இளையர் அறிவியல் களஞ்சியம்/நியூட்டன்

விக்கிமூலம் இலிருந்து

நியூட்டன் : உலகப் பெரும் அறிவியல் மேதைகளுள் ஒருவர் நியூட்டன். இவரது முழு இயற்பெயர் ஐசக் நியூட்டன் என்பதாகும். இவரது அறிவியல் ஆற்றலையும் கண்டுபிடிப்புத் திறனையும் பாராட்டி இங்கிலாந்து அரசு இவருக்கு அளித்த ‘சர்’ பட்டத்தையும் இணைத்து இவரை 'சர் ஐசக் நியூட்டன்' என்றே உலகம் அழைத்து வருகிறது.

சிறந்த கணிதப் பேராசிரியராக விளங்கிய இவரை ராயல் சொசைட்டி 1672இல் தன் உறுப்பினராக ஆக்கிக் கொண்டது. இவர் 1704இல் வெளியிட்ட நிறம் மாறும் ஒளி பற்றிய நூல் புகழ்பெற்ற படைப்பாகும். இவரது இயற்பியல் கண்டுபிடிப்புகளைப் பாராட்டி ஆங்கில அரசு இவருக்கு ‘சர்’ பட்டமளித்துச் சிறப்பித்தது.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இவர் இளமை முதலே கணிதத்திலும் வானவியல் ஆராய்ச்சியிலும் பெருவிருப்பமுடையவராக விளங்கினார். அறிவியல் ஆய்வுக்குத் தேவையான பல அடிப்படை உண்மைகளைக் கண்டறிந்து கூறிய பெருமை இவருக்குண்டு.

ஒரு சமயம் ஆப்பிள் மரம் ஒன்றின்கீழ் அமர்ந்திருந்தார். அப்போது ஒரு ஆப்பிள் பழம் மரத்தினின்றும் கீழே விழுந்தது. இதைப் பார்த்த நியூட்டன் மரத்திலிருந்து ஆப்பிள்

ஐசக் நியூட்டன்

பழம் ஏன் கீழ் நோக்கியபடி விழவேண்டும்: என்பதைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்தார். அச் சிந்தனையின் விளைவாக அவர் கண்டு பிடித்ததே ‘புவியீர்ப்புச் சக்தி’ எனும் புதிய இயற்பியல் தத்துவம். இதன் அடிப்படையிலேயே பூமி, சந்திரன், நட்சத்திரங்கள் ஈர்ப்பாற்றலால் ஒன்றோடொன்று மோதாமல் இயங்கி வருகின்றன என்ற உண்மையையும் கண்டறிந்தார். இதன்பிறகு ‘ஈர்ப்பாற்றல்’ பற்றிய புதிய தத்துவங்களையும் கோட்பாடுகளையும் விரிவாக வகுத்தமைத்தார்.

இக்கோட்பாடுகளின் அடிப்படையில் தொடர்ந்து ஆய்வு செய்து இயக்கவியல் (Dynomics), நிலையியல் (Statics) என்னும் புதிய இயற்பியல் தத்துவப் பிரிவுகளைக் கண்ட்றிந்து கூறினார். பொருள்களின் இயக்கம் எந்தெந்த வகையில் அமைந்துள்ளன என்பதைப் பற்றி முனைப்பாக ஆய்வு செய்து மூன்று வகையான விதிகளை வகுத்தார். அவை நியூட்டன் இயக்கவிதி (Newton’s Laws of Motion) என்ற QuuTr(350Gu அழைக்கப்படுகிறது.

இவரது கண்டுபிடிப்புகளுள் குறிப்பிடத்தக்க மற்றொன்று 'பிரதிபலிப்புத் தொலை நோக்காடி' (Reflecting Telescope) என்னும் தொலைநோக்குக் கருவிக் கண்டுபிடிப்பாகும். இக்கண்டுபிடிப்புக்குப் பிறகே வானவியல் ஆய்வுகள் விரைவு பெறலாயின.