இளையர் அறிவியல் களஞ்சியம்/எண்கள்

விக்கிமூலம் இலிருந்து

எண்கள் : மனிதன் என்றைக்கு எண்களைக் கண்டுபிடித்தானோ அன்று முதல் அவன் அறிவு வளர்ச்சி துரிதமடையத் தொடங்கிவிட்டது. எது அதிகம் எது குறைவு என்பதை ஒப்பிட்டு அறிய எண்கள் அவசியமாயிற்று. தன்னிடமுள்ள ஆடு மாடுகளோ பொருள்களோ பெருமளவில் பெருக்கமடைந்தபோது அவற்றின் எண்ணிக்கையைக் கணக்கிட்டறிய எண்கள் தேவைப்பட்டன. அவற்றைக் குறித்துவைக்க விழைந்தபோது எண் குறியீடுகளைக் கண்டறிய வேண்டிய அவசிய, அவசரத் தேவை ஏற்பட்டது. இதன் விளைவாக உருவாக்கப்பட்டவைகளே எண் குறியீடுகள். அக்குறியீடுகளின் வளர்ச்சியே இன்றைய எண்கள்.

ஆரம்ப காலத்தில் உலகெங்கும் வாழ்ந்த மக்கள் அந்தந்த நாடுகளின் இயல்புக்கும் மக்களின் வாழ்க்கைப் போக்குக்குமேற்ப வெவ்வேறு வகையான தனித்தனிக் குறியீடுகளைக் கண்டறிந்து பயன்படுத்தினர். எகிப்தியர் ஒன்று முதல் பத்துவரையிலான எண்களைக் குறிக்க நேர்கோடுகளைப் பயன்படுத்தினர். பத்திற்கு மேற்பட்ட நூறு. ஆயிரம், பத்தாயிரம் போன்ற பெரும் எண்ணிக்கைகளைக் குறிக்கத் தனிக்குறியீடுகள் பயன்படுத்தப்பட்

தமிழ் உட்பட பண்டைய மொழிகளில் எண்கள்

டன. இவ்வாறே ரோமானியர்களும் தனித்தனிக் குறியீடுகளைப் பயன்படுத்தினர். கிரேக்கர்களும் தமிழர்களும் தத்தம் மொழிகளின் எழுத்துக்களின் அடிப்படையிலேயே எண் குறியீடுகளையும் பயன்படுத்தினர். இவ்வெழுத்து முறையிலான எண் குறியீடுகளைக் கொண்டு பெருக்கல் கூட்டல் வகுத்தல் போன்ற கணிப்புக் கணக்குகளைப் போடுவது எளிதல்ல.

உலகில் கண்டறியப்பட்ட பழங்காலக் கணித எண் குறியீடுகளிலேயே மிகச் சிறந்ததாகக் கருதப்படுவது இந்தியாவில் கண்டறியப்பட்ட எண் குறியீடுகளே யாகும். ஒன்று முதல் பத்து வரையிலான 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 என்ற குறியீடுகளே அவை. இக்குறியீடுகளிலேயே மிகச் சிறந்த குறியீடாகக் கருதப்படுவது ‘0’ என்ற குறியீடேயாகும். இந்தக் குறியீட்டை எந்தக் குறியீட்டுடன் சேர்த்தாலும் அவ்வெண்ணின் மதிப்பு உயர்ந்து கொண்டே போகும். இந்த எண் குறியீடுகளை அராபியர்கள் கற்று, இதனை ஐரோப்பாவெங்கும் சென்று பரப்பினர். ஐரோப்பியர்கள் உலகெங்கும் சென்று பரப்ப, இன்று இந்த எண் குறியீடுகளே உலகெங்கும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆங்கிலத்தில் உள்ளது போன்று தமிழிலும் ஒன்றுக்குக் குறைந்த பின்னங்களைக் குறிக்கத் தனி எண் குறியீடுகள் புழக்கத்தில் இருந்து வந்தன. அவை காணி,அரைக்காணி, முந்திரி என வழங்கப்பட்டு வந்தன. இன்று அவை புழக்கத்திலிருந்து மறைந்து வருகின்றன. இந்தோ, அராபிய, ஐரோப்பிய எண் குறியீடுகளாகிய எண் முறைகளே இன்று உலகெங்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.