கணினி களஞ்சியப் பேரகராதி/Q

விக்கிமூலம் இலிருந்து
Q

. qa : கியூஏ : ஓர் இணைய தள முகவரி குவாட்டார் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்

. С. С. Са . கியூசி. சி. ஏ : ஓர் இணைய தள முகவரி கனடா நாட்டின் கியூபெக் மாநிலத் தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக்களப் பெயர்.

. qt : கியூடி : குவிக்டைம் வடிவாக்கம் கொண்ட பல்லூடகக் கோப்புகளை அடையாளம் காண உதவும் கோப்பின் வகைப்பெயர் (extension)

quadbit : நான்மைத் துண்மி : குவாம் (QAM) குறிப்பேற்றத்தில் (modulation) பயன்படுத்தப்படும் நான்கு துண்மிகளின் தொகுதி.

quad-density : மிகைச் செரிவு; நான்கு மடங்கு அடர்த்தி : ஒரு கணினி வட்டுப் பொறியமை வின் தரவு சேமிப்புச் செறி வினைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் சொல். ஒற்றைச் செறிவு வட்டுகளில் சேமித்து வைக்கக் கூடிய தரவு களைப்போல் நான்கு மடங்கு தரவுகளை இந்தப் பொறி யமைவுகளில் சேமித்து வைக்க லாம். இரட்டைப் பக்க இரட் டைச் செறிவு வட்டுகள் மிகைச் செறிவு வட்டுகள் ஆகும்.

quadratic quotient search : இரு விசைப்படி ஈவு ஆய்வு; இரு விசைப்படி ஈவு தேடல் : பிந்திய வரிசை அட்டவணை அமை விடங்களை ஆராயும்போது இரு விசைப்படி எதிரீட்டினைப் பயன்படுத்தும் படிநிலை நடை முறை.

quadrature : உருச்சதுர சரியீட்டளவு : பால் (PAL) தொலைக் காட்சி ஒளிபரப்பில் வண்ண சமிக்கைகளை அளிக்க அதிர் வலைவீச்சு குறிப்பேற்றம் பயன்படுத்தப்படுகிறது.

quadrature amplitude modulation : உருச்சதுர சரியீட்டளவு அதிர் வலைவீச்சுக் குறிப்பேற் றம் : நடுநிலை அதிவேகக்குறிப்பேற்றங்களில் பயன் படுத்தப்படும் ஒரு செய்தி யனுப்பும் முறை.

quadrature encoding : கால் வட்டக் குறியாக்கம் : சுட்டி நகரும் திசையைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் பொது வான வழிமுறை. சுட்டிப்பொறி களில் அதிலுள்ள கோளத்தின் அசைவு செங்குத்து அல்லது கிடைமட்ட திசைகளின் அள வாய் மாற்றப்படுகிறது. இதை நிர்ணயிக்க இரண்டு சிறிய வட்டுகள் உள்ளன. இந்த வட்டுகள் உள்ளே பொருத்தப் பட்டுள்ள இரு உணரிகளுடன் (sensors) உரசி, விலகுவதைக் கொண்டு செங்குத்து, கிடை மட்டத் திசைகள் நிர்ணயிக்கப் படுகின்றன. இரண்டு உணரி களில் எது முதலில் உரசப் படுகிறது என்பதைக் கொண்டு சுட்டியின் நகர்வு இடப்பக்கமா, வலப்பக்கமா என்பது தீர்மானிக்கப்படுகிறது.

quadrillion : ஆயிரம் கோடி கோடி : ஒரு இலட்சம் கோடியில் ஆயிரம் மடங்கு.

quad-type cable : குவாட் வகை கம்பி வடம் : ஒட்டப்பட்ட இணைக்கம்பிகளை அதனுள் வைத்து ஒரு கேபிளை உருவாக்கி இதை வசதியாகச் செய்யமுடியும். நான்குகள் அல்லது குவாடுகளாக இதைச் செய்யலாம். ஒட்டும் பொருளின் நிறத்தை வைத்து ஒவ்வொரு கம்பியும் அடையாளம் காணப்படுகிறது. இணைக் குழாய் அடையாளத்துக்குரிய தர நிறக் குறியீட்டின்படி இஃது செய்யப்படுகிறது.

quality : தரம்

quality assurance : தர உத்திரவாதம்; தர உறுதிச்சான்று : ஒர் உற்பத்திப் பொருள் அல்லது ஒர் அமைப்பு விழக்காற்றில் நிலை நிறுத்தப்பட்ட தர வரையறை களைக் கொண்டுள்ளது என்பதை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் செயல்முறைகள்.

quality control : தரக் கட்டுப்பாடு : செய்முறைப்படுத்தப்படும் பொருளின் தரத்தை மதிப்பிட்டு அறியும் உத்தி. முன் அறுதியிட்ட தர அளவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து இது செய்யப்படுகிறது. தர அளவு குறைபாட்டுடன் இருந்தால், அதனைச் சீர்செய்ய தக்க நடவடிக்கை எடுக்க இது உதவுகிறது.

quality engineering : தர அளவுப் பொறியியல்; தரப் பொறியியல் : பொருள்களின் தரத்தை வகுத் துரைப்பதும், தர அளவுகளை நடைமுறையில் செயற்படுத்து வதும், ஏற்றுக் கொள்ளப்பட்ட தர அளவு வகைப்பாடுகளுக்கு இணங்கி நடக்குமாறு செய்வ தும் இதில் அடங்கும்.

quantity : எண் அளவாக்குதல் : எண்ணியல் சாராத பொருள் களுக்கு எண்ணியல் மதிப் பளவுகளைக் குறித்தளித்தல்.

quantities : எண் அளவுகள்; பொருள் அளவுகள்.

quantity : எண்ணளவு : கணித முறையில் அல்லது மறுதலை மெய்ம்மை எண்.

quantize : குவாண்டைஸ் : சோதனைகளுக்காக ஒரு பொருளை விரும்பும் மதிப்பு களில் பிரித்தல்.

quantum : அளவை அலகு : துளியம் : ஒரு பொறியமைவில் பயன்படுத்தப்படும் மிகச்சிறிய அளவை அலகு.

quartz crystal : பலவண்ணப் படிகம் : படிகக்கல்லை ஒரு குறிப்பிட்ட பருமனுக்குத் துண் டாக்குதல். இதில் மின்சாரம் பாய்ந்தவுடன் இது அதிர்கிறது. நுண்ணிய படிகம் ஒரு அங்குலத்தில் 1/20 முதல் 1/5 வரையுள்ள கணினியின் இதயத் துடிப்பை உருவாக்குகிறது. quasi language : மொழிப் போலி.

QUBE : தரவு பயன்பாடு : உயர் அதிர்வெண் மின்கடத்தி வடத் தொலைக்காட்சியின் ஒரு பகுதி யாக இருக்கிற தரவு பயன்பாடு. இது நேயர்கள் புதிய படங்கள் பார்க்க உதவுவது முதல் மருத் துவர்களுக்கும் வழக்குரைஞர் களுக்கும் தனிவகைத் தொழில் முறைத் தரவுகளை அளிப்பது வரை எல்லா வகை வசதிகளையும் செய்து கொடுக்கிறது. இது தரவு பரிமாற்ற வகையைச் சேர்ந்தது.

queries : வினவல்கள்

query : கேட்டறி; வினவுதல்; வினா வினவல் : தரவுகளைக் கேட்டல். தரவுகளை ஒரு பொறியமைவிலிருந்து தரவு களை வேண்டுதல்.

query answer : வினா-விடை

query by example : எடுத்துக் காட்டு வழி கேட்டறிதல்; எடுத்துக் காட்டு வழி வினவுதல் : தேர்ந்தெடுத்த பதிவேடுகளுக் கான தகுதிப்பாடுகளை வரை யறுத்துக் கூறி, ஒரு தரவுத் தளப் பொறியமைவிலிருந்து தரவு களைக் கேட்டறிதல். தரவுகளைக்காண ஒரு நடைமுறையை விவரிப்பதற்குப் பதிலாக இவ்வாறு செய்யப்படுகிறது. query language : கேட்டறி மொழி; வினவல் மொழி; வினவு மொழி : 1. ஒரு தரவுத் தளப் பொறியமைவிலிருந்து குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த தரவு எதனையும் வரவழைப் பதற்குப் பயன்படுத்தப்படும் நிரல்களின் தொகுதி. இதனை "தரவு கையாள் மொழி (date manipulating language) stangyub கூறுவர். இது "செயல்முறை யற்ற வினவல் மொழி (nonprocedural query language) என்பதுடன் ஒப்பிடத்தக்கது. 2. மிக்க உயர் நிலை இயற்கை மொழி. பயனாளர், குறியீடுகள் அல்லது உயிர் நிலைச் சொற்கள் எதனையும் அறிந்து கொள்ளா மலேயே, ஒரு கணினியமை விடம் கேள்விகள் கேட்பதற்கு அனுமதிக்கிறது. இதில், தனி வகை மென்பொருள்கள், பயனாளரின் வேண்டுகோளைப் பகுப்பாய்வு செய்து, அதன் பொருளை விளக்கிக் கூறி, காட்சித்திரையில் தக்க பதில் களைக் காட்டுகின்றன.

query programme : கேட்டறி நிரல் தொடர் : எண்ணி, காட்டி, ஒரு தரவுத் தளத்திலிருந்து தேவையான பதிவேடுகளை எடுத்துவரும் மென்பொருள். ஒரு வாடிக்கையாளரின் கணக்கை திரையில் கொண்டு வருவது போன்று ஒன்று அல்லது இரண்டு தேடல்களை மட்டும் கொண்ட பெரிய பயன்பாட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம் அல்லது எந்தச் சூழ்நிலையிலும் தேடி, தேர்ந்தெடுக்கக்கூடிய கேள்வி மொழியைக் குறிப்பிடுவதாக வும் இருக்கலாம்.

query response : வினவல் விடை; வினாவுக்குரிய பதில் : இயக்குபவரின் குறிப்பிட்ட வேண்டுகோளுக்குப் பதிலாக ஒரு கணினி முனையம் அனுப்பும் செய்தி.

question answer : வினா விடை : கணினியுடன் செய்திப் பரி மாற்றம் செய்து கொள்வதற் கான செய்முறை. பயனாளரி டம் கணினி ஒரு கேள்வியைக் கேட்கும்; அதற்குப் பயனாளர் பதிலளிப்பார்.

question mark : வினாக்குறி; கேள்விக்குறி : சில இயக்க முறைமைகளிலும் பயன்பாடு களிலும் எந்தவொரு ஒற்றை எழுத்துக்காகவும் பயன்படுத்தப் படும் பதிலீட்டுக் குறியீடு. எம்எஸ்-டாஸ், விண்டோஸ் என்டி, ஒஎஸ்/2 ஆகிய இயக்க முறைமைகளில் பயன்படுத்தப் படும் இரண்டு பதிலீட்டுக் யீடுகளில் (wildcard characters) bகேள்விக் குறியும் ஒன்று.

queue : வரிசை : சாரை : கணினியின் செயற்பாட்டுக்கு உட்படுவதற்கு வரிசையில் காத்திருக்கும் இனங்களின் குழுமம். எடுத்துக்காட்டு : ஒரு தரவு அனுப்பீட்டுப் பொறி யமைவில் அனுப்பப்பட இருக்கும் செய்திகள். இனங் களின் வரிசைமுறையானது, செய்முறை முந்துரிமையை நிருணயிக்கிறது.

queued access method : வரிசை அணுகுமுறை; சாரை அணுகல் முறை : அணுகுமுறை, உட் பாட் டு / வெளிப் பாட்டுச் சாதனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, செயல்முறை களுக்கிடையில் தரவுகளை மாற்றுவதைத் தானாகவே ஒருங்கிணைக்கிற ஒர் அணுகு முறை. இதன் மூலம், உட் பாட் டு வெளி ப் பாட் டு ச் செயல்முறைகளில் காலத் தாழ்வுகளைத் தவிர்க்கலாம்.

queuing : வரிசைமுறையாக்கம் : சாரையாக்கம் தரவு செய் முறைப்படுத்தும் வரிசையைக் கட்டுப்படுத்தும் உத்தி.

queuing system : வரிசைமுறை அமைப்பு : ஏராளமான தொலை பேசி அழைப்புகளை பெறுகின்ற வணிக மற்றும் பெரிய நிறுவனங்கள் பயன்படுத்து கின்ற, செயலகம் கட்டுப் படுத்துகின்ற பொத்தானிடும் அமைப்பு. இரயில்வே விசாரணை, விமான சேவை மற்றும் கேஸ் கம்பெனிகள் ஆகியவற்றை சான்றாகக் கூறலாம். வருகின்ற அழைப்புகளை வரிசைப்படுத்தி, மின்னணு முறையில் அழைத்தவர்களுக்கு ஒரு செய்தி அனுப்பப் படுகிறது. சான்றாக, இயக்கு பவர்கள் இப்போது சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். இயக்கு பவர் (ஆப்பரேட்டர்) கிடைத்தவுடன் உங்களுக்குப் பதில் கிடைக்கும். நீங்கள் வரிசையில் உள்ளீர்கள் என்று பதில் வரும். ஒவ்வொரு அழைப்பும் அது வரும் வரிசையில் கவனிக்கப் பட்டு உள்ள முகப்புக்கு அனுப்பப்படுகிறது. முதலில் வருவது. முதலில் போக வேண்டும் என்ற கொள்கை யின்படி வரிசைமுறை அமைப்பு வேலை செய்கிறது. இதன்படி காத்திருக்கும் நேரம் எல்லோருக்கும் ஒன்றாகவே இருக்கும். ஒவ்வொரு இயக்குநருக்கும் காலியாக சமமான வேலை கிடைக்கவும் இது உதவுகிறது.

queuing theory : வரிசை முறையாக்கக் கோட்பாடு; சாரைக் கோட்பாடு : பணி முனைகளில் ஏற்படும் தாமதங்களை அல்லது தேக்கங்களை ஆராய்ந்தறிவதற்கு உதவும் நிகழ் தகவுக் கோட்பாட்டின் ஒரு வடிவம். நகரும் அலகுகளின் வரிசை முறைகளைத் திருத்துவது தொடர்பான ஆராய்ச்சி உத்தி. தரவுகளின் அல்லது முழுச் செய்திகளின் துணுக்குகளை வரிசைமுறையில் அமைப்பது இதில் உள்ளடங்கும்.

quibinary code : இரட்டுறு இரும எண் குறியீடு : பதின்ம எண்களைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படும் இரும எண் குறியீடிட்ட பதின்ம குறியீடு. இதில் ஒவ்வொரு பதின்ம எண்ணும், ஏழு இரும எண் களினால் குறிக்கப்படும்.

quick disconnect : விரைவுத் தொடர்பு முறிவு : விரைவுத் துண்டிப்பு : பொருத்து இணைப் பியை விரைவாகப் பூட்டவும், திறக்கவும் அனுமதிக்கும் மின் னியல் இணைப்பு வகை.

quickdraw : விரைவுவரை : மெக்கின்டோஷில் அமைக்கப்பட்டுள்ள வரைகலைக் காட்சி முறை. பயன்பாட்டிலிருந்து கட்டளைகளை ஏற்று, அதற் கேற்ற பொருள்களை திரையில் வரைகிறது. மென்பொருள் உரு வாக்குபவர்கள் பணியாற்றக் கூடிய ஒரு தொடர்ச்சியான இடைமுகத்தை இது அளிக்கிறது.

quick format : உடனடிப் படிவம் : கோப்பு ஒதுக்கும் பட்டியல் மற்றும் ஒரு வட்டின் வேர் தரவு பட்டியலை விலக்கி காலியாகத் தோற்றமளிக்க வைக்கும் ஒரு டாஸ் கட்டளை. ஆனால், இது வட்டின்மீதுள்ள கோப்பு தரவுவை நீக்கவோ அல்லது மோசமான பகுதிகளை நுண்ணாய்வு செய்யவோ போவதில்லை. ஏற்கனவே, படிவம் அமைக்கப்பட்ட வட்டை உடனடியாகப் படிவம் அமைக்க இது விரைவான வழியைத் தருகிறது.

quicksort : விரைவுத் தொகுப்பு : வேக வகைப்படுத்தல்; வேக வரிசையாக்கம் 1962-ல் சி. ஏ. ஆர். ஹோர்ஸ் என்பவர் அறிமுகப்படுத்திய திறன்மிக்க வரிசையாக்கத் தருக்க முறை. பிரித்தாளுதல் (devide and conquer) என்கிற போர்த் தந்திர முறையை அடிப்படையாகக் கொண்டது. இம்முறைப்படி முதலில் வரிசையாக்கப்பட வேண்டிய பட்டியலில் மைய மதிப்பு தேடிக் கண்டறியப் படும். அச்சாணி (pivot) மதிப் பென இது அழைக்கப்படு கிறது. இவ்வுறுப்பை சிறிது சிறிதாக நகர்த்தி அதன் இயல்பான இடத்தில் இருத்த வேண்டும். அதன் பிறகு அச்சாணி மதிப்பைவிடக் குறைவான மதிப்புள்ள உறுப்பு கள் ஒருபுறமாகவும், அதிக மதிப்புள்ள உறுப்புகள் மறுபுறத்திற்கும் தள்ளப்படு கின்றன. இப்போது இரு பட்டியல்கள் பெறப்படுகின்றன. அடுத்த கட்டமாக, இரு பட்டியல்களிலும் தனித் தனியாக மேற்கண்ட முறை செயல்படுத்தப்படும். முழுப் பட்டியலும் வரிசையாக்கப் படும்வரை தொடர்ந்து பட்டியல் பிரிப்பு நடைபெறும்.

quicktime : உடனடி நேரம் : குவிக் டைம் : மெக்கின்டோஷ் அமைப்பு 7-க்கான பல் ஊடக விரிவாக்கங்கள். ஒலி, ஒளி திறன்களை அளிக்கிறது.

quickwin : குவிக்வின்; விரைவுப் பயன் : மைக்ரோசாஃப்ட் நிறு வனத்தின் 'சி' மற்றும் ஃபோர்ட்ரான் வாலாயம்களின் நூலகம். டாஸ் பயன்பாடுகளை விண் டோஸ் சூழ்நிலையில் விரை வில் ஏற்ற அனுமதிக்கிறது. எழுத்து சார்ந்த பயன்பாடுகள் மீண்டும் அளவிடக்கூடிய விண்டோஸ்களில் ஒடுகின்றன.

quinary : ஐந்து சார்ந்த : பிகு வினரி (biquinary) குறியீடாகப் பயன்படுத்துவது, இதில் பதின்ம எண் இணை எழுத்து களாகவோ அல்லது எண்களா கவோ பயன்படுவது. இதில் a=0 அல்லது b=0, 1, 2, 3 அல்லது 4 ஆக மதிப்பிடப்படும். முதல் கணிப்பியாகிய மணிச்சட்டம் இதைப் பயன்படுத்தியது.

quit : வெளியேறு : 1. எஃப் டீபீ தரவுத் தொடர்பில் பயன்படும் ஒரு கட்டளை. கிளையன் கணினி தன்னைத் துண்டித்து விடும்படி வழங்கன் கணினிக்கு அனுப்பும் கோரிக்கை. 2. பெரும்பாலான பயன்பாட்டுத் தொகுப்புகளில், தொகுப்பை விட்டு வெளியேற உதவும் கட்டளை.

quit : வெளியேறு : 1. முறைப் படியான வெளியேற்றம். 2. ஒரு மென்பொருள் பயன்பாட்டை இயல்பான முறையில் மூடி விட்டு இயக்க முறைமையின் கட்டுப்பாட்டுக்குத் திரும்புதல். quiting : வெளியேறல்.

qwerty board : குவர்ட்டி பலகை : தரமான தட்டச்சுப் பொறியின் விசைப்பலகையைப்போலவே வடிவமைக்கப்பட்ட பீசி (pc) யின் விசைப்பலகை. இரண் டாவது வரிசையின் இடது பக்கத்தில் உள்ள எழுத்துகள் QWERTY சரமாக அமையும்.

qwerty keyboard : குவர்ட்டி விசைப் பலகை : ஒரு சொந்தக் கணினியின் (pc) விசைப்பலகை பட்டடை. இது, ஒரு செந்திறப் படுத்திய தட்டச்சுப் பொறியின் விசைப்பலகை போன்றே வடிவமைக்கப்பட்டது. இந்த விசைப்பலகையின் உச்ச அகர வரிசை வரியிலுள்ள முதல் ஆறு எழுத்துகள் "Q, W, E, R, T, Y" என்பனவாகும். இதையொட்டி இந்த வடிவமைப்பு "குவர்ட்டி’ என்று பெயர் பெற்றது. இது நூறாண்டுகளுக்கு முன்பு வடி வமைக்கப்பட்டது. இப்போது, இது அவ்வளவாகத் திறன் பெற்றிருக்கவில்லை. பெரும்பாலான வணிக நிறுவனங்கள் இதனைக் கைவிட்டு வேறு திறன்வாய்ந்த அமைப்புகளைக் கையாண்டு வருகின்றன. இது “மால்ட்ரான் விசைப்பலகை" யிலிருந்து வேறுபட்டது.