இளையர் அறிவியல் களஞ்சியம்/காய்ச்சல்

விக்கிமூலம் இலிருந்து

காய்ச்சல் : சாதாரணமாக மனிதர்களுக்கு உண்டாகும் நோய் அறிகுறிகளுள் மிக முக்கியமானது காய்ச்சலாகும். சாதாரணமாக நம் உடலின் வெப்ப நிலை 96.40 ஃபாரன்ஹீட் ஆகும். ஆனால், காய்ச்சல் ஏற்படும்போது உடலின்வெப்பநிலை1050 ஃபா.ஹீட்வரை ஏறும் உடலில் ஏற்படும் வெப்ப அளவின் உணர்வு அலகைக் கொண்டு காய்ச்சலின் கடுமையைக் கணிப்பர். வெப்பஅளவு 1060-க்கு ஏறினால் அது காய்ச்சலின் உச்சத்தைக் காட்டுவதாக ஆகும். வெயில் அதிர்ச்சி (Sun Stroke) நோய் உண்டாகும் போது உடலின் வெப்பம் 1150 வரை ஏறுவதுண்டு.

உடம்பின் வெப்பநிலையை சமச்சீர் செய்வது மூளையில் உள்ள ஹைப்போதலாமஸ்ஸின் பணியாகும். காய்ச்சலின்போது நுண்ணுயிர் கிருமிகளால் ஹைப்போதலாமஸ் செயலிழப்பதால் உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. எனவே, உடம்பின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது தான் காய்ச்சல்.

காய்ச்சல் ஏற்படும்போது உடல் உறுப்புகளில் பல்வேறு கோளாறுகள் உண்டாகும். உடலின் உட்புறம் வெப்பம் மிகுதியாயிருந்தாலும் வெளிப்புறம் குளிர் அதிகமாக இருக்கும். நாடித்துடிப்பு வேகமாக இருக்கும். நாடித்துடிப்பு வேகமாக இருக்குமெனினும் நாடித்துடிப்பு பலமிழந்திருக்கும். காய்ச்சல்காரருக்கு உணவின் மீது விருப்பம் இருக்காது. பசியுணர்வு இல்லாமற் போகும். இதனால் மலச்சிக்கல் உண்டாகும். வெளியாகும் சிறு நீரின் அளவு குறையும். உடலில் ஹார்மோன், என்ஸைம், இரத்த உயிரணுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகும். ஈரல் சரிவர வேலை செய்யாது. பித்தநீர் சுரப்பும் குறைந்துவிடும். சில சமயம் அடியோடு சுரப்பது நின்றுவிடுவதும் உண்டு. மேற்கூறிய காரணங்களால் உடல் பலவீனப்படும். காய்ச்சல் அதிகமாகும் போது மயக்கமும் உண்டாகும்.

காய்ச்சல் பல்வேறு காரணங்களால் ஏற்படுகின்றன. சில வகை காய்ச்சல் நோய்கள் தொற்றும் தன்மையுள்ள கிருமிகளால் உண்டாகின்றன. இத்தகைய காய்ச்சல்கள் ஒருவரிடமிருந்து மற்றவர்க்கு தொற்றுவதும் உண்டு. சிலவகைக் காய்ச்சல்கள் உடல் உறுப்புகளிலோ அல்லது திசுக்களிலோ ஏற்படும் அழற்சியினால் ஏற்படுவதும் உண்டு. இதற்கு உதாரணமாக முடக்குவாதக் காய்ச்சலையும் மூளைக்காய்ச்சலையும் குறிப்பிடலாம். மூளைக்காய்ச்சல் உண்டாக்கும் கிருமிகள் பன்றிகள் மூலம் வளர்ந்து பெருகி. பின் மனிதர்களுக்குத் தொற்றுகின்றன. இது சிறுவர்களையே அதிகம் பீடிக்கின்றன.

சாதாரணக் காய்ச்சல் ஒரு சில நாட்களில் குணமாகிவிடும். காய்ச்சல் ஏற்பட்டு அது பல நாட்களுக்குத் தொடருமானால் அதைத் 'தொடர்காய்ச்சல்’ என்பர். சில காய்ச்சல் ஏற்பட்டு, பின் சாதாரண வெப்பநிலையான 96.40 -க்கு இறங்கி, பின் மீண்டும் பழைய உயர்நிலைக்கு ஏறுமானால் அது 'முறைக் காய்ச்சல்’ என்று அழைக்கப்படும். இவ்வாறு அடிக்கடி ஏறுவதும் இறங்குவதுமாக இருப்பின் அது இடைவிட்டு வரும் காய்ச்சலாகக் கருதப்படும்.காய்ச்சல் ஏற்பட்டு பின்96,40க்கு இறங்கி சில நாட்கள் கழித்து மீண்டும் காய்ச்சல் ஏற்படுமானால் அது ‘மறுக்களிக் காய்ச்சல்’ என்று கூறப்படும்.

காய்ச்சலுக்கு மருத்துவம் செய்யும் முன் அது எதனால் ஏற்பட்டது என்பதைத் தெளிவாகத் தெரிந்து, பின் அதற்கேற்ப மருத்துவம் செய்ய வேண்டும். எனவே மருத்துவர் மூலம் குணமாக்குவதே சிறந்தது.

சாதாரணமாக, மலேரியா, டைபாய்டு, செங்காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல், மூளைக்காய்ச்சல், டைபஸ் காய்ச்சல் போன்ற காய்ச்சல் நோய்கள் நோய்க்கிருமிகளால் ஏற்படுபவையாகும்.

மனிதர்களைப் போலவே கால்நடைகளுக்கும் காய்ச்சல் ஏற்படுவதுண்டு.