உள்ளடக்கத்துக்குச் செல்

இளையர் அறிவியல் களஞ்சியம்/எந்திர மனிதன்

விக்கிமூலம் இலிருந்து

எந்திர மனிதன் : மனிதர்கள் செய்ய வேண்டிய வேலைகளை அவன் துணையின்றிச்செவ்வனே செய்ய மனிதனால் உருவாக்கப்பட்ட எந்திரமே 'ரபோ' (Robot) என அழைக்கப்படும் 'எந்திர மனிதன்'. இது எஃகினால் மனிதச் சாயலில் உருவமைக்கப்படுகிறது. மின்

எந்திர மனிதன்

பொறியியல் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. இது மின் ஒளி விளைவால் இயங்கிச் செயல்படுகிறது. இதில் உள்ள ‘மின்னணு மூளை’ (Electron Brain) என்னும் பகுதி மிகக் கடினமான, நுணுக்கமான கணக்குகளைக் கூட மிகச் சரியாக விரைந்து போடும் திறன் மிக்கதாகும். இதன்முன் நிற்கும் மனிதன் கேட்கும் கேள்விகளுக்கு இது உடனுக்குடன் பதில் தரும். பெரும் மோட்டார் உற்பத்தித் தொழிற்சாலைகளில் உதிரிப்பாகங்களை முறையாக உரிய இடங்களில் பொருத்த 'எந்திர மனிதன்' பயன்படுத்தப்படுகிறது அதி நவீன முறையில் உருவாக்கப்பட்டுள்ள 'எந்திர மனித'க் கருவியைக் கொண்டு மிக நுணுக்கமான மூளை அறுவை மருத்துவம்கூட சிறப்பாகசெய்விக்கப்படுகிறது.

அன்றாட வாழ்வில் மனிதன் ஆற்ற வேண்டிய பல்வேறு பணிகளை எந்திர மனிதக் கருவி கொண்டே செய்விக்கப்படுகிறது. அமெரிக்கா போன்ற வளர்ச்சி பெற்றுள்ள நாடுகளில் தொலைபேசி இயக்கம், சாலைப் போக்குவரத்துக் கட்டுப்பாடு போன்ற அலுவல்களைக் கவனிக்க 'ரபோ' எந்திர மனிதக் கருவிகளே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.