கணினி களஞ்சிய அகராதி-2/G

விக்கிமூலம் இலிருந்து

தகவலைப் பயன்படுத்தி ஒருபகுதி, உற்பத்திப்பொருள் அல்லது வடிவமைப்பில் உள்ள அமைப்பினை ஆராயவும் பல்வேறு சூழ்நிலைகளில் அதன் செயல்திறனை மாதிரியாகச் செய்து காட்டவும் பயன்படுகிறது.

CAFM : சிஏஎஃஎம் : Compare to Aided Factory Management என்பதன் குறும்பெயர். கணினி உதவிடும் தொழிற்சாலையாகும்.

CAGE : பெட்டி : அச்சிட்ட மின் சுற்று அட்டைகள் ஏற்றப்படும் ஒரு பெட்டி,

CAI : கேய் : கணினி உதவியுடன் கற்றுத் தரல் என்று பொருள்படும் Computer-Assisted Instruction என்பதன் குறும்பெயர்.

CAL : கால் : கணினி வலுப்படுத்திய கற்றல் என்று பொருள்படும் Computer Augmented Learning என்பதன் குறும்பெயர்.

calculate : கணக்கிடு; மதிப்பிடு.

calculated field : கணக்கிடப்படும் புலம் : பிற புலங்களைக் கணக்கிட்டு பெறப்பட்ட எண் அல்லது தரவு புலம். பயனாளரால் கணக்கிடப்படும் புலத்தில் தரவுகளை நுழைக்க முடியாது.

calculating : கணக்கிடல்; மதிப்பீடு செய்தல் : சில எண் வகையிலான உண்மைகளைச் சுருக்கி, புதிய தகவலை ஏற்படுத்தல் அல்லது புதிதாக உருவாக்குதல்.

calculations : கணக்கீடுகள் : தரவுகளின்மீது கணித செயல் முறைகள்.

calculator : கணிப்பி; கணக்கி : கணக்கீடுகளைச் செயல்படுத்தப் பயன்படுத்தப்படும் எந்திரக் கணித அல்லது மின்னணு எந்திரம். கணினிகளிலிருந்து மாறுபட்ட கணிப்பிகளுக்கு அடிக்கடி மனிதத் தலையீடு தேவைப்படும்.

calculator mode : கணிப்பி பாங்கு.

calculus boolean : பூலியன் வகையீட்டு நுண்கணிதம்

calendar : நாட்காட்டி.

calendar programme : நாள் காட்டி நிரல்; காலங்காட்டி நிரல் : மின்னணுக் காலங் காட்டியை ஒத்திருக்கும் ஒரு காலக்குறிப்பேட்டை படைத்துக் காட்டும் ஒரு பயன்பாட்டு நிரல். குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் ஆற்றவேண்டிய நமது பணிகளைக் குறித்து வைத்துக் கொள்ளலாம். சில காலங்காட்டி நிரல்கள் சுவரில் மாட்டும் நாள்காட்டிகளை ஒத்துள்ளன. சிலவற்றில், ஒரு நாளில் ஒவ்வொரு மணி நேரத்திலும் நினைவுக் குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்ள முடியும். காலங்காட்டியில் குறிப்பிட்டுள்ளபடி நமது பணியை நமக்கு நினைவூட்டவல்ல நிரல்களும் உண்டு. ஒரு கணினிப்பிணையத்தில், ஒர் அலுவலகத்தின் பல்வேறு அலுவலர்களின் காலங்காட்டிகளை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் திறனுள்ள நிரல்களும் உள்ளன.

calibration : மதிப்பாராய்தல் : அளவீடு செய்தல் : ஒரு கட்டுப்பாட்டுக் குமிழ் கைப்பிடியில் (knob) ஏற்படுத்தப்பட்டுள்ள, நிர்ணயிக்கப்பட்ட சரியான மதிப்பினையோ அல்லது ஒரு மீட்டரில் ஒவ்வொரு அளவை எண்ணிக்கையில், சரியான மதிப்பு நிர்ணயிக்கப்பட்ட தரத்தையோ ஒத்திட்டுப் பார்த்து அல்லது அளந்து முடிவு செய்யும் செயல்முறை.

call : அழைப்பு : 1. கணினி நிரலில் ஒரு குறிப்பிட்ட துணைச் செயல்பாட்டுக்குக் கட்டுப்பாட்டை மாற்றுவது. 2. தரவு தொடர்பில், அழைக்கும் நபர் செய்யும் செயல், அல்லது ஒரு அழைப்பினைச் செய்வதற்கு தேவையான செயல்பாடுகள் அல்லது இரு நிலையங்களுக்கும் இடையிலே உள்ள இணைப்புகளை மிகத் திறமையாகப் பயன்படுத்துவது.

callable statement : அழைதகு கூற்று.

call accepted packet : அழைப்பேற்புப் பொட்டலம்; அழைப் பேற்ற பொதிவு.

callback : திரும்ப அழைப்பு : தொலைபேசி மூலமாக அணுகும் ஒரு கணினியில் பயனாளரை அடையாளங்காணும் ஒரு பாதுகாப்பு முறை. ஒரு பயனாளர் கணினி அமைப்பை தொலைபேசி மூலமாக அணுகுகிறார். அடையாளப் பெயரையும் நுழை சொல்லையும் தருகிறார். உடனே இணைப்புத் துண்டிக்கப்பட்டுவிடும். கணினி, முன்பே குறித்து வைத்துள்ள அந்தப் பயனாளரின் தொலைபேசி எண்ணுக்குத் தானாகவே தொடர்பு கொண்டு, இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும். இந்தப் பாதுகாப்புமுறை, அத்துமீறி நுழையும் ஊடுருவிகளைத் தடுக்கிறது. ஒரு பயனாளரின் நுழை பெயரையும், நுழை சொல்லையும் இன்னொருவர் திருடினாலும் அதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது.

call back modem : திரும்ப அழைக்கும் இணக்கி : திரும்ப அழைப்புப் பாதுகாப்பு முறையில் பயன்படுத்தப்படும் இணக்கி. வெளியிலிருந்து தொலைபேசி மூலம் கணினி அமைப்பை அணுகும்போது பயனாளர் ஒரு மறைக்குறியீட்டைத் தருவார். ஏற்கெனவே உருவாக்கி வைக்கப்பட்டுள்ள அட்டவணையில் மறைக்குறியீடு சரிபார்க்கப்பட்டு அக்குறியீட்டுக்குரிய பயனாளரின் தொலைபேசி எண்னைத் தானாகவே தொடர்பு கொண்டு இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும்.

Callback PPD : மீண்டும் அழைக்கும் பீபீடி : வருகின்ற அழைப்புகளைக் கண்காணிக்கும் ஒரு சாதனம்.

call blocking : அழைப்புத்தடுப்பி.

call by reference : குறிப்பு மூலம் அழைத்தல் : அழைத்தல் நிரலாக்கத்தில், துணை நிரல்கூறில் பயன்படுத்தப்படும் மாறிகளின் நினைவக முகவரிகளையே அளபுருகிகளாக துணை நிரல் கூறலுக்கு (Subroutine) அனுப்பி அழைக்கும் முறை.

call by value : மதிப்பு மூலம் அழைத்தல் : நிரலாக்கத்தில் பயன்படுத்தப்படுவது. துணை நிரல்கூறுகளில் முறைகளில் பயன்படுத்தப்படும் அளபுருக்களின் உண்மை மதிப்புகளை அவற்றுக்கு அனுப்பி அழைக்கும் முறை.

call cleaning : அழைப்பு நிறை வேற்றம்.

call connected packet : அழைப்பு இணைத்த பொதிவு.

called routine : அழைக்கப்பட்ட‌ நிரல்கூறு : ஒரு குறிப்பிட்ட பணியை நிறைவேற்றும் ஒரு துணை நிரல். இதை ஒரு அழைப்பு அல்லது நிரலின் கிளைபிரி ஆணையின் மூலம் அணுக முடியும்.

called terminal : அழைக்கப்பட்ட‌ முனையம்.

caller ID : அழைத்தவர் அடையாளம்.

call establishment : அழைப்பு ஏற்படுத்துகை; நிறுவுகை.

calligraphic graphics : எழுத்து வனப்பு வரைபடங்கள்; வரி வடிவ வரைவியல் : ஒரு ஒழுங்கில்லாத வகையில் ஒழுங்கில்லாத திசைகளை நோக்கி இழுக்கப்பட்ட கோடுகளைக் கொண்டு ஒரு உருவத்தை அமைத்தல். இதற்கு அதிகச்செலவாகும். கருவி தேவைப்படுகிறது. இடஞ்சார்ந்த ஒழுங்களவு கொண்ட இதேபோன்ற வரைபடங்களைக் கொண்டதுதான் 'கம்பி உருவ' மாதிரிகள். தொடக்கக் காலத்தில் கணினி வரைபடங்களுக்குச் சமமானதாக இவை கருதப்பட்டன.

calligraphic sequence : எழுத்து வனப்பு வரிசைமுறை; வரி வடிவ வரிசைமுறை.

calling programme : அழைக்கும் நிரல் : வேறொரு நிரலைத் தொடங்கி வைக்கும் நிரல்.

calling rate : அழைப்பு வீதம்.

calling sequence : அழைக்கும் வரிசை : கொடுக்கப்பட்ட ஒரு துணை நிரல்கூறை அழைப்பதற்குத் தேவையான தரவுகள் மற்றும் குறிப்பிட்ட ஆணைத் தொகுதிகள்.

calling terminal : அழைக்கும் முனையம்.

CALL instruction : அழைப்பு ஆணை : ஆணைகளின் புதிய வரிசையை இயக்க திசை மாற்றிய பிறகு, நிரலில் தொடக்க வரிசைக்குத் திரும்பி வருவதை அனுமதிக்கும் ஆணை.

calloc : சிஅலாக் : 'சி' மொழியில் உள்ள ஒரு பணி. எம். அலாக், (malloc) ரிஅலாக் (realloc) போன்றது.

call request packet : அழைப்புக் கோருவோர் பொதிவு.

call screening : அழைப்பு வடி கட்டல்.

call setup : அழைப்பு அமைப்பு முறை.

CALS : கால்ஸ் : கணினிவழி ஈட்டுதல் மற்றும் தகவுப் பொருத்த உதவி எனப் பொருள்படும் Computer Aided Acquisition Logistics Support என்ற‌ சொல் தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். வணிகமுறை விற்பனையாளர்களுடன் மின்னணு முறை தகவுப் பரிமாற்றத்துக்கான பாதுகாப்புத் தரநிர்ணயத் துறையாகும்.

CAM : கேம் : கணினி உதவிடும் உற்பத்தி எனப் பொருள்படும் Computer-Aided Manufacturing என்பதன் குறும்பெயர்.

cambridge ring : கேம்பிரிட்ஜ் வளையம் : இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் வடிவமைத்த அதிவேக குறும் பரப்புப் பிணையம் (LAN).

camera - ready : அச்சுக்குத் தயாராய் : நூல் அச்சுத்துறையில் கணினியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. நூலில் இடம் பெற வேண்டிய விவரங்களை கணினியில் தட்டச்சு செய்து தாளில் அச்செடுப்பர். பிறகு விவரங்களையும் இடையிடையே இடம்பெறும் படங்களையும் வெட்டி ஒர் அட்டையில் ஒட்டுவர். அச்சில் வர வேண்டிய பக்கங்களை இவ்வாறு அட்டைகளில் ஒட்டி வடிவமைப்பர். பிறகு அதனை ஒளிப்படக்கருவி மூலம் ஒளிப்பட ஃபிலிமாக படம் பிடிப்பர். அந்த ஃபிலிமை வைத்து அச்சு வார்ப்பினை உருவாக்குவர். அச்சு வார்ப்பினைக் கொண்டு நூல் பக்கங்களை அச்சிடுவர். ஆனால், இப்போதெல்லாம் அட்டைகளில் வெட்டி ஒட்டிப் பக்கங்களை வடிவமைக்க தேவையில்லை. கணினித் திரையிலேயே வெட்டி ஒட்டி பக்கங்களை வடிவமைக்க வல்ல மென்பொருள் தொகுப்புகள் பயன்பாட்டில் உள்ளன. அச்சுக்கு தயாரான பக்கங்களை உருவாக்க முடியும் என அவை விளம்பரப்படுத்தப்படுகின்றன.

camera-ready artwork : ஒளிப் படக் கருவிக்குத் தயாரான கலை வேலை : வணிக அச்சகப் பகுதியில் ஒளிப்படம் எடுக்கத் தயாராக உள்ள அச்சிடும் பொருள். ஒருமுறை ஒளிப்படம் எடுத்த பின் அச்சுத் தகட்டினைச் செய்யத் தயாராக உள்ளது.

campus interview : வளாக நேர் முகத் தேர்வு.

campuswide information system : வளாகத் தகவல் முறைமை : கணினிப் பிணையங்கள் மூலமாக ஒரு கல்லூரி அல்லது பல்கலைக் கழக வளாகத்துக்குள் தகவல் மற்றும் பிறசேவைகளை வழங்கும் முறை. இத்தகவல் அமைப்பு முறையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் குறிப்புகள், வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் நிரல்கள் அனைத்தும் இருக்கும். தரவுத் தளங்களை அணுகும் வசதியும் இருக்கும்.

Canadian information Processing Society; CIPS : கனடாவின் தகவல் செயலாக்கச் சங்கம்; சிப்ஸ் : தகவல் செயலாக்கத் துறையில் பொதுவான ஆர்வமுள்ள கனடாக்காரர்களை ஒன்று திரட்ட ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. தங்களது வாழ்க்கையை கணினி தகவல் செயலாக்கத் துறைகளில் அமைத்துக் கொண்டுள்ள 400-க்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள், வணிகர்களை உறுப்பினர் களாகக் கொண்டது.

cancel : ரத்து; விடு; நீக்கு : அப்போது தட்டச்சு செய்த வரியை நீக்குவதற்கான விசைப் பலகைச் செயல்பாடு. cancelbot : தவிர்க்கும் எந்திரன் : இணையத்தில் செய்திக் குழுக்களில் வெளியிடப்படுவதற்காக அடுக்கப்பட்ட கட்டுரைகளில் ஒவ்வாதவற்றைக் கண்டறிந்து நீக்குகின்ற ஒரு நிரல். பலருக்கும் அனுப்பப்படுவதற்கு முன்பாகக் கண்டறிந்து நீக்கும். நீக்கப்படுவதற்கான அடிப்படை வரையறையை அந்த நிரலை உருவாக்கியவரே நிர்ணயம் செய்கிறார். எனினும் பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான தவிர்க்கும் எந்திரன்கள், பலநூறு செய்திக் குழுக்களில் இடம்பெறும் எண்ணற்ற உதவாக்குப்பைச் செய்திக் குறிப்புகளைக் கண்டறிந்து நீக்கி விடுகின்றன.

cancel button : தவிர் பொத்தான்.

cancel character : தவிர் எழுத்துரு.

cancel message : தவிர்க்கும் செய்தி : யூஸ்நெட் எனப்படும் செய்திக் குழுக்களுக்கான வழங்கன் கணினிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சில கட்டுரைகளை வெளியிடாமல் தவிர்க்கவும், அல்லது கணினியில் இருந்தே நீக்கிவிடவும் அக்கணினிக்கு அனுப்பப்படும் ஒரு செய்தி.

candidate key : அடையாள திறவி : ஒர் அட்டவணையில் ஒரு குறிப்பிட்ட கிடக்கையை (Row) தனித்து அடையாளங்காணப் பயன்படும் புலம். கூட்டு முதன்மைத் திறவியின் (Compound Primary Key) ஓர் அங்கமாக இருக்கும்.

candidates : வேட்பாளர்கள் : ஒரு திட்டத்தின் தொடக்க வடிவமைப்பு நிலையில் வழங்கப்படும் மாற்றுத் திட்டங்கள்.

canned programme : தயார் நிலை நிரல் : ஒரு சிக்கலுக்கு நிலையான தீர்வை வழங்கும் நிரல் தொகுதி. கணினி உற்பத்தியாளர்கள் மற்றும் மென் பொருள் உருவாக்குபவர்கள் பயன்படுத்தத் தயாரான நிலையில் பயனாளருக்கு அளிக்கும் இந்த நிரல்களை தனி நபர்களும், பல வணிக நிறுவனங்களும் பயன்படுத்த ஏற்றதாக உள்ளது. Custom Software-க்கு எதிர்ச் சொல்.

canned routine : அடைக்கப்பட்ட நிரல் கூறு : ஒரு குறிப்பிட்ட கணினியில் பயன்படுத்துவதற்காக முன்னதாக எழுதப்பட்ட நிரல். ஒரு குறிப்பிட்ட செயலாக்கப் பணியைச் செய்யும் துணை நிரல்கூறு (சப்ரொட்டீன்).

canned software : தயார் நிலை மென்பொருள் : உடனே பயன்படுத்தத் தயாரான நிலையில் பயன்படுத்துவோருக்கோ அல்லது வேறொரு விற்பனையாளருக்கோ கணினி உற்பத்தியாளர்கள் தயாரித்த மென்பொருள் பல வணிகர்கள் மற்றும் தனிநபர்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதுவானது. custom Software-க்கு மாறானது.

மின்னுரைக் கலன்

canon engine : கேனன் எந்திரம் : கேனன் ஒளிப்பட நகல் எடுக்கும் கருவியில் பயன்படுத்தும் உள் எந்திர அமைப்பு. பல லேசர் அச்சுப்பொறிகள் பயன்படுத்தப்படுகிறது.

Canonical Form : விதிமுறை மாதிரி படிவம் : கணிதத்திலும் நிரல் வரையிலும் ஒரு வெளிப்பாடு அல்லது கட்டுரைத் தொடருக்கான மாதிரி படிவம்.

Canonical Synthesis : விதிமுறை பகுப்பாய்வு : மீண்டும் வரும் விவரப் பொருட்கள் இல்லாமல் ஒரு தரவு மாதிரியை வடிவமைக்கும் செயல்முறை முன் மாதிரி அல்லது திட்டமானது எத்தகைய வன்பொருள் அல்லது மென்பொருளாக இருந்தாலும் தரவு செயலாக்கம் செய்யும்.

Can't Undo : செய்தது தவிர்க்க இயலாது.

Canvas : வரைதிரை.

CAP : கேப் : கணினி வழி பதிப்பித்தல் எனப் பொருள்படும் Computer - Aided Publishing என்பதன் குறும்பெயர்.

capability : திறன்; ஆற்றல்.

capability list : திறன் பட்டியல் : ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்யப்படும் விவரக் குறிப்புப் பட்டியலை வரிசைப்படுத்துதல்.

capacitance : மின்தேக்கு திறன் : மின் சக்தியைச் சேமிக்கும் திறனின் அளவு. Farad என்பதை அடிப்படை அளவுகோலாகக் கொண்டது.

capacitor : மின்தேக்கி; மின் னுறைக் கலன் : நிலையான மின்சக்தியை தேக்கி வைக்கும் மின்சாதனம். முறையாகக் கிளப்பி விட்டால் மின்சக்தியை வெளியிடும். கணினி சேமிப்பகத்தில் துண்மிகளை எழுதும் முறையும், படிக்கும் முறையும் இதுதான்.

capacitor storage : மின்தேக்கி சேமிப்பகம்; மின்னுறைகலன் சேமிப்பகம் : மின்தேக்கிகளைப் பயன்படுத்தி தரவுகளை சேமிக்கும் ஒரு சேமிப்புச் சாதனம்.

இழுவிசைப் பொறி

capacity : கொள்திறன் : ஒரு சேமிப்பகச் சாதனத்தில் எவ்வளவு தரவுகளைச் சேமித்து வைக்க முடியும் என்பது கணினிச் சொற்கள், பைட்டுகள், எழுத்துகள் போன்ற பல வகைகளில் கூறப்படுகிறது.

capacity management : திறன் நிர்வாகம் : தரவு செயலாக்கப் பணிகளின் அளவு, வன்பொருள் மென்பொருள், பயன்பாடு மற்றும் பிற கணினி அமைப் புத் தேவைகளைக் கட்டுப்படுத்தி, வருவது வரைக்கும் திட்டமிடல் மற்றும் கட்டுப்பாட்டு முறைகளைப் பயன்படுத்தல்.

capacity, memory : நினைவகக் கொள்திறன்.

cap height : தலைப்பெழுத்து உயரம் கீழ் வரியிலிருந்து தலைப்பெழுத்தின் உயரம்.

caps : தலைப்பெழுத்துகள்; பெரிய எழுத்து மேல் எழுத்துகள் : All Caps என்றால் எல்லா எழுத்துகளும் தலைப்பெழுத்துகளாக வேண்டும். Initial caps என்றால் ஒவ்வொரு முக்கிய சொல்லிலும் முதல் எழுத்து தலைப்பெழுத்தாக்கப்பட வேண்டும்.

capstan : இழுவிசைப் பொறி : ஒரு நிலையான வேகத்தில் பதிவு செய் யும் முனையை, நாடாவின் குறுக்காக இழுக்கும் காந்த நாடா இயக்கியின் சுழலும் சாதனம். caps (key) தலைப்பெழுத்து (விசை) ; மேலெழுத்து (விசை).

caps lock : தலைப்பெழுத்துப் பூட்டு.

Caps Lock Key தலைப்பெழுத்து பூட்டு விசை : கணினி விசைப் பலகையில் உள்ள ஒரு விசை எழுத்துகளில் தலைப்பு எழுத்தை மட்டும் அணுக அனுமதிக்கும் விசை, "மாற்று விசை"யுடன் இதை ஒப்பிடுக. இது எழுத்துகள் மட்டுமல்லாது இரண்டாவது பணியையும் அனுமதிக்கும் தலைப்பெழுத்து பூட்டப்பட்டபின் 'மாற்று' (Shift) விசையை அழுத்தினால் சில கணினிகளில் மீண்டும் பழைய நிலையே வந்துவிடும்.

caption : தலைப்பு.

capture : பதிவு செய் : கணினியிலோ அல்லது ஏதாவது ஒரு வடிவிலோ தரவுகளைப் பதிவு செய்தல்.

capture card and display card : பதிவு அட்டை மற்றும் காட்சி அட்டை.

capture, data : தரவுக் கவர்வு.

CAR : கார் : கணினி வழி தரவு பெறுதல் என்று பொருள்படும் Computer Assisted Retrieval என்பதன் குறும் பெயர். காகிதம் மற்றும் நுண்வடிவத்தில் சேமிக்கப்படும் பாகங்கள், ஆவணங்கள் அல்லது பதிவுகளைத் தேடிக் கண்டுபிடிக்க கணினி பயன்படுத்தும் ஏற்பாடு. கணினியானது அந்தப் பொருள் எங்கிருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தபின், கணினியைப் பயன்படுத்துபவர் தனது கைகளால் அதை எடுத்துக்கொள்வார். LISPஇல் பயன்படுவது.

carbon ribbon : படிவுத்தாள் பட்டை : நன்றாகத் தெரியக் கூடிய துல்லியமான எழுத்துகளை உருவாக்கித்தரும், அச்சுப் பொறிகளில் பயன்படுத்தப் படும், படிவுத்தாள் இழை பட்டை.

card cage : அட்டைப் பெட்டி : அச்சிடப்பட்ட மின்சுற்று அட்டைகளைப் பொருத்துகின்ற கணினியின் உள்ளே இருக்கும் ஒரு பெட்டி.

card code : அட்டைக் குறியீடு : ஒரு துளையிடப்பட்ட அட்டையில் எழுத்துகளைக் குறிப்பிடும் துளைகளின் தொகுதி

card column : அட்டைப் நெடுக்கை : ஒரு துளையிட்ட அட்டையில் துளையிடும்
அட்டை

துளையிட்ட அட்டை (மேலே)

அச்சிட்ட மின்சுற்று அட்டை (கீழே)

இடங்களின் செங்குத்தான வரிகளில் ஒன்று.

Card : அட்டை : (1) அச்சிடப்பட்ட மின்சுற்று அட்டை. (2) 18. 7 செ. மீ. க்கு 8. 3 செ. மீ அளவுகளில் செங்குத்தான வரிசையில் துளைகளைப் பதிவு செய்வதன மூலம் தரவுகளைக் குறிப்பிடும் ஒரு ஊடகம்.

card deck : அட்டைத் தொகுதி : துளையிட்ட அட்டைகளின் ஒரு தொகுதி.

card face : அட்டை முகம் : ஒரு துளையிட்ட அட்டையின் அச்சிடப்பட்ட பக்கம்.

card feed : அட்டை செலுத்தி; அட்டை ஊட்டி : துளையிட்ட அட்டைகளை எந்திரத்தில் ஒவ்வொன்றாக நகர்த்தும் சாதனம்.

card field : அட்டைப் புலம் : ஒரு தரவு அலகுக்கு அளிக்கப்படும் தொடர்ச்சியான துளையிட்ட அட்டைகள்; குறிப்பிட்ட எண்.

card format : அட்டை வடிவமைவு.

card frame : அட்டைச் சட்டம் : ஒரு கணினி அமைப்பின் மின்சுற்று அட்டைகளை ஒரு இடத்தில் வைத்துப் பிடிக்கும் ஒரு பகுதி.

card hopper : அட்டை தள்ளி : துளையிட்ட அட்டைகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=கணினி_களஞ்சிய_அகராதி-2/G&oldid=1085128" இலிருந்து மீள்விக்கப்பட்டது