கடிகைமுத்துப் புலவர் தனிப்பாடல்கள்

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
கடிகைமுத்துப் புலவர் தனிப்பாடல்கள்
பாடல் 246
தனிப்பாடல் திரட்டு மூலம் பக்கம் 159 முதல் 196
பாடலுக்குக் குறிப்புரை – செங்கைப் பொதுவன்

மடக்கு[தொகு]

19 பாடல்

1[தொகு]

கருப்பஞ் சிலையும் மோர்கரமே- கண்டேனானுஞ் சூகரமே

காமப் பயலு மூர்க்கரமே- கணையைத் தொடுப்பான் சீக்கரமே

வருத்தம் புரிவாரனே கரமே- வல்லார் மடவார் நிசகரமே

மாமால் வெங்கடேசு ரெட்டன் வருவான் வருவானென் றிருந்தேன்

திருத்தும் படிக்கு மனோகரமே செய்தான் இனித் திவாகரமே

தினியில் வருவாயெனக் கரமே தெரிய வுதித்தான் சக்கரமே

பொருத்தந் தருகண்ணா கரமே போர் வேட்கிலை வீராகரமே

பூவைமாருஞ் சேகரமே பகழ்ந்தேன் ரத்தினா கரமே.
  • இதில் கரமே என்னும் சொல் மடக்காக வந்துள்ளது.

2[தொகு]

கையால் முகத்தைத் துடைத்து மலர்க் கண்ணால் எனையும் பார்த்து மலர்க்

காலால் வண்டு குடைந்த மலர்க் கணியை யெனது குழற் கணிந்து

மெய்யால் அதையே தடவி யென்றன் மேலே யிலங்கும் உடைமை யெல்லாம்

வெவ்வேறு ஆகக் களைந் ததனை மீட்டு நிறையாத் தரித்தும் அங்கே

நையா விடையைத் துகிலாலே நன்றாப் பொதிந்து மனம் விரும்பி

நகைத்தான் வெங்கடேசு ரெட்டன் நானு மகிழ்ந்து அவனைப் பார்த்தேன்

வையார் விழியார் தமைக் கலவி வகையால் உருக்கி வசப்படுத்தும்

மார்க்கம் அவனுக்கு அல்லாமல் மாரன் தனக்கும் வாராதே.
  • இதில் கை, முகம், கண், கால், குழல், மெய், உடைமை, துகில், மனம், நகை(சிரிப்பு), கலவி என்னும் உடலுறுப்பு, அணிகலன் பெயர்கள் மடக்காக வந்துள்ளன.

3[தொகு]

  • தலைவனைச் சேர்ந்தவகைக்குங்- கடலுக்குஞ்சிலேடை

மடிமேலேந்தி மலர்வாய்த் தேன்வழங்கித் தனபாரத் துகிலும்

வைக்கத் தனமேத கங்குமென்று மணிவாய் முத்தம்பல கொடுக்கக்

கொடியினிடை கால்விசைத் தெழும்பிக் கொள் கப்பலைப் பாயசைக்க வந்து

கூடவரைச் சோமனுந் தோயக் கொட்டும் அமிர்தம் கொப்பளிக்க

படியை யளந்த காலாற் கற்பாறை மிதித்து மடமாதைப்

பார்த்து முனியே திதுவெனவே பகர்ந்தோன் வெங்கடேசு ரெட்டன்

துடியும் முனையும் படைத்த வெற்றித் துரையைச் சேர்ந்த விதம்போலத்

தோற்றுங் கடலே நானுனக்குச் சொல்லிக் காட்ட வேண்டாமே.
  • இதில் மடி, வாய், தனம், துகில், இடை, கால் என்று உடலுறுப்பு, அணிகலன் தொடர்பாக மடக்காக வந்துள்ளன.

4[தொகு]

அப்புறத் தொதுக் கடிக்கும் அத்தொழிற் கொருப் படுத்தி

அக்கணத் தினிற் றொடைக்குள் அப்படிப் படித் தெழுப்பி

இப்புறத் திழுத் தொருத்தி எப்படிச் சமத்தி கெட்டி

இத்தனைக்கு முத்தரித்த திப்படிக் கெனப் படைப்பை

குப்புறக் கிடத்தும் வித்தை குற்ற மற்ற வித்தை குத்து

குத்தெனச் சொலச் சொலிக் கொடுத்துரைத் தடுத் தடுத்து

மெய்ப்புறத் தொழிற் பயிற்றி வெங்கடேசு ரெட்டமன்

விடியு மட்டும் அனுபவித்த வித்தை நல்ல வித்தையே.
  • இதில் ஒதுக்கடித்தல், ஒருப்படுத்தல், எழுப்பல், இழுத்தல், சுமத்தல், குப்புறக் கிடத்தல் முதலான வித்தைச் செயல்கள் மடக்காக வந்துள்ளன.

5[தொகு]

ஒருகரத்தில் விடவிலைப்பின் உபரி வித்தை முதனடத்தி

உகிர்செலுத்து கரிகரத்தில் உரகனுச்சி மணி யசைத்து

மருவி யுப்பு மமுதுடைத்து வரவெழுப்பி யதிலெனக்கு

வலுமயக்கம் வரவிரித்த மலரணைக்குள் விழவுயர்த்தும்

இருதொடைக்கு ளவனிருக்க எனை மலர்த்தி முலை சுவைத்தும்

இதழ் சுவைத்து மொரு தரத்தில் இருவருக்கு மனம் ருசிக்க

விருது கட்டி யனுபவித்த வெங்கடேசு ரெட்டமன்

விரக தாபமது தணித்த வேளை நல்ல வேளையே.
    • இதில் உடலுறவுக் கலவி பற்றிய செய்திகள் மடக்காக வந்துள்ளன
    • கையை விடல், நகத்தால் கீறல், உச்சிமணியை முத்தமிடல், உப்பு வியர்வை துடைத்தல், மயக்கம் வர மலரணைக்குள் தள்ளல், இரண்டு தொடைகளுக்குள் இருத்தல், மலரச் செய்தல், முலை சுவைத்தல், இதழ் சுவைத்தல், இருவர் மனமும் சுவைக்க விருது(விந்து) கட்டிக்கொண்டு அனுபவித்தல் - முதலானவை அவை.

6[தொகு]

தந்தி தங்கலந்து கண்ட தந்தரங்க மென்று சந்த

தந்திடம் புரிந்தணைந்த தந்திரந் தெரிந் திசைந்து

பந்தெழும்பு கின்றதென்று பந்தி கொண்டெழும் பவுஞ்ச

பந்தருஞ் சுகம் பொருந்து பந்தயங்களும் பகர்ந்து

வந்து வந்திருந்த கொங்கை மந்தரங் குலுங்க வண்டு

மண்டு கொண்டை கொண்ட லென்று வந்தொதுங்கு சண்டை கண்டு

விந்தை விந்தை யென்றியம்பி வெங்கடேசு ரெட்டமன்

விரக தாபமது தணித்த வேளை நல்ல வேளையே.
    • இதில் விரகதாபம் தொடர்புள்ள செய்திகள் மடக்காக வந்துள்ளன.
    • அந்தரங்கம், தந்திரம், சுகம், பந்தயம், கொங்கை-மந்திரம், கொண்டல் மேகச் சண்டை போல் உறவு - இவற்றால் விரகதாபம் தணித்தல்.

7[தொகு]

மடியில் வைத்து முலை பிடித்து வலிய முத்தமிட முகத்தில்

வதனம் வைத்த மதன வித்தை வகை பிறக்க வவனுரைத்து

முடியுறைக்க நகமழுத்தி முதுகினிற் கைபட வணைத்து

முறுகி மெத்த விறுகி வெட்க முழுதும் விட்டு மெலவசைத்து

நெடிய புட்கள் குரலெழுப்பி நிலைதரித்த விழியிமைக்க

நினைவு மற்ற பரவசத்தி னிறைவெனக்கு வரமயக்கி

விடியு மட்டு மனுபவித்து வெங்கடேசு ரெட்டமன்

விரக தாபமது தணித்த வேளை நல்ல வேளையே.
    • விடியுமட்டும் அனுபவித்த விரகதாபச் செயல்கள் மடக்கி வந்துள்ளன.
    • மடியில் வைத்தல், முலையைப் பிடித்தல், முத்தமிடல், மதனவித்தை பற்றிப் பேசல், நகம் அழுத்தல், முதுகை வளைத்துப் பிடித்தல், இறுக்கல், வெட்கம் விடல் முதலானவை

8[தொகு]

மடக்கு

சுரதஞ் செயவே கடி தடவிச்சுர தந்தனையே தொட்டதுமீ

சுரதந்திரமா மதனையுமீ சுரதந்திர மென் றெண்ணேனோ

சரசஞ் சொலியே நகைத்ததுமிச் சரசந்தானே முடித்தது பூச்

சரசம் பிரம வேளெடுத்த சர சஞ்சலமுந் தவிர்ந்தேனே

கரகஞ்சமு மென் முலையான கரகந் தொடு மப்போதில நங்

கரகந்தையும் போய் விட்ட தரகரகந் திருவ மணமிதுவே

அரவந்தரு புட்குரன் முழங்க அரவந் தனிலே நடித்த முகில்

ஆமால் வெங்கடேசு ரெட்டமன் அநு போகத்தைத் தொடுத்தானே.
    • அவன் செய்த அநுபோகம் இதில் மடக்காக வருகிறது.
    • அன்றியும் சுர, கர, சர, முதலான ஓசை மடக்குகளும் இதில் வருகின்றன.

9[தொகு]

மடக்கு

சேலை யுரிந்தான் கடிந்து விழிச்சேலை யுருட்டிப் பார்க்கையிலே

செவ்வா யிதழைக் கொடுத்தானான் செவ்வாய் நீவிப் பற்பதித்தேன்

மாலை சரிந்த பிடரினுக்குள் மாலை யமைந்த பிறை போல

வைத்தா னகத்தைக் கைவளையுஞ் சுவைத்தா னயமீ தென்றுரைமோ

காலை யிடுப்பி லிறுக்கி யொருக் காலை வகை யாலிங்கனத்தாற்

கட்டி யணைக்கத் தொடுத்த வகைக் கட்டிச் சொலவு மனம்வரு

மேலை யெடுத்த திரைக் கடலே வேலை யெடுத்த முருகனைப் போல்

வெங்கடேசு ரெட்டனெனை மேவச் சமயம் வாய்த்ததுவே.

10[தொகு]

மடக்கு

கலச முலையைத் தொட்டெனையுங் கலச மதியாமெனிற் பிடித்துக்

கசக்கு முலைக் காம்பையும் பருகக் கசக்குமெனவு நினையாதே

சலவை புரிவே னுயர்ந்த புயா சலவையினு நான் விடுவேனோ

சவாது வழித்துக் கழுத்தினிற் பூச வாதுவரை நேரிதழ் பருகு

புலவி தனையே நினைப்பது நான் புலவிதலவோ சமயமென்றே

புகழ்சேர் வெங்கடேசு ரெட்டபூபா வுனையே நான் நினைந்தேன்

நிலவான துவுங் குளிர மந்தா நிலவாகமும் வந்தடிக்கவு நான்

நினைப் பாயலிலே மருவவுநீ நினைப் பாயலிலே யென்றேனே.

11[தொகு]

கனவில் வருமன்னவ னெனது கையைப் பிடித்து மடியில் வைத்துக்

கார்போற் குழலைக் கோதி யவன் கையான் முதுகைத் தடவியு மென்

மனது குளிர முன்பு சுருள் வழங்கி யவனே பின்பு முத்தம்

வழங்கித் தலையை வளைத்த தரமாறிச் சுவைத்தான் வகைக்காரன்

சனகன் மகளை மணம் பொருந்துந் தாமோதரன் போலிரு புயமுஞ்

சாதிவன சக்கண் மலருஞ் சந்திரோதயம் போற்றிரு முகமும்

எனது விழியிற் குளிரவுங் கண்டிருந்தேன் வெங்கடேசு ரெட்ட

மேந்த்ரன் கலவிதனைக் கடலே இன்னம் புகல்வேன் கேடபாயே.

12[தொகு]

ஆழியிடத்தி லிருந்தாள் என்றவளும் உரைப்ப மகிழ்ந்து கணை

ஆழிகொடுத்தா னதனுடனே அதிகவிலை முத்தமுங் கொடுத்தான்

ஊழிகாலம் வாழியென உரைக்கத் தூதி யெமைப் புரக்கும்

உறவோன் வெங்கடேசு ரெட்டன் உகந்து வெருமான் முங்கொடுத்தான்

சூழியானை யென்ற முலைத் துணை மேலேற்றி முரசமெனத்

தொனிக்குஞ் சிலம்பு மலம்ப வளை துகிலுந் தரிக்க மனைக்குள் வந்தேன்

வாழியெனவே நானிருந்தேன் மாரப்பயலும் புறம் போனான்

மையலொழிந்து கண் பொருந்தி மன்னன் வரவுங் கண்டேனே.

13[தொகு]

மடக்கு

கடலேயுன் போல் வந்தவளைக் கண்டேன் மகிழ்ந்தேன் வார்த்தையுங் கற்

கண்டே யுரைப்ப தெல்லாநி கண்டே யெனவுங் கண்டேனே

உடலேன் பசந்தா யென்றாளார் உறவேன் பசந்தா யுரைக்க வெனக்

கொருவ ரிலாத வாறென்றேன் உள்ள தெனவே தலை யசைத்துத்

திடமே புகன்றாள் புவி புரந்த செயமால் வெங்கடேசு ரெட்ட

தீரன் கொலுவிற் சென்றாளென் செய்தி யுரைத்துன் பவனி கண்ட

தடமென் முலையார் பொது மாதர் தம்மி லொருத்தி பதுமினிப் பெண்

தாமங் கொடுக்க வேண்டு மென்றாள் சாமி கருத்தும் இசைந்தானே.

14[தொகு]

மடக்கு

காமனிவனே யென்னிலவன் கறுப்பனிவனைச் சிவப்ப னென்பார்

காளைவேல னென்னிலவன் கண்ணீ ராறுங் கலந் திருப்பான்

பூமன்னவரை நிகருரையாப் பூமான் வெங்கடேசு ரெட்டன்

புகழ்சே ரெட்டபுரந் தழைக்கப் புருகூதனைப் போல் வரக் கண்டேன்

சோமன் தனக்கு மாமனையே துணையா யிருக்கு மாமனையே

சூழும் புவிக்குள் வளை பட்டே துடித்தேன் மதனால் வளை பட்டேன்

ஆமன் மதன் சேர்வைப் பறையே ஆரமணி சேர்வைப் பறையே

ஆழநிலையாப் பயனிலையே அன்னையாலும் பயனிலையே.

15[தொகு]

கடலுக்குந் தலைவிக்குஞ் சிலேடை- மடக்கு

கச்சங் கடக்க வடங்காக் கொங்கைக்கும் பசலை பொருந்தி யனங்

கைக்கும் படிக்கு மிருந்து மடல் கைக்குந் தரிக்க வெண்ணிமதி

உச்சம் பார்க்கு மடவார்கள் உள்ளங் கவரக் காமனைப் போல்

உதித்தோன் வெங்கடேசு ரெட்டன் உலாவப் பார்த்தேன் பெருங்கட

அச்சங் கூரும் உன்னிடத்தில் அச்சங் கூரும் என்னிடத்தில்

அம்பா லசைவாய் நீயும் தன் அம்பாலசைவு மெனக் குண்டே

மச்சங் கடவா துன்னையுங் மச்சங் கடவா தெனக்கு முண்டாம்

வணங்காராகு முனக்கெனக்கும் வணங்காராகுஞ் சிலதியரே.

16[தொகு]

மடக்கு

வருந்தும் சனகி முகம் பார்த்து வரி விற்பலத்தைப் பின் பார்த்து

மணக்கோலஞ் செய்திருந்த வன்வேள் மணக்கோலஞ் செய்த்தைப் பாரான்

திருந்து வளையும் போச்செனவே தெரிவை மாதர் மயலாகுஞ்

செயவேள் வெங்கடேசு ரெட்ட தீரனிளசைக் கடற் றுறைவாய்

இருந்த திடனாகக் காவே என்னைத் திடனாகக் காவே

ஏற்றதாலத் திடந்தூரே ஏசுந்தாலத் திடந்தூரே

பொருந்து மணலின் வாய்த்திட்டே பொறுப்பேனோ தாய் வாய்த்திட்டே

புதிதா மதியா நந்தினமே பொருகா மதியா நந்தினமே.

17[தொகு]

மடக்கு

காரியனைய கொடைக்கு முபகாரி தழ்பாராட்டும் விப

காரிமதி யோசனை யாலுங் காரிய கருமம் பகர்வோன்

வேரிவன சத்திரு மாதை விழியு ளிருத்திப் பகை யனைத்து

வென்றோன் வெங்கடேசு ரெட்டன் மேவு மிசைக்கக் கடற் றுறைவாய்

வாரிமுகட்டி லெழுகலமே வளை போனதுவு மெழுகலமே

வந்தால் வருமீ சுரப்பாறே மைய லெனக்குஞ் சுரப்பாரே

நீரினாறு மீன் புலவே நெடுநாட் செலுமோ நான் புலவே

நெய்தறி படருங் கொடியாரேநேயரனை மார் கொடியாரே.

18[தொகு]

மடக்கு

கனத்துப் புடைத்துப் பருத்து விம்மிக் காம்பு திரண்டு கண் கறுத்துக்

காமன் மகுடம் போற் பரந்து கச்சுக் கடங்காக் கன தனத்தார்

மனத்துக் கிசைந்த வடிவழகன் மதவேள் வெங்கடேசு ரெட்டன்

வைகை நதியும் வைப்பாறும் வந்து பெருங் கடற் றுறையே

உனக்குளே வாசஞ்சலமே உள்ளத்துள வாசஞ்சலமே

ஒழியா துப்பு மயக்கம்மே உண்டே துப்பு மயக்கம்மே

சினத்து மோது வரியாரே தெரிந்து மோது வரியாரே

தேனுக்கோட மலைத்தேனே சித்தங்கோட மலைத்தேனே.

19[தொகு]

பாட்டுடைத்தலைவன் குணத்துக்குங் கடலுக்குஞ் சிலேடை

மடக்கு

தெரிய வமுதம் பழகுமதி தெரிந்த வாரம் பிரியாமற்

றீரத்திடமு நீங்காமற் செழிக்க வாய்மை கடவாமல்

வரிசை புரிந்து தமிழ்ப் புனைய வந்தேன் வெங்கடேசு ரெட்டன்

மனது நிறையுங் குணம் போல வளரும் பெரிய கடற் றுறைவாய்

பெரிய மீனே சினக்கயலே பெண்பாலெவரு மெனக்கயலே

பெருகுந் திரையிற் செல்லீரே பிழைக்கத் தூது செல்லீரே

அரியின் மனையே மூடலையே அமைத்தா ரெவரு மூடலையே

அரனார்க் குரித்தாங் கணைக்கூடே அணுகேன் மலர்தாங் கணைக்கூடே.

பின்முடுகு வெண்பாவும் வெண்டுறையும்[தொகு]

20[தொகு]

கல்விக்கு ஞானக் கருத்துண்டாம் காயமுறும்
தொல்வினைகள் எல்லாம் தொலையுமே – வில்லைத
னிற்புயற்றி ருக்கணத் தனித்தன்வச் சிரப்புயத்தோர்
கற்பகத்தினைத் துதித்தக் கால்.

21[தொகு]

சிந்தாகுலந் தீருஞ் செய்கருமம் கைகூடும்
சந்தான மென்றுந் தழைத்தோறும்- யைந்தாமத்
தானை வயத்தானை மலைப்பாவை யளித்தானை மகத்
தானை முகத்தானை நினைத்தால்.

22[தொகு]

செல்வம் பெறலாம் செழித்த புகழ் சேரலாம்
வில்வம் புனைவார் விரிஞ்சேசர்- புல்லுமதன்
கோளை முடித்தார் இமயக் கோதை யிடத்தார்கமலத்
தாளை மனத்தூடு நினைத்தால்.

23[தொகு]

அண்டர் தமக்கரசாம் அன்புபடர்க் கொம்பாம்
மண்டவுணர் தம்முயிர்க்கு வன்னியாம்- பண்டுதிறற்
கஞ்சனஞ்சிடுங் கடம்பணிந்து எழுந்து கந்துசூரை
மிஞ்சி நெஞ்சுறிந் தெழுந்தவேல்.

24[தொகு]

ஆதரவாய் என்னருகில் அஞ்சலென்று வந்துநின்று
போதரவு செய்யும் எப்போதுமே- ஓதுதமிழ்ச்
சந்ததமு மலங்கிர் தஞ்செறிந்து நன்குயர்ந்து தங்கு
விந்தை கொண்டிலங்கு செந்தில்வேல்.

25[தொகு]

இங்கிதமா நல்வாழ் வெமக்களிக்கு முற்பகல்செய்
சங்கடமாம் வேலை தணிக்குமே- பொங்கமுறத்
தற்பரற்கனுக் கிரகித்திடக் கருத்தனித்த சத்த
வெற்பினைத் துளைத்த வுக்ரவேல்.

26[தொகு]

ஈட்டும் வினைகள் அறுத்தின்ப முறவேயெனது
பாட்டுக்கு உகந்தருள் பாலிக்குமே- நாட்டமிகும்
மண்டலங் கலங்க கண்டர் கண்டர் துண்டர் மிண்டராவி
விண்டொடுங் கமண்டி யுண்டவேல்.

27[தொகு]

உன்னவினிதா யிருக்கும் ஓங்கு செல்வமும் பெருக்கும்
நன்னலருளைக் கொடுக்கு நாடோரும் – பன்னும்
சகடமுருள நெருடுகமல சரணசருணை யரியின் மருகன்
விகடகரியின் இளைய முருகன்வேல்.

28[தொகு]

ஊழ்வினையைப் போக்குமே உள்ளொளியைக் காட்டுமே
வாழ்வதற்கோர் வித்தாய் வளருமே- தாழ்வார்
தடபடவென அதிர்கடல் அதின் முடிமிசை
விடவதி பொடி செயும் வேல்.

29[தொகு]

ஓராரு சென்னி யொருமுருகா வென்றளவில்
தீராத வல்வினை நோய்தீருமே- போராடிக்
கொக்கரித்து வெற்படர்த்துக் கொக்கரக்கனைத் துணித்த
விக்ரமத் திருக்கரத்து வேல்.

30[தொகு]

கந்தா கடம்பா கயிலாய மாமலையான்
மைந்தா சுவாமி வடிவேலா- சந்தக்
குறமக ளாசைகொள் கணவா குருபரனாகிய குமரா
அறுமுகவா பழனியின் வேலா.

31[தொகு]

அன்பர் பயங்கெடுக்கும் மத்திகிரியைத் துளைக்கும்
இன்பவல்லி கண்ணுக் கெதிராகும்- மின்பரந்த
வாகுதோளில் ஏறிமீறி வாகுசாரி யோடியாடி
வேகசூரன் மார்பிளந்த வேல்.

32[தொகு]

அஞ்சிமயல் சகியா தங்க முருகிநின்ற
வஞ்சியைச் சேர்தென் தணிகை வள்ளலே- பஞ்சமலர்
அங்கசனுக்குங் கிரணத் தந்திமதிக்கும் கடலுக்
குங்குழ லுக்குங் குயிலுக்கும்.

33[தொகு]

வாங்குசிலை நுதலார் மாயக் கலவியிலே
ஏங்கி மனமே யிளையாதே- மாங்கனிக்காத்
தம்பியொக்கச் சண்டையிட்டுத் தந்தையைச் சுற்றந்த வொற்றைக்
கொம்பனைச் சற்றன்பு வைத்துக் கூறு.

34[தொகு]

தாமரைப்பூந் தேனையுண்டு தாதளைந்து வண்டிமிர்ந்து
காமரஞ்செய் வாவிகள்சூழ் கந்தர்சிவ- மாமலைவாழ்
பூவையரங்கந் தங்கம் பூகமிலங்குங் கண்டம்
காவையரங்கஞ் சங்கண் காண்.

35[தொகு]

வந்துமழை பொழியும் வானே வெஞ்சூர் தடிந்த
கந்தர் திருவிழாக் காலத்தில்- கொந்தரையா
நீர்த்துளியை யூற்றிவிட னேர்த்தியல மாற்றிவிடு
கீரத்திவரு நாட்டென் மொழிகேள்

36[தொகு]

போற்றுவார் வல்வினையைப் போக்குமே பூமலர்கொண்
டேற்றுவாரைக் கயிலை யேற்றுமே- தோற்றரிய
சந்தந் தங்குஞ் செஞ்சொற் சங்கம் பொங்குஞ் செந்திற்
கந்தன் செம்பொன் தண்டைக் கால்.

37[தொகு]

ஆறுமுகம் என்றளவில் அச்சந் தவிர்க்குமே
வேறுவினை வந்தால் விலக்குமே- கூறுபுகழ்
மாரியொத்த சூரபத்மன் மார்பிளக்கவே தொடுத்த
வீரசத்தி யான்மிகுந்த வேல்.

38[தொகு]

வேலா விராலிமலை வீராவுனக் கொருபெண்
மாலாகியே நின்று வாடுகிறாள்- நீலான
உற்பலக் கயற்கணிச்சி யுத்தரித்திடச் சமர்த்தி
அற்ப சிற்றிடைக் கொடிச்சி யாள்.

39[தொகு]

கந்தனென்றும் வேலனென்றுங் கானமயில் வீரனென்றும்
சேந்தனென்றும் ஏன்புலவீர் செப்புகிறீர்- முந்தவிளங்
கூனற்பிறை சூடச் சிவனாருக்கு உபதேசித்தருள்
ஞானக் குருவேடப் பயலை.

40[தொகு]

பன்னிரண்டு தோளா பரங்குன்றா வெப்பொழுதும்
என்னிரண்டு தோண்மீதிலே யிருப்பாய்- பொன்னின்
கதிர்முடியப் பாகுகிடக் கனவரையப்பா பழனிக்
கதிபதி யப்பா குமரப்பா.

41[தொகு]

நோகாதோ வேலாநீ நோக்குமட மானுக்காப்
போகா வனந்தேடிப் போனக்கால்- வாகாத்
தினநினைந் திட்டுனை வணங்கித் திரியு மன்பர்க்கருள் செயும்பொற்
கனகதண்டைச் சிறுசதங்கைக் கால்.

42[தொகு]

வாரீர் பழனி வடிவேலரே கடம்பைத்
தாரீரென் சிந்தையினிற் றானுறைவீர்- சேரீர்நீர்
கன்றுநஞ்சு பிஞ்சுமஞ்சு கண்களுஞ் சிவந்துபொங்க
என்றனங் களும் கசக்கவே.

43[தொகு]

மேகநிற மான்மருக வீறுதணி கேசவிது
வாகடின மேவுமிவ ளாவியருள்- வாகுவளை
நத்தத் தத்திற்பற்றி நச்சுப்பைக் குட்டத்து
நிர்த்தத்திற் கிச்சித்த நீர்.

44[தொகு]

பூவைக்கு நண்ணு பகற்போதுகம தாமெலிந்தாள்
வாவிக்கவின் தணிகைவாழ் குமரா- பாவிமதன்
அம்புரம் புகுந்தலைக் கவம்பகந் தணந்தெறிக்க
வெம்பி நெஞ்சமுந் திகைக்கவே.

45[தொகு]

அம்பிறைக்கு மைந்து மலரம் பிறைக்கு நொந்துமிக
அம்பிறைக்குங் கண்ணாட் கருள்புரிவாய்- நம்புதணி
கைக்கிரிக்குள் உற்றசித்ர கச்சுடைத் தனக்குறத்தி
யைக்களித் தணைத் தவத்தனே.

46[தொகு]

என்னிடத்தி லேகுமரா வெண்ணதே பேதகமா
உன்னிடத்திற் கொண்டமயற் கோதாயோ- துன்னிரவு
செல்லாப் பகட்டுமென் கண்செல்லாப் புரட்டுமங்கம்
பொல்லாப் பரத்தைவஞ்சி போல்.

47[தொகு]

செங்கமலக் கண்கலங்கிச் சிந்தைநொந் திராமுழுதும்
வெங்கலைக் குஞ்சங்கலைக்கும்வேலோனே- அங்கசன்றன்
பூங்கணை மெத்தத் தைத்துப் பூங்கொடி கத்திப்பட்டுத்
தாங்கணை மெத்தத் தைத்துத் தான்.

48[தொகு]

சங்கநிதி யேரகம்வாழ் சண்முகனே நின்மோக
மங்கையெழின் மேனிகளம்வண்மருங்கு- கொங்கைசெங்கண்
கந்தந்தங்கந் தங்கங்கம்பந் தந்தந் தந்தம்
பந்தந்தந் தண்கஞ்சம் பார்.

49[தொகு]

நீமருவ வாமுருகா நித்திலங்களுஞ் சிந்தக்
காமருதேன் பூட்டிநெடுங் கன்னல்வளைத்- தேமதனன்
வண்டுவரக் கண்டுளரி வண்டுமதியும் பரிபோய்
வண்டுவர வாய் புலம்புவாள்.

50[தொகு]

நூறுமுகமாய்ப் புகழ்ந்து நூறாயிரம் பேர்தம்
வேறுமுகம் பார்த்திருக்க வேண்டாமே- ஆறுமுகக்
கத்தனைச் சித்தத்து வைத்துச் சொற்றமிழ்ச் சித்ரக்கவிக்குட்
கத்தனைச் சற்றுத் துதித்தக்கால்.

51[தொகு]

பங்கயக்கண் வேலவனே பைந்தொடியா டேடிநித
மங்கமிகவுந் தளர்ந்து வாடுகிறாள்- செங்கைமலர்
அன்னநடை மின்னலொளி சின்னவிடை வன்னமுலை
கன்னன்மொழி மன்னுமிவள் காண்.

52[தொகு]

எத்திக்கும் போற்றும் இவளை யெழிற்குமரா
தித்திக்கு நின்கனிவாய்த் தேனூறன்- முத்தமிட்டுச்
சித்திரச் செப்புத் தனத்தைச் சிக்கெனக் கட்டிப் பிடித்துச்
சித்தமொத்துப் பொற்பாதத்திற் சேர்.

53[தொகு]

வேலவர்தா நேற்றணைந்த விந்தையை நானேதுசொல்வேன்
கோலவட மோசையிடக் கொம்பனையே- சீலமுடன்
கட்டிமுத்த மிட்டணைத்துக் கட்டிமைக்கணைச் சுவைத்து
மெட்டினைப் பதத்திலிட்டு மேல்.

54[தொகு]

வேலவனே நின்கலவி விந்தையதற் கேற்றமங்கை
கோலவரிக் கண்சுழற்றிக் கொஞ்சுகிளி- போலமுலைக்
கச்சுக்குட் சிக்கச் சொக்கப் பொற்சுட்டிக் கட்டிப்
பச்சைப் பொட்டிட்டத்தைப் பார்.

55[தொகு]

ஏவிழியார் மூரலிள நிலாக்கண்டு கருங்
காவிமுகை யவிழுங் காஞ்சியே- மேவலரூர்ச்
சக்கரக் கரக்குதைக்கத் தக்கணைக்கிலக் கெனக்கொள்
நக்கரக் கரக்கணக்கர் நாடு.

56[தொகு]

நாலாநாள் சேர்ந்தணைந்த நன்னயத்தை யெண்ணிமெத்த
மாலானாள் வேலவனே மாரனெய்யும்- கோலாலே
வண்டுகுடி யானகுழல் வஞ்சியெனமோ பயந்து
வண்டு குடியாண் மருவ்வா.

57[தொகு]

வானுதித்த மாமதிக்கும் வாரிவிட்ட வேள்கணைக்கும்
மீனுதித்த வாரிக்கு மேதினிக்குள்- நானொருத்தி
சிந்தைவாடி நொந்தசேதி செங்கைவேலர் பங்கிலோடி
மந்த மாருதஞ் சொலோதுமா.

58[தொகு]

செந்தழல் போல் வீசுதினிச் சேர்ந்தணை வாய் வேலவனே
கந்தமலர்ச் சோலைவண்டுங் கார்க்குயிலுந்- தொந்தமுடன்
பாடுது வம்புந் தும்பும் பார்மத னுந்தும் வந்துஞ்
சாடுது வம்புந் தும்பிந்தா.

59[தொகு]

வாகந்தா வல்ல வென்றால் வாகந்தா ராகிலுந்தா
சோகந்தான் மீறிவனைத் தோய்ந்திடவே- நாகஞ்சேர்
மாலையிந்து சோலைவண்டு மாரனம்பு சூழநொந்திவ்
வேழை தெஞ்சமே கலங்கினாள்.

60[தொகு]

பாகாரு மின்சொல் வள்ளிபாகாதே வேந்த்ரனருள்
வாகான குஞ்சரி விவாகநீ- யேகாவல்
என்றுநம்பு மென்றநொந்த சிந்தையன்பு பொங்கவந்து
நின்றுகொண் டிரங்கு கந்தனே.

61[தொகு]

வாதா வுன்னலு நடவாதா வோராறிரண்டு
காதாவுன் சித்தம் இரங்காதா- நீதாவென்
சிந்தைக் கிசைந்தபடி செஞ்சொற் கிரங்கியருள்
கந்த ப்ரசண்ட முருகா.

62[தொகு]

வந்தனையா வென்றுதுயர் மாற்றிமன வேட்கையெல்லாம்
வந்தனையாத் தந்தருளு மாதவா- பந்தனைய
கொங்கை குறமங்கை யொடு குஞ்சரி புயந்தழுவு
கங்கை யுமை தந்திடு குகா.

63[தொகு]

அந்தணர்கள் போற்றுமருந் தணிகைவாழ் குமரர்
வந்து கலந்து மருவாநாள்- பைந்தொடிக்கு
மேல்படுத்த முத்தனங்கன் வேல்படப் பொரிந்து தென்றற்
கால்படச் சரிந்த தென்பள் காண்.

64[தொகு]

மெத்த மயலாகி மெலிந்தயர்ந்து வாடுகிறாள்
சித்தமுவந் தாண்டருளுஞ் செவ்வேளே- இத்தலத்தில்
கண்டுமொழி கண்டஞ்சுங் கங்குல்குழல் கண்டஞ்சும்
வண்டுவிழி கண்டஞ்சு மான்.

65[தொகு]

இருபுறமுங் காவேரி யேர்மாலை யாச்சூழ்
திருவரங்கா வெங்கள் குலதேவா- வெருவ
எரிபுரிந்து விழிசிவந்து யமனிருண்ட வுருவுகொண்டு
வரவுகண்டு திகிரிகொண்டு வா.

66[தொகு]

ஒருத்திமிக மயல் கொண்டுன் சமுகம் வந்தாள்
திருத்தி யணையென்று வகைசெப்பி- யுரைத்திடுநற்
செப்புமுலைச் சொற்பகழிக் கொத்தவிழிச் சித்திரவிற்
பொற் புருவத்துப் பதரத்தாள்.

67[தொகு]

பாலாழி நீங்கியிந்தப் பார்தனிலோர் கள்ளனுக்கா
மாலாழி சங்கொளித்து வந்தருள்க- காலாழி
அன்றதைக் கடித்திழுக்க வங்களித்த முத்தி
இன்றளிக்க வென்றனக்கு நீ.

68[தொகு]

பாரோர் புகழவரும் பங்குனி யுத்திரத்தில்
ஆரூரர்வீதி யணுகினார்- நேரே
பணச்சர்ப்பந் தரித்துப் பொற்பதத்திற் கிண்கிணிச் சத்தங்
கிணுக்குக் கிண்கிணுக் கென்னவே.

69[தொகு]

திருவுள வாயிற் பதியிற் சேவேறு மீசா
மருவுள கொன்றைத் தார்வழங்கில்- வெருவுளதோ
சங்கமும் விழுந்திடாது தங்கமும் எழுந்திடாது
திங்களும் மழன்றிடாது நேர்.

70[தொகு]

செங்கயலோ நீலவண்டோ சித்தசன்கை நீலவண்டோ
பங்கயமோ மால்வளரும் பாற்கடலோ- தங்கமலி
வச்சிர நகைச்சி கனவச்சிரவின் மெச்சுபுரு
வச்சின விடைச்சி விழிபார்.

71[தொகு]

உன்மனது மென்மனது மோர்மனதா வொன்றிடினே
மனமதனும் வில்லெடுக்க மாட்டானே- நன்மதிதோய்
குன்றடர்ந்து பந்தைவென்று கொம்படைந்த தும்பிகுன்ற
வென்றடைந்த கொங்கை மங்கையே.

72[தொகு]

நித்தமு நினைத்திரவி நித்திரையு மற்றுருகி
சித்தச னெடுத்து வருடித்த கணை- தைத்துருகி
மெத்த மயலுற்று பிரமித்து தலை சுற்றுதடி
தத்தையொரு முத்தமது தா.

73[தொகு]

வேலோ கடலோ விடமோ கருவண்டோ
சேலோ கணையோ சிறுவாளோ- கோலமுடன்
தண்டங்கித் துண்டுருளத் தத்திவிழக் குத்துமுலைக்
கண்டங்கிக் காரி கடைக்கண்.

74[தொகு]

நீலமோ வேலோ நெடுங்கயலோ வாரிதிசேர்
ஆலமோ வம்புயமோ வைங்கணையோ- நீலநிற
வாவிச் சோலைக் கருகில் வந்து புனலாடுகின்ற
காவிச் சேலைக்காரிக் கண்.

75[தொகு]

சேலோ கணையோ பிணையோ நற்றென்ன வன்கை
வேலோ நமனோ மிளிர்வண்டோ- சாலப்
பளபளென்று வொளிமிகுந்து பவளமிஞ்சு நகைபுனைந்த
களபகும்ப முலை மடந்தை கண்.

76[தொகு]

முக்கனி யிதழ்க்கொட்டா முற்கதிரையிற் குமரா
விக்கநறை மிக்கவினி யிக்கமுது- சர்க்கரைரு
சிக்கிலை கசக்குது நிசிக்கலை யுதிக்கிலதில்
அக்கரை பயக்கு மட்டா.

77[தொகு]

ஆரார் பொறுப்பார் சொல்லாதித்தா வஞ்சிமன்னா
சேரா பரராஜ சேகரா- நேரே
சினத்து வட்டமிட்டு செப்பெனப் பணைத்துதித்த பொற்
றனத்திலிட்ட முத்துவெக்கை தான்.

78[தொகு]

இந்நேர நீயவளை யின்பமணமே புரிவாய்
தன்னேர் அருணாசல துரையே- மன்னுமதன்
பூவினம்பை யேவநின்று போர்செய்கின்ற தான்மெலிந்து
காவியங் கணால் கலங்கினாள்.

79[தொகு]

கோங்கின் அரும்போ குமிழியோ பொற்பந்தோ
ஓங்கு வரையோ வொளிர்செப்போ- மாங்குயிலின்
மன்னுமொழி யன்னநடை மின்னலிடை யென்னவரு
கன்னிவளர் சின்ன முலைகள்.

80[தொகு]

இத்தலத்தோர் போற்றும் இறைவனே தஞ்சைநகர்
வித்தகனே சிவாஜி வேந்தேகேள்- சித்தசன்றன்
சமரிலங்கங் குழலுநந்தஞ் சதிருறும் பெண்டிரு முகமுஞ்செங்
கமலமுஞ் சந்திரனு மஞ்சுங் காண்.

81[தொகு]

பூமிதனில் பேசும் புனிதா சிவாஜி மன்னா
காமியின் மேலின்று பகை கண்டதுகேள்- காமனவன்
மாகரமுந் தோகையரு மாமதியும் பாலனமும்
சாகரமுங் கோகிலமுந் தாம்.

82[தொகு]

மண்டலத்தோர் பேசுகின்ற மாலே சிவாஜிமன்னா
கண்டஞ்சுங் கன்னிதனங் கைத்தாளம்- செண்டுசிமிழ்
கும்பம் அம்புயங் கிரீடங் குஞ்சரங் குரும்பை மேரு
பம்பரஞ் சிறந்தசூது பார்.

83[தொகு]

மாதங்க வத்திரற்கு வட்டமளித்தோன் உதவும்
மாதங்க வத்திரற்பின் வந்தகுகா- மாதங்கந்
தங்கங் கம்பம் பொந்துந் தண்கஞ்சங் கண்கண்டம்
பங்கந் தங்குஞ் சங்கம் பார்.

84[தொகு]

கடுமொழி சேர்சூரை வென்றகந்தா விம்மாதின்
நடுமொழி களங்கண் முனாநற்றாள்- ஒடுசேரத்
தந்தஞ்சுங் கண்டஞ்சுஞ் சங்கஞ்சும் வண்டஞ்சும்
பந்தஞ்சம் பஞ்சஞ்சும் பார்.

85[தொகு]

என்று வடிவேலிளங் குமரனைக் கண்டாள்
அன்று முதற்சேர மனதாகியே- இன்றுறும்
திக்கிளைத்துச் சொக்கிவட்குத் திக்கிலைப் பக்கத்தடுத்துச்
சுக்கெடுத்துத் தட்டிவைத் தூது.

86[தொகு]

என்னைச் சொல்வாரல்ல தென்னைவிதித்த குகன்
றன்னைச் சொல்வாரிலை யித்தாரணியில்- கன்னி
தனை மறந்தாளளை மறந்தா டுயிறுறந்தா ளணை பொருந்தாள்
எனைமறந்தாள் உனைமறந்தாள் என்று.

87[தொகு]

அன்றயன் மால்காணா அடிமுடியைக் காண்பதற்குத்
தென்திசைக் கோனென்ன தவஞ்செய்தானோ- வென்றிதிகழ்
ஆடரவாளா நீறணிதோளா ஆதிரைநாளா மாதுமணாளா
தோடவிர் காதா மாகடவூரா சொல்.

88[தொகு]

தென்றல் உலலவுந் திருக்கடவூ ரெம்பெருமான்
மன்றல் செறிந்தே மதுவூறும்- கொன்றைக்காப்
பொன்பரவுந் திண்கொங்கை யிரண்டும் புண்பட நொந்துந் துன்பமிருந்தும்
அனபுதிரண்டும் பெண்கொடிநெஞ் சஞ்சும்.

89[தொகு]

பாலனுக்கா வன்று பகடேறி வந்தெதிர்த்த
காலனுக்குக் காலா கடவூரா- மேலோர்
கரும்பு கொண்டங் கெதிர்ந்து வந்தங்கசன் பெருஞ்சரங்கள் கண்டு
மருண்டு நெஞ்சங் கலங்கு மென்றன் மான்.

90[தொகு]

தொண்டருடன் கூடித்துதித் திரண்டு கண்ணாரக்
கண்டு தொழுவேனோ கடவூரா- பண்டோர்
அமுதிருக்குஞ் சிறுகடத்தன் றெழுமுனக் கன்பரை மருட்டும்
சமனை யெற்றும் பரிபுரச் செந்தாள்.

91[தொகு]

என்று தொழுவேன் எளியேன் அளிமுரலு
கொன்றையணி தென்கடவூர்க் கோமானே- துன்றும்
கனற்பொறிக் கட்பகட் லுற்றுக் கறுத்த தெற்குத்திசைக் குளுக்கத்
தனைச்சினத் திட்டுதைத்த பத்மத்தாள்.

92[தொகு]

பற்றிப் பணிந்து பரவவரந் தருவாய்
கற்றைச் சடையா கடவூரா- வெற்றிநெடுங்
கொண்டல் ஒக்குங் கண்டசத்தங் கொண்டெதிர்த் தங்கங்கருக்குஞ்
சண்டனைக் கண்டன்று உதைக்குந் தாள்.

93[தொகு]

ஆற்றுமோ நெஞ்சத் தடங்குமோ கொண்டமையால்
கூற்றுதைத்தத் தென்கடவூர்க் கோமானே- மற்றுயர்பொற்
கும்பமுலைத் திங்கனுதற் கொந்தளகக் கொம்பைவெறுத்
தம்புதொடுத் தங்கசன் விட்டால்.

94[தொகு]

காணப் பெற்றோம் இரண்டு கண்ணாரக் கண்டன்பு
பூணப் பெற்றோ மனமே போதாதோ- சேணிற்
புரம்புரம் புரிந்திடும் புரந்தரன் பதந்தரும்
பரம்பரந் தருஞ் சிதம்பரம்.

95[தொகு]

கண்டேன் சிதம்பரத்தைக் கண்குளிர மெய்ஞ்ஞானங்
கொண்டேன் சிவாயவென்று கும்பிட்டேன்- வண்டேகேள்
நீண்ட செம்பொற் காண்டகும் விற்பூண்ட செங்கைப் பாண்டரங்கா
தாண்டவன்றட் பூஞ்சதங்கைத் தாள்.

96[தொகு]

தோரோடும் வீதியெலாஞ் செங்கயலுஞ் சங்கினமும்
நீரோடுலாவி வரு நெல்லையே- காரோடும்
சுந்தரத் தரந்தரத் தர்கந்தரத் தரந்தரத்தர்
கந்தரத் தரந்தரத்தர் காப்பு.

97[தொகு]

வல்லாள கண்டா வடுகநாதா சுவர்க்க
வல்லாள கண்ட மயல்கொண்டு- பொல்லாத
சித்தசன் சரத்தினொந்து உதிர்த்தகண் கண்முத்துடன் கை
நத்திழந் திடத் தயங்கினாள்.

98[தொகு]

பூவணை மேனாட்டம் பொருந்தா திருப்பவளைக்
காவடுகநாதா தென்கால் சீறித்- தாவிவர
இக்குவிலி நற்கணை களிக்கண மெடுக்கமதி
அக்கினி தரக் கவலை யாய்.

99[தொகு]

தாண்டவா வென்று தளருந் தனியிருந்தென்
ஆண்டவா வந்தென்னை யாளென்று- மீண்டுமதன்
தொட்ட நஞ்சம்பிற் கிரங்குஞ் சொற்றளர்ந் தென்றத்தை யங்கம்
சுட்டவெண் டிங்கட்குடைந் தஞ்சும்.

100[தொகு]

பந்தளவு கந்தகளபந் தனையணிந்த முலை
கொந்தள கபந்தமு மிகுந்தமுகில்- அந்தமுள
தந்தென மெலிந்தவிடை தந்தவரியுந் தரளம்
எந்த நகரிந்த மயிலே.

101[தொகு]

தேசமதனிற் பேசுந் தேவா சிவாஜி மன்னா
வாசமலர் மாலையணி மார்பாநீ- நேசமொடு
நாடுமட மாது மதனாலு மதியாலுமிக
வாடுமட வாளை யணை வா.

102[தொகு]

பாரதனிற் பேசும்பரனே சிவாஜி மன்னா
சீரமைந்த மாதுகொங்கைச் சித்திரங்கண்- டோமர்கும்
பங்கயங் கிண்ணஞ் சிலம்பந் திலங்குஞ் செங்குடங்கம்
பங்கயந் தண்டெங்கு மஞ்சும் பார்.

103[தொகு]

சித்தசனால் வாடுகிறேன் சேர்ந்தணைய வேளையிது
வித்தைசெய்ய வேண்டாங்காண் வேலவனே- நித்யப்
படிக்குத் தணித்துப் படுத்துத் தவித்துத்
துடித்துத் திகைத்திப் படி.

104[தொகு]

எய்யவந்த காமா வுனக்கிங் கிடமில்லை
உய்யவந்தா னென்னோ டுறவானான்- செய்யமலர்த்
தேனைவிடு பூவைமுடி தின்றுவிடு கைக்கரும்பை
மீனையொரு காசாக வில்.

105[தொகு]

வேலனே வேளூர் வினை தீர்த்தவன் உதவும்
பாலனே சேனாபதி வேளே- சீலனே
கோங்கரும்பிற் கொங்கு கொங்கைக் கூந்தல் கொண்டற் காந்தளங்
பூங்கரும்பிற் காங்கடம்பிற் பூ.

106[தொகு]

கடுமோ விளந்தென்றல் தோகையின் மேலம்பு
படுமோ மெய்வாதைப் படுமோ- கடவூரா
நீரணங்கார் வேணிநம்பா நீலகண்டா மேனியின்பால்
ஆரணங்கார் கால சங்கரா.

107[தொகு]

பேதையேன் காணப்பெறுவ தெந்நாள் வேலவற்கோர்
தாதையே செம்பொற் சபாநாதா- மாதவத்துச்
சாத்துலங் கண்டேத்தவும் பிந்தாப்புயங்கம் போற்றவுந்தித்
தாத்தெ யென்றுந் தூக்கிடுஞ் செந்தாள்.

108[தொகு]

எல்லாரு நன்றா யிருக்கட்டு மேதினிக்குள்
வில்லாருந் தென்பழனி வேலோனே- பொல்லாத
பாதகப் பரத்தை வைத்த பாசமெத்த முற்றுமத்தைப்
பேதகப் படுத்திவிட்ட பேர்.

109[தொகு]

வையம் புகழ் பழனிவாசன் குமரன் முரு
கையன் தழுவி யணையா நாள்- தையல்
மதியழன்று வளைகழன்று மதனனம்பு படவுழன்று
மதிமறந்து மிகவருந்து வாள்.

110[தொகு]

வேலா விராலிமலை வித்தகா நின்மீதின்
மாலாகவே யொருபெண் மையல்கொண்டாள்- மேலான
வட்டமிட்ட பொற்றனத்தி வச்சிரப்பதக்க மொய்த்த
கட்டிழைக் குறச்சிறுக்கி காண்.

111[தொகு]

மையும் அணையும் வனப்பு மிழந்தாண் மாது
செய்யும் விதமென்ன சித்தசவேள்- எய்யும்
தனிச்சரத்தைத் தடுப்பதற்குத் திருத்தணிக் கர்த்தனுக் கெதிர்க்கக்
கணத்தினிற் புக்குரைத்திடத் திக்கார்.

112[தொகு]

வைத்திட வேளாவி மருமத்தி னஞ்சம்பால்
எத்தின னாடீரிதைக் காமீசரே- நத்துதிர்த்த
முத்து ரத்தினத்தை வைத்திழைத்த வத்திரத்தை யுற்ற
மத்தகத்தி னத்திமெத்த மால்.

113[தொகு]

பாகாகாவின் சொலுடைப் பைந்தொடிமேற் கோபமென்ன
வாகாகாமன் கணையால் வாடுகிறான்- சீகாழி
ழாநகரிலே நிதமும் வானவர்க டேவர்பணி
கானளின மான வடுகா.

114[தொகு]

அம்புலியூர் தன்னை யடைமின் பணிமின்கள்
அம்புலியூர் விண்ணுலகை யாள்வீர்கள்- அம்போரு
கத்தி னயனத்தில குகைத்தல னிவர்ந்கரிய
சத்தி னயனத்தி யிடத்தான்.

115[தொகு]

வாடுகிறா ணின்மாலை வாங்கக் கிளியொன்று
தேடுகிறா ளாரூர்த் தியாகரே- நாடி
அனகனம்பு சொரியவிந்து வனலைமொண்டு விசிறவெம்பி
மனதுநொந்து கலையிழந்த மான.

116[தொகு]

நீரோ திருவழகர் நீரோ கரியமுகில்
நீரோ திருமலைமேனின் றருள்வோர்- நீரோ
வளர்ந்த கெம்பதங்கள் கொண்டெழுந்து மண்டலங்கள் பண்
டளந்து கொண்டடங்க லுண்டமால்.

117[தொகு]

சித்திரமாங் கூடல் திருவரங்கப் பெருமாள்
மெத்தெனவே பஞ்சணைக்குண் மேவியநாள்- நித்தமுமே
செங்கையுஞ் சங்கும் பொருந்துந் திங்களும் மங்குந் தயங்குங்
கொங்கை யெங்குங் குங்குமந் தங்கும்.

118[தொகு]

நாராயணரே ரகுராம பத்திரரே
காராம்பசு மேய்த்துக் காளியின்மேல்- நீரோமுன்
தொக்கணக திக்கணக தொந்திமி திமிந்திமிதி
நக்கணக வென்று ஆடினார்.

119[தொகு]

உறுகிள்ளை மாமொழியீ ரொற்றித் தியாகர்
சிறுபிள்ளையோ வீண் செருக்கோ- பெறுகிருதோ
தொக்கண கதிக்கணக தொந்திமி திமிந்திமிதி
நக்கணக வென்று ஆடினார்.

120[தொகு]

பூமாலை பாமாலை பூண்ட சட்டை நாயகனே
மாமாலை மின்கொண்டு வாடியன- லாமாலை
இந்தாலும் வந்தாலு மின்றாண் மெலிந்தோடி
வந்தாள் கலந்தாளு வாய்.

121[தொகு]

மீனக் கொடியானே மின்னை யணைவதற்குத்
தானெனவே வந்த தயாபரனே- ஏனையவற்
கென்ன பலனென்ன நடையென்ன விடையென்ன விதழ்க்
கன்ன லெனுந் துன்னும் இதழா.

122[தொகு]

ஆலமோ வேலோ அலைகடலோ வம்புயமோ
நீலமோ மாரனெடுங் கணையோ- சாலச்
சிறுத்தவிடை பருத்தமுலை சிவந்தவிதழ் வெளுத்தநகை
கறுத்தகுழ லொருத்திநடைக் கண்.

123[தொகு]

நீரோ சிதம்பரனார் நும்பதியோ தென்புலியூர்
நீரோ சுடலைக் குணிர்த்தனார்- நீரோ
கடத்தடக் களிற்றினைக் கருத்துறப் பிடித்திழுத்
தடர்த் தறுத்துரித்து உடுத்தவர்.

124[தொகு]

போற்றுவார் வல்வினையைப் போக்குமே பூமலர்கொண்
டேற்றுவாரைக் கயிலை யேற்றுமே- சாற்றவிளங்
கந்தந் தங்குஞ் செஞ்சொற் கந்தம் பொங்குஞ் செந்திற்
கந்தன் செம்பொன் தண்டைக் கால்.

125[தொகு]

வன்மத்தை நின்மனதில் வையாதே பாவியேங்
கன்மத்தை நீக்கிக் கரையேற்றாய்- சென்மத்து
ணாமலை யுண்ணாமலு மின்னார் முலை யுண்ணாமலு மண்
ணாமலை யுண்ணாமுலை யம்மா.

126[தொகு]

மேகங் கவிந்தது போன் மேலெழுந்த காலனைக் கண்
டாகந் தளர்ந்துநெஞ்ச மஞ்சாமுன்- மாகடவூர்ப்
பூதநாதா வேதகீதா பூவில்தாதா தேடுபாதா
மாதுபாகா காலகாலா வா.

127[தொகு]

ஆர்செய்த வஞ்சனையோ ஆறுமுக வேலர்மலர்த்
தாரீயா துற்றதென்ன சர்ப்பனையோ- பார்தனிலச்
சூதுகற்ற சக்களத்தி தோதகத்தி பச்சிலைக்குள்
ஓதுசெப் படக்கு வித்தையோ.

128[தொகு]

கச்சிக் கச்சாலைக் கடவுளடியைத் துதித்தால்
இச்சிக் கச்சாலை யிலாளின்ப மகார்- மேச்சிக்க
நித்த நித்தம் விர்த்தியுற்றந் நிட்களத்தைப் பெற்றமுத்தர்
பத்தியைச் சித்தத் தளிக்கும் பார்.

129[தொகு]

அன்னை வடிவம்மை யொற்றி யந்தரியைச் சிந்தித்தால்
பின்னை வடிவம்மை யுற்றுப் பேதுறார்- முன்னைவினைப்
பந்தமுந் தவிர்ந்துமேவு சந்தமுந் தவிர்ந்து ஞான
சிந்தையுந் தவிர்ந்திடாது தேர்.

130[தொகு]

என்றாடும் காமீசரின்ப வடிவைத் துதிக்க
அன்றாம் வினைவிட் டகலுமே- குன்றாமல்
தொங்கிட்டத் தோதரிகிட தோதரிகிட தோதரிகிட
தங்கிட்டத் தாதரி கிடதா.

முன்முடுகு வெண்பா[தொகு]

131[தொகு]

திங்கடும்பை கொன்றையுஞ் சிறந்தணிந்து கொண்டுநின்ற
அங்கியம் பகன் பயந்தவன் பகந்தா- தங்கமென்னும்
தேசத்தேனே குரவர்செய் நட்டோனே பனிரு
வாகுற் றோனே பெருமானே.

132[தொகு]

கன்னிமுக நன்னிலவு கன்னலிதழின் னிலவு
பன்னுநகை வன்னமுலை பன்னிருகை- மன்னவநின்
மின்னயிலை யன்னவிழி மின்னலிடை பின்னுசடை
அன்னநடை யின்ன வறிவாய்.

133[தொகு]

உக்ரகிரி யுக்ரகடலுட் கவடவெற் பொடுயர்
சக்ரகிரிக் கப்பாலுந் தாண்டுமே- விக்ரமவை
வேன்முருகன் கந்தன் விசாகன் குகன்கரிய
மான் மருகன் ஏறுமயில்.

134[தொகு]

சந்தனந் திமிர்ந்த கொங்கை சந்ததம் பசந்ததிங்கு
வந்தனங் கனம்பையுந் தவந்தெழுந்து- சிந்தைதங்கு
நேசபாசமோ பொலாதுநீ நிலாவிலே குலாவ
வாசலா முலாச வேலவா.

135[தொகு]

வாம்மேவு சீதரா சிவாஜி ராஜ நேயமோக
காம்மாகி சோபமான காமிவாம- தாமமேவு
கொங்கை பைங்குரும்பை பம்புகொண்டை கொண்டல் கண்டநந்து
செங்கை பங்கயங்கண் வண்டுசேர்.

136[தொகு]

வெண்பா[தொகு]

அங்கியா னூர்தியான விரு மதிக்கும்
தங்கு பன்றியை யிரண்டுந் தந்திடவே- எங்கும்
உரைக்குங் கான் மைந்தற் கொருவ நடுவுற்ற
துரைக்குத் துரையே நீசொல்.

137[தொகு]

இத்தை யனைய வுருவில்லான் விடும்போதே
வைத்த கரையோ தடுக்க மாட்டாதே- கொத்துலவும்
அங்கமுகக் காத்துறைசை யம்பலவாணன் புயத்துச்
செங்குவளைத் தாரினையே தேடு.

லிருத்தம்[தொகு]

138[தொகு]

கராம் மடியச் சக்கரம் தொட்டு எய்த வெங்கடேசு ரெட்டன் கமலப் பூ நீ
கராம் மடித் தொட்டானாலும் வரவழைப்பார் காணேனங்கனை மார்சேவளே
கராமடி பட்டிடுபேரி வாரிதியாம் இவளையெவர் காப்பாரோசங்
காரமடி விட்டிறங்காத பேதையின்மேற் கணை தொடுத்தான் காமவேளே.

139[தொகு]

கன்றுதொட்டுக் கனியுகுத்த கீர்த்தி வெங்கடேசு ரெட்டா கமலக் கண்ணா
கன்றுதொட்ட தத்தனையுங் கைநெகிழ்ந்த தறியாயோ கலையுஞ் சோர்ந்த
கன்றுதொட்ட ரவிக்கை யெல்லாங் காமனப்பு கிழித்தது பார் கருத்துந் தானே
கன்றுதொட்டுப் பட்டசிட்டும் போன்மெலிந்து வாடுவதுங் கண்டிலாயே.

140[தொகு]

வளவனை நேராகவிசை வளர்த்த வெங்கடேசு ரெட்டன் மருவா நாளில்
வளவனை மாரையும் வெறுத்தாண் மாரனும் பூங்கணை யேவ வருந்தியேய
வளவனையே நினைத்து இருந்தாண் மடலெழுத வறியாளாய் மருங்கிலேது
வளவனை யாடையு மிழந்தாள் வண்டினங்காள் கண்ட செய்தி வழுத்துவீரே.

141[தொகு]

பாகப்பா வருமை யறியிளசை வெங்கடேசு ரெட்டா பகரக் கேண்மோ
 பாகப்பா மொழி விழியா ணீயேறி வருங் களிற்றைப் பார்த்தாளாங் கொம்
பாகப்பா மதிக்கவரா வென்றாளம் மதியுதிக்கப் பசந்தே யீசன்
பாகப்பா வையினாக மானாள் யானீன் றெடுத்த பாவைதானே.

142[தொகு]

கருங்கோட்டை ஆளுங் வெங்கடேசு ரெட்ட மேந்த்ர னென்னைக் கலந்த போகக்
 கருக்கோட்டை காணுமடி சகியே முன்போல் இன்னுங் காமனுந்த
கருக்கோட்டை நிகர்மீசை முறுக்கிவரகி காணிலவன் கங்குன் மாவைக்
கருக்கோட்டை யம்பினையும் பறிவெருட்டு தலைவாசல் கடக்கத்தானே.

143[தொகு]

சந்தானமே நிகர்குமார முத்துசாமி சகோதர வான் பொன்னே
சந்தான மேருவென நிறைந்த குமாரெட்ட னெனைத் தழுவா வாயா
சந்தானமே தரிக்கக் கூடுதிலை யவன் மருங்கில் சகியே நீபோய்
சந்தான மேலேறியு பரிசெய்தாற் றீருமடி தனக்குத் தானே.

144[தொகு]

திருமாலை யம்புதொட்ட சிலைமார னம்புவிக் குட்டிட வான்முல்லைத்
திருமாலை யம்புயஞ் சூழ்குமார வெட்டமனைச் சேரச் செய்தாலுள்ள
திருமாலை யந்தெளிந்து சுபசோபனம் பொருந்திச் சிவனை நேசித்
திருமாலை யந்தொறும் போயுனை நினைத்துத் தெரிசிப்பேன் திருமின்னாளே.

145[தொகு]

மாதங்கங்கோடி நிலவறைக்குள் ஒளித்தாலும் அந்தவழியே கம்ப
மாதங்கங்கோடி விடச்சென்று அடிக்குமுயிர் தரிக்குமா சிவாரா
மாதங்கங்கோடி கலுங்கடல் ஒலிக்கென் செய்வளினி வந்து சேர்வாய்
மாதங்கங்கோடி தமிழ்க் குதவும் வசுவப்ப மதிமந்திரி நீயே.

146[தொகு]

தமிட்ட ராணுவம் பெருக்கி வந்தெதிர்த்த வேண்முரசு சத்தங் காது
தமிட்ட ராவெனப் புலம்புஞ் சிறுபேதை விரகமது தணியவே முத்
தமிட்ட ராமதி முகத்தின் முகமழுந்தவே புணரச் சமயம் வாணர்
தமிட்ட ராதரந் தெரியும் எங்களெட் டேந்திர மகிபா தமிழரேறே.

147[தொகு]

பரத்துவசத் துருத்தாயர் பாயன்மிசைப் பூவைமுலைப் பணைப்பிலேம
கரத்துவசப் பாவிமலர் தூற்றுவர் நான் ஆற்றுவனோ காட்டிலேழு
மரத்துவசத் தொரு கணையால் எய்த வெங்கடேசு ரெட்டன் மருவா நாளிற்
சரத்துவசக் குரங் கெனவே தனித்திருந்து முடியாது சாற்றி னேனே.

148[தொகு]

நிலமாது திலகனெங்க ளிளசை வெங்கடேசு ரெட்ட னின்னைப் பார்த்த
பலமாது வதனமும் பொற்பசலை கொண்டாய் மகளேபெண் படையா மேகங்
குலமாது ரங்கமென்ற கிள்ளையின்மேன் மாரன்வருங் குறியைப் பார்த்துச்
சொலமாது கிலுங்கையிலே தொடுவளையுந் தோற்றுகின்ற துணிவு தானே.

149[தொகு]

கலக்கடமா னத்தொனியை முழக்கமன மலைந்தடையார் கால்சாய்ந் தோடப்
பெலக்கடமா நகக்களிற்றை நடத்தும் வெங்கடேசு ரெட்டன் பிணைய லீந்தான்
சிலக்கடமா மரக்குயிலை யொடுக்கு கடற்றொனி யடக்குந் தென்றல் தேரை
விலக்கடமா மதப்பயலே தலைக்கடை வாசலைக் கடக்க வெருட்டுவேனே.

150[தொகு]

திருக்கரங்கம் வகுக்கவயில் செலுத்துபடை யான்கமலச் சேக்கையாமா
தருக்கரங்கம் பயிற்றுதுரை யிளசைவெங்க டேசுரெட்டன் தழுவாநாளில்
அருக்கரங்கம் புரந்திடவும் அம்புலியும் வெம்புலி போலாச்சே கண்டாய்
உருக்கரங்கம் பரந்துடைக்க வுருக்காமம் பிதந்தானென்று உருகுவாளே.

151[தொகு]

பொரக்கலக முற்றவருக் கிரங்கும் வெங்கடேசு ரெட்டன் புயங்கண் டாண்மேல்
உரக்கலக்க மற்றகணை மதன் விடுத்தால் என்னசெய் வாளோ கோகிண்ணச்
சரக்கலக்கம் மியன்கடைந்த செப்பலத்தானே திரண்ட தனத்தினூடே
வரக்கலக்கண் ணீருகுத்தாள் வண்டினங்காள் கண்டசெய்தி வழுத்துவீரே.

152[தொகு]

இத்தரமேசத் துணிவாரென் சகிமார்வஞ்சகிமா ரென்றால் வேளம்
புத்தரமேவத் தனமேபுண் படுமேயென் புகல்வேன் புலவோர்க்கேபோ
தத்தரமேகத் தினையாய்த் தழைத்த வெங்கடேசு ரெட்டன் தழுவினாலே
துத்தரமேதித் தனையு முன்னாலே விளைந்த தன்றோ வொருநிலாவே.

153[தொகு]

கொட்டமிடு மருவலர்க ளிட்டகற் கோட்டை களனைத்துங் கொழிதூளாக
வட்டமிடும் பரிநகுல னெட்டமரா சேந்த்ர னென்னை மருவா நாளில்
துட்டமதன் கணைதுளைத்த துளைவழியே தென்றல் வந்து சுவைத்துத் தள்ளி
விட்டவெறுங் கூட்டையினிச் சுட்டதனால் என்னபயன் வெண்ணிலாவே.

154[தொகு]

புவிக்காதி பதியிளசை புரந்த வெங்கடேசு ரெட்டன் புலவோர் சொல்லும்
கவிக்காதி வள்ளலைக் கண்டாசை கொண்டாளுக் கமுதைக் கரைத்துப் பால்வார்த்
துவிக்காதிவ் வளவேனும் புகட்டு சகியே முகத்தைத் துடைத் தண்ணீரு
தவிக்காதி லேசுக் கானாலும் வைத்தூதிவள் மத்தகைக்குத் தானே.

155[தொகு]

பொருவாசிக் கொருநகுல னிளசைவெங்க டேசுரெட்டன் புயங் கண்டாயோ
இருவாசிக் கெனக்கலையை யுடுத்துபணி திருத்துவளை யெங்கேதேடு
மருவாசிக் குங்குழலை முடியுனக்குத் தரிப்பிடந்தான் மகளே சீச்சீ
தெருவாசிக் கினமுமவன் கைம்மருந்தான் மெய்மறந்துந் திரிகின்றாயே.

156[தொகு]

பொரவிசையஞ் செலுத்தவெங்க டேசுரெட்ட மேந்திரன்மேற் புதுமால் கொண்டேன்
கரவிசையங் கசமாரன் கருப்புவில்லை வளைத்துவலக் கையாலெய்யும்
 கரவிசையங் கத்தில்வந்து தைத்துருவி யப்புறம்போஞ் சகிக்க மாட்டேன்
இரவிசையம் புகுந்தொளித் தானிளங்குயில் காணிருமெனக் கிங்கிரங்குவீரே.

157[தொகு]

புடவிகட கடென வுடைபட வடவை சிதறவரு பொருதார்ச் சீறும்
தடவிகட களிற்றுதய னிளசை வெங்கடேசு ரெட்டன் தருவான் முல்லை
அடவிகட வுனதுகுடை யகலமத கயமேக வனிலத்தேரை
நடவிகட நிமிர்முகடு தொடுபரிதி யுதயமிதோ நான் கண்டேனே.

158[தொகு]

கற்றனமின் னாவதென் சொன்முனி யென்றான் றநயனம் பாற் கலங்கித் தாபம்
உற்றனமின் னாரமுதங் கசந்தணையா ராதநெஞ்சே யுணர்ந்தோர்க் கங்கை
யிற்றனமின் னாளுதவு மிளசைவெங்க டேசுரெட்ட னினிய நோக்கம்
பெற்றனமின் னாமையின்றோ டொழிந்ததயன் மாதரலர் பேசார் தாமே.

159[தொகு]

ஆளுக்கே யழகனெங்க ளிளசைவெங்க டேசுரெட்டன் அன்பையீசன்
தாளுக்கே விருந்திட்டா னொன்னலர்கள் செங்குருதித் தசையைச் செங்கை
வாளுக்கே விருந்திட்டான் மாதரா ராவியெல்லா மலர்க்கை வாளி
வேளுக்கே விருந்திட்டான் வெண்மதிக்கென் பெண்மதியை விருந்திட்டானே.

160[தொகு]

அனங்கலக் கணந்தெரியாள் சிறுபேதை விரகமிவட் கதிகமையோ
மனங்கலக்கப் பக்கமில்லை யுன்னையன்றி யாதலினால் வாராதாலே
தினங்கலக் கணீருகுத்துத் தேடுகிறாள் வாடுகிறாள் திரண்ட கும்பத்
தனங்கலக்க அருள்புரிவா யிளசை வெங்கடேசு ரெட்ட தமிழ்க் கோமானே.

161[தொகு]

எனக்குடந்தை யானவெங்க டேசுரெட்ட னருகிலழைத் திருத்தி வைத்துத்
தனக்குடங்கை யாரவெனைத் தழுவாத மனக் குறையைச் சகியே சொன்னேன்
உனக்குடம் பெலாம் பசக்கும் பாலனமுங் கசக்கும் அழகுற்ற கொங்கை
கனக்குடங்காத் தொனிகேட்கு மதன் படையும் வந்தினிக்கை கலக்குந்தானே.

162[தொகு]

மாலைமணி முடிதரித்த மருவலர்கள் சேனைதனை மடியத்தாக்குங்
கோலமத களிற்றுதய னிளசைவெங்கடேசு ரெட்டன் கூடாநாளில்
பாலனந் திவலை யருந்தாள் சிறியாட்கு மதிக்கு மென்ன பகையோ மேனி
வேலைநடுக் கலத்தை விட்டே யெழுந்தலைந்த காகமென மெலிகின்றாளே.

163[தொகு]

ஓங்கிய ராமா மதியாதவன் போல வரவுமிடை யுடையுந் தன்னால்
நீங்கிய ராமார சரத்தால் வருந்துவதற் கிரங்க நேமியாத
பாங்கிய ராமா வெனக்கண் பார்த்து வருவாய் கவந்தன் படக்கையால் வாள்
வாங்கிய ராமா பூமாவிளசை வெங்கடேசு ரெட்ட மன்னரேறே.

164[தொகு]

கனத்துவரை போற்புடைத்த கொங்கைமங்கை கொண்டமையல் கண்டுநந்தா
வனத்துவரைச் சென்றுமலர் கொய்திவளை யெய்யவந்தான் வந்தானெப்போ
துனத்துவரைப்புரந்திதவு கொல்லாரைத் தாக்கியவர்த் துருவனேட்டிற்
சனத்துவரை யாக்கும்வெங்க டேசுரெட்ட மேந்திரனே தளசிங்கேறே.

165[தொகு]

தரும்பலிக்கு மருவலரைத் தாக்கும் வெங்கடேசு ரெட்டசாமி மாலை
வரும்பலிக்கு நினைத்த படிக் கிப்போது தப்பாது வலத்திருந்த
திரும்பலிக் குரலைப் பார்க்கிற் செயமடி பெண்ணே மதனன் செங்கை யாலெய்
அரும்பலிக்கு மென்ன பயஞ் சுகமாக வாழ்வாய் உன்ன திட்டந் தானே.

166[தொகு]

மின்னமருங் கொடியனைய சின்னமருங் கொடியமுலை விம்மானாள்
முன்னமரும் பெடுத்துமதன் றன்னமருந் தொடுக்கவெகு மோகமாகி
அன்னமருந் தென்னினுமீ தென்னமருந் தென்னவுண்ணா தயர்கின்றாளே
சொன்னமருந் தமிழ்ப்புலவர்க் குதவும்வெங்க டேசுரெட்ட சுகுணமாலே.

167[தொகு]

சடங்கலா மகட்கிள மாந்தளிரே முத்தம் பொரியச் சகிக்குமாவன்
மடங்கலா னையைப் பாயும்வாறு போற்சீறு தென்றல் வருமா சொர்ணக்
குடங்கலா மதிதன மானனமாஞ் சேர்வாய் மருவார் கூடியுத்தம்
தொடங்கலாற் பவுரிகொண்ட தருமவெங்க டேசுரெட்ட சுகுணமாலே.

168[தொகு]

திருவிருக்கு மணிமார்ப னிளசைவெங்க டேசுரெட்ட தீரனென்னை
மருவிருக்கு மணி கணவனெனச்சேராநாண் மோகமயக்கத் தான்மேல்
விருவிருக்கு மணிவளையு மேகலையுஞ் சேர்ந்திடு மேன்மேலுந் தேன்பால்
அருவிருக்கு மணியலுங் காந்துந் தரளமென வருங்கண் ணருவிதானே

169[தொகு]

குருவடியை வணங்கும்வெங்க டேசுரெட்ட மேந்திரன்முன் கூசாமற்போய்
இருவடிவெல் லாம்பாரு வீணையைமீட் டனுராக மிசைத்தனேகந்
தருவடிதெள் ளமுதநவ ரசமொழுகும் படிசவ்வாதுபூசி
மருவடிபெண் ணேயினிமேன் மகராசி யாய்சுகித்து வாழ்குவாயே.

169[தொகு]

கன்னியுன்றன் மேற்பிரிய மையாமற் றோரையிவள் கண்டான் மூன்று
மன்னர்தனி லேயொருவன் பெயரையடிக் கடிவழுத்து வாளனத்தைத்
தென்னவன்றன் மாலையென்றாண் மதியையதிற் கடையெழுத்தாய்த் தீர்த்தாளையா
நன்னயகு ணாகரகு மாரவெட்ட ராஜேந்த்ர நளினமாலே.

170[தொகு]

பொன்னிலங்கை ராவணனை வென்றவிடை யாட்கள்கம் புளகக்கொங்கை
தென்னனைநே ராயிருக்குஞ் சொல்வார்த்தை கண்டு பயந்தேன் மகாவிற்
பன்னிவடி வூர்கணிதம் பம்மரம்பை யாகுமிவட் பரிந்துசேர்வாய்
சொன்னமொழி தவறாத குமார வெட்ட ராஜேந்த்ர சுகுணமாலே.

171[தொகு]

மெலக்கணக்காப் பொருந்துவோ மெனவேளை மணங்குறிக்கும் வேளைபார்த்து
நிலக்கணக்கா மன்னம்புகுந் துகுந்தாப்பாய் வென்மேனிரைத்தா னெண்ணிச்
சொலக்கணக்காழக் காநா னறிந்த வளாதெரிந்தவளா துயரமெல்லாம்
இலக்கணக்கா ரிகைதேர்ந்த குமாரவெட்ட பூபதிபா லியம்புவாயே.

172[தொகு]

அரைத்தசந்த னப்பொருந்தா ளமளியின்மேற் கண்டுயிலா ளரக்கன்மௌலி
நிரைத்தசந்த னம்பாலே துடைத்தமரு தப்பன்வர நினையாளன்னை
இரைத்தசந்த னம்பசலைக் காற்றுமென்றா ளேபரவை யிடத்திலேசென்
உரைத்தசந்த னம்பாருக் குள்ளிலையோ திவாகரனா ரொளிக்கின்றாரே.

173[தொகு]

அரமியஞ்சேர்ந் திளவாழைக் குருத்தைவிரித் ததிற்கிடத்த வதுவுஞ்சூடா
கரமியங்கொள் ளாதெழுந்து தரையில்விழுந் தாளதனைக் கண்டுதாய்மார்
சரமியங்கு தோவிலையோ வெனமூக்கிற் கையைவைத்தார் சத்யவாய்மைத்
திரமியங்குங் கிளுவைமரு தப்பனுக்கிச் செய்திசொல்லித் தெளிவிப்பீரே.

174[தொகு]

திருந்தலரி கலையடக்குங் கிளுவை மருதப்ப செயசிங்க மென்னைப்
பொருந்தலரி தாயிருந்தால் பூத்தானஞ் செய்யானோ போர்வேளையா
வருந்தலரிகுளையலரி மாவலரி பூவலரி மாதர்கீழ் பால்
இருந்தலரி வாராமுன் னிரவிதனின் மதியம் வந்தாலென் செய்வேனே.

175[தொகு]

வரைத்தூற்று நெடுங்காட்டு வழிப்புலவோ ரலையாமல் வளர்த்த தாய்போல்
உரைத்தூற்று மலைபுரந்த துங்கமரு தப்பனொரு நாளுஞ் சேரான்
கரைத்தூற்று நறும்பாலு மன்னமும்வேண் டேன்தனைக் கண்டலோமா
தரைத்தூற்று மெனவிடுத்துத் தாய்க்கிழவி கூடநின்று சலஞ்செய்தாளே.

176[தொகு]

செருத்தாக்கு மதப்புலியே திருமலைவே லப்பாநின் செவ்வாயூரல்
அருத்தாக்கு மரிக்கமுதங் கசப்பாகு மணைவேண்டா ளையோவாழைக்
குருத்தாக்கு மதைவிரித்துக் கிடத்தினுஞ் சூடெனவெழுந்து கொள்வாள்காமக்
கருத்தாக்கு முகநாதன் கங்குல்வரக் கண்டுமுனைக் கண்டிலாளே.

177[தொகு]

எடுத்துவரி முறத்தினிலிட் டிழைத்தகுறி பலித்ததென வெண்ணித்தந்த
வடுத்துவரி துக்கேறு மெனக்கனிவாய் மடுத்துறிஞ்சு மாதைப்பாடு
படுத்துவரிம் மாதரென்றால் சொல்பவரார் வளத்திலங்கைப் பதிமேற்சென்று
கடுத்துவரி தனைப்பொருத திருமலைவே லப்பனிதைக் கண்டிலானே.

178[தொகு]

பொருந்தமரங் கச்சரத்துக் கல்லாமல் அம்புலிக்கும் புறம்போவென்ன
இருந்தமரஞ் சிதமொழி யாளிப்பாடு படமுறையோ வெமதூதாணி
கருந்தமரு மெனையளியே யென்னளியே யாய்ச்சியர்தங் கலையைவாரிக்
குருந்தமரங் குழைத்தேறுந் திருமலைவேல் அப்பனிடங் கூறுவாயே.

179[தொகு]

திருகலகு வாய்ப்பறந்து சிறகொடுக்கி யிருந்துகடற் சேலைவாரிக்
குருகலகு வளையொதுங்குங் கூடலில்வாழ் திருமலைவேல் கொலுவீனீபோய்
இருகலகு தலைமொழியா ளித்தனைமா லானாளென் றிசைத்தேயன்னம்
பருகலகு வளைத்தாரை யாகிலுங்கேட் டாளெனச் சோபனஞ் சொன்மானே.

180[தொகு]

சருக்கரைய முதுகனிதேன் கலந்ததமிழ் முனிநிகர்வான் றறியார்பெண்டீர்
கருக்கரைய முனிவிசய கிரிவேலைச் சின்னோப கனவானாசைப்
பெருக்கரைய வளவலவென் றலைக்கேறி மயக்கினது பித்தமூர்ச்சைத்
திருக்கரைய வுடதமெடு கரைத்துமெல்லப் புகட்டமுது செலுத்தென்றானே.

181[தொகு]

பொருவதற்குச் சிலைக்காமன் வருமுனமே மதுரையிற் போய்ப்பொறி வண்டீர்காள்
செருவதற்குப் பகழ்விசயன் திருமலை நரேந்த்ரன்வரச் செய்வீரிங்கு
வருவதற்குத் தாமதித்தான் மாலையொன்று கேளந்த மாலைதானுந்
தருவதற்கு மதியானேன் மையலையா யினுந்திரும்பத் தரச்செய்வாயே.

182[தொகு]

தெந்தனம்பே சுங்கொழுநர் மயல்கொள்ளுஞ் சேல்விழியீர் திரண்டமேரு
பந்தனம்போற் றனமுடையீ ரின்கொலுரை யானுரைக்கும் படிநீர்கேண்மின்
எந்தனஞ்சே ராதவெங்க டேசுரெட்டன் தனையழைக்க வெழுந்துபோன
சந்தனஞ்சும் மாவந்தாற் பூசலாமெனக்கு மதன் தனக்குந்தானே.

183[தொகு]

விருத்தப்பா கலித்துறையும் வெண்பாவுங் கொச்சகமும் விரிவாய்ச் சொல்லக்
கருத்தப்பா வெனதுமகள் காமனரவிந்த மலர்க் கணையா னெஞ்சில்
இருத்தப்பா லனம்வெறுத்தாள் எனையுமவள் சகிதனையு மேசுறாணீ
வருத்தப்பாத் திரமலவே யணைந்திடுவாய் திருமலைவேல் வரிசைமாலே.

184[தொகு]

வீறுதர மேவலரை வென்றவெங்க டேசுரெட்டன் மேவவேண்டி
நூறுதர மாகவண்டைத் தூதுவிட்டா ளனமருந்தா ணொந்தாள் கண்ணீர்
ஆறுதர மேற்பாய வனங்கன் பூவாளிமுலை யானையூடே
ஏறுதரமாச் செவியைத் துளைக்குதென்றே யோலமிட்டா ளெனச்சொல்மாதே.

185[தொகு]

இக்கோடி வளைப்பனென விருகோடி யிளம்பிறைக் கீற்றெழுந்து வானில்
முக்கோடி வளைப்ப மதனாற்கோடி கணைதொடுத்தான் முன்னிற்பாளோ
கொக்கோடி யிரையெடுக்கு மிளசைநகர் செழிக்கவருங் குமுணாவெட்டுத்
திக்கோடிப் புகழ்படர்ந்த வடமலையா கடமலைமுன் சென்றமாலே.

186[தொகு]

கெஞ்சுமா தங்கமுகம் பார்த்திரங்குந் திருமலைவேற் கிரியினானீர்
அஞ்சுமாதஞ் சுமந்து பெற்றபலன் கிடைத்ததெனக் காறுமாதங்
கஞ்சுமாதந் தனைப்பெற் றிழந்தோர் போற்றிரிந்து கலங்குதேழை
நெஞ்சுமா தம்பலுக்கு நேர்ந்தொருவன் பின்தொடர்ந்து நேர்கின்றாளே.

187[தொகு]

திடக்குவடக் கடக்களிற்றான் கம்பளவல் லக்கர்குலன் தெறகுப்பூர்வ
குடக்குவடக் கடற்கரசன் மலையாண்டி ராசன்முல்லை கொடுவந்துன்னை
மடக்குவடக் கனசெய்வண் மதப்பயலே யுனக்கினி யொவ்வாதுபேரி
அடக்குவடக் கயமீனின் சடக்குநடக் காதினிமேல் அறிந்துபாரே.

188[தொகு]

இலக்கார மணியாள்கண் ணிமைபொருந்தாண் மனமதனா ரெய்தபுண்ணில்
கலக்காரம் பெய்த்தெனக் கதிர்மதியுஞ் சுழன்றெரிப்பக் கனன்றாளென்றே
சொலக்கா ரம்மியமாக விலக்கணநாற் கவிப்புலமைத் தொன்னூலோர்க்குப்
பலக்கார மருள்விசய கிரிவேலாஞ் சின்னோப பதிச்செவ்வேட்கே.

189[தொகு]

இப்பளப் பாறையிற்படுக்கச் சொல்லுகிறீர் செடிமறைவோ வில்லைச்சூழ
உப்பளப் பாறையுமாச்சுக் கணவனோ வெகுகோபி யும்மைக்கண்டால்
கொப்பளப் பார்க்கினும் பார்ப்பான் பேனைப்பார்க்கினும் பார்ப்பான் குணமில்லாத
தப்பளப் பாவிருக்குதைய கிளுவைமரு தப்பமன்னா தமிழ்க்கோமானே.

கட்டளைக் கலிப்பா[தொகு]

190[தொகு]

ஆரசந் திரணத்து மண்டு மண்டிலாளரு வருத்துவிரு விருப்பாகியே
ஊரசந் திரவிற் பாதிசென்றுமே யிறங்கிலாண் மகட்கென் செய்வேனையா
தீரசந் திரகாவியிடக் கயாசிங்கவுத் தண்டத்தூர் தண்டனேரண
வீரசந் திரகிரி நகராதிபா வெங்கடேசுர வெட்டம ராஜனே.

191[தொகு]

தடக்கயத் தலரெல்லா மெடுத்துவேள் சமரச் சோலையில் வந்தானென வதை
அடக்கயத் தையுந் தாயர் கொன்றால் வெறியாட்டுத் தானிவள் ஆசையைத் தீர்க்குமா
கடக்கயத் தடையார் புவிகைக் கொண்டு கட்டுஞ் சந்திரகாவி யிடாலெனும்
இடக்கயத் தன்னிலை நாட்டுமா மண்டலேசுரா வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.

192[தொகு]

கலக்கை வாளியை யார் தடுப்பார் தென்றற் காற்றுக் காற்றுவளோ மடவார்வசை
சொலக்கை வாய்பொத்தி மெய்சோர்ந்து இருக்கவுந் தோகை மோகந் தொலையாது பாரையா
உலக்கை வாரியடிக்குங் கடாசலத் துதயனே கணை யொன்றின் மராமரத்
திலக்கை வாலியைப் பார்த்தெய்தமா மண்டலேசுரா வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.

193[தொகு]

குரங்கிக் காய்ந்தினந் தென்றலு மன்றிலுங் கோபங் கொண்டதனான் மாதரேதுசெய்
வரக்கிங்கா பொரவாவென் றழைப்பர் மறுத்துப் பேசவும் வாயிலை மாங்குயில்
அரங்கிக்கா வன்றிருந் திசைபாடவு மாற்றுமோ மயலாற்றாத பேதைக்கே
இரங்கிக் காவிக்ர மார்க்கா செகமண்ட லேசுரா வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.

194[தொகு]

தானவாரண முலையாளுக்குத் தான வெண்டளப் பத்திலே மையல்
ஆனவாறு மறியானிவள் கண்ணீ ரானவாறு மதியார் மின்னாரன்றே
வானவா கண்டலா மண்டலாதிபா வானவா வளவா மதுராபுரி
மீனவா விசயா மீனகேதனா வெங்கடேசுர வெட்டம ராஜனே.

195[தொகு]

துரையத்தந்தி தலைமுலைமேல் வைத்துத்தோயு நாளெந்நாளோ விரகத்தை
விரையத்தந்தி வளவுஞ் செய்தாலிந்த மெல்லியற் கென்ன சொல்லியுந் தேற்றுவேன்
தரையத்தந்தி வரையேந்து மேகம்போற் றணிந்த கொம்புபடத் தன்னிழலைப் பாய்
திரையத்தந்தி நடாத்தியமா மண்டலேசுரா வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.

196[தொகு]

அந்திரா மனமுன் மேலென்றாற் பகலடங்குமோ மையலானாலு மையநீ
வந்திரா மனம் பேதைக்கு வேளம்பு வச்சிராயுதம் போல்வந்து தைக்குமே
முந்திரா மனம் பாலுண்ட வாரிதி முழக்கமே சகியாளே யிளசைவாழ்
இந்திரா மனுவேந்தா செக மண்டலேசுரா வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.

197[தொகு]

கொடிக்கத் தத்தும்மலையும் அடக்கி நெற்குறியும் பார்த்துக் குணம் பார்த்துப் பார்த்திந்தப்
படிக்கத் துவளைசோரச் சோருமென் பாலனத்துக்குன் பாலனம் வேண்டுங்காண்
அடிக்கத் தத்துகளையும் பரப்பி மூதண்ட கூடமுகடும் படீரென
வெடிக்கத் தத்தும் பரியா திருமலை வேலுராஜ விவேக குலேசனே.

198[தொகு]

பூசத்தந்தி முலையும் புண்ணாக்கினீர் போதும் போதும் புழுகுஞ் சவ்வாதுமா
காசத்தந்தி மதியுஞ் சுடுமென்ற காகப்பேய் கொண்ட கள்ளிக்கென் சொல்லுவேன்
மாசத்தந் திசை யெல்லாம் அதிரவே மந்தரத்தை மருப்பிட் டிடித்தளி
வீசத்தந்தி நடாத்துந் திருமலை வேலுராஜ விவேக குலேசனே.

199[தொகு]

ஓர்ராவுண்டு உமிழுமதிப் பிள்ளையூர ராவுறங்காத பெண்பிள்ளை மால்
கூரராவு கணைகள் தொட்டான் மதன் கும்பராசி கொழிப்பது முத்தமாம்
சூர்ராவி துடிப்பத் துடிப்பத் திண்டுணைக் கராசலந் துண்டிக்கக் கண்டிக்கும்
வீர்ராகவ ராமா திருமலை வேலுராஜ விவேக குலேசனே.

200[தொகு]

சங்கரா வையகமும் பழிக்குமாந் தாயர் தூற்றிலெனும் பேதை நெய்முடை
அங்கரா வையழைக்குங் கழைக்குர லனங்கவேளை யழைக்கு மென்றேங்கு மால்
கங்கராவை யடர்வது போலொருகைக் கடாசலங்கால் சாயத்தாக்கிய
வெங்கராவை யிடறுந் திருமலை வேலுராஜ விவேக குலேசனே.

201[தொகு]

சந்தனத்தை விடுக்கு முன்னே வில்வ சந்தனத் தையலைப் பகைத் தேய்வென
சந்தனத்தைத் துளைக்குது பாலுங்கசந் தனத்தையு மப்படிச் செய்ததே
சந்தனத் தையண் திணிபுயா சலத்தாருவே தண்டமிழ்க் கவிஞோர்தம்
சந்தனத்தைத் துசங்கட்டி யீந்தரு டந்த்ரனே முத்துமந்த்ரி நரேந்த்ரனே.

202[தொகு]

பூரிக்குஞ் சரமாவார மார்கொங்கை பூவைதாங்கப் பொறாதத் தொனிக்கடல்
பேரிக்குஞ் சாபம் போலுந் தென்றற்கும் பெருமயக் குற்றுருகக் கண்டாங்கு வேள்
நேரிக்குஞ் சரமும் கொண்டு வந்து போர் நிறைந் திட்டானினி நீவந்து சேர்மத
மாரிக்குஞ் சரமீதாகு மிந்திராவன் யராயவசு வப்பதூயனே.

203[தொகு]

நகத்துவார யிலாங்கண்ணி கொங்கை கணையவா ரறத்தைத் தவழித் தென்றல்
புகத்துவாரஞ் செய்தாலந்த வேளம்பைப் பொறுக்கவாரம் புயக்கண்ணி தந்துசேர்
சகத்துவாரஞ் செயுந் தென்னிளசை ராசத்து வாரத்துக் கோர் மந்திரி யாய்வந்த
மகத்துவாரஞ் சிதவசனா நரவாகனா நம்வசுவ ப்ரதீரனே.

204[தொகு]

கருத்தவா விலையாள் கரனாய் வருங்காமனா லுடல்வாடா தின்றின்பத்தை
அருத்தவா விலையாயினிப் பேதையோவாவி தாங்கரிதாகு மையாகண்பார்
திருத்தவா விலையாத் தன்னை நல்கிய செந்தமிழ்க் குத்தியாகா நிணப்புலால்
மருத்தவா விலையாரயில் வேற்கரா வன்யராய வசுவப்ப தீரனே.

205[தொகு]

நேற்றிருந்த நிலவுமந்நேர மென்னினை விருந்த நினைப்பு மிளந்தென்றற்
காற்றிருந்த சுகமு முன்னாணை யென்கருத் திருந்ததும் யாதென்று சொல்லுவேன்
சேற்றிருந்த செந்தாமரைப் பூவின்மேல் திருவிருந்தது போலச் சிம்மாசனம்
வீற்றிருந்த துரையே திருமலை வேலுராஜ விவேக குலேசனே.

206[தொகு]

நிருதராக வனந்தந்த கங்குலின் நேரத்தே மதனேறிய வூர்திமேல்
வருதராக வனந்தந்த மங்கையை மருவுவாய் மலர் மஞ்சத்தின் மீதிலே
விருதராக வனந்தந் தளஞ்செறி வேந்தன் ராவணன் சென்னி பத்தீர்ந்திடப்
பொருதராக வனந்தந் தகுஞ்செய பூபனே வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.

207[தொகு]

தடக்கயக் கயலோ விடமோ விழிதாமரைக் குமிழோ சிமிழோ திரண்
டிடக்கடக் குடமா முலைமா மதனெய்ய வாடி யுருகுதல் பாரையா
உடக்கடக் குக்ரமாங் கும்ப கன்னனை யுசித விந்திரசித்தைச் செயங்கொண்ட
திடக்கடக் கயங்காத்த மனோகரா சீதரா வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.

208[தொகு]

உரைக்கத் தத்துவத்துட் பொருளாகிய வொருவன்கை வில்லுக்கொப்பா மிவள்கொங்கை
வரைக்கத் தத்துவசக் கரன்போரிது மட்டுண்டோ வந்து முட்டுதல் பார்க்கிலாய்
தரைக்கத் தத்துவளையு மெழுப்பிப் பூச்சக்ர வாளத்தைத் தாக்கில் கடல்கடந்
திரைக்கத் தத்துவயப் பரியா மண்டலேசுரா வெங்கடேசு ரெட்டேந்த்ரனே

.

209[தொகு]

விகடத்தந்தி மதிகாய மாரவேள் விடுத்த வத்திரத்தைத் தூடுருவியென்
மகடத்தந்தி வலையாகுங் கட்புனல் வடித்துத் தந்தியிசை வெறுப்பாவளோ
சகடத்தந்திப் பரித்திரட் கூட்டிய சத்துருத் திரட்டைக்குத் திடத்திரும்
புகடத்தந்திக்கு தயாசெய்தா பூதரா வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.

210[தொகு]

பருதியாக மகமாக மூர்மதி பணை யெக்காளம் வெடியா மலரம்பு
விருதியாக மகன் வச்ரமா மிவைமின் பொறுத்திடுமோ சேர்திருவருட்
கொருதியாக மகவாசகங் கற்றோர்க் குற்பனா வெங்கள் குப்பண வேண்மைந்தா
வருதியாக மகமேருநேர் செல்வவன் யராயவசு வப்பதூயனே.

211[தொகு]

பண்ணப் பம்பர மன்னமுணாமலே பாற்றுப்பம்பரஞ் சோர்ந்து மயல்கொடு
வண்ணப் பம்பரமாங் குயமீறிமேவ விருப்பம் பரக்கண்ணினட் சேரையா
தண்ணப் பம்பரவை சூழ்பதி யரசருங் கப்பம் பரந்தே கொடுவந்தடி
விண்ணப் பம்பரமென்றே தொழுஞ்செக வீர்ராம குமார வெட்டேந்த்ரனே.

212[தொகு]

உன்னக்காவடிப் பூப்பறியாண தியம்புகாள் வடிபாலை யருந்தென
என்னக்காவடி வேண்டா மென்றோதினா லேதுக்காவடியங் காமற்சேருவாய்
அன்னக்காவடியாற் கழுகாசலத்தாதிக் காவடிமைத்திறம் பூண்டுக
வின்னக்காவடி வேலாவென்றுஞ் செகவீர்ராம குமார வெட்டேந்த்ரனே.

213[தொகு]

ஆரிச்சந்த நயம்படிப்பார் மதனாலச் சந்தனக் குண்டாகியே பினும்
தேரிச்சந்தனமே சொலுவாயெனச் செப்பிச் சந்தனங் கைதனைச் சேருவாய்
பூரிச்சந்த நம்விம்மிய மாதரைப் புலப்பச் சந்தனதாக வுளத்தில்வை
வேரிச்சந்தந மார்பகத்தாய் செக வீர்ராம குமார வெட்டேந்த்ரனே.

214[தொகு]

சம்புதைக்குங் கருங்காலன் போற்கங்குல் சாரவேலை யொலிக்குப் பயந்துநோக்
கம்புதைக்குமென் பெண்பிள்ளை மேலினிக் காமராஜன் எடுத்துத் தொடுத்திடும்
அம்புதைக்கு முன்னே யணைந்தால் இவளாவி தக்குமிப் பூவிலிருக்கு நம்
பும்புதைக்கு ணிதியெனவாய்த்த வெம்புண்ணியா வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.

கட்டளைக் கலித்துறை[தொகு]

215[தொகு]

மாதானை வேந்தர்க்கு மேலோன் பெரிய சுவாமியை யென்
மாதானை வேல்வரக் கண்டனள் கண்டு மயங்கி யுஞ்சும்
மாதானையோ வரக்காணேன் எனது வளவுக்குளம்
மாதானை போச்சென்று வந்தாளினிச் செல்ல வாயில்லையே.

216[தொகு]

அச்சங்க பாணிபதம் போற்றிச் செந்தமிழ்க் கன்பியற்றி
அச்சங்க மேவுந் திருமலை ராயன் அணைந் திலனான்
அச்சங் கலாமதிக் கென்று இருந்தேன் எந்தனாகத்தை நூல்
அச்சங்க மாகத் துளைத்தான் மதப்பயல் அம்புகொண்டே.

217[தொகு]

அத்திக் குதையன் திருமலை வேலப்பன் அன்பு சொல்லத்
தித்திக் குதையன் கருத்தென்னமோ மதிசென்று குணக்
குத்திக் குதையன் கதிர் காட்டுமோ விருகொங்கை யின்மேல
தத்திக் குதைய மாட்டேறுகு காமன் சரங்கள் வந்தே.

218[தொகு]

கலவளைக் குண்டிவள் கைவளை போனதுங் காரிகையார்
சொலவளைக் குந்தத் தரம் போலத் தைப்பதுஞ் சொல்பவரார்
நலவளைக் குஞ்சரியாஞ் செவிச் சானகி நாண்புனைய
வெலவளைக் குஞ்சிலையானே திருமலை வேலப்பனே.

219[தொகு]

முடிக்கு மருப்புக் கிசையாப் பைங்கூந்தலம் மூரிமதன்
பிடிக்கு மருப்புக் கிலக்கல்லவே யெதிர்பேசு மொன்னார்
குடிக்கு மருப்புக் கடலேற்று வித்துக் கொடிமதில் பாய்ந்
திடிக்கு மருப்புக் களிற்றா ளினளசையி லெட்டமனே.

220[தொகு]

தடத்தத் தளிச்சிறு நாண் பூட்டி மார சரந்தனமு
கடத்தத் தளித்தலை தோற்றாட்குத் தோற்று கடாசலத்தை
நடத்தத் தளிக்குள் பதைத்துக் கிடக்கு மொன்னர் கண்முறை
இடத்தத் தளிக்கப் பொரும் வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.

221[தொகு]

செல்லுக்கு மல்லுக்கு நேரோதி மங்கலச் சித்தச வேள்
வல்லிக் கிணையிலை வல்லிக்கிணை கந்த மாதனஞ் சொன்
முல்லைக்கு மானுக்கு மாந்தளிருக்கும் இம்மூன்றினுக்கும்
பல்லக்கு மேல்வரு மன்னா வெட்டேந்த்ர பாண்டியனே.

222[தொகு]

கவளம் வளைக்குக் களவு செய்தோன் வஞ்சகப் பிணைமேல்
துவள வளைக்குஞ் சிலையான் மருதப்ப துங்கன் வரான்
தவள வளைக்குத் தடை யிடுவார் இல்லை சந்து சொல்ல
அவள் அவளைக் கும்பிடப் படுமோ தண்ணளிக் குலமே.

223[தொகு]

இந்திரச் செலவன் றுரை பூலிக்காத்தப் பளிங்கிவள் பால்
வந்தில னின்னமும் வேள் கணையால் கண்வளர் சசிமு
கந்திரன் சானுவில் வைத்தது மகரகர்க் கடக
சந்திர யோகங்களா மடவீர் கணி தந்திடமே.

வெண்பா[தொகு]

224[தொகு]

புத்தியின் பேர்க்குள்ளாய் வேள் பொற்றொடிக்கி முன்புவந்து
சத்தியப் பேர்மீது சரந்தொடுத்தான்- நித்தம்
குருபதம் பராவு மனுகூலா பொன்மாது
மருவும் வெங்கடேசு ரெட்டமா.

225[தொகு]

அத்திதனை யூர்ப்பசு பேராக்கிச் சினந்தடித்துச்
சித்தசன் என்மேற் சமரசஞ் செய்தானே- முத்தமிழ்க்கென்
நாளும் பசுங்கனக நல்கிமுதல் வள்ளலென
வாழும் வெங்கடேசு ரெட்டமா.

226[தொகு]

மன்னன் வெங்கடேசு ரெட்டமா. நிதிபாற் றூதுரைத்துக்
கன்னிதார் வாங்கிவரக் காண்கிலனே- மின்னுபசுஞ்
டொன்னவடி வாயிலங்குந் தோகைரதி கணவன்
கன்னல் வளைத்தெய்யுங் கணை.

227[தொகு]

தண்ணமுத பாஷிதவிஸ் தாரன் வெங்கடேசு ரெட்ட
புண்ணியவான் வந்து புணராநாள்- உண்ணமுது
மாமனத்தை யேகுமட்டம்பு விட்டாள் பால்கொடுக்க
வீமனத்தை பேரெடுத்தாண் மின்.

228[தொகு]

தண்டமிழ் தேருத் தமதயாளு வெங்கடேசு ரெட்ட
மண்டலிகன் கூடி மருவாநாள்- செண்டு
முலைமானாட் கின்னமுது கொடுக்கவே வாட்டுத்
தலையானாண் மான் மயக்கத்தால்

229[தொகு]

தெள்ளுதமிழுக் கருடியாகி வெங்கடேசு ரெட்ட
வள்ளன் மேலாசை கொண்ட மானாண்மேல்- துள்ளும்
கயவாளி வேட்குவரி கைமுரச னாற்பங்
கயவாளியே வானோ காண்.

230[தொகு]

கொங்கை கும்பகோணமா கூந்தலுமோ கூடலா
தங்கும் விழியம்பா சமுத்திரமா- பைங்கனக
மேருவெங்கடேசு ரெட்டமேந்த்ரா யிவள் சசிபுற்
றாருடையான் ஊரிடைய தாம்.

231[தொகு]

மெய்யன் வெங்கடேசு ரெட்ட வேந்தன்பாற் சந்துரைத்துத்
தையல் கண்ணி வாங்கித் தரவிலையே- கையதினாற்
றுண்டித்தாண் மென்று மென்று துப்பினாண் மாரனையும்
கண்டித்தாள் அச்சமற்றாள் காண்.

232[தொகு]

பூத்தூக்கி யுண்டவனைப் போந்தேறிக் கொண்டவனே
மாத்தூக் கியைத்தூக்கி வந்தானே- நேர்த்திதரும்
பொன்னா பரணா புயசயிலா தென்னிளசை
மன்னா குமார வெட்டமா.

233[தொகு]

நற்றமிழ் வாணர்க்கு நிதிநல்கும் வெங்கடேசு ரெட்ட
கொற்றவன் தாரன்றியான் கோயிலின்முன்- உற்றகொடிக்
காலைவிட்டப் பாலே நீங்காதது முன் றுண்டுபட
வேலையிட்ட தேது விடு.

234[தொகு]

கன்னன் வெங்கடேசு ரெட்ட காண்டிபன் மேன் மாமோக
சன்னதங் கொண்டாட்கு முல்லைத் தாரல்லா- தென்னசெய்தீர்
தையன் முன்பூமுன்ன ரட்சரம் உற்றதைத் தெரியச்
செய்யும் பேரென்ன செயும்.

235[தொகு]

தாண்டுபரி தூண்டு திடசாலி வெங்கடேசு ரெட்ட
பாண்டியன் மேலாசை கொண்ட பைந்தொடியை- வேண்டியே
ஒன்றிரண்டாப் போக வொருத்தனை யிங்கேன் கொணர்ந்தீர்
மின்றுயர்க் கென்செய்யும் விடு.

236[தொகு]

கல்விகரை கண்ட கும்ப கம்பன் வெங்கடேசு ரெட்ட
வில்விசயன் தென்னிளசை வெற்பிடத்திற்- சொலவதென
கட்செவியும் அம்புலியுங் கங்கையு மோர் வெம்புலியிற்
பட்சமுற வைத்தார் பதி.

237[தொகு]

சங்கநிதி யென்னத் தழைத்த வெங்கடேசு ரெட்ட
சிங்கமிளசைச் செழுங் கிரியில்- அங்குகண்டேன்
மாநிலத்தை முற்றுமொரு வள்ளனடு வாதியந்தந்
தானிருப்ப தேந்திநிற்கத் தான்.

238[தொகு]

தாலமுற்றும் வாழ்த்து மிந்த்ரதாரு வெங்கடேசு ரெட்ட
வாலகிருஷ்ண விம்பன் மணிவரையின்- மேலு
மருக்கமழு நன் மாமனையு மொருசந்தி
இருக்கவதிற் கண்டுகொண்டே னின்று.

239[தொகு]

தங்கள் குலதீபமெனத் தாரணியோர் கொண்டாடும்
எங்கள் வெங்கடேசு ரெட்ட மேந்த்ரன் வெற்பில்- செங்கணரி
உண்டதுடன் அவனின் றூதினதுஞ் சேர்ந்தவன் பேர்
கொண்டதின் மேற்கண்டேன் குறி.

240[தொகு]

அழகி சக்கதேவிக் கனந்தம் பணியால்
விழையுங் குமார வெட்ட வேந்தே- பழகுமொரு
கூந்தல்கள மல்குலகடு சொன்னேன் கனகம்
ஏந்துதன மாந்தளிர் மெய்யாம்.

241[தொகு]

ஏகாம்பர ரிடப்பேரில்லாத தாழ்வு சொல்லப்
போகாது வேறு புகலிலையே- பாகார்ந்த
சந்த மதுரத் தமிழுக் ககத்திய னென
வந்த வெங்கடேசு ரெட்டமா.

242[தொகு]

திரைக் கலைக்கித் தையலென்பதே யிருபத்தேழென்
னரைக் கலைக்கித் தையலனேகம்- உரைக்கவொண்ணா
தந்தம் ப்ரகண்டா வரசர் சிரோரத்ன மென
வந்த வெங்கடேசு ரெட்டமா.

243[தொகு]

சென்றலந்தார் சேர்முத் திருளப்ப பூபதிபான்
மன்றலந்தார் வாங்கி வருமளவும்- குன்றுமுலை
ஏழாயிரம் பண்ணையில் லுடம்பு வாடாதே
ஏழாயிரம் பண்ணை யில்.

244[தொகு]

கூன்கலை நிலாவின் குளிர்ச்சி பொறுக்காது கல்வி
மான்கலை யில்லாமன் மருளுமா- தேன்கலையச்
சந்தநறுங் காவின்மந்தி தாவுமிளசை நகர்
வந்த வெங்கடேசு ரெட்டமா.

245[தொகு]

கொச்சகம்[தொகு]

நீகா விதுரா நெருப்பா மிவட்கு விலக்
காகா விதுரா கதம் புரிவார் கன்னியர்கள்
வாகா விதுரா மாரா மரதி மார வச்ர
தேகா விதுரா திருமலை வேலேந்திரனே.

246[தொகு]

அங்காவித் தாரா வணைவது கண்டின்ப மொரு
பங்காவித் தாரா பதியேயென் றேங்குவளோ
துங்காவித் தாரா துணை முலையா ராசை கொள்ளும்
செங்காவித் தாரா திருமலை வேலேந்திரனே.