இளையர் அறிவியல் களஞ்சியம்/கணிதம்
கணிதம் : அறிவியலின் முக்கிய பிரிவுகளாகிய இயற்பியல், பொறியியல், வேதியியல் ஆகிய துறைகளின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல சமுதாய வளர்ச்சிக்கும் இன்றியமையாத்துறையாக கணிதவியல் விளங்கி வருகிறது. கணிதவியல் பல்வேறு பிரிவினவாக அமைந்து வளர்ந்து வந்துள்ளன. அவற்றுள் எண்கணிதம் (Arithmatics), வடிவக்கணிதம் ((Algebra), வடிவகணிதம் (Geomentry), திருகோணகணிதம் (Trigonometry) என்பன சிலவாகும்.
எண்கணித வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கியவர்கள் இந்தியர்கள் எனலாம். அராபியர்களும் சீனர்களும் கிரேக்கர்களும் பெரும் பங்களிப்புச் செய்துள்ளார்கள். எண்களின் துணை கொண்டு கணக்கிடுவதே எண் கணித மாகும். சாதாரணமாக 1,2,3,4,5,6,7,8,9,0 என்ற எண்களைக் கொண்டு கணக்குப் போடப்படுகிறது. இந்த எண்முறைகளைக் கண்டறிந்து பயன்படுத்தியவர்கள் இந்தியர் என்பது வரலாறு. இவற்றுள்ளும் ‘0’ என்ற பூஜ்ய எண் குறியீட்டைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தியது கணித வரலாற்றில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும். எண் கணிதத்தின் உட்பிரிவுகளாக அமைந்திருப்பவை கூட்டல், பெருக்கல், வகுத்தல் முதலியனவாகும்.
எண்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக எழுத்துக்களைப் பயன்படுத்திக் கணக்கிடும் முறைக்கு இயற்கணிதம் (Algebra) என்று பெயர் 'R' எனும் எழுத்து ஆரத்தின் நீளம். 'D' எனும் எழுத்து விட்டத்தின் நீளம், ஒரு வட்டத்தின் விட்டம் அதன் ஆரத்தைப் போல்
இருமடங்கு எனும் உண்மையை D-2R எனக்குறிக்கப்படுகிறது. இவ்வாறு எழுத்துக்களைக் கொண்டு கணக்கிடும் இயற்கணிதத்தை எண் கணிதத்தின் சுருங்கிய வடிவம் எனக்கூறலாம்.
கணிதவியலின் மற்றொரு பிரிவான வடிவ கணிதம் கோணங்கள், பக்கங்களை அளக்க உதவுகிறது. முக்கோணம், சதுரம், செவ்வகம், நாற்கரம், வட்டம் முதலிய வடிவங்களின் பரப்பளவுகளைக் கணக்கிட்டறிய இக்கணித முறை பயன்படுகிறது. வடிவ கணிதவியலைச் சிறப்பாக வளர்த்த பெருமை எகிப்தியர்களைச் சேர்ந்ததாகும். வடிவ கணித தோற்றத்தின் மூலவராக விளங்குபவர் யூக்ளிடு எனும் கிரேக்கர் ஆவார்.
திரிகோணமிதி எனும் கணிதமுறை உயர்ந்து நிற்கும் பொருட்களின் உயரங்களை அளந்தறிய பயன்படுகிறது. வானவியல் துறையின் வளர்ச்சிக்கு அடிப்படையாக இக்கணிதவியல் முறை அமைந்துள்ளது.
ஆரியபட்டா, பாஸ்கரா போன்ற பண்டைக் கால கணிதவியல் வல்லுநர்களைப் போன்ற திறம்பட்ட கணிதவியல் மேதையாக அண்மைக் காலத்தில் வாழ்ந்து மறைந்தவர் இராமானுஜம் ஆவார்.