கணினி களஞ்சியப் பேரகராதி/C
C
C : சி : ஒரு கணினி மொழி. நுண்கணினிகளில் பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு நிரலாக்க மொழியின் முழுப்பெயர். பயன்படுத்த எளிமையாகவும், அதே வேளையில் மிகவும் திறன்மிக்கதாகவும் தொகுப்புகளை உருவாக்கவல்ல மொழி. கீழ்நிலை எந்திரக் கட்டுப்பாடுகளையும், உயர்நிலை சொல் தொடர்களையும் இணைத்து உருவாக்கப்பட்ட இடைநிலை மொழி.
C++ : சி++ : பெல் ஆய்வுக் கூடத்தில் 1980களின் தொடக்கத்தில் ஜேர்ன் ஸ்ட்ரெளஸ்ட்ரப் உருவாக்கிய கணினி மொழி. டென்னிஸ் ரிட்சி உருவாக்கிய சி-மொழியின் விரிவாக்கமாய் அமைந்த மொழி. சி. மொழியின் பொருள்நோக்கிலான நிரலாக்கப் பதிப்பு என இதனைக் கூறலாம். ஆப்பிள் மற்றும் சன் நிறுவனங்கள் உட்பட பல்வேறு கணினி நிறுவனங்களும் இம்மொழியை விழைந் தேற்றுக் கொண்டன.
C2 : சி2 : அமெரிக்காவில் தேசிய கணினி பாதுகாப்பு மையம், கணினி அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பாக வரையறுத்துள்ள அளவுகோலில் மிகக்குறைந்த அளவிலான பாதுகாப்பு அலகு. பயனாளர், ஒரு நுழைசொல் (password) மூலம் கணினி அமைப்பை அணுக வேண்டும். தரவு பரிமாற்றங்களை தணிக்கை செய்யும் முறையும் இதில் அடங்கும். ஆரஞ்சு புத்தகத்தில் சி2 பாதுகாப்புத் தர முறை விளக்கப்பட்டுள்ளது. காண்க orange Book.
C2C : நுகர்வோர் - நுகர்வோர் மின்வணிக நடவடிக்கை : மின்வணிக (e-commerce) நடவடிக்கைகளில் வாடிக்கையாளர்கள் (customer) அல்லது நுகர்வோர் (consumer) தங்களுக்குள் நடத்திக்கொள்ளும் வணிகப் பரிமாற்றம். தம்மிடமுள்ள ஒரு பழைய பொருளை இணையத்தில் விளம்பரம் செய்து விற்றல் அல்லது ஏல விற்பனை இதில் அடங்கும்.
. ca : . சிஏ : இணையத்தில் ஒரு தள முகவரி கனடா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் களப்பெயர்.
. cab : . கேப் : ஒரு குறிப்பிட்ட வகை கோப்பின் வகைப் பெயர் (file extention). பல கோப்புகளை இறுக்கிச் சுருக்கி ஒரே கோப்பாக உரு வாக்குவார். பின்அதனை விரித்து மீண்டும் தனித் தனிக் கோப்புகளைப் பெறுவர் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 95/98 போன்ற இயக்க முறைமைத்தொகுப்புகள் இது போன்ற கேப் கோப்பு வடிவிலேயே வழங்கப்படுகின்றன. cab என்பது cabinet என்பதன் சுருக்கம் ஆகும். பல கோப்புகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் பெட்டி என்ற பொருளைக் குறிக்கிறது.
cabinet : நிலைப்பெட்டி; கணினிப் பெட்டி; வெளிக் கூடு : ஒரு கணினியின் இன்றியமையாத பாகங்களான மையச் செயலகம், நினைவகம், புறச் சாதனங்களுக்கான விரிவாக்கச் செருகுவாய்கள் அடங்கிய தாய்ப் பலகை மற்றும் நிலை வட்டகம், நெகிழ் வட்டகம், குறுவட்டகம் இவற்றை உள்ளடக்கியுள்ள கணினிப் பெட்டி.
cable : வடம் : ஒரு அமைப்பின் இரண்டு பகுதிகளை ஒன்றாக இணைக்கப் பயன்படும் கம்பிகளின் கற்றை மின்சக்தி அல்லது மின் சமிக்கைகளைக் கொண்டு செல்கிறது.
Cable Connector : வடம் இணைப்பி : ஒரு கணினியையும், வெளிப்புற உறுப்புகளையும் இணைக்கும் வடங்களுக்குப் பயன்படுத்தப்படும் நுழை/துளை இணைப்பிகள்.
cable matcher : வட இசைவி : ஒரு சாதனத்தில் இணைக்கப்படும். வடத்தல் சற்று வேறுபாடான் கம்பி இணைப்புகள் இருக்கும்போது, அதனைப் பொருத்தமானதாய் மாற்ற உதவும் ஓர் இடையிணைப்புச் சாதனம்.
cable modem : வட இணக்கி : சாதாரணத் தொலைபேசிக் கம்பித் தடத்தில் இணைந்து செயல்படும் இணக்கியிலிருந்து மாறுபட்டது. கோ-ஆக்சியல் கேபிள் எனப்படும் இணையச்சுவடம் வழியாகத் தரவுவை அனுப்பவும் பெறவும் செய்கிற இணக்கி. வினாடிக்கு 500 கிலோ துண்மி (பிட்) கள் வரை தரவு பரிமாற்ற வேகமுள்ளவை வட இணக்கிகள். தற்போது அதிகமாய்ப் பயன்பாட்டில் உள்ள வழக்கமான இணக்கிகளைவிட அதிக வேகத்தில் தகவலை அனுப்ப வல்லவை.
cable ribbon : வட நாடா.
cable television : வடத் தொலைக்காட்சி.
cabling diagram : வட வரைபடம் : கணினி அமைப்பில் அதன் பாகங்களையும் புறச்சாதனங்களையும் இணைக்கும் வடங்களின் பாதைகளைக் காட்டும் திட்ட வரைபடம். கணினியின் வட்டகங்களை அவற்றின் இயக்கிகளோடு இணைக்கும் வட இணைப்புகளைப் புரிந்துகொள்ள இத்தகைய வரைபடங்கள் தேவை.
cache : இடைமாற்றகம் : தற்காலிக இருப்பகமாகப் பயன்படும் ஒரு சிறிய அதிவேக நினைவகம்.
cache card : இடைமாற்று அட்டை : ஒரு கணினியின் இடைமாற்று நினைவகத்தை (cache memory) அதிகப்படுத்தும் விரிவாக்க அட்டை.
cache controller : இடை மாற்றகக் கட்டுப்படுத்தி : இடை மாற்று நினைவகத்திற்கு படி / எழுது இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் மின்னணு மின்சுற்று. கட்டுப்பாட்டு பொறியானது இன்டெல் 82385 போன்ற ஒரு சிப்புவாகவோ அல்லது தனிச் சாதனமாகவோ இருக்கலாம்.
cache memory : இடைமாற்று நினைவகம்; அவசரத்தேவை நினைவகம் : தகவலைத் தற்காலிகமாக சேமித்து வைப்பதற்கான சிறிய அதிவேக நினைவகம். மெதுவாக இயங்கும் மைய நினைவகத்திற்கும், வேகமான மையச் செயலகத்துக்கும் இடையில் வழக்கமாகப் பயன்படுத்தப்படுவது. அழைத்தெழுது அட்டை (scratch pad) என்றும் அழைக்கப்படுகிறது.
cache settings : இடைமாற்று அமைப்புகள்.
caching : இடைமாற்றல் : விரைவு அணுகலுக்காக இடை மாற்றம் நினைவகத்தில் தரவுகளை வைத்திருத்தல்.CAD : காட் : கணினி வழி வடிவமைப்பு என்று பொருள்படும் Computer - Aided Design என்பதன் குறும்பெயர்.
CADAM : கேடம் : Computer Graphics Augmented Design and Manufacturing என்பதன் குறும்பெயர். கணினி வரைபடங்களைக் குறிப்பது.
CAD/CAM : கேட்/கேம் : கணினி வழி வடிவமைப்பு/கணினி உதவும் உற்பத்தி எனப் பொருள்படும். Computer-Aided Design / Computer - Aided Manufacturing என்பதன் குறும்பெயர்.
CADD : கேட் : கணினி வடிவமைப்பு மற்றும் வரைவாக்கம் என்று பொருள்படும் Computer Aided Design and Drafting என்பதன் குறும்பெயர். அளவு அமைத்தல், சொல் நுழைவு உள்ளிட்ட, வடிவமைப்புக்கான கூடுதல் வசதிகள் கொண்ட காட் அமைப்புகள்.
CADD centre : கேட் மையம்.
caddy : குறுவட்டுறை : ஒரு வட்டினை இந்த குழைம (பிளாஸ்டிக்) உறையில் இட்டு குறுவட்டகத்தில் செருகுவர். பழைய கணினிகளில் இருந்த ஒருவகை குறுவட்டகத்தில் இது போன்ற உறையிலிட்ட குறுவட்டினைத்தான் பயன்படுத்த முடியும். இப்போதுள்ள குறுவட்டகங்களில் உறையில்லாத வட்டுகளைப் பயன்படுத்தலாம்.
CAE : சிஏஇ : கணினி உதவிடும் பொறியியல் என்று பொருள்படும் Computer - Aided Engineering என்பதன் குறும் பெயர். அடிப்படை பிழை திருத்தத்திற்கான வடிவமைப்பை அலசுகிறது அல்லது உற்பத்தி செய்யப்படக்கூடியதுதானா என்பதன் செயல்பாட்டையும், பொருளாதாரத்தையும் ஆய்வு செய்து தருகிறது. கேட் /கேம் வடிவமைப்பு தரவுத் தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட தகவலைப் பயன்படுத்தி ஒருபகுதி, உற்பத்திப்பொருள் அல்லது வடிவமைப்பில் உள்ள அமைப்பினை ஆராயவும் பல்வேறு சூழ்நிலைகளில் அதன் செயல்திறனை மாதிரியாகச் செய்து காட்டவும் பயன்படுகிறது.
CAFM : சிஏஎஃஎம் : Compare to Aided Factory Management என்பதன் குறும்பெயர். கணினி உதவிடும் தொழிற்சாலையாகும்.
CAGE : பெட்டி : அச்சிட்ட மின் சுற்று அட்டைகள் ஏற்றப்படும் ஒரு பெட்டி,
CAI : கேய் : கணினி உதவியுடன் கற்றுத் தரல் என்று பொருள்படும் Computer-Assisted Instruction என்பதன் குறும்பெயர்.
CAL : கால் : கணினி வலுப்படுத்திய கற்றல் என்று பொருள்படும் Computer Augmented Learning என்பதன் குறும்பெயர்.
calculate : கணக்கிடு; மதிப்பிடு.
calculated field : கணக்கிடப்படும் புலம் : பிற புலங்களைக் கணக்கிட்டு பெறப்பட்ட எண் அல்லது தரவு புலம். பயனாளரால் கணக்கிடப்படும் புலத்தில் தரவுகளை நுழைக்க முடியாது.
calculating : கணக்கிடல்; மதிப்பீடு செய்தல் : சில எண் வகையிலான உண்மைகளைச் சுருக்கி, புதிய தகவலை ஏற்படுத்தல் அல்லது புதிதாக உருவாக்குதல்.
calculations : கணக்கீடுகள் : தரவுகளின்மீது கணித செயல் முறைகள்.
calculator : கணிப்பி; கணக்கி : கணக்கீடுகளைச் செயல்படுத்தப் பயன்படுத்தப்படும் எந்திரக் கணித அல்லது மின்னணு எந்திரம். கணினிகளிலிருந்து மாறுபட்ட கணிப்பிகளுக்கு அடிக்கடி மனிதத் தலையீடு தேவைப்படும்.
calculator mode : கணிப்பி பாங்கு.
calculus boolean : பூலியன் வகையீட்டு நுண்கணிதம்
calendar : நாட்காட்டி.
calendar programme : நாள் காட்டி நிரல்; காலங்காட்டி நிரல் : மின்னணுக் காலங் காட்டியை ஒத்திருக்கும் ஒரு காலக்குறிப்பேட்டை படைத்துக் காட்டும் ஒரு பயன்பாட்டு நிரல். குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் ஆற்றவேண்டிய நமது பணிகளைக் குறித்து வைத்துக் கொள்ளலாம். சில காலங்காட்டி நிரல்கள் சுவரில் மாட்டும் நாள்காட்டிகளை ஒத்துள்ளன. சிலவற்றில், ஒரு நாளில் ஒவ்வொரு மணி நேரத்திலும் நினைவுக் குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்ள முடியும். காலங்காட்டியில் குறிப்பிட்டுள்ளபடி நமது பணியை நமக்கு நினைவூட்டவல்ல நிரல்களும் உண்டு. ஒரு கணினிப்பிணையத்தில், ஒர் அலுவலகத்தின் பல்வேறு அலுவலர்களின் காலங்காட்டிகளை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் திறனுள்ள நிரல்களும் உள்ளன.
calibration : மதிப்பாராய்தல் : அளவீடு செய்தல் : ஒரு கட்டுப்பாட்டுக் குமிழ் கைப்பிடியில் (knob) ஏற்படுத்தப்பட்டுள்ள, நிர்ணயிக்கப்பட்ட சரியான மதிப்பினையோ அல்லது ஒரு மீட்டரில் ஒவ்வொரு அளவை எண்ணிக்கையில், சரியான மதிப்பு நிர்ணயிக்கப்பட்ட தரத்தையோ ஒத்திட்டுப் பார்த்து அல்லது அளந்து முடிவு செய்யும் செயல்முறை.
call : அழைப்பு : 1. கணினி நிரலில் ஒரு குறிப்பிட்ட துணைச் செயல்பாட்டுக்குக் கட்டுப்பாட்டை மாற்றுவது. 2. தரவு தொடர்பில், அழைக்கும் நபர் செய்யும் செயல், அல்லது ஒரு அழைப்பினைச் செய்வதற்கு தேவையான செயல்பாடுகள் அல்லது இரு நிலையங்களுக்கும் இடையிலே உள்ள இணைப்புகளை மிகத் திறமையாகப் பயன்படுத்துவது.
callable statement : அழைதகு கூற்று.
call accepted packet : அழைப்பேற்புப் பொட்டலம்; அழைப் பேற்ற பொதிவு.
callback : திரும்ப அழைப்பு : தொலைபேசி மூலமாக அணுகும் ஒரு கணினியில் பயனாளரை அடையாளங்காணும் ஒரு பாதுகாப்பு முறை. ஒரு பயனாளர் கணினி அமைப்பை தொலைபேசி மூலமாக அணுகுகிறார். அடையாளப் பெயரையும் நுழை சொல்லையும் தருகிறார். உடனே இணைப்புத் துண்டிக்கப்பட்டுவிடும். கணினி, முன்பே குறித்து வைத்துள்ள அந்தப் பயனாளரின் தொலைபேசி எண்ணுக்குத் தானாகவே தொடர்பு கொண்டு, இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும். இந்தப் பாதுகாப்புமுறை, அத்துமீறி நுழையும் ஊடுருவிகளைத் தடுக்கிறது. ஒரு பயனாளரின் நுழை பெயரையும், நுழை சொல்லையும் இன்னொருவர் திருடினாலும் அதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது.
call back modem : திரும்ப அழைக்கும் இணக்கி : திரும்ப அழைப்புப் பாதுகாப்பு முறையில் பயன்படுத்தப்படும் இணக்கி. வெளியிலிருந்து தொலைபேசி மூலம் கணினி அமைப்பை அணுகும்போது பயனாளர் ஒரு மறைக்குறியீட்டைத் தருவார். ஏற்கெனவே உருவாக்கி வைக்கப்பட்டுள்ள அட்டவணையில் மறைக்குறியீடு சரிபார்க்கப்பட்டு அக்குறியீட்டுக்குரிய பயனாளரின் தொலைபேசி எண்னைத் தானாகவே தொடர்பு கொண்டு இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும்.
Callback PPD : மீண்டும் அழைக்கும் பீபீடி : வருகின்ற அழைப்புகளைக் கண்காணிக்கும் ஒரு சாதனம்.
call blocking : அழைப்புத்தடுப்பி.
call by reference : குறிப்பு மூலம் அழைத்தல் : அழைத்தல் நிரலாக்கத்தில், துணை நிரல்கூறில் பயன்படுத்தப்படும் மாறிகளின் நினைவக முகவரிகளையே அளபுருகிகளாக துணை நிரல் கூறலுக்கு (Subroutine) அனுப்பி அழைக்கும் முறை.
call by value : மதிப்பு மூலம் அழைத்தல் : நிரலாக்கத்தில் பயன்படுத்தப்படுவது. துணை நிரல்கூறுகளில் முறைகளில் பயன்படுத்தப்படும் அளபுருக்களின் உண்மை மதிப்புகளை அவற்றுக்கு அனுப்பி அழைக்கும் முறை.
call cleaning : அழைப்பு நிறை வேற்றம்.
call connected packet : அழைப்பு இணைத்த பொதிவு.
called routine : அழைக்கப்பட்ட நிரல்கூறு : ஒரு குறிப்பிட்ட பணியை நிறைவேற்றும் ஒரு துணை நிரல். இதை ஒரு அழைப்பு அல்லது நிரலின் கிளைபிரி ஆணையின் மூலம் அணுக முடியும்.
called terminal : அழைக்கப்பட்ட முனையம்.
caller ID : அழைத்தவர் அடையாளம்.
call establishment : அழைப்பு ஏற்படுத்துகை; நிறுவுகை.
calligraphic graphics : எழுத்து வனப்பு வரைபடங்கள்; வரி வடிவ வரைவியல் : ஒரு ஒழுங்கில்லாத வகையில் ஒழுங்கில்லாத திசைகளை நோக்கி இழுக்கப்பட்ட கோடுகளைக் கொண்டு ஒரு உருவத்தை அமைத்தல். இதற்கு அதிகச்செலவாகும். கருவி தேவைப்படுகிறது. இடஞ்சார்ந்த ஒழுங்களவு கொண்ட இதேபோன்ற வரைபடங்களைக் கொண்டதுதான் 'கம்பி உருவ' மாதிரிகள். தொடக்கக் காலத்தில் கணினி வரைபடங்களுக்குச் சமமானதாக இவை கருதப்பட்டன.
calligraphic sequence : எழுத்து வனப்பு வரிசைமுறை; வரி வடிவ வரிசைமுறை.
calling programme : அழைக்கும் நிரல் : வேறொரு நிரலைத் தொடங்கி வைக்கும் நிரல்.
calling rate : அழைப்பு வீதம்.
calling sequence : அழைக்கும் வரிசை : கொடுக்கப்பட்ட ஒரு துணை நிரல்கூறை அழைப்பதற்குத் தேவையான தரவுகள் மற்றும் குறிப்பிட்ட ஆணைத் தொகுதிகள்.
calling terminal : அழைக்கும் முனையம்.
CALL instruction : அழைப்பு ஆணை : ஆணைகளின் புதிய வரிசையை இயக்க திசை மாற்றிய பிறகு, நிரலில் தொடக்க வரிசைக்குத் திரும்பி வருவதை அனுமதிக்கும் ஆணை.
calloc : சிஅலாக் : 'சி' மொழியில் உள்ள ஒரு பணி. எம். அலாக், (malloc) ரிஅலாக் (realloc) போன்றது.
call request packet : அழைப்புக் கோருவோர் பொதிவு.
call screening : அழைப்பு வடி கட்டல்.
call setup : அழைப்பு அமைப்பு முறை.
CALS : கால்ஸ் : கணினிவழி ஈட்டுதல் மற்றும் தகவுப் பொருத்த உதவி எனப் பொருள்படும் Computer Aided Acquisition Logistics Support என்ற சொல் தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். வணிகமுறை விற்பனையாளர்களுடன் மின்னணு முறை தகவுப் பரிமாற்றத்துக்கான பாதுகாப்புத் தரநிர்ணயத் துறையாகும்.
CAM : கேம் : கணினி உதவிடும் உற்பத்தி எனப் பொருள்படும் Computer-Aided Manufacturing என்பதன் குறும்பெயர்.
cambridge ring : கேம்பிரிட்ஜ் வளையம் : இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் வடிவமைத்த அதிவேக குறும் பரப்புப் பிணையம் (LAN).
camera - ready : அச்சுக்குத் தயாராய் : நூல் அச்சுத்துறையில் கணினியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. நூலில் இடம் பெற வேண்டிய விவரங்களை கணினியில் தட்டச்சு செய்து தாளில் அச்செடுப்பர். பிறகு விவரங்களையும் இடையிடையே இடம்பெறும் படங்களையும் வெட்டி ஒர் அட்டையில் ஒட்டுவர். அச்சில் வர வேண்டிய பக்கங்களை இவ்வாறு அட்டைகளில் ஒட்டி வடிவமைப்பர். பிறகு அதனை ஒளிப்படக்கருவி மூலம் ஒளிப்பட ஃபிலிமாக படம் பிடிப்பர். அந்த ஃபிலிமை வைத்து அச்சு வார்ப்பினை உருவாக்குவர். அச்சு வார்ப்பினைக் கொண்டு நூல் பக்கங்களை அச்சிடுவர். ஆனால், இப்போதெல்லாம் அட்டைகளில் வெட்டி ஒட்டிப் பக்கங்களை வடிவமைக்க தேவையில்லை. கணினித் திரையிலேயே வெட்டி ஒட்டி பக்கங்களை வடிவமைக்க வல்ல மென்பொருள் தொகுப்புகள் பயன்பாட்டில் உள்ளன. அச்சுக்கு தயாரான பக்கங்களை உருவாக்க முடியும் என அவை விளம்பரப்படுத்தப்படுகின்றன.
camera-ready artwork : ஒளிப் படக் கருவிக்குத் தயாரான கலை வேலை : வணிக அச்சகப் பகுதியில் ஒளிப்படம் எடுக்கத் தயாராக உள்ள அச்சிடும் பொருள். ஒருமுறை ஒளிப்படம் எடுத்த பின் அச்சுத் தகட்டினைச் செய்யத் தயாராக உள்ளது.
campus interview : வளாக நேர் முகத் தேர்வு.
campuswide information system : வளாகத் தகவல் முறைமை : கணினிப் பிணையங்கள் மூலமாக ஒரு கல்லூரி அல்லது பல்கலைக் கழக வளாகத்துக்குள் தகவல் மற்றும் பிறசேவைகளை வழங்கும் முறை. இத்தகவல் அமைப்பு முறையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் குறிப்புகள், வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் நிரல்கள் அனைத்தும் இருக்கும். தரவுத் தளங்களை அணுகும் வசதியும் இருக்கும்.
Canadian information Processing Society; CIPS : கனடாவின் தகவல் செயலாக்கச் சங்கம்; சிப்ஸ் : தகவல் செயலாக்கத் துறையில் பொதுவான ஆர்வமுள்ள கனடாக்காரர்களை ஒன்று திரட்ட ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. தங்களது வாழ்க்கையை கணினி தகவல் செயலாக்கத் துறைகளில் அமைத்துக் கொண்டுள்ள 400-க்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள், வணிகர்களை உறுப்பினர் களாகக் கொண்டது.
cancel : ரத்து; விடு; நீக்கு : அப்போது தட்டச்சு செய்த வரியை நீக்குவதற்கான விசைப் பலகைச் செயல்பாடு. cancelbot : தவிர்க்கும் எந்திரன் : இணையத்தில் செய்திக் குழுக்களில் வெளியிடப்படுவதற்காக அடுக்கப்பட்ட கட்டுரைகளில் ஒவ்வாதவற்றைக் கண்டறிந்து நீக்குகின்ற ஒரு நிரல். பலருக்கும் அனுப்பப்படுவதற்கு முன்பாகக் கண்டறிந்து நீக்கும். நீக்கப்படுவதற்கான அடிப்படை வரையறையை அந்த நிரலை உருவாக்கியவரே நிர்ணயம் செய்கிறார். எனினும் பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான தவிர்க்கும் எந்திரன்கள், பலநூறு செய்திக் குழுக்களில் இடம்பெறும் எண்ணற்ற உதவாக்குப்பைச் செய்திக் குறிப்புகளைக் கண்டறிந்து நீக்கி விடுகின்றன.
cancel button : தவிர் பொத்தான்.
cancel character : தவிர் எழுத்துரு.
cancel message : தவிர்க்கும் செய்தி : யூஸ்நெட் எனப்படும் செய்திக் குழுக்களுக்கான வழங்கன் கணினிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சில கட்டுரைகளை வெளியிடாமல் தவிர்க்கவும், அல்லது கணினியில் இருந்தே நீக்கிவிடவும் அக்கணினிக்கு அனுப்பப்படும் ஒரு செய்தி.
candidate key : அடையாள திறவி : ஒர் அட்டவணையில் ஒரு குறிப்பிட்ட கிடக்கையை (Row) தனித்து அடையாளங்காணப் பயன்படும் புலம். கூட்டு முதன்மைத் திறவியின் (Compound Primary Key) ஓர் அங்கமாக இருக்கும்.
candidates : வேட்பாளர்கள் : ஒரு திட்டத்தின் தொடக்க வடிவமைப்பு நிலையில் வழங்கப்படும் மாற்றுத் திட்டங்கள்.
canned programme : தயார் நிலை நிரல் : ஒரு சிக்கலுக்கு நிலையான தீர்வை வழங்கும் நிரல் தொகுதி. கணினி உற்பத்தியாளர்கள் மற்றும் மென் பொருள் உருவாக்குபவர்கள் பயன்படுத்தத் தயாரான நிலையில் பயனாளருக்கு அளிக்கும் இந்த நிரல்களை தனி நபர்களும், பல வணிக நிறுவனங்களும் பயன்படுத்த ஏற்றதாக உள்ளது. Custom Software-க்கு எதிர்ச் சொல்.
canned routine : அடைக்கப்பட்ட நிரல் கூறு : ஒரு குறிப்பிட்ட கணினியில் பயன்படுத்துவதற்காக முன்னதாக எழுதப்பட்ட நிரல். ஒரு குறிப்பிட்ட செயலாக்கப் பணியைச் செய்யும் துணை நிரல்கூறு (சப்ரொட்டீன்).
canned software : தயார் நிலை மென்பொருள் : உடனே பயன்படுத்தத் தயாரான நிலையில் பயன்படுத்துவோருக்கோ அல்லது வேறொரு விற்பனையாளருக்கோ கணினி உற்பத்தியாளர்கள் தயாரித்த மென்பொருள் பல வணிகர்கள் மற்றும் தனிநபர்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதுவானது. custom Software-க்கு மாறானது.
canon engine : கேனன் எந்திரம் : கேனன் ஒளிப்பட நகல் எடுக்கும் கருவியில் பயன்படுத்தும் உள் எந்திர அமைப்பு. பல லேசர் அச்சுப்பொறிகள் பயன்படுத்தப்படுகிறது.
Canonical Form : விதிமுறை மாதிரி படிவம் : கணிதத்திலும் நிரல் வரையிலும் ஒரு வெளிப்பாடு அல்லது கட்டுரைத் தொடருக்கான மாதிரி படிவம்.
Canonical Synthesis : விதிமுறை பகுப்பாய்வு : மீண்டும் வரும் விவரப் பொருட்கள் இல்லாமல் ஒரு தரவு மாதிரியை வடிவமைக்கும் செயல்முறை முன் மாதிரி அல்லது திட்டமானது எத்தகைய வன்பொருள் அல்லது மென்பொருளாக இருந்தாலும் தரவு செயலாக்கம் செய்யும்.
Can't Undo : செய்தது தவிர்க்க இயலாது.
Canvas : வரைதிரை.
CAP : கேப் : கணினி வழி பதிப்பித்தல் எனப் பொருள்படும் Computer - Aided Publishing என்பதன் குறும்பெயர்.
capability : திறன்; ஆற்றல்.
capability list : திறன் பட்டியல் : ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்யப்படும் விவரக் குறிப்புப் பட்டியலை வரிசைப்படுத்துதல்.
capacitance : மின்தேக்கு திறன் : மின் சக்தியைச் சேமிக்கும் திறனின் அளவு. Farad என்பதை அடிப்படை அளவுகோலாகக் கொண்டது.
capacitor : மின்தேக்கி; மின் னுறைக் கலன் : நிலையான மின்சக்தியை தேக்கி வைக்கும் மின்சாதனம். முறையாகக் கிளப்பி விட்டால் மின்சக்தியை வெளியிடும். கணினி சேமிப்பகத்தில் துண்மிகளை எழுதும் முறையும், படிக்கும் முறையும் இதுதான்.
capacitor storage : மின்தேக்கி சேமிப்பகம்; மின்னுறைகலன் சேமிப்பகம் : மின்தேக்கிகளைப் பயன்படுத்தி தரவுகளை சேமிக்கும் ஒரு சேமிப்புச் சாதனம்.
capacity : கொள்திறன் : ஒரு சேமிப்பகச் சாதனத்தில் எவ்வளவு தரவுகளைச் சேமித்து வைக்க முடியும் என்பது கணினிச் சொற்கள், பைட்டுகள், எழுத்துகள் போன்ற பல வகைகளில் கூறப்படுகிறது.
capacity management : திறன் நிர்வாகம் : தரவு செயலாக்கப் பணிகளின் அளவு, வன்பொருள் மென்பொருள், பயன்பாடு மற்றும் பிற கணினி அமைப் புத் தேவைகளைக் கட்டுப்படுத்தி, வருவது வரைக்கும் திட்டமிடல் மற்றும் கட்டுப்பாட்டு முறைகளைப் பயன்படுத்தல்.
capacity, memory : நினைவகக் கொள்திறன்.
cap height : தலைப்பெழுத்து உயரம் கீழ் வரியிலிருந்து தலைப்பெழுத்தின் உயரம்.
caps : தலைப்பெழுத்துகள்; பெரிய எழுத்து மேல் எழுத்துகள் : All Caps என்றால் எல்லா எழுத்துகளும் தலைப்பெழுத்துகளாக வேண்டும். Initial caps என்றால் ஒவ்வொரு முக்கிய சொல்லிலும் முதல் எழுத்து தலைப்பெழுத்தாக்கப்பட வேண்டும்.
capstan : இழுவிசைப் பொறி : ஒரு நிலையான வேகத்தில் பதிவு செய் யும் முனையை, நாடாவின் குறுக்காக இழுக்கும் காந்த நாடா இயக்கியின் சுழலும் சாதனம். caps (key) தலைப்பெழுத்து (விசை) ; மேலெழுத்து (விசை).
caps lock : தலைப்பெழுத்துப் பூட்டு.
Caps Lock Key தலைப்பெழுத்து பூட்டு விசை : கணினி விசைப் பலகையில் உள்ள ஒரு விசை எழுத்துகளில் தலைப்பு எழுத்தை மட்டும் அணுக அனுமதிக்கும் விசை, "மாற்று விசை"யுடன் இதை ஒப்பிடுக. இது எழுத்துகள் மட்டுமல்லாது இரண்டாவது பணியையும் அனுமதிக்கும் தலைப்பெழுத்து பூட்டப்பட்டபின் 'மாற்று' (Shift) விசையை அழுத்தினால் சில கணினிகளில் மீண்டும் பழைய நிலையே வந்துவிடும்.
caption : தலைப்பு.
capture : பதிவு செய் : கணினியிலோ அல்லது ஏதாவது ஒரு வடிவிலோ தரவுகளைப் பதிவு செய்தல்.
capture card and display card : பதிவு அட்டை மற்றும் காட்சி அட்டை.
capture, data : தரவுக் கவர்வு.
CAR : கார் : கணினி வழி தரவு பெறுதல் என்று பொருள்படும் Computer Assisted Retrieval என்பதன் குறும் பெயர். காகிதம் மற்றும் நுண்வடிவத்தில் சேமிக்கப்படும் பாகங்கள், ஆவணங்கள் அல்லது பதிவுகளைத் தேடிக் கண்டுபிடிக்க கணினி பயன்படுத்தும் ஏற்பாடு. கணினியானது அந்தப் பொருள் எங்கிருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தபின், கணினியைப் பயன்படுத்துபவர் தனது கைகளால் அதை எடுத்துக்கொள்வார். LISPஇல் பயன்படுவது.
carbon ribbon : படிவுத்தாள் பட்டை : நன்றாகத் தெரியக் கூடிய துல்லியமான எழுத்துகளை உருவாக்கித்தரும், அச்சுப் பொறிகளில் பயன்படுத்தப் படும், படிவுத்தாள் இழை பட்டை.
card cage : அட்டைப் பெட்டி : அச்சிடப்பட்ட மின்சுற்று அட்டைகளைப் பொருத்துகின்ற கணினியின் உள்ளே இருக்கும் ஒரு பெட்டி.
card code : அட்டைக் குறியீடு : ஒரு துளையிடப்பட்ட அட்டையில் எழுத்துகளைக் குறிப்பிடும் துளைகளின் தொகுதி
card column : அட்டைப் நெடுக்கை : ஒரு துளையிட்ட அட்டையில் துளையிடும்இடங்களின் செங்குத்தான வரிகளில் ஒன்று.
Card : அட்டை : (1) அச்சிடப்பட்ட மின்சுற்று அட்டை. (2) 18. 7 செ. மீ. க்கு 8. 3 செ. மீ அளவுகளில் செங்குத்தான வரிசையில் துளைகளைப் பதிவு செய்வதன மூலம் தரவுகளைக் குறிப்பிடும் ஒரு ஊடகம்.
card deck : அட்டைத் தொகுதி : துளையிட்ட அட்டைகளின் ஒரு தொகுதி.
card face : அட்டை முகம் : ஒரு துளையிட்ட அட்டையின் அச்சிடப்பட்ட பக்கம்.
card feed : அட்டை செலுத்தி; அட்டை ஊட்டி : துளையிட்ட அட்டைகளை எந்திரத்தில் ஒவ்வொன்றாக நகர்த்தும் சாதனம்.
card field : அட்டைப் புலம் : ஒரு தரவு அலகுக்கு அளிக்கப்படும் தொடர்ச்சியான துளையிட்ட அட்டைகள்; குறிப்பிட்ட எண்.
card format : அட்டை வடிவமைவு.
card frame : அட்டைச் சட்டம் : ஒரு கணினி அமைப்பின் மின்சுற்று அட்டைகளை ஒரு இடத்தில் வைத்துப் பிடிக்கும் ஒரு பகுதி.
card hopper : அட்டை தள்ளி : துளையிட்ட அட்டைகளை அட்டையைக் கையாளும் கருவியின் நகர்த்தும் பாகத்துக்குத் தள்ளிவிடும் சாதனம்.
card image : அட்டைப் படிமம் : ஒரு அட்டையில் துளையிடப்பட்ட, சேமிக்கப்பட்டுள்ள பொருள்.
cardinality : வகைபடு தன்மை : ஒரு இனக்குழுவானது எத்தனை முறை வரலாம், இனக்குழு உறவுகளை எத்தனை தடவை பயன்படுத்தலாம் என்று, பொருள் நோக்கு நிரலாக்கத்தில் பயன்படுவது.
cardinal number : வகை எண் : ஒரு தொகுதியில் எத்தனை வகையறாக்கள் உள்ளன என்பதைக் குறிப்பிடும் எண். சான்றாக, "21" என்ற எண்ணில் 10 எழுத்துகள் என்றால் 21 கார்டினல் 10 ஆர்டினல் ஆகும்.
card job control : வேலைக் கட்டுப்பாட்டு அட்டை.
card loader : அட்டையேற்றி.
card punch : அட்டை துளையிடும் கருவி : கணினியின் நினைவகத்தில் இருந்து தகவலைப் பெற்று, அதை அட்டைகளில் துளையிட்டுத் தரும் வெளியீட்டுச் சாதனம்.
card punch buffer : அட்டைத் துளை இடையகம்.
card punching : அட்டைத் துளையிடல்.
card reader : அட்டை படிப்பி : 1. இது ஒர் உள்ளிட்டுச் சாதனம். பெரும்பாலும் ஒரு நபரை அடையாளம் காணப் பயன் படுவது. ஒரு குழைம (பிளாஸ்டிக்) அட்டையில் காந்த முறையில் இரு தடங்களில் எழுதப்பட்ட தகவலைப் படித்துச் சரிபார்க்கும் கருவி. ஒரு தொழிலாளியின் அடையாள அட்டையாக இருக்கலாம் அல்லது பற்று அட்டை (credit card) யாக இருக்கலாம். 2. கணினி செயல்படாத நேரத்தில், அட்டைகளில் துளையிடும் முறையில் எழுதப்பட்ட தகவலைப் படித்தறியும் கருவி. இப்படிச் செய்வதன் மூலம் மையச் செயலியின் நேரம் பெரு மளவு மிச்சமாகும். கணினி செயல்படும்போது, தகவலை உள்ளீடு செய்யும் முறையைக் காட்டிலும், மையச் செயலியிடம் குறைந்த நேரமே வேலை வாங்கப்படும்.
card reproducer : அட்டை மறு தயாரிப்புப் பொறி : ஒரு அட்டையைப் போன்றே வேறொரு அட்டையில் துளையிட்டுத் தரும் சாதனம்.
card row : அட்டை கிடக்கை : ஒரு துளையிட்ட அட்டையின் துளையிடும் நிலையில் உள்ள கிடைமட்ட வரிசைகளில் ஒன்று.
card sorting : அட்டை பிரித்தல்; அட்டை வரிசையாக்கம் : தனிப்பட்ட அட்டைகளில் போடப்பட்டுள்ள துளைகளுக்கேற்ப துளையிட்ட அட்டைகளைப் பிரித்து வைத்தல்.
card stacker : அட்டை அடுக்கி : துளையிட்ட அட்டை தரவு செயலாக்க எந்திரத்தைக் கடந்த பின் அட்டைகளைச் சேர்த்து வைக்கும் கொள்கலம்.
card-to-disk converter : அட்டையிலிருந்து வட்டுக்கு மாற்றும் பொறி : துளையிட்ட அட்டைகளிலிருந்து வட்டு சேமிப்பகத்துக்கு தரவுகளை நேரடியாக மாற்றித் தரும் சாதனம்.
card-to-tape converter : அட்டையிலிருந்து நாடாவுக்கு மாற்றும் பொறி : துளையிட்ட அட்டைகளிலிருந்து காந்த அல்லது காகித நாடாவுக்கு தரவுகளை நேரடியாக மாற்றும் சாதனம்.
card verification : அட்டை சோதித்தல்; அட்டை சரிபார்ப்பு : விசைத் துளையிடலின் துல்லியத்தை சோதிக்கும் செயல்முறை. அதே தரவு மூலத்தைப் படித்துச் சோதிக்கும் பொறியின் விசைகளை அழுத்தி, முதலில் துளையிட்டதை இரண்டாவதாக ஒருவர் சோதிப்பார். ஏற்கனவே துளையிடப்பட்ட அட்டைகளின் துளையை விசையை அழுத்தி, சோதித்து அவை சரியாக இல்லையென்றால் பிழை என்பதைக் காட்டும்.
card verifier : அட்டை சோதிப்பி, அட்டை சரிபார்ப்பி.
caret : கேரட் ; முகடு : 1. ஒரு எண்ணின் மூலமானது எந்த இடத்தில் இருக்கிறது என்பதைக் காட்டும் குறியீடு, 2. எங்கே செய்தியை நுழைக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட திரையில் அடையாளச் சுட்டியாகப் பயன்படுத்தப்படும் அடையாளம்.
carpal tunnel syndrome : கார்பல் சுரங்க உணர்வு : மணிக்கட்டைச் சுற்றிலும் உள்ள திசுக்களில், சுருங்கினாலோ அல்லது தழும்பு ஏற்பட்டாலோ முக்கிய நரம்பு சுருக்கப்படுதல். இது கைகளுக்கு பெரும் சேதம் ஏற்படுத்தக் கூடியது.
carriage : நகர்த்தி; ஏந்தி : ஒரு தட்டச்சுப் பொறி அல்லது அச்சுப் பொறியில் இடங்களை நகர்த்தவோ அல்லது காகிதப் படிவங்களை வெளியேற்றவோ செய்யும் கட்டுப்பாட்டு எந்திர அமைப்பு.
carriage, automatic : தானியங்கி நகர்த்தி.
carriage control key : நகர்த்தி கட்டுப்பாட்டு விசை : அச்சுப் பொறியின் நகர்த்தியை தொடக்கத்திலோ அல்லது அது இருக்க வேண்டிய இடத்திலோ மீண்டும் கொண்டுவரும் பொத்தான்.
carriage control tape : நகர்த்தி கட்டுப்பாட்டு நாடா : வரி அச்சுப் பொறியில் வரி நகர்த்துதலைக் கட்டுப்படுத்தும் துளையிட்ட நாடா.
carriage motor : நகர்த்தி விசைப் பொறி.
carriage register : நகர்த்திப் பதிவகம்.
carriage return (CR) : நகர்த்தியைக் கொண்டுவரல் : எழுத்து அச்சிடும் பொறியில் இடது மூலையில் அடுத்த எழுத்தை அச்சிடச் செய்யும் செயல்முறை.
carrier : சுமப்பி; தாங்கி : சமிக்கை அனுப்பப்படுவதற்கு ஒரு எல்லை அல்லது உறையாக அமைந்த மின்காந்த அலைவரிசை. ஒரு கம்பி அல்லது குழாய் மூலம் ஒரே நேரத்தில் பல சமிக்கைகளை இது கொண்டு செல்ல முடியும். சான்றாக ஒரே சுமப்பியில் குரல், தரவு மற்றும் ஒளிக்காட்சி சமிக்கைகள் ஒரே நேரத்தில் பயணம் செய்ய முடியும். ஏனென்றால், ஒவ்வொன்றும் மாறுபட்ட அலைவரிசை இடைவெளிகளில் செல்பவை.
carrier based : சுமப்பி சார்ந்த : அனுப்பப்படும் தரவுகளை வைத்துக் கொண்டிருப்பதற்கு ஒரு நிலையான அலைவரிசையை (சுமப்பியை) உருவாக்கி அனுப்பும் அமைப்பு.
carrier frequence : சுமப்பி அலை வரிசை : இரும எண் (பைனரி) தரவுக் குறியீடு செய்ய ஏற்றவாறு அமைக்க, தரவு தொடர்புச் சாதனங்களின் இடையே பரிமாறப்படும் இடைவிடாத சமிக்கை.
Carrier Sence Multiple Access (CSMA) : சுமப்பி உணர் பன்முக அணுகல்.
carrier signal : சுமப்பி சமிக்கை : செய்தித் தரவு தொடர்புகளில் தரவு சமிக்கைகளை மாற்றி அனுப்புவதற்காக ஊடகத்தில் ஏற்படுத்தப்படும் சமிக்கை.
carrier system : ஒலியேந்தித் தரவு தொடர்பு முறை; சுமப்பி முறைமை : பல்வேறு அலைவரிசைகளை, செய்திகளைச் சுமந்து செல்லும் ஊடகமாகப் பயன்படுத்தி, ஒரே பாதையில் பல்வேறு தடங்களில் பல்வேறு செய்திகளை ஒரே நேரத்தில் அனுப்பிவைக்கின்ற தரவு தொடர்பு முறை. ஒவ்வொரு செய்தி அலையும் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணுள்ள மின்காந்த அலையின் மேல் பண்பேற்றம் (modulation) செய்து ஒரே அலைக்கற்றையாக மறுமுனைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு, அதே அதிர்வெண் அடிப்படையில் பண்பிறக்கம் (demodulation) செய்யப்பட்டு மூலத் தரவு பெறப்படும்.
carrier working : சுமப்பி செயல்பாடு : வீச்சு மாறுவதன் மூலம் ஒரு பேச்சை அதன் தொடக்க ஒலி அலைவரிசையிலிருந்து (300 முதல் 3, 400 ஹெர்ட்ஸ்) உயர் "சுமப்பி" அலைவரிசைக்கு மாற்ற முடியும். உலகின் பெரும்பாலான தொலைதூர தொலைபேசி அமைப்புகள் 12 அலைவரிசை குழுவையே பயன்படுத்துகின்றன. 12 குரல் அலைவரிசைகளாக மாற்றப்பட்டு 18 கிலோ ஹெர்ட்ஸ் அலைக்கற்றையில் அடங்குகின்றது. இவை 60-108 கிலோஹெர்ட்ஸ்வரை செயல்படுபவை.
carry ஏந்தி; வழிவி; மிகுதி : 1. ஒரு நெடுக்கையில் உள்ள இரண்டு இலக்கங்களின் கூட்டல் தொகை அடிப்படை எண்ணைவிடப் பெரியதாகவோ அல்லது சமமாகவோ இருக்கும் போது ஏற்படும் சிறப்பு நிலையைக் கொண்டுவரும் செயல்முறை. 2. மிகுந்திடும் இலக்கம் அல்லது அடுத்த நெடுக்கையில் சேர்க்கப்படும் இலக்கம்.
carry bit : மீந்திடும் துண்மி : இரும எண்களின் கூட்டல் 0+0=1, 0+1=1, 1+0=1; 1+1=10 என்று அமையும். இத்தகைய இரும எண் கூட்டலைச் செய்யும் மின்சுற்றுகள் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு மின்சுற்றும் இரண்டு உள்ளீடுகளை ஏற்கும். 0 அல்லது 1 என்பதை விடையாகத் தரும். இரண்டு உள்ளீடுகளும் 1 ஆக இருப்பின் வெளியீடு 0 ஆக இருக்கும். மீதமுள்ள 1, அடுத்த மின்சுற்றின் உள்ளீடாக அமையும். இவ்வாறு இரும எண் கூட்டலில் இரண்டு 1-களைக் கூட்டும்போது பெறப்படும் 1, 0 வில், 0 விடையாக வும், 1 மீந்திடும் துண்மியாகவும் அமைகிறது.
மேற்கண்ட கூட்டலில் மூன்று முறை 1 மீதமாகிறது. முதல் இருமுறை அடுத்த கூட்டலுடன் சேர்க்கப்படுகிறது. கடைசியாக மீந்திடும் 1 விடையின் இடப்புறத் துண்மியா அமர்ந்து கொள்கிறது.
carry digit : மிகுதி இலக்கம் : கூட்டலின்போது ஒரு நெடுக்கையிலிருந்து அடுத்ததற்குக் கொண்டு செல்லப்படும் இலக்கம். பதின்ம முறையில் 5 + 7-ஐக் கூட்டும்போது கூட்டுத்தொகை 2 ஆகவும் மிகுந்திடும் இலக்கம் 1 ஆகவும் வரும். இரும எண் முறையில் 1+1+0+1-க்கு கூட்டுத் தொகை 1 மிகுந்திடும் இலக்கம் 1.
carry flag : மிகுதி ஒட்டி : மையச் செயலகத்தின் ஒட்டி பதிவகத்தில் உள்ள துண்மிகளில் ஒன்று. பிழை நிலையைக் குறிப்பிட டாஸ் (DOS) பணிகளில் பயன்படுத்தப்படுகிறது.
carry register : மிகுதிப்பதிவகம்; வழிவிப் பதிவகம் : சுழற்சி அல்லது மிகுந்திடும் சூழ்நிலையில் சேர்ப்பியில் விரிவாகச் செயல்படும் ஒரு துண்மியின் பதிவு. இணைப்புப் பதிவகம் என்றும் அழைக்கப்படும்.
cartesian coordinates : கார்ட்டீசியன் ஆயத்தொலைவுப்புள்ளிகள் : ஒரு தளத்தில் செங்குத்தாக வெட்டிக் கொள்ளும் இரு அச்சுகள் (இரு பரிமாணம்), அல்லது வெளியில் செங்குத்தாக வெட்டிக் கொள்ளும் மூன்று அச்சுகள் - இவற்றை அடிப்படையாகக் கொண்டு குறிக்கப்படும் ஒரு புள்ளி. இவற்றில் கிடைமட்ட அச்சு x எனவும், செங்குத்து அச்சு y எனவும் இவை இரண்டுக்கும் 90 டிகிரி உயரவாக்கில் அமையும் அச்சு z என்றும் அழைக்கப்படுகின்றன. வீட்டில் அறையின் ஒரு மூலையில் இது போன்ற மூன்று அச்சுகளின் அமைப்பைக் காணலாம். தரையில் உள்ள ஒரு புள்ளியை x, y ஆகிய இரு அச்சுகளின் ஆயத்தொலைவு அடிப்படையில் குறிப்பிடலாம். தரைக்கு மேல் மேல்தளம் வரையுள்ள எந்தவொரு புள்ளியையும் மூன்று அச்சுகளின் ஆயத் தொலைவுகளாகக் குறிப்பிட வேண்டும். 17ஆம் நூற்றாண்டில் இந்த வரைவியல் கணித முறையை ஃபிரெஞ்சுக் கணித மேதை டகார்ட்டீஸ் (Descartes) அறிமுகப்படுத்தினார்.
Cartesian coordinate system : கார்டீசியன் ஆயத்தொலை அமைப்பு : ஃபிரெஞ்சு கணிதவியலார் ரெனி டெஸ்கார்ட் கார்டீசியன் பெயரில் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. இதன்படி, தளத்தில் உள்ள ஒரு புள்ளியின் தூரம் இரண்டு நேர் கோடுகளில் இருந்து கணக்கிடப்படுகிறது. அவை அச்சுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஒரு அச்சிற்கான தூரமானது மற்றொரு அச்சிற்கு இணையாகக் கணக்கிடப்படுகிறது. புள்ளியுடன் தொடர்புள்ள இந்த எண்கள் அந்த புள்ளியின் ஆயத்தொலைவுகள் எனப்படும். இது செவ்வக ஆயத்தொலைவு அமைப்பு என்றும் அழைக்கப்படுகிறது.
cartridge : நாடா பேழை; பேழை; பொதியுறை : ரோமில் நிரந்தரமாகச் சேமிக்கப்படும் மென்பொருளைக் கொண்டுள்ள தனிப்பேழை. வசதியான, நீண்ட காலம் வரக்கூடிய, பயன்படுத்த எளிதான, ஒசையற்ற, அழிக்க முடியாத, கணினியில் ஒரு சிறப்பு இடத்தில் நுழைக்கப்படும் பேழை. வட்டிலோ, நாடாவிலோ படி எடுக்க முடியாது. Solid state cartridge என்றும் Rom Cartridge என்றும் அழைக்கப்படுகிறது.
cartridge disk unit : பொதியுறை வட்டகம் : சேமிப்பகச் சாதனம். இதில் இரு வகை வட்டுகள் உள்ளன. ஒன்று நிலையாக நிற்பது. மற்றொன்று மீண்டும் பயன்படக்கூடியது.cartridge drive : பொதியுறை இயக்ககம்; நாடா பேழை இயக்ககம்.
cartridge font : பொதியுறை எழுத்துரு : அச்சுப்பொறியில் நேரடியாகப் பொருந்தும் பொதியுறை நாடாவில் உள்ள ஒரு எழுத்துரு. லேசர் அச்சுப் பொறிகளில் இவை அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. எச். பீ லேசர் ஜெட் குடும்ப அச்சுப் பொறிகளில் பயன்படுத்தப்பட்டாலும் சில புள்ளியணி அச்சுப்பொறிகளிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன.
cartoon sounds : கார்ட்டுன் ஒலிகள்; கேலிப்பட ஒலிகள்.
cartridge tape : பொதியுறை நாடா : இது 8 மி. மீ அகலமுள்ள ஒரு காந்த நாடா. 12x12 செ. மீ அளவுள்ள குழைம (பிளாஸ்டிக்) உறையில் வைக்கப்பட்டுள்ளது. தலைமைப்பொறியமைவுக் கணினிகளில் இவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவை தொடர் அணுகு முறை தரவு சேமிப்பகத்தை அளிக்கின்றன. 2000 மெகாபைட் வரை கொள்திறன் கொண்டவை. தனிமுறைக் கணினிகளில் 60-100 மெகாபைட் கொள்திறடையவையாக அவை உள்ளன.
CAS : சிஏஎஸ் : தரவு தொடர்பு வரன்முறைகள் என்று பொருள்படும் Communication Application Specification என்பதன் குறும்பெயர். 1980இல் அறிமுகப்படுத்தப்பட்ட இன்டல் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் விதிமுறைகள்.
Cascade : அடுக்கு; தொடர்; கவிப்பு : சீட்டு விளையாட்டில் கையில் சீட்டுகளை ஒன்றடுத்து மற்றொன்றை அடுக்கி வைத்திருப்பதுபோல, அடுக்கி வைக்கும் முறை. விண்டோஸ் பணிச் சூழலில் ஒரு நேரத்தில் திறக்கப்படும் ஒன்றுக்கு மேற்பட்ட சாளரங்களை இம்முறையில் அடுக்கி வைக்கலாம். 1. ஒரு சாளரத்தில் அமையும் உரையாடல் பெட்டியில் (dialog box) உரைப்பெட்டி (text box), பட்டியல் பெட்டி (list box), தேர்வுப்பெட்டி (check box), கட்டளைப் பொத்தான்கள் (command buttons) போன்ற அனைத்து இயக்குவிசைப் பொருட்களையும் ஒரே திரையில் அமைக்க முடியாதபோது ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்கப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட திரைகளில் அவற்றை அடுக்கிவைப்பர். 2. இணையச் செய்திக் குழுக்களில் ஒரு செய்தி ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு அனுப்பப்படும்போது மூலச் செய்தியில் ஒவ்வொரு வரியிலும் > என்ற அடையாளம் சேர்க்கப்படும். அவரிடமிருந்து இன்னொருவர்க்குப் போகும் போது இன்னொரு அடையாளம் சேர்க்கப்படும். இதுபோல் சேர்ந்துகொண்டே போகும்.
cascaded carry : அடுக்கிய மிகுதி : மொத்தத் தொகையில், மிகுந்திடும் எண்ணைச் சேர்க்கும் முறை.
cascade connection : அடுக்கு இணைப்பு : இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒரே மாதிரியான துணைச் சாதனங்களை ஒன்றோடொன்று இணைத்தல். ஒன்றின் வெளியீடு அடுத்ததன் உள்ளிட்டுடன் இணைக்கப்படும்.
cascade control : அடுக்கு கட்டுப்பாடு : கட்டுப்பாட்டுச் சாதனங்கள் சங்கிலியைப் போன்று இணைக்கப்பட்டுள்ள தானியங்கி கட்டுப்பாட்டு அமைப்பு ஒவ்வொன்றும் அடுத்ததற்குக் கொடுப்பதுடன் அடுத்த நிலையை ஒழுங்குபடுத்தும்.
cascade sort : அடுக்கு வரிசையாக்கம் : வெளிப்புற நாடா கொண்டு வரிசைப்படுத்தும் ஒரு முறை.
cascading menu : அடுக்குப்பட்டியல் : ஒரு பட்டியிலிருந்து கொண்டு அடுத்த பட்டியைத் தொடங்குதல். இத்தகைய பட்டியில் இதை அடுத்து வலது அம்புக்குறி இருக்கும்.
cascading style sheets : அடுக்கி வைத்த அழகுத் தாள்கள் : ஹெச்டிஎம்எல் மொழியில் உருவாக்கப்படும் இணைய ஆவணங்களில் சிறப்புத்தன்மை வாய்ந்த, அழகாக அடுக்கி வைக்கப்பட்ட பக்கங்கள். ஹெச்டிஎம்எல் ஆவணங்களை உருவாக்குபவர்கள் இது போன்று வடிவமைக்கப்பட்ட பக்கங்களை இணைத்துக் கொள்வதற்கான வரைமுறைகளை வைய விரிவலைக் கூட்டமைப்பு நிர்ணயம் செய்துள்ளது. ஹெச்டிஎம்எல் 3. 2-ன் தர நிர்ணயத்தில் இவை அடங்கியுள்ளன. ஒரு வலைப் பக்கத்தில் உரை விவரங்கள் இடம்பெறும் விதம், அதன் எழுத்துரு, உருவளவு, வண்ணம் போன்றவை நிர்ணயம் செய்யப் பட்டுள்ளன.
cascading windows : அடுக்கி வைத்த சாளரங்கள் : வரைகலைப் பணிச்சூழலில், தலைப்புப்பட்டை தெரியும் வண்ணமாக ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்படும் பல்வேறு சாளரத் திரைகள்.
CASE : கேஸ் : 1. சி, சி ++, ஜாவா சி #, மொழிகளில் நிரல்களை எழுதுவதில் பயன்படும் கட்டளைச் சொல். 2. தரவு அமைப்பினை உருவாக்கும் எல்லா நிலைகளிலும் பயன்படும் மென்பொருள் வழக்கமான தொழில்நுட்பங்களை உருவாக்க தானியங்கி முறைகளைப் பயன்படுத்துகிறது. எல்லாவற்றுக்கும் பொருந்தும் ஒரு மொழியை உருவாக்குவதே இதன் இறுதி இலக்கு.
case control structure : நிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு.
case logic : எழுத்துருவ தருக்கம்.
case sensitive : எழுத்தின் தன்மை உணர்வு : தலைப்பெழுத்து, கீழெழுத்துகளை வேறுபடுத்துவது. இத்தகைய மொழியில் தலைப்பெழுத்து "A" வுக்கும் கீழெழுத்து "a"க்கும் உள்ள வேறுபாட்டை கணினி கண்டறியும்.
case-sensitive search : எழுத்து வடிவ உணர்வுத் தேடல் : ஒரு தரவு தளத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள விவரங்களில் ஒரு குறிப்பிட்ட விவரத்தைத் தேடும்போது மேற்கொள்ளப்படும் ஒருமுறை. ஆங்கிலச் சொற்களை சிறிய எழுத்தில் அல்லது பெரிய எழுத்தில் அல்லது கலந்த எழுத்துகளில் எழுதலாம். தேடும்போது வடிவ ஒப்புமை இல்லாமலும் தேடலாம். ஒர் ஆவணத்தில் Computer என்ற சொல் உள்ளதா எனத் தேடும்போது, COMPUTER, computer என்ற சொற்களையும் கண்டறிந்து சொல்லும். ஆனால், வடிவ அடிப்படையில் தேடினால், Computer என்ற சொல் இருந்தால் மட்டுமே உள்ளதெனக் காட்டும். computer, COMPUTER ஆகிய சொற்களைப் புறக்கணிக்கும்.
case sensitivity : எழுத்துவடிவ உணர்வு : ஒரு நிரலாக்க மொழியில், ஒரு நிரலில் சிறிய எழுத்து பெரிய எழுத்து வடிவங்களை வேறுபடுத்திப் பயன்படுத்துதல். எடுத்துக்காட்டாக சி, சி++ மற்றும் ஜாவா மொழிகளில் sum, SUM, Sum ஆகிய மூன்று சொற்களும் வேறு வேறாகவே அறியப்படும். எழுத்து வடிவ உணர்வுமிக்கவை என்று இம்மொழிகளைக் கூறுவர். ஆனால் பேசிக், பாஸ்கல் போன்ற மொழிகளில் மேற்கண்ட மூன்று சொற்களும் ஒன்றாகவே கருதப்படும். இம்மொழிகள் வடிவ உணர்வற்ற மொழிகள்.
case statement : கிளைபிரி கூற்று : அடா, பாஸ்கல், சி, சி++, ஜாவா மற்றும் விசுவல் பேசிக் மொழிகளில் பயன்படுத்தப்படும் கட்டுப்பாட்டுக் கட்டளைத் தொடர். ஒரு மாறியின் மதிப்பைச் சோதித்து அம்மதிப்பின் அடிப்படையில் வெவ்வேறு பணிகளை நிறைவேற்றுமாறு அமைக்கப்படும் கட்டளை. ஒன்றுக்குள் ஒன்றாக அமையும் if ... then ... else கட்டளைக்குப் பதிலாக சில சூழ்நிலைகளில் கிளைபிரி கட்டளையமைப்பு பயன்படுத்தப்படுகிறது.
cashless society : பணமிலாச் சமுதாயம் : வாங்குபவரின் வங்கிக் கணக்கிலிருந்து கொடுப்பவரின் வங்கிக் கணக்குக்கு உடனடியாகப் பணத்தைச் செலுத்துவதன் மூலம் வாங்கும் பரிமாற்றத்தை முடிக்கும் கணினி அமைப்பு. ரொக்கமாக எதுவும் மாற்றப்படுவதில்லை. சம்பளக் காசோலைக்குப் பதிலாகவும், சரக்குகள் மற்றும் சேவைகளுக்கும் இவ்வாறு பணமாற்றம் செய்யப்படுகிறது.
cassette : பேழை; நாடாப் பெட்டி; ஒளிச் சுருள்; ஒளிப் பேழை : தரவு சேமிப்புக்குப் பயன்படும் காந்த நாடாவைக் கொண்டுள்ள சிறிய பேழை.
Cassette drive : பேழை இயக்ககம்.
cassette interface : நாடா இடைமுகம்; பேழை இடைமுகம் : ஒரு கணினிக்கும் ஒரு காந்த நாடாவுக்கும் இடையில் தரவு பரிமாற்றங்களைக் கட்டுப்படுத்தப் பயன்படும் மின்சுற்று.
cassette recorder : பேழைப் பதிவி; நாடாப் பதிவி : நாடாப் பேழைகளைப் பயன்படுத்தி இலக்க முறை தரவுகளைப் பதிவு செய்து சேமிக்கவும், பின்னர் ஒருமுறை இந்த தரவுகளைக் கணினியின் உள் இருப்பகத்தில் ஏற்றவும் வடிவமைக்கப்பட்ட சாதனம். நுண்கணினிகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
cassette tape : பேழை நாடா : ஏறக்குறைய 1/3 செ. மீ. அகலமுள்ள காந்த நாடா. சிறிய பிளாஸ்டிக் பேழையில் வைக்கப்பட்டிருப்பது.
casting : இனமாற்றம் : நிரலாக்கத்தில் ஒரு தரவினை மதிப்பை வேறொரு தரவின மதிப்பாக மாற்றியமைத்தல்.
CAT : கேட் : Computer Assisted Training and Computerised Axial Tomography என்பதன் குறும்பெயர். கணினி உதவிடும் பயிற்சி மற்றும் கணினிமய அச்சு ஊடுகதிர் உள்தளப் பட முறை (Tomography) என்பதன் சுருக்கம்.
catalog : திரட்டு; அடைவு : ஒவ்வொரு வகையாக விவரித்து வரிசையாகச் சேர்த்து வைப்பது. நிரல்கள் அல்லது ஒரு வட்டில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகளின் பட்டியலை வரிசைப் படுத்துதல். ஒரு வட்டைத் திரட்டி அமைத்தல் என்றால் ஒரு வட்டில் உள்ள அனைத்துக் கோப்புகளின் பட்டியலையும் அச்சிட்டுத் தருமாறு கணினியைக் கேட்பதாகும்.
catch : பிடி.
catena : தொடுப்புப் பட்டியல் : பல்வேறு உறுப்புகளைச் சேர்த்துத் தொடுக்கப்பட்ட ஒரு பட்டியலில் ஒர் உறுப்பு, பட்டியலிலுள்ள அடுத்த உறுப்பினைச் கட்டுமாறு அமைக்கப்பட்டிருக்கும்.
category : வகையினம்.
category storage : வகையினச் சேமிப்பகம்.
cat eye பூனைக் கண்.
cathode : எதிர்மின்வாய் : மின்னணுவியல் சொல். மின்னணுக்களை எதிர்நிலை (Negative) சக்தியுள்ள எதிர் மின்வாயிலிருந்து நேர்நிலை (positive) சக்தியுள்ள நேர்மின் வாய்க்கு மாற்றும் சாதனம்.
cathode ray tube (CRT) : எதிர் மின் கதிர்க் குழாய் : தகவலைக் காட்டக்கூடிய திரை உள்ள மின்னணுக் குழாய்.
cathode ray tube visual display unit : எதிர்மின்வாய்க் கதிர்க் குழாய் காட்சித் திரையகம்.
CAT scan : கேட் வருடல் : Computer Assisted Tomography Scaning என்பதன் குறும்பெயர். மருத்துவ ஆய்வு மற்றும் நோயறிதல்களில் பயன்படுவது.
'CAU : காவ் : கூட்டுறு அணுகு கருவி எனப் பொருள்படும் Controlled Access Unit என்பதன் குறும்பெயர். வில்லை வளைய பிணையங்களுக்காக ஐபிஎம் உருவாக்கிய தானறி குவியம் (intelligent Hub) மேலாண்மை மென்பொருள் வழியாக பழுதான முனைகளை குவிய (Hub) அடையாளம் காட்டும்.
. ca. us : . சிஏ. யுஎஸ் : இணையத்தில் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த வலைத் தளங்களைக் குறிக்கும் பெருங்களப் பெயர்.
CBASIC : சிபேசிக் : 8080, 8085 மற்றும் இஸட்80 நுண் செயலகக் கணினிகளுக்குப் பிரபலமான மொழி.
CBBS : சிபிபிஎஸ் : Computerized Bulletin Board Service என்பதன் குறும்பெயர். கணினிமய செய்தி அறிக்கை சேவை என்பதன் சுருக்கப் பெயர்.
CBEMA : சிபிஇஎம்ஏ : Computer and Business Equipment Manufacturers Association என்பதன் குறும்பெயர். கணினி மற்றும் வணிகக் கருவி உற்பத்தியாளர்களின் சங்கம் என்பதன் சுருக்கம்.
CBI : சிபிஐ : Charles Babbage Institute என்பதன் குறும்பெயர்.
CBL : சிபிஎல் : Computer Based Learning என்பதன் குறும்பெயர்.
CBT : சிபிடீ : கணினி அடிப்படையிலான பயிற்சி என்ற பொருள்படும் Computer Based Training என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கணினியையும் இதற்கென்றே உருவாக்கப்பட்ட மென்பொருளையும் பயன்படுத்திக் கற்பிக்கும் முறை. இம்முறையில் உரைக் கோவை மட்டுமின்றி, வண்ண மிக்க வரைகலைப்படங்கள், அசைவூட்டப் படங்கள் மற்றும் குரல் மூலமான விளக்கங்கள் உட்பட பயனாளரை ஈர்க்கும் வண்ணம் பாடங்கள் அமைக்கப்பட்டிருக்கும். பயன்படுத்த எளிமையானதாகவும் நுட்பமானதாகவும் இருக்கும். ஒரு மென்பொருள் தயாரிப்பாளர் தன் மென்பொருளைப் பயன்படுத்துபவருக்கு அம்மென்பொருளைப் பயன்படுத்தும் வழிமுறைகளையே ஒரு சிபிடீயாகத் தயாரிக்க முடியும். ஒரு மேலாண்மைத்துறைக் கருத்தரங்கில் சிபிடீ-யை ஒரு சிறந்த கற்பித்தல் கருவியாகப் பயன்படுத்தலாம்.
CC : சிசி, நகல் : உண்மை நகல் என்று பொருள்படும் Carbon Сору அல்லது Courtesу Сору என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். ஒருவருக்கு அனுப்பும் மின்னஞ்சல் செய்தியை அப்படியே இன்னொருவருக்கு அனுப்ப, மின்னஞ்சல் மென்பொருளில் வழியுள்ளது. To என்பதில் அஞ்சல் பெறுபவரின் முகவரியைத் தரவேண்டும். CC என்பதில் வேறு ஒருவரின் அல்லது பலரின் முகவரியைத் தரலாம். அவர்களுக்கும் அஞ்சல் சென்று சேரும். CC-யில் தரப்பட்ட முகவரிதாரர்கள் அனைவரும் இந்த மடல் வேறு எவருக்கெல்லாம் அனுப்பப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளவும் முடியும். இந்த வகையில் bcc என்று குறிப்பிட்டு இன்னும் சிலருக்கு அதே மடலை அனுப்பிவைக்கும் முறையிலிருந்து மாறுபடுகிறது. bcc-யில் குறிப்பிடப்படும் முகவரி தாரர்களுக்கும் மடல் கிடைக்கும். ஆனால், இந்த மடல் எவருக்கெல்லாம் அனுப்பப்பட்டுள்ளது என்பதை அவர்கள் அறிய முடியாது. (bcc-blind carbon Copy).
. cc : . சிசி : இணையத்தில் தள முகவரி காகஸ் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் களப்பிரிவு.
CCD : சிசிடி : மின்னூட்டச் சேர்ப்பு சாதனம் என்று பொருள்படும் Charge Coupled Device என்பதன் குறும்பெயர். மின்னுட்டப் பிணைப்பு சாதனம் என்பதன் சுருக்கப் பெயர்.
CCFT : சிசிஎஃப்டி : Cold Cathode Fluorescent Tube என்பதன் குறும்பெயர். பின்புற ஒளி வரும் திரையில் ஒளி உண்டாக்கும் வகைகளில் ஒன்று. மற்ற பின்புற ஒளிகளைவிட அதிக எடையுடனும், அதிக மின்சாரம் வாங்குவதாகவும் இது உள்ளது.
CCITT : சிசிஐடீடி : Consultative Committee International Telegraph and Telephone என்பதன் குறும்பெயர். பன்னாட்டுத் தந்தி மற்றும் தொலைபேசி ஆலோசனைக் குழு என்பதன் சுருக்கப் பெயர். உலகளாவிய தர நிர்ணயங்களை தரவு தொடர்புத் துறையில் உருவாக்குவதற்காக ஐக்கிய நாடுகள் பேரவை உருவாக்கியுள்ள ஒரு நிறுவனம்.
CCITT Groups 1-4 : சிசிஐடீடீ 1-4 விதிகள் : பன்னாட்டுத் தந்தி - தொலைபேசி ஆலோசனைக் குழு (International Telegraph and Telephone Consultative Committee) தொலைநகல் எந்திரங்களின் மூலமாக பட உருவங்களை குறியீடுகளாக்கவும் மறு முனைக்கு அனுப்பி வைக்கவும் பரிந்துரை செய்த நான்கு பிரிவிலான நெறிமுறைகள். முதலிரண்டு பிரிவுகள் தொடர்முறை (analog) சாதனங்களுக்கும் 3, 4-வது பிரிவு நெறி முறைகள் இலக்கமுறை (digital) சாதனங்களுக்கும் ஆனவை.
ccNUMA : சிசிநூமா : நினைவக அணுகலில் ஒரு வழிமுறை. Cache Coherent Non-Uniform Memory Access என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். ஒத்தியைந்த பல்செயலாக்கக் கணினி முறைமைகள் (Symmetric, Multiprocessing System) பலவற்றை, அதிவேக/அகல அலைக்கற்றையுடைய வன்பொருள் ஊடகம் மூலம் ஒருங்கிணைத்து ஒரே கணினி அமைப்பாகச் செயல்பட வைக்கும் ஒரு தொழில்நுட்பம்.
CCP : சிசிபீ : Certification in Computer Programming என்பதன் குறும்பெயர். கணினி நிரலாக்கத்தில் சான்றிதழ் என்பது பொருள். அமெரிக்கா, கனடா மற்றும் பல பன்னாட்டு கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் ஆண்டுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. நிரலாக்க அறிவையும், வணிக, அறிவியல் மற்றும் சிறப்பு பயன்பாடுகள் உருவாக்கம் போன்ற திறன் குறித்தும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. தரவு, கோப்பு முறைமை, நிரலாக்க மொழி, தொழில்நுட்பம், வன்பொருள் - மென்பொருள்களுக்கிடையே பரிமாற்றம், மக்களுடன் பரிமாற்றம் போன்ற துறைகளில் அறிவு வலியுறுத்தப்படுகிறது.
C3L : சி3எல் : Complementary Constant Current Logic என்பதன் குறும்பெயர்.
CD1 : சிடி (CD) : கோப்பகம் மாறு என்று பொருள்படும் change directory என்ற தொடரைக் குறிக்கும் கட்டளைச் சொல். எம்எஸ்டாஸ், யூனிக்ஸ் மற்றும் எஃப்டீயீ கிளையன் நிரல்களில் இக்கட்டளை பயன்படுத்தப்படுகிறது. இக்கட்டளைச் சொல்லையடுத்துத் தரப்படுகின்ற பாதையுடன்கூடிய இன்னொரு கோப்பகத்துக்கு மாறிக்கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக, C : \VB> CD \VC\Project மூலம் VB என்னும் கோப்பகத்திலிருந்து, VC என்னும் கோப்பகத்திலுள்ள Project என்னும் உள்கோப்பகத்துக்கு மாறிக் கொள்ள முடியும். பிறகு அங்கிருக்கும் கோப்புகளையும் பயன்பாடுகளையும் எளிதாகக் கையாள முடியும். CD2 : சிடி : 1. மின்சாரம் அறியப்பட்டது என்று பொருள்படும் Current Detected என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒர் இணக்கியிலிருந்து, இணைக்கப்பட்ட ஒரு கணினிக்கு அனுப்பப்படும் சமிக்கை. இணக்கி, தகவலை ஏற்கத் தயார் நிலையில் இருப்பதை உணர்த்துவது. காண்க DCD. 2. குறுவட்டு என்று பொருள்படும் Compact Disc என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.
CDC : சிடிசி : Call Directing Code என்பதன் குறும்பெயர். ஒரு செய்தி அல்லது ஆணையை தானாகவே வழி நடத்திச் செல்லும் மூன்று அல்லது இரண்டு எழுத்துகளைக் கொண்ட ஒரு குறியீடு.
C-Drive : சி - இயக்ககம் : கணினியின் உள்ளே நிலையாகப் பொருத்தப்பட்டுள்ள தரவு சேமிப்பு வட்டு இயக்ககம், எப்போதும் 'சி' என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
cdev : சிடெவ் : மெக்கின்டோஷ் கணினிகளில் பயன்படுத்தப்படும் ஒரு பயன்பாட்டு நிரல். கணினிச் சாதனங்களை நம் விருப்பப்படி அமைத்துக் கொள்வதற்குப் பயன்படுகிறது. மேக் பதிப்பு 6 (Mac OS 6) -ல் இந்த நிரல், முறைமைக் கோப்புறையில் வைக்கப்பட்டிருந்தது. விசைப்பலகை மற்றும் சுட்டிக்கான சிடெவ்கள் கணினியை இயக்கும்போதே நிறுவப்பட்டுவிடும். ஏனைய சிடெவ்கள் அந்தந்த மென்பொருள் தொகுப்புகளுடன் இணைந்து வருகின்றன. மேக் பதிப்பு 7இல் சிடெவ்கள் கன்ட்ரோல் பேனல்கள் என்று அழைக்கப்பட்டன.
CDFS : சிடிஎஃப்எஸ் : 1. குறுவட்டில் பயன்படுத்தப்படும் கோப்பு முறைமை. 32 துண்மி (பிட்) பாதுகாப்பு முறையில் இது அமைந்துள்ளது. இந்த அடிப்படையிலேயே விண்டோஸ் 95/98 ஆகிய இயக்க முறைமைகளில் குறுவட்டின் உள்ளடக்கத்தை அணுகும் முறைகள் வரையறுக்கப்படுகின்றன. 2. யூனிக்ஸ் இயக்க முறைமையில், ஒரு கோப்பு முறைமை, படிக்க மட்டுமேயான, கழற்றி எடுக்கப்படும் ஒர் ஊடகத்தில் (குறிப்பாக குறுவட்டு) அமைந்துள்ளது என்பதைக் குறிக்கும் தகுதிச் சொல். குறுவட்டு ஐஎஸ்ஓ 9660 தர நிர்ணயப்படி அமைந்தது என்பதை இச்சொல் குறிக்கும். நிலைவட்டு, நாடா, தொலைவுப் பிணைய இயக்ககங்கள் மற்றும் குறுவட்டு இயக்ககங்களை யூனிக்ஸ் கணினியில் நிறுவும் போது இது போன்ற கட்டளைச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
CD-I : சிடி-ஐ : ஊடாடும் குறுவட்டு என்று பொருள்படும் Compact Disk-Interactive என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒளிவ வட்டு (optional disk) த் தொழில்நுட்பத்தில் வன்பொருள்/மென்பொருள் பற்றிய தர நிர்ணயம். படஉருவக் காட்சி, உருத்தெளிவு, அசைவூட்டம் கேட்பொலி மற்றும் சிறப்பு விளைவுகள் ஆகிய கூறுகளை சிடி-ஐ உள்ளடக்கியது. இத் தர நிர்ணயம் தரவுவைக் குறியீடாக்கல், இறுக்கிச் சுருக்குதல், சுருக்கியவற்றை விரித்தல், பதிவான தரவுவை திரையிடல் ஆகிய செயல்முறைகளையும் உள்ளடக்கியது.
C DOT : சி-டாட் : Centre for Development of Telematics (Telecommunications) என்பதன் குறும்பெயர். இந்திய அரசு நிறுவனம்.
CDP : சிடிபீ : தரவு செயலாக்கத்தில் சான்றிதழ் படிப்பைக் குறிக்கும் Certificate in Data Processing என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கணினி மற்றும் நிரலாக்கம், மென்பொருள் உருவாக்கம், முறைமை ஆய்வு உட்பட, கணினி தொடர்பான துறைகளில் சில தேர்வுகளை எழுதித் தேர்ச்சிபெறும் தனி நபர்களுக்கு இன்ஸ்டிடியூட் ஃபார் சர்ட்டிஃபிகேஷன் ஆஃப் கம்ப்யூட்டர் புரொஃபஷனல்ஸ் என்ற நிறுவனம் இந்தச் சான்றிதழை வழங்குகிறது.
CD Player : சிடி இயக்கி.
CD plus : சிடி பிளஸ் : குறுவட்டில் தரவுவைப் பதியும் முறை. கணினித் தரவுகளையும் கேட்பொலிப் பதிவுகளையும் ஒரே குறுவட்டில் பதிய இம்முறை வழிவகுக்கிறது. தரவு பகுதியைப் படிக்கும்போது கேட்பொலிப் பதிவுகளோ, கேட்பொலிப் பகுதியை இயக்கும்போது தரவு பகுதியோ பாதிக்கப்படுவதில்லை.
CD-R : சிடி-ஆர் : பதிதகு குறுவட்டு எனப் பொருள்படும் Compact Disk Recordable என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். குறுவட்டு எழுதி (CD writer) மூலம் தகவலைப் பதிப்பித்து, குறுவட்டகத்தில் வைத்துப் படிக்க முடிகிற ஒரு வகைக் குறுவட்டு.
CD Recorder : குறுவட்டெழுதி : குறுவட்டுப் பதிவி : ஒரு குறுவட்டில் எழுதும் சாதனம். குறுவட்டில் இந்த சாதனம் மூலம் ஒருமுறை எழுதப்பட்டு பலமுறை படிக்கப்படுகிறது. நிரந்தரத் தரவு சேமிப்புக்காகவும், பாதுகாப்பு நகலாக (Backup) பயன்படுத்தவும், மென்பொருள்களை பல நகல்கள் எடுத்து வினியோகிக்கவும் குறுவட்டெழுதி மூலம் வட்டில் தரவுகள் எழுதப்படுகின்றன.
CD-ROM : சிடி-ரோாம் : படிக்க மட்டுமேயான குறுவட்டு என்று பொருள்படும் Compact Disk - Read Only Memory என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். விவரச் சேமிப்பகத்தில் ஒருவகை. அதிகக் கொள்திறன் உள்ளது (650 MB). தரவுவைப் படிக்க மின்காந்த முறைக்குப் பதில் லேசர் கதிர் பயன்படுத்தப்படுகிறது. ஒரு முறை எழுதப்பட்டு பலமுறை படிக்கப்படுகிறது (Write Once Read Many Times).
CD-ROM Changer : சிடி ரோம் மாற்றி.
CD-ROM drive : குறுவட்டகம்; குறுவட்டு இயக்ககம் : படிக்க மட்டுமேயான தரவுகள் பதியப்பட்டுள்ள குறுவட்டினை கணினியில் வைத்துப் பயன்படுத்தக்கூடிய வட்டகம் அல்லது வட்டு இயக்ககம்.
CD-ROM juke box : குறுவட்டு தொகுதிப் பெட்டி : குறுவட்டுகளின் தொகுதியை கணினியுடன் இணைத்துக் கையாள வழி செய்யும் வட்டியியக்குச் சாதனம். 200 குறுவட்டுகள் வரை இதில் வைத்துப் பயன்படுத்த முடியும். பயனாளர் எந்த வட்டிலுள்ள தரவுவையும் கையாள விரும்பலாம். இச்சாதனம் அக்குறிப்பிட்ட வட்டினைத் தேடிக் கண்டறிந்து தரவுவை எடுத்துத் தரும். ஒரு நேரத்தில் ஒரு குறுவட்டு மட்டுமே பயன்பாட்டில் இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட குறுவட்டினைக் கையாளும் திறனுள்ள கணினியெனில், தொகுதிப் பெட்டியிலுள்ள வட்டுகளில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் கையாள முடியும்.
CD-ROM/XA : சிடி-ரோம்/எக்ஸ்ஏ; குறுவட்டு/எக்ஸ்ஏ : சிடி-ரோம் எக்ஸ்டெண்டடு ஆர்க்கிடெக்சர் என்பதன் சுருக்கச் சொல். ஒரு விரிவாக்கப்பட்ட குறுவட்டுத் தரவு பதிவுமுறை. ஃபிலிப்ஸ், சோனி, மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் இணைந்து இதனை உருவாக்கியுள்ளன. சிடி-ரோம்/எக்ஸ்ஏ, ஐஎஸ்ஓ 9660 தர நிர்ணயத்திற்கு ஒத்தியல்பானது.
CDV : சிடிவி : 1. இறுக்கப்பட்ட இலக்கமுறை ஒளிக்காட்சி என்று பொருள்படும் Compressed Digital Video என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். அதிவேக ஊடகங்களில் அனுப்பி வைப்பதற்கு ஏற்ப இறுக்கிச் சுருக்கப்பட்ட ஒளிக்காட்சி உருவப்படங்கள். 2. குறுவட்டு ஒளிக்காட்சி என்று பொருள்படும் Compact Disc Video என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். 5 அங்குல விட்டமுள்ள வட்டினைக் குறிக்கிறது.
CE : சிஇ : வாடிக்கையாளர் பொறியாளர் எனப் பொருள்படும் Customer Engineer என்பதன் குறும்பெயர்.
cell : கலம்; சிற்றம் : 1. ஒரு எழுத்து, ஒரு பைட் அல்லது ஒரு சொல்போன்ற தகவலின் ஒரு அலகை மட்டும் சேமிக்குமிடம். 2. ஒரு மின்னணு விரிதாளின் அணிபோன்ற அமைப்பில் கிடைக்கையும் நெடுக்கையும் சந்திக்கும் இடம்.
cell address : கல முகவரி : விரிதாள் செயல்முறையில் நெடுக்கையின் பெயர் (ABC..) மற்றும் கிடக்கை எண் (1, 2, .....) இரண்டும் சேர்ந்த முகவரி. A1, G22, J320 என அமையும்.
Cell animation : கலை அசைவூட்டம் : ஒரு அசைவூட்டத் தொழில்நுட்பம். இதில் ஒரு ஓவியம் பின்னணியில் நிலையாக இருக்கும். அசைவூட்டப்பட்ட உருவங்கள் ஓவியத்தின் மீது நகரும்போது அவை இயல்பாக நகர்வது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகிறது. கல ஆசை வூட்டத்துக்கென பயன்பாட்டுத் தொகுப்புகள் கிடைக்கின்றன.
cell array : கலக்கோவை : GKSஇல் அடிப்படை வெளியீடுகளில் ஒன்று. சிறிய பாலிகன் வரிசை முறையை அமைத்து ஒவ்வொன்றுக்கும் தனி நிறம் தருகிறது.
cell contents : கல உள்ளடக்கம் : ஒரு விரிதாள் கலத்தில் உள்ள எழுத்துச் சரம், மதிப்பு, வாய்பாடு அல்லது செயல்கூறு.
cell definition : சிற்றம் வரைவிலக்கணம்; கல வரையறை.
cell pointer : சிற்றம் சுட்டு; கலச்சுட்டு.
cellular automata : செல்பேசித் தானியங்கு கொள்கை.
Cellular Digital Packet Data : செல்பேசி இலக்கமுறைப் பொதி தரவு : ஏற்கெனவேயுள்ள செல்பேசித் தடங்களின் வழியே வினாடிக்கு 19. 2 கிலோபிட் வேகத்தில் இருதிசை விவரப் பொதி தரவு பரிமாற்றத்திற்கான தர நிர்ணயம்.
cellular phone : செல்லிடப்பேசி; செல்பேசி; கைத் தொலைபேசி :
cellular radio : செல்லிட வானொலி : முழு நிலப் பரப்புக்கும் அதிக சக்தியுள்ள நிலையான வானொலி நிலையம் அமைப்பதற்குப் பதிலாக சிறுசிறு பகுதிகளாகப் பிரித்து சேவை அளிப்பது. ஒருசில கிலோ மீட்டர்கள் மட்டுமே கேட்பதாக அவை இருக்கும். நடமாடும் தொலைபேசியின் தேவை அதிகரிப்பதால் கல அமைப்பின்மூலம் நிலைமையை ஈடு கட்டலாம். பல இயங்கும் சேவைகள், குறும் பகுதிக்குள் கொண்டுவரப்பட்டு கலத்தின் அளவு குறைக்கப்படுகிறது. ஒவ்வொரு கலத்திலும் தனி பல்லிணைப்பு அலைவரிசை பரப்பி வாங்கி ஆகியவை அமைக்கப்படுகின்றன. பரப்பிகட்கு குறைவான மின்சக்தியே தேவைப்படுகிறது. இதனால் வானொலி அலைவரிசைக் கற்றை (பாண்டு) களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி சில நூறு பேர்களுக்குப் பதிலாக பல்லாயிரவர் பயன் பெறமுடியும்.
center : மையம் : தட்டச்சு செய்யப்படும் தரவுவை வரியின் மையத்தில் இடம்பெறச் செய்யும் விசைப் பலகையின் பணி.
Centre for Development of Advanced Computing : உயர்நிலை கணிப் பணி மேம்பாட்டு மையம் : சுருக்கமாக சி - டாக் (CDAC) என அழைக்கப்படுகிறது. மைய அரசு நிறுவனம்.
center vertically : செங்குத்து மையப்படுத்து.
centering cone : மையப்படுத்தும் கூம்பு : 5. 25 நெகிழ்வட்டை (ஃபிளாப்பி) இயக்கி அச்சாணியில் எற்றப் பயன்படுத்தும் சிறிய செயற்கை இழை அல்லது உலோகக்கூம்பு. இயக்ககக் கதவை மூடியவுடன், இது வட்டின் மையக் குழியில் நுழைக்கப்படுகிறது.
centi : சென்டி : நூறாவது என்பதைக் குறிக்கும் மெட்ரிக் அளவை முன் சொல். நூறு என்பதைக் குறிக்கும் ஹெக்டோவுடன் வேறுபடுத்திப் பார்க்க.
centi second : சென்டி நொடி : ஒரு நொடியில் நூறில் ஒரு பங்கு.
central control unit : மைய கட்டுப்பாட்டகம்.
central information file : மைய தரவு கோப்பு : முக்கிய தரவு சேமிப்பு அமைப்பு.
central office : மைய அலுவலகம் : தரவு தொடர்பு அமைப்பில் வாடிக்கையாளர்களின் தரவு தொடர்புத் தடங்கள் ஒன்றுக்கொன்று இணைக்கப்படும் இணைப்பு மையம்.
central processing : மையச் செயலாக்கம்.
central processing unit : மையச் செயலகம்.
central processor : மையச் செயலி; மையச் செய்முறைப்படுத்தி; மையச் செயலாக்கி.
central site : மையத் தளம் : பகிர்ந்தமை செயலாக்க அமைப்பில் முக்கிய கருவிகள் உள்ள இடம்.
central spindle : மையச் சுழல் தண்டு.
central tendency : மையப் போக்கு : எதிர்பார்க்கப்பட்ட மதிப்புகளுக்கு ஏற்றதாக தரவுகள் அமையக் கூடிய வாய்ப்பு.
central terminal : மைய முனையம் : கணினிக்கும் தொலை தூர முனையத்துக்கும் இடையே தரவு தொடர்பு கொள்வதற்கு இடைப்பட்ட ஊடகமாகப் பயன்படும் வன்பொருள் தாங்கி.
centralized data processing : மையப்படுத்தப்பட்ட தரவு செயலாக்கம் : ஒரு நிறுவனம் தன்னுடைய கணினி கருவிகளையெல்லாம் ஒரே இடத்தில் வைத்திருக்கும் கோட்பாடு. கள அலுவலகச் செயல்பாடுகளில் தரவு செயலாக்கம் இல்லாத நிலை.
centrafized design : மையப்படுத்தப்பட்ட வடிவமைப்பு : ஒரு நிறுவனத்தின் தரவுச் செயலாக்க வசதிகளை, ஒரு தனி தரவுச் செயலாக்கத் துறையே வழங்கும் தரவு அமைப்பு.
centralized network configuration : மையப்படுத்தப்பட்ட பிணையத் தகவமைவு : ஒரு மையக் கணினியின் தொடர்புடன் பெரும்பாலான பணிகளைச் செய்யும் ஏற்பாடுள்ள கணினிப் பிணையம். நட்சத்திரப் பிணையம் என்றும் அழைக்கப்படுகிறது.
centralized processing : மையப்படுத்தப்பட்ட செயலாக்கம் : ஒரு தனி, மைய இடத்திலிருந்து ஒன்று அல்லது மேற்பட்ட கணினிகளை இணைத்து செயலாக்கம் செய்தல். இதன் பொருள் என்னவென்றால் தரவு மையத்துடன் நிறுவனத்தின் அனைத்து முனையங்களையும் இணைத்து செயல்பட வைக்கப்படுகிறது என்பதே.
centred text : மையப்படுத்திய உரை : சொல்லமைவுகளை ஒரு வரியின் மையத்தில் அமைத்தல். ஒரு பக்கத்தில் இடது ஓரம் அல்லது வலது ஓரத்தில் இல்லாமல் மையத்தில் இடம் பெறும் சொல் அல்லது சொற்றொடர்.
centronics interface : சென்ட்ரானிக்ஸ் இடைமுகம் : கணினிகளையும் அச்சுப் பொறிகளையும் இணைக்கும் புகழ் பெற்ற ஒரேநேர பரிமாற்ற அமைப்பு. கணினிகளுக்கும் அச்சுப் பொறிகளுக்கும் இடையில் தரவு தொடர்புக்கு ஒரே நேரத்தில் சேர்ந்தியங்கும் திட்டத்தைச் செயல்படுத்திய அச்சுப்பொறி உற்பத்தி நிறுவனம் சென்டிரானிக்ஸ்.
centronics parallel interface : சென்ட்ரானிக்ஸ் இணைவழி இடைமுகம் : கணினிக்கும் அதன் புறச்சாதனங்களுக்கும் இடையேயான இணைவழி தரவு பரிமாற்றப் பாதைகளுக்கான தர நிர்ணயம். அச்சுப் பொறிகளை உற்பத்தி செய்யும் சென்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்தத் தர நிர்ணயத்தை முதலில் உருவாக்கியது. சென்ட்ரானிக்ஸின் இணைவழி இடை முகம், எட்டு இணைவழி தரவு தடங்களையும் கட்டுப்பாடு மற்றும் நிலையறி தரவுக்கான கூடுதல் தடங்களையும் வழங்குகிறது. censorship : தணிக்கைமுறை : ஒரு தரவு தொடர்பு ஊடகத்தின் வழியே ஆட்சேபத்துக்குரிய செய்திகளைப் பரப்பக் கூடாது எனத் தடை செய்யும் முறை. இணையத்தில் செய்யப்படும் தரவு பரப்புகைக்கு இத்தகைய தணிக்கை முறை கிடையாது. ஆனால் இணையத்தில் சில குறிப்பிட்ட பகுதிகள் பலவிதமான கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகின்றன. எடுத்துக்காட்டாக, இணையத்தில் செய்திக் குழுக்களில் alt என்னும் பிரிவில் முழுவதுமோ, alt. sex அல்லது alt. music write-power ஆகிய பிரிவுகளில் வெளியிடப்படும் ஆபாசமான ஆட்சேபத்துக்குரிய செய்திகள் செய்திக் குழுவின் இடையீட்டாளரால் (moderator) தணிக்கை செய்யப்படுகின்றன. சிலநாடுகளில் அந்நாடு பின்பற்றும் தேசியக் கொள்கை அடிப்படையில் சில அரசியல் மற்றும் பண்பாட்டு வலைத் தளங்களை அந்நாட்டுப் பயனாளர்கள் பார்வையிட அனுமதிப்பதில்லை.
CEO : முதன்மை மேலாண் அலுவலர்.
CERN : செர்ன் : அணு இயற்பியலுக்கான ஐரோப்பிய ஆய்வுக்கூடம் என்று பொருள்படும் Conseil Europeen Pour La Recherche Nucleaire (The European Laboratory for Particle Physics) என்ற பெயரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் செர்ன் ஆய்வுக் கூடம் அமைந்துள்ளது. 1989-ஆம் ஆண்டில் இந்த ஆய்வுக் கூடத்தில்தான் டிம் பெர்னர்ஸ்-லீ வையவிரிவலையை (World Wide Web) உருவாக்கினார். அறிவியல் ஆய்வு அறிஞர்களுக்கிடையே தரவு தொடர்பு வசதியை ஏற்படுத்தித் தருவதே இதன் நோக்கமாய் இருந்தது.
CERN server : செர்ன் வழங்கன் கணினி : செர்ன் ஆய்வுக் கூடத்தில் டிம் பெர்னர்ஸ்-லீ உருவாக்கிய ஹெச்டிடிபீ (HTTP) வழங்கன் கணினிகளில் ஒன்று. இணையம் முழுவதிலும் இப்போதும் செர்ன் கணினிகள் பயன்பாட்டில் உள்ளன. அதன் சேவைகள் இலவசமாகவே கிடைக்கின்றன.
'CERT : செர்ட் : கணினி அவசர நடவடிக்கைக் குழு என்று பொருள்படும் Computer Emergency Response Team என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையப் பயனாளர்களுக்கு 24 மணி நேரமும் கணினிப் பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கும் நிறுவனம் இது. புதிய நச்சுநிரல் (Virus) மற்றும் வேறெந்த கணினிப் பாதுகாப்பு அபாயம் குறித்தும் ஆலோசனைகள் பெறலாம்.
certification : சான்றளிப்பு : 1. ஒரு மென்பொருள் அதன் செயல்திறன் எண்பிக்கப்பட்ட பிறகு ஏற்றுக் கொள்ளல். 2. ஒருவர் குறிப்பிட்ட அளவு தொழில் முறையிலான தகுதியை அடைந்து விட்டார் என்று கடுமையான தேர்விற்குப் பிறகு அவருக்கு அங்கீகாரம் அளித்தல்.
. cf : . சிஏஃப் : மத்திய ஆஃப்ரிக்கக் குடியரசில் செயல்படும் இணைய தள முகவரிகளில் குறிப்பிடப்படும் பெரும் புவிக்களப் பெயர்.
. cg : . சிஜி : இணைய தள முகவரி, காங்கோ நாட்டில் பதிவுசெய்யப்பட்டது என்பதைக் குறிப்பதற்கான பெரும் புவிக்களப் பெயர்.
CGA : சிஜிஏ : வண்ண வரை கலைத் தகவி என்று பொருள்படும் Colour Graphics Adapter என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். 1981இல் ஐபிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஒளிக்காட்சித் தகவிப் பலகை சிஜிஏ, பல்வேறு எழுத்து மற்றும் வரை கலைக் காட்சி முறைகளைத் தர வல்லது. எழுத்து முறைகளில் 16 நிறங்களில் 25 வரிகள், 80 எழுத்துகள், 25 வரிகள்/40 எழுத்துகள் காண்பிக்கும் முறைகளும் உண்டு. 2 நிறங்களில் 640 கிடைமட்ட படப் புள்ளிகளும் (pixels), 200 செங்குத்துப் படப் புள்ளிகளும் இடம்பெறும் வரைகலைக் காட்சி முறையும், 320x200 படப்புள்ளி, நான்கு நிறக் காட்சி முறையும் உண்டு.
CGI : சிஜிஐ : பொது நுழை வாயில் இடைமுகம் எனப் பொருள்படும் Common Gateway Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஹெச்டீடீபீ போன்ற தரவு பரிமாற்ற வழங்கன் (Server) கணினிகளுக்கிடையேயும், தரவு தளம் மற்றும் ஏனைய பயன்பாட்டு மென்பொருள் தொடர்பான விவரப் பரிமாற்றம் செய்துகொள்ளும் புரவன் கணினிகளுக்கிடையேயும் நடைபெறும் தரவு தொடர்புக்குரிய செந்தரக்கட்டுப்பாடுகளை இது குறிக்கிறது.
cgi-bin : சிஜிஐ-பின் : Common Gateway Interface-binaries என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஹெச்டீடீபீ வழங்கன் கணினிகளில் சிஜிஐ நிரல்களின் மூலம் இயக்கப்படும் புறநிலைப் பயன்பாடுகள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கோப்பகம் (directory).
CGI script : சிஜிஐ உரைநிரல்.
. ch : . சிஹெச் : இணைய தளங்களில் சுவிட்சர்லாந்து நாட்டுத் தளமுகவரியில் குறிப்பிடப்படும் பெரும் புவிப்பிரிவு களப்பெயர்.
Chad : காகிதத் துண்டு : சேமிப்புச் சாதனத்தில் துளையிடப்பட்டவுடன் தனியாக விழும் நாடா அல்லது தொடர் எழுதுபொருளில் துளையிட்டவுடன் வெளியே விழும் துண்டுக் காகிதம்.
chain : சங்கிலி : 1. கட்டுகள் மூலம் ஏடுகளை இணைத்தல். கடைசி ஏட்டுக்கும் முதல் ஏட்டுக்கும் இதன் மூலம் இணைப்பு ஏற்படுத்தப்படும். 2. வரிசையாகச் செய்ய வேண்டிய செயல் முறைகள்.
chained file (s) : இணைக்கப்பட்ட கோப்புகள் : ஒவ்வொரு பிரிவு தரவு கட்டமும் அடுத்த ஒன்றுக்கு அழைத்துச் செல்லும் கோப்பு பாயின்டர் எனப்படும் சுட்டுகளைப் பயன்படுத்தி தரவு கட்டங்களை இணைத்துள்ள தரவு கோப்பு.
chained files : சங்கிலியிடப்பட்ட கோப்புகள் : சுட்டுக் கருவிகள் மூலம் தொடராக இணைக்கப்பட்ட தரவு கோப்புகள்.
chained list : சங்கிலியிடப்பட்ட பட்டியல் : ஒவ்வொன்றும் அடுத்து வருவதைக் குறிப்பிடும் பட்டியல், சேமிக்கப்பட்ட அதே வரிசையிலேயே அதைத் திரும்பப் பெறவேண்டிய தேவையில்லை.
chain field : சங்கிலிப் புலம் : சேமிப்புச் சாதனத்தில் அடுத்ததாக சேர்க்கப்படாவிட்டாலும் ஆரம்பப் பதிவேட்டுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு பதிவேட்டில் உள்ள புலத்தின் வரையறை.
chaining : சங்கிலியிடல் : 1. நிரல்கள் அல்லது செயல் முறைகள் அல்லது ஏடுகளை வரிசையாக இணைக்கும் முறை. கணினியின் முதன்மை நினைவகத்தைவிடப் பெரிதான நிரல்களை பகுதி பகுதியாகப் பிரித்து செயல்படுத்துதல். இதில் பல சிறிய பணிக்கூறுகளாக (modules) உருவாக்கப் பட்டு அவை கணினியில் ஏற்றப்பட்டு வரிசையாக செயல்படுத்தப்படும்.
chaining search : சங்கிலிமுறைத் தேடல் : பதிவேட்டில் உள்ள முகவரிகளைப் பயன்படுத்தி, ஒரு கோப்பில் தரவு தேடும் நுட்பம். இதில் சங்கிலி முறையில் ஒவ்வொரு பதிவேடும் அடுத்த பதிவேட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
chaining printer : சங்கிலி அச்சுப் பொறி : அச்சிடும் இடங்களில் செங்குத்தாகச் சுற்றும் சங்கிலியில் எழுத்துகளை அமைத்துள்ள அச்சுப் பொறி, அச்சுக் சங்கிலியில் அமைக்கப்பட்டுள்ள எழுத்துகளின் மீது ஒரு அச்சு சுத்தி அடிப்பதன் மூலம் காகிதத்தில் அச்சிடுகிறது.
chain printing : சங்கிலி அச்சுப்பதிவு.
Challenge Handshake Authentication Protocol : சேப் : (CHAP) : பீபீபீ (ppp - point to point protocol) நெறிமுறை வழங்கன் : கணினிகளில் இணைப்பு ஏற்படுத்திக் கொள்பவரின் அடையாளத்தை இணைப்பு ஏற்படுத்தும் போதோ அல்லது அதன்பிறகோ அடையாளம் காண்பதற்காகப் பயன்படுத்தப்படும் சான்றுறுதி நெறிமுறைத் திட்டமுறை.
chamfer : சமன் விளிம்பு : இரண்டு சந்திக்கும் கோடுகளுக்கு இடையில் சமன்படுத்தப்பட்ட விளிம்பு.
change : மாற்று.
change agent : மாற்ற உதவியாளர் : ஒரு நிறுவனத்தின் மாற்றத்திற்கு எதிர்ப்பு ஏற்படின் அதைச் சமாளிக்கும் முறைமைப் பகுப்பாய்வாளர் (System Analyst).
change all : அனைத்தும் மாற்று.
change directory command : கோப்பக மாற்று ஆணை : டாஸ், யூனிக்ஸ் முறைகளில் செயல்படும் கட்டளை.
change dump : மாற்றுத் திணிப்பு : முன்பு பதிவு செய்த நிகழ்வினை அடுத்து ஏற்பட்ட மாற்றங்கள் பற்றிய நினைவகத்தின் அனைத்து தன்மைகளையும் வெளியிடல்.
change file : மாற்றக் கோப்பு : மாற்றப்பட்ட தரவு கோப்பு. தலைமைக் கோப்பைப் புதுப்பிக்கப் பயன்படும் செயல் பரிமாற்றக் கோப்பு.
change of control : கட்டுப் பாட்டு மாற்றுகை.
channel : இணைப்பு : வழி : தடம்; அலைவரிசை : 1. இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட முனைகளை இணைக்கும் மின்சார அல்லது மின்னணு தரவு பயணிக்கும் பாதை. 2. துணைச் சாதனங்களை கணினியுடன் இணைக்கும் தரவு தொடர்பு பாதை.
channel adapter : தடத் தகவி : பல்வேறு வன்பொருள் சாதனங்களின் வழிகளிடையே தரவு தொடர்பினை ஏற்படுத்தும் சாதனம்.
channel capacity : தடக் கொள்ளளவு/கொள்திறன்; தட வேகம்; தட இணைப்புத் திறன் : ஒரு தரவு பரிமாற்றத் தடத்தின் வேகம் அது ஒரு வினாடி நேரத்தில் எத்தனை துண்மிகளை (bits) அல்லது எத்தனை பாடுகளை (bauds) அனுப்பி வைக்கிறது என்ற அடிப்படையில் அளக்கப் படுகிறது.
channel command : இணைப்புக் கட்டளை : ஒரு உள்ளீட்டு/வெளியீட்டு இணைப்பைச் செயல்படுத்தும் கட்டளை.
channel, communication : தரவு தொடர்புத் தடம்.
channel emitter : தட ஒளிர்வு; தட உமிழி.
channel guide : தட வழித் துணை.
channel hop : தடத் தாவல் : இணையத்தில் தொடர் அரட்டையில் (IRC) ஈடுபட்டுள்ளவர் ஒர் அரட்டைத் தடத்திலிருந்து இன்னொரு தடத்திற்கு அடிக்கடி மாறிக் கொண்டிருப்பது.
channel, information : தரவு தடம்.
channel, input/output : உள்ளீட்டு வெளியீட்டுத் தடம்.
channel mар : இணைப்பு அமைபடம் : மிடி (midi) இணைப்புச் செய்திகளுக்குச் சேரவேண்டிய இணைப்புகள், வெளியீட்டுச் சாதனங்கள் மற்றும் ஒட்டு அமைபடங்களைக் குறிப்பிடுகிறது.
channel op : தட நிர்வாகி; தட மேலாளர்; தட இயக்குநர் : channel Opearator என்பதன் குறுக்கம். இணையத் தொடர் அரட்டையில் ஒவ்வொரு தடத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரட்டை உரையாடல்களை ஒருவர் மேற்பார்வை செய்து கொண்டிருப்பார். விரும்பத்தகாத அநாகரிகமான உரையாடலில் ஈடுபடுவோரை அரட்டைத் தடத்திலிருந்து நீக்கிவிட இவருக்கு அதிகாரம் உண்டு.
Channel, peripheral interface : புறச்சாதன இடைமுகத் தடம். channel programme : தட நிரல் : ஒரு அதிவேக வெளிப்புற செயல்பாட்டு ஆணைகளின் தொகுதி. உள்ளீட்டு/வெளியீட்டு இயக்கத்தைத் தொடக்கும் நிரலின் ஆணை. இணைப்பு நிரலைத் தனியாக இணைப்பு செயல்படுத்தும். அதேவேளையில் மற்ற இயக்கங்கள் கணினியால் செய்யப்படும்.
channel, read/write : படி/எழுது தடம்.
channels : தடங்கள், வழிகள்.
character : எழுத்து வகை; வரி வடிவம் : கணினி சாதனத்தில் சேமித்து, செயலாக்கப்படும் ஏதாவது ஒரு குறியீட்டெண், நிறுத்தக் குறியீடு அல்லது வெற்றிடம்.
character-at-a-time printers : ஒரு நேரத்தில் ஒரு எழுத்து அச்சுப் பொறிகள் : தொடர் அச்சுப் பொறிகள் என்று அழைக்கப்படும். ஒரு நேரத்தில் ஒரு எழுத்தினை மட்டுமே அச்சிடும் அச்சுப் பொறிகள்.
character based programme : எழுத்து சார் நிரல்.
character, binary code : இருமக் குறிமுறை எழுத்து.
character cell : எழுத்துக் கலம்; எழுத்துச் சிற்றறை : காட்சித் திரை அல்லது அச்சுப் பொறியில் ஒரு தனி எழுத்தை அமைக்கப் பயன்படும் புள்ளிகளின் அமைப்பு 8x16 எழுத்துச் கலங்களில் 16 கிடைவரிசைகள் இருக்கும். ஒவ்வொரு வரிசையிலும் 8 புள்ளிகள். இப்புள்ளிகளின் இணைப்பின் மூலமே எழுத்து உருவாகிறது.
character checking : எழுத்துச் சரிப்பார்ப்பு : எல்லா எழுத்துகளையும் ஒரு குழு அல்லது புலமாகச் சோதித்து ஒவ்வொரு எழுத்தையும் சரிபார்த்தல்.
character code : எழுத்துக் குறிமுறை : எழுத்துத் தொகுதி ஒன்றைக் குறிப்பிடும் ஒரு எண் குறியீடு.
character data : எழுத்துத் தரவு : எழுத்து அல்லது எழுத்து எண்களால் ஆன விவரம்.
character definition table : எழுத்து வரையறை அட்டவணை : கணினித் திரையில் புள்ளிகளால் ஆன எழுத்துகளையும், துண்மிவரைவு எழுத்து வடிவங்களையும் காண்பிக்க அடிப்படையாக விளங்கும் தோரணிகள் (patterns) அடங்கிய அட்டவணை. கணினிகள் நினைவகத்தில் இந்த அட்டவணையை இருத்தி வைத்துச் செயல்படும்.
character density : எழுத்து அடர்த்தி : சேமிப்புச் சாதனங்களில் தகவல்களின் அடர்த்தி. ஒரு ச. செ. மீ. அல்லது ச. அங்குலத்திற்கு எத்தனை எழுத்துகள் என்பதைக் குறிப்பிடுகிறது.
character device : எழுத்துச் சாதனம் : ஒரு நேரத்தில் ஒரு எழுத்து என்ற அளவில் தரவுகளை அனுப்பிப் பெறும் சாதனம்.
character emitter : எழுத்து ஒளிர்வு; வரிவடிவ உமிழி.
character field : எழுத்துப் புலம் : எழுத்து அல்லது எண், எழுத்துகளைக் கொண்டிருக்கும் தரவு புலம். Numeric field-க்கு எதிர்ச்சொல்.
character fill : எழுத்து நிரப்பு : இடங்களை நிரப்பப் பயன்படும் வெற்றிடம் அல்லது பிற குறியீடுகள்.
character generator : எழுத்து இயற்றி; எழுத்து உருவாக்கி : ஒரு திரை அல்லது அச்சுப் பொறியில் எண் அல்லது எழுத்துகளை ஏற்படுத்தும் மின்சுற்று.
character graphics : எழுத்து வரைகலை : அகர வரிசை எழுத்துகளைப் போல வரைகலையை உருவாக்க சிறப்புக் குறியீடுகளை ஒன்றாகக் கோத்தல். சான்றாக, தொடரும் எழுத்து வரைகலையினைப் பயன்படுத்தி படிவங்கள், வரைபடம் மற்றும் எளிய வரைகலைகள் அச்சிடப்படுகின்றன. ஆஸ்கி (ASCII) எழுத்துகளின் பகுதியாக இவை அமைகின்றன.
character image : எழுத்துப் படிமம்; எழுத்து உருக்காட்சி : ஓர் எழுத்தின் வடிவில் ஒழுங்கமைக்கப்படும் துண்மிகளின் (பிட்) தொகுப்பு. ஒவ்வொரு எழுத்தின் உருவமும் செவ்வக வடிவத்தில் அமைந்த கட்டங்களுக்குள் அடங்கியுள்ளது. ஓரெழுத்தின் உயரமும் அகலமும் அதன் மூலமே நிர்ணயிக்கப்படுகின்றன.
characteristic : பண்பியல்புகள்.
characater layout : எழுத்து உருவரை.
character, least significant : குறை மதிப்பெழுத்து.
character machine : எழுத்து எந்திரம் : ஒரு பைட்டை ஓர் எழுத்தாகக் கையாளும் எந்திரத்தைக் குறிப்பிடுகிறது.
character map : எழுத்து அமை படம் : காட்சித்திரையில் உள்ள கட்டங்களின் தொகுதி. இதில் உள்ள ஒவ்வொரு கட்டமும் ஒரு எழுத்து, எண் நிறுத்தக் குறியீடு அல்லது சிறப்பு எழுத்தைக் குறிப்பிடுகிறது.
Character mode terminal : எழுத்துப் பாங்கு முனையம்.
character modifier : எழுத்து மாற்றமைப்பி.
character, numeric : எண்வகை எழுத்து.
character oriented : எழுத்து அடிப்படையிலான.
character pattern : எழுத்துத் தோரணி.
character pitch : எழுத்து இடைவெளி : ஒரு வரியில் ஒரு அங்குலத்திற்கு இத்தனை எழுத்து என்று குறிப்பிடுவது.
character printer : எழுத்தச்சுப் பொறி : 1. ஒரு நேரத்தில் ஒரு எழுத்தை அச்சடிக்கும் அச்சுப்பொறி. வழக்கமாகப் பயன்படுத்தப்படும் புள்ளியணி அச்சுப்பொறியும், டெய்ஸி-சக்கர அச்சுப்பொறியும் எடுத்துக் காட்டுகள். வரி அச்சுப்பொறி, பக்க அச்சுப்பொறி ஆகியவற்றோடு ஒப்பிட்டு அறிக. 2. வரைகலைப் படங்களை அச்சிடவியலாத புள்ளியணி அச்சுப்பொறிகளையும், டெய்ஸி சக்கர அச்சுப்பொறிகளையும், லேசர் அச்சுப்பொறிகளையும்கூட இச்சொல் குறிக்கிறது. இத்தகைய அச்சுப்பொறி கணினியிலிருந்து எழுத்து வடிவிலான விவரங்களைப் பெற்று அப்படியே எழுத்து வடிவில் அச்சிடும். வரைகலை அச்சுப்பொறியோடு ஒப்பிட்டு அறிக.
character reader : எழுத்துப் படிப்பி.
character reader magnetic ink : காந்த மை எழுத்துப் படிப்பி.
character recognition : எழுத்துணர்தல்; எழுத்தறிதல் : கணினியில் ஓர் எழுத்தை வெவ்வேறு எழுத்துருக்களில் (fonts) வெவ்வேறு பாணிகளில் (styles) (a : த : ஒ) பயன்படுத்துகிறோம். ஒரு தாளில் அச்சிடப்பட்ட எழுத்தை வருடுபொறி மூலம் வருடி கணினிக்குள் செலுத்தும்போது, கணினி அந்த எழுத்தை அடையாளம் கண்டுகொள்வதில் பிழை நேர வாய்ப்புண்டு. பிழையின்றி அறிய வேண்டுமெனில் எழுத்துகள் இந்த வடிவமைப்பில்தான் இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் சில கணினி அமைப்புகளில் உள்ளன. ஆனால் சில கணினிகள், தோரணி ஒப்பீட்டு (pattern matching) தொழில்நுட்ப அடிப்படையில் அமைந்த மென்பொருளின் உதவியுடன்எப்படிப்பட்ட வடிவமைப்பிலுள்ள எழுத்துகளையும் அடையாளம் கண்டுகொள்ளும்.
character rectangle : எழுத்துச் செவ்வகம் : ஒர் எழுத்தின் வடிவத்தை வரைகலை வடிவில் படப்புள்ளிகளால் எடுத்துக் கொள்ளப்படும் செவ்வகப் பரப்பு.
character set : எழுத்துரு தொகுதி.
characters per inch : ஓர் அங்குலத்தில் எழுத்தெண்ணிக்கை : ஓர் அங்குல நீளத்தில், குறிப்பிட்ட உருவளவில் (size) அமைந்த, ஒரு குறிப்பிட்ட எழுத்துரு வடிவில் எத்தனை எழுத்துகள் இடம்பெற முடியும் என்கிற அளவீடு. இந்த எண்ணிக்கை எழுத்து வடிவின் இரண்டு பண்பியல்புகளினால் பாதிக்கப்படுகிறது. ஒன்று அதன் புள்ளி (பாயின்ட்) அளவு. அடுத்தது, அந்தக் குறிப்பிட்ட எழுத்துருவில் எழுத்துகளின் அகலம். ஒற்றையிட எழுத்துருக்களில் எழுத்துகள் சமமான அகலத்தைக் கொண்டிருக்கும். தகவுப் பொருத்தமுள்ள எழுத்துருக்களில் எழுத்துகளின் அகலம் வேறுபடும். எனவே ஓர் அங்குலத்தில் எத்தனை எழுத்துகள் என்பது சராசரியாகக் கனக்கிடப்படும். ஓர் அங்குலத்தில் எழுத்துகள் என்று பொருள்படும் character per inch என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர் சிபீஐ (CPI) எனப்படுகிறது.
character space : எழுத்து இடவெளி.
characters per second : ஒரு நொடிக்கு இத்தனை எழுத்துகள் : குறைந்த வேக தொடர் அச்சுப் பொறிகளின் வெளியீட்டை அளக்கும் அலகு. CPS என்று சுருக்கிக் கூறப்படுகின்றது.
characters, special : சிறப்பு எழுத்துகள்.
character string : எழுத்துச் சரம் : எழுத்து-எண் அல்லது இரண்டும் கொண்ட சரம். character style : எழுத்தின் பாணி; எழுத்தின் அழகமைவு : தடித்த எழுத்து, சாய்வெழுத்து, அடிக் கோட்டெழுத்து, சிறிய எழுத்து, பெரிய எழுத்து என எழுத்துகளின் பாங்கு மாறுபடுகிறது. எழுத்துரு (font) என்பதையும் எழுத்தின் பாங்காகச் சேர்ப்பது, இயக்க முறைமையையும் அந்தக் குறிப்பிட்ட மென்பொருளையும் சார்ந்ததாகும்.
character template : எழுத்துப் வார்ப்படம் : மின்னணு ஒளிக்கற்றை காட்சித் திரையில் எண்ணெழுத்துகளாக மாற்றித் தரும் ஒரு சாதனம்.
character terminal : எழுத்து முனையம் : வரைகலை திறனில்லாத காட்சித் திரை.
character type field : எழுத்து வகைப் புலம்.
character user interface : எழுத்து வழி பயனாளர் இடைமுகம்; எழுத்தமைப் பணிச் சூழல் : சியுஐ - Character User Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். வெறும் எழுத்துகளை மட்டுமே திரையில் காட்டவல்ல பயனாளர் இடைமுகம், கணினிப் பணிச்சூழல். வரைகலைப் பணிச்சூழலுடன் ஒப்பிட்டு அறிக.
character view : எழுத்துத் தோற்றம்.
Charactron : கேரக்ட்ரான் : திரையில் எழுத்து அல்லது எண் எழுத்துகளையும், சிறப்பு குறியீடுகளையும் காட்டும் சிறப்பு வகை எதிர்மின் கதிர்க் குழாய்.
charge : மின்னேற்றம் : ஒரு பொருளில் உள்ள சமநிலைப்படுத்தப்படாத மின்சக்தியின் அளவு.
charge back systems : மின் கட்டண அமைப்புகள் : இறுதிப் பயனாளர் துறைகளுக்கு செலவுகளை ஒதுக்கீடு செய்யும் முறை. பயன்படுத்திய தரவு அமைப்பு மூலாதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் செலவின் மதிப்பீடு செய்யப்படுகிறது.
charge card : மின்னூட்ட அட்டை : 286 பீ. சி. வகைகளை உற்பத்தி செய்யும் ஆல் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் வன்பொருள் நினைவக மேலாளர். 286 சிப்புவை வெளியே எடுத்து மின்னூட்ட அட்டையில் பொருத்தி அதை துளையில் பெருத்தலாம்.
Charge Coupled Device (CCD) : மின்னூட்டப் பிணைப்புச் சாதனம் (சிசிடி). charges magnetically : காந்த முறை மின்னூட்டம்.
Charles Babbage Institute . சார்லஸ் பாபேஜ் இன்ஸ்டிடியூட் : வரலாற்றுக் கண்ணோட்டத்தில் தரவுப் புரட்சியை ஆராய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட நிறுவனம். தகவலின் வரலாறு மற்றும் தொன்மைப் பொருள்கள் பற்றிய ஆராய்ச்சிகளுக்கான மைய நிறுவனமாகத் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு.
chart : நிரல் படம்; வரைபடம் : செங்குத்தான அல்லது கிடைமட்டமான கோடுகளாகவோ, அல்லது பட்டையாகவோ வட்டப் படமாகவோ, தரவுவை சிறுசிறு துண்டுகளாகப் பிரித்து படமாக அமைத்துக் காட்டுதல்.
chart chassis நிரல்பட அடிக்கட்டகம் : ஒர் உலோகச் சட்டம். இதன் மீது கம்பியிழுத்தல், துளைகள் மற்றும் பிற மின்னணு தொகுப்புகளைப் பொருத்த முடியும்.
chart of accounts : கணக்குகளின் நிரல்படம் : பொதுப் பேரேடு கணக்கீட்டு அமைப்பில் குறிப்பிட்ட தலைப்புகள் அல்லது கணக்குகளின் எண்ணிக்கை.
chart options : நிரல்பட விருப்பத் தேர்வுகள்.
chart recorder : நிரல்பட பதிவி : பதிவேடு வைக்கும் சாதனம். பேனாவை வலது அல்லது இடது புறமாகத் திருப்பி அடியிலிருக்கும் காகிதத்தில் வரைபடங்கள் வரைவது.
chart, system : முறைமை நிரல்படம்.
chart type : நிரல்பட வகை.
chassis : அடிக் கட்டகம்; அடிப் பகுதி : ஒரு மின்னணு சாதனத்திற்கான கம்பிகளை இணைக்கும் வசதி அமைக்கப்பட்டுள்ள உலோக அடிப்பாகம்.
chat : அரட்டை : கணினி வழியாக நடைபெறும் நிகழ்நேர உரையாடல். அரட்டையில் பங்குபெறும் ஒருவர் ஒரு வரியை விசைப் பலகையில் தட்டச்சு செய்து 'என்டர்' விசையை அழுத்தியதும், மறு முனையில் இன்னொருவரின் கணினித் திரையில் அச்சொற்கள் தெரியும். அதற்குரிய பதிலுரையை அவரும் தட்டச்சு செய்து அனுப்பலாம். இவ்வாறு உரையாடல் தொடரும். நிகழ் நேரச் சேவைகள் வழங்கும் கணினிப் பிணையங்களில் பெரும்பாலும் அரட்டை வசதி உண்டு. இணையத்தில் ஐஆர்சி (IRC) என்பது தொடர் அரட்டைச் சேவையாகும். தற் போது இணையத்தில் குரல் அரட்டை (Voice Chat) வசதியும் உள்ளது.
chat mode : அரட்டைப் பாங்கு : தரவு தொடர்பு முறை பயன்படுத்துபவர்கள் இதில் செய்திகளை ஒருவருக்கொருவர் தட்டச்சு செய்து பெறலாம். ஒவ்வொரு விசையை அழுத்தியவுடன் அது அனுப்பப்பட்டு விடும்.
chat page : அரட்டைப் பக்கம்.
chat room : அரட்டை அரங்கம்.
cheapernet : மலிவுப்பிணையம்.
check : சரிபார்ப்பு.
check, arithmatic : கணக்கீட்டுச் சரி பார்ப்பு.
check bit : சரிப்பார்ப்பு பிட்; சரி பார்ப்புத் துண்மி : சமநிலைத் துண்மி போன்ற இரும எண் சோதனை இலக்கம்.
check box : தேர்வு செய் பெட்டி : ஆம் அல்லது இல்லை என்னும் பதிலைப் பயனாளரிடமிருந்து பெறப் பயன்படுத்தப்படும் ஒரு சிறிய சதுரப் பெட்டி. சிறிய பெட்டியில் எக்ஸ் அல்லது டிக் குறியீடு போட்டால் அதைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதை உணர்த்தும்.
check character : சரிபார்ப்பு எழுத்து : ஒரு தரவு தொகுதியின் இறுதியில் சேர்க்கப்படும் எழுத்து. சோதனை செய்யப்படும்போது இதைப் பயன்படுத்துகிறோம்.
check digits : சரிபார்ப்பு இலக்கங்கள் : எண் வடிவ தரவு தொகுதியை அனுப்பும்போது அதனுடன் சேர்க்கப்படும் ஒன்று அல்லது இரண்டு இலக்கங்கள். தரவு எழுதும்போதோ அல்லது அனுப்பும் போதோ ஏதாவது தவறு ஏற்பட்டால் பிழை என்பதற்கான அடையாளம் தோன்றும்.
checked objects : தேர்வு செய்த பண்பு.
checked property : சரிபார்ப்புப் பொருள்.
check, even parity : இரட்டைச் சமன் சரிபார்ப்பு.
check indication : சரிபார்ப்புப் அறிகுறி : ஒரு பதிவகத்தில் 1 அல்லது 0 துண்மியை அமைத்து அதில் பிழை ஏற்பட்டதா இல்லையா என்று குறிப்பிடச் செய்தல்.
check indicator : சரிபார்ப்புப் அறிகுறி : ஒரு சாதனத்தில் ஒலி அல்லது ஒளி மூலம் அதன் இயக்கத்தில் பிழை அல்லது கோளாறு ஏற்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிடுதல்.
check now : இப்போது சரிபார்.
check, odd parity : ஒற்றைச் சமன் சரிபார்ப்பு.
check out : சரிபார்த்து அனுப்புகை.
check, parity : சமன் சரிபார்ப்பு.
check plot : சரிபார்ப்பு வரைவு : இறுதி வெளியீட்டை அளிப்பதற்கு முன் ஒளிச் சோதனை மற்றும் திருத்துவதற்காக ஒளிக் காட்சிச் சாதனம் தானாக உருவாக்கும் ஒரு வரைவு.
check point : சரிபார்ப்பிடம் : கையால் இயக்கும்போதோ அல்லது கட்டுப்பாட்டுச் செயல் முறையிலோ ஒரு நிரலைத் தடுத்து நிறுத்தும் குறிப்பிட்ட இடம். பிழை தீர்க்கும் நிரல்களில் உதவுவதற்காக பெரும்பாலும் பயன்படுத்தப்படும்.
checkpoint / restart : சரிபார்ப்பிடம் / மீளியக்கம் : கணினி அமைப்பின் கோளாறிலிருந்து வரும்முறை. கணினி நினைவகத்தில் தரவு பதிவு செய்யப்படும்போது அங்கங்கே வைக்கப்படும் புள்ளி. கணினியில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால், கடைசி சரிபார்ப்பிடத்திலிருந்து மீண்டும் துவக்கலாம். கடைசி சரிபார்ப்பிடத்திற்குப் பிறகு துழைக்கப்பட்டவை எல்லாம் தொலைந்து போய்விடும்.
check problem : சரிபார்ப்புச் சிக்கல் : ஒரு கணினி அல்லது கணினி நிரல் சரிவர இயங்குகிறதா என்பதை முடிவு செய்வதற்காக செயற்கையாக உருவாக்கப்பட்ட சிக்கல்.
check register : சரிபார்ப்புப் பதிவேடு. check spelling : எழுத்துப் பிழையறி.
check sum : சரிபார்ப்புக் கூட்டுத்தொகை : சோதனைக்காகப் பயன்படுத்தப்படுகின்ற துண்மிகள் அல்லது எண்களின் கூட்டுத் தொகை. தானாக ஏற்படுத்தப்படும் விதிகளின்படி கூட்டல் நடைபெறுகிறது. தரவு சரியாக இருக்கிறதா என்பதை சோதிக்கப் பயன்படுகிறது.
check, validity : செல்லுபடிச் சரிபார்ப்பு.
chemical collissions : வேதி மோதல்கள் : பிபிசி அக்கார்ன் அல்லது இந்திய எஸ். சி. எல் யூனிக்கார்ன்-க்கான ஒரு கல்வி மென்பொருள். வரைகலை முறையில் வேதி கலவைகளில் ஏற்படும் எதிர் வினைகளின் பல்வேறு தன்மைகளை இது கூறும்.
chicken-and-egg-loop : கோழியா முட்டையா மடக்கு.
chicklet keyboard : சுண்டு விசைப்பலகை : விரைவாகத் தட்டச்சு செய்யமுடியாத அளவில் சிறிய, சதுர விசைகள் உள்ள விசைப்பலகை.
chief information officer : தலைமை தரவு அலுவலர் : நீண்ட கால தரவு திட்டமிடல் மற்றும் உத்தியில் கவனம் செலுத்தி ஒரு நிறுவனத்தின் தரவு தொழில் நுட்பப் பணிகள் அனைத்தையும் மேற்பார்வையிடும் ஒரு மூத்த நிர்வாகப் பதவி.
chief programmer : தலைமை நிரலர் : ஒரு நிரலர் குழுவுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டவர். திட்டம் முழுவதும் வெற்றிகரமாக முடிக்கப்பட வேண்டும் என்பதற்காக முழுப் பொறுப்பையும் ஏற்றிருப்பவர்.
chief programmer team : தலைமை நிரலர் குழு : கணினி நிரலாக்கத்துக்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. ஒரு தலைமை நிரலர், ஒரு மாற்று நிரலர், ஒரு நிரலர் நூலகர் / செயலாளர் உள்ளிட்ட குழுவின் தலைமையை ஒரு தொழில்நுட்ப நிரலர் ஏற்றிருப்பார். தேவைப்பட்டால், இரண்டு அல்லது மூன்று கூடுதல் உறுப்பினர்கள் சேர்க்கப்படலாம் அல்லது வல்லுநர்கள் ஆலோசனை பெறலாம். நிரலர் எழுதுவதை ஒரு தனியார் கலையாகக் கருதாமல் அதை ஒரு பொறியியல் தொழிலாக மாற்றுவதும், திறமைமிக்க படைப்பாளி தன் படைப்புத் திறனில் கவனம் செலுத்தி ஊக்கம் அளிப்பதும் இதில் முக்கிய கோட்பாடுகளாகும். child process : துணைச் செயலாக்கம் : ஒரு கணினி செயலாக்கத்தின் கட்டுப்பாட்டில் இன்னொரு செயலாக்கத்தைத் தொடங்குதல். ஒரு நிரலின் கட்டுப்பாட்டில் இன்னொரு நிரலை இயக்குதல்.
child programme : துணைநிலை நிரல் : ஒரு நிரலின் உள்ளேயே இயக்கப்பட்டு, அதன் இயக்கம் தீர்ந்தவுடன் தனியாக செயல்படும் ஒரு நிரல். முதன்மை நிரலினால் அழைக்கப்பட்டு நினைவகத்தில் ஏற்றப்படும் இரண்டாம் நிலை அல்லது துணைநிலை நிரல்.
child record : சேய்ஏடு; கீழ் நிலை ஏடு : வரிசைக்கிரம தரவுகள் அமைப்பில் இரண்டு அடுத்தடுத்த நிலையிலுள்ள பதிவேடுகளில் கீழ்நிலை ஏடு. ஏற்கெனவே இருக்கும் பெற்றோர் ஏடு ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பதிவேடுகளின் உள்ளடக்கங்களைச் சார்ந்து உருவாக்கப்படும் தரவு பதிவேடு.
chimes of doom : சாவு மணி; இறுதி மணியோசை : மெக்கின்டோஷ் கணினிகளில், மிகமோசமான பழுது ஏற்பட்டு செயல்படாத நிலையேற்படும்போது தொடர்ந்து மணியொலிக்கும்.
chip : சில்லு; சிப்பு : சிப்பு ஏராளமான மின்னணுச் சுற்றுகளைக் கொண்டுள்ள ஒரு சிறிய சாதனம். ஒருங்கிணைக்கப்பட்ட மின்சுற்றுகள் வடிவத்தில் மின்னணு பாகங்கள் மெல்லிய சிலிக்கான் தகட்டின்மீது வைக்கப்படுகின்றன. கணினியை உருவாக்குபவை சிப்புகளே. கணக்கிடல், நினைவகம், கட்டுப்பாடு போன்ற பல்வேறு பணிகளை அவை செய்கின்றன.
chipcard : சிப்பு அட்டை; சில்லு அட்டை.
chip carrier : சிப்பு சுமப்பி : சிப்பு செய்வதற்கு ஈயம் போன்ற உலோகத்தில் அதன் அச்சை ஏற்றுதல். எல்லா திசைகளிலும் இணைப்பிகள் உள்ள சிப்புப் பொதிவுகள். chip family : சிப்புக் குடும்பம் : தொடர்புடைய சிப்புகளின் குழு. முதலாவது சிப்புவிலிருந்து ஒவ்வொரு சிப்பும் உருவாக்கப்படுகிறது.
chipper : சிப்பாக்கி; சில்லு ஆக்கி.
chips : சிப்புகள்; சில்லுகள்.
chip select : சிப்புத் தேர்வு : சிப்புப் பெட்டியிலிருந்து வெளியே வரும் முனை. சிப்புவிற்கோ அல்லது சிப்புவிலிருந்தோ தரவுகளை எழுதுவதையும், படிப்பதையும் இது செயலற்றதாக்கும்.
chip set : சிப்புத் தொகுதி : ஒரு பணியைச் செய்வதற்காக சேர்ந்து இயங்க வடிவமைக்கப்பட்டுள்ள சிப்புகளின் குழு.
chip, silicon : சிலிக்கான் சிப்பு; சிலிக்கான் சில்லு.
choice : தேர்வு : ஒரு டாஸ் (DOS) கட்டளை. அது பயனாளர் விசையழுத்தக் காத்திருக்கிறது. ஆணையின் உள்ளேயே ஏற்றுக் கொள்கிற விசைகளின் பட்டியல் குறிப்பிடப்படுகிறது.
choose : தேர்ந்தெடு : சாளரத்தில் ஒரு செயலைச் செய்வதற்குச் சுட்டி அல்லது விசைப் பலகையை தேர்ந்தெடுப்பது. பட்டியலில் உள்ளபடி கட்டளைகளைத் தேர்ந்தெடுத்து பணிகள் செய்யப்படுகின்றன. பயன்பாடுகளை இயக்க 'ஐக்கான்' (icons) களைத் தேர்ந்தெடுக்கலாம்.
chooser : தேர்பவர் : மெக்கின்டோஷ் மேசை துணைப்பொருள், அச்சுப்பொறி, ஃபைல் சர்வர் அல்லது கட்டமைப்பு மோடம் போன்றவற்றை தேர்ந்தெடுக்க அனுமதிப்பது.
chop : நீக்கு; வெட்டு : தேவைப்படாத தரவுவை வெளியேற்றுதல்.
chorus : குழு ஒலி.
chroma : நிறமி : வண்ணங்களை ஏற்படுத்த உதவும் நீர்மம், நிழல், சாயல் போன்றவை.
chromaticity : நிறப்பொலிமை : வண்ணத்தின் தூய்மை மற்றும் மீதுான்றும் அலைநீளம் இவற்றை அளக்க முடியும் என்பதுடன் பிரகாசம் எவ்வளவாயினும் அதன் நீர்மை மற்றும் சாயலுக்கு ஏற்றதாக அமையும்.
chrominnance : நிறப்பொலிவு : வண்ணத்தைக் கட்டுப்படுத்தும் ஒளிக்காட்சி சமிக்கையின் பகுதிகள்.
chunking : தொகுத்தல் : இரும எண் முகவரிகளை பதினறும இலக்கத்துக்கு மாற்றும் முறை. 0011 1100 என்ற இரும எண்ணை பதினறும முறையில் 3C என்று மாற்றலாம்.
chunking along : தொகுத்துச் செல்லல் : நீண்ட நேரம் செல்லும், நம்பிக்கைமிக்க நிரலின் செயல்பாட்டைக் குறிப்பிடும் குழுக் குறிசொல்.
churing : கடைதல்.
churn rate : உதிரும் வீதம்; குறையும் வீதம், ஒதுங்கு வீதம் : செல்பேசி பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், நிகழ்நேர வணிகத்தில் ஈடுபடும் வாடிக்கையாளர்கள் மற்றும் இது போன்றோர் அடிக்கடி தங்கள் சந்தாவைப் புதுப்பிக்காமல் விட்டுவிடுவர். இதனால் அக்குறிப்பிட்ட நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 2 முதல் 3 விழுக்காடு வரை அவ்வப்போது குறைந்து விட வாய்ப்புண்டு. இந்த எண்ணிைக்கை அதிகமாகும் எனில் அந்நிறுவனத்துக்கு புதிய செலவுகளை உருவாக்கும். விளம்பரம் மற்றும் பல நடவடிக்கைகள் மூலம் புதிய வாடிக்கையாளர்களை உருவாக்க நிறையப் பணம் செல வழிக்க வேண்டும்.
. ci : . சிஐ : இணைய தள முகவரியில் ஐவரி கோஸ்ட் நாட்டைச் சேர்ந்த தளத்திற்கான பெரும் புவிபிரிவுக் களப் பெயர்.
CICS : சிஐசிஎஸ் : வாடிக்கையாளர் தகவல் கட்டுப்பாட்டு அமைப்பு எனப் பொருள்படும் Customer Information Control System என்பதன் குறும்பெயர். தொலைவிலிருந்து செயலாக்கம் புரியும் முனையங்களில் அதிகம் பயன்படுவது.
CIM : சிஐஎம் : கணினி உள்ளீட்டு நுண்படலம் எனப் பொருள்படும் Computer Input Microfilm என்பதன் குறும்பெயர்.
cipher : சைஃபர்; மறையெழுத்து : கணினி பாதுகாப்பாகத் தகவலைக் குறிப்பிட உதவும் இரகசிய முறை.
cipher system : மறையெழுத்து முறை.
cipher text : மறையெழுத்து உரை.
CIPS : சிஐபீஎஸ் : கனடியத் தரவு செயலாக்க கழகம் எனப் பொருள்படும் Canadian Information Processing Society என்பதன் குறும் பெயர்.
circle : வட்டம் : ஒளிக்காட்சி முகப்பில் வட்டங்களை வரைவதற்கான பேசிக் / கியூபேசிக்கில் உள்ள ஒரு கட்டளை.
circuit : மின்சுற்று; மின் இணைப்பு : 1. மின்னணுக்களைக் கட்டுப்பாடான முறையில் செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட பாதை 2. மின் சக்தி செல்லக்கூடிய கடத்திகள் மற்றும் அது தொடர்பான மின்சாதனங்களின் அமைப்பு 3. இரண்டு அல்லது கூடுதல் இடங்களிடையே ஏற்படும் தரவு தொடர்பு இணைப்பு.
circuit analyzer : மின்சுற்று பகுப்பாய்வி : ஒரு மின்னணு மின்சுற்று செல்லத்தக்கதா என்று சோதித்துக் கூறும் சாதனம்.
circuit, AND : உம்மை மின்சுற்று.
circuit board : மின்சுற்று அட்டை : தொடர்ச்சியான நுண் சிப்புகளையும், பல்வேறு மின்னணுச் சாதனங்களையும் ஏற்றிப் பொருத்தக்கூடிய அட்டை. அட்டையின் மேற்பரப்பில் மின்சுற்று அமைப்புகள் அச்சிடப்படுகின்றன. printed circuit board என்றும் அழைக்கப்படுகிறது.
circuit breaker : மின்சுற்று துண்டிப்பி : அதிக மின்னோட்டம் ஏற்படுவதை உணர்ந்து மின்சுற்றைத் துண்டிக்கும் பாதுகாப்புச் சாதனம். ஃப்யூஸ் போல் அல்லாது, இதை மீண்டும் சரி செய்ய முடியும்.
circuit capacity : மின்சுற்றுக் கொள்திறன் : ஒரே நேரத்தில் ஒரு மின்சுற்று கையாளக் கூடிய வழித் தடங்களின் எண்ணிக்கை.
circuit card : மின்சுற்று அட்டை.
circuit, control : கட்டுப்பாட்டு மின்சுற்று.
Circuit Data Services : மின்சுற்று தரவு சேவைகள் : மின்சுற்று தொடர்பிணைப்புத் தொழில்நுட்ப அடிப்படையில், மடிக்கணினி மற்றும் செல்பேசி வாயிலாக அதிவேக தரவு பரிமாற்றத்தை வழங்குதல்.
circuit diagram : மின்சுற்று வரிப் படம்.
circuit elements : மின்சுற்று உறுப்புகள்; மின் இணைப்புக் கூறுகள்.
circuit, leastable : ஈருறுதி மின் சுற்று.
circuit, NOR : இல் அல்லது மின்சுற்று.
circuitry : மின்சுற்றுத் தொகுதி : அமைப்புகளுக்கு உள்ளேயும், இடையிலும் ஏற்படும் இணைப்புகளை விவரிக்கும் மின்சுற்றுகளின் தொகுதி.
circuit switching : மின்சுற்று இணைப்பாக்கம் : ஒரு மின்சுற்றின் அகலப் பாதையை, இணைப்பு நிறுத்தப்படும்வரை செயல்படுத்தும், தரவு தொடர்பு கட்டமைப்பின் இரண்டு முனைகளுக்கிடையிலான இணைப்பு.
circuit, virtual : மெய்நிகர் மின்சுற்று.
circular list : வட்டப் பட்டியல் : சுழல் பட்டியல் : தொடுக்கப்பட்ட பட்டியல். பெரும்பாலும் ஒன்றன்பின் ஒன்றாய்த் தொடுப்பது. இதில் கடைசி உறுப்புக்கும் முதல் உறுப்புக்கும் இணைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும். Ring (வளையம்) என்றும் அழைக்கப்படுகிறது.
circular queue : வட்டச் சாரை; சுழல் சாரை : தரவுகளை ஒரு முனையில் நுழைத்து மற்றொன்றில் எடுக்கின்ற ஒரு வகை தரவுக் கட்டமைப்பு. சாரையின் இருபுறமும் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும். சுட்டுகள் இரண்டும் நடப்பின் முன் பகுதியையும், பின் பகுதியையும் கவனித்துக் கொண்டே இருக்கும்.
circular reference (CIR) : சுழல் குறிப்பு : விரிதாளில் ஒரு கலத்தில் அதனுடைய முகவரியையே வாய்பாட்டின் பகுதியாகப் பயன்படுத்தும் வாய்பாடு. சான்றாக கலம் IV25-இன் வாய்பாடு @sum (IV12 : IV25) என்று படிக்கப்படும். இது தன்னைத்தானே தொடர்ந்து கூட்டிக் கொண்டு மிகப்பெரிய எண்ணை உருவாக்கும்.
circular shift : சுழல் நகர்வு : ஒரு முனையிலிருந்து வெளியேற்றப்படும் துண்மிகள் அல்லது எழுத்துகள் பதிவகத்தின் எதிர் முனையில் சென்று சேரும்படி இடமாற்றும் செயல் முறை. End around shift என்றும் சொல்லப்படுகிறது.
circulating register : சுழற்சிப் பதிவகம்.
circulations : சுழற்சிகள்.
CISC architecture : சிஸ்க் கட்டுமானம் : சிக்கல் துணைத் தொகுதி கணிப்பணிக் கட்டுமானம் என்று பொருள்படும் Complex Instruction Set Computing Architecture என்பதன் குரும்பெயர்.
CIU : சிஐயு : கணினி இடைமுக அலகு எனப் பொருள்படும் Computer Interface Unit என்பதன் குறும்பெயர்.
. ck : . சிகே : இணைய தள முகவரியில், குக் தீவின் தளங்களைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.
. cl : . சிஎல் : (cl) : இணைய தள முகவரியில், சிலிநாட்டுத் தளங்களைக் குறிக்கும் பெரும் புவிபிரிவுக் களப் பெயர்.
cladding : மூடுதல் : ஒளி இழைகளில், ஒளி இழை சாதனத்தின் இரண்டாவது அடுக்கு, ஒளி அலையை அந்த சாதனத்தின் மையப் பகுதிக்கு அனுப்பும் முறை.
clamping ring : பிடிக்கும் வளையம் : வளையத்திற்குள் நெகிழ் வட்டைத் தள்ளிவிடும் 5. 25" நெகிழ்வட்டு இயக்கக் மையக் கூம்பின் ஒரு பகுதியாகவே இது இருக்கும்.
clari newsgroups : கிளாரி செய்திக் குழுக்கள் : இணையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு முக்கிய செய்திக்குழு. கிளாரி நெட் செய்திக் குழுவை தரவு தொடர்பு நிறுவனம் பராமரித்து வருகிறது. ராய்ட்டர்ஸ் (Reutuers), யுனைட்டட் பிரஸ் இன்டர்நேஷனல் ஒயர் சர்வீசஸ், ஸ்போர்ட்ஸ் டிக்கர், காமர்ஸ் பிசினஸ் டெய்லி மற்றும் பிற செய்தி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட செய்திக் கட்டுரைகளை இதில் காணலாம். மற்ற செய்திக் குழுக்களைப் போலன்றி, கிளாரிநெட் செய்திக் குழுவில் உறுப்பினராகக் கட்டணம் உண்டு. இச்சேவையைக் கட்டணம் செலுத்தி வாங்கியுள்ள இணையச் சேவை நிலையங்கள் மூலமாகவே இச்செய்திக் குழுவை அணுக முடியும்.
clarion : கிளாரியன் : கிளாரியன் மென்பொருள் கார்ப்பரேஷனின் பீ. சி. பயன்பாட்டு உருவாக்க மென்பொருள் Professional Development என்பதே முக்கிய தயாரிப்பு. இதில் பாஸ்கல் போன்ற நிரலாக்க மொழியும், டிபி எம்எஸ் மற்றும் புரோட்டோ டைப்பிங் ஜெனரேட்டரும் அடக்கம். Personal Developer என்பது நிரலர் அல்லாதவர்களுக்கு.
Claris CAD : கிளாரிஸ் கேட் : கிளாரிஸ் கார்ப்பரேஷனிடமிருந்து மெக்கின்டோஷ-க்காக உருவான முழுத்தன்மையுள்ள இரு பரிமாண "கேட்" மென் பொருள் பயன்படுத்துவதற்கு எளிது.
CLASS1 : கிளாஸ்1 : Computer Literacy And School Studies Project என்பதன் குறும்பெயர். இந்திய அரசின் NCERT நடத்திய திட்டப்பணி.
class2 : கிளாஸ்2 : இனக்குழு வகுப்பு : பொருள்நோக்கு நிரலாக்கத்தில், தரவுக் கூறுகளும், அவற்றை கையாளும் வழிமுறைகளும் அடங்கிய ஒரு புதிய தரவினத்தின் வரையறை, ஓர் இனக் குழுவைச் சார்ந்த இனப்பொருள்களை உருவாக்கி நிரல்களில் கையாளப்படும்.
class and objects : இனக்குழுவும் இனப் பொருட்களும்.
Class A network : ஏ-பிரிவு பிணையம் : 16, 777, 215 புரவன் (Host) கணினிகள் வரை இணைக்கத்தக்க ஒர் இணையப் பிணையம். ஏ-பிரிவு பிணையங்கள், ஒரு பிணையத்தை அடையாளங்குறிக்க ஐபி (IP) முகவரியின் முதல் எண்மியைப் (பைட்) பயன்படுத்திக் கொள்கிறது. முதல் துண்மியை (பிட்) சுழியாக (0) மாற்றி விடும். புரவன் கணினி கடைசி மூன்று எண்மிகளால் குறிக்கப்படும். ஏ-பிரிவு முகவரியிடல் தற்போது 128 பிணையங்கள்வரை ஏற்றுக் கொள்கிறது. மிகச்சில பிணையங்களையும் ஆனால் அதிக எண்ணிக்கையிலான புரவன் கணினிகளையும் கொண்ட மிகப்பெரிய அரசு மற்றும் கல்வி நிறுவனங்களின் இணைய தளங்களுக்கு ஏ-பிரிவு முகவரிமுறை ஏற்றது.
class category : இனக்குழு வகைப் பிரிவு : பொருள்நோக்கு நிரலாக்கத்தில், குறிப்பிட்ட இனக்குழுக்களின் தொகுப்பு. சில இனக்குழுக்கள் மற்றவற்றுக்கு தெரியும். மற்றவை மறைக்கப்பட்டிருக்கும்.
class hierarchy : இனக்குழுப் படிநிலை; வகுப்பு தொடர்முறை.
classic style : மரபுப் பாணி.
classifications : வகைப்படுத்துதல்கள் : கணினிகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். இலக்கமுறை, ஒப்புமை மற்றும் கலப்பினம். classify : வகைப்படுத்து : தரவுகளை வகை வாரியாகப் பிரித்தல் அல்லது ஒத்த தன்மைகளை உடையனவற்றை ஒரே வகையில் சேர்த்தல்.
classless interdomain routing : பிரிவிலாக் களங்களுக்கிடையே திசைவித்தல் : இணையத்தில் உயர்நிலை திசை செலுத்து அட்டவணைகளின் உருவளவைச் சிறிதாக்க, ஒருங்கிணைப்புச் செயல் தந்திரத்தைப் பயன்படுத்தும் ஒரு முகவரி அமைப்பு முறை. முதன்மை திசைவிகள் (Routers) ஏந்திச் செல்லும் தரவுகளின் அளவைக் குறைக்கும் பொருட்டு, பல்வேறு திசை வழிகள் குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன. இந்தத் திட்ட முறை செயல்பட இதனை ஏற்றுக் கொள்ளும் திசைவித்தல் நெறிமுறைகளைப் பயன்படுத்த வேண்டும். எல்லை நுழை வாயில் நெறிமுறை (Border Gate way Protocol-BGP) யின் பதிப்பு 4 மற்றும் ஆர்ஐபீயின் பதிப்பு 2 (RIPV-2) இவற்றுள் சில. இத்திட்டமுறையின் தலைப்பெழுத்துக் குறும்பெயர் CIDR ஆகும்.
'class library : இனக்குழு நூலகம் : மூன்றாம் நபர்கள் கொடுக்கின்ற பொருள் நோக்கு நிரலாக்கத்துக்கான இனக்குழுக்களின் தொகுப்பு.
class methods : வகுப்பு வழிமுறைகள்; இனக்குழு வழிமுறைகள்.
class module : வகுப்பு கூறு; இனக்குழு கூறு.
class path : வகுப்புப் பாதை; இனக்குழுப் பாதை : ஜாவா மொழியில் நூலக இனக் குழுக்களைச் சேமித்து வைத்துள்ள கோப்பகத்தைக் குறிக்கும்.
class structure : இனக்குழு கட்டமைப்பு : ஒரு அமைப்பின் வரிசை முறை. செங்குத்துக்கோடுகள் இக்குழுக்களையும், ஆரங்கள் இனக்குழுக்களுக்குள் உள்ள உறவு முறைகளையும் காட்டும் வரைபடம். இனக்குழு வரைபடத் தொகுதியின் மூலம் ஒரு கணினி அமைப்பின் வகுப்பு வரைபடத்தைக் குறிப்பிடலாம்.
class variable : இனக்குழு மாறி : ஓர் இனக்குழுவின் பண்பு கூறுகள் ஒரு இனக்குழுவின் மாறிகள் கூட்டாக அதன் வடிவமைப்பை உண்டாக்குகின்றன. ஓர் இனக்குழுவில் உருவாக்கப்படும் அனைத்து இனப்பொருள்களுக்கும் இனக் குழு மாறி பொதுப்பண்பாக விளங்குகிறது.
Claud P. Shannon : கிளாட் பி. ஷானான் : அமெரிக்காவின் எம்ஐடியில் படித்த பட்டதாரி மாணவன். இணைப்பாக்க (ஸ்விட்சிங்) மின்சுற்றுகளின் முதல் தலைமுறையை விவரிக்க பூலியன் தருக்க இயற்கணிதத்தைப் பயன்படுத்தியவர்.
clean boot : தூய இயக்கம் : இயக்க முறைமையின் குறைந்த எண்ணிக்கையிலான கோப்புகளின் துணைகொண்டு கணினியை இயக்கி வைக்கும் முறை. கணினிச் செயல்பாட்டில் ஏற்பட்ட பழுதினைக் கண்டறிய இம்முறை பயன்படுகிறது. கணினியில் செயல்படுத்திய ஒரு குறிப்பிட்ட மென்பொருளின் காரணமாகத்தான் சிக்கல் ஏற்பட்டது என்பதைப் பிரித்தறிய முடியும்.
cleaning disk : தூய்மை வட்டு.
clean install : தூய நிறுவுகை; முழு நிறுவுகை : கணினியில் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள ஒரு மென்பொருளை மீண்டும் நிறுவும்போது, முன்பே நிறுவப்பட்டுள்ள கோப்புகளை நிறுவாமல் விட்டுவிடும். ஒரு மென்பொருள் செயல்பாட்டில் சிக்கல் நேரும்போது, இவ்வாறு மறு நிறுவுகை செய்வது பயன் தராது. முன்னால் நிறுவிய போது இருந்த பயன்பாட்டு அல்லது முறைமைக் கோப்புகள் எதுவும் இல்லாத வகையில் மறுநிறுவுகை செய்ய வேண்டும். இதன் மூலம் குறிப்பிட்ட மென்பொருளினால் ஏற்பட்ட சிக்கல் தீர வாய்ப்புண்டு.
clear room : தூய்மையான அறை : கணினிக் கருவியை உற்பத்தி செய்யப் பயன்படும் பகுதி. இதில் நுழைவதற்குக் கட்டுப்பாடு, சுகாதாரத்திற்குத் தனிக்கவனம், சிறப்பு குளுகுளு வசதி, காற்றைத் துய்மைப்படுத்தும் அமைப்பு போன்றவை அமைந்திருக்கும்.
clear : அழி; துடை : காட்சித் திரையில் உள்ளவற்றைத் துடைக்கும் விசைப் பலகையின் பணி.
clear/delete/remove : அழி/நீக்கு/அகற்று.
clear down : துடைத்தெறி.
clearing : துடைத்தல்; அழிதல்; நீக்குதல் : பதிவகம், சேமிப்பிடம், அல்லது சேமிப்பு அலகுகளில் உள்ள தகவலை வெளியேற்றி பூஜ்யங்கள் அல்லது வெற்றிடங்களால் நிரப்புதல்.
Clear key : துடைக்கும் விசை; விலக்கு விசை : சில விசைப் பகுதிகளில் எண்முறை விசைப் பலகையின் மேல்பக்க இடது மூலையில் உள்ள விசை. நடப்பில் தெரிவு செய்த பட்டியலைத் துடைக்கவோ நடப்பில் தெரிவு செய்ததை நீக்கவோ பயன்படும்.
clear memory : நினைவகம் துடை : குறிப்பிலா அணுகு நினைவகம் (RAM) மற்றும் வன்பொருள் பதிவகங்கள் அனைத்தையும் பூஜ்யம் அல்லது வெற்றிட நிலைக்கு மீண்டும் அமைத்தல். கணினியை 'ரிபூட்' செய்தால் நினைவகம் துடைக்கப்படலாம் அல்லது துடைக்கப்படாமல் போகலாம். ஆனால், கணினியை நிறுத்தி மீண்டும் துவக்கினால் நினைவகம் நிச்சயமாக காலியாகும்.
clear method : துடைப்பு வழிமுறை.
clear outline : சுற்றுக்கோடு நீக்கு.
clear print area : அச்சுப் பரப்பெல்லை நீக்கு.
clear request packet : துடைத்தெறி வேண்டுகோள் பொதி.
click : சொடுக்கு : சுட்டியின் (மெளஸ்) பொத்தானை அழுத்தும் முறை.
clicking : சொடுக்குதல் : சுட்டியின் (Mouse) மேல் பொத்தானை அழுத்துதலைக் குறிப்பிடும் ஒரு சொல்.
click speed : சொடுக்கு வேகம் : பயனாளர் சுட்டியின் மேலுள்ள பொத்தானை அல்லது வேறு சுட்டும் சாதனத்தை முதலாவது தடவை அழுத்தியதற்கும் இரண்டாவது தடவை அழுத்தியதற்கும் இடையிலுள்ள எந்த குறுகியகால இடைவெளி, இரட்டைச் சொடுக்காக (double click) எடுத்துக் கொள்ளப்படுமோ, அந்தக் காலஅளவு, சொடுக்கு வேகம் எனப்படும். இரண்டு ஒற்றைச் சொடுக்குகளாக எடுத்துக் கொள்ள இயலாததாக ஆக்கும் விரைவான கால இடைவெளி.
click stream : சொடுக்குத் தாரை : வலைத்தளம் ஒன்றில் ஒன்றைத் தேடும்போது பயனாளர் செல்லும் வழி. வலைப்பக்கத்தில் செய்யப்படும் ஒவ்வொரு தனித்தனித் தேர்வும் தாரையில் ஒரு சொடுக்கைச் சேர்த்துவிடும். தேவையானதைக் கண்டுபிடிக்க இயலாமல் மேலும் பயனாளர் சொடுக்குத் தாரையில் போவாரானால் அவர் வேறு வலைத் தளத்துக்குத் திசைமாறிச் செல்லக் கூடும். பயன்படுத்தும் போக்குகளை ஆய்ந்தால் வலைத்தளம் உருவமைப்போர் இணக்கமான தள அமைப்புகள், இணைப்புகள், தேடு வசதிகள் போன்றவற்றை வழங்க முடியும்.
client : கிளையன்; வாடிக்கையாளர் : 1. வன்பொருளுக்கும் மென்பொருளுக்கும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. ஒரு வழங்கன் (server) கணினியுடன் இணைத்துக்கொண்டு செயல்படும் ஒரு கிளைக் கணினி அல்லது ஒரு வழங்கன் மென்பொருளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு செயல்படும் ஒரு கிளை அல்லது உறவு மென்பொருள் (எ. டு.) மின்னஞ்சல் கிளையன். 2. முறைமை பகுப்பாய்வுக்காக (System analysis) ஒப்பந்தம் செய்யப்படும் தனி நபர் அல்லது ஒரு நிறுவனம்.
client application : கிளையன் பயன்பாட்டுத் தொகுப்பு.
client computer : கிளையன் கணினி : பிணையத்தில் இணைக்கப்பட்டுள்ள கிளைக் கணினி.
client error : வாடிக்கையாளர் பிழை; வாடிக்கையாளர் தவறு; கிளையன் பிழை : கட்டளை ஒன்றைப் பொருள் கோள் செய்வதில் உள்ள சிரமத்தின் விளைவாக அல்லது சேய்மை புரவன் கணினியுடன் சரிவர இணைக்க இயலாமையின் விளைவாக எழும் சிக்கல்.
client/server : கிளையன் / வழங்கன் : கேட்கும் கணினி வாடிக்கையாளராகவும், கொடுக்கும் எந்திரம் வழங்குபவராகவும் உள்ள கட்டுமான அமைப்பு. வழங்கன் பயன்பாட்டுச் செயல்பாடுகளைச் செய்ய, வழங்கன் தரவுத் தளத்தை வைத்திருந்து தேவையான தரவுகளை வழங்கும். ஒன்று மற்றொன்றிலிருந்து தரவுகளைக் கேட்டுப் பெறலாம்.
client server protocol : கிளையன் / வழங்கன் நெறிமுறை : ஒரு கட்டமைப்பில் ஒரு பணி நிலையத்திற்கும் (கிளையன்) வழங்கனுக்கும் இடையே வேண்டுகோள்களுக்கான அமைப்பை வழங்கும் தரவு தொடர்பு நெறிமுறை. ஓஎஸ்ஐ (OSI) மாதிரியத்தில் 7 வது அடுக்கை இது குறிக்கும்.
client - server relationship : கிளையன்-வழங்கன் உறவுமுறை.
client-server system : கிளையன்/வழங்கன் முறைமை.
client side image maps : கிளையன் பக்க படிமப் பதிலீடுகள் : வலைத் தளப் பக்கக் கிளையன் (எ. டு வலை உலாவி) தெரிவு செய்ய உதவும் சாதனம். இதன்மூலம் ஒரு படிமத்தின் பல பகுதிகளைச் சுட்டி சொடுக்கி விருப்பத் மூலம் தேர்வின்படி பயனாளரால் தெரிவு செய்யப்பட்டவற்றைக் காட்டலாம். சின்னத்தைச் சொடுக்கி பட்டியலில் விரும்பிய படங்களைப் பார்ப்பதை ஒத்தது. தொடக்க காலத்தில் (1993) படிமங்களை வலைத் தளத்தில் நடைமுறைப்படுத்தியது போன்று கிளையன் பக்க படிமத்தை அனுப்ப வலை வழங்கனை ஒருங்கிணைக்காது. ஆனால் செயல்பட வைக்கும். பொதுவாக பதிலீட்டு வேகத்தை மேம்படச் செய்யும்.
clients/server architecture : கிளையன்|வழங்கன் கட்டுமானம்.
clik art : கிளிக் கலை : கணினியால் உருவாக்கப்படும் ஆவணங்களில் பயன்படுத்துவதற்கும் எடுத்துக்கொள்வதற்கும் தயாராக உள்ள ஒவியங்கள் மற்றும் படங்களின் பட்டியல்.
CLIP : க்ளிப் : குறிமுறை மொழித் தரவு செயலாக்கம் எனப் பொருள்படும் Coded Language Information Processing என்பதன் குறும்பெயர். ஊடு கதிர்களை எக்ஸ்ரேயில் சேர்ப்பதற்கு கதிரியக்க மருத்துவர்கள் பயன்படுத்தும் ஒரு திட்டம்.
clip art : துணுக்குப்படம்; நறுக்குப் படம் : வெட்டிப் பயன்படுத்தக்கூடிய வரைகலைப்படம். வரைகலை மென்பொருள் பயன்பாடாக அளிக்கப்படுவது. இதில் கணினி உருவாக்கும் கலைப் பொருட்கள் உள்ளன. சான்றாக, உருவங்கள், அறிவிப்புப் படங்கள், விலங்குகள், கருத்துப் படங்கள் போன்றவை. துணுக்குப் படத்திலிருந்து ஒன்றை எடுத்து பின்னர் பயன்படுத்துவதற்காக நகல் எடுக்கலாம்.
clipboard : இடைநிலைப் பலகை; துணுக்குப் பலகை; நறுக்குப் பலகை : ஒரு கோப்பிலிருந்து மற்றொரு கோப்புக்கு மாற்றி அனுப்பப்படும் தரவுகளைச் சேமித்து வைப்பதற்காகவென்றே ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள கணினியின் நினைவகத்தில் உள்ள பகுதி.
clipboard computer : பிடிப்புப் பலகைக் கணினி : எந்த இடத்துக்கும் எடுத்துச் செல்லக் கூடிய கணிணி. தோற்றத்திலும் செயல்பாட்டிலும் மரபுமுறைப் பிடிப்புப் பலகையை ஒத்தது. பிடிப்புப் பலகைக் கணினியில் நீர்மப் படிகக் காட்சித்திரை (LCD) உள்ளிட்டுச் சாதனத்துக்குப் பதிலாக ஒரு பேனா இருக்கும். பயனாளர் பேனாவைத் தொட்டுச் செயல்படுத்துவர். பிடிப்புப் பலகையில் பதிவான தரவு கம்பி வடம் அல்லது இணக்கியின் வழியாக வேறு கணினிக்கு மாற்றப்படுகிறது. மரபுமுறைப் பிடிப்புப் பலகை யைப் பயன்படுத்துவது போலவே, களப்பணி, தரவு சேகரிப்பு, கூட்டம் போன்றவற்றில் பிடிப்புப் பலகைக் கணினியும் பயன்படுத்தப்படும்.
clipboard object : இடைநிலைப் பலகைப்பொருள்கள்.
clipboard view : இடைநிலைப் பலகைத் தோற்றம்.
clipper : கிளிப்பர் : 'கம்ப்யூட்டர் அசோசியேட்ஸ்' - சின் பயன்பாட்டு உருவாக்க மென்பொருள். முதலில் தரவுத் தள (dbase) மொழி மாற்றியாக இருந்து, பின்னர் தனித்து இயங்கும் பல சிறப்புத்தன்மைகள் உள்ள பயன்பாட்டுத் தொகுப்புகளை உருவாக்கும் பணித்தளமாக உருவெடுத்தது. நான்டுக்கட் கார்ப்பரேஷன் இதை உருவாக்கியது.
Clipper Chip : கிளிப்பர் சிப்பு : துள்ளல் வகை இணைப்பு நெறி முறையையும், மறைக் குறியீடுகளைக் கொண்ட நெறிமுறையையும் அமல்படுத்துகிற ஒருங்கிணைந்த மின்சுற்று. அமெரிக்க தேசிய பாதுகாப்புக் கழகம் உண்டாக்கியது. 64 துண்மி தரவு தொகுதிகளையும், 80 துண்மிகளுக்கான திறவிகளையும் கொண்டது. தொலைபேசித் தரவுகளை இரகசியக் குறியீடுகளாக வைக்க அமெரிக்க அரசு இதனை உருவாக்கியது. மறைக் குறியீடுகள் என்ன குறிப்பிடுகின்றன என்பதை அமெரிக்க அரசு அறிய முடியும். அந்த மின்சுற்றைத் தன் நாட்டில் கட்டாயமாக்க முயன்ற அமெரிக்க அரசின் எண்ணம் நிறை வேறவில்லை.
clipping : நறுக்குதல்; செதுக்குதல் ; சீரமைத்தல் : காட்சித் திரை எல்லைகளின் வெளிப்பகுதியில் உள்ள படத்தின் பகுதிகளை நீக்குதல். scissoring என்றும் அழைக்கப்படும்.
clipping level : சீரமை அளவு : தன்னுடைய காந்தத் தன்மைகளைக் காத்து உள்ளடக்கங்களை வைத்துக் கொள்ளும் வட்டின் திறன். அதிக தரமுள்ள அளவு என்பது 65-70%; குறைந்த அளவு என்பது 55%-க்குக் கீழே.
clipping path : கிளிப்பிங் வழி : ஆவணமொன்றின் ஒரு பகுதியை மூடிமறைக்கப் பயன்படுத்தும் பல் கோண வடிவம் அல்லது வளைவு. ஆவணத்தை அச்சிடும்போது கிளிப் வழியில் உள்ளது மட்டுமே தோன்றும்.
clobber : மெழுகுதல் : ஒரு கோப்பில் உள்ள நல்ல தரவுவின் மேற்பகுதியில் புதிய தரவுவை எழுதியோ அல்லது ஒரு கோப்பில் உள்ளவற்றை எப்படியாவது சேதப்படுத்தியோ அதைப் பயனற்றதாக்குதல். ஒரு கோப்பை ஒழித்து விடல்.
clock : கடிகாரம் : மின் துடிப்பு : 1. ஒரே நேரக் கட்டுப்பாட்டில் இயங்கும் கணினியின் அனைத்துச் செயல்பாடுகளின் நேரத்தைக் கட்டுப்படுத்த உதவும் தொடர்ச்சியான அடிப்படை சமிக்கையை உருவாக்கும் சாதனம். 2. உண்மையான நேரம் அல்லது அதன் மதிப்பீட்டில் சிலவற்றின் மாற்றத்தைப் பதிவு செய்யும் சாதனம். இதன் செயல்பாடு கணினி நிரலுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
clock/calendar : கடிகாரம்/ நாட்காட்டி : சரியான நேரம் மற்றும் தேதி காட்டுவதற்கு நுண்கணினியினுள் நேரக்கணக்கு கொண்ட தனியான சுற்று பயன்படுத்தப்படுகிறது. மின் கலம் அளிக்கும் மின்சாரத்தின் மூலம் அது இயங்குகிறது. கணினியை நிறுத்திவிட்டாலும் அது தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும். இயக்க முறைமை நேரம்/தேதியைப் பயன்படுத்த இயலும் சான்றாக, கோப்புகளை உருவாக்கிய தேதியைப் பதிக்கலாம். கோப்பினைப் படித்த நேரம், திருத்தம் செய்த நேரம் எல்லாம் குறிக்கலாம். எந்தவொரு பயன் பாட்டுத் தொகுப்பும் அதைப் பயன்படுத்த இயலும். சான்றாக, ஒர் ஆவணத்தில் அன்றைய தேதி மற்றும் நேரத்தைக் குறிக்க உதவும்.
clock, digital : இலக்கமுறை கடிகாரம்.
clock doubling : இரட்டிக்கும் கடிகாரம்; இரட்டிக்கும் மின்துடிப்பு : சில இன்டெல் நுண்செயலிகள் பயன்படுத்தும் தொழில்நுட்பமுறை. அதன்மூலம் தரவுகளையும், ஆணைகளையும் அமைப்பு முறையின் மீதப் பகுதியைவிட இரட்டை அளவு வேகத்தில் சிப்பு செயல் முறைப்படுத்த இயலும்.
clock frequency : கடிகார அலை வரிசை.
clocking : நேரம் அளவிடல்; நேரப்படுத்துதல்; நேர இசை வாக்கம் : தரவு தொடர்புச் சாதனம் அனுப்புகின்ற, பெறுகின்ற வேலையை ஒரே கால முறைப்படி ஒழுங்குபடுத்தப் பயன்படும் தொழில் நுட்பம். அதிக வேகத்தில் குறிப்பிட்ட நேரப்படி அனுப்புவதற்கு உதவுகிறது.
clock input : கடிகார உள்ளீடு : மேலுள்ள உள்ளீட்டு முனையம். நேரக்கட்டுப்பாடு கடிகார சமிக்கையைப் பெறுவதற்காகப் பயன்படுத்தப்படுவது.
clock pulse : கடிகாரத் துடிப்பு; மின்துடிப்பு அதிர்வு : இலக்க முறை சாதனத்தின் செயல்பாடுகளோடு ஒத்தியங்கச் செய்வதற்காக படிக ஊசலினால் ஒரு கால ஒழுங்கில் உற்பத்தி செய்யப்படும் மின்னணுத் துடிப்பு.
clock pulse circuit : கடிகாரத் துடிப்பு மின்சுற்று : ஒரே நேரத்தில் செயல்களை ஆற்றும் இலக்கமுறை கணினியில் இயக்கங்களுக்கு உதவுவதற்காக சரியான இடைவெளியில் நேரத் துடிப்புகளை உருவாக்கும் மின்சுற்று.
clock rate : துடிப்பு வீதம் : ஒரு கடிகாரத்திலிருந்து துடிப்புகள் வெளியிடப்படும் நேர வீதம்.
clock signal generator : கடிகாரச் சமிக்கை இயற்றி.
clock speed : கடிகார வேகம் : கணினியின் உட்பகுதி இதயத் துடிப்பு வேகம். ஒரு குவார்ட்ஸ் படிகத்தில் உருவாக்கப்படும் நிலையான அசைவுகளை கடிகார மின்சுற்று பயன்படுத்திக் கொண்டு மையச் செயலகத்திற்கு தொடர் துடிப்புகளை அனுப்புகிறது. வேகமான கடிகாரத் துடிப்பு உள்செயலாக்கத்தை வேகப்படுத்தும். சான்றாக, ஒரே செயலகம் 20 மெகா ஹெர்ட்சில் ஒடும்போது 10 மெகா ஹெர்ட்சில் ஒடுவதை விட இரண்டு பங்கு வேகமாகச் செயல்படும்.
clock timer : நேரங்காட்டி; காலங்காட்டி கடிகாரம்.
clock track : கடிகாரத் தடம் : காலத்தைக் குறிப்பதற்கான சமிக்கைகளைப் பதிவு செய்து வைத்திருக்கிற பாதை.
clockwise : வலச்சுற்று : இடது புறத்திலிருந்து வலதுபுறத்திற்கு நகர்தல.
clone : வார்ப்பு நகலி : ஒன்றின் நகல் அல்லது சரியான பிரதியாக இருக்கும் ஒரு பொருள் அல்லது கருத்து. உயிரியலுக்கு அப்பாற்பட்டு இவ்வாறு பொதுவாகக் கூறலாம்.
close : மூடு : பெரும்பாலான கணினி மொழிகளில் முன்பே திறந்த கோப்பை மூடுவதற்கான கட்டளை. செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது வெளியேறி எல்லா திறந்த கோப்புகளையும் மூடுவதற்குப் பல மென்பொருள் பயன்பாடுகளில் உள்ள ஒரு கட்டளை. ஒரு கோப்பை சரிவர மூடத் தவறினால் தரவு சிதைந்தோ அல்லது தொலைந்தோ போகலாம். close box : மூடு பெட்டி : மெக்கின்டோஷ் வரைகலை முறை பயன்படு இடைமுகப்பில் சாளரத் தலைப்புப் பட்டையின் இடது மூலையில் உள்ள சிறுபெட்டி. பெட்டியின் மீது சொடுக்கினால் சாளரம் மூடப்பட்டுவிடும்.
close button : மூடு பொத்தான் : விண்டோஸ் 95/98/ என்டி இயக்க முறைமைகளில் தோன்றும் சாளரங்களில் தலைப்புப் பட்டையில் வலது மூலையில் உள்ள x குறியிட்ட ஒரு சதுரப் பொத்தான். விண்டோஸ் 3. x பணித்தளத்தில் இப்பொத்தான் தலைப்புப் பட்டையின் இடது மூலையில் இருக்கும். பொத்தானில் சொடுக்கினால் பலகணி மூடப்படும்.
closed architecture : மூடிய கட்டுமானம் : கணினியில் கட்டுமான அமைப்பு அதன் தொழில்நுட்ப புள்ளி விவரங்களை பொதுமக்களுக்குத் தெரிவிக்காமல் இருப்பது.
closed file : மூடப்பட்ட கோப்பு : படிக்கவோ, எழுதவோ அணுக முடியாத கோப்பு.
closed frame : மூடிய சட்டம்.
closed loop : மூடிய மடக்கி பாதை : முழுமையான வட்டமைப்பிலுள்ள மாற்றுப் பாதை.
closed routine : மூடிய நிரல் கூறு; மூடிய துணை நிரல்.
closed shop : மூடிய அங்காடி : தரவு செயலாக்க மையத்தை தொழில் முறையில் இயக்குபவர்களை மட்டும் கொண்டு இயக்குவது. நிரல்களையும் தரவுகளையும் ஏவலாளர்கள் கொண்டு வருவார்கள் அல்லது தொலைபேசிக் கம்பிகளின் வழியாக அனுப்புவார்கள். இதன் மூலம் கணினி அறைக்குள் பயனாளர்கள் மிகவும் திறமையாக செயல்பட முடிகிறது.
closed subroutine : மூடிய துணை நிரல்கூறு : அழைக்கும் செயல்முறைகள் ஒன்று அல்லது பலவற்றுடன் இணைக்கப்பட்டு ஒரிடத்தில் வைக்கப்பட்டுள்ள துணைச் செயல்முறை.
closed system : மூடிய அமைப்பு : அந்நிய முனையங்கள் அல்லது சாதனங்களுடன் இணைவதை ஏற்றுக்கொள்ளாத கணினி அமைப்பு.
close statement : மூடு ஆணை; மூடு கூற்று.
closeup : அணுக்கக் காட்சி; நெருக்கக் காட்சி.
closing files : மூடிய கோப்புகள்.
cloth ribbon : துணி நாடா : தொடுநிலை அச்சுப்பொறி தட்டச்சுப் பொறி ஆகியவற்றில் பொதுவாக மையிடப்பட்ட நாடா பயன்படுத்தப்படும். அச்சுப்பதிப்புமுனை நாடாவைத் தாக்கி மையைத் தாளுக்கு கொண்டு சென்று பதிய வைக்கிறது. பின் புதுமை பெறுவதற்காக நாடா சிறிது நகரும். அச்சுப்பொறியில் பொருந்துவதாக துணி நாடா சுருணையில் பொதிய வைக்கப்பட்டிருக்கும் அல்லது நாடாப் பேழையில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும். பல காரியங்களுக்கும் துணி நாடா போதுமானது என்றாலும், துல்லியம் வேண்டும் என்னும் போது அதற்குப் பதிலாக ஃபிலிம் நாடா பயன்படுத்தப்படும். ஆனால் ஃபிலிம் நாடா பன்முறைப் பயனுக்கு உதவாது. துணிநாடாவில் மீண்டும் மீண்டும் மை தடவிக் கொள்ளலாம். அதனால் அது பன்முறைப் பயனுக்கு உகந்தது.
cluster : கொத்து; தொகுதி : ஒரு கன்ட்ரோலர் மூலமாக பெரிய கணினி ஒன்றுடன் இணைக்கப்பட்டுள்ள கணினி முனையங்களின் ஒரு குழு, வட்டு பிரிவுகளில் (2 முதல் 16 வரை) ஒரே அலகாகக் கருதப்படுபவை. 30 கோப்பானது வட்டில் 2, 048 பைட் உள்ளதாக இருக்கலாம். ஆனால், வட்டு தொகுதியில் 512 பைட் பிரிவுகள் இருக்கும்.
cluster controller : கொத்து கட்டுப்படுத்தி : குறைந்த வேக சாதனங்கள் பலவற்றிலிருந்து தரவுகளைத் திரட்டும் அடிப்படைச் செயலகம். பின்னர் தொகுக்கப்பட்ட தரவுகளை ஒரு தனித் தரவு தொடர்புச் சாதனம் மூலம் அனுப்புகிறது.
clustered devices : கொத்தாக்கிய சாதனம் : ஒரு பொதுக் கட்டுப்பாட்டுக் கருவியுடன் இணைக்கப்பட்ட முனையங்களின்குழு.
clustering : கொத்தாக்கம் : ஒத்த தன்மைகள் உள்ளவற்றை குழுவாக்குதல்.
. cm : . சிஎம் : இணைய தள முகவரி, கேமரூன் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர்.
CMA : Computer Aided Manufacturing என்பதன் முதலெழுத்துக் குறும் பெயர். கணினி உதவியுடன் உற்பத்தி என்பது இதன் பொருள்.
CMI : சிஎம்ஐ : கணினி வழிபடு ஆணை எனப் பொருள்படும் Computer Managed instruction என்பதன் குறும்பெயர்.
CML : சிஎம்எல் : மின்சாரப் பாங்குத் தருக்கம் எனப் பொருள்படும் Current Mode Logic என்பதன் குறும்பெயர்.
CMOS : சிமாஸ் : நிரப்புக்கூறு ஆக்ஸைடு குறை கடத்தி எனப் பொருள்படும் Complementary Metal Oxide Semiconductor என்பதன் குறும்பெயர்.
CMOS RAM : சீமாஸ் ரேம் : நிரப்பு உலோக ஆக்சைடு குறை கடத்தி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நினைவகம் அமைத்தல், சீமாஸ் சிப்புகள் மிகமிகக் குறைந்த அளவு மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. மின்சாரம் வழங்கும் சாதனத்தின் இரைச்சலைத்தாங்க வல்லவை. இம்மாதிரியான சிப்புகள் மின் கலங்கள் அளிக்கும் மின்சாரத்தில் செயல்படும் வன்பொருள் பாகங்களில் மிகுந்த பயனுள்ளவையாய் இருக்கின்றன. நுண்கணினிக் கடிகாரங்கள், செயல்முறையில் அமைப்பில் இருந்துவரும் சில வகை அழித்தெழுது அட்டைகள் போன்ற வன்பொருள்களில் பயனுள்ளவையாய் உள்ளன.
CMOS setup : சீமாஸ் அமைவு : தேதி, நேரம் போன்று சில குறிப்பிட்ட விருப்பத் தேர்வுகளை அமைத்துக் கொள்ள, இயக்க நேரத்தில் அணுகக்கூடிய பயன்பாடுமிக்க அமைப்பு.
CMU : சிஎம்யு : கார்னஜி மெலான் பல்கலைக்கழகம் எனப் பொருள்படும் Carnegie Mellon University என்பதன் குறும்பெயர். இந்நிறுவனம் ஒரு எந்திரன் (எந்திர மனிதன்) ஆராய்ச்சி மையமாகவும், ஒரு முக்கிய கணினி மையமாகவும் செயல்படுகிறது.
CMY : சிஎம்ஒய் : CYAN (மயில் நீலம்), MAGENTA (செந்நீலம்) YELLOW (மஞ்சள்) என்ற சொற்களின் முதல் எழுத்துக்களான சொல். ஒளியை உட்கிரகித்து உருவாக்கப்படும் வண்ணங்களை வருணிப்பதற்கான ஒரு மாதிரி. தாளின்மீது படும் மை போன்றது. ஒளியை நீக்கும் வகையிலான கணித்திரை ஒளிக் காட்சி போன்றது அன்று. கண்னிலுள்ள மூவகை கூம்புவடிவ செல்கள் மயில்நீலம், செந்நீலம், மஞ்சள் நிறங்களால் முறையே உட்கிரகிக்கப்படும் அதாவது (வெண்மை நிறத்திலிருந்து பிரிந்து வரும்) சிவப்பு, பச்சை, நீல நிறங்களை உணர்கின்றன. ஒளியை வடிகட்டும் இந்த அடிப்படை நிறங்களிலுள்ள வண்ணப் பொருளின் விழுக்காடு கலந்து விரும்பிய நிறத்தைக் கொண்டு வரலாம். எந்த வண்ணப் பொருளும் இல்லாதிருந்தாலும் வெண்மையில் எந்த மாற்றமும் இராது. இந்த வண்ணப்பொருள்கள் எல்லாவற்றையும் நூறு விழுக்காடு சேர்த்தால் வெண்மை கருமை ஆகிவிடும். CMYK : சிஎம்ஒய்கே : CYAN (மயில் நீலம்), MAGENTA (செந்நீலம்) YELLOW (மஞ்சள்), BLOCK (கருப்பு) ஆகிய சொற்களின் முதல் எழுத்துகளால் உருவான குறும்பெயர் CYMK. CMY நிறமாதிரி போன்ற ஒரு நிற மாதிரி. நூறு விழுக்காடு மயில் நீலம், செந்நீலம், மஞ்சள் சேர்ப்பதைப் போலன்றி தனிக் கருப்பு நிறக் கூறுடன் சேர்ந்தால் கருப்பு நிறம் காட்டும் தன்மையது.
. cn : . சின் : ஓர் இணைய தள முகவரி, சீன நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர்.
. co : . சிஓ : ஓர் இணைய தள முக வரி. கொலம்பிய நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.
coaxial cable : இணைஅச்சுக் கம்பி வடம் : அதிகவேகத்தில் தரவுகளை அனுப்ப உதவும் சிறப்பு வகை தரவு தொடர்புக் கம்பி. பொதுவாக, தொலைதூர கட்டமைப்புகளில் பயன்படுத்தப்படுவது.
COBOL : கோபால் : Common Business Oriented Language என்பதன் குறும் பெயர். பொது வணிகச் சார்பு மொழி என்பதன் சுருக்கப்பெயர். ஒரு உயர் நிலைக்கணினி மொழி. வணிகத் துறை பயன்பாடுகளுக்காக என்றே உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு கோபால் நிரல்களும் நான்கு பிரிவுகளைக் கொண்டது.
- : (1) Identification Division.
- : (2) Environment Division.
- : (3) Data Division.
- : (4) Procedure Division.
அமெரிக்க இராணுவத்துறைக்காக 1959ஆம் ஆண்டு கோபால் மொழி உருவாக்கப்பட்டது.
cobweb site : ஒற்றடைத் தளம் : அநேக நாட்களாகப் பழக்கத்தில் இல்லாதுபோன ஒரு வலைத் தளம்.
cocktail party : கலக்கல் விருந்து.
CODASYL : கோடாசில் : தரவு முறைமை மற்றும் மொழிகளுக்கான கருத்தரங்கு எனப் பொருள்படும் Conference On DAta SYstem and Languages என்பதன் குறும்பெயர். அமெரிக்க மைய அரசு ஏற்படுத்திய தொழில் துறை கமிட்டி. கணினித் துறையில் தர நிர்ணயங்களை உருவாக்கிட அமைக்கப்பட்ட இக்குழுவின் மூலம்தான் கோபால் மொழியும் சிக்கலான தரவு தளங்கள் பலவும் உருவாயின.
Code : குறிமுறை : 1. தரவுகளை எவ்வாறு குறிப்பிட வேண்டும் என்பதை விளக்கும் விதிகளின் தொகுதி. 2. தரவுகளை ஒரு குறியீட்டிலிருந்து வேறொன்றுக்கு மாற்றுவதற்கான விதிகள். 3. ஒரு நிரல் அல்லது செயல் முறையை எழுதுவது, குறியீடு அமைத்தல் போன்றது.
code, absolute : முற்றுக் குறி முறை; நேரடிக் குறிமுறை.
code, alphabetic : அகரவரிசைக் குறி முறை; எழுத்துக் கோவை குறி முறை.
code, alphanumeric : எழுத்தெண் குறிமுறை.
code, binary : இருமக் குறி முறை.
codec : கோடெக் : codes, decoder என்ற இருசொற்களின் கூட்டுச் சொல்.
code conversion : குறிமுறை மாற்றல் : ஒரு குறியீட்டிலிருந்து எழுத்துகள், துண்மி தொகுதிகளை அதே பொருளுள்ள எழுத்துகளைக் கொண்ட வேறு ஒரு குறியீட்டுக்கு மாற்றுதல்.
coded decimal number : குறி முறைப் பதின்ம எண்.
coded decimal representation, binary : இருமக் குறிமுறைப் பதின்ம உருவகிப்பு.
coded digit, binary : இருமக் குறிமுறை இலக்கம்.
Code, Division Multiple Access : பகுதி பன்முக அணுகல்குறி முறை : பல தடங்களை ஒன்று சேர்ப்பதில் ஒருவகை. இதில் செய்தி பரப்பும் சாதனம் சமிக்கையைக் குறியீடு ஆக்குகிறது. அதற்குப் போலி தொடர்பிலா வரிசைமுறையைப் பயன்படுத்துகிறது. அந்த வரிசை முறையை வாங்கியும் அறியும். அதனால் பெற்ற சமிக்கையை குறியீடு ஆக்க முடியும். ஒவ்வொரு தொடர்பிலா வரிசை முறையும் வெவ்வேறு தரவு தொடர்பு தடத்தை ஒத்தது. இலக்கமுறை செல்பேசிக்காக மோட்டாரோலா இந்த ஒன்று சேர்ப்பு வகையைப் பயன்படுத்துகிறது.
coded number : குறியிடப்பட்ட எண் : ஒரு பொருளின் பதிவேட்டு எண். ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட கணினி அமைப்பிற்கு ஏற்றாற் போல் இதனை அமைக்கலாம் அல்லது குறியிடலாம். எடையிட்ட சோதனை இலக்க முறைகள் அல்லது சோதனை இலக்கங்களின் மூலம் குறியிடப்பட்ட எண்கள் செல்லத்தக்கவையா என்று சோதிக்கலாம்.
coded octal binary : இரும குறி முறை எண்மம்.
code editor : குறிமுறை தொகுப்பி.
code error : பிழைக் குறிமுறை.
code generator : குறியீடு உருவாக்கி.
code in binary : இருமக் குறிமுறை.
code level : குறிமுறை நிலை : ஒரு குறிப்பிட்ட எழுத்தைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் துண்மிகள்.
code, machine : எந்திரக் குறிமுறை.
code number : குறியீட்டெண்.
code, optimization : குறிமுறைச் சரித்திறனாக்கம்.
code page : குறிமுறைப் பக்கம் : டாஸ் (DOS) 3. 3 மற்றும் அதன் பின் வந்த பதிப்புகளில் வருவது. பல்வேறு அந்நிய மொழி எழுத்துகளுக்கான விசைப் பலகைகளை அமைக்க உதவும் பட்டியல்.
coder : குறிமுறையாளர் : கணினி மொழியில் ஒரு சிக்கலையோ அல்லது சிக்கலின் ஒரு பகுதியையோ எடுத்துரைப்பவர். பிறரது வடிவமைப்பையே எடுத்துப் பயன்படுத்திக் கொண்டு தானாக எந்த உழைப்பையும் செய்யாத ஒரு கணினி நிரலரை ஏளனமாகக் குறிப்பிடவும் இச்சொல் பயன்படுத்தப்படுவதுண்டு.
coder-decoder (codec) : குறியாக்கி-குறிவிலக்கி (கோடெக்) : தரவு தொடர்புகளில் பயன்படுத்தப்படும் ஒரு தனிச் சிப்பு. தொடர்முறைத் தரவுவை இலக்க முறையாகவும் இலக்க முறையை தொடர் முறையாகவும் மாற்ற இவை பயன்படுகின்றன.
code, relocatable : மறுஇட அமைவுக் குறிமுறை.
code segment : குறிமுறைப் பகுதி : அடையாள மதிப்புடைய நினைவகத்தின் பகுதியைக் குறிப்பிடுகிறது. ஒரு நிரலின் கட்டளைக்கு ஏற்பட்டுள்ள பயன்படுத்தும் நினைவகத்தின் பகுதி.
code set : குறிமுறைத் தொகுதி : ஒரு குறிமுறை வரையறுத்துக் கொடுக்கும் பதிலிகளின் முழுத் தொகுதி. ஒரு தொலைபேசி எண்ணில் (625 8485) முதல் மூன்று எண்கள் (ஆறு இலக்க எண்ணாயின் முதல் இரண்டு எண்கள்), குறிப்பிட்ட தொலைபேசி நிலையத்தைக் குறிக்கும் குறிமுறைத் தொகுதி ஆகும்.
code snippet : குறியீட்டுச் சிறு பகுதி : 1. வரைகலைப் பயன்பாட்டில் இடைமுகம் ஒன்றில் பயனாளர், பட்டியில் விருப்பத் தேர்வு செய்யும்போது அல்லது பொத்தானை அழுத்தும்போது என்ன நிகழ வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சிறிய நிரல் பகுதி, 2. பெரிய செயல்முறைத் திட்டத்தின் பகுதியாக உள்ள செயல்முறை நிரலில் சிறுதுண்டு. அச்சிறுபகுதி குறிப்பிட்ட வேலை அல்லது பணியை நிறைவேற்றும்.
code, source : ஆதாரக் குறி முறை; மூலக் குறிமுறை; மூல வரைவு.
code system : குறியீட்டு முறைமை.
code view : கோட்வியூ; (குறிமுறைப் பார்வை) : மைக்ரோ சாஃப்ட் (Microsoft) மற்றும் ஏற்புடைய மொழி மாற்றிகளுக்கு எழுதப்பட்ட நிரல்களுக்கான பிழை நீக்கி. பிற நவீன பிழை நீக்கிகளைப்போல, மூல மற்றும் இலக்கு நிரல்களை இது இணைக்கிறது. நிரல் இயக்கப் படும்போது மூலக்குறி முறையின் வழியாக நிரலர் செல்ல இது வழி வகுக்கிறது.
coding : குறிமுறையாக்கம் : 1. குறிப்பிட்ட செயல்பாட்டுக்கான ஆணைகளின் பட்டியலை எழுதுவது.
coding, absolute : முற்றுக் குறி முறையாக்கம்.
coding, automatic : தானியங்கு குறிமுறையாக்கம்.
coding basics : குறிமுறை அடிப்படைகள்.
coding, direct : நேரடிக் குறிமுறையாக்கம்.
coding form : குறிமுறை வடிவம் : ஒரு கணினிக்கு நிரல் அமைப்பதற்கான ஆணைகள் எழுதும் வடிவம். ஒவ்வொரு நிரலாக்க மொழிக்கும் ஒரு குறிப்பிட்ட குறிமுறை வடிவம் உண்டு. குறிமுறைத் தாள் என்றும் அழைக்கப்படும்.
coding sheet : குறிமுறையாக்கத் தாள்.
co-efficient : குணகம்.
coercion : வலிந்த மாற்றம்; கட்டாயப்படுத்தல் : நிரலாக்க மொழி வெளிப்பாடுகளில், ஒருவகை தகவலிலிருந்து வேறொன்றுக்குத் தானாகவே மாற்றிக் கொள்ளுதல். cognitive styles : புலப்பாட்டு பாணிகள் : பிரச்சினைகளை எதிர்கொண்டு மக்கள் தகவலை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதன் அடிப்படை அமைப்புகள்.
cognitive theory : புலப்பாட்டுக் கொள்கை : பிரச்சினைகளை எதிர்கொண்டு தகவலை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதற்கான கொள்கைகள்.
COGO : கோகோ : ஆயத்தொலைவடிவக் கணிதம் எனப்படும் Coordinate Geometry, என்பதன் குறும்பெயர். வடிவக் கணக்கு (Geometry) சிக்கல்களைத் தீர்க்க உதவும் ஒரு நிரலாக்க மொழி. சிவில் பொறியாளர்களால் அதிகம் பயன்படுத்தப்படுவது.
coherence : தொடர் இசைவு : ராஸ்டர் வரைகலைக் காட்சி தொழில் நுட்பத்தில் ஒரு குறிப்பிட்ட படப்புள்ளியின் மதிப்பே அதனை அடுத்து வரும் படப்புள்ளியிலும் இருக்கும் என்ற அனுமானம்.
cohesion : இணைவு : ஒரு பொதுவான பணியை ஒரு கூறு (மாடுல்) எவ்வாறு செய்கிறது என்பதற்கான அளவு. ஒரு நிரலின் உள் பலத்தின் அளவு.
coincidence error : தற்செயலான பிழை : பல ஒருங்கிணைப்பிகளை (integrators) இணைக்கும்போது கால வேறுபாட்டில் ஏற்படும் பிழை.
cold boot : தொடக்க இயக்கம் : புதிதாகக் கணினியைத் இயக்கி அதில் இயக்க முறைமையை ஏற்றும் செயல்.
cold fault : உடன் தெரியும் பிழை : கணினி எந்திரத்தைத் இயக்கிய உடனே தெரிகின்ற பிழை.
cold link : குளிர் தொடுப்பு : புதுத் தெடுப்பு : தரவு வேண்டுமென்று கேட்டதன் மேல் உண்டாக்கப்படும் இணைப்பு. அந்த வேண்டுகோள் நிறைவேறியவுடன் இணைப்பு துண்டிக்கப் பெறும். அடுத்த முறை கிளையன் வழங்கனிடம் மீண்டும் தரவு வேண்டுமெனக் கேட்டால் மீண்டும் இணைப்பு நிறுவப்பட வேண்டும். பரிமாற நிறைய தரவுகள் கொண்டிருந்தால், கிளையன்/ வழங்கன் கட்டமைப்பில் குளிர் இணைப்புகள் பயனுள்ளவை. மைக்ரோசாப்ட் எக்செல் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் இயங்கு நிலை தரவு பரிமாற்றம் குளிர் இணைப்புகளைப் பயன்படுத்துகிறது.
cold restart : புது மறுதொடக்கம்.
cold start : புதிய தொடக்கம் : ஒரு அமைப்பில் பெரும் தவறு ஏற்பட்டு, அதில் ஏற்கெனவே சேமிக்கப்பட்டவை பயனற்றுப் போன பின் மீண்டும் தொடங்குதல். தவறு ஏற்பட்ட பின் கணினியை மீண்டும் சாதாரணமாகத் துவங்கினால் அதில் உள்ள தரவுகளும், நிரல்களும் நினைவகத்திலிருந்து அழிந்து போயிருக்கும். இதில் மீண்டும் நிரலையும், தரவுகளையும் ஏற்ற வேண்டும்.
collaborative filtering : இணைந்து வடிகட்டல்; உடனுழை வடிகட்டல் : பலருடைய பட்டறிவுகளிலிருந்தும், கருத்துகளிலிருந்தும் தரவு பெறும் ஒருவழி. ஜெராக்ஸ் பார்க்கில் டெலிக் டெர்ரி என்பவரால் இந்தக் கலைச் சொல் உண்டாக்கப்பட்டது. ஆவணங்களைப் படித்துக் கொண்டு வரும் போதே, பயன்படுத்துபவர்கள் அவ்வப்போது விளக்க உரை குறித்துக் கொண்டு வரும் நுட்பத்தை முதலில் அவர்தான் பயன் படுத்தினார். தவிரவும், உள்ளடக்கம் பொறுத்து மட்டுமின்றி மற்றவர்கள் என்ன எழுதி யிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தும் அடுத்து எந்த ஆவணங்களைப் படிக்கலாம் என்பதைத் தெரிவு செய்ய முடியும். இணைந்து வடிகட்டுதலின் சாதாரண பயன்பாடு என்னவென்றால் குறிப்பிட்ட மக்களுக்கு விருப்பமான உலகளாவிய வலைத்தளங்களின் பட்டியலை உண்டாக்குவதாகும். பலருடைய அனுபவங்களை எழுத்தில் கொணர்ந்து சுவையான வலைத் தளங்களின் பட்டியலை வடிகட்டும் முறையில் உருவாக்க முடியும். அங்காடி ஆராய்ச்சிக்கான கருவியாக இணைந்து வடிகட்டுதலைப் பயன்படுத்துகிறார்கள். உற்பத்திப் பொருள்கள் பற்றிய கருத்துகள், மதிப்பீடுகள் ஆகியவை கொண்ட தரவுத் தளம் ஏற்படுத்தி, தரவுத் தளத்திலுள்ள கருத்துகளை வைத்து எந்தப் புது உற்பத்திப் பொருளை மக்கள் விரும்பி வாங்குவார்கள் என்பதை ஆராய்ச்சியாளர்கள் முன் கூட்டிக் கூற இயலும்.
Collate : அடுக்கு; சேர் : இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வரிசைப்படுத்தப்பட்ட தரவு தொகுப்புகளை ஒன்று சேர்த்து ஒரே வரிசையில் உள்ள தொகுதியாக மாற்றுதல்.
collating sort : சேர்க்கும் வரிசையாக்கம் : தரவுகளைத் தொடர்ச்சியாக ஒன்று சேர்த்து ஒரே வரிசையாக உருவாகும் வரை சேர்க்கும் முறை. collation sequence : சேர்க்கும் வரிசை : தொடக்கம் முதல் கடைசிவரை பொருள்களை வரிசைப்படுத்தும்போது கணினி பயன்படுத்தும் வரிசை முறை. எழுத்துகளுக்கு அகர வரிசையும், எண்களுக்கு எண்வரிசையுமாக இந்த வரிசைமுறை பொது அமையும். பெரிய எழுத்து, சிறிய எழுத்து, எண் எழுத்துக் கலப்பு, நிறுத்தக் குறியீடுகள் போன்றவை இதில் இணையும்போது வரிசைமுறை சிக்கலாகிவிடுகிறது.
collator : சேர்ப்பி : அட்டைகள் அல்லது பிற ஆவணங்களின் தொகுதிகளை ஒரே வரிசையில் சேர்த்துத் தரும் எந்திரம்.
collection : திரட்டு; தொகுப்பு : பல்வேறு இடங்களிலிருந்து தரவுகளைப் பெற்று அவற்றை ஒரே இடத்தில் தொகுப்பது.
collection, data : தரவு சேகரிப்பு; தரவுத் திட்டம்.
collector : சேகரிப்பி; திரட்டி.
collision : மோதல் : இரண்டு விசைப்பலகை இயக்கங்கள் ஒரே நேரத்தில் ஆணையிடப்படும்போது ஒரே முகவரியில் விசைகள் மோதிக்கொள்வதன் விளைவு. கணினியின் இயக்க முறையில் எந்த இயக்கத்தை செயல்படுத்துவது என்று நிரலில் குறிப்பிடப்படும்.
collision detection : மோதலைக் கண்டுபிடித்தல்; மோதல் உணர்தல் : 1. கணினி வரைபடமுறைகளில் குறிப்பாக, ஆர்க்கேட் வகை விளையாட்டுகளில், இரண்டு பொருள்கள் எப்போது மோதிக் கொள்ளும் என்பதை முடிவு செய்ய வேண்டும். மோதலைக் கண்டுபிடிப்பதற்குப் பல்வேறு நிரல் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தலாம். 2. பல்முனை அணுகு கட்டமைப்பில் ஒரே நேரத்தில் இரண்டு கணினிகள் தரவு அனுப்புவதைத் தடை செய்யும் நுட்பம்.
colmar : கோல்மார் : நமக்குக் கிடைத்துள்ள முதல் எந்திரக் கணிப்பியான அரித்மோ மீட்டரின் வேறு பெயர்.
colossus : கொலாசஸ் : ஜெர்மானிய குறியீடுகளைப் பிரித்தறிய 1943இல் உருவாக்கப்பட்ட சிறப்பு நோக்கக் கணினி.
colour : வண்ணம்; நிறம் : அலைவரிசை பொறுத்து மனிதர்கட்புலனால் காணத்தக்க ஒளியின் ஒரு பண்பு நிறம் என இயற்பியல் குறிப்பிடுகிறது. உயர் அலைவரிசை உடைய வயலெட் நிறத்திலிருந்து குறை அலை வரிசை உடைய சிவப்பு நிறம் வரை நிறங்கள் உண்டு. மின்காந்த நிறமாலை முழுமையின் ஒரு சிறு பகுதியாகக் காணக் கூடிய ஒளிப் பட்டையில் அந்த நிறங்களைக் காணலாம். கணினி ஒளிக்காட்சியில் வன்பொருளும் மென்பொருளும் இணைந்து செயல்பட்டு நிறம் உண்டாக்கப்படுகிறது. தனித்தனி நிறங்களுக்குரிய துண்மிகளை இணைக்கும் வேலையை மென்பொருள் செய்கிறது. அந்தத் துண்மிகளுக்குத் திரையில் குறிப்பிட்ட இடங்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. படக்கூறுகள் எனப்படும் தனித்தனிப் புள்ளிகள் அல்லது குறியீட்டு எண் குறிப்பிட்ட இடமாகும். வன்பொருளிலுள்ள தகவமைப்பு ஏற்பாடு இந்தத் துண்மிகளை மின்குறியீடுகளாக மாற்றுகிறது. எதிர்மின்வாய்க் கதிர்க் குழல் காட்சித்திரையில் நேரிணைவான இடங்களில் உள்ள வெவ்வேறு நிறமுடைய எரியங்களின் பிரகாச அளவை அந்தக் குறியீடுகள் கட்டுப்பாடு செய்கின்றன. பயனாளரின் கண்கள் எரியங்கள் (Phosphors) கொடுக்கும் ஒளிகளை இணைத்து ஓர் ஒற்றை நிறமாகக் காண்கின்றன.
colour balancing : வண்ண சம நிலைப்படுத்துதல்; நிறச் சமனாக்கம்.
colour bits : நிறத் துண்மிகள் : நிறத்தைக் குறிப்பிடும் ஒவ்வொரு படப்புள்ளியுடனும் இணைக்கப்படும் துண்மிகளின் எண்ணிக்கை. 16 நிறங்களுக்கு 4 துண்மிகள் பயன்படுத்தப்படுகின்றன. 256 நிறங்களுக்கு 8 துண்மிகள்.
colour burst : நிற வெடிப்பு : வண்ணத்தில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை கருப்பு வெள்ளைத் தொலைக் காட்சித் திரையில் காண்பதற்காக ஆரம்பத்தில் உண்டாக்கப்பட்ட தொழில் நுட்பம். ஒளிக் காட்சி சமிக்கையில் நிறத்தைக் குறியீட்டு வடிவில் மாற்ற உதவும் தொழில் நுட்பமாக இப்போது உள்ளது.
colour burst signal ; நிறம் வெடிப்புச் சமிக்கை : நிறம் பற்றிய தரவுவை அளிக்கும் ஒளிக்காட்சி வெளியீட்டில் உள்ள சமிக்கை. நிறம் வெடிப்புச் சமிக்கையை நிறுத்துவதனால் கறுப்பு வெள்ளை திரைகளில் படங்களின் தரம் கூடும்.
colour camera : வண்ணப் படப்பிடிப்பு : ராஸ்டர் ஸ்கேன் காட்சி சாதனங்களில் தரவுகளைப் பதிவு செய்யப் பயன்படுத்தும் வெளியீட்டுச் சாதனம்.
colour code : நிற குறிமுறை : காட்சித்திரையில் தெரிகின்ற 16 நிறங்களுள் ஒன்றைக் குறிப் பிடும் 0 முதல் 15 வரையுள்ள எண்களில் ஒன்று. ஐபிஎம் கூடுதல் திறனுடைய நிற முகப்புடன் சேர்க்கப்பட்ட இஜிஏ வில் 64 நிறக்குறியீடுகள் (0-63) இருக்கும்.
colour coding : நிறம் குறியிடல் : பல்வகையான பதிவேடுகளைப் பயன்படுத்தி நிறங்களை அடையாளம் காணும் செயல்முறை.
colour contrast : வண்ண மாறுபாடு; நிற வேறுபாடு.
colour cycling : நிற சுழற்சியாக்கம் : கணினி வரைகலைகளில், பொருள்களை நகர்த்துவதற்குப் பதிலாக, தொடர்ச்சியாக நிறங்களை மாற்றுவதன் மூலம் அசைவூட்டப் படத் தினைப்போல் அமைக்கும் தொழில் நுட்பம்.
colour enrichment : நிறச் செறிவு.
colour genie (EACA) : கலர் ஜீனி : 8Z - 80செயலகம் சார்ந்த நுண் கணினி 16K குறிப்பிலா அணுகு நினைவகம் (RAM) டையது. 32Κ வரை விரிவாக்கிக் கொள்ளலாம்.
colour graphics : வண்ண வரைகலை : நிறங்களைப் பயன்படுத்தி ஓவியங்களை வரைதல், வரைபடங்களை உருவாக்குதல் போன்றவற்றைச் செய்யும் கணினி அமைப்பு.
Colour Graphics Adapter : நிற வரை கலைத் தகவி.
colour inkjet printer : வண்ண மையச்சுப் பொறி.
colour keying : வண்ண விசை அமைத்தல் : ஒரு ஒளிக்காட்சி (வீடியோ) தோற்றத்தை ஒன்றன் மீது ஒன்றாக மேலே அழுத்தும் தொழில் நுட்பம். சான்றாக, கடலில் ஒரு காரை மிதக்க விட வேண்டுமென்றால், நீல நிறப் பின்னணியில் காரின் தோற்றத்தை வைப்பது. கார் மற்றும் கடலின் உருவத்தை ஒன்றாக வருடிக் காரைக் கடலில் மிதப்பதுபோல் செய்தல்.
colour laser printer : வண்ண லேசர் அச்சுப்பொறி.
colour look-up table : நிற நோக்கு அட்டவணை : கணினியின் ஒளிக்காட்சி தகவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அட்டவணை. கணினியின் காட்சித்திரையில் காட்டக்கூடிய வெவ்வேறு வண்ணங்களுக்கு நேரிணையான நிறக்குறியீட்டு நிலை எண்களைக் கொண்டது அப்பட்டியல். மறைமுகமாக வண்ணம் காட்டப்படும்போது, நிறத் துண்மிகள் ஒரு சிறிதளவு ஒவ்வொரு படக் கூறுக்காக சேமித்து வைக்கப்பட்டு, நிறத்திற்காகப் பார்க்கவேண்டிய பட்டியலிலிருந்து குறியீட்டு நிலை எண்களின் ஒரு தொகுதியைத் தெரிந்தெடுப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
colour management : நிற மேலாண்மை : அச்சுத்துறையில் வெளிப்பாட்டுச் சாதனங்கள் பலவற்றில் எதையும் பயன்படுத்தி துல்லியமான ஒரு சீரான வண்ணம் உண்டாக்கும் முறை. நுண்ணாய்வுக் கருவி, ஒளிப் படப்பிடிப்புக் கருவி, அல்லது காட்சித்திரை எதிலுமிருந்து ஆர்ஜிபி உள்ளிட்டினைத் துல்லியமாக அச்சிடு கருவி, அச்சிடு கருவிக்கான அளவுக் கோட்டுச் சாதனம் அல்லது உருவம் திரும்பவும் கொணருவதற்கான வேறு வெளிப்பாட்டு சாதனம் ஆகியவற்றுக்காக சிஎம்ஒய்கே வெளிப்பாட்டுக்கு மாற்றுதலும் நிற மேலாண்மை என்பதில் உள்ளடங்கும். ஈரப்பதம் காற்றழுத்தமானி காட்டும் அழுத்தம் போன்ற சூழல் மாறுபாடுகளுக்கேற்ப செயற்படுவதும் உள்ளடங்கும்.
colour management system : நிற மேலாண்மை முறைமை : கோடாக் நிறுவனம் உருவாக்கிய தொழில் நுட்பம். மற்ற மென்பொருள் விற்பனையாளர்கள் அதைப் பயன்படுத்த உரிமங்கள் வழங்கப்பட்டன. ஒளிக்காட்சித் திரை, கணினிக் காட்சித்திரை, மற்றும் அச்சு வடிவில் எதிலும் தோன்றும் வண்ணங்களுக்கு இணையானவற்றை உண்டாக்கவும் அளவீடு செய்யவும் பயன்படுவதற்கான தொழில் நுட்பமாகும்.
colour map : வண்ண அமைபடம் : சில குறிப்பிட்ட துண்மிகளைக் கொண்டு அதிக வேலை வாங்குவதற்காக, கணினி வரைபட முறையிலுள்ள ஒரு திட்டம்.
colour meter : வண்ண மதிப்பீட்டுச் சாதனம் : தரமான தொகுப்பு வண்ணங்களைக் குறிப்பிடும் முறையில் வண்ணங்களை மதிப்பிட்டு அடையாளம் காண உதவும் சாதனம்.
colour missing : வண்ண இழப்பு; நிறம் காணப்படாமை.
colour model : நிற மாதிரியம் : வரைகலைகளிலும், டி. டி. பி யிலும் நிறத்தைக் குறிப்பிடும் முறை. இதில் நிறங்கள் பான்டூன் (Pantone) முறையில் குறிப்பிடப்படுகின்றன. கணினியில் பலமுறைகளில் நிறங்களைக் குறிப்பிடலாம். RGB (சிகப்பு, பச்சை, நீலம்) CMY (சியான், மெஜந்தா, மஞ்சள்) மற்றும் HSB (Hue, Saturation, brightness) என்பன.
colour mode property : நிற பாங்குப் பண்பு. colour monitor : வண்ணத் திரையகம் : நிறத்தில் வரைகலை உருவங்களையோ அல்லது சொற்களையோ அமைக்க தகவி அல்லது ஒளிக்காட்சி (Video) அட்டையும் சேர்ந்தியங்க வடிவமைக்கப்பட்ட கணினி திரைக் காட்சி. திரையில் உள் பக்கமாக மூன்று நிறக்கலவைகள் (சிகப்பு, பச்சை, நீலம்) உள்ளன. நிறக்கலவை எரியத்தை (பாஸ்பரை) ஒளியூட்டி நிறத்தை அளிப்பதற்கு மூன்று நிறங்களைக் கொண்ட மின்னணு பீச்சிகள் உள்ளன.
colour named literals : நிறப்பெயர் நிலையுரு; நிறப்பெயர் மதிப்புருக்கள்.
colour printer : வண்ண அச்சுப்பொறி : பல நிறங்களில் செய்தி, வரைபடங்கள், வரிப் படங்கள், கலைப் படைப்புகள் ஆகியவற்றை உருவாக்கும் வெளியீட்டுச் சாதனம்.
colour resolution : நிறத் தெளிவு : ஒரு கணினி அமைப்பு உரு வாக்கக்கூடிய பல்வகை நிறங்களின் எண்னிக்கை. இதன் மதிப்புகளை துண்மிகளில் கொடுப்பார்கள்.
colour saturation : நிற உச்சம் : ஒரு நிறத்தில் உள்ள ஒளியின் அளவு. மேலும் உச்சத்திற்குச் சென்றால், மேலும் அதிக நிறத்தைப் பெறலாம்.
colour scanner : நிற வருடுபொறி : உருவங்களை இலக்கமாக்கிய உருவமைவாக மாற்றுகிற நுண்ணாய்வுக் கருவி. நிறத்தின் விளக்கமும் அளிக்கக்கூடியது. வருடு பொறியின் துண்மி (bit) யின் ஆழத்தைப் பொறுத்து வண்ணத்தின் செறிவும் அமையும். துண்மியின் ஆழம் என்பது வண்ணத்தை 8, 16, 24 அல்லது 32 நுண்மிகளாக மாற்றும் ஆற்றலாகும். வெளிப்பாட்டை அச் சிட வேண்டுமானால் சாதாரணமாக உயர்வகை வண்ண வருடு பொறிகள் பயன்படுத்தப்படுகின்றன. அக்கருவிகள் தரவுகளை உயர் தெளிவுத்திறனுடன் குறியீடாக்கவோ அங்குல வாரிப் புள்ளிக் குறிகளாகவோ ஆக்கக் கூடியவை. கீழ்மட்ட வண்ண வருடுபொறிகள் 72 அங்குல வரிப்புள்ளிகள் கொண்ட தெளிவுத்திறனுடன் குறிகளாக்குகின்றன. அச்சு செய்யக் கருதப்படாத கணினித்திரை உருவங்களை உண்டாக்க சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
colour separation : நிறம் பிரிப்பு : நிறங்களில் அச்சிடுதலுக்கான 'நெகட்டிவ்' (Plate) மற்றும் அச்செழுத்துத் தட்டுகளைச் செய்ய நிறங்களால் படங்களைப் பிரித்தல். முழுநிறம் வேண்டுமென்றால் நான்கு வகையாகப் பிரிக்க வேண்டும். சியான், மெஜந்தா, மஞ்சள், கறுப்பு (CMYK).
colour television principles : வண்ணத் தொலைக்காட்சி கொள்கைகள் : எதிர்மின்வாய் (Cathode) கதிர்க் குழாயில் நிறம் பெறுமிடத்தில் ஒவ்வொரு அடிப்படை நிறத்துக்கும் ஒன்றாக மூன்று மின்னணு பீச்சிகள் உள்ளன. ஒவ்வொரு நிறத்தினையும் காட்டும்போது மின்னணு பீச்சிட நிறம் எரியும். மனிதக் கண்கள் இவற்றை ஒன்று சேர்த்துப் பார்க்கின்றன. மூன்று நிறங்களும் ஓரிடத்தில் அடுத்தடுத்து வந்தால் வெள்ளை நிறம் தெரியும்.
colour terminals : வண்ண முனையங்கள்.
. columbus. oh. us : கொலம்பஸ். ஓஹெச். யுஎஸ். : இணையத்தில் ஒரு முகவரி அமெரிக்க நாட்டு ஒஹீயோ மாநிலத்துக் கொலம்பஸ்ஸில் உள்ளதென்பதைக் குறிப்பிடும் பெரும் புவிபிரிவுக்களப் பெயர்.
column : நெடுக்கை; நிரை; நெடு வரிசை : 1. ஒரு வரியில் ஒரே வரிசையாக உள்ள செங்குத்தான உறுப்புகள். 2. ஒரு துளையிட்ட அட்டையில் செங்குத்தான வரிகளில் உள்ள துளையிடும் இடங்கள். 3. ஒரு கணினி சொல்லில் தரவு இருக்கும் இடம். 4. மின்னணு விரிதாளில் நெடுக்கைப் பகுதி. நெடுக்கைகளுடன் சேர்ந்து நெடுக்கைகள் விவரத்தினை, கணக்கீடுகளை உருவாக்க உதவுகின்றன.
columnar : நெடுக்கையாக.
column - binary : நெடுக்கை - இரும எண் : துளையிட்ட அட்டையின் ஒவ்வொரு நெடுக் கையிலும் குறிப்பிடப்படும் நெடுக்கை எண் column break : நெடு வரிசை நிறுத்தம்; நெடுக்கை முறிவு.
column chart : நெடுக்கை நிரல் படம் : மதிப்பளவுகள் செங்குத்தான பட்டைகளாக அச்சிடப்பட்டு வெளியிடப்படும் பட்டை வரைபடம்.
column count : நெடுக்கை எண்ணிக்கை.
column graph : நெடுக்கை வரைபடம்.
column head : நெடுக்கைத் தலைப்பு.
column indicator : நெடுக்கை சுட்டிக் காட்டி.
column move : நெடுக்கை நகர்த்தல் : விவரத்தாளில் பத்தி அல்லது உரை ஆவணத்தில் எழுத்துகளை செவ்வகக் கட்டமாக மாற்றி வேறிடத்தில் வைத்தல்.
column split : பத்தி பிரித்தல் : துளையிடும் அட்டையில் 11வது அல்லது 12-வது வரிசை தொடர்பான துடிப்புகளைக் குறிப்பிட எண் துளைகளைப் நெடுக்கை வாரியாக தனித்தனியாகப் போட்டு அட்டையைத் துளையிடும்போது படிக்க அல்லது எழுதும்போது கிடைக்கச் செய்வது.
column text chart : நெடுக்கை உரை நிரல்படம்.
column width : நெடுக்கை அகலம்.
. com : . காம் : 1. வணிக அமை வனங்கள் பயன்படுத்தும் வலைத்தள முகவரிகளை அடையாளம் காண உதவும் உயர் மட்டப் பகுதி. இணையத்தின் களப்பெயர் அமைப்பில் பெரும் பிரிவுக் களப் பெயர் . காம் என்பது முகவரியின் இறுதிப் பாகத்தில் சேர்க்கப்படுவது. டிஎன்எஸ் (பொருள் வரையறை) பிரதேசம் (பொருள் வரையறை ) ஆகியவற்றையும் பார்க்க. (எ. டு). கவ், . மில், . நெட், . ஆர்க் இவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும். 2. எம்எஸ் பாஸ்ஸில் கோப்பின் வகைப் பெயர் கட்டளைக் கோப்பை அடையாளம் காட்டுவது.
combinational circuit : ஒன்றிணைவு மின்சுற்று : கணினியின் பல்வேறு தருக்க இயக்கங்களைச் செய்ய மின்சுற்று அமைக்க உதவும் ஒன்றோடொன்று இணையும் வாயில்களின் வரிசை முறை அமைப்பு.
combination chart : சேர்க்கை நிரல் படம்.
combination logic : ஒண்றிணை தருக்கம் : உள்ளீட்டின் தற்போதைய நிலையைக் கொண்டே வெளியீட்டின் நிலையை முடிவு செய்யும் மின்சுற்று ஏற்பாடு. நினைவகப் பகுதிகளைப் பயன்படுத்தும் இலக்கமுறை அமைப்பு.
combinatorial explosion : ஒன்றிணைவு வெடிப்பு : கணினி தீர்க்க வேண்டிய சிக்கலின் அளவு மிக அதிகமாகிவிட்ட போது ஏற்படும் நிலை. பெரிய கணினிகளிலும் இந்நிலை ஏற்படலாம்.
combinatorics : இணைப்பியல் : நிகழ்தகவு மற்றும் புள்ளி விவர தொகுப்பியல் தொடர்புடைய கணக்கியல் கிளை. எண்ணுதல், தொகுத்தல், வரிசைப்படுத்தல் ஆகியவை பற்றியது. இணைப்பியல் இரண்டு வகை இணைப்புகளையும் வரிசை மாற்ற வகைகளையும் கொண்டது. பெரிய குழுவிலிருந்து எடுத்த உறுப்புகளைத் தொகுத்தல். குழுவில் உறுப்புகள் இருந்துவந்த வரிசையைப் பொருட்படுத்தாமல் எடுத்துத் தொகுக்க வேண்டும். சான்றாக, 4 பொருள்கள் கொண்ட குழுவிலிருந்து ஒவ்வொரு முறையும் இரண்டு உறுப்புகள் எடுத்து ஆறு இணைப்பு வகைகள் உண்டாக்குதல். ABCD என்னும் பொருள்களில் இரண்டை எடுத்து AB, AC, AD, BC, BD, CD என ஆறு உண்டாக்குதல். உறுப்புகளின் வரிசையை அப்படியே கொண்டு பெரியதிலிருந்து உறுப்புகள் எடுத்துத் தொகுப்பது வரிசை மாற்ற வகையாகும். உதாரணமாக நான்கு பொருள் தொகுதியிலிருந்து இரண்டு பொருள்கள் எடுத்து வரிசை மாற்ற வகை செய்தலைக் குறிப்பிடலாம். முதல் தெரிந்தெடுப்பான Aயில் நான்கிலிருந்து எடுக்க வேண்டியிருக்கும். அடுத்த 8 தெரிந்தெடுப்பு மீத மூன்றிலிருந்து எடுப்பதாகும். மொத்தத்தில் 12 வரிசைமாற்ற வகைகள் உண்டாக்கலாம். அதாவது AB, AC AD, BA, BC, BD, CA, CB, CD DA DB, DC.
combined head : சேர்வுத் தலைப்பு : ஒன்றிணைந்த தலைப்பு.
combining characters : கூட்டு எழுத்துகள்.
combo box : சேர்க்கைப் பெட்டி.
combo box control : சேர்க்கைப் பெட்டி இயக்குவிசை.
COMDEX : காம்டெக்ஸ் : தரவு தொடர்பு மற்றும் தரவுச் செயலாக்கக் கண்காட்சி எனப் பொருள்படும் Communications and Data Processing Exposition என்பதன் குறும்பெயர். அமெரிக்காவிலும் பிற இடங் களிலும் நடைபெறும் மிகப் பெரிய கணினி பொருட்காட்சி.
comic book : நகைச்சுவை நூல் : 1985இல் முதல் முறையாக கணினி மூலமான நகைச்சுவை நூல் முறை உருவாக்கப்பட்டது. ஷாட்டர் (Shatter) என்னும் முதல் கணினி நகைச்சுவை நூலை உருவாக்கியவர் மெக்கின்டோஷ் நுண் கணினியை கருவியாகப் பயன்படுத்தினார்.
COMIT : காமிட் : சர செயலாக்க மொழிகளில் ஒன்று.
comma delimited : காற்புள்ளியால் பிரிக்கப்பட்ட : தரவு புலங்களை காற்புள்ளியால் தனியாகப் பிரிக்கும் பதிவேடு அமைப்பு. இதில் பொதுவாக எழுத்துத் தரவுகள் மேற்கோள் குறியீடுகளுடன் தரப்பட்டிருக்கும்.
command : கட்டளை : 1. கட்டுப்பாடு சமிக்கை. 2. ஒரு கணித அல்லது தருக்க இயக்கி. 3. ஒரு கணினி ஆணை. 4. கட்டளை.
command and control system : கட்டளை, கட்டுப்பாட்டு முறைமை.
command based : கட்டளை அடிப்படையிலான.
command buffer : கட்டளை இடையகம் : பயனாளர் பதிந்துள்ள கட்டளைகள் வைத்திருக்கும் நினைவகத்திலுள்ள ஒரு பகுதி. பயனாளர் மீண்டும் கட்டளைகளை முழுவதும் தட்டச்சு செய்யாமல், கட்டளைகளை மீண்டும் பயன்படுத்த உதவும். ஏதாவது பிழையிருந்தால் திருத்தவும், சிலவற்றை மாறறவும, கடடளைகளை நீக்கவும், பழைய கட்டளைகளின் பட்டியலைப் பெறவும் உதவும்.
command button : கட்டளைப் பொத்தான் : அழுத்தும் பொத்தானைப் போன்ற உருவுடைய இயக்கு விசை. வரைகலை பயனாளர் இடைமுகத்தில் உள்ள உரையாடல் பெட்டியில் இருப்பது. கட்டளைப் பொத்தானை அழுத்தி பயனாளர் உரையாடல் பெட்டியிலுள்ள வேறு கட்டுப்பாட்டு அமைப்பைப் பயன்படுத்தி அப்போது தான் தெரிந்தெடுத்த கோப்பைத் திறப்பதுபோன்ற செயல்களைச் கணினியை செய்ய வைக்கலாம்.
command chained memory : கட்டளை இணைந்த நினைவகம் : மாறும் சேமிப்பக ஒதுக்கீட்டில் பயன்படுத்தப்படும் நுட்பம்.
COMMAND. COM : கமாண்ட். காம் : எம்எஸ் டாஸ் இயக்க முறை யின் தலையாய கோப்பு. அகக்கட்டளைகளை இதுவே நிறைவேற்றி வைக்கிறது.
command driven : கட்டளை முடுக்கம் : தட்டச்சு செய்த சொற்றொடர்களாக கட்டளைகளை ஏற்றுக்கொள்ளும் நிரல் தொடர். பொதுவாக, இதைக் கற்றுக்கொள்வது அரிது. ஆயினும் பட்டியல் செலுத்து நிரலைவிட அதிக நெகிழ்வுத் தன்மையைத் தரும்.
command driven software : கட்டளையால் முடுக்க மென்பொருள் : முனையத்தைப் பயன்படுத்துவோருக்குப் பட்டிகள் (Menus) மூலம் வழிகாட்ட எந்த முயற்சியும் செய்யாத நிரல்கள். அதற்குப் பதிலாக, கட்டளையால் இயங்கும் மென்பொருளில் எத்தகைய கட்டளை உள்ளது என்றும், அவற்றில் எது பொருத்தமானது என்றும் அறிந்து கொண்டிருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
command driven system : கட்டளையால் இயங்கும் முறைமை : கட்டுப்பாட்டு முனையத்திலிருந்து நுழைந்த ஆணையைக் கொண்டு பயனாளர் செயற்பாடுகளைத் தொடங்குகிற ஒர் அமைப்பு.
command file : கட்டளைக் கோப்பு : ஆணைக் கோப்பு.
command interpreter : கட்டளை பெயர்ப்பி; ஆணை பெயர்ப்பி; கட்டளை வரிமாற்றி : சாதாரணமாக இது இயக்க முறைமையின் பகுதியாக இருக்கும். விசைப் பலகையிலிருந்து தட்டச்சான கட்டளைகளை ஏற்று அதில் சொன்னபடி வேலைகளைச் செய்து முடிக்கும். ஆணை பெயர்ப்பி பயன்பாட்டுத் தொகுப்புகளை இயக்கவும், பயன்பாடு தொடர்பான தரவுகள் செல்வதை வழிப்படுத்தவும் செய்கிறது. ஓ. எஸ்/2 மற்றும் எம்எஸ்-டாஸில் கட்டளை பெயர்ப்பி, கோப்புகளை நகர்த்தவும், படி எடுக்கவும், நீக்கவும், கோப்பகத் தரவுகளைக் காட்டவும் செய்கிறது.
Command key : கட்டளை விசை : குறிப்பிட்ட பணிகளைச் செய்ய பயன்படுத்தும் விசைப் பலகையில் உள்ள ஒரு விசை.
command language : கட்டளை மொழி : ஆணை பெயர்ப்பி அமைப்பால் சரியானவை என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட சொற்களும் சொற்கோவைகளும் கொண்ட தொகுதி.
command line : கட்டளை வரி : இயக்க முறைமையினால் (Operating System) கட்டளை செயல்படுத்தும் நுழைவு. டாஸில் C : \> யூனிக்ஸில் அடையாளத்துக்குப் பின் உள்ளீடு செய்யப்படும் கட்டளை வரியைக் குறிக்கிறது.
command line arguments : கட்டளை வரி உள்ளீடுகள்.
command line interface : கட்டளை வரி இடைமுகம் : இயக்க முறைமைக்கும் பயனாளருக்கும் இடையே உள்ள ஒருவித இடைமுகம். பயனாளர் அதில் ஆணைகளை ஒரு தனி வகை ஆணை மொழியைப் பயன்படுத்தித் தட்டச்சு செய்வார். கட்டளைவரி இடைமுகம் கற்றுக் கொள்வதற்குக் கடினமானது என்று கருதப்படுவது வழக்கமென்றாலும், ஆணை அடிப்படை கொண்ட அமைப்புகள் செயல்முறைப்படுத்தத்தக்கவை. செயல்முறைப்படுத்தும் இடைமுகம் அற்ற வரைகலை அடிப்படை கொண்ட அமைப்பில் இல்லாத நெகிழ்வு கிடைக்கிறது.
command line operating system : கட்டளைவரி இயக்க முறைமை.
command line parameters : கட்டளை வரி அளப்புருக்கள் : ஒரு கட்டளையில் சேர்க்கப்படும் கூடுதல் உள்ளீடுகள். டாஸ் அல்லது யூனிக்ஸில் பிராம்ப்டிலிருந்து ஒரு நிரலை இயக்கக் கட்டளை தரும் போது, அந்த நிரலுக்குத் தரப்படும் உள்ளீட்டுத் தரவுகள்.
command line user interface : கட்டளைவரி பயனாளர் இடை முகம்.
command mode : கட்டளை பாங்கு : செயல்படுத்தப்படுவதற்கான கட்டளைகளை கணினியை ஏற்றுக்கொள்ளச் செய்யும் இயக்க பாங்கு.
command path : கட்டளை வழி.
command processing : கட்டளைச் செயலாக்கம் : கணினி ஆணைகளைப் படித்தல், ஆராய்தல் மற்றும் செயல்படுத்தல்.
command processor : கட்டளைச் செயலி : ஒரு இயக்க முறைமையின் மிக எளிமையான கட்டளைகளை அறிந்து கொள்ளப் பயன்படும் ஒரு பொதுவான கட்டளைக் கோப்பு.
command prompt : கட்டளை தூண்டி.
command queuing : கட்டளைச் சாரை : பல கட்டளைகளைச் சேமித்து அவற்றை ஒவ்வொன்றாகச் செயல்படுத்தும் திறன்.
command Set : கட்டளைத் தொகுதி : ஆணைத்தொகுதி (Instruction set) போன்றது. command shell : கட்டளைச் செயல்தளம்.
command state : கட்டளை நிலை : ஒரு தொலைபேசி எண்ணுக்கு தொலைபேசி இணைப்பு ஏற்படுத்து என்று கூறப்படுவது போன்ற கட்டளைகளை இணக்கி (மோடெம்) ஏற்றுக் கொள்கிற நிலை.
command statement : கட்டளைக் கூற்று.
command tree : கட்டளை மரம் : தலைமைக் கட்டளைப் பட்டியலுக்கும் தொடர்புடைய துணைப் பட்டியல்களுக்கும் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் கூறும் ஒரு வரிசைமுறை நிரல் படம்.
comment out : விளக்கக் குறிப்பாக்கு : ஒரு நிரலில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வரிகளை தற்காலிகமாக விளக்கக் குறிப்புப் பகுதியில் அடைத்துச் செயல்பட இயலாமல் செய்தல்.
comments : குறிப்புரைகள் : கணினி நிரலில் உள்ள கணினி மொழி கட்டளைகளுக்கு இடையே ஆங்காங்கே சேர்க்கக் கூடிய ஆங்கில உரைநடை நிரலின் செயல்களை மனிதர்களுக்கு விளக்கப் பயன்படுத்தப்படுகிறது. கணினி விளக்க நூல்களில் சரியாக எழுதப்பட்ட குறிப்புகள் மிகவும் பயனுள்ளவை. நிரலின் உள்ளேயே இவை அமைவதால் எதிர்காலத்தில் பயன்படுத்துவோர்களுக்கு நிரல்களைப் புரிந்து கொள்ளவும், மாற்றவும் மிகவும் உதவியாக இவை அமைகின்றன.
comment statements : குறிப்புரைக் கூற்றுகள்.
commerce server : வணிக வழங்கன்; வணிகப் சேவையகம் : நேரடியாகத் தொழில் நடவடிக்கைகள் நடத்துவதறகாக வடிவமைக்கப்பட்ட ஒரு எச்டீடீபி வழங்கன் கணினி. பற்று அட்டை எண்கள் போன்ற தரவுகளை மறைக்குறியீட்டு முறையில் வழங்கனுக்கும் வலை உலாவிற்கும் இடையில் தரவு மாற்றம் செய்யப்படுகிறது. அஞ்சல்வழி வணிகம் புரியும் கம்பெனிகளும் வணிக வழங்கன்களை பயன்படுத்துகின்றன. சேமிப்பகம் அல்லது கம்பெனி அளிக்கும் பண்டங்கள் அல்லது சேவைகள் ஒளிப்படங்களாக விளக்கப்பட்டு காட்சியாக சேமிப்பகம் அல்லது கம்பெனியின் வலைத் தளத்தில் காட்டப்படுகின்றன. பயனாளர்கள் நேரடியாகத் தங்கள் வலை உலாவியைப் பயன்படுத்தி வேண்டியவற்றைக் கேட்டுப் பெறலாம். நெட்ஸ்கேப், மைக்ரோசாஃப்ட், குவார்ட்டர்டெக்ட் போன்றவை உள்ளடங்கலாக அநேக கம்பெனிகள் வணிக வழங்கன்களை விற்பனை செய்கின்றன.
commercial data processing : வணிகத் தரவு செயலாக்கம்.
Commercial Internet Exchange : வணிக இணைய இணைப்பகம் : பொதுமக்களுக்கு இணைய சேவை அளிக்கும் இலாப நோக்கமில்லாத வணிக அமை வனம். வழக்கமான பிறர் சார்பான நடவடிக்கைகள், சமூக நடவடிக்கைகள் ஆகியவற்றோடுகூட அதன் உறுப்பினர்களுக்கு இணைய இணைப்பு வசதியையும் அளிக்கிறது.
Commercial software : வணிக மென்பொருள்.
commission : தரகுத் தொகை.
Common Access Method : பொது அணுகு வழிமுறை : ஃபியூச்சர் டொமைன் நிறுவனம் மற்றும் ஏனைய ஸ்கஸ்ஸி வணிக நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய தர வரையறை. எப்படிப்பட்ட வன்பொருள்களைப் பயன்படுத்தினாலும் ஸ்கஸ்ஸி தகவிகள் (adapters) ஸ்கஸ்ஸி சாதனங்களுடன் தரவு பரிமாற்றத்தைச் சாத்தியம் ஆக்குகின்ற பொது அணுகு வழிமுறை இதுவாகும்.
common applications environment (CAE) : பொதுப் பயன்பாட்டுச் சூழல்.
common area : பொது இடம் : தலைமை நினைவகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள ஒரு இடம். ஒரே நிரலின் பல பகுதிகள் இதைப் பயன்படுத்திக் கொள்ளும்.
common business oriented language : பொது வணிகம் சார்ந்த மொழி : கோபால் (COBOL) மொழியின் விரிவாக்கப் பெயர்.
Common Carriers : காமன் கேரியர்ஸ் : பொது மக்களின் பயன்பாட்டுக்காக தொலைபேசி, தந்தி மற்றும் பிற தரவு தொடர்பு வசதிகளை ஏற்படுத்தித் தரும் அரசு வழி காட்டலில் இயங்கும் தனியார் நிறுவனம்.
Common Client Interface : பொது கிளையன் இடைமுகம் : என்சிஎஸ்ஏ நிறுவனத் தயாரிப்பான மொசைக் மென்பொருளின் எக்ஸ்-விண்டோஸ் பதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கட்டுப்பாட்டு இடைமுகம். ஒரு வலை உலாவியின் உள்ளக நகலை வேறு நிரல்கள் கட்டுப்படுத்த முடியும். என்சிஎஸ்ஏ மொசைக்கின் எக்ஸ்-விண்டோஸ் மற்றும் விண்டோஸ் பதிப்புகள் டிசிபீ/ஐபீ நெறிமுறை மூலமாக பிற நிரல்களுடன் தரவு பரிமாறிக் கொள்கின்றன. விண்டோஸ் பதிப்பில் ஓஎல்இ தரவு பரிமாற்றமும் இயல்வதாகும்.
common control : பொதுக் கட்டுப்பாடு.
Common Dialog Box Control : பொது உரையாடல் பெட்டி இயக்குவிசை.
commondore international inc : கமாண்டோர் இன்டர்நேஷனல் இன்க் : வீட்டுப் பயன்பாட்டிற்காக நுண்கணினி அமைப்புகளை உற்பத்தி செய்வதில் சிறப்பிடம் பெற்ற நிறுவனம். கமாண்டோர் பெட்விக் மற்றும் கம்மோடோர் 64 ஆகியவை மிகவும் புகழ் பெற்றவை. பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. கம்மோடோர் 128 மற்றும் அமிகா உள்ளிட்ட பெரிய நுண்கணினி அமைப்புகளை இந்த நிறுவனம் உற்பத்தி செய்கிறது.
Common Hardware Reference Platform : பொது வன்பொருள் குறிப்புப் பணித்தளம் : பவர்பீசி செயலியின் அடிப்படையில் அமைந்த ஒரு கணினிக் குடும்பத்துக்கான வரையறுப்பு. மேக்ஓஎஸ், விண்டோஸ் என்டி, ஏஐஎக்ஸ் மற்றும் சோலாரிஸ் உட்பட பல்வேறு இயக்க முறைமைகளில் இக்கணினிகள் செயல்பட முடியும்.
Common Internet File System : பொது இணையக் கோப்பு முறைமை : சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் வெப் நெட்வொர்க் என்னும் கோப்பு முறைமைக்குப் போட்டியாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முன்வைத்த தர வரையறை. இணையம் மற்றும் அக இணையக் கோப்புகளை பகிர்ந்து கொள்வதற்கான ஒரு கோப்பு முறைமை ஆகும்.
common language runtime (CLR) : பொதுமொழி இயக்கச் சூழல் : மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நெட் (NET) தொழில்நுட்பத்தின் ஓர் அங்கம். பல்வேறு மொழியில் எழுதப்பட்ட நிரல்களை ஒரே இயக்க சூழலில் செயல்படுத்த முடியும்.
common language specification (CLS) : பொதுமொழி வரையறை : பொது மொழி வரையறுப்பு. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நெட் (NET) தொழில் நுட்பத்தின் ஓர் அங்கம்.
Common Lisp : பொது லிஸ்ப் : லிஸ்ப் நிரலாக்க மொழியின் தரப்படுத்தப்பட்ட பதிப்பு. லிஸ்ப் மொழியை எந்த நிறுவனமும் தம் சொந்த வடிவில் வெளியிட முடியும். இதன் காரணமாய் லிஸ்ப் மொழி வெவ்வேறு வடிவில் வெளியிடப்பட்டது. எனவே அம்மொழியைத் தரப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. தரப் படுத்தப்பட்ட பொது லிஸ்ப் மொழி உருவாக்கப்பட்டது. இதன் மூலம் லிஸ்ப் நிரலர்களுக்கு ஒரு வரையறுக்கப்பட்ட மூலமொழி கிடைத்தது.
common storage : பொது சேமிப்பகம் : எல்லா நிரல்களும் அணுகக்கூடிய தரவு அல்லது அளவுகோல்களை வைத்துக் கொண்டிருக்கும் நினைவகத்தின் பகுதி.
common storage area : பொதுச் சேமிப்பகப் பரப்பு.
Common User Access : பொதுப் பயனர் அணுக்கம் : ஐபிஎம் நிறுவனத்தின் முறைமைப் பயன்பாட்டுக் கட்டுமானத்தில் ஒரு பகுதியாக, பயனாளர் இடை முகங்களை மேலாண்மை செய்வதற்கான தர வரையறைகளின் தொகுதி. வெவ்வேறு பணித் தளங்களில் ஒத்தியல்பாகவும் முரணின்றியும் செயல்படக் கூடிய பயன்பாடுகளை உருவாக்க உதவுவதற்கென இந்தப் பொதுப்பயனாளர் அணுக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
communicating : தரவு தொடர்பு கொள்ளல் : பயன் படுத்தும் இடம் ஒன்றுக்கு தகவலை அனுப்பும் செயல்முறை.
communicating word processors : தரவு தொடர்பளிக்கும் சொல் செயலிகள் : மின்னணு அஞ்சலை அனுப்பப் பயன் படுத்தப்படும் சொல் செயலிகளின் கட்டமைப்பு.
communication : தரவு தொடர்பு : 1. ஒரு இடத்திலிருந்து (மூலம்) வேறொரு இடத்துக்கு (சேரிடம்) தரவு செல்லுதல். 2. அனுப்புதல் அல்லது தெரியப்படுத்தல். 3. பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சமிக்கைகளின் தொகுதியைப் பயன்படுத்த தனிநபர்களுக்கிடையே தரவு மாற்றிக் கொள்ளும் செயல் முறை.
communication channel : தரவு தொடர்பு வழித்தடம் : தரவுகளை அனுப்புதல் அல்லது பெறுவதற்காக ஒரு இடம் அல்லது சாதனத்தினை வேறொன்றுடன் இணைக்கும் பருநிலை வழி. தரவு தொடர்பு வழித்தடங்களாக இணையச்சு வடம், ஒளிவ நுண் இழைகள், நுண்ணலை சமிக்கைகள், தொலைபேசிக் கம்பிகள் மற்றும் செயற்கைக் கோள் தரவு தொடர்புகள் ஆகியவை பயன்படுகின்றன.
communication control unit : தரவு தொடர்புக் கட்டுப்பாட்டுச் சாதனம் : பல்நோக்குக் கணினியிலிருந்தோ அல்லது கணினிக்கோ செய்தித் தரவு தொடர்பு ஓட்டத்தை மட்டும் கையாள வேண்டிய ஒரே வேலையைச் செய்கின்ற ஒரு சிறிய கணினி.
communication data : தரவு தொடர்பு தரவு.
communication device : தரவு தொடர்புச் சாதனம்.
communication interface : தரவு தொடர்பு இடைமுகம்.
communication line : தரவு தொடர்பு இணைப்பு : தொலை பேசிக் கம்பி இணையச்சு வடம், ஒளியிழை வடம் அல்லது நுண்ணலை இணைப்பு போன்று தரவுகளை அனுப்புவதற்கேற்ற இணைப்பு.
communication link : தரவு தொடர்புத் தொடுப்பு : கணினிகளுக்கிடையே தரவு பரிமாற்றத்துக்கு வழியமைத்துத் தரும் இணைப்பு.
communications controller : தரவு தொடர்பு கட்டுப்படுத்தி : கணினியுடன் பல தரவு தொடர்புக் கம்பிகளை இணைக்கும் வெளிப்புறக் கட்டுப்பாட்டுச் சாதனம். அனுப்புதல், பெறுதல் மற்றும் செய்தி குறியாக்கம், குறிவிலக்கம் போன்ற நடவடிக்கைகளை இது செய்கிறது.
communications interrupt : தரவு தொடர்புக் குறுக்கீடு : நேரியல் தகவி மூலம் வரும் வன்பொருள் குறுக்கீடு. வரிசைக் கோட்டில் வேறொன்றை அனுப்பும்போது ஒரு எழுத்து குறுக்கே வருதல்.
communications link : தரவு தொடர்பு தொடுப்பு : இரண்டு கணினி சாதனங்களுக்கிடையில் தகவலை அனுப்பும் முறை.
communications network : தரவு தொடர்பு பிணையம் : முனையங்களையும் கணினிகளையும் இணைக்கும் தரவு தொடர்பு வழித் தடங்கள்.
communications parameters : தகவல் தொடர்பு அளபுருக்கள் : கணினிகள் தம்மிடையே தகவல் பரிமாறிக் கொள்ளத் தேவையான பல்வேறு தகவமைவுகளைக் குறிக்கும் அளபுருக்கள் ஒத்தியங்காத் தரவு தொடர்புகளில், எடுத்துக்காட்டாக, இரு இணக்கி (மோடம்) களுக்கிடையே தரவு தொடர்பு நடைபெற மோடத்தின் வேகம், தரவு துண்மிகள், முடிப்புத் துண்மிகளின் எண்ணிக்கை, மற்றும் வகைச் சமன் ஆகிய அளபுருக்களை சரியாக தகவமைக்க வேண்டும்.
communications processor : தகவல் தொடர்புச் செயலகம் : கணினி அமைப்புக்கும் தகவல் தொடர்பு கட்டமைப்புகளுக்கும் இடையே தரவு பரிமாற்றலுக்கான பாதை அமைத்துத் தரும் கணினி.
communications programme : தகவல் தொடர்பு நிரல் : மோடெம் மூலமாக தகவல் தொடர்பு கொள்ள கணினிகளை அனுமதிக்கும் நிரல். தகவல் தொடர்பு கொள்வதற்கும், தகவலைப் பெறுவதற்கும் தானியங்கி முறைகளாகிய தானியங்கி பதில் அளித்தல், தானே டயல் செய்தல், வேறொரு கணினியை டயல் செய்தல் போன்றவற்றை சில தரவு தொடர்பு நிரல்கள் செய்யவில்லை. தொலைதூர கணினியில் ஆளில்லாமலே தொடர்பு கொள்ளவும் சில நிரல்கள் திறனுடையவை.
communications protocol : தகவல் தொடர்பு நெறிமுறைகள் : இரண்டு கணினி சாதனங்களுக்கிடையே நடைபெறும் தகவல் தொடர்பை நெறிபடுத்தும் விதிமுறைகள். தரவு இழப்பு, தரவு பிழை தவிர்கின்ற வழி முறைகளையும் கொண்டிருக்கும்.
communications server : தகவல் தொடர்பு வழங்கன் : குறும் பரப்புப் பிணையங்களை விரி பரப்புப் பிணைப்பு அல்லது தொலைத் தகவல் தொடர்பு பிணையங்களுடன் இணைக்கும் கருவி.
communications slot : தகவல் தொடர்புச் செருகுவாய் : மெக்கின்டோஷ் கணினியின் பல்வேறு மாதிரிகளில் பிணைய இடைமுக அட்டைகளைச் செருகுவதற்கென உள்ள விரிவாக்க செருகுவாய்.
communications software : தகவல் தொடர்பு மென்பொருள் : பயனாளரின் கட்டளைகளுக்கு ஏற்ப இணக்கியை (modem) கட்டுப்படுத்தும் மென்பொருள். பெரும்பாலும் இது போன்ற மென்பொருள் முனையக் கணினிகளை குறிப்பிட்ட வகையில் தகவமைத்தல், கோப்புகளைப் பரிமாறிக்கொள்ளல் போன்ற வசதிகளைக் கொண்டிருப்பதுண்டு.
communication satellite : தகவல் தொடர்பு செயற்கைக்கோள் : பூமியின் மேலே சுற்றுப்பாதை யில் பூமியின் வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக்கோள். நுண்ணலை பரப்பும் நிலையமாக அது செயல்படும். தரை நிலையத்திலிருந்து அனுப்பப்படும் சமிக்கைகளை ஏற்று, அவற்றின் திறன்பெருக்கி வெவ்வேறு அலைவரிசைகளில் பூமியிலுள்ள இன்னொரு தரை நிலையத்துக்கு அனுப்பி வைக்கும். தொடக்க காலங்களில் தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி சேவைகளுக்காகவே இத்தகைய தரவு தொடர்பு செயற்கைக் கோள்கள் பயன்படுத்தப்பட்டன. கணினி தரவுகளின் அதிவேக பரப்புகைக்கும் பயன்படுத்த முடியும். ஆனால் இரண்டு இடையூறுகள் உள்ளன. ஒன்று, அலைபரவலில் ஏற்படும் தாமதம் (சமிக்கைகள் நீண்ட தொலைவு பயணம் செய்வதற்கு எடுத்துக் கொள்ளும் காலத்தினால் ஏற்படும் தாமதம்). இரண்டாவது தரவு பாதுகாப்பு.
communications system : தகவல் தொடர்பு அமைப்பு : தகவல் அனுப்புகின்றவரின் பருப்பொருள், வழித்தடங்கள் மற்றும் தரவு பெறுபவர்களையும் கொண்ட அமைப்பு.
communication standard : தரவுத் தொடர்புத் தரம்; செய்தித்தொடர்பு செந்தரம்; செய்தித் தொடர்பு திட்ட அளவு.
Communications Terminal Protocol : தகவல் தொடர்பு முனைய நெறிமுறை : ஒரு பயனாளர் தன்னுடைய கணினியிலிருந்து தொலைதூரத்தில் உள்ள ஒரு கணினியை, அதனுடன் நேரடியாக இணைக்கப்பட்ட ஒரு கணினியைப் போலவே அணுக வழி செய்யும் முனைய நெறிமுறை இது.
Community Antenna Televisions (CATV) : சமுதாய அலைவங்கித் தொலைக்காட்சி.
compact : குறு; குறுக்கி; கச்சிதம்.
compact database : தரவு தளத்தை இறுக்கு.
compact disc : குறுவட்டு : 1. தொடக்க காலங்களில், கேட்பொலி (audio) தகவலை இலக்க முறை (digital) வடிவில் பதிந்து வைப்பதற்கான ஒரு ஒளியியல் சேமிப்பு ஊடகமாக அறிமுகம் ஆனது. இது மின்காந்த வட்டுகளிலிருந்து வேறுபட்டது. பள பளப்பான உலோகப் பூச்சும் பாதுகாப்பான பிளாஸ்டிக் மேல் பூச்சும் கொண்டது. 74 நிமிடங்கள் கேட்கக்கூடிய உயர்தர ஒலித் தகவலைப் பதிய முடியும். மிகு அடர்த்தியுள்ளலேசர் கதிர் மற்றும் பிரதிபலிப்பு ஆடிகளின் உதவியுடன் இதிலுள்ள தரவு படிக்கப்படுகிறது. சுருக்கப் பெயர் சிடி (CD). சிலவேளைகளில் ஒளிவட்டு என்று அழைக்கப்படுவதுண்டு. 2. சிடி-ரோம், சிடி ரோம்/எக்ஸ்ஏ, சிடி-ஆர், சிடி-ஆர்டபிள்யூ, ஃபோட்டோசிடி, டிவிஐ என்று பல பெயர்களில், பல்வேறு வகையான தரவு வடிவங்கள் பதியப்பட்டுள்ள குறுவட்டுகள் கிடைக்கின்றன. பல்வேறு படிப்பு/எழுது வேகங்களில் மற்றும் கொள்ளளவுகளில் தயாரிக்கப்படுகின்றன.
compact disc interactive (CDI) : இடைப்பரிமாற்ற குறுவட்டு : ஊடாட்டம் குறுவட்டு.
compact disc player : குறுவட்டு இயக்கி : குறுவட்டில் பதியப்பட்டுள்ள தகவலைப் படிப்பதற்கான ஒரு சாதனம். வட்டின் உள்ளடக்கத்தைப் படிப்பதற்குரிய ஒளியியல் கருவிகளையும், படித்த தகவலை சரியான வகையில் வெளியீடு செய்வதற்குரிய மின்னணுச் சுற்றுகளையும் இச்சாதனம் கொண்டிருக்கும்.
compact disc read only memorry (CDROM) : படிக்கமட்டுமான தரவு பதியும் குறுவட்டு.
compact disc-recordable and erasable : குறுவட்டு-பதிதகு மற்றும் அழிதகு : பதிதகு குறுவட்டுகள் வெற்று வட்டுகளாகத் தயாரிக்கப்படுகின்றன. அதாவது தொடக்கத்தில் அவற்றில் தரவு எதுவும் பதியப்பட்டிருக்காது. இத்தகைய வெற்று வட்டுகளை வாங்கி அவற்றில் எழுதுவதற்கென உரிய சாதனங்கள் மூலம் தகவலைப் பதியலாம். அவ்வாறு ஒருமுறை பதியப் பட்ட தகவலை மீண்டும் அழித்து எழுத முடியாது. அழிதகு குறுவட்டுகளில் ஒரு முறை எழுதப்பட்ட தகவலை அழித்து விட்டு மீண்டும் புதிய தகவலை எழுத முடியும்.
compaction : நெருக்கம் : செமிப்பதற்கு இடம் தருவதற்காக தரவு கோப்புகளை இறுக்கும் முறை. compact model : கச்சித மாதிரியம் : இன்டெல் 80x86 செயலிக் குடும்பத்தில் பின்பற்றப்படும் ஒரு நினைவக மாதிரியம். இதில் நிரலாணைத் தொடர்களுக்கென 64 கேபி நினைவகம் ஒதுக்கப்படுகிறது. ஆனால் நிரலின் தரவுகளுக்கென 1 எம்பி வரை ஒதுக்கப்படுகிறது.
company sites : நிறுவனத் தளங்கள்.
comparative grammer knowledge : ஒப்பிலக்கண அறிவு.
comparative knowledge : ஒப்புமை அறிவு.
comparative sort : ஒப்பீட்டு வரிசையாக்கம் : இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விவரங்களை ஒப்பிட்டு வரிசையாக்கும் முறை.
comparator : ஒப்பீட்டுப் பொறி : மாற்றப்பட்ட தரவுகளின் துல்லியத்தைச் சோதனை செய்ய இரண்டாவது முறையும் மாற்றம் செய்து இரண்டுக்குமிடையில் உள்ள வேறுபாட்டைக் குறிப்பிடும் சாதனம்.
compare : ஒப்பீடு : ஒன்றின் மதிப்பைச் சோதித்து சுழி (பூஜ்யம்) யுடனான அதன் உறவை முடிவு செய்தல் அல்லது இரண்டு பொருள்களை சோதித்தல். ஒப்பீட்டு அளவை முடிவு செய்யவோ அல்லது அடையாளம் காணும் நோக்கத்துடனோ இது செய்யப்படும்.
comparison : ஒப்பீடு : இரண்டு எண்களை அவற்றின் அடையாளத்துக்காக ஒப்பிடுதல் அல்லது இரண்டு எழுத்துகளை அவற்றின் அளவின் ஒப்புமைக்காக ஒப்பிடுதல் அல்லது அகர வரிசைப்படுத்துதல்.
comparison operators : ஒப்பீட்டுச் செயற்குறிகள்.
comparison tests : ஒப்பீட்டுச் சோதனைகள்.
compart : காம்பார்ட் : Computer Art என்பதன் குறும்பெயர்.
compatibility : ஒத்தியல்பு; தகவுடைமை ஏறபுடைமை : 1. ஒரு கணினிக்காக எழுதப்பட்ட நிரல், வேறு ஒரு மாறுபட்ட கணினியில் செயல்பட அனுமதிக்கும் சில கணினிகளின் தன்மை. 2. கணினியும், அச்சுப் பொறியும் போன்று பல்வேறு சாதனங்கள் ஒன்றுசேர்ந்து வேலை செய்யும் திறன்.
compatibility mode : ஒத்தியல்புப் பங்கு : ஒரு கணினி முறைமைக் உருவாக்கிய மென்பொருளோ வன்பொருளோ இன்னொரு கணினி முறைமையிலிருந்து செயல்படும் தன்மை. பொதுவாக இம்முறை, இன்டெல் நுண்செயலிகளுக்காக உருவாக்கப்பட்ட உயர்நிலை இயக்க முறைமைகளில் (ஒஎஸ்/2 மற்றும் விண்டோஸ் என்டி) எம்எஸ்-டாஸ் மென்பொருளை இயக்குதலைக் குறிக்கும். அல்லது சில யூனிக்ஸ் பணி நிலையங்கள் மற்றும் சில மெக்கின்டோஷ் கணினிகளில் எம்எஸ்-டாஸ் மென்பொருள் இயக்குவதைக் குறிப்பதுண்டு.
compatible : ஏற்புடைமை : இரண்டு சாதனங்கள் அல்லது அமைப்புகளுக்கிடையே சேர்ந்து பணியாற்றும் தன்மையைக் குறிப்பிடுகிறது. ஒரு அமைப்பின் பகுதி ஒன்று வேறொரு அமைப்பின் பருப்பொருள் மற்றும் செயல்படு தன்மைகளுடன் முழுமையாக ஏற்புடையதென்றால், எந்த மாற்றமும் செய்யாமல் அதை வேறொரு அமைப்புடன் சேர்த்துக் கொள்ளலாம்.
compatible software : ஒத்தியல்பு மென்பொருள் : எந்தவித மாற்றமும் செய்யாமல் பல்வகை கணினிகளில் செயல்படக்கூடிய நிரல்கள்.
compilation : தொகுத்தல்; மொழி மாற்றல் : கணினிச் செயலகத்தில் நேரடியாக இயக்கப்படுவதற்காக உயர்நிலை மொழிகளில் எழுதப்பட்ட நிரல்களை எந்திர மொழி ஆணைகளாக மொழி பெயர்த்துத் தரும் இரு முக்கிய முறைகளில் ஒன்று. இயக்கத்திற்கு முன்பே முழு நிரல் மொழி பெயர்க்கப்பட வேண்டும். ஆணை மாற்றி (interpretation) -க்கு மாறானது. ஆனைமாற்றி முறையில் ஒவ்வொரு ஆணையும் அது செயல் படுத்தப்படும்போது மட்டுமே மாற்றப்படுகிறது.
compilation process : மொழி மாற்றுச் செயல்முறை.
compilation software : தொகுப்பு; மென்பொருள் : மொழிமாற்றி மென்பொருள்.
compilation time : மொழி மாற்று நேரம் : மூலமொழி நிரலை இலக்கு நிரலாக மொழிபெயர்க்கும் (தொகுக்கும்) நேரம்.
compile : மொழிமாற்று : ஃபோர்ட்ரான், கோபால், அல்லது பாஸ்கல் போன்ற உயர் நிலை நிரலாக்க மொழியில் எழுதப்பட்ட நிரலை எந்திர மொழி நிரலாக மாற்றி அமைத்தல்.
compile and go : மொழிமாற்றி இயக்க : ஒரு நிரலை எந்திர மொழிக்கு மாற்றி அதனை இயக்கும் பணியையும் ஒரே நேரத்தில் செய்தல். compiled basic : மொழிமாற்று பேசிக் : பொதுவாக பேசிக் மொழி ஒவ்வொரு ஆணையாக நிறைவேற்றக்கூடிய ஆணை மாற்றி (interpreter) யை அடிப்படையாகக் கொண்டது. அவ்வாறில்லாமல், முழு நிரலையும் பொறிமொழியாக்கி இயக்கும் மொழிமாற்றியை (compiler) அடிப்படையாகக் கொண்ட பேசிக் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இவ்வாறு மொழி மாற்றப்பட்ட பேசிக் நிரல் மிகவேகமாக இயங்கும் என்பதால் தொழில் முறையான நிரல்களுக்கு இத்தகு பேசிக் மொழியையே தேர்வு செய்வர்.
compiled language : மாற்றிய மொழி; தொகு மொழி : கணினியில் இயக்கப்படுவதற்கு முன் பொறிக் குறி முறையாக்கப்பட்ட ஒரு மொழி ஒவ்வொரு ஆணையாக மொழி பெயர்க்கப் பட்டு இயக்கப்படும் ஆணை மாற்று முறையிலிருந்து வேறு பட்டது.
compiled programme : தொகுக்கப்பட்ட நிரல்; மொழி மாற்றிய நிரல்.
compiler : மொழிமாற்றி; தொகுப்பி : உயர் நிலை மொழி நிரலை, கணினி வன்பொருளில் நேரடியாக செயல்படுத்தும் நோக்கத்துடன், மொழி பெயர்க்கும் மென்பொருள், இயக்கப்படுவதற்கு முன்பே முழு நிரலையும் மொழி பெயர்க்கிறது.
compiler language : மொழி மாற்றியின் மொழி : உயர்நிலை மொழிச் சொற்றொடர்களை இலக்கு மொழிக்கு மொழி பெயர்த்துத் தருவதற்கு பயன்படுத்தும் மொழிமாற்றி உருவாக்கப்பட்ட மொழி.
compiler programme : மொழி மாற்று நிரல்.
compile time : மொழிமாற்று நேரம் : ஒரு நிரலை மொழி மாற்ற ஆகும் நேரம். மூல மொழியிலிருந்து எந்திர மொழிக்கு மொழி பெயர்க்க ஆகும் நேரம். நூலக செயல்களுடன் தொடுக்கும் நேரமும் இதில் சேர்த்துக் கொள்ளப்படும்.
compile time binding : தொகு நேர பிணைப்பு; மொழிமாற்று நேரப் பிணைப்பு : ஒரு நிரல் மொழி மாற்றப்படும்போதே அந்நிரலிலுள்ள ஓர் இனங்காட்டிக்கு (identifier) (எடுத்துக் காட்டாக ஒரு செயல்கூறு அல்லது மாறிலி) இன்ன பொறுப்பு என முடிவு செய்து விடுவது. சில வகை நிரல்களில் இப்பொறுப்பு, நிரல் இயக்கப்படும் போது முடிவு செய்யப்படுவதுண்டு. compile-time error : மொழி மாற்று நேரப் பிழை : மூலக் குறியீட்டை மொழி மாற்றும் போது ஏற்படும் பிழை.
compiling : தொகுத்தல்.
compiling application : தொகுப்பு பயன்பாடு; மொழிமாற்றப் பயன்பாடு.
complement : நிரப்பு எண் : சேர்ப்பு எண் : ஒரு குறிப்பிட்ட எண்ணின் எதிர்மறையை உருவகிக்கும் எண். கடைசி முக்கிய இலக்கத்திற்கு ஒற்றுமையுடையதாக 10-ன் சேர்ப்பெண் மற்றும் 2-ன் சேர்ப்பெண் போன்று ஆதார எண்ணிலிருந்து எண்னின் ஒவ்வொரு இலக்கத்தையும் கழிப்பதால் வரும் எண். Radix Complement என்றும் அழைக்கப்படுகிறது.
complementary MOS (CMOS) : நிரப்பு உலோக ஆக்சைடு குறை கடத்தி எனும் பொருள்படும் Metallic Oxide Semiconductor (MOS) (Complementary MOS) என்பதன் குறும்பெயர். மாசை விட வேகமாக வேலை செய்கின்ற, ஏறக்குறைய மின்சக்தியைப் பயன்படுத்தாமலே இயங்கும் உலோக ஆக்சைடு. குறைக் கடத்தி சிப்பு. LSI-ஐ விடச் சிறந்ததல்ல. ஆனால் பேட்டரியிலிருந்து சக்தி பெறுகின்ற மின்னணு கைக்கடி காரங்கள் மற்றும் பிற கடிகாரங்களில் பயன்படுத்தப்படுகிறது.
complementary operation : நிரப்பு கைச் செயல்பாடு : பூலியன் தருக்க முறையில், நேரெதிர் விடையை வரவழைக்கும் செயல்பாடு. இச் செயல்பாடு அதே தரவுகளின் மீதே நிகழ்த்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டாக, ஏ என்பது சரி என்ற மதிப்புடையது எனில் இல்லை ஏ என்பது தவறு என்ற விடையைத் தரும்.
complementation, boolean : பூலியன் நிரப்புகை.
complementing : நிரப்புதல்.
complement notation : நிரப்பு முறை.
complement, tens : பத்தின் நிரப்பெண்.
completeness check : முழுமைச் சரிபார்ப்பு : புலங்கள் எல்லாம் சரியாக இருக்கிறது என்றும் முழுப் பதிவுகளும் சோதிக்கப்பட்டது என்றும் உறுதி செய்வது.
complete word : முழுச் சொல்.
complex : கலவை : கலவை எண்களை (a+ib) பயன்படுத்தும் வகையில் சில கணினி மொழிகளில் உள்ள தரவு இனம். Complex Instruction Set Computer (CISC) : கலவை ஆணைத் தொகுதிக் கணினி.
complexity : உட்சிக்கல்நிலை; கடுஞ்சிக்கல்.
complex number : கலப்பு எண் : a+ib என்ற வடிவில் உள்ள எண். a, b ஆகிய இரண்டும் மெய் எண்கள். i என்பது -1ன் வர்க்க மூலம் என்பது மெய்ப்பகுதி என்றும் b என்பது கற்பனைப்பகுதி என்றும் அழைக்கப்படுகிறது. கலப்பு எனகளை இரு பரிமாண வரைபடத் தாளில் எக்ஸ்-ஒய் அச்சுகளில் ஆயத் தொலைவுப் புள்ளகளினால் குறித்துக் காட்டமுடியும். கிடைமட்ட அச்சில் (எக்ஸ்) மெய்ப்பகுதியும் a), செங்குத்து அச்சில் (ஒய்) கற்பனைப் பகுதியும் (b) இடம்பெறும். எக்ஸ், ஒய் அச்சுகள் முறையே மெய், கற்பனை அச்சுகள் என்றழைக்கப்படுகின்றன. வரை படத் தளம் கலப்புத் தளம் (complex plane) எனப்படுகிறது.
comp. newsgroups : காம்ப். நியூஸ் குருப்ஸ்; கணி. செய்திக் குழுக்கள் : யூஸ்நெட் செய்திக் குழுக்களின் படிநிலைப் பெயர். முன்னொட்டாக (prefix) comp. என்ற சொல் இருக்கும். இந்தச் செய்திக் குழுக்களில் கணினி வன் பொருள், மென்பொருள் மற்றும் கணினி அறிவியல் தொடர்பான ஏனைய செய்திகளைப் பற்றிய கலந்துரையாடல்கள் நடைபெறும். யூஸ்நெட் செய்திக் குழுக்களின் படிநிலையில் அடிப்படையான ஏழு குழுக்களில் comp என்பதும் ஒன்று. ஏனைய ஆறு : news., rec., sci., soc., talk, misc ஆகியவை.
component : பொருள்கூறு; ஆக்கக்கூறு : கணினி அமைப்புச் சாதனம் : ஒரு கணினி அமைப்பில் அடிப்படை உறுப்பு, மூலக உறுப்பு; ஒரு பயன்பாட்டின் பகுதி. மென்பொருள் ஆக்கக் கூறுகளையும் குறிக்கும்.
component dialog box : பொருள்கூறு உரையாடல் பெட்டி; ஆக்கக் கூறு உரையாடல் பெட்டி.
component event : பொருள்கூறு நிகழ்வு; ஆக்கக்கூறு நிகழ்வு.
component object model : பொருள் கூறு மாதிரியம். ஆக்கக் கூறு பொருள் மாதிரியம்.
component reusability : பொருள் கூறு மறுபயன்பாடு; ஆக்கக் கூறு மறுபயன்பாடு.
component software : ஆக்கக் கூறு மென்பொருள்; பொருள் கூறு மென்பொருள் : கூறுநிலை மென்பொருளாக்கத்தில் பயன் படுத்தப்படும் பொருள்கூறுகள். பொருள் கூறுகள் பிற பொருட் கூறுகளுடன் இணைந்து ஓர் ஒட்டுமொத்த நிரலை உருவாக்குகின்றன. ஒரு நிரலர், ஏற்கெனவே உருவாக்கி வைக்கப்பட்டுள்ள பொருள்கூறு ஒன்றினை தன் நிரலில் பயன்படுத்திக் கொள்ள முடியும். மீண்டும் மீண்டும் பயன்படுத்திக் கொள்ள முடியும். பொருள்கூறு எவ்வாறு உருவாக்கப்பட்டது, அதனுள்ளே எழுதபபட்ட நிரல்கள் ஆனைத் தொடர்கள் எவை, அவை எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் பற்றியெல்லாம் அறிந்துகொள்ளமலே அப்பொருள்கூறின் முழுப் பயனையும் நுகர முடியும்.
COM port : காம் துறை : பிற வெளிப்புற சாதனங்களுடன் தரவு தொடர்பு கொள்வதற்காக பீ. சி. யில் பொருந்தும் ஒரு நேரியல் வெளியீட்டு துறை.
compose : உருவாக்கு.
compose message : செய்தியாக்கல்.
compose sequence : இயற்று வரிசை முறை.
composite : கலப்பு : அனைத்து மூன்று அடிப்படை ஒளிக்காட்சி (வீடியோ) நிற சமிக்கைகளும் (சிவப்பு, பச்சை, நீலம்) கலந்துள்ள ஒளிக்காட்சி சமிக்கை வகை. சில கணினி திரையகங்களில் உள்ள உருவங்களின் கூர்மையைக் கட்டுப்படுத்துகிறது. எலெக்ட்ரான் பீச்சு கருவியைப் பயன்படுத்தி மூன்று அடிப்படை நிறங்களை உருவாக்கும் தொலைக்காட்சிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
composite card : கலவை அட்டை : பலநோக்கு தரவு அட்டை அல்லது பல்வேறு பயன்பாடுகளைச் செயலாக்கம் செய்ய தேவைப்படும் தரவுகளைக் கொண்ட அட்டை.
composite colour monitor : ஒருங்குசேர் வண்ணத்திரையகம்.
composite display : கூட்டுருத் திரைக்காட்சி : தொலைக்காட்சி மற்றும் சில கணினித் திரைகளின் காட்சிப் பண்பியல்பைக் குறிக்கிறது. கூட்டுக் கலவையான சமிக்கைகளிலிருந்து ஒரு படிமத்தை மீட்டெடுக்கும் திறனைக் குறிப்பிடுகிறது. கூட்டுருக் காட்சி கறுப்பு வெள்ளையாகவோ, வண்ணமாகவோ இருக்கலாம். சாதாரண கறுப்பு வெள்ளை அல்லது சிபநீ (RGB) வண்ணத்திரைகளைக் காட்டிலும் தெளிவற்றே இருக்கும். சிபநீ காட்சித் திரைகள் சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய நிறக் கூறுகளுக்குத் தனித்தனி சமிக்கைகளையும் தனித்தனி இணைப்புக் கம்பிகளையும் கொண்டுள்ளன. ஆனால் கூட்டுருக் காட்சித் திரைகள் ஒரே இணைப்புக் கம்பியிலேயே படிமத்தை உருவாக்குவதற்கான தரவு சமிக்கைகளையும், கிடைமட்ட மற்றும் செங்குத்து வருடல்களுக்கான துடிப்புத் தரவுகளையும் பெறுகின்றன.
composite key : கூட்டுத் திறவி : ஓர் அட்டவணையில் தரவுவைத் தேடிப் பெறப் பொதுவாக ஒரு குறிப்பிட்ட புலம் திறவு கோலாகப் பயன்படும். (எ-டு) பணியாளர்களின் விவரங்களைப் பதிந்து வைத்துள்ள அட்டவணையில் ஒரு குறிப்பிட்ட ஏட்டை (record) இனங்காண பணியாளர் எண் திறவுகோல் புலமாகப் பயன்பட முடியும். சில அட்டவணைகளில் ஒற்றைப் புலம் திறவு கோலாகப் பயன்பட முடியாது. பல்வேறு வணிகர்களிடம் கொள்முதல் செய்த பல்வேறு பொருள்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலில் ஒரு குறிப்பிட்ட ஏட்டினை (record) இனங்காண வணிகர் எண்+பொருள் எண் இரண்டு புலங்களும் சேர்ந்த கூட்டுத் திறவு கோலையே பயன்படுத்த முடியும்.
composite statement : கலவைக்கூற்று.
composite symbol : கலப்புக் குறியீடு : ஒரு குறிக்கு மேற்பட்ட குறிகளைக் கொண்ட சமிக்கை < > என்ற குறியீடு சமமானதல்ல என்பதைக் குறிப்பிடச் சில மென்பொருள் அமைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.
composite video : கலவை ஒளிக்காட்சி; கலப்பு ஒளிக்காட்சி; கலந்த ஒளிக்காட்சி : ஒரு தனி ஒளிக்காட்சி சமிக்கையாக குறியீடு செய்யப்பட்டு பிரகாசம், நிறக்கூறு வடிவில் தோன்றும் ஒரு கணினியின் வண்ணக் காட்சித் திரையில் தோன்றும் நிற வெளிப்பாடு. நிறக் கட்டுப்பாடு சமிக்கை ஒரு தரவு தொடராக மூன்று நிறங்களில் (சிகப்பு, பச்சை, நீலம்) குறியீடு செய்யப்படுகிறது. கலவை காட்சித்திரைகள் எனப்படும் சிக்கனமான வண்ண காட்சித் திரைகள் கலவை ஒளிக்காட்சியைப் பயன்படுத்தி தொலைக் காட்சி பெட்டியைவிட ஓரளவு சிறந்த படத்தை அளிக்கும். ஆனால் ஆர்ஜிபி காட்சித்திரை போன்ற உயர்தரத்தில் அளிக்க இயலாது.
composite video display : கூட்டு ஒளிக்காட்சித் திரை.
composition : எழுத்துக் கோப்பு : எழுத்துகளின் அளவுகள், முறைகள் மற்றும் ஒரு பக்கத்தில் அவற்றின் அமைப்புகளைத் தேர்ந்து எடுத்தல்.
compound document : கூட்டு ஆவணம் : சொற்கள் மற்றும் வரைகலை ஆகிய இரண்டும் உள்ள கோப்பு. கூட்டு ஆவணங்களில் குரல் மற்றும் ஒளிக்காட்சியும் இடம் பெறும்.
compound statement : கூட்டு கூற்று : தனியாகப் பயன்படுத்தக்கூடிய இரண்டு அல்லது கூடுதல் ஆணைகளைக் கொண்டுள்ள தனி ஆணை.
compress : இறுக்கு; சுருக்கு : இடத்தை சேமிக்க தரவுகளைச் சுருக்குதல், தரவுகளைச் சுருக்க, செயல்பாட்டு ஆனையின் பயனீட்டுக் கோப்புப் பெயருடன் A-Z பின்னிணைப்பு சேர்க்கப்படுகிறது. Uncompress என்ற பயன்பாடு கோப்புகளை விரிவாக்கி பழையபடியே தரும்.
compressed disk : இறுக்கிய வட்டு; இறுகு வட்டு : ஒரு நிலைவட்டு அல்லது நெகிழ்வட்டில் இயல்பாகக் கொள்ளும் அளவுக்கும் அதிகமாகத் தரவுவைப் பதிவதற்கென மென்பொருள் பயன்கூறுகள் உள்ளன. (எ-டு) ஸ்டேக்கர், டபுள்ஸ் பேஸ் போன்றவை. இவை வட்டில் உள்ள தரவுவை இறுக்கிச் சுருக்கிப் பதிவதன் மூலம் அதிகமான அளவு தரவுவைப் பதிய வழியமைத்துக் கொடுக்கின்றன.
compressed drive : இறுகு வட்டகம்; இறுகு இயக்ககம்.
compressed file : இறுக்கப்பட்ட கோப்பு : வழக்கமானதைவிட குறைவான சேமிப்பு இடத்தை எடுத்துக் கொள்ளும் வகையில் சேமிக்கப்படும் கோப்பு.
Compressed SLIP : இறுகு ஸ்லிப் : ஸ்லிப் என்பது ஒர் இணைய நெறிமுறை (Internet Protocol). இதன் ஒரு பதிப்பு இறுகு ஸ்லிப் எனப்படுகிறது. இணைய முகவரித் தகவலை இறுக்கிச் சுருக்கிப் பயன்படுத்துகிறது. இதன் காரணமாய் சாதாரண ஸ்லிப் நெறிமுறையை விட இது வேகமாகச் செயல்படுகிறது.
compression : இறுக்குதல்; இறுக்கம்.
compression algorithm : இறுக்கப் படி முறை.
compression ratio : இறுக்கு வீதம் : இறுக்கப்பட்ட தரவுகளை அளப்பது. சான்றாக, அதன் மூல அளவின் கால் பங்காக இறுக்கினால் அதை 4 : 1, 25%, 75% என்று குறிப்பிடலாம்.
compression technique : இறுக்கிச் சுருக்கும் நுட்பம்.
compressor : இறுக்கி; செறிவி; சுருக்கி : மிகவும் வலுவானதும் மிகவும் பலவீனமானதுமான அனுப்பும் சமிக்கைகளின் எல்லையைச் சுருக்கும் சாதனம். தரவுகளைச் சுருக்கும் நிரல் அல்லது நடைமுறை ஒழுங்கு.
CompuServe : கம்ப்யூசெர்வ் : தனிநபர்கள் மற்றும் வணிகத் துறையினர் பயன்படுத்தும் பெரிய தகவல் சேவை கட்டமைப்பு, புதிய செய்திக் கட்டுரைகள், பங்குச் சந்தை அறிக்கைகள், மின் அஞ்சல், கல்வி நிரல்கள், நிரலாக்க உதவிச் சாதனங்கள் போன்றவற்றைக் கொண்டுள்ளது. பொது தொலைபேசி அமைப்பு மூலம் சொந்தக் கணினி வைத்திருப்போர் 'கம்ப்யூசெர்வ்'யுடன் தொடர்பு கொள்ளலாம்.
computability : கணக்கிடும் தன்மை : கணக்கு முறையில் சிக்கல்களைத் தீர்க்கும் பொருள்.
computation : கணக்கிடல் : கணக்கிடுவதன் விளைவு.
computational complexity : கணக்கிடல் உட்சிக்கல் நிலை.
computational linguistics : கணினி மொழியியல்.
computational stylistics : கணினி நடையியல்.
compute : கணக்கிடு; கணி.
compute bound : கணக்கிடும் வரையறை : மையச் செயலகத்தின் வேகத்தினால் கட்டுப்படுத்தப்பட்ட கணினி அமைப்பின் ஒரு நிரலாகக் குறிப்பிடுவது. கட்டுப்படுத்தும் செயல்முறை அல்லது செயலக வரையறை என்பதைப் போன்றது. உள்ளீடு : வெளியீடு வரையறை என்பதற்கு மாறானது.
computer : கணினி; கணிப் பொறி : தரவுகளை ஏற்றுக் கொண்டு அத்தரவுகளின்மீது குறிப்பிட்ட செயல்முறை (கணித அல்லது தருக்க முறை) களை நிகழ்த்தி அச்செயல்முறை களின் முடிவைத் தருவதன் மூலம் சிக்கல்களைத் தீர்க்கும் திறனுடைய சாதனம்.
computer abuse : கணினி கெடு வழக்கு.
Computer Aided Design (CAD) : கணினி உதவிடும் வடிவமைப்பு : காட்சி முறையும் ஒளிப்பேனா அல்லது பலகையின் மூலம் ஒரு கணினிக்கும், ஒரு வடிவமைப் பவருக்கும் இடையில் ஏற்படும் நேரடியான, தரவு தொடர்பினைக் கொண்ட கணினித் தொழில்நுட்பம். கட்டட வடிவமைப்பு, எந்திரங்கள் மற்றும் பொறியியல் கருவிகள் உற் பத்திப் பொருள்கள் வடிவமைப் புக்கு பெரிதும் உதவுகிறது.
Computer-Aided Design and Drafting (CADD) : கணினி உதவிடும் வடிவமைப்பு மற்றும் படம் வரைதல் : ஓவியங்களை உருவாக்குதல், படம் வரைதல், விருப்பங்களை வரிசைப்படுத்துதல் போன்ற பணிகளுக்கு பயன்படும் கணினித் தொழில்நுட்பம்.
Computer Aided Designs Computer aided manufacturing (CAD/CAM) : கணினி ரேம்; கணினி உதவிடும் வடிவமைப்பு | கணினி உதவிடும் உற்பத்தி முறை : வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி முறை செயல்பாடுகளைத் தானியங்கி முறையில் செய்யும் முயற்சி. வேகமாக வளரும் கணினி வரைபட முறை. தற்போது கையெழுத்துக் கலை வரைபட முறையையே முக்கிய ஆதாரமாக கொண்டுள்ளது. என்றாலும் ராஸ்டர் வரைபட முறையை உள்ளடக்கிய பகுதிகள், கட்டுமானம் மற்றும் ஒருங்கிணைந்த மின்சுற்றுகள் போன்ற பரவலான பயன்பாடுகளைச் உருவாக்க கிளை விட்டுள்ளது.
Computer-aided engineering : கணினி - உதவிடும் பொறியியல் : கணினி உதவிடும் வடிவமைப்பு முறைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் உற்பத்தி வடிவமைப்புகளின் மாதிரிகளை உருவாக்க, ஆராய, மதிப்பீடு செய்ய கணினிகளைப் பயன்படுத்துதல்.
Computer Aided Factory Management : (CAFM) : சிஏஎஃப்எம்; கணினி உதவிடும் தொழிற்சாலை மேலாண்மை : உற்பத்தி முறைகளையும், உற்பத்தித் தொழிற்சாலையின் இயக்கத்தையும் தானியங்கியாக செய்வதற்கு கணினிகளைப் பயன்படுத்துதல். Factory Automation என்றும் அழைக்கப்படுகிறது. உதிரி பாகங்களைக் கணக்கெடுத்தல். வழங்கு மையங்களின் தேவைக்கேற்ப புதிய பொருள்களுக்கு ஆணையிடுதல் போன்றவற்றில் துல்லியமான கணக்கு வைத்திருக்க, கணினி மூலம் செயல்படும், உற்பத்தி மேலாண்மை அமைப்பு.
Computer Aided Manufacturing (CAM) : கணினி உதவிடும் உற்பத்தி முறை (கம்) : உற்பத்தித் துறையைச் சேர்ந்த மேலாண்மை, கட்டுப்பாடு, செயல்முறை ஆகியவற்றுக்கு கணினித் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துதல்.
Computer Aided Materials Delivery : கணினி உதவிடும் பொருள் விநியோகம் : ' கணினி இயக்கத்தில் நகர்த்திப் பட்டைகளையும், எந்திரன் (எந்திர மனித) வண்டிகளையும் பயன்படுத்தித் தொழிற்சாலையிலிருந்து பொருள்களையும் உதிரி பாகங்களையும் நகர்த்துதல். இதன் மூலம் உற்பத்தித் திறன் அதிகரித்து நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்திறன் கூடுகிறது.
Computer Aided Materials Selection : கணினி உதவிடும் பொருள் தேர்வு : ஒரு புதிய பொருள் அல்லது உதிரிபாகத்தை உருவாக்க எந்தெந்த பொருள்களைப் பயன்படுத்தலாம் என்பதை முடிவுசெய்ய கணினியைப் பயன்படுத்துதல்.
Computer-Aided Planning (CAF) : கணினி-உதவிடும் திட்டமிடல் : திட்டமிடல் செயல்முறைக்கு உதவ கணினி மென்பொருள்களை கருவிகளாகப் பயன்படுத்துதல்.
Computer - Aided Software Engineering (CASE) : கணினி உதவிடும் மென்பொருள் பொறியியல் : மென்பொருள் உருவாக்கம் அல்லது நிரலாக்கம் உள்ளிட்ட தரவு அமைப்பு வளர்ச்சியில் பல்வேறு நிலைகளைத் தானியங்கியாகச் செய்ய மென்பொருள் தொகுப்பைப் பயன்படுத்துவது.
computer, all purpose : அனைத்துப் பயன் கணினி.
computer, anolog : ஒத்திசைக் கணினி, தொடர்முறை கணினி.
computer anxiety : கணினி பதட்டம் : கணினிகள் பற்றிய அச்சம்.
computer application : கணினிப் பயன்பாடு : இறுதி பயனாளர் ஒரு குறிப்பிட்ட வேலைக்கோ அல்லது ஒன்றைச் சாதிக்கவோ, ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைத் தீர்க்கவோ கணினியைப் பயன்படுத்துவது. சான்றாக, பொதுவான வணிகக் கணினி பயன்பாடுகளில் கொள்முதல், கோரிக்கை விலைப்பட்டி, கணக்கெடுப்பு, சம்பளப்பட்டி போன்றவை அடங்கும்.
computer architecture : கணினிக் கட்டுமானம் : கணினி அமைப்பின் வன்பொருளின் பருப்பொருள் அமைப்பையும், மற்ற வன்பொருள்களுடன் அவற்றுக்குள்ள உறவையும் பற்றி ஆராயும் கணினி பற்றிய ஆய்வு.
computer art : கணினிக் கலை : ஓவியர்களுக்கான கணினி கருவியைப் பயன்படுத்தி ஓவியர்கள் உருவாக்கிய வடிவம். வண்ணம் பூசும் தூரிகை, கரிபென்சில் அல்லது மனதின் ஒரு விரிவாக்கம் என்பதாக கணினியைக் கருதலாம். ஓவியர் அழகான உருவங்களைக் கனவு கண்டு கணினியைப் பயன்படுத்தி அவற்றை உயிரோட்டமுள்ளனவாகக் கொண்டு வரலாம். காட்சி வரை பட முறைகளிலும், அச்சுப்பொறிகள், இலக்கமுறை வரைவு பொறிகள், படியெடுக்கும் சாதனங்கள் போன்றவற்றால் கணினிக் கலைப் பொருட்களை உருவாக்கலாம்.
computer artist : கணினி ஓவியர் : கலைப் படைப்புகளை உருவாக்கக் கணினிகளைப் பயன்படுத்துபவர்.
computer assisted diagnosis : கணினி உதவிடும் நோயறிமுறை : வேகமாகவும், துல்லியமாகவும் நோயறிவதற்கும், மருத்துவர் நேரத்தைச் மிச்சப்படுத்தவும் கணினியை ஒரு கருவியாகப் பயன்படுத்துதல். மருத்துவத் தரவுகளைப் படித்து வழக்கமாக உள்ளதிலிருந்து மாறுபாடுகளை மதிப்பீடு செய்து நோய் என்ன வென்று அறிந்து கொள்ள கணினியைப் பயன்படுத்துதல்.
Computer Assisted Instruction (CAI) : கணினி உதவிடும் கல்வி : கல்வி கற்கக் கணியைப் பயன்படுத்துதல் படிநிலை முறையில் தொகுக்கப்பட்ட பாடங்களை மாணவர்கள் கணினி வழியாகப் பயிலலாம். மாணவரின் தகுதி, தேவை, திறனுக்கேற்ப பாட வரிசை மற்றும் உள்ளடக்கம் அமையும்.
computer-assisted learning : கணினிவழி கற்றல் : கணினிகளையும் அவற்றின் பல்லூடகத் திறனையும் பாடங்களைக் கற்பிக்கப் பயன்படுத்திக் கொள்ளுதல்.
Computer Assisted Manufacturing (CAM) : கணினி உதவி உற்பத்தி.
Computer Augmented Learning (CAL) : கணினி மேம்படுத்தும் கல்வி (கால்) : கற்பித்தலுக்கும், சிக்கல் தீர்ப்பதற்கும் கணினி அமைப்பைப் பயன்படுத்துதல் வழக்கமான கல்விமுறையை மேம்படுத்தவோ, துணை புரியவோ செய்தல். Computer Assisted Instruction என்பதும் இதுவும் ஒன்றல்ல.
computer awareness : கணினி விழிப்புணர்வு : கணினி என்றால் என்ன என்றும், அது எவ்வாறு செயல்படுகிறது என்றும் அறிந்து கொள்வதைவிட சமுதாயத்திற்கு பங்கும் பயனும் பற்றி புரிந்து கொள்வதையே பொதுவாக இவ்வாறு சொல்வர்.
Computer Based Consultant (CBC) : கணினி சார்ந்த ஆலோசகர் : 1970 தொடக்கத்தில் வடிவமைக்கப்பட்ட, மின்னியந்திரக் கருவியினைப் பழுதுபார்க்க உதவுவதற்காக உருவாக்கப்பட்ட அறிவு சார்ந்த அமைப்பு.
computer based information system : கணினி சார்ந்த தகவல் அமைப்பு : தனது தகவல் செயலாக்க நடவடிக்கைகளுக்கு கணினியின் வன்பொருள் மற்றும் மென்பொருளைப் பயன்படுத்தும் தகவல் அமைப்பு.
Computer Based Learning (CBL) : கணினி அடிப்படையிலான கல்வி (சிபிஎல்) : கணினி வழிக் கற்றலின் அனைத்து வடிவங்களையும் குறிக்கின்றது.
computer binder : கணினி ஒட்டி : அச்சுப்பொறிகள் உருவாக்குகின்ற அச்சு வெளியீடுகளைப் பாதுகாக்கவும், வைத்துக் கொள்ளவும் உருவாக்கப்பட்டுள்ள ஒட்டி.
computer, buffered : இடைத் தடுப்புக் கணினி.
computer bulletin board : கணினி அறிக்கைப் பலகை : ஒரு செய்தித் தாளின் விளம்பரப் பிரிவின் மின்னணுப் பதிப்பு போன்ற ஒரு கணினி அறிக்கைப் பலகை.
computer bureau : கணினி அலுவலகம் : பல பயனாளர்களுக்கு தன்னுடைய கணினியின் நேரத்தை விற்கும் நிறுவனம்.
computer camp : கணினி முகாம் : கோடை வாரங்களில் நடத்தப்படும் முகாம். இதில் பங்கு கொள்பவர்கள் நீச்சலடிப்பது, காரோட்டுவதுடன் நுண்கணினிகளைப் பயன்படுத்தவும் கற்றுக் கொள்வார்கள்.
computer center : கணினி மையம் : கணினி, அதன் துணைப் பொருள்கள் மூலமாகவும், அதன் பணியாளர் அளிக் கும் சேவைகள் மூலமாகவும் பல தரபபட பயனாளர்களுக்கு கணினிச் சேவைகளை வழங்கும் நிலையம்.
computer center director : கணினி மைய இயக்குநர் : ஒரு கணினி மையத்தின் பணியாளர்களை இயக்கும் தனி நபர்.
computer chess : கணினிச் சதுரங்கம் : சதுரங்க விளையாட்டை ஆடும் கணினி நிரல். 1970 முதல் ஏசிஎம் அமெரிக்க கணினி சதுரங்க சாம்பியன்ஷிப்புகள் வளர்ச்சிக்கு ஒரு கிரியா ஊக்கியாகவும், செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்கு வரலாற்றுப் பதிவேடாகவும் விளங்குகிறது. கடந்த 20 ஆண்டுகளில், மன்ற ஆட்டக்காரர்கள் நிலையிலிருந்து உலகின் மிகச்சிறந்த வரிசையில் நிரல்கள் முன்னேறி உள்ளன.
computer circuitry : கணினிச் மின்சுற்றமைப்பு.
computer circuits : கணினிச் மின்சுற்றுகள் : வாயில் மின்சுற்றுகள், சேமிப்பு மின்சுற்றுகள், தொடக்கும் மின்சுற்றுகள், தலைகீழாக்கும் மின்சுற்றுகள், மின்சக்தி பெருக்கும் மின்சுற்றுகள் போன்றவை இலக்கமுறை கணினிகளில் பயன்படுத்தப்படும் மின் சுற்றுகள்.
computer classifications : கணினி வகைப்பாடுகள் : இலக்கமுறை, தொடர்முறை என்று இரண்டு பெரும் பிரிவுகளில் கணினிகள் அடங்குகின்றன. இலக்கமுறை மற்றும் தொடர் முறைக் கணினிகளை ஒன்றாக இணைத்து கலப்பினம் என்று சொல்லப்படும் மூன்றாவது வகையும் உருவாக்கப்படுகிறது. மிகப்பெரிய மீத்திறன் கணினிகள் முதல் மிகச்சிறிய நுண்கணினிகள் வரை கணினிகளின் அளவு, விலை, திறன் மாறுபடுகிறது.
computer code : கணினிக் குறி முறை : ஒரு குறிப்பிட்ட கணினிக்கான எந்திரக் குறி முறை.
computer conferencing : கணினிக் கலந்துரையாடல் : ஒரு கட்டமைப்பில் பங்கு கொண்டுள்ள பலவற்றுக்கிடையேயான தகவல் தொடர்பு. மனிதர்களின் உண்மையான சந்திப்புக்கும், தொலைபேசி மாநாட்டமைப்புக்கும் ஒரு மாற்று ஏற்பாடாக தொலைத் தகவல் தொடர்புகள் வழியாக பலதரப்பட்டவர்கள் தங்களுக்குள் செய்திகளையும், தகவலையும் பரிமாறிக் கொள்வது.
computer control : கணினிக் கட்டுப்பாடு. computer control console : கணினிக் கட்டுப்பாட்டுப் பணியகம்.
computer crime : கணினிக் குற்றம் : கணினி அமைப்பை தீயநோக்கங்களுக்குப் பயன்படுத்தி அனுமதியற்ற செயல்களைச் செய்ய கணினியைப் பயன்படுத்துதல். சிறிய ஏமாற்றுத் திட்டங்களிலிருந்து வன்முறைக் குற்றங்கள்வரை கணினிக் குற்றங்களின் தன்மை இருக்கும். சட்டமுறைகள் இன்னும் சரிவர வரையறுக்கப் படவில்லை. இந்தியா உட்பட சில நாடுகளில் மட்டுமே இதற்கான சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
computer design : கணினி வடிவமைப்பு : ஒரு கணினி பற்றிய கருத்து, திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு கணினி வழி வடிவமைப்பையும் குறிக்கும்.
computer designer : கணினி வடிவமைப்பாளர் : ஒரு கணினியின் மின்னணு அமைப்பினை வடிவமைப்பவர். கணினி மூலம் வடிவமைப்பைவரையும் குறிக்கும்.
computer, digital : இலக்கமுறைக் கணினி.
computer disease : கணினி நோய் : கணினிகளின் நினைவகத்தையோ, செயல்பாட்டையோ பழுதாக்கி எல்லா நிரல்களும் வீணாகுமாறு செய்வது.
computer drawing : கணினி ஓவியம் : கணினி வெளியீட்டுச் சாதனம் உருவாக்கிய ஒரு குறிப்பிட்ட உருவம். பொதுவாக வரைகலை அச்சுப்பொறி அல்லது வரைவு பொறி (பிளாட்டர்) இதை வரையும்.
computer enclosure : கணினி நிலைப்பெட்டி : கணினியின் மின்சுற்று அட்டைகளையும், மின்சக்தி வழங்கலையும் பாதுகாக்க அமைக்கப்படும் பெட்டி அல்லது கொள்கலன்.
computer engineering : கணினி பொறியியல் : கணினி வன்பொருள் /மென்பொருள் அமைப்புகளின் வடிவமைப்பினை உள்ளடக்கிய அறிவுப்புலம். பல கல்லூரிகள் அல்லது பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பாக நடத்தப்படுகிறது.
computer errors : கணினிப் பிழைகள்.
computerese : கணினிய : கணினிகள் மற்றும் தகவல் சார்ந்த அமைப்புகளுடன் பணியாற்றும் மனிதர்களின் குழூஉச் சொற்கள் மற்றும் பிற சிறப்புச் சொற்கள்.
computer ethics : கணினிப் பண்பாடு; கணினி ஒழுக்கம் : கணினி வல்லுநர்கள் மற்றும் பயனாளர் களின் சட்ட, தொழில் சார்ந்த, சமூக, ஒழுக்கமுறைப் பொறுப்புகளைக் கட்டுப்படுத்தும் கொள்கைகள்.
computer family : கணினிக் குடும்பம் : ஒரே வகையான நுண்செயலிகளையோ, ஒரே வடிவமைப்பிலமைந்த நுண் செயலிகளையோ கொண்ட கணினிக் குழுக்களைக் குறிக்கும் சொல். (எ-டு) ஆப்பிள் குடும்பக் கணினிகள் மெக்கின்டோஷ் என்றழைக்கப்படுகின்றன. சுருக்கமாக மேக் எனப்படும் இவை மோட்டோரோலா 68000, 68020, 68030, 68040 ஆகிய நுண்செயலிகளில் செயல்படுகின்றன. சில வேளைகளில் அவை வேறு செயலிகளைப் பயன்படுத்திக் கொள்வதும் உண்டு. (எ-டு) மேக் கணினிக் குடும்பத்தில் இப்போதெல்லாம் பவர்பீசி (PowerPC) நுண்செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை பவர்மேக் என்றழைக்கப்படுகின்றன.
computer, first generation : முதல் தலைமுறைக் கணினி.
computer flicks : கணினிப் படங்கள் : கணினி தயாரிக்கும் திரைப்படங்கள்.
computer floor : கணினி தரை : ஒரு பொய்த்தரை உண்மையான தரை அளவிலிருந்து 25-30 செமீ-க்கும் மேலாக இருக்கும். கணினி தரைதான் கணினி இருப்பிடத்தில் வசதியாகக் வடங்கள் நீக்கவும், தடையில்லாமல் இயங்கும் சூழ்நிலையையும் உருவாக்க உதவும்.
computer fraud : கணினி ஏய்ப்பு; கணினி மோசடி.
computer game : கணினி விளையாட்டு : விளையாடுபவரின் உடற் செய்கைகளை உள்ளீட்டுத் தரவுவாகக் கொண்டுள்ள உரையாடல் வகை மென்பொருள். இதன் வெளியீடு உரையாடல் முறையிலான வரைபட முறை காட்சியாக இருக்கும்.
computer, general purpose : பொதுப் பயன் கணினி.
computer generations : கணினி தலைமுறைகள் : ஐந்து வேறுபட்ட கால இடைவெளிகளில் மின்னணுக் கணினிகள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு நடைமுறையும் வன்பொருள்/மென்பொருள் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன. வெவ்வேறு தொழில் நுட்பத்தைச் சார்ந்து உருவானவை. கணிப்பின் வரலாற்று முன்னேற்றத்தின் முக்கிய நிலைகள்.
computer graphicist : கணினி வரைகலைஞர் : கணினி வரை கலை அமைப்புகளைப் பயன்படுத்தும் வல்லுநர். படங்கள் அல்லது ஓவியங்கள் தோன்றுவதைக் குறிப்பிடும் பொதுச்சொல். எழுத்துகள் மற்றும் எண்களைப் பயன்படுத்துவதிலிருந்து வேறுபட்டதே வரைகலை.
computer graphics : கணினி வரைகலை : தொடக்க காலத்தில் கணினித் திரைகளில் வெறும் எழுத்துகளையும் எண்களையுமே பார்க்க முடிந்தது. இப்போதெல்லாம் திரைகளில் படங்கள் பவனி வருகின்றன. இதற்கு கணினி வரைகலைத் தொழில்நுட்பமே காரணம். படங்களை உருவாக்குவது, திரையில் காட்டுவது, நிலையாகப் பதிந்து வைப்பது ஆகிய பணிகளுக்கான பல்வேறு வழி முறைகளை கணினி வரைகலை நுட்பம் உள்ளடக்கியுள்ளது.
Computer Graphics Interface : கணினி வரைகலை இடைமுகம் : வரைகலைச் சாதனங்களான அச்சுப்பொறிகள், வரைவு பொறிகள் ஆகியவற்றுக்குரிய மென்பொருள் தர வரையறைகள் ஏற்கெனவே இருந்த ஜிகேஎஸ் (GKS -Graphics Kernel System) என்ற வரையறையின் இணைத் தொகுதியாக உருவாக்கப்பட்டது. பயன்பாடுகளை உருவாக்கும் நிரலர்களுக்கு, வரைகலைப் படங்களை உருவாக்குதல், கையாளுதல், காட்சிப்படுத்தல், அச்சிடல் ஆகியவற்றுக்கான வரையறுக்கப்பட்ட வழிமுறைகளை வழங்குகின்றன.
Computer Graphics Metafile : கணினி வரைகலை மீகோப்பு : பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஜிகேஎஸ் (GKS-Graphical Kernel System) தர வரையறைகளுடன் தொடர்புடைய தரக் கட்டுப்பாடு. ஒரு வரைகலைப் படத்தை ஆணைகளின் தொகுதியாக உருவகிப்பது. அந்த ஆனைகளைக் கொண்டு அப்படத்தை மீட்டுருவாக்கம் செய்ய முடியும். பயன்பாடுகளை உருவாக்கும் நிரலர்களுக்கு இதற்கான வரையறுத்த வழிமுறைகளை வழங்குகிறது. ஒரு வரைகலை மீகோப்பை வட்டில் சேமிக்க முடியும். ஒரு வெளியீட்டுச் சாதனத்துக்கு அனுப்பி வைக்க முடியும்.
computer independent language : கணினி சாராத மொழி : பேசிக், கோபால், ஃபோர்ட்ரான், பாஸ்கல், பிஎல்/1 போன்ற மொழிகளைப் பொருத்தமான மொழி மாற்றிகளுடன் எந்தக் கணினியிலும் பயன்படுத்தலாம். அத்தகைய பயன்பாட்டுக்கு வடிவமைக்கப்பட்ட உயர்நிலை மொழிகள். computer industry : கணினித் தொழில்துறை : கணினி வன்பொருள், மென்பொருள் மற்றும் கணினி தொடர்பான பணிகளை அளிக்கும் நிறுவனங்கள், வணிகர்களைக் கொண்ட தொழில் துறை.
Computer Information System (CIS) : கணினி தரவு அமைப்பு (சிஐஎஸ்) : வன்பொருள், மென்பொருள், தரவு, மக்கள் மற்றும் ஆதரவு அமைப்புகளை ஒருங்கிணைத்து செயலாக்கம், சேமிப்பு, உள்ளீடு மற்றும் வெளியீடு ஆகியவைகளை ஒருங்கிணைந்த தொடர் பணிகளைச் செய்தல்.
Computer Input Microfilm (CIM) : (சிஐஎம்) கணினி உள்ளீடு நுண்படலம் : நுண்படலம் அல்லது நுண் அட்டையின் உள்ளடக்கங்களை நேரடியாகக் கணினிக்குள் சேர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும் உள் வீட்டைக் கொண்ட தொழில் நுட்பம்.
computer instruction : கணினி ஆணை; கணினி வழி பயிற்று வித்தல்; கணினி அறிவுறுத்தம் : 1. ஒரு கணினி புரிந்துகொண்டு அதன்படி செயல்படுதற்குரிய ஓர் ஆணை, காண்க machine instruction 2. கற்பித்தலுக்குக் கணினியைப் பயன்படுத்துவது.
Computer-Integrated Manufacturing (CIM) : கணினி - ஒருங்கிணைப்பு உற்பத்தி முறை : தொழிற்சாலை தானியங்கி மயமாதலில் கணினியைப் பயன்படுத்துவதன் இலக்குகள் எளிமைப்படுத்துதல், உற்பத்தி செயல்முறைகளையும் பிற உற்பத்தித் தன்மைகளையும் ஒருங்குபடுத்துதலாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒட்டு மொத்தக் கோட்பாடு. இதில் கேட்/காம் அமைப்பு அனைத்து உற்பத்தி செயல்முறைகளையும் கட்டுப்படுத்தி ஒருங்கினைக்கிறது. உற்பத்தி வடிவமைப்பாளர்களும், பொறியாளர்களும் பயன்படுத்தும் அதே தரவு தளத்தையே கணக்காய்வாளர்களும், மேற்பார்வையாளர்களும், பட்டியலிடுபவர்களும், உற்பத்தி திட்டமிடுபவர்களும் பயன்படுத்துவார்கள்.
Computer Interface Unit (CIU) : (சிஐயு) கணினி இடைமுகச் சாதனம் : கணினியுடன் வெளிப்புறச் சாதனங்களை இனைப்பதற்குப் பயன்படும் சாதனம்.
computerise : கணினி மயமாக்கு.
computerization : கணினி மயமாதல் : 1. இதற்கு முன்பு வேறு முறைகளில் செய்த செயலை கணினியைப் பயன்படுத்திச் செய்தல். 2. பரவலாக ஏற்றுக் கொண்டு கணினியைப் பயன்படுத்தி சமுதாயத்தின் உண்மையான தோற்றத்தை மாற்றுதல்.
Computerized Axial Tomography : CAT : கணினி மய ஆக்சியல் டோமோக்ராபி : கணினி கட்டுப்பாட்டில் இயங்கும் ஊடுகதிர் (எக்ஸ்ரே) தொழில்நுட்பம். இது ஒரு இடத்தில் படத்தை குறிப்பிட்ட உருவத்தின் வழியாக ஆழத்தில் காட்டும். அப்படத்தின் விவரங்களைக் கொண்டு வரவும், மாறும் திசைகளில் உருவத்தின் மூலம் செல்லும் ஊடுகதிர்களைப் பதிவுசெய்தல் மற்றும் உருவத்தின் அமைப்பைப் போன்ற ஒரு தோற்றத்தினை உருவாக்குதல் ஆகியவற்றைச் செய்வதற்கு கணினி பயன்படுகிறது.
computerized database : கணினிமய தரவுத் தளம் : ஒரு நிறுவனத்துக்குரிய அனைத்துத் தரவுகளும் குறிப்பிட்ட வடிவமைப்பில் கணினியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுத் தொகுதி. துல்லியம், ஒத்தமைவு, நம்பகத் தன்மை மற்றும் பாதுகாப்பு அனைத்தும் கொண்டிருக்கும்.
computerized games : கணினிமய விளையாட்டுகள் : பலவகையான புகழ்பெற்ற பொழுதுபோக்கு விளையாட்டுகளை விளையாட கணினிகளைப் பயன்படுத்துவது.
computerized game playing : கணினி மய ஆட்டம் ஆடுதல் : கணினிகளில் பலதரப்பட்ட விளையாட்டுகளை ஆடுவதற்கு நிரலமைத்து, பொழுது போக்கிற்காகப் பயன்படுத்துதல். டிக்-டாக்டோ, பேக்மேன், பிரேக் அவுட், ஸ்டார் ரைடர்ஸ், ஸ்பேஸ் வார், பிளாக் ஜாக், ஹேங்மேன், செஸ், செசர்ஸ் போன்ற பல விளையாட்டுகளை ஆட கணினி பயன்படுத்தப்படுகிறது.
computerized jargon : கணினி குழூஉச் சொல் மொழி; கணினி குழூஉச் சொல் : கணினி அறிவியலுடன் தொடர்புள்ள தொழில்நுட்பச் சொற்கள்.
computerized mail : கணினி மய அஞ்சல் : கணினி கருவி மூலமாக வணிக அமைப்புகளுக்கும், வீடுகளுக்கும் மின்னணு வடிவத்தில் அஞ்சல் அனுப்பும் தொழில்நுட்பம்.
computerized numerical control : கணினி மய எண் கட்டுப்பாடு. computer kit : கணினி கருவிப்பெட்டி : கருவிப்பெட்டி வடிவில் நுண்கணினி, கணினி கருவிப் பெட்டியை வாங்குபவர்கள், மாதிரி விமானத்தையோ அல்லது ஸ்டீரியோ ஒலி அமைப்பையோ உருவாக்குவது போல், நுண்கணியை உருவாக்க முடியும், பள்ளிகளில் கணினி வடிவமைப்பு சொல்லித் தருவதற்கும், கணினி பொழுது போக்கினை பழக்கமாகக் கொண்டவர்களுக்கும் கணினி கருவிப்பெட்டி புகழ் பெற்று விளங்குகிறது.
computer language : கணினி மொழி : ஒரு கணினியில் செயல் படுத்துவதற்கான ஆணைகளைக் கொண்டுள்ள ஒரு செயற்கை மொழி. இருமக் குறிமுறை மொழி தொடங்கி உயர்நிலை மொழிகள்வரை மிகப்பரந்த தொகுதியை இச்சொல் குறிக்கிறது.
computer leasing company : கணினியை வாடகைக்குத் தரும் நிறுவனம் : கணினி உற்பத்தியாளரிடமிருந்து வாங்கிய கணினிக் கருவியை வாடகைக்கு விடுவதில் சிறப்பாக ஈடுபட்டுள்ள நிறுவனம்.
computer letter : கணினி எழுத்து : ஒரு சொல் செயலி பொருள். உருவாக்கும் தனிப்பட்ட எழுத்து வடிவம்.
computer literacy : கணினி எழுத்தறிவு : சிக்கல்களைத் தீர்க்க கணினிகளைப் பயன்படுத்துவது என்ற பொது அறிவும், வன்பொருள் மற்றும் மென்பொருளின் செயல்பாடு பற்றிய பொதுவிழிப்புணர்வும், கணினிகளால் ஏற்படும் சமுதாய மாற்றங்கள் பற்றிப் புரிந்து கொள்ளுதலும் சேர்ந்தது. இவ்வறிவு கணினி சார்ந்த சமுதாயத்தில் வாழ்வது பற்றிய புரிந்து கொள்ளுதல்களையும், அறிவுக் கருவிகளையும் உருவாக்கி உள்ளது. தொழில்நுட்ப அறிவு கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. கணினி சூழ்நிலையில் ஒரு பயனாளராக இயல்பாக செயல்படமுடிவதே கணினி எழுத்தறிவு பெற்றிருப்பதாகும்.
Computer Managed instruction (CML) : (சிஎம்எல்) பதிவேடு காக்கும் மேலாளராகவும், கற்றுத் தருவதை வரையறுப்பவராகவும் கணினியைப் பயன்படுத்துவது. கல்விக்காக கணினிகளைப் பயன்படுத்தல்.
computer museum : கணினி கண்காட்சி : அமெரிக்காவில் மசாசூசெட்சின் போஸ்டனில் உள்ள கணினி வரலாறு உரைக்கும் ஆவணக் காப்பகம். இதில் பல தொடக்ககால கணினி அமைப்புகளும், கணினி முன்னோடிகளின் ஒலிநாடா குறிப்புக் கொண்ட தொகுப்பும் உள்ளன.
computer music : கணினி இசை : இசை அமைத்தல், அல்லது ஒலி ஏற்படுத்துதலில் ஏதாவது ஒரு நிலையில் கணினிக் கருவியைப் பயன்படுத்துதல்.
computer name : கணினிப் பெயர் : ஒரு கணினிப் பிணையத்தில் ஒரு குறிப்பிட்ட கணினியைத் தனித்து இனங்காட்டும் பெயர். ஒரு கணினிப் பெயர் வேறொரு கணினிக்கு இருக்க முடியாது. களப்பெயராகவும் இருக்கக்கூடாது. பயனாளர் பெயர் என்பதும் கணினிப் பெயர் என்பதும் வேறு வேறாகும். பிணையத்தில் ஒரு கணினியின் பெயரைக் கொண்டே அதன் வளங்களைப் பிற கணினிகள் பெற முடியும்.
computer network : கணினி பிணையம்; கணினி கட்டமைப்பு : ஒன்றோடொன்று இணைப்பு ஏற்படுத்திக் கொண்டுள்ள இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட கணினிகள், முனையங்கள் மற்றும் தரவு தொடர்பு வசதிகளைக் கொண்ட கணினி அமைப்பு.
computernik : கணினியார் : கணினிகளைப் பயன்படுத்துவதில் அதிக நேரத்தைச் செலவழிக்கும் ஒரு நபர்.
computer numeric control : கணினி எண்முறைக் கட்டுப்பாடு : ஒரு எந்திரத்தைக் கட்டுப்படுத்த கேட்/கேம் மூலம் உருவாக்கப்பட்ட எண் கட்டுப்பாட்டு ஆணைகளைச் சேமிக்க கணினியைப் பயன்படுத்தும் ஒரு எந்திரக் கருவி, கட்டுப்பாட்டுத் தொழில் நுட்பம்.
computer on a chip : ஒரு சிப்பு கணினி : ஒரு ஒருங்கிணைந்த மின்சுற்று சிப்புவின்மீது அமைக்கப்படும் முழு நுண் கணினி.
computer operations : கணினி செயல் முறைகள் : தரவுகளை அன்றாட முறையில் திரட்டுதல், உற்பத்தி செய்தல், விநியோகித்தல், பராமரித்தல் ஆகியவற்றைச் செய்யும் கணினியின் செயல்பாடுகள்.
computer operations manager : கணினி செயல்முறை மேலாளர் : ஒரு நிறுவனத்தில் கணினி செயல்பாடுகளை மேற்பார்வை செய்யும் நபர். பணியாளர்களை நியமித்தல் கணினி செய்ய வேண்டிய வேலைகளை முடிவு செய்தல் ஆகியவற்றைச் செய்யப் பொறுப்பேற்று இருப்பவர். computer operator : கணினி இயக்குநர்.
computer organisation : கணினி ஒருங்கிணைப்பு : பின்வரும் துறைகளைக் கையாளும் கணினி அறிவியல் பிரிவு. கணினி சி. பீ. யு ஒருங்கிணைப்பு ஆணைகள், முகவரியமைக்கும் முறைகள், சேமித்த நிரல் கோட்பாடு, நிரல் இயக்கம், உள்ளீடு/ வெளியீடு ஒருங்கிணைப்பு, கைகுலுக்குதல், நினைவகம், மைய நினைவகம், நுண்செயலி போன்றவற்றின் செயல் பாடுகள்.
Computer Output Microfilm (COM) : கணினி வெளியீடு நுண்படலம் : நுண்படலம் அல்லது நுண் அட்டைகளின் மீது கணினி வெளியீடுகளைப் பதிவு செய்யும் தொழில் நுட்பம். நேர்முக வெளியீடுகளான நுண்படலத்திலிருந்தும், ஆணைவழி வெளியீடுகளை காந்த நாடாவிலிருந்தும் இந்த நுட்பப்படி பதியலாம்.
computer, personal : சொந்தக் கணினி.
computerphile : கணினிப் பைத்தியம் : கணினியில் பணியாற்றுவதிலேயே எப்போதும் மூழ்கிப் போகின்ற நபர். இவர் கணினிகளைச் சேகரித்து வைப்பார். கணினிப் பணியே இவர் பொழுதுபோக்கு.
computer phobia : கணினி அச்சம் : கணினி பயன்பாடு, குறிப்பாக எந்திரன் மற்றும் தானியங்கிச் சாதனங்களின் பயன்பாடு குறித்து உளவியல் சார்ந்த அச்சம்.
computer power : கணினி சக்தி; கணினித் திறன் : பணி செய்வதில் கணினிக்கிருக்கும் திறன். பல வகையிலும் கணினியின் திறன் மதிப்பிடப்படுகிறது. ஒரு வினாடிக்கு எத்தனை மில்லியன் ஆணைகளை நிறைவேற்றும் என்று அதன் வேகம் மதிப்பிடப்படுவதுண்டு (MIPS - Million Instruction Per Second) அல்லது வினாடிக்கு எத்தனை மிதவைப் புள்ளிக் கணக்கீடுகளைச் செய்யவல்லது என்ற முறையில் அளப்பதுமுண்டு (MFLOPS - Million Floating Point Operations Per Second) கணினியின் திறனை வேறு வகையிலும் மதிப்பிடலாம். மதிப்பிடுபவரின் தேவைகளையும் நோக்கங்களையும் பொறுத்தது.
Computer Press Association : கணினிப் பத்திரிகையாளர் சங்கம் : கணினித் தொழில்நுட்பம் பற்றியும் கணினித் தொழில்துறை பற்றியும் எழுதுகின்ற பத்திரிகைகளில், வலை பரப் பாளர்கள் மற்றும் படைப்பாளிகள் இவர்கள் சேர்ந்த ஒரு வணிக அமைப்பு.
computer process : கணினிச் செயலாக்கம்; கணினி செயற்பாங்கு : கணினி நடைமுறை.
computer process control system : கணினி செயல்முறைக் கட்டுப்பாடு அமைப்பு : இலாப நோக்கில் பொருளை உற்பத்தி செய்ய மேற்கொள்ளப்படும் செயல்முறையையும் அதன் மாற்றங்களையும் கண்காணிக்கும் சென்சார்களுடன் இணைக்கப்பட்டுள்ள கணினிக் கட்டுப்பாட்டு அமைப்பு.
computer processing cycle : கணினி செயலாக்கச் சுழற்சி : 1. ஒரு சிக்கலைத் தீர்க்க கணினியைப் பயன்படுத்துவதில் உள்ள நிலைகள். பேசிக் அல்லது ஃபோர்ட்ரான் போன்ற மொழியில் நிரல் எழுதுவது. நிரலைக் கணினியில் உள்ளீடு செய்து மொழிபெயர்க்கச் செயலாக்குவது. 2. அடிப்படைச் செயலாக்கச் சுழற்சியில் உள்ளீடும் / வெயீயிடும்.
computer programme : கணினி நிரல் : ஒரு தரவு செயலாக்கப் பணிக்குத் தேவையான தொடர்ச் செயல்களை முறையாக, கணினிக்கு எடுத்துரைப்பது. ஒரு குறிப்பிட்ட செயல் முறை அல்லது பணியைச் செய்யுமாறு நிரல்களையும், சொற்றொடர்களையும் அமைத்தல்.
computer programmer : கணினி நிரலர் : ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்யுமாறு கணினிக்கு ஆணையிடும் நிரல்களை வடிவமைத்து எழுதி, சோதித்துத் தருவதை வேலையாகக் கொண்டுள்ளவர்.
computer readable : கணினி படித்தகு : கணினி படித்துப் பொருள் கொண்டு நிறைவேற்றும் வடிவில் அமைந்த ஆணை. இருவகையான தரவு கணினி படித்தகு என்று சொல்லப்படுகிறது. பட்டைக் கோடுகள், காந்த நாடா, காந்த கையெழுத்துகள் மற்றும் வருடிப் பார்த்து அறிந்து கொள்ளும் ஏனைய வடிவங்கள் இவையனைத்தும் கணினி படித்தகு தகவலாகும். கணினியின் நுண் செயலிக்குப் புரியும் வகையில் எந்திர மொழியில் இருக்கும் தரவு.
computer revolution : கணினிப் புரட்சி : தரவு தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுவரும் அதிவேக வளர்ச்சி காரணமாக சமூக, தொழில்நுட்பத் துறைகளில் கணினியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தனியாள் பயன்படுத்தும் சொந்தக் கணினிகளின் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. சமூக வாழ்வில் இவற்றின் தாக்கம் புரட்சிகரமானது என்று தான் கூறவேண்டும். கணினியின் வேகம், துல்லியம், சேமிப்புத்திறன் ஆகியவை தகவல் சேமிப்பு, செயலாக்கம் மற்றும் பரிமாற்றத்தில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.
computer science : கணினி அறிவியல் : கணினிகளை வடிவமைத்து பயன்படுத்துவது பற்றிய அனைத்து நுட்பங்களையும் உள்ளடக்கிய அறிவுப் புலம். பல கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பட்டப் படிப்பாக அளிக்கப்படுகிறது.
computer, scientific : அறிவியல் கணினி.
computer security : கணினிப் பாதுகாப்பு : அனுமதியில்லாமல் பயன்படுத்துவதையும், தவறாகப் பயன்படுத்துவதையும் தடுத்து கணினி மூலாதாரங்களைப் பாதுகாப்பது. தற்செயலான அல்லது வேண்டுமென்றே ஏற்படும் சேதம், மாற்றம், வெளியிடல் போன்றவற்றிலிருந்து தரவுகளைப் பாதுகாப்பது.
computer select : கணினித் தேர்வு : கணினி நூலகத்திலிருந்து சிடிரோம் சேவை. இது முழுச் செய்திக் கட்டுரைகளும், சுருக்கங்களும் 250-க்கும் மேற்பட்ட கணினி தொடர்பான பருவ இதழ்களிலிருந்து வழங்குகிறது.
computer services : கணினிச் சேவைககள் : தரவு செயலாக்கம், காலப்பங்கீடு, தொகுதி செயலாக்கம், மென்பொருள் உருவாக்கம் மற்றும் ஆலோசனைப் பணிகள்.
computer services company : கணினிச் சேவைகள் நிறுவனம் : பிற தனிநபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் கணினிச் சேவைகளை அளிக்கும் நிறுவனம்.
computer simulation : கணினி பாவிப்பு : உண்மையான அல்லது கற்பனையான அமைப்பைக் குறிப்பிடுதல்; கணினி நிரலில் உருவாக்கப்படுவது.
computer specialist : கணினி வல்லுநர் : ஒரு தனிப்பட்ட ஒப்பந்தக்காரராகவோ அல்லது ஆலோசகராகவோ கணினியைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு கணினி சேவைகளை அளிக்கும் ஒரு நிரலர் அல்லது அமைப்பை ஆராய்பவர் போன்ற ஒரு தனி நபர்.
computer, special purpose : சிறப்புப் பயன் கணினி. computer store : கணினி கடை : ஒரு முழு கணினி அமைப்பையோ அல்லது சில உதிரிப் பாகங்களையோ வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கக் கூடிய சில்லரைக்கடை. இந்தக் கடைகளில் மென்பொருள், புத்தகங்கள் மற்றும் இதழ்களும் கிடைக்கும். பெரிய கணினிக் கடையில் பலவகையான நுண்கணினி அமைப்புகள் கிடைக்கும்.
computer system : கணினி அமைப்பு; கணினி முறைமை : கணினி வன்பொருள், மென்பொருள் மற்றும் தரவுகளை பயனுள்ள தகவலாக செயலாக்கம் செய்யும் மனிதர்களை உள்ளடக்கிய அமைப்பு.
computer systems, audit of : கணினி முறைமைத் தணிக்கை.
computer telephone integration : கணினி-தொலைபேசி ஒருங்கிணைப்பு : தொலைபேசியில் வரும் அழைப்புகளை முறைப்படுத்துதல், மாற்று எண்ணுக்கு திசைதிருப்புதல், தானாகப் பதில் தருதல், ஒரு தரவு தளத்தில் உள்ள தரவுவைத் தேடி அறிவித்தல், தானாகவே இன்னொரு தொலைபேசி எண்ணை அழைத்து தரவுவைத் தெரிவித்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் ஆட்களின் தலையீடு எதுவுமின்றி செய்து முடிக்கக் கணினியையும் கணினி மென்பொருள்களையும் பயன்படுத்தும் தொழில்நுட்பம்.
computer terminal : கணினி முனையம் : கணினியுடன் தொலைத் தகவல் தொடர்பு இணைப்புகள் ஏற்படுத்தும் உள்ளீட்டு வெளியீட்டுச் சாதனம். அதனிடம் மையச் செயலகம் இருந்தால் அது ஒரு அறிவாளி முனையம் என்றும், இல்லையென்றால் முனையம் என்றும் அழைக்கப்படுகிறது.
computer terminal, remote : சேய்மை கணினி முனையம்; தொலை கணினி முனையம்.
Computer Tomographic (CT) : (சிடி) கணினி ஊடுகதிர் உள் தளப்படம்.
computer town : கணினி நகரம் : கணினி எழுத்தறிவையும், சிறிய கணினிகளைப் பொது மக்கள் அணுகுவதையும் ஊக்குவிக்கும் கலிபோர்னியா நிறுவனம்.
computer type setting : கணினி அச்சுக்கோப்பு : ஓர் அச்சுப் பணிக்கான விவரத்தை சில சிறப்பு மென்பொருள்களில் தட்டச்சுச் செய்து அச்சிட தயார் செய்தல். computer user : கணினி பயனாளர் : ஒரு கணினி அமைப்பையோ அல்லது அதன் வெளியீட்டையே பயன்படுத்தும் ஒரு நபர்.
computer users group : கணினி பயனாளர் குழு : ஒரு கணினி அல்லது ஒரு குறிப்பிட்ட கணினி உற்பத்தியாளரின் ஒரு வகைக் கணினிகளில் நிரல்களை உருவாக்கி தங்களது அறிவினை பங்கிட்டுக் கொள்ளும் உறுப்பினர்களைக் கொண்ட குழு பெரும்பாலான குழுக்கள் கூட்டங்களை நடத்தியும், வணிகக் கருவிகளைப் பரிமாற்றங்கள் செய்தும், நிரல்களைப் பங்கிட்டும், தகவலை பரிமாற செய்தி அறிக்கைகளை விநியோகித்தும் செயல்படுபவர்கள்.
computer utility : கணினி பயன் கூறு : கணினிக் குறுபயன் : கணினித் திறனைப் பயன்படுத்தும் சேவை. நேரப் பங்கீட்டு கணினி அமைப்பையே இது பொதுவாகக் குறிக்கும். பயனாளருக்கு மென்பொருள்களும், தரவுகளும் கிடைக்கும். மையச் செயலகத்தில் உள்ள ஒருவரது சொந்த நிரல்களையோ அல்லது வேறிடத்திலிருந்து பெற்று கணினியில் ஏற்றியோ பயன்படுத்தலாம். சேவையில் உள்ள சில தரவுகளையும் மென்பொருள்களையும் அனைவரும் பயன்படுத்தலாம்.
computer vendor : கணினி விற்பவர் : கணினி கருவிகளை உற்பத்தி செய்வது, விற்பது அல்லது சேவைகளை அளிப்பதில் ஈடுபட்டுள்ள நிறுவனம்.
computer virus : கணினி நச்சு நிரல் (வைரஸ்) : வேறொரு நிரல் அல்லது தரவுடன் தன்னை இணைத்துக்கொள்ளும் நிரல். ஒரு நச்சு நிரலின் (வைரஸ்) சாதாரண நோக்கம் கணினி அமைப்பைப் பிடித்துக் கொண்டு தரவு செயலாக்கத்தைத் தடுப்பதாகும். பிடித்த நிரல் இயக்கப்பட்டவுடன் முன்பு "துய்மை"யாக இருந்த மென்பொருளுடன் தன்னை இணைத்துக் கொள்ளும். இவ்வாறே பரவிக் கொண்டே செல்லும்.
computer vision : கணினிப் பார்வை : பார்த்தல், புரிந்து கொள்ளல் ஆகிய வசதிகளை கணினி பெற உதவும் அறிவியல்.
computer word : கணினிச் சொல் : ஒரு தனி முகவரி இடக்கூடிய சேமிப்பு இடத்தில் இடம் பெற்று, கணினியால் தனி சாதனமாகக் கருதப்படும் துண்மிகள், பைட்டுகளின் தொடர்.
computing : கணிப்பு; கணித்தல் : தரவுகளை செயலாக்கம் செய்ய கணினியைப் பயன்படுத்தும் செயல். பயனாளர் விரும்புவதை கணினியைச் செய்யுமாறு செய்கின்ற கலை அல்லது அறிவியல்.
computing devices : கணிக்கும் சாதனம்; கணிப்புக் கருவி.
COM recorder : காம் பதிவி : கணினி வெளியீட்டை ஒளிப்பட உணர்வு படலத்தில் நுண் வடிவில் பதிவுச் செய்யும் சாதனம்.
COMSAT : காம்சாட் : தரவு தொடர்பு செயற்கைக் கோள் என்று பொருள்படும் Communication Satellite என்பதன் குறும்பெயர்.
CON : கான் (கன்சோல்) : எம். எஸ் டாஸ் இயக்க முறைமையில் விசைப்பலகை மற்றும் கணினித் திரையைக் குறிக்கும் கருத்தியலான சாதனப் பெயர். உள்ளீடு மட்டும் செய்ய முடிகிற விசைப்பலகை மற்றும் வெளியீடு மட்டும் செய்ய முடிகிற காட்சித் திரை இரண்டும் சேர்ந்து முறையே முதன்மையான உள்ளீடு/வெளியீட்டு ஊடகமாய் எம்எஸ்-டாஸ் இயக்க முறைமையில் பயன்படுகின்றன்.
concatenate : சேர்த்தல் : இரண்டு அல்லது மேற்பட்ட எழுத்துச் சரங்களை ஒரே எழுத்துச் சரமாகச் சேர்த்தல் அல்லது காட்சித்திரையில் ஒரு வரியை அடுத்தவரியில் சேர்த்தல். Decatenate - க்கு மாறானது.
concatenated data set : சேர்த்த தரவு தொகுதி : தருக்க முறையில் தரவு தொகுதியைத் திரட்டுதல்.
concatenated key : சேர்க்கப்பட்ட திரவி : ஒரு பதிவேட்டை அடையாளம் காட்ட ஒன்றுக்கு மேற்பட்ட தரவுகளை ஒன்றாகச் சேர்த்த திறவுச் சொல்.
concatenated operator : சேர்ப்பு செயற்குறி : கணினி நிரலாக்க மொழிகளில் இரு விவரக்குறிப்புகள் இணைக்கப் பயன்படும் குறியீடு.
concatenation : ஒன்றிணைப்பு; இணைத்தல்; பிணைத்தல்.
concatenation concentrator : சேர்ப்புச் செயல் மையம் : ஒரு மிகுவேக சாதனத்தில் பல குறைவேக சாதனங்கள் பயன்படுத்த அனுமதிக்கும் சாதனம். குறைந்த வேகமுள்ள கணினிகளில் இருந்து வரும் தகவலை ஏற்றுக் கொண்டு அதிக வேகமுள்ள கணினிக்குத் தரும் ஒரு சிறப்பு நோக்கக் கணினி.
concentrator : செயல்மையம்; மையப்படுத்தி : ஒரு தனியான அதிவேக தகவல் தொடர்புக் கம்பியினைப் பயன்படுத்தி பல தகவல்களை மெதுவாகச் செலுத்தும் சாதனம். பல் பயன்கள் அமைப்பு என்றும் அழைக்கப்படுகிறது.
concept : கருத்துரு; மனவுரு : கருத்தமைவு.
concept, database : தரவுத் தளக் கோட்பாடு; தரவுத் தள எண்ணக் கருத்துரு.
conceptual scheme : கருத்துருத் திட்டவரை : தரவுத் தளங்கள் பல, மூன்று நிலைத் திட்ட வரைக் கட்டுமானத்தை ஏற்பவையாய் உள்ளன. தரவுத் தளத்தின் கட்டமைப்பு மற்றும் தரவு உள்ளடக்கம் இரண்டும் சேர்ந்தே திட்டவரைக் கட்டுமானத்தை நிர்ணயம் செய்கின்றன. மூன்று திட்டவரைகளுள் கருத்துருத் திட்டவரை (தருக்க முறைத் திட்டவரை) தரவு தள முழுமையின் மாதிரியை விளக்குவதாய் உள்ளது. எனவே இது அக மற்றும் புற (Internal and External) திட்டவரைகளுக்கு இடைப்பட்டதாய் விளங்குகிறது. அகத்திட்டவரை, தரவு சேமிப்பையும், புறத் திட்டவரை பயனாளருக்குத் தரவுவை வெளிப்படுத்தும் பணியையும் செய்கின்றன. பொதுவாக திட்டவரை என்பது தரவுத் தளம் வழங்கும் தரவு வரையறை மொழி (Data Definition Language - DLL) யின் கட்டளைகளால் வரையறுக்கப்படுகின்றது.
conceptual tool : கோட்பாடுக் கருவி : பொருள்களுக்குப் பதிலாக எண்ணங்களுடன் பணியாற்றும் கருவி.
concordance : சொல் தொகுதி விளக்கப் பட்டியில் : ஒரு ஆவணத்தில் உள்ள சொற்கள், தொடர்களின் வரிசைப்பட்டியல் குறிப்பிட்ட சொற்களும் தொடர்களும் எங்கே உள்ளன என்பதைக் குறிப்பிடுகிறது.
concurrency : உடன்நிகழ்வு : பொருள் மாதிரியத்தின் அடிப்படைத்தன்மைகளில் ஒன்று. பொருள் நோக்கு நிரலாக்கத்தில் இயங்காத பொருள் லிருந்து இயங்கும் பொருளை வேறுபடுத்துதல்.
concurrency control : உடன் நிகழ்வுக் கட்டுப்பாடு : டிபிஎம் எஸ்ஸில் தரவு தளத்திற்கு ஒரே நேர அணுகலை நிர்வகித்தல். ஒரே ஏட்டை ஒரே நேரத்தில் இரண்டு பயனாளர்கள் திருத்துவதைத் தடுக்கிறது. பரிமாற்றங்கள் மாற்று ஏற்பாட்டுக்கும், மீண்டும் பெறுவதற்கும் வரிசைப்படுத்துவது தொடர்பானது. concurrent : ஒரே நெரத்தில் : ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளிக்குள் இரண்டு அல்லது கூடுதல் நிகழ்ச்சிகள் அல்லது நடவடிக்கைகள் நடைபெறுவது பற்றியது.
concurrent access : உடனிகழ்வு அணுகல்.
concurrent execution : உடன் நிகழ் நிறைவேற்றம் : இரண்டு அல்லது மேற்பட்ட நிரல்கூறுகளை அல்லது நிரல்களை, ஒரே நேரத்தில் இயங்குவதுபோல் தோற்றமளிக்குமாறு செயல்படுத்துதல். ஒரு நிரலைப் பல்வேறு பணிக்கூறுகளாக அல்லது பல்வேறு புரிகளாக (threads) பிரித்து நேரப் பங்கீட்டு முறையில் ஒற்றைச் செயலியில் நிறைவேற்றிக்கொள்ள முடியும். அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட செயலிகள் மூலமும் உடன் நிகழ் நிரல்களை நிறைவேற்ற முடியும்.
concurrent language : உடன் நிகழ்வு மொழி : பல்வேறு செயல்கூறுகள் ஒரே நேரத்தில் இயக்குவதற்கு உதவும் மொழி. இணைக்கட்டுமான அமைப்பு வன்பொருள்களில் இது அதிகம் ஏற்படும். ஒரு நிரலில் இரு வேறு பணிகளை ஒரே நேரத்தில் செயல்படுத்தும் வசதி ஜாவா, சி# மொழிகளில் இவ்வசதி உண்டு.
concurrent object : உடன் நிகழ்வு பொருள் : கட்டுப்பாட்டின் பல இயக்கங்களுக்கும் ஈடு கொடுக்கும் ஒரு பொருள்.
concurrent operation : உடன் நிகழ் செயல்பாடு : நேரப்பங்கீட்டு அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியில் இரண்டு அல்லது மேற்பட்ட நிரல்களை ஒரே நேரத்தில் இயக்குதல்.
concurrent processing : உடன்நிகழ் செயலாக்கம் : ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு அல்லது மேற்பட்ட தரவு செயலாக்கப் பணிகளைச் செய்தல்.
concurrent programme execution : உடனிகழ் நிரல் இயக்கம் : ஒரே நேரத்தில் இரண்டு அல்லது பல நிரல்களை செயல்படுத்தல்.
concurrent programming : உடன் நிகழ் நிரலாக்கம் : பல பணிகளை ஒரே நேரத்தில் குறிப்பிடும் நிரல்களை உருவாக்குதல்.
condensed : சுருக்கப்பட்ட : தரமான எழுத்துகளின் அகலத்தில் ஏறக்குறைய 60% மட்டுமே அகலமுடைய அச்சு. சுருக்கப்பட்ட பைகாவில் 2. 5 செ. மீ-க்கு condensed type : சுருக்கப்பட்ட அச்செழுத்து : ஒரு அங்குல வரிசையில் அதிக எழுத்துகள் பொருந்தும் வண்ணம் அகலத் தில் சுருக்கப்பட் அச்செழுத்து.
condensed print : சுருக்கப்பட்ட அச்சு : வழக்கமான எழுத்து களைவிட (செங்குத்தாகவோ அல்லது குறுக்குவாட்டிலோ) சிறியதாக அச்சிட்ட எழுத்துகள்.
condition : நிபந்தனை; சூழ் நிலை : 1. குறிப்பிட்ட சூழ் நிலைகள், 2. இருக்கும் நிலைமை.
conditional : நிபந்தனைக்குட்பட்டது : ஒரு நிபந்தனை மெய்யாக இருக்கும்போது அல்லது மெய்யாக இல்லாத போது ஒரு நடவடிக்கையை அல்லது ஒரு செயல்பாட்டை , மேற்கொள்ளுமாறு ஒரு நிரலில்
அமைக்கப்படும் கட்டளை தொடர்பானது.
conditional branching : நிபந்தனைக் கிளை பிரிதல் குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் வேறு வேறு நிரல்களை அல்லது செயல்கூறுகளை செயல்படுத்த வைக்கும் கட்டளை அமைப்பு.
conditional branch instruction நிபந்தனை சார் ஆணை.
conditional paging
conditional compilation நிபந்தனை மொழிமாற்றம் : ஒரு நிரலின் மூல வரைவினை சில நிபந்தனைகளின் அடிப்படை யில் பொறிமொழியாய் மொழி பெயர்க்கும் முறை. எடுத்துக் காட்டாக நிரலை மொழிமாற்றம் செய்யும் நேரத்தில் (DEBUG) குறியீடு வரையறுக்கப்பட்டிருந்தால் மட்டுமே நிரலர் குறிப்பிட்ட பகுதிகள் மொழி மாற்றப் பட வேண்டும் என்று கட்டளை அமைக்க முடியும்.
conditioinal expression : நிபந்தனைக் கோவை; நிபந்தனை தொடர்.
conditional jump : நிபந்தனை தாவல் குறிப்பிட்ட விதிமுறை கள் பொருந்தி வருமானால் 'தாண்டுதல் ஏற்படுத்தும் ஆணை.
conditional jump instruction நிபந்தனை தாவல் ஆணை.
conditional line : நிபந்தனைக் கோடு.
conditional operators, : நிபந்தனைச் செயற்குறிகள்
conditional paging நிபந்தனைப் பக்கமிடல் : ஒரு குறிப்பிட்ட பகுதி. ஒரு பக்கத்தின் மீதமுள்ள இடத் துடன் முழுமையாகப் பொருந்தாவிட்டால் அடுத்த பக்கத்துக்கு conditional parameters
conducting
மாற்றும் சொல்செயலி பண்புக்கூறு.
conditional parameters நிபந்தனை அளபுருக்கள்.
conditional replace : நிபந்தனை மாற்றீடு : ஒரு சொல் செயலாக்கப் பணி. ஒரு குறியிட்ட பொருளைக் காணும் ஒவ்வொரு தடவையும் அதை மாற்ற வேண்டுமா என்று அது கேட்கும்.
conditional statement : நிபந்தனைக் கூற்று : ஒரு நிரல் குறிப்பிட்ட நிபந்தனை நிறைவேற்றப்பட்டால் மட்டுமே கட்டளைகளை நிறைவேற்றுமாறு அமைக்கப்படும் கூற்று.
conditional sum : நிபந்தனைக் கூட்டல்.
conditional transfer : நிபந்தனை மாற்றல் : பின்பற்றப்படுகின்ற நிரல்களின் வரிசையிலிருந்து மாற்றத்தை ஏற்படுத்துகின்ற நிரல். இயக்கத்தின் விளைவைப் பொறுத்து, ஒரு பதிவு அல்லது பரிமாற்றம் அமைதல்.
condition code : நிபந்தனைக் குறிமுறை : முந்தைய பொறி ஆனையின் அடிப்படையில் ஒரு துண்மி தொகுதியில் ஒரு குறிப்பிட்ட துண்மி நிகழ் (on) அகல் (off) நிலைக்கு மாற்றப்படுவதுண்டு. பெரும்பாலும் தொகுப்பு மொழி (assembly language) அல்லது பொறி மொழிச் சூழலில் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. நிபந்தனைக் குறிமுறைகள் பெரும்பாலும் வன்பொருள் தொடர்பானவை. ஆனால், மிச்ச வழிவு (carry overflow), சுழி விடை (zero result) அல்லது குறைநிலை (negative) விடைதரும் குறி முறைகளைக் கொண்டிருக்கும்.
condition entry : நிபந்தனை நுழைவு : முடிவு பட்டியலின் நான்கு பிரிவுகளில் ஒன்று. நிபந்தனைக்குப்பின் அனைத்துக் கேள்விகளுக்கும் விடை யளிக்கிறது.
conditioning : நிபந்தனையிடல் : ஒரு குரல் ஒலிக்கற்றை அனுப்புக் கம்பியில் தகவல் அனுப்புதல் தன்மைகளை மேம்படச் செய்தல்.
condition portion : நிபந்தனைப் பகுதி.
condition stub : நிபந்தனைப் பொதிவு : முடிவு பட்டியலின் நான்கு பிரிவுகளில் ஒன்று. ஒரு செயல் தொடரினை முடிவு செய்ய கவனிக்கப்பட வேண்டிய அனைத்து காரணிகளையும் (மாற்றுகளையும்) விவரிக்கிறது.
conducting : மின் கடத்தல்.
21 conducting state
configure
conducting state : மின்கடத்தும் நிலை.
conductor : கடத்தி : மின் சக்தியை எடுத்துச் செல்லும் பொருள். insulator- க்கு எதிர்ச் சொல்.
CONDUIT : காண்டியூட் : கல்வி மென்பொருள் வெளியிடும் நிறுவனம். சோதனை பொட்டலத் தொகுதிகளையும் ஆய்ந்து, கல்வி அளிக்கும் கணினி நிரல்களையும், அது தொடர்பான அச்சிடப்பட்ட பொருள்களையும் விநியோகிக்கிறது.
conference : கலந்துரையாடல் : மாநாடு : தொலைபேசி மூலம் ஒரு கலந்துரையாடல் சாத்தியம். கணினி மூலமும் செயல்படுத்தலாம்.
conference tree : மாநாட்டு மரம் : தலைப்புகள் மற்றும் பயனாளர் குறிப்புகளுடன் அமைக்கப்பட்ட ஒரு வகையான செய்தி அறிக்கை. அதன் ஒவ்வொரு கிளையும் ஒரு பெரிய தலைப்பு. கிளை நீள்வதற்கேற்ப அதைப் பயன்படுத்துவோர் மேலும் விரிவாக்கலாம்.
confidence factor : நமபிக்கைக் காரணி.
confidentiality : இரகசியத் தன்மை : தனிப்பட்ட அல்லது இரகசியத் தகவலை அனுமதியின்றி அனுகாமல் இருப்பதற்கான பாதுகாப்பின் தரம்.
configuration : தகவமைவு : ஒரு அமைப்பாக இயங்கும் வகையில் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தி சேர்க்கப்பட்ட எந்திரங்கள் மற்றும் மென்பொருள் கூறுகள். தரவு செயலாக்க அமைப்பு அல்லது வன்பொருளில் உள்ள பொருள்களின் வடிவமைப்பு அல்லது வரைபடம்.
configuration file : (கணினி) தகவமைவுக் கோப்பு : பெரும்பாலும் கணினியை இயக்கவைக்கும்போது மட்டுமே பெரும்பாலும் படிக்கும் ஒரு சிறப்புக் கோப்பு. கணினியின் மூலாதாரங்களை, குறிப்பாக நினைவகத்தை எவ்வாறு ஒருங்கமைத்து பிரிப்பது என்பதை வரையறுப்பது.
configuration management : தகவமைவு மேலாண்மை : ஒரு உற்பத்திப் பொருளின் உற்பத்திக் காலம் முழுமையும் மற்றும் இயக்க வாழ்நாள் முழு மைக்குமாக கணக்கெடுத்து, கட்டுப்படுத்தி, திட்டமிட்டு வடிவமைத்தல்.
configure : தகவமை : செயல்படத் தயார் செய் : சில குறிப்பிட்ட வன்பொருளையோ conjuct
connectionless
அல்லது மென்பொருளையோ ஒன்று சேர்த்து ஒரு அமைப்பாக்குதல். அதன் ஒவ்வொரு பகுதிகளும் சரிசெய்யப்பட்டு மொத்தமாக ஒன்றாக இயங்கச் செய்தல். பிற அல்லது வன்பொருளோடு ஒத்திசைவாய் இயங்கும் வண்ணம் ஒரு மென்பொருள் அல்லது வன்பொருளைத் தயார் செய்தல்.
conjuct : இணை : ஒரு இணைப்பின் பல துணைச் சிக்கல்களில் அல்லது நிலைகளில் ஒன்று.
conjugation : புடைபெயர்ப்பு .
connect : இணைத்திடு.
connect charge : இணைப்புக் கட்டணம் : வணிகமுறைத் தரவு தொடர்பு அமைப்பு அல்லது சேவையுடன் இணைப்பு ஏற்படுத்திக் கொள்வதற்கு ஒரு பயனாளர் செலுத்த வேண்டிய தொகை. சில சேவைகளுக்கு, ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு இவ்வளவு தொகை என இணைப்புக் கட்டணம் கணக்கிடப்படுகிறது. வேறு சில சேவைகளுக்கு, சேவையின் வகைக்கேற்ப அல்லது பெற்ற தகவலின் அளவுக்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படுவதுண்டு. வேறுசில சேவையாளர்கள், எவ்வளவு மணி நேரம் இணைப்பைப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற அடிப் படையில் கட்டணம் நிர்ணயிக் கின்றனர். சில வேளைகளில், இணைப்பின் தொலைவு, அலைக்கற்றை அகலம் அல்லது மேற்கூறியவற்றுள் ஒன்றுக்கு மேற்பட்ட கூறுகளைக் கணக்கில் கொண்டும் இணைப்புக் கட்டணம் வரையறுக்கப்படுகின்றது.
connected graph : இணைந்த வரை படம் : ஒரு வரைபடத்தின் தனி முனையிலிருந்து தொடர்ச்சியான விளிம்புகள் வழியாக வேறு ஏதாவது ஒரு முனைக்கு நகர்த்தி உருவாக்கப்படும் வரைபடமுறை.
connected line : இணைத்தடம், தொடர்புடைய இணைப்பு.
connecting cable : இணைப்பு வடம் : இரண்டு கருவிகளுக்கிடையில் மின்துடிப்புகளை பரிமாற உதவும் குழாய்.
connection : இணைப்பு : ஒரு வடம் அடிக்கட்டகம் அல்லது ஒரு பகுதியுடன் இணைப்பு ஏற்படுத்தும் மின்சார அல்லது எந்திர இணைப்பு வழங்கும் பொருத்து சாதனம்.
connectionless : இணைப்பற்ற : கணினி வழி தகவல் தொடர்பில் ஒரு வகை. நேரடி இணைப்பு அல்லது முனை களுக்கிடையேயான முறையான இணைப்பு தேவைப்படாமல் ஒவ்வொரு பாக்கெட்டிலும், மூல மற்றும் சேரும் முகவரி களைச் சேர்த்தல். யு. டி. பி (UDP User Datagram Protocol) நெறி முறையில் தகவல் பரிமாற்றம் இவ்வாறுதான் நடைபெறுகிறது.
connection machine : இணைப்பு எந்திரம் திங்கிங் மெஷின் கார்ப்பரேசன் உருவாக்கிய இனைச் செயலாக்கக் கணினிகளின் குடும்பம் 4, 096 முதல் 65, 536 இடம் பெற்றிருந்தன. ஹைபர் கியூப் அல்லது பிற அமைப்புகளில் அவற்றை முடியும். சமிக்கை செயலாக்கம், பாவிப்பு நிகழ்வு , தரவு தளங்களில் விவரங்களைப் பெறல் போன்ற பயன்பாடுகளுக்கு இவை பயன்படுகின்றன. முன் முனையாக வேக்ஸ் (VAX) அல்லது பிற கணினிகள் தேவைபடுகின்றன.
connection matrix : இணைப்பு அணி.
connection oriented : இணைப்பு அடிப்படையிலான ;இணைப்பு சார்ந்த : ஓரு பிணையத்தில் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிணையங்களிலுள்ள இரு கணுக் (node) கணினிகளுக்கிடையே தரவு பரிமாற்றம் நடைபெற ஒரு நேரடி இணைப்புத் தேவைப்படுகிற தகவல் தொடர்பு முறைக்கு இணைப்பு சார்ந்த தரவுத் தொடர்பு என்று பெயர்.
connection-oriented network service (CONS) : இணைப்புசார் பிணைய சேவை.
connection oriented protocol : இணைப்புசார் நெறிமுறை.
Connection : இணைப்புகள்.
connection wizard இணைப்பு வழிகாட்டி,
connectivity : இணைப்புநிலை : 1. ஒரு பிணையத்தில் அல்லது இணையத்திலுள்ள புரவன் (Host) கணினிக்கும் அல்லது பயனாளர் கணினிக்கும் இடையே அமைந்துள்ள இணைப்பின் இயல்பைக் குறிக்கிறது. இணைப்பு ஏற்பட்டுள்ள மின்சுற்று அல்லது தொலைபேசி இனைப்பின் தரத்தையோ, இரைச்சல் இல்லாத் தன்மையையோ தரவு தொடர்பு சாதனங்களில் அலைக்கற்றை அளவையோ குறிக்கும். 2. பிற சாதனங்களுக்கிடையே தரவுவை அனுப்புவதற்குரிய ஒரு வன் பொருளின் திறன், அல்லது பிற மென்பொருள் தொகுப்புகளு டன் தொடர்பு கொள்வதற்குரிய
ஒரு மென் பொருளின் திறன். 3. பிணையத்திலுள்ள வேறொரு கணினியுடனோ, பிற வன் பொருள் சாதனத்துடனோ, பிற மென் பொருள் தொகுப்புடனோ தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்குரிய ஒரு வன்பொருள்/மென்பொருள் அல்லது ஒரு கணினி இவற்றின் திறனைக் குறிக்கிறது.
connectivity platform இணைப்பு நிலைப் பணித்தளம்.
connect node : இணைப்புக்கூணு : கணினி உதவிடும் வடி வமைப்பில் வரிகள் அல்லது சொற் பகுதிக்கான இணைப்பு முனை.
connector : இணைப்பி : வன்பொருள் அமைப்பில், இரண்டு வடங்களை இணைக்கவோ, ஒரு இணைப்பு வடத்தைச் சாதனத்துடன் இணைக்கவோ பயன்படுகிறது. (எ-டு : ஆர்எஸ் 23. 2. சி என்னும் இணைப்பி இணைக்கியின் இணைப்பு வடத்தை ஒரு கணினியுடன் இணைக்கப் பயன்படுகிறது). பெரும்பாலான இணைப்பிகள் ஆண், பெண் என்கிற இரு வகைகளில் அடங்கிவிடுகின்றன. ஆண் இணைப்பிகள் (male connectors) ; ஒன்று அல்லது மேற்பட்ட பின்களைக் கொண்டிருக்கும். இவற்றை நுழை இணைப்பிகள் என அழைக்க லாம். பெண்வகை இணைப்பிகளில், ஆண் இணைப்பி களிலுள்ள பின்களை ஏற்பதற்கான துளைகள் இருக்கும். இவற்றை துளை இணைப்பிகள் என்று அழைக்கலாம்.
connector box : இணைப்புப் பெட்டி
connector, multiple : பன்முக இணைப்பி.
connector symbol : இணைப்புக் குறியீடு : சந்திப்புப் பகுதியைக் குறிப்பிடும் ஒரு வரைபடக் குறியீடு பாய்வு நிரல் படங்களில் சில அடையாளங்காட்டிகளைக் கொண்டதாக ஒரே பக்கத்தில் ஒடும் கோடுகளின் பிரிந்து போன பாணிகளை இனைக் கும் சிறிய வட்டம். ஒரு பாய்வு நிரல் படத்தின் பல்வேறு பக்கங் களின் பாய்வுகளை இணைக்கும் ஒரு ஐங்கோண வடிவம்.
connect time : இணைப்பு நேரம் : ஒரு அமைப்புடன் முனையத்தில் உள்ள ஒருவர் எவ்வளவு நேரம் இணைப்பு வைத்திருந்தார் என்பதைக் குறிப்பிடுவது.
connect using : இதன் மூலம் இணைத்திடு.
consecutive : தொடர்ச்சியான : எந்தவித பிற நிகழ்ச்சிகளின்
தடையுமின்றி தொடர்ச்சியாக இரண்டு ஒரே மாதிரியான நிகழ்வுகள் ஏற்படுவது.
consequent rules : வினைவுறு சட்டங்கள்.
consight . கன்சைட் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் உருவாக்கிப் பயன்படுத்திய கணினி கட்டுப்பாட்டில் இயங்கும் எந்திர பார்வை அமைப்பு.
consistent check : நம்பகத் சரி பார்ப்பு குறிப்பிட்ட உள்ளிட்டுத் தரவு ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப உள்ளது என்ற நம்பகத்தன்மையைச் சோதித் தல். ஒரே மாதிரியான தரவு பொருள்கள் அவற்றின் மதிப்பு, வடிவம் ஆகியவற்றில் நம்பக மாக உள்ளதா என்று கட்டுப் படுத்தும் முறை.
console : பணியகம் : ஒரு அமைப்புடன் தகவல் தொடர்பு கொள்ள அனுமதிக்கும் கணினி அமைப்பின் முகப்புப் பகுதி.
console applications : பணியகப் பயன்பாடுகள்.
console display register : பணியகக் காட்சிப் பதிவகம்
console log : பணியகப் பதிவு
console operator : பணியக இயக்குநர்
console printer : பணியக அச்சுப் டொறி.
console switch : பணியக விசை
console typewriter : முனையத் தட்டச்சுப் பொறி கணினியுடன் நேர்முக இணைப்புள்ள தட்டச்சுப் பொறி. இது கணினிக்கும் கணினியை இயக்கு பவருக்கும் இடையில் தகவல் தொடர்பினை அனுமதிக்கிறது.
consolidate : ஒருங்கு திரட்டு.
consortium : பேரமைப்பு அவசர நிலை காலத்தில் பயன் படுத்துவதற்காக முழுமையான கணினி வசதியைத் தாங்கி நிற்கும் ஒரு கூட்டு முயற்சி.
constant மாறிலி, மாறா மதிப்பு : நிலைமதிப்பு : கணினி செயல் படும்போது மாறாமல் இருக் கும் மதிப்பு. Literal என்றும் அழைக்கப்படுகிறது Variable என்பதற்கு மாறானது.
Constant Angular Velocity (CAV) : மாறாக் கோண வேகம்.
Constant area : மாறாப் பரப்பு.
constant expression : மாறாத் தொடர் : ஒரு நிரலில், அனைத் தும் மாறிலிகளால் ஆன ஒரு கணக்கீட்டு தொடர். நிரல் நிறைவேற்றப்பட்டு முடியும்.
வரை அதன் ஒட்டுமொத்த மதிப்பு மாறாது.
Constant Linear Velocity (CLV) : மாறா நேர் வேகம்.
constants and variables : மாறிலிகளும் மாறிகளும்.
constellation : கொத்து திறன் தகவல் தொடர்பு அமைப்பில் சுமப்பி அலைகளின் (carrier wave) வெவ்வேறு நிலைகளை உருவகிக்கும் ஒரு தோரணி (pattern) அமைப்பு. ஒவ்வொரு நிலையும் ஒரு குறிப்பிட்ட துண்மி சேர்க்கைகளைக் கொண் டிருக்கும். ஒரு தகவல் தொடர்பு சமிக்கையில் ஏற்படும், தனித் துக் காட்டக்கூடிய ஒவ்வொரு மாற்றத்தையும் அடையாளம் காட்டும் நிலைகளின் எண்ணிக் கையை இத் திரள் அறியலாம். எனவே, ஒற்றை மாற்றத்தில் அதிகப்பட்சமாக குறி முறைப்படுத்த வேண்டிய துண்மிகளின் எண்ணிக்கையை இது காட்டும்.
constraint : நிபந்தனை ஒரு சிக்கலுக்கான தீர்வுகளை கட்டுப்படுத்தும் நிபந்தனை.
construct : கட்டு கட்டமை உருவாக்கு.
constructor : ஆக்கி பொருளாக்கி பொருள்நோக்கு திரலாக்கத்தில் ஒர் இனக்குழுவில் ஒரு பொருளை உருவாக்கும் போது, அப்பொருளின் பண்புக் கூறுகளை நிர்ணயிக்கும் ஒரு செயல்கூறு அல்லது வழிமுறை. இது தானாகவே இயக்கப்படும்.
consultant ; ஆலோசகர் வணிக தரவு செயலாக்கம், கல்வி, இராணுவ அமைப்பு அல்லது நலவாழ்வு போன்ற சில பயன் பாட்டு சூழ்நிலைகளில் கணினி களைப் பயன்படுத்துவதில் வல்லுநர். ஒரு குறிப்பிட்ட சிக்கலை பரிசீலித்து தீர்ப்பதற்கு உதவுகின்றவர்.
consumable : நுகர் பொருட்கள் : வன்பொருள் துணைக் கருவி கள். அச்சுப் பொறி நாடாக்கள், மை, காகிதம் போன்று தொடர்ச்சியாக வாங்க வேண்டிய பொருள்கள்.
consumer electronics : நுகர்வோர் மின்னணுவியல். cont . கான்ட் ; பேசிக் மொழி யில் ஒரு ஆணை. தற்காலிகமாக நின்று போன நிரலை தொடரப் பயன்படுத்தப்படுவது.
contact : தொடர்பு : மின்சாரம் செல்ல அனுமதிக்கும் இனைப்புக்காக தொடர்புள்ள உலோக சுருளைத் தொடும் பொத்தான் அல்லது சாக்கெட்டில் உள்ள உலோகச் சுருள். அரிப்பைத்
தடுப்பதற்காக விலை மதிப்புள்ள உலோகங்களின் மூலம் தொடர்பு கொள்ளப்படலாம்.
contact manager : தொடர்பு மேலாளர்.
container class : கொள்கலன் இனக்குழு வேறு இனக்குழுக் களின் பொருட்களைத் தனக் குள்ளே கொண்டுள்ள ஒர் இனக்குழு. பொருள் நோக்கு நிரலாக் கத்தில் பயன்படுத்தப்படுவது.
containing text : உரையடங்கிய
content உள்ளடக்கம் : ஒரு குறிப்பிட்ட சேமிப்பு இடத்தில் உள்ள முகவரியிடக்கூடிய அனைத்து தரவுகளையும் இது குறிப்பிடுகிறது.
content addressable memory உள்ளடக்க முகவரியிடும் நினை வகம் துணை சேமிப்பகத்தைப் போன்றது.
content adviser உள்ளடக்க ஆலோசகர்.
contention : பூசல் மோதல் தகவல் தொடர்பு மற்றும் கணினி கட்டமைப்புகளில் பயன் படுத்தப்படும் ஒரு சொல் இரண்டு சாதனங்கள் அனுப்பும் தகவல்களை ஒரே பாதையில் ஒரே நேரத்தில் பயணிக்கும் சூழ் நிலையை விளக்குவது. அமைப்பு விதிமுறைகளால் நெறிப்படுத்தப்படுவது. ஒரே நேரத்தில் இரண்டு செயலிகள் ஒரே சாதனைத்தை கட்டுபடுத்த முயலும்போது ஏற்படும் நிலையையும் குறிக்கும்.
contention resolution : மோதல் நிலைத் தீர்வு : இரண்டு சாதனங் களும் ஒன்றை அணுகும்போது எதற்கு இனைப்பு தரப்படு கிறது என்பதை த் தீர்க்கும் செயல்முறை.
contents directory : உள்ளடக்க பட்டியல் ஒரு உட்புற சேமிப்பகத்தில் குறிப்பிட்ட பகுதியில் நடைபெறும் வழக்கச் செயலைக் குறிப்பிடும் தொடர்வரிசைகள்.
coritext : சூழல் வல்லுநர் முறைமையின் (Expert System) உரிமைப்பகுதி பகுக்கக் கூடிய பல்வேறு சிக்கல் பகுதிகள்.
context diagram : சூழ்நிலை வரைபடம் : மிக உயர்நிலை பாய்வு நிரல்படம். ஒரு கணினி அமைப்பின் எல்லைகளை வரையறை செய்கிறது. தனி செயல்முறையையும், தரவு உள்ளீடுகள், வெளியீடுகள் போன்றவற்றையும் காட்டுகிறது.
context sensitive : சூழ்நிலை உணர்வு குறிப்பிட்ட ஒரு நிரலை இயக்குவது. ஒரு விசை யைத் தொடுவது அல்லது கட்டியைச் சொடுக்குவது போன்றவற்றால் இதனைச் செய்ய முடியும்.
context sensitive help : சூழ் நிலை உணர் உதவி உதவி கேட்கும் நேரத்தில் நிரலின் நிலை அல்லது முறை என்ன என்பது உணர்வது. அது பற்றிய குறிப்பிட்ட தரவு வழங்கும் உதவி முறை.
context sensitive help key சூழ்நிலை உணர் உதவு விசை : பல விசைப் பலகைகளில் உள்ள ஒரு முக்கிய விசை, விசைப்பலகையில் உள்ள இந்த விசையை அழுத்தும் போது குறிப்பிட்ட சிக்கலைத் தீர்க்க உதவும் உதவி காட்சித் திரையில் தானாகத் தோன்றும். பெரும் பாலும் F1 ஆக இருக்கும்.
context sensitive language : சூழ் நிலை உணர் மொழி,
context switching : சூழ்நிலை மாற்றம் : பல்பணி இயக்க முறைமையில் ஒருவகை மையச் செயலியின் கவனத்தை ஒரு பணியிலிருந்து இன்னொரு பணிக்குத் திருப்பும் செயல் முறை. ஒவ்வொரு பணிக்கும் நேரத்தைக் கூடுதலாக்கி மாற்றி மாற்றி ஒதுக்கீடு செய்யும் முறை யிலிருந்து மாறுபட்டது.
contextual search : சூழ்நிலைத் தேடல் அவற்றில் உள்ள சொல் பகுதியின் அடிப்படையில் பதி வேடுகள் அல்லது ஆவணங் களைத் தேடுவது விசைப்புலம் அல்லது கோப்பின் பெயர்மீது தேடுவதற்கு மாறானது.
contiguous அடுத்தடுத்து ஒட்டியுள்ள பொது எல்லைக் கோட்டைக் கொண்ட அடுத் தடுத்த பகுதிகள். (எ. டு.) ஒரு வட்டில் அடுத்தடுத்த தரவு குறிப்புகள் சேமிக்கப்பட்டுள்ள வட்டுப் பிரிவுகள் அடுத்தடுத்து அமைந்திருக்கும் முறை.
contiguous data structure
அடுத்தடுத்துள்ள தரவுக் கட்டமைப்பு.
contingency pian : எதிர்பாரா நிலைத் திட்டம் அவசர நிலை கள் அல்லது சேதங்கள் ஏற்படும் பொழுது கணினி தரவு அமைப் பினை மீட்டுக் கொண்டு வருவதற்கான திட்டம்.
continuation card : தொடர்ச்சி அட்டை முந்தைய துளை யிட்ப அட்டையில் தொடங்கப் பட்ட தகவலைக்கொண்ட துளையிட்ட அட்டை.
continue தொடர்க . முன்பே வரையறுக்கப்பட்ட வரையறைகளுடன் பொருந்தும் பதிவேடு களைத் தேடுவதைத் தொடர் வதற்கான டிபேஸின் கட்டளை.
continuing path control : தொடர்பாதைக் கட்டுப்பாடு : எந்திரன் இயங்கு நுட்பத்தில் பயன்படுத்தப்படும் சொல். தேவையான வளைவுப் பாதை வழியாக எந்திரனை நகர்த்திச் செல்வது.
continuity : தொடர்நிலை
continuity check : தொடர்ச்சி சரிபார்ப்பு : தொடக்கம் முதல் இறுதிவரை பாதை சமிக்கைகளை அனுப்புவதற்கு சரியாக இருக்கிறது என்பதை முடிவு சொல்ல ஒரு கம்பி, வழித்தடம் அல்லது மின்சுற்று ஒன்றை சோதனை செய்தல்.
continuous : அடுத்தது அல்லது அடுத்ததாக இருப்பது.
continuous analysis : தொடர் பகுப்பாய்வு.
continuous carrier : தொடர் சுமப்பி : தகவல் தொடர்புகளில் கம்பியில் தகவல்கள் அனுப்பப் படாவிட்டாலும் செல்கின்ற சுமப்பி அலைவரிசை.
continuous data structure அண்மை தரவுக் கட்டமைப்பு.
continuous-feed paper தொடர்ந்து வழங்கும் தாள் பக்கங்களுக்கிடையில் துளை யிடப்பட்டு ஒவ்வொரு பக்கத்தி லும் கிழிக்கக்கூடிய வகையில் அரை அங்குல துளைகள் உள்ள காகிதம்.
continuous forms : தொடர் படிவங்கள் : அச்சுப்பொறிகளில் தானாகவே அனுப்புவதற்கேற்ப வெளிப்புற விளிம்புகளில் சிறிய துளைகள் உள்ள விசிறி மடிப்புத் தாள் அல்லது சுருள் தாள். வெற்றுத்தாளாக இருக்க லாம். அல்லது சோதனைகள், விலைப் பட்டியல்கள், வரி படிவங்கள் போன்ற முன் பாகவே அச்சிடப்பட்ட படிவங் களாக இருக்கலாம்.
cortinuous form paper : தொடர் படிவத் தாள் : தொடர் எழுது
தொடர்படிவ காகிதம் பொருள் என்றும் அழைக்கப்படுகிறது. அச்சுப் பொறியில் டிராக்டர் மூலம் அளிக்கப்படுகிற துளையிடப்பட்ட நாற்றுக் கணக்கான தாள்களைக் கொண்டது. முன்னதாகவே துளையிடப்பட்டு அச்சடிப்புக்குப்பின்னர் தனித்தனியாகப் பிரிக்கக் கூடிய தாள்கள், ஒரு பிரபல அச்சு ஊடகமாகிய இதை ஒரு முறை ஒன்று சேர்த்தால் காகிதத் தொகுதி முழுவதையும் கணினி அச்சுப்பொறியில் ஏற்றமுடியும். தனியாக எடுக்கக்கூடிய (முன் துளையிடப்பட்ட) ஒரு பகுதியில் ஸ்ப்ராக்கெட் துளையைப் பயன்படுத்தித் தொடர்தாள்
அனுப்பப்படும்.
continuous graphics : ஒட்டிக்கொள்ளும் வரைகலை : ஒன்றை யொன்று தொட்டுக்கொள்ளும் சில எழுத்துகள் கொண்ட வரைபடங்கள்
continuous processing : தொடர் செயலாக்கம் : ஒரு அமைப்பில் அவை நிகழ்கின்ற வரிசையிலோ அல்லது நிகழ்ந்த உடனேயோ உள்ளீடு செய்யப்படும் நடவடிக்கைகள்.
continuous scrolling : தொடர்நகர்த்தல் : செய்திகளை வரிவரி யாக சாளரத்தில் மூலம் முன்னாகவோ பின்னாகவோ நகர்த்தல்.
continuous speech recognition : தொடர்பேச்சு அறிதல் : பேச்சு ஏற்பிக்கு ஒரு அணுகு முறை. சாதாரண இடைவெளிகளில் சராசரியான உரையாடல்களில் நடைபெறும் பேச்சை இது புரிந்து கொள்ளும்.
continuous stationary : தொடர்தாள்.
continuous tone : தொடர்நீழல் : ஒரு அச்சுப்பொறியிலிருந்து வெளிவரும் புள்ளிகள். அச்சிடலுக்குத் திரை செய்யப்படாத ஒளிப்படம்.
continuous tone image : தொடர்கூட்டுத் தோற்றம் : பல்வகை யான வண்ணக் கூட்டுகள் அல்லது சாம்பல்நிறக் கூட்டுகளைக் கொண்டதாக உள்ள தனித்தனிப் பகுதிகளை ஒன்றாக இணைப்பதன் மூலம் உருவாக்கப்படும் வண்ணத் தோற்றம் அல்லது கருப்பு வெள்ளைத் தோற்றம்.
continuous tone printer : தொடர்மை அச்சுப் பொறி : ஒருவகை அச்சுப்பொறி, உருவப்படங் களை அச்சிடும்போது சாம்பல் நிற அல்லது வண்ணப்படி மங்களைத் தொடர்மை பூச்சு முறையில் மிக இயல்பான வகையில் அச்சிடும்.
contour analysis : படவேறுபாட்டு பகுப்பாய்வு : ஒ. சி. ஆர் முறையில் ஒரு ஒளிப் புள்ளி யைப் பயன்படுத்தி எழுத்தின் வெளிப்புற விளிம்புகளில் நகர்ந்து செல்வதன் மூலம் ஒரு எழுத்தின் தோற்றத்தைக் கண் டறிய உதவும் தொழில்நுட்பம்.
contouring : பட வேறுபாடு அமைத்தல் : கணினி வரைபட முறைமைகளில் ஒரு உருவம், பொருள் அல்லது அடர்த்திப் வெளிப்புறப் பொருளின் தோற்றத்தை உருவாக்குதல்.
contrast : மாறுபாடு : ஒ. சி. ஆர் முறையில் ஒரு ஆவணத்தின் அச்சிடப்பட்ட பொருள் அல்லது அது அச்சிடப்பட்ட பின்னனியைக் குறிக்கக் காட்டப்படும் வண்ண அல்லது நிழல் தோற்றத்தின் வேறுபாடுகள்.
contrast enhancement மாறுபாடு அதிகரித்தல் ஒளிர்மை அல்லது இருட்டினை அதிகரித்தல். உண்மையான இலக்கமுறை செயலாக்கமானது அது வருடும் பொருளின் நேர் கோடல்லாத வற்றைக் கண்டுபிடிப்பதைப் பொறுத்திருக்கிறது. பிடிப்பதன் தன்மையை அறிந்தால் சரியான மாறுபாடுகளை மீண்டும் அறிமுகப்படுத்தலாம். மாறுபாடுகள் விரும்பும் வண்ணம் அதிகரிக்கப் படலாம்.
Control : கட்டுப்பாடு : இயக்கு விசை : 1. ஒரு கணினியையும் அதன் செயல்பாடு களையும் முறைப்படுத்தி மேலாண்மை செய்தல் பிழையற்ற செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த சரியான நேரத்தில் சரியான வரிசையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் கட்டுப்பாடு எனும் சொல் வன்பொருள். பொருளைப் பொறுத்தவரை கட்டுப்பாட்டு மின் இணைப்புப் பாட்டை (control bus) எனும் மின்வழி மூலமாக கணினியின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. மென்பொருளைப் பொறுத்தவரை தரவுகளைக் கையாளும் நிரல் ஆணைகளைக் குறிக்கின்றன. 2. ஒரு வரைகலைப் பயனாளர் இடை முகத்தில் (GUI) ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டை நிறைவேற்றப் பயனர் இயக்குகின்ற, திரையில் தோன்றும் ஒரு சிறு உருப் பொருள். மிகப் பரவலாகப் பயன்படும் இயக்கு விசைகள், கட்டளைப் பொத்தான்கள், தேர்வுப் பெட்டிகள், உருள் பட்டைகள் போன்றவையாகும்.
control block : கட்டுப்பாட்டுப் பகுதி : ஒரு செயலாக்க அமைப்பைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான குறிப்பிட்ட வகையான தகவல். அதன் பிறபகுதிகளுக்கு அனுப்பப்படுகின்ற சேமிப்பகத்தின் பகுதி.
control break : கட்டுப்பாட்டு நிறுத்தம் : கட்டுப்பாட்டுப் புலத்தில் உள்ள மதிப்புகளின் மாற்றத்தின் விளைவாக ஒரு நிரல் செயலாக்கத்தில் சில சிறப்பு நிகழ்வுகள் ஏற்படும் இடம்.
control bus : கட்டுப்பாட்டு மின்பாட்டை : ஒரு கணினியில், மையச் செயலகத்தில் கட்டுப் பாட்டகத்திலிருந்து நினைவகத்தை இணைக்கும் பாதை.
control cards : கட்டுப்பாட்டு அட்டைகள் : உருவாக்கி போன்ற செயலாக்க அமைப்பு, ஒரு பொது வழக்கச் செயலைக் குறிப்பாகப் பயன்படுத்தும் போது, தேவைப்படும் உள் வீட்டுத் தரவுகளைக் கொண்டுள்ள துளையிட்ட அட்டை. எடுத்துக்காட்டு : ஒரு குறிப்பிட்ட நிரலை ஏற்றி இயக்குமாறு ஆணையிடும் தொடர் அட்டைகளில் ஒன்று.
control change of : கட்டுப்பாட்டு மாற்றம்.
control character : கட்டுப்பாட்டு எழுத்து : ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் கட்டுப்பாட்டு இலக்கத்தை நிறுத்துதல் அல்லது மாற்றம் செய்தலை ஆரம்பித்து வைக்கும் எழுத்து.
control circuits : கட்டுப்பாட்டு மின்சுற்றுகள் : கணினியின் ஆணைகளை விளக்கி தேவையான இயக்கங்களை செய்யவைக்கும் மின்சுற்றுகள்.
control clerk : கட்டுப்பாட்டு எழுத்தர் : தரவு செயலாக்க
இயக்கங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான பணிகளைச் செய்யப் பொறுப்பேற்றுள்ளவர்.
control code : கட்டுப் பாடு குறிமுறை : அச்சிடலில், தரவு பரிமாற்றத்தில், திரைக்காட்சி களில் ஒரு சாதனத்தின் நட வடிக்கையைக் கட்டுப்படுத்து வதற்காக ஒரு கணினி நிரலில் பயன்படுத்தப்படும் அச்சிட வியலாக் குறிகள். (எ-டு) புதிய வரி, ஒரு வரி நகர்த்தல், தாளை வெளித் தள்ளல், நகர்த்தியை திரும்பச் செய்தல் போன்ற பணிகளுக்கான அச்சுப் பொறிக் கட்டுப்பாட்டு குறிகள்). ஒரு பயன்பாட்டு மென் பொருள், அச்சுப் பொறியைக் கட்டுப்படுத்தும் வழி முறை களைக் கொண்டிராதபோது ஒரு நிரலரால் அல்லது ஒரு பயனாளரால் கட்டுப்பாட்டுக் குறிகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. ஒளித்தோற்றத் திரைக்காட்சியில் கட்டுப் பாட்டுக்குறிகள், உரைப் பகுதியை அல்லது காட்டியைக் கையாள்வதற்கென மையச் செயவியால் திரையகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மிகப் பரவலாகப் பயன்படுத்தப் படும் ஒளிக்காட்சிக் கட்டுப் பாட்டு குறிகள் அன்சி (ANSI) மற்றும் விடீ-100 (VT-100) ஆகும்.
control collection : இயக்கு விசைகள் தொகுப்பு.
control computer கட்டுப் பாட்டுக் கணினி.
control console : கட்டுப்பாடு பணியகம் முனையத்தை இயக்குபவர் அல்லது சேவை பொறியாளருக்கும் கணி னிக்கும் இடையில் தொடர்பு கொள்ளப் பயன்படும் கணினி அமைப்பின் பகுதி.
control counter : கட்டுப்பாட்டு
எண்ணி.
control data : கட்டுப்பாட்டு தரவு வேறொரு தரவு மதிப்பையோ அல்லது துணைச் செயல்பாட்டையோ அல்லது ஒரு கோப்பு நடவடிக்கையையோ அடையாளம் கான தேர்ந்தெடுக்க, செயல்படுத்த அல்லது மாற்றியமைக்கப் பயன் படுத்தப்படும் ஒன்று அல்லது மேற்பட்ட கட்டுப்பாட்டு தரவு வகைகள்.
கோப்பு நடவடிக்கை
control data corporation : கன்ட்ரோல் டேட்டா கார்ப்பரேஷன் : மீத்திறன் (சூப்பர்) கணினிகள் உள்ளிட்ட கணினிக் கருவிகளைப் பெருமளவு உற்பத்தி செய்யும் நிறுவனம்.
control elements : கட்டுப் பாட்டு உறுப்புகள்.
control field : கட்டுப்பாட்டுப் புலம் தரவு பதிவேட்டில் உள்ள ஒரு புலம். அதே பதிவேட்டில் உள்ள புலங்களை அடையாளம் கண்டு, வகைப் படுத்த பயன்படுவது.
control flow : கட்டுப்பாட்டு பாய்வு : ஒரு நிரலில் இயலக் கூடிய செயல்பாட்டு வழிகள் அனைத்தையும் துணுகிப் பார்ப் பது. பொதுவாக இது ஒரு வரை பட வடிவில் விளக்கப்படும்.
control flow chart கட்டுப் பாட்டுப் பாய்வு நிரல்படம்.
control instruction register கட்டுப்பாட்டு ஆணை பதிவகம் : ஒரு சிறப்பு தற்காலிக சேமிப்பு இடம். கட்டுப்பாட்டகம் செயல் படுத்துகின்ற எந்திர ஆணைகள் இதில் இடம் பெறும்.
control key கட்டுப்பாட்டு விசை : கணினி விசைப் பலகையில் உள்ள சிறப்புச் செயல் விசை. கணினியை ஒரு பணியைச் செய்யுமாறு ஆணையிடு வதற்கு வேறொரு விசையுடன் இந்த விசையைச் சேர்த்து ஒரே நேரத்தில் அழுத்தினால் போதும்.
controlled variable : கட்டுறுமாறி . ஒரு மொழியில் உரை யாடல் முறை அமைப்பில் ஒரு குறிப்பிட்ட மதிப்புகளின் தொகுதி தொடர்பான மாறி.
controller கட்டுப்படுத்தி : கட்டுப்பாட்டுப் பொறி . ஒரு வெளிப்புற உறுப்பை இயக்குவதற்கு கணினிக்குத் தேவைப்படும் சாதனம்.
control listing : கட்டுப்பாட்டு பட்டியலிடல் : ஒரு குறிப்பிட்ட சமயத்தில் நடைபெறும் ஒவ்வொரு வணிகப் பரிமாற்றத் தையும் விவரிக்கும் விரிவான அறிக்கை.
control logic : கட்டுப்பாட்டு; தருக்கம், கட்டுப்பாட்டு அளவை : ஒரு கணினியின் செயலாக்க பணிகளைச் செயல்படுத்தும் வரிசை முறை.
control logo : கட்டுப்பாட்டு சின்னம் : எந்திரன்கள் (ரோபோக்கள்) இயக்கும் சாதனங்களுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு லோக்மைரன் சின்னம்.
control loops : கட்டுப் பாட்டு மடக்கிகள்.
control mechanism : கட்டுப்பாட்டு எந்திர நுட்பம்.
control memory : கட்டுப் பாட்டு நினைவகம் : இயக்கத்திற்காக ஆணைகளைச் சேமிக்கப் பயன்படும் கட்டுப் பாட்டகத்தின் நினைவகம்,
கணினியின் உள்
control menu : கட்டுப்பாட்டு பட்டி : சாளரங்களைக் கையாளும்
கட்டளைகளைக் கொண்ட பட்டி, பயன்பாட்டுப் பிம்பங்கள் மற்றும் உரையாடல் பெட்டிகளில் கட்டுப்பாட்டு பட்டி இருக்கும். கட்டுப்பாட்டு பட்டியைத் திறக்க சாளரத்தின் தலைப்புப் பட்டை இடது கட்டுப்பாட்டு பட்டிப் பெட்டியை பயன்படுத்த வேண்டும்.
control menu box : கட்டுப் பாட்டு பட்டி பெட்டி சாளரத்தின் தலைப்புப் பட்டையில் இடது பக்கத்திலேயே இது எப்போதும் இருக்கும். கட்டுப் பாட்டு பட்டி இதில் அடக்கம்.
control panel : கட்டுப் பாட்டு பலகம் : 1. மனிதக் கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ள கணினி கட்டுப்பாட்டு முகவு. மைக்ரோ சாஃப்ட் விண்டோஸ் இயக்க முறைமைகளில் உள்ள ஒரு கோபுபுறை. 2. அலகு பதிவு சாதனங்களின் இயக்கங்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தும் நீள் கம்பிகளைப் பொருத்தும் அட்டை .
control programme கட்டுப் பாட்டு நிரல் கணினி மற்றும் அதன் மூலாதாரங்களை முழுவதுமாக மேலாண்மை செய்வதற்க்குப் பொறுப்பான செயலாக்க அமைப்பின் நிரல்
control punch : கட்டுப்பாட்டுத் துளை ஒரு குறிப்பிட்ட இயக்கத்தைச் செய்யுமாறு கணினிக்கு ஆணையிடும் ஒரு குறிப்பிட்ட குறியீட்டைக் கொண்ட
அட்டை.
control register, access : அணுகு கட்டுப்பாட்டுப் பதிவகம்.
controls1 : கட்டுப்பாடுகள் செயலாக்கத் தொழில் நுட்பங்கள் அல்லது தரவுகளின் துல்லியம், பாதுகாப்பு, நம்பகத் தன்மை அல்லது முழுமையை உறுதி செய்யும் முறைகள்.
controls2இயக்குவிசைகள் விசுவல்பேசிக் போன்ற பயன்பாட்டு மொழிகளில் பயனாளர் இடை கருவி உருவாக்கக் முகங்களை மிக எளிய முறையில் முறையில் இருக்கின்றன.
control section : கட்டுப் பாட்டு பிரிவு நிரலின் ஆனைகளின் படி கணினியின் இயக்கத்தை வழி நடத்தும் மையச் செயலக சாதனத்தின் பகுதி.
control sequence : கட்டுப் பாட்டு வரிசை ஒரு நேரத்தில் ஒன்று மட்டும் என்ற வரிசையில் ஆனைகளை இலக்கமுறை கணினிக்கு தேந்தெடுப்பதற்க்கான வழக்கமான முறை. control signal : கட்டுப்பாட்டு சமிக்கை : எந்திரங்களையும், செயல் முறைகளையும், தானியங்கி முறையில் கட்டுப்படுத்த கணினி உருவாக்கும் சமிக்கை.
control statement : கட்டுப்பாட்டுக் கூற்று : ஒரு நிரலில் வேறொரு பகுதிக்கு கட்டுப்பாட்டை மாற்றுவதற்கான கட்டளை அமைப்புகளை வரிசை முறையில் செயற்படுத்துவதை நிறுத்தும் இயக்கம்.
control station : கட்டுப்பாட்டு நிலையம் : முகவரியிடல், வாக்களித்தல், தேர்ந்தெடுத்தல், திரும்பப் பெறல் போன்ற கட்டுப்பாட்டு நடைமுறைகளை மேற்பார்வை செய்யும் கட்டமைப்பு நிலையம். கொள்கை நிலை அல்லது பிற வழக்கத்துக்கு மாறான சூழ்நிலைகள் ஏற்படும்போது ஒழுங்கினை ஏற்படுத்தப் பொறுப்பானது.
control store : கட்டுப்பாட்டு கிடங்கு : நுண் நிரல் கட்டுமான அமைப்பில் நுண் ஆணைகளை சேமிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சிறப்பு, அதிவேக சாதனம்.
control string : கட்டுப்பாட்டுச் சரம் : வன்பொருளைக் கட்டுப்படுத்துகின்ற எழுத்துகளின் தொடர் வரிசை. அச்சுப்பொறிகளுக்கும், மோடம்களுக்கும் அனுப்பப்படுகின்ற தரவுகளின் உள்ளேயே கட்டுப்பாட்டுச் சரங்கள் சேர்க்கப்பட்டிருக்கும். தம் தகுதியைக் குறிப்பிடும் சிறப்பு எழுத்திலிருந்து அவை தொடங்கும்.
control strip : கட்டுப்பாட்டுப் பட்டை : 1. பதிவு செய்யப்பட்ட தரவுகளை ஏற்கெனவே அறிந்த மதிப்புகளுடன் ஒப்பிட்டு, துல்லியத் தன்மையைப் பாதுகாக்கத் தேவையான திருத்தங்களைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் அளவீட்டுக் கருவிகள். 2. கணினிப் பணியின்போது அடிக்கடிப் பயன்படுத்தக்கூடிய நிரல்களை, தரவுகளைக் குறுவழி (shortcuts) வடிவில் எளிதில் கையாளக் கூடிய இடத்தில் குழுவாக இருத்தி வைப்பது. நேரம், தேதி, மின்கலச் சக்தியின் நிலை போன்றவை இக்குழுவில் இடம் பெறலாம்.
control structures : கட்டுப்பாட்டு கட்டளை அமைப்புகள் : சொற்றொடர் ஆணைகளை வரிசை முறையில் செயல்படுத்துவதிலிருந்து விலகிச்செல்வதைக் குறிப்பிடும் ஆணைத் தொடர் மொழியில் உள்ள ஒரு வசதி.
control system : கட்டுப் பாட்டு முறைமை.
control tape : கட்டுப் பாட்டு நாடா.
control technology : கட்டுப் பாட்டு தொழில்நுட்பம் வெளிப்புறச் சாதனங்களைக் கட்டுப்படுத்துவதற்காக கணினிகளையும் நுண் மின்னணுக் கருவிகளையும் பயன்படுத்துவது. தானியங்கி அமைப்புகளில் இதை அதிகம் காணலாம்.
control, total : முழுக் கட்டு பாட்டு.
control unit : கட்டுப்பாட்டகம். கணினியின் முழு அமைப்பும் செயல்படுவதைக் கட்டுப்படுத்தும் செயலக சாதனத்தின் பகுதி. கட்டுப்பாட்டு பிரிவு என்றும் அழைக்கப்படும்.
control unit, central : மையக் கட்டுப்பாட்டகம்.
control variable : கட்டுப்பாட்டு மாறி திரும்பத் திரும்பச் செயல்படுத்தப்படும் ஒரு செயல் முறையின் போது பின் தொடர்ந்து செல்லும் ஒரு மாறி. ஒவ்வொரு முறை செயல்படும் போதும் அதன் மதிப்பு கூடுகிறது. அல்லது குறைகிறது. ஒரு நிலை எண் அல்லது பிற மாறி களுடன் ஒப்பிடப்பட்டு செயல்முறையின் இறுதி அறியப் படுகிறது.
control words : கட்டுப்பாட்டுச் சொற்கள் நிரலின் சிறப்புப் பொருள் உள்ள ஒதுக்கப்பட்டசொற்கள்.
convention : மரபு ஒரு குறிப்பிட்ட நிரல் அல்லது அமைப்புகளுக்காக ஏற்படுத்தப்பட்ட திறமான, ஏற்கப்பட்ட நடை முறைகள் மற்றும் சுருக்கங்கள், குறியீடுகள் மற்றும் அவற்றின் பொருள்கள். பல்வேறு நிரல்களை ஒன்றினைக்கும் நடைமுறை விதிகள்.
convergence : சங்கமம் : ஏற்கெனவே தனித்தனியாக இருக்கும் தொழில் நுட்பங்களை ஒன்று சேர்த்தல். ஒரு சிஆர்டி படப்புள்ளியில் சிகப்பு, பச்சை மற்றும் நீல மின்னணு ஒளிக்கதிர்கள் ஒன்று சேர்தல்.
conversational : உரையாடல் முறை பயனாளருடன் உரையாடல் நடத்த அனுமதிக்கும் நிரல் தொடர் அல்லது அமைப்பு. அவர் கொடுக்கும் உள்ளிட்டை வாங்கிக் கொண்டு அவரது போக்கில் செயல்பட அது இசைந்து கொடுக்கிறது.
Conversational interaction : உரையாடல் பரிமாற்றம் : பயனாளருக்கும் எந்திரத்துக்கும் இடையில் உரையாடல் முறையில் நடைபெறும் பரிமாற்றம்.
conversational language : உரையாடல் முறை மொழி : கணினிக்கும் அதனைப் பயன்படுத்துபவருக்கும் இடையில் தகவல் தொடர்பு ஏற்பட வசதியாக ஏறக்குறைய ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தும் நிரல் தொடர் மொழி. பேசிக் ஒரு உரையாடல் மொழி.
conventional memory : அடிப்படை நினைவகம் : மரபு நினைவகம் பீ. சி. யின் நினைவகத்தில் முதல் மெகா பைட்டில் முதல் 610-கேயை மட்டும் இது குறிப்பிடலாம். மீதி மேல்நிலை நினைவகப் பகுதியென்று அழைக்கப்படும்.
conversational mode : உரையாடல் பாங்கு : கணினிக்கும் அதனைப் பயன்படுத்துபவருக்கும் இடையில் உரையாடல் நடைபெற உதவும் இயக்கமுறை. இதில் அதற்குக் கிடைக்கும் உள்ளிட்டினைப் பெற்று அதற்கேற்ப கேள்விகள் அல்லது குறிப்புகளை கணினி திருப்பி அளிக்கும்.
conversational operation : உரையாடல் முறை செயல்பாடு : ஒரு நேரத்தில் ஒரு எழுத்து என்ற முறையில் தரவு பயணம் செய்யும் கணினியில் ஒளிக்காட்சித்திரை முகப்புக்கும், கணினிக்கும் இடையில் தரவு அனுப்பப்படுதல்.
conventional programming : மரபு நிரலாக்கம் : ஒரு நடைமுறை மொழியைப் பயன்படுத்தி நிரல் உருவாக்குவது.
conversational remote job entry : உரையாடல் முறை தொலை வேலை நுழைத்தல்.
conversion : மாற்றல் : மொழிமாற்றம் : 1. ஒரு கணினி மொழியிலிருந்து ஒன்றுக்கு அல்லது துளையிட்ட அட்டைகளிலிருந்து காந்தத்தட்டுக்கு என்பது போன்று ஒரு வகையிலிருந்து வேறு ஒரு வகைக்கு மாற்றும் செயல்முறை. 2. ஒருவகையான செயலாக்க முறையிலிருந்து வேறொன்றுக்கு அல்லது ஒரு கருவியிலிருந்து வேறொன்றுக்கு மாற்றுதல். 3. ஒரு வகையான எண்முறையிலிருந்து வேறொன்றுக்கு மாற்றல்.
conversion, data : தரவு மாற்றம்.
conversion table : மாற்றல் பட்டியல் : இருவகையான எண்முறைகளில் உள்ள எண்களை ஒப்பிடும் பட்டியல்.
பதின்மம் | இருமை | பதினாறின் எண்முறை | எண்ம எண்முறை |
0 | 00000 | 0 | 0 |
1 | 00001 | 1 | 1 |
2 | 00010 | 2 | 2 |
3 | 00011 | 3 | 3 |
4 | 00100 | 4 | 4 |
5 | 00101 | 5 | 5 |
6 | 00110 | 6 | 6 |
7 | 00111 | 7 | 7 |
8 | 01000 | 8 | 10 |
9 | 01001 | 9 | 11 |
10 | 01010 | A | 12 |
11 | 01011 | B | 13 |
12 | 01100 | C | 14 |
13 | 01101 | D | 15 |
14 | 01110 | E | 16 |
15 | 01111 | F | 17 |
16 | 10000 | 10 | 20 |
convert : மாற்று : ஒரு எண் அடிப்படையிலிருந்து வேறொரு எண் அடிப்படைக்குத் தகவலை மாற்றுதல். 2. நெகிழ் வட்டிலிருந்து நிலைவட்டுக்கு என்பது போன்று ஒரு வகையான இருப்பிடத்திலிருந்து வேறொன்றுக்கு மாற்றுதல்.
convert data base : தரவுத் தளத்தை மாற்று.
converter : மாற்றி : 1. ஒரு வகையான ஊடகத்திலிருந்து வேறு வகையான ஊடகத்திற்குத் தரவுவை மாற்றும் சாதனம். துளையிட்ட அட்டைகளிலிருந்து தரவுவைப்பெற்று காந்த வட்டுகளில் பதிவு செய்வதைப் போன்றது. 2. தொடர் முறையிலிருந்து இலக்க முறைக்கு என்பது போல் ஒரு வடிவத்தில் உள்ள தரவுவை வேறு ஒரு வடிவத்திற்கு மாற்றுதல்.
converter, analog/digital : தொடர்முறை - இலக்கமுறை மாற்றி.
converter, digital/analog : இலக்க முறை - தொடர்முறை மாற்றி.
convertion, binary to decimal : இரும, பதின்ம மாற்றுகை.
convex : புற வளைவு : குவி.
cookbook : பயனாளர் கையேடு : ஒரு நிரலாக்கத் தொடரை எவ்வாறு நிறுவி பயன்படுத்துவது என்பதை படிப்படியாக விவரிக்கும் ஆவணம்.
cookie : குக்கி : 1. வாடிக்கை யாளராகிய கிளையன் (client) கணினியின் கோரிக்கைக்கு மறுமொழியாக வழங்கன் (server) கணினி அனுப்புகின்ற தரவு தொகுதி. 2. வைய விாவலையில் ஒரு வலை வழங்கன் கணினி, கிளையன் கணினியில் பதிவு செய்கின்ற தரவு தொகுதி. பயனாளர் மீண்டும். அதே தளத்தைப் பார்வையிடும் போது, இணைய உலாவியானது குக்கியின் ஒரு நகலை வலை வழங்கனுக்கு அனுப்பி வைக்கும். பயனாளர்களை அடையாளம் காணவும், பயனாளருக்கு ஏற்ற வகையில் வலைப்பக்கத்தை வடிவமைத்து அனுப்புமாறு வழங்கனுக்கு அறிவுறுத்தவும் மற்றும் பிற நிர்வாகப் பணிகளுக்கும் குக்கிகள் பயன்படுகின்றன. 3. தொடக்க காலத்தில் யூனிக்ஸ் இயக்கமுறைமையில்தான் இத்தகைய குக்கி நிரல்கள் இயக்கப்பட்டன. அதிர்ஷ்ட குக்கி என அழைக்கப்பட்டது. ஒவ்வொரு முறை இந்த நிரலை இயக்கும் போதும் வெவ்வேறு அதிர்ஷ்ட செய்திகள் வெளியிடப்படும். பொதுவாக, ஒரு பயனாளர் யூனிக்ஸ் முறைமைக்குள் தன்னை இணைத்துக்கொள்ளும்போது (logon) இந்த குக்கி நிரல் இயக்கப்படும். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு செய்தி பயனாளருக்குக் கிடைக்கும்.
cookie filtering tool : குக்கி வடிகட்டிக் கருவி : ஒரு வலைத்தளத்தை அணுகும்போது பயனாளரைப் பற்றிய தரவுகளை, வலை உலாவி மூலம் அனுப்பிவிடாமல் குக்கியைத் தடைசெய்யும் ஒரு பயன் கூறு (utility).
coolants : குளிர்விப்பான்கள்.
cooling fan : குளிரூட்டும் விசிறி : மின்சுற்று அட்டைகளும், ஐ. சி-க்களும் குளிர்ச்சியாக இருக்குமாறு வைத்துக் கொள்ளும் ஒரு சிறிய காற்றாடி.
co-operating sequential process : கூட்டுறவு வரிசைமுறைச் செயலாக்கம்.
co-operative multitasking : கூட்டுறவு பல்பணி முறை : பல்பணிச் செயலாக்கத்தில் ஒரு வகை. ஒரு முன்புலப் பணியின் இடைநேரத்தில், ஒன்று அல்லது மேற்பட்ட பின்புலப் பணிகளுக்கான செயலாக்க நேரத்தை முன்புலப் பணி அனுமதிக்கும்போது மட்டுமே ஒதுக்க முடியும். மெக்கின்டோஷ் இயக்க முறைமையில் இதுதான் முதன்மையான பல்பணி முறையாகும்.
co-operative processing : கூட்டுறவு செயலாக்கம் : பெருமுக கணினி, சிறு கணினி மற்றும் பீ. சி. போன்ற இரண்டு அல்லது மேற்பட்ட கணினிகள் ஒரு வேலையைப் பங்கிட்டுக் கொள்ளல். அதிகத் திறனுக்காக வேலையைப் பகுத்துக் கொள்ளல்.
co-operative work : கூடிப் பணியாற்றல்; கூடிச் செயல் படல். co-ordinate : ஆயத்தொலை; சந்திப்புள்ளி : கார்ட்டீசிய ஒருங்கிணைப்பு அமைவின் ஒரு இடத்தைக் குறிப்பிடும் தொடர் புள்ள தரவு மதிப்புகளின் தொகுதி. மின்னணு தரவுதாளில், இரண்டு எண்கள் மற்றும் எழுத்துகள் சங்கமித்து ஒரு கலத்தின் நெடுக்கை அல்லது கிடக்கையை அடையாளம் காணல்,
coordinate dimensioning : ஆயத் தொலை பரிணாமம் : பரிணாமம் அமைத்தல். இதில் புள்ளிகள் ஒரு குறிப்பிட்ட பரிணாமத்தினை வரையறுக்கும். ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து போவது ஒரு வரையறுக்கப்பட்ட அச்சை ஒட்டி அளிக்கப்படும்.
coordinate indexing : ஒருங்கிணைந்த பட்டியலிடல் : 1. தனி ஆவணங்களை விரித்துரைத்தல் மூலம் பட்டியலிடும் முறை. சமமான நிலையில் உள்ள விரித்துரைப்புகளால் இது செய்யப்படுவதால் நூலகத்தில் ஒன்று அல்லது மேற்பட்ட வரைவு மூலம் தேடமுடியும். 2. தனிப்பட்ட சொற்களை ஒன்று சேர்க்கும் முறையில் சொற்களுக்குக்கிடை யேயான தொடர்பைக் காட்டும் பட்டியலிடல் தொழில் துட்பம்.
coordinate paper : ஒருங்கிணைந்த தாள் : இலக்கமுறை வரைவு பொறிகளால் உருவாக்கப்படும் படங்கள், வரைபடங்களுக்குப் பயன்படுத்தப்படும் வரைபட முறை காகிதம்.
co-processor : இணைச் செயலி : மையச் செயலியை ஓய்வாக வைத்திருக்க, நேரம் எடுக்கும் பணிகளைச் செய்யும் துணைச் செயலி. அதன் விளைவாக ஒட்டு மொத்த அமைப்பின் செயல் வேகம் அதிகரிக்கிறது. ஒரு மைய செயலி வேறொரு மையச் செயலியுடன் சேர்ந்து செயலாற்றி மொத்த அமைப்பின் கணிப்பு சக்தியைக் கூட்ட முடியும் அறிவார்ந்த முனையமும் இணைச் செயலகமாகச் செயலாற்றுகிறது.
copy : படி , பிரதி, நகல்; படி எடு : பிரதி எடு; நகலெடு : மூல நகல் மாறாமல் வேறொரு இடத்தில் தரவுவை மறு உற்பத்தி செய்வது.
copy backup : பாதுகாப்பு நகல்.
copy buster : நகல் கிளர்வி : நகல் பாதுகாப்புத் திட்டங்களை ஒதுக்கிச் செல்லும் நிரல். சாதாரண, பாதுகாப்பற்ற பிரதிகள் எடுக்க அனுமதிப்பது.
copy command : நகல் ஆணை.
copy disk : காப்பி டிஸ்க் : ஒரு நெகிழ்வட்டிலுள்ள தரவுகளை இன்னொரு நெகிழ் வட்டில் பதிவதற்கான எம்எஸ் டாஸ் கட்டளை.
copy fit : நகல் பொருத்தி : கிடைத்துள்ள இடத்தில் செய்தி யைப் பொருத்துதல். copy, hard , வன்நகல், தாள் நகல்.
copy holder : நகல் பிடிப்பொறி : விசைப்பலகையில் தட்டச்சு செய்யும்போது படிக்க வசதியாக காகிதத்தினை பிடித்துக் கொண்டிருக்கும் சாதனம், (முதுகு , தோள், கழுத்து, கண் தொல்லையைக் குறைக்க உதவுவதே இதன் நோக்கம்.
copying machine : நகலெடுக்கும் எந்திரம் : எழுதப்பட்ட/அச்சிடப்பட்ட பொருளின் நகலைத்தரும் மின்னணு எந்திரம் நிலைமின் ஒளிப்படவியலின் பிரிவான xerography தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது. புலனாகின்ற அகச்சிவப்பு, (அல்ட்ரா வயலட்) கதிர்கள், நிலை மின்சக்தி மாறும் தன்மையைக் கொண்டு ஒளிகடத்தும் ஊடகத்தில் நகல் எடுக்கப்படுகிறது.
copy programme : நகல் நிரல் : ஒன்று அல்லது மேற்பட்ட கோப்புகளை வேறொரு வட்டுக்கு நகலெடுக்க வடிவமைக்கப்பட்ட நிரல். ஒரு கணினி மென்பொருளை நகல் பாதுகாப்பு முறையை நகலெடுக்கும் நிரல்.
copy protection : நகல் பாதுகாப்பு : தங்களது மென்பொருள்களை யாரும் நகல் எடுத்து விடக்கூடாது என்பதற்காக மென்பொருள் உருவாக்குபவர்கள் பயன்படுத்தும் முறைகள். மென்பொருளை சட்டத்திற்குப் புறம்பாக நகல் எடுப்பதிலிருந்து எதிராகப் பாதுகாப்பதற்காக, பெரும்பாலான உற்பத்தியாளர்கள் நகல் பாதுகாப்பு செயல்கூறுகளை தங்களது மென்பொருள்களில் சேர்த்திருப்பார்கள். நகல் பாதுகாப்பு முறைகள் உயர்நுட்பம் வாய்ந்தவை. ஆனால் பல நகல் பாதுகாப்பு நுட்பங்களை முறியடித்து, அத்துமீறி நகலெடுக்கும் அதி புத்திசாலி நிரலர்களும் உள்ளனர்.
copyright : பதிப்புரிமை : ஒரு வருடைய படைப்புக்கு சட்ட முறையான பாதுகாப்பு தருவது. கணினி மென்பொருளுக்கும் இது பொருந்தும்.
copyrighted software : காப்புரிமைபெற்ற மென்பொருள் : பணம் கொடுத்து வாங்க வேண்டிய மென்பொருள். மென் பொருளை உருவாக்குகின்றவரின் அனுமதியின்றி நகல் எடுக்கக்கூடாது.
copy, soft : மென் நகல். வட்டுநகல்.'
CORBA : கோர்பா : பொதுப் பொருள் கோரிக்கை தரகர் கட்டுமானம் என்று பொருள்படும்
Common Object Request Broker Architecture என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். 1992-ஆம் ஆண்டில் பொருள் (மேலாண்மைக் குழு உருவாக்கித் தந்த வரன்முறைகள் ஆகும். வெவ்வேறு பணித் தளங்களில் செயல்படும் இரு நிரல்களில் உருவாக்கப் பட்டுள்ள வெவ்வேறு பொருள் கூறுகள் தமக்குள்ளே தரவு பரிமாற்றம் செய்து கொள்ளும். ஒரு நிரல், ஒரு பொருள் கோரிக்கை முகவர் (ORB) மூலமாக ஒரு பொருள் கூறின் சேவைக்கான கோரிக்கையை முன் வைக்கும். அந்தப் பொருள்களை உள்ளடக்கிய நிரலின் கட்டமைப்பு எப்படிப் பட்டது என்பதை அறிந்திருக்க வேண்டிய தேவை இல்லை. கோர்பா, ஒரு பொருள் நோக்கு பணிச் சூழலுக்கென வடி வமைக்கப்பட்ட தொழில் நுட்பம் ஆகும்..
cordless telephone : கம்பியில்லாத் தொலைபேசி.
cordless video transmitter : கம்பியில்லாத ஒளிபரப்பி : 60 மீட்டர் குறுக்களவுக்குள் எத்தனை தொலைக்காட்சிப் பெட்டிகள் இருந்தாலும் அத்தனைக்கும் ஒலிஒளி சரிக்கைகளை அளிக்கும் மின்னணுக் கருவி.
core : உள்ளகம் : காந்தப் படுத்தப்படக்கூடிய ஃபெரைட் மையத்தைக் கொண்ட தலைமை நினைவகம்.
core, bistable magnetic : இரு நிலை காந்த உள்ளகம்.
core ferrite : இரும்பு உள்ளகம்.
core magnetic : காந்த உள்ளகம். core memory : உள்ளக நினை வகம்; உள்மைய நினைவு : ஃபெரைட் வளையங்களாலான ரைடுகளால் உருவாக்கப் படும் காந்த நினைவகம். இதை ஒரு திசையில் காந்தப்படுத் தினால் இரும எண் -ம் வேறு திசையில் காந்தப்படுத்தினால் ) வும் வரும். 1940இல் ஜே. மிர் பாரஸ்டர் மற்றும் டாக்டர் அன்வாஸ் ஆகியோர் இதை உருவாக்கினார்கள். மின்சாரம் இல்லாமலேயே இது இயங்கும் என்பதால் இராணுவம், விண்கலங்கள் ஆகியவற்றில் இன்னும் இது பயன்படுத்தப் படுகிறது.
care programme : உள்ளக நிரல் : குறிப்பிலா அணுகு நினைவகத்தில் {Random Access Memory) தங்கியிருக்கும் ஒரு நிரல் அல்லது நிரலின் ஒரு பகுதி.
coresident : உடன்தங்கல் : இரண்டு அல்லது மேற்பட்ட நிரல்கள் ஒரே நேரத்தில் நினை வகத்தில் ஏற்றப்பட்டு இருக்கும் நிலையைக் குறிக்கிறது.
core storage : உள்ளகச் சேமிப்பு : காந்த மையங்களைப் பயன் படுத்தும் சேமிப்புச் சாதனம். ஒரு வரிசையாக கம்பிகளின் மூலம் இது தொகுக்கப்படுகிறது.
core store. : உள்ளக சேமிப்பு.
core system : உள்ளக முறைமை : கணினி வரை கலைக்காக முதலில் உருவாக்கிய தர நிர்ணயம். சிகார்ப் நிறுவனம் உருவாக்கியது. கணினிகளுக் கிடையே நிரல்களை மாற்றி அனுப்ப முடிவதும், பார்க்கும் வரைகலையும் மாதிரியாக்கும் வரைகலையும் தனிமைப்படுத்தப்படுவதும் இதன் நோக்கங்கள். அன்சி அங்கீகரித்த ஜிகோஸ் தர நிர்ணயம் இதன் அனைத்து தன்மைகளையும் ஏற்றுள்ளது.
corner cut : மூலை வெட்டு : துளையிட்ட அட்டையின் மூலை வெட்டு. தொடர்புடைய அட்டைகளின் குழுக்களை கண்டுபிடிக்க உதவுகிறது.
corona wire : மின்னுமிழ்வுக் கம்பி : லேசர் அச்சுப்பொறிகளில் பயன்படுத்தப்படும் ஒர் இணைப்புக் கம்பி. காற்றை அயனியாக்க இதன் வழியாக உயர் மின்னழுத்தம் பாய்ச்சப் படுகிறது. அதன் மூலம் ஒரே சீரான நிலைமின்னூட்டம் ஒர் ஒளியுணர் ஊடகத்துக்கு மாற்றப் பட்டு லேசர் கதிர் உருவாக்கப் படுகிறது.
coroutine : இணை நிரல்கூறு : உள்ளிட்டுத் தொகுதி ஒன்றை வெளியீட்டு தொகுதியாக மாற்ற உதவும் ஆணைகள்.
corporate model : நிறுவன மாதிரியம் : ஒரு நிறுவனத்தின் நடைமுறைகள் கணக்கீட்டு மற்றும் நிதிக் கொள்கை வழி காட்டிகளை பாவிப்பு நிகழ்வாகக் கணித முறையில் குறிப்பிடுவது. சில குறிப்பிட்ட அனுமானங்களின் கீழ் ஏற்படும் நிதி விவகார முடிவுகளை மதிப்பீடு செய்து மாற்றுத் திட்டங்களை உருவாக்குதல், நீண்டகால மதிப்பீடுகளை இத்தகைய மாதிரியங்களைப் பயன்படுத்தி மதிப்பிடுவார்கள். சமநிலை செயலாக்கிகளைப் பயன்படுததுவதே சிறந்தது என்றாலும் விரிதாள்களும் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன.
corporates : நிறுமங்கள்.
correction : திருத்தம்.
corrective : பழுது நீக்கல்.
corrective maintenance : சரி செய்யும் பராமரிப்பு : தவறுகள் ஏற்பட்ட பிறகு அவற்றைக் கண்டுபிடித்து சரி செய்தல்.
தற்காப்பு (preventive maintenance) பராமரிப்புக்கு மாறானது.
correspondence quality கடித போக்குவரத்துத் தரம் : டெய்சி சக்கரம் மற்றும் சில புள்ளியணி அச்கப்பொறிகளால் கிடைக்கும் அச்சு. அச்சுப் பொறியில் எழுத்துகளை உருவாக்கப் பயன்படும் புள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அச்சின் தரம் கூடுகிறது.
correspondence quality printing : கடிதத் தொடர்பு தர அச்சு புள்ளியணி அச்சுப் பொறிகளின் அச்சுத் தரம் முதலில் விட்ட இடைவெளியை நிரப்ப இரண்டாவது முறை Near letter Quality என்பதும் இதுவும் ஒன்றே.
corrupt : பழுதடைதல்
corrupt data file : பழுதடைந்த, தரவுக் கோப்பு.
corrupted file : பாழ்ப்பட்ட : துண்மிகளை மீண்டும் வரிசைப் படுத்தும் மாற்ற மடைந்த தரவு அல்லது நிரல் கோப்பு. படிக்கமுடியாத வகையில் வீணாகிப்போனது.
corruption : பாழாதல் : வன் பொருள் அல்லது மென் பொருள் கோளாறின் காரணி தநவு அல்லது நிரல்
கோப்பு. படிக்க முடியாத வகையில் வீணாகப் போது.
cosmos : காஸ்மோஸ் : நோர்ஸ்க் டேட்டா நார்வே உருவாக்கிய ஒரு தரவுத் தொடர்பு தொகுப்பு. குறும்பரப்பு பிணையம் அல்லது விரிபரப்புப் பிணையம் மூலம் விநியோகிக்கப்பட்ட தரவு செய லாக்கங்களுக்கான மூலாதாரங்களை, பங்கிட்டுக் கொள்வதில் சிறந்த தீர்வளிப்பது.
cost analysis : செலவு பகுப்பாய்வு : ஒரு அமைப்பின் ஒட்டு மொத்தச் செலவை முடிவு செய்து, ஒரு புதிய வடிவமைப்புக்கு எதிர்பார்க்கப்படும் செலவு காரணிகளை ஒப்பிடும் நுட்பம்.
cost/benefit analysis : செலவுபலன் பகுப்பாய்வு ஒரு புதிய தரவு அமைப்பின் செலவுகள் மற்றும் ஆதாயங்களைக் கண்டு உரைக்கும் ஒரு ஆய்வு. வளர்ச்சிக்குத் தேவையான ஆட்கள் உரைக்கும் கள் மற்றும் எந்திரச் செலவுகள் மட்டுமல்லாது அமைப்பை கணினி இயக்குவதும் செலவுகளில் அடங்கும். பழையதை ஒப்பிடும்போது புதிய கணினி அமைப்பை இயக்கு வதில் ஏற்படும் எந்திர மற்றும் மனித மூலாதாரங்களின் சேமிப்ஞபும் இதில் அடங்கும். கூடுதல் வாடிக்கையாளர் சேவை, ஊழியர் உறவுகள் போன்று அளந்து சொல்ல முடியாத பலன்களும் இதில் அடங்கும்.
உறவுகள் சொல்ல cost effectiveness : செலவின் விளைவு : இலாபங்கள் மற்றும் அவற்றை அடைய உதவும் மூலாதாரங்களுக்கான உறவின் செயல்முறை அல்லது அமைப்பின் விளைவு. செலவுகளைவிட பெறப்பட்ட பலன்கள் அதிகரித்தால் செலவு குறைவு என்று கருதப்படும்.
costing : செலவுக் கணக்கிடல் : ஒரு திட்டம், வேலை அல்லது பணிக்கு ஆகும் செலவுகளைக் கண்டறியும் முறை.
cottage key people : இல்லப் பணியாளர் : தங்கள் வீடுகளில் அமர்ந்து பணியாற்றி, தொலைத்தரவுத் தொடர்புகள், வட்டுகள் அல்லது பிற வழிகளில் நிறுவனங்களுடன் தொடர்பு கொள்பவர்கள்.
coulomb , கூலம் (ப்) : மின் சக்தி ஏற்கும் அடிப்படை எஸ். ஐ அலகு 6. 25 x 1018 எலெக்ட்ரான்கள் சேர்ந்து 1 கூலம் (ப்) மின்சக்தி ஏற்கிறது.
count : எண்ணிக்கை : ஒரு நிகழ்வு எத்தனை தடவை நடைபெறுகிறது என்பதில் அடுத்தடுத்த கூடுதல் அல்லது குறைவதின் ஒட்டுமொத்த எண்ணிக்கை.
counter : எண்ணி : ஒரு நிகழ்வு எத்தனை முறை நடைபெறுகிறது என்பதைக் குறித்து வைக்கும் பதிவகம் அல்லது ஒரு நிரலில் அத்தகைய எண்ணிக்கையை இருத்தி வைக்கும் ஒரு மாறி (variable).
counter, binary : இரும எண்ணி.
counter clerk : கணக்கெழுத்தர் : கணக்கிடு எழுத்தர்.
counter clockwise : இடச்சுற்று : வலது புறத்திலிருந்து இடது புறமாக நகர்த்தல்.
counter, control : கட்டுப்பாட்டு எண்ணி.
counter, ring : வளைய எண்ணி.
counter, step : படி எண்ணி.
counting devices : எண்ணிடும் சாதனம்.
counting loop : எண்ணிடும் மடக்கி : ஒரே செயலை குறிப்பிட்ட தடவைகள் திரும்பத் திரும்ப செய்யவேண்டும் என்பதைக் குறிப்பிடும் கட்டளை அமைப்பு.
count, record : ஏட்டு எண்ணிக்கை.
country : கன்ட்ரி : எழுத்துத் தொகுதியை அமைப்பதற்காக கணினியை இயக்கும் நேரத்தில் செயல்படுத்தப்படும் டாஸ் கட்டளை.
country code : நாட்டுக் குறி முறை. country. sys : கன்ட்ரி. சிஸ் : கன்ட்ரி கட்டளை இயக்கப்படும்போது நினைவகத்தில் ஏற்றப்படும் டாஸ் முறைமைக் கோப்பு.
coupler, acoustic : கேட்பொலிப் பிணைப்பி.
coupling : இடையிணைப்பு : அமைப்புகளுக்கிடையிலோ அல்லது அமைப்பின் உறுப்புகளுக்கிடையிலோ ஏற்படும் செயல்பரிமாற்றங்கள்.
courier : கூரியர் : தட்டச்சிலிருந்து வருகின்ற ஒரே இடைவெளி உள்ள எழுத்துரு (font).
course details : பாடத்திட்ட விவரம் : பாடத் திட்டம்.
courseware : கல்விப்பொருள் : கல்விப் பயன்பாடுகளுக்கென்று கணினி நிரல்களுக்குத் தரப்பட்ட பெயர். வேதியியல், வரலாறு, கணிதம், ஸ்பானிஷ் சொல்லித் தருதல் போன்றவை இதில் அடங்கும்.
covariance : சார்பு விலக்கல் : சார்பு மாறுகை இரண்டு தற்செயல் மாறிகளின் ஒன்றையொன்று விலகிச் செல்லும் அளவுகள்.
cpi : சிபீஐ : ஒர் அங்குலத்தில் எத்தனை எழுத்துக்கள் எனப் பொருள்படும் characters per inch என்பதன் குறும்பெயர்.
CPM : சிபீஎம் : உயிர்நாடிப் பாதை முறை எனப் பொருள்படும் Critical Path Method என்பதன் குறும்பெயர்.
CP/M : சிபீ/எம் : நுண் கணினிக்கான கட்டுப்பாட்டு நிரல் எனப் பொருள்படும் Contro| Programme for Micro computer என்பதன் குறும்பெயர். நுண் கணினிகளுக்குப் பரவலாக பயன்படுத்தப்பட்ட முதல் இயக்க முறைமை (operating system), ஒரு வட்டின் மீதுள்ள நிரல்களின் தொகுப்பாகிய சிபீ/எம், கணினி அமைப்புடன் இணைந்துள்ள சாதனங்களுக்குத் தரவு மாற்றவும், நிரல்களைச் செயல்படுத்தவும், கோப்புகளை வசதியாக கையாளவும் ஆணைகளை அளிக்கிறது.
CP/M compatible : சிபீ/எம் ஏற்புடைய : சிபீ/எம் இயக்க முறைமையுடன் சேர்ந்து செயல்பட ஏற்றதாக வடிவமைக்கப்பட்ட மென்பொருளைக் குறிப்பிடுகிறது
CPS : சிபீஎஸ் : உரையாடல் நிரலாக்க முறைமை எனப் பொருள்படும் Conversation Programming System soil 13, 331 குறும்பெயர். இது ஒரு கணினி
அமைப்பு. இதில் உள்ளீடு, வெளியீடுகளை தொலைவிலுள்ள ஒரு முனையம் கையாள்கிறது. நேரப்பங்கீட்டினைக் கடைப்பிடிப்பதால், பயனாளர் உடனடியாக பதில் பெறுவது போலவே தோற்றமளிக்கும். நிரலாக்க மொழியின் துணைத் தொகுதி எனலாம். ஐபிஎம்மால் உருவாக்கப்பட்டது.
CPSR ; சிபீஎஸ்ஆர் : சமூக பொறுப்புணர்வுமிக்க கணினி இயலாளர் எனப் பொருள்படும் Computer Professionals for Social Responsability என்ற தொடரின் தலைப்பெழுத்துக் சமூகப் குறும்பெயர். கணினித் தொழில் நுட்பம் இராணுவத் தேவை களுக்குப் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து உருவாக்கப் பட்ட ஒரு பொதுநல அமைப்பு. மனித சமூகத்தின் வாழ்வியல் உரிமைகள் மற்றும் தொழிலாளர்களின்மீது கணினிகளின் தாக்கம் போன்ற பிரச்சினைகளில் இவ்வமைப்பு நாட்டம் செலுத்துகிறது.
CPU சி. பீ. யு மைய செயலகம் எனப் பொருள்படும் Central Processing Unit என்பதன் பெயர்.
CPU cache : சி. பீ. யு இடை மாற்றகம் : மையச் செயலகத்தையும் முதன்மை நினைவகத்தையும் இணைக்கும் விரைவு நினைவகத்தின் ஒரு பகுதி. சி. பீ. யூ வுக்குத் தேவையான அதாவது சி. பீ. யூ அடுத்துக் கையாளவிருக்கும் தரவு மற்றும் நிறை வேற்றவிருக்கும் ஆணைகளையும் இந்த நினைவகப் பகுதி தற்காலிகமாகக் கொண்டிருக் கும். நினைவகத்துடன் ஒப்பிடுகையில் சி. பீ. யூ இடைமாற்று நினைவகம் அதிக இதிலுள்ள தரவு, தொகுதி தொகுதியாகப் பரிமாறப்படுவதால் செயல்பாட்டு வேகம் அதிகரிக்கிறது. சிபியூவுக்கு அடுத்துத் தேவைப் படும் தரவு எதுவென்பதை சில படிநிலைத் தருக்க முறையில் இயக்க முறைமை தீர்மானிக்கிறது. இது, இடை மாற்று நினைவகம் (cache memory) என்றும் நினைவக இடை மாற்று (memory cache) என்றும் அழைக்கப்படும்.
CPU cycle : திடீர் சூழ்ச்சி 1. மையச் செயலகம் உணர்ந்து கொள்ளுமளவுக்கான மிகச்சிறிய நேர அலகு ஒரு வினாடியில் சில பத்துக் கோடியில் ஒரு பகுதியைக் குறிக்கும். 2. ஒரு பதிவகத்தின் (register) உள்ளடக் கத்தைக் கொணர்தல் போன்ற மிக எளிய ஆணைகளை நிறைவேற்ற அல்லது செயல்
பாடில்லா (Non-Operation-No) ஆணையை நிறைவேற்ற சி. பீ. யூ எடுத்துக் கொள்ளும் நேரம்.
CPU fan : சிபீயூ விசிறி மையச் செயலகத்தின்மீது அல்லது சிபியூவின் வெப்பக்கவர்வி மீது பொருத்தப்படும் ஒரு மின்சார விசிறி. சி. பீ. யூவைச் சுற்றிக் காற்றைச் கழலச் செய்து வெப்பத்தைத் தணிக்க உதவுகிறது.
CPU speed : சிபீயூ வேகம் : ஒரு குறிப்பிட்ட மையச் செயலகத்தின் தரவு செயலாக்கத் திறனின் ஒப்பீட்டு அளவுகோல். பெரும்பாலும் மெகாஹெர்ட்ஸில் அளக்கப்படும்.
CPU time : சி. பீ. யு நேரம் : நிரலின் ஆணைகளைச் செயல் படுத்துவதற்காக மையச் செயலகம் எடுத்துக் கொள்ளும் நேரம்.
. cr : . சிஆர் : ஒர் இணைய தள ரீக்கா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.
cracker தகர்ப்பர்; உடைப்பவர் : ஒரு கணினி அமைப்பின் பாதுகாப்பு ஏற்பாடுகளை உடைத்து அத்துமீறி நுழையும் நபர். ஒரு கணினி அமைப்பிலிருந்து சட்டத்துக்குப் புறம்பாக தகவலைப் பெறுதல் அல்லது கணினி வளங்களைப் பெறுதல்.
Cray
இதுவே சில தகர்ப்பர்களின் நோக்கமாக இருக்கின்றது. ஆனால், அமைப்பின் பாதுகாப்பை வெற்றிகரமாக உடைத்து உள்நுழைவது மட்டுமே பெரும்பாலான தகர்ப்பர் களின் மைய நோக்கமாய் உள்ளது.
crash : வீழ்ச்சி மென்பொருள் தவறு அல்லது வன்பொருள் செயல் கோ ளாறினால் கணினி அமைப்பு இயங்காமல் நின்று போவது.
crash, conversion : முறிவு நிலை மாற்றம்,
crash recovery : முறிவு மீட்சி : ஒரு கணினியில் நிலை வட்டு பழுதடைவது போன்ற ஒரு பேரழிவுப் பழுதுக்குப்பின் மீண்டும் செயல்பாட்டைத் தொடங்க அக்கணினிக்கு இருக்கும் திறனை இவ்வாறு குறிப்பிடலாம். பெரும்பாலும், தகவலுக்கு எவ்வித இழப்பும் இல்லாமல் மீட்கப்பட முடியும். சிலவேளைகளில், முழுவதுமாக இல்லாவிட்டாலும் சிறி தளவு தரவு இழக்கப் படுவதுண்டு.
cray , கிரே கிரே ரிசர்ச் நிறுவனம் உருவாக்கிய மீத்திறன் (சூப்பர்) கணினிகளின் வரிசை. கிரே-1 ஒரு நொடியில் 80 கோடி நிரல்களைச் செயல்படுத்தும்.
பத்து இலட்சம் எழுத்துகளை சேமித்து வைக்கும். கிரே-2 ஒரு நொடியில் நூறு கோடி செயல் பாடுகளை நிகழ்த்தவல்லது.
Cray Seymour : கிரே செய்மோர் : 1980 முதல் மீத்திறன் கணினியான கிரே 1-ஐயும் பின்னர் ஐந்து ஆண்டுகள் கழித்து கிரே -2 மீத்திறன் கணினியையும் வடிவமைத்து அறிமுகப்படுத்தியவர்.
CRC சிஆர்சி : சுழல்மிகைச் சரி பார்ப்பு எனப் பொருள்படும் Cyclic Redundancy Check என்பதன் குறும்பெயர். தரவுகளை அனுப்புவதில் ஏற்படும் பிழைகளைச் சோதிக்க இந்த முறை கடைபிடிக்கப்படுகிறது.
create உருவாக்கு : 1. இருக்கின்ற கோப்பை மாற்றுவதற்குப் பதிலாக புதிய கோப்பை வட்டின்மீது உருவாக்குதல். 2. தரவுத் தளத் தொகுப்புகளில் ஒர் அட்டவணையை வடிவமைக்கும் பொருட்டு அதில் இடம் பெறும் புலங்களின் பெயர், நீளம், தரவினம் போன்றவற்றை வரையறுக்கும் கட்டளை.
பதிலாக
create image : படிமம் உருவாக்கு.
create replica : படி உருவாக்கு
create root pane : மிகப் பாளம் உருவாக்கு.
create shortcut : குறு வழி உருவாக்கு.
creating : உருவாக்குதல்.
creation : உருவாக்கல் : தோற்றுவிப்பு.
creative designer : படைப்புத் திறன் வடிவமைப்பாளர் : கணினிப் பதிப்புத் துறையில் (டி. டீ பீ) பக்கங்களை வெளியமைப்பு செய்து வடிவமைக்கும் நபர்.
creativity படைப்பாக்கம் : படைப்புத் திறன்.
creator - கிரியேட்டர் : ஆப்பிள் மெக்கின்டோஷில் உள்ள ஒரு நிரல். ஒர் ஆவணத்தை உருவாக் கும்போது அதற்கும் அதை உரு வாக்கிய பயன்பாட்டுத் தொகுப் புக்கும் இடையே ஒரு தொடுப் பினை உருவாக்கும் நிரல் இது. ஒரு ஆவணத்தைத் திறக்கும்போது, இயக்க முறைமையானது அந்த ஆவணம் உருவாக்கப்பட்ட பயன்பாட்டுத் தொகுப்பை அடையாளம் கண்டு திறக்க இத் தொகுப்புப் பயன்படுகிறது.
credit card : பற்று அட்டை.
credit card number : பற்று அட்டை எண் : பணப் பொறுப்பு அட்டை எண்.
creeping : ஊர்தல் திரையின் குறுக்காக சொற்கள் நகர்ந்து செல்லல்.
creeping featurism : படரும் சிறப்புக் கூற்றியல் : ஒரு மென் பொருள் தொகுப்பின் புதிய
பதிப்பில் அதனை உருவாக்கி யவர் மேலும் மேலும் புதிய சிறப்புக் கூறுகளை சேர்த்துக் கொண்டே செல்லும் முறை. அத்தொகுப்பு மிகப் பெரிதாகி, பயன்படுத்த முடியாத அளவுக்குப் பெரிதாகி விடாமல் இந்த முன் னேற்றங்களைச் செய்வர். சந்தை யில் இதே போன்ற பிற மென் பொருள் தயாரிப்புகளுடன் போட்டியிடப் புதிய பதிப் பி வெளியிடும்போது, மேலும் புதிய சிறப்புக் கூறு களைச் சேர்த்து அதன் செய் திறனை மேம்படுத்த முயலும் போது இவ்வாறு நிகழ்கிறது.
cricket presents : கிரிக்கெட் வழங்கும் . கம்ப்யூட்டர் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் மெக்கின் டோஷ-க்கான டி. டி. பி மென் பொருள். திரைப்பட பதிவுகள், துண்டறிக்கைகள், ஒட்டுமொத்த செலவு போன்ற வெளியீடுகள் உருவாக்குவதற்கான திறனை இது அளிக்கிறது.
cricket stylist கிரிக்கெட் ஸ்டைலிஸ்ட் : ஆப்பிள் மெக் கின்டோஷ் கணினிக்கான புகழ் பெற்ற பொருள்நோக்கு படம் வரையும் மென்பொருள். கோடுகள் செவ்வகம் மற்றும் நீள் வட்ட கருவிகளைப் பயன்படுத்தி கிரிக்கெட் ஸ்டைலிஸ்ட் மூலம் ஒவியங்களை உருவாக்கும்.
cripped version : சுருக்க பதிப்பு : ஒரு வன்பொருள் அல்லது மென்பொருள் தயாரிப்பின் முன்னோட்டப் பதிப்பு. சுருங்கி வடிவில் இருக்கும். குறைந்த வசதிகளைக் கொண்டதாக இருக்கும்.
crippleware : தடுக்கும் பொருள் : சில கட்டுப்பாடுகளுடன் உரு வாக்கப்படும் செயல்விளக்க மென்பொருள். சான்றாக, 50 பதி வேடுகளை மட்டும் நுழைக்க அனுமதிக்கும் தரவுத் தளத் தொகுப்பைக் குறிப்பிடலாம்.
criteria range : வரன்முறை எல்லை பதிவேடுகளைத் தேர்வு செய்வதற்கான நிபந்தனைகள்.
critical error : உயிர்நாடி பிழை நெருக்கடிப் பிழை , கணினியின் செயலாக்கத்தையே இடை நிறுத்தம் செய்துவிடும் பிழை. ஒரு மென்பொருள் மூல மாகவோ, பயனாளரின் தலை பீட்டினாலோதான் அப் பிழை யைச் சரிசெய்ய முடியும். (எ-டு) இல்லாத ஒரு வட்டிலிருந்து படிக்க முயல்தல், அச்சுப்பொறி யில் தாள் தீர்ந்துபோகும் நிலை, தரவுச் செய்தி அனுப்புகையில் சரிபார்ப்புத் தொகை (checksum) யில் ஏற்படும் பிழை. இன்ன பிற.
critical-error handler : ஆபத்தான பிழை கையாளி டாஸ் குறுக்
கீட்டு ஆணைகளில் ஒன்று. சாதனத்தில் முக்கிய பிழை ஏற்பட்டால் இதைப் பயன்படுத் துவர். பிழையிலிருந்து மீண்டெழும் நிரல்கூறை இதற்குப் பதிலாக பயன்படுத்தலாம்.
critical path : முக்கிய பாதை : ஒரு பெரிய திட்டத்தை ஒழுங்கு படுத்தப்பட்ட தொடர்பகுதி பிரிக்கும் முறை. முந்தைய இயக்கத்தை ஒட்டியே ஒவ்வொரு நிலையும் அமையும். கால அளவுகளைப் பற்றிய மதிப்பீடுகளைச் செய்ய முடியும். மட்டுமே தொடர்புள்ளது என்று சொல்ல முடியாவிட்டாலும் முக்கிய பாதை ஆய்வுமுறை ஏராளமான கணக்கீடுகளைக் கொண்டது. கணினி மூலமே இதை எளிதில் செய்ய முடியும்.
critical path method (CPM) முக்கியப் பாதை முறை (சிபிஎம்) திட்டம் நிறை வேற்றப்படுவதற்குத் தேவையான ஒவ்வொரு முக்கிய நிரல் களையும ஆராயந்து செய்வதை உள்ளடக்கிய பேரளவு நீண்டகாலத் திட்டங்களைக் கட்டுப்படுத்தும் மேலாண்மை தொழில் நுட்பம்.
critical region : முக்கிய மண்டலம் : ஒரே நேரத்தில் (பல் செயலாக்க முறையில்) ஒன்றுக்கு மேற்பட்ட செயல் முறையில் இயக்க முடியாத ஆணைகளின் தொகுப்பு.
critical success factors : முக்கிய வெற்றிக் காரணிகள் அவர் களது முயற்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக நிர்வாகிகள் கருதும் சிறிய எண்ணிக்கையிலான முக்கிய காரணிகள். இவற்றில் வெற்றி பெற்றால் அவர்களது இலக்குகளை அடைவதுடன் நிறுவனத்தின் வெற் றிக்கும் உறுதியளிக்கலாம்.
CRJE சிஆர்ஜேஇ உரையாடல் முறை சேய்மைப் பணி பதிவு என்று பொருள்படும் Conversational Remote Job Entry என்பதன் குறும்பெயர். உரையாடல் முறை மொழியைப் பயன்படுத்தி தொலை தூரத்தில் முனையத்தில் பணி யாற்றும் ஒருவர் தன்னுடைய பதிவுகளை இடம் ஒன்றுக்கு அனுப்ப, தொலை தூர மைய நிலையத்தில் அதைச் செயலாக்கம் செய்தல்.
CROM : க்ரோம் : Control ROM என்பதன் குறும்பெயர். பெரும்பாலான மையச் செயலகச் சிப்புகளுடன் ஒருங்கிணைந்த பகுதி. மையச் செயலக சிறு ஆணைகளை ஒரு வரிசையாகச்
சேர்ந்த கூட்டு மெருகு ஆணைகளாக மாற்றி சேமிக்கும் இடம். கணினியைப் பயன்படுத்துவோருக்கு கூட்டியின் மூலம் கிடைக்கும் பெருக்கு அல்லது பிரி போன்றவை பெரு ஆணைகளில் அடங்கும்.
crop : க்ராப் : கணினி வரை கலையில் ஒரு படத்தின் சில பகுதிகளை வெட்டுதல்.
crop marks, : க்ராப் அடையாளங்கள் : வடிவத்தை விரும்⅝பும் அளவில் வெட்டுவதற்குப் பயன்படுகின்ற, காகிதத்தில் உள்ள அச்சிடப்பட்ட கோடுகள்.
cropping : வெட்டுதல்.
cross assembler : குறுக்கு சில்லுமொழி மாற்றி : ஒரு கணினிக்காக நிரல்களை மொழி பெயர்ப்பதற்கு இன்னொரு கணினியில் இயங்கும் சில்லு மொழி மாற்றி.
cross check : குறுக்கு சரி பார்ப்பு : இரண்டு மாறுபட்ட முறைகளின் மூலம் கணிப் பினை சோதனை செய்தல்.
cross compiler குறுக்கு மொழிமாற்றி குறிப்பிட்டு தொகுப்பதற்காக வடிவமைக்கப்பட்டது அல்லாத வேறு ஒரு கணினியில் செயல்படும் மொழிமாற்றி.
cross compiling/assembling : குறுக்கு மொழிமாற்றல்/சில்லு மொழிமாற்றல் : சிறு கணினி, பெருமுகக் கணினி அல்லது நேரப் பங்கீட்டு சேவையைப் பயன்படுத்தி நுண் கணினிகளில் பின்னர் பயன்படுத்துவதற்காக நிரல்களை எழுதி பிழைதிருத்தல்.
cross development : குறுக்கு உருவாக்கம்; மாற்று உருவாக்கம் : ஒரு குறிப்பிட்ட முறைமையைப் பயன்படுத்தி முற்றிலும் வேறுவகையான ஒரு முறைமைக்கான நிரல்களை உருவாக்குதல். இலக்கு முறைமையைக் காட்டிலும் உருவாக்கு முறைமையின் உருவாக்கக் கருவிகள் உயர்தரமானதாக இருப்பின் இது இயலும்.
cross foot : குறுக்குக் கால்; குறுக்குச் சரிபார்ப்பு ஒரு கூட்டுத் தொகையின் துல்லியத் தன்மையை சரிபார்க்கும் முறை. ஒரு கணக்குப் பதிவேட்டில் ஒரு கூட்டுத் தொகையைச் சரிபார்க்க அக்கூட்டலில் இடம் பெறும் நெடுவரிசை மற்றும் கிடை வரிசைகளின் கூட்டுத் தொகையைச் சரி பார்ப்பதைப் போன்றது.
cross footing check : குறுக்கும் நெடுக்கும் சரிபார்ப்பு : குறுக்காக சேர்த்து அல்லது கழித்து சுழி (பூஜ்யம்) யாக்கி முடிவு களைக காணும முறை.
cross functional information systems : குறுக்குச் செயல் பாட்டு தரவு அமைப்புகள் வணிகச் செயலாற்றமும் தரவு அமைப்புகளும் ஒருங்கிணைந்த தரவு அமைப்புகள். இதன் மூலம் ஒரு நிறுவனத்தின், பிற செயல் உறவுகளின் தரவுகளை பங்ககிட்டுக் கொள்ள முடியும்.
cross hairs : குறுக்கு முடிகள் : ஒரு உள்ளிட்டுச் சாதனத்தில் ஒன்று செங்குத்தாகவும், ஒன்று கிடைமட்டமாகவும் உள்ள இரண்டு கோடுகள். இவற்றின் குறுக்கு வெட்டு அடையாளமானது வரை கபடமறை அமைப்பில் காட்டியின் இடத்தைக் குறிப்பிடுகிறது.
cross hatch . குறுக்கு கோடு : ஒரு ஒவியத்தின் பகுதிகளைச் குறுக்கு பிரித்து, ஒவ்வொரு பகுதியையும் வேறுபடுத்திக் காட்டுதல்.
cross hatching : குறுக்குப் பின்னலிடல் ஒரு வருகைப் படத்தின் பரப்பை நிரப்புவதற்க்குஹ பயன்படுத்தப்படும் பல வழிமுறைகளில் இதுவும் ஒன்று. ஒன்றுக்கொன்று வெட்டிக் கொள்ளும் நிலை யான இடை கோடுகளினால் ஆன நிழலிடு முறை.
cross - linked files ; குறுக்குத் தடுப்புக் கோப்பு : மாற்றித் தொடுக்கப்பட்ட கோப்புகள் :
எம்எஸ் டாஸ், விண்டோஸ் 3. x, விண்டோஸ் 95 ஆகியவற்றில் ஏற்படும் கோப்புச் சேமிப்புப் பிழை. ஒரு நிலை வட்டு அல்லது நெகிழ்வட்டிலுள்ள ஒன்று அல்லது மேற்பட்ட வட்டுப் பிரிவு அல்லது கொத்துப் பகுதி, கோப்பு ஒதுக்கீட்டு அட்டவணையில் ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளுக்கு ஏற்படுவது. காணாமல் போன கொத்துகளைப்போலவே மாற்றித் தொடுக்கப்பட்ட கோப்பு களினாலும் ஒரு பயன்பாட்டுத் தொகுப்பு இயங்கிக் கொண்டிருக்கும்போதே நட்ட நடுவில் நின்று போகும்.
cross - platform : பல் பணித்தளத்தது; குறுக்குப் பணித்தளத்தது; மாற்றுப் பணித்தளத்தது : ஒன்றுக்கு மேற்பட்ட பணித் தளங்களில் இயங்கக் கூடிய ஒரு மென்பொருள் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கணினி அமைப்பில் இணைத்து இயக்கக்கூடிய ஒரு வன்பொருள் சாதனம்.
cross - post : குறுக்கு அஞ்சல்; மாற்று அஞ்சல் : ஒரு செய்திக் குழுவில் உள்ள ஒரு கட்டுரையை அல்லது செய்தியை, ஒரு மின்னஞ்சல் அமைப்பில் உள்ள ஒரு மடலை இன்னொரு மின்னஞ்சல்/செய்திக் குழுவில் நகலெடுப்பது. எடுத்துக்காட்டாக, யூஸ்நெட் செய்திக் குழுவிலிருந்து ஒரு காம்பு செர்வ் குழுவுக்குச் செய்தியை மாற்றுவது. அல்லது ஒரு மின்னஞ்சலை வேறொரு செய்திக் குழுவுக்கு அனுப்பி வைப்பது.
cross - reference : மாற்றுக்குறிப்பு.
cross reference dictionary : குறுக்குக் குறிப்பு அகராதி : ஒரு குறிப்பிட்ட அடையாளம் உள்ள சில்லுமொழி நிரலின் எல்லா குறிப்புகளையும் அடையாளம் காண்கின்ற அச்சிட்ட பட்டியல். பல அமைப்புகளில், ஒரு மூல நிரலைச் சேர்த்து விட்ட பிறகு இந்த பட்டியல் தரப்படுகிறது.
cross tabulate : குறுக்குப் பட்டியலிடு : தரவுகளை ஆய்ந்து தொகுத்தல், சான்றாக, ஒரு தரவு தள கோப்பில் உள்ள தரவு களைத் தொகுத்து, விரிதாள் அட்டவணையில் சேர்ப்பது.
cross talk : குறுக்குப் பேச்சு : ஒரு மின்சுற்றிலிருந்து அருகிலுள்ள வேறொரு மின்சுற்று மீது ஏற்படும் தேவையற்ற மின் தாக்கம். அனுப்பும் மின்சுற்றை தொல்லை தரும் மின்சுற்று என்றும், பெற்ற மின்சுற்றை தொல்லைப்படும் மின் சுற்று என்றும் சொல்வர். குறுக்கீடாக ஒரு மின்சுற்றிலிருந்து வேறொரு மின்சுற்றுக்கு சமிக்கை சென்று சேர்தல்,
cross word puzzles : குறுக்கெழுத்துப் புதிர்கள் : கம்மோடோர் -64 வீட்டுக் கணினியில் பயன்படுத்துவதற்கான மென்பொருள்.
crowbar : கடப்பாரை : அதிக மின்னழுத்தம் தாக்குவதன்
அபாயத்திலிருந்து ஒரு கணினி அமைப்பைப் பாதுகாக்கும் மின்சுற்று.
CRT சிஆர்டீ : எதிர்மின் கதிர்க் குழாய் என்று பொருள்படும் Cathode Ray Tube என்பதன் குறும்பெயர்.
CRT controller : சிஆர்டீ கட்டுப்படுத்தி : ஒர் ஒளிக்காட்சி தகவிப் பலகையின் ஒரு பகுதியாக இருப்பது. இதுதான் ஒளிக் காட்சி சமிக்கைகளை இயற்றுகிறது. கிடைமட்ட, செங்குத்து ஒத்திசைவுச் சமிக்கைகளையும் சேர்த்தே உருவாக்குகிறது.
CRT plot . சிஆர்டீ வரைவு : எதிர் மின் கதிர்க் குழாயின் திரையில் காட்டப்படும் கணினி உருவாக்கிய ஒவியம் அல்லது வரைபடம்.
CRT terminal : சிஆர்டீ முனையம் : 1. காட்சித்திரை சாதனம். கணினியுடன் தகவல் தொடர்பு கொள்ள ஒரு இயக்குநரால் பயன்படுத்தப்படும் விசைப் பலகையுடன்கூடிய காட்சி சாதனம். ஒரு செய்தி அல்லது சொற்றொடரின் பகுதியை இயக்குபவர் விசைப்பலகையில் தட்டச்சு செய்ததும் திரையில் எழுத்துகள் காட்டப்படும்.
crunch : நொறுக்கு : கணினி நபர்களால் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் அல்லாத சொல். வழக்கமான கணினிச் செயல்பாடுகளைச் செய்து எண்களைச் செயலாக்கம் செய்யும் கணினியின் திறனை இது குறிப்பிடுகிறது. கணினிகள் ஏராளமான எண்களை செயலாக்கம் செய்து அல்லது நொறுக்கித் தள்ளிவிடும் திறனுடையது.
crunching : நொறுக்குதல் .
cryoelectronic storage : மீக்குளிர் மின்னணு சேமிப்பகம் : மிகக் குறைவான வெப்பநிலையில் மீக் கடத்திகளாக விளங்கும் பொருள்களைக் கொண்ட சேமிப்பகம்.
cryogenics : மீக்குளிர் நுட்பவியல் : பூஜ்யத்துக்கு அருகில் உள்ள வெப்பநிலையில் செயல் படும் பொருள்களைப் பயன்படுத்தி செய்யப்படும் சாதனங்களைப் பற்றிய ஆய்வும் பயன் பாடும். cryosar : மீக்குளிர் நிலைமாற்றி : மிகக் குறைந்த வெப்பநிலையில் இயங்கும் இரண்டு அரைக்கடத்தி முனையச் சாதனங்கள்.
cryotran : மீக்குளிரி : கணினி மின்சுற்றுகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் மீக் கடத்தும் திறனை அடிப்படையாகக் கொண்ட மின்சாரம் கட்டுப்படுத்தும் சாதனம். cryptoanalysis : மறையீட்டுப் பகுப்பாய்வு; இரகசிய எழுத் தாய்வு : இரகசியக் குறியீடு அமைக்கப் பயன்படுத்தப்பட்ட திறவி பற்றிய ஆரம்ப அறிவு இல்லாமல் இரகசியக் குறியீட்டு செய்தியை வழக்கமான சொற்றொடர் செய்தியாக மாற்றும் இயக்கம்.
cryptographic techniques : மறைக் குறியீட்டு நுட்பம் : மறையீட்டு நுட்பம் : ஒவ்வொரு எழுத்து அல்லது எழுத்துத் தொகுதிகளுக்குப் பதிலாக வேறு வகையான குறியீடுகளைக் கொடுத்து தரவுகளை மறைக்கும் முறை.
cryptography : மறைக் குறியீட்டியல்; மறையீட்டியல் : இரகசியக் குறியீடுகளை எழுதும் பல்வேறு முறைகளில் ஒன்று. கணினிகளையே அதிகம் சார்ந்திருக்க வேண்டியதாக சமுதாயம் ஆகிவிட்டதால், கணினிகள் மற்றும் கணினி கட்டமைப்புகள் மூலம் சேமிக்கப்பட்டு, செயலாக்கப்பட்டு அனுப்பப்படும் ஏராளமான தரவுகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். பாதுகாப்பை பெற இரகசியக் குறியீடு அமைப்பது ஒரு வழி. தந்திக்கம்பிகள், செயற்கைக் கோள்கள். நுண்ணலை அமைப்புகள் போன்ற அணுகக் கூடிய தரவு தொடர்புக் கட்டமைப்புகளில் அனுப்பப்படும் தகவலைப் பாதுகாக்க இதுவே நடைமுறைக்கு ஏற்றவழி.
crystal : படிகம் : அதற்கு சக்தி வழங்கப்படும்போது ஒரு குறிப் பிட்ட இடைவெளியில் சுழலும் படிகக் கல். இந்தச் சுழற்சிகள் கணினி அமைப்பில் உள்ள கடிகாரத்திற்கு நேரத்தைத் துல்லியமாக அளிக்க உதவுகின்றன.
crystal bistability : இருநிலைப் படிகம்.
crystal 3D : முப்பறிமாணப் படிகம்.
crystallin : படிக நிலை : படிகத்தின் திட நிலை. Neumatic-ன் எதிர்ச்சொல்.
Crystal Report : கிறிஸ்டல் ரிப்போர்ட் : தரவுத் தளங் களிலுள்ள தரவுகளில் அடிப்படையில் அறிக்கை தயாரிக்க உதவும் ஒரு மென்பொருள், விசுவல் பேசிக்கில் பெரும் பாலும் பயன்படுத்தப்படுகிறது.
cs : சிஎஸ் : செக்கோஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த இணைய தளம் என்பதை அடையாளம் காட்டும், பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.
C shell : சி செயல்தளம் : யூனிக்ஸ் இயக்க முறையில் இயங்கும் பல்வேறு கட்டளை வரி இடைமுகங்களில் இதுவும் ஒன்று. சி-செயல் தளம் மிகவும் பயனுள்ளது. ஆனால் அனைத்து முறைமைகளிலும் சி-செயல் தளம் இருக்குமென்று சொல்ல முடியாது.
CSMA/CD : சிஎஸ்எம்ஏ/சிடி : சுமப்பி உணர்வு பல்முக அணுக்கம் மோதல் அறிதல் என்று பொருள் படும் Carrier Sense Multiple Access/Collusion Deduction என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இது ஒரு பிணைய நெறிமுறை (Network Protocol). ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மேற் பட்ட கணுக்களில் (Nodes) கோரிக்கை அனுப்பப்பட்டு மோதல் ஏற்படும் சூழ்நிலையைக் கையாள்வதற்கான நெறி முறை. ஒவ்வொரு கணுவும் பிணையப் போக்குவரத்தைக் கண்காணித்துக் கொண்டிருக்கும். தடம், போக்குவரத்தின்றி இருக்கும்போது தகவலை அனுப்பும். அதே நேரத்தில் இன்னொரு கணுவும் தகவலை அனுப்பி மோதல் ஏற்படின் இரண்டு கணுவும் தரவு அனுப்புவதை நிறுத்திவிடும். மீண்டும் மோதல் ஏற்படுவதைத் தடுக்க, ஒவ்வொரு கணுவும் வேறு வேறு கால அளவுகள் காத்துக் கொண்டிருந்துவிட்டுப் பின் தரவு அனுப்ப முனையும்.
CSO : சிஎஸ்ஓ : 'கணிப்பணி சேவைகள் அலுவலகம்' என்று பொருள்படும் Computing Services Office என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். இணையத்தில் பயனாளர்களின் சொந்தப் பெயர்களை மின்னஞ்சல் முகவரிகளுடன் ஒப்பிட்டுத் தேடித்தரும் இணையச் சேவையாகும். இது பெரும்பாலும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலுள்ள மின்னஞ்சல் முகவரிகளில் தேடும். கோஃபர் (Gopher) பிணையங்களின் வழியாக சிஎஸ்ஓ சேவையைப் பெறலாம். இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் சி. எஸ். ஓவில் இது உருவாக்கப்பட்டது.
CSO name server : சிஎஸ்ஓ பெயர் வழங்கன் : சிஎஸ்ஓ அமைப்பின் மூலம் மின்னஞ்சல் முகவரி பற்றிய தகவலை வழங்கும் ஒரு கணினி.
CT : சிடீ : Computer Tomographic என்பதன் குறும்பெயர்.
CTL சிடீஎல் : கன்ட்ரோல் (Control) என்ற சொல்லின் சுருக்கம். CTRL : சிடிஆர்எல் : கட்டுப் பாடு என பொருள்படும் Control என்பதன் குறும்பெயர். விசைப் பலகையில் ஒரு சிறப்பு விசை.
Ctrl-Alt-Delete : கன்ட்ரோல்-ஆல்ட்- டெலீட் : ஐபிஎம் மற்றும் ஒத்தியல்புக் கணினிகளில் மீட்டியக்கப் (reboot) பயன்படும் மூவிசைச் சேர்க்கை. Ctrl Alt, Del என்று குறிக்கப்பட்டுள்ள மூன்று விசைகளையும் ஒருசேர அழுத்தினால் எம்எஸ் டாஸில் இயங்கும் கணினியில் இடைத் தொடக்கம் (warm boot) நடை பெறும். இம்முறையில் கணினி, அகப் பரிசோதனைகள் அனைத்தையும் மேற்கொள்வதில்லை. மின்சாரத்தை நிறுத்தித் தரும் முதல்தொடக்க (cold boot) முறையில் அனைத்துச் சரி பார்ப்புகளும் நிகழும். விண்டோஸ் 95/98/என்டி/2000 இயக்க முறைமைகளில் Ctrl+Alt+ Del விசைகளை அழுத்தும் போது ஒர் உரையாடல் பெட்டி தோன்றும். நடப்பிலுள்ள ஒரு பணியை மட்டும் முடித்து வைக்கலாம். அல்லது கணினியையே நிறுத்தவும் செய்யலாம்.
Ctrl-C : கன்ட்ரோல்-சி : 1. யூனிக்ஸ் இயக்க முறைமையில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு செயல்பாட்டை நடுவிலேயே முறிக்க இந்த இரு விசைகளையும் அழுத்த வேண்டும். 2. விண்டோஸ் இயக்க முறைமை யில் இயங்கும் பல்வேறு பயன்பாடுகளிலும், தற்போது தேர்வு செய்துள்ள உருப்படியை (உரை, படம் எதுவும்) இடைநிலை நினைவகத்தில் நகலெடுத்துக் கொள்வதற்கான கட்டளை.
Ctrl-S : கன்ட்ரோல்-எஸ் : 1. மையக் கணினியுடன் முனையக் கணினி மென்பொருள் மூலம் கைகுலுக்கிக் கொள்கிறது. முனையக் கணினித் திரையில் தொடர் தரவு திரையிடப் படும்போது இந்த இரு விசை களையும் சேர்த்து அழுத்தும் போது அப்படியே நின்றுவிடு கிறது. மீண்டும் தொடர கன்ட்ரோல்-கியூ விசைகளை அழுத்த வேண்டும். 2. ஒர் ஆவணம் அல்லது கோப்பினைச் சேமிப் பதற்குப் பெரும்பாலான மென் பொருள் தொகுப்புகளில் பயன் படுத்தப்படும் விசைச் சேர்க்கை.
CTS : சிடீஎஸ் : அனுப்பப் பாதை தயார் என்று பொருள்படும் Clear To Send என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். தொடர்நிலை (analog) தகவல் தொடர்பில் இணக்கிகள் கணினிக்கு அனுப்பும் சமிக்கை. கணினி, தகவலை அனுப்பத் தொடங்கலாம் என்பது பொருள். ஆர்எஸ் 232 சி இணைப்புகளில் 5-வது தடத்தில் அனுப்பி வைக்கப் படும் வன்பொருள் சமிக்கை. . cu : சியூ : ஒர் இணைய தள முகவரி கியூபா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர்.
CUBE : க்யூப் : பரோ கணினிப் பயனாளர்களின் கூட்டுறவு எனப் பொருள்படும் Cooperating User of Burroughs Equipment என்பதிலிருந்து பெறப்பட்ட சுருக்கப் பெயர். பரோ கணினிகளைப் பயன்படுத்துபவர்களின் அதிகாரப்பூர்வ அமைப்பு.
cue : க்யூ : கணினி பயன்படுத்தும் கல்வியாளர்கள் எனப் பொருள்படும் Computer Using Educators என்பதன் குறும் பெயர். கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் கணினிக் கல்வியை வழங்கும் ஒரு நிறுவனம்.
CUL 8 R : சியூஎல் 8 ஆர் : பிறகு சந்திக்கலாம் என்ற பொருள் படும் See You Later என்ற தொடரின் விந்தையான சுருக்கச் சொல். இணையக் கலந்துரையாடல்களில் கலந்து கொண்டுள்ள ஒருவர் தற்காலிகமாக அக்குழுவைவிட்டு நீங்கும் போது விடைபெறும் முகத்தான் குறிப்பிடும் சொல்.
cumulative record : திரட்டுப் பதிவேடு. current : மின்னோட்டம் : நடப்பு : 1. ஒரு கடத்தி வழியாக மின்னூட்டம் பாய்தல், அல்லது பாயும் அளவு. ஆம்பியர் என்னும் அலகினால் அளக்கப்படுகிறது. 2. ஒரு தரவுத் தளத்திலுள்ள அட்டவணையில் நடப்பு ஏடு என்கிறோம்.
current awareness system : நடப்பு உணரும் அமைப்பு : நடப்பு விழிப்புணர்வு அமைப்பு : தேர்ந்தெடுக்கப்பட்ட தகவலின் வகைகள் கிடைத்தவுடன் ஒரு மையக்கோப்பு அல்லது நூலகம் மூலம் ஒரு பயனாளருக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிவித்துக் கொண்டிருப்பது.
current block : நடப்புத் தொகுதி : தொகுதிக் கோப்பு அணுகு முறையில் தற்போது அணுகப் படும் கோப்பில் உள்ள தரவுகளில் பதிவேட்டுத் தொகுதி
current cell : நடப்புக் கலம் : தரவுத் தாளில் நடப்பில் கிடைக்கக் கூடிய கலம்.
current data : நடப்புத் தரவு.
current database : நடப்புத் தரவு தளம்.
current directory : நடப்புக் கோப்பகம் : கணினி அமைப்பு நடப்பில் பயன்படுத்திவரும் வட்டு தரவுப் பட்டியல். வேறாகச் சொல்லவில்லை யென்றால், வட்டு கோப்பிற்கு வரும் நிரல்கள் நடப்புக் கோப்பகத்தையே குறிப்பிடும்.
current drain : முன்னோட்ட ஒழுக்கு : 1. ஒரு மின்னழுத்த மூலத்துடன் இணைக்கப்பட்ட மின்சாரம் பெறும் கருவி எடுத்துக் கொள்கின்ற மின்சக்தி. 2. ஒரு மின்குமிழ் விளக்கு மின்சாரத்தை எடுத்துக் கொண்டு எரிகிறது. மின்சாரம் ஒரு மின்கலனிலிருந்து வருகிறது எனில் மின் சக்தி, மின்கலனில் வடிந்து கொண்டிருப்பதாகக் கூறலாம். குமிழ் விளக்கையே ஒழுக்கு என்றும் சிலவேளைகளில் கூறுவர்.
current drive : நடப்பு இயக்ககம் : கணினி அமைப்பால் நடப்பில் பயன்படுத்தப்படும் வட்டு இயக்ககம்.
current image : நடப்பு படிவம்
current instruction register : நடப்பு ஆணைப் பதிவேகம். current intensity : மின்னோட்ட வலிமை.
current location counter : நடப்பு இருப்பிட எண்ணி : ஒரு நிரலுக்கோ அல்லது ஒரு நிலையெண்ணுக்கோ கொடுக்கப்படும் முகவரியினை முடிவு செய்ய ஒரு சேர்ப்பி வைத்திருக்கும் எண்ணி.
current loop : நடப்பு மடக்கி : மின் சமிக்கைகள் இருப்பது அல்லது இல்லாதிருப்பதை ஒட்டி துண்மிகளை அனுப்பும் தொடர் தரவு தொடர்பு வகை.
current mode logic : நடப்பு பாங்கு தருக்கம் (சிஎம்எல்) : தன்னுடைய வடிவமைப்பில் மாறுபட்டு பெரிதாக்கி மின் சுற்றின் தன்மைகளைப் பயன் படுத்தும் தருக்க மின்சுற்று.
current page box : நடப்புப் பக்கப் பெட்டி : டிடீபீ மென் பொருள்களில், நடப்பில் வேலை செய்கின்ற பக்கத்தினைக் காட்டுகின்ற பகுதி.
current positions : நடப்பு நிலவரம் : தற்போதைய இட நிலைமை. current pulses : மின்னோட்டத் துடிப்புகள்.
current record number : நடப்பு ஏட்டு எண் : கோப்பு அணுகலில் கோப்பு கட்டுப்பாடு கட்டமுறை மூலம், தரவுகளை 128 கட்டங்களாக ஒழுங்கு படுத்தப்படுகின்றன. நடப்புப் ஏட்டு எண் நடப்பு கட்டத்தில் இருக்கும். சான்றாக, தற்செயல் ஏடு 128-ன் நடப்பு எண் 0 ஏனெனில் கட்டம் 1-ன் முதல் பதிவேடு எண் 1. கடைசி பதி வேட்டின் எண் 127. 1இல் தொடங்கினால் கடைசிப் பதிவேடு 129.
current value : தற்போதைய மதிப்பு. cursive scanning : கோட்டு முறை வருடல் : ஒளிக்காட்சி முனையங்களுடன் பயன் படுத்தப்படும் வருடும் தொழில் நுட்பம். ஒவியன் ஒரு உருவத்தை வரைவதுபோல திரையை நோக்கி அனுப்பப் படும் எலெக்ட்ரான்கள் ஒரு நேரத்தில் ஒரு கோடு என்ற முறையில் படங்களின் வெளிப் புறக்கோடுகளைப் போடும்.
cursor : இடஞ்சுட்டி காட்டி : 1. அடுத்த எழுத்து திரையில் எங்கே தோன்றும் என்பதைக் காட்ட மினுமினுக்கும், நகரும், வழுக்கும் குறியீடு. 2. ஒளிக் காட்சி முனைப்பில் திருத்த வேண்டிய ஒரு எழுத்தையோ அல்லது நுழைக்க வேண்டிய தரவுகளின் இடத்தையோ குறிப்பிடும் இடம் உணர்த்தி.
cursor blink speed : காட்டி மினுக்கு வேகம் : இடஞ்சுட்டி மினுக்கு வேகம் : திரையில் தோன்றும் காட்டி, தோன்றி மறைந்து மினுக்குகின்ற வேகம்.
cursor control : காட்டிக் கட்டுப்பாட்டு : திரையில் எந்த இடத்துக்கும் ஒளிக்காட்சி உணர்த்தும் குறியீட்டை நகர்த்தும் திறன்.
cursor control keys : காட்டிக் கட்டுப்பாட்டு விசைகள் : காட்சித்திரையில் காட்டியை நிலைநிறுத்த உதவும் விசைப் பலகையின் விசைகள். சுற்று வடிவில் அமைக்கப்பட்டால் பயன்படுத்த எளிதாக இருக்கும்.
cursor key : காட்டிக் விசை; இடஞ்சுட்டி விசை; சுட்டுக்குறி விசை.
cursor tracking : சுட்டி இயங்குதல் : கணினியுடன் இணைந் துள்ள எழுத்தாணி அல்லது சுட்டியை நகர்த்துவதன் மூலம் காட்சித் திரையில் காட்டியை நிலை நிறுத்துவது
curve fitting : வளைவு பொறுத்தல்; வளைக் கோட்டுப் பொருத் தம் : தரவு புள்ளிகளின் தொகுதியைக் குறிப்பிட ஒரு சூத்திரத் தைக் கண்டறிய உதவும் கணித நுட்பம். ஒரு புள்ளியில் பொருந் தும் கோடுகளில் சிறந்தது எது என்பதைக் கண்டுபிடித்து அமைப்பதற்கு இந்த சூத்திரம் பயன்படுகிறது.
CUSeeMe : சியூசீe : கார்னெல் பல்கலைக்கழகம் (Cornel University) உருவாக்கிய ஒளிக் காட்சி கலந்துரையாடல் (video conference) மென்பொருள். விண்டோஸ் மற்றும் மேக் ஒஎஸ் பயனாளர்கள் இணையத்தில் நிகழ்நேர ஒளிக்காட்சி கலந்துரையாடலில் பங்கு பெறுவதற்கான முதல் மென்பொருளாகும் இது. ஆனால், இந்த மென்பொருள் செயல்பட அதிகமான அலைக்கற்றை வேண்டும். குறைந்தது 128 கேபிபீஎஸ் வேக அலைக்கற்றை இருந்தால் தான் சரியாகச் செயல்படும்.
custodian : பொறுப்பாளர்.
Custom : வழமை.
customer engineer : வாடிக்கையாளர் பொறியாளர் : கணினியைப் பழுது பார்க்கும் அல்லது கணினியில் தடுப்புப் பராமரிப் பினைச் செய்யும் அல்லது உள்ளீடு/வெளியீடு போன்ற சாதனங்களைப் பராமரிக்கும் நபர். Field Engineer என்றும் அழைக்கப்படுவார்.
custom IC : வாடிக்கையான ஒருங்கிணைப்புச் சுற்று. customic : வடிக்கையாக்கிய : ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாள ரின் வடிவமைப்பு மற்றும் அளவுக்கேற்ப உற்பத்தி செய்யப்படும் ஒருங்கிணைந்த மின்சுற்று (ஐ. சி).
customize : வடிக்கையாக்கல் : பொது நோக்க மென்பொருள் அல்லது வன்பொருள் ஒன்றின் செயல்திறனைக் கூட்டுதல் அல்லது மாற்றுதல். குறிப்பிட்ட பயனாளரின் தேவைக்குப் பொருத்தமாக இது செய்யப் படுகிறது.
customized form letters : வாடிக்கையாக்கப்பட்ட வடிவக் கடிதங்கள் : சொல்செயலி மென் பொருள்களில் உருவாக்கப் பட்ட தனிப்பட்டவருக்கேற்ற வடிவக் கடிதங்கள்.
custom software : வாடிக்கை மென் பொருள் : ஒரு வணிகம் அல்லது நிறுவனத்தின் தேவைக்கேற்ப உருவாக்கப்பட்ட நிரல்கள் canned software என்பதற்கு மாறானது.
custom view : தனிப்பயன் தோற்றம்.
cut : வெட்டு : ஒரு ஆவணத்திலிருந்து படங்கள் அல்லது உரைப் பகுதிகளை நீக்கும் செயல்.
cut and paste : வெட்டி ஒட்டு : சில வரைகலை மென்பொருள் களிலும், சொல் செயலி மென் பொருள்களிலும் ஒரு இடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் சொற்றொடர் பகுதிகளை நகர்த்தப் பயன்படுத்தும் முறை. வெட்டி ஒட்டும் படிகளுக்கு இடையிலுள்ள பிற செயல் பாடுகளைச் செய்யவும் இத்தகைய அமைப்புகள் அனுமதிக்கின்றன.
cut/copy/paste : வெட்டு/நகலெடு/ஒட்டு.
cut form : நறுக்குப் படிவம் : வெட்டு வடிவம் : ஒசிஆர் (OCR) சாதனங்களில் பயன்படுத்துகின்ற பயன்பாட்டு விலைப் பட்டியல் போன்ற தரவு நுழைவுப் படிவம்.
CUT mode : கட் பாங்கு : கட்டுப்பாட்டக முனையப் பாங்கு எனப் பொருள் படும் Control Unit Terminal Mode என்பதன் குறும் பெயர். முனையத்தை ஒரு முறை பெருமுகக் கணினியுடன் சேர அனுமதிக்கும் முறை. நுண் கணினி இந்த முறையைப் பின் பற்றி பெருமுகக் கணினியுடன் தொடர்பு கொள்வது.
Cutout : வெட்டியெடு : வண்ணத் தூரிகை மென் பொருளில் கத்தரி மற்றும் எடுக்கும் கருவியைப் படுத்தி தேர்ந்தெடுக்கும் பரப்பு.
பயன்
cut-sheet feader : நறுக்குத்தாள் செலுத்தி.
cutter path : வெட்டுப் பாதை : கணினி உதவிடும் உற்பத்தி அமைப்பில் கட்டுப்படுத்தப்படுகின்ற வெட்டுக் கருவியின் இயக்கத்தை விவரிக்கும் வரி.
. cv : சிவி : ஒர் இணைய தள முகவரி கேப் வெர்தே நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.
cy : சிஒய் : ஒர் இணைய தள முகவரி சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.
cyan : சியான் ; மயில் நீலம் : வண்ண வரைபட முறைகளில் விடிடீ (VDT) களின் மீது அடிக்கடி பயன்படுத்தப்படும் நீல வண்ணம்.
cyber : சைபர் : கன்ட்ரோல் டேட்டா கார்ப்பரேஷன் உற்பத்தி செய்த பெருமுக மற்றும் மீத்திறன் கணினிகளின் வரிசை.
cyberbunk : சைபர் பங்க் : எதிர்கால குற்றவாளிகளைப் பற்றியது. கணினி வங்கிகளை உடைத்துச் செல்லும் ஏமாற்றுக் காரர்கள். அதிக தொழில்நுட்ப அறிவுக் கூர்மையைச் சார்ந்தே அவர்கள் வாழ்கிறார்கள். நியூ ரோமான்சர் மற்றும் ஷாக்வேல் ரைடர் போன்ற அறிவியல் புதினங்களில் இருந்து தோன்றிய சொற்கள். cybercafe or cyber cafe
366
cyberspace
cybercafe or cyber cafe : மின் வெளி உணவகம் : 1. இணையத் தொடர்புகள் உள்ள கணினி முனையங்களைக் கொண்ட சிற்றுண்டி விடுதிகள். இங்கே காபி, தேநீர் மற்றும் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டே இணையத்தில் உலா வரலாம். ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு ரூபாய் எனக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். சாப்பிட வருபவர்கள் இணையத்தைப் பார்வையிடவும், இணையத்தில் உலாவ வருபவர்கள் சாப்பிடவும் இங்கே வாய்ப்புக் கிடைக்கிறது. 2. இணையத்தில் இருக்கின்ற ஒரு மெய்நிகர் (virtual) உணவகம். இது பெரும்பாலும் சமூகப்பயன்களுக்கானது. இங்கே கூடுபவர்கள் அரட்டை நிகழ்ச்சி மூலம் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொள்வர். அறிக்கைப் பலகை முறை யில் செய்திகளைப் பரிமாறிக் கொள்வர். செய்திக் குழுக்கள் மூலமாக கருத்துகளைப் பரிமாறிக் கொள்வர்.
Cyberdog : சைபர்டாக் : ஆப்பிள் நிறுவனத்தின் இணையப் பயன்பாட்டுக்கான கூட்டுத் தொகுப்பு. இதில் இணைய உலாவி மற்றும் மின்னஞ்சல் இணைக்கப்பட்டுள்ளன. ஒப்பன்டாக் (OpenDoc) என்னும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஏனைய பயன்பாடுகளுடன் எளிதாக சேர்த்து இணைத்துச் செயல்படுத்த முடியும்.
cyber law : மின்வெளிச் சட்டம்.
cybernatics : தணனாள்வியல்.
cybernaut : சைபர்நாட் : மின்வெளி வீரர்; மின்வெளியாளி : எப்போதும் தன் வளமான நேரங்களை இணையத்தில் உலா வருவதிலேயே செலவழிப்பவர். இன்டர்நாட்/ இணைய வீரர் என்றும் அழைக்கப்படுவார்.
cybernetic system : தன்னாள்வியல் முறைமை : சுய காணிப்பு மற்றும் சுயக் கட்டுப்பாட்டுத் திறனை அடைய கட்டுப்பாடு மற்றும் திரும்பப் பெறும் பகுதிகளைப் பயன்படுத்தும் அமைப்பு.
cyberphobia : சைபர்போபியா : கணினிகளைக் கண்டு அஞ்சுதல்.
cyberspace : மின்வெளி : நியூரோ மான்சர் என்னும் புதினத்தில் வில்லியம் கிப்சன் உருவாக்கிய சொல் இணையப் பண்பாட்டை இது குறிப்பிடுகிறது.
cyborg : சைபோர்க் : மின்னணு மற்றும் மின்னியந்திர ரோபோவின் உறுப்பினை வைத்திருக்கும் மனிதர்.
cycle : சுழற்சி : கணினி சேமிப்பகம் தொடர்பானது. ஒரு கணினி அல்லது அதன் சேமிப்பக சாதனத்தில் இருந்தோ, அதற்கோ தகவலை மாற்றல் செய்யும்போது ஏற்படும் தொடர் நிகழ்வுகள். ஒரு முகவரியைக் குறிப்பிட்டு, அதன் தகவலை வெளியேற்றி அடுத்ததைத் தேடத் தயாராக இருத்தல்.
cycle code சுழற்சிக் குறிமுறை.
cycle per second : ஒரு நொடிக்கு சுழற்சி : ஒரு நொடியில் எத்தனை தடவைகள் ஒரு நிகழ்வு அல்லது நிகழ்வுகளின் தொகுதி திரும்பச் செய்யப்படுகிறது என்பது. பார்க்க : ஹெர்ட்ஸ்.
cycle power : சுழற்சித் திறன் : நினைவகத்தில் உள்ள சில தரவுகளை துடைக்கும் பொருட்டு அல்லது கணினி செயலிழக்கும்போது அதற்குப் புத்துயிர் ஊட்டும் பொருட்டு கணினிக்குத் தரும் மின்சாரத்தை நிறுத்தி, மீண்டும் வழங்குவது.
cycle stealing : சுழற்சித் திருடல் : உள்ளிட்டு வெளியீட்டு மின்பாட்டையின் கட்டுப்பாட்டைத் தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்து வெளிப்புறச் சாதனம் ஒன்றை அனுமதிக்கும் நுட்பம். இதன்மூலம் கணினியில் உள் நினைவகத்தை அணுக அந்தச் சாதனம் அனுமதிக்கப்படுகிறது.
cycle reset : சுழற்சி மாற்றமைவு : சுழற்சி திரும்ப அமைதல்.
cycle time : சுழற்சிநேரம் : 1. தொடர் செயலின் தொடக்கத்தில் இருந்து சேமிப்பக இருப்பிடத்திற்குப் போய்ச் சேரும் வரை இடைவெளியின் குறைந்தபட்ச நேரம். 2. ஒரு பதிவுத் தொகுதியில் தகவலை மாற்ற தேவைப்படும் நேரம்.
cyclic binary code : சுழற்சி இருமக் குறிமுறை : இரும எண் முறையில் ஒரு வகை. பதின்ம எண்களை (Decimal Numbers) இரும வகைக்கு மாற்றும்போது எந்தவொரு இரும எண்ணும் முந்தைய இரும எண்ணோடு ஒப்பிட்டால் ஒரேயொரு துண்மி (bit) மட்டுமே மாறி இருக்க வேண்டும். 0111, 0101 ஆகிய இரு எண்களில் நடுத் துண்மி மட்டுமே மாறி இருக்கிறது. cyclic code
cylinder method
சாதாரண இரும எண் முறையிலிருந்து மாறுபட்டது.
பதின்மம் சுழற்சி இருமம் சாதா இருமம்
O 0000 0000
1 0001 0001
2 0011 0010
3 O010 0011
4 0110 0100
5 0111 0101
6 0101 0110
7 0100 0111
8 1100 1000
9 1101 1001
cyclic code : சுழற்சிக் குறியீடு : சாம்பல் குறிமுறை (gray code) போன்றது.
Cyclic Redundancy Check (CRC) : சுழற்சி மிகைச் சரிபார்ப்பு : வட்டுச் சாதனங்களில் பிழை சோதிக்கும் முறை. தரவுகளைச் சேமிக்கும்போது சி. ஆர்சி மதிப்பு மீண்டும் கணிக்கப்படுகிறது. இரண்டு மதிப்புகளும் சமமாக இருந்தால், அந்த தரவு பிழையற்றது என்று கருதப் படுகிறது.
cyclic shift : சுழல் நகர்வு : ஒரு முனையில் விலக்கப்படும் எண் மறுமுனையில் சுழற்சி போன்று சேர்ந்து கொள்ளும் மாற்றம். ஒரு பதிவகத்தில் 23456789 என்னும் எட்டு இலக்கங்கள் இருக்குமானால் இரண்டு பத்தி களில் இடதுபுறமாக சுழற்சி நுகர்வு செய்தால் மாற்றப்பட்ட உள்ளடக்கம் 45678923 என்று இருக்கும்.
Cycolor : சைகாலர் : மீட் இமேஜிங்கின் அச்சிடும் செயல் முறை. ஒளிப் படங்களைப் போல முழு டோனல் உருவங்களை இவை அச்சிடும்.
cylinder : உருளை : ஒவ்வொரு வட்டின் பரப்பிலும் ஒரே இடத்தில் தங்குகின்ற அனைத்துத் தடங்களின் மொத்தம். வட்டு தட்டுகளில், ஒவ்வொரு மேற்பரப்பிலும் அதே தடத்தில் உள்ள தடங்களின் மொத்தம்
cylinder addressing : உருளை முகவரியிடல் : ஒவ்வொன்றுக்கும் ஒரு உருளை எண், மேற்பரப்பு எண் மற்றும் பதிவேடு கூட்டல் எண் ஆகியவற்றைக் கொடுத்து வட்டு பதிவேடுகளைத் தேடும் முறை.
cylinder method : உருளை முறை : படி/எழுது முனைகளை இயக்குவதன் மூலம் நடப்பில் பயன்படுத்தப்படுகின்ற தடத்திற்கு மேலும் கீழும் உள்ள தரவுகளைப் பெறலாம் என்ற கோட்பாடு அல்லது முறை. அணுகுசாதனத்தில் கூடுதல் இயக்கம் இல்லாமலேயே அதிக அளவு தகவல் அணுக அனுமதிக்கிறது.
cylinder skew : உருளை ஸ்கியூ : முந்தைய உருளையின் கடைசி தடத்தின் தொடக்கத்தில் இருக்கும் ஆஃப்செட் இடைவெளி ஒரு சிலிண்டரில் இருந்து மற்றொன்றுக்கு மாற உதவுவது.
cypher : மறை எழுத்து : இரகசியக் குறியீட்டியலின் ஒரு வடிவம். சில திறவிகளின் அடிப் படையில் தகவலை இடை யிலேயே மாற்றி எடுக்க முயன் றாலும் எவருக்கும் புரியாத ஒன்றாகத் தோன்றும் முறை.
. cz . சிஇஸட் : ஓர் இணைய தளம் செக் குடியரசைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர்.