இளையர் அறிவியல் களஞ்சியம்/அசெட்டோன்

விக்கிமூலம் இலிருந்து

அசெட்டோன் : இது நிறமற்ற இனிய மணமுள்ள நீர்மம். இதுவும் ஒரு கரிமச் சேர்மமாகும். வேதிப் பொருட்கள் தயாரிக்கவும் மருந்துப் பொருட்களைத் தயாரிக்கவும் இந்நீர்மம் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. குளோரோபார்ம், அயடோபார்ம் ஆகிய இரண்டு மருந்துப் பொருட்களும் அசெட்டோனிலிருந்தே தயாரிக்கப்படுகின்றன. இது வெடி மருந்துத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. செயற்கை இழை தயாரிப்புக்கும் இந்நீர்மம் பெரிதும் பயன்படுகிறது.

செல்லுலோஸ் அசெட்டேட், செல்லுலோஸ் நைட்ரேட், கடின கொழுப்புகள், பிளாஸ்டிக்குகள், அசெட்டிலின் ஆகியவற்றின் கரைப்பான்களாவும் அசெட்டோன் நீர்மம் பயன்பட்டு வருகிறது. இது மிக எளிதில் ஆவியாகிவிடும். இதன் கொதி நிலை 540C ஆகும்.

நீர், எத்தில் ஆல்கஹால் மற்றும் ஈதரில் நன்கு கரையும், செயற்கை நறுமணம் தரும் அயோனோன் என்னும் சென்ட் தயாரிக்கவும் பயன்படுகிறது.