உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அடக்கம்

விக்கிமூலம் இலிருந்து

42. அடக்கம்

கதிர் நிறைந்தால் பயிர் தரையில் தொங்கும்.

-பிஷப் ரெய்னால்ட்ஸ்

இறைவனே! என்னிடம் தாழ்மையை வேண்டுகிறீர். ஆனால் நான் இன்னும் அந்த உயர்ந்த பொருளை எட்டவில்லை.

-டால்ஸ்டாய்

எல்லோர்க்கும் பிறர்க்கு எஜமானாயிருக்க ஆசை. ஆனால் எவனும் தனக்கு எஜமானனாயில்லை.

-கதே

எஜமானனா? சில வேளைகளில் குருடாயிருக்கவேண்டும். ஊழியனா? சில வேளைகளில் செவிடாயிருக்கவேண்டும்.

- புல்லர்

மனித ஜாதியின் திறமைக்குள் அடங்கும் நன்மைகள் எல்லாம், 'கீழ்ப்படிதல்' என்பதில் அடங்கும்.

-மில்

நெஞ்சில் போர் நிகழ்த்தும்பொழுதுதான் நாம் கொஞ்சமேனும் பெறுமதி அடைகின்றோம்.

- ராபர்ட் ப்ரெளணிங்

தன்னைத்தானே உயர்த்திக்கொள்பவன் தாழ்த்தப்படுவான். தன்னைத்தானே தாழ்த்திக்கொள்பவன் உயர்த்தப்படுவான்.

-விவிலியம்

வாஞ்சையும் தாழ்மையும் துன்பங்களைச் சகித்துக் கொள்வதன் மூலமே கற்றுக்கொள்ள முடியும்.

-ஜார்ஜ் எலியட்
தாழ்மையே அறிவுடைமையின் உத்தம அடையாளம்.
-ஜெரிமி காலியர்

★ ★ ★