உள்ளடக்கத்துக்குச் செல்

இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்/காதல் என்றால் என்ன! பூதமா? பேயா?

விக்கிமூலம் இலிருந்து

பன்னிரண்டாவது அதிகாரம்


காதல் என்றால் என்ன ! பூதமா? பேயா?

த்தகைய பெருந்தன்மையான குணம் வாய்ந்த சத்தியநாதரை, நான் லண்டன் வந்த ஒரு வாரத்துக்கெல்லாங் கண்டேன். அது என் சிற்றப்பா என்னைக் கலாசாலையில் சேர்த்து விட்டுச் சென்ற சமயம். அவரும் மேற்படிப்புக்காக லண்டனுக்கு வந்ததாகத் தெரிந்தது. அவர்

தெருவில் என்னை எதிர்பாராதவாறு சந்தித்ததும், பெருமகிழ்ச்சி கொண்டார். அத்துடன் நான் எம். ஏ. வாசிக்க கேம்பிரிட்ஜ் கலாசாலையில் சேர்ந்ததையறிந்து பெரிதும் பாராட்டி என்னை உற்சாகப் படுத்தினார். நாங்கள் பேசிக் கொண்டே நடந்து தேம்ஸ் நதிப் பக்கமாக வந்தோம். அங்கு ஆங்கில மக்கள் பலர் தங்கள் மனைவி மக்களோடு குதூகலமாக வந்து பொழுது போக்கிக் கொண்டிருந்தனர். சிலர் படகுகளிலும், ஸ்டீம் லாஞ்சுக்ளிலும் உல்லாசமாகப்
காதல் என்ருல் என்ன பூதமா? பேயா? 201

போய்க் கொண்டிருந்தனர். அங்கும் ஏழைகளின் கூட் டம் என் கண்களுக்குக் காட்சி யளித்தது. நதியில் யாரே னும் தவறியோ, தற்கொலே செய்துகொள்ள வேண்டு மென்ற நோக்கத்துடனே விழுந்துவிடாமல் கவனிப்பதற் காகப் போலீஸார் அங்கு சுற்றிக்கொண்டிருந்தனர்.

எனக்குப் படகில் ஏறி நதியைச் சுற்றிவர வேண்டு. மென்று ஆசை யுண்டாயிற்று. அதைச் சத்திய காதரிடம் குறிப்பிடவே, அவர் ஒரு படகை வாடகை பேசி யமர்த்தி ர்ை. சாங்கள் இருவரும் எறியபின், சத்தியநாதரே பட கைத் துடுப்புக்களால் தள்ளிச் செலுத்தினர். நான் அந் நதியில் மிதந்து மீன்களைக் குத்தித் தின்று விளையாடிக்

கொண்டிருக்கும் நாரைகளையும், வாத்து முதலிய பறவை களையும் பார்த்துக் கவனித்தவண்ணம் ஏதோ உரையாடிக் கொண்டிருக்கையில் சத்திய நாதர் என்னைக் கனிவாக

14 202 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

நோக்கி, புவன நீண்ட நாளாக கான் உன்னே ஒன்று: கேட்கலா மென்று கினைத்து வருகிறேன். ஆளுல், அதைக் சொல்ல இதுவரை எனக்குச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. இப்போது கூறலாமா?” என்று கேட்டார். .

என்ன தெரிவியுமே!’ என்றேன் நான் வேருே.ரிடத் தில் கவனத்தைச் செலுத்திய வண்ணம்.

சொன்னல் ஏளனஞ் செய்ய மாட்டாயே!” எதற்காக எளனம்?” 1.இல்லை நான் கூறப்போகும் விஷயம் அத்தகையது, 發 ஆகாயத்தில் பறக்கிருய். நான் தரையில் இருக்கிறேன். எனவே உன்னிடம் விஷயத்தைச் சொல்லவுத் துணிவேற். படவில்லை. i கமிஸ்டர் நாத்" நீர் கூறுவது வேடிக்கையாக இருக் கிறதே! நாம் இருவரும் படகில் தானே இருக்கிருேம். ஆகாயத்தில் நான் பறக்கவில்லையே!-என்னமோ சொல்ல வேண்டுமென்று கூறிவிட்டு ஏதேதோ கூறுகிறீரே!” என்று வினவினேன். . - கம்மிருவருக்கு முள்ள தகுதியின் தார தம்மியத்தைக் குறிப்பிட்டேன். புவனl-அதிருக்கட்டும் நான் சொல்ல. வந்த தென்னவென்முல்........ ........"என்று சத்தியநாதர் இழுத்தார். - . . நான் பதட்டத்தொடு, இவ்வளவு தயக்க மேன் நாத் என்ன அப்பேர்ப்பட்ட விஷயம்! தாராளமாய்ச்சொல்லும் என்று கூறினேன். . .

கா-ன்-உ-ன்-னே-க்-காதலிக்கிறேன்; அதை Qಹಿ ಎTur புவஞ' இச்சமயம் அவர் முகம் அடைந்த மாறுதல் எவ்விதம் வருணிப்பேன்! o: காதல் என்ருல் என்ன பூதமா? பேயா? 203

“என்ன என்னேக் காதலிக்கிறீரா? அப்படி யென்ருல் என்ன அர்த்தம்' என்று அறியாமையோடு கேட்டேன்.

"நான் உன்மீது காதல்கொண்டிருக்கிறேன். அது பல நாட்களாக நத்தைபோல் என் மனதில் ஊர்ந்து வளர்ந்து சில நாட்களாக என்னேக் கவிந்துகொண்டிருக்கிறது.”

'இதென்ன காதல்! இந்தக் காதல் என்ற வார்த்தை புத்தகங்களில் அடிக்கடி உபயோகிக்கப்பட்டு வருவதைப் பார்த்திருக்கிறேன்; பலர் கூறவுங் கேட்டிருக்கிறேன். ஆனல் அச்சொல்லுக்கு அர்த்தமென்னவென்று தான் எனக்குத் தெரியவில்லை-மிஸ்டர் நாத் நீர் இப்போது கூறுவது என்னவென்று எனக்கு விளங்கவில்லை. தெளி வாகக் கூறும்” என்று கூறினேன். -

சத்தியசாகர் ஆச்சரியத்தோடு, காதல் என்ற வார்த் தைக்கு அர்த்தங் தெரியாதா?-சரி நான் உன்னிடம் அன்புகொண்டிருக்கிறேன். நீயும் என்பால் அன்புகொள்ள வேண்டு மென்று கேட்டுக்கொள்ளுகிறேன்,” என்று சொன்னர்.

கான் உம்மிடம் அன்பாகத்தானே இருக்கிறேன்? இன்னும் என்ன அன்பு கொள்ளவேண்டும்?'

இந்த அன்புக்கும் சான் வேண்டும் காதலுக்கும் வித்தியாச முண்டு. அதனுல்தான் முதலிலேயே காதல் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தினேன்.”

அன்புக்கும் காதலுக்கும் என்ன வேற்றுமை'

'அன்பு என்பது ஏதோ ஒரு காரணம் பற்றி உண்டா கும் விசுவாசமாகும். காதல் எக்காரணமுமின்றி ஆண் 204 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

பெண்களிடத்து எழும் நேசமாகும். இக்காலத்தில் இக் காதல் என்னும் தூய போன்பைக் கடையில் விற்கும் கத்திரிக்காப்போல் மலிவாக ஆக்கி விட்டார்கள். ஒரு வாலிபன் ஒரு பெண்ணிடத்துக் காணப்படும் அழகையோ கல்வியையோ, பொருளையோ கருதி அவள்மீது மோகங் கொள்ளுகிருன். அவைகளில் அவன் விரும்பிய பொருள் மறைந்துவிட்டதும் உடனே அப் பெண்ணின்பால் வைத்த ஆசையை ஒழித்துவிடுகிருன். ஆகையால் அது ஒருவித சுயநல ஆசையே தவிர வேறில்லை. காதலோ அப்படிப் பட்டதன்று. அழகுக்கோ பணித்துக்கோ கல்விக்கோ அல்லாது ஒரு பெண்ணே அவளுக்காகவே ஒரு வாலிபன் காதலிப்பது காதல் ஆகும். அது எப்போதும் கிரந்தரமாக இருக்கும். எக்காரணத்தை முன்னிட்டும் காதல் அழியாது. அவ்விதக் காதலேயே நான் உன்னிடங் கொண்டிருக் கிறேன். அத்தாய காதலையே உன்னிடமும் நான் எதிர் பார்க்கிறேன். இப்போது தெரிகிறதா புவஞ?- என் னைக் காதலிக்கிருயா?” என்று கேட்டார். - -

இதுவரை சாவதானமாகக் கேட்டு வந்த நான் கொல் வென்று சிரித்து, காதல் என்பதன் தன்மை இதுவே யென்ருல், அது ஏளனஞ் செய்யவேண்டியதே காதல் கொள்வதற்குக் காரணமில்லையாம். தான் அறியாப் பேயாட்டக்கானம். பேஷ் மிஸ்டர் நாத் அவ்வித பைத்தியக்காரத்தனத்தை விட்டொழித்துவிடும்” என்று யோசனை கூறினேன். . . . .

சத்தியாசர் என் உள்ளத்தில் வேகுன்றிப் போ யிருக்கும் அக்காதலே கான் எவ்வாறு விட்டொழிக்க முடி பும்' என்க.இாக்கமாகச் சொன்னர். காதல் என்ருல் என்ன பூதமா பேயா? 205.

நான் அலட்சியமாக என்ன நாத் என்னமோ பிதற்றுகிறீரே மனதைக் கட்டுப்படுத்தினுல் நீர் சொல்லுங் காதல் எப்படி இடங் கொள்ளும்? என்று கூறினேன்.

சத்தியநாதர், விளையாட்டாக ஏதேதோ பேசுகிருப்: புவன ஆண் பெண்களுக்கு இயற்கையாக வுள்ள இக்காக, வின் தன்மையை நீ இன்னமும் அறியவில்லை என்று தெரி கிறது. கொஞ்சநாள் போனுல் இதன் தன்மை உனக்குப் புவகுைம்” என்ருர். .

நான் பெருமிதமாக :அதெல்லாம் ஒன்றுமில்லை. வேண்டுமானல் பாரும். காதல் என்ருல் என்ன! பூதமா? பேயா? எதுவா யிருந்தாலும் நாம் வெருட்டினல் நாய் போல் ஒடிப் போகிறது. பயந்தால் தான் உம்மைத் துரத் தும்; குரைக்கும்; வெகு தாரம் தொடரும்'என்று கூறி னேன். - y

சத்தியநாதர் முகத்தில் ஏமாற்றங் காணப்பட்டது. அவர், சிறிது நாள் சென்ருல், இப்போது நீ அலட்சியஞ், செய்யும் காதலின் தன்மையை உணர்வாய். நீ இப்போ, திருப்பது போன்றே எஞ்ஞான்றும் கன்னிகையாக இருக்க முடியாது என்பது மட்டும் நிச்சயம். எனது எதிர்கால வாழ்க்கைக்கு ஏற்ற தோழியாக நீ இருப்பதற்கு ஏற்றவன் என்று கருதியே உன் காதலை வேண்டி நிற்கின்றேன். உன், லுடன் எனக்குக் காதல் தொடர்பு எற்படாவிடில் என், வாழ்க்கை வெறும் பாலைவனத்தைப்போல் பாழ்தான். இதையெல்லாம் யோசித்துப் பார்த்து மற்ருெருநாள் உனது உள்ளக் கருத்தை எனக்குத் தெரிவிக்க வேண்டு, கிறேன். என்ன சொல்லுகிருப் புவன?” என்று.தழுதழுத்த குரலில் கூறினுர், 206 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

அவர் மன நிலையை யறியாத கான் குறும்பு மதியால் அப்பேச்சையலட்சியமாக கினைத்து. அதற்கென்ன அவ சரம்? பின்னர் யோசிக்கலாம். மிஸ்டர் நாத்: பொழுது சாய்ந்துவிட்டது; போகலாம் வாரும்” என்று கூறிவிட் டுப் படகு கரையை யடைந்ததும் அவருடன் கீழிறங்கிச் சென்றேன். -

பொருள் விரும்பி, குலம் விரும்பி, கலம் விரும்பி, அழகு விரும்பிப் பொய்க் காதல் பேசினவர்க்ளேயே நான் பெரிதாக அச் சமயம் மதித்தேனே யொழிய, அருள் அரும்பி என்னை விரும்பிய சத்திய காதரைச் சட்டை செய்தேனில்லை. அத் தவறை இப்போது நன்முக உணரு கிறேன். அதற்குரிய தண்டனையையும் நன்ருக அநுபவிக் கிறேன். சத்தியநாதர் என்னிடங் கொண்டிருந்த உண்மைக் காதலின் தன்மையை இப்போது நினைத்தாலும் என் மனதை வாள் போட்டு அறுக்கிறது. என்னிடம் அவர் பொருள் பூஜை புகழ் வேண்டவில்லை. ஒரு மொழி வேண்டினர். உரைக்க மறுத்தேன் பாவி காதலிக்கிறேன் என்னும் மொழி யையே அவர் பெரிதும் விரும்பினர். பிச்சி யான் பேசி னேன் இல்லை. இனி யென் செய்வத? அவர் என்ன நினைத் தாரோ தெரியவில்லை........என்ன நினைத்திருப்பார்? எனது இறுமாப்பைக் கண்டு அவர் வெறுத்திருப்பார். வேதனைப் பட்டிருப்பார். வெறும் வஞ்சகம் நிறைந்த உள்ளமுடைய வள் என்று கருதியிருப்பார். ஆகையால் தான் அவர் அச் சம்பவத்துக் கப்புறம் என்னைக் காணவில்லை நான் எங் ドリーやジ・ミ: தேடி பகலந்தும் அவர் இன்றுவரை என் கண் வேயில்லை. எங்கு சென்ருசோ! ஏது ஆகுரோ? ణ్డు அவ் வுத்தமரை-சத்தியநாதரை-நான்-பாவி பாகிய கான்-இப்போது என் கினைத்தேன்;.ஆஹா, காதல் என்ருல் என்ன! பூதமா? பேயா? 2O7

ஆl-' என்று கூறியவண்ணம் அப்படியே அசைவற்று. உட்கார்த்துவிட்டாள். அதற்குமேல் அவளுக்குப் பேச காவெழவில்லே போலும் அவள் கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக வழிந்தது. முகத்தை கைகளால் மூடிக்கொண்டு தேம்பித் தேம்பி யழுதாள். இங்கிலேபில் அவ்விரப் பெண் மணியைப் பார்க்க என்னுல் சகிக்கவில்லை. அத்துணை பரி தாபகரமா யிருந்தது. -

புவனசுந்தரி - அக்கிலேயைச் சமாளித்துக்கொண்டு மேலே பேசுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு மேலாயிற்று. பிறகு அவள் மீண்டும் பேசத் தொடங்கினுள். நண்பரே! எனது துன்ப வாழ்க்கையைச் சொல்லி உம்மையும் கான் துயரத்துக்காளக்குகிேறன். இருப்பினும் அதைப் பாராட் டாது மனம் பொறுப்பீரென்ற நம்பிக்கை யோடேயே மேலே கூறக் தொடங்குகிறேன். நான் என் வாழ்க்கை வரலாற்றில் சொல்ல வேண்டிய பகுதி ஒரு சிறிதே யிருக் கிறது. அப்பகுதி இதுவரை கூறி வந்தவைகளைக் காட்டி லும் கொடுமை நிறைந்ததாகவும், உலகத்தின் உண்மைச் சொரூபத்தை வெளிப்படுத்தக்கூடியதாகவும் இருக்கும். துன்பத்தின் எல்லயைக் கடந்த எனது வாழ்க்கையின் இறு திப் பகுதியைக் கேட்டால், ஒரு வேளை உமது நெஞ்சம். வெடித்துவிடுமோ என்றும் அஞ்சுகிறேன்...........உம் ...........மோட்டார் விபத்துக் காளானதற் கப்புற்ம் ஜான் கில்பர்ட்டுக்கும் எனக்கும் மிகவும் அங்கியோங்கிய பாவம் அதிகமாய்விட்டது. எங்களது நெருக்கமான நட்பைக் கண்டு பல மாணவ மாண்விகள் பொருமைகூடக் கொண். டார்கள். லண்டன்மா நகரில் நாங்கள் சுற்றிக் திரியாத இடமில்லை. போகாத் தியேட்டர், கிளப்புகள் இல்லை. காங்கள் அனுபவிக்காக இன்பமில்லை. உலகத்தில் மக்: 208. இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

அதிலும் நவநாகரிக மக்கள்-அனுபவிக்க வேண்டிய இன்பம் எவ்வளவுண்டோ அவற்றில் ஒன்றைக் கூட நாங் கள் பாக்கியாக விடவில்லை. இவ்வளவுக்கும் ஆகும் செல. வெல்லாம் என்னுடையதே. ஆரம்பத்தில் தான் ஜான் கில் பர்ட் சிறிது பணஞ் செலவு செய்தான். எனக்கு மாதா மாதம் தந்தையிட மிருந்து வரும் பணமெல்லாம் காலேந்து நாட்களுக்குக் கூட வருவதில்லை. எனக்குப் பணம் வேண் டிய போதெல்லாம் என் தந்தைக் கெழுதி உடனே தருவித் துக்கொள்வேன். பணஞ் செலவாவதைப் பற்றிய கவலேயே எனக்குக் கிடையாது. நான் சிரமப்பட்டுச் சம்பாதித்தால் தானே அப்பணத்தின் அருமை எனக்குத் தெரியும்.

ஜான் கில்பர்ட், என்னைப் பணஞ் சொரியுங் தேவதை. யென்றே கருதி வந்தான். என்னைச் சதாகாலமும் புகழ்ந்து பேசுவதுதான் அவனுக்கு வேலையாய்ப் போய்விட்டது. முதலில் இம்மாதம் சென்ன்ைக்குப் போகிறேன் வருகிற மாதம் செல்கிறேன் என்று என்னிடங் கூறிவந்த அவன் எட்டு மாதங்களுக்கு பேலாகியும் போகவேயில்லை. மேலும் அவன் லண்டனில் எங்கிருக்கிருன்; என்ன செய்கிருன் என்ற விஷயமே மர்மமாயிருந்தது, அவன் சொல்வதுதான் எனக்குக் தெரியும். இருந்தாலும், இகைப்பற்றியெல்லாம் நான் சிந்திப்பதே யில்லே, அதற்கு அவகாசமுங் கிடையாது. அது "கிற்க. • -- . ... . - - - -

ஒருநாள் நான் ஹாஸ்டலி விருந்து கலாசாலைக்கும் போகத் தயாராய்க் கொண்டிருக்கையில், ஹாஸ்டல் பியூன் எனக்குத் தந்தி வந்திருக்கிறது என்று தெரிவித்தான். நான் பதை பதைப்படைந்து வெளியே வந்ததும் தந்திச் சேவகன் தந்தி யொன்றை நீட்டினன். அது எங்கிருந்து வந்திருக்கும் என்ன செய்தியைத் தாங்கி வந்திருக்கிறதோ என்ற காதல் என்ருல் என்ன ! பூதமா? பேயா? 209"

எண்ணத்தோடு, நடுங்கிய கையால் தந்தியை வாங்கினேன். அதனுடன் தந்தி மணியார்டரும் வந்தது. அவசர அவசர மாக அவ்விடத்தி லேயே பிரித்துப் பார்த்தேன். அதில் பின் வ ரு மா ற

காணப்பட்டது:

  • • .ފޯދގ' "மிஸ் புவனசுந்தரி, ് மிகவும் நெருக் జ్ఞప్త கடியான நிலைமை. 参 விஷயம் இத் தந்தி இ. யில் விவரிக்க முடி <ޚަ 缀

யாதது. தந்தி மணி யார்டராக 500 ரூ. பாய் அனுப்பி யிருக் கிறேன். உடனே .ெ ச ன் னே க்கு க் திரும்பி வரவும். அவ

சரம்.

தணிகாசலஞ்

செட்டியார்.'

இத் தந்தியைப் படித்ததும் என் மனம் என்னென்ன வெல்லாமோ எண்ணி ஏங்கியது. கலாசாலைக்குப் போப் வந்த பிறகு, ஊர் செல்வதைப்பற்றி யோசிப்பதா? அல்லது அப்போதே ஊருக்குப் போவதற்குரிய ஆயத்தங்களைக் செய்வதா? இவ்விரண்டில் எதைக் செய்வது உசிதம் , ~210 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

என்று எனக்குத் தோன்றவில்லை. எவ்வித முடிவுக்கும் வராமல் தத்தளித்துக் கொண்டிருந்தேன். நெருப்பின் மீது நிற்பவர்கள் எவ்விதம் இருக்கை கொள்ளாமல் தவிப்ப்ார் களோ அதுபோன்றே நானும் என் அறைக்கும் தாழ்வாரத் துக்குமாகப் பரபரப்போடு உலவிக்கொண்டிருந்தேன். தந்திச் சேவகன் பணத்தைக் கொடுக்கக் காத்துக்கொண் டிருப்பதையும் நான் நெடுநேரங் கவனிக்கவில்லை. என் பரி தாப நிலையைக் கண்டுதான் போலும், அவன் அவசரப்படுத் தாது தக்க சமயத்தை எதிர்பீாத்து நின்று கொண்டிருந் தான் என்று நினைக்கிறேன். கலாசாலை மணி :கண கண' வென்று ஒலிக்க ஆரம்பித்த பிறகே என் மனக் குழப்பத்தி னின்றும் விழிப்புற்றேன். மணி படிக்குஞ் சப்தங்கேட்ட தும், மாணவிகள் அவசரமாகப் புத்தகங்களை வாரி யெடுத் துக்கொண்டு ஓடினர். நான் இருக்கும் பக்கமாக ஓடிவந்த எலிஸா லாண்டி என்ற பெண்மணி எனக்காகத் தந்திச் சேவகன் காத்திருப்பதைக் குறிப்பிட்டுவிட்டுச் சென்ருள். அப்போதே அவன் பணங் கொடுக்கக் காத்திருப்பது எனக்கு நினைவுக்கு வந்தது. உடனே நான் அவனிருக்கு மிடஞ் சென்று அவன் வைத்திருந்த தந்தி மணியார்டரில் கையெழுத்திட்டு 500 ரூபாயைப் பெற்றுக்கொண்டேன்.

உடம்பு அசெளக்கியமாயிருந்த இரண்டொரு மாண விகள் தவிர, மற்றவர்களெல்லாம் கலாசாலைக்குச் சென்று விட்டனர். நான் இன்னும் எவ்வித முடிவுக்கும் வராமலே அலேந்து கொண்டிருந்தேன். இச்சமயம் ஹாஸ்டலுக்கு எதிர் பக்கத்துள்ள தெரு வழியாக ஜான் கில்பர்ட் போய்க் கொண்டிருந்தது தற்செயலாக என் கண்ணில் பட்டது. ன்னே யறியாமலே ஜான்; மிஸ்டர் ஜான் என்று என் குறிப்பறிந்த ஹாஸ்டல் பியூன் ஓடிச் காதல் என்ருல் என்ன ! பூதமா? பேயா? 21 Í

சென்று அடுத்த கணத்தில் ஜானே நானிருக்குமிடம் அழைத்து வந்தான். . . . . . . . . .

ஜான் கில்பர்ட் இயற்கையாயுள்ள புன்னகையோடு, என்ன விசேஷம் புவன மணியடித்து விட்டதே கலா சாலைக்குப் போகவில்லையா?” என்று கேட்டான். நான் அதற்கொன்றும் பதிலளிக்காமல் என் கையில் வைத்திருந்த தந்தியை அவனிடம் கொடுத்தேன். அதைப் பார்த்ததும் ஜானின் முகம் மாறுதலடைந்தது. புறப்படப் போகி முயா!” என்று அவன் தடுமாற்றத்தோடு கேட்டான்.

வேறென்ன செய்வது? நீ தான் சொல்லேன் என்றேன். நான்.

கில்பர்ட் கலே குனிந்தவண்ணம் சிறிது நேரம் ஆழ்ந்த யோசனையிலிருந்தான். பிறகு கிமிர்ந்து என்னைக் கூர்ந்து நோக்கிய வண்ணம், இத் தந்தியிலுள்ள செய்தியின் போக்கை பார்த்தால், அங்கு ஏதோ முக்கிய சம்பவம் அல் லது விபரீத நிகழ்ச்சி நேர்ந்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. ஆதலால், நீ போய்வரத்தான் வேண்டும். இதை அலட்சியப் ப்டுத்துவதற்கில்லே. நீ உடனே போய் ஹாஸ்டல் சூபரின்டெண்டிடத்தும், காலேஜ் பிரின்ஸிபா லிடத்தும் விஷயத்தைத் தெரிவித்து, இந்தியாவுக்குப் போய்வர அநுமதி பெற்றுக்கொள். நான் இதற்குள் இக் தியா செல்லுங் கப்பல் எப்போது போகிறது என்று தெரிந்து கொண்டு, உன் பிரயாணத்துக்குரிய சகல ஏற்பாடு களையுஞ் செய்துவிட்டு வருகிறேன்” என்று கூறினன். நான் அவனது யோசனையை ஆமோதிப்பதுபோல் தலே பசைத் தேன். அத்துடன் நான் 500 ரூபாயையும் அவனிடங்கக் தேன். ஜான் அதைப் பெற்றுக்கொண்டு போய்விட்டான். 212 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

லண்டன் துறைமுகத்தில் ஏராளமான கூட்டம். "வைஸ்ராய் ஆப் இந்தியா” என்னுங் கப்பல் புறப்பட இன். லும் அரைமணி நேரமே இருந்தது. பல இடங்களுக்குச் செல்வோரும் கப்பலில் ஏறிக்கொண்டிருந்தனர். நானும் ஜான் கில்பர்ட் எனக்குரிய கைப்பெட்டியைத் தாக்கிக் கொண்டுவரக் கப்பலில் ஏறினேன். பிரயாணிகளை வழி யனுப்ப வந்தவர்களான உறவினர்களும் நண்பர்களும் அவர்களோடு சிறிதுநேரம் அளவளாவி யிருந்து கடைசியா கப் பிரியா விடைபெற்றுச் செல்லுங் காட்சி காண்டோர் மனதை நீராய் உருக்குக் தன்மையதா யிருந்தது. ஜான் கில்பர்ட் என்னை மேல் தளத்திலுள்ள முதல் வகுப்பில் 56வது அறைக்கு அழைத்துச் சென்றன். எனது கைப் பெட்டியும், மற்றுஞ் சில சாமான்களும் உரிய இடத்தில் வைக்கப்பட்டன. எல்லாம் ஒழுங்கு செய்யப்பட்டபின் என்னே அவன் இரக்கமாக நோக்கினன். அப்பார்வையில் எமாற்றங் காணப்பட்டது. சிறிதுநேரம் நாங்கள் இரு வரும் ஒருவரை யொருவர் பார்த்தவண்ணம் பேசாமல் நின் ருேம். என் மனம் மிகவுங் குழம்பி யிருந்தமையால், உண் மையிலேயே எனக்கு அந்நேரத்தில் என்ன பேசுவதென்றே. தோன்றவில்லை எனவே, எங்களிடையே நிலவிய மெள னத்தை ஜானே முதலில் கலைத்தான். அவன் மெதுவாக 'காரியம் முடிந்ததும் லண்டனுக்குத் திரும்பிவிடுவா பல்லவா, புவன' என்று கேட்டான்.

திரும்பி விடாமலென்ன எனது எம். ஏ. பரிசையை கவேண்டு மல்லவா! அதற்காக வாயிலும் கட்டாயம். னே தீரவேண்டும். நான் போனதும் விசேஷ. என்று கவனித்துவிட்டு உடனே திரும்பி விடு

அறு. நான் உறுதியாகக் கூறினேன். காதல் என்ருல் என்ன பூதமா? பேயா? 213

ஜான் கில்பர்ட், திடீரென்று ஏற்பட்டிருக்கும் உனது பிரிவு எனக்கு மிகவும் மனச் சங்கடத்தை யுண்டுபண்ணி யிருக்கிறது. இரவும் பகலும், கனவிலும் கனவிலும் உன் எழிலுருவத்தையே கண்டு களித்துக்கொண்டிருக்கும் எனக்கு இந் நீண்ட காலப் பிரிவை எவ்வாறு சகித்துக் கொண்டிருப்பதென்று தெரியவில்லை. உலக அறிவு விளங் காச் சிறு பருவத்தில் நம்மிடையே வேரூன்றிய நட்பு, ராஜ தானிக் கலாசாலையில் மீண்டும் நெருங்கிய தொடற்பு ஏற் பட்டபோது செழித்து வளர்ந்தது; லண்டன்மா நகரில் அக்கட்பு காதலாகக் கனிந்தது. பழுத்துப் பலன் கூடத்தந்து 'விட்டது என்று சொன்னல் மிகையாகாது. இந்நிலையில் பிரிவு ஏற்பட்டிருப்பது பழுத்த பழத்தைப் பறித்துண்ணு முன்பு, புழுக்கள் சேர்ந்து அழுகி காறலெடுக்கும்படிச் செய்துவிட்டது, போலிருக்கிறது. இப்பிரிவினுல் நமது பிரிக்க முடியாத நட்புரிமைக்குப் பங்க மேற்பட்டு விடுமோ என்றே அஞ்சுகிறேன். நீ என்ன நினைக்கிருப் புவன!...” என்று நா தழுதழுக்கக் கேட்டான் அவன் கண்கள் கலங்கின. x

இவனது அப்போதைய நிலையைக் கண்டதும் என் மனம் முன்னேயினும் பேதுற்றது. அவன் குறிப்பிட்டபடி, இளமையில் எங்கள் நட்பு எவ்வித மிருந்ததோ அதை நான் அவ்வளவு திட்டமாகக் கணித்துக் கூறமுடியாது. ஆயினும் இப்போது, நான் அவன் பால் பேர்ன்பு கொண்டிருக்கி றேன்-அவனிடம் என் உயிரையே வைத்திருக்கிறேன் என்றே சொல்லவேண்டும். இவ்வுலகில் அவனே விட்டுஅவன் தொடர்பு இன்றி என் வாழ்க்கை இன்பமாகக் கழி யாது என்ற நிலைக்கு வந்துவிட்டேன். எனவே, எனக்கும் அவனைவிட்டுப் பிரிவது மிகவுந் துயரமாகவே இருந்தது, இவனது கிலேயைக் கண்டதும் எனது தாய் காட்டுப் பி யாணத்தை நிறுத்திவிடலாம் என்று கூட நினைத்தேன். ஏதாகிலும் சாக்குச் சொல்லித் தற்சமயம் வரமுடியாத தற்கு வருந்துகிறேன் என்று குறிப்பிட்டுக் கடிதமோ அல்லது தந்தியோ அனுப்பிவிட்டால் போகிறது என்ற எண்ணம் என் மனதில் சிறிது நேரமே ஊடாடியது. ஆனல் சென்னையில் ஏதும் சம்பவம் நேரிட்டிராமல் இவ்விதமா கத் தந்தியும் பணமும் அனுப்பியிருப்பார்களா? ஆதலால் கட்டாயம் போய்ப் பார்த்துவிட்டுத்தான் வரவேண்டும் என்று அடுத்த கணம் உறுதி கொண்டேன்.

 மனதை ஒருவாறு திடப்படுத்திக் கொண்ட கான், "அதெல்லாம் ஒன்றும் நடக்காது ஜான் உனது அச்சத் துக்கு ஆதாரமே கிடையாது! நாம் உயிரோடிருக்கும் வரை நம் நட்பை எவராலும் பிரிக்க முடியாது என்பது திண்ணம்; நான் போனதும் திரும்பிவிடுவேன். அதுவரை நீ மன. ஆறுதலடைந்திரு' என்று ஜானத் தேற்றினேன்.

ஜான் கில்பர்ட் அப்போதும் தேறுதலடையாதவன் போல் காணப்பட்டான். "புவனா!கண்ணே புவனா நான் உன்னே எவ்விதம் நேசிக்கிறேன். என்று உனக்குத் தெரியாது. ஒரு நிமிஷம் உன்னைப் பார்க்காவிட்ட்ால் உயிரே போய்விடும் போலிருக்கிறது. நான் லண்டன் வருவதற்கு முன்னர் உன்னிடம் ஏதோ பொய்க் காரணங் கூறினேனே யொழிய, உண்மையாக, உன் பிரிவைத் தாங்க முடியா மலே, நீ கேம்பிரிட்ஜ் கலாசாலையில் வாசிக்க லண்டன் செல்கிறாய் என்றறிந்ததும் உன்னைப் பின்தொடர்ந்து வந்துகிறேன் என்று இப்போது கூறுகிேறன். ஒரு வாரத்திற்கு முன் தான் எனக்கு என் சிற்றப்பாவின் மூலமாக இங்கு ஒரு முக்கிய காரியத்தை மேற் பொறுப்பு ஏற்பட்டுவிட்டது. அதைச் சில மாதங்கள்வரை கவனிக்கவேண்டி யிருக்கிறது. அது இல்லாவிடில் நான் இப்போதே உன்ைேடு இந்தியாவுக்குப் பிரயாணமாய்விடு வேன். என் செய்வது! விதி நம்மைச் சதி செய்கிறது......... ........"என்று கூறிப் பெருமூச்சுவிட்டான். - -

இவனது பிரிவாற்ருன் பேச்சு என்னே மோசமான நிலையை யடையச் செய்து வந்தது. எனவே, இங்கில மையை மேலும் வளர்த்த விரும்பவில்லை. அவன் என்னே விட்டுச் சீக்கிரம் போய்விட மாட்டானு என்று கூட எதிர் பார்த்தேன். அவனது அப்போதைய தோற்றமும் பேச்சும் என் பிரயாணத்தை எங்கு தடை செய்துவிடுமோ என்று பயந்தேன்.

கில்பர்ட் திடீரென வெறி பிடித்தவன்போல், புவஞ. என்னே மறக்கமாட்டாயே புறக்கணிக்க மாட்டாயே!. என்னேக் கைவிட மாட்டாயே! நீ சிறிது நேரத்திற்கு முன் கூறிய வார்த்தை உண்மைதான! இதே உறுதியோடு இந்தி யாவுக்குச் சென்ற பிறகும் இருப்பாயல்லவா! அங்கம் பிக்கையோடேயே நான் உயிர் வாழலாமா! ஏதோ மற் ருெரு முறை உன் வாயால் கூறு-எதோ எதோ............ . என்று கூறிக்கொண்டே கைகளே விரித்த வண்ணம் என்னே நோக்கிக் காவினன். அடுத்த கணம் நான் அவைேடு. ஒன்றி நின்றேன். அக் கிலையில் எங்களைக் காண்போர் ஒர் உயிர் ஈருடல் பெற்று ஒன்றுபட்டு இன்ப மனுபவிக்கிற, தென்றே கூறுவார்கள். கப்பல் புறப்படுவதற்கு அறிகுறி. யாகக் கடைசியில் காப்டல்ை ஊதப்படும் ஊதுகுழல் ஒலியே எங்கள் இருவரையும் வேறு பிரித்ததென்ருல், எங்க ளது அப்போதைய நிலையை எவ்வாறு வர்ணித் துரைப்ப, தென்று தோன்றவில்லை. தவிர்க்க முடியாத கிலேயில் ஜான், ன்ன்னிடம் பிரியாவிடை பெற்றுக் கொண்டு அறையை விட்டுப் படிகள் வழியாக இறங்கி ஓடினான். நானும் அரை மனதுடன், அவனை வழியனுப்பி, மேல் தளத்தில் ஓரத்தில் நின்று, அவன் கப்பலை விட்டு இறங்கும் வரை கவனித்துக் கொண்டிருந்தேன். கப்பல் புறப்படுவதற்குக் கால் மணி நேரத்துக்கு முன்னரே, பிரயாணிகளும், மாலுமிகளும், கப்பல் அதிகாரிகளும் தவிர, வழியனுப்ப வந்த மற்றவர்கள் இறங்கிப் போய் விட வேண்டுமாதலால், காப்டன் ஊது குழல் ஊதியதும் கப்பல் புறப்பட்டு விட்டது! ஆகவே, ஜான் கில்பர்ட் எவ்வளவு வேகமாக ஓடியும், கடைசியில் ஓடும் கப்பலிலிருந்து குதித்தே இறங்க வேண்டியிருந்தது. அவன் ஆழமான அவ்விடத்தில் நீந்தி, பிறகு ஒரு ஸ்டீம் லாஞ்சில் ஏறித் துறைமுக மேடையையடைந்தான். இதைப் பார்த்த போது, அவன் என்னிடம் எவ்வளவு ஆழ்ந்த அன்பு வைத்திருக்கிறான். எனக்காக எவ்வளவு தூரம் பாடுபடுகிறான் என்று மலைத்துப் போய், அவனைப் பற்றிய சிந்தனையாகவே சென்றேன்.