உள்ளடக்கத்துக்குச் செல்

ஒப்பியன் மொழிநூல்/பின்னிணைப்பு II

விக்கிமூலம் இலிருந்து

பின்னிணைப்பு II

அர் என்னும் வேர்ச்சொல்

அர் என்பது ஓர் ஒலிக்குறிப்பு. அரித்தல்1 அர் என்னும் ஒலி தோன்ற எலி புழு முதலியவை ஒரு பொருளைத் தின்னல் அல்லது குறைத்தல், அர—அரா—அரவு—அரவம் = ஒலி, (இரையும்) பாம்பு. அரித்தல் நுண்ணிதாயொலித்தல், கா, அரிக்குரற்பேடை அரித்தல். அறுத்தல், கா: அரிவாள்மனை (அரி)—(அரம்) — அரங்கு: அரங்கல் அறுத்தல். அரங்கு = அறை, ஆற்றிடைக்குறை. அரங்கு—அரங்கம், அரங்கு—அரக்கு—அரக்கன் = அழிப்பவன், அரித்தல் 4 வெட்டுதல், கா : கோடரி (கோடு+அரி) = மரக்கிளையை வெட்டுங்கருவி, கோடரி—கோடாரி—கோடாலி. அரித்தல்" அராவுதல், அரி+ அம் = அரம்—அரவு—அராவு; அரித்தல்' அராவுதல் போல உடம்பிலுண்டாகும் நமச்சல், அரிப்பெடுத்தல், புல்லரித்தல் என்னும் வழக்குகளை நோக்குக. அரித்தல் அரிப்பெடுக்கும்போது சொறிதல்போல, விரல்களால் ஒரு பொருளை வாரித்திரட்டல். அரிப்பது அரிசி. அரிசிபோற் சிறிய பல் அசிசிப்பல்: சிறிய நெல்லி அரிநெல்லி, அரி = நுண்மை , அழகு, அரித்தல்' அழித்தல், அரி = பகைவன், சிங்கம், அரசன் தேவர்க்கரசனாகிய இந்திரன். கோளரி = கொல்லும் சிங்கம்: அரி= அழிப்பவன், அழிப்பது; கா முராரி, ஜ்வரஹரி (வ). அரி—ஹரி (வ). அரி—அம்= அரம்=அழிவு, துன்பம் | E-Ger; barm. அரம்=—அரத்தை அளி+ அன் = அரன் = அழிப்பவன் தேவன், சிவன். இனி அரம்= சிவப்பு, அரன் = சிவன் என்றுமாம். அழிப்புத் தெய்வங்களே முதன் முதல் வணங்கப்பட்டன. அச்சமே தெய்வ வழிபாட்டிற்கு முதற்காரணம், அணங்கு என்னும் சொல்லை நோக்குக. அரமகளிர் =தேவமகளிர். இதற்கு அரசமகளிர் என்று வித்துவான் வேங்கடராஜலு ரெட்டியார் அவர்கள் கூறியிருப்பது பொருந்தாது. “சூரர மகளிரொ டுற்ற சூளே” என்பது குறிஞ்சித் தெய்வப் பெண்களையே நோக்கியது (அரம்)—(அரம்பு)— அரம்பை தேவமகள் ரம்பா (வ.) அரன்— ஹரன் (வ.) அரி (பெண்பாற்பெயர்) = திருமால். அரி — ஹரி (வ.) அரோ (ஈற்றசை நிலை.) அரோ அரா—அரோவரா— அரோகரா. அரம்.

மரங்களுள் அரசுபோல் உயர்ந்தது அரசு (Ficus religi osa) அரச இலைபோல் குலைக்காய் வடிவுள்ள (cordate) இலைகளையுடைய தாய்ப் பூவோடு கூடியது பூவரசு.