இளையர் அறிவியல் களஞ்சியம்/நாக்கு

விக்கிமூலம் இலிருந்து

நாக்கு : நாம் உண்ணும் உணவை பற்களுக்கிடையே நன்கு சுழற்றித் தந்தும், நம் விருப்பத்திற்கேற்ப ஒலிகளை எழுப்பி நன்கு பேசவும் உதவும் உறுப்பு நாக்கு ஆகும். நாக்கின் இயக்கம் நம் உடல் இயக்கத்தின் இன்றியமையாத அங்கமாகும்.

நம் உடலில் என்ன நோய் ஏற்பட்டாலும் அதன் அறிகுறி நாக்கில் பல்வேறு நிறங்களாகப் படிகின்றன. என்ன நோய் என்பதையும் நோயின் தன்மையையும் அதில் ஏற்பட்டுள்ள நிற வேறுபாட்டைக் கொண்டே மருத்துவர் எளிதாகக் கண்டறிகிறார்.

நாக்கு முழுக்க முழுக்க தசைநார்களால் ஆனதாகும். நாக்கின் அடிப்பகுதி எலும் போடு இணைந்துள்ளது. நாக்கில் எலும்பு ஏதும் இல்லாததால் அதை எளிதாக நீட்ட, அளைக்க, மேல்நோக்கி அன்னத்தை அழுத்த முடிகிறது. நாக்கின் மேல் தசை எப்போதும் ஈரமாகவே இருக்கும். காரணம் இதன்மீது ஒருவித வழுவழுப்பான நீர் சுரந்து கொண்டே யிருப்பதாகும். நாவின் இருபுறமிருந்தும் உமிழ்நீர் சுரந்து கொண்டேயிருக்கிறது.

உணவுப் பொருட்களின் சுவையுணர்திறன் நாக்குக்கு மட்டுமே உண்டு. நாக்கின் நாற்புற ஓரங்களிலும் சுவையறியும் திறன் கொண்ட அரும்புகள் சுமார் 9000 எண்ணிக்கையில் உள்ளன. இவை 'சுவை அரும்புகள்’ (Taste buds) என்றே அழைக்கப்படுகின்றன. இந்த அரும்புகள் மீது உண்ணும் உணவுபட்ட

நாக்கின் அமைப்புத் தோற்றம்

வுடனேயே அதன் சுவைத்தன்மையை மூளைக்கு அனுப்பி, அதன் மூலம் முழுச் சுவையை நாம் உணரச் செய்கின்றன.

அதிலும் நாக்கில் ஒவ்வொரு பகுதியிலுள்ள அரும்புகள் ஒவ்வொரு வகையான சுவையை உணரும் தன்மையுடையனவாக அமைந்துள்ளன. நாக்கின் முன் பகுதியிலுள்ள அரும்புகள் இனிப்புச் சுவையை எளிதாக அறிந்து உணர்த்துகின்றன. அவ்வாறே நாக்கின் பின் பகுதி கசப்புச் சுவையை உணர்கின்றன. நாக்கின் இருபுறங்களிலும் உள்ள அரும்புகள் உப்புச்சுவை, புளிப்புச்சுவை போன்ற சுவைகளை உணர்கின்றன. நாக்கின் நடுப் பகுதிக்கு சுவயுணர் திறன் இல்லை. ஏனெனில், அப்பகுதியில் சுவை அரும்புகள் ஏதும் இல்லை.

சில சமயம் உடலில் உண்டாகும் நோயின் தன்மைக்கேற்ப நாக்கில் புண்கள் ஏற்படுவதுண்டு. மருத்துவரிடம் காட்டி தக்க மருந்து உண்டு இப்புண்களைப் போக்கிக் கொள்ள வேண்டும்.