கணினி களஞ்சியப் பேரகராதி/S

விக்கிமூலம் இலிருந்து
S

.sa : எஸ்ஏ : ஒர் இணைய தள முகவரி. சவூதி அரேபியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

SAA (System Appplication Architecture) : எஸ்ஏஏ (பொறியமைவுப் பயன்பாட்டுக் கட்டிடக் கலை) : இது, ஒரு வகை IBM தர அளவுகளின் தொகுதி. 1987இல் அறிமுகப்படுத்தப்பட்டது. நுண் கணினிமுதல் முதன்மைப் பொறியமைவு வரை IBMஇன் அனைத்துக் கணினிகளிடையிலும் தொடர்ச்சியான இடை முகப்புகளை இது ஏற்படுத்துகிறது. பயன்படுத்துவோர் இடைமுகப்புகள், செயல் முறைப்படுத்தும் இடை முகப்புகள், செய்தித்தொடர்பு மரபுகள் ஆகியவற்றினாலானது.

sabermetrician : புள்ளியியல்வாதி : புள்ளிவிவர வல்லுநர்களைக் குறிக்கும் வழக்குச்சொல். இவர் விளையாட்டு அணிகள் மற்றும் விளையாட்டு வீரர்களின் எதிர்காலச் சாதனைகளை ஊகித்தறியக் கணினிகளைப் பயன்படுத்துபவர்.

Sad Mac : வருத்த மேக் : சோக மேக் ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகள் இயக்கப்படும்போது தொடக்கநிலைப் பரிசோதனைகளில் தோல்வியடைந்தால் கிடைக்கும் பிழைக் குறிப்பு. ஒரு சோகமான முகம் கொண்ட மெக்கின்டோஷ் படம் அடியில் ஒரு பிழைச் செய்தியுடன் தோற்றமளிக்கும்.

safe mode : தீங்கிலாப் பாங்கு; பாதுகாப்பு பாங்கு : விண்டோஸ் 95/98 இயக்க முறைமைகளில் ஒரு வகை இயக்கப் பாங்கு. பெரும்பாலான புறச்சாதனங்கள் துண்டிக்கப்பட்டு, பெரும்பாலான இயக்கி நிரல்கள் நினைவகத்தில் ஏற்றப்படாமல் கணினியை இயக்கும் முறை. இதன் மூலம் பயனாளர் தன் கணினியில் ஏற்பட்டுள்ள சிக்கலைக் கண்டறிந்து சரி செய்துகொள்ள முடியும். பணி முடித்து முறைப்படி கணினி இயக்கத்தை நிறுத்தாவிட்டாலும், வேறுசில காரணங்களினால் கணினி இயக்கம்பெற முடியாமல் போகும்போதும் இவ்வாறு நிகழும்.

sag : மின்னழுத்த வீழ்ச்சி : மின் விசை ஆதாரத்திலிருந்து வரும் மின்னழுத்தம் தற்காலிகமாக வீழ்ச்சியடைதல். இது,

மின்னழுத்தப் பெருக்கத்திலிருந்து வேறுபட்டது.

salami technique : சிறிதளவு கையாடல் செய்தல்; சலாமி கையாடல் உத்தி : பெருமளவு ஆதாரங்களில் சிறிதளவு உடைமைகளைத் திருடுதல். ஒரே சமயத்தில் சிறு துணுக்கினை களவாடும் கையாடல் உத்தி எனப்படும். எடுத்துக்காட்டு : பல வங்கிக் கணக்கு களிலிருந்து சில காசுகளைத் திருடுதல்.

sales forecasting model : விற்பனை முன்னறிவிப்பு உருமாதிரி : விற்பனை முன் மதிப்பீட்டு முன் மாதிரி : விற்பனை முன்கணிப்பு மாதிரி : ஒரு முன்னறிவிப்பின் ஒவ்வொரு கால அளவின் போதும் ஆண்டு விற்பனையை அதிகரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் உருமாதிரி. உட்பாட்டுக் காரணிகளில் அங்காடி அளவுகள், விற்பனை விலைகள், அங்காடி வளர்ச்சிவீதம், போட்டியாளர் நடவடிக்க களில் அங்காடி அளவுகளின் பங்கு பிற காரணிகள் இதில் அடங்கும்.

SAM : சாம் : வரிசைமுறை அணுகுமுறை என்று பொருள்படும் "Sequential Access Method" என்பதன் குறும்பெயர். இது ஒரு வட்டுக் கோப்பில் தரவுகளைச் சேமிக்கவும், அதிலிருந்து தரவுகளை மீட்கவும் பயன்படும் முறை.

samna : சாம்னா : சொந்தக் கணினிகளுக்கான முதலாவது செய்முறைப்படுத்திகளில் ஒன்று. இதனை 1983 -இல் சாம்னா நிறுவனம் தயாரித்தது. இப்போது இது, லோட்டசின் ஒரு பகுதி.

sample : மாதிரி.

sample data : மாதிரித் தரவு : ஒரு பாய்வு வரைபடம் தருக்க முறையில் இருக்கிறதா என்றும், ஒரு செயல்முறை செயற்படுகிறதா என்றும் அறிந்துகொள்வதற்குப் பயன்படுத்தப்படும் புனைவுகோள் தரவுத் தொகுதி.

sampling . மாதிரி எடுத்தல் : ஒரு சீரான அல்லது இடையிடையிலான காலஇடைவெளிகளில் ஒரு மாறிலியின் ஒரு மதிப்பினைப் பெறுதல்.

sampling rate : மாதிரி வீதம் ; மாதிரி எடுப்பு வீதம் : மாதிரி நிகழ்கிற அடுக்கு வீதம்.

sampling ratio : மாதிரி விகிதம் : கலைப்பொருள்களை அல்லது ஒளிப்படங்களை மின்னணு முறையில் நுண்ணாய்வு செய்யும்போது, மூல உருக்காட்சியிலிருந்து பதிவு

செய்யப்படும் படக்கூறுகளின் எண்ணிக்கை. நுண்ணாய்வு செய்பவர் 300 டிபிஐ எனப்பதிவு செய்திருக்கலாம். ஆனால் இறுதியில் 150 டிபிஐ மட்டுமே பதிவாகியிருக்கும். இந்த விகிதம் 2 : 1 ஆகும்.

sampling synthesizer : மாதிரி கூட்டிணைப்பி; மாதிரி இணைப் பாக்கி : படிக்க மட்டுமேயான நினைவகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள இலக்கமுறைப்படுத்தப்பட்ட ஒலியை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு அலைவரிசைகளில் ஒலியை உருவாக்கிட வடிவமைக்கப்பட்ட சாதனம். எடுத்துக்காட்டாக, ஒரு பியானோ ஒலித்துணுக்கை இலக்கமுறைப்படுத்தி நினைவகத்தில் சேமித்து வைத்துக் கொண்டு, பியானோ இசையைப் போன்றே பல்வேறு இசைத் துணுக்குகளை இணைப்பாக்கியில் உருவாக்கலாம்.

sans serif : நுண்வரையிலா எழுத்துரு : நுண்வரைகள், அலங்காரமாக அகன்ற அடித்தளங்கள், உச்சிக் கொண்டைகள் இல்லாத எழுத்து முகப்புகள்.

SAP : சேப்பி; எஸ்ஏபீஐ : குரலறி பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் என்று பொருள்படும் Speech Application Programming Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். விண்டோஸ் 95/98/ என்டீ இயக்கமுறைமைகளில் பயன்பாட்டுத் தொகுப்புகள் குரல் உணர்தல் மற்றும் உரையைப் பேச்சாக மாற்றல் போன்ற வசதிகளை உருவாக்கிக்கொள்ள முடியும்.

sapphire : நீலமணி, நீலக்கல் : சில வகை ஒருங்கிணைந்த சுற்று வழிச் சிப்புகளுக்கான கீழடுக்காகப் பயன்படுத்தப்படும் பொருள்.

SAS : எஸ்ஏஎஸ் (புள்ளியியல் பகுப்பாய்வுப் பொறியமைவு) : இது எஸ்ஏஎஸ் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனம் தயாரித்துள்ள ஒருங்கிணைந்த புள்ளியியல் தொகுதி. இதில், தரவு நிருவாகம், விரிதாள், சிபிடீ, (CBT) முன்னிடு வரைகலை, திட்டநிருவாகம், நீட்சிமுறைச் செயல்முறைப்படுத்துதல், செயற்பாட்டு ஆராய்ச்சி, அட்டவணைப்படுத்துதல், புள்ளியியல் தரக்கட்டுப்பாடு, பொருளியல், நேரத்தொடர் பகுப்பாய்வு, கணிதப்பொறியியல், புள்ளியியல் பயன்பாடுகள் அடங்கியுள்ளன.

SASI (Shugart Associates Systems Interface) ; எஸ்ஏஎஸ்ஐ : (ஷூகார்ட் அசோசியேட்ஸ் சிஸ்டம்ஸ் இன்டர்ஃபேஸ்) ஷூகார்ட் மற்றும் என். சி. ஆர்  நிறுவனங்கள் 1981இல் தயாரித்த புறநிலை இடைமுகப்புகள். இது 1986இல் ஏஎன்எஸ்ஐ மற்றும் எஸ்சிஎஸ்ஐ தரஅளவுகளுடன் உருவாக்கப்பட்டது.

SATAN (System Administrator's Tools for Analyzing Networks) : சாட்டன் : பிணையங்களைப் பகுப்பாய்வு செய்வதற்கான பொறியமைவு நிருவாகியின் சாதனம். இது, பெரிதும் கவலையளிக்கும் ஒரு நிகழ்வுக்கான பாதுகாப்புச் சாதனம். இது இன்றும் பயன்படுகிறது.

satellite : செயற்கைக்கோள்; துணைக்கோள் செய்தித்தொடர்புச் சைகைகளை நெடுந் தூரம் அஞ்சல் செய்யக்கூடிய, பூமியைச் சுற்றிவரும் சாதனம்.

satellite channel : செயற்கைக்கோள் அலைவரிசை; துணைக்கோள் அலைவரிசை : செயற்கைக்கோள், , அனுப்பீட்டுக்காகப் பயன்படுத்தப்படும் ஊர்தி அலைவெண்.

satellite communications : செயற்கைக்கோள் செய்தித் தொடர்பு; துணைக்கோள் செய்தித்தொடர்பு : உலகெங்கும் தகவல்களை அனுப்புவதற்காக சுழன்றுவரும் நுண்ணலை அஞ்சல்களைப் பயன்படுத்துதல்.


satellite computer : கிளைக்கணினி; துணைக்கோள் கணினி : 1. கூடுதல் கணினி. இது பொதுவாகச் சிறிய அளவில் இருக்கும். இது பெரிய கணினிப் பொறியமைவுக்கு உதவிகரமாக இருக்கும். இது கீழ்நிலை செயற்பணிகளைச் செய்தால், செய்முறைப்படுத்துதல் சிக்கனமாக இருக்கும். 2. ஒரு தொடர்பற்ற துணைக் கணினி.

satellite dish antennae : செயற்கைக்கோள் வட்டில் வானலை வாங்கி : இது ஒரு பிரதிபலிப்பி. இதன் மேற்பரப்பு ஒரு கோளம் போன்று உட்குழிவாக இருக்கும். இது செயற்கைக்கோள்களைக் கையாள்வதற்கு வட்டில் வானலை வாங்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.

satellite link : செயற்கைக்கோள் இணைப்பு : பூமியிலிருந்து ஒரு செய்தித்தொடர்புச் செயற்கைக்கோளுக்குச் சென்று மீண்டும் பூமிக்குத் திரும்பி வரும் சைகை. இது, தரைவழி இணைப்புக்கு மாறுபட்டது.

satellite orbit : செயற்கைக்கோள் சுற்றுப்பாதை : செயற்கைக் கோள் சுற்றிவருகிற சுற்றுப்பாதை.

Saturate : பூரிதமாக்குதல்; திகட்டுதல் : எந்த அளவு அதிகமாக ஈர்க்கும்படி செய்யமுடியுமோ அந்த அளவுக்கு அதிகமாக ஈர்க்கும்படி செய்தல். ஒரு வட்டில் அனைத்துத் தடங்களும் நிரப்பப்பட்டிருந் தால் அது பூரிதமாக்கப்பட்டுவிட்டது என்று பொருள்.

saturated mode : பூரிதப் பாங்கு; முற்றுநிலைப் பாங்கு : ஒரு நிலைமாற்றுச் சாதனம் (switching device) அல்லது ஒரு பெருக்கியின் ஊடே பாய்கின்ற மின்னோட்டம் உச்ச அளவை எட்டிய நிலை. இந்த நிலையில் உள்ளிட்டுக் கட்டுப்பாட்டு சமிக்கையின் அளவை எவ்வளவு அதிகரித்தாலும் வெளியீட்டு மின்னோட்டத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படுவதில்லை.

saturation : பூரிதம்; முற்றுநிலை; முழுநிறைவு : 1. ஒரு நிலை மாற்றுச் சாதனம் அல்லது பெருக்கியின் முழு கடத்துநிலை. இந்த முற்றுநிலையில், இவற்றின் ஊடே உச்சஅளவு மின்னோட்டம் பாய்ந்து கொண்டிருக்கும். இருதுருவ (bipolar) மற்றும் புல-விளைவு (fieldeffect) மின்மப் பெருக்கிகளைக் கொண்ட மின்சுற்றுகள் குறித்தே பெரும்பாலும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. 2. வண்ண வரைகலையிலும், அச்சுத்துறையிலும் ஒரு குறிப்பிட்ட நிறக்கலவையில் ஒரு குறிப்பிட்ட நிறத்தின் அளவு முற்றுநிலை பெற்றதாகக் குறிப்பிடுவர்.

save : சேமி; வேறிடச் சேமிப்பு : கணினியின் உள்முக நினைவகத்தில் அல்லாமல், ஒரு நாடா, வட்டு போன்ற வேறிடங்களில், மீண்டும் பயன்படுத்தும் வகையில் தகவல்களைச் சேமித்து வைத்தல்.

Save as HTML : ஹெச்டீஎம்எல் ஆக சேமி.

Save as Type : வகையில் சேமி.

save record : ஏட்டைச் சேமி.

save results : விடைகளைச் சேமி.

Save/Save As : சேமி/எனச் சேமி

save workspace : பணிவெளியைச் சேமி.

saving : சேமித்தல்.

. sb : . எஸ்பி : ஒர் இணைய தள முகவரி சாலமன் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

s-100 bus : எஸ்-100-பாட்டை : இன்டெல் 8080, ஸிலாக் இஸட்80 நுண்செயலிகளை அடிப்படையாகக் கொண்ட கணினிகளின் வடிவமைப்பில் பயன்படுத்தப்பட்ட 100 (பின்கள்) இணைப்பூசிகள் கொண்ட பாட்டை வரன்முறை. மோட் டோராலா 6800, 68000, இன்டெல் ஐஏபீx86 குடும்ப நுண்செயலிகளைக் கொண்ட கணினிகளும் எஸ்-100 பாட்டையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. தொடக்ககால கணினி ஆர்வலர்களிடையே எஸ்-100 கணினிகள் மிகவும் செல்வாக்குப் பெற்று விளங்கின. அவை திறந்த நிலைக் கட்டுமான அமைப்பைக் கொண்டவை. பயனாளர் விருப்பத்திற்கேற்ப பல்வேறு வகைப்பட்ட கூடுதல் விரிவாக்கப் பலகைகளைப் பொருத்திக் கொள்வதற்கு இடமளிப்பதாய் அவை விளங்கியதே இதற்குக் காரணம்.

. sc : . எஸ்சி : ஒர் இணைய தள முகவரி செய்ச்செலீஸ் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

scalable : விரிவாக்கத்தக்க : வடிவளவிலும், தோற்றத்திலும் மாற்றம் செய்யத்தக்க.

scalability : தகடாகும் தன்மை : விரிவடையும் திறன் வளர்ச்சிக்கு உதவுவதற்கு நடப்பு நடைமுறைகளில் குறைந்த அளவு மாற்றத்தைக் குறிக்கிறது.

scalable font : விரிவாக்க எழுத்துரு : ஒர் ஆவணத்தைக் காட்சியில் காட்ட அல்லது அச்சிட வேண்டியிருக்கும்போது, தேவையான புள்ளி அளவுக்கு உருவாக்கப்படும் எழுத்து கணினியில் பல்வேறு எழுத்து உருக்களை சேமித்து வைப்பதை விரிவாக்க எழுத்து முகப்பு தவிர்க்கிறது.

scalable parallel processing : அடையத்தக்க இணைநிலைச் செயலாக்கம் : பல்முனைச் செயலாக்கக் கட்டுமானத்தில் ஒருவகை. அதிகச் சிக்கலின்றி, செயல்பாட்டுத் திறனுக்குக் குறைவு நேராவண்ணம் கூடுதல் செயலிகளை இணைத்துக் கொள்ள முடியும்; கூடுதல் பயனாளர்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.

scalable type face : விரிவாக்க எழுத்துமுகம் : எந்த வடிவளவுக்கும் விரிவாக்கம் செய்யத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்ட எழுத்துகள், எண்கள், நிறுத்தற்குறிகள், குறியீடுகள் ஆகியவற்றின் ஒரு தொகுதி.

scalar : ஒற்றைமதிப்பு : அளவீடு; அளவுரு : ஏடு (record), கோவை (array), நெறியம் (vector) போன்ற சிக்கலான தரவு கட்டமைப்புபோல் இல்லாமல் ஒற்றை மதிப்பை மட்டுமே கொண்டுள்ள ஒரு காரணி, ஒரு குணகம் அல்லது ஒரு மாறிலியை இது குறிக்கும். AB என்கிற ஒரு நெறியம், தொடக்கப்புள்ளி இறுதிப் புள்ளிக் கிடையே தொலைவு மற்றும் திசைப்போக்கு ஆகிய இரண்டு விவரங்களைக் கொண்டுள்ளது. ஆனால் AB என்று மட்டுமே குறித்தால், தொலைவை மட்டுமே குறிக்கும் ஒர் அளவீடு ஆகும்.

scalar data type : ஒற்றைமதிப்பு தரவு இனம் : இதைவிடப் பெரியது, அதைவிடச் சிறியது என்று ஒப்பிட்டுச் சொல்லத்தக்க தொடர் மதிப்புகளைக் கொண்டிருக்கும் தரவு இனம். முழு எண் (Integer), எழுத்து (Character), பயனாளர் வரையறுக்கும் எண்ணல் வகை (user defined enumerated type), பூலியன் ஆகிய தரவு இனங்களையும் இந்த வகையில் அடக்கலாம். மிதவைப்புள்ளி எண்களை இந்த வகையில் சேர்ப்பதில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. அவற்றையும் வரிசைப்படுத்தமுடியும், ஒப்பிட முடியும் என்றபோதிலும் தோராயமாக்கல், இனமாற்றத்தில் ஏற்படும் பிழைகளைக் கருத்தில் கொண்டு புறக்கணிப்பாரும் உளர்.

scalar processor : ஏறுமுகச் செய்முறைப்படுத்தி : ஒரே சமயத்தில் ஒர் இலக்கத்தில் கணிதக் கணிப்புகளைச் செய்யக்கூடிய கணினி. இது செயலகச்செய்முறைப்படுத்தியினின்றும் மாறுபட்டது.

scalar value : ஏறுமுக மதிப்பளவு : ஒரு செயல்முறைப்படுத்தும் மொழியில் ஏறுமுக மதிப்பளவு என அறிவிக்கப்பட்ட பகுபடா எண். இது ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் மதிப்பளவினைக் கொண்டிருக்கும். இது நெறியம் (vector) என்பதிலிருந்து வேறுபட்டது.

scalar variable : ஏறுமுக மாறிலி : செயல்முறைப்படுத்துவதில் ஒரேயொரு மதிப்பளவையுடைய ஒரு மாறியல் மதிப்புரு.

scale : அளவுகோல் : 1. இருக்கக்கூடிய சேமிப்பு அமைவிடத்திற்குள் பொருந்தும் வகையில் ஒர் எண்ணளவின் அளவினைச் சரியமைவு செய்தல். 2. ஒரு வரைகலைக் கோப்பினை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் பொருந்தும்படி செய்வதற்காக அதன் வடிவளவை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மாற்றுதல். 3. வடிவளவு வரம்புகளுக்குள் பொருந்தும் வகையில் வரைகலைத் தரவுகளின் எண்ணளவைப் பெருக்குதல் அல்லது வகுத்தல்.

scale factor : அளவுகோல் காரணி; அளவு காரணி; அளவு மாற்றுக்காரணி : ஒரு கணக்கில் வரும் எணணளவுகளைப் பெருக்குவதற்கு அல்லது வகுப்பதற்கு, மற்றும் அவற்றை வேண்டிய அளவுக்கு மாற்றுவதற்கும் பயன்படுத்தப்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணிகள்.

scaling : அளவுமாற்றம்; அளவிடல் : ஒர் உருக்காட்சியின் வடிவளவினை மாற்றும் செய்முறை. ஒர் உருக்காட்சியின் எல்லாப் பரிமாணங்களையும் நான்கு மடங்காக உருமாற்றம் செய்தல்.

scan : வருடு; வருடல் : நுண்ணாய்வு : 1. தருக்கமுறை வரிசைமுறையில் புள்ளி புள்ளியாக ஆய்வு செய்தல். 2. ஒரு தரவு கட்டமைப்பின் ஒவ்வொரு மைய முனையையும் பார்வையிடுவதற்கான அல்லது பட்டியலிடுவதற்கான பதின்முறை எண்மான நடைமுறை. 3. ஒரு கண்காட்சித் திரையில் ஓர் உருக்காட்சியை உருவாக்குவதற்குத் தேவையான செயற்பாடு.

scan area : வருடுப்பகுதி; வருடல் பரப்பு : நுண்ணாய்வுப்பகுதி : ஒர் ஒளியியல் எழுத்துப்படிப்பி மூலம் நுண்ணாய்வு செய்யப்படவிருக்கும் தகவல்களைக் கொண்டிருக்கிற ஒர் ஆவணப் படிவத்தின் பகுதி.

scan code : வருடல் குறியீடு ; நுண்ணாய்வுக் குறியீடு : விசைப் பலகையில் ஒரு குறிப்பிட்ட விசையை அழுத்தும் போது அல்லது விடுவிக்கும் போது, அதனால் உருவாக்கப்படும் எண்மானக் குறியீடு. இது 8048 விசைப்பலகை நுண்செய் முறைப்படுத்தியிலிருந்து 8255 புறநிலை இடைமுகப்புக்கு அனுப்பப்படும் ஒரு குறியீட்டு எண். இது, எந்த விசை அழுத்தப்பட்டிருக்கிறது அல்லது விடுவிக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவிக்கும். பிறகு, விசைப்பலகை நுண்ணாய்வுக் குறியீடுகளை ASCII குறியீடுகளாக மாற்றும்.

scan head : வருடல் தலைப்பு  ; நுண்ணாய்வுத் தலைப்பு : இது நுண்ணாய்வு அல்லது தொலை நகலிச் செய்தியில் உள்ள ஒளியியல் உணர்வுச் சாதனம். இது நுண்ணாய்வு செய்யப்பட வேண்டிய உருக்காட்சியின் குறுக்கே நகர்த்தப்படும்.

scan line : வருடல் வரி : நுண்ணாய்வு வரி : ஒரு வரைகலைச் சட்டகத்திலுள்ள பல இடைமட்ட வரிகளில் ஒன்று.

scanner : வருடி; நுண்ணாய்வுக் கருவி; சுட்டும் கருவி : குறிப்பிட்ட காட்சி சைகைகளை உணர்ந்தறியக்கூடிய ஒர் ஒளியியல் சாதனம்.

scanner channel : வருடி அலைவரிசை; வருடல் தடம்; நுண்ணாய்வு வழி : தனிவழிகளில் அனுப்பீடு செய்வதற்கான தரவுகள் ஆயத்தமாக இருக்கின்றனவா என்பதைக் கண்டறிவதற்கான சாதனம்.

scanner scatter plot : வருடு பரவல் வரைவு : நுண்ணாய்வுப் பரவல் வரைவு : இரு தரவுத்தொகுதிகளிடையிலான தோராய இடைத்தொடர்பினைக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒருவகை வரைபடம். தரவுப் புள்ளிகள் வரைபடத்தில் தனித் தனிப்புள்ளிகளாகச் சிதறலாக அமைவதால் இது பரவல் வரைவு என்றும் அழைக்கப்படுகிறது. இவற்றின் உண்மையான அமைவிடங்கள் வரைபடத்தின் நிலையளவுருக்களினால் வரையறுக்கப்படுகிறது.

scanning : வருடுதல்; நுண்ணாய்வு செய்தல் : ஒரு கணினியின் தரவுப் பட்டியல், ஒரு குறிப்பிட்ட நிபந்தனையை நிறைவேற்றியுள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக அதிலுள்ள ஒவ்வொரு இனத்தையும் விரைவாக ஆய்வு செய்தல்.

scan path : வருடல் பாதை ; நுண்ணாய்வு வழி : ஒளியியல் நுண்ணாய்வில், படிக்கப்பட வேண்டிய தரவுகளை எங்கு கண்டறிய வேண்டுமோ அந்தத் தெளிவான பகுதி. நுண்ணாய்வு வழியின் அமைவிடமும், படிக்கவேண்டிய தரவுகளின் அளவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் எந்திரத்தைப் பொறுத்திருக்கின்றன.

scan rate : வருடல் வீதம் ; நுண்ணாய்வு வீதம் : ஒரு நுண்ணாய்வுச் சாதனம் தனது காட்சிப்புலத்தில், ஒரு வினாடியில் எத்தனை தடவை மாதிரி எடுக்கிறது என்ற எண்ணிக்கை.

scatter diagram : பரவல் வரையுரு; சிதறல் வரையுரு : ஒவ்வொரு தரவுப் புள்ளியிலும் புள்ளிகள் அல்லது வேறு குறியீடுகள்மூலம் வரையப்படும் வரைபடம். இதனைச் சிதறல் வரைவு அல்லது புள்ளி வரைபடம் என்றும் கூறுவர்.

scatter plot : சிதறல் வரைவு ; பிரி புள்ளி : ஒவ்வொரு தரவு முனையிலும் ஒரு புள்ளியை அல்லது சைகையினை வரை வதன்மூலம் இருமாறியல் அலைவெண் பகிர்மானத்தைக் காட்டுகிற வரைவு. சில சமயம், இரு அச்சுகளில் குறிக்கப்படும் மாறியல் மதிப்புருக்களுக்கிடையிலான தொடர்பினைக் காட்டுவதற்கு ஒரு வளைவு அல்லது ஒரு கோடு சேர்க்கப்படுகிறது. இதனைச் சிதறல் வரைபடம் என்றும் கூறுவர்.

scatter read/gather write : பிரித்துப் படி/சேர்த்து எழுது : சிதறல் படிப்பு/சேகரித்து எழுது : ஒர் உட்பாட்டுப் பதிவேட்டிலிருந்து அண்டையில் இல்லாத சேமிப்புப்பகுதிகளில் வைப்பதை சிதறல் படிப்பு குறிக்கிறது. அண்டையில் அல்லாத சேமிப்புப் பகுதிகளிலிருந்து ஒர் ஒற்றை இயற்பியல் பதிவேட்டில் தகவல்களை வைப்பதைக் குறிக்கிறது.

scenaries : சூழ்நிலைக் காட்சிகள்.

schedule : கால அட்டவணை : குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட தகவல்களை குறிப்பிட்டவாறு செயல்படுத்த கணினியை நிரல்படுத்தல்.

scheduled maintenance : காலமுறைப் பராமரிப்பு : திட்டமிட்ட பேணுதல் : கணினிப் பொறியமைவின் நம்பகத்தன்மையைப் பேணுவதற்காகக் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அதனைப் பேணிவருதல்.

scheduled report : காலமுறை அறிக்கை; குறிப்பிடப்பட்ட அறிக்கை; திட்டமிட்ட அறிக்கை : பயன்படுத்துவோருக்குச் சீரான கால இடைவெளிகளில் வாலாயத் தகவல்களை அளிப்பதற்காகத் தயாரிக்கப்படும் அறிக்கை.

scheduler : பட்டியலிடுபவர் ; கால முறைப்படுத்தி : செய்முறைப்படுத்துவதற்காகப் பணிகளைக் காலமுறைப்படுத்துகிற செயல்முறை.

scheduling : பட்டியலிடல்; கால முறைப்படுத்தல் : 1. ஒரு பன்முகச் செயல் முறைப்படுத்தும் கணினி மையத்தில் அடுத்து வரும் செயல்முறைகள் எவை என்பதைத் தீர்மானிப்பதற்கான பணி. 2. பகிர்ந்து கொள்ள முடியாத ஆதாரங்களை ஒதுக்கீடு செய்தல். எடுத்துக்காட்டு மையச் செயலகம் அல்லது ஒருங்கிணைந்த மின்சுற்று வழிச் சாதனத்தை ஒரு குறிப்பிட்ட மணிக்கு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒதுக்கீடு செய்தல்.

scheduling algorithm : அட்டவணை எண்மானம்; திட்டமிடலும் நெறி முறையும் : நிறைவேற்றவேண்டிய பணிகளை அட்டவணைப்படுத்தும் முறை.  இதில் முந்துரிமை, பணிவரிசையில் கால நீட்சி, கைவசமுள்ள வள ஆதாரங்கள் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

schema : அமைப்பு முறைகள் : (தரவுத் தள நிர்வாக மொழி களில் ஒன்று). தரவுத் தளத்தின் கட்டமைப்பினை வரையறுப்பதற்காக தரவுத் தள நிருவாகியினால் பயன்படுத்தப்படும் உயர்நிலைக் கணினி மொழி.

schematic : திட்ட முறையிலான; அமைப்புப் படம்; திட்ட முறை வரைபடம் : அமைப்புகளின் தொடர்புகளையும் அடையாளத்தையும் காட்டுகிற ஒரு மின்னணுச் சுற்றுவழியின் வரைபடம்.

schematic symbols : திட்டமுறைச் சைகைகள்; திட்ட முறைக் குறியீடுகள்; அமைப்புக் குறியீடுகள் : திட்ட முறை வரைபடங்களில் பயன்படுத்தப்படும் குறியீடுகள்.

Scheutz, George : ஷியூட்ஸ், ஜார்ஜ் (1785-1873) : இவர் 1834இல், சார்லஸ் பாபாஜின் எந்திரம் போன்ற ஒர் எந்திரத்தை உருவாக்கத் தொடங்கினார். இந்த எந்திரம் செய்து முடிக்கப்பட்டு, கணித அட்டவணைகளை அச்சடிக்கப் பயன்படுத்தப்பட்டது.

Schickhardt, Wilhelm (15921635) : ஷிக்ஹார்ட், வில்ஹெல்ம் (1592-1635) : ஜெர்மன் கணிதப் பேராசிரியர். கணிப்பு எந்திரத்தை 1624இல் கண்டு பிடித்தவர்.

schottky diode : ஸ்காட்கி இரு முனையம் : ஒரு திசையில் மட்டுமே மின்னோட்டத்தை அனுமதிக்கும் இரு முனையத்தில் ஒருவகை. இதில் ஒரு குறைகடத்தி அடுக்கும் ஒர் உலோக அடுக்கும் ஒன்றுசேர இணைக்கப்பட்டிருக்கும். அதி விரைவான நிலைமாற்று வேகமே (switching speed) இதன் சிறப்புக் கூறு.

scientific applications : அறிவியல் பயன்பாடுகள் : மரபாக எண்களை அடிப்படையாகக் கொண்ட, முன்னேறிய பொறியியல் கணித அல்லது அறிவியல் திறம்பாடுகள் தேவைப்படுகிற பணிகள். வணிகப் பயன்பாடுகளின் விரிவான கோப்புக் கையாளும் திறம்பாடுகள் அரிதாகத் தேவைப்படும்.

scientific computer : அறிவியல் கணினி : அதிவேகக் கணிதச் செய்முறைப்படுத்தலுக்கான தனி வகைக் கணினி.

scientific language : அறிவியல் மொழி : கணிதச் செய்முறைப்  படுத்தலுக்காக வடிவமைக்கப்பட்ட செயல்முறைப்படுத்தும் மொழி. ALGOL, FORTRAN, APL போன்றவை இவ்வகையின. செய்முறைப்படுத்தும் மொழிகள் அனைத்தும் இந்த வகைச் செய்முறைப்படுத்தலை அனுமதித்தாலும், ஒர் அறிவியல் மொழியிலுள்ள கட்டளைகள், இந்த நடவடிக்கைகளை வெளிப்படுத்துவதை எளிதாக்குகின்றன.

scientific method : அறிவியல் முறை : ஒருவகைப் பகுப்பாய்வு முறைமையியல். இதில், உணர்ந்தறியும் நிகழ்வு, அந்த நிகழ்வின் காரண காரியங்கள் பற்றிய ஒரு முற்கோளை (Hypothesis) வகுத்தமைத்தல், பரிசோதனை மூலம் அந்த முற்கோளைச் சோதனை செய்தல், அந்தப் பரிசோதனைகளின் முடிவுகளைக் கணித்தறிதல், அந்த முற்கோள் பற்றி முடிவுகள் எடுத்தல் ஆகியவை உள்ளடங்கும்.

scientific notation : அறிவியல் குறிமானம்; அறிவியல் குறியீடு : எண்கள் ஒரு குறிப்பிட்ட இலக்குப் பகுதியாக அல்லது பொருத்தமான 10-இன் வர்க்கத்தின் அல்லது விசைக் குறி எண்ணின் மடக்கையின் பதின்மான மடங்குகளாக எழுதப்படுகிற குறிப்பான முறை. எடுத்துக்காட்டு : 0. 32619x107 அல்லது 0. 32619E+07 = 32, 61, 900.

sci. newsgroups : அறி. செய்திக் குழுக்கள், சை. நியூஸ்குரூப்ஸ் : sci. (அறிவியல்) என்று தொடங்கும், யூஸ்நெட் செய்திக் குழுவின் படிநிலை அமைப்பு. கணினி அறிவியல் தவிர்த்த பிற அறிவியல் ஆய்வு மற்றும் பயன்பாடுகள் குறித்த விவாதங்கள் நடைபெறும் செய்திக் குழுக்களைக் குறிக்கும்.

scissoring : கத்தரித்தல் : பயன்படுத்துவோரின் குறிப்பிட்ட எல்லைகளில் அமைந்துள்ள காட்சிச் சாதனத்தில் ஒரு வடிவமைப்பின் பகுதிகளைத் தானாகவே அழித்துவிடுதல் அல்லது வெட்டிவிடுதல்.

SCM : எஸ்சிஎம் : கணினி மருத்துவக் கழகம் எனப் பொருள்படும் Society for Computer Medicine என்ற ஆங்கிலத்தொடரின் குறும்பெயர். இந்தக் கழகம், மருத்துவப் பயன்பாடுகளில் தானியக்க முறையைப் பயன்படுத்துவதை வலியுறுத்துவதற்காக மருத்துவர்களையும் கணினி அறிவியலாளர்களையும் ஒருங்கிணைக்கிறது.

scope : காட்சிப் பரப்பு ; நோக்கெல்லை; செயல் எல்லை : ஒரு மென்பொருள் செயல் முறையின் கட்டுப்பாட்டுப் பரப்பெல்லை. 1. ஊசல் மானி, பொதுக்காட்சி முனையம் போன்றவற்றில் பயன்படுத்தப் படும் CRT வகைத் திரை. 2. செயல்முறைப்படுத்துவதில், ஒரு செயல்முறைக்குள் உள்ள மாறியல் உருக்களின் காட்சித் திறன். 3. தரவுத் தளத்தில் "அடுத்த 50 ", "கோப்பு முடிவு வரையி லான நடப்புப் பதிவு" என்பன போன்ற பல்வேறு பதிவுகள்.

SCO open desktop : ஸ்கோ திறந்தநிலை மேசைப்பொறி யமைவு : 386-களுக்கான பலர் பயன்படுத்தும், உள்ளபடியான நினைவக வரைபடச் செயற் பாட்டுப் பொறியமைவு. UNIX, XENIX, DOS, X-பலகணிப் (விண்டோஸ்) பயன்பாடுகள் ஆகியவற்றை இயக்கும் SCO-சி லிருந்து வெளியிடப்பட்டது.

SCR : எஸ். சி. ஆர் : சிலிக்கன் கட்டுப்பாட்டு மின்மாற்றுக் கருவி என்று பொருள்படும். ‘Silicon Controlled Rectifier' என்ற ஆங்கிலத் தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். இது பெரு மளவு நேர்மின்னோட்டத்தை அல்லது மின்னழுத்தத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படும் ஒரு மின்கடத்தாச் சாதனம். இதன் இயல்புகள், பழைய வெற்றிடக் குழல் தைராட்ரானைப் போன்றவை. எனவே, இதனைச் சிலசமயம் "தைரிஸ்டர் " (thyristor) என அழைக்கின்றனர்

scrambler : உந்தியேறு கருவி : பூட்டு விசைக்காகத் தரவுகளைக் குறியீடுகளாக்குவதற்கான சாதனம் அல்லது மென்பொருள் செயல் முறை.

scrambling : உந்தி ஏறுதல் : மறை நீக்கம் செய்ய முடியாத வாறு தரவுகளைக்

குறியீடாக்குதல்.

scrap : துண்டு; துணுக்கு : கணினித் தரவு சேமிப்பில், வேறிடம் நகர்த்தவோ,

நகலெடுக்கவோ, அழிக்கவோ குறிக்கப்பட்டுள்ள விவரங்கள் அடங்கிய ஒரு பயன்பாடு அல்லது ஒரு முறைமைக் கோப்பு.

scrapbook : ஒட்டுப்புத்தகம்; கிறுக்கும் நூல் : வரைவு நூல் : ஆவணங்களில் அடிக்கடிப் பயன்படுத்துவதற்காக வாசகங்களையும் படங்களையும் சேமித்து வைக்கும் பணி.

scratch : கீறு; விரைவாக எழுது : நினைவகத்திலிருந்து தகவலை நீக்குதல்.

scratch file : நீக்கக் கோப்பு : கீறல் கோப்பு : விரைவெழுத்துக் கோப்பு : ஒரு துணைச்சேமிப்புச் சாதனத்தில் ஏற்றப்பட்டுள்ள தரவுகள் முழுவதையும் அல்லது பகுதியை படியெடுத்து தரவுகளின் கணிசமான கோப்புகளைச் செய்முறைப்படுத்தும் போது உருவாக்கப்படும் தற்காலிகக் கோப்பு.

scratch filter : அழித்தெழுது வடிகட்டி; கீறல் வடிகட்டி.

scratchpad : குறிப்பு அட்டை; கீற்றுத் திண்டு; கீறல் பட்டை; விரைவெழுத்துக் களம் : சில கணினிகளில் பதிவேடுகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் சிறிய துரிதச் சேமிப்பகம். இதனைப் புதை நினைவகம் என்றும் கூறுவர்.

scratchpad RAM : அழித்தெழுது ரேம்; எழுதுபலகை ரேம் : ஒரு மையச் செயலகம் தற்காலிக தரவுச் சேமிப்புக்குப் பயன்படுத்திக் கொள்ளும் நினைவகம்.

scratchpad storage : அழிப்புத்திண்டுச் சேமிப்பகம் : விரைவெழுத்து சேமிப்பகம் : தரவுகளைத் தற்காலிகமாகச் சேமித்து வைப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு நினைவக இடம். அழிப்புத்திண்டு நினைவகங்கள், அதிவேக ஒருங்கிணைந்த சுற்று வழிகள் ஆகும்.

scratch tape : அழிப்பு நாடா , விரைவெழுத்து நாடா : அழித்துவிட்டு மீண்டும் பயன்படுத்தத்தக்க காந்த நாடா.

screen : திரை : தகவல்கள் காட்சியாகக் காட்டப்படும் பரப்பு. எடுத்துக்காட்டு : ஒளிப் பேழைக் காட்சித்திரை.

screen angle : திரைக்கோணம் : நுண்பதிவுப் படத் திரைகளில் படப்புள்ளிகள் இடம்பெறும் கோணம். சரியான கோணம் மங்கல் தன்மையையும், நெளிவு அலைபோல் தோன்றும் விரும்பத்தகாத விளைவுகளையும் குறைக்கும்.

screen capture : திரைப்பிடிப்பு : தற்போதுள்ள நேரடித்திரை உருக்காட்சியை ஒரு வாசகத்திற்கு அல்லது வரைகலைக் கோப்புக்கு மாற்றுதல்.

screen, display : திரைக்காட்சி.

screen dump : திரைச்சேமிப்பு ; திரைத் திணி : தற்போது ஒரு காட்சித்திரையில் தோன்றும் தகவலை ஒரு அச்சுப்பொறிக்கு அல்லது வேறு வன்படிச் சாதனத்திற்கு மாற்றுகிற செய்முறை.

screen editing : திரை திருத்தம்.

screen font : திரை எழுத்துரு : நேரடித் திரைக்காட்சியில் பயன்படுத்தப்படும் எழுத்து உரு. WYS/WYG பொறியமைவுகளில் அச்சடிப்பு எழுத்து உருக்களுக்கு இயன்றவரை நெருக்கமாக இருக்கவேண்டும். அச்சடிப்பு எழுத்து உருவுக்கு மாறுபட்டது.

screen generator : திரை உருவாக்கி : தனியாக உருவாக்கும் திரைக்காட்சியை ஏற்படுத்த பயன்படும் சிறப்புப் பயன்பாட்டு நிரல் தொடர்.

screen memory : திரை நினைவகம்.

screen name : திரைப் பெயர் : அமெரிக்க ஆன்லைன் இணையச் சேவையின் பயனாளர் ஒருவர் அறியப்படும் பெயர். திரைப்பெயர் பயனாளரின் உண்மைப் பெயராகவும் இருக்கலாம்.

screen overlay : திரை மேல் விரிப்பு : 1. காட்சித் திரையில் கூசொளியைக் குறைக்கின்ற தெளிவான நுண்ணிய வலைத் திரை. 2. திரையிலுள்ள காட்சிப் பொத்தான்களைத் தொடுவதன் மூலம் பயனாளர் கணினிக்கு நிரலிடுவதற்கு அனுமதிக்கிற தெளிவான தொடுசேணம். 3. திரையில் காட்சியாகக் காட்டப்படும் தற்காலிகத் தரவு பலகணி. திரை மேல் விரிப்பை நீக்கியதும்மேல் விரிப்பு செய்யப்பட்ட திரையின் பகுதி மீட்கப்படுகிறது.

screen phone : திரைபேசி : தொலைபேசிபோல் பயன்படுத்தக்கூடிய ஓர் இணைய சாதனம். இதில் ஒரு தொலைபேசி, எல்சிடி காட்சித்திரை, ஓர் இலக்கமுறை தொலை நகல் இணக்கி, ஒரு கணினி விசைப் பலகை, சுட்டி, அச்சுப்பொறி மற்றும் பிற புறச்சாதனங்களை இணைப்பதற்கான துறைகளையும் கொண்டிருக்கும். திரை பேசிகளை குரல்வழித் தகவல் தொடர்புக்குரிய தொலைபேசி போலவும், இணையம் மற்றும் பிற நிகழ்நிலைச் சேவைகளுக்கான கணினி முனையங்கள் போலவும் பயன்படுத்தலாம்.

screen pitch : திரை அடர்வு. கணினித் திரையகத்தில், திரைக்காட்சியில் பாஸ்பர் புள்ளிகளுக் கிடையே உள்ள தொலைவினைக் கொண்டு திரை அடர்வினை அளக்கும் முறை. திரை அடர்வு குறைவு எனில் மிகத் தெளிவான காட்சி அமையும். எடுத்துக்காட்டாக . 28 புள்ளி அடர்வுள்ள திரை . 38 புள்ளி அடர்வுள்ள திரையைக் காட்டிலும் தெளிவான காட்சி கொண்டிருக்கும்.

screen position : திரை இடநிலை : ஒரு காட்சித்திரையில் வரைகலைத் தரவுகளின் அமைவிடம்.

screen prompt : திரை நினைவூட்டு : பயனாளர் துல்லியமாகவும், முழுமையாகவும் தரவுகளை உட்பாடு செய்வதற்கு உதவுகிற ஒளிக்காட்சித்திரையின் மீது காட்சியாகக் காட்டப்படும் ஓர் அறிவுறுத்தம்.

screen saver : திரைக் காப்பு : பல கணினிகளில் ஒரு குறிப்பிட்ட நேர அளவுக்குச் சுட்டு நுண் பொறியை நகர்த்தாமல் அல்லது ஒரு விசைப்பலகை விரற்கட்டையை அழுத்தாமல் இருக்கும்போது திரையில் தோன்றும் ஒரு நகரும் படம் அல்லது தோரணி.

திரைக் காப்பு

screen size : திரை வடிவளவு : திரையளவு : ஓர் ஒளிப்பேழைக் காட்சி திரை காட்டக்கூடிய தகவல்களின் அளவு. திரைகளைத் தொலைக்காட்சிப் பெட்டிகளைப்போல் மூலைவிட்டமாகவோ, கிடைமட்ட மற்றும் கிடைமட்ட புள்ளிகளின் அல்லது எழுத்துகளின் எண்ணிக்கையாகவோ அளவிடலாம்.

screen update : திரைப் புத்தாக்கம், திரைப் புதுப்பி : புதிய தகவல்களைப் பிரதிபலிப்பதற்காகத் திரையின் உள்ளடக்கங்களை மாற்றும் செய்முறை.

Scripsit : எழுத்து அடை : ரேடியோ ஷாக் TRS&80 நுண்கணினிப் பொறியமைவுகளில் சொற்களைச் செய்முறைப்படுத்துவதற்கெனப் பயன்படுத்தப்படும் மென்பொருள் தொகுதி.

scripting language : உரைநிரல் மொழி : ஒரு குறிப்பிட்ட பயன்பாடு அல்லது செயல்கூறோடு தொடர்புடைய தனிச் சிறப்பான அல்லது வரம்புறு பணிகளை ஆற்றுவதற்கு வடிவமைக்கப்பட்ட ஓர் எளிய நிரலாக்க மொழி. பெரும்பாலும் வலைப் பக்கங்களை வடிவமைக்கும் ஹெச்டீஎம்எல் ஆவணங்களில் பயன்படுத்தப்படுகிறது.

scripts : எழுத்துகள் : நிகழ்வுகளின் வரிசை முறையினைக் குறிக்கும் ஸ்கீமா போன்ற கட்டமைப்பு.

scroll : நகர்த்து; உருட்டு. scrollable field : சுருட்டத்தக்க புலம் : ஒரு சிறிய காட்சிப் பரப்பில் பெருமளவுத் தகவல்களைக் காட்சியாகக் காட்டுவதற்கு அல்லது தொகுப்பதற்கு அனு மதிப்பதற்காகச் சுருட்டக் கூடிய திரையி லுள்ள குறுகிய வரி.

scroll arrow : சுருள் அம்பு : மேலும், கீழும், இடமும் வலமும் நகர்த்திச் சுட்டிக்காட்டுகிற உருவம். இணையான திசையில் திரையைச் சுருட்டுவதற்காக இது இயக்கப்படுகிறது.

scroll bar : உருள்பட்டை : சில வரைகலைப் பயனாளர் இடைமுகங்களில் திரைக்காட்சிப் பரப்பின் அடிப்பக்கத்திலும் பக்கவாட்டிலும் முறையே கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும் தோற்றமளிக்கும் பட்டைகள். சுட்டியின்மூலம் அவற்றின்மீது சொடுக்கி, திரைக்காட்சியில் மேலும் கீழும், பக்கவாட்டிலும் நகர்ந்து, முழுத்தோற்றத் தையும் பார்வையிட முடியும். சுருள் பட்டைகளில் நான்கு பகுதிகள் உள்ளன. இரு முனைகளிலும் முக்கோணப் புள்ளிகள். அதன் மீது அழுத்தினால் ஒவ்வொரு வரியாக நகரலாம். பட்டையின் மீது ஒரு சிறியபெட்டி. ஏதேனும் குறிப்பிட்ட இடத்துக்கு நகர்த்தலாம். பட்டையில் பெட்டியில்லா இடத்தில் சொடுக்கி பக்கம்பக்கமாய் நகரலாம்.

scroll bar arrows : பட்டை அம்புக்குறிகள்.

scrolling : திரை சுழலல் : சுருளாக்கம்; சுழற்றுதல் : ஓர் ஒளிப்பேழைக் காட்சியில் தரவுகளை நகர்த்துதல். வாசகத்தில் விரும்பிய இடம் வரும் வரையில் வாசகம் திரும்பத் திரும்ப நகர்த்தப்படுகிறது. சுருள் மேல்நோக்கி நகர்ந்தால், திரையின் அடிப்பகுதியில் ஒரு புதிய வரி தோன் றும்;உச்சிப் பகுதியில் பழைய வரி மறையும். தரவுகளை வலமிருந்து இடமும், இடமிருந்து வலமும் கீழ் நோக்கியும் நகர்த்தும் திறனையும் இது குறிக்கிறது.

scroll lock : திரைச்சுழல் பூட்டு.

scroll lock key : சுருள் பூட்டு விசை : ஐபிஎம் பீசி/எக்ஸ்டீ மற்றும் ஏடீ ஒத்தியல்பு விசைப்பலகை களில் எண்விசைத் திண்டின் மேல்வரிசையில் அமைந்திருக்கும். திரைக்காட்சி மேலும் கீழும் பக்கவாட்டிலும் சுருளும் தன்மைகளைக் கட்டுப் படுத்தும். சிலவேளைகளில் திரையின் உருள் தன்மையைத் தடுக்கும். மெக்கின்டோஷ் விசைப் பலகைகளில் மேல் வரிசையில் பணிவிசைகளுக்கு வலப்புறம் அமைந்திருக்கும். நவீனப் பயன்பாட்டு மென்பொருள்கள் பெரும்பாலானவை இந்த சுருள்பூட்டு விசையைப் புறக்கணிக்கின்றன.

scs : ஸ்கஸ்ஸி : சிறு கணினி அமைப்பு இடைமுகம் என்று பொருள்படும் Small Computer System interface என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும் பெயர். அமெரிக்க தேசிய தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (American National Standards Institute) அமைத்த எக்ஸ் 3டீ9. 2 (X3T9. 2) குழுவினர் வரையறுத்த அதிவேக இணைநிலை இடை முகத்துக்கான தர வரை யறை. நிலைவட்டுகள், அச்சுப்பொறிகள் மற்றும் பிற கணினிகள், குறும்பரப்புப் பிணையங்கள் போன்ற ஸ்கஸ்ஸி புறநிலைச் சாதனங்களை ஒரு நுண் கணினியில் இணைப்பதற்காக ஸ்கஸ்ஸி இடைமுகம் பயன்படுகிறது.

SCSI bus : ஸ்கஸ்ஸி பாட்டை : ஸ்கஸ்ஸி சாதனங்களிலிருந்து ஸ்கஸ்ஸி கட்டுப்படுத்திக்கு தரவுகளையும் கட்டுப்பாட்டு சமிக்கைகளையும் சுமந்து செல்லும் ஓர் இணைநிலைப் பாட்டை.

SCSI chain : ஸ்கஸ்ஸி சங்கிலி : ஸ்கஸ்ஸிப் பாட்டையிலுள்ள சாதனங்கள். ஒவ்வொரு சாதன மும் (புரவன் தகவியும் (Host Adapter) கடைசி சாதனமும் தவிர இரண்டு வடங்கள் மூலம் வேறு இரு சாதனங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். டெய்ஸி சங்கிலி போன்று தோற்றமளிக்கும்.

SCSI connector : ஸ்கஸ்ஸி இணைப்பி : ஒரு ஸ்கஸ்ஸி சாதனத்தை ஒரு ஸ்கஸ்லிப் பாட்டையில் இணைக்கும் ஒரு வட இணைப்பி.

SCSI device : ஸ்கஸ்ஸி சாதனம் : கணினி யின் மையச்செயலகத்துடன் தரவுகளையும் கட்டுப் பாட்டு சமிக்கைகளையும் பரிமாறிக் கொள்ள ஸ்கஸ்ஸி தர வரையறைகளைப் பயன்படுத்தும் ஒரு புறநிலைச் சாதனம்.

SCSI ID : ஸ்கஸ்ஸி ஐடி : ஒரு ஸ்கஸ்ஸி சாதனத்தைத் தனித்து அடையாளம் காட்டும் குறியீடு. ஒரு ஸ்கஸ்ஸிப் பாட்டையில் இணைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சாதனமும் வெவ்வேறு ஸ்கஸ்ஸி ஐடி-க்களைக் கொண்டிருக் கும். ஒரே ஸ்கஸ்லிப் பாட்டையில் உச்ச அளவாக எட்டு ஸ்கஸ்ஸி ஐடி-க்களை வைத்துக் கொள்ள லாம்.


SCSI network : ஸ்கஸ்ஸிப் பிணையம் : ஒரு ஸ்கஸ்லிப் பாட்டையில் இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் அனைத்தும் சேர்ந்து ஒரு குறும் பரப்புப் பிணையம்போலச் செயல்படும்.


SCSI port : ஸ்கஸ்ஸிப் துறை : கணினிக்குள்ளேயே இருக்கும் ஒரு ஸ்கஸ்ஸி புரவன் தகவி (Host Adapter) ஸ்கஸ்ஸித் துறை எனப்படுகிறது. கணினிக்கும் ஸ்கஸ், ஸிப் பாட்டையில் இணைக்கப்பட்டுள்ள அனைத்துச் சாதனங்களுக்கும் இடையே ஒரு தருக்கநிலை இணைப்பைத் (logical connection) தருகிறது.


s-curve : எஸ்-வளைவு : ஆட்களுக்கெதிராக நேரத்தை வரைகிற வளைவு. இது ஆதார ஒதுக்கீட்டினைச் சமனப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. ஆதாரங்களைச் சீரமைவு செய்வதற்கு ஆள் பலத்தைப் படிப்படியாகக் குறைப்பதற்கு இது உதவுகிறது.


scuzzy : ஸ்கஸ்ஸி ; SCSI-க்கு மற்றொரு பெயர்.


. sd : . எஸ்டி : ஒர் இணைய தள முகவரி சூடான் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.


SDK : எஸ்டிகே : மென்பொருள் உருவாக்கக் கருவித்தொகுதி எனப் பொருள்படும் Software Development Kit என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். குறிப்பிட்ட வகைப் பயன்பாடுகளை உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து நிரல்கள், செயல்கூறுகள், மொழி மாற்றி, நிரல் திருத்தி போன்ற அனைத்துக் கருவிகளும் அடங்கிய மென்பொருள் தொகுப்பு.


SDLC : எஸ்டிஎல்சி : 1. ஒத்திசைத் தரவு தொடுப்புக் கட்டுப்பாடு என்று பொருள்படும் Synchronous Data Link Control என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம்மின் எஸ்என்ஏ (Systems Networks Architecture) அடிப்படையில் செயல்படும்

பிணையங்களில் பெருமளவு பயன்படுத்தப்படும் தரவு பரப்பு நெறிமுறை. ஐஎஸ்ஓ உருவாக்கிய ஹெச்டி எல்சி (High-Level Data Link Control) நெறிமுறையைப் போன்றது.

2. முறைமை உருவாக்க செயல் படுகாலச் சுழற்சி (System Development Life Cycle) என்பதன் தலைப்பெழுத்துக் குறும் பெயராகவும் கொள்ளப்படும். ஒரு மென்பொருளின் தேவை, இயலும் நிலை, செலவு-பலன் ஆய்வு, பகுப்பாய்வு, வடி வமைப்பு, உருவாக்கம், பரி சோதனை, நிறுவுகை, பராமரிப்பு, மதிப்பாய்வு போன்ற ஒன்றன்பின் ஒன்றாகப் பல்வேறுநிலைகள் கொண்ட மென் பொருள் உருவாக்க வளர்ச்சிப் படிகளைக் குறிக்கிறது.


. sea : . சீ , எஸ்இஏ : ஸ்டஃப்பிட் (stuffit) என்னும் நிரல்மூலம் இறுக்கிச் சுருக்கிய மெக்கின்டோஷ் காப்பக - தானாகவே விரித்துக் கொள்ளும் கோப்பின் வகைப்பெயர் (file extension).


seamless integration : இடைவெளியற்ற ஒருங்கிணைப்பு : தற்போதுள்ள பொறியமைவுடன் இழைவாகப் பணிபுரிகிற ஒரு புதிய பயன்பாடு, வாலாயம் அல்லது சாதனம். இதன்மூலம் புதிய அம்சங்களைத் தூண்டி விடலாம்; சிக்கல்களைக் கண்டறியப் பயன்படுத்தலாம்.


search : தேடுதல்; தேடு; தேடல் : ஒரு குறிப்பிட்ட நேரம் அல்லது பகுதி எண் போன்ற விரும்பிய பண்பினை அல்லது முன் நிருணயித்த வகைப்பாட்டினைக் கொண்டிருக்கின்ற ஒர் இனத் தொகுதியை தேடிக் கண்டறிதல்.


search algorithm : தேடுபடி முறைத் தருக்கம் : ஒரு குறிப்பிட்ட தரவுக் கட்டமைப்பில் இலக்கு எனச் சொல்லப்படும் ஒரு குறிப்பி (reference) உறுப்பினைக் கண்டறிய வடிவமைக்கப்பட்ட படிமுறைத் தருக்கம்.


search and replace : தேடுதல் மற்றும் மாற்றமைத்தல்; தேடி மாற்றியமை; தேடி மாற்று : ஒரு குறிப்பிட்ட எழுத்து வரிசை முறையைக் கண்டறிந்து அதற்குப் பதிலாக ஒரு புதிய வரிசை முறையை மாற்றுகிற மென் பொருள். இது சொல் செய் முறைப்படுத்தும் பயன்பாடுகளில் முக்கியமானது.


search argument : தேடும் வாத முறை : ஒர் அட்டவணைத் தேடுதலில் இணைப்பு செய்யக் கூடிய தரவு இனம்.


search, binary : இருமத் தேடல். search criteria : தேடு நிபந்தனை; தேடல் கட்டுப்பாட்டு விதி : ஒரு தரவுத் தளத்தில் குறிப்பிட்ட தரவு மதிப்புகளைத் தேடிக் கண்டறிய தேடுபொறி பயன்படுத்தும் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள். (எ-டு) ஒர் அலுவலகப் பணியாளர் தரவுக் கோப்பில் 10, 000 ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறும் பெண் அலுவலர்களின் பெயர், பணிப்பொறுப்புகளைக் கண்டறிதல். இங்கே "pay> 10, 000 And Sex is Female" என்பது தேடு நிபந்தனை.


search engine : தேடு பொறி : இணையத்தில் (Internet) நாம் விரும்பும் தரவுவை தேடித் தரும் மென்பொருள்.


searching word : தேடும் சொல்.


search key : தேடும் விசைப்பலகை விரற்கட்டை; தேடும் விசை; தேடு சாவி : ஒரு தேடுதலை நடத்தும் நோக்கத்திற்காக ஒவ்வொரு இனத்தின் குறிப்பிட்ட பகுதிகளுடன் ஒப்பிடப் படும் தரவுகள்.


search memory : தேடல் நினைவகம்.


search memory associative storage : தேடல் நினைவக தொடர்புறு சேமிப்பகம்.


search string : தேடு சரம் : தரவுத் தளத்தில் தேடப்படுகின்ற ஒர் எழுத்துச்சரம். பெரும் பாலும் அது ஒர் உரைச்சரமாக இருக்கலாம்.


search the web : இணையத்தில் தேடு. -


search time : தேடல் நேரம்.


seasonally adjusted : பருவ முறைச் சரியமைவு : முந்திய போக்குகளை மறைக்கிற அல்லது மாற்றமைவு செய்கிற பருவ முறைக் காரணிகளை அனுமதிப்பதற்குச் சரியமைவு செய்யப்பட்ட ஒரு தரவுத் தொகுதியை விவரிக்கப் பயன் படுத்தப்படும் ஒரு சொற்றொடர்.


seat1 : இருக்கை1 : இருக்கை அடிப்படையிலான மென் பொருள் உரிமம் வழங்கும் முறையில் ஒரு பணி நிலையம் அல்லது ஒரு கணினியைக் குறிக்கிறது. அதாவது ஒரு கணினிக்கென வாங்கப்படும் ஒரு மென்பொருள் ஒரு கணினியில் மட்டுமே பயன்படுத்தப் பட வேண்டும்.


seat2 : இருக்கை2 : ஒரு செருகு வாய்க்குள் செருகப்படும் ஒற்றை உள்ளக நினைவகக் கூறு (Single inline Memory Module) ஒன்றாக அமர்ந்து கொள்வது போல, ஒரு கணினியில் அல்லது சேர்ந்திணைந்த கருவி களில் ஒரு சிறிய வன்பொருள் உறுப்பை முழுதுமாகச் செருகி சரியாக நிலை நிறுத்துதல்.

second : வினாடி; நொடி : மெட்ரிக் முறையில் கால அள வின் அடிப்படை அலகு. பழக்க மான ஆங்கில முறையில் பயன் படுத்தப்படுகிறது.

secondary channel : துணை நிலை அலைவரிசை; செய்தித் தொடர்களில், முதன்மை அலை வரிசையிலிருந்து பெறப்பட்ட ஒரு துணை அலைவரிசை. இது, குறை கண்டறிய அல்லது மேற் பார்வை நோக்கங்களுக் காகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இது தரவு செய்தி களைக் கொண்டு செல்வதில்லை

secondary data : துணை நிலைத் தரவு : இது மற்றொரு நோக்கத் திற்காக ஏற்கெனவே சேகரிக்கப் பட்டது. இப்போது ஒரு தரவு ஆதாரமாகப் பயன்படுத்தப்படு வது. கட்டுரைகள், செய்தியிதழ் செய்திகள் போன்றவற்றி லிருந்து சேகரிக்கப்பட்ட தரவு கள் இதில் அடங்கும்

secondary index : துணை நிலைத் வரிசை முறை : ஒரு தரவு கோப்புக்காக வைத்துவரப்படும் வரிசை முறை. ஆனால், கோப்பின் தற்போதைய செய்முறைப் படுத்தும் வரிசையைக் கட்டுப் படுத்த இது பயன்படுத்தப்படு வதில்லை .

secondary key : துணை விரற் கட்டை; இரண்டாம் நிலை விசை ; துணைச் சாவி ; ஒரு கோப்பிலுள்ள பதிவேடுகளை அணுகுவதற்குப் பயன்படுத் தப்படும் புலம். இது தனிச் சிறப்பானதாக இருக்க வேண்டி யதில்லை .

secondary memory : துணை நிலை நினைவகம் :

secondary service provider : துணை நிலைச் சேவை வழங்கு நர் : வலைத் தரவுகளை வழங்கு கின்ற, ஆனால் நேரடியான இணைய இணைப்பை வழங் காத ஓர் இணையச் சேவை வழங்கும் நிறுவனம்.

secondary storage : துணை நிலைச் சேமிப்பகம் : கணி னியில் குறிப்பிலா அணுகு நினைவகம் (RAM) தவிர பிற தரவு சேமிப்பு ஊடகங்கள், குறிப்பாக நாடா அல்லது வட்டினைக் குறிக்கும்

secondary storage device : துணைநிலைச் சேமிப்புச் சாதனம்.

second generation computers : இரண்டாம் தலைமுறைக் கணினிகள்; கணினிகளின் தொழில்நுட்ப வளர்ச்சியில் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த கணினிகள். இதில் வெற்றிடக் குழாய்க்குப் பதில் மின்மப் பெருக்கி (டிரான்சிஸ் டர்) பயன்படுத்தப் பட்டது. இவ்வகைக் கணினிகள் 1959 முதல் 1964 வரை ஆதிக்கம் பெற்றிருந் தன. பிறகு இவற்றுக் குப் பதில் ஒருங் கிணைந்த மின்சுற்று நெறியைப் பயன் படுத்தும் கணினிகள் பயனுக்கு வந்தன.

second, micro : மைக்ரோ விநாடி.

second source : துணை ஆதாரம்; இரண்டாம் ஆதாரம்; இரண்டாம் மூலம் : மற்றொரு உற்பத்தியாளரின் உற்பத்திப் பொருளுடன் பரிமாற்றம் செய்து கொள்ளக்கூடிய ஒரு பொருளைத் தயாரிக்கும் உற் பத்தியாளர்.

secret codes : இரகசியக் குறியீடுகள்.

secret key : மறைக்குறி; மறைத் திறவி.

section : பிரிவு.

sector : வட்டக்கூறு; பிரிவு; பகுதி : இருபுறமும் ஆன எல்லையுடைய வட்டக்கூறு. ஒரு வட்டு மேற்பரப்பு இத் தகைய வட்டக்கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

வட்டக்கூறு

sector interleave : வட்ட க்கூறு இடை இணைப்பு : ஒரு நிலை வட்டு வட்டக்கூறு இலக்க மிடுதல். ஒன்றுக்கு ஒன்று (1 : 1) என்ற இடை இணைப்பு வரிசை முறையில் அமைந்தது : 0, 1, 2, 3 முதலியன. இரண்டுக்கு ஒன்று (2 : 1) என்ற இடை இணைப்பு அடுத்த வட்டக்கூறு. ஒவ்வொன்றும் இரண்டாவதாக இருக்கும் வகையில் வட்டக் கூறுகளை மாறுபட அமைக் கிறது. 0, 4, 1, 5, 2, 6, 3, 7. ஒன்றுக்கு ஒன்று (1 : 1) என்ற இடை இணைப்பில், வட்டக் கூறிலுள்ள தரவு படிக்கப்பட்ட பிறகு, இரண்டாவது வட்டக் கூறினைப் படிக்கும் அளவுக்கு வட்டுக்கட்டுப்படுத்தி விரைவாக இயங்கவேண்டும். இல்லையெனில், இரண்டாம் வட்டக் கூறின் தொடக்கம், எழுது/படிப்பு முனையைக் கடந்து சென்றுவிடும்; மீண்டும் அது முனையின்கீழ் வருவதற்கு மறுபடியும் ஒரு சுற்று சுற்றிவர வேண்டும். அதுபோதிய வேகத்தில் இயங்காவிட்டால், ஒரு 2 : 1 அல்லது 3 : 1 இடை இணைப்பு, ஒரே சுழற்சியில் வட்டக்கூறுகள் அனைத்தையும் படிப்பதற்கு அதற்குக் கால அவகாசம் கொடுக்கிறது.

sector method : வட்டக் கூறு முறை;பிரிவு முறை : ஒரு வட்டின் மேற்பரப்பினைக் குவிய வட்டக் கூறுகளாகப் பகுக்கக் கூடிய, நெகிழ்வட்டுகளுடன் பயன்படுத்தப்படும் வட்டு முக வரியிடும் முறை.

secure channel : பாதுகாப்பான தடம் : அனுமதியற்ற அணுகல் மற்றும் செயல்பாட்டிலிருந்து பாதுகாக்கப்பட்ட ஒரு செய்தித் தொடர்பு இணைப்பு. பொதுப் பிணையத்திலிருந்து விலகித் தனித்திருத்தல். மறையாக்கம் அல்லது பிற கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்றுவதால் இப்பாதுகாப்பு அமையலாம்.

Secure Electronics Transactions Protocol : பாதுகாக்கப்பட்ட மின் னணுப் பரிமாற்ற நெறிமுறை : இணையத்தில் பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்துக்கான நெறிமுறை. ஜி. டீஇ, ஐபிஎம், மாஸ்டர் கார்டு, மைக்ரோ சாஃப்ட், நெட்ஸ்கேப், எஸ்ஏஐசி, டெரிசா சிஸ்டம்ஸ், வெரிசைன், விசா கார்டு ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் இந்த நெறிமுறை உருவாக்கப்பட்டது.

Secured Electronic Transaction (SET) : பாதுகாப்பான மின்னணு பரிமாற்ற முறை.

secure kernel : காப்புக்கரு மூலம்; காப்புக் கரு : ஒரு பொறியமைவுச் செயல்முறையின் பாதுகாக்கப்பட்ட கூறு.

secure site : பாதுகாப்பான தளம் : பற்று அட்டை எண்கள் மற்றும் பிற சொந்தத் தகவல்களை அனு மதியற்ற நபர்கள் அத்துமீறி அணுகாவண்ணம் பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்யும் திறனுள்ள வலைத் தளத்தைக் குறிக்கிறது.

secure transaction technology : பாதுகாப்பான பரிமாற்றத் தொழில் நுட்பம் : சொந்தத் தகவல்களடங்கிய படிவங்களைச் சமர்ப்பித்தல், பற்று அட்டை மூலம் பொருள் வாங்குதல் போன்ற நிகழ்நிலைத் தகவல் பரிமாற்றங் களில் பாதுகாப்பான செருகு வாய் அடுக்கு (SSL-Secure Sockets Layer), பாதுகாப்பான ஹெச்டீ டீd, (S-HTTP) ஆகிய நெறி முறைகளைப் பயன்படுத்துதல்.

secure wide area network : பாதுகாப்பான விரிபரப்புப் பிணையம் : ஒரு பொதுப் பிணையத்தில் (இணையம் போன்ற) தகவல் பரிமாற்றங் களை அத்துமீறி நுழைபவர் களின் குறிக்கீட்டிலிருந்து தடுக்க, மறையாக்கம் (encryption), சான்றுறுதி (authorisation), உறுதிச்சான்று (Authenti- cation) போன்ற பாதுகாப்பு நட வடிக்கைகளை மேற்கொண்டு தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும் கணினித் தொகுதி.

Security : பாதுகாப்பு : தீங்கு அல்லது இழப்பிலிருந்து கணினி அமைப்பையும் அதிலுள்ள தரவுவையையும் காத்தல். பெரும் பாலும் பலர் பயன்படுத்தும் கணினி அமைப்புகளில், தகவல் தொடர்புத் தடங்களில் இணைக் கப்பட்டுள்ள கணினிகளில் பாதுகாப்புக்கு அதிக முக்கியத் துவம் கொடுக்கப்படுகிறது. ஏனெனில் இதுபோன்ற கணினி அமைப்புகளில் அனுமதி யில்லாத நபர்கள் அத்துமீறி நுழைய அதிக வாய்ப்புள்ளது.

security control : காப்புக் கட்டுப்பாடு.

security files : காப்புக் கோப்பு கள்; பாதுகாப்புக் கோப்புகள் : முக்கியமானதும் இன்றியமை யாததுமான தகவல்களுக்காக துணை யாதரவுக் கோப்புகள்.

Security log : பாதுகாப்புப் பதிகை : தீச்சுவர் அல்லது பிற பாதுகாப்பு சாதனங்களினால் உருவாக்கப்படும் ஒரு பதிகை. அத்துமீறி நுழைய முயலுதல் போன்ற பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கின்ற நிகழ்வு களின் பட்டியல் மற்றும் அது போன்ற நடவடிக்கைகளில் ஈடு பட்ட பயனாளர்களின் பெயர் கள் அப்பதிகையில் பதிவாகி யிருக்கும்.

security monitor : பாதுகாப்புக் கண்காணிப்பி : ஒரு கணினிப் பொறியமைவின் பயன் பாட்டைக் கண்காணித்து, அதன் ஆதாரங்களை அனுமதியின்றி, மோசடியாக, அழிக்கும் வகை யில் பயன்படுத்துவதிலிருந்து பாதுகாக்கும் ஒரு மென் பொருள் தொகுதி.

security programmes : காப்புச் செயல்முறை : பாதுகாப்பு நிரல் தொடர்; காப்புநிரல் : கோப்பு களிலுள்ள தரவுகளை அணுகு வதைக் கட்டுப்படுத்தி, முனை security specialist

1301

segment, data

யங்களையும், பிற சாதனங்களையும் பயன்படுத்த அனுமதியளிக்கிற செயல்முறை.

security specialist : காப்பளிப்பு வல்லுநர், பாதுகாப்பு வல்லுநர் : கணினி மையத்தின் பாதுகாப்புக்கும், தரவு ஆதாரங்களின் தருக்கமுறைப் பாதுகாப்புக்கும் பொறுப்பானவர்கள்.

seed : வித்து; விதை : மூல எண் : போலிக் குறிப்பின்மை எண் உருவாக்கியைத் தொடங்குவதற்குப் பயன்படுத்தப்படும் மாறிலி. முதல் எண்ணை உருவாக்கப் பயன்படுகிறது. பின்வரும் எண்கள் அனைத்தும் முந்திய பலன்களை அடிப்படையாகக் கொண்டவை.

seek : தேடு; கண்டறி; நாடல் : ஒரு நேரடி அணுகுச் சாதனத்தை ஒரு குறிப்பிட்ட அமைவிடத்தில் நிலைப்படுத்துவதற்கான அணுகுச் செயல்முறை.

seek area : தேடு பரப்பு : நாடும் பரப்பு.

seek time : கண்டறியும் நேரம்; தேடு காலம் : ஒரு நேரடி அணுகு சேமிப்புச் சாதனத்தின் அணுகு செயல்முறையினை ஒரு குறிப்பிட்டநிலையில் நிலைப்படுத்துவதற்குத் தேவைப்படும் நேரம். எடுத்துக்காட்டு : படிப்பு/ எழுதுத் தலைப்பினை ஒர் இயக்கியை வட்டின் குறிப்பிட்ட தடத்தின்மீது நிலைப்படுத்துவதற்குத் தேவைப்படும் கால அளவு.

segment : வெட்டுக் கூறு : பிரிவு; பகுதி : 1. ஒரு செயல் முறையைப் பல கூறுகளாகப் பகுத்து, கூறுகள் உள்முகச் சேமிப்பிலும், மற்றக் கூறுகள் துணைச் சேமிப்பிலும் தங்கியிருக்கும்படி செய்தல். ஒவ்வொரு கூறிலும், மற்றொரு கூறுக்குத் தாவுவதற்கான அல்லது மற்றொரு கூறினை உள்முகச் சேமிப்புக்கு வரவழைப்பதற்கான நிரல்கள் அடங்கியிருக்கும். 2. ஒரு மேல் நிலைச் செயல் முறையை நிறைவேற்றும்போது ஒரு தருக்க முறை அலகாக ஏற்றக்கூடிய மிகச்சிறிய செயல்முறை அலகு. 3. தொலைத்தொடர்புக் களத்தைப் பொறுத்தவரையில், குறிப்பிட்ட அளவுள்ள இடைத்தடுப்பில் அடக்கக்கூடிய ஒரு செய்தியின் பகுதி.

segmentation : வெட்டுக் கூறாக்குதல்; பிரித்தல்; பகுதியாக்கல் : கணினிச் செயல்முறையினைத் தருக்கமுறை மாறியல் நீட்சிப் பகுதிகளாகப் பகுப்பதற்கான உத்தி.

segment, data : தரவுத் துண்டம். segmented addressing

1302

segment value

segmented addressing architecture : துண்டாக்க முகவரியிடல் கட்டுமானம் : இன்டெல் 80x86 செயலிகளில் பயன்படுத்தப்படும் ஒரு நினைவக அணுகு நுட்பம். இக்கட்டுமானத்தில் நினைவகம் 64 கேபி கொண்ட துண்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. நினைவக இருப்பிடங்கள் 16 துண்மி (பிட்) கொண்ட முகவரியால் குறிக்கப்படுகின்றன. 32-துண்மி முகவரித் திட்டம்மூலம் 4 ஜி. பி நினைவகத்திலுள்ள துண்டங்களைக் கையாள முடியும்.

segmented address space : கூறுபாட்டு முகவரி இடவெளி : இது முகவரிப்படுத்தும் நினைவகம். இதில், ஒரு கூறுபாடு அல்லது ஆதாரம், எண் அதற்குச் சேர்க்கப்படும் ஒரு மாற்று மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு எண்மியிலும் குறிக்கப்படுகிறது.

segmented bar charts : வெட்டுக் கூறாக்கிய பட்டை வரைபடம்; பிரிக்கப்பட்ட பட்டை வரைபடம் : பகுதியாக்கிய பட்டை வரைபடம் : ஒர் ஒட்டு மொத்தத்தின் கூறுகளைக் குறிப்பதற்கு ஒன்றன் மேல் ஒன்றாக நிலைப்படுத்திய இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட வெட்டுக் கூறுகளினாலான பட்டை வரை படம். இது குவிய வரை படத்தைப் போன்றது. இதில் ஒட்டுமொத்தத்தையும் அதன் உறுப்புப் பகுதிகளையும் ஒப்பீடு செய்வதற்கேற்ப பட்டைகள் பல்வேறு வடிவளவுகளில் அமைந்திருக்கும்.

segmented programme : கூறுபாட்டு நிரல்.

segment register : கூறுபாட்டுப் பதிவகம் : மையச் செயலகத்திலுள்ள நான்கு பதிவகங்களில் ஒன்று. இது, நினைவகக் கூறுபாட்டில், தொடக்க நிலைகளைச் சுட்டிக்காட்டுகிறது. பதிவகத்திலுள்ள மதிப்பளவினை இது தானாகவே 16 ஆல் பெருக்கி, ! மீமிகு எண்மி மையச் செயலகத்தில் உள்ள 65535 16- எண்மி முகவரி இடைவெளி எல்லைகளில் ஒன்றினை சுட்டிக்காட்டுகிறது. கூறுபாட்டுப் பதிவகங்களின் பெயர்கள். குறியீட்டுக் கூறுபாடுகள் (CS) ; தரவு கூறுபாடு (DS) ; அடுக்குக் கூறுபாடு (SS) ; மிகைக் கூறுபாடு (ES).

segment value : கூறுபாட்டு மதிப்பளவு : ஒரு நினைவகத்தில் 16-எட்டியல் அலகுகளிலுள்ள நினைவுப் பதிவினைக் குறிப்பதன்மூலம் ஒரு இடநிலையை

வரையறுத்துக் கூறும் ஓர் எண். இது பத்தி எண் என்றும் கூறப்படும். 

sel (SELect) : எஸ்சிஎல் (செலெக்ட்) : அச்சுப் பொறி மாற்றி மாற்றித் தொடு நிலைக் கும் விடுநிலைக்கும் எடுத்துச் செல்லும் அச்சுப்பொறி

select : தெரிவு ; தேர்ந்தெடு ; தெரிவு செய் : பயனாளரின் குறிப்பிட்ட வரையளவுகளுக் கேற்ப தரவுத் தளத்திலிருந்து பதி வேடுகளின் தொகுதியைத் தெரிவு செய்தல். எடுத்துக் காட்டு : 1986-க்கு மேற்பட்ட ஆண்டுக்கான பதிவேடுகள் அனைத்தையும் தெரிவுசெய்தல்.

select all : அனைத்தும் தேர்ந் தெடு.

select all records : அனைத்து ஏடுகளையும் தேர்ந்தெடு.

selecting : தெரிவு செய்தல்.

selection control structure : தேர்வுக் கட்டுப்பாட்டமைப்பு.

selector : தெரிந்தெடுப்பி.

selection : தெரிவு செய்தல் : தேர்வு : மாற்று முறைகளி லிருந்து தேர்ந்தெடுத்தல்.

selection sort : தெரிவுப் பிரிப்பி; தேர்ந்து பிரித்தெடு ; தேர்வு வரிசை : ஒரு பட்டியலிலுள்ள மிகப் பெரிய அல்லது மிகச் சிறிய மதிப்பளவு களைத் தேர்வு செய்து பட்டி யலைச் சுருக்குவதற்கான பிரிப்பி.

selection structure : தெரிவுக் கட்டமைப்பு ; ஒரு கட்டமைப்புப் பாய்வு வரைபடத்தின் மூன்று அடிப்படைக் கட்டமைப்பு களில் ஒன்று. சில நிபந்தனை களின் பேரில் இருமாற்று வழி களுக்கிடையே தேர்வு செய்ய உதவுகிறது. இதனை 'முடிவுக் கட்டமைப்பு' என்றும் கூறுவர்.

selective calling : தெரிவுப் பணி; செய்தித் தொடர்புகளில் இணையத்திலுள்ள எந்த நிலையம் செய்தியைப் பெற வேண்டும் என்பதைத் தெரிவிப் பதற்கு அனுப்பீட்டு நிலையத் திற்குள்ள திறன்.

selector channel : தெரிந் தெடுப்பு வழி; தேர்ந்தெடுக்கும் வழித் தடம் : தெரிவுத் தடம் : சில வகைக் கணினி பொறி யமைவுகளில் உள்ள உட் பாட்டு / வெளிப்பாட்டு வழி. இதன்மூலம் தரவுகளை ஒரு புறநிலை சாதனத்தில் மட்டுமே ஒரே சமயத்தில் தரவுகளை ஏற்றவும் அதிலிருந்து மாற்றவும் செய்யலாம். இது 'பன்முக வழி' என்பதிலிருந்து வேறு பட்டது. selector pen : தெரிவுப் பேனா; ஒளிப்பேனா என்பதும் இதுவும் ஒன்று.

selectric typewriter : தெரிவு தட்டச்சு; 1961இல் புகுத்திய தட்டச்சுப்பொறி. இதில் முதன் முதலில் ஒரு கால்ஃப் பந்து அளவுக்கான அச்சுத் தலைப்பு பயன்படுத்தப்பட்டது. இது. காகித ஊர்தியை அச்சுப் பொறி யின் குறுக்கே நகர்த்துவதற்குப் பதிலாக காகிதத்தின் குறுக்கே நகர்ந்தது. இது விரைவாக, உலகில் மிகவும் புகழ்பெற்ற தட்டச்சுப்பொறியாக விளங் கியது.

selenium : செலனியம் ; ஒரு மின் கடத்தாப் பொருள். இது சிலிக்கன் போன்ற பண்பியல்பு கள் கொண்டது. எனினும், இதன் விசையியக்க வேகம் சிலிக்கனைவிடக் குறைவு.

self-adapting : தன்-தகவமைத் தல்; தன் தகவமைவு; தன்வயத் தகவமைவு : கணினி அமைப்பு கள், சாதனங்கள் அல்லது செயல்பாடுகள் சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கேற்ப தம் முடைய செயல்பாட்டுத் தன்மைகளைத் தகவமைத்துக் கொள்ளும் திறன்.

self - booting : தன் உந்தல் ; செயற்பாட்டுப் பொறியமை வினைத் தானாகவே இயக்கு விக்கும் செயல்.

self-checking code : சுய சோதனை குறியீடு ; தன் வயச் சரிபார்ப்புக் குறிமானம்.

self-checking digit : தானாக சரிபார்க்கும் இலக்கம் : குறி யாக்கத்தின் போது ஓர் எண்ணின் இறுதியில் சேர்க்கப்படும் இலக் கம். குறியாக்கத்தின் துல்லி யத்தை உறுதி செய்வது இதன் நோக்கம்.

self-clocking : தன் காலப் பதிவு; பதிவு செய்யப்பட்ட குறியீட் டின் ஒரு பகுதியாகக் கடிகாரத் துடிப்புகள் அமையும் வகையில் ஒரு காந்த ஊடகத்தில் எண் மானத் தரவுகளைப் பதிவு செய் தல். இதில், நேரக் கணிப்புக்குத் தனிக் கடிகாரம் தேவை யில்லை . தன் காலப்பதிவு உத்தியில் பொதுவாக நிலைக் குறியீட்டு முறை பயன்படுத்தப் படுகிறது.

self compiling compiler : தானாக தொகுக்கும் தொகுப்பு ; தன் வயத் தொகுப்பு : தொகுப் பானின் சொந்த ஆதார மொழி யில் எழுதப்பட்டுள்ள, தானா கவே தொகுக்கும் திறனுள்ள ஒரு தொகுப்பி.

self complementing code : தானே குறைநிரப்புக் குறியீடு ; தானே ஈடுகட்டும் குறியீடு : தன்வயத்திருத்துக் குறிமானம் : எடையேற்றிய இரும எண் ஒன்றின் குறைநிரப்பானது, பதின்மக் குறிமானத்தில் எண் ஒன்பதின் குறை நிரப்பாக இருக்கும் பண்பினைக் கொண்ட குறியீடு.

self correcting code : தானே திருத்தும் குறியீடு : ஒரு எண் மானக் குறியீட்டு முறை. இதில் பிழைகள் மேற்செல்வது தானா கவே கண்டுபிடிக்கப்பட்டுத் திருத்தப்படுகின்றன. பிழை திருத்தும் குறியீடு என்பதும் இதுவும் ஒன்றே .

self documenting code : தன் ஆவணமாக்கக் குறியீடு ; செயல்முறை எழுதியவர் அல்லது இன்னொரு செயல் முறையாளர் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய செயல் முறை அறிக்கைகள். 'சி'- மொழியை விட 'கோபால்' அதிகத் தன் ஆவணக் குறியீடுகளை அளிக்கிறது.

self-extracting file : தன் விரி வாக்கக் கோப்பு : ஒரு நிறை வேற்றப்படத்தக்க செயல்முறை யாக மாற்றப்பட்டுள்ள செறி வாக்கம் செய்யப்பட்ட ஒன்று, அல்லது அதற்கு மேற்பட்ட கோப்புகள். இது இயக்கப்படும் போது தன் உள்ளடக்கங்களை விரிவாக்கம் செய்கிறது.

self-modifying code : தானாக மாற்றியமைக்கும் குறிமுறை : பொதுவாக, ஒரு மொழிமாற்றி (compiler) அல்லது சிப்பு மொழி மாற்றியினால் (assembler) உரு வாக்கப்படும் இலக்கு நிரல் குறிமுறை புதிய கட்டளை களை, முகவரிகளை, தரவு மதிப்புகளை ஏற்கெனவே இருக்கும் நிரல் தொகுப்பில் சேர்க்கும் போது தானாக மாற்றி யமைத்துக் கொள்ளும்.

self test : தன் சோதனை : அச்சுப்பொறி செயற் பாட்டினைச் சோதனை செய் யும்முறை. இந்தச் சோதனை யில் அச்சுப்பொறி தனது எழுதப்படிக்க மட்டுமேயான நினைவகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள எழுத்து களை அச்சடிக்கிறது.

self validating : தானே செல்லு படியாக்கும் குறியீடு : சுய மதிப் பீட்டுக் குறியீடு; தன் வயச் செல்லுபடிக் குறிமானம் : தனது சொந்தப் பிழையின்மையினைத் தீர்மானித்து, அதன்படி மேற் செல்கிற குறியீடு.

self-validating code : தானாகச் சரிபார்க்கும் குறிமுறை : சரி யாகச் செயல்படுகிறதா என தன்னைத்தானே சரிபார்த்துக் கொள்ளும் நிரல் குறிமுறை. பொதுவாக, சில உள்ளீட்டு மதிப்புகளை தானாகவே எடுத்துக்கொண்டு, கிடைக் கின்ற விடையை, வரவேண்டிய வெளியீட்டு மதிப்புகளோடு சரிபார்த்துக்கொள்ளும்.

semantic error : சொற் பொருட் பிழை : செயல்முறைப்படுத்து வதில் செல்லத்தக்கதாக இராத தருக்க முறையில் எழுதுதல்.

semantic gap : சொற்பொருள் இடைவெளி : தகவல் அல்லது மொழிக் கட்டமைப்புக்கும் இயல்பு உலகுக்குமிடையிலான வேறுபாடு. semantics : சொற்பொருளியல் : மொழி வடிவங்களில் சொற் களின் பொருள் பற்றி ஆராயும் அறிவியல். சைகைகளுக்கும் அவை குறிப்பிடும் பொருள் களுக்கிடையிலான தொடர்பு கள் பற்றி ஆய்வு செய்தல்.

Semanting net : சொற்பொருள் வலை : மனித அறிவை ஒரு வலைபோன்ற கட்டமைப்பாக அமைப்பாக்கம் செய்கிற ஓர் தரவு உருவாக்க முறை. இதில் மையமுனைகள், பொருள்கள், கோட்பாடுகள், நிகழ்வு அடங்கி யிருக்கும்; இவை இணைப்பு களின் தன்மையைக் குறிப்பிடுகிற இணைப்புகளால் இணைக்கப்பட்டிருக்கும்.

semaphores : அணுகுமுறைக் குறிப்பு; ஒருங்கியல்பு வரை யுருக்கள் : ஒரே சமயத்தில் இயங்கி தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட செயல் முறைகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்குப் பயன் படுத்தப்படும் ஒருங்கு நிகழ் வாக்க வரையுருக்கள்.

Semiconductor : மின் கடத்தாப் பொருள்; அரைக்கடத்தி; குறை கடத்தி : தாழ் வெப்பநிலை யிலும் தூயநிலையிலும் மின் கடத்தாத திண்மப் பொருள். ஜெர்மேனியம், சிலிக்கன் போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை. இதிலிருந்து ஒருங் கிணைந்த மின்சுற்று வழிகள் தயாரிக்கப்படுகின்றன.

semiconductor device : மின் கடத்தாச் சாதனம்; அரைக் கடத்திச் சாதனம்; குறைகடத்திச் சாதனம் : சிலிக்கன், ஜெர்மேனி யம் போன்ற தூயநிலையிலுள்ள படிகப் பொருள்களிலிருந்து தயாரிக்கப்படும் மின்னியல் பொருள். இவை மின்னணு நோக்கங்களுக்குப் பயன்படுத் தும் அளவுக்கு கடத்திகளோ காப்புப் பொருள்களோ அல்ல. தூய உலோகத்தின் படிகக் கட்டமைவில் ஆர்செனிக் போன்ற மாசு அணுக்கள் உட்செல்லுமானால் மின்னியல் சமநிலை சீர்குலைகிறது. நேர்மின் அல்லது எதிர்மின்னேற்ற ஊர்திகள் உண்டாகின்றன. அப்போது டயோடுகளும் மின்மப்பெருக்கிகளும் புகுத்தப்படுகின்றன.

semiconductor field : அரைக்கடத்திப் புலம்.

semiconductor memory : அரைக் கடத்தி நினைவகம்.

semiconductor secondary storage (RAM disk) : அரைக்கடத்தி துணை நிலைச் சேமிப்பகம் (வட்டு ) : கணினியின் அரைக் கடத்திச் சேமிப்பகத்தின் பகுதியை ஒரு வட்டு இயக்கியாக இருந்தாற்போறு செயற்படச் செய்கிற முதன்மைச் செய்முறைப்படுத்தியாகவும், செயற்பாட்டு பொறியமைவாக அமைக்கிற மென்பொருள் மற்றும் கட்டுபாட்டு சுற்று நெறியைப் பயன்படுத்துகிற ஒரு முறை.

semiconductor storage : அரைக்கடத்திச் சேமிப்பகம் : ஒர் ஒருங்கிணைந்த மின்சுற்றுவழிச் சிப்புவில் திடநிலை மின்னணு அமைப்பிகளாகஅமைந்துள்ள சேமிப்புப் பொருள்களைக் கொண்டுள்ள நினைவகச் சாதனம்.

semi instructured decisions : அரைகுறை முடிவுகள் : ஒரு பகுதி முன்னரே குறித்து வைக்கப்பட்டிருந்து, ஆனால் ஒரு திட்டவட்டமான பரிந் துரைத்த முடிவுக்கு வழி செய்யாத நடைமுறைகள் அடங்கிய முடிவுகள்.

semirandom access : அரை தற்செயல் அணுகல்;பகுதி நேரடி அணுகல்; பாதி குறிப்பற்ற அணுகுமுறை : விரும்பிய இனத்தைத் தேடுவதில் ஒரு வகை நேரடி அணுகுமுறையை இணைக்கிற ஒரு சேமிப்பில் தரவுகளைக் கண்டறியும் முறை.

send : அனுப்பு : தகவல் தொடர்புத் தடத்தின் வழியாக ஒரு செய்தியை அல்லது கோப்பினை அனுப்பி வைத்தல்.

send to : இவருக்கு அனுப்பு.

send to back : திருப்பி அனுப்பு.

send later : பின்னர் அனுப்பு.

sendmail : அனுப்பு அஞ்சல்;செண்ட் மெயில் : மின்னணு அஞ்சலைக் (e-mail) கையாள்வதற்குரிய ஒரு தர அளவான UNIX செயல்முறை. இதனை நிறுவுவது கடினம். அப்படி நிறுவினாலும், பல பாதுகாப்பு அபாயங்களுக்கு இடந்தருகிறது. இதில் அடிக்கடித் தவறுகள் நிகழ்வதால் சேய்மைப் பொறிகளை அணுக இடமளித் துக் குழப்பம் உண்டாக்குகிறது.

send now : இப்போது அனுப்பு.

sender : அனுப்புநர்.

send Statement : அனுப்பு கூற்று;அனுப்பு கட்டளை : ஸ்லிப் (SLIP), பீபீபீ (PPP) நெறிமுறைகளில், இணையச் சேவையாளரின் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு சில குறிப்பிட்ட குறியீட்டெழுத்துகளை அனுப்புமாறு எழுதப்பட்ட கூற்று/கட்டளை.

sense : உணர்வுத்திறம்;உணர் : 1. ஒரு வகைப்பாட்டின் குறிப்பிட்ட தொடர்பாட்டினை ஆராய்தல். 2. வன்பொருளின் சில கூறுகளின் தற்போதைய அமைப்புமுறையைத் தீர்மானித்தல். 3. ஒர் அட்டையில் அல்லது நாடாவில் துளையிடப் பட்ட துவாரங்களைப் படித்தல்.

sense probe : உணர்வு ஆய்வு;உணர்வி : ஒரு காட்சித் திரையில் உணர்வுப் புள்ளிகளைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் ஒரு கணினியில் உட்பாடு செய்கிற உட்பாட்டுச் செயல்முறை.

sense switch : உணர்வு விசை;உணர் பொத்தான் : கணினி இணைப்பு ஒரு செயல்முறை மூலம் வினவலாம். ஒரு பெரிய சிக்கலான செயல்முறையில் தவறு கண்டறியும்போது இது பெரிதும் பயனுடையதாக இருக்கும்.

sensitive devices : உணர்வுச் சாதனங்கள்.

sensitivity : உணர்வுத் திறன் : உள்வரும் சைகையில் ஏற்படும் மாறுதலுக்கு ஒரு கட்டுப்பாட்டின் உணர் திறன் அளவு.

sensitivity analysis : உணர் திறன் பகுப்பாய்வு : ஒரு கணித உருமாதிரியில் தனியொரு மாறிலியில் அடிக்கடி செய்யப்படும் மாறுதல்கள் எவ்வாறு ஏனைய மாறிலிகளைப் பாதிக்கின்றன என்று கண்காணித்தல்.

sensor glove : உணரிக் கையுறை : மெய்நிகர் நடப்புச் சூழல்களுக்கு, கையில் அணிந்து கொள்ளும் கணினி உள்ளிட்டுச் சாதனம். பயனாளரின் கைவிரல் அசைவுகளை இந்தக் கையுறை, சுற்றுச்சூழல் இருக்கும் பொருள்களை இயக்குவதற்குரிய கட்டளைகளாக மாற்றியமைக்கும். தரவுக் கையுறை (data glove) என்றும் அழைக்கப்படும். sensors : உணர்விகள் : வெப்ப நிலை, அழுத்தம், இதயத் துடிப்பு, காற்றுத் திசை, நெருப்பு போன்ற இயற்பியல் மாறுதல்களைக் கண்டறிந்து அளவிடக்கூடிய சாதனம். இயற்பியல் தூண்டல்களை மின்னணுச் சைகைகளாக மாற்றுகின்றன. எடுத்துக்காட்டு : கணினிகளில் உட்பாட்டினைச் செலுத்துதல்.

SEPP : எஸ்இபீபீ : இணை நிலைச்செயலாக்கத்துக்கான மென்பொருள் பொறியியல் எனப் பொருள்படும் Software Engineering for Parallel Processing என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பகிர்ந்தமை நினைவக பல்செயலி களுக்கான இணைநிலைப் பயன்பாட்டு நிரல்களை உருவாக்குவதற்குரிய கருவிகளை உருவாக்க, ஒன்பது ஐரோப்பியப் பல்கலைக் கழகங்களும், ஆராய்ச்சி நிறுவனங்களும் இணைந்து மேற்கொண்ட ஒரு திட்டப்பணி.

sequence : வரிசை முறை : 1. ஒரு குறிப்பிட்ட விதிகளுக்கிணங்க இனங்களை வரிசைப் படுத்துதல். 2. எண்மான வரிசை முறையில் ஏறுமுக வரிசை.

sequence character : தொடர் எழுதது.

sequence check : வரிசை முறைச் சரிபார்ப்பு;வரிசைச் சோதனை : ஒரு தரவு தொகுதி ஏறுமுக வரிசையில் அல்லது இறங்குமுக வரிசையில் அமைந்திருக்கிறதா என்பதைச் சரி பார்க்கும் முறை.

sequence of members : எண் வரிசை முறை.

sequence structure : வரிசை முறைக் கட்டமைப்பு : வரிசை அமைவு ஒரு கட்டமைவு பாய்வு வரைபடத்தின் அடிப்படையான மூன்று கட்டமைப்பு களில் ஒன்று. இதில் நிரல்கள் வரிசைமுறையில் நிறை வேற்றப்படுகின்றன.

sequential : வரிசை முறையிலான;வரிசைமுறை சார்ந்த தொடர்வழி; வரிசைமுறை : கால முறை வரிசையில் நிகழ்வுகள் நிகழ்வது தொடர்பானது. இதில் நிகழ்வுகள் ஒரே சமயத்தில் நடைபெறுவதோ, ஒன்றின் மீதொன்று நிகழ்வதோ இல்லை.

sequential access : வரிசை முறை அணுகுதல்;தொடர்வழிச் சேர்வு; வரிசை அணுகுமுறை : சேமிப்புக் கோப்பிலிருந்து தரவுகளை அவை சேமித்து வைக்கப்பட்டிருக்கும் வரிசை முறையிலேயே பெறும் செய்முறை. இதற்குக் காந்தநாடா தேவை. இது காந்த வட்டுச் சேமிப்பகத்திலும் பயன்படுத்தப்படுகிறது.இதனைத் தொடர்வரிசை அணுகுதல் என்றும் கூறுவர்.இது நேரடி அணுகுதல் என் பதற்கு மாறானது.

sequential access device:வரிசைமுறை அணுகுசாதனங்கள்.

sequential access file:வரிசை அணுகுமுறைக் கோப்பு.

sequential algorithm:வரிசை முறைப் படிமுறைத் தருக்கம்:நிரலின் ஒவ்வொரு படிமுறையும் ஒரு குறிப்பிட்ட வரிசையில் இடம்பெறும் படிமுறைத் தருக்கம்.

sequential computer:வரிசை முறைக் கணினி:காலமுறை வரிசையில் நிகழ்வுகள் நிகழ்கிற கணினி.இதில்,நிகழ்வுகள் ஒரே சமயத்திலோ,ஒன்றின் மீது ஒன்றோ நிகழ்வதில்லை.

sequentiai data organization:வரிசை முறைத் தரவு அமைப்பு முறை:குறித்துரைக்கப் பட்டுள்ள வரிசைமுறைப்படித் தருக்கமுறைத் தரவுக் கூறுகளை அமைப்பாகச் செய்தல்.

sequential data set:வரிசை முறைத் தரவுத் தொகுதி:காந்த நாடாவில் அமைப்பது போன்று அடுத்தடுத்த நிலைகளில் அமைக்கப்பட்ட பதிவேடு களில் உள்ள தரவுத் தொகுதி.

sequential data structure:வரிசைமுறைத் தரவுக் கட்டமைப்பு:ஒர் அணு அதற்கு அடுத்துள்ள அணுவுக்கு அடுத்ததாகவுள்ள தரவுக் கட்ட மைப்பு.இதனைப் பக்கத் தரவு கட்டமைப்பு என்றும் கூறுவர்.

sequential device:வரிசை முறைச் சாதனம்:ஒருவகைப் புறநிலைச் சாதனம்.இதிலிருந்து தரவுகளை வரிசை முறையில் படிக்கலாம்;அல்லது இதில் தரவுகள் வரிசைமுறையில் எழுதப்பட்டிருக்கும்.இதில் எதனையும் விட்டுவிட முடியாது.

sequential execution:வரிசை முறை இயக்கம்:நிரல் கூறுகளை அல்லது நிரல்களை ஒன்றன்பின் ஒன்றாய் தொடர்ச்சியாக நிறை வேற்றுதல்.

sequential file:தொடர்வழிக் கோப்பு.

sequential file,index:சுட்டு வரிசைக் கோப்பு.

sequential file organization:வரிசைமுறைக் கோப்பு அமைப்பாக்கம்; வரிசைமுறைக் கோப்பு ஒழுங்கமைப்பு:ஒரு விரற்கட்டை அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட வரிசை முறையில் கோப்புகளை அமைத்து வைத்தல். வரிசைமுறைக் கோப்புகளிலுள்ள பதிவேடுகள் ஒன்றன்பின் ஒன்றாக செய்முறைப்படுத்தப்பட வேண்டும்.

sequential flow of control : வரிசைமுறைக் கட்டுப்பாட்டுத் தொடர்வரிசை.

sequential list : வரிசை முறைப் பட்டியல் : பக்க அமைவிடங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பட்டியல். இதனைச் செறிவுப்பட்டியல், நீட்சிமுறைப் பட்டியல் என்றும் கூறுவர்.

sequential logic : வரிசை முறைத் தருக்கம்;வரிசைமுறை அளவை : உட்பாட்டின் முந்திய நிலைமூலம் வெளிப்பாட்டு நிலை தீர்மானிக்கப்படுகிற சுற்றுவழி அமைப்புமுறை. இது இணைத் தருக்கம் என்பதிலிருந்து மாறுபட்டது.

sequential logic element : வரிசைமுறைத் தருக்க உறுப்பு : குறைந்த அளவாக ஒரு உள்ளீடு, ஒரு வெளியீடு மட்டுமாவது உள்ள ஒரு தருக்க மின்சுற்று உறுப்பு. இதன் வெளியீட்டு சமிக்கை, உள்ளிட்டு சமிக்கை அல்லது சமிக்கைகளின் இப்போதைய மற்றும் முந்தைய நிலைகளின் அடிப்படையில் இருக்கும்.

sequential machine : வரிசை முறை எந்திரம் : வரிசைமுறை விசைச் சுற்றுவழியின் ஒரு குறிப்பிட்ட வகையின் கணித உருமாதிரி.

sequential pattern of excution : வரிசைமுறை நிறைவேற்றம்.

sequential processing : வரிசை முறை செயலாக்கம்; வரிசை முறை செய்முறைப்படுத்தல் : வரிசையின்படி எண்முறை அல்லது அகரவரிசை முறையின்படி கோப்புகள் இயக்குதல் direct access processing, random processing என்பதற்கு எதிர்ச் சொல்.

sequential storage : வரிசை முறைச் சேமிப்பகம்;தொடர் வழிச்சேகரம் : தரவுகள் ஏறுமுக அல்லது இறங்குமுக எண் வரிசையில் அமைக்கப் பட்டுள்ள துணைநிலைச் சேமிப்பகம்.

serial : தொடர்வரிசை தொடர்;தொடராக : 1. தனியொரு சாதனத்தில் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட தொடர்புடைய நடவடிக்கைகள் வரிசை முறையில் நிகழ்தல். இது இணை நிகழ்விலிருந்து மாறுபட்டது.

serial access : தொடர்வரிசை அணுகுதல்;வரிசை அணுகு முறை : சேமிப்பகத்தில் அணுகு நேரத்திற்கும் தரவு அமைவிடத்திற்குமிடையில் ஒரு வரிசைமுறைத் தொடர்பு இருக்கிற சேமிப்புச் சாதனத்தின் அல்லது ஊடகத்தின் விவரிப்பு. அதாவது, அணுகு நேரம், தரவு அமைவிடத்தைப் பொறுத்து அமைந்திருத்தல். இதனை வரிசை முறை அணுகுதல் என்றும் கூறுவர். இது நேரடி அணுகு தலிலிருந்து வேறுபட்டது.

serial adder : தொடர்வரிசை கூட்டல்பொறி;தொடர் வரிசைக் கூட்டி : தொடர்புடைய எண்ணளவுகள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒரேசமயத்தில் ஒர் இலக்கத்தைக் கொண்டு வருவதன்மூலம் செயற்பாடுகளைச் செய்கிற கூட்டல் பொறி.

serial board : தொடர்நிலைத் தளம.

serial computer : தொடர் வரிசைக் கணினி, தொடர்நிலைக் கணினி : ஒவ்வொரு இலக்கமும் அல்லது ஒவ்வொரு தரவு சொல்லும், கணினி யினால் தொடர்வரிசையில் செய்முறைப்படுத்தப்படுகிற கணினி. இது இணைவுக் கணினி என்பதிலிருந்து வேறுபட்டது.

serial communication : நேரியல் தகவல் தொடர்பு : இரு கணினி களுக்கிடையே அல்லது ஒரு கணினிக்கும் பிற புறச்சாதனங்களுக்கும் இடையே நடைபெறும் தகவல் போக்குவரத்தில் ஒற்றைத் தடத்தில் ஒரு நேரத்தில் ஒரு துண்மி (பிட்) வீதம் தகவல் பரிமாற்றம் நடைபெறல். இத் தகைய தகவல் தொடர்பு நேர ஒத்திசைவு அல்லது ஒத்திசைவில்லா முறையில் நடைபெற முடியும். அனுப்பி, வாங்கி இரண்டுமே ஒரே பாட் (baud) வீதம், ஒரே சமன்பிட், ஒரே வகையான கட்டுப்பாட்டுத் தகவல்களையும் கொண்டிருக்க வேண்டும்.

serial data : தொடர்வரிசைத் தரவு;தொடர் நிலைத் தரவு : ஒரே சமயத்தில் ஒரு துண்மியாக வரிசை முறையில் அனுப்பப்படும் தரவு.

serial infrared : நேரியல் அகச் சிவப்பு : ஒர் அகச்சிவப்பு ஒளிக் கற்றையைப் பயன்படுத்தி, ஒரு மீட்டர் இடைவெளியில் உள்ள இரு சாதனங்களுக்கிடையே தரவுகளை அனுப்பிக் கொள்ள, ஹீவ்லெட்-பேக்கார்டு நிறுவனம் உருவாக்கிய ஒரு வழிமுறை. அனுப்பும், பெறும் சாதனங்களில் இருக்கும் துறைகள் (ports) ஒரு சீராக்கப் பட்டிருக்க வேண்டும் (aligned). இத்தகு அகச்சிவப்பு ஒளிக்கற்றை முறை பெரும்பாலும் மடிக்கணினிகளில், கையேட்டுக் கணினிகளில் பயன்படுத்தப்படுகின்றன. அச்சுப்பொறி போன்ற புறச்சாதனங்களுக்கும் பயன்படுகின்றன.

serial input/output : தொடர்வரிசை உட்பாடு/வெளிப்பாடு;தொடர் நிலை உள்ளீடு/வெளியீடு : துண்மிகள் ஒன்றன்பின் ஒன்றாக ஒற்றைக் கம்பி மூலம் அனுப்பப்படுகிற தரவு அனுப்பீடு. இது இணை உட்பாடு/ வெளிப்பாடு என்பதிலிருந்து வேறுபட்டது.

serial interface : தொடர்வரிசை இடைமுகப்பு;தொடர்நிலை இடைமுகம் : தரவுகள் அனைத்தும் துண்மி துண்மியாகத் தொடர்வரிசையில் நகர்கிற இடைமுகப்பு. இது இணை இடைமுகப்பு என்பதிலிருந்து மாறுபட்டது.

serializability : நேரியலாக்கு இயலுமை;தொடர்வரிசைப் படுத்தும் திறன்;வரிசையாக்கப்படும் தன்மை : பல பயன்பாட்டாளர்கள் ஒரே சமயத்தில் தரவுகளை அணுகும்போது, அதன் பலன், அவர்கள் ஒரே சமயத்தில் ஒருவராக அணுகும்போது நிகழும் பலனுக்கு நிகராக இருத்தல் வேண்டும். இந்த விளைவு'தொடர் வரிசைப் படுத்தும் திறன்'எனப்படுகிறது.

serialize : நேரியல்படுத்து : பைட் பைட்டாக அனுப்பப்படும் இணை நிலை தகவல் பரிமாற்றத்தை, துண்மி துண்மியாக (பிட் பிட்டாக) அனுப்பப் படும் நேரியல் முறையாக மாற்றியமைத்தல்.

Serial Keys : நேரியல் விசைகள் : விண்டோஸ் 95ல் இருக்கும் ஒரு பண்புக் கூறு. தகவல் தொடர்பு, இடைமுகச் சாதனங்களைப் பொறுத்தமட்டில் விசையழுத்தங்களும், சுட்டிச் சமிக்கைகளும் கணினியின் நேரியல் துறை (serial port) வழியாகவே ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

serial machine : நேரியல் பொறி.

serial mouse : நேரியல் சுட்டி : கணினியின் வழக்கமான நேரியல் துறையில் இணைக்கப் படும் ஒரு சுட்டுச் சாதனம்.

serial operationதொடர் வரிசைச் செயற்பாடு;தொடர் நிலை இயக்கம் : ஒரு சொல்லின் இலக்கங்கள் அனைத்தும் ஒரே சமயத்தில் அல்லாமல் வரிசை முறையில் கையாளப்படுகிற கணினிச் செயற்பாடு. இது இணைச் செயற்பாடு என்பதிலிருந்து வேறுபட்டது.

serial port : தொடர்வரிசைத் துறை;தொடர்நிலைத் துறை;வரிசை; இணைப்பு : ஒரே சமயத்தில் ஒரு துண்மி வீதம் தரவுகளை ஏற்கவும் அனுப்ப வும் பயன்படுத்தப்படும் கணினியின் உட்பாட்டு/வெளிப்பாட்டுத் துறை. பெரும்பாலான சொந்தக் கணினிகளில், ஒரு RS-232C தொடர்வரிசை இடைமுகப்புத் துறை மூலம் தொடர்வரிசைத் தரவு செலுத்தப்படுகிறது.

serial port adapter : நேரியல் துறைத் தகவி : நேரியல் துறை அமைந்துள்ள, அல்லது தொடர்நிலைத் துறையை இன்னொன்றாக மாற்றியமைக்கின்ற ஒர் இடைமுக அட்டை அல்லது சாதனம்.

serial printer : தொடர்வரிசை அச்சுப் பொறி;வரிசை அச்சுப் பொறி, தொடர் நிலை அச்சுப் பொறி, தொடர் அச்சு எந்திரம் : ஒற்றைக் கம்பி வழியாக ஒரு சமயத்தில் ஒரு துண்மி வீதம் கணினியிலிருந்து தகவல்களைப் பெறுகிற அச்சடிப்பி. (ஒரு எழுத்து, எட்டு துண்மிகளுக்குச் சமம்). கட்டுப்பாட்டுச் சைகைகளைப் பரிமாற்றிக் கொள்வதற்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூடுதல் கம்பிகள் தேவைப்படலாம். இது ஒரே சமயத்தில், 600 cps வேகத்தில் ஒரு எழுத்தை அச்சடிக்கிறது. இது இணை அச்சடிப்பி என்பதிலிருந்து வேறுபட்டது.

serial processing : தொடர்வரிசைச் செய்முறைப்படுத்துதல்;வரிசைச் செயலாக்கம்;தொடர் நிலைச்செயலாக்க்ம் : ஒரு கோப்பில் பதிவேடுகளை, அவை சேமித்து வைக்கப்பட்ட இயல்பான வரிசைமுறையில் ஒன்றன்பின் ஒன்றாகப் படித்தல் மற்றும்/அல்லது எழுதுதல். இது இணை செய்முறைப் படுத்தல் என்பதிலிருந்து வேறுபட்டது.

serial reading : தொடர்வரிசைப் படிப்பு;வரிசைமுறைப் படிப்பு;தொடர் நிலைப் படிப்பு : துளையிட்ட அட்டையிலிருந்து பத்தி பத்தியாகப் படித்தல். இது இணையாகப் படித்தல் என்பதிலிருந்து வேறுபட்டது.

serial transfer : நேரியல் பரிமாற்றம்.

serial transmission : தொடர்வரிசை;தொடர் நிலைச் செலுத்தம் : தரவுகளை மாற்றம் செய்வதற்கான ஒரு முறை. இதில், ஒர் எழுத்தினைக் கோர்க்கின்ற துண்மிகள் வரிசைமுறையில் அனுப்பப்படுகின்றன. இது, இணை அனுப்பீடு என்பதிலிருந்து வேறுபட்டது.

series : தொடர்கள்.

series circuit : வரிசை மின்சுற்று : இரண்டு அல்லது மேற்பட்ட உள்ளுறுப்புகள் வரிசையாகத் தொடுக்கப்பட்ட ஒரு மின் சுற்று. தொடர் மின்சுற்றில் ஒவ்வொரு உள்ளுறுப்பு வழியாகவும் மின்னோட்டம் (current) பாயும். ஆனால் மின் அழுத்தம் (voltage) உள்ளுறுப்பு களிடையே பகிர்ந்து கொள்ளப்படும்.

serif : செரிஃப் : எழுத்துகளில் அலங்கார முடிவுகளைக் கொண்ட ஒர் எழுத்துரு. இது செரிஃப் எழுத்து முகப்பு ஆகும்.

server : புரவலர்;பணியகம்;தலைமைக் கணினி : ஒர் இணையத்திலுள்ள கணினி. இதனைப் பல பயன்பாட்டாளர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

server-based application : வழங்கன்-சார்ந்த பயன்பாடு : ஒரு பிணை யத்தில் பகிர்ந்து கொள்ளப்படும் ஒரு நிரல். பிணைய வழங்கனில் சேமிக்கப் பட்டிருக்கும். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிளையன்கள் அந்நிரலைப் பயன் படுத்திக் கொள்ளமுடியும்.

server cluster : வழங்கன் கொத்து : ஒருங்கிணைந்து ஒற்றைஅமைப் பாகச் செயல்படும் தனித்தனிக் கணினிகளின் குழுமம். கிளையனைப் பொறுத்த வரை வழங்கன் கொத்து ஒர் ஒற்றை வழங்கன்போலவே தோற்றமளிக்கும்.

server computer : புரவலர் கணினி.

server error : வழங்கன் பிழை : பயனாளர் அல்லது கிளையன் கணினியின் பிழையாக இல்லாமல், வழங்கன் கணினியில் ஏற்படும் பிழை காரணமாக, ஹெச்டீடீபீ வழியாகக் கேட்கப்பட்ட ஒரு தகவலை நிறை வேற்றமுடியாமல் இருக்கும் நிலை. வழங்கன் பிழைகள், 5-ல் தொடங்கும் ஹெச்டீடீபீ. யின் பிழைக் குறியீட்டால் உணர்த்தப்படும்.

server load : தலைமைக்கணினி பணியகச் சுமை : ஒரு பிணையத் தலைமைக் கணினி எத்தனை அணுகுதல்களைப் பெறுகிறது என்பதைக் கணக்கிடும் அளவு முறை. இது பொதுவாக, வினாடிக்கு இத்தனை அழைப்புகள் என்ற கணக்கில் கணக்கிடப்படுகிறது.

server push-pull : வழங்கன் தள்ளு-இழு : கிளையன்/வழங்கன் இணைந்த நுட்பங்கள் தனித்தனியாக வழங்கன் தள்ளல், கிளையன் இழுவை என்று வழங்கப்படுகின்றன. வழங்கன் தள்ளலில், வழங்கன், தகவலை கிளையனுக்குத் தள்ளி விடுகிறது. ஆனால் தரவு இணைப்பு திறந்த நிலை யிலேயே உள்ளது. இதன் காரணமாய் தேவையான அளவுக்குத் தகவலை உலாவிக்குத் தொடர்ந்து அனுப்பிவைக்க வழங்கனுக்குச் சாத்தியமாகிறது. கிளையன் இழுவையில் வழங்கன், கிளையனுக்குத் தகவலைத் தருகிறது; ஆனால் தரவு இணைப்பு தொடர்ந்து திறந்திருப்பதில்லை. குறிப்பிட்ட காலஇடைவெளிக்குப் பிறகு மேலும் தரவு அனுப்பும் பொருட்டு தரவு இணைப்பை மீண்டும் திறக்குமாறு உலாவிக்கு வழங்கன் ஒரு ஹெச்டீஎம்எல் நிரலை அனுப்பி வைக்கும். பெரும்பாலும் ஒரு புதிய யூஆர்எல் லைத் திறக்கும் போது இது நிகழும்.

server-side include : வழங்கன் பக்கச் சேர்ப்புகள் : வைய விரி வலை ஆவணங்களில் இயங்கு நிலையில் உரையைச் சேர்ப்பதற்கான ஒரு நுட்பம். இவை வழங்கனால் அறிந்து கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படுகின்ற தனிச் சிறப்பான கட்டளைக் குறிமுறைகளாகும். அந்த ஆவணம் உலாவிக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு முன்னதாக ஆவணத்தின் உடல் பகுதியில் அக்கட்டளைகளின் விடை சேர்க்கப்பட்டுவிடும். எடுத்துக்காட்டாக, உலாவிக்கு அனுப்பப்படும் ஆவணத்தில், அன்றைய தேதி, அப்போதைய நேரத்தை முத்திரையிட்டு அனுப்பி வைக்கலாம்.

server tier : வழங்கன் அடுக்கு.

server type : வழங்கன் வகை.

service : சேவை : 1. தொழில் நுட்ப உதவி அல்லது பிணைய வசதி போன்ற வாடிக்கையாளர் அடிப்படையிலான அல்லது பயனாளர் நோக்கிலான ஒரு பணி. 2. நிரலாக்கம் மற்றும் மென்பொருள்களில் ஒரு நிரல் அல்லது நிரல்கூறு பிற நிரல்களுக்கு உதவி செய்தல். பெரும்பாலும், வன்பொருளுக்கு நெருக்கமான அடிநிலைப் பணிகளாக இருக்கும்.

Service Advertising Protocol : சேவை விளம்பர நெறிமுறை : ஒரு பிணையத்திலுள்ள (கோப்பு வழங்கன் அல்லது பயன்பாட்டு வழங்கன் போன்றவற்றிலுள்ள) ஒரு சேவை-வழங்கும் கணுக் கணினி, பிணையத் திலுள்ள பிற கணுக்களுக்குத் தன்னை அணுக முடியும் என அறிவித்தல். ஒரு வழங்கன் இயக்கப்படும்போது, தனது சேவைகளை விளம்பரப்படுத்த இந்த நெறிமுறையைப் பயன்படுத்திக் கொள்கின்றது. அதே வழங்கன் அகல்நிலைக்கு மாறும்போது, இதே நெறி முறையைப் பயன்படுத்தித் தன்னுடைய சேவைகள் இனி கிடைக்காது என்பதை அறிவிக்கின்றது.

service bureau : சேவைக் கழகம்;பணி அலுவலகம் : மற்ற ஆட்களுக்கு அல்லது அமைவனங்களுக்குத் தரவு செய்முறைப் படுத்துதல் சேவைகள் வழங்குகிற அமைவனம். இது சில சமயம் கணினிச் சேவை நிறுமம் எனக் கூறப்படுகிறது.

service contract : சேவை ஒப்பந்தம்;பணி ஒப்பந்தம் : கணினி வணிகம், கணினிக் கடை, கணினி நிறுமம் போன்ற ஒரு கணினிப் பொறியமைவை உடனடியாகப் பழுதுபார்த்துக் கொடுக்கிற அமைவனத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம்.

service programme : சேவை செயல் முறைகள்;சேவை நிரல் தொடர்கள் : ஒரு செயற்பாட்டுப் பொறியமைவின் கட்டுப்பாட்டுச் செயல்முறைகளுக்குத் துணைசெய்கிற செயல்முறைகள். மொழிபெயர்ப்பாளர், பயன்பாட்டு வாலாயம் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டு.

service provider : சேவை வழங்குநர் சேவையாளர்.

service window : சேவைப் பல கணி;பணிச்சாளரம் : ஒரு பராமரிப்பு உடன்படிக்கையில் உள்ளடங்கிய பகல் அல்லது இரவின்போதான மணி நேரங்கள் "பலகணிக்கு" வெளியே அளிக்கப்படும் சேவை இந்த உடன்படிக்கையில் அடங்காது.

servo : செர்வோ;செயற்பணி : மின் எந்திரவியல் சாதனம். இது, துல்லியமான தொடக்கத்தை அளிப்பதற்குப் பின்னூட்டினைப் பயன்படுத்துகிறது. நாடா இயக்கியிலுள்ள விசைப் பொறி இயக்கம், ஒரு வட்டிலுள்ள ஒர் அணுகுகரத்தின் இயக்கம் போன்ற செயற் பணிகளுக்காக நின்று கொள்கிறது.

servo mechanism : பணிச் செயல்முறை;சேவை எந்திர அமைப்பு;பணி இயக்கமைப்பு : பின்னூட்டுக் கட்டுப்பாட்டுப் பொறியமைவு.

session : அமர்வுநேரம்;அமர்வு : ஒரு கணினிப் பொறியமைவு இயக்குநர், ஒரு அமர்வில் ஒரு முனையத்தில் பணிபுரிகிற கால அளவு.

session layer : அமர்வு அடுக்கு : ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ ஏழு அடுக்குகளில் ஐந்தாவது அடுக்கு. தகவல் தொடர்பு கொள்ளும் இரண்டு சாதனங்களும் கட்டாயம் ஒப்புக் கொள்ளக்கூடிய விவரங்களை அமர்வு அடுக்கு கையாள்கிறது. set : பொருத்துதல்;தொகுதி குழு : 1. ஓர் இருமச் சிற்றத்தை 1 நிலையில் வைத்தல்;2. ஒரு சேமிப்புச் சாதனத்தை ஒரு குறிப்பிட்ட நிலையில் வைத் தல். இது பெரும்பாலும் கழியாக இருக்கும். 3. தொடர்புடைய பொருள்களின் ஒரு தொகுதி. 4. ஒரு தொடர்புறு தரவுத் தளத்தில், பொருள்களின் தொகுதி. 5. ஓர் இணையத்தில்/படிமுறைத் தரவுத்தள உருமாதிரியில், ஒன்றும் பலவு மான தொடர்புகள். ஒரு பதிவு வகை இன்னொன்றுடன் இணைக்கப்பட்டிருக்கும் வழி.

set block : கணத் தொகுதி : ஒரு செயல்முறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நினைவுப் பதிவுகளின் அளவைச் சுருக்கமும் விரிவாக்கமும் செய்யக்கூடிய ஒரு DOS செயற்பணி.

set, data : தரவுக் கணம்.

set database password : தரவுத்தள நுழைசொல் அமை.

SETI : எஸ்இடீஎல் : தொகுதிகளும், தொடர்புடைய கட்டமைப்புகளும் உள்ளடங்கிய பதின்முறை எண்மானச் செயல் முறைப்படுத்துதலுக்கு வசதி செய்து கொடுக்க வடிவமைக்கப்பட்ட உயர்நிலை மொழி

set of instructions : நிரல்களின் தொகுதி.

set print area : அச்சுப்பரப்பு அமை.

set theory : கணக்கோட்பாடு : பொருள்களின் கணங்கள், அவற்றைக் கையாள்வதற்கான விதிகள்பற்றிய கணிதம் அல்லது தருக்க முறைப் பிரிவு. UNION, INTERSECT, COMPLEMENT ஆகியவை இதன் மூன்று அடிப்படைச் செயற்பாடுகள்.

settings : அமைப்புகள்.

settling time : நிலைநிற்கும் நேரம் : ஒரு வட்டு இயக்கத்திலுள்ள படி/எழுது முனை ஒரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு நகரும்போது, புதிய இடத்தில் நிலைநிறுத்திக் கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரம்.

set-top box : மேல்நிலைப் பெட்டி : வடத் தொலைக்காட்சி சமிக்கைகளை தொலைக் காட்சிப் பெட்டியின் உள்ளிட்டு சமிக்கைகளாக மாற்றித்தரும் ஒரு சாதனம். தொலைக்காட்சி மூலமாக வைய விரிவலையில் உலாவர இத்தகு மேல்நிலைப் பெட்டிகள் பயன்படுகின்றன.

setup : நிறுவுகை;அமைப்பு முறை;அமைப்பு;அமைவு : ஒரு குறிப்பிட்ட சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்கான தரவுகளின் அல்லது சாதனங்களின் அமைப்பு முறை.

setup programme : நிலைகொள் செயல்முறை : ஒரு பொறியமைவினை ஒரு குறிப்பிட்ட சூழலுக்கேற்ப உருவாக்குகிற மென்பொருள். சொந்தக் கணினிகளில் ஒரு பெரிய சாதன மாற்றத்தைச் செயற்பாட்டுப் பொறி யமைவுக்குத் தெரிவிப்பதற்கு இது பயன்படுத்தப்படுகிறது.

setup string : நிலைகொள் சரம் : அச்சடிப்பி போன்ற ஒரு சாதனத்தைத் தொடக்கி வைக்கிற நிரல்களின் தொகுதி.

setup time : அமைப்பு முறை நேரம், அமைப்பு நேரம்;நிறுவு நேரம் : மற்ற எந்திரச் செயற்பாடுகளைக் கணினி இயக்கு வதற்கிடையிலான நேரம். அதாவது, வட்டுகள் நகரும் அட்டைகள், படிவங்கள், பிற பொருள்கள் ஆகியவற்றை சாதனத்திற்குள்ளேயும் வெளியேயும் மாற்றுவதற்கான நேரம்.

setup wizard : நிறுவுகை வழிகாட்டி : மைக்ரோசாஃப்டின் விண்டோஸ் இயக்க முறைமையில் ஒரு புதிய மென்பொருளை நிறுவிடப் பயனாளருக்கு உதவிடும் ஒருநிரல். வரிசையாகக் கட்டமைக்கப்பட்ட வினாக்கள், விருப்பத் தேர்வுகள் மூலம் படிப்படியாக பயனாளரை இட்டுச் செல்லும் ஒரு வழிமுறை.

seven segment display : ஏழுகூறுக் காட்சி : எண்மானக் கடிகாரங்களில் காணப்படும் பொதுவான காட்சிமுறை. இது எட்டுகளின் ஒரு தொடர் போன்று தோன்றும் படிப்புமுறைகளையும் குறிக்கும். தனித்தனியாக முகவரியிடத்தக்க ஏழுபட்டைகள் வரையில் தெரிந்தெடுத்த ஒளிர்வு மூலம் ஒவ்வொரு எண் அல்லது எழுத்து அமைக்கப் படுகிறது.

. sf. ca. us : . எஸ்எஃப். சிஏ. யுஎஸ் : ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டு, கலிஃபோர்னியா மாநிலத்தில் சான்ஃபிரான் சிஸ்கோவைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

sferics : ஸ்ஃபெரிக்ஸ் : வாயு மண்டல ஒசைகளைக் குறிக்கும் ஒரு சொல். செய்தித் தொடர்புக் கம்பியில் எந்த வகையான இடையீட்டையும் இது குறிக்கிறது.

sfil : எஸ்ஃபில் : மெக்கின்டோஷ் சிஸ்டம் 7இல் ஒலிக் கோப்புகளைக் குறிக்கும் கோப்பு வகைப் பெயர். sg : எஸ்ஜி : ஒர் இணைய தள முகவரி சிங்கப்பூரைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.

. sgm : . எஸ்ஜிஎம் : தரநிலைப் பொதுப்படைக் குறியீட்டு மொழி (Standard Generalized Markup Language-SGML) யில் குறியாக்கம் செய்யப்பட்ட கோப்பு களை அடையாளம் காட்டும் எம்எஸ் டாஸ்/விண்டோஸ் 3. x கோப்பு வகைப் பெயர். எம்எஸ் டாஸ் மற்றும் விண்டோஸ் 3. x முறைமைகளில் கோப்பின் வகைப்பெயர் மூன்றெழுத்துகள் மட்டுமே. எனவேதான், sgml என்கிற வகைப்பெயர் மூன்றெழுத்தாகச் சுருக்கப்பட்டு விடுகிறது.

SGML : எஸ்ஜிஎம்எல் : தர நிலைப் பொதுப்படைக் குறியீட்டு மொழி எனப் பொருள் படும் Standard Generalized Markup Language என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். 1986ஆம் ஆண்டு பன்னாட்டுத் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (ISO) ஏற்றுக்கொண்ட தகவல் மேலாண்மைத் தர வரை யறை. பணித்தளம் மற்றும் பயன்பாட்டு மென்பொருள் சாராத ஆவணங்களை உருவாக்க வழிகோலுகிறது. இவற்றின் வடிவாக்கம், சுட்டுக்குறிப்பு மற்றும் தொடுப்புத் தகவல்கள், பணித்தளம் மாறினாலும் மாறாமல் காப்பாற்றப் படுகின்றன. பயனாளர்கள் தமது ஆவணங்களின் கட்டமைப்பை இலக்கணப் போக்கிலான நுட்பத்துடன் வடிவமைக்க உதவுகிறது.

. sh : எஸ்ஹெச் : ஒர் இணைய தள முகவரி செயின்ட் ஹெலினா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

SHA : எஸ்ஹெச்ஏ : பாதுகாப்பான கூறுநிலைப் படிமுறைத் தருக்கம் எனப் பொருள்படும் Secure Hash Algorithm என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். செய்தி அல்லது தரவுக் கோப்பினை உருவகிக்க 160 துண்மி (பிட்) குறிமுறை யில் கணக்கிடும் நுட்பம். செய்திச் சுருக்கம் என்றும் கூறப் படும். அனுப்புபவரே எஸ்ஹெச்ஏ-யைப் பயன்படுத்துகிறார். செய்தியைப் பெறுபவர் இலக்கமுறை ஒப்பத்தைச் சரிபார்க்க இதனைப் பயன் படுத்து கிறார்.

shade : கருமைச் சாயல்;நிழல் : கணினி வரைகலையில், தூய வண்ணத்துடன் கலக்கப்படும் கருமை நிறத்தின் அளவு. shade of grey : சாம்பல் சாயல்.

shading symbols : நிழல் குறியீடுகள் : தொகுதி வரைகலை எழுத்துகள். சில கணினி வரைகலைகளில் உள்ளமைந்த எழுத்துத் தொகுதிகளின் ஒரு பகுதி. இவை, வேறுபட்ட புள்ளிச் செறிவுகளை அளித்து மாறுபட்ட நிழற் சாயல்களின் தோற்றத்தைக் கொடுக்கிறது.

shadow : நிழல்.

shadow mask : நிழல்முகமூடி : ஒரு வண்ண CRT-இன் பார்வைக் கண்ணாடியின் பின்னால் ஒட்டிக் கொண்டிருக்கிற துளைகள் கொண்ட திரை. இந்தத் துளைகளின் வழியாக எலெக்ட்ரான் கற்றை பாஸ்ஃபோர் புள்ளிகளை நோக்கிப் பாய்ச்சப்படுகிறது.

shadow memory : நிழல் நினைவகம் : சில 80x86 செயலிக் கணினிகளில், கணினியின் இயக்கத்தைத் தொடங்கும்போது முறைமையின் ரோம் பயாஸ் நிரல்கூறுகளை, ரேம் நினைவகத்தில் பயன்படுத்தப் படாத பகுதியில் பதிவுசெய்ய, பயாஸ் நடைமுறைப்படுத்தும் ஒரு நுட்பம். இவ்வாறு நகலெடுத்து வைப்பதால் கணினியின் செயல்திறன் கூடுகிறது. பயாஸ் நிரல் கூறுகளை பயாஸில் சென்று தேடாமல், நினைவகத்திலுள்ள நிழல் நகல்களில் எடுத்துக் கொள்ளும். நிழல் ரேம், நிழல் ரோம் என்றும் கூறுவர்.

shadow printer : நிழல் அச்சுப் பொறி.

shadow printing : நிழல் அச்சடிப்பு : நிழல் அச்சு முறை : அச்சுத் தலைப்பினை அதன் முந்திய நிலையான 1/120 அங்குலத்திற்குள் அடக்கி பரும எழுத்தாக அச்சடித்தல். முதல் அச்சடிப்புக்கும் மேல் அச்சடிப்புக் குமிடையில் சிறிதளவு பிழையான பதிவு மூலம் பரும எழுத்து உண்டாகிறது. இது பன்முக அச்சடிப்பிலிருந்து வேறுபட்டது.

shadow RAM : நிழல் ரேம் : ராம் பொதுவாக ROM சிப்புகளினால் கையாளப் படுகிற செயற்பணிகளை மேற்கொள்ளப் பயன்படுத்தப்படுகிற ஒரு RAM-இன் பகுதி. ROM-ஐவிட RAM விரைவாகச் செயற்படுவதால், செய்முறைப்படுத்தும் நேரத்தை மிச்சப்படுத்துகிறது. கட்டுப் பாட்டையும் மேம்படுத்துகிறது.

Shannon, Claude E. : ஷான்னோன், கிளாட் இ : பூலியன் இயற்கணிதம், குழூஉக்குறிக் கலை,கணினிச் சுற்று வழிகள் ஆகியவற்றுக்கும்,செய்தித் தொடர்புகளுக்கும் தமது தரவு கணிதக் கோட்பாட்டின் மூலம் அருந்தொண்டு புரிந்தவர்.

shape:வடிவம்.

share:பங்கமைப்பு;பங்கு:நடுத்தர மற்றும் பேரளவு தரவு செய் முறைப்படுத்தும் பொறியமைவுகளைப் பயன்படுத்துவோரின் அமைவனம்.

shared DASD:பகிர்மான டிஏஎஸ்டி:தனியொரு தரவு மையத்தினுள் உள்ள,இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட கணினிகள் மூலம் அணுகக்கூடிய வட்டு அமைப்புமுறை.சொந்தக் கணினி இணையங்களில் பகிர்ந்து கொள்ளப்படுகிற வட்டுகள்,கோப்பு புரவலர்கள் அல்லது தரவுத்தள புரவலர்கள் எனப்படும்.

shared file:பகிர்மானக் கோப்பு;பங்கிடும் கோப்பு;பகிர்கோப்பு:இரண்டு பொறியமைவுகளினால் ஒரே சமயத்தில் பயன்படுத்தப்படும் நேரடி அணுகுச் சாதனம்.இது இரு கணினிப் பொறியமைவுகளை இணைக்கிறது.

shared folder:பகிர்வுக் கோப்புறை:ஒரு பிணையத்தில் இணைக் கப்பட்ட மேக்சிஸ்டம் 6.0 அல்லது பின்வந்த இயக்க முறைமையில் செயல்படும் ஒரு மெக்கின்டோஷ் கணினியில்,ஒரு பயனாளர் பிணை யத்தின் பிற பயனாளர்களுக்கு அணுக அனுமதி வழங்கக்கூடிய ஒரு கோப்புறை.ஒரு பீசியில் வழங்கப்படும் நெட்வொர்க் கோப்பகம்(Network Directory)என்பதோடு ஒத்தது.

shared logic:பகிர்வுத் தருக்கம்:ஒரு செயல்பாட்டை நடைமுறைப் படுத்த ஒன்றுக்கு மேற்பட்ட மின்சுற்றுகள் அல்லது மென்பொருள் நிரல்கூறுகளைப் பயன்படுத்துதல்.

shared memory:பகிர்வு நினைவகம்:1.ஒரு பல்பணிச் சூழலில் ஒன்றுக்கு மேற்பட்ட நிரல்கள் அணுகுகின்ற நினைவகம்.2.இணைநிலைச் செயலிகள் கொண்ட கணினி அமைப்புகளில் தகவல் பரிமாறிக் கொள்ளப் பயன் படுத்தப்படும் நினைவகப்பகுதி.

shared printer:பகிர்வு அச்சுப்பொறி:ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகள் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய அச்சுப்பொறி.பிணையத்தில் இணைக்கப் படும் அச்சுப்பொறியும் இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளால் பயன்படுத்திக் கொள்ளப்படும். shared resource : பகிர்வு வளம் : 1. ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்கள் அல்லது நிரல்களால் பயன்படுத்திக் கொள்ளப்படும் ஒரு சாதனம் அல்லது தரவு அல்லது நிரல். 2. விண்டோஸ் என்டியில் பிணையப் பயனாளர்கள் அணுகுவதற்குரிய கோப்பகங்கள், கோப்புகள், அச்சுப் பொறிகள் போன்ற வளங்கள்.

shareware : பகிர்வு மென் பொருள் : "வாங்கும்முன் பயன்படுத்திப் பார்" என்ற அடிப்படையில் வினியோகிக்கப்படுகின்ற பதிப்புரிமை பெற்ற மென்பொருள். பரிசோதனை காலத்துக்கு அப்பாலும் அம்மென்பொருளைப் பயன்படுத்தும் பயனாளர்கள், அதனை உருவாக்கியவருக்கு ஒரு சிறிய தொகையை அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

shareware and freeware : பகிர்வு மென்பொருள்-இலவச மென்பொருள்.

shareware centre : பகிர்வு மென்பொருள் மையம்;பங்கீட்டு மென்பொருள் மையம்.

sharing resources : வளங்களைப் பகிர்ந்து கொள்ளுதல்.

sharing, time : காலப் பகிர்வு.

sharpness : கூர்மை : ஒரு காட்சிச் சாதனம் எண்மான வரைவி, அச்சுப் பொறி, சுருள்பதிப்பி போன்றவற்றில் உண்டாகும் உருக்காட்சிகளின் தெளிவும் தரமும்.

sheet : தாள்.

sheet, coding : குறிமுறைத் தாள்.

sheet-fed scanner : தாள் செருகு வருடுபொறி : இவ்வகை வருடு பொறிகளில் ஒரு நேரத்தில் ஒற்றைத்தாள் உள்ளிழுக்கப்பட்டு, நிலைத் திருக்கும் வருடு பொறியமைவின்மீது நகரும்போது பட/உரைத் தரவு பதியப்பட்டுவிடும். பல பக்கங்கள் உள்ள ஆவணங்களை தானாகவே தொடர்ச்சியாக வருடியெடுக்கும் வசதி இவ்வகை வருடு பொறிகளில் உண்டு.

sheet feeder : தாள் ஊட்டி;தாள் தள்ளி : ஒர் அச்சுப்பொறியுடன் இணைக்கப்படும் ஒரு சாதனம். இது, காகிதத் தாள்களை அல்லது உறைகளை ஒவ்வொன்றாக தானாகவே உட்செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக் கும். இது பெரும்பாலும் அச்சுப் பொறியின் அழுத்தத் தகட்டுப் பாளத்தில் அமைந்திருக்கும். இதனை அச்சுப்பொறி எந்திர முறையிலோ மின்னியல் முறையிலோ இயக்குகிறது.

shelfware : மாடப் பொருள்கள் : ஒரு வணிகரின் காட்சி மாடத்தில் உள்ள அல்லது வாடிக்கையாளர் பயன்படுத்தாத பொருள்கள்.

shell : உறைபொதி : ஒரு செயல்முறையின் புறஉறை பொதி. இது பயன்படுத்துவோர்க்கு இடைமுகப்பினை அல்லது கணினிக்கு நிரல் பிறப் பிப்பதற்கான வழிமுறையினை அளிக்கிறது. உறைபொதிகள் என்பவை யூனிக்ஸ், டோஸ் போன்ற நிரலினால் செயற்படும் பொறியமைவுகளுக்காக உருவாக்கப்பட்ட கூடுதல் செயல்முறைகள் ஆகும். இது பொறியமைவினை எளிதாக இயக்குவதற்கான நிரல் தொகுதியால் இயங்கும் இடைமுகப் பினை வழங்குகிறது. DOS 4. 0, 5. 0 ஆகியவை சொந்த உறை பொதிகளுடன் வருகின்றன.

shell account : செயல்தளக் கணக்கு : கட்டளைவரி இடைமுகம் மூலமாக சேவையாளரின் கணினியில் இயக்கமுறைமைக் கட்டளைகளை இயக்கப் பயனாளருக்கு அனுமதி அளிக்கும் ஒரு கணினிச் சேவை. பெரும் பாலும் ஏதேனும் ஒரு யூனிக்ஸ் செயல்தளமாக இருக்கும். வரைகலைப் பயனாளர் இடைமுகம் (GUI) வழியாக இணையத்தில் உலாவர இதில் வசதியில்லை. இணைய வசதிகள் அனைத்துமே எழுத்து/உரை அடிப்படை யிலான கருவிகள் மூலமே பெறமுடியும். இணையத்தில் உலாவ லின்ஸ்க் (Lynx) என்னும் உலாவியும், பைன் (pine) என்னும் மின்னஞ்சல் மென் பொருளும் பெரும்பாலும் பயன்படுத்தப் படுகின்றன.

shell out : உறைபொதி வெளிப்பாடு : ஒரு பயன்பாட்டினை தற் காலிகமாக வெளிப்படுத்தி செயல்முறைப் பொறியமைவினுள் மீண்டும் செலுத்து வதற்கு ஒரு செயற்பணியைச் செய்து முடித்துவிட்டு மீண்டும் பயன்பாட்டுக்குள் செலுத்தி விடுதல் வேண்டும்.

shell sort : ஷெல் பிரிப்பி;வரிசைப்படுத்தும் முறை : எண்களை அல்லது ஆல்ஃபா எண்மானத் தரவுகளைப் பிரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் முறை. இந்த முறையைக் கண்டுபிடித்தவர் டோனால்ட் ஷெல் என்பவர். அவர் பெயரால் இந்தப் பெயர் பெற்றது. இது குமிழ் பிரிப்பைவிடத் திறமையானது.

shielding : காப்பிடல்;கவசமிடல் : மின்னியல் அல்லது காந்தவியல் ஒசைகளுக்கு எதிராகக் காப்பிடுதல்.

shift : நகர்த்தி;நகர்த்தல் : ஒர் அலகிலுள்ள எழுத்துகளை அல்லது தகவல்களைப் பத்தி வாரியாக இடமாக அல்லது வலமாக நகர்த்துவதற்கான கருவி.

shift, arithmetical : கணக்கியல் பெயர்வு.

shift-click : மாற்றி இயக்கு;நகர்த்தி இயக்கு : விசைப் பல கையில் மாற்று விரற்கட்டையை அழுத்துகையில், நுண்பொறிப் பொத்தானை'கிளிக்' செய்தல் (சொடுக்குதல்).

shift key : மாற்று விசை மாற்றுச் சாவி : கணினி விசைப்பலகை மேலுள்ள விரற்கட்டை விசை. இதை அழுத்தும்போது கீழ் வரிசை எழுத்துகளுக்குப்பதிலாக தலையெழுத்தை அழுத்துவதுடன் சில சிறப்பு எழுத்துகளையும் அச்சிடும். பல விசைப் பலகைகளில் மாற்றுப் பூட்டாகப் பயன்படுகிறது. கீழ் நிலை எழுத்துக்கு வரவேண்டுமென்றால் மீண்டும் அழுத்த வேண்டும்.

shift, logical : தருக்கப் பெயர்வு.

shift register : மாற்றுப் பணிப்பதிவகம் : இருமக் குறியீடுகளை (துண்மிகள்) சேமித்து வைக்கிற ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட தொடர்களைக் கொண்ட ஒரு பதிவகம். இது துண்மிகளை இடமும் வலமும் மாற்றுவதற்கு உதவுகிறது. இரும மற்றும் தசம எண்மான முறைகள் இடநிலைக் குறியீட்டினை (இடதுகோடிநிலை மிக உயர்ந்த மதிப்புடையது) கொண்டிருக்கின்றன. எடுத்துக் காட்டாக 777123777 என்பதில் இடப்பக்கம் உள்ள ஏழுகள் வலப்பக்க ஏழுகளைவிட அதிக மதிப்புடையவை. இரும எண் குறியீட்டில் வலப்பக்கம் நகர்வது இரண்டால் வகுப்பதற்கு இணையானது. பதின்ம எண்ணில் வலப்பக்கம் நகர்வது பத்தால் வகுப்பதாகும். இருமக் கணிதத்திற்கு மாற்றுப் பணிப்பதிவகத்தைச் செய்முறைப் படுத்துவோர் பயன்படுத்து கின்றனர்.

Shockley, William Bradford : ஷாக்கெலி வில்லியம் பிராட்ஃபோர்ட் : பெல் ஆய்வுக்கூட விஞ்ஞானி. இவர் வால்ட்டர் பிராட்டன், ஜான் பார்டீன் ஆகியோருடன் சேர்ந்து காந்தக் குமிழ் நினைவகத்தைக் கண்டுபிடிக்க உதவியாக இருந்த மின்மப்பெருக்கியைக் (டிரான் சிஸ்டர்) கண்டுபிடித்தார்.

short : சிறு முழு எண், சி, சி++, சி#, ஜாவா மொழிகளில் கையாளப்படும் தரவினம்.

short card : குருகல் அட்டை : சொந்தக் கணினியில் செருகக் கூடிய அச்சிட்ட சுற்று வழிப்
குறுகல் அட்டை

குறுகல் அட்டை

பலகை. இது முழு வடிவளவு பலகையைவிட பாதியளவு நீளமுடைய தாகும்.

shortcut : குறுவழி : விண்டோஸ் 95/98இல் பெரும்பாலும் முகப்புப் பக்கத்தில் இருக்கும் ஒரு சின்னம். இதன் மீது பயனாளர் இரட்டைச் சொடுக்கிட்டு ஒரு நிரலையோ, ஒர் ஆவணத்தையோ, ஒரு தரவு கோப்பையோ, ஒரு வலைப் பக்கத்தையோ உடனடியாக அணுகமுடியும். பிற கோப்புறைகளிலும் இத்தகைய குறுவழிகளை உருவாக்கிக்கொள்ள முடியும்.

shortcut key : குறுவழி விசை.

shorter wave length : குறைந்த அலை நீளம்.

shortest operating time : குறுகிய செயற்பாட்டு நேரம்;மிகக் குறைந்த இயக்க நேரம்;சிறும இயக்க நேரம் : கணினியில் மிகக்குறுகிய காலத்தை எடுத்துக்கொள்ளும் அட்டவணைப்படுத்திய பணிகளுக்கான திட்டமிட்ட நடைமுறை.

short-haul : குறைதொலைவு : 20 மைல்களுக்கும் குறைவான தொலைவுக்கு ஒரு தகவல் தொடர்புத் தடத்தில், ஒரு தகவல் தொடர்புச் சாதனம் சமிக்கைகளை அனுப்புதல்.

short-haul modem : குறுகிய இழுவை மோடெம் : செய்தித் தொடர்களில், ஒரு மைல் தூரம் வரை சைகைகளை அனுப்புகிற சாதனம்.

shout : கூவு;சத்தமிடு;அழுத்தமாய்ச் சொல்;உரத்துச்சொல் : மின்னஞ்சல் அல்லது செய்திக் குழு கட்டுரைகளில் அழுத்தமாய்ச் சொல்ல விரும்பும் கருத்துகளை அனைத்தும் பெரிய எழுத்தில் தெரிவிப்பது. மிகையான சத்தமிடல் வலைப் பண்பாட்டுக்கு எதிரானதாகக் கருதப்படுகிறது. இரண்டு நட்சத்திரக் குறிகளுக்கிடையில் அல்லது இரண்டு அடிக்கீறு (underscore) களுக்கிடையில் குறிப்பிடுவதன் மூலம் கருத்துகளை உரத்துச் சொல்லலாம்.

shovelware : வாரியிடு பொருள்கள்;அள்ளித்தருபொருள்கள் : இணையத் தில் இலவசமாக அல்லது மிகக் குறைந்த விலைக்குக் கிடைக்கின்ற மென்பொருள்கள், பகிர்வு மென்பொருள்களை ஒரு குறுவட்டில் (சிடிரோம் வட்டு) பதிவு செய்து விற்பது. இவற்றில் பெரும்பாலும் வரைகலைப் படிமங்கள், உரைப்பகுதிகள், சிறுசிறு பயன்கூறுகள் அல்லது பிற தரவுகள் இடம் பெறுவதுண்டு.

show auditing toolbar : தணிக்கைக் கருவிப்பட்டை காண்பி.

show clock : கடிகாரம் காண்பி.

show log : பதிகை காண்பி.

show small icons in start menu : தொடக்கப்பட்டியில் சிறுசின்னங் களைக் காண்பி.

show sounds : ஒலியைக் காட்டு : விண்டோஸ் 95/98 இயக்க முறைமைகளில் காது கேளாதோருக்கு அல்லது இரைச்சலான தொழில் கூடங்களில் பணிபுரிபவருக்கென அமைந்துள்ள வசதி. பயனாளரின் கவனத்தைக்கவர சில பயன்பாட்டு நிரல்களில் ஒலியெழுப்புமாறு அமைத்திருப்பர். அவ்வாறு ஒலி எழுப்பப் படும்போதெல்லாம் கண்ணில் படும்படியாக ஒரு செய்திக் குறிப்பைத் திரையில் காட்சிப் படுத்துமாறு கட்டளையிட வசதியுள்ளது.

SHRDLU : எஸ்எச்ஆர்டிஎல்யூ;ஸ்ரட்லு : முதலாவது இயற்கையான மொழிச் செயல்முறை. இது, சொற்றொடர்பு, சொற்பொருள் பகுப்பாய்வினை உலகியல் அறிவுடன் ஒருங்கிணைக்கிறது.

shrink-wrapped : முடித்துக்கட்டியது : வணிக முறையில் வினியோகம் செய்யத் தயாராக பெட்டியில் போட்டு முத்திரை யிடப்பட்டு விற்பனைக்கு வினியோகிக்கத் தயாராய் இருக்கும் பொருள். பெரும்பாலும், பீட்டா பதிப்பினை இவ்வாறு அழைப்பதில்லை. முடிக்கப்பட்ட இறுதிப் பதிப்பிற்கே இவ்வடைமொழி பயன் படுத்தப்படுகிறது.

shrink wrapped software : குறுக்கப் பொதிவு மென்பொருள் : சேமிப்பில் வாங்கிய மென்பொருள். பரவலாக ஆதரவு பெற்றுள்ள ஒரு தர அளவு மேடை.

SHTML : எஸ்ஹெச்டீஎம்எல் : வழங்கன் கூறாக்கும் ஹெச்டீஎம்எல் என்று பொருள்படும் Server-parted HTML என்பதன் சுருக்கம். வழங்கன் கணினியால் நிறைவேற்றப்படுகின்ற கட்டளைகள் உட்பொதிந்த மீவுரைக் குறியிடுமொழி (Hyper Text Markup Language) யில் அமைந்த உரை. எஸ்ஹெச்டீஎம்எல் ஆவணங்களை வழங்கன் முழுமையாகப் படித்துக் கூறாக்கி மாறுதல் செய்து உலாவிக்கு அனுப்பிவைக்கும்.

S-HTTP : எஸ்-ஹெச்டீடீபீ : பாதுகாப்பான மீவுரைப் பரிமாற்ற நெறிமுறை என்று பொருள்படும் Secure Hypertext Transfer Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பல்வேறு மறையாக்கம் மற்றும் ஒப்புச்சான்று முறைகளை ஏற்பதாகும். அனைத்துப் பரிமாற்றங்களையும் முனைக்குமுனை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ள ஹெச்டீடீபீ யின் நீட்டிப்பு நெறி முறையாகும்.

shutdown : நிறுத்து;முடித்து வை : தரவு இழப்பு எதுவும் நேராவகையில் ஒரு நிரலையோ, இயக்க முறைமையையோ முடிவுக்குக் கொண்டு வருதல்.

shut off : நிறுத்துக.

. si : . எஸ்ஐ : ஒர் இணைய தள முகவரி ஸ்லோவானிய நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

. SI : எஸ்ஐ : systems International என்பதன் குறும்பெயர். உலகளவில் பன்னாட்டு மெட்ரிக் முறையின் செந்தரம். sibling : உடன்பிறப்பு : ஒரு மரவுரு தரவுக் கட்டமைப்பில் ஒரே மூதாதையரிடமிருந்து கிளைத்த கணுக்கள்.

B, C ஆகியவை உடன் பிறப்புகள் D, E, Fஆகியவை உடன்பிறப்புகள்

sideband : பக்கக்கற்றை ; ஓரக்கற்றை : பண்பேற்றப்பட்ட சுமப்பி அலைக்கற்றையின் மேற்பகுதி அல்லது அடிப்பகுதி. இருபகுதிகளும் வெவ்வேறு தகவலைச் சுமந்து செல்லுமாறு செய்யமுடியும். இதன் காரண மாய் ஒற்றைத் தடத்தில் இரண்டு மடங்கு தகவலைச் சுமந்து செல்ல முடியும்.

sidebar : பக்கப் பட்டை;ஒரப் பட்டை : ஒர் ஆவணத்தில் முதன்மையான உரைப்பகுதிக்கு பக்கவாட்டில் இடம்பெறும் உரைத் தொகுதி. பெரும்பாலும் ஒரு வரைகலைப் படம் அல்லது கரை மூலம் பிரிக்கப் பட்டிருக்கும்.

sidebard : பக்கக் கவசம் : ஒர் ஆவணத்தின் முக்கிய வாசகப்பகுதியின் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு வாசகத் தொகுதி அல்லது ஒரு வரை கலைப் பிம்பம்.

sided, double : இருபக்க.

sided, single : ஒருபக்க.

side effect : பக்க விளைவு : ஒரு நடைமுறையில் அடிப்படை விளைவுடன்கூட ஏற்படும் பக்கவிளைவு.

side head : பக்கத் தலைப்பு;ஒரத்தலைப்பு : ஒர் அச்சு ஆவணத்தின் இடப்புற ஒரப் பகுதியில் (margin) உரையின் உடல்பகுதியின் மேற்பகுதியோடு கிடைமட்ட சீரமைவாக இருக்கும் தலைப்பு. உரைப்பகுதிக்கு செங்குத்துச் சீரமைவாக இருப்பது இயல்பான தலைப்பாகும்.

sidekick : சைடுகிக் : போர்லண்ட் தயாரித்துள்ள சொந்தக் கணினிக்கான மேசைப் பயன்பாட்டுச் செயல்முறை. 1984 இல் புகுத்தப்பட்டது. இது, சொந்தக் கணினிக்கான முதலாவது"பாப்பப்" (TSR) செயல்முறையாகும். இதில் ஒரு கணிப்பி, வேர்ல்ட்ஸ்டார் இணக்க முடைய குறிப்பேடு, நியமன நாட்குறிப்பு, தொலைபேசிச் சுழற்சி, ASCII அட்டவணை ஆகியவை அடங்கியுள்ளன. Sieve of Eratosthenes : ஏரட்டோஸ்தீன்லின் சல்லடை : பகா எண்களைக் கண்டறிவதற்கான ஒரு தருக்கமுறை. ஒரு கணினியின் அல்லது ஒரு மொழியில் படிமுறைத் தருக்கத்தில் எழுதப்பட்ட ஒரு நிரலின் வேகத்தைக் கண்டறியும் அளவு கோலாக இது பயன்படுத்தப் படுகிறது.

sift : சலி;மாற்று : பெருமளவுத் தரவுகளிலிருந்து வேண்டிய குறிப்பிட்ட இனத்தை வரவழைத்தல். இது தேர்ந்தெடுத்தல் என்பதிலிருந்து வேறுபட்டது.

sifting : சலித்தல்;உள்முகப் பிரிப்பு : மற்றப் பதிவேடுகளை உட் செலுத்துவதற்கு அனுமதிப்பதற்காகப் பதிவேடுகளை உள்முகமாகப் பிரிப்பதற்கான முறை.

SiG : எஸ்ஐஜி : தனி நலக் குழுமம் எனப் பொருள்படும்"Special Interest Group"என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம்.

. sig : . சிக், . எஸ்ஐஜி : மின்னஞ்சல் அல்லது இணையச் செய்திக் குழுக்களில் பயன்படுத்தப்படும் ஒப்பக் கோப்புகளின் வகைப்பெயர் (Extension). இந்தக் கோப்பின் உள்ளடக்கம், மின்னஞ்சல் மடல் அல்லது செய்திக்குழுக் கட்டுரையின் இறுதியில் அவற்றுக்குரிய கிளையன் மென்பொருள்களால் தாமாகவே சேர்க்கப்பட்டுவிடும்.

sigel density : தனிச் செறிவு.

SIGGRAPH : சிக்வரைகலை;சிக்கிராஃப் : கணினி வரைகலைக்கான சிறப்பு ஆர்வலர் குழு எனப்பொருள்படும் Special Interest Group on Computer Graphics என்ற தொடரின் சுருக்கம். கணிப்பணி எந்திரச் சங்கத்தின் (Association for Computing) ஓர் அங்கம்.

sign : குறி அடையாளம் : ஒர் எண் நேர் எண்ணா அல்லது மறிநிலை எண்ணா என்பதைக் குறிக்கும் கணிதக் குறியீடு.

signal : சைகை சமிக்கை : செய்தித் தொடர்புக் கோட்பாட்டில், செய்தித் தொடர்புப் பொறியமைவில் ஒரு பன்னாட்டு இடையீடு. இது ஒசை என்பதிலிருந்து வேறுபட்டது.

signal converter : சைகை மாற்றி : ஒரு சைகையின் மின்னியல் அல்லது ஒளியியல் எழுத்துகளை மாற்றுகிற சாதனம்.

signalling inlout of band : உள்/வெளிக்கற்றைச் சைகை : செய்தித் தொடர்புகளில் உள்பட்டை என்பது, ஒரே அலை வீச்சினுள் தரவு சைகையைப் போன்றே கட்டுப்பாட்டுச் சைகைகளை அனுப்புவதைக் குறிக்கிறது. "வெளிக்கற்றை"என்பதை அலைவீச்சுக்கு வெளியே கட்டுப்பாட்டுச் சைகைகளை அனுப்புவதைக் குறிக்கிறது.

signaling rate : சைகை விகிதம்;சமிக்கையிடும் விகிதம் : ஒரு செய்தித்தொடர்பு இணைப்பில் சைகைகள் அனுப்பப்படும் விகிதம்.

signal processing : காலம் சார்ந்த தரவு அலசல்.

signal-to-noise ratio : சைகை ஒசைவிகிதம்;சமிக்கை இரைச்சல் விகிதம் : தரவுத் தொடர்புகளில் தேவையான சைகைக்கும் தேவையற்ற ஒசைக்கும் இடையிலான விகிதம்.

signature : ஒப்பம்;கையொப்பம்;குறியீட்டு எண் : அடையாளங் காண்பதற்காகவும், படிப் பாதுகாப்புக்காகவும் வன்பொருளில் அல்லது மென் பொருளில் அமைக்கப்பட்டுள்ள தனி எண்.

signature block : ஒப்பத் தொகுதி : ஒரு மின்னஞ்சல் செய்திக்கட்டுரை அனுப்பி வைக்கப்படுவதற்கு முன்பாகக் கடிதத்தின் இறுதியில், அஞ்சல் கிளையன் மென்பொருளினால் தானாகவே சேர்க்கப்படும்உரைப்பகுதி. ஒப்பத்தொகுதியில் பெரும்பாலும் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் அச்செய்தியை/கட்டுரையை ஆக்கியோரை அடையாளங்காட்டும் குறிப்புகள் அடங்கியிருக்கும்.

signature capture : கையெழுத்துக் கவர்வு.

sign bit : அடையாளத் துண்மி;அடையாள இருநிலைத் துண்மி.

sign digit : சைகை எண்;அடையாள எண்;குறி எண்;குறி இலக்கம் : ஒரு சொல்லின் குறி நிலையிலுள்ள இலக்கம்.

signed : அடையாளமுள்ள.

sign extension : குரி விரிவாக்கம்;அடையாள விரிவாக்கம் : ஒரு பதிவேட்டின் உயர்வரிசை நிலையிலுள்ள குறித் துண்மியின் இரட்டைப் படிநிலை. இது பொதுவாக ஒன்றின் குறைநிரப்பு அல்லது இரண்டின் குறைநிரப்பு இரும மதிப்புகளினால் நடைபெறுகிறது.

sign flag : குறிக்கொடி அடையாளக் கொடி : ஒரு செயற்பாட்டின் மிக முக்கியமான துண்மி 1 என்னும் மதிப்பளவினைக் கொண்டிருக்குமானால், 1 இன் நிலைக்குச் செல்லும் கரணம். significance : முகமையான.

significant character, least : குறை மதிப்பு எழுத்து.

significant digit : முக்கிய இலக்கம்;மதிப்புறு எண்;முதன்மை எண் : ஒர் எண்ணின் துல்லியத்துக்கு உதவிபுரியும் ஒர் இலக்கம். முக்கிய இலக்கங் களின் எண்ணிக்கை மிக அதிக மதிப்பளவைக் கொடுக்கும் இலக்கத் திலிருந்து கணக்கிடப்படுகிறது. இது மிக அதிக முக்கிய இலக்கம் எனப்படும். மிகக் குறைந்த மதிப்பளவைக் கொடுக்கும் மதிப்பளவு மிகக் குறைந்த முக்கிய இலக்கம் எனப்படும்.

significant digits : முக்கிய இலக்கங்கள் : ஒர் எண்ணுக்கு அதிக மதிப்பினைக் கொடுக்கக் கூடிய, அந்த எண்ணிலுள்ள இலக்கங்கள். எடுத்துக் காட்டாக, 00001234 என்ற எண்ணில் 1234 என்பவை முக்கிய எண்கள்.

sign off : கலைப்பு;அடையாளம் நிறுத்து;இணைப்புத் துண்டிப்பு : 1. ஒரு நேரப் பகிர்மான கணினி இணையத்திலிருந்து தொடர்பறுக்கும் செய்முறை. 2. பயன்பாட்டாளர்/கணினி இடைமுகப்பு எதனையும் கலைத்தல்.

sign on : இணைத்தல்;அடையாளம் கொடு;இணைப்புத் தொடங்குதல் : 1. ஒரு நேரப்பகிர்மானக் கணினி இணையத்தில் இணைப்புக் கொடுக்கும் செய்முறை. 2. பயன்பாட்டாளர்/கணினி இடைமுகப்பிணை ஏற்படுத்துதல்.

sign position : குறியீட்டு நிலை;அடையாள நிலை;குறியிடம் : ஒர் எண்ணின் குறியீடு அமைந்துள்ள நிலை.

silabi structure : அசை பிரித்தல்.

silica gel : சிலிக்கா கூழ் : சிலிக்கன் டையாக்சைடின் மிகுந்த உறிஞ்சும் சக்தியுள்ள வடிவம். இது பெரும்பாலும் துளையுள்ள பைகளில் பொதியப் பட்டு, கப்பலில் செல்லும்போது, சேமித்து வைக்கும்போது ஈரத்தை உறிஞ் சுவதற்கான சாதனத்துடன் சிப்பம் செய்யப்பட்டிருக்கும்.

silicon : சிலிக்கன் : மின்மப் பெருக்கிகள், ஒருங்கிணைந்த மின்சுற்று வழிகள், சூரிய மின்கலங்கள் போன்றவற்றைத் தயாரிப்பதில் பயன்படுத்தப் படும் அலோக வேதியியல் தனிமம். மணலிலும், களிமண்ணிலும் காணப்படும் வேதியியல் தனிமம். இதன் அணு எண் 14.

silicon chip : சிலிக்கன் சிப்பு : மேற்பரப்பில் பல்லாயிரம் மின்னணு அமைப்பிகளும் மின்சுற்று வழித் தோரணிகளும் செதுக்கப் பட்டுள்ள ஒரு சிலிக்கன் வில்லையின் ஒரு நுண்ணிய பகுதி.

silicon compiler : சிலிக்கன் தொகுப்பி;சிலிக்கன் கட்டுப்படுத்தும் சரியாக்கி : ஒரு சிப்புவின் மின்னணு வடிவமைப்பை உறுப்புகளின் உண்மையான கட்டமைப்பாக மாற்றுகிற மென்பொருள்.

silicon dioxide (SiO2 : சிலிக்கன் டையாக்சைடு (SiO2) : பாறை, படிகக்கல், மணல், மணிக்கல் போன்றவற்றில் காணப்படும் கடினமான, பளபளப்பான கனிமம். (MOS சிப்பு உருவாக்கத்தில், இது மேல்படுகையின் உலோக வழிகளுக்கும், கீழேயுள்ள சிலிக்கன் கூறு களுக்கு மிடையில் மின்காப்பினை ஏற்படுத்தப் பயன் படுத்தப்படுகிறது.

silicon disk : சிலிக்கன் வட்டு : நினைவகத்தில் நிரந்தரமாக மாற்றுருக் கொள்ளும் வட்டு இயக்கி. இது எடைக் குறைப்புக்காக"லேப்டாப்"களில் பயன் படுத்தப்படுகிறது. இதன் உள்ளடக்கங்களைப் பேணி வருவதற்கு ஒரு மின் கலத்திலிருந்து இதற்கு இடைவிடாது மின் விசையூட்டப்பட வேண்டும்.

silicon foundry : சிலிக்கன் வார்ப்படச்சாலை : வடிவமைப்பினை மட்டும் கொண்டு, உற்பத்தி செய்யும் வசதிகள் இல்லாத மற்ற நிறுமங்களுக்காகச் சிப்புகள் தயாரிக்கும் அமைவனம்.

silicon-on-sapphire : மாணிக்கத்தில் சிலிக்கான் : குறைகடத்திகளை உருவாக்குதலில் ஒரு வகை. செயற்கை மாணிக்கக் கல்லினால் கடத்தல் தடுப்பு செய்யப்பட்ட ஒற்றைச் சிலிக்கான் அடுக்கினால் ஆன குறைகடத்திச் சாதனங்கள்.

silicon valley : சிலிக்கான் வேலி;சிலிக்கான் பள்ளத்தாக்கு : கலிஃ போர்னியாவில் சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாவுக்குத் தெற்கேயுள்ள நிலப்பகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது. அதன் உண்மையான பெயர் சாந்தா கிளாரா பள்ளத்தாக்கு என்பதாகும். பாலோ ஆல்ட்டோ விலிருந்து சான்ஜோஸ் வரையுள்ள பகுதி இது. மிகப்பெரும் மின்னணு மற்றும் கணினி ஆய்வு, உருவாக்கம் மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் நிறைந்திருப்பதால் இப்பெயர் பெற்றது.

silicon wafer : சிலிக்கன் வில்லை;சிலிக்கன் ஒடு;சிலிக் கன் சீவல் : ஒருங்கிணைந்த சிப்புகள் உருவாக்கப் பயன் படும் சிலிக்கன் சிப்பு. உருவாக்கியபின், இந்த வில்லை பல தனித்தனி சிப்புகளாக வெட்டப்பட்டு, கோட்டுத் தொகுதிகளில் இரட்டையாக ஏற்றப்படு கின்றன.

SIMD : எஸ்ஐஎம்டி : ஒற்றை நிரல் பல தரவு என்று பொருள்படும் Single-Instruction, Multi-Data என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணைநிலைச் செயலிக் கணினிக் கட்டுமானத்தில் ஒருவகை. ஒரு நிரல் செயலி நிரலை கொணர்ந்து மற்ற பல செயலிகளுக்கு நிரல்களை அனுப்பிவைக்கும்.

SIMM : சிம் : ஒற்றை உள்ளமை நினைவகக்கூறு என்று பொருள்படும் Single Inline Memory Module என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். நினைவகச் சிப்புகளை மேற்பரப்பில் செருகக்கூடியவாறு வடிவமைக்கப்பட்ட ஒரு சிறிய மின்சுற்றுப் பலகை.

Simple Mail Transfer Protocol : எளிய அஞ்சல் பரிமாற்ற நெறி முறை : ஒரு பிணையத்திலுள்ள ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்கு செய்திகளை அனுப்புவதற்கான டீசிபீ/ஐபீ நெறிமுறை. இணையத்தில் மின்னஞ்சல்களை திசைவிக்க இந்த நெறிமுறை பயன்படுகிறது. சுருக்கமாக எஸ்எம்டீபீ (SMTP) என்று அழைப்பர்.

simple querry wiz : எளிய வினவல் வழிகாட்டி.

simple type : சாதாவகை;எளிய இனம்.

simplex : ஒரு வழி;ஒற்றையான, எளிய : தரவுகளை ஒரே திரையில் மட்டுமே அனுப்பக்கூடிய ஒரு செய்தித்தொடர்பு இணைப்பு. இது முழு டூப்ளெக்ஸ், அரை டூப்ளெக்ஸ் என்பவற்றிலிருந்து வேறுபட்டது.

simplex transmission : எளிய அனுப்பு வழி : செய்தித் தொடர்பினை முன்னரே நிருணயிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட திசையில் மட்டுமே அனுமதிக்கிற, ஒரு வழியின் ஊடே தகவல்கள் நகர்ந்து செல்லுதல்.

SIMSCRIPT : சிம்ஸ்கிரிப்ட் : துண்டுதல் பயன்பாடுகளுக்காகக் குறிப்பாக வடிவமைக்கப் பட்ட உயர்நிலை செயல் முறைப்படுத்தும் மொழி.

simulation : தூண்டல்;போலச்செய்தல்;பாவனை;நடிப்பு;மற்றொன்றைப்போல் : மற்றொரு பொறியமைவின் செயல் முறையின் சில குறிப்பிட்ட அம்சங்களை உருவாக்கிக் காட்டுதல். இயற்பியல் நிகழ்வுகளை, ஒரு கணினியில் நிறைவேற்றப்படும் செயற்பாடுகளின் மூலமாக இன்னொரு கணினி மூலம் செயற்படுத்துதல்.

simulator : தூண்டு கருவி;போலிச் செய்கருவி : ஒர் இயற்பியல் அல்லது அருவப் பொறியமைவின் செயல்முறையின் சில குறிப்பிட்ட அம்சங்களை உருவாக்கிக் காட்டுகிற சாதனம், கணினிச் செயல்முறை அல்லது பொறி யமைவு.

simultaneous : உடனிகழ்;ஒருங்கியல்;ஒரே நேர.

simulataneous input/output : உடனிகழ் உட்பாடு/வெளிப்பாடு;ஒருங்கியல் உட்பாடு/வெளிப்பாடு;ஒரே நேர உள்ளீடு/வெளியீடு : சில தகவல்களை உட்பாடாகச் செலுத்தவும், வேறு சில தகவல்களை வெளிப்பாடாக அமையவும் அனுமதிக்கிற சில கணினிப்பொறி யமைவுகளிலுள்ள செய்முறை.

simultaneous processing : ஒருங்கியல் செய்முறைப்படுத்துதல்;ஒரே நேரச் செயலாக்கம்;உடனிகழ் செயலாக்கம் : ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட பணிகளைச் செய்தல். இது உடனிகழ்வுச் செய்முறைப் படுத்துதலிலிருந்து வேறுபட்டது.

sine wave : சைன் அலை : ஒற்றை அலைவரிசையில் அதிரும் பொருள்களினால் உருவாக்கப்படும் ஒரே சீரான, குறிப்பிட்ட நேரச் சீர்மையுடன் கூடிய அலை.

சைன் அலை

சைன் அலை

single : தனி;ஒற்றை.

single address : தனிமுகவரி;ஒற்றை முகவரி.

single bit error : ஒற்றை பிட்பிழை;ஒற்றைத் துண்மி வழு.

single-board : ஒற்றைப் பலகை : கணினியில் இருக்கும் ஒருவகை மின்சுற்றுப் பலகை. ஒரே ஒரு பலகை மட்டுமே இருக்கும். பொதுவாக, கூடுதலாக வேறு பலகைகளைச் செருவதற்கு இடம் இருக்காது. single board computer : ஒற்றைப் பலகைக் கணினி;ஒரே அட்டைக் கணினி : ஒரே பலகையில் CPU, ROM, RAM, புறநிலை இடைமுகப்புகள் உட்பட அனைத்து மின்சுற்று நெறியையும் கொண்டுள்ள கணினி.

single click : ஒற்றைச் சொடுக்கு.

single density : ஒற்றைச் செறிவு;தனி அடர்த்தி;ஒற்றை அடர்த்தி : ஒரு நெகிழ்வட்டில் தரவுகளைச் சேமித்து வைக்கும் முறை.

single density disk : ஒற்றை அடர்த்தி வட்டு : முதல் தலைமுறை நெகிழ்வட்டு.

single numeric value : ஒற்றை எண்ணியல் மதிப்பளவு.

single path : ஒற்றைவழி : ஒரு போகு இடை முகப்புக்கு மாறுபட்டது.

single precision : ஒற்றைத்துல்லியம்;ஒற்றைச் சரிநுட்பம்;ஒரு மடங்கு துல்லியம் : ஒர் எண்ணைக் குறிப்பதற்கு ஒரு கணினிச் சொல்லைப் பயன் படுத்துதல். இது, இரட்டைத் துல்லியம், மும்மைத் துல்லியம் என்பவற்றி லிருந்து வேறுபட்டது.

single precision number : ஒற்றைத் துல்லிய எண் நினைவகத்தின் 4 எண்ணியல்களுக்கு மட்டுமே பொதுவாக ஒதுக்கப்படும் ஒரு பதின்மப் புள்ளி எண்.

single precision variable : ஒற்றைத் துல்லிய மாறிலி.

single setup : ஒற்றை அமைவு.

single-sided : ஒற்றைப் பக்க : ஒரே ஒரு பக்கத்தில் மட்டுமே தகவல் பதிய முடிகிற நெகிழ் வட்டுகளைப் பற்றியது.

single sided disk : ஒரு பக்க வட்டு;ஒற்றைப் பக்கவட்டு : தகவல் படிக்கவும், எழுதவும் ஒரே ஒரு பக்கத்தை மட்டும் பயன்படுத்தும் வட்டு.

single step : ஒற்றை நடவடிக்கை;ஒரு நிலை;ஒற்றை அடி : கணினி இயங்கத் தொடங்கியவுடன் ஒர் நிரல் மட்டுமே நிறைவேற்றப்படும் வகையில் அமைந்த கணினிச் செயற்பாடு.

single tasking : ஒற்றைப் பணி.

single threading : ஒற்றை இழையூட்டம்;ஒற்றைப் புரியாக்கம் : 1. ஒரு நிரலுக்குள் ஒரு நேரத்தில் ஒரேயொரு செயலாக்கத்தை மட்டுமே இயக்குதல். 2. ஒரு மரவுரு தரவு கட்டமைப்பிலுள்ள ஒவ்வொரு இலைக் கணுவும் அதன் பெற்றோரைக் குறிக்கும் சுட்டிணைக் கொண்டிருக்கும் நிலை.

single user : ஒற்றைப் பயனாளர். single-user computer : ஒற்றைப் பயனாளர் கணினி : ஒரேயொரு நபர் மட்டுமே பணிபுரியும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட ஒரு கணினி. சொந்தக் கணினி என்றும் அழைக்கப்படும்.

signal, zero output : வெளியீடில்லாக் குறிகை;வெளியீடில்லாச் சமிக்கை.

sink : வாங்கி : வேறொரு சாதனம் அனுப்புவதைப் பெறுகின்ற சாதனம் அல்லது சாதனத்தின் ஒரு பாகம்.

SIP : சிப்;எஸ்ஐபீ : ஒற்றை உள்ளகத் தொகுப்பு எனப் பொருள் படும் Single iniine Package என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். இணைப்புமுனைகள் அனைத்தும் சாதனத்தின் ஒரு புறத்தில் அமைந்துள்ள, ஒரு மின்னணுக் கருவியின் கட்டுமான வகை.

SIPP : எஸ்ஐபீபீ : ஒற்றை உள்ளகப் பின்னமைந்த தொகுப்பு என்று பொருள்படும் Single Inline Pinned Package என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர்.

. sit : சிட்;. எஸ்ஐடீ : மெக்கின்டோஷ் கணினிகளில் ஸ்டஃபி பீட் நிரல் மூலம் இறுக்கிச் சுருக்கப்படும் கோப்புகளின் வகைப்பெயர் (File extension).

site : தளம் : தனிச்சுற்று வழியினைக் கேட்டு, தனியொரு HTTP சேவையர்மூலம் அளிக்கப்படும் சேவை. இந்தப் பொருள் வரையறையின்படி சுற்றுவழியில் உள்ள www. netgen, com ஒரு தளம் ஆகும்.

site licence : தள உரிமம் : கொள்முதல் செய்பவரின் வளாகத்தில் ஒரு குறிப்பிட்ட மென்பொருளைப் பயன்படுத்துவதற்கு ஒரு மென்பொருள் தயாரிப்பாளர் அல்லது அவரது முகவர் வழங்கும் ஒர் உரிமம். இந்த உரிமம், வளாகத்திலுள்ள ஒரு சில எந்திரங்களில் மட்டும் ஒரு மென்பொருளைப் பயன் படுத்த அனுமதிக்கிறது.

site registration : தளப் பதிவு.

Sl units : எஸ்ஐ அலகுகள் : பன்னாட்டு மெட்ரிக்முறையில் அளவு அலகுகள். இது பொறியியல் அலகுகளிலிருந்து வேறுபட்டது.

sixteen-bit chip : பதினாறு துண்மிச் சிப்பு : ஒரே சமயத்தில் 16 துண்மிகளாகத் தகவல்களைச் செய்முறைப்படுத்துகிற நுண் செய்முறைப் படுத்தும் சிப்பு. இது, எட்டுத் துண்மிச் சிப்பு, 32 துண்மிச் சிப்பு ஆகிய வற்றிலிருந்து வேறுபட்டது.

size : வடிவளவு : பரிமாணம். size box : உருவளவுப் பெட்டி : மெக்கின்டோஷ் கணினித் திரையில் தோன்றும் விண்டோவின் சட்டத்தில் மேல் வலதுமூலையில் காணப்படும் இயக்கு விசை. பயனாளர் இந்தப் பெட்டிமீது சொடுக்கும்போது, சாளரம் உச்ச அளவுக்கும் பயனாளர் வரையறுத்த அளவுக்கும் இடையே மாறும்.

. si : . எஸ்ஜே : ஒர் இணைய தள முகவரி ஸ்வால் பார்டு-ஜேன் மாயென் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

. sk : எஸ்கே : ஒர் இணைய தள முகவரி ஸ்லோவாக் குடியரசைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

sketching : உருவரை தீட்டுதல்;செதுக்குதல்;வரைவு : கணினி வரைகலை உத்தி. இதில் சறுக்கியின் பாதை நெடுக கோடுகளின் ஒரு பட்டை வரையப்படுகிறது அல்லது தீட்டப்படுகிறது.

sketch pad : உருவரை திண்டு;செதுக்கு அட்டை : வரைவுஅட்டை : காட்சித் திரையில் காட்டப்படும் செயல்முறைச் சேமிப்புப்பகுதி. இது, வரை கலையை அல்லது வாசகத தகவல்களை நிரந்தரமாகச் சேமித்து வைப்பதற்கு முன்பு, இயக்குபவர் எளிதாகச் சேர்க்க வும்நீக்கவும் அனுமதிக்கிறது.

skew : சாய்வு;திரிபு;கோணல் : எப்படி இருக்கிறது, எப்படி இருக்க வேண்டும் என்பதற் கிடையேயான வேறுபாடு. (எ-டு) ஒர் ஆவணத்தை அச் செடுக்கும்போது உள்ளபடி அச்சாகாமல், சீரமைவு சரியின்றி அச்சாதல். மின்சுற்றுகள் பரப்பப்படும் சமிக்கைகளுக்கு ஒன்று போலப் பதிலிறுக்காத சூழ்நிலையில், உள்ளீடு வெளியீடுகளுக்கு இடையே வேறுபாடு இருத்தல்.

skip : துள்ளல்;தாண்டு;தவிர் : நிரல்கள் ஒரு வரிசை முறையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிரல்களைப் புறக்கணித்து விடுதல்.

skip forward : முன்னோக்கி நகர்.

skutch box : ஸ்கட்ச் பெட்டி : ஸ்கட்ச் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்யும் ஒரு சாதனத்தின் பேச்சுவழக்குச் சொல். ஒரு தொலைபேசி இணைப்புபோன்ற பாவிப்புகளை (simulations) உருவாக்க இந்த சாதனம் உதவும். தொலைத் தொடர்பு அமைப்புகளையும் சாதனங்களையும் சோதனை செய்ய இச்சாதனம் உதவும். . sl : . எஸ்எல் : ஒர் இணைய தள முகவரி சியாரா லியோன் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

slab : சொல்;சொற்பகுதி : ஒரு சொல்லின் பகுதி.

slace : ஸ்லேஸ் : மற்றொரு சாதனத்தினால் கட்டுப்படுத்தப் படும் சாதனம்.

slack time : ஓய்வு நேரம்;தளர் நேரம்.

slave : அடிமை : வேறொரு சாதனத்தினால் கட்டுப்படுத்தப் படும் சாதனம்.

slave system : அடிமை முறைமை.

slave tube : அடிமைக் குழாய் : இரு குழாய்களும் ஒரே மாதிரியாகச்-செயல்படுகிற வகையில் ஒரு மின்வாய் மற்றொரு மின்வாயுடன் இணைக்கப்பட்டுள்ள மின்வாய்.

sleep : உறக்கம் : செயல் முறைப்படுத்துவதில் முடிவற்ற வளையம் அல்லது செயல் முறைப்படுத்திய காலதாமதம் காரணமாக ஏற்படும் செயலற்ற நிலை. செயல் முறைப்படுத்தும் மொழியில் உறக்க கட்டளை யானது, ஒரு குறிப்பிட்ட காலஅளவுக்குக் காலத்தாழ் வினை உண்டாக்குகிறது.

sleeve : குழல்;உறை;காப்புறை : ஒரு நெகிழ்வட்டினைச் சேமித்து வைப்பதற்கான பாதுகாப்பு உறை.

slew : விசை ஊசல்;நகர்த்து;ஒட்டு : ஒர் அச்சுப்பொறி ஊடே காகிதத்தை நகர்த்தல்.

sewing : விசை ஊசலாட்டம்;நகர்த்துதல்;ஒட்டம் : எண்மான முறையில் கட்டுப்படுத்தப் படும் எந்திர சாதனங்களை ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு நகர்த்தும் வேகம்.

slice : துண்டம்;நறுக்கு : சிப்பு கட்டமைவின் ஒரு தனிவகை. இது, சொல் துண்மிக்கு வடிவளவை அதிகரிப்பதற்குச் சாதனங்களை இடையிணைப்பு செய்வதற்கு அனுமதிக்கிறது.

side : காட்சி வில்லை;பட வில்லை : வரிசையாகக் காட்டப்படும் திரைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு படக்காட்சி.

slide rule : நகரும் சட்டகம்;நழுவு நுண்ணளவு கோல்.

slide show : வில்லைக் காட்சி;காட்சி வில்லைக் காட்சி : ஒளிப் பேழைக் காட்சித் திரையில் ஒரு காலவரிசைப்படி வரைகலை உருக்காட்சிகளைக் காட்டுகிற கணினி வரைகலை மென்பொருள். slide show package : காட்சி வில்லைக் காட்சித் தொகுதி;வில்லைக் காட்சித் தொகுப்பு : ஒளிப்பேழைக் காட்சித் திரையில் இனங்களின் வரிசைமுறையில் வரைகலைகளைக் காட்டுகிற கணினி வரைகலை மென் பொருள் தொகுதி. மைக்ரோ சாஃப்டின் பவர்பாயின்ட் பணித் தொகுப்பில் இது போன்ற திரைக்காட்சிப் படைப்பை உருவாக்க முடியும்.

sliding window : சறுக்குப் பலகணி;சறுக்குச் சாளரம் : ஒப்புகையளிப் பதற்கு முன்பு பன்முகத் தொகுதிகளை அனுப்புகிற செய்தித் தொடர்பு மரபு முறை. அனுப்பப்பட்டு ஒப்புகையளிக்கப்பட்ட தொகுதிகளின் போக்கினை இருமுனைகளும் கண்காணிக்கின்றன. அனுப்பப்பட்டு ஒப்புகையளிக்கப்பட் டவை பல கணியின் இடப்புறமும், அனுப்பப்பட்டு ஒப்புகையளிக்கப் படாதவை பலகணியின் வலப்புறமும் காணப்படும்.

SLIP : ஸ்லிப் : 1. நேரியல் இணைப்பு இணைய நெறிமுறை என்று பொருள்படும் Serial Line Internet Protocol என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஐபீ தரவுப் பொதிகளை தொலைபேசி இணைப்பு வழியாக அனுப்புவதற்கு அனுமதிக்கும் ஒரு தரவுத் தொடுப்பு நெறிமுறை (Data Link Protocol) ஒரு தனிக்கணினி அல்லது ஒரு குறும்பரப்புப் பிணையம், இணையத்துடனோ இன்னபிற பிணையங்களுடனோ இணைப்பு ஏற்படுத்திக்கொள்ள இது வசதி செய்கிறது.

SLIP emulator : ஸ்லிப் போன்மி;ஸ்லிப் ஒப்பாக்கி;ஸ்லிப் போலாக்கி : யூனிக்ஸ் செயல்தள இணைப்புகளில் நேரடியான ஸ்லிப் இணைப்பு வழங்காமல், ஸ்லிப் இணைப்பு போலவே செயல்படும் மென்பொருள். பெரும்பாலான இணையச் சேவை நிறுவனங்கள் யூனிக்ஸ் அடிப்படையிலேயே செயல் படுகின்றன. பயனாளர்களுக்கு செயல்தளக் கணக்கு மூலம் இணைய அணுகலை வழங்குகின்றன. ஸ்லிப் இணைப்பு போன்றே, ஸ்லிப் போன்மிகளும் பயனாளர், இணையத்தில் இணையும்போது, நேரடியாக, சேவை நிறுவனத்தின் யூனிக்ஸ் சூழலை அணுகுவதைத் தவிர்த்து, வரைகலை வலை உலாவிகளைப் போன்றே இணையப் பயன்பாடுகளை நுகர்வதற்கு வாய்ப்பளிக்கின்றன.

slip stream : சறுக்கு ஓட்டம் : மென்பொருளில் ஒரு நுண்ணிய அல்லது கூட்டல் அதிகரிப்புச் சாதனத்தைப் பொருத்துதல். ஒரு புதிய பதிப்பு எண்ணை உருவாக்குவதன்மூலம் இத்தகைய சேர்ப்பினை அடையாளங் காட்டாத வகையில் இது செய்யப்படுகிறது.

slope : சரிவு நிலை : ஒரு கிடைமட்ட அலகில் ஒரு வளைகோடு ஏறுகிற அல்லது இறங்குகிற விகிதம்.

slot : செருகுவாய்;கொள்தடம்;துளை விளிம்பு;பொருத்துமிடம் : கூடுதலான அச்சிட்ட சுற்றுவழிப் பலகைகளுக்கான கொள்தடம். வட்டினை அல்லது நாடாவைச் செருகுவதற்கும் எடுப்பதற்குமுரிய கொள்தடம். செய்தித் தொடர்புகளில், ஒரு குறுகிய அலைவரிசை.

slotted ring : செருகுவாய் வளையம்.

Slow Keys : மெதுவிசைகள் : மெக்கின்டோஷ் கணினிகளில் விசைப் பலகையில் இருக்கும் ஒரு வசதி. டாஸ், விண்டோஸ் முறைமைகளிலும் இவ்வசதி உள்ளது. பட்டறிவு இல்லாத பயனாளர்கள் விசைப்பலகையில் தட்டச்சு செய்யும்போது கவனக்குறைவாக அருகிலுள்ள பிற விசைகள்மீது விரல்கள் லேசாகப்பட்டாலும் விரும்பத்தகாத எழுத்துகள் பதிவாவதுண்டு. இந் நிலைமையைப் போக்கவே இவ்வசதி வழங்கப் பட்டுள்ளது. ஒரு விசைமீது சிறிது நேரம் விரலை அழுத்தி வைத்திருந்தால்தான் அதற்குரிய எழுத்துத் திரையில் பதிவாகும்.

SLSI : எஸ்எல்எஸ்ஐ;சில்சி : மீப் பெரிய நிறைகோல் ஒருங்கிணைப்பு என்று பொருள்படும் Super Large Scale Integration என்பதன் தலைப் பெழுத்துச் சுருக்கம். ஒரு சிப்புக்கு பத்து இலட்சம் அல்லது கூடுதல் பாகங்களைக் கொண்ட மிகஅதிக அடர்த்தி சிப்புகளைப் பயன்படுத்துதல்.

SLT : எஸ்எல்டி : திண்மத் தருக்க முறை உத்தி எனப் பொருள்படும் Solid Logic Technique என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். இதனை IBM புனைந்தது. ஒரு சுற்றுவழித் தகவமைவினை உருவாக்குவதற்கான நுண் மின்னணுத் தொகுதி உத்தியைக் குறிக்கிறது.

slug : புடைப்பு;பருங்குழை : காகிதத்தில் அச்சடிப்பதன் மூலம், அச்சடிக்கத்தக்க எழுத்து அச்சுகளின் உருக்காட்சியைக் கொண்டு செல்கிற உலோக மெத்தை.

. sm : . எஸ்எம் : ஒர் இணைய தள முகவரி சான்மாரினோ நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

small business computer : சிறுவணிகக் கணினி : வணிகப் பயன்பாடு களைச் செய்முறைப் படுத்துவதற்கான கணினிப் பொறியமைவினைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ள தனித்தியங்கும் தரவு செய்முறைப்படுத்தும் பொறி யமைவு. சம்பளப் பட்டியல், கணக்குக் கொடுக்கல் வாங்கல் நிரல் பதிவு, சரக்குப் பட்டியல், பொதுப்பேரேடு போன்ற பயன்பாடுகளுக்கு இது பயன்படுகிறது.

small caps : சிறு பெரிய எழுத்துகள் : ஆங்கில எழுத்துகளில் சிறிய எழுத்து, பெரிய எழுத்து வேறுபாடு உண்டு. ஒரு குறிப்பிட்ட எழுத்துருவில் சிறிய எழுத்துகளும் பெரிய எழுத்துகளும் உண்டு. ஒர் எழுத்துருவில் வழக்கமாக இருக்கும் பெரிய எழுத்துகளின் உருவளவைவிடச் சிறியதாக இருக்கும் பெரிய எழுத்துகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. (எ-டு) : Small, SMALL, SMALL.

small icons : சிறு சின்னங்கள்.

small model : சிறிய மாதிரியம் : இன்டெல் 80x86 செயலிக் குடும்பத்தில் பயன்படுத்தப்படும் நினைவக மாதிரியம். இதில் நிரல் குறிமுறைக்கு 64 கேபி இடமும், தரவுகளுக்கு 64 கேபி இடமும் மட்டுமே ஒதுக்க முடியும்.

small scale integration (SSI) : சிற்றளவு ஒருங்கிணைப்பு;எஸ்எஸ்ஐ : ஒருங்கிணைந்த சுற்று வழிகளின் வகை. இதில், ஒரு சிப்புவில் மிகக் குறைந்த செயற்பணிகள் அடங்கியிருக்கும். இது, நடுத்தர ஒருங்கிணைப்பு, பேரளவு ஒருங்கிணைப்பு, மிகப் பேரளவு ஒருங்கிணைப்பு ஆகிய வற்றி லிருந்து மாறுபட்டது.

SMALL TALK : ஸ்மால்டாக்;கணினி மொழிகளில் ஒருவகை : சாதாரண மக்களும் கணினியை மிக எளிதாகப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக் கப்பட்ட மொழி மற்றும் மென்பொருள் பொறியமைவு. திரையில் உரு வங்களின் படவடிவங்களில் இயன்றளவு செயற்பாட்டுத் தேர்வுகளுக்கு உதவுகிறது. மிக அதிக அளவு படப்பரிமாற்றங்களுக்குச் இப்பொறியமைவு கள் உதவுகின்றன.

smart : விரைவூக்கம்;திறமையான, சூட்டிகையான : தனக்கேயுரிய சில கணிப்புத்திறனைக் கொண்டிருத்தல். விரைவூக்கச் சாதனங்கள் பெரும்பாலும் சொந்த நுண்செயலிகளைக் கொண்டிருக்கின்றன.

Smart card : விரைவூக்க அட்டை;சாமர்த்திய அட்டை;சூட்டிகை அட்டை : கணினியில் அமைக்கப்பட்டுள்ள கடன் அட்டை வசதி.

smartcom : விரைவூக்கச் செயல் முறை : ஹேய்ஸ் என்ற நிறுவனம் சொந்தக் கணினிகளுக்காகவும், 'மேக்' கணினிகளுக்காகவும் தயாரித்துள்ள செய்தித் தொடர்புச் செயல்முறைகளின் தொகுதி. இது பல முனையங் களுடன் பொருந்தத்தக்கது. இது பல்வேறு மரபு முறைகளுக்கு ஆதாரமாக இருக்கிறது.

smartdrive : விரைவூக்க இயக்கி : வட்டுப் புதைவுச் செயல்முறை. இது DOS4. 0, விண்டோஸ் 3. 0 ஆகியவற்றுடன் வருகிறது.

smart install programme : விரைவூக்க அமைவுச் செயல்முறை : தானாகவே உருக்கொடுத்துக் கொள்ளக்கூடிய விரைவூக்கச் செயல்முறை. இது, வன்பொருள் சூழலில் ஆதாரம் பெற்றிருக்கும்.

smart key : விரைவூக்க விசை : 'நோ பிரெய்னர் சாஃப்ட்வேர் என்ற நிறுவனம் தயாரித்துள்ள சொந்தக் கணினி விசைப் பலகைக்கான பேரளவு செய் முறைப்படுத்தி. இது திரும்பத் திரும்பத் தட்டச்சு செய்வதைத் தவிர்ப்பதற்கு உதவும் முதல் பேரளவுச் செய்முறைப்படுத்தியாகும். இது ஒரு வாசகம் அல்லது நிரல் தொகுதிகளின் நிகழ்வுக்கான பேரளவினை உருவாக்குகிறது.

Smart linkage : துடுக்குத் தொடுப்புகை : ஒரு நிரலில், அழைக்கப்படும் நிரல்கூறுகள் எப்போதும் சரியான இனத்து அளபுருக்களுடன் அழைப்பதற்கு உத்திரவாதம் செய்யும் பண்புக்கூறு. (எ-டு) : சி# மொழியில்,

void swap (ref int x, ref int y) {----------------}என்று ஒரு செயல்கூறு வரை யறுக்கப்பட்டுள்ளது. இந்த செயல்கூறினை swap (ref a, ref b) என்று அழைக்கும்போது, a, b ஆகியவை int இனத்தைச் சேர்ந்தவைதானா என்பது சரி பார்க்கப்பட்டு செயல்கூறு இயக்கப்படும்.

smart machines : விரைவூக்க எந்திரங்கள்;திறமையான எந்திரங்கள்;சூட்டிகை எந்திரங்கள் : கட்டுப்பாட்டுத் தனிமங்களாக நுண் செய் முறைப்படுத்துகிற எந்திரங்கள்.

smart produce : விரைவூக்கப் பொருள் : உள்ளேயே அமைக்கப்பட்டுள்ள நுண்கணினிகளை அல்லது துண்செயலிகளைக் கொண்டிருக்கிற தொழில் துறை மற்றும் நுகர்வோர் உற்பத்திப் பொருள்கள். இவை, இத்தகைய பொருள்களின் செயல் திறனையும் திறம்பாடுகளையும் கணிசமாக அதிகரிக்கின்றன.

smart quotes : துடுக்கு மேற்கோள் குறிகள் : பெரும்பாலான சொல் செயலித் தொகுப்புகளில் " என்னும் சாதாரன மேற்கோள் குறிவிசையை அழுத்தும் போது, தாமாகவே சிறப்பு மேற்கோள் ( ) குறிகளாக மாறிக் கொள்ளும் வசதி உள்ளது.

SMART system : ஸ்மார்ட் முறைமை;ஸ்மார்ட் அமைப்பு : SMART என்பது தானாகவே கண் காணிக்கும் பகுப்பாய்வு அறிவிப்புத் தொழில்நுட்பம் என்று பொருள்படும் Self-Monitoring Analysis and Reporting Technology என்ற தொடரின் தலைப்பெழுத் துக் குறும்பெயர். ஒரு சாதனத்தின் செயல் திறனையும் நம்பகத் தன்மையையும் கண்காணித்து முன்னறிந்து சொல்லும் தொழில் நுட்பம். இத்தொழில் நுட்பத்தில் செயல்படும் அமைப்புகள் பல்வேறு பழுதாய்வுச் சோதனைகளை மேற்கொண்டு சாதனங்களின் குறைகளைக் கண்டறிந்து சொல்கின்றன. உற்பத்தியைப் பெருக்குதல், தரவுகளைப் பாதுகாத்தல் இதன் நோக்கம்.

smart terminal : விரைவூக்க முனையம்;திறமையான முகப்பு : சூட்டிகையான முனையம் : அனுப்பப்படும் அல்லது பெறப்படும் தகவல்களைச் செய்முறைப் படுத்துவதற்கு ஒரளவுக்குத் திறம்பாடுகள் கொண்ட முனையம். இது ஒர் அறிவுத்திறன் முனையம் போன்று திறனுடையதன்று. இது "ஊமை முனையம்" என்பதிலிருந்து வேறுபட்டது.

smash : தகர்;மோது : சேமிப்பியின் ஒரு பகுதியை, அதன்மேல் இன்னொரு செயல்முறையை எழுதுவதன்மூலம் அழித்தல்.

SMDS : எஸ்எம்டிஎஸ் : இணைப்பிடு பல் மெகாபிட் தரவு சேவைகள் என்று பொருள்படும் Switched Multimegabit Data Services என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இது ஒரு மீஉயர் வேக, இணைப்பிடு தரவுப் போக்கு வரத்துச் சேவை ஆகும். குறும்பரப்புப் பிணையங்களையும், விரிபரப்புப் பிணையங்களையும் பொதுத் தொலை பேசிப்பிணையம் மூலமாக இணைக்கிறது.

smilley : குறுநகையி.

S/MIME : எஸ்/மைம் : பாதுகாப்பான பல்பயன் இணைய அஞ்சல் நீட்டிப்புகள் என்று பொருள்படும் Secure/Multipurpose Internet Mail Extensions என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். பொதுத் திறவி (Public Key) மறையாக்கத்தை (encryption) பயன்படுத்திக்கொள்கிற ஒர் இணைய மின்னஞ்சல் பாதுகாப்புத் தர வரையறை.

SMIS : எஸ்எம்ஐஎஸ்;ஸ்மிஸ் : 'நிருவாகத் தகவல் பொறியமைவுக் கழகம்'என்று பொருள்padum Society for Management Information System என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். இது நிருவாகச் செயற்பாடுகளையும், தகவல் பரிமாற்றங்களையும் மேம்படுத்துவதற்கான ஒரு தொழில்முறை அமைவனம்.

smoke test : புகைச் சோதனை : ஒரு வன்பொருள் கருவியைச் செய்து முடித்தவுடன் அல்லது பழுதுபார்த்து முடித்தவுடன் அதனை இயக்கிப் பரி சோதித்தல். அக்கருவியிலிருந்து புகை வந்தாலோ, வெடித்து விட்டாலோ அல்லது எதிர்பாராக் கடும் விளைவு ஏற்பட்டாலோ அது நன்றாக இயங்குவதுபோல் இருந்தாலும், சோதனையில் தோல்வியடைந்ததாகவே கருதப்படும்.

smooth : சமனம் செய்தல்;எளிதான;சீரான : தரவுகளில் விரைவான ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கிற அல்லது ஒழிக்கிற நடைமுறை.

smoothing circuit : சமனச் சுற்று வழி : நேர்மின்னோட்டத்திலுள்ள மின்னணு வடிகட்டும் சுற்றுவழி. இது மாற்று மின்னோட்ட விசையிலிருந்து அதிர்வலைகளை அகற்றுகிறது.

smoothed data : சமனத் தரவு : புள்ளிவிவரத் தரவுகளில் வரை படத் திலுள்ள வளைவுகளைச் சமனமாக்கும் வகையில் சராசரி யாக்கம் செய்யப்பட்ட புள்ளி விவரத் தரவு.

smooth scrolling : சமனச் சுருளாக்கம்;சுழற்றுதல்;சீரான உருளல் : ஒரு வரியிலிருந்து இன்னொருவரிக்குச் சுரிப்பிழப்பின்றி வாசகங்களைச் சுருளாக் கம் செய்வதற்கான திறம்பாடு. SMP server : எஸ்எம்பீ வழங்கன் : செவ்வொழுங்கு பல்செயலாக்க வழங்கன் (Symmetric Multiprocessing Server) என்பதன் சுருக்கம். கிளையன்/வழங்கன் பயன்பாடுகளில் வழங்கனின் செயல்திறனை மிகுவிக்க ஒரு கணினி எஸ்எம்பி கட்டுமானத்தில் வடிவமைக்கப்படுகிறது.

. sn : . எஸ்என் : ஒர் இணைய தள முகவரி செனகல் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.

SNA : எஸ் என் ஏ;ஸ்நா;கணினி இணையக் கட்டமைப்பு : பொறியமைவு இணையக் கட்டமைவு என்று பொருள்படும் Systems Network Architectufe என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

snail mail : நத்தை அஞ்சல் : மரபுமுறையிலான அஞ்சல் போக்கு வரத்தை அதன் வேகங்கருதி இணையப் பயனாளர்கள் கிண்டலாகக் குறிப்பிடுவது. மின்னஞ்சலோடு ஒப்பிடுகையில் மரபுமுறை அஞ்சல் நத்தை வேகமே.

snapshot : நொடிப்பு சேமிப்பு : வன்பொருள் பதிவேடுகள், தகுநிலைக் குறியீடுகள் அனைத்தும் உட்பட நினைவகத்தின் உள்ளடக்கங்களைச் சேமித்து வைத்தல். செயற்பாடு நின்று விடும்போது பொறியமைவை மீண்டும் இயக்குவதற்கும், எங்கு எப்போது தவறு நேர்ந்தது என்பதைக் கண்டறியவும் இவ்வாறு காலமுறையில் செய்யப்படுகிறது.

snapshot dump : நொடிப்புகுவியல்;தடாலடித் திணிப்பு : குறிப்பிட்ட சேமிப்பு அமைவிடங்களின் மற்றும்/அல்லது பதிவேடுகளின் உள்ளடக்கங்களின் செயல்முறை ஒடும் போது குறிப்பிட்ட புள்ளிகளில் அல்லது நேரங்களில் நிறை வேற்றுகிற பதிவேடுகளின் இயக்காற்றல் குவியல்.

snapshot programme : நொடிப்பு நிரல்;நொடிப்பார்வை நிரல் : 'குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நினைவகத்தின் ஒரு பகுதியை நொடிப் பார்வை யிட்டு கண்காணிக்கும் நிரல்.

. snd : . எஸ்என்டி : சன், நெக்ஸ்ட், சிலிக்கான் கிராஃ பிக்ஸ் கணினிகளில் பயன்படுத்தப்படும் மாறு கொள்ளத்தக்க (Interchangable) 9a) ஒலிக்கோப்பு வடிவாக்கத்தைக் குறிக்கும் கோப்பு வகைப்பெயர். அக்கோப்புகள் செப்பமற்ற கேட்பொலித் தகவலைக் கொண்டிருக்கும். ஒர் உரை அடையாளங்காட்டி தொடக்கத்தில் இருக்கும்.

sneakernet : மறைநிலைப் பிணையம்;மறைமுகப்பிணையம் : பிணையத் தில் பிணைக்கப்படாத இரு கணினிகளுக்கிடையே நடைபெறும் தரவு பரிமாற்றம். பரிமாற வேண்டிய கோப்புகளை ஒரு நெகிழ்வட்டில் நகலெடுத் துக்கொள்ளவேண்டும். அவ்வட்டினை ஒருவர் நேரில் எடுத்துச் சென்று இன்னொரு கணினியில் கோப்புகளை நகலெடுப்பார்.

SNMP : எஸ்என்எம்பி : எளிய பிணைய மேலாண்மை நெறிமுறை என்று பொருள்படும் Simple Network Management Protocol என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். டீசிபி/ஐபி-யின் பிணைய மேலாண்மை நெறிமுறை ஆகும். எஸ்என்எம்பீ-யில் முகவர்கள் எனப்படும் வன்பொருள் அல்லது மென்பொருள்கள், பிணையத்தில் இணைக்கப்பட்டுள்ள பல்வேறு சாதனங் களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து, பிணையப் பணி நிலையத் திரையில் காட்டுகின்றன. ஒவ்வொரு சாதனத்தின் கட்டுப்பாட்டுத் தகவல் களும் மேலாண்மைத் தகவல் தொகுதி என்னும் கட்டமைப்பில் பராமரிக்கப்படுகின்றன.

SNOBOL : ஸ்னோபால் : சரம் சார்ந்த குறியீட்டு மொழி எனப்பொருள் படும் String Oriented Symbolic Language என்பதன் குறும்பெயர். இதனை பெல் ஆய்வுக்கூடம் உருவாக்கியது. செயல்முறைத் தொகுப்பாக்கம், குறியீட்டுச் சமன்பாடுகள் உருவாக்கம் ஆகியவற்றில் முக்கியமாகப் பயன்படுகிறது. சர எழுத்துக்களை கையாள்வதற்கு முழுவசதி செய்து கொடுக்கிறது

snow : பூம்பனி : காட்சித் திரையில் மினுமினுக்கும் வெள்ளைப்புள்ளித் தோரணிகள். இது மென்பொருளுக்கும் கணினித் திரைக்குமிடையில் ஏற்படும் சிறிதளவு இணக்கமின்மை காரணமாக உண்டாகிறது.

SO : எஸ்ஓ (அனுப்ப மட்டுமான) : "அனுப்புதல் மட்டும்" என்று பொருள்படும்"Send Only"என்பதன் தலைப்பெழுத் துச் சுருக்கம். இது அனுப்பு வதற்குமட்டுமான திறனுடைய சாதனத்தைக் குறிக்கிறது. இது"ஏற்பு மட்டும்" என்பதற்கு மாறானது.

society for computer simulation (scs) : கணினித் தூண்டுதல் கழகம்;கணினி போலி நிகழ்வுச் சங்கம் : துண்டுதல் மற்றும் அதன் தொடர்பான தொழில் நுட்பங்களை மேம்படுத்துவதற்காக முக்கியமாகப் பாடுபடும் ஒரே தொழில்நுட்பக் கழகம். முக்கியமாக, நிருவாகம், சமூக, அறிவியல், உயிரியல், சுற்றுச் சூழல் சிக்கல்களைக் கையாள்கிறது. இதற்கு உலகெங்கும் உறுப்பினர்கள் உள்ளனர். Society For Information Management : தகவல் மேலாண்மைக் கழகம் : சிகாகோவில் செயல்படும் ஒரு தொழில் முறை அமைப்பு. தகவல் அமைப் புகளின் நிர்வாகிகளுக்கானது. முன்பு இதன்பெயர் : மேலாண்மைத் தகவல் அமைப்புக் கழகம்.

society of certified data processors; (SCDP) : சான்றளிக்கப்பட்ட தரவு செய்முறைப்படுத்துநர் கழகம்;சான்றிதழ் பெற்ற தரவு செயலாக்கங்களின் சங்கம் : சான்றளிக்கப்பட்ட கணினித் தொழில்முறையாளர்களின் நலன் களுக்காகவும் விருப்பங்களுக்காகவும் பாடுபடும் அமைவனம். இது 1971இல் அமைக்கப்பட்டது. அந்த அமைவனத்தின் நிலைப்பாடுகளையும், நடவடிக்கை களையும், நெறியுறுத்தங்களையும் உறுப்பினர்கள் கட்டுப்படுத்துகிறார்கள். ICCP சான்று பெற்றோரின் நலன்களுக்குப் பாடுபடும் ஒரே நிறுவனம்.

socket : குதைகுழி துளை கோள்குழி : செருகியை பொருத்துவதற்குரிய கொள்குழி.

soft : மென்.

soft clip area : மென் பிடிப்புப் பகுதி, மென்பிடி பகுதி : மென்வரை பரப்பு : தரவுகள் ஒரு வரைவி சாதனத்தில் எந்தப் பகுதியில் அளிக்கப்பட வேண்டுமோ அந்தப் பகுதிகள், வரம்புகள்.

soft copy : மென்படி;மென் பிரதி;மென் நகல் : ஒரு ஒளிப் பேழை உருவமைவில் ஒர் ஒளி உருக்காட்சியாக அல்லது வன்படியாக அல்லாத வேறேதேனும் வடிவில் வழங்கப்படும் தரவு.

soft error : மென்பிழை : மீண்டும் அனுப்பிடத்தக்க திரிபடைந்த செய்தி போன்ற மீட்கத்தக்க சிறுபிழை. இது"வன்பிழை"என்பதிலிருந்து வேறுபட்டது.

soft fails : மென் தளர்வுகள்;மென் தோல்வி;மென் பிறழ்வுகள் : நுண் மின்னணுச் சுற்று வழிகளில் மின்காந்த நுண் அலைத் துகள்களினால் உண்டா கும் ஒசைப் பெருக்கம். இதனால் கணினி நினைவகங்களில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்களில் திடீர் மாற்றம் ஏற்படக்கூடும். இந்த மாற்றங்கள் மென்தளர்வுகள் எனப்படும். இது சுற்றுவழிகளில் ஒருங்கி ணைந்த நுண்மின்னணு அமைப்பிகளின், வடிவளவுகள் குறைந்து கொண்டே வருவதால் ஏற்படும் எதிர்பாராத விளைவுகளில் இதுவும் ஒன்று.

soft font : மென் எழுத்து : வன்பொருளிலிருந்து அல்லாமல் மென் பொருள் நிரல்களின் கோரிக்கையிலிருந்து வரவழைக்கப்படும் ஒரு எழுத்துரு. இந்த எழுத்துருக்களைப் பொதியுறைகளைவிட மலிவான விலை யில் வாங்கலாம். பயனாளரின் குறிப்பிட்ட தேவைகளுக்கேற்ப இதனைத் தகவமைத்துக் கொள்ளலாம். மென்எழுத்துருக்களை பயன்படுத்துவதற்கு முன்பு அச்சுப்பொறிக்கு இறக்கம் செய்தல் வேண்டும். சொல் செயல் முறைப்படுத்திகள், மேசை வெளியீட்டுத் தொகுதிகள் பெரும்பாலும் இதனைக் கொண்டிருக்கின்றன.

soft/hard copy : மென்/வன் நகல்;வட்டு/அச்சு நகல்.

soft hyphen : மென் இடைக்கோடு;மென் ஒட்டுக்குறி;மென்சிறுகோடு : ஒருவரியின் இறுதியில் ஒரு சொல்லை அசைகளிடையே முறிப்பதற்காக மட்டும் அச்சிடப்படும் ஒட்டுக் குறி.

soft keys : மென்சாவிகள்;மென் விரற்கட்டை;மென்விசைகள் : பயன்பாட்டாளர் வரையறுத்த பொருளைக் கொண்டிருக்கும் விசைப் பலகையிலுள்ள விரற்கட்டைகள். இதன் பொருள், பயன் பாட்டாளருக்கும், செயல்முறைக்கும் மாறுபடக்கூடியது என்பதால் மென்விசை எனப் பெயர் பெற்றது.

soft page break : மென்பக்க முறிப்பு.

soft patch : மென் பட்டை : நடப்பு நிகழ்வுக்கு மட்டுமே நீடிக்கக்கூடிய நினைவகத்தில் தற்போதுள்ள எந்திர மொழியில் பொருத்தப்படும் ஒரு விரைவுச் சாதனம்.

soft return : மென் மடக்கு;மென் திருப்பம் : வரியின் இறுதியைக் குறிப்பதற்கு வாசக ஆவணத்தில் மென்பொருளினால் செருகப்படும் குறியீடு. அதிகத் தகவல்கள் செலுத்தப் பட்டால், அதற்கேற்ப இந்த மடக்கு மாற்றப்பட்டு, வாசகம் திருத்தபடுகிறது. அச்சடிக்கும் போது மென் மடக்கு, அச்சுப் பொறியால் வரி இறுதிக் குறியீடாக மாற்றப்படுகிறது.

soft sector : மென் வட்டக்கூறு;மென் பிரிவு;மென் பகுதி : ஒரு வட்டில் எழுதப்பட்டுள்ள தகவல்களைப் பயன்படுத்தி அந்த வட்டின்மீது வட்டக் கூறுகளை அல்லது பகுதிகளைக் குறிக்கும் முறை. வட்டிலுள்ள தரவுகளின் அமைவிடங்களை மென்பொருள் கணிப்புகள்மூலம் நிருணயிக்கும் முறை.

soft sectored disk : மென் கூறாக்கிய வட்டு : ஒரு குறிப்பீட்டுப் புள்ளியிலிருந்து மென்பொருள் படிமுறை வரிசையினால் கூறுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஒருவட்டு. வன் கூறாக்கிய வட்டுகளின் கூறுகள், வன்பொருள் குறியீடுகளினால் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும். பெரும்பாலான வட்டுகள் மென் கூறாக்கத்தைப் பயன்படுத்துகின்றன.

software : மென்பொருள்;மென் சாதனம்;மெல்லியல்பு;கணினி செயல்முறை : ஒரு கணினிப் பொறியமைவிலுள்ள இரும்பு அல்லது வன்பொருளுக்கு மாறுபாடாக, செயல்முறைகளின் தொகுதியைக் குறிக்கும் சொல். இவை கணினிப் பொறியமைவின் செயற்பாட்டையும், வன் பொருள்களின் இயக்கத்தையும் கட்டுப்படுத்துகின்றன. ஒரு கணினிப் பொறியமைவுக்கான மென்பொருள்கள், பயன்பாட்டுச் செயல்முறைகள் என்றும் பொறியமைவுச் செயல் முறைகள் என்றும் வகைப் படுத்தப்பட்டுள்ளன.

software application : மென் பொருள் பயன்பாடு : ஒரு மென்பொருள் அல்லது கணினி செயல்முறைக்கான பொதுப்படையான பெயர்.

software architecture : மென் பொருள் உருவாக்கக் கலை;மென்பொருள் கட்டமைப்பு : பொறியமைவு மென்பொருள் பயன்பாட்டினை வடிவமைத் தல். இதில் மரபு முறை, மற்ற செயல்முறைகளுடன் இடைத் தொடர்பு கொள்வதற்கான இடை முகப்புகள், எதிர்கால நெகிழ்திறன், விரிவாக்கத் திற்கான வசதிகள் உள்ளடங்கியிருக்கும்.

software base : மென்பொருள் ஆதாரம்;மென்பொருள் அடிப்படை;மென் பொருள் தளம் : ஒரு குறிப்பிட்ட கணினிப் பொறியமைவுக்கான மென் பொருள். மென்பொருள் ஆதாரம் எவ்வளவு விரிவாக உள்ளதோ அந்த அளவுக்கு கணினிப் பொறியமைவு திறம் பாடுடையதாக இருக்கும்.

software-based modem : மென் பொருள் அடிப்படையிலான இணக்கி (மோடம்) : மறு நிரலாக்கத்தகு இலக்கமுறைச் சமிக்கை பொதுப்பயன் செயலிச் சிப்புவைக் கொண்ட ஒர் இணக்கி. இதில், இணக்கியின் செயல் பாடுகள் சிலிக்கானில் பொறிக்கப்பட்ட தனி சிப்புவுக்குப் பதிலாக ரேம் (RAM) அடிப்படையிலான நிரல் நினைவகத்தைக் கொண்டுள்ளன. மென்பொருள் அடிப்படையிலான இணக்கிகளின் பண்புக் கூறுகளையும் செயல்பாடு களையும் மாற்றியமைக்க எளிதாக தகவமைவுகளைத் திருத்தியமைக்க முடியும்.

software broker : மென்பொருள் தரகர் : மென்பொருள் தொகுதிகளை விற்பனை செய்வதில் தனிக்கவனம் செலுத்தும் ஆள்.

software carousel : மென்பொருள் களரி : "சாஃப்ட்லாஜிக் சொலுவுன்ஸ்" என்ற நிறுவனம் சொந்தக் கணினிகளுக்காகத் தயாரித்துள்ள பணி விசைச் செயல்முறை. ஒரே சமயத்தில் 12 பயன்பாடுகளைக் கொண்டு, அவற்றுக் கிடையே முன்பின் செல்வதற்கு இது அனுமதிக்கிறது.

software campany : மென் பொருள் நிறுவனம்;மென் பொருள் கூடம்.

software compatability : மென்பொருள் ஒத்தியல்புத்திறன்;மென்பொருள் ஏற்புடைமை : ஒரு பொறியமைவுக்காக எழுதப்பட்ட செயல்முறையினை மாற்றம் எதுவுமின்றி இன்னொரு செயல்முறையில் பயன்படுத்தும் திறன்.

software-dependent : மென் பொருள் சார்பானது : அதற்காகவே உருவாக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட நிரலோடு அல்லது நிரல் தொகுப்போடு இறுகிப் பிணைக்கப்பட்ட ஒரு கணினி அல்லது ஒரு மின்னணுச் சாதனம்.

software development : மென் பொருள் மேம்பாடு;மென் பொருள் உருவாக்கம் : ஒரு பயன்பாட்டாளரின் தேவைப் பாடுகளை நிறைவு செய்கிற செயல்முறைகளின் தொகுதிகளை உருவாக்குதல்.

software documents : மென் பொருள் ஆவணங்கள் : கணினிச் சாதனத் துடனும் மென்பொருள் பொறியமைவுகளுடனும் தொடர்புடைய எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட வாசகங்கள். software encryption : மென் பொருள் பூட்டுவிசை;மென் பொருள் இரகசியக் குறியீடு;மென்பொருள் மறையீடு : கணினியாக்கம் செய்யப்பட்ட தரவு களை, வன்பொருள் சாதனங்கள் மூலம் அல்லாமல், செயல்முறைப்படுத்தும் உத்திகள் மூலம் குறியீடாக்கவோ மறைவிடுப்பு செய்யவோ செய்தல்.

software engineering : மென் பொருள் பொறியியல் : உற்பத்தி உரு மாதிரிக் கணினிகளின் அடிப்படையில் பேரளவு மென் பொருள் பொறிய மைவுகளை உருவாக்கிச் செயற்படுத்து வதைக் குறிக்கும் சொல். இச் சொல்லை நேட்டோ அறிவியல் குழுவின் கணினி அறிவியல் ஆய்வுக் குழுமம் 1967 இல் உருவாக்கியது. கட்டுப்படுத்திய வடிவமைப்புகள், உயர்தரக் கணினி மென்பொருள்களை உருவாக்குதல், இயக்கமுறை முறைமைகளை வகுத்தல் போன்ற பல்வேறு தொழில் நுட்பங்கள் இதில் உள்ளடங்கும்.

software error controi : மென் பொருள் பிழைக் கட்டுப்பாடு.

software flexibility : மென் பொருள் நெகிழ்வுத் தன்மை.

software handshake : மென் பொருள் கைகுலுக்கல் : பொதுவாக தரவுகள் ஒரு தடத்திலும் கட்டுப்பாட்டுச் சமிக்கைகள் தனித் தடத்திலும் அனுப்பி வைக்கப்படுவதுண்டு. அப்படி யில்லாமல் இரண்டு இணக்கிகளுக்கிடையே தொலைபேசி இணைப்பு வழியே நடைபெறும் தகவல் தொடர்பில் இருப்பதுபோலத் தகவல்கள் அனுப்பப்படும் அதே இணைப்புக் கம்பிகள் வழி யாகவே கட்டுப்பாட்டுச் சமிக்கைகளையும் அனுப்பி வைத்தல்.

software house : மென் பொருள் இல்லம்;மென்பொருளகம் : பொது மென்பொருள் தொகுதிகள், குறிப்பிட்ட மென்பொருள் தொகுதிகள் இரண்டையும் கணினிப் பொறியமைவு உரிமையாளர்களுக்கு விற்பனைக்கு வழங்கும் நிறுமம்.

software installation engineer : மென்பொருள் நிறுவு பொறியாளர்.

software, integrated : ஒருங்கினை மென்பொருள்.

software integrated circuit : மென்பொருள் ஒருங்கிணைவு மின்சுற்று : சுருக்கமாக மென் பொருள் ஐசி என்றழைக்கப் படுவதுண்டு. ஒர் ஒருங் கிணைவு மின்சுற்று (ஐசி) ஒரு தருக்கப் பலகையில் பொருந்துமாறு வடிவமைக்கப்படுவது போல, ஏற்கெனவே உள்ள ஒரு மென்பொருள் கூறினை ஒரு நிரலுக் குள் பொருந்துமாறு வடிவமைத்தல்.

software interrupt : மென் பொருள் இடையீடு : ஒரு மென் பொருள் INT அறிவுறுத்தத்தின் மூலம் ஏற்படுத்தப்படும் இடையீடு.

software librarian : மென் பொருள் நூலகர் : ஒரு நிறுமத்தில், வட்டுத் தொகுதிகள், நெகிழ்வட்டுகள், காந்த நாடாக்கள் போன்ற பெருமளவு மென் பொருள் தொகுதிக்கு பொறுப்பாகவுள்ள ஆள்.

software license : மென்பொருள் உரிமம் : ஒரு மென்பொருளை கொள்வினை செய்பவர் கையெழுத்திட்டுக் கொடுக்கும் ஒப்பந்தம். இதன்படி, வாங்கும் மென்பொருள்களை மறு விற்பனை செய்வதில்லை என்று வாங்குபவர் உறுதி மொழியளிக்கிறார்.

software maintenance : மென் பொருள் பராமரிப்பு;மென் பொருள் பேணல் : தற்போதுள்ள செயல்முறைகளில் தவறுகளைக் கண்டுபிடிப்பதற்கும், நீக்குவதற்குமான செய்முறை. இது பராமரிப்புச் செயல்முறையாளர்களால் செய்யப்படுகிறது.

software monitor : மென் பொருள் கண்காணிப்பி;மென் பொருள் திரையகம் : செயல் புரிவதை அளவிடும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் செயல்முறை.

software package : மென் பொருள் தொகுதி;மென்பொருள்தொகுப்பு; மென் பொருள் பொதி : தொடர்புடைய கணினிச் செயல்முறைகளின் தொகுதி. இதில் பெரும்பாலும் ஒரு சேமிப்புச் சாதனத்தில் (நெகிழ் வட்டு) சேமித்து வைக்கப்பட்டுள்ள செயல்முறைகள்.

software patent : மென்பொருள் காப்புரிமை.

software piracy : மென்பொருள் திருட்டு;கணினி செயல்முறைத் திருட்டு; மென்பொருள் களவு : வணிக முறையிலான அல்லது காப்புரிமையுள்ள மென் பொருள்களை, உருவாக்கியவரின் அனுமதியின்றிப் படி யெடுத்தல்.

software portability : மென் பொருள் தகவமைத் திறன்;மென்பொருள் பெயர்வுத் திறன்;மென்பொருள் ஏற்புடைமை : ஒரு கணினிச் சூழலி லிருந்து இன்னொரு சூழலுக்கு ஒரு செயல்முறையை எளிதாக நகர்த்தும் திறன். கணினித் தொழிலில் மூன்றாம் தரப்பு மென்பொருள் அதிகம் பரவி விட்டதால், இந்தத் திறன் மென் பொருள்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது.

software product : மென் பொருள் விளைபொருள் : செயல்முறைகள் தரவு ஆவணமாக்கும் சில சமயம் விற்பனையாளர் உதவி ஆகியவை அடங் கியுள்ள விற்பனையாளர் தொகுதி. இது செயல்முறைப் படுத்தும் பொருள் என்றும் அழைக்கப்படும்.

software protection : மென் பொருள் பாதுகாப்பு;மென் பொருள் காப்பு : மென்பொருள்களை அனுமதியின்றிப் படியெடுப்பதைத் தடுப்பதற்கான பாதுகாப்பு.

software publisher : மென் பொருள் வெளியீட்டாளர்;மென் பொருள் பதிப்பாளர் : மென் பொருள் தொகுதிகளை வெளியிட்டு, விற்பனை செய்கிற வணிகம்.

software publishing : மென் பொருள் பதிப்பீடு : வழக்கத்துக்கு மாறான மென்பொருள் தொகுப்புகளை வடிவமைத்து, உருவாக்கி வினியோகித்தல்.

software resources : மென் பொருள் ஆதாரம்;மென்பொருள் மூலம்; மென்பொருள் வளம் : கணிப்புப் பொறியமைவுடன் இணைவுடைய மென்பொருள்களைக் குறிக்கும் செயல் முறை மற்றும் தரவு ஆதாரங்கள்.

software science : மென்பொருள் அறிவியல் : கணினிச் செயல் முறைகளின் அளவிடக்கூடிய பண்புகள் தொடர்பான ஆய்வுத் துறை.

software stack : மென்பொருள் அடுக்கு : நினைவகத்தில் அமைக் கப்பட்டுள்ள அடுக்கு.

software suite : மென்பொருள் கூட்டுத்தொகுப்பு.

software system : மென்பொருள் பொறியமைவு;மென்பொருள் முறைமை : ஒரு கணினிப் பொறியமைவில் பயன்படுத்தப்படும் கணினிச் செயல்முறைகள் அவற்றின் ஆவணமாக்கம் ஆகியவற்றின் முழுத்தொகுதி.

software technology : மென் பொருள் தொழில்நுட்பம்;கணினி செயல்முறை தொழில் நுபம்.

software term : மென்பொருள் சொல் : கணிப்பொறி அமைப்பைக் கட்டுப்படுத்தி வன்பொருளை இயக்குவதுபோல் அல்லாமல் மென்பொருள் தொகுதி நிரல் தொடரைக் குறிப்பிடும் மாற்றுச் சொல். கணினி அமைப்பின் மென் பொருள் பயன்பாடுகள், நிரல் தொடர்கள் மற்றும் அமைப்பு நிரல் தொடர்களாகப் பிரிக்கலாம்.

software tool : மென்பொருள் கருவி : மற்ற மென்பொருள் செயல் முறைகளை உருவாக்குவதற்கு உதவும் செயல்முறை. இது, வடிவமைப்பு, குறியீடிடுதல், தொகுத்தல் போன்றவற்றைச் செய்ய பயன்படுத்துவோருக்கு உதவுகிறது.

software transportability : மென் பொருள் இடம் பெயர் திறன்;மென் பொருள் மாற்றத் திறன்;மென்பொருள்அனுப்பப்படும் தன்மை : ஒரு கணினிக்காக எழுதப்பட்ட ஒரு செயல் முறையை மற்றொரு கணினி மாற்றி, மாற்றம் எதுவுமின்றி செயல்படுத்தும் திறன்.

softwhite : மென்வெண்மை.

solar cell : சூரியச் சிற்றம்;சூரிய மின்கலம் : வெப்பக்கதிர் வீச்சினை ஈர்த்து மாற்றம் செய்கிற மின்கடத்தா மின்னியல் சந்திப்புச் சாதனம். இதில் சூரிய ஒளியின் ஆற்றல் நேரடியாகவும் திறம்படவும் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.

solaris 2. 0 : சோலாரிஸ் 2. 0 : சன் சாஃப்ட் நிறுவனம் தயாரித்துள்ள ஸ்பார்க் கணினிகள், சொந்தக் கணினி ஆகியவற்றுக்கான பன்முகப்பணிச் செயற்பாட்டுப் பொறியமைவு. இது சோலாரிஸ் 1. 0 (ஸ்பார்க் மட்டும்) உடன் இணைக்கக்கூடியது. இது பகிர்மான கணிப்புக்கு வடிவமைக்கப்பட்டது. TCP/IP மரபு முறை இதில் அடங்கும்.

solder mask : பற்றாசு மூடி : ஓர்ப்அச்சடித்த சுற்றுவழிப் பலகையில், பற்றாக செய்யவேண்டிய பகுதிகளை மட்டும் மூடாமலிருக்கும் மின்காப்புத் தோரணி.

solenold : சோலனோல்ட் : ஒரு மின்சுற்று வழியை மூடுகிற காந்த விசை. இது பெரும்பாலும் இடை மாற்றீடாகப் பயன்படுகிறது.

சோலனோல்ட

solicitation : கோரிக்கை;அழைத்தல் : மென்பொருள்கள் வன்பொருள்கள் அல்லது சேவைகளுக்கான ஏலங்களைப் பணிந்தனுப்பும்படி விற்பனை யாளர்களிடம் கோருதல். solid model : திண்ம மாதிரியம்.

solid modeling : திடநிலை உருமாதிரி : திடப்பொருள்களின் உருக் காட்சியை உருவாக்குவதற்கான கணித உத்தி. இது வடிவத்திலிருந்து குறைந்த உருவமுடையது. கம்பிச் சட்டகம், மேற்பரப்பு உருமாதிரி போலன்றி திடநிலை உருமாதிரிப் பொறியமைவுகள் எல்லா மேற்பரப்புகளும் சந்திக்கும்படி செய்து, பொருள் வடிவ கணித அளவில் துல்லியமாக அமையுமாறு செய்கிறது. திடநிலை உருமாதிரியின் உள்ளடக்கங்களைப் புலப்படுத்துவதற்காக அதனைக் கூறிடலாம்.

solid state : திடநிலை;திடநிலை சாதனம் : ஒருங்கிணைந்த மின்சுற்று வழிகள், மின்மப் பெருக்கிகள் போன்ற திடப்பொருள்களில் மின்னியல் அல்லது காந்த நிகழ்வுகளைப் பொறுத்து அமைந்திருக்கும் மின்னணுவியல் அமைப்பிகள்.

solid state cartridge : திடநிலைப் பொதியுறை;திடநிலைப் பெட்டி; திடநிலைப் பேழை;திண்ம நிலைப் பேழை : பல நுண்கணினிப் பொறி யமைவுகளுடன் பயன்படுத்தப்படும் தகவமைவிலுள்ள செயல் முறைப்படுத்திய செருகி.

solid state device : திடநிலைச் சாதனம்;திண்ம நிலைக் கருவி : திடநிலை மின்னணுச் சுற்று வழித் தனிமங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட சாதனம்.

solid-state disk drive : திண்ம நிலை வட்டு இயக்ககம் : காந்த முறைச் சேமிப்பகத்துக்குப் பதிலாக ரேம் நினைவகச் சிப்புகளில் ஏராளமான தகவலைச் சேமித்து வைத்துக்கொள்ளும் சேமிப்புச் சாதனம்.

solid state memory : திடநிலை நினைவகம் : எந்திர பாகங்கள் எதுவு மில்லாத ஒரு மின்மப் பெருக்கம் செய்யப்பட்ட மின் கடத்தி அல்லது மெல்லிய சுருள்.

solid state relay : திடநிலை அஞ்சல் : எந்திரபாகங்கள் இல்லாத அஞ்சல். இதிலுள்ள விசைச் செயல்முறைகள் அனைத்தும் மின்கடத்திகள் அல்லது மென்சுருள் அமைப்பிகள்.

solver : தீர்வு வழங்கி;விடை வழங்கி : உருவாக்கம் செய்வதற்கு விரிதாளை அனுமதிக்கிற கணிதச் செயல்முறைகள்.

SOM : சாம்;எஸ்ஓஎம் : முறைமை பொருள் மாதிரியம் எனப்பொருள் படும் System Object Model என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். கோர்பா (CORBA) தரவரையறைகளை செயல்படுத்துகின்ற,ஐபிஎம் மின் மொழிசாராக் கட்டுமானம்.

SONET:சோநெட்:ஒத்திசை ஒளிவப் பிணையம் என்று பொருள்படும் Synchronous Optical Network என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். அதிவேகத் தகவல் பரிமாற்றத்துக்கு(51.8:1 எம்பிபீஎஸ் முதல் 2.48 ஜிபிபீஎஸ் வரை)வழி வகுக்கும் இழைஒளித் தகவல் தொடர்பு தர வரையறைகளின் ஒரு வகைப்பாடு.

.son file:மகவுக் கோப்பு.

SOP:எஸ்ஓபி:சொந்தச் செயற்பாட்டு நடைமுறை என்று பொருள்படும் Standard Operating Procedure என்பத்ன் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

sort:பிரிப்பு:பிரி;வரிசைப் படுத்தல்;இணக்கப்படுத்து:வகைப்படுத்து: 1.பதிவேடுகளை ஒரு தருக்கமுறைப்படி அமைத்தல்.ஒரு கணினியில், காந்த வட்டுகளை அல்லது நாடாக்களைப் பயன்படுத்திப் பெரும்பாலும் பிரிப்பு செய்யப்படுகிறது. 2.வட்டில் அல்லது நாடாவிலுள்ள பதிவேடுகளைப் பிரித்தமைக்கிற பயன்பாட்டுச் செயல்முறை.

sort algorithm:வகைப்பாட்டு எண்மானம்;வரிசைநெறிமுறை: தகவல்களை ஒரு புதிய வரிசை முறையில் மறுபடியும் ஒழுங்கு படுத்துவதற்கான சூத்திரம்.

sort effort:பிரிப்பு முயற்சி;வரிசைப்படுத்தும் முயற்சி:ஒழுங்கற்ற பட்டியலை ஒழுங்கு படுத்துவதற்குத் தேவைப்படும் நிறுத்தங்களின் எண்ணிக்கை.

sorter:பிரிப்பி;வகைப்படுத்தி;வரிசையாக்கி.

sort generator:பிரிப்பி உருவாக்கி;வகைப்படுத்தல் உருவாக்கி; வரிசையாக்கி:ஒட்டத்தை உண்டாக்குவதற்கான ஒரு பிரிப்புச் செயல்முறையை உருவாக்குகிற செயல்முறை.

sorting:பிரித்தல்;பிரிப்பி;வரிசைப்படுத்தி:முன்பே தெரிந்தெடுத்த வரிசை முறைப்படி ஒர் அட்டைப் பதிவேடுகளின் தொகுதியைப் பிரித்தமைக்கும் சாதனம.

sort key:வகைப்பாட்டு விசை:கோப்பின் வரிசைமுறையினைக் கட்டுப்படுத்துகிற,ஒரு பதிவேட்டிலுள்ள புலம் அல்லது புலங்கள்.

sort/merge:வரிசையாக்கு/ஒன்று சேர்ப்புநிரல்.

sort/merge programme:பிரி/சேர் நிரல் தொடர்;வரிசை படுத்து/சேர்ப்பு நிகழ்வு:வரையறுக்கப் பட்ட வரிசையில் பதிவேடுகளைப் பிரிக்கவோ சேர்க்கவோ பயன் படுத்தப்படும் பொதுவான செயல்முறை.

sort order : வரிசை ஒழுங்கு.

sound bandwidth : ஒலிக்கற்றை அகற்சி : ஒலி அலைவெண்களின் வீச்செல்லை. மனிதரின் காது ஏறத்தாழ 20 முதல் 20, 000 Hz ஒலி வீச்சைக் கேட்க முடியும். ஆனால் மனிதரின் குரலுக்கு வீச்செல்லை 3, 000Hz மட்டுமே.

sound buffer : ஒலி இடையகம் : கணினியிலிருந்து ஒலிபெருக்கிகளுக்கு அனுப்பப்பட இருக்கும் ஒலித்தகவலின் துண்மிப் (பிட்) படிமங்களைச் சேமிக்கப் பயன்படும் நினைவகப் பகுதி.

sound card : ஒலி அட்டை : பீசி ஒத்தியல்புக் கணினிகளில் இருக்கும் ஒருவகை விரிவாக்க அட்டை. ஒலியைப் பதிவு செய்ய, ஒலியை மீண்டும் இசைக்கச் செய்ய முடியும். ஒரு WAV அல்லது MIDI கோப்புகளை அல்லது ஒரு இசைக் குறுவட்டிலிருந்து பாடல்களைக்கேட்க முடியும். தற்காலத்தில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான கணினிகளில் ஒலி அட்டை தனியாக இருப்பதில்லை. தாய்ப்பலகையிலேயேஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

sound clip : ஒலித்துணுக்கு;ஒலி நறுக்கு : ஒரு குறுகிய கேட்பொலித் துணுக்கைக் கொண்டுள்ள ஒரு கோப்பு. பெரும்பாலும் ஒரு நீண்ட இசைப் பதிவிலிருந்து எடுக்கப்பட்ட சிறிய ஒலித் துணுக்கு.

sound editor : ஒலித்தொகுப்பி;ஒலி திருத்தி : பயனாளர் ஒலிக் கோப்புகளை உருவாக்கிக் கையாள வகை செய்யும் ஒரு நிரல்.

sound format : ஒலி வடிவம்.

sound generator : ஒலி இயற்றி;ஒலி உருவாக்கி : செயற்கை ஒலியை உருவாக்கும் கருவி. ஒரு சிப்புவாக அல்லது சிப்பு நிலை மின்சுற்றாக இருக்கலாம். மின்னணுச் சமிக்கைகளை உருவாக்கி, ஒலிபெருக்கிகள் வழியாக செயற்கை ஒலியை ஒலிக்கச் செய்யலாம்.

sound hood : ஒலிக் கவிகை;ஓசை மூடி;ஒலிக்கூடு : பயன் பாட்டின் போது ஒசையைக் குறைப்பதற்காக அச்சடிப்பி மீது பொருத்தப்படும் சாதனம். இதனை"ஒசை அடைப்பு"என்றும் கூறுவர்.

sound recorder : ஒலிப்பதிவி.

Sound Sentry : ஒலிக் காவலாள்;ஒலிக் கண்காணி : சரியாகக் காதுகேளாதோர், மிகுந்த இரைச்சலுக்கிடையே பணி யாற்றுவோர்- இவர்களுக்காக விண்டோஸ் 95/98 இயக்க முறைமையில் இருக்கும் ஒரு வசதி. கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது எப்போ தெல்லாம் பீப் ஒலியெழுப்பி எச்சரிக்கை செய்யப்படுகிறதேர் அப்போதெல்லாம் திரையில் பயனாளரின் கவனத்தைக் கவரும் வண்ணம் எச்சரிக்கைச் சின்னம் தோன்றும். திரை பளிச்சிடலாம் அல்லது பணியாற்றும் சாளரத்தின் தலைப்புப் பட்டை மினுக்கலாம்.

sound waves : ஒலி அலை.

source : ஆதாரம்;மூலம்;மூலா தாரம் : ஒரு களவிளைவு மின்மப் பெருக்கியின் மூன்று முனையங்களில் அல்லது மின்வாய்களில் ஒன்று. வடிகால் வாயிலுக்குப் பாய்கின்ற மின் விசை ஊர்திகளின் தோற்றுவாய்.

source code : ஆதார நிரல் தொடர்கள்;மூலக் குறிமானம்;ஆதாரக் குறிமுறை;மூல வரைவு : ஒரு கணினியால் செய்முறைப்படுத்துவதற்கு முன்புள்ள மூலவடிவிலுள்ள நிரல் தொகுதி. கணினியானது ஆதாரக் குறியீட்டினைக் கணினி புரிந்து கொள்ளக்கூடிய ஒரு குறியீடாகத் தானாகவே மாற்றுகிறது.

source computer : ஆதாரக் கணினி;மூலக் கணினி : ஆதாரச் செயல் முறையை ஒர் இலக்குச் செயல்முறையாக மொழிபெயர்க்கப் பயன்படும் கணினி.

source data : மூலத் தரவு : ஒரு கணினிப் பயன்பாடு, அடிப்படையாகக் கொண்டுள்ள மூலத் தரவுகள்.

source data acquisition : மூலத்தரவுக் கொள்முதல் : பட்டைக் குறி மானப் படிப்பி அல்லது பிற வருடல் சாதனங்களைப்போல, தரவுகளை உணரும் செயலாக்கம். அல்லது ஒலித் தரவுகளைப் பெறுவதையும் குறிக்கும்.

source data automation : ஆதாரத் தரவு தானியக்கம்;மூலத்தரவு தானியங்கி : தரவு பதிவுக்கான தானியங்கும் முறைகளைப் பயன்படுத்துதல். மரபுத் தரவுப் பதிவுமுறைகளில் தேவைப்படும் வேறுபல நடவடிக்கைகளையும், ஆட்களையும், தரவு சாதனங்களையும் குறைப்பதற்கு அல்லது தவிர்ப்பதற்கு இது உதவுகிறது.

source deck : ஆதார அடுக்கு மூலப்பெட்டி : ஆதாரமொழியில் ஒரு கணினிச் செயல் முறையைக் கொண்டிருக்கிற அட்டை அடுக்கு. இது "பொருள் அடுக்கு"என்பதிலிருந்து வேறுபட்டது.

source directory:மூலக் கோப்பகம்:ஒரு கோப்பு நகலெடுப்புச் செயல்பாட்டில் நகலெடுக்கவிருக்கும் கோப்புகளின் மூலப்பதிப்புகள் இருக்கும் கோப்பகம்.

source disk:ஆதார வட்டு;மூல வட்டு:தரவுகளில் எதிலிருந்து பெறப்படுகின்றனவோ அந்த வட்டு இது இலக்கு வட்டு என்பதிலிருந்து வேறுபட்டது.

source document:ஆதார ஆவணம்;ஆதார மொழி;மூலஆவணம்: ஆதாரத் தரவுகளை எதிலிருந்து எடுக்க முடியுமோ அந்த மூல ஆவணம். பற்றுச் சீட்டு,விற்பனைச் சீட்டு போன்றவை இதற்கு எடுத்துக்காட்டு.

source drive:ஆதார இயக்கி:தரவுகள் எதிலிருந்து பெறப் படுகின்ற னவோ அந்த வட்டு அல்லது நாடா இயக்கி.இது இலக்கு இயக்கி என்பதிலிருந்து வேறுபட்டது.

source file:ஆதாரக் கோப்பு:பொதுவாக ஒர் உயர்நிலை மொழியில் எழுதப்பட்டுள்ள ஒரு செயல்முறை.இது,ஒரு மொழிபெயர்ப்பு அல்லது தொகுப்புமூலம் பொருள் கோப்பினை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது.

source language:ஆதார மொழி;மூல மொழி:ஒர் இணைப்பு மொழி போன்ற ஒரு தாழ்நிலை மொழி அல்லது பேசிக்,ஃபோர்ட்ரான்,கோபால் போன்ற ஆதாரச் செயல்முறை எழுதப்படுகின்ற ஒர் உயர் நிலைமொழி.

source media:ஆதார ஊடகம்;மூல ஊடகம;ஆதாரச சாதனம:மூலத் தரவு எடுக்கப்படுகிற ஆதார ஆவணங்கள்.

source programme:ஆதாரச் செயல்முறை;ஆதார நிகழ்வு;மூல நிரல் தொடர்:பேசிக்,ஃபோர்ட்ரான்,கோபால்,பாஸ்கல் போன்ற ஆதார மொழி யில் அல்லது இணைப்பு மொழியில் எழுதப்பட்டுள்ள கணினிச் செயல்முறை.இது ஒரு மொழி பெயர்ப்புச் செய்முறைக்கு உட்பட வேண்டும்.

source register:ஆதாரப் பதிவேடு;மூலப் பதிவு;மூலப் பதிவகம்: மாற்றம் செய்யப்படும் ஒரு தரவு சொல்லில் அடங்கியுள்ள பதிவேடு.

source(the):மூலம்;சோர்ஸ்:"சோர்ஸ் தொலைத் தொடர்புக் கழகம்" என்ற அமைவனத்தினால் நடத்தப்படும் தரவு பயன்பாட்டுப் பணி. சந்தாதாரர்களுக்கு இந்தச் சேவை கிடைக்கும். கணினி பயன்பாட்டாளர்கள், விளையாட்டுகள் ஆடவும், தரவு ஆதாரங்களை அணுகவும், மின்னஞ்சல் ஆனுப்பவும், பெறவும், செய்தியிதழ்கள் படிக்கவும் இன்னும் பல காரியங்களுக்கும் பயன்படுகிறது.

Source Statement : ஆதார அறிக்கை : ஒரு செயல் முறைப்படுத்தும் மொழியிலுள்ள (ஆதார மொழி) நிரல் சொற்றொடர்.

source worksheet : மூலப் பணித்தாள்.

SPA : எஸ்பிஏ;ஸ்பா : 'பொறியமைவுகள் மற்றும் நடைமுறைகள் சங்கம்' என்று பொருள்படும் Systems and Procedures Association என்பதன் தலைப் பெழுத்துச் சுருக்கம். கருத்தரங்குகள் தொழில்முறைக் கல்வி, ஆராய்ச்சி ஆகியவை நடத்தி மேலாண்மைப் பொறியமைவுகளையும் நடைமுறை களையும் மேம்படுத்துவது இதன் நோக்கம்.

space : எழுத்திடவெளி;இடவெளி : 1. எழுத்துகளிடையிலுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வெற்றெழுத்துகள். 2. இரும சுழி (பூஜ்யம்) க்கு இணையான தொடர்பு வழி நிலை.

spacebar : இடவெளி விசை;இடவெளிப் பட்டை;இட வெளிச் சட்டம் : ஒரு விசைப் பலகையின் அடியிலுள்ள இட வெளிகளை உண்டாக்குவதற் கான நீண்ட குறுகிய விரற் கட்டை. இதனை ஒருமுறை அழுத்தினால், இது வாசகத்தில் செருகல் புள்ளியில் இடைவெளி உண்டாக்குகிறது.

space character : இடவெளி எழுத்து;இடவெளிக்குறி : விசைப் பலகையில் இட வெளிப்பட்டையை அழுத்துவதால் பதிவாகும் குறி. திரையில் அது வெற்று இடவெளியாக இருக்கும்.

space-division multiplexing : இடவெளிப் பிரிவு ஒன்றுசேர்ப்பு : மனிதர்களால் இயக்கப்பட்ட இணைப்பு பலகைகளுக்குப் பதிலாக முதன் முதல் புகுத்தப்பட்ட தகவல் தொடர்பு ஒன்றிணைப்பின் தானியங்கு வடி வம். ஆனால் அதன்பின் இம்முறைக்குப் பதிலாக அலை வரிசைப் பிரிவு ஒன்றிணைப்பு முறை (FDM) அறிமுகப்படுத்தப் பட்டது. இப்போது நேரப் பிரிவு ஒன்றிணைப்பு முறை (TDM) பின்பற்றப்படுகிறது. spaghetti code : குழப்பக்யீடு;திருகு முறுகுக் குறிமுறை : ஒரு நிரலின் இயல்பான பாய்வு கெட்டுக் குழப்பத்தில் முடியும் நிலை. பெரும்பாலும் பொருத்தாத, அதிகப்படியான (GOTC) அல்லது JUMP கட்டளைகளைப் பயன்படுத்துவதால் இந்நிலை ஏற்படும்.

spambot : குப்பைசேர்த்தி : 'இணையத்திலுள்ள செய்திக் குழுக்களுக்கு தேவையற்ற செய்திகளையும் கட்டுரைகளையும் ஏராளமாகத் தாமாகவே திரும்பத்திரும்ப அனுப்பி வைக்கும் ஒரு நிரல்.

span : வீச்சளவு : மதிப்பளவுகளின் வீச்சில் மிக உயர்ந்த மதிப்பளவுக்கும் மிகக்குறைந்த மதிப்பளவுக்குமிடையிலான வேறுபாடு.

spanning tree : வீச்சளவு மரம் : இரு பண்புகளைக் கொண்ட ஒரு வரைபடத்தில் உட்படம் (1) அது ஒருமரம்; (2) மூல வரைபடத்தின் அனைத்து மைய முனைகளையும் கொண்டிருக்கும்.

SPARC : ஸ்பார்க் : அடுக்கு நிலை செயலிக் கட்டுமானம் என்று பொருள்படும் Scalable Processor Architecture என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நுண்செயலி வரன்முறை. ரிஸ்க் (RISC-Reduced Instruction set Computing-சுருக்க நிரல் தொகுதிக் கணிப்பணி) கட்டுமானத்தின் அடிப்படையில் அமைந்தது.

spare parts : உதிரி பாகங்கள்;மாற்றுக் கருவிகள்.

sparse array : அடர்த்தியற்ற வரிசை;அடர்விலா வரிசை : பெரும்பாலான பதிவுகள் சுழி (பூஜ்யம்) யின் மதிப்பளவைக் கொண்டுள்ள வரிசை.

spatial data management : இடப்பரப்பு தகவல் மேலாண்மை : தரவுகளை எளிதாகப் புரிந்து கொண்டு கையாளும் பொருட்டு, கணினித் திரையில் சின்னங்களை அடுக்கி வைத்திருப்பதைப்போல ஒரு குறிப்பிட்ட இடப் பரப்பில் தரவுகளைப் பொருள்களின் தொகுதியாக உருவகிக்கும் முறை.

spatial digitizer : இடத்தொடர்பு இலக்கமாக்கி;இடம் சார்ந்த எண் மானமாக்கி : கணினி வரை கலையில் முப்பரிமாணப் பொருள்களை உருவாக்கப்பயன்படுகிற சாதனம்.

spawn : கான் முளை : நடப்புச் செயல்முறையிலிருந்து மற்றொரு செயல்முறையைத் தொடங்குகிறது. spead, transmission : பரப்பு வேகம்.

speaker : ஒலிபெருக்கி.

spec : ஸ்பெக் : 'தனிக்குறிப்பீடு'எனப் பொருள்படும்'Specification'என்ற ஆங்கிலச் சொல்லின் சுருக்கம்.

special character : சிறப்பெழுத்து;சிறப்பு உரு : ஒர் எழுத்தாகவோ இலக்கமாகவோ, வெற்றிடமாகவோ இல்லாத வரைகலை எழுத்து. எடுத்துக் காட்டு கூட்டல் குறியீடு, சமக்குறியீடு, உடுக்குறி, டாலர் குறியீடு, காற்புள்ளி முதலியன.

special function key : சிறப்புப் பணி விரற்கட்டை;சிறப்புச் செயற்பாட்டு விசை : ஒர் எந்திரச் செயற்பணியைக் கட்டுப்படுத்துகிற விசைப்பலகை யிலுள்ள ஒரு விரற்கட்டை. இது, ஒரு குறிப்பிட்ட கணினிச்செயற் பாட்டினைத் தொடங்கி வைக்கிறது.

special interest group (SIG) : தனி நலக் குழுமம்;சிறப்பு ஆர்வக்குழு : ஒர் அமைவனத்தினுள் உள்ள ஒரு தனிக்குழுமம். இது ஒரு தனிப்பொருட் பாடு குறித்தக் கூட்டங்கள் நடத்தும்;கருத்தரங்குகளை நடத்தும்;ஆவணங் களை வெளியிடும். இந்தக் குழுமங்கள் தாங்களே தங்கள் அலுவலர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன. தங்கள் பணிகளை வகுத்துக் கொள்கின்றன. தாங்களே நிதி திரட்டிக் கொள்கின்றன.

special key : சிறப்புச் சாவி.

special libraries association (SLA) : சிறப்பு நூலகச் சங்கம் : நூலகங்கள் மற்றும் தகவல் வல்லுநர்களின் பன்னாட்டு அமைவனம். வங்கிகள் அருங் காட்சியகங்கள், சட்ட நிறுவனங்கள் போன்ற பல்வேறு தனி நலக் குழுமங் களுக்கான ஆதார மையங்களை இது நிறுவுகிறது.

special purpose : சிறப்பு நோக்கம் : முக்கியமான மாறுதல்கள் ஏதுமில் லாமல், ஒரு குறிப்பிட்ட வகைப் பயன்பாடுகளுக்கான நோக்கம். இது பொது நோக்கம் என்பதிலிருந்து வேறுபட்டது.

special purpose computer : சிறப்பு நோக்கக் கணினி : சில குறிப்பிட்ட வகைகளிலான எண்ணல் அல்லது தருக்க சிக்கல்களைத் தீர்ப்பதற்காக வென்றே உருவாக்கப்பட்ட கணினி. தானியங்கி ஒளிப்படக் கருவி முதல் வீட்டுச் சாதனங்களி லிருந்து விண்கலங்களைக் கண்காணிப்பதுவரை பலவகையான பணிகளைச் செய்யத்தக்கது.

special purpose programming language : சிறப்பு நோக்க நிரல் தொடர் மொழி : ஒரு குறிப்பிட்ட வகையான சிக்கல் அல்லது பயன்பாட்டினை மட்டும் கையாளும் வகையில் உருவாக்கப்பட்ட நிரல்தொடர் மொழி.

specialists : வல்லுநர்கள்.

special symbol : சிறப்புக் குறியீடு.

specific address : குறிப்பிட்ட முகவரி.

specification : விளக்கக்குறிப்பு : விவர வரையறை : குறிப்பீடு : ஒரு சாதனம், செயல்முறை அல்லது உற்பத்திப் பொருளின் தேவைப்படும் தன்மைகள் பற்றிய விளக்கமான குறிப்பு.

specification sheet : விளக்கக் குறிப்பு தாள்;விவர வரையறை தாள் : ஆர்பீஜி (RPG) சொற்றொடர்களை குறியீடு செய்யப் பயன்படும் படிவம்.

specification systems : முறைமை வரன்முறை.

specific fields : குறிப்பிட்ட துறைகள்.

specs : ஸ்பெக்ஸ் : specifications என்பதன் குறும்பெயர்.

spectral colour : பட்டை ஒளி வண்ணம் : கணினி வரைகலையில் ஒளியின் ஒர் ஒற்றை அலை நீளத்தின் வண்ணம். இந்த ஒளிப்பட்டையில் அடிப்பகுதியில் செங்கருநீல வண்ணத்தில் தொடங்கி மேல்நோக்கி நீலம், ஊதா, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு என்று சென்று சிவப்பு வண்ணத்தில் முடியும்.

spectral response : பட்டை ஒளிப்பதில் செயல் : பார்க்கும் ஒளியின் வண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு ஒளியுணர்வுச் சாதனத்தின் மாறியல் வெளிப்பாடு.

spectrum : நிறமாலை : ஒரு குறிப்பிட்ட வகைக் கதிர்வீச்சின் அலைவரிசை வரம்பெல்லை ஆகும். சூழ்நிலையைப் பொறுத்து ஒரு பொருளினால் உமிழப்படலாம் அல்லது உட்கவரப்படலாம்.

speech recognition : பேச்சு கண்டறிதல்;பேச்சறிதல் : நினைவகத்தில் உள்ள குரல் அமைப்புகளில் நுண் ஒலி பெருக்கியிலிருந்து வரும் சமிக்கைகளின் அமைப்புகளை ஒப்பிட்டு சேர்க்கும் கணினியின் திறன். இதன்மூலம் பேசவரும் சொற்களை அது அறிந்து கொள்கிறது. speech synthesis : பேச்சு பிரித்தறிதல்;பேச்சுருவாக்கம் : குறிப்பிடப்பட்ட பேச்சுப் பகுதிகளை உண்மையான சொற்கள், சொற்றொடர்களாகவும் ஒலியன்களை சொற்களாகவும் வரிசைப் படுத்தித் தருவது.

speech synthesizer : பேச்சு பிரிக்கும் பொறி;பேச்சுருவாக்கி : எண்முறைக் குறியீட்டை புரிந்து கொள்ளக்கூடிய பேச்சாக மாற்றும் சாதனம். குறியீட்டை ஒலிபெருக்கி மூலம் அனுப்பி செயற்கை மனிதக்குரலாக பேச வைக்கிறது.

speed : செயல் வேகம்.

speed buffering : வேக இடையீடு : உட்பாட்டுக்கும் வெளிப்பாட்டுக்கும் இடையிலான வேக வேறுபாடுகளை ஈடு செய்யக்கூடிய உத்தி. இடை யீட்டில் தரவுகள் அதிகவேகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, குறைந்த வேகத்தில் வெளியிடப்படுகிறது அல்லது குறைந்த வேகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதிவேகத்தில் வெளியிடப்படுகிறது.

speed of electricity/light : மின்விசை/ஒளிவேகம் : ஏற்றத்தாழ வினாடிக்கு 2, 99, 311 கி. மீ. வேகம்.

speed of light : ஒளியின் வேகம்;ஒளி வேகம் : ஒளி பயணம் செய்யும் வேகம். ஒரு நொடிக்கு 2, 99, 768 கி. மீ. கள் என்பது கணினிகளுக்கும் வெளிப்புற உறுப்புகளுக்கும் இடையில் தரவுகளை அனுப்புவதற்கு ஆகும் நேரம்.

spell checker : சொற்பிழை திருத்தி;சொல்திருத்தி.

spelling checking : சொல் பிழை திருத்தம் : சொல் செயலகத்துடன் தொடர்புள்ள கணினி நிரல் தொடர். ஒரு சொற்பட்டியலுடன் தட்டச்சு செய்யப்பட்ட சொற்களை ஒப்பிட்டு எழுத்துப் பிழைகளைக் கூறுவது.

spew : கக்கல்;உமிழ்வு : இணையத்தில் அளவுக்கதிகமான எண்ணிக் கையில் மின்னஞ்சல் செய்திகளையோ, செய்திக் குழுக் கட்டுரைகளையோ வெளியிடல்.

spider : சிலந்தி : இணையத்தில் புதிய வலை ஆவணங்களைத் தேடி அவற்றின் முகவரிகளையும் உள்ளடக்கத் தகவலையும் ஒரு தரவுத் தளத்தில் சேமித்து வைக்கும் தானியங்கு நிரல். குறிப்பிட்ட கால இடைவெளி யில் தானாகவே இப்பணியைச் செய்து கொண்டிருக்கும். தேடு பொறிகள் மூலம் இத் தரவுத்தளத்தின் வாயிலாக வேண்டிய தரவுகளை எளிதாகத் தேடிப் பெறலாம். சிலந்தி நிரல்களை இணைய எந்திரன் (Internet Robot) என அழைக்கலாம்.

spider configuration : சிலந்தியுரு அமைப்பு : விநியோகிக்கப்பட்ட அமைவில் ஒரு வகை. இதில் பல்வேறு கட்டமைப்பு கணிப்பு அமைப்புகளின் நடவடிக்கைளை ஒரு மையக்கணினியமைவு கண்காணிக்கிறது.

spike : மின் துள்ளல் : குறுகிய உச்சமடையும் குறைந்த நேர வோல் டேஜ். திடீரென மின்சாரம் அதிகரிப்பது.

spindle : சுழல் முனை;சுழல் தண்டு : ஒரு வட்டு இயக்கியிலுள்ள சுழல் தண்டு. ஒரு நிலைவட்டில், தகடுகள் சுழல் முனையுடன் இணைக்கப்பட் டிருக்கும். அகற்றக்கூடிய ஒரு வட்டில், சுழல்முனை இயக்கியிலேயே இருக்கும்.

spindle motor : சுழல் தண்டு;விசைப் பொறி.

spin rate : சுழல் வேகம்.

spinwriter : சுழல் எழுது பொறி;சுழல் எழுதி : ஒரு குறிப்பிட்ட வகையான உயர்தர கணினி அச்சுப்பொறி.

spline : இசைவான வளைவு : கணினி வரைகலையில் வருவது. கணிதமுறையில் எளிதானதும் பிரிந்திருக்கும் தரவுப் புள்ளிகளைச் சேர்ப்பதற்கு அழகிய வழி. தரவுப் புள்ளிகளிடையே அழகிய விளைவு களையும் பரப்புகளையும் உருவாக்கப் பயன்படுவது மட்டுமல்லாது அளவுகோல்களுக்கிடையே நகர்த்தவும் பயன்படுவது. உயிர்ப் படங்களில் முக்கிய பின்னணிகளை விளக்கப் பயன்படுவது.

split : பிரி.

split bar : பகுத்த பட்டை;பிரிந்த பட்டை.

split cell : கலம் பிரி.

spliting a window : சாளரத்தைப் பிரித்தல்;பலகணிப் பகுப்பு;சாளரப் பகுப்பு : ஒரு பல கணியை இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட பாளங் களாகப் பகுத்தல்.

split screen : பகு திரை.

split table : அட்டவணை பிரி.

split window : பிரிந்த பலகணி;பகு சாளரம் : Split Screen போன்றது.

spoken media : பேச்சு ஊடகம்.

spooting : ஏமாற்றுதல் : இணையத்தில் ஒரு தரவு, அனுமதி பெற்ற பயனாளர் ஒருவரிடமிருந்து அனுப்பப்பட்டது போன்ற ஒரு தோற்றத்தை உரு வாக்குதல். எடுத்துக்காட்டாக, ஒரு பிணையத்தில் அனுமதி பெற்ற பயனாளர் ஒருவரின் ஐபீ முகவரியைக் காட்டி ஏமாற்றி உள்ளே நுழைதல் ஐபீ-ஏமாற்றல் எனப்படுகிறது.

spool : சுருணை;சுருள் : 1. காந்த நாடா சுருணை. 2. காந்த நாடாவைச் சுருட்டுவது.

spooler : சுருளி : வேறு வேலைகளைச் செய்து கொண்டே அச்சுப் பொறியில் வன்படியை உருவாக்க கணினியை அனுமதிக்கும் நிரல் தொடர் அல்லது வெளிப்புறச் சாதனம்.

spooling : சுருட்டல் : 1. பல்வேறு உள்ளீடு/வெளியீடு சாதனங்கள் ஒரேநேரத்தில் இயங்க அனுமதிக்கும் செயல்முறை. தாங்கிகளின் மூலம் ஒரு கணினி அமைப்பு தரவுகளை அனுப்புதல் அல்லது பெறுதல். 2. அமைப்பின் வேறொரு பகுதி அதை செயலாக்கத் தயாராகும்வரை நாடா கோப்பு அல்லது வட்டில் தரவுகளை தற்காலிகமாக சேமிக்க அனுமதிப்பது.

spot : புள்ளி;குறியிடம் : ஒரு போஸ்ட்-ஸ்கிரிப்ட் அச்சுப்பொறியில் ஒளி-நிழல் வேறுபாட்டு செயலாக்கத்தின் மூலம் உருவாக்கப்படும் ஒரு கலவைப் புள்ளி. ஒரு குறிப்பிட்ட படப்புள்ளியின் (pixel) சாம்பல்நிற அளவைச் சரியாக வெளிப்படுத்த குறிப்பிட்ட தோரணியில் பல புள்ளிகள் ஒரு குழு வாக இடம் பெறுகின்றன.

spot colour : குறியிட நிறம்;புள்ளி நிறம் : ஒர் ஆவணத்தில் நிறத்தைக் கையாளும் ஒரு வழி முறை. ஒரு குறிப்பிட்ட நிறத்து மையினை வரை யறுத்து விட்டால் அந்த ஆவணத்தில் அதே நிறத்தைக் கொண்ட பகுதிகள் ஒரு தனி அடுக்காக அச்சிடப்படும். ஒவ்வொரு குறியிட நிறத்துக்கும் அச்சுப்பொறி ஒவ்வொரு அடுக்காக அச்சிடும்.

spot function : குறியிடச் செயல்பாடு : ஒளி-நிழல் வேறுபாட்டு அமைப்பில் ஒரு குறிப்பிட்ட வகைத் திரைக்காட்சி உருவாக்கப் பயன்படும் போஸ்ட்ஸ்கிரிப்ட் செயல்முறை.

spray can : தெளிப்பான்;பெயின்ட் பிரஸ் : பெயின்ட் போன்ற ஒரு வரைவோவிய பயன்பாட்டு மென்பொருளில் படிமம் ஒன்றில் புள்ளிகளின் தோரணியை உருவாக்கப் பயன்படும் கருவி.

spread sheet : அகலத்தாள்;விரிதாள் : சிற்றறைக் கட்டங்களாக தரவு அல்லது வாய்பாடுகளை வரிசைபடுத்துகின்ற நிரல் தொடர்களில் ஒன்று. பல வகையான வணிகப் பயன்கள் கொண்டது. லோட்டஸ் 1-2-3, எக்செல், சூப்பர்கால்க் போன்றவை வணிக விரிதாள் களில் புகழ் பெற்றவை.

spreadsheet package : விரிதாள் தொகுதி.

spreadsheet compiler : விரிதாள் தொகுப்பி : உருவாக்கிய விரிதாள் தொகுதியில்லாமல் இயங்குகிற விரிதாள்களை தனி நிலைச் செயல் முறைகளாக மொழி பெயர்க்கிற மென்பொருள்.

spreadsheet programme : விரிதாள் நிரல் : வரவு-செலவுத் திட்டம், நிதிநிலை அறிக்கை, முன்கணிப்பு மற்றும் பிற நிதி தொடர்பான பணிகளைச் செய்வதற்கென உருவாக்கப்பட்ட மென்பொருள் தொகுப்பு. தரவு மதிப்புகள் கட்டம் கட்டமான கலங்களில் எழுதப்படுகின்றன. வாய்பாடுகள் மூலம் தரவுகள் உறவுபடுத்தப்படுகின்றன. ஒரு கலத்தில் இருக்கும் மதிப்பினை மாற்றினால் தொடர்புடைய அனைத்துக் கலங்களிலுமுள்ள மதிப்புகள் மாற்றப்படும். விரிதாள் பயன்பாடுகள் பெரும்பாலும் வரைபட வசதிகளை யும் கொண்டிருக்கும். உரை, எண் மதிப்புகள் மற்றும் வரைபடங்களுக்கான எண்ணற்ற வடிவமைப்பு (formating) வசதிகளைக் கொண்டிருக்கும்.

spread spectrum : அகல் ஒளிக்கற்றை : அனுப்பு மற்றும் ஏற்புச் சாதனங்கள் இரண்டிலும் உள்ள தனிவகைத் தோரணிக்கேற்ப ஊர்தி அலைவெண்ணைத் தொடர்ச்சியாக மாற்றுகிற வானொலி அனுப்பீடு. ஒரே இடப்பரப்பில் பன்முகக் கம்பியில்லா அனுப்பீடுகளை அனு மதிப்பதற் காகவும் பாதுகாப்புக்காகவும் இது பயன்படுத்தப்படுகிறது.

spring tension : வில் இழுவிசை.

sprites : வில் இழுப்பிசை : முகப்பில் உள்ள பிறசெய்திகள் அல்லது வரைபடங்களோடு தொடர்பின்றி சுயேச்சையாக நகர்த்தக்கூடிய அதிக துல்லியம் உள்ள பொருள்கள். திரையில் உள்ள பொருள்களின் முன்பாக அல்லது பின்புறத்தில் நகர்ந்து தன்னுடைய அளவு மற்றும் நிறத்தை மாற்றிக் கொள்ளக் கூடியது. உயிர்ப்பட தொடர்களை உருவாக்க உதவுவது.

sprocket feed : பற்சக்கரச் செலுத்துகை : அச்சுப்பொறியில் தாளினை உட்செலுத்தும் அமைப்பு. பற்சக்கரம் போன்ற அமைப்பு தாளின் துளைகளில் பொருந்தி தாளை நகர்த்திச் செல்லும். இதில் பின் செலுத்துகை, இழுவைச் செலுத்துகை என இருவகை உண்டு.

sprocket holes : வழிப்படுத்து துளைகள் : அச்சுப்பொறியில் காகிதத்தை அனுப்புவதற்காக தொடர் எழுதுபொருளின் இரு பக்கங்களிலும் சம இடைவெளியில் துளைகளை இடுவது.

SPX : எஸ்பீஎக்ஸ் : 1. வரிசை முறைப் பொட்டலப் பரிமாற்றம் எனப் பொருள்படும் Sequen. ced Packet Exchange என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐஎஸ்/ஒஎஸ்ஐ நான்காம் அடுக்கான போக்குவரத்து அடுக்கில் (Transport Layer) செயல்படும் நெறிமுறை. நாவெல் நெட்வேரில் பயன் படுத்தப்படுகிறது. பொட்டலங்களை அனுப்பிவைக்க, எஸ்பிஎக்ஸ், செய்தி முடிந்துவிட்டதா என்பதை உறுதி செய்கிறது. பொதுவாக எஸ்பீஎக்ஸ்/ ஐபிஎக்ஸ் எனச் சேர்த்தே குறிப்பிடுவர். 2. சில வேளைகளில், ஒரு திசை எனப் பொருள்படும் Simplex என்ற சொல்லின் சுருக்கமாகவும் குறிக்கப்படும்.

square root : எண் வர்க்க மூலம்.

square wave : சதுர அகை : அலைமாணிமூலம் பார்க்கக்கூடிய எண்மானத் துடிப்பின் வரைகலை உருக்காட்சி. இது ஒரு குறிப்பிட்ட பரப்புவரை மிகவேகமாக எழுந்து, துடிப்பின் காலநீட்டிவரை மாறாமல் நின்று, துடிப்பின் முடிவில் வீழ்வதால் சதுர வடிவமாகத் தோன்றுகிறது.

squeezer : ஸ்குவீசர் : பேரளவு ஒருங்கிணைப்பு (எல்எஸ்ஐ) மின்சுற்றை அதன்மூல, பெரிய வடிவில் வடிவமைக்கும் நபர்.

. sr : . எஸ்ஆர் : ஒர் இணைய தளமுகவரி சுரினாம் நாட்டைச் சேர்ந் தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

SRAPI : எஸ்ஆர்ஏபிஐ;ஸ்ரேப்பி : குரலறி பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் எனப் பொருள்படும் Speech Recognition Application Programming Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். நாவெல், ஐபிஎம், இன்டெல், பிலிப்ஸ் டிக்டேஷன் சிஸ்டம்ஸ் போன்ற நிறுவனங்களின் கூட்டமைப்பு உருவாக்கிய குரலறிதல், உரையினைப் பேச்சாக மாற்றுதல் போன்ற தொழில்நுட்பத்துக்கான, பணித்தளம் சாரா பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம்.

SSA : எஸ்எஸ்ஏ : நேரியல் சேமிப்பகக் கட்டுமானம் என்று பொருள்படும் Serial Storage Architecture என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் நிறுவனத்தின் இடைமுக வரன்முறை. வளைக் கட்டிணைப்பு (Ring Topology) முறையில் சாதனங்கள் ஒழுங்கமைக்கப் படுகின்றன. ஸ்கஸ்ஸி சாதனங்களுடன் ஒத்திசைவானது. ஒவ்வொரு திசை யிலும் வினாடிக்கு 20 மெகா பைட் வரை தரவு அனுப்பி வைக்க முடியும்.

. st : . எஸ்டீ : ஒர் இணைய தள முகவரி சாவோ டோம்-பிரின்ஸ்பீ நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

stable : தொடக்குவிசை சுற்று.

stable tigger circuit : நிலை தொடக்கு விசைச்சுற்று.

stack : அடுக்கு : அடுக்கில் உள்ள பொருள்களை அவற்றின் நினைவக இடத்திற்கு முகவரியிடுவதற்குப் பதிலாக உள் நினைவகத்தில் சேமிக்கப் படும் வரிசைமுறை தரவுப் பட்டியல். அடுக்கின் மேற்பகுதியில் இருந்தோ அல்லது அடியில் இருந்தோ தகவல்களை கணினி எடுக்கிறது.

stacked job processing : அடுக்கப்பட்ட பணி செயலாக்கம் : கணினி அமைப்புக்குத் தருவதற்காக பல்வேறு வேலைகளை அடுக்கி வைக்க அனுமதித்து, அவைகளை ஒவ்வொன்றாக செய்ய அனுமதிக்கும் தொழில் நுட்பம். இயக்க வேண்டிய வேலைகளின் வரிசை அட்டைபடிப்பிக்குத் தரப்படு கின்றது. வேலை கட்டுப்பாட்டு அட்டைகளின்படி ஒவ்வொரு வேலையும் செய்யப்படுகிறது.

stacker : அடுக்கி.

stack pointer : அடுக்குச் சுட்டு;அடுக்குக் காட்டி : அடுக்கில் உள்ள இருப்பிடங்களைக் காட்டப்பயன்படும் சுட்டு. அடுக்கிலிருந்து ஒவ்வொரு புதிய தரவு வெளியே எடுக்கப்படும்போது அல்லது உள்ளே அனுப்பப் படும்போது ஒவ்வொரு எண் கூடிக்கொண்டே போகும்.

stack overflow : அடுக்குத் ததும்பல் : அடுக்கில் புதிய இனங்களுக்கு இடமில்லாத வகையில் ஏற்படும் பிழை நிலை. ஒர் இனம் வரவழைக்கப் பட்டு, அடுக்குக் காலியாக இருக்கும்போது அந்த அடுக்கு பற்றாக் குறையாக இருக்கிறது எனக் கருதப்படுகிறது.

ST506 interface : எஸ்டீ 506 இடைமுகம் : நிலை வட்டு இயக்ககக் கட்டுப்படுத்திகளுக்கென சீகேட் டெக்னாலஜீஸ் நிறுவனம் உருவாக்கிய வன்பொருள் சமிக்கை வரன் முறை. இந்த இடைமுகத்தின் எஸ்டீ 506/412 பதிப்பு ஏற்றுக் கொள்ளப்பட்ட தர வரையறையாகி விட்டது.

stack segment : அடுக்குக் கூறு : அடுக்கினை வைத்திருப்பதற்கு ஒரு செயல்முறையினால் ஒதுக்கப்பட்டுள்ள நினைவகத்தின் பகுதி.

stackware : அடுக்குக் கூறு : மிகையட்டை அடுக்கு (தரவு), மிகையுரைச் செயல்முறை ஆகியவற்றிலான மிகையட்டைப் பயன்பாடு.

stage analysis : நிலைப் பகுப்பாய்வு : ஒரு அமைப்பாக்கம் தேவைப்படும் தரவுப் பொறியமைவில் ஒரு திட்டமிடும் செய்முறை. இது, அமைவனத்தின் வளர்ச்சிச் சுழற்சியில் நடப்புநிலை, அதன் தரவுப் பொறியமைத் தொழில் நுட்பப் பயன்பாடு ஆகியவை பற்றிய பகுப்பாய்வினை அடிப்படையாகக் கொண்டது.

stairstepping : படித் தாவல்;மாடி ஏறுதல்;மாடிப்படி : ஒரு வரைகலைக் கோடு அல்லது வளைகோடுகளை மாடிப்படிகள் போன்ற தோற்றமுடைய தாக அமைத்தல்.

stale data : நாட்பட்ட தரவு.

stale link : நாட்பட்ட தொடுப்பு;பயனற்ற தொடுப்பு : நீக்கப்பட்ட அல்லது வேறிடத்துக்கு மாற்றப்பட்ட ஒரு ஹெச்டீஎம்எல் ஆவணத்தைச் சுட்டுகின்ற பயனற்ற மீத்தொடுப்பு.

stand alone : தனியாக நிற்றல்;தனித்து இயங்கு;தனித்த கணினி : தொலைக்கணினி அமைப்புடன் இணைப்புப் பெற்று அதைச் சார்ந்திருக்காமல் தனியாக நின்று தன்னிறைவு பெற்ற கணினி அமைப்பை விளக்குவது. வேறு எந்தக் கருவியும் இல்லாமல், தனியாக நிற்கும் சாதனம் தானே இயங்கிக் கொள்ளும்.

stand alone computer : தனித்தியங்கும் கணினி : தன்னடக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட கணினி. இதில், மனநிறைவுடன் செயற்படுவதற்கு வேறெந்த வன்பொருளையும் அல்லது மென்பொருளையும் அணுகவேண்டிய தேவை யில்லை. ஒரு சொந்தக் கணினி பொதுவாக ஒரு தனித்தியங்கும் கணினியாகும்.

stand alone graphics : தனித்தியங்கு வரைகலை. stand alone graphics system : தனியாக நிற்கும் வரைகலை அமைப்பு : நுண் கணினி அல்லது சிறு கணினி, சேமிப்பகம், ஒளிக்காட்சித்திரை முகப்பு மற்றும் உள்ளீடு/வெளியீடு சாதனங்களைக் கொண்டுள்ள வரைகலை அமைப்பு.

stand alone programme : தனித்தியங்கும் செயல்முறை : ஒரு செயல் பாட்டுப் பொறியமைவு அல்லாமல் இயக்குவதற்கு வேறெந்த மென் பொருளும் தேவைப்படாதிருக்கிற ஒரு கணினிச் செயல்முறை. தனித் தியங்காத செயல்முறைகளுக்குப் பொதுவாக வேறு மென்பொருள்களை ஏற்றுதல் அல்லது ஒரு மென்பொருள் வாலாய நூலக அணுகுதல் தேவைப் படும். பெரும்பாலான வணிக முறை மென்பொருள் பயன்பாடுகளில் தனித்தியங்கும் செயல்முறைகள் பயன்படுத்தப் படுகின்றன.

stand alone server : தனித்தியங்கு வழங்கன்.

stand alone system : தனியாக நிற்கும் அமைப்பு : வேறொரு கணினி யுடன் இணையாமல், வேறொன்றின் கட்டுப்பாட்டில் இல்லாமல் சுயேச் சையாக இயங்கக்கூடிய தன்னிறைவு கணினி அமைப்பு.

standard செந்தரம்;திட்ட அளவு : 1. ஒரே சீரான நடை முறைகள் மற்றும் பொதுவான தொழில் நுட்பங்களை உருவாக்க உதவும் வழி காட்டி. 2. கணினி அமைப்பின் செயல்பாட்டை அளக்க உதவும் அளவுகோல். சட்டமுறையான அமைப்பு இதனை விதிக்கலாம் அல்லது பெரிய உற்பத்தியாளரின் நடைமுறையில் சாதாரணமாக உருவாக்கப்படலாம்.

standard analog signals : நிலையான தொடர்முறைக் குறியீடுகள்.

standard buttons : இயல்பான பொத்தான்கள்.

standard cell : செந்தரச் சிற்றம் : சிப்பு உருவாக்கத்திற்கு ஆயத்த மாகவுள்ள மின்னணு செயற்பணியின் முடிவுறுத்தப்பட்ட வடிவமைப்பு. இது ஒரு கடிகாரச் சுற்றுவழி அளவுக்குச் சிறிதாக அல்லது பேரளவுச் செய் முறைப்படுத்திய அளவுக்குப் பெரிதாக இருக்கும். இது வழக்காற்று வடிவமைப்புச் சிப்புகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

standard form : பொது வடிவு.

standard function : முன்னிருப்பு செயல்கூறு : உள்ளிணைந்த செயல்கூறு : ஒரு குறிப்பிட்ட நிரலாக்க மொழியில் உள்ளிணைக் கப்பட்டுள்ள, பயன் படுத்தத் தயாராய் உள்ள ஒரு செயல்கூறு.

standard deviation : செந்தரச் சாய்வு : ஒரு தரவுத் தொகுதியினுள் உள்ள தரவு இனங்களின் கோட்டமுறும் அளவு. தரவுகளின் பகிர்மானம் இயல்பாக இருக்குமானால், தரவுகளின் 68%, செந்தரச் சாய்வுக்கு ஒன்று கூடுதலாக அல்லது குறைவாக இருக்கும்;95%, செந்தரச் சாய்வுக்கு மூன்றுக்குள் இருக் கும். ஆங்கிலச் சுருக்கம் : STDEV.

standards enforcer : தரம் அமல்படுத்துபவர்;செந்தர நடைமுறைப் படுத்தி : குறிப்பிட்ட நிரல் தொடரின் தரங்களும் நடைமுறைகளும் கடைப் பிடிக்கப்பட்டனவா என்று முடிவு செய்யப் பயன்படுத்தப்படும் கணினி நிரல் தொடர்.

standard interface : செந்தர இடைமுகம் : மையச் செயலக அலகுடன் அனைத்து வெளிப்புறச் சாதனங்களும் இணைக்கப்படும் செந்தரமான பருப்பொருள் வழிமுறை.

standardise : செந்தரப்படுத்தல்.

standardist : செந்தரப்படுத்து : செந்தரங்களை உருவாக்குதல் அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட செந்தரங்களுக்கு ஏற்றதாக்குதல்.

standardization : தர அளவுப்பாடு;தரப்படுத்தல்.

standard mode : செந்தரச் செயல் வகை : பலகணிச் செயற்பாட்டுச் செயல்வகை.

standard newsgroup hierarchy : இயல்பான செய்திக்குழு படிநிலை.

standard output : திட்ட அளவு வெளிப்பாடு.

standard parallel port : இயல்பான இணைநிலைத் துறை.

standards : செந்தர வரையேடுகள்.

standard tool bar : மரபுநிலைகக் கருவிப் பட்டை.

standard type : திட்ட அளவு.

standard width : இயல்பான அகலம்.

stand lay button : மாற்றுப் பொத்தான்.

standby equipment : மாற்று ஏற்பாட்டுக் கருவி;மாற்றுச் சாதனம் : முக்கிய கருவி எழுப்பும் கோளாறினால் செயல்படாமல்போனால் மாற்று ஏற்பாடாகப் பயன்படக்கூடிய இரண்டாவது கருவி.

standby time : மாற்று ஏற்பாட்டு நேரம்;காத்திரு நேரம் : 1. ஒரு கருவியிடம் கேள்வி கேட்டு அதனிடமிருந்து பதில் பெறுவதற்கு இடையிலான நேரம். 2. ஒரு கருவியை நிறுவுவதற்கும் அதனைப் பயன்படுத்துவதற்கும் இடையிலான நேரம். 3. பயன்படுத்துவதற்குக் கருவி கிடைத்து பயன்படுத்தாத நேரம்.

star : உடு உரு;விண்மீன் : வரைகலைப் பயன்பாட்டாளர் இடை முகப்பினையும், மேசை உருவகங்களையும் 1981இல் புகுத்திய ஜெராக்ஸ் பணி நிலையம். இது வெற்றி பெறவில்லை. எனினும் பிந்திய ஜெராக்ஸ் கணினிகளுக்கும், ஆப்பிள் லிசா, மெக்கின்டோஷ் போன்றவற்றுக்கும் தூண்டுதலாக இருந்தது.

start bit : துவக்கும் துண்மி : 1. ஒரு தரவு சொல் துண்மி அடையாளப் படுத்தும் துண்மிகள் அல்லது துண்மிகளின் தொகுதி. 2. ஒரேநேரத்தில் அல்லாத தொடர் செய்தி அனுப்புதலின் துவக்கத்தைக் குறிக்கும் துண்மி.

star-dot-star : ஸ்டார்-டாட்-ஸ்டார் (".") : எம்எஸ் டாஸ் இயக்கமுறைமை யில் ஒரு கோப்பகத்திலுள்ள அனைத்துக் கோப்புகளையும் என்பதைக் குறிக் கிறது. கோப்பின் முதன்மைப் பெயர் எதுவாக இருப்பினும், வகைப்பெயர் எதுவாக இருப்பினும் என்பது இதன் பொருள்.

start line : தொடக்கக் கோடு : சறுக்கு உருக்காட்சி தொடங்குகிற நுண்ணாய்வுக் கோடு. எடுத்துக்காட்டாக, ஒரு நிறக் காட்சியில் ஒரு வாசகக் கோட்டில் 14 இடைநிலை நுண்ணாய்வுக் கோடுகள் அமைகின்றன. இவை 0-13 என்று இலக்க மிடப்படுகின்றன. ஒர் இயல்பான சறுக்குத் தொடக்கம் 12, உச்சிக் கோடு 13.

star network : நட்சத்திர பிணையம் : மையப் புரவலர் கணினியும் செயற்கைக்

நட்சத்திரப் பிணையம்
start

1375

startup disk

கோள்கள் போன்ற சுற்றிலுமுள்ள கணினிகளும் நட்சத்திர அமைப்பில் இணையும் கட்டமைப்பு. தொலைவில் உள்ள முகப்புகள் நிலத்தளவில் பரவலாகப் பிரிந்திருக்கலாம்.

start : தொடக்கம்; தொடங்கு : விண்டோஸ் இயக்க முறையில் பணிப்பட்டையில் (Taskbar) உள்ள பொத்தான் இதிலிருந்து தான் பணிகளைத் தொடங்க வேண்டும்.

starting cluster : தொடக்கத் தொகுதி : ஒரு வட்டில் ஒரு கோப்பு எதிலிருந்து பதிவு செய்யப்படுகிறதோ அந்தத் தொகுதி. கோப்பின் விவரத் தொகுதிப் பதிவு, தொடக்கத் தொகுதியைக் குறிக்கிறது. கோப்பு ஒதுக்கீட்டு அட்டவணை, கோப்பினால் பின்னர் பயன்படுத்தப்படும் தொகுதிகளைக் கூர்ந்து கண்காணித்து வருகிறது.

starting point : தொடக்கப் புள்ளி : பயனாளர்கள் வலைத் தளங்களைப் பார்வையிட உதவுவதற்கென வடிவமைக்கப்பட்ட ஒரு வைய விரிவலை ஆவணம். பெரும்பாலும், தேடுபொறி போன்ற கருவிகளையும், தேர்ந்தெடுக்கப்பட்ட வலைத் தளங்களுக்கான மீத்தொடுப்புகளையும் இந்த ஆவணம் கொண்டிருக்கும்.

start menu : தொடங்கு பட்டி .

start/stop transmission தொடக்க/நிறுத்த அனுப்பீடு : கால இசைவற்ற அனுப்பீடு என்பதும் இதுவும் ஒன்றே.

startup : ஆரம்பித்தல் ; தொடங்கல் : சரியான ஆரம்ப நிலைகளில் கணினி அமைவுச் சாதனங்களைத் துவங்கி பொருத்தமான மின் சக்தியை ஏற்றுதல்.

startup application : தொடக்கப் பயன்பாடு : கணினி இயக்கப்பட்டவுடன் கணினியின் கட்டுப்பாடு முழுமையையும் எடுத்துக் கொள்ளும் பயன்பாடு.

STARTUP. CMD : ஸ்டார்ட்அப் சிஎம்டி : ஒஎஸ்/2 இயக்க முறைமையில் தொடக்க இயக்க வட்டில் மூலக்கோப்பகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சிறப்புப் பயன்தொகுதிக் கோப்பு. எம்எஸ்டாஸில் இதற்கு இணையான கோப்பு ஆட்டோ இஎக்ஸ்இசி. பேட்

startup disk : ஆரம்பிக்கும் வட்டு : கணினி அமைப்பைத் துவக்குவதற்கு வேண்டிய தகவலைக் கொண்டுள்ள வட்டு (diskette). startup ROM : தொடக்க ரோம் : கணினியை இயக்கியவுடன் ரோம் (ROM-Read Only Memory) நினைவகத்தில் பதியப்பட்டுள்ள தொடக்க இயக்க நிரல்கள் செயல்படுத்தப்படுகின்றன. கணினி தன்னைத்தானே பரிசோதனை செய்து கொள்ளவும், விசைப்பலகை, வட்டு இயக்ககங்கள் போன்ற சாதனங் களைச் சரிபார்க்கவும் ரோமில் பதியப்பட்டுள்ள நிரல் கூறுகள் உதவு கின்றன. இறுதியில் இயக்க முறைமையை நினைவகத்தில் ஏற்றும் நிரலை இயக்கும் தூண்டு நிரல்செயல் படுத்தப்படுகிறது.

startup routine : தொடக்க வாலாயம் : கணினியின் பயன்பாடு ஏற்றப்படும்போது நிறை வேற்றப்படும் வாலாயம். இணைவுடைய மென் பொருளைச் சுற்றுச்சூழலுக்குப் பழக்கப்படுத்துவதற்காக இது பயன்படுத்தப்படுகிறது.

startup screen : தொடக்கத்திரை : ஒரு நிரல் இயக்கப்பட்டவுடன் முதன்முதலாகத் தோன்றும் உரை அல்லது வரைகலைக் காட்சித்திரை. தொடக்கத் திரையில் பெரும்பாலும் மென்பொருளின் பதிப்பு, நிறுவன வணிகச் சின்னம் போன்ற தகவல்கள் இடம்பெறும்.

stat : ஸ்டாட் : Statistical or Photostat என்பதன் குறும்பெயர்.

state : நிலை : இரும எணகளைக் குறிப்பிடப் பயன்படும் இருநிலைச் சாதனங்களின் நிலை, சாதனங்கள் பொதுவாக இரண்டு நிலைகளில் மட்டும் இருக்க முடியும். ஒன்று இயங்கு அல்லது நிறுத்து.

stateful : நிலைமைக் கண்காணி : ஒரு கணினி அல்லது செயலாக்கம் தான் பங்குபெறும் ஒரு நடவடிக்கையினுடைய நிலைமையின் அனைத்து விவரங்களையும் நுணுக்கமாகக் கண்காணிப்பது. (எ-டு) செய்திகளைக் கையாளுகையில் அவற்றின் உள்ளடக்கத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்வது.

stateless : கண்காணிக்காமல்;நிலை கருதாமல் : ஒரு கணினி அல்லது செயலாக்கம் ஒரு நடவடிக்கையினுடைய நிலைமையின் அனைத்து விவரங்களையும் கண்காணிக்காமலேயே பங்குபெறுவது. (எ-டு) : செய்தி களைக் கையாளும்போது அவற்றின் மூலம் (source), சேரிடம் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்வது. உள்ளடக்கத்தை விட்டுவிடுவது.

statement : கட்டளை;கூற்று : ஒரு நிரலாக்க மொழியில் நிறை வேற்றப்படக்கூடிய மிகச்ச சிறிய சொல்தொடர். ஆணை என்றும் அறியப் படும்.

statement, arithemetic : கணக்கீட்டுக் கூற்று.

statement, control : கட்டுப்பாட்டுக் கூற்று.

statement label : சிட்டைக்கூற்று;அறிக்கை அடையாளம் : மூலமொழி நிரல் தொடரில் உள்ள சொற்றொடரின் வரி எண்.

state-of-the-art : கலையின் நிலை : மிக அண்மைய தரவுத் தொழில் நுட்பம் தொடர்பான புதிய தொழில் நுட்பங்களை உள்ளடக்கியதென்பதைக் குறிக்கும் மரபுத் தொடர்.

. state. us : ஸ்டேட். யுஸ் : ஓர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டு மாநிலஅரசைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

static : நிலையான;மாறாத : நகராத அல்லது முன்னேறாத, நிலைத்த, ஒய்வில் உள்ள.

static allocation : நிலைத்த ஒதுக்கீடு : ஒருமுறை நடந்தேறும் நினைவக ஒதுக்கீடு. பெரும்பாலும் நிரல் தொடங்கும்போது செய்யப்படும். நிரல் செயல்பட்டு முடியும்வரை ஒதுக்கப் பட்ட நினைவகம் விடுவிக்கப் படாமலே கட்டுண்டிருக்கும்.

static analysis : நிலை ஆய்வு;நிலை பகுப்பாய்வு : செயல் படுத்தா மலேயே ஒரு நிரல் தொடரை ஆராய்தல்.

static binding : நிலைத்த பிணைப்பு : நிரலை மொழி மாற்றும்போது (compiling) அல்லது தொடுப்புறுத்தும்போது (linkage) நிகழ்வது. நிரலிலுள்ள குறியீட்டு முகவரிகளை சேமிப்பிடஞ் சார்ந்த முகவரிகளாய் மாற்றி யமைத்தல்.

static column memory : நிலைப்பத்தி நினைவகம் : நினைவகத் துண்மி களை அணுகுவதற்கு மின்னணுத் துடிப்பு குறைவாகத் தேவைப்படும் ஒருவகைப் பக்கமுறை நினைவகம்.

static dump : நிலை திணிப்பு : எந்திர ஒட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்-பெரும்பாலும் ஒட்டம் முடியும்போது-செய்யப் படும் சேமிப்பு திணிப்பு.

static electricity : நிலை மின் விசை : குறைந்த ஈரப்பதச் சூழல்களில் வேண்டுமென்றே மின்னேற்றம் செய்தல் அல்லது உராய்தல் காரணமாக உண்டாகும் நிலையான மின்னேற்றம். staticizing : பதிவக ஏற்றம் : கணினி சேமிப்பகத்திலிருந்து நிரல் பதிவேடுகளுக்கு நிரலை மாற்றி இயக்கப்படுவதற்குத் தயாராக வைத் திருத்தல்.

static memory : மாறா நிலை நினைவகம் : மின்சாரம் கிடைக்கும்வரை நிரலிடப்பட்ட நிலையிலேயே இருக்கும் நினைவகம். அதைப் புதுப்பிக்க வேண்டியதில்லை. அதற்கு ஒரு கடிகாரமும் தேவையில்லை.

static object : நிலை பொருள்;மாறாப் பொருள்.

static RAM : நிலை ரேம் : இயங்கும் ரேமில் (RAM) இருப்பது போல ஒரு நொடிக்குப் பல தடவைகள் புதுப்பிக்கப்பட வேண்டிய தேவையில்லாத நினைவகம். கணினியில் மின் சக்தி இருக்கும்வரை அதன் உள்ளடக்கங்களை இழக்காது. நிலை நினைவக இருப்பிடத்திற்கு கணினி ஒரு மதிப்பை அளித்துவிட்டால், அங்கேயே அது இருக்கும்.

static refresh : நிலை புதுப்பி : மையச் செயலாக்கக் கணினியில் அல்லாமல் தொலைதூர அறிவார்ந்த முகப்பில் தரவுகளைச் செயலாக்கும் முறை. தரவுகளை வேகமாகத் தொகுக்க அனுமதிக்கிறது. ஏனெனில், புரவலர் கணினிக்கும் தொலை, தூர முகப்புக்கும் இடையில் தரவுகளை அனுப்பிப் பெற வேண்டிய தேவையில்லை.

static storage : நிலை இருப்பகம்;நிலை சேமிப்பகம்;நிலை தேக்ககம் : தொடர்ந்து புதுப்பிக்கும் சுழற்சி தேவைப்படாத குறிப்பிட்ட வகையான அரைக் கடத்தி. ஒரு மின்னணு பொத்தானின் நிலையை மாற்றுவதன் மூலம் தரவுகளை வைத்திருக்க முடிகிறது. ஒருங்கிணைந்த மின்சுற்றுகளில் உள்ள மின்மப் பெருக்கி (flip-flop) ஏற்ற-இறக்க முடையதாகும்.

station : நிலையம் : தரவு செய்தித் தொடர்பு அமைப்பில் உள்ளீடு/வெளியீடுகளில் ஒன்று. பணி நிலையக் கணினி (work station) -க்கு இணைச் சொல்.

station, data : தரவு நிலையம்.

stationery : நிலையாவணம் : ஒருவகை ஆவணம். பயனாளர் இதனைத் திறக்கும்போது ஒரு நகல் எடுக்கப்பட்டு அந்த நகல் ஆவணம் திறக்கப்படும். பயனாளர் அதில் மாறுதல்கள் செய்து வேறுபெயரில் சேமித்துக் கொள்ள லாம். மூல ஆவணம் எப்போதும் மாறாமல் அப்படியே இருக்கும். நிலையா வணங்களை ஆவண முன்படி வங்களாகவும் அச்சு வார்ப்புருக்களாகவும் பயன்படுத்தலாம்.

stationary, continuous : தொடர் தாள்.

station, work : பணி நிலையம்.

statistical multiplexer : புள்ளியியல் ஒன்றுசேர்ப்பி : தகவல் தொடர்புத் தடங்கள் ஒன்று சேர்ப்புச் சாதனம். இடையகச் சேமிப்புகளைப் பயன்படுத்தி நேரப்பிரிவு ஒன்று சேர்ப்பில் (Time Division Multiplexing) சில அறிவுநுட்பத் தகவல்களைச் சேர்த்து விடும். அதன்பின் ஒரு நுண்செயலி அனுப்புகின்ற தாரைகளை (streams) ஒன்று சேர்த்து ஒற்றைச் சமிக்கையாக மாற்றும். இயங்குநிலையில் இருக்கின்ற அலைக்கற்றையில் இத்தகவலுக்கென ஒதுக்கீடு செய்யும்.

statistics : புள்ளியியல் : தகவல்கள் நிகழ்வு, பகிர்மானம், பரப்பீடு எண்ணளவுகளில் அல்லது வேறுவிதமாக அளவிடும் அறிவியல். புள்ளியியல் பகுப்பாய்வுகளுக்குக் கணினிகள் பெருமளவில் பயன் படுத்தப்படுகின்றன. பல மென்பொருள் பயன்பாடுகள் குறிப்பாகப் புள்ளியியலுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. SPSS மினிடேப், சிஸ்டாட் போன்றவை இதற்கு எடுத்துக் காட்டு. பெரும்பாலான விரி தாள் தொகுதிகள் (20/20, லோட்டஸ் 1-2-3, மைக்ரோ சாஃப்ட் எக்செல், போர்லாண்ட் குவாட்ரோ போன்றவை) பயனுள்ள புள்ளியியல் திறம்பாடுகள் கொண்டவை.

status : தகுதி;தகுநிலை : ஒரு கணினி அமைப்பின் பாகத்தின் தற்போதைய நிலை.

status bar : நிலைமைப் பட்டை : மைக்ரோசாஃப்ட் விண்டோஸில் பெரும்பாலான பயன்பாட்டு நிரல்களில் சாளரத்தின் அடிப்பகுதியில் ஒரு பட்டை தென்படும். நிரலின் தற்போதைய நிலையைக் குறிக்கும் செய்தி அதில் தெரிந்து கொண்டிருக்கும். சில நிரல்களில் தற்போது தேர்வு செய்துள்ள பட்டிக் கட்டளைக்கான விளக்கத்தை நிலைமைப் பட்டையில் காணலாம்.

status byte : தகுநிலை எண்மி : ஒரு சாதனத்தின் நடப்புத் தகு நிலையை விவரிக்கும் துணுக்குத் தோரணியைக் கொண்டிருக்கும் நினைவக அமைவிடம்.

status codes : நிலைமைக் குறிமுறைகள் : ஒரு நடவடிக்கையின் முயற்சி வெற்றியா தோல்வியா என்பதைச் சுட்டும், இலக்கங்கள் அல்லது பிற எழுத்துகள் சேர்ந்த சரம். பழைய கணினி நிரல்களே குறிமுறைகளைப் பயன்படுத்தின. இப்போதைய மென்பொருள்கள் பலவும் சொற்கள், படங்கள் வழியாக நிலைமை யைச் சுட்டுகின்றன. யூனிக்ஸில் செயல்தளக் (shell) கணக்கு வைத்திருப்பவர்கள், வலையில், எஃப் டீபீயில் பணிபுரியும்போது நிலைமைக் குறிமுறைகளைக் கண்டிருக்கலாம்.

status line : இணைப்பு நிலை : நடப்பு நடவடிக்கையினைக் காட்டும் திரையில் காட்டப் படும் தரவுக் கோடு.

status message : தகுநிலைச் செய்தி : வன் பொருள் சாதனங்களினால் அவற்றின் நடப்புச் செயற்பாட்டுச் சூழலில் அளிக்கப்படும் பொதுவாகக் கண்ணால் பார்க்கக்கூடிய ஒரு செய்தி. ஒரு அச்சுப் பொறியில் இத்தகைய செய்திகள், "ஆயத்தம்", "காகிதத்திற்கு வெளியே", "நேரடியாக" போன்றவற்றைக் கொண்டிருக்கும்.

status register : தகுநிலைப் பதிவகம் : ஒரு சாதனத்தின் நடப்புத் தகுநிலையை விவரிக்கிற ஒரு துண்மித் தோரணியைக் கொண்டிருக்கும் ஓர் ஒருங்கிணைந்த மின்சுற்று வழி.

status report : தகுநிலை அறிக்கை : தகுதி அறிக்கை : திட்டச் செலவுகள் மற்றும் திட்டத்திற்கு ஆனநேரம் ஆகியவற்றை ஆராய்வது, மாறுபாடு களைக் கணக்கிட்டு காட்டப்படும்.

step : படி : 1. கணினியை ஒரு நிரலை செய்ய வைப்பது. 2. கணினி வாலாயத்தில் ஒரு நிரல்.

step-by-step telephone exchange : படிப்படித் தொலைபேசி இணைப்பகம் : பொதுத் தொலைபேசி இணைப்பகங்களுக்காக முதன் முதலில் தயாரிக்கப்பட்ட தானியங்கிப் பொறியமைவு. இதில், ஒரு குறிப்பிட்ட இணைப் பினைத் தேர்ந்தெடுப்பது பத்துக்கு ஒன்று என்ற தேர்வு முறைப்படி நடைபெறுகிறது. 1, 00, 000 இணைப்புகளுக்கு அணுகுதல் ஏற்படுத்துவதற்கு, இறுதித் தேர்வுக் கருவிக்கு முன்னதாக ஒரு தேர்வுக்கருவிக் குழுமநிலை அமைக்கப்படுகிறது.

step counter : படி எண்ணி.

step-frame : படிநிலைச் சட்டம் : ஓர் ஒளிக்காட்சிப் படிமத்தை ஒரு நேரத்தில் ஒரு சட்டம்வீதம் பதிவு செய்யும் செயல்முறை. நிகழ் நேரத்தில் தொடர்நிலை ஒளிக்காட்சிப் படிமங்களைப் பதிவு செய்ய மிகமெதுவாகச் செயல்படும் கணினிகள் இந்தச் செயல்முறையைப் பின்பற்றுகின்றன.

stepped index multimode : படிநிலைக் குறியீட்டுப் பன்முக முறை : ஒரு படிநிலைக் குறியீட்டுப் பன்முக முறை ஒளியியல் இழையின் அடிப்படைக் கட்டமைவினையும், அதன் கதிர்க் கோட்டக் குறியீட்டுத் தோற்றத்தினையும் படத்தில் காணலாம். இழையின் கதிர்க்கோட்டக் குறியீட்டில் ஏற்படும் திடீர் மாற்றம் உள்மையப் பகுதி எல்லையில் உண்டாகிறது. 2r1 அளவு உள்மைய விட்டம் பொதுவாக 50-60 um அளவுடையது; சில சமயம் இது 200um அளவு கொண்டதாக இருக் கும். 2r2 உள் மைய விட்டம், இயன்ற போதெல்லாம் 125 um அளவில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

stepped motor : ஏற்றிய மோட்டார் : துடிப்பு வருகின்ற குறிப்பிட்ட நேரத்தில் எல்லாம் சுழலுகின்ற எந்திர சாதனம். தட்டு மற்றும் இலக்கணமுறை வரைவிகளில் அதிகம் பயன்படுத்தப்படுவது.

stepper : காலடி : மரபு நிலை வட்டு இயக்கி என்பதன் ஒரு மாற்றுப் பெயர். படிப்பு/எழுது தலைப்பினை ஒவ்வொரு தடத்தின்மீது மறை முகமான காலடிகள் மூலம் நகர்த்துவதன் வாயி லாக ஒவ்வொரு தரவு சேமிப்புத் தடத்துக்கும் இது அணுகும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

stepper motor : காலடி இயக்குபொறி : குறிப்பிட்ட சிறிய கால அளவுகளில் சுழல்கிற இயக்கு பொறி. வட்டு இயக்கியில் அணுகுகரம் நகர்வதைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

step-rate time : நகர் -வீத நேரம் : ஒரு வட்டின் உந்துமுனை ஒரு தடத்திலிருந்து அடுத்த தடத்திற்கு நகர்ந்து செல்ல எடுத்துக் கொள்ளும் நேரம்.

stereolithography : திண்ம வார்ப்பு நுட்பம்.

stereophonic : பலதிசை ஒலி : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட வழிகளைப் பயன்படுத்தி ஒலியை உண்டாக்குதல். இது, 'ஒரு திசை ஒலி' என்பதிலிருந்து வேறுபட்டது.

stereo viewing : பலதிசைக் காட்சி;இருதடக் காட்சி.

Stibitz, George : ஜார்ஜ் ஸ்டீபிட்ஸ் : தன்னுடைய பகுப்பு எந்திரத்தை வடிவமைக்கும் போது மனித கணினியின் பணிகளாக எந்திரம் செய்ய வேண்டியவை நான்கு பணிகள் என்று சார்லஸ் பாபேஜ் கூறினார். அவை கணக்கிடும் அலகு, நினைவகம், கணிக்கப் படும் வரிசையில் தானியங்கி வாய்ப்பு மற்றும் உள்ளீடு-வெளியீடு. 1946இல் பெல் தொலைபேசி ஆய்வகத்தில் ஆராய்ச்சிக் கணித அறிஞராக இருந்த ஜார்ஜ் ஸ்டீபிட்ஸ் என்பவர் பாபேஜின் எண்ணங்களை உள்ளடக்கிய பல தொடர் கணிப்பிகளை வடிவமைத்தார்.

stick model : குச்சி முன் மாதிரி : கோடுகள் அல்லது வெக்டர் (நெறியம்) களால் ஆன படம். சான்றாக, உயிர் மருத்துவப் பயன்பாடுகளின் ஒரு நபர் அல்லது விலங்கின் உறுப்புகளைக் கோடு களாக மாற்றி அதன் இயக்கத்தை ஒளி வடிவில் கவனித்து வரைபடமாக அமைத்து ஆராய்தல்.

Sticky Keys : நிலைத்த விசைகள் : தொடர்ந்து பல விசைகளை ஒருசேர அழுத்துவதைத் தவிர்க்க, நகர்வு (shift), கட்டுப்பாடு (control), மாற்று (Alt) விசைகளை அழுத்தியபின் அப்படியே நிலைத்திருக்கச் செய்யும்முறை. பயனாளர் ஒரு விசையை அழுத்திப்பிடித்தவாறே இன்னொரு விசையை அழுத்த வேண்டியிருப்பதை இந்த மாற்று விசைகள் தவிர்க்கின்றன. முதலில் மெக்கின்டோஷில் அறிமுகப்படுத்தப்பட்டுப் பிறகு டாஸ், விண்டோஸிலும் இவ்வசதி தரப்பட்டுள்ளது.

stochastic : குறிப்பிலா;ஏதேச்சையான : குறிப்பின்றி நிகழும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது. எடுத்துக்காட்டாக, குறிப்பிலா மாதிரியம் என்பது, ஏதேச்சையாக நிகழும் நிகழ்வுகளையும், திட்டமிட்ட நிகழ்வுகளையும் கடைக்கில் எடுத்துக் கொள்கிறது.

stochastic procedures : வாய்ப்பியல் நடைமுறைகள் : அல்காரிதமிக் நடைமுறை களுக்குப் பதிலாக செய்து பார்த்து பிழை நீக்கும் முறை.

stochastic process : வாய்ப்பியல் செயல்முறை : நிகழ்வுக் கொள்கையால் மட்டுமின்றி வேறெந்த வகையிலும் துல்லியமாக விளக்க முடியாத காலம் அல்லது இடத்தினால் உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி களைக் குறிக்கும் செயல்முறை.

stock : இருப்பு.

stock-screening package : ஏராளமான பொருளாதார தகவல்களை அலசி ஒரு குறிப்பிட்ட நபரின் விருப்பத்திற்கேற்ப நிறுவனங்களின் பங்குகளை மட்டும் அடையாளம் காட்டும் நிரல் தொடர்.

stop : நிறுத்து.

stop bit : நிறுத்தும் துண்மி : 1. ஒரு தரவுச் சொல்லின் இறுதியை அடையாளம் கண்டு தரவுச் சொற்களின் இடையில் உள்ள இடைவெளியை விளக்கும் துண்மி அல்லது துண்மிகளின் தொகுதி. 2. ஒரே நேரத்தில் அல்லாத தொடர் அனுப்புதலின் இறுதியைக் குறிப்பிடும் துண்மி.

stop button : நிறுத்தும் குமிழ் : நிறுத்து பொத்தான்.

stop code : நிறுத்துக் குறியீடு : குறிப்பிட்ட கட்டுப்பாட்டு எழுத்து.

stop line : நிறுத்தக் கோடு : சுட்டி (cursor) உருவம் நிறுத்தும் தேடும் கோடு.

STOP statement : நிறுத்தக்கட்டளை.

storage : சேமிப்பகம் : தேக்ககம்;சேமிப்புக் கொள்திறன் : தகவல்களை ஏற்றுக் கொண்டு தக்கவைத்து நினைவகம் விரும்பும் பின்னொரு நேரத்தில் வழங்கும் ஒரு சாதனம் அல்லது ஊடகத்தைக் குறிப்பிடுவது.

storage allocation : சேமிப்பக ஒதுக்கீடு; தேக்கக ஒதுக்கீடு : கணினி சேமிப்பகத்தின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு தகவல்களின் தொகுப்பு மற்றும் குறிப்பிட்ட நிரல் தொடர் பகுதிகளை ஒதுக்கீடு செய்தல். நினைவக ஒதுக்கீடு (Memory allocation) என்றும் சிலசமயம் அழைக்கப் படுகிறது.

storage area : சேமிப்பகப் பரப்பு : தேக்ககப் பரப்பு.

storage area, common : பொதுச் சேமிப்பகப் பரப்பு.

storage block : சேமிப்புத் தொகுதி;தேக்ககப் பகுதி : உள் சேமிப்பகத்தின் தொடர்ச்சிப்பகுதி.

storage, buffer : இடையகச் சேமிப்பு.

storage, bulk : மொத்தச் சேமிப்பு.

storage capacity : சேமிப்புத் திறன்;தேக்கக் கொள்ளளவு : ஒரு சேமிப்பக சாதனம் எத்தனை தரவுகளைச் சேமிக்கும் திறனுடையது என்பது பற்றியது. கணினி துண்மிகளாக கிலோ துண்மி, மெகா துண்மி, பெரும்பாலும் சொல்லப்படுகிறது. அல்லது 'சொல்' என்பார்கள்.

storage circuit : சேமிப்பக மின்சுற்று தேக்கச் சுற்று : 0 அல்லது 1 ஆகிய இரண்டு நிலைகளில் ஒன்றாக பொத்தானிடப்படும் மின்சுற்று. storage, core : உள்ளகச் சேமிப்பு.

storage, data : தரவு சேமிப்பகம்.

storage density : சேமிப்பக அடர்த்தி.

storage device : சேமிப்பகச் சாதன;சேமிப்புச் சாதனம் : கணினி அமைப்புக்குள் தரவுகளை சேமிக்கப் பயன்படும் சாதனம். ஒருங்கிணைந்த மின் சுற்று சேமிப்பகம், காந்த வட்டு அலகு, காந்த நாடா அலகு, காந்த உருளை அலகு, நெகிழ் வட்டு மற்றும் நாடாப்பெட்டி போன்றவை இவ்வகையில் சேரும்.

storage : வட்டு சேமிப்பகம்.

storage dump : சேமிப்பகத் திணிப்பு : ஒரு கணினியின் உள்ளக சேமிப்பகத்தின் உள்ளடக்கங்களில் பகுதி அல்லது முழு அச்சு வெளியீடு. பிழைகளைக் கண்டறியப் பயன் படுகிறது. நினைவகக் கொட்டல் (Memory Dump) என்றும் அழைக்கப்படுகிறது.

storage, fast-access : விரைவணுகு சேமிப்பகம்.

storage, internal : அகச்சேமிப்பு.

storage key : சேமிப்பக விசை;தேக்ககச் சாவி : சேமிப்பகக் கட்டம் அல்லது தொகுதிகளுடன் தொடர்புள்ள காட்டி. பொருத்தமான பாதுகாப்பு விசை அல்லது கட்டங்களைப் பயன்படுத்தினால் மட்டுமே பணிகள் செய்யமுடியும் என்பதே நியதி.

storage location : சேமிப்பக இருப்பிடம்; தேக்கக அமைவிடம் : எழுத்து துண்மி அல்லது சொல் சேமிக்கப்படும் சேமிப்பகத்தின் இடம்.

storage map : சேமிப்பக வரைபடம் : கணினி அமைப்புகளின் சேமிப்பக அலகுகளில் நிரல் தொடர்களும் தரவுகளும் எங்கே சேமிக்கப் படுகின்றன என்பதைக் காட்டும் வரைபடம்.

storage media : சேமிப்பக ஊடகம் : வட்டுகள், நாடாக்கள் மற்றும் குமிழ் நினைவு பெட்டிகளைக் குறிக்கிறது.

storage pool : சேமிப்பகத் தொகுப்பு : வட்டு இயக்கிகள் போன்ற சேமிப்பகச் சாதனங்களைக் கணினி அமைப்புகளில் பொதுவாக வட்டுத் தொகுப்பு என்று அழைக்கப்படுகிறது.

storage protection : சேமிப்பகப் பாதுகாப்பு : சேமிப்பகச் சாதனங்களில் சில பகுதிகள் அல்லது முழுவதிலும் இருந்து அனுமதி பெறாமல் எழுதவோ அல்லது படிக்கவோ செய்வதற்கு storage, random

1385

store device

எதிராக பாதுகாப்பு அளிப்பது. இயக்க அமைப்புடன் இணைந்து வன்பொருள் வசதிகளால் தானாகவே செயல்படுத்தப்படுகிறது. நினைவகப் பாதுகாப்பு (Memory Protection) என்றும் அழைக்கப்படுகிறது.

storage, random access : குறிப்பிலா அணுகு சேமிப்பகம்.

storage, read-only : படிப்புச் சேமிப்பகம்.

storage register : சேமிப்பகப் பதிவகம்.

storage, secondary : துணை நிலைச் சேமிப்பகம்.

storage, temporary : தற்காலிகச் சேமிப்பகம்.

storage, two-dimentional : இரு பரிமாணச் சேமிப்பகம்.

storage tube : சேமிப்பகக் குழாய் : தகவல் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் வேறொரு சமயத்தில் வெளியே எடுக்கப்படுகின்ற எலெக்ட்ரான் குழாய். முதல் தலைமுறைக் கணினிகளில் பயன்படுத்தப்பட்டது.

storage unit : சேமிப்பக அலகு

storage, virtual : மெய்நிகர் சேமிப்பகம்.

storage, working : செயல்படு சேமிப்பகம்.

storage, zero access : சுழி அணுகு சேமிப்பகம்.

store : இருப்பகம்; சேமிப்பகம்; கிடங்கு; தேக்ககம் ; சேமிப்புப் பகுதி : 1. சேமிப்பகத்தின் பெயர். 2. சேமிப்பகத்தில் வைத்தல்.

store and forward : சேமித்து செலுத்து; இருத்தி அனுப்பு : தேக்கித் திருப்பல் : தகவல் தொடர்புப் பிணையங்களில் பயன்படுத்தப்படும் செய்தியனுப்பு நுட்பம். செய்தியானது தற்காலிகமாக ஒரு திரட்டுநிலையத்தில் இருத்திவைக்கப்பட்டுப் பிறகு உரிய இடத்துக்கு அனுப்பிவைக்கப்படும்.

store and forward operating satellites : சேமித்துச் செலுத்து செயற்கைக் கோள்.

store and forward switching message : இருத்தி அனுப்பும் இணைப்புறு செய்தி.

store, associative : சார்புநிலைச் சேமிப்பகம்.

store, auxcillary : கூடுதல் சேமிப்பு.

store, backing : காப்புச் சேமிப்பு.

store, bulk : மொத்தச் சேமிப்பு.

store, core : உள்ளகச் சேமிப்பு.

store device, direct access : நேரணுகு சேமிப்புச் சாதனம். stored programme

1386

straight line code

stored programme computer : நிரல் தொடர் சேமிக்கப்பட்ட கணினி : உள்ளார்ந்த சேமிப்பு நிரல்களின் தொடர்களைச் செயல்படுத்தும் திறனுள்ள கணினி. நிரல்களில் கூறியுள்ளபடி தரவுகளை மாற்றும் திறனுள்ளவை.

stored programme concept : சேமிக்கப்பட்ட நிரல்தொடர் கோட்பாடு; சேமிப்புச் செயல் முறைக்கோட்பாடு : கணினியின் உள்சேமிப்பகத்திற்குள் நிரல்களும், தகவல் மதிப்புகளும் சேமிக்க வருவது பற்றிய நிரல்களைத் தரும் கணினி. நிரல்களை விரைவாக அணுகி விரைவாக மாற்றமுடியும். 1945இல் ஜான்வோன் நியூமென் இக்கோட்பாட்டை அறிமுகப்படுத்தினார். இலக்கவியல் கணினியின் முக்கிய தன்மை இதுவே.

stored programme control : சேமிக்கப்பட்ட நிரல்தொடர் கட்டுப்பாடு : வோன் நியூமென் என்ற கணினி விற்பன்னரால் உருவாக்கப்பட்ட கணினிக் கொள்கை. 1940களில் இருந்த கணினிகள் குறிப்பிட்ட வேலைக்காக உருவாக்கப்பட்டவை என்பதால் அவைகள் மாற்ற முடியாதவை என்பதை வோன் நியூமென் உணர்ந்தார். மாற்றக்கூடிய நிரல்களை சேமிக்கக் கூடியவைகளாக கணினியால் முடியும் என்பதால் பல்வகையான பணிகளைச் செய்ய கணினியால் முடியும் என்று அவர் விளக்கினார். கணினி மென்பொருளின் தோற்றம் இதுதான்.

stored programme machine : பதிவான நிரல் தொடர் எந்திரம். சேமிப்பு நிரல் தொடர் எந்திரம்.

store, magnetic : காந்தச் சேமிப்பு.

STP : எஸ்டீபீ : உறையிட்ட முறுக்கிணை என்று பொருள்படும் Shielded Twisted Pair என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். சுருள் மற்றும் செப்பு இழைகளால் பின்னப்பட்ட உறையுள்ள வடத்தினுள் ஒன்று அல்லது மேற்பட்ட முறுக்கிணைக் கம்பிகள் இருக்கும். கம்பிகள் முறுக்கப்பட்டிருப்பதால் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மின்இடையூறு இருக்காது. வெளியிலிருந்து வரும் இடையூறுகளிலிருந்து பாதுகாக்க பாதுகாப்பு உறைகள் பயன்படுகின்றன. எனவே நீண்ட தொலைவு, அதிவேக தரவு பரிமாற்றத்துக்கு இவ்வகை வடங்கள் உகந்தவை.

straight line code : நேர்வரிக் குறியீடு : ஒரு நிரல் தொடர் வரிசையை ஒவ்வொரு தடவை strategic information

1387

streaming tape drive

யும் திரும்ப வரும்போது தெளிவாக எழுதி திரும்பச் செய்யச்செய்தல். நேர்வரிக் குறியீடு அமைத்தால் குறைந்த இயக்க நேரமும் அதிக சேமிப்பக இடமும் (இதற்குச் சமமான லூப் குறியீடு அமைப்பதைவிட) கிடைக்கும். தேவைப்படும் இடமும் ஒரு மாறிலியைத் திரும்பத்திரும்ப பல தடவைகள் குறியீடு அமைப்பதுமே இதனைச் செய்வதில் உள்ள தடைகள்.

strategic information systems : உத்திமிக்க தகவல் அமைப்புகள் : சந்தையால் மற்ற போட்டியாளர்களைவிட ஒரு நிறுவனத்திற்கு உத்தி மூலமான அனுகூலத்தை அளிக்கும் போட்டிப் பொருட்களையும் சேவைகளையும் அளிக்கும் தகவல் அமைப்புகள். வணிக முன்னோடித் தன்மை செயல்பாட்டுத்திற்ன் அதிகரிப்பு மற்றும் ஒரு நிறுவனத்தின் உத்திமிக்க தகவல் மூலாதாரங்களைப் பயன்படுத்துவதையும் இது குறிப்பிடுகிறது.

stream : தாரை; பாயல்.

stream cipher : தாரை மறையெழுத்து : மாறா நீளமுள்ள திறவியைப் பயன்படுத்தி வரம்பிலா நீளமுள்ள தரவு தொடரை மறையாக்கம் செய்யும் வழி முறை.

streamer : தொடரோட்டம் : ஒவ்வொரு தனித்தனி தரவு தொகுதி களுக்கும் இடையில் நின்று துவங்குவதற்குப் பதிலாக தொடர்ச்சியாக அதிகவேகத்தில் இயங்கும் நாடாப் பெட்டி.

streaming : தாரையாக்கம் : காந்த நாடாச் சேமிப்புச் சாதனங்களில், நாடாவின் நகர்வைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு குறைந்த விலை நுட்பம். நாடா இடையகங்கள் நீக்கப்பட்டு நகர்வு கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக நாடா இயங்கத் தொடங்குவதும் நிற்பதும் மெதுவாக நடைபெறுகிறது. எனினும் இதனால் மிகுந்த நம்பகத் தன்மையான் சேமிப்பும், தரவு பெறுகையும் இயலக் கூடியதாகியுள்ளது. ஏதேனும் ஒரு பயன்பாட்டுக்கு அல்லது கணினிக்கு தொடர்ச்சியாக தரவுகளை வழங்க நேர்ந்தால் இம்முறை மிகவும் உகந்ததாகும்.

streaming audio தாரையோட்டக் கேட்பொலி.

streaming tape drive : நாடா இயக்கி ஓட்டம் : தொடர் நாடா இயக்கியைப்பிடித்துக் கொண்டிருக்கும் பெட்டி நிலைத் தட்டு இயக்கிகளுக்கு மாற்று ஏற்பாடாகவே இது முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. streaming video

1388

string alphabetic

streaming video : தாரையோட்ட ஒளிக் காட்சி.

stream-oriented file : சரம் சார்ந்த கோப்பு : தரவு கோப்பைவிட மேலும் திறந்தமுறையில் வடிவமைக்கக்கூடிய சொல் ஆவணம் அல்லது இலக்கமுறை குரல் கோப்பு போன்ற கோப்பு. சொல் மற்றும் குரல் ஆகியவை தொடர்ச்சியான எழுத்துச் சரங்கள். ஆனால் தரவுத் தள பதிவேடுகள் நிலையான அல்லது ஒரளவு ஒழுங்கான படிவத்தில் திரும்பவரும் வடிவமைப்புகள்.

street price : சில்லறை விற்பனை விலை : ஒரு மென் பொருள் அல்லது வன்பொருள் தயாரிப்புக்கு நுகர்வோர் செலுத்தும் உண்மையான சில்லறை விற்பனை விலை. பெரும்பாலான வேளைகளில் பரிந்துரைக்கப்பட்ட சில்லறை விற்பனை விலையைவிடக் குறைவாகவே இருக்கும்.

STRESS : ஸ்ட்ரெஸ் : Structural Engineering System Solar என்பதன் சுருக்கம். கட்டுமானப் பொறியியல் சிக்கல்களை தீர்க்க உதவும் ஒரு சிக்கல் சார்ந்த மொழி.

stress test : தகைவுப் பரிசோதனை அழுத்தச் சோதனை : ஒரு மென்பொருள் அல்லது வன்பொருள் அமைப்பின் செயல்பாட்டெல்லைகளை, உச்ச அளவுத் தரவுகள் அல்லது அதிகப்படியான வெப்ப நிலை போன்ற அதீத சூழ்நிலைகளில் பரிசோதனை செய்தல்.

stress testing : அழுத்தம் சோதித்தல்; கிறுக்கச் சோதனை : தரவுகளில் துல்லியக் கோளாறுகள் மற்றும் அசாதாரண தரவு தொகுதிகள் இருந்தாலும் கணினி அமைப்பு அல்லது நிரல் தொடர் தொடர்ந்து நம்பகமாக இயங்கும் என்பதை சோதனை இயக்கத்தின் மூலம் உறுதி செய்தல்.

strike through : குறுக்குக் கோடிடல் தேர்ந்தெடுக்கப் பட்ட உரைப்பகுதி மீது ஒன்று அல்லது மேற்பட்ட கோடுகளைப் போடுதல். பொதுவாக ஒரு குறிப்பிட்ட பகுதி நீக்கப்பட்டதைக் குறிப்பதற்காக இவ்வாறு உரை வரிகளின் மீது குறுக்குக் கோடு போடப்படும்.

strike out : வெட்டி அகற்றல்.

string : தொடர்சரம் ; சரம் : ஒரு தனி தரவு தொகுதியாகக் கருதப்படும் துண்மிகள் அல்லது எழுத்துகளின் தொடர் வரிசை.

string alphabetic : அகரமுதலிச்சரம். string arithmetic : சரக் கணக்கீடு.

string buffer : சர இடையகம்.

string, character : எழுத்துச்சரம்.

string constant : சரமாறி எழுத்திலக்க மாறி.

string constructor : சரம் ஆக்கி.

string data : சரத் தரவு.

string function : எழுத்திலக்கிய சார்பு.

string expression : சரக் கோவை.

string handling : சரம் கையாளல் : எழுத்துச் சரங்களில் இயங்கக்கூடிய திறனுள்ள நிரல் தொடர் மொழி.

string length : சர நீளம் : ஒரு சரத்தில் உள்ள எழுத்துகளின் எண்ணிக்கை.

string manipulation : சரம் கையாளுதல் : எழுத்துச் சரங்களைக் கையாளும் தொழில் நுட்பம்.

string, null : வெற்றுச்சரம்.

string processing languages : சர செயலாக்க மொழிகள் : சர எழுத் துகளைச் செயலாக்க வடிவமைக்கப்பட்ட நிரல் தொடர் மொழிகள். சான்றாக கோமிட், ஸ்னோபால், ஆம்பிட் கன்வர்ட், ஆக்சில், பேனன் மற்றும் இடோல்.

string variable : சர மாறிலி;சர மாறியல் மதிப்புரு;எழுத்திலக்க மாறிலி : அகர வரிசை எண்ணெழுத்துச் சரங்களின் சரம்.

stringy floppy : சர நெகிழ்வட்டு : கணினி சேமிப்பகச் சாதனம். ஏடு (Wafer) எனப்படும் காந்த நாடாவைப் பிடித்துக் கொண்டிருப்பது. வழக்கமான நாடாப் பெட்டிகளைவிட ஏடு நாடாக்கள் மென்மையானதும் வேகமாக இயங்குவதுமாகும்.

striping : நீட்டுதல் : வேகத்தினை அதிகரிக்க தரவுகளில் இடை வெளிவிடுதல் அல்லது பன்முகப்படுத்தல்.

strobe : நேரச் சமிக்கை : விசைப் பலகை அல்லது அச்சுப்பொறி போன்ற உள்ளீட்டு/வெளியீட்டுச் சாதன இடைமுகங்களின் வழியே, தரவு கடந்து செல்வதைத் தொடங்கி வைத்து ஒழுங்குபடுத்தும் நேரச் சமிக்கை.

stroke : அடி;தட்டல் : 1. விசையை அடித்தல். 2. கணினி வரைகலை அமைப்பில் அஸ்கி எழுத்துக் குறியீடுகளாக அல்லது வரைபடப் பொருளாக சேமிக்கப் படும் சொற்களாலான தரவு.

stroke font : கோட்டு எழுத்துரு : கோடுகளின் மூலம் உருவாக்கப்படும் எழுத்துரு. திண்ம வடிவிலான வடிவங்களை நிரப்பிப் பெறப்படும் எழுத்துருக்களுக்கு மாற்றானது.

stroke weight : அடிக்கும் எடை : அடிக்கப்பட்ட எழுத்தின் அடர்த்தி, ஒளி, ஊடகம், கருமை போன்றவைகளை அளப்பது. அச்செழுத்து வடிவமைப்பவர் கள் இச்சொல்லைப் பயன் படுத்துவார்கள்.

stroke writer : அடித்து அழுதுபவர் தொடர் கோடுகளாக (வெக்டார்) திரையில் பொருள்களைப் பிரதிபலிக்கும் நெறிய (வெக்டார்) வரைகலை முகப்பு.

strong typing : ஆழ இன உணர்வு : நிரலாக்க மொழியிலுள்ள ஒரு பண்புக் கூறு. நிரல் செயல்படுத்தப்படும் போது ஒரு மாறிலியின் தரவினம் (Data type) மாற்றப்படுவதை அனுமதிக்காமை. அது போலவே, ஒரு செயல்கூறில் வரையறுக்கப்பட்டுள்ள அளபுருக்களும் அச்செயல் கூறினை அழைக்கும்போது தருகின்ற மதிப்புகளும் இனமொத்து இருக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கும் பண்பு.

structurad : ஒழுங்கமைந்த.

structural design : கட்டுமான வடிவமைப்பு : செயலாக்கத்தின் கட்டுமான அளவை மற்றும் ஒட்டு மொத்த ஒருங்கமைவு.

structure : கட்டமைப்பு;ஒழுங்கமைவு : ஒரு பொருளின் பகுதிகளை வரிசைப்படுத்தல் அல்லது ஒழுங்குபடுத்துதல்;நிரல் தொடர்கள் ஒழுங்கு படுத்தப் படும் முறை.

structure chart : அமைப்பு வரை படம்;கட்டமைப்பு வரைபடம் : ஒன்றுக்கொன்று தொடர்புடைய கட்டுப்பாடு அளவை நிரல் தொடர்கூறுகள் அல்லது நிறுவனம் ஆகியவற்றை ஆவணப் படுத்தக்கூடிய வடிவமைப்புக் கருவி. மேலிருந்து கீழிறங்கும் நிரல் தொடரமைப்பை வரை படமுறையில் வழங்குவது.

structured analysis : வமைக்கப்பட்ட ஆய்வு : யுவர்டன், டெமார்க்கோ, கேன் மற்றும் சார்சன் ஆகியோர் சேர்ந்து முறைமை பிரிப்பாய்வுக்கான முறையை அணுகு முறையாகப் பயன்படுத்த உருவாக்கிய தொழில் நுட்பம். தரவு பாய்வு வரைபடங்கள், தரவு மாதிரியமைவு மற்றும் அமல்படுத் துவதைச் சாராத ஆவணப்படுத்துவதற்கான வரைகலை எண்முறையைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.

structured coding : கட்டுமானக் குறியீடமைத்தல் : அதிக அளவிலான கட்டுமானம் உள்ளதாக நிரல் தொடர்களை எழுதும் முறை.

structured decisions : வடிவமைக்கப்பட்ட முடிவுகள் : முடிவு நடைமுறைகள் அல்லது அலைகளுக்காக உருவாக்கப் பட்ட முடிவு விதிகளால் கட்டமைக்கப்பட்ட முடிவுகள். எங்கு முடிவு தேவைப்படுகிறது என்பதை முன்னதாகவே குறிப்பிடும் நடைமுறைகளைக் கொண்ட சூழ் நிலையில் அவை அமையும.

structured design : கட்டுமான வடிவமைப்பு : மேலிருந்து கீழ்வழியான பிரித்தளிப்பு மற்றும் தருக்கக் கட்டுபாட்டுக் கட்டுமானங்கள் மூலமாக நிரல் தொடர்களையும் குறியீடுகளையும் வடிவமைக்கும் முறை.

Structured English : கட்டுமான அமைப்பு ஆங்கிலம்;நெறிப்பட்ட ஆங்கிலம் : புரியக்கூடிய ஆங்கிலச் சொற்களுக்குப் பதிலாகக் குறியீடு களை அமைப்பதன் அடிப்படையிலான மொழி அணுகுமுறை.

structured flowchart : கட்டமைக்கப்பட்ட பாய்வு வரை படம் : மூன்று ஒடுபட கட்டுமான அமைப்புகள் மூலம் சிக்கல் தீர்வுகளைக் குறிப்பிடும் முறை : வரிசைமுறை கட்டுமானம், தேர்வு கட்டுமானம் மற்றும் லூப் கட்டமைப்பு.

structured programming : கட்டுமான நிரல்தொடரமைத்தல் : மாற்றி அமைத்து குறியீடு அமைப்பதற்காக முக்கிய பணிகளை கீழ்நிலை பகுதிகளாகப் பிரிக்க மேலிருந்து கீழ் மற்றும் சில அடிப்படை குறியீட்டுக் கட்டுமான கோட்பாடுகளைப் பயன்படுத்தி நிரல் தொடர் அமைக்கும் தொழில் நுட்பம். இதன்மூலம் சரியாகவும் தெளிவாகவும் தரவு மற்றும் கட்டுப்பாட்டு கட்டுமானங்களை உருவாக்கி நிரல்தொடர் குறியீடுகளை சிறப்பாக அமைக்க முடியும். நெறிமுறையில் படிப்படியாகப் போவதனால் நிரல் தொடரை மாற்றுவதிலும், பராமரிப்பதிலும் குறைந்த செலவும், மூலத்தை முன்னேற்ற மடையச் செய்யும் வாய்ப்பும் உண்டு.

structured query language (SQL) : வடிவமைக்கப்பட்ட வினவு மொழி : மேம்பட்ட தரவுத் தள மேலாண்மை அமைப்பு தொகுப்புகளுக்கு தர மானதாகக் கருதப்படும் ஒரு கேள்வி மொழி.

structured walkthrough : கட்டமைக்கப்பட்ட உலா : வடிவமைப்பு பிழைகளைக் கண்டறி யவும்,கருத்துகள் மற்றும் அறிவைப் பரிமாறிக் கொள்ளவும் உருவாக்கப் பட்ட தொழில்நுட்ப மாநாடுகள் அல்லது விமர்சனங்கள்.திட்டக்குழுவில் உள்ள அனைத்துத் தொழில்நுட்ப உறுப்பினர்களின் வேலைக்கான பொருளும் பிழை கண்டறிதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து தொழில்நுட்ப முறையில் விமர்சிக்கப்படும்.

structure,file:கோப்புக் கட்டமைப்பு.

structure,tree:மரவுருக் கட்டமைப்பு.

STRUDL:ஸ்ற்றுடல்:Structural Design Languages என்பதன் குறும்பெயர். கட்டுமானங்களை வடிவமைத்து ஆராயும் நிரல் தொடர் மொழி.

stub:அடிநிலை:ஒரு நிரல் தொடர்கூறு இதற்குக் குறியீடு இன்னும் எழுதப்படவில்லை.அப்போதுள்ள நிலையிலேயே நிரல் தொடரை சோதிக்க வடிவமைக்கப்பட்டது.

stub testing:அடிநிலைச் சோதனை:மேலிருந்து கீழ் கூறு நிலைச் செயலாக்கம்.ஒரு சிறிய பொம்மை நிரல் தொடரை பெரிய நிரல் தொடரின் உள்ளே வேறோரு வாலாயத்துக்காக நுழைத்துப் பயன்படுத்துவது. அடிநிலை(ஸ்டப்)என்பது ஒரு சொற்றொடர் அளவு எளிதாக இருக்கலாம் அல்லது ஒரு நிரலாக இருக்கலாம்.சான்று:(Return)திரும்பு.

studies,feasibility:சாத்திய கூறாய்வு.

stuffit:ஸ்டஃப்பிட்:அலாவுதீன் சிஸ்டம்ஸ்,ஆப்டோஸ்,கலிஃ போர்னியாவின் மெக்கின்டோஷ் பங்குப் பொருள் நிரல் தொடர்.இது கோப்புகளை பலவகை நெகிழ்வட்டுகளாக சுருக்கித் தருகிறது.

style:பாணி:அச்சுப்பொறி வெளியீட்டுக்குப் பயன்படுத்தப்படும் எழுத்துகளைக் குறிப்பிடும் பொதுப்பெயர்.பாணி என்பது சாய்வெழுத்து, தலை கீழாக்கல்-நிழல்,வெளிக் கோடு போன்றவற்றை உள்ளடக்கியதாக அமையும்.

style manual:நடை கையேடு:எந்த வகையான நூலையும் வெளி யிடுவதற்கு முன்பு கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் மற்றும் மரபுகளைக் கூறும் பல நிறுவனங்கள் வெளியிடும் ஒரு புத்தகம்.சிறந்த எழுத்தச்சுகள் மற்றும் அச்சிடும் பழக்கங்கள் ஆகியவைகளுக்கு ஒரு வழிகாட்டியாக விளங்குவதுடன் வெளியிடுவதற்காகத் தரவுகளை உருவாக்குபவர்களுக்கும் இது ஒரு பயனுள்ள குறிப்பாக அமையும்.

style sheet : நடை தாள் : ஒரு சொற்பகுதி கோப்பின் முழுமையும் அல்லது பகுதியில் பயன் படுத்தக்கூடிய பத்தி அல்லது எழுத்துத் தன்மைகளை அனு மதிக்கும் மென்பொருளின் பகுதி. சில சொல் செயலிகள்-சான்றாக : மைக்ரோசாஃப்ட் வேர்டு, வேர்டுபர்ஃபக்ட், மற்றும் பேஜ்மேக்கர், வென்ச்சுரா போன்ற டி. டீ. பி தொகுப்பு போன்றவற்றில் நடைதாள்கள் காணப்படுகின்றன. நடைதாள் என்பதில் பத்தியின் தன்மைகளின் அகலம், சாய்வெழுத்துகள், அடிக்கோடு பெரிய, சிறிய எழுத்து உள்தள்ளல்கள் போன்றவை அடங்கியுச்சியான, உடனடியான மாற்றங்கள்ளன. நடைதாளைப் பயன்படுத்துவதன் மூலம் வடிவத்தின் தொடர்ளைச் செய்யமுடியும். வெளி யீட்டில் சீரமைப்பைத் தருவதால் மென்பொருள் நிறுவனங்களிடமும், பெரு நிறுவன பயனீட்டாளர்களிடமும் அவை பிரபலமாக உள்ளன.

stylus : எழுத்தாணி;எழுது கருவி : வரைபட அமைப்பில் பயன் படுத்துவது போன்ற உள்ளீட்டுச் சாதனங்களில் பயன் படுத்தப்படும் எழுதுகோல் வடிவக் கருவி.

எழுது கருவி

எழுது கருவி

stylus printer : எழுத்தணி அச்சுப்பொறி.

. su : . எஸ்யூ : ஒர் இணைய தள் முகவரி முன்னாள் சோவியத் யூனியனைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

sub : பகுப்புகள்.

subcommand : துணைக் கட்டளை : ஒரு துணைப் பட்டியில் (submenu) இருக்கும் ஒரு கட்டளை. (ஒர் உயர்நிலைப் பட்டியிலிருந்து ஒரு விருப்பத் தேர்வை தேர்வுசெய்யும்போது கிடைக்கும் இன்னொரு பட்டி துணைப்பட்டி எனப்படும்).

subdirectory : உள் கோப்பகம் : வட்டில் ஒரு பெயரில் கோப்பகம் உருவாக்கப்பட்ட கோப்புகள் சேமித்து வைக்கப்படு கின்றன. கோப்பகத்தின் உள் பிரிவினையாக உள்கோப்பகம் உருவாக்கப் படுகிறது.

subdomain : உள்களம்;கிளைக்களம்.

sub form data sheet : உள் படிவத் தரவுத் தாள்.

subfunction : துணைப் பணி : ஒரு செயலாக்க அமைப்பின் குறுக்கீடு செய்கின்ற பல பணிகளில் ஒன்று. ஒரு பணி எண் எப்போதும் எச்மீதே வைக்கப்படும் என்றாலும் துணைப்பணி எண்களைச் செயல்படுத்து வதற்குமுன் அவற்றை அல்லில் (AL) வைக்கப்படும்.

subject : உள்ளடக்கம்;உட்பொருள்;கருப்பொருள்.

subject tree : கருப்பொருள் மரம் : வைய விரிவலையில் தரவுகளை கருப்பொருள் அடிப்படையில் வகைப்படுத்தி வரிசைப் படுத்தப்படும்முறை. ஒவ்வொரு வன்கயும் பல்வேறு கிளைகளாக உள் வகைகளாக பிரிக்கப் படும். அடிநிலையிலுள்ள கணுக்கள் குறிப்பிட்ட வலைப்பக்கத்துக் கான தொடுப்பினைக் கொண்டிருக்கும். வைய விரிவலையின் கருப்பொருள் மரத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டு'யாகூ"தளத்தின் முகப்புப்பக்கப் பட்டியல்.

submarine cable : கடலடிக் கம்பி வடம்;நீர் மூழ்கிக் கம்பிகள் : கடல் அடியிலிருந்து எடுக்கப்படும் நீர்மூழ்கித் தரவுத் தொடர்புக் கம்பிகள் மிகுந்த தொல்லை தருவன. ஆழ்நீரின் அழுத்தங்களைச் சமாளிக்கக் குழாய்கள் சீரமைப்புகளுக்கு (refit) அதிக தாங்கும் சக்தி தேவைப்படும். 19ஆம் நூற்றாண்டில் ஆழ்கடல் தந்திக் கம்பிகள் போட்டது போலவே ஆரம்பகால நீர்மூழ்கி தொலை பேசிக் கம்பிகளும் போடப்பட்டன. தேவையான பாது காப்பை அளிக்க கனமான இரும்புக் கவசக் கம்பிகள் ஒன்று அல்லது மேற்பட்ட அடுக்குகளாக தரவுத் தொடர்புக் கம்பிகளின்மீது சேர்க்கப்பட்டன. மேம்பட்ட முறைகள் பின்னர் கடைப்பிடிக்கப்பட்டன.

submarining : நீர் மூழ்கி விடல் : மடிமேல் வைக்கும் கணினி போன்ற ஒரு மெதுவாகக் காட்டும் திரையில் சுட்டி (Cursor) நகர்வதைத் தற்காலிக மாகக் காண முடியாமல் போதல்.

submenu : துணைப்பட்டியல் : ஒரு பட்டியல் தேர்விற்குள் வாய்ப்புகளின் துணைப் பட்டியல். துணைப் பட்டிகளில் பல நிலைகள் இருக்கலாம். subnet : கிளைப் பிணையம்;உட்பிணையம் : ஒரு பெரிய பிணையத் தின் அங்கமாக இருக்கும் இன்னொரு பிணையம்.

sub-notebook : சிறு கையேட்டுக் கணினி : குறைந்த எடையுள்ள கையேட்டுக் கணினி. கணினிகள் இலேசாக ஆகும்போது, கையேட்டுக் கணினிகள் 1 முதல் 2 கிலோக்களும் கையேடு 3 முதல் 4 வரை எடை கொண்டிருக்கும்.

subnotebook computer : சிறு கையேட்டுக் கணினி : வழக்கமான மடிக் கணினியைவிடச் சிறிய, எடை குறைந்த கையடக்கக் கணினி.

sub problems : உட் சிக்கல்கள்.

subprogramme : துணை நிரல் தொடர் : ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்யும் நிரல் தொடரின் ஒரு பகுதி. ஒரு குறிப்பிட்ட பணி துணை நிரல் தொடராகக் கையாளப்பட்டால் ஒரு இடத்திற்குமேல் அது தேவைப்படும் போது நிரல் தொடரமைக்கும் நேரத்தைக் குறைக்கும். ஒரே ஒருமுறை அதற்குக் குறியீடமைத்து நிரல்தொடர்களில் பல இடங்களில் அதைப் பயன் படுத்த முடியும். துணை நிரல் தொடர்களை அமைக்க துணை வாலாயங் களும், பணிகளும் பயன்படுத்தப்படலாம்.

subroutine : துணை வாலாயம்;உப செயல்முறை;துணை வழமை : அதற்குள்ளே ஆரம்ப இயக்கம். எப்போதும் துவக்கப்படாத துணை வாலாயம். பிற நிரல் தொடர்கள். குறிப்பாக முதன்மை நிரல் தொடர் அழைக்கும்போது மட்டும் இயக்கப்படும்.

subroutine reentry : துணை வாலாயம் திரும்பவரல்;துணை மறு நுழை : வேறொரு நிரல் தொடர் அதனை முடிக்கும் முன்பாக ஒரு நிரல் தொடரில், அதை ஆரம்பித்தல். கட்டுப்பாட்டு நிரல் தொடர் முன்னுரிமை குறிக்கீடுக்கு ஆளாகும்போது இது ஏற்படும்.

subschema : துணை அமைவு : ஒரு குறிப்பிட்ட நிரல் தொடருக்காக தேவைப்படும் தரவு தருக்க முறையில் ஒழுங்கு படுத்துதல்.

subscribe : உறுப்பினராகு;சந்தாதாரர் ஆகு : 1. செய்திக் குழுக்களின் பட்டியலில் ஒரு புதிய செய்திக்குழுவைச் சேர்த்தல். புதிய செய்திக் குழுவிலிருந்து புதிய கட்டுரைகளை பயனாளர்கள் பெறுவர். 2. ஒரு அஞ்சல் பட்டியலில் அல்லது அது போன்ற சேவைகளில் பயனாளர் ஒருவர் உறுப்பினராதல். subscript : அடியெண் கீழ் எழுத்து;அடிக்குறி : 1. ஒரு அணி அல்லது ஒரு வரிசையைக் கொண்ட சேமிப்பக உறுப்புகளை வரையறை செய்யும் மாறிலியின் பெயருடன் இணைக்கப்படும் முழு எண் மதிப்பு. 2. கணினி அல்லாத அச்செழுத்துகளில் அதே குறியீட்டின் மாறுபாடுகளிலிருந்து வேற்றுமைப்படுத்த ஒரு குறியீட்டின் வலது புறத்திலோ அல்லது கீழோ எழுதப்படும் ஒரு எழுத்து அல்லது இலக்கம். சான்று : 0a 0b (Superscript) மேலொட்டுக்கு எதிர்ச்சொல்.

subscripted variable : எண் வரிசையிட்ட மாறிலி : சிறிய குறியீட்டைத் தொடர்ந்துவரும் வரிசையில் ஏற்படும் எண் மதிப்பின் மாற்றத்தைக் குறிப் பிடும் குறியீடு. சான்று-சதுரங்கம் (2, 4) அல்லது A (7).

subscript mode : குறைத்தமைக்கும் முறை : எழுத்தின் இடத்தில் கீழ்ப் பகுதியால் வழக்கமான உயரத்தைவிடக் குறைந்த உயரத்தில் மூன்றில் இரண்டு பங்கு அளவு எழுத்துகளை அச்சிடுகிறது.

subset : உட்கணம்;துணைத் தொகுதி : ஒரு தொகுதியின் உள்ளே காணப்படும் வேறொரு தொகுதி.

substitute : பதிலீடு.

substrate : அடித்தளம் : நுண் மின்னணுவியலில், எதன்மீது ஒரு மின்சுற்று உருவாக்கப்படுகின்றதோ அந்தப் பருப்பொருள்.

subtracter : கழிப்பி.

subtraction : கழித்தல்.

substring : துணைச் சரம்;பகுதிச் சரம் : ஒரு எழுத்துச் சரத்தின் பகுதி.

subsystem : துணை அமைப்பு : முதன்மை அமைப்பின் கீழ் இயங்கும் துண்னை அமைவு.

sub task : உட்பணி.

subtract : கழி : உறவுமுறை தரவு தளத்தின் இரண்டாவது கோப்பில் இல்லாத ஒரு கோப்பில் இருக்கும் பதிவேடுகளைக்கொண்டு மூன்றாவது கோப்பினை உருவாக்குதல்.

subtree : கிளைமரம் : மரவுரு தரவுக் கட்டமைப்பில், ஒரு கணுவிலிருந்து கிளைத்துச் செல்லும் கணுக்களை வைத்துப் பார்த்தால் அது ஒரு கிளை மர வுருவாகவே தோற்றமளிக்கும்.

successive difference of expression : எண்ணுருக் கோவைகளில் தொடர் வேற்றுமை.

suffix : பின்னொட்டு.

suggestion : கருத்துரை. suite : கூட்டுத் தொகுப்பு : நெருங்கிய தொடர்புள்ள நிரல் தொடர்களின் தொகுதி அல்லது குழு.

suitecase : சூட்கேஸ்; (கைப்பெட்டி) : மெக்கின்டோஷ் கணினிகளில், சில எழுத்துருக்களையும், சிறு பயன்கூறுகளையும் கொண்ட ஒரு கோப்பு. தொடக்கக்கால மேக் இயக்க முறைமைப் பதிப்புகளில் இத்தகைய கோப்பு, திரையில் ஒரு கைப்பெட்டி போன்ற சின்னத்துடன் காட்சியளிக்கும்.

sum : தொகை.

summarize : தொகுத்துக் கூறு : செய்திக் குழுக்கள், அஞ்சல் பட்டியல்களில் கருத்துக் கணிப்பு நடத்தி மின்னஞ்சல் மூலமாக கருத்துகளைச் சேகரித்து, முடிவுகளைத் தொகுத்து வெளியிடல்.

summary : சுருக்கம்;பிழிவு.

sun (Sun Microsystems) : சன் (சன் மைக்ரோசிஸ்டம்ஸ்) : கட்டமைப்பு சார்ந்த, அதிகத் திறனுள்ள பணி நிலையங்களை உற்பத்தி செய்யும் 1982இல் நிறுவப்பட்ட நிறுவனம். தனியாக நிற்கும், கட்டமைப்புக் குட்பட்ட அமைப் புகள், வட்டில்லாத பணி நிலையங்கள், ஸ்பார்க், நுண்செயலகக் கட்டு மானம் கொண்ட கோப்பு வழங்கிகள் போன்றவற்றை இந்நிறுவனம் உற்பத்தி செய்கிறது. பிற விற்பனையாளர்களின் கணிப்பொறி அமைவுகளின் கட்டமைப்புகளின் பரிமாற்றம் செய்ய அனுமதிக்கும் திறந்த முறை மாதிரிகளை அது ஆதரிக்கிறது.

super : மீத்திறன்;மிகுதிறன்.

superalc : சூப்பரால்க் : கம்ப்யூட்டர் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் பீ. சி. விரிதாள் நிரல் தொடர். விசிகால்சின் காலடித் தடங்களை சுற்றி 80-களில் அமைக்கப்பட்ட ஆரம்பகால விரிதாள்களில் ஒன்று. சூப்பரால்க் 5 (1988) முப்பரிமாண திறனை அளிப்பதுடன், மேம்பட்ட வரைகலை மற்றும் 256 விரிதாள்களோடு இணைக்கப்படுகிறது.

super computer : மீப்பெருங்கணினி;உயர் கணினி : கிடைக்கின்ற பெரு முகக் கணினிகளில் மிகப்பெரிய, மிகவேகமான, மிகஅதிக விலையுள்ளது. அசாதாரண கணிப்பு சக்தி தேவைப்படும் நிறுவனங்கள் மற்றும் வணிக அமைப்புகளில் பயன்படுவது. எண் விழுங்கிகள் என்றும் சில சமயம் அழைக்கப்படுகிறது. ஏனென்றால் அவை ஒரு நொடிக்கு இலட்சக்கணக்கான இயக்கங்களைச் செய்கின்றன. சில புதிய கணினிகள் ஒரு நொடிக்கு கோடிக்கணக்கான இயக்கங்களைச் செய்கின்றன.

superconducting computers : மீக்கடத்திக் கணினிகள் : அதிகத் திறனுள்ள கணினிகள். சுழற்சி நேரத்தைக் குறைக்க ஜோசப்சன் விளைவையும் மீக் கடத்தும் தன்மையையும் இவற்றின் மின்சுற்றுகள் பயன்படுத்துகின்றன.

super conductor : மீக்கடத்தி : அதிவேக மின்னணு மின்சுற்று.

super disk : மீத்திறன் வட்டு;மிகுதிறன் வட்டு.

Super Drive : மீஇயக்கி : அதன் அதிகபட்ச அடர்த்தி வடிவமைப்பில் 1. 44 மீமிகு எண்மி தகவல்களைச் சேமிக்கும் மெக்கின்டோஷ் நெகிழ் வட்டு இயக்கி. முந்தை மேக் 400 மற்றும் 800 கிலோ எண்மி வட்டுகளையும் அது பிடித்து எழுதும்.

superfloppy : மீநெகிழ் வட்டு : பீ. சி. யின் 3. 5 வட்டு. அது 2. 88 மீமிகு எட்டியலை (MG) வைத்துக்கொள்ளக் கூடியது. 1. 44 மீமிகு எண்மி மற்றும் 720 கிலோ எண்மி வடிவமைப்புகளுக்கு ஏற்றதாக உள்ளது. 20 மீமிகு எண்மி வரிசையில் அதிகத் திறனுடைய நெகிழ்வட்டு.

superKey : மீ விசை : போர்லாண்ட் நிறுவனத்தின் பீ. சி. விசைப்பலகை பெரு செயலகம் பயன்படுத்துபவர்களின் விசைப்பலகை. மேக் ரோவை உருவாக்கவும், விசைப் பலகையை மறு ஒழுங்குபடுத்தவும் தரவுகளையும், நிரல் தொடர்களையும் இரகசியக் குறிப்பேற்றவும் இது பயனாளர்களை அனுமதிக்கிறது.

super market : பேரங்காடி.

supermini : மீக்குறு : பேரளவு சிறு கணினி, சிறிய பெருமுகக் கணினி களின் திறன் கொண்டவை.

supermini computer : மீக்குறு கணினி : 32 துண்மி சொற்களைப் பயன்படுத்தும் சிறு கணினி. அதிக சொல் நீளத்தின் மூலம் அதிக விளைவும் அதிக துல்லிய கணிப்பு, எளிய நிரல் தொடர் முன்னேற்றமும் ஏற்படும். மீக்குறு கணினியின் செயலாக்கத்திறன் ஒரு பேரளவு பெருமுகக் கணினியின் திறனுக்குச் சமமாக இருக்கும்.

super pipelining : மீத்திறன் இணைச் செயலாக்ககம் : நேரத்தில் நுண்செயலி, ஒன்றுக்கு மேற்பட்ட செயல்பாடுகளை நிறைவேற்ற வழி செய்யும் முறை இணைச் செய லாக்கம் (pipelining) எனப்படுகிறது. கொணர்தல், குறிவிலக்கல், இயக்குதல், திரும்பி எழுதல் போன்ற நுண்செயலிச் செயல்பாடுகள் சிறுசிறு கூறாகப் பிரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பணிகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இதனால் நுண்செயலி வாளா இருக்கும் நேரம் குறைந்து அதன் செயல்திறன் அதிகரிக்கிறது.

superscalar : மீப்பெரும் அடுக்ககம் : நுண்செயலிக் கட்டுமான வகை. நுண்செயலி, ஒரு கடிகாரச் சுழற்சியில் பல நிரல்களை இயக்கிட வகை செய்யும் கட்டுமான முறை.

Superscript : மேலொட்டு : ஒரு தொகுதியின் குறிப்பிட்ட பொருளை அடையாளம் காணவோ அல்லது எத்தனை மடங்கு என்பதைக் குறிப் பிடவோ ஒரு குறியீட்டின் வலது புறமாகவோ அல்லது மேலேயோ எழுதப்படும் எழுத்து அல்லது இலக்கம்.

superscript mode : மேலொட்டு முறைமை : எழுத்துகளுக்கான இடத்தின் மேற்பகுதியில் வழக்கமான உயரத்தைவிட மூன்றில் இரண்டு பங்கு உயரமுடைய எழுத்துகளை அச்சிடுகிறது.

super server : மீப் பணியகம் : பேரளவு ரேம் மற்றும் வட்டு திறன் பல் செயலகம் மற்றும் அதிவேக பல் செயலாக்கம் (நுண் வழித்தடம், அய்சா போன்றவை) ஆகியவற்றைக் கொண்ட கட்டமைவுப் பணியகம்.

super twist : சூப்பர் ட்விஸ்ட் : முந்தைய டி. என். தொழில் நுட்பத்தில் படிகங்களை 180 டிகிரி அல்லது அதற்கும் மேலே திருப்பி மேம்படுத்தும் எல். சி. டி. தொழில்நுட்பம். அகன்ற பார்க்கும் கோணமும் மேம்பட்ட கருமையும் அளிக்கிறது. அதன் மஞ்சள் மற்றும் பச்சை நீல நிறத்தினால் அதை அடையாளம் காணமுடிகிறது.

superuser : தலைமைப் பயனாளர் : யூனிக்ஸில் வரம்பற்ற அணுகல் சலுகைகள் உடைய பயனாளர். பெரும்பாலும் அவர் முறைமை நிர்வாகியாக இருப்பார்.

super VAR : மீப்பெரும் வார்;மீப் பெரும் மதிப்பேற்று மறு விற்பனையாளர் : மிகப்பெரிய அளவிலான விற்பனையை மேற்கொள்ளும் மதிப்பேற்று மறு விற்பனையாளர் (ValueAdded Retailer) என்பதன் சுருக்கம்.

supervisor : மேற்பார்வையாளர் : இயக்க அமைப்புப் போன்றது. 

supervisor call : மேற்பார்வையாளர் அழைப்பு : பயன்பாட்டு நிரல் தொடரின் ஒரு நிரல். அது கணினியைக் குறுக்கீடு செய்து அதன் மேற்பார்வை நிலையை மாற்றுகிறது. இயக்க அமைப்பு பின்னர் அந்த அழைப்பை ஆய்ந்து அதனைக் கையாளுமாறு சரியான வாலாயத்துக்கு நிரலிடுகிறது.

supervisor control programme : மேற்பார்வையாளர் கட்டுப்பாட்டு நிரல் தொடர் : நினைவகத்தில் எப்போதும் இருக்கின்ற இயக்க அமைப்பின் ஒரு பகுதி கரு (Kernal) போன்றது.

supervisor state : மேற்பார்வையாளர் நிலை : செயலாக்க அமைப்பில் நிரல்களை இயக்குகின்ற கணினியின் செயலாக்க முறை. இந்த முறையில் உள்ளீடு / வெளியீடு நிரல் போன்ற பயன்பாட்டு நிரல் தொடரில் இல்லாத சிறப்பு நிரல்களை கணினி இயக்க முடியும். இச் சொற்கள் பெரிய கணினி எல்லா கணினிகளும் இந்த இரண்டு நிலைகளையும் வேறுபடுத்திப் பார்க்கக்கூடியவை.

supervisory programme : மேற்பார்வை நிரல்

supervisory system : மேற்பார்வை அமைப்பு.

supply company : வழங்கும் நிறுவனம் : கணினி உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்படாத அல்லது விநியோகிக்கப்படாத பொருள்களை வழங்கும் நிறுவனம். அச்சுக் காகிதம், அச்சுப் பொறி, நாடாக்கள், வட்டுகள் போன்றவை.

supply spool : வழங்கீட்டுக் கண்டு.

support : ஆதரவு : வாடிக்கையாளருக்கு விற்பனையாளர் அளிக்கும் உதவியும் வாய் மொழி ஆலோசனையும்.

support chip : ஆதரவு சிப்பு : மையச் செயலகத்தை கணினியின் பிற பகுதிகளுடனோ அல்லது வெளிப்புறச் சாதனங்களுடனோ இணைக்கும் பெரிய ஒருங்கிணைந்த சிப்பு.

support library : ஆதரவு நூலகம் : ஏற்கெனவே உருவாக்கப்பட்டு சோதிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்ட முழுநிரல் தொடர்களையும் துணை வாலாயங்களையும் கொண்ட நூலகம்.

suppress : ஒடுக்கு  : கணினி வெளியீட்டிலிருந்து முன் செல்லும் சுழி (பூஜ்யம்) கள் அல்லது பிற தேவையற்ற எழுத்துகளை நீக்குதல்.

suppression : ஒடுக்குதல் : ஒரு சமிக்கையின் தேவையற்ற பகுதிகளை நீக்குதல்.

surf : உலாவு; மேய்; பார்வையிடு : இணையத்தில் உலாவுதல். செய்திக்குழுக்கள், கோஃபர் வெளிகள், குறிப்பாக வைய விரிவலையில் தகவல் குவியல்களுக்கு மத்தியில் உலாவருதல். தொலைக்காட்சியைப் பார்க்கும் போது பல்வேறு அலைவரிசைகளையும் மாற்றி மாற்றிப் பார்ப்பதுபோல இணையத்திலும் வேறுவேறு தலைப்புகளில் தகவலைத் தேடி இணையத் தளங்களிடையே ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவி மேலோட்டமாகப் பார்வையிடல்.

surface : மேற்பரப்பு : CADஇல் ஒரு பொருளின் வெளிப்புற வடிவியல் மேற்பரப்புகள் எண் கட்டுப்பாடு மாதிரிகளுக்குத் தான் அதிகம் தேவைப்படும். கம்பிச்சட்டங்கள் மற்றும் திடப் பொருள்களுக்கு அது தேவைப்படுவதில்லை. டிபேசை உருவாக்கிய வாய்ன் ராட்ளிஃப் பயன்படுத்திய சொல். 'டேட்டா பேஸ்' எந்திரத்துடன் இடைப்படுமாற்றம் செய்யும் மொழியே டிபேஸ்.

surface modeling : மேற்பரப்பு மாதிரியமைத்தல் : கேட் (Cad) முறையில், திடவடிவில் தோன்றும் பொருள்களைக் குறிப்பிடும் ஒரு கணிதத் தொழில்நுட்பம். கம்பிச் சட்ட மாதிரியமைப்பைவிட, மேற்பரப்பு மாதிரியமைத்தல் பொருள்களைக் குறிப்பிட்ட ஒரு முழுமையான முறையாகும். ஆனால் திட மாதிரியமைத்தலைப் போன்ற மேன்மையானதல்ல. திரையில் ஒன்றாகத் தோன்றினாலும் இவை வெவ் வேறானவை. திடமாதிரிகளைப் போல மேற்பரப்பு மாதிரிகளைத் துண்டுகளாக்க முடியாது. மேலும் மேற்பரப்பு மாதிரியில் பொருளானது வடிவியல் (ஜியாமட்ரி) முறையில் தவறாக இருக்கலாம். ஆனால் திடமாதிரியில் சரியாக இருக்க வேண்டும்.

surface mount : மேற்பரப்பு ஏற்றுதல் : மின்சுற்று அட்டை தொகுத்தளிக்கும் தொழில்நுட்பம். இதில் சிப்புகள் மற்றும் பிற பாகங்களில் உள்ள பின்களை பற்றவைக்கலாம். ஆனால் அவற்றின்மூலம் செய்ய முடியாது. அட்டைகள் சிறியதானாலும் வேகமாகக் கட்டப்படும். தாய் அட்டைகளின் உற்பத்தி மற்றும் அசெம்பிளியில் பயன்படுத்தப்படும் ஒரு வடிவமைப்பு தொழில்நுட்பம். இணைப்பு ஊசிகளைக் குறைவாகப் பயன்படுத்தும் மேலமைப்பு வாய்ப்புகள் மேம்பட்டவையாக உள்ளன.

surface mount technology : மேற்பரப்பில் ஏற்றும் தொழில் நுட்பம் : பட்டைகளைத் தொகுத்து உற்பத்தி செய்யப் பயன்படுத்தும் ஒரு வடிவமைப்பு தொழில்நுட்பம். இணைப்பு ஊசிகளைக் குறைவாகப் பயன்படுத்துவதன் மூலம் இது மேம்பட்ட வெளிக் கோடமைப்பு வாய்ப்புகளை அளிக்கிறது.

surface of resolution (சரியானது revolution)  : சுழற்சி மேற்பரப்பு : ஒரு குறிப்பிட்ட கோணத்தில் ஒரு நிலையான அச்சைச்சுற்றி சுழலும் ஒரு வளைகோட்டின் விளைவாக உருவாகும் உருவம்.

surface of revolution : சுழற்சிப் பரப்பு.

surge : எழுச்சி; வேகம் : மின்சக்தி திடீரென்று அதிகரித்தல்.

surge protector : வேக பாதுகாப்புப் பொறி ; எழுச்சிக் காப்பு : திடீரென்று மின்சக்தி அதிகரித்து அதன் மூலம் மின் கருவிகள் பாழாவதைத் தடுக்க, அதை வடிகட்டி அனுப்பும் சாதனம். 110 வோல்ட் மின்சக்தி வெளியீடு உள்ள ஒரு பிளக்கில் வேகப் பாதுகாப்புப் பொறி பொருத்தப்பட்டு அதன் மூலம் கணினி அல்லது பிற சாதனங்களில் இணைக்கப்படும்.

surge protection : எழுச்சிப் பாதுகாப்பு.

surges : எழுச்சிகள்.

surge suppressor : எழுச்சி ஒடுக்கி : பல கணினி மின்சக்தி மூலங்களில் பொருத்தப்பட்ட மின்னணுச் சாதனம். மின்சக்தி ஏற்ற, இறக்கம் ஆகி கணினியின் நுண்ணிய மின்னணு மின் சுற்றுக்களை சேதப்படுத்தா வண்ணம் தடுப்பது. லிஃப்ட் மோட்டார்கள், பற்றவைக்கும் சாதனங்கள் கம்ப்ரசர்கள் போன்ற பெரிய மின்சக்தி நுகரும் கருவி ஸ்பைக்குகளையும், சர்ஜ்களையும் உருவாக்கித் தரும்.

surging : வேகமாகப்பாய்தல்; எழுதல் : ஒரு மின்சுற்றின் மின்னோட்டம் அல்லது மின்சக்தி திடீரென்று தற்காலிகமாக மாறுதல் அடைவது.

surround : சுற்றுவெளி.

surround sound : பல்திசையொலி; சுற்றுவெளி ஒலி.

suspend : தற்காலிக நிறுத்தம்; இடை நிறுத்தம் : ஒரு இயக்கத்தை மீண்டும் துவக்கும் வகையில் நிறுத்தல்.

suspend command : இடைநிறுத்தக் கட்டளை : விண்டோஸ் 95/98 இயக்கமுறைமைகளில் மின்சாரத்தைச் சிக்கன மாகச் செலவழிக்க வகை செய்யும் ஒரு வசதி. கையடக்கக் கணினிகளில் இருந்த இவ்வசதி பிறவகைக் கணினிகளிலும் இன்றுள்ளன. தொடங்கு (start) பட்டித் தேர்வில் இடைநிறுத்து (suspend) என்னும் கட்டளையைத் தேர்வு செய்தால், கணினியின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்படும். ஆனால் கணினிக்கான மின்சாரம் துண்டிக்கப்படாது. விசைப்பலகையில் ஒரு விசையை அழுத்தியதும் கணினி மீண்டும் இயங்கத் தொடங்கிவிடும்.

sustained transfer rate : தாக்குப் பிடிக்கும் பரிமாற்ற வீதம் ; தளராப் பரிமாற்ற வீதம் : வட்டு அல்லது நாடா போன்ற ஒரு சேமிப்புச் சாதனத்துக்கு தக வலைப் பரிமாறும் வேகத்தைக் குறிக்கும் அளவீடு. வழக்கமான நேரத்தைவிட நீட்டித்த நேரத்துக்கு, சாதனத்தின் தரவு பரிமாறும் வேகத்தைக் குறிக்கிறது.

. sv : . எஸ்வி : ஓர் இணைய தள முகவரி எல்சால்வாடர் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

'SVC : எஸ்விசி : இணைப்புறு மெய்நிகர் மின்சுற்று என்று பொருள்படும் Switched Virtual Circuit என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு பொதி இணைப்பகப் பிணையத்தில் (Packer Switched Network) இரண்டு கணுக்களிடையே ஏற்படும் தருக்க நிலை இணைப்பு. இரண்டுக்குமிடையே தரவுப் பரிமாற்றம் நடைபெற வேண்டியிருந்தால் மட்டுமே இத்தகைய இணைப்பு ஏற்படும்.

SVGA : எஸ்விஜிஏ  : மீத்திறன் ஒளிக்காட்சி வரைகலைக் கோவை என்று பொருள்படும் Super Video Graphics Array என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் ஒத்தியல்புக் கணினிகளில் உயர் தெளிவு வண்ணக் காட்சி தருவதற்காக 1989ஆம் ஆண்டு ஒளிக்காட்சி மின்னணுத் தரக்கட்டுப்பாட்டு சங்கம் (Video Electronics Standards Association-VESA) உருவாக்கிய ஒளிக் காட்சித் தரவரையறை. எஸ்விஜிஏ ஒரு தர வரையறை என்ற போதிலும் சிலவேளைகளில் ஒளிக்காட்சி பயாஸுடன் ஒத்தியல்புச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

S-video connector : எஸ்-ஒளிக்காட்சி இணைப்பி : ஒளிக்காட்சிச் சாதனங்களின் நிறச்செறிவு (Chrominance), ஒளிச்செறிவு (Luminance) ஆகியவற்றைத் 

தனித்தனியே கையாளும் ஒரு வன்பொருள் இடைமுகம். ஆர்சிஏ -வகை அல்லது பிற கலவை இணைப்பிகளைப் பயன்படுத்திப் பெறுகின்ற படிமத்தை விடக் கூர்மையான படிமத்தை இவ்வகை இணைப்பிகள் தரவல்லவை.

swap : இடமாற்று, மாறுமிகள் : 1. இரண்டு பொருட்களை இடம் மாற்றிக்கொள்ளல். இரண்டு மாறிலிகளிலுள்ள மதிப்புகளை இடம் மாற்றிக் கொள்ளல். ஒரே நெகிழ்வட்டு இயக்கத்தில் இரண்டு வட்டுகளை மாறி மாறிப்பயன்படுத்தல். 2. நிரலின் ஒரு பகுதியையோ, தரவுகளையோ நினைவகத்திலிருந்து வட்டுக்கு, வட்டிலிருந்து நினைவகத்துக்கு இடம் மாற்றிக் கொள்ளல்.

swap file : இடமாற்றுக் கோப்பு : 386இன் மேம்பட்டமுறையில் சாளரத்துக்காகவே தனியாக ஒதுக்கப்பட்ட நிலைவட்டில் உள்ள ஒரு பகுதி. நினைவகத்திலிருந்து தற்காலிகமாக தரவுவை இடமாற்றிக் கோப்புக்கு சாளரங்களை மாற்றித் தரும். இதனால் பிற தரவுகளுக்கு இடம் தாராளமாகக் கிடைக்கும். இட மாற்றிக் கோப்புகள் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ அமைக்கப்படும்.

swapping : இடமாற்று : 1. மெய்நிகர் சேமிப்பகத்தில் துணை சேமிப்பகத்திலிருந்து உள் சேமிப்பகத்திற்குக் கொண்டு வந்து இருக்கின்ற பக்கத்தை மாற்றுதல். 2. நேரப்பங்கீட்டு அமைப்பில் நிரல் தொடரை உள்சேமிப்பகத்திற்குக் கொண்டு வருதல் அல்லது சேமிப்பகத்தில் சேமித்தல். 3. உள்சேமிப்பகத்தில் இருப்பதை துணை சேமிப்பகத்துக்கு மாற்றும் அதே வேளையில் உள் நினை வகத்தில் இருப்பதை துணை சேமிப்பகத்துக்கு மாற்றுதல்.

swarm ; பிழைத் தொகுதி : பல நிரல் தொடர் பிழைகள்.

swim : நீந்து : ஒளிக் (வீடியோ) காட்சித்திரையில் உள்ள உருவங்கள் வன்பொருள் அல்லது வேறு கோளாறுகளினால் தானாகவே நகர்தல். காட்சித் திரையில் விரும்பத்தகாத முறையில் படம் நகர்தல்.

switch : நிலைமாற்று : நிரல் தொடரமைத்தலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சொல்லப்பட்ட விதிமுறைகளுக்கேற்ப ஒன்று அல்லது பல நிரல் தொடர் வாக்கியங்களாக மாறுதல். 2. ஒரு கருவி அல்லது சாதனத்தை இயக்கு / நிறுத்து போன்று வேறுநிலைக்கு மின்  சாரம் மூலமாகவோ இயக்க முறையாலோ மாற்றுதல்.

switch board manager : நிலை மாற்றிப் பலகை மேலாளர்.

switch, console : பணியக நிலை மாற்றி.

switched connection : இணைப்பித் தொடர்பு.

switched Ethernet : இணைப்புறு ஈதர்நெட் : ஒரு ஈதர்நெட் குவியத்துக்குப் (Hub) பதிலாக ஓர் அதிவேக இணைப்பகத்தைப் (switch) பயன்படுத்தும் ஓர் ஈதர்நெட் பிணையம்.

switched lines : நிலைமாற்றுக் கம்பிகள் : பல்வேறு இடங்களுக்கு தொலைபேசி பொத்தான் மையங்கள்மூலம் இணைக்கப்படும் தகவல் தொடர்புக் கம்பிகள்.

switched network : நிலைமாற்றுப் பிணையம் : பன்னாட்டு அழைப்பு தொலை பேசி அமைப்பு. செலுத்து (transmission) நேரத்தில் ஒரு முனையில் இருந்து வேறொன்றுக்கு ஏற்படுத்தப்படும் தற்காலிக இணைப்பினைக் கொண்ட கட்டமைப்பு.

switcher : சுவிட்சர் (நிலை மாற்றி)  : மெக்கின்டோஷ் கணினிகளில் உள்ள ஒரு தனிச்சிறப்பான பயன்கூறு. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நிரல்களை நினைவகத்தில் தங்கியிருக்கச் செய்யும். பின்னாளில் சுவிட்சருக்குப் பதிலாக மல்ட்டிஃபைண்டர் (பல் முனைத் தேடி) என்னும் வசதி புகுத்தப்பட்டது.

switches : நிலைமாற்று விசைகள்.

switching : இணைப்பித்தல் ; இணைப்புறுத்தல் : இரு முனைகளுக்கிடையே தொடுப்பு ஏற்படுத்தவோ, தகவலைத் திசைவித்து அனுப்பவோ நிரந்தர இணைப்புகளுக்குப் பதிலாக தற்காலிகமாக இணைப்பிக்கும் ஒரு தகவல் தொடர்பு வழி முறை. எடுத்துக்காட்டாக, தொலைபேசி வழியான பிணைய இணைப்பில் அழைத்தவர்க்கும் அழைக்கப்பட்டவர்க்கும் இடையேயான தொடர்பு ஓர் இணைப்பக மையம் வழியே தான் நடைபெறுகிறது. கணினிப் பிணையங்களில் இரண்டு முனைகள் தகவல் பரிமாறிக் கொள்ள செய்தி இணைப்புறுத்தல் பொதி இணைப்புறுத்தல் என இரண்டு வகைகள் உள்ளன. இரண்டு முறையிலுமே இடைநிலை நிலையங்கள் மூலம் செய்திகள் திசைவிக்கப்படுகின்றன. இதனால் அனுப்பி/வாங்கி இரண்டுக்கும் இடையே தகவல் தொடர்பு ஏற்பட்டு விடுகிறது. switching algebra : நிலைமாற்று குறிக் கணக்கியல்  : நிலைமாற்று கொள்கைக்கு செயல்படுத்தப்படும்போது பூலியன் குறிக்கணக்கியலுக்குத் தரப்படும் பெயர்.

switching circuit : நிலைமாற்று மின்சுற்று : இலக்கமுறை மற்றும் நிலைமாற்று அமைப்புகளுடன் மின்சுற்று. இலக்கக் கணினிகள் தொலைபேசி அமைப்புகள் மற்றும் தானியங்கி கணக்கெடுப்பு அமைப்புகள் இதற்குச் சான்றுகள்.

switching hub : இணைப்பகக் குவியம் : வெவ்வேறு தகவல் தொடர்பு இணைப்புகளை ஒரு பிணையத்தில் இணைத்து, பிணையத்திலுள்ள கணினிகளுக்கிடையே செய்திகளையும், தகவல் பொதிகளையும் திசைவித்து அனுப்பும் பணியைச் செய்யும் ஒரு மையச் சாதனம்.

switching matrix : நிலைமாற்று அணி : குறுக்குக் கம்பி, மீறும் அழுத்து கட்டை நிலைமாற்று ஆகிய இரண்டும் விசைப்படு அணியின் இயக்கத்தையே சார்ந்துள்ளன. இணைக்கவேண்டிய மின்சுற்றுகளை செங்குத்து மற்றும் கிடைமட்டக் கோடுகளின் சரியான கோணங்களில் வரிசைப்படுத்துவதற்கான கோட்பாடு என்று இதைக் கூறலாம். இந்தக் கோடுகள் விசையின் உள்ளீடு அல்லது வெளியீடாகும்.

switching speed : இணைப்புறு வேகம் : ஏடீஎம் (ATM-Asynchronous Transfer Mode) அடிப்படையிலான பொதி இணைப்புறு தொலைத் தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தில் தரவுப் பொதிகள், பிணையத்தின் வழியாக அனுப்பப்படும் வேகத்தைக் குறிக்கிறது. இணைப்புறு வேகம் வினாடிக்கு இத்துணை கிலோபிட்ஸ் அல்லது மெகாபிட்ஸ் என்ற அலகுகளில் அளக்கப்படுகிறது.

switching theory : நிலைமாற்றுக் கொள்கை : இரண்டு அல்லது மேற்பட்ட தனிப்பட்ட நிலைகள் உள்ள மின்சுற்றுகளுக்குப் பயன்படுத்தப்படும் கொள்கை.

Switch Mode Power Supply (SMPS) : நிலைமாற்று முறைமை மின்வழங்கி.

switch more power supply : நிலைமாற்று மின்வழங்கி.

switch, toggle : இருநிலை மாற்றி.

switch-to computer : கணினிக்கு நிலைமாற்று : குரல் தொலை பேசியுடன் தள அணுகு முறையை ஒருங்கிணைப்பது. எடுத்துக்காட்டாக, வாடிக்கை யாளர் சேவை பயன்பாடுகளில் தானியங்கி எண்காட்டி போன்ற தொலைபேசி சேவைகளைப் பயன்படுத்தினால் உள்ளே வரும் அழைப்பு திரும்பப் பெற்று வாடிக்கையாளர் கோப் பின்மூலம் அடுத்துள்ள மனிதப் பிரதிநிதியிடம் செல்லும்.

sy : . எஸ்ஒய் : ஒர் இணைய தள முகவரி சிரியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும்புவிப் பிரிவுக் களப்பெயர்.

SYLK file : சில்க் கோப்பு : குறியீட்டுத் தொடுப்புக் கோப்பு என்று பொருள்படும் Symbolic Link Fie என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பெரும்பாலும் விரிதாள் தரவுகளைப் பரிமாறிக் கொள்வதற்குப் பயன்படுத்தப்படும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வடிவாக்க அடிப்படையில் உருவாக்கப்பட்ட கோப்பு. விரிதாள்களிலுள்ள வடிவமைப்புத் (Formating) தகவல்கள் மற்றும் சில மதிப்புகளுக்கிடையேயான உறவுமுறைகள் பாதுகாக்கப்படுகின்றன.

syllable structure : அசை பிரிப்பி

symbol : குறியீடு; குழுஉக்குறி : 1. எழுத்து, எண் அல்லது அடையாளம். ஒரு எண் இயக்கம் அல்லது உறவைக் குறிப்பிடுவது. 2. கணினியின் எழுத்துத் தொகுதியில் ஏதாவது ஒன்று.

symbol font : குறியீட்டு எழுத்துரு : சிறப்புவகை எழுத்துரு. வழக்கமான எழுத்துகள், நிறுத்தற்குறிகள், எண்களுக்குப் பதிலாக சிறப்பு அடையாளங்களைக் கொண்டிருக்கும். கணித அறிவியல், மொழியியல் குறியீடுகள், பிறமொழி எழுத்துகள் இருப்பதுண்டு.

symbolic address : குறியீட்டு முகவரி; குழுஉக்குறி முகவரி : குறியீடுகளின் மூலம் கூறப்படும் முகவரி. கணினியால் மொழிபெயர்க்கப்படுவதற்கு முன்பாக தொகுப்பியினால் முழு முகவரியாக மாற்றப்படுவது. நிரல் தொடர் அமைப்பவருக்கு எளியது.

symbolic coding : அடையாளக் குறியீடமைத்தல் : எந்திரமொழியல்லாத குறியீட்டில் எழுதப்பட்ட நிரல்களை குறியீட்டில் அமைத்தல். இயக்கக் குறியீடுகள் இயக்கிகளுக்காக குறியீட்டு எண்முறையே இதில் பயன்படுத்தப்படுகிறது.

symbolic device : குறியீட்டுச் சாதனம் : உள்ளிட்டு வெளியீட்டுக் கோப்பை குறிப்பிடப் பயன்படுத்தப்படும் பெயர். சான்று SYSDSK என்பது ஒரு காந்த வட்டு அலகைக் குறிப்பிடுகிறது.

symbolic editor : குறியீட்டுத் தொகுப்பி : மூலமொழியில் மாற்றங்களைச் செய்ய, தயாரிப்புகளுக்குக் கணினியை உபயோகிப்பவர்களுக்கு உதவும் அமைப்பு நிரல் தொடர். ஒரு செய்தி வரிகளைச் சேர்த்தோ மாற்றியோ அல்லது நீக்கியோ இதைச் செய்யலாம்.

symbolic I/O Assignment : குறியீட்டு உள்ளீட்டு / வெளியீட்டு மதிப்பிருத்தல் : ஒரு அட்டை படிப்பியைக் குறிப்பிட உள்ளீடு / வெளியீட்டைக் குறிப்பிடும் பெயர்.

symbolic language : குறியீட்டு மொழி : கணினி அமைப்பின் உள்ளீட்டு மொழியாக இல்லாத எழுத்துகள், எண்களால் உருவாக்கப்பட்ட போலி மொழி. புனைவு மொழி (Fabricated Language) என்றும் அழைக்கப்படும்.

symbolic link : குறியீட்டுத் தொடுப்பு : வட்டில் ஒரு கோப்பகத்திலுள்ள கோப்புப் பட்டியலில், கோப்பகத்திலுள்ள ஒரு கோப்பினைச் சுட்டும் தொடுப்பினைப் பதிவுசெய்து வைத்தல்.

symbolic logic : குறியீட்டுத் தருக்க முறை.

symbolic name : குறியீட்டுப் பெயர்.

symbolic programming : குறியீட்டு நிரல் தொடரமைத்தல் : கணினி நிரல் தொடர்களை உருவாக்க குறியீட்டு மொழியைப் பயன்படுத்தல்.

symbolic table : குறியீட்டுப் பட்டியல்; குறியீட்டு அட்டவணை : ஒரு குறியீட்டுத் தொகுதியை வேறொரு குறியீடுகள் அல்லது எண்களின் தொகுதியுடன் ஒப்பிடும் பட்டியல். சான்றாக சேர்ப்பி (Assembly) யில் குறியீட்டுப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நோக்க நிரல் தொடர் முகவரியின் குறியீட்டு அடையாளம் இருக்கும்.

symbol set : குறியீட்டுத் தொகுதி : ஒரு நிரலாக்க மொழிக்குரிய குறியீடுகள் அல்லது ஆஸ்கியின் நீட்டிப்புக் குறியீடுகள் போன்ற ஒரு தரவுக் குறியாக்க முறைமை (Data Encryption System) யில் அனுமதிக்கப்பட்டுள்ள குறியீடுகளின் திரட்டு.

symbol string : குறியீட்டுச் சரம் : குறியீடுகளை மட்டுமே கொண்ட சரம்.

symbol table குறியீட்டு அட்டவணை.  symmetric digital subscriber line : சீரொழுங்கு இலக்கமுறை சந்தாதாரர் இணைப்பு : செப்புக் கம்பிகளில் இருதிசைகளிலும் வினாடிக்கு 384 கிலோ பிட்டுகள் வேகத்தில் தரவுப் பரிமாற்றத்தை இயல்விக்கும் இலக்க முறைத் தொலைத் தகவல் தொடர்புத் தொழில் நுட்பம்.

symmetric multiprocessing : செஞ்சீர் பல்செயலாக்கம் : எந்த மையச் செயலகத்துக்கும் பயன்பாட்டு நிரல் அளிக்கத்தக்க பல்செயலாக்க வடிவமைப்பு. ஒரு மையச் செயலகமாகவோ அல்லது நிரலமைப்பவராகவோ செயல்படும். இவ்வாறே கணினியை ஏற்றி அடுத்துள்ள மையச் செயலகத்துக்கு வேலையைப் பிரித்துக் கொடுத்து உள்ளீடு/ வெளியீடு வேண்டுகோள்களைச் சமாளிக்கிறது.

symphony : ஒத்திசைவு : லோட்டஸ் நிறுவனத்தின் பீ. சி. களுக்கான ஒருங்கிணைந்த மென் பொருள் தொகுப்பு. இதில் சொல், விரிதாள், வணிக வரை கலைகள், தகவல் தொடர்புகள் மற்றும் ஒரு பெரு மொழி ஆகியவை உள்ளடங்கும்

SYN : சின்; எஸ்ஒய்என் : ஒத்திசைவு செயல்படா எழுத்து என்று பொருள்படும் Synchronized Idle Character என்பதன் சுருக்கம். நேர ஒத்திசைவுள்ள தகவல் தொடர்புகளில் பயன்படுத்தப்படும் எழுத்து/குறி. அனுப்பும்/பெறும் சாதனங்கள் நேர ஒத்திசைவைப் பராமரிக்க இது உதவும்.

sync character : இசைவுரு : ஒரே நேரத்தில் தகவல் தொடர்புகளில் எழுத்துகளை ஒரே நேரத்தில் இயங்கச் செய்வதற்கு அனுப்பப்படும் எழுத்து.

synchronization : ஒரே நேரத்திய அமைப்பு; ஒத்தியக்கம்  : நிகழ்வுகளை காலமுறைப்படி ஒழுங்குபடுத்துதல். தற்செயலாக ஒரே நேரத்தில் ஏற்படுவதாகவோ அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படுவதாகவோ அமைக்கப்படும்.

synchronization check : ஒரே நேரத்தில் நடைபெறும் சோதனை; ஒத்தியக்கச் சரி பார்ப்பு : சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட நிகழ்வு அல்லது சூழ்நிலை ஏற்படுகிறதா என்பதை முடிவு செய்ய நடைபெறும் சோதனை.

sychronized : ஒத்திசைந்த.

synchronize now : இப்போது ஒத்திசைவி.

synchronous : ஒத்தியக்க ; சீராக ; சேர்ந்தாற்போல் : ஒவ்வொரு நிகழ்வு அல்லது ஒரு அடிப்  படை இயக்கத்தின் செயல் ஆகியவற்றைத் துவங்கவும், அவற்றின் அடுத்த நிலைக்குப் போகவும் ஒரு நேரம் காட்டும் கடிகாரத்தின் சமிக்கைகளை ஒட்டி நடைபெறுவதைக் குறிப்பிடுகிறது.

synchronous communication : ஒரே நேரத்திய தரவுத் தொடர்புகள்; ஒத்தியக்கச் செய்தித் தொடர்பு : கணினிகளுக்கிடையில் மிக அதிகவேகத்தில் தரவுகளைப் பரிமாறிக்கொள்ளும் முறைகள். கவனமாக நேரம் அமைத்தலும், சிறப்பு கட்டுப்பாட்டுக் குறியீடுகளும் இதில் தேவை.

syncrhronous computer : ஒரே நேர கணினி; ஒத்தியியக்கக் கணினி : ஒரு கடிகாரம் உருவாக்கும் சமிக்கையின் விளைவாக இயக்கம் துவக்கப்படும் கணினி.

synchronous DRAM : ஒத்திசைவு டிரேம் : இயங்குநிலை குறிப்பிலா அணுகு நினைவகத்தின் (Dynamic Random Access Memory) ஒருவகை. வழக்கமான டி'-ரேம் நினைவகத்தைவிட உயர்கடிகார வேகத்தில் செயல்படக்கூடியது. ஒருவகை வெடிப்பு நுட்பத்தின் மூலம், அடுத்து அணுகவிருக்கும் நினைவக இருப்பிடத்தை முன்னறிந்து செயல்படும் திறன் படைத்தது.

synchronous network : ஒரே நேரத்திய கட்டமைப்பு ; ஒத்தியக்கப் பிணையம் : ஒரு பொது கடிகாரத்தின் துடிப்புக்கேற்ப ஒரே நேரத்தில் தகவல் தொடர்பு வழித்தடங்கள் செயல்படும் பிணையம்.

synchronous operation : ஒரே நேரத்திய இயக்கம்; ஒத்தியக்கச் செயல்பாடு : கடிகாரத் துடிப்புகளின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் ஒரு கணினி அமைப்பு.

synchronous protocol : ஒத்தியக்க வரைமுறை : பைசிங்க், எஸ்டிஎல்சி, எச்டிஎல்சி போன்ற ஒத்தியக்க செலுத்தியைக் கட்டுப்படுத்தும் தகவல் தொடர்பு வரைமுறை.

synchronous transmission : ஒரேநேரத்தில் தரவு அனுப்புதல்; ஒத்தியக்கச் செலுத்தம் : ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் துண்மிகள் அனுப்பப்படும் முறை. நேர ஒருங்கிணைப்புக்கு ஒரே கடிகார சமிக்கைகளையே பயன்படுத்தி அனுப்புதலும், பெறுதலும் செய்தல்.

synchronous UART : ஒத்திசைவு யுஏஆர்டீ : யுஏஆர்டீ என்பது உலகப் பொதுவான ஒத்திசையா வாங்கி / அனுப்பி (Universal Asynchronous Receiver/ Transmitter) என்பதைக் குறிக்  கிறது. அனுப்பியும் வாங்கியும் ஒரே நேரச் சமிக்கையைப் பகிர்ந்து கொண்டால் ஒத்திசைவு நேரியல் தகவல் பரிமாற்றம் இயலும்.

sync signal : ஒத்திசை சமிக்கை : ஒத்திசைவுச் சமிக்கை (Synchronization Signal) என்பதன் சுருக்கம். கிடைவரி (Raster) ஒளிக்காட்சிச் சமிக்கையின் ஒரு பகுதி. ஒவ்வொரு வருடுவரியின் இறுதியையும் (கிடைமட்ட ஒத்திசைச் சமிக்கை), கடைசி வருடுவரியின் இறுதியையும் (செங்குத்து ஒத்திசைச் சமிக்கை) இது கொண்டிருக்கும்.

synonym : மாற்றுப் பெயர் : ஆர்டிபி எம்எஸ் தரவுதளத் தொகுப்பில் ஒர் அட்டவணைக்கு இன்னொரு மாற்றுப் பெயர் சூட்டி அதனையே கையாளலாம்.

synonym dictionary : இணைச் சொல் அகராதி (அகரமுதலி) .

syntax : இலக்கணம்; தொடரியல் : ஒரு மொழி மற்றும் அதன் வெளிப்பாடுகளின் அமைப்பைக் குறித்த விதிகள். எல்லா தொகுப்பு நிலை மற்றும் உயர் நிலை மொழிகளும் ஒரு முறையான இலக்கணத்தைக் கொண்டவை.

syntax analyser : சொற்றொடர் பகுப்பி; சொற்றொடரிலக்கண பகுப்பாய்வி.

syntax checker : தொடரமைப்பு சரிபார்ப்பி : ஒரு நிரலாக்க மொழியில் கட்டளைத் தொடர் அமைப்புகளிலுள் பிழைகளை அடையாளம்காட்டும் ஒரு நிரல்.

syntax diagram or flowchart : இலக்கணத் தொடரியல் வரை படம் அல்லது பாய்வு வரை படம் : ஒரு குறிப்பிட்ட மென்பொருள் பயன்பாட்டின் இலக்கண விதிகளைக் காட்டும் பாய்வு வரைபடம். நிரல் தொடரமைப்பு மொழிகளில் பயன்படுத்தப்படுகிறது.

syntax error : இலக்கணப் பிழை : பயன்படுத்தப்படும் நிரல் தொடர் மொழியின் அமைப்பைக் குறித்த விதியை மீறுதல். READ என்பதற்குப் பதிலாக RIAD என்று தட்டச்சு செய்தால் அதற்குப் பொருள் என்ன என்று புரியாமல் கணினி தடுமாறும். இத்தகைய நிரல் தரப்படுமானால் உடனே கணினியிடமிருந்து 'பிழை என்று பதில் வரும். சான்றாக, 110இல் பிழை வந்தால் ஆபத்தில்லை அல்லது ஆபத்தான பிழை என்று அது கூறும்.

syntax rules : இலக்கண விதிமுறைகள்.

synthesis : ஒருங்கிணைவு ; இணைப்பாக்கம் : தனித்தனி  உறுப்புகளை ஒருங்கிணைத்து இசைவிணைவான ஒரு முழுமையைப் பெறுதல். (எ-டு) : தனித்தனி இலக்கமுறைத் துடிப்புகளை ஒருங்கிணைந்து ஒலியை உருவாக்க முடியும். இலக்கமுறைச் சொற்களை ஒருங்கிணைத்து மனிதப் பேச்சினை செயற்கையாக உருவாக்க முடியும்.

synthesizer : தொகுப்பி : ஒலியைத் தானாகவே உருவாக்கவோ அல்லது செயலாக்கவோ செய்யும் வெளியீட்டுச் சாதனத்தை தொகுப்பி என்று சொல்லலாம். சில தொகுப்பிகளில் நுண் செயலகங்கள் இருக்கும். கட்டுப்பாட்டுச் சாதனமாக அவை பயன்படுத்தப்படும். குரல் தொகுப்பிகள் தருகின்ற ஒலி, ஒரு நபர் பேசுவதற்காகவோ, இசைக் கருவிகளைப் போலவோ இருக்கும்.

. sys : . சிஸ் : முறைமை தகவமைவுக் கோப்புகளின் வகைப் பெயர். (extention).

sysadmin : சிஸ்அட்மின் : பெரும்பாலான யூனிக்ஸ் இயக்க முறைமைகளில் முறைமை நிர்வாகியின் புகுபதிகைப் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி.

SYSOP : சிசாப் : system operator என்பதன் குறும்பெயர். ஒரு மின்னணு செய்திப் பலகையை இயக்குபவர்.

sysReq key : சிஸ்ரக் விசை : system request key என்பதன் குறும்பெயர். மையக் கணினியின் கவனத்தை ஈர்க்கப் பயன்படுத்தப்படும் முகப்பு விசைப் பலகையில் உள்ள விசை. பீ. சி. விசைப்பலகைகளில் இந்த விசை உள்ளது. ஆனால், அபூர்வமாகவே பயன்படுத்தப்படுகிறது.

system : அமைப்பு; முறைமை : system என்பதை 'முறைமை' என்று கூறலாம். முறைகருவிகளின் திறன்கள், தொழில் நுட்பங்கள், மாற்றப்படக் கூடிய தகவல், ஒரு குறிப்பிட்ட மேலாண்மை நோக்கங்களை அடைவதில் இயக்கத்தை ஆதரித்தல் போன்றவற்றைக் கொண்டது. தொடர்புடைய வசதிகள், பொருள் சார்ந்த சேவைகள், ஆட்கள், தகவல் ஆகியவற்றைக் கொண்ட, விரும்பப்படும் இயக்கத்தைச் செய்வதற்குத் தேவையான தன்னிறைவுத் தன்மை கொண்டது.

system 7 : சிஸ்டம் 7 : மெக்கின்டோஷ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் முக்கிய மேம்பாட்டு நிலை (1992). இதில் மெய்நிகர் நினைவகம், கூடுதல் நினைவக முகவரியிடல், வெப்ப இணைப்பு கள் (பதிப்பு கூட்டு சேர்), பல்  பணியமைத்தல், உண்மை அச்சு எழுத்துகள் மற்றும் பயனாளர் இடைமுகத்துக்கான பலதரப்பட்ட மேம்பாடுகள் உள்ளன.

system 2000 : சிஸ்டம் 2000 : சாஸ் நிறுவனத்தின் பரம்பரை முறை, கட்டமைப்பு மற்றும் உறவுமுறை டிபிஎம்எஸ். இது ஐபிஎம், சிடிசி மற்றும் யூனிசிஸ் கணினிகளில் இயங்குகிறது. சாஸ் சிஸ்டத்துடன் இது ஒருங்கிணைக்கப்பட்டது.

system administrator : முறைமை நிர்வாகி : ஒரு பல்பயனாளர் கணினி அமைப்பு அல்லது தகவல் தொடர்பு அமைப்பு அல்லது இரண்டையும் நிர்வகிக்கும் பொறுப்பினை வகிக்கும் நபர். இவரே, பயனாளர்களை உருவாக்குகிறார்; நுழை சொல் (password) வழங்குகிறார். பல்வேறு பாதுகாப்பு அணுகு நிலைகளை உருவாக்குகிறார். சேமிப்பு இடப்பரப்புகளை ஒதுக்கீடு செய்கிறார். அத்துமீறி நுழையும் நபர்களை, நச்சு நிரல்களைக் கண்காணிக்கிறார்.

system analyser : அமைப்பு பகுப்பாய்வி : சிக்கலான கருவிகள் மற்றும் அமைப்புகளின் கள சேவையின்போது ஆபத்துக்கு பயன்படும் எடுத்துச் செல்லக் கூடிய சாதனம்.

system analysis : அமைப்புப் பகுப்பாய்வு; முறைமைப் பகுப்பாய்வு; அமைப்பு அலசல் : ஒரு கணினி அமைப்பின் பகுதிகள் மற்றும் தேவைகளை விவரமாக ஆய்தல். நிறுவனத்தின் தேவைகளையும் விரிவாக ஆராய்தல். தற்போது பயன்படுத்தப்படும் தரவு அமைப்பு மற்றும் திட்டமிடப்பட்டுள்ள தரவு அமைப்பு ஆகியவற்றை ஆராய்தல்.

system analyst : அமைப்பு பாய்வாளர், முறைமைப் பகுப்பாய்வாளர்; அமைப்பு அலசர் : ஒரு நிறுவன அமைப்பின் நடவடிக்கைகள், முறைகள், நடைமுறைகள் மற்றும் தொழில் நுட்பங்களை ஆராய்ந்து எத்தகைய செயல்களைச் செய்ய வேண்டும், அவற்றை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யும் நபர். அமைப்பு ஆய்வைச் செய்யும் நபர்.

system approach : அமைப்பு அணுகுமுறை : அறிவியல் முறைசார்ந்த சிக்கல் தீர்க்கும் ஒழுங்குமுறையான செயலாக்கம். இது சிக்கல்களை வரையறை செய்து, முறைமைகளின் சூழ்நிலையில் வாய்ப்புகளை வரையறை செய்கிறது. சிக்கல் அல்லது வாய்ப்பை விவரித்து தரவு தேடப்பட்டு மாற்றுத் 

தீர்வுகள் காணப்பட்டு மதிப்பிடப்படுகின்றன. பிறகு, சிறந்த தீர்வு தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அதன் வெற்றி மதிப்பிடப்படுகிறது.

system, audit of computer : கணினி முறைமைத் தணிக்கை.

system, binary number : இரும எண் முறைமை.

system board : அமைப்பு அட்டை : நுண்கணினியின் முதன்மை மின்சுற்றுப் பலகை. தாய்ப்பலகை, பின் தளம் (mother board, back plane) என்றும் அழைக்கப்படும்.

system chart : அமைப்பு வரைபடம் : வரைபடத்தின் வகைகளில் ஒன்று.

system clock : அமைப்பு கடிகாரம் : கணினியில் உள்ள அனைத்து மின்சுற்றுகளையும் இயக்கும் அடிப்படை துடிப்பினை வழங்குகின்ற படிகம். இதில் 8253 நேரம் காட்டும் சிப்புவும் அடக்கம்.

system commands : அமைப்புக் கட்டளைகள்; பொறியமைவு நிரல்கள் : உரையாடல் நேரப்பங்கீட்டு முறையில் இயக்கும் போது தரப்படும் சிறப்பு நிரல்கள். நிரல் தொடர்களை செயல்படுத்தவும் (RUN) அவற்றை வரிசைப்படுத்தவும் (LIST) சேமிக்கவும் (SAVE) மற்றும் இத்தகைய இயக்கங்களைச் செய்யவும் அவை கணினிக்கு நிரலிடுகின்றன.

system component matrix : அமைப்புப் பகுதிகள் அச்சுரு அமைப்பு : வன்பொருள், மென்பொருள், மனிதர்கள், பயன்படுத்தப்படும் வேலைகள் மற்றும் ஒரு தரவு அமைப்பில் உற்பத்தி செய்யப்படும் தரவு பொருட்களை ஆவணப்படுத்தும் அச்சுரு அமைப்பு.

system console : முறைமைப் பணியகம் : பெருமுகக் கணினி மற்றும் சிறு கணினி அமைப்புகளில் உள்ள கட்டுப்பாட்டு மையம். பிணைய அமைப்புகளில், பகிர்ந்தமை அமைப்புகளில், முறைமை நிர்வாகிக்கென ஒரு பணிநிலையம் ஒதுக்கப்பட்டிருக்கும். இப்பணி நிலையம், குறும்பரப்புப் பிணையங்களில் உள்ள முறைமைப் பணியகத்தை ஒத்ததாகும்.

system context : அமைப்பு நிலை : கணினி அமைப்புகள், துணை அமைப்புகள், கணினியின் பாகங்கள் ஆகியவைகளை குறிப்பிட்ட சூழ்நிலையில் கண்டறிந்து 'systemic view' என்றும் கூறப்படும்.  system, database management : தரவுத் தள மேலாண்மை முறைமை.

system development : அமைப்புகள் மேம்பாடு : ஒரு அமைப்பை எண்ணி வடிவமைத்து, அமல்படுத்துதல் புலனாய்வு, பகுப்பாய்வு, வடிவமைப்பு, அமலாக்கம் மற்றும் பராமரிப்பு ஆகிய செயல்முறைகளின் மூலம் ஒரு தரவு அமைப்பை உருவாக்குதல். அமைப்பு உருவாக்க ஆயுள் "சுழற்சி தரவு அமைப்பு உருவாக்கம் அல்லது பயன்பாடு உருவாக்கம் என்றும் கூறலாம்.

system development cycle : அமைப்பு உருவாக்க சுழற்சி : பயனாளர் மற்றும் தொழில் நுட்ப அலுவலரின் பரஸ்பர முயற்சி தேவைப்படும் தரவு முறைமை (பயன்பாடு) ஏற்படுத்துவது பற்றிய தொடர் நிகழ்வுகள். இந்த சுழற்சி முறைமை பகுப்பாய்வு மற்றும் வடிவமைப்பிலிருந்து தொடங்குகிறது. இதில் வாய்ப்பு ஆய்வு, பொது வடிவமைப்பு, மாதிரி அமைத்தல், விவர வடிவமைப்பு, செயல்பாட்டு விவரக் குறிப்பு ஆகியவை இடம் பெறும். நிரல் தொடரமைப்பில் வடிவமைப்பு, செயல்பாட்டு விவரக் குறிப்பு ஆகியவை இடம் பெறும். நிரல் தொடரமைப்பில் வடிவமைப்பு, குறியீடு சோதித்தல் மற்றும் செயல்படுத்துவதில் பயிற்சி, மாற்றல், நிறுவுதல் ஆகியவற்றையடுத்து இறுதியாக பயனாளர் ஏற்பு ஆகியவை அடங்கி உள்ளன.

system development tools : அமைப்பு உருவாக்கக்கருவிகள் : ஒரு தரவு அமைப்பினை உருவாக்கல் அல்லது பயன்பாடுகளை உருவாக்கலுக்காக ஆய்ந்து, வடிவமைத்து ஆவணப்படுத்த உதவும் வரைகலை, சொற்பகுதி மற்றும் கணினி உதவி கருவிகள் மற்றும் தொழில்நுட்பம்.

system diagnostics : அமைப்பு குறை கண்டறிதல்கள் : ஒட்டுமொத்த கணினி அமைப்பின் கோளாறுகளைக் கண்டறிய பயன்படுத்தப்படும் நிரல் தொடர்கள்.

system disk : அமைப்பு வட்டு; முறைமை வட்டு : அமைப்பு மென்பொருளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட வட்டுப் பெட்டி அல்லது வட்டு இயக்கி. இதில் செயலாக்க அமைப்பு சேர்ப்பிகள், தொகுப்புகள் மற்றும் பிற பயன்பாடு கட்டுப்பாடு நிரல் தொடர்கள் அடங்கி உள்ளன. இயக்க  முறைமை பதிவு செய்யப்பட்டுள்ள வட்டு. கணினியை இயக்க இந்த வட்டினைப் பயன்படுத்தலாம்.

system, disk operating : வட்டு இயக்க முறைமை.

systems engineer : முறைமைப் பொறிஞர்; அமைப்புப் பொறியாளர் : அமைப்பு ஆய்வு, அமைப்பு வடிவமைப்பு மற்றும் அமைப்பு நிரல் தொடர் பணிகளைச் செய்யும் நபர்.

system engineering : அமைப்பு பொறியியல்.

system error : முறைமைப் பிழை : இயக்க முறைமை தொடர்ந்து இயல்பாகச் செயல்பட முடியாதபடி முடக்கிப் போடுகிற மென்பொருள் பிழை. இப்பிழை ஏற்படின் கணினியை மீண்டும் இயக்குவதைத் தவிர வேறு வழியில்லை.

system failure : அமைப்பு கோளாறு : வன்பொருள் அல்லது மென்பொருள் செயல்படாமை. செயலாக்க அமைப்பின் சிக்கலுடன் சேர்ந்த சிக்கலை இது குறிப்பிடலாம்.

system file : முறைமைக் கோப்பு : மெக்கின்டோஷில், இயக்க முறைமைக்குத் தேவையான எழுத்துருக்கள், சின்னங்கள், முன்னிருப்பான உரையாடல் பெட்டிகள் போன்ற வளங்களைக் கொண்டுள்ள வளக்கோப்பு.

system flowchart : முறைமை பாய்வு நிரல்படம்; அமைப்பு பாய்வு வரைபடம் : கணினி அமைப்பின் ஒரு பகுதி அல்லது முழுவதையும் வரைபட உருவில் குறிப்பிடுதல். ஒன்றோடொன்று இணைந்துள்ள பாய்வு வரைபடக் குறியீட்டு முறையில் வரிசைப்படுத்தி குறியிட்ட பயன்பாட்டுக்கு ஏற்ப திட்டமிடல், கட்டுப்பாடு மற்றும் இயக்க வர்ணனைகளோடு கணினி இயக்கம் குறிப்பிடப்படும்.

system folder : அமைப்பு மடிப்பு : மெக்கன்டோஷில் உள்ள ஃபோல்டர். இதில் சிஸ்டம், ஃபைன்டர், மல்டி ஃபைன்டர், அச்சக இயக்கிகளின் எழுத்துகள், மேசை துணைப் பொருள்கள், ஐ என் ஐ டி-க்கள் மற்றும் சிடேவ்ஸ் (cdeus) ஆகியவை உண்டு.

system followup : அமைப்பின் தொடரல் : புதிர் நிறுவப்பட்ட கணினி இயக்கம் அதன் திட்டப்படி செயல்படுகிறதா என்பதைத் தொடர்ந்து மதிப்பீடு செய்து பரிசீலித்தல்.

system font : முறைமை எழுத்துரு : மெக்கின்டோஷ் மற்றும் சில பீசி பயன்பாடுகளில், பட்டித் தலைப்புகள், பட்டித் தேர்வுகள் போன்ற திரைத் தோற்ற உரைகளுக்கு கணினியால் பயன்படுத்தப்படும் எழுத்துரு. (ஆனால் சொல்செயலி அல்லது பிற பயன்பாடுகளில் உருவாக்கப்படும் ஆவணங்களில் இருக்கும் எழுத்துரு அல்ல).

system generation (SYSGEN) : அமைப்பு உருவாக்கம் (சிஸ் ஜென்)  : ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுவப்பட்டு, ஒரு அடிப்படை அமைப்பை துவக்கும் செயல். விற்பனையாளரிடமிருந்து பெறப்பட்ட பொதுவான செயலாக்க அமைப்பு முறையைத் தனிப்பட்ட பயனாளர் தேவைக்கேற்ப மாற்றுதல்.

system house : அமைப்பு அகம்; முறைமை அகம்; அமைப்புகளின் நிறுவனம் : பயனாளரின் தேவைகளுக்கேற்ப வன்பொருள், மென்பொருள் அமைப்புகளை உருவாக்கும் நிறுவனம்.

system image : அமைப்பு உரு : செயலாக்க அமைப்பு, ஓடும் நிரல் தொடர்கள் உள்ளிட்ட நடப்புச் செயலாக்கம் சூழ்நிலையின் நினைவகப் பார்வை.

system implementation : அமைப்பு அமலாக்கம் : ஒரு புதிய (கணினி) அமைப்பை உருவாக்குவதில் இறுதி நிலை. இந்த நிலையில் அமைப்பில் உள்ள பிழை முழுவதும் நீக்கப்படுகிறது. இது பயன்படுத்துவோரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறதா என்றும் சரியாக இயங்குகிறதா என்றும் முடிவு செய்யப்படுகிறது.

system installation : அமைப்பு நிறுவுதல் : ஒரு புதிய அமைப்பை இயக்கத்துக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள்.

system integration : முறைமை ஒருங்கிணைப்பு : பல்வேறு மூலக் கருவித் தயாரிப்பாளர்களின் (OEMs) பொருட்களை ஒருங்கிணைத்து ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளருக்காக உருவாக்கப்படுகின்ற ஒரு கணினி அமைப்பு.

system integrator : முறைமை ஒருங்கிணைப்பி.

system interrupt : அமைப்பு குறுக்கீடு : ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தப்பட்டாலும் மீண்டும் அந்த இடத்தில் இருந்து துவக்கப்படும் வகையில் நிரல் தொடர் அல்லது வாலாயத்தின் (ரொட்டீனின்) வழக்கமான இயக்கத்தை நிறுத்துதல்.

system investigation : அமைப்பு புலனாய்வு : ஒரு வணிகச் சிக்கலுக்காகத் திட்டமிடப்படும் தரவு அமைப்பு தீர்வு குறித்த முதல் நிலை ஆய்வு மற்றும் திரையிடும் தேர்வு.

system, knowledge based : அறிவு வழி முறைமை'.

system level : அமைப்பு நிலை  : செயலாக்க அமைப்பு முறை அல்லது வேறு சில கட்டுப்பாட்டு நிரல் தொடர் செய்கின்ற இயக்கம்.

system library : முறைமை நூலகம், அமைப்பு நூலகம்.

system life cycle : அமைப்பு ஆயுள் சுழற்சி : ஒரு தரவு அமைப்பின் பயனுள்ள வாழ் நாள். அதன் வாழ்நாளானது வணிகத்தின் தன்மை மற்றும் ஓட்டம், அத்துடன் தரவுத் தளம் மற்றும் பயன்பாடுகளை உருவாக்கப் பயன்படும் மென் பொருள் மேம்பாட்டுக் கருவிகளைப் பொறுத்தே அமையும்.

system loader : அமைப்பு ஏற்றி : அமைப்பு நூலகத்தில் உள்ள நிரல் தொடர்களைக் கண்டறியவும் கணினி அமைப்பின் உள் சேமிப்பகத்தில் அதை ஏற்றவும் பயன்படும் மேற்பார்வை நிரல்தொடர்.

system maintenance : அமைப்பு பராமரிப்பு : விரும்பத்தக்க அல்லது தேவையான மேம்பாடுகளைச் செய்வதற்காக ஒரு அமைப்பை கண்காணித்து, மதிப்பிட்டு, மாற்றுதல்.

system management information : அமைப்பு மேலாண்மை; மேலாண்மைத் தகவல் முறைமை.

system manual : முறைமை விளக்க நூல்; அமைப்புக் கையேடு : ஒரு அமைப்பின் இயக்கத்தைக் குறித்த தரவைக் கொண்டுள்ள ஆவணம். நிறுவனத்தின் தரவு ஓட்டம் பயன்படுத்திய படிவங்கள், உருவாக்கிய அறிக்கைகள், செய்யப்பட்ட கட்டுப்பாடுகள் அவற்றை முடிவு செய்ய தேவையான விவரங்களை நிர்வாகத்துக்கு அளிப்பது. வேலையின் விளக்கங்களும் பொதுவாக அளிக்கப்படும்.

system memory : அமைப்பு நினைவகம் : செயலாக்க அமைப்பைப் பயன்படுத்துகின்ற நினைவகம்.

system monitor : முறைமைக் கண்காணி.

system, operating : இயக்க முறைமை.  system priorities : முறைமை முன்னுரிமைகள்; அமைப்பு முன்னுரிமைகள்  : தரவு அமைப்புத் திட்டங்களை எந்த வரிசையில் எடுத்துக் கொள்ளலாம் என்பதை முடிவு செய்யும் முன்னுரிமைகள்.

system programmer : முறைமை நிரல்; அமைப்பு நிரல் தொடராளர் : 1. ஒரு கணினியின் ஒட்டு மொத்த உற்பத்தித் திறனை மேம்படுத்தும் வகையில் அமைப்பின் பயன்பாட்டை திட்டமிட்டு, உருவாக்கி, கட்டுப்படுத்தி, பராமரித்து வரும் நிரல் தொடராளர். 2. நிரல் தொடரமைக்கும் அமைப்புகளை வடிவமைக்கும் நிரல் தொடராளர்.

system programming : அமைப்பு நிரல் தொடரமைத்தல் : கணினியின் செயலாக்க அமைப்புகளாக அமையும் நிரல் தொடர்களை உருவாக்குதல். சேர்ப்பிகள், தொகுப்பிகளின் கட்டுப்பாடு நிரல் தொடர்கள் மற்றும் உள்ளீடு/வெளியீடுகளைக் கையாள்தல் போன்றவை இத்தகைய நிரல் தொடர்கள். செயலாக்க அமைப்பு மென்பொருளை உருவாக்கிப் பராமரித்தல்.

system prompt : அமைப்புத் தூண்டி : கட்டளைக்காக செயலாக்க அமைப்பு காத்திருக்கிறது என்பதை குறிப்பிடும் திரையின் மேலுள்ள குறியீடு.

system recovery : முறைமை மீட்சி : கணினி செயல்படாமல் முடங்கிப் போகும் போது, அதனை செயல்படும் நிலைக்குக் கொண்டுவர மேற்கொள்ளும் நடவடிக்கை. இயக்க முறைமை செயல்படத் தொடங்கியதும் இந்த நடவடிக்கை தொடங்கும். சிலவேளைகளில் பழுதேற்பட்டபோது செயல்பாட்டில் இருந்த பணிகளை மூட வேண்டியிருக்கும். பழுதின் போது நினைவகத்திலிருந்து கட்டமைப்புகளை மீட்டுருவாக்க வேண்டியிருக்கும்.

system requirements : அமைப்புத் தேவைகள் : இறுதிப் பயனாளரின் தரவுத் தேவைகளை ஈடுசெய்யத் தேவைப்படும் தரவு அமைப்பின் திறன்கள். செயல் தேவைகள் Functional requirements என்றும் அழைக்கப்படும்.

system reset : அமைப்பை மீண்டும் சரிசெய்தல் : மீண்டும் அதைத் துவக்கியதாகவோ, நிறுத்தியதாகவோ கணினியை ஏமாற்றும்போது ஏற்படும் இயக்கம்.

system resource : முறைமை மூலம்; முறைமை வளம்  : 

மெக்கின்டோஷில் முறைமைக் கோப்பில் சேமிக்கப்பட்டுள்ள பற்பல நிரல்கூறுகள், வரையறுப்புகள், தகவல் துணுக்குகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. மிதவைப்புள்ளிக் கணக்கீட்டு நிரல் கூறுகள், எழுத்துரு வரையறைகள், புறச்சாதன இயக்கிகள் இவற்றுள் அடங்கும்.

system security : அமைப்பு பாதுகாப்பு : ஒரு நிறுவனம் மற்றும் அதன் வாடிக்கையாளர்களின் பதிவேடுகளின் இரகசியத்தைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் வன்பொருள் மற்றும் மென்பொருளின் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளும், மேலாண்மை நடைமுறைகளும்.

systems management : அமைப்பு மேலாண்மை : அமைப்பு உருவாக்கல் மேலாண்மை. இதில் அமைப்பு ஆய்வு மற்றும் வடிவமைப்பு, பயன்பாட்டு மேம்பாடு மற்றும் அமலாக்கம் ஆகியவை உள்ளன.

system software : அமைப்பு மென் பொருள் : ஒரு கணினி அமைப்பின் இயக்கங்களுக்கு உதவி, கட்டுப்படுத்தும் நிரல் தொடர்கள். அமைப்பு மென் பொருள் என்பது செயலாக்க அமைப்பு போன்ற பலதரப் பட்ட நிரல்தொடர்களைக் குறிப்பது. தரவுத் தள மேலாண்மை அமைப்பு, தகவல் தொடர்பு கட்டுப்பாடு நிரல் தொடர்கள், சேவை மற்றும் பயன்பாடு நிரல் தொடர்கள் மற்றும் நிரல் தொடர் மொழி பெயர்ப்பிகள் ஆகியவை இவ்வகையில் சேரும்.

system software packages : அமைப்பு மென்பொருள் தொகுப்பு : கணினியை இயக்கி, கட்டுப்படுத்தி அதன் செயலாக்கத் திறன்களை அதிகரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சிக்கலான நிரல் தொடர்களின் தொகுதி.

systems solution methodology : அமைப்பு தீர்வு வழிமுறை : சிக்கல் தீர்வுக்கான அமைப்பு அணுகுமுறை. உண்மை வணிக சூழ்நிலைகள், மாதிரி ஆய்வுகளுக்காக இதை வழிமுறையாக மாற்றிச் சொல்லப்படுகிறது.

system specifications : அமைப்பு விளக்கக் குறிப்புகள் : அமைப்பு வடிவமைப்பு நிலையின் உற்பத்திப் பொருள். வன்பொருள், மென்பொருள், வசதிகள், ஆட்கள், தரவுத் தளம் மற்றும் திட்டமிடப்பட்ட தரவு அமைப்பின் பயனாளர் இடைமுகம் ஆகியவற்றைப் பற்றிய விளக்கக் குறிப்புகளை இது கொண்டுள்ளது.  systems programms : அமைப்பு நிரல் தொடர்கள் : கணினி அமைப்புகளின் உள் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் நிரல் தொடர்கள். செயலாக்க அமைப்புகள், தொகுப்பிகள், மொழி பெயர்ப்பிகள், சேர்ப்பிகள், வரைகலை ஆதரவு நிரல் தொடர்கள் மற்றும் கணித வாலாயம்கள் போன்றவை இத்தகைய நிரல் தொடர்களாகும்.

systems study : அமைப்பு ஆய்வு : ஒரு வணிக அமைப்பை நிறுவவோ அல்லது மாற்றி அமைக்கவோ ஏற்றதா என்பதை முடிவு செய்யும் ஆய்வு.

system support : அமைப்பு உதவி : அமல்படுத்தப்படும் ஒரு கணினி அமைப்பின் பயன் மற்றும் மேம்பாட்டுக்கான சேவைகள் மற்றும் பொருள்களைத் தொடர்ந்து வழங்குதல்.

system support programms : அமைப்பு உதவி நிரல் தொடர்கள் : ஒரு கணினி அமைப்புக்கு பலதரப்பட்ட உதவி சேவைகளை அளித்து அதன் இயக்கம், மேலாண்மை மற்றும் பயனாளர்களுக்கு உதவிடும் நிரல்தொடர்கள். அமைப்புப் பயன்பாடுகள் மற்றும் செயல்பாடு, காட்சித்திரைகள் இதற்குச் சான்றுகள்.

systems synthesis : அமைப்பைப் பிரித்தறிதல் : ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்கான நடைமுறைகளைத் திட்டமிடுதல்.

system termination : அமைப்பு நிறுத்தம் : ஒரு கணினி அமைப்பில் உள்ள அனைத்துச் செயலாக்கங்களும் நிறுத்தப்பட்ட நிலை.

system test : அமைப்புச் சோதனை : சோதனைக்காக ஒரு முழு கணினி அமைப்பினை ஓட்டுதல்.

system testing : அமைப்புகளைச் சோதித்தல் : அமைப்பு ஆய்வாளர் விரும்பும் வண்ணம் உள்ளீடு/வெளியீடு உள்ளிட்ட அனைத்து நிரல் தொடர்களும் தொடர்பு கொண்டுள்ளதா என்பதை வரிசையாக தொடர் நிரல் தொடர்கள் மூலம் சோதித்தல்.

system time/date : அமைப்பு நேரம்/நாள் : கணினி நிறுத்தப்பட்டாலும் ஒரு மின்கலம் மூலம் நேரமும், நாளும் தொடர்ந்து ஓடிவருதல். புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்து கோப்புகளுக்கும் முத்திரையிடவும், நேரம் சார்ந்த செயல்களைச் செய்யவும் இது தேவைப்படுகிறது.

system tools : முறைமைக் கருவிகள். system unit : அமைப்பு அலகு : நிலை வட்டு மற்றும் நெகிழ் வட்டு இயக்கிகள் போன்ற செயலாக்க அலகு மற்றும் சாதனங்களைக் கொண்ட கணினியின் ஒரு பகுதி. ஐபிஎம். பீசி ஏற்புடைய அமைப்பு அலகில் நுண் செயலக சிப்பு, ரோம், ரேம் மற்றும் உள்ளீடு/வெளியீடு வழித்தடம் ஆகியவை இருக்கும். ஒன்று, இரண்டு அல்லது பல தட்டு இயக்கிகளும், வெளிப்புறப் பொருள்களைச் சேர்ப்பதற்கான விரிவாக்கப் பகுதிகளும் அதில் இருக்கலாம்.

system user ; அமைப்பு பயனாளர் : ஒரு அமைப்பின் வசதிக்காகப் பயன்படுத்தும் ஒரு நபர், சாதனம் அல்லது ஒரு அமைப்பு.

system utility programms : அமைப்பு பயன்பாட்டு நிரல் தொடர்கள் : சிக்கல்களுக்குத் தீர்வு காணும்போதோ அல்லது இயக்கத்தின் ஒட்டுமொத்த, திறனை மேம்படுத்தவோ அமைப்பு நிரல் தொடராளருக்கு உதவும் நிரல் தொடர்களின் தொகுதி.

System V : சிஸ்டம் V : ஏடீ & டீ நிறுவனத்தினர் வெளியிட்ட யூனிக்ஸின் ஒரு பதிப்பு. இது தரப்படுத்திய பதிப்பாகும். இதனடிப்படையில் பல்வேறு வணிகத் தயாரிப்புகள் உருவாக்கப்பட்டன.

system V release 4. 0 : சிஸ்டம் V வெளியீடு 4. 0 : 1989இல் வெளியிடப்பட்ட யூனிக்சின் ஒருங்கிணைக்கப்பட்ட பதிப்பு.

.sz : . எஸ்இஸட் : ஓர் இணைய தள முகவரி ஸ்வாஸிலாந்து நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.