உள்ளடக்கத்துக்குச் செல்

ஒப்பியன் மொழிநூல்/புறவுரை

விக்கிமூலம் இலிருந்து

புறவுரை

இப்பொத்தகத்திற் கூற விரும்பிய சில செய்திகள் விரிவஞ்சி விடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பிற மடலங்களுள்ளும் பகுதிகளுள்ளும் கண்டுகொள்க.

இங்குக் கூறிய சில சொன் மூலங்கள் மாறலாம். ஆனால் மொழிகளைப் பற்றிய பெரு முடிபுகள் மாறா.

செய்யுது என்னும் தன்மை ஒருமை எதிர்கால வினைமுற்றில் உது என்பது ஈறென்றும், முன்மைச் சுட்டாகிய அகாரத்தினின்று நூன் நூம் என்பவை தோன்றின வென்றுங் கொள்ளலாம். இவை புது மாற்றங்களாம்.



“ஓங்க லிடைவந் துயர் ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலி நீர் ஞாலத் திருளகற்று—மாங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்”




“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ
        தெங்கும் காணோம்
பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சிசொலப்
       பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல்
       நன்றோ சொல்லீர்
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை
       செய்தல் வேண்டும்.“—பாரதியார்