ஐங்குறுநூறு

விக்கிமூலம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

இந்த புத்தகத்தை EPUB fileஆக பதிவிறக்குக. புத்தகத்தை பதிவிறக்கம் செய்யுங்கள்!

ஐங்குறுநூறு மூலம்[தொகு]

1. ஐங்குறுநூறு மருதம்
2. ஐங்குறுநூறு நெய்தல்
3. ஐங்குறுநூறு குறிஞ்சி
4. ஐங்குறுநூறு பாலை
5. ஐங்குறுநூறு முல்லை

அறிமுகம்[தொகு]

ஐங்குறுநூறு, எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்புநூல்களுள் ஒன்று. இதிலுள்ள பாடல்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணை ஒவ்வொன்றிற்கும், நூறுபாடல்கள் வீதம் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் இந்நூலில் உள்ளன.

ஐங்குறுநூற்றில் அடங்கியுள்ள பாடல்களில் ஒவ்வொரு திணைப் பாடல்களும், ஒவ்வொரு புலவரால் இயற்றப்படுள்ளன. ஆகமொத்தம் ஐந்து புலவர்கள் இவற்றை இயற்றியுள்ளனர். இதனைப் பின்வரும் பாடலால் நாம் அறியலாம்.

மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன்
கருதும் குறிஞ்சி கபிலர் - கருதிய
பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே
நூலையோ தைங்குறு நூறு.

1. மருதத் திணைப் பாடல்கள் 100 - பாடியவர் ஓரம்போகியார்

2. நெய்தல் திணைப் பாடல்கள் 100 - பாடியவர் அம்மூவனார்

3. குறிஞ்சித் திணைப் பாடல்கள் 100 - பாடியவர் கபிலர்

4. பாலைத் திணைப் பாடல்கள் 100 - பாடியவர் ஓதலாந்தையார்

5. முல்லைத் திணைப் பாடல்கள் 100 - பாடியவர் பேயனார்

"https://ta.wikisource.org/w/index.php?title=ஐங்குறுநூறு&oldid=483812" இருந்து மீள்விக்கப்பட்டது