உள்ளடக்கத்துக்குச் செல்

இளையர் அறிவியல் களஞ்சியம்/மலை

விக்கிமூலம் இலிருந்து

மலை : உலகெங்கிலும் சிறிதும் பெரிதுமாக பல்லாயிரம் மலைகள் ஆங்காங்கே பரவி அமைந்துள்ளன, இவகள் எல்லாம் தொடக்கக் காலத்தில் பூமியின் உள்ளும் புறமும் ஏற்பட்ட பல்வேறு மாறுபாடுகளால் உருவானவைகளாகும். இவை பல்வேறு வடிவிலும் வகையிலும் உலகெங்கும் அமைத்துள்ளன. இவைகள் அன்றும் மாறுதல்கட்கு உட்பட்டன. இன்றும் மாறுதல்களுக்கு ஆட்பட்டு வருகின்றன. இவை நாளையும் மாறுதல்களுக்கு ஆளாகும்.

சாதாரணமாக மலைகளை இருபெரும் பிரிவுகளாகப் பிரிப்பர். முதல் பிரிவு திரட்சி பெற்ற மலைகளாகும். இரண்டாம் பிரிவு உருக்குலைந்த மலைகளாகும். எரிமலை போன்ற வை திரட்சி மலைகளாகும். உருக்குலைந்த

மடிப்பு மலை

மலைகள் என்பவை பூமியின் புறணியில் ஏற்படும் உருக்குலைவு மாற்றங்களுக்கேற்ப வடிவெடுப்பவைகளாகும். இவை இரு வகையினவாகும். ஒன்று பெயர்ச்சி மலை, மற்றொன்று மடிப்பு மலை ஆகும். உலகில் உள்ள மாபெரும் மலைகள் அனைத்தும் மடிப்பு மலைகளேயாகும். இமய மலையும் மடிப்பு மலைகளேயாகும்.

மலையேறுதல்

தேய்வு மலை என்பவை முன்னொரு காலத்தில் உயர்ந்த பீடபூமிகளாக இருந்து பின்னர் காலப்போக்கில் மழை நீரோட்ட அரிப்பினாலும் காற்றாலும், தேய்ந்து உயரம் குறைந்த மலைகளாகவும் மலைத் தொடர்களாகவும் நிற்பவைகளாகும்.