ஒப்பியன் மொழிநூல்/பண்டைத் தமிழ் நூல்களிற் பிற நாட்டுப் பொருள்கள் கூறப்படாமை
5. பண்டைத்தமிழ் நூற்களிற் பிறநாட்டுப் பொருள்கள் கூறப்படாமை
பழந்தமிழ் நூல்களில், தமிழர் வடக்கிருந்து வந்தார் என்பதற்கு சான்றாகத்தக்க, ஒருவகை அயல்நாட்டுப்பொருளும் கூறப்படவில்லை.
‘வெம்மை’ யென்னுஞ் சொல்லுக்கு விருப்பப்பொருளிருப்பது ஒரு சிறிது சான்றாகத் தோன்றலாம். குளிர் நாடுகளில் வெப்பத்தையும் வெப்ப நாடுகளில் குளிர்ச்சியையும் விரும்புவது இயல்பு. அதனாலேயே, ‘a warm welcome’, to pour cold water', 'பாட்டுக் குளிர்ச்சியாயிருந்தது' ' சூடான சொல்' முதலிய வழக்குக்கள் முறையே நற்பொருளும் தீப் பொருளும் பற்றித் தோன்றியுள்ளன. ஆனால், ஆராய்ந்து பார்ப்பின், தமிழ்நாட்டில் வெம்மையும் சில காலங்களில் வேண்டப்படுவது, தெரியவரும். பனிக்காலங்களில் வெம்மையை வேண்டுவதையும், பொதுவாய் மழையையும் குளிரையும் தாங்க முடியாமையையும், 'கொன்வரல் வாடை', 'பலநாளைப் பாலத்தை (வெயிலை)த் தாங்குகிறோம், ஒரு நானைப் புண்ணியத்தை (மழையை)த் தாங்க முடியவில்லையே' என்னும் வழக்குகளையும், இங்கிலாந்திலும் 'a warm reception' என்பது தீப்பொருளில் வழங்குவதையும் நோக்குக.
"வெம்மை வேண்டல்" என்பது தொல்காப்பியம் (உரி, 38. )