கணினி களஞ்சிய அகராதி-2/F

விக்கிமூலம் இலிருந்து

கொள்ளும், மேசைக் கணினி, மடிக் கணினி இரண்டையும் தம் அலுவலகப் பணிகளுக்காகப் பயன்படுத்துவோர்க்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

briefcase computer : கைப்பெட்டி கணினி : ஒரு கைப் பெட்டி (Briefcase) யின் உள்ளே பொருத்தக்கூடிய, எடுத்துச் செல்லும் கணினி.

bright : பொலிவு; ஒளிர்வு.

brightness : ஒளிர்மை : 1. கணினி வரைபடங்களில் ஒளி இருத்தல் அல்லது குறைத்தல் (வெண்மை, பழுப்பு, கருமை ஆகிய நிறங்களில் மாறக் கூடியது). 2. சில சிஆர்டீ முகப்புகளில் திரையில் காட்டப்படுவதை மாறுபடுத்திக் காட்டுதல் - குறிப்பாக சில பகுதிகளை மட்டும் தெளிவாகக் காட்டுதல்.

bring to front : முன்னால் கொண்டு வா.

brittle : நொறுங்கக் கூடிய.

broadband : அகலக்கற்றை : குரல் நிலை தரவுத் தொடர்புக்குத் தேவைப்படுவதைவிட அதிக அலை வரிசைகளில் தகவல் பரிமாற்றம் செய்தல், நுண்அலை, ஒளியிழை (fiber optics), லேசர் கதிர்கள் மற்றும் செயற்கைக்கோள் போன்றவற்றில் அகலக் கற்றை தரவுத் தொடர்பு வழித் தடங்கள் செயல்படுகின்றன. ஐம்பது இலட்சம் பாட் (baud) செய்தி வேகம் வரை இதன் மூலம் தரவுகளை அனுப்ப முடியும். Narrow band உடன் ஒப்பிட்டு பார்க்கவும்.

broadband and video : அகல அலைக்கற்றை மற்றும் ஒளிக்காட்சிக் கலந்துரையாடல் (conferencing).

broadband coaxial cable : அகலக்கற்றை இணை அச்சு வடம்.

broadband modem : அகலக்கற்றை இணக்கி : அகல அலைக் கற்றையில் செயல்படும் பிணையத்தில் பயன்படும் இனக்கி. ஒரே வடத்தில் பல்வேறு பிணையங்களின் தகவல் பரிமாற்றம் நடைபெற அகலக்கற்றைத் தொழில்துட்பம் அனுமதிக்கிறது. வானொலிச் செயல்பாடு போல இரண்டு பிணையங்களுக்கிடையேயான உரையாடல் வெவ்வேறு அலைவரிசைகளில் நடைபெறுவதால், ஒரு பிணையத்தின் தகவல் போக்குவரத்து இன்னொரு பிணையத்தின் போக்குவரத்தில் குறுக்கிடுவதில்லை.

broadband network : அகலக்கற்றைப் பிணையம் : தகவல் போக்குவரத்து ரேடியோ அலை

வரிசையில் உள்கற்றையிலும் வெளிக்கற்றையிலும் தனித் தனியாக நடைபெறக்கூடிய குறும் பரப்புப் பிணையம். அகலக்கற்றைப் பிணையத் திலுள்ள பணி நிலையங்கள் இணையச்சு அல்லது ஒளியிழை வடங்களினால் பட்டுள்ளன. இவற்றின் வழி யாக சாதாரணத் தகவல், குரல் மற்றும் ஒளிக்காட்சி ஆகிய வற்றை ஒரே நேரத்தில் வெவ்வேறு அலை வரிசைகளில் அனுப்ப முடியும். அகல கற்றைப் பிணையம் உயர்வேகத் (வினாடிக்கு 20 மெகா பைட்டுக் கும் மேல்!. ஆனால் சாதாரண அடிக் கற்றைப் பிணையங்களை விட செலவு அதிகமாகும். நிறுவுவது கடினம். வடத் தொலைக்காட்சியின் தொழில் இப்பிணையத்தில் பினபற்றபபடுகிறது.

broadband research network அகலக்கற்றை ஆய்வுப் பிணையம்

broadband transmission அகலக்கற்றை பரப்புகை அனுப் பும் ஊடகத்தை பல வழித்தடங் களாகப் பிரித்து, ஒவ்வொன்றிலும் தகவல் அனுப்பும் முறை.

broadcast அலைபரப்பு : ஒரே நேரத்தில் பல இடங்களுக்குத் தகவலை அனுபபுவது.

broadcast storm அலைபரப்புப் புயல் : ஒரு பிணை யத்தில் நடைபெறும் தகவல் ஒலிபரப்பு, பல்வேறு சேவை மையக் கணினிகளை நேரத்தில் பதிலிறுக்கத் துண்டும் போது ஏற்படுகின்ற போக்கு வரத்து நெரிசல், ஒரு பிணையத் தில் பழைய டீசிபி/ஐபி திசைவி களையும், புதிய நெறிமுறை களை ஏற்கும் திசைவிகளையும் கலந்து பயன்படுத்துவதால் அலை பரப்புப் புயல் ஏற்படுகிறது. பிணையம் உருகிக் கரைதல் (network meltdown) என்றும் கூறுவர்.

brom ப்ரோம் இருதுருவ படிக்க மட்டும் நினைவகம் எனப் பொருள்படும் Bipolar read only memory என்பதன் குறும் பெயர்.

bromide : ஒளியுணர் தாள் : ஒளி உணரும் தாள், டைப் செட்டில் பயன்படுவது.

brooklyn bridge : புரூக்களின் பாலம் : ஐந்தாம் தலைமுறை கணினி அமைப்புகளில் உள்ள கோப்பு பரிமாற்ற நிரல். தகவல் களை மடிக் கணினிக்கும், மேசைக் கணினிக்கும் இடையில் மாற்றுகிறது.

brownout பழுப்பு வெளியேறல் : வழக்கத்தைவிடக் குறை வாக மின்சக்தி குறையும்போது புரவுன்அவுட் ஏற்படுகிறது. மின்சக்தியின் தேவை, அதன் உற்பத்தியை விட 50 ஹெர்ட்ஸ் அதிகரிக்கும்போது இந்நிலை ஏற்படுகிறது. இதனால் யின் இயக்கம் பாதிக்கப்படுகிறது.

browse : உலாவு : தேடு : 1. டி பேஸ், ஃபாக்ஸ் புரோ போன்ற தரவுத் தளத் தொகுப்புகளில், ஒரே திரையில் ஒட்டு மொத்தமாக பல ஏடுகளைத் திரையிட்டு தகவலைத் தேடவும் திருத்தவும் பயன்படும் கட்டளை. 2. இணையத்தில் மேலோட்டமாக தகவல் பக்கங்களைப் பார்வை யிடுவதைக் குறிக்கும் சொல்.

browse button : உலாவு பொத்தான்.

browse mode : உலாவுப் பாங்கு.

browse option : உலாவுத் தேர்வு.

browse stylesheets : உலாவி பாணித் தாள்கள்.

browser : உலாவி : நிரலாக்க மொழி அளிக்கின்ற கருவி வரிசை முறையைப் பார்த்து, குறி முறையைத் திருத்த நிரலருக்கு உதவும் மென் பொருள்.

browsers/web browser : உலாவி/வலை உலாவி : வலையில் ஆவணங்களைத் தேடிப் பெறவும், ஆவணத்திலிருந்து ஆவணத்திற்கு இணைப்புப் பின் தொடரவும் அனுமதிக்கும் மென்பொருள் இணையத்தில் பயன் படுவது.

browse view : உலாவுத் தோற்றம்.

browsing : உலாவுதல்;நோட்டமிடல் : கணினி பட்டியல்களிலோ அல்லது கோப்புகளிலோ சுவையான செய்தி கிடைக்காதா என்று தேடுதல்.

brush : துரிகை : கணினி வரை படங்களில் ஜாய் ஸ்டிக், பேடில் அல்லது அதை போன்ற உள்ளீட்டுச் சாதனங்களின் மூலம் காட்சித் திரையின் எந்தப் பகுதியிலும் நகர்த்தக் கூடிய வண்ணம் தரும் சாதனம்.

brute-force technique : முரட்டுவிசை நுட்பம்.

. bs : . பிஎஸ் : ஒர் இணைய தளம் பஹாமஸ் நாட்டில் உள்ளது என்பதைக் குறிக்கும் பெருங்களப் பெயர் தளமுகவரியின் இறுதியில் இடம்பெறும்.

BSAM (Bee Sam) : பி. சாம் : அடிப்படைத் தொடர் வரிசை அணுகுமுறை என்று பொருள் படும் Basic Sequential Access Method என்பதன் குறும்பெயர்.

BSC : பிஎஸ்சி : இரும ஒத் திசைவு தகவல் தொடர்பு என்று பொருள்படும் Binary Synchronous Communication என்பதன் குறும்பெயர். தரவு அனுப்புவதற்குப் பயன்படும் ஒரு செயல்முறை.

BSD UNIX : பிஎஸ்டி யூனிக்ஸ் : யூனிக்ஸ் இயக்க முறைமை ஏடி&டி பெல் ஆய்வுக் கூடத்தில் உருவாக்கப்பட்ட போதிலும், உலகின் பல்வேறு நிறுவனங்களும் பல்கலைக் கழக ஆய்வுக் கூடங்களும் யூனிக்ஸ் முறைமையை பல்வேறு வடிவங்களில் மேம்படுத்தி உருவாக்கி வெளியிட்டுள்ளனர். அவற்றுள் குறிப்பிடத்தக்கது, கலிஃபோர்னியாவிலுள்ள பெர்க்கிலி பல்கலைக்கழகத்தின் பெர்க்கிலி சாஃப்ட்வேர் டிஸ்ட்ரிபியூஷன் என்ற அமைப்பின் மூலம் வெளியிடப்பட்ட யூனிக்ஸ் பதிப்பு ஆகும். இதுவே சுருக்கமாக பிஎஸ்டி யூனிக்ஸ் என்று அழைக்கப்பட்டது. இன்று யூனிக்ஸில் இருக்கின்ற பிணையத் திறன், கூடுதல் புறச்சாதன ஏற்பு, நீண்ட கோப்புப் பெயர், சி-செயல் தளம், விஐ தொகுப்பான், டிசிபி/ ஐ. பீ ஆகிய பல கூடுதல் வசதிகள் பிஎஸ்டி யூனிக்ஸின் பங்களிப்பாகும். இன்றைக்கு யூனிக்ஸின் பரவலுக்கும், கல்விக் கூடங்களை இணையத்தில் இணைப்பதற்கும் காரணமாக அமைந்தது பிஎஸ்டி யூனிக்ஸ். 1பி. எஸ்டி என்ற பதிப்பில் தொடங்கி 4. 3 பிஎஸ்டி பதிப்புவரை வெளியிடப்பட்டது. 1993 ஆண்டுடன் பிஎஸ்டி யூனிக்ஸின் வெளியீடு நிறுத்தப்பட்டு விட்டது.

BSN : பிஎஸ்என் : வணிக சந்தாதாரர் பிணையம் என்று பொருள்படும் Business Subscriber Network என்பதன் குறும்பெயர்.

b-spline : பி-ஸ்ப்ளைன் : கணினி வரைகலையின் தொடர்ச்சியை உறுதி செய்யும் கணித வாய்பாட்டைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வளைவு.

. bt : . பி. டீ : ஓர் இணைய தள முகவரியின் இறுதியில், பூட்டான் நாட்டைச் சார்ந்த தளம் என்பதைக் குறிக்க இணைக்கப்படும் பெருங்களப் பிரிவுப் பெயர்.

BTAM : பிடாம் : அடிப்படை தொலைத் தொடர்பு அணுகுமுறை என்று பொருள்படும் Basic Telecommunication Access Method என்பதன் குறும்பெயர். தொலைதூர சாதனங்களுடன் படித்து எழுதி தொடர்பு கொள்ள அனுமதிக்கும் ஒரு அணுகு முறை.

B-tree : பி. மரம் : சமனாக்கிய மரம் என்று பொருள்படும் Balanced Tree என்பதன் குறும்பெயர். தரவுக் கட்டமைப்பு களில் தரவு இருக்கும் இடத்தைக் காட்ட ஏற்பாடு செய்யும் ஒரு வழி. இதன் மூலம் எந்த ஒரு குறிப்பிட்ட பதிவையும் உடனடியாகத் தேடி கண்டறி முடியும்.

Btrieve : பிட்ரீவ் : நாவல் (Novell) நிறுவனத்தின் தரவு தள மேலாண்மை முறைமை

BTW : பிடீடபிள்யூ : இந்த வழியே என்று பொருள் படும் By The Way என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். இணையத்தில் மின் அஞ்சல் மற்றும் செய்திக்குழுக் கட்டுரைகளில் குறிப்புரையைச் சுட்டும் சொல் தொடராக இது அடிக்கடி பயன் படுத்தப்படுகிறது.

bubble : குமிழ் : குமிழ் வரை படத்தில் ஒரு குறியீடு அல்லது குமிழ் நினைவகத்தில் துண்மி.

bubbie chart : குமிழ் நிரல் படம் : குமிழ் போன்ற குறியீடுகளை அதிகம் பயன்படுத்தி தரவுப் பாய்வு நிரல் படங்களை உருவாக்குதல்.

bubble jet : குமிழ் ஜெட் : கேனனின் இங்க் ஜெட் அச்சுப்பொறி தொழில் நுட்பம். லேசர் அச்சுப் பொறியினைவிட மலிவானது.

bubble jet printer : குமிழி பீச்சு அச்சுப்பொறி : தொடா அச்சு முறை சார்ந்த அச்சுப் பொறி. மைபீச்சு அச்சுப்பொறியில் அமைந்துள்ளது போன்ற நுட்பமே இதிலும் பயன்படுத்தப் படுகிறது. தாளின்மீது ஊசித்துளை வழியே மை பீச்சப்பட்டு எழுத்துகள் அச்சிடப்படுகின்றன. மையைத் தயாரிக்க தனிச் சிறப்பான சூடாக்கும் கம்பிகளைக் கொண்டுள்ளது.


குமிழ் பீச்சு அச்சுப் பொறி
ஆனால் மைபீச்சு அச்சுப்பொறியில் பீஸோ மின்படிகங்கள் பயன் படுத்தப்படுகின்றன.

bubble memory : குமிழ் நினைவகம் : காந்தப் புள்ளிகளாக தகவலை சேமித்து வைக்கும்முறை. ஒரு மெல்லிய, மின்கடத்தாப் பொருளால் ஆன படலத்தின் (film) மீது குமிழ்கள் நிற்கின்றன. அழியாத இருப்பகத் திறனை இது அளிக்கிறது.

bubble sort : குமிழி வரிசைப் படுத்தல் : ஒரு பட்டியலை வரிசைப் படுத்தப் பயன்படும் தருக்கமுறை. ஒரு பட்டியலில் அடுத்தடுத்துள்ள இரண்டு உறுப்புகளை எடுத்துக் கொண்டு அவை சரியான வரிசையமைப்பில் இல்லாவிடில் அவற்றை இடமாற்றம் செய்யும் முறை. இந்த முறையில் nஉறுப்புகள் உள்ள பட்டியலில் ஒர் உறுப்பு n-1உறுப்புகளுடன் ஒப்பிடப்பட்டு மிகச்சிறிய உறுப்பு, பட்டியலின் உச்சிக்குக் கொண்டு வரப்படுகிறது. இச்செயல்முறை அடுத்தடுத்துள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் மேற் கொள்ளப்படுகிறது. அடிப்பாகத்திலிருந்து எடை குறைந்த காற்றுக் குமிழ் உந்தியுந்தி நீரின் மேற் பரப்புக்கு வருவதுபோல குறைந்த மதிப்புள்ள உறுப்பு பட்டியலின் உச்சிக்குக் கொண்டு வரப்படுவதால் இப்பெயர் ஏற்பட்டது.

bucket : வாளி : கூட்டாக அழைக்கப்படும் பதிவேடுகளின் குழுவைச் சேமித்து வைக்க இருப்பகத்தில் இருக்கும் குறிப்பிட்ட பகுதி. வன்பொருள் தொடர்பானதாக இருக்கலாம் அல்லது 'தற்சார்பு முகவரியாக்கம்' (hasing) மூலம் முடிவு செய்யக்கூடியதாக இருக்கலாம்.

bucket sort : கலன் வரிசையாக்கம்.

buddy system : மொட்டு அமைப்பு : நினைவகத்தை நிர்வகிக்கும்முறை. இதன் அளவுகள் 2-ன் மடங்காக இருக்கும்.

budget forcasting model : நிதி நிலை முன்மதிப்பீட்டு மாதிரியம் : தரமான கணக்கீட்டுச் செயல்பாடுகளைப் பயன்படுத்தி தனித்தனி துறையிலிருந்து அளிக்கக்கூடிய நிதிநிலைத் தகவல்களைத் தொகுப்பதற்குப் பயன்படக் கூடிய மாதிரியம். பணப் பாய்வு, ஒரு பங்குக்கான வருமானம் மற்றும் பிற நிதித் துறை விகிதாச்சாரங்களை முன்னறிவிப்புச் செய்யும் திறன்களையும் இதில் உள்ளடக்கலாம். இதன் விளைவாக நிதிநிலைக்கு ஏற்றவாறு, விரிதாள் பணித் தொகுப்புகளில் இத்தகைய மாதிரியங்கள் பொதுவாக சேர்க்கப்படும்.

budgeting : வரவு செலவுத் திட்டமிடல்.

buffer : இடையகம்;இடைநிலை நினைவகம் : பல்வேறு பட்ட இயக்க வேகத்தினைச் சரி செய்யவோ அல்லது சம நிலைப் படுத்தவோ பயன்படு கின்ற தற்காலிக இருப்பிடப் பகுதி. மெதுவாக உள்ளீடு செய்கின்ற சாதனமான விசைப் பலகையுடன் அதிவேகமாக இயங்குகின்ற கணினியின் செயலகத் இணைப்பதற்குப் பயன்படுத்தலாம்.

buffer amplifier : இடையகப் பெருக்கி.

buffer card punch : இடையக துளை அட்டை.

buffered computer : இடைத் தடுப்புக் கணினி : ஒரே நேரத்தில் உள்ளீடு / வெளியீடு மற்றும் செயலாக்க நடைமுறைகள் அளிக்கின்ற கணினி.

buffer flush : இடையகம் வழிதல் இடைநிலை : நினைவகத்திலிருந்து வட்டுக்குத் தரவுவை மாற்றுதல்.

buffering : இடைச்சேமிப்பு : தகவல் தொடர்பு பாதையில் தரவுகளை அனுப்புவதைத் தாமதப்படுத்துவதோ அல்லது தற்காலிகமாக சேமித்து வைப்பதோ செய்யப்படுவது.

buffer memory : இடை நினைவகம்;இடைநிலை நினைவகம் : உள்ளீடு அல்லது வெளியீட்டை வைத்துக் கொள்ளப் பயன்படுத்தப்படும் தற்காலிக நினைவகம். இதனால் மையச் செயலகம் வேறு பணிகளில் ஈடுபட முடிகிறது.

buffer pool : இடையகக் குவிப்பு : கூடுதல் இருப்பிடங் களுக்காக நினைவகத்தில் ஒதுக்கப்பட்ட பகுதி.

buffer storage : இடைநிலைச் சேமிப்பு : இடைநிலை தகவல் தேக்கம் : 1. ஒரு குறிப்பிட்ட தரவுத் தொகுதியை, இயக்க முறைமையோ, ஒர் நிரலாக்கத் தொடரோ பயன்படுத்திக் கொள்ளத் தயாராகும் நேரம் வரை, கணினி நினைவகத்தின் ஒரு பகுதியில் தற்காலிகமாகச் சேமித்து வைக்கும் முறை. 2. ஒரே வேகத்தில் செயல்படாத இரண்டு சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் நடைபெறும் போது, தகவல் எடுத்தாளப்படும் வரை சிறிதுநேரம் தற்காலிகமாகத் தேக்கிவைக்கும் இடம். விசைப் பலகையிலிருந்து வரும் தகவலை செயலி படிக்கும் போது, அச்சுப் பொறிக்குத் தகவல் அனுப்பப் படும்போது, வட்டிலிருந்து தகவலைப் படிக்கும் போது, வட்டில் தகவல் எழுதப்படும் போது மற்றும் இதுபோன்று வேக வேறு பாடுள்ள இரு சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றத்துக்கு இடைநிலை தகவல் தேக்கம் அவசியமாகும்.

bug : பிழை;தவறு : ஒரு கணினியின் நிரலிலோ அல்லது அதன் அமைப்பிலோ, அதன் வன்பொருள் பகுதியிலோ ஏற்படும் ஒரு தவறு. Debug என்றால் பிழைகளை நீக்கி கோளாறுகளை சரி செய்வதாகும்.

buggy : முற்றப் பிழையான;முழுக்கப் பிழையான : பிழைகள் மலிந்த மென்பொருளைக் குறிக்கப் பயன்படும் சொல்.

building block principle : உறுப்புத் தொகுதிக் கோட்பாடு.

built-in : உள்ளிணைக்கப்பட்ட.

built-in check : உள்ளிணைந்த சரிபார்ப்பு.

built-in font : உள்ளிணைந்த எழுததுரு.

built-in function : உள்ளிணைந்த செயற்பாடு.

built-in groups : உள்ளிணைந்த குழுக்கள்;உள்ளிணைந்த உரிமைத் தொகுதிகள் : விண்டோஸ் என்டி வழங்கன், விண்டோஸ் என்டி உயர் நிலை வழங்கன் அமைப்பில் உள்ளிருப்பாய் உள்ள உரிமைத் தொகுதிகள். பிணைய அமைப்பில் ஒவ்வொரு பயனாளருக்கும் குறிப்பிட்ட பணிகளைச் செய்வதற்காக அனுமதியும் உரிமைகளுமே வழங்கப்படுகின்றன. அத்தகைய உரிமைகளுள் குறிப்பிட்ட சிலவற்றை ஒரு தொகுதியாக வைத்துக் கொள்வதால், ஒரு பயனாளருக்கு அத்தொகுதி உரிமையை வழங்குவது எளிமையாக இருக்கும். குறிப்பிட்ட பொதுவான உரிமைகள் பெற்ற பயனாளர் குழுக்களை உருவாக்குவதும் எளிதானது.

built-in pointing device : உள்ளிணைந்த சுட்டுச் சாதனம்.

bulk eraser : முழுக்க நீக்கல்;முற்றத் துடைத்தல்;ஒட்டு மொத்தமாய் அழித்தல் : நெகிழ் வட்டு, நாடா போன்ற சேமிப்பு ஊடகங்களிலுள்ள தகவல் அனைத்தையும் ஒட்டு மொத்த மாய் அழிக்கப் பயன்படும் செயல் முறை அல்லது ஒரு சாதனம். வட்டு, நாடா ஆகியவற்றில் மின்காந்த முறையில் தகவல் பதியப்படுகிறது. எனவே, சக்தி வாய்ந்த மின்காந்த்ப் புலத்தை உருவாக்குவதன் மூலம் மின்காந்த ஊடகத் திலுள்ள இரும்புத் துகள்களைச் சிதைத்து தகவல் அனைத்தையும் துடைத்திட முடியும்.

bulk storage : மொத்த சேமிப்பகம்;மொத்த இருப்பகம் : அதிக அளவில் தகவல்களைச் சேமிப்பது. பொதுவாக, நீண்டகால தேவைக்காக இவ்வாறு செய்யப்படும்.

bullet : பொட்டு : ஒரு பட்டியலில் உள்ள வகைபாடுகளைத் தொடங்கப் பயன்படுத்தப்படும் பொட்டுப் போன்ற அடையாளம்.

builetin board : அறிக்கைப் பலகை, தகவல் பலகை : கணினியைப் பயன்படுத்துபவர்கள் செய்திகளையோ அல்லது நிரல்களையோ மற்றவர்களுக்காக அனுப்ப அனுமதிக்கும் கணினி முறைமை. மின்னணு அறிவிப்புப் பலகை என்றும் அழைக்கப்படுவதுண்டு.

bulletin board service : அறிக்கைப் பலகை சேவை : ஒரு வணிக தகவல் தொடர்பு கட்டமைப்பு. இதில் சந்தாதாரர்கள் செய்திகளை அனுப்பலாம்;மென்பொருள் ஆலோசனை பெறலாம்;நிரல்களை ஏற்றிப் பெறலாம்;இன்னும் பலவற்றைச் செய்யலாம். BBS என்று சுருக்கி அழைக்கப்படுகிறது. Bulletin Board System என்றும் சொல்லப்படுகிறது.

bullet-in font : உள்ளமைந்த எழுத்துரு : அச்சுப்பொறியின் ரோமில் (ROM) நிரந்தரமாகக் குறியீடு இடப்பட்ட எழுத்துருக்கள்.

bullet proof : பிழைதடுப்புத் திறன் : வேறொரு கணினியின் வன் பொருள் குறைபாடுகளால் நல்ல படியாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு கணினிச் செயல்பாட்டுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் தடுத்துக் காக்கும் திறன்.

bullets and numbering : பொட்டும் எண்ணிடலும்.

bump mapping : பம்ப் மேப்பிங் : கணினி வரைகலையில் ஒரு தொழில் நுட்பம்.

bunde : கட்டு;உள்ளிணைந்த : மென்பொருள் துணைப் பொருள்கள் மற்றும் சேவைகளை ஒரு கணினி விலையின் பகுதியாகச் சேர்ப்பது.

bundled : உள்ளினைக்கப்பட்ட : கணினி பொருட்கள் மற்றும் சேவைகள் முழுவதையும் ஒரே விலைக்கு சேர்த்துத் தருவதைக் குறிப்பது.

bundled Software : உள்ளிணைந்த மென்பொருள் : கணினி அமைப்பின் மொத்த விலையில் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்ட மென்பொருள்.

bundled/unbundled : உள்ளிணைந்த/பிரிக்கப்பட்ட : ஒரு விலைக்கு அளிக்கப்படும் வன்பொருள்/மென்பொருளின் மொத்தப் பொதிவுத் தொகுதிகள் பிரிக்கப்பட்ட அமைப்புகளில் ஒவ்வொரு பொருளுக்கும் தனித் தனி விலை உண்டு.

bundling : உள்ளிணைத்தல்;உடன்சேர்த்தல் : கணினி அமைப்பின் விலையிலேயே மென்பொருள், பராமரிப்பு, பயிற்சி மற்றும் பிற பொருள்கள் அல்லது சேவைகளைச் சேர்த்தல்.

bunny suit : காப்பு உடை : சிப்பு தயாரிக்கும் இடங்களில் மனித துண்ணுயிரிகள் தொற்றாமல் தடுக்க துய்மையான அறையில் பாதுகாப்பு ஆடை அணிதல்.

bureau : அலுவலகம் : தகவல் செயலாக்கச் சேவைகளை வேறொரு நிறுவனத்திற்கு அளிக்கும் நிறுவனம்.

burn : எரித்தல் : 1. மிக அதிக மின்சக்தி அல்லது வெப்பத்திற்கு உள்ளாக்கி மின்சுற்றை அழித்தல். 2. குறுவெட்டில் எழுதுவதையும் குறிக்கிறது.

burn-in : உள்ளெரித்தல் : உயர்த்தப்பட்ட வெப்பநிலையில் அடுப்பில் மின்சுற்றுகளை இயக்குவதன்மூலம் மின்சுற்றுகள் மற்றும் பாகங்களைச் சோதனை செய்யும்முறை. கணினி பாகங்களை தொடர்ச்சியாக ஒரு வாரத் திற்கு 50 டிகிரி செல்வதியஸ் வெப்பநிலையில் இயக்குவது ஒரு சராசரியான சோதனை. இதன்மூலம் பலவீனமான மின் கற்றுகள் எரிந்து போய் சோதனைகளைத் தாங்கும் பாகங்கள் மட்டும் மிஞ்சும்.

burning : எரித்தல் : படிக்க மட்டுமான நினைவகத்தில் (ROM) நிரல்களைப் பதித்தல். குறுவட்டில் எழுதுவதையும் குறிக்கும்.

Burroughs adding machine : பரோவின் கூட்டல் எந்திரம் : 1884இல் வில்லியம் பரோஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் வணிகமுறை யிலான கூட்டும், பட்டியலிடும் எந்திரம், வகைப் பலகை மற்றும் அதன் தொழில் நுட்பம் இன்னும் கைகளால் இயங்கும் சில எந்திரங்களில் அப்படியே மாறாமல் உள்ளது.

Burroughs Corporation : பரோஸ் நிறுவனம் : கணினிக் கருவிகளை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நிறுவனம்.

Burroughs, William Seward (1857-1898) : பரோஸ் வில்லியம் சீவார்ட் (1857-1898) : முதல் வணிக முறையிலான கூட்டல் எந்திரத்தைக் கண்டுபிடித்தவர். இன்றைய பரோஸ் கார்ப்பரேஷன் அந்த எந்திரத் திலிருந்துதான் துவங்கியது.

burst : வெடிப்பு : 1. கணினி செயல்பாடுகளில், தொடர்ச்சியான காகிதத்தில் இருந்து தனித்தாள்களைப் பிரித்தல். 2. தரவு அனுப்புதலில் ஒரே அலகாகக் கணக்கிடப்படும் சமிக்கைகளின் தொகுப்பு.

burster : வெடிப்பி : பல பக்கங்கள் உள்ள கணினி அச்சு வெளியீட்டினைப் பிரிக்கும் ஒரு எந்திர சாதனம். நகல்களைப் பிரித்து கார்பன் தாள்களை எடுக்கிறது.

burst errors : வெடித்த பிழைகள் : தகவல் தொடர்புகளில் மிக நெருக்கத்தில் (வெடிப்பில்) ஏற்படும் தொடர் பிழைகள், நடைமுறையில் பெரும்பாலான பிழைகள் நெருக்கத்தில் (வெடிப்பில்) தான் ஏற்படுகின்றன.

bursting : வெடித்தல் : தொடர்ச்சியான படிவ காகிதத்தைத் தனித் தாள்களாகப் பிரிக்கும் செயல்முறை.

burst mode : வெடிப்பு முறை : தடை செய்யமுடியாத முறையில் தரவுகளைப் படிக்கும் அல்லது எழுதும் முறை.

burst mode transfer : வெடிப்பு பாங்கு மாற்றம் : குறுவட்டு (CD-Rom) விலிருந்து தகவல் பரிமாற்றம். சராசரி தகவல் பரிமாற்றம் விகிதமான 150 கிலோ பைட்/நொடி (முறை 1) அல்லது 171 கிலோ பைட்டுகள்/நொடி (முறை 2) ஆகியவற்றைவிட பல மடங்கு பெரியது. ஸ்கஸ்ஸி (SCSI) தொகுதியைவிட அதிக வேகத்தை இது எடுக்க முடியும்.

burst speed : வெடிப்பு வேகம் : 1. வெடிப்பு முறை தரவுப் பரி மாற்றத்தில், ஒரு சாதனம் இடையூறின்றி தரவுவை அனுப்பக் கூடிய உச்ச அளவு வேகம். பல் வேறு தகவல் தொடர்புச் சாதனங்கள் வெடிப்பு முறையில் தகவலை அனுப்ப வல்லவை. வெடிப்பு முறையில் தகவல் பொட்டலங்களை அனுப்பும்போது அதன் தகவல் பரிமாற்ற வேகம் அதிகரிக்கப்படுகிறது. 2. ஒர் அச்சுப்பொறி அடுத்த வரிக்கு வராமல் ஒரே வழியில் ஒரு வினாடி நேரத்தில் அச்சடிக்கும் எழுத்துகளின் எண்ணிக்கை. தாளைத் தள்ளும் நேரம், அச்சுமுனை அடுத்தவரிக்கு வர எடுத்துக் கொள்ளும் நேரம் இவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கணக்கிடப்படும் வேகம் இது. அச்சுப்பொறி உற்பத்தியாளர்கள் கூறிக் கொள்ளும் அச்சிடும் வேகம் உண்மையில் அதன் வெடிப்பு வேகத்தைத்தான். ஆனால் உண்மையில் அச்சுப் பொறியின் செயல்திறன் ஒரு பக்கம் முழுமையும் அடிக்க எடுத்துக் கொள்ளும் மொத்த நேரத்தைக் கொண்டே கணக்கிடப்படும்.

bursty : வெடிப்பி; வெடிப்பு முறை : தகவல் பரிமாற்றத்தில் தொடர்ச்சியாகத் தரவை அனுப்புவதற்குப் பதில் வெடிப்பு முறையில் துண்டு துண்டாக அனுப்பும் முறை.

bus : மின் பாட்டை : தகவல் மற்றும் மின் சமிக்கைகளை அனுப்புவதற்கான பாதை அல்லது வழித்தடம்.

bus architecture : மின்பாட்டைக் கட்டுமானம். :

bus bridge : மின்பாட்டைப் பாலம் : இரண்டு மின் பாட்டைப் தொகுதிகளை ஒன்றாக இணைக்கும் சாதனம்.

bus card : மின் பாட்டை அட்டை : விரிவாக்க அட்டை. இது கணினியின் விரிவாக்க மின்பாட்டையில் பொருத்தப்படுவது.

bus common : பொது மின் பாட்டை : வன்பொருள் சாதனங்களுக்கோ கணினியின் உள் பாகங்களுக்கோ அல்லது தகவல் தொடர்பு கட்டமைப்பில் இரு நிலைகளுக்கிடையிலோ செயல்படும் வழித்தடம். ஒரு கணினியில் மின்பாட்டைத் தொகுதி அமைப்பு பயன்படுமானால், அதன் செயலகங்கள், நினைவகம், வெளிப்புற அலகுகள் ஆகிய அனைத்தும் மின்பாட்டை ஒன்றோடொன்று இணைக்கப்படுகின்றன. மின் இணைப்புத் தொகுதியில் இரண்டு வழித்தடங்கள் உள்ளன. ஒன்று தகவல் இருக்கும் இடத்தைக் கண்டறியவும், மற்றொன்று தகவலை மாற்றவும் செய்கிறது. கட்டமைப்பில் உள்ள அனைத்து உறுப்புகளும் மின்பாட்டை இணைக்கப்படும்.

bus enumerator : மின் பாட்டைக் கணக்கெடுப்பி : ஒரு குறிப்பிட்ட மின்பாட்டையில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து சாதனங்களையும் கண்டறிந்து ஒவ்வொன்றுக்கும் தனித்த அடையாளக் குறியீடு அளிக்க வல்ல ஒரு சாதன இயக்கி (device drive) ஆணைத் தொகுப்பு. ஒரு கணினியை இயக்கியவுடன், கணினியில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து சாதனங்களின் தகவல்களையும் நினைவகத்தில் ஏற்றும் பணியை இக்கணக்கெடுப்பியே கவனித்துக் கொள்கிறது.

bus extender : மின்பாட்டை விரிவாக்கம் : சோதனைக்காக சுற்றிலும் உள்ள அட்டைகளுக்கு வெளியே ஒரு அச்சிட்ட மின் சுற்று அட்டையைத் தள்ளும் அட்டை. அது முதலில் ஒரு விரிவாக்க இடத்தில் பொருத்தி பின்னர் மின்பாட்டை விரிவாக்கியில் சேர்க்கிறது. இதில் பல விரிவாக்க இடங்கள் மட்டும் இருக்கலாம் அல்லது அவற்றில் மின்சக்தி அளிக்கும் வசதியும் இருக்கலாம்.

bush button : அழுத்து பொத்தான்.

bush, vannevar (1890-1974) : புஷ், வான்னேவர் : மின் தடங்களினால் ஏற்படும் கணித சமன்பாட்டு வேறுபாடுகளைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, 1930ஆம் ஆண்டு பல்வேறு சிக்கல்களைத் தீர்க்கக் கூடிய முதல் தானியங்கிக் கணினியை உருவாக்கினார். மாறுபாட்டு பகுப்பாய்வி (Differential Analyzer) என்று அழைக்கப்பட்ட கணினி, இன்றைய ஒப்புமை கணினிகளுக்கெல்லாம் முன்னோடியானது. 100 டன் எடையுள்ள இக்கணினியில் பல்லாயிரக்கணக்கான வெற்றிடக் குழல்கள் பயன்பட்டன.

business applications : வணிகப் பயன்பாடுகள் : சம்பளப்பட்டி, வரவேண்டிய, கொடுக்க வேண்டிய பணம் பற்றிய கணக்குகள், இருப்பு கணக்கெடுத்தல் போன்ற அன்றாட கணக்கீட்டு நடைமுறைகளுக்குப் பயன்படும் கணினிப் பணித் தொகுப்புகள் அறிவியல் பயன்பாடுகளுக்கு மாறானது.

business computer : வணிகக் கணினி : வணிகப் பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் கணினி.

business data processing : வணிகத் தரவு செயலாக்கம் : சம்பளப்பட்டி, பட்டியலிடல், கணக்கெடுத்தல் போன்ற வணிக நோக்கங்களுக்காக நடைபெறும் தரவு செயலாக்கம்.

Business Equipment Manufacturers Association (BEMA) : பீமா : வணிகக் கருவி தயாரிப்பாளர்கள் சங்கம் என்று பொருள்படும் Business Equipment Manufacturers Association என்பதன் குறும்பெயர். கணினி கருவிகள் மற்றும் அலுவலக எந்திரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களைக் கொண்ட சங்கம். பயன்பாட்டாளர்களது பிரச்சினைகளைத் தீர்க்கவும், பொது நலனுக்காக தகவலைப் பயன்படுத்தவும், கணினி மற்றும் தகவல் செயலாக்கக் கருவிகளுக்கான தர நிர்ணயங்களை உருவாக்கவும் வழி காட்டுவதே இதன் நோக்கங்கள். ஒரு வாராந்தர செய்தி மடலும், ஒரு ஆண்டு அறிக்கையும், வெளியிடுகின்றது.

business graphics : , வணிக வரை கலை : 1. வட்ட (Pie) வரைபடங்கள், நீள்கட்ட வரை படங்கள், பிரிவு படங்கள், மற்றும் பிற புலனாகும் முறைகளில் வணிகச் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களின் விற்பனைக்கும் விலைக்கும் உள்ள வேறுபாடு. துறை வாரி விற்பனை, உற்பத்திப் பொருள் செயல்பாட்டின் ஒப்பீடு, இருப்பு விலைகள் போன்ற துறைகளில் அளித்தல். 2. தரவுகள் பார்த்துத் தெரிந்து கொள்ளும் வண்ணம் காட்டக்கூடிய பயன்பாட்டுத் தொகுப்புகளை உருவாக்குதல்.

business information processing : வணிக தகவல் செயலாக்கம் : வணிகச் சூழ்நிலையில் தகவல் செயலாக்கம் மற்றும் பரிமாற்றத்தை விளக்கும் ஒரு பொதுச் சொல். விலைப் பட்டியல் தயாரித்தல் அல்லது விமானப் பயண முன் பதிவுகள், காசோலை நீக்கம், சம்பளப்பட்டி வெளியீடு போன்றவை எடுத்துக் காட்டுகள்.

business machines : வணிக எந்திரங்கள் : வணிகச் செயல்பாடுகளுடன் தொடர்புள்ள கணினிகள், சொல் செயலாக்க எந்திரங்கள், முனையங்கள் மற்றும் பிற மின்னணு, எந்திரக் கருவிகள்.

business mini computer : வணிகச் சிறு கணினி.

business - oriented programming language : வணிகம் சார்ந்த நிரலாக்க மொழி : வணிகப் பயன்பாடுகளில் அதிக தரவுக் கோப்புகளைக் கையாளக் கூடிய தாக உருவாக்கப்பட்ட மொழி. (எ. டு. கோபால் COBOL)

business programming : வணிக நிரலாக்கம் : கணினி தீர்வுக்காக வணிகப் பிரச்சினைகளுக்குக் குறியீடு இடப்படும் கணினி நிரலாக்கும் பிரிவு. பொதுவாக குறைந்த கணக்கீடுகளே இடம் பெற்றாலும் ஏராளமான தரவு உள்ளீடு வெளியீடுகளைக் கொண்ட கோப்புகளைக் கையாளக் கூடியது.

business software : வணிக மென்பொருள் : மின்னணு விரிதாள், தரவுத் தள மேலாண்மை அமைப்புகள், வணிக வரைபட சம்பளப் பட்டி நிரல்கள் மற்றும் கணக்கீட்டு நிரல்கள் போன்ற வணிக பயன்பாடுகளுக்காக வென்றே குறிப்பிட்டு உருவாக்கப்பட்ட பணித்தொகுப்புகள்

business systems planning (BSP) வணிகமுறைத் திட்ட மிடல். bus mouse : மின் பாட்டை சுட்டி : வரிசைத் துறையில் (Port) பொருந்துவதற்குப் பதிலாக விரிவாக்க அட்டையில் பொருந்தும் மின்பாட்டைச் சுட்டி.

bus network : பாட்டைப் பிணையம் : மின் பாட்டை



அல்லது ஒரு பொது விநியோக வழித்தடத்தினைப் பயன்படுத்தி அனைத்து நிலையங்கள் அல்லது கணினிச் சாதனங்கள் தகவல் தொடர்பு கொள்ளும் அமைப்பு.

bus system : மின்பாட்டை முறைமை : மின்பாட்டை அமைப்பு : கணினி உள்ளே தரவுகள் போவதற்கு வகை செய்யும் பாதைகளின் கட்டமைப்பு. தரவு மின் பாட்டை, கட்டுப்பாட்டு மின்பாட்டை, முகவரி மின்பாட்டை ஆகியவை கணினியில் முக்கிய மின்பாட்டைகளாக அடையாளம் காணப்படுகின்றன.

bussy hour : மிகைவேலை நேரம்.

bus topology : மின்பாட்டை அமைப்பியல் : மின்னணு கட்டமைப்பு கட்டுமானத்தை விளக்குவது.

button bar : பொத்தான் பட்டை

Button : பொத்தான் : சுட்டியினால் சொடுக்கினால் திரையில் ஒரு இடத்தில் ஒரு செயலைத் துவக்கவோ அல்லது நிறுத்தம்

செய்யவோ அதிகம் பயன் படுத்தப்படுவது.

button bomb : குண்டுப் பொத்தான்; பொத்தான் குண்டு : இணையத்திலுள்ள வலைப் பக்கத்தில் பல்வேறு செயல்முறைகளை இயக்க பல்வேறு உருவங்களில் பொத்தான்கள் அமைக்கப்படுவது உண்டு. சுட்டியின் சுட்டுக்குறியை ஒரு பொத்தான்மீது வைத்துச் சொடுக்கும்போது அதற்குரிய பணி செயல்படுத்தப்படும். குண்டின் உருவத்தில் தோற்றமளிக்கும் பொத்தான், 'பொத்தான் குண்டு' எனப்படுகிறது.

button, help : உதவிப் பொத்தான் : பயனாளர் கணினித் திரையில் ஒரு பயன்பாட்டுத் தொகுப்பினை பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போது, ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால் திரையில் தோன்றும் ஒரு பொத்தான் அல்லது ஒரு சின்னத்தின் மீது கட்டுக் குறியை வைத்துக் சொடுக்கினால் உதவிக் குறிப்புகள் திரையில் விரியும். வைய விரிவலைப் பக்கங்கள், பல்லூடகச் சேவை நிலையங்கள், கணினி வழியாகக் கற்பித்தல் ஆகியவற்றில் பயனாளர் தாமாக அறிந்து கொள்ளும் வகையில் இத்தகைய பொத்தான்கள்/சின்னங்கள் அமைக்கப்படுகின்றன.

. bw : . பி. டபிள்யூ : இணையத்தில் குறிப்பிட்ட தளம் போட்ஸ்வானா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்க தள முகவரியில் இடம்பெறும் பெருங்களப் பெயர்.

by default : உள்ளிருப்பாய் : இயல்பாகவே.

bypass : மாற்றுவழி : சுருக்கு வழி : ஒரு மின்சுற்றில் ஒன்று அல்லது பல பொருள்களைச் சுற்றிச் செல்லும் இணைவழி.

bypass capacitor : மாற்றுவழி தாங்கி : மின்சக்தி வழங்குதலின் போது ஏற்படும் மின்சார இரைச்சலைக் குறைக்க உதவும் தாங்கி.

Byron Lady Ada Augusta : பைரன் அடா அகஸ்டா சீமாட்டி : லவ்லேஸ் பெருமகள் என்று அழைக்கப்படுபவர். புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர் பைரன் பிரபுவின் மகளே செல்வி பைரன். சார்லஸ் பாபேஜியிடம் அவர் நெருங்கிப் பணியாற்றி, அவரது பகுப்பு எந்திரத்திற்கு ஒரு விளக்க நிரலைக் கொடுத்தார். உலகின் முதல் நிரலர் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டவர். அடா என்னும் நிரல் மொழி அவரது நினைவாக பெயரிடப்பட்டது.

byte : பைட் : எண்மி : 1. கணினியில் ஒரு தனி அலகாக செயல்படும் அடுத்தடுத்துள்ள இரும இலக்கங்களின் தொகுதி. எண்மியில் எட்டு இரும இலக்கங்கள் இருக்கும். 2. ஒரு தனி எழுத்தைக் குறியீடு செய்யப் பயன்படுத்தப்படும் இரும இலக்க தொகுதி. 3. சில சமயம் B என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகிறது.

byte code : பைட் குறிமுறை.

byte machine : பைட் எந்திரம் : எண்மி இயந்திரம் : மாறும் எண்மி (Byte) துண்மி (Bit) தொகுதிகளுக்கு நேரடியாக அணுகி இயங்கக்கூடிய ஒரு கணினி.

byte mode : பைட் பாங்கு : மையச் செயலகத்திற்கும் வேறு வெளிப்புறச் சாதனத்திற்கும் தகவல் பரிமாற்றத்தைக் குறிப்பிடுவது. இம்முறையில் ஒரு நேரத்தில் ஒரு தனி பைட் மாற்றப்படுகிறது.

byte order : பைட் வரிசை : எண்மி வரிசை ஏஐஎக்ஸ் விரிவு எக்ஸ் பலகணியில் துண்மிக்கு வரையறை அல்லது பிக்ஸ்மேப் தகவலுக்காக பணியாளார் வரையறுக்கும் எட்டியல்களின் வரிசை.

byte oriented protocol : பைட் சார்ந்த நெறிமுறை : தகவல் தொடர்பு இதில் கட்டுப்பாட்டுக் குறியீடுகள் முழுவதும் பைட்டு களாகவே இருக்கும். ஐபிஎம் மற்றும் பிற விற்பனையாளர்கள் பயன்படுத்தும் பைசிங்க்ரனஸ் விதிமுறைகளும் இதற்கு எடுத்துக்காட்டு.

byte specifications : பைட் வரையறைகள் : வன்பொருள் பற்றிய வரையறைகள். எண் துண்மிகளில் செய்யப்படுகின்றன. சான்றாக 80 மெகா பைட் வட்டு 8 கோடி எழுத்துகளை அடக்குகிறது. ஒரு மெகா பைட் நினைவகம் 18 இலட்சம் எழுத்துகளை சேமிக்கிறது. குறைந்த துல்லிய வரைகலை கோப்பில் 8, 000 பைட்டுகள் மட்டுமே அடங்கும். ஆனால், மேற்பட்ட பைட்டுகள் ஒவ்வொரு படத்திற்கும் ஏற்கப்படுகிறது.

bytes per inch (BPI) : பிபீஐ : Byte Per Inch என்பதன் குறும்பெயர். ஒரு அங்குல காந்த நாடாவில் கொள்ளக்கூடிய பைட்டுகளின் எண்ணிக்கை. (தகவல்) அடர்த்தியைப் பதிவு செய்யும் பொதுவான அளவுகோல்.

byte string : பைட் சரம் வருடப்பட்ட ஆவணத்திலிருந்து இலக்க மயமாக்கப்பட்ட வடிவம்.

. bz : . பிஇஸட் : இணைய தள முகவரியில் பீலைஸ் நாட்டைச் சேர்ந்த தளம் என்பதைக் குறிக்கும் பெருங் களப் பெயர்.



C

C : சி : ஒரு கணினி மொழி. நுண்கணினிகளில் பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு நிரலாக்க‌ மொழியின் முழுப்பெயர். பயன்படுத்த எளிமையாகவும், அதே வேளையில் மிகவும் திறன்மிக்கதாகவும் தொகுப்புகளை உருவாக்கவல்ல மொழி. கீழ்நிலை எந்திரக் கட்டுப்பாடுகளையும், உயர்நிலை சொல் தொடர்களையும் இணைத்து உருவாக்கப்பட்ட இடைநிலை மொழி.

C++ : சி++ : பெல் ஆய்வுக் கூடத்தில் 1980களின் தொடக்கத்தில் ஜேர்ன் ஸ்ட்ரெளஸ்ட்ரப் உருவாக்கிய கணினி மொழி. டென்னிஸ் ரிட்சி உருவாக்கிய சி-மொழியின் விரிவாக்கமாய் அமைந்த மொழி. சி. மொழியின் பொருள்நோக்கிலான நிரலாக்கப் பதிப்பு என இதனைக் கூறலாம். ஆப்பிள் மற்றும் சன் நிறுவனங்கள் உட்பட பல்வேறு கணினி நிறுவனங்களும் இம்மொழியை விழைந் தேற்றுக் கொண்டன.

C2 : சி2 : அமெரிக்காவில் தேசிய கணினி பாதுகாப்பு மையம், கணினி அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பாக வரையறுத்துள்ள அளவுகோலில் மிகக்குறைந்த அளவிலான பாதுகாப்பு அலகு. பயனாளர், ஒரு நுழைசொல் (password) மூலம் கணினி அமைப்பை அணுக வேண்டும். தரவு பரிமாற்றங்களை தணிக்கை செய்யும் முறையும் இதில் அடங்கும். ஆரஞ்சு புத்தகத்தில் சி2 பாதுகாப்புத் தர முறை விளக்கப்பட்டுள்ளது. காண்க‌ orange Book.

C2C : நுகர்வோர் - நுகர்வோர் மின்வணிக நடவடிக்கை : மின்வணிக (e-commerce) நடவடிக்கைகளில் வாடிக்கையாளர்கள் (customer) அல்லது நுகர்வோர் (consumer) தங்களுக்குள் நடத்திக்கொள்ளும் வணிகப் பரிமாற்றம். தம்மிடமுள்ள ஒரு பழைய பொருளை இணையத்தில் விளம்பரம் செய்து விற்றல் அல்லது ஏல விற்பனை இதில் அடங்கும்.

. ca : . சிஏ : இணையத்தில் ஒரு தள முகவரி கனடா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் களப்பெயர்.

. cab : . கேப் : ஒரு குறிப்பிட்ட வகை கோப்பின் வகைப் பெயர் (file extention). பல கோப்புகளை இறுக்கிச் சுருக்கி ஒரே கோப்பாக உரு வாக்குவார். பின்

அதனை விரித்து மீண்டும் தனித் தனிக் கோப்புகளைப் பெறுவர் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 95/98 போன்ற இயக்க முறைமைத்தொகுப்புகள் இது போன்ற கேப் கோப்பு வடிவிலேயே வழங்கப்படுகின்றன. cab என்பது cabinet என்பதன் சுருக்கம் ஆகும். பல கோப்புகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் பெட்டி என்ற பொருளைக் குறிக்கிறது.

cabinet : நிலைப்பெட்டி; கணினிப் பெட்டி; வெளிக் கூடு : ஒரு கணினியின் இன்றியமையாத பாகங்களான மையச் செயலகம், நினைவகம், புறச் சாதனங்களுக்கான விரிவாக்கச் செருகுவாய்கள் அடங்கிய தாய்ப் பலகை மற்றும் நிலை வட்டகம், நெகிழ் வட்டகம், குறுவட்டகம் இவற்றை உள்ளடக்கியுள்ள கணினிப் பெட்டி.

cable : வடம் : ஒரு அமைப்பின் இரண்டு பகுதிகளை ஒன்றாக இணைக்கப் பயன்படும் கம்பிகளின் கற்றை மின்சக்தி அல்லது மின் சமிக்கைகளைக் கொண்டு செல்கிறது.

Cable Connector : வடம் இணைப்பி : ஒரு கணினியையும், வெளிப்புற உறுப்புகளையும் இணைக்கும் வடங்களுக்குப் பயன்படுத்தப்படும் நுழை/துளை இணைப்பிகள்.

cable matcher : வட இசைவி : ஒரு சாதனத்தில் இணைக்கப்படும். வடத்தல் சற்று வேறுபாடான் கம்பி இணைப்புகள் இருக்கும்போது, அதனைப் பொருத்தமானதாய் மாற்ற உதவும் ஓர் இடையிணைப்புச் சாதனம்.

cable modem : வட இணக்கி : சாதாரணத் தொலைபேசிக் கம்பித் தடத்தில் இணைந்து செயல்படும் இணக்கியிலிருந்து மாறுபட்டது. கோ-ஆக்சியல் கேபிள் எனப்படும் இணையச்சுவடம் வழியாகத் தரவுவை அனுப்பவும் பெறவும் செய்கிற இணக்கி. வினாடிக்கு 500 கிலோ துண்மி (பிட்) கள் வரை தரவு பரிமாற்ற வேகமுள்ளவை வட இணக்கிகள். தற்போது அதிகமாய்ப் பயன்பாட்டில் உள்ள வழக்கமான இணக்கிகளைவிட அதிக வேகத்தில் தகவலை அனுப்ப வல்லவை.

cable ribbon : வட நாடா.

cable television : வடத் தொலைக்காட்சி.

cabling diagram : வட வரைபடம் : கணினி அமைப்பில் அதன் பாகங்களையும் புறச்சாதனங்களையும் இணைக்கும் வடங்களின் பாதைகளைக் காட்டும் திட்ட வரைபடம். கணினியின் வட்டகங்களை அவற்றின் இயக்கிகளோடு இணைக்கும் வட இணைப்புகளைப் புரிந்துகொள்ள இத்தகைய வரைபடங்கள் தேவை.

cache : இடைமாற்றகம் : தற்காலிக இருப்பகமாகப் பயன்படும் ஒரு சிறிய அதிவேக நினைவகம்.

cache card : இடைமாற்று அட்டை : ஒரு கணினியின் இடைமாற்று நினைவகத்தை (cache memory) அதிகப்படுத்தும் விரிவாக்க அட்டை.

cache controller : இடை மாற்றகக் கட்டுப்படுத்தி : இடை மாற்று நினைவகத்திற்கு படி / எழுது இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் மின்னணு மின்சுற்று. கட்டுப்பாட்டு பொறியானது இன்டெல் 82385 போன்ற ஒரு சிப்புவாகவோ அல்லது தனிச் சாதனமாகவோ இருக்கலாம்.

cache memory : இடைமாற்று நினைவகம்; அவசரத்தேவை நினைவகம் : தகவலைத் தற்காலிகமாக சேமித்து வைப்பதற்கான சிறிய அதிவேக நினைவகம். மெதுவாக இயங்கும் மைய நினைவகத்திற்கும், வேகமான மையச் செயலகத்துக்கும் இடையில் வழக்கமாகப் பயன்படுத்தப்படுவது. அழைத்தெழுது அட்டை (scratch pad) என்றும் அழைக்கப்படுகிறது.

cache settings : இடைமாற்று அமைப்புகள்.

caching : இடைமாற்றல் : விரைவு அணுகலுக்காக இடை மாற்றம் நினைவகத்தில் தரவுகளை வைத்திருத்தல்.

CAD : காட் : கணினி வழி வடிவமைப்பு என்று பொருள்படும் Computer - Aided Design என்பதன் குறும்பெயர்.

CADAM : கேடம் : Computer Graphics Augmented Design and Manufacturing என்பதன் குறும்பெயர். கணினி வரைபடங்களைக் குறிப்பது.

CAD/CAM : கேட்/கேம் : கணினி வழி வடிவமைப்பு/கணினி உதவும் உற்பத்தி எனப் பொருள்படும். Computer-Aided Design / Computer - Aided Manufacturing என்பதன் குறும்பெயர்.

CADD : கேட் : கணினி வடிவமைப்பு மற்றும் வரைவாக்கம் என்று பொருள்படும் Computer Aided Design and Drafting என்பதன் குறும்பெயர். அளவு அமைத்தல், சொல் நுழைவு உள்ளிட்ட, வடிவமைப்புக்கான கூடுதல் வசதிகள் கொண்ட காட் அமைப்புகள்.

CADD centre : கேட் மையம்.

caddy : குறுவட்டுறை : ஒரு வட்டினை இந்த குழைம (பிளாஸ்டிக்) உறையில் இட்டு குறுவட்டகத்தில் செருகுவர். பழைய கணினிகளில் இருந்த ஒருவகை குறுவட்டகத்தில் இது போன்ற உறையிலிட்ட குறுவட்டினைத்தான் பயன்படுத்த முடியும். இப்போதுள்ள குறுவட்டகங்களில் உறையில்லாத வட்டுகளைப் பயன்படுத்தலாம்.

CAE : சிஏஇ : கணினி உதவிடும் பொறியியல் என்று பொருள்படும் Computer - Aided Engineering என்பதன் குறும் பெயர். அடிப்படை பிழை திருத்தத்திற்கான வடிவமைப்பை அலசுகிறது அல்லது உற்பத்தி செய்யப்படக்கூடியதுதானா என்பதன் செயல்பாட்டையும், பொருளாதாரத்தையும் ஆய்வு செய்து தருகிறது. கேட் /கேம் வடிவமைப்பு தரவுத் தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=கணினி_களஞ்சிய_அகராதி-2/F&oldid=1085123" இலிருந்து மீள்விக்கப்பட்டது