உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்
| This page is under construction. This text or section is currently in the middle of an expansion or major revamping. More Information and Options However, you are welcome to assist in its construction by editing it as well. Please consult the edit history should you wish to contact the person who placed this template. If this article has not been edited in several days, please remove the under construction notice. While actively editing, consider adding {{inuse}} to reduce edit conflicts. |
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
![]() |
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
தேசிய விருது பெற்ற பேராசிரியர்
பல்கலைப் பேரறிஞர்
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
M.A., M.PEd., Ph.D., D.Litt., D.Ed., FUWAI
எண்.8, போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு,
தி.நகர், சென்னை - 600 017
தொலைபேசி: 24332696
நூல் விபர அட்டவணை
| நூலின் பெயர் | : | உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும் |
| மொழி | : | தமிழ் |
| பொருள் | : | உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும் |
| ஆசிரியர் | : | டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா |
| தயாரிப்பு | : | ஆர். ஆடம் சாக்ரட்டீஸ் |
| பதிப்பு | : | ஆறாம் பதிப்பு - நவம்பர் 2007 |
| நூலின் அளவு | : | கிரவுன் |
| அச்சு | : | 10 புள்ளி |
| தாள் | : | வெள்ளை |
| பக்கங்கள் | : | 96 |
| நூல் கட்டுமானம் | : | அட்டைக்கட்டு |
| விலை | : | ரூ. 35-00 |
| விற்பனை உரிமை | : | எஸ்.எஸ். பப்ளிகேஷன் 8. போலிஸ் குவார்ட்டர்ஸ் ரோடு தி.நகர், சென்னை—600 017. |
| அச்சிட்டோர் | : | KVR பிரிண்டர்ஸ் சென்னை—600 094 |
முன்னுரை
வயிற்றுப் பிரச்சினையில் தான், நமது வாழ்வே அடங்கிக் கிடக்கிறது.
வயிற்றில் பசி இருக்கும் வரை வேலைகள் சுறுசுறுப்பாக நடக்கும். முயற்சிகளும் பரபரப்பாக இருக்கும்.
வயிறு நிறைந்து விடுகிற வசதி வந்துவிட்ட பிறகு, மனிதர்களுக்கு தானாக அசதி வந்து விடுகிறது.
அந்த அசதி தான் நாகரீகத்தால் நன்கு முற்றுகையிடப்பட்டு, மூர்க்கத்தனமான தாக்குதல்களுக்கு ஆளாகிறது. இறுதியில், வாழ்வும் வயிறும் நாகரீகத்தால் நசுங்கிப் போய் விடுகின்றன. பசியோ வயிற்றை மிரட்டத்தான் செய்யும். உணவோ வயிற்றை உருட்டி மிரட்டி விரட்டி வேதனையடையச் செய்து விடுகிறது. அதாவது அதிகமான உணவினால்.
பணவசதி வாழ்வின் மேம்பாட்டுக்கு உதவ வேண்டும். ஆனால், அது வயிற்றைக் கணப்படுத்தும் வேலையைத்தான் செய்து விடுகிறது.
பெருந்தீனி, இடைவிடாத தீனி, சுவையான தீனி என்பதாக உணவு வயிற்றுக்குள் ஒடிக் கொண்டிருக்கும் போது, ஆறு போல் இருந்த சிறிய வயிறு, அகண்ட சமுத்திரமாக மாறிவிடுகிறது.
மரம் போல் நிமிர்ந்து நின்ற தேகம், மலைபோல் பெருத்து சரிந்து விடுகிறது. நிமிர்ந்து நிற்கும் தோரணை, மனித ஜாதிக்கு மட்டுமே சொந்தமாகும்.
சாய்ந்து சரிந்து, ஓய்ந்து, ஒடிந்து போய் நிற்பது மிருகங்களுக்குரிய தோரணையாகும்.
மனித இனம் இப்படி மாறி விடக் கூடாது. உணவில் கட்டுப்பாடு வேண்டும். உடல் எடையை ஒரு சீராக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற நன்னோக்குடன்தான் இந்த நூல் எழுதப் பெற்றிருக்கிறது.
உணவு உட்கொள்ளுவதின் அவசியம், உணவுப் பொருட்களின் சக்தி விகிதம், உணவைப் பயன்படுத்துகின்ற பக்குவம், ஊளைச் சதை ஏன் உண்டாகிறது? அது தரும் ஆபத்தான விஷயங்கள் என்னென்ன? எப்படி அதிலிருந்து தப்பி வருவது போன்ற சுவையான செய்திகள் இந்த நூலில் சொல்லப் பட்டிருக்கின்றன.
‘சுவையான உணவை உண்ண வேண்டும், சுகமான வாழ்வை எண்ண வேண்டும்’ என்ற சொர்க்க மயமான இலட்சியம்தான் இந்த நூலை என்னை எழுதத் தூண்டியது.
இயன்ற வரை, மிக சுவையாக எழுதியிருக்கிறேன்.
நல்ல வாழ்வு வாழ வேண்டுமென்று விரும்புகிற ‘நலம் விரும்பிகள்’ இதனைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
வருமுன் காப்பவர் அறிஞராவார். வந்த பின் தடுப்பவர் மனிதராவார். வந்ததை வாங்கி வருந்திக் கொண்டிருப்பவர் கடையராவார்.மனிதர்கள் அறிஞர்களாக வாழ வேண்டும் என்று தூண்ட வேண்டும் என்கிற எனது இலட்சியமே, பல நூல்களாகப் பிறந்திருக்கின்றன. சிறந்திருக்கின்றன. இந்த நூலும் அதன் வழிதான் வந்திருக்கிறது.
பலர் என்னைப் பாராட்டுகிற நேரத்தில், என் வெற்றி பெற்ற இலட்சியத்தை எண்ணி வியந்து மகிழ்ந்திருக்கிறேன். என்னை வழி நடத்தும் இறைவனுக்கு நன்றி சொல்லி நெகிழ்ந்திருக்கிறேன்.
இந்த நூல் ஐந்தாம் பதிப்பாக வெளி வருகிறது. உடல் நலம் காப்பதில், உண்மையாகவே பொதுமக்கள் உளமார ஈடுபடுகிறார்கள் என்பதை அறிகிற போது, இந்த நூலின் அருமையும், பெருமையும், தேவையின் தெளிவும் நன்கு புலனாகிறது.
படித்துப் பயன் பெற்ற, பயன் பெறுகிற அனைத்து நல்லிதயங்களுக்கும், எனது நல்வாழ்த்துக்கள்.
நல்ல உடல்—நல்ல மனம்—நல்ல வாழ்வு பெற வாழ்த்துகிறேன்.
இந்நூலை அழகுற அச்சிட்ட கிரேஸ் பிரிண்டர்ஸ் மற்றும் மேலாளர் திரு. ஆர். ஆதாம் சாக்ரட்டீஸ் அனைவருக்கும் என் வாழ்த்தும் நன்றியும்.
எனது நூல்களை ஆதரித்து உதவுவோர் அனைவருக்கும் என் இனிய நன்றி.
ஞானமலர் இல்லம்
அன்புடன்
சென்னை—17
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
ஆசிரியர் அவர்கள் எழுதிய ஐந்தாம் பதிப்பின் முன்னுரை
அப்படியே வெளியிடப்படுகிறது
பதிப்புரை
விளையாட்டுத் துறை நூல்களை தமிழ் இலக்கிய உணர்வோடு எழுதி வெளியிட்ட பெருமைக்குரியவர் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா அவர்கள்.
மழலையர் பள்ளி மாணவர்கள் முதல் ஆய்வறிஞர், பட்ட மாணவர்கள் வரை அனைத்துத் தரப்பினருக்கும், பாடம் சொல்லிக் கொடுக்கும் வாய்ப்பு பெற்றவர்.
அவரே ஒரு சிறந்த விளையாட்டு வீரர் என்பதை பலமுறை தான் படித்த பள்ளி, கல்லூரிகளில் நிரூபித்துள்ளார். ஒரு விளையாட்டு வீரனாக, ஆசிரியராக, பேராசிரியராக தான் பெற்ற அனுபவங்களின் வெளிப்பாடுதான், விளையாட்டுத் துறை நூல்களை அதிக எண்ணிக்கையில் எழுத அவருக்குக் கிடைத்த வாய்ப்பு.
ஒரே துறையில், அதிக எண்ணிக்கையில் தமிழ் நூல்களை எழுதிய பெருமை டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா அவர்களையே சாரும். அவரது நூல்களை தொடர்ந்து வெளியிட வாய்ப்பு கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர். நவராஜ் செல்லையா அவர்களின் நல்லாசியுடன், அவரது நூல்களை வெளியிட மேலும் தொடருவோம்.
தங்கள் அன்புள்ள
ஆர். ஆடம் சாக்ரட்டீஸ்
பதிப்பாளர்.

