெளியிடுகின்றார். ஆனால், அமெரிக்காவின் எக்ஸ்புளோரர் என்ற துணைக்கோள் வான மண்டலத்தில் கதிர் வீச்சு வளை சூழல் இருக்கின்றது என்றும், அது உயிரினங்களுக்கு விபத்துக்களை விளைவிக்கக் கூடியதென்றும் கண்டறிந்துள்ளது. இதனைக் கொண்டு மனிதன் தான் சந்திர மண்டலத்தை எப்பொழுதாவது அடைய முடியுமா என்று ஐயுற வேண்டியதில்லை. அங்ஙனம் ஐயுறுவது சிறுபிள்ளைத்தனமாகும். ஏனெனில், பயன்படத்தக்க ஒவ்வொரு கண்டுபிடிப்பும் சில பிரச்சினைகளைத் தரத்தான் செய்கின்றன. அவற்றை மனிதன் தன் மதிநுட்பத்தால் எப்படியாவது சமாளிக்க முயன்றாக வேண்டும். இதற்குப் பல ஆண்டுகள் ஆராய்ச்சி, கோடிக் கணக்கான ரூபாய் பொருட் செலவு, பலருடைய உயிரிழப்பு ஆகியவை நடைபெற வேண்டியிருக்கலாம். ஆகவே, சந்திர மண்டலத்தை விரைவாகவோ எளிதாகவோ அடைய முடியும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. இது ஒருவகை முடிவு.

மற்றொரு வகையில் சிந்தித்தால், முதன் முதலாக வெற்றிகரமான வி-2 இராக்கெட்டு பறந்து பதினைந்து ஆண்டுகளில் வானவெளியில் ஒரு துணைக்கோள் அயனப்

1. கவிமணி : மலரும் மாலையும். பாதையில் சென்றதைக் கண்டோம். இதன்பிறகு மூன்றாண்டுகள் கழித்து இரஷ்யாவும் அமெரிக்காவும் ஒரு மனிதனை வான வெளியில் அனுப்புவதற்குத் தயார் செய்து கொண்டிருந்தன. இதிலிருந்து புதிய அறிவியல் துறையாகிய வானவெளிப் பயணத்தில் எவ்வளவு வேகமாக முன்னேற்றம் ஏற்பட்டுக் கொண்டுள்ளது என்பது தெளிவாகின்றதல்லவா?

படம் B8 : எக்ஸ்புளோரர் என்ற துணைக்கோள்

புதிய உயர்ந்த வகை-எரி- பொருள்கள் (Propellents) வளரச் செய்யப்பெறுவதற்கு முன்னர் வானவெளியில் பறந்து செல்வதற்கு அமைக்கப்பெறும் இராக்கெட்டுகளின் எடை அவை சுமந்து செல்லும் ஒவ்வோர் இராத்தல் எடைக்கும் (pay-load) 1,000 இராத்தல் வீதம் இருக்க வேண்டுமென்று வழக்கமாகக் கணக்கிடப்பெற்றது. இக் காரணத்தால் தான் அரும்பாடு பட்டு மிகச் சிறிய இலேசான கருவிகளை அமைத்தனர். இதனால் பிரத்தியேகமாக அமைக்கப்பெற்ற 22,600 இராத்தல் எடையுள்ள மூன்று நிலை இராக்கெட்டால் சுமந்து செல்லப் பெற்ற 21 இராத்தல் எடையுள்ள வான் கார்டு என்ற துணைக்கோளினைக்கொண்டு ஏராளமான தகவல்களைச் சேகரிக்க முடிந்தது. ஆனால், இரஷ்ய அறிவியலறிஞர்கள் தம்முடைய ஸ்புட்னிக்குகளுக்கு முதல், இரண்டாம் நிலைகளில் மிகப் பெரிய இராக்கெட்டுகளைப் பயன்படுத்தத் தீர்மானித்தனர். இதனால் வியப்பூட்டத்தக்க பருமனும் எடையும் உள்ள பெரிய துணைக்கோள்களை அயனப் பாதையில் வைப்பதற்கு அவர்களால் இயன்றது.

ஸ்புட்னிக்-1 இன் எடை 184.3 இராத்தல் என்று அறிந்தவுடன் மேனாட்டு அறிவியலறிஞர்கள் அதிர்ச்சியுற்றனர். இன்னும் ஸ்புட்னிக்-II மேலும் திகைக்கச் செய்யும் அளவிற்கு அரை டன் (1,120 இராத்தல்) எடையாக இருந்தது. 1958ஆம் யாண்டு மே மாதம் 15ஆம் நாள் அனுப்பப்பெற்ற ஃபுட்னிக்-III இன் எடை 1 டன் 6 அந்தர் (2,912 இராத்தல்) ஆக இருந்தது. இந்த எடையுள்ள துணைக்கோள் 1,300 டன் எடையுள்ள இராக்கெட்டினால் வீசி எறியப்பெற்றது என்று நம்புவது இயலாததொன்று. இதன் முன்பு 110 டன் எடையுள்ள அட்லாஸ் என்ற கண்டந்தாண்டும் உந்து ஏவுகணை (Atlas ICBM) ஒரு சிறிய சிறுவாணம்போல் காணப்பெறும். ஆகவே, இரஷ்யர்கள் மிக ஆற்றல் வாய்ந்த புதிய எரி பொருள்களைக் (Propellents) கொண்டிருத்தல் வேண்டும். மூன்றாண்டுகட்குள் இந்த எரி பொருள்கள் கிடைக்குமாறு செய்த அருஞ் செயல்கள் வியப்பிற்குரியவையாகும்.

1958இல் அமெரிக்காவும் இரஷ்யாவும் சந்திரனைச் சுற்றி வருவதற்கேற்ற ஒரு துணைக்கோளை அனுப்பத் தீர்மானித்தன. 2,453 மைல் உயரம்வரை மேலே சென்ற வான்கார்டு-I 2,38,000 மைல் வரை சென்று சந்திரனின் துணைக்கோளாக ஏன் அமைதல் கூடாது என்று கருதுவது அளவுக்கு மீறிய பேராசை என்று சொல்லுவதற்கில்லை. பூமியின் துணைக்கோளாக அயனப் பாதையில் வைக்கப் பெறுவதற்கு மணிக்கு 18,000 மைல் வேகம் தேவையானது. இதற்குமேல் மணிக்கு 7,000 மைல் வேகம் இருந்தால் அஃது இராக்கெட்டு ‘தப்பும் நேர் வேகத்தை’ (Escape velocity) அடைவதற்குத் துணை செய்கின்றது. இது கவர்ச்சி ஆற்றலின் இழுப்பினைச் சமாளித்துச் சந்திரனை நோக்கிப் போவதற்குப் போதுமானது. இதற்குமேல் மணிக்கு 1,000 மைல் வேகம் இருந்து மொத்தத்தில் மணிக்கு 26,000 மைல் (18,000+7,000+1,000) இருந்தால், 260 இலட்சம் மைல் (26 மில்லியன் மைல்) தொலைவி லுள்ள வெள்ளி (Venus) என்ற கோளினுக்கும் செல்வதற்குச் சாத்தியப்படும்.

அமெரிக்கா 88 அடி உயரமுள்ள தோர் ஏபிள் (Thor. Able) என்ற மூன்று நிலை இராக்கெட்டினைப் பயன் படுத்திச் சந்திரனை நோக்கிச் சுட்டது. இதில் தோர் இடைநிலை எல்லை உந்து ஏவுகணையை (Thor I RB M) முதல் நிலையாகப் பயன்படுத்தியது. இதிலுள்ள சுமை (pay-load) பயனியர்-I {Pioneer-I) என்பது: இது 30 அங்குலக் குறுக்களவுள்ள தும் 85 இராத்தல் எடையுள்ள துமான ஒரு கருவிக் கொள்களனாகும்; இதில் முன்னோக்கிச் சுடப்பெறும் திட-எரிபொருள் இராக்கெட்டும் இருந்தது. இந்த இராக் கெட்டின் துணையால் பயனியர்-1 என்ற துணைக்கோள் தன்னுடைய பயணத்தின் எல்லையை அடையும்பொழுது அதன் வேகம் தணிக்கப்பெறும்; இதனால் அது சந்திரனைச் சுற்றியுள்ள ஓர் அயனப் பாதையில் நுழையும். 1958ஆம் ஆண்டு அக்டோபர் 11இல் வீசியெறியப் பெற்ற பயனியர்-1 தன்னுடைய பாதையினின்றும் வழி விலகியது. ஆனால், அது திரும்பவும் பூமியின் வளி மண்டலத்தால் பின்னோக்கி இழுக்கப்பெறுவதற்கு முன்னர் 70,700 மைல் வான்வெளியில் பிரயாணம் செய்தது. இரஷ்ய அறிவியலறிஞர்கள் 760 இராத்தல் எடையுள்ள லூனிக்-12 என்ற

படம் 39: லூனிக்-1, லூனிக்-11 இவற்றின்
அயனப் பாதைகளைக் காட்டுவது.

துணைக்கோளை மிகச் சரியான பாதையில் அனுப்பி வெற்றி கண்டனர். அது சூரியனைச் சுற்றியுள்ள அயனப் பாதையில் நுழையத் தொடங்குவதற்கு முன்னர் 4,600

2. லூனிக் என்பதி, அமெரிக்கர்கள் இரஷ்யர்களின் சந்திர மண்டல வெளி ஆராய்ச்சிக்குத் தந்த சாட்டுப் பெயர் (nickname).

இ-7

மைல்கள் சந்திரனுக்குள் சென்றது. 1959ஆம் ஆண்டு சனவரி 2இல் சந்திரனை நோக்கி அனுப்பப்பெற்ற இது சந்திரனை அடையவில்லை. இது சுமார் 15 மாத காலம் சூரியனைச் சுற்றிக் கொண்டிருந்தது.

அமெரிக்காவின் பயனீயர்-IV என்ற துணைக்கோள் சூரிய அயனப் பாதைக்குள் பின் தொடர்ந்தது. ஆனால்,

படம் 40 : லூனிக்-III என்ற துணைக்கோள்

அதற்குப் பின்னர் இரஷ்யா நம்பத்தகாத அளவிற்கு வேகமாகச் சென்றது. 1959ஆம் ஆண்டு செப்டம்பர் 14இல் 34 மணி நேரம் பறந்த பிறகு 858 இராத்தல் எடையுள்ள ரானிக்-11 என்ற இரஷ்யத் துணைக்கோள் சந்திரனுக்குள் பாய்ந்து அதன் மேற்பரப்பில் 'சம்மட்டிகருக்கரிவாள்' அடையாளம் தாங்கிய மிகச் சிறிய கொடிகளைச் சிதறி

எறிந்தது. இது தான் மனிதன் முதன் முதலாக விண்வெளியிலுள்ள மற்றொரு பொருளின்மீது பருப்பொருள் தொடர்பு கொண்டதாகும். அதே ஆண்டு அக்டோபர் 14 இல் ஒானிக் III என்ற துணைக்கோள் மிக விரிந்த ஓர் அயனப்பாதையில் வீசியெறியப்பெற்றது. அந்த அயனப்பாதை சந்திரனைச் சுற்றியும் சென்றது. அங்ஙனம் செல்லும் வழியில் தானாகவே ஒரு சில ஒளிப்படங்களை

படம் 41: லூனிக்-III என்ற துணைக்கோள் பூமியினின்றும்
பார்க்க முடியாத சந்திரனின் மறுபுறத்தின் சில படங்களை எடுத்தல்

எடுத்து, அவற்றை உருத்துலக்கி (Develop)த் திரும்பவும் தொலைக்காட்சிச் சாதனத்தின்மூலம் 300,000 மைல்கட்கு அப்பாலுள்ள பூமிக்கு அனுப்பின. இந்த மிகப் பெரிய அருஞ்செயல் பூமியினின்றும் எப்பொழுதும் மறைந்துள்ள சந்திரனின் மறுபுறத்தைப் பற்றிய கிளர்ச்சியூட்டும் கண நேரத் தோற்றத்தை நமக்கு அளித்தது.

1960ஆம் ஆண்டு மே மாதம் 15 இல் ஸ்புட்னிக்-IV என்ற துணைக்கோள் அயனப்பாதையினுள் சென்றது. இரஷ்யர்கள் இதனை ஒரு ‘விண்வெளிக் கப்பல்’, (Space ship) என்றே வருணித்தனர் ; இஃது அவ்வளவு பெரிதாக இருந்தது. மனிதனை அனுப்புவதற்கு அவர்கள் தயாரித்துக் கொண்டிருந்த ஊர்தி அளவு அது பெரிதாக இருந்தது. ஏதோ எதிர் பாராத வகையில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக அதனை மீண்டும் வளிமண்டலத்திற்கு இரஷ்யர்கள் கொண்டுவர முடியாது போயிற்று. அதே யாண்டு ஆகஸ்டு 10இல் அமெரிக்கர்கள் அனுப்பிய சிறிய டிஸ்கவரர்-XIII என்ற துணைக்கோளை அயனப் பாதையினின்றும் திரும்பப் பெற்றுப் புகழடைந்தனர். ஆனால், இரஷ்யர்கள் 9 நாட்களுக்குப் பின்னர், தாம் அனுப்பிய இரண்டாவது விண்வெளிக் கப்பலாகிய ஸ்புட்னிக்-V ஐத் திரும்பவும் பெற்றதால்' இப்புகழ் மிகவும் மங்கிவிட்டது. இதனுள்ளிருந்த பெல்க்கா, ஸ்ட்ரெல்கா என்ற இரண்டு நாய்கள், நாற்பது சுண்டெலிகள், இரண்டு எலிகள், ஈக்கள், நுண்கிருமிகள் (Microbes) ஆகிய உயிர்ப் பிராணிகள் யாவும் பிழைத்துத் தப்பின.

அதற்குப் பிறகு இப்புத்தகத்தில் முதல் இயலில் குறிப்பிட்டவாறு யூரி காக்கரின், ஆலன் பி. ஷெப்பார்டு, வி. ஐ. கிரிஸ்ஸம் என்ற விண்வெளி வீரர்கள் விண் வெளிக்குச் சென்று வெற்றியுடன் திரும்பினர். இவர்களைத் தொடர்ந்து இரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் பல விண் வெளி வீரர்கள் இச் செயலில் வாகை சூடினர். 1963அம் ஆண்டு மே 15இல் அமெரிக்க விண்வெளி வீரர் கார்டன் கூப்பர் (Gordon Cooper) ஃபெயித்-7 (Faith-7) என்ற பெயர் கொண்ட விண் வெளிக் கூட்டில் பிரயாணம் செய்து 22 முறை பூமியைச் சுற்றி 600,000 மைல் பிரயாணம் செய்து வெற்றியுடன் திரும்பினார். இப் பிரயாணம் 34 மணி 16 நிமிடங்கள் நடைபெற்றது. இதுதான் அமெரிக்கர்களின் மிகப் பெரிய சாதனையாகும். ஆனால், சென்ற ஆகஸ்டில் (1962) கர்னல் பாப்போவிச் என்ற இரஷ்ய விண்வெளி வீரர் 48 தடவைகள் பூமியைச் சுற்றி வந்தது ஈண்டு நினைவு கொள்ளத்தக்கது.

கூப்பர் விண்வெளிக் கூட்டில் ஏழரை மணி நேரம் தூங்கி எழுந்ததும் தாம் சுகமாக இருப்பதாக வானொலி மூலம் அறிவித்தார். ஏழாவது தடவை பூமியைச் சுற்றும் போது நான்கு நிமிடங்களில் சீனாவின் மேற்குக் கரையிலிருந்து தெற்கு எல்லையிலுள்ள ஷாங்காயைக் கடந்தார். கூப்பர் விண்வெளியில் தமது முதல் உணவாக இறைச்சி, வெண்ணெய், ரொட்டி, கேக், பழம், பட்டாணி, ஆரஞ்சு, திராட்சைச் சாறு ஆகியவைகளை அருந்தினார்.

இதுகாறும் அமெரிக்க விண்வெளி வீரர்கட்கு ஏற்படாத ஒரு கடுஞ்சோதனை இவருக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. பதினெட்டாவது சுற்று முடிந்ததும் விண்வெளிக் கூண்டினை இறங்கவைக்கும் நுட்ப மின்சாரக் கருவிகள் சரியாகச் செயற்படவில்லை என்பதைக் காட்டும் அபாயக்குறி விளக்குகள் எரியத் தொடங்கின. இன்னும் நான்கு சுற்றுக்கள் நிறைவு பெற வேண்டும். தமது கூண்டில் நேரிட்ட இயந்திரக் கோளாறினை உடனே கூப்பர் வானொலி மூலம் அறிவித்தார். அந்தக் கருவிகளைச் சரிப்படுத்தக் கூப்பர், தாமாக மேற்கொண்ட முயற்சிகள் பயனற்றுப் போயின. இறுதிச் சுற்றும் நெருங்கி விட்டது.

இயந்திரக் கோளாறு ஏற்பட்ட செய்தியைக்கேட்டதும் கானவெரால்[1] முனையிலுள்ள (Cape Canaveral) விண்வெளி மையத்திலிருந்த (Space centre) அறிவியலறிஞர்களும் தொழில் நுட்ப வல்லுநர்களும் அதற்குக் கழுவாய் (பரிகாரம்) காண்பதில் முனைந்தனர். கூப்பரது விண்வெளிப் பயணம் முடிய இன்னும் ஐந்து மணிநேரம்தான் மீதமிருந்தது. கூப்பர் பயணம் செய்கின்ற விண்வெளிக் கூண்டு போன்ற படியொன்றினை உடனே தயாரித்து அதில் கோளாறு எங்கு ஏற்பட்டிருக்கும் என்பதைக் கூப்பர் கூறிய தகவல்களைவைத்துக் கண்டறிந்தனர். பிறகு கூப்பர் உடனே மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளையும், எந்தச் சமயத்தில் இறங்கும் பயணத்தைத் தொடங்க வேண்டும் என்பதையும் விவரமான குறிப்புக்களை உருவாக்கினர். ஜப்பான் தீவுக்கருகில் ஒரு கப்பலிலுள்ள வானொலித் திசையறி நிலையத்திலிருந்து கூப்பருடன் உரையாடிக் கொண்டிருந்த கர்னல் ஜான் கிளென் (John Glenn) இவற்றைக் கூப்பருக்கு அறிவித்தார்.

மணிக்கு 17,500 மைல் (வினாடிக்கு 5 மைல் வேகம்) வேகத்தில் சென்று கொண்டிருக்கும் விண் வெளிக் கூண்டினைப் பாதுகாப்புடன் பூமியில் இறக்குவது மிக நுட்பமான செயலாகும். இந்த வேலை தாகை நடை பெறுவதற்கு இரண்டுவகை மின்சாரப் பொறிகள் கூண்டிலுள்ளன. இந்த இரண்டும் பழுதுபட்டதால் இத் தகைய கடும் வேகத்தைக் கட்டுப்படுத்திக் குறிப்பிட்ட தலத்தில் விண்வெளிக் கூண்டினே இறக்கும் செயலேக் கூப்பர் தம் கைகளினலேயே செய்து வெற்றிபெற்றிருப்பது ஒரு மாபெரும் சாதனையாகும். கூண்டு சரியானதோர் இடத்திற்கு வந்ததும் எதிர் - இராக்கெட்டுகளை (Retro-rockets) இயக்கிவிட்டார் கூப்பர். இந்த இராக்கெட்டுகளின் வால்பகுதியின் வழியாகக் கூண்டு செல்லும் எதிர்த்திசையில் பீச்சும் சுவாலையால் கூண்டின் வேகம் தணிக்கப்பெறும். வேறெந்தவகையிலும் விண்வெளியில் கூண்டினைத் தடுத்து நிறுத்த முடியாது. எதிர் இராக்கெட்டுகள் இயங்க இயங்க, கூண்டின் வேகம் குறைந்து கொண்டே வந்து அதன் அயனப்பாதையும் பூமியை நெருங்கத்தொடங்கியது. வேறு சில கருவிகளால் சரியான திசையில் கூண்டினைத் திருப்பி அது பூமியின் அருகில் நெருங்கியதும் ஓர் ஆரஞ்சு நிறக் குதிகொடையை (Parachute) விரித்து விட்டார் கூப்பர். பசிபிக் மாபெருங் கடலில் அறுதியிடப் பெற்ற இடத்தில் கூண்டும் வந்து இறங்கியது. அக்குதிகொடை 3,000 அடி உயரத்திலிருந்தபோது அதனைக் ‘கியர்சார்ஜ்’ (Kearsarge) என்ற மீட்பு விமானத்திலிருந்தவர்கள் காண முடிந்தது. இயந்திரக் கோளாறு ஏற்படாமலிருந்தால் கூண்டு கப்பலில் பொருத்தப்பெற்றிருந்த ஒரு பிரத்தியேகமான வலையில் வந்து இறங்கியிருக்கும்.

இன்று இரஷ்யாவும் அமெரிக்காவும் விண்வெளி ஆராய்ச்சியில் அதிகமாக ஈடுபட்டுள்ளன; மாறி மாறிப் பல சோதனைகள் நிகழ்த்தியும் வருகின்றன. எதிர்காலத்தில் என்னென்ன வியப்பான நிகழ்ச்சிகள் ஏற்படப் போகின்றன என்பதை யார்தாம் முற்கூறவல்லார்? பிழைத்திருந்தால் நாமும், நம்பின்னே வரும் வழித்தோன்றல்களும் இவற்றைக் கண்டு அனுபவிக்கப் போகின்றோம். அவர்கள் சந்திரன் செவ்வாய் போன்ற கோள்கட்கும் பயணத்தை மேற்கொள்ளுதல் கூடும்.

  1. இன்று இது கென்னடி முனை என்று பெயர் மாற்றம் செய்யப் பெற்றுள்ளது.