உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வாழ்க்கை வரலாறு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

62. வாழ்க்கை வரலாறு

சரியாக ஆராய்ந்து பார்த்தால் சரித்திரம்" என்று ஒன்று இல்லை; உள்ளது ஜீவிய சரிதமே.

- லாண்டார்

சகல நூல்களிலும் அதிகமான சந்தோஷம் அளிப்பதும் உபயோகமானதும் ஜீவிய சரிதமே.

-லாண்டார்

உண்மையாக எழுதும் ஜீவிய சரிதம் எப்பொழுதும் உபயோகமே செய்யும்.

-ஜாண்ஸன்

எல்லா நூல்களிலும் ஜீவிய சரிதைகளே எல்லோர்க்கும் இனியன, பயன் அளிப்பன.

-கார்லைல்

நல்ல முறையில் நடத்திய ஜீவியத்தைப் போலவே நல்ல முறையில் எழுதிய ஜீவிய சரிதமும் அபூர்வமானதாகும்.

-கார்லைல்

★ ★ ★