ஒப்பிலாமணிப் புலவர் பாடல்கள்
Appearance
பாடல்கள் 27
நூலில் பக்கம் 71 முதல் 75
***
குறிப்புரை - செங்கைப் பொதுவன்
- இவை தனிப்பாடல் திரட்டு நூலில் இடம்பெற்றுள்ள பாடல்கள்
1-3
[தொகு]அகவல்
- ஆடெரி படர்ந்த கோடுயர் அடுப்பில்
- ஆம்பி பூப்பத் தீம்பசி உழல
- இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
- சுவைதொறும் சுவைதொறும் பால்காணாமற்
- குழவி தாய்முகம் நோக்க
- மனைவி என்முகம் நோக்க யாமும்
- நின்முகம் நோக்கி வந்தனம் குமுணா. (1)
குமுணராசன்
- அந்தநாள் வந்திலை அருங்கவிப் புலவோய்
- இந்தநாள் வந்துநீ நொந்தெனை அடைந்தாய்
- தலைதனைக் கொடுபோய்த் தம்பிகைக் கொடுத்ததன்
- விலைதனைப் பெற்றுன் வறுமைநோய் களையே. (2)
- மாந்தையிலே வாழு மகுடத் தியாகியுனக்
- கேந்து தழும்போ இரண்டுளதே- வேந்தர்
- முடித் தழும்புன் காலிலே முத்தமிழோர்க் கீயும்
- படித் தழும்புன் கையிலே பார். (3)
4-6
[தொகு]- வெம்புங் காலை வெதும்பி விழுஞ்சிரம்
- செம்பொன் கோடிவிலை யெனச் சிந்தித்தான்
- உம்பர் நாடும் உலகினும் தேடினும்
- எம்பிபோல் எமக்குயாவர் உரியரே. (4)
- ஆறுபெருக்கற் றருந்திடர் தான் பட்டாலும்
- ஊறலமை யாதோ உலகாற்றத்- தேற
- வறியையே யானாலும் என்கலியை மாற்றச்
- சிறியையோ சீர்க்குமுணா செப்பு. (5)
- வில்லை வளையாதே மீசை முறுக்கிச் சினத்து
- முல்லை மலரம்பை யென்மேன் மோதாதே- நில்லடா
- வந்தாரடா முருகர் வந்து கடப்பந் தாரைத்
- தந்தாரடா மன்மதா. (6)
7-9
[தொகு]- செந்திற் குமாரன் திருவழகைக் கண்டவுடன்
- வந்திக் குமாரன் வதைக்கிறான்- அந்திக்கு
- முன்னமே சென்றெனது மோகமெலாஞ் சொல்லி வந்தால்
- அன்னமே கும்பிடுவேன் யான். (7)
- தங்கடன மிருக்கத் தார்வேந்த ரெல்லோரும்
- எங்க டனத்துக்கே யிச்சிப்பார்- எங்கடனம்
- கச்சிருக்கும் பாலிருக்கும் காமபாணங்கள் பட்டுப்
- பிச்சிருக்கும் வேண்டாம் பிளாய். (8)
- இடுவோர் சிறிதிங்கு இரப்போர் பெரிது
- கெடுவாய் நமனே கெடுவாய்- படுபாவி
- கூவத்து நாரணனைக் கொன்றாயே கற்பகப்பூங்
- காவெட்ட லாமோ கரிக்கு. (9)
10-12
[தொகு]- மையூரும் கண்ணார் மயங்கப் பொருகரும்பு
- கையூரும் காமாவுன் கண்ணானை- செய்யூர்
- வளவனை யினான் பிரிந்த வாறுனக்குச் சொன்ன
- உளவனை யினானென் றுரை. (10)
- ஆழிவாய்ச் சத்தம் அடங்காதோ யான்வளர்த்த
- கோழிவாய் மண்கூறு கொண்டதோ- ஊழி
- திரண்டதோ கங்குறின கரனுந் தேரும்
- உருண்டதோ பாதாளத் துள். (11)
- அரவங் கரந்ததோ அச்சுமரம் இற்றுப்
- புரவிக் கயிறுருவிப் போச்சோ- இரவிதான்
- செத்தானோ இல்லையோ தீவினையோ பாங்கியெனக்
- கெத்தால் விடியும் இரா. (12)
13-15-
[தொகு]- முலையுங் குழலும் முளைப்பதற்கு முன்னே
- கலையும் வளையும் கழன்றாள்- மலையில்
- சிராப்பளியா னேறிவரும் செவிமணி யோசைக்
- கிராப்பளியும் கொள்ளா ளிவள். (13)
- பாண்டியன் றாரானேன் பசலைமுலைப் பாலானேன்
- ஆண்டிகையில் ஏந்திய தொன்றானேனே- வேண்டியபோ
- துள்ளங்கைத் தேனானேன் ஓர்மதலை பூத்தபின்
- புள்ளங்கைத் தேனா னுனக்கு. (14)
- முட்டத்துப் பன்றி முளரித் திருப்பதத்தைக்
- கிட்டத்துப் பன்றிக் கிடந்தேனே- தொட்டு
- மருங்கிலேசங் கெடுத்த மாலே யெனக்கு
- வருங்கிலேசங் கெடுக்க வா. (15)
16-18
[தொகு]- மாதர்க்கி தங்கவி வாணர்க்குச் சால வணக்கங்குரு
- நாதர்க்கு நீதியோ டாசார நண்பின் நயந்தவர்க்குக்
- கோதற்ற வாசகம் பொய்க்குப் பொய் கோளுக்குக் கோளறிவி
- லாதர்க்கு இரட்டி யறிவுடையோர் செய்யும் ஆண்மைகளே. (16)
- குழற்கால் அரவிந்தம் கூம்பக் குமுதம் முகையவிழ
- நிழற்கான் மதியமன்றோ நின்திருக்குலம் நீயவன்றன்
- அழற்கால் அவிர்சடை மீதேயிருந்தும் அவ்வந்தி வண்ணன்
- சுழற்கால் வணங்குதியோ வணங்காமுடிக் கைதவனே. (17)
- பாட்டானதை வண்டுபாடுங் குழல் சணபக வல்லிதன்
- றாட்டா மறையைத் தொழுதேன் இனியென் தலையில்விதி
- தீட்டான் கருமுகில் போலே வருமந்தச் சளட்டெருமை
- மாட்டான் இனிவரமாட்டான் வந்தாலும் வணங்குவனே. (18)
19-21
[தொகு]- சீமானு நாமகள் கோமானும் ஏத்தித்தினம் பணிந்து
- பூமாலை சாத்திய ரத்னசபாபதி பொன்னடிக்குப்
- பாமாலை சாத்தி நின்றேன் அவனான் மிகப்பாடு பட்ட
- ஏமாவுன்னா லினியாமா வென்பாலினி யெய்துதற்கே. (19)
- தடங்கொண்ட கல்லின் மெல்லெனப் பூட்டித் தமதுரத்தில்
- வடங்கொண்டு சாத்தி விடங்கொண்டு பார்த்து மணிகிளரும்
- படங்கொண்ட பாம்பிற் பழகியபின் மலைப்பாவை தன்னை
- இடங்கொண்ட வொற்றித் தியாகேசர் புற்றினிடங் கொண்டதே. (20)
- விடங்காட்டிக் கண்டத்திற் றோலுரிகாட்டித் தன்மெய்யினைப் புற்
- றிடங்காட்டி வாலையொரு புறங்காட்டி வண்டேறு மலர்த்
- தடங்காட்டிய பொழிலாரூர்த் தியாகர் தமதுபொற்றாள்
- படங்காட்டி ஆடிநின்றார் உலகேழும் பணியென்னவே. (21)
22-24
[தொகு]- புரந்தரனை மாலைச் சதுரான னத்தனைப் போகியைம்ப்
- புரந்தரனை சாதித் திமையாத நாட்டப்புலோ மசைவாழ்
- புரந்தரனை மானுந் திருவொற்றி யூரநின் பொன்மணிக்கோ
- புரந்தரனைக் கண்டனன் காணேன் உதிக்கும் புரந்தனையே. (22)
வெண்பா
- நலம்புலி யணிந்தோன் ஆளதனுக் கெட்டாநாள்
- வில்லம்புடன் கூடி விட்டாலும்-வல்லி
- இடையாளே ம்ன்னுலகம் ஏழளந்தோன் மைந்தன்
- குடையான தன்றோ கொடிது. (23)
- வாழ்நிலைசேர் பொன்னுலகம் வண்களந்தைக் கோபுரத்தின்
- ஏழ்நிலைமேல் ஏறிடினும் ஏறலாம்- பாழ்மனமே
- அனபுன்னைக் காட்டவரன் அறிவதே யருமை
- தென்புன்னைக் காட்டன் அடிசேர். (24)
25-27
[தொகு]- கஞ்சிகுடியாளே கம்பஞ்சோ றுண்ணாளே
- வெஞ்சினங்கள் என்றும் விரும்பாளே-நெஞ்சதனில்
- அஞ்சுதலை யாவாருக் காறுதலை யாவாளே
- கஞ்சமுகக் காமாட்சி காண். (25)
- சீதாரவிந்தை புயன் தென்னவன் தன்றிண் சிலம்பிற்
- போதாலும் கண்ணாலும் போர்செய்வோர்க்-கோதும்
- கொடியிடை யார்தம்மாற் குணமாமோ இந்தத்
- துடியிடையார் கொண்ட துயர். (26)
- அப்பிலே தோய்த்திட் டடுத்தடுத்து நாமதனைத்
- தப்பினா னம்மையது தப்பாதோ- இப்புவியில்
- இக்கலிங்கம் போனாலென்னே கலிங்க மாமதுரைச்
- சொக்கலிங்கந் தானிருக்கச் சொல். (27)