இளையர் அறிவியல் களஞ்சியம்/ஒளிராக் கோளங்கள்
ஒளிராக் கோளங்கள் : வானில் காணப்படும் கோள்களில் இயற்கையாக ஒளிவீசித் திகழும் கோளங்கள் பல உண்டு. அவை ஒளிர் கோளங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை தாமாகவே ஒளியைப் பாய்ச்சுவனவாகும். சூரியனும் நட்சத்திரங்களும் இவ்வாறு தாமாகவே ஒளி வீசுகின்றன.
மற்றொரு வகையான கோளங்களுக்கு இவ்வாறு இயற்கையாக ஒளி வீசும் தன்மை இல்லை. இவை சூரியனிடமிருந்தும் நட்சத்திரங்களிடமிருந்தும் ஒளியைப் பெற்று மீண்டும் அவற்றைப் பிரதிபலிக்கின்றன. சந்திரனும் பூமியும் இயற்கையாக ஒளிவீசும் தன்மை இல்லாதவை. இவைகள் 'ஒளிராக் கோளங்கள்’ என அழைக்கப்படுகின்றன. எனினும், இவை சூரிய ஒளியைக் கிரகித்துப் பின் அவற்றை பிரதிபலிக்கும் தன்மையைப் பெற்றுள்ளன. வான வெளியில் சுற்றிவரும் கோளங்களில் ஒளிரும் கோளங்களை ஒளிராக் கோளங்கள் சிறிது நேரம் மறைத்து விடுவதும் உண்டு. அப் போது ஏற்படும் ஒளிர் கோள மறைவே 'கிரகணம்’ என அழைக்கப்படுகிறது. சூரிய கிரகணமும் சந்திர கிரகணமும் இவ்வாறு நிகழ்பவைகளே யாகும்.