ஏலக்காய்/ஏலக்காய்ச் சட்டம்

விக்கிமூலம் இலிருந்து

ஏலக்காய்ச் சட்டம்!


இந்திய ஏலக்காயின் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் உரியதான நடைமுறைச் செயற்பணிகளை இயக்கவும் இயங்கச் செய்யவும் துணை நிற்கும் வகையில், ஏலக்காய்ச் சட்டம் 1965-ல் இயற்றப்பட்ட பின்னர், இந்திய அரசின் நிர்வாகப் பொறுப்பின் கீழ் ஏலக்காய் வாரியம் தனியானதும் தனிப்பட்டதுமான ஒர் அமைப்பு ஏற்படுத்தப்பட்ட பின்னர், 1966-67 முதல் 1970-71 வரையிலான ஐந்தாண்டுக் காலக் கட்டித்தில் ஏலக்காய் உற்பத்தி சராசரியாக 2500 மெட்ரிக். டின் என்னும் அளவில் அமைந்து, பிறகு 1979-80-ல் 4500 மெட்ரிக் டின்னாக உயர்ந்தது; உச்சம் அடைந்தது. பிந்திய 1981-82 ல் இத்தியாவின் ஏலக்காங் விளைவின் அளவு 4100 மெட்ரிக் டன் என்றால், அதில் கேர்ள்ம் 2800 மெ.டன், கர்நாடகம் 1000 மெ.டன், தமிழ்நாடு 300 மெ.டன் என்ற நிலவரத்தில் மாநில வாரியான உற்பத்தி அளவுகள் அமைந்தன. 1983-84 ல் விளைச்சல் 1600 மெட்ரிக் டன்னாகவே மொத்தத்தில் அமைந்தது. இயற்கையின் பரிசோதனைக்கு இந்திய ஏலக்காய். irத்திரம் தப்பி விதிவிலக்காக அமைந்திட முடியுமா என்ன?

1966-67 முதல் 1971-72 வரையிலான காலப் பிரிவிலே, இத்திய நாட்டினின்றும் ஏற்றுமதி செய்யப்பட்ட ஏலக்காயின் அளவு 1435 மெட்ரிக் டன்னாகவும், ஏற்றுமதி மூலம் நாட்டுக்குக் கிட்டிய அந்நியச் செலாவணி வருமானம் ரூ 8.37 கோடியாகவும் மட்டிலுமே அமைந்திருந்தது.

ஆனால், 1978-79.ல் உற்பத்தி கூடியதுபோலவே, ஏற்றுமதியும் கூடி, ஏலக்காய் ஏற்றுமதிகள் 2876 மெட்ரிக் டன்னை எட்டிப்பிடிக்க, ஏற்றுமதி வருவாய் ரூ 58.40 கோடியாகவும் உயர்ந்து உச்சமடைந்தது.

ஒரு விஷயம்: 1983-84-ல் ஏல விளைச்சல் குறையவே -1600 மெ.டன்னாகக் குறையவே - ஏற்றுமதி அளவும் 258 மெட்ரிக் டன் என்னும் வருந்தத்தக்க நிலையை அடைய வேண்டியதாயிற்று! இது தேசியப் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்பட நேர்ந்த சோதிப்புத்தான்!.

ஆனாலும் —

இந்த 1985-ம் ஆண்டில் ஏலக்காய் உற்பத்தி பழைய படியும் மறுமலர்ச்சி அடைந்து, ஏற்றுமதிகள் உயர்ந்து, நாட்டின் அந்நியச் செலாவணி ஆதாயங்கள்கூடி, நல்ல பலன்கள் ஏலச் சாகுபடியில் கைகூடுமென்றும் எதிர் பார்க்கப்படுகிறது!


சிறிய ரக ஏலக்காய்!

நீண்ட நெடுங்காலத்திற்கு முன்னர், தென் இந்திய மண்ணிலேதான் ஏலச்செடி முதன்முதலில் விளைந்தது. ஏலக்காய்க்கு எலெட்டேரியா என்பதுதான் பிறப்புவழிப் பெயர். ஏலக்காய் விதைகள் என்னும் பொருள்படும் 'ஏலத்தாரி' என்கிற சொல்லினின்றும் உருவானது. ஏலக்காய்க்கான அசல் பதம் 'அமோமம்' என்ற லத்தின் வார்த்தையினின்றும் பிறந்தது என்பதே சரியான வாதமாகவும் கருதப்படும். இஞ்சி மற்றும் மஞ்சள் தாவர இனத்தைக் சார்ந்தது. ஏலக்காய் என்பதும் கவனிக்கத் தக்கதே ஆகிறது. அந்நாளில் இயற்கையின் இனிமைமிக்க, சீரான தட்ப வெப்பச் சூழலில் மிதமான ஈரப்பதம் சூழ்ந்திட இயற்கையாகவே வளர்ந்து வந்த ஏலச்செடிகள் நாளடைவில் சாகுபடி முறையின் கீழ் பயிர் செய்யப்பட்டு, இப்போது ஆதாயமானதொரு பயிர்த் தொழிலாகவும் நடைமுறைப் படுத்தப்படுகிறது.

ஏலக்காய் வாரியம் 1966-ல் அமைக்கப்படுவதற்கு, முன்னர் ஏலக்காயின் விளைச்சல் மற்றும் விவசாயம் பற்றிய உண்மையான, ஆதாரபூர்வமான மதிப்பீடுகள் எதுவுமே சரிவரத் தெரிந்திருக்கவில்லைதான்!


விலை மதிப்பு கூடுதல்

வாசனைத் திரவியங்களின் உலகத்திலே ஏலக்காய் தான் ராணி!

உலகத்தின் ஏலக்காய் ராஜ்யத்தில் இந்திய ஏலக்காய் தான் ராணி!

இவ்வாறு, இந்திய நாட்டிலும் சரி, கடல்கடந்த அயல் நாடுகளிலும் சீரும் செல்வாக்கும் பெற்ற இந்திய ஏலக்காய் உலக நாடுகளின் மேலான வரவேற்பைச் சம்பாதித்துக் கொண்டிருப்பதன் நற்பலனாகவே, இந்திய நாட்டுக்கு ரூ 30 கோடிக்கும் கூடுதலான அந்நியச் செலாவணி வருவாய் ஆண்டுதோறும் கிடைத்து வருகிறது.

விலை மதிப்பு மிக்கது. ஏலக்காய்! ஆகவேதான், ஏலக்காயின் சராசரி விலை, கிலோவுக்கு ரூ 150 என்ற அளவிற்குக் குறைவு படாமலும் ரூ 400 என்னும் விலை வீதத்துக்கு மேற்படாமலும் நிலவி வருகிறது.

இந்திய ஏலக்காய், அதாவது, இந்திய நாட்டின் சிறிய ரக ஏலக்காய்தான் உலக அரங்கிலே எத்தனை எத்தனை வழிகளிலும் வகைகளிலும் பயன்படுகிறது!–பயன்படுத்தப்படுகிறது! ஏலக்காய் உற்பத்தியில் 60 சதவீதத்திற்கும் கூடுதலான, அளவில் வெளிநாடுகளிலேதான் உபயோகம் ஆகிறது. 60 உலக நாடுகளில் ஏலக்காய் மணக்கும். மத்தியக் கிழக்கு நாடுகள்தாம் ஏலக்காயைப் பயன்படுத்திப் பயன் அடைவதில் முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளன. சோவியத் ருஷ்யா, ஜப்பான், மேற்கு ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்விட்சர்லாந்து முதலான நாடுகளில் ஏலக்காய் வகைகளும் குறிப்பாக, ஆலப்புழை உயர் பச்சை ரக ஏலக்காயும், ஏலக்காய் எண்ணெயும் பெரு மளவில் உபயோகமாகின்றன.


ஏலக்காய்ப் பயன்கள்

இந்திய நாட்டினைப் பொறுத்தமட்டிலே, ஏலக்காய், உணவுத் தயாரிப்பில் மட்டுமல்லாமல், மருந்து தயாரிப்பிலும் தொன்றுதொட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அஜீர்ணம் தலைவலியைப் போக்கவும் ரத்தச் சுத்திகரிப்புப் பணியை மேற்கொள்ளவும் உதவும். பிரசவக் காலத்தில் தாய்மார்களுக்கு ஊட்டச்சக்தியை நல்குவதிலும் ஏலக்காய் முன்னணியில் நிற்கிறது. உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே என்பார்கள். அது மாதிரியே, ஏலக்காய் மணக்காத உணவுப்பொருள் சுவைப்பது கிடையாது! - தாம்பூலத்திற்கு நறுமண இன்சுவை அருளும் பெருமைக்குரியதும் இந்திய ஏலக்காய்தான்!

இந்திய நாட்டில் ஹார்லிக்ஸ், காம்ப்ளான் போன்ற உணவுப் பொருட்களிலும் ரொட்டி, மிட்டாய்த் தின் பண்டங்களிலும், 'டைஜீன்' போன்ற ஜீரண சக்திமிக்க ஆங்கில மருந்துகளிலும் ஏலம் மணம் பரப்பும்!


சவூதி அரேபியாவில் ஏலக்காய்!

மத்தியக் கிழக்கு நாடுகளிலே, சவூதி அரேபியாவில் தான் இந்திய ஏலக்காய் பெரும் அளவில் செலவு ஆகிறது, ஏலக்காயையும் காப்பித் தூளையும் சம அளவில் கலவை செய்து தயாரிக்கப்படும் 'காவா’ என்னும் ஏலக்காய்க் காப்பி அரபு மக்களின் சமூக அந்தஸ்தை மேன்மைப்படுத்தும், பிரியாணி, புலவு வகைத் தயாரிப்புக்களிலும் ஏலம் மனக்கும்.

ஹாலந்து நாட்டினர் வேகவைத்த மாப்பண்டங்கள், மிட்டாய், இறைச்சி போன்றவற்றிற்கு ஏலக்காயின் துணையை நாடுவர்!

ஸ்காண்டிநேவிய மக்களுக்கு பணியாரங்கள் போன்ற தின்பண்டங்களுக்கும் ஜெர்மானியர்கட்குக் கட்டுமானம் செய்யப்பட்டுப் பதனம் செய்யப்படும் உணவுப் பதார்த்தங்களுக்கும் ஏலம் பயன்தருவது சகஜம்.

ஜப்பான் நாட்டில் கறிபவுடர், மதுபானம், மருந்து, பற்பசை போன்றவற்றில் ஏலக்காய் சேர்க்கப்படுகிறது.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சோவியத் ருஷ்ய நாடுகளில் இறைச்சித் தயாரிப்புக்களில் ஏலக்காய் சிறப்புடன் கூட்டுக்கலவை செய்யப்பட்டு வருவதும் உண்மை நடப்புதான்!

சிறிய ஏலக்காயைப் போலவே பெரிய ஏலக்காயும் ஆயுர்வேத மருத்துவ முறையில் உபயோகிக்கப்படுவது உண்டு. பெரிய ஏலக்காய் மூலம் நடைபெறும் உற்பத்தி அளவு 2100 மெட்ரிக் டன்னாகவும், பெரிய ஏலக்காய் ஏற்றுமதி மூலம் இந்திய நாட்டுக்குக் கிட்டும் தேசிய வருவாய் சுமார் ரூ 50 லட்சமாகவும் அமையும்!

சிறிய ரக இந்திய ஏலக்காயை மேலும் அதிக அளவில் உற்பத்தி செய்யவும் ஏற்றுமதி செய்யவும் ஏலக்காய் வாரியம் திட்டமிட்டுள்ளது. ஏலத் தோட்ட விவசாய வளர்ச்சிக்கான நடைமுறைகளுக்கு நாட்டின் ஏழாவது திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதே ஆகும்.

1984-85ல் இந்திய ஏலக்காயின் உற்பத்தி மறுபடி 4000 மெட்ரிக் டன் என்னும் உயர் அளவை எட்டிப் பிடிக்கு மென்றும் ஏலக்காய் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது!

1984-85 காலக் கட்டத்தில் உற்பத்திக் குறி அளவு கூடுதல் அடையும்போது, ஏலக்காய் ஏற்றுமதியும் அதிகம் அடைந்து, இந்திய நாட்டின் அந்நியச் செலாவணி வருவாயும் மீண்டும் ரூ 50 கோடியைத் தாண்டிவிடக் கூடிய ஆரோக்கியமான - மகிழ்ச்சிகரமான - ஓர் இனிய சூழல் உருவாகி விடும் அல்லவா?