உள்ளடக்கத்துக்குச் செல்

உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கருணை

விக்கிமூலம் இலிருந்து

21. கருணை

கருணையானது பிழியப்படுவதன்று. மழைபோல் பொழிவதாகும். அது அளிப்போனையும் பெறுவோனையும் ஆசிர்வதிக்கும். அதுவே ஆற்றல்களில் தலைசிறந்த ஆற்றல். அதுவே கடவுளின் இலட்சணம். நீதியின் கடுமையைத் தணிக்கும் கருணையுடன் கூடிய மனித சக்தியே கடவுள் சக்தியை ஒக்கும்.

-ஷேக்ஸ்பியர்

கருணை காட்டுபவன் எப்போதும் வெற்றி காண்பான்.

- ஷெரிடன்

தீயோர் கருணையையும், பேராசைக்காரர் வண்மையையும், கர்விகள் பணிவையும் விரும்புவர் - பிறரிடத்தில்.

-கோல்டன்

கடவுளின் பிரதம லட்சணம் கருணையே.

-பிளச்சர்

கோழைகள் குரூரமாய் நடப்பர் வீரர்கள் கருணை உடையவர்.

-ஜான்கே

இனிய கருணையே பெருந்தன்மையின் அடையாளமாகும்.

-ஷேக்ஸ்பியர்

★ ★ ★