உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சிரிப்பு

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

37.சிரிப்பு

எதைக் குறித்து நாம் நகைக்கிறோமோ, அதைத் தவிர வேறெதுவும் நம்முடைய இயல்பைத் தெளிவாகக் காட்டமுடியாது.

-கதே

அதிகமான சிரிப்பு அறிவு சூன்யத்தையே காட்டும்.

-கோல்ட்ஸ்மித்
எத்தனை விஷயங்கள் சிரிப்பில் அடங்கியுள! நெஞ்சைத் திறந்து அறிவதற்கேற்ற திறவுகோல் அதுவே. நகைக்க முடியாதவன் துரோகம், தந்திரம், திருட்டு முதலியன செய்யத் தகுந்தவன்.
-கார்லைல்

வீணாக்கிய நாட்களுள் அதிகமாக வீணாக்கிய நாட்கள் நகையாத நாட்களே.

-ஷாம்பர்ட்

ஆண்டுக்குப் பதினாயிரம் தரும் ஆஸ்தியைவிட அல்லும் பகலும் சந்தோஷமாயிருக்கும் இயல்பு கிடைத்தால் போதும்.

-ஜோஸப் ஹ்யூம்

மகிழ்ச்சி பொங்கும் முகத்துடையவர் வந்தால் போதும், உடனே வீட்டில் புதியதோர் ஜோதி உதயமாகி விடும்.

-ஆர்.எல்.ஸ்டீவன்ஸன்

உன் நோக்கத்தை வாளால் சாதித்துக் கொள்வதைவிட நகை முகத்தால் சாதித்துக் கொள்வதே சாலச் சிறந்த தாகும்.

-ஷேக்ஸ்பியர்

அறிவுடையோர் சிரித்தற் கஞ்சார்.

- மார்ஷியல்
சிரிப்பே மனிதனை மற்றப் பிராணிகளினின்றும் வேறுபடத்திக்காட்டும் செயலாகும்.
-அடிஸன்

மூடன் அதிகமாகச் சிரிப்பான்; வஞ்சகன் சிரிக்கவே செய்யான்.

-புல்லர்

சான்றோர் புன்னகையைக் காணலாம். சிரிப்பைக் கேட்க முடியாது.

-செஸ்டர்பீல்டு
நகையாடுபவன் அநேகமாக எல்லாவற்றையும் நகையாடற்குரிய விஷயமாகக் கருதுவான். ஆனால் அறிஞனோ எதையும் அவ்விதம் கருத மாட்டான்.
-கதே
நகைக்கப்படக் கூடிய குறை எதுவுமில்லாதவன் அன்பு செய்யப்படக் கூடியவனாகான்.
-ஹேர்

அதிகமாக நகையாதே. ரஸிகன் மிகவும் குறைவாகவே நகைப்பான்.

-ஹெர்பர்ட்

★ ★ ★