கணினி களஞ்சிய அகராதி-2/H

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

அட்டையைக் கையாளும் கருவியின் நகர்த்தும் பாகத்துக்குத் தள்ளிவிடும் சாதனம்.

card image : அட்டைப் படிமம் : ஒரு அட்டையில் துளையிடப்பட்ட, சேமிக்கப்பட்டுள்ள பொருள்.

cardinality : வகைபடு தன்மை : ஒரு இனக்குழுவானது எத்தனை முறை வரலாம், இனக்குழு உறவுகளை எத்தனை தடவை பயன்படுத்தலாம் என்று, பொருள் நோக்கு நிரலாக்கத்தில் பயன்படுவது.

cardinal number : வகை எண் : ஒரு தொகுதியில் எத்தனை வகையறாக்கள் உள்ளன என்பதைக் குறிப்பிடும் எண். சான்றாக, "21" என்ற எண்ணில் 10 எழுத்துகள் என்றால் 21 கார்டினல் 10 ஆர்டினல் ஆகும்.

card job control : வேலைக் கட்டுப்பாட்டு அட்டை.

card loader : அட்டையேற்றி.

card punch : அட்டை துளையிடும் கருவி : கணினியின் நினைவகத்தில் இருந்து தகவலைப் பெற்று, அதை அட்டைகளில் துளையிட்டுத் தரும் வெளியீட்டுச் சாதனம்.

card punch buffer : அட்டைத் துளை இடையகம்.

card punching : அட்டைத் துளையிடல்.

card reader : அட்டை படிப்பி : 1. இது ஒர் உள்ளிட்டுச் சாதனம். பெரும்பாலும் ஒரு நபரை அடையாளம் காணப் பயன் படுவது. ஒரு குழைம (பிளாஸ்டிக்) அட்டையில் காந்த முறையில் இரு தடங்களில் எழுதப்பட்ட தகவலைப் படித்துச் சரிபார்க்கும் கருவி. ஒரு தொழிலாளியின் அடையாள அட்டையாக இருக்கலாம் அல்லது பற்று அட்டை (credit card) யாக இருக்கலாம். 2. கணினி செயல்படாத நேரத்தில், அட்டைகளில் துளையிடும் முறையில் எழுதப்பட்ட தகவலைப் படித்தறியும் கருவி. இப்படிச் செய்வதன் மூலம் மையச் செயலியின் நேரம் பெரு மளவு மிச்சமாகும். கணினி செயல்படும்போது, தகவலை உள்ளீடு செய்யும் முறையைக் காட்டிலும், மையச் செயலியிடம் குறைந்த நேரமே வேலை வாங்கப்படும்.

card reproducer : அட்டை மறு தயாரிப்புப் பொறி : ஒரு அட்டையைப் போன்றே வேறொரு அட்டையில் துளையிட்டுத் தரும் சாதனம்.

card row : அட்டை கிடக்கை : ஒரு துளையிட்ட அட்டையின் துளையிடும் நிலையில் உள்ள கிடைமட்ட வரிசைகளில் ஒன்று.

card sorting : அட்டை பிரித்தல்; அட்டை வரிசையாக்கம் : தனிப்பட்ட அட்டைகளில் போடப்பட்டுள்ள துளைகளுக்கேற்ப துளையிட்ட அட்டைகளைப் பிரித்து வைத்தல்.

card stacker : அட்டை அடுக்கி : துளையிட்ட அட்டை தரவு செயலாக்க எந்திரத்தைக் கடந்த பின் அட்டைகளைச் சேர்த்து வைக்கும் கொள்கலம்.

card-to-disk converter : அட்டையிலிருந்து வட்டுக்கு மாற்றும் பொறி : துளையிட்ட அட்டைகளிலிருந்து வட்டு சேமிப்பகத்துக்கு தரவுகளை நேரடியாக மாற்றித் தரும் சாதனம்.

card-to-tape converter : அட்டையிலிருந்து நாடாவுக்கு மாற்றும் பொறி : துளையிட்ட அட்டைகளிலிருந்து காந்த அல்லது காகித நாடாவுக்கு தரவுகளை நேரடியாக மாற்றும் சாதனம்.

card verification : அட்டை சோதித்தல்; அட்டை சரிபார்ப்பு : விசைத் துளையிடலின் துல்லியத்தை சோதிக்கும் செயல்முறை. அதே தரவு மூலத்தைப் படித்துச் சோதிக்கும் பொறியின் விசைகளை அழுத்தி, முதலில் துளையிட்டதை இரண்டாவதாக ஒருவர் சோதிப்பார். ஏற்கனவே துளையிடப்பட்ட அட்டைகளின் துளையை விசையை அழுத்தி, சோதித்து அவை சரியாக இல்லையென்றால் பிழை என்பதைக் காட்டும்.

card verifier : அட்டை சோதிப்பி, அட்டை சரிபார்ப்பி.

caret : கேரட் ; முகடு : 1. ஒரு எண்ணின் மூலமானது எந்த இடத்தில் இருக்கிறது என்பதைக் காட்டும் குறியீடு, 2. எங்கே செய்தியை நுழைக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட திரையில் அடையாளச் சுட்டியாகப் பயன்படுத்தப்படும் அடையாளம்.

carpal tunnel syndrome : கார்பல் சுரங்க உணர்வு : மணிக்கட்டைச் சுற்றிலும் உள்ள திசுக்களில், சுருங்கினாலோ அல்லது தழும்பு ஏற்பட்டாலோ முக்கிய நரம்பு சுருக்கப்படுதல். இது கைகளுக்கு பெரும் சேதம் ஏற்படுத்தக் கூடியது.

carriage : நகர்த்தி; ஏந்தி : ஒரு தட்டச்சுப் பொறி அல்லது அச்சுப் பொறியில் இடங்களை நகர்த்தவோ அல்லது காகிதப் படிவங்களை வெளியேற்றவோ செய்யும் கட்டுப்பாட்டு எந்திர அமைப்பு.

carriage, automatic : தானியங்கி நகர்த்தி.

carriage control key : நகர்த்தி கட்டுப்பாட்டு விசை : அச்சுப் பொறியின் நகர்த்தியை தொடக்கத்திலோ அல்லது அது இருக்க வேண்டிய இடத்திலோ மீண்டும் கொண்டுவரும் பொத்தான்.

carriage control tape : நகர்த்தி கட்டுப்பாட்டு நாடா : வரி அச்சுப் பொறியில் வரி நகர்த்துதலைக் கட்டுப்படுத்தும் துளையிட்ட நாடா.

carriage motor : நகர்த்தி விசைப் பொறி.

carriage register : நகர்த்திப் பதிவகம்.

carriage return (CR) : நகர்த்தியைக் கொண்டுவரல் : எழுத்து அச்சிடும் பொறியில் இடது மூலையில் அடுத்த எழுத்தை அச்சிடச் செய்யும் செயல்முறை.

carrier : சுமப்பி; தாங்கி : சமிக்கை அனுப்பப்படுவதற்கு ஒரு எல்லை அல்லது உறையாக அமைந்த மின்காந்த அலைவரிசை. ஒரு கம்பி அல்லது குழாய் மூலம் ஒரே நேரத்தில் பல சமிக்கைகளை இது கொண்டு செல்ல முடியும். சான்றாக ஒரே சுமப்பியில் குரல், தரவு மற்றும் ஒளிக்காட்சி சமிக்கைகள் ஒரே நேரத்தில் பயணம் செய்ய முடியும். ஏனென்றால், ஒவ்வொன்றும் மாறுபட்ட அலைவரிசை இடைவெளிகளில் செல்பவை.

carrier based : சுமப்பி சார்ந்த : அனுப்பப்படும் தரவுகளை வைத்துக் கொண்டிருப்பதற்கு ஒரு நிலையான அலைவரிசையை (சுமப்பியை) உருவாக்கி அனுப்பும் அமைப்பு.

carrier frequence : சுமப்பி அலை வரிசை : இரும எண் (பைனரி) தரவுக் குறியீடு செய்ய ஏற்றவாறு அமைக்க, தரவு தொடர்புச் சாதனங்களின் இடையே பரிமாறப்படும் இடைவிடாத சமிக்கை.

Carrier Sence Multiple Access (CSMA) : சுமப்பி உணர் பன்முக அணுகல்.

carrier signal : சுமப்பி சமிக்கை : செய்தித் தரவு தொடர்புகளில் தரவு சமிக்கைகளை மாற்றி அனுப்புவதற்காக ஊடகத்தில் ஏற்படுத்தப்படும் சமிக்கை.

carrier system : ஒலியேந்தித் தரவு தொடர்பு முறை; சுமப்பி முறைமை : பல்வேறு அலைவரிசைகளை, செய்திகளைச் சுமந்து செல்லும் ஊடகமாகப் பயன்படுத்தி, ஒரே பாதையில் பல்வேறு தடங்களில் பல்வேறு செய்திகளை ஒரே நேரத்தில் அனுப்பிவைக்கின்ற தரவு தொடர்பு முறை. ஒவ்வொரு செய்தி அலையும் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணுள்ள மின்காந்த அலையின் மேல் பண்பேற்றம் (modulation) செய்து ஒரே அலைக்கற்றையாக மறுமுனைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு, அதே அதிர்வெண் அடிப்படையில் பண்பிறக்கம் (demodulation) செய்யப்பட்டு மூலத் தரவு பெறப்படும்.

carrier working : சுமப்பி செயல்பாடு : வீச்சு மாறுவதன் மூலம் ஒரு பேச்சை அதன் தொடக்க ஒலி அலைவரிசையிலிருந்து (300 முதல் 3, 400 ஹெர்ட்ஸ்) உயர் "சுமப்பி" அலைவரிசைக்கு மாற்ற முடியும். உலகின் பெரும்பாலான தொலைதூர தொலைபேசி அமைப்புகள் 12 அலைவரிசை குழுவையே பயன்படுத்துகின்றன. 12 குரல் அலைவரிசைகளாக மாற்றப்பட்டு 18 கிலோ ஹெர்ட்ஸ் அலைக்கற்றையில் அடங்குகின்றது. இவை 60-108 கிலோஹெர்ட்ஸ்வரை செயல்படுபவை.

carry ஏந்தி; வழிவி; மிகுதி : 1. ஒரு நெடுக்கையில் உள்ள இரண்டு இலக்கங்களின் கூட்டல் தொகை அடிப்படை எண்ணைவிடப் பெரியதாகவோ அல்லது சமமாகவோ இருக்கும் போது ஏற்படும் சிறப்பு நிலையைக் கொண்டுவரும் செயல்முறை. 2. மிகுந்திடும் இலக்கம் அல்லது அடுத்த நெடுக்கையில் சேர்க்கப்படும் இலக்கம்.

carry bit : மீந்திடும் துண்மி : இரும எண்களின் கூட்டல் 0+0=1, 0+1=1, 1+0=1; 1+1=10 என்று அமையும். இத்தகைய இரும எண் கூட்டலைச் செய்யும் மின்சுற்றுகள் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு மின்சுற்றும் இரண்டு உள்ளீடுகளை ஏற்கும். 0 அல்லது 1 என்பதை விடையாகத் தரும். இரண்டு உள்ளீடுகளும் 1 ஆக இருப்பின் வெளியீடு 0 ஆக இருக்கும். மீதமுள்ள 1, அடுத்த மின்சுற்றின் உள்ளீடாக அமையும். இவ்வாறு இரும எண் கூட்டலில் இரண்டு 1-களைக் கூட்டும்போது பெறப்படும் 1, 0 வில், 0 விடையாக வும், 1 மீந்திடும் துண்மியாகவும் அமைகிறது.

கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf

மேற்கண்ட கூட்டலில் மூன்று முறை 1 மீதமாகிறது. முதல் இருமுறை அடுத்த கூட்டலுடன் சேர்க்கப்படுகிறது. கடைசியாக மீந்திடும் 1 விடையின் இடப்புறத் துண்மியா அமர்ந்து கொள்கிறது.

carry digit : மிகுதி இலக்கம் : கூட்டலின்போது ஒரு நெடுக்கையிலிருந்து அடுத்ததற்குக் கொண்டு செல்லப்படும் இலக்கம். பதின்ம முறையில் 5 + 7-ஐக் கூட்டும்போது கூட்டுத்தொகை 2 ஆகவும் மிகுந்திடும் இலக்கம் 1 ஆகவும் வரும். இரும எண் முறையில் 1+1+0+1-க்கு கூட்டுத் தொகை 1 மிகுந்திடும் இலக்கம் 1.

கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf
கார்ட்டீசியன் ஆயத்தொைைலவுப் புள்ளிகள்

carry flag : மிகுதி ஒட்டி : மையச் செயலகத்தின் ஒட்டி பதிவகத்தில் உள்ள துண்மிகளில் ஒன்று. பிழை நிலையைக் குறிப்பிட டாஸ் (DOS) பணிகளில் பயன்படுத்தப்படுகிறது.

carry register : மிகுதிப்பதிவகம்; வழிவிப் பதிவகம் : சுழற்சி அல்லது மிகுந்திடும் சூழ்நிலையில் சேர்ப்பியில் விரிவாகச் செயல்படும் ஒரு துண்மியின் பதிவு. இணைப்புப் பதிவகம் என்றும் அழைக்கப்படும்.

cartesian coordinates : கார்ட்டீசியன் ஆயத்தொலைவுப்புள்ளிகள் : ஒரு தளத்தில் செங்குத்தாக வெட்டிக் கொள்ளும் இரு அச்சுகள் (இரு பரிமாணம்), அல்லது வெளியில் செங்குத்தாக வெட்டிக் கொள்ளும் மூன்று அச்சுகள் - இவற்றை அடிப்படையாகக் கொண்டு குறிக்கப்படும் ஒரு புள்ளி. இவற்றில் கிடைமட்ட அச்சு x எனவும், செங்குத்து அச்சு y எனவும் இவை இரண்டுக்கும் 90 டிகிரி உயரவாக்கில் அமையும் அச்சு z என்றும் அழைக்கப்படுகின்றன. வீட்டில் அறையின் ஒரு மூலையில் இது போன்ற மூன்று அச்சுகளின் அமைப்பைக் காணலாம். தரையில் உள்ள ஒரு புள்ளியை x, y ஆகிய இரு அச்சுகளின் ஆயத்தொலைவு அடிப்படையில் குறிப்பிடலாம். தரைக்கு மேல் மேல்தளம் வரையுள்ள எந்தவொரு புள்ளியையும் மூன்று அச்சுகளின் ஆயத் தொலைவுகளாகக் குறிப்பிட வேண்டும். 17ஆம் நூற்றாண்டில் இந்த வரைவியல் கணித முறையை ஃபிரெஞ்சுக் கணித மேதை டகார்ட்டீஸ் (Descartes) அறிமுகப்படுத்தினார்.

Cartesian coordinate system : கார்டீசியன் ஆயத்தொலை அமைப்பு : ஃபிரெஞ்சு கணிதவியலார் ரெனி டெஸ்கார்ட் கார்டீசியன் பெயரில் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. இதன்படி, தளத்தில் உள்ள ஒரு புள்ளியின் தூரம் இரண்டு நேர் கோடுகளில் இருந்து கணக்கிடப்படுகிறது. அவை அச்சுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஒரு அச்சிற்கான தூரமானது மற்றொரு அச்சிற்கு இணையாகக் கணக்கிடப்படுகிறது. புள்ளியுடன் தொடர்புள்ள இந்த எண்கள் அந்த புள்ளியின் ஆயத்தொலைவுகள் எனப்படும். இது செவ்வக ஆயத்தொலைவு அமைப்பு என்றும் அழைக்கப்படுகிறது.

cartridge : நாடா பேழை; பேழை; பொதியுறை : ரோமில் நிரந்தரமாகச் சேமிக்கப்படும் மென்பொருளைக் கொண்டுள்ள தனிப்பேழை. வசதியான, நீண்ட காலம் வரக்கூடிய, பயன்படுத்த எளிதான, ஒசையற்ற, அழிக்க முடியாத, கணினியில் ஒரு சிறப்பு இடத்தில் நுழைக்கப்படும் பேழை. வட்டிலோ, நாடாவிலோ படி எடுக்க முடியாது. Solid state cartridge என்றும் Rom Cartridge என்றும் அழைக்கப்படுகிறது.

cartridge disk unit : பொதியுறை வட்டகம் : சேமிப்பகச் சாதனம். இதில் இரு வகை வட்டுகள் உள்ளன. ஒன்று நிலையாக நிற்பது. மற்றொன்று மீண்டும் பயன்படக்கூடியது.
கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf
அடுக்கு

cartridge drive : பொதியுறை இயக்ககம்; நாடா பேழை இயக்ககம்.

cartridge font : பொதியுறை எழுத்துரு : அச்சுப்பொறியில் நேரடியாகப் பொருந்தும் பொதியுறை நாடாவில் உள்ள ஒரு எழுத்துரு. லேசர் அச்சுப் பொறிகளில் இவை அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. எச். பீ லேசர் ஜெட் குடும்ப அச்சுப் பொறிகளில் பயன்படுத்தப்பட்டாலும் சில புள்ளியணி அச்சுப்பொறிகளிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன.

cartoon sounds : கார்ட்டுன் ஒலிகள்; கேலிப்பட ஒலிகள்.

cartridge tape : பொதியுறை நாடா : இது 8 மி. மீ அகலமுள்ள ஒரு காந்த நாடா. 12x12 செ. மீ அளவுள்ள குழைம (பிளாஸ்டிக்) உறையில் வைக்கப்பட்டுள்ளது. தலைமைப்பொறியமைவுக் கணினிகளில் இவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவை தொடர் அணுகு முறை தரவு சேமிப்பகத்தை அளிக்கின்றன. 2000 மெகாபைட் வரை கொள்திறன் கொண்டவை. தனிமுறைக் கணினிகளில் 60-100 மெகாபைட் கொள்திறடையவையாக அவை உள்ளன.

CAS : சிஏஎஸ் : தரவு தொடர்பு வரன்முறைகள் என்று பொருள்படும் Communication Application Specification என்பதன் குறும்பெயர். 1980இல் அறிமுகப்படுத்தப்பட்ட இன்டல் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் விதிமுறைகள்.

Cascade : அடுக்கு; தொடர்; கவிப்பு : சீட்டு விளையாட்டில் கையில் சீட்டுகளை ஒன்றடுத்து மற்றொன்றை அடுக்கி வைத்திருப்பதுபோல, அடுக்கி வைக்கும் முறை. விண்டோஸ் பணிச் சூழலில் ஒரு நேரத்தில் திறக்கப்படும் ஒன்றுக்கு மேற்பட்ட சாளரங்களை இம்முறையில் அடுக்கி வைக்கலாம். 1. ஒரு சாளரத்தில் அமையும் உரையாடல் பெட்டியில் (dialog box) உரைப்பெட்டி (text box), பட்டியல் பெட்டி (list box), தேர்வுப்பெட்டி (check box), கட்டளைப் பொத்தான்கள் (command buttons) போன்ற அனைத்து இயக்குவிசைப் பொருட்களையும் ஒரே திரையில் அமைக்க முடியாதபோது ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்கப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட திரைகளில் அவற்றை அடுக்கிவைப்பர். 2. இணையச் செய்திக் குழுக்களில் ஒரு செய்தி ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு அனுப்பப்படும்போது மூலச் செய்தியில் ஒவ்வொரு வரியிலும் > என்ற அடையாளம் சேர்க்கப்படும். அவரிடமிருந்து இன்னொருவர்க்குப் போகும் போது இன்னொரு அடையாளம் சேர்க்கப்படும். இதுபோல் சேர்ந்துகொண்டே போகும்.

cascaded carry : அடுக்கிய மிகுதி : மொத்தத் தொகையில், மிகுந்திடும் எண்ணைச் சேர்க்கும் முறை.

cascade connection : அடுக்கு இணைப்பு : இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒரே மாதிரியான துணைச் சாதனங்களை ஒன்றோடொன்று இணைத்தல். ஒன்றின் வெளியீடு அடுத்ததன் உள்ளிட்டுடன் இணைக்கப்படும்.

cascade control : அடுக்கு கட்டுப்பாடு : கட்டுப்பாட்டுச் சாதனங்கள் சங்கிலியைப் போன்று இணைக்கப்பட்டுள்ள தானியங்கி கட்டுப்பாட்டு அமைப்பு ஒவ்வொன்றும் அடுத்ததற்குக் கொடுப்பதுடன் அடுத்த நிலையை ஒழுங்குபடுத்தும்.

cascade sort : அடுக்கு வரிசையாக்கம் : வெளிப்புற நாடா கொண்டு வரிசைப்படுத்தும் ஒரு முறை.

cascading menu : அடுக்குப்பட்டியல் : ஒரு பட்டியிலிருந்து கொண்டு அடுத்த பட்டியைத் தொடங்குதல். இத்தகைய பட்டியில் இதை அடுத்து வலது அம்புக்குறி இருக்கும்.

cascading style sheets : அடுக்கி வைத்த அழகுத் தாள்கள் : ஹெச்டிஎம்எல் மொழியில் உருவாக்கப்படும் இணைய ஆவணங்களில் சிறப்புத்தன்மை வாய்ந்த, அழகாக அடுக்கி வைக்கப்பட்ட பக்கங்கள். ஹெச்டிஎம்எல் ஆவணங்களை உருவாக்குபவர்கள் இது போன்று வடிவமைக்கப்பட்ட பக்கங்களை இணைத்துக் கொள்வதற்கான வரைமுறைகளை வைய விரிவலைக் கூட்டமைப்பு நிர்ணயம் செய்துள்ளது. ஹெச்டிஎம்எல் 3. 2-ன் தர நிர்ணயத்தில் இவை அடங்கியுள்ளன. ஒரு வலைப் பக்கத்தில் உரை விவரங்கள் இடம்பெறும் விதம், அதன் எழுத்துரு, உருவளவு, வண்ணம் போன்றவை நிர்ணயம் செய்யப் பட்டுள்ளன.

cascading windows : அடுக்கி வைத்த சாளரங்கள் : வரைகலைப் பணிச்சூழலில், தலைப்புப்பட்டை தெரியும் வண்ணமாக ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்படும் பல்வேறு சாளரத் திரைகள்.

CASE : கேஸ் : 1. சி, சி ++, ஜாவா சி #, மொழிகளில் நிரல்களை எழுதுவதில் பயன்படும் கட்டளைச் சொல். 2. தரவு அமைப்பினை உருவாக்கும் எல்லா நிலைகளிலும் பயன்படும் மென்பொருள் வழக்கமான தொழில்நுட்பங்களை உருவாக்க தானியங்கி முறைகளைப் பயன்படுத்துகிறது. எல்லாவற்றுக்கும் பொருந்தும் ஒரு மொழியை உருவாக்குவதே இதன் இறுதி இலக்கு.

case control structure : நிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு.

case logic : எழுத்துருவ தருக்கம்.

case sensitive : எழுத்தின் தன்மை உணர்வு : தலைப்பெழுத்து, கீழெழுத்துகளை வேறுபடுத்துவது. இத்தகைய மொழியில் தலைப்பெழுத்து "A" வுக்கும் கீழெழுத்து "a"க்கும் உள்ள வேறுபாட்டை கணினி கண்டறியும்.

case-sensitive search : எழுத்து வடிவ உணர்வுத் தேடல் : ஒரு தரவு தளத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள விவரங்களில் ஒரு குறிப்பிட்ட விவரத்தைத் தேடும்போது மேற்கொள்ளப்படும் ஒருமுறை. ஆங்கிலச் சொற்களை சிறிய எழுத்தில் அல்லது பெரிய எழுத்தில் அல்லது கலந்த எழுத்துகளில் எழுதலாம். தேடும்போது வடிவ ஒப்புமை இல்லாமலும் தேடலாம். ஒர் ஆவணத்தில் Computer என்ற சொல் உள்ளதா எனத் தேடும்போது, COMPUTER, computer என்ற சொற்களையும் கண்டறிந்து சொல்லும். ஆனால், வடிவ அடிப்படையில் தேடினால், Computer என்ற சொல் இருந்தால் மட்டுமே உள்ளதெனக் காட்டும். computer, COMPUTER ஆகிய சொற்களைப் புறக்கணிக்கும்.

case sensitivity : எழுத்துவடிவ உணர்வு : ஒரு நிரலாக்க மொழியில், ஒரு நிரலில் சிறிய எழுத்து பெரிய எழுத்து வடிவங்களை வேறுபடுத்திப் பயன்படுத்துதல். எடுத்துக்காட்டாக சி, சி++ மற்றும் ஜாவா மொழிகளில் sum, SUM, Sum ஆகிய மூன்று சொற்களும் வேறு வேறாகவே அறியப்படும். எழுத்து வடிவ உணர்வுமிக்கவை என்று இம்மொழிகளைக் கூறுவர். ஆனால் பேசிக், பாஸ்கல் போன்ற மொழிகளில் மேற்கண்ட மூன்று சொற்களும் ஒன்றாகவே கருதப்படும். இம்மொழிகள் வடிவ உணர்வற்ற மொழிகள்.

case statement : கிளைபிரி கூற்று : அடா, பாஸ்கல், சி, சி++, ஜாவா மற்றும் விசுவல் பேசிக் மொழிகளில் பயன்படுத்தப்படும் கட்டுப்பாட்டுக் கட்டளைத் தொடர். ஒரு மாறியின் மதிப்பைச் சோதித்து அம்மதிப்பின் அடிப்படையில் வெவ்வேறு பணிகளை நிறைவேற்றுமாறு அமைக்கப்படும் கட்டளை. ஒன்றுக்குள் ஒன்றாக அமையும் if ... then ... else கட்டளைக்குப் பதிலாக சில சூழ்நிலைகளில் கிளைபிரி கட்டளையமைப்பு பயன்படுத்தப்படுகிறது.

cashless society : பணமிலாச் சமுதாயம் : வாங்குபவரின் வங்கிக் கணக்கிலிருந்து கொடுப்பவரின் வங்கிக் கணக்குக்கு உடனடியாகப் பணத்தைச் செலுத்துவதன் மூலம் வாங்கும் பரிமாற்றத்தை முடிக்கும் கணினி அமைப்பு. ரொக்கமாக எதுவும் மாற்றப்படுவதில்லை. சம்பளக் காசோலைக்குப் பதிலாகவும், சரக்குகள் மற்றும் சேவைகளுக்கும் இவ்வாறு பணமாற்றம் செய்யப்படுகிறது.

cassette : பேழை; நாடாப் பெட்டி; ஒளிச் சுருள்; ஒளிப் பேழை : தரவு சேமிப்புக்குப் பயன்படும் காந்த நாடாவைக் கொண்டுள்ள சிறிய பேழை.

Cassette drive : பேழை இயக்ககம்.

cassette interface : நாடா இடைமுகம்; பேழை இடைமுகம் : ஒரு கணினிக்கும் ஒரு காந்த நாடாவுக்கும் இடையில் தரவு பரிமாற்றங்களைக் கட்டுப்படுத்தப் பயன்படும் மின்சுற்று.

cassette recorder : பேழைப் பதிவி; நாடாப் பதிவி : நாடாப் பேழைகளைப் பயன்படுத்தி இலக்க முறை தரவுகளைப் பதிவு செய்து சேமிக்கவும், பின்னர் ஒருமுறை இந்த தரவுகளைக் கணினியின் உள் இருப்பகத்தில் ஏற்றவும் வடிவமைக்கப்பட்ட சாதனம். நுண்கணினிகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

cassette tape : பேழை நாடா : ஏறக்குறைய 1/3 செ. மீ. அகலமுள்ள காந்த நாடா. சிறிய பிளாஸ்டிக் பேழையில் வைக்கப்பட்டிருப்பது.

casting : இனமாற்றம் : நிரலாக்கத்தில் ஒரு தரவினை மதிப்பை வேறொரு தரவின மதிப்பாக மாற்றியமைத்தல்.

CAT : கேட் : Computer Assisted Training and Computerised Axial Tomography என்பதன் குறும்பெயர். கணினி உதவிடும் பயிற்சி மற்றும் கணினிமய அச்சு ஊடுகதிர் உள்தளப் பட முறை (Tomography) என்பதன் சுருக்கம்.

catalog : திரட்டு; அடைவு : ஒவ்வொரு வகையாக விவரித்து வரிசையாகச் சேர்த்து வைப்பது. நிரல்கள் அல்லது ஒரு வட்டில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகளின் பட்டியலை வரிசைப் படுத்துதல். ஒரு வட்டைத் திரட்டி அமைத்தல் என்றால் ஒரு வட்டில் உள்ள அனைத்துக் கோப்புகளின் பட்டியலையும் அச்சிட்டுத் தருமாறு கணினியைக் கேட்பதாகும்.

catch : பிடி.

catena : தொடுப்புப் பட்டியல் : பல்வேறு உறுப்புகளைச் சேர்த்துத் தொடுக்கப்பட்ட ஒரு பட்டியலில் ஒர் உறுப்பு, பட்டியலிலுள்ள அடுத்த உறுப்பினைச் கட்டுமாறு அமைக்கப்பட்டிருக்கும்.

category : வகையினம்.

category storage : வகையினச் சேமிப்பகம்.

cat eye பூனைக் கண்.

cathode : எதிர்மின்வாய் : மின்னணுவியல் சொல். மின்னணுக்களை எதிர்நிலை (Negative) சக்தியுள்ள எதிர் மின்வாயிலிருந்து நேர்நிலை (positive) சக்தியுள்ள நேர்மின் வாய்க்கு மாற்றும் சாதனம்.

cathode ray tube (CRT) : எதிர் மின் கதிர்க் குழாய் : தகவலைக் காட்டக்கூடிய திரை உள்ள மின்னணுக் குழாய்.

cathode ray tube visual display unit : எதிர்மின்வாய்க் கதிர்க் குழாய் காட்சித் திரையகம்.

CAT scan : கேட் வருடல் : Computer Assisted Tomography Scaning என்பதன் குறும்பெயர். மருத்துவ ஆய்வு மற்றும் நோயறிதல்களில் பயன்படுவது.

'CAU : காவ் : கூட்டுறு அணுகு கருவி எனப் பொருள்படும் Controlled Access Unit என்பதன் குறும்பெயர். வில்லை வளைய பிணையங்களுக்காக ஐபிஎம் உருவாக்கிய தானறி குவியம் (intelligent Hub) மேலாண்மை மென்பொருள் வழியாக பழுதான முனைகளை குவிய (Hub) அடையாளம் காட்டும்.

. ca. us : . சிஏ. யுஎஸ் : இணையத்தில் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த வலைத் தளங்களைக் குறிக்கும் பெருங்களப் பெயர்.

CBASIC : சிபேசிக் : 8080, 8085 மற்றும் இஸட்80 நுண் செயலகக் கணினிகளுக்குப் பிரபலமான மொழி.

CBBS : சிபிபிஎஸ் : Computerized Bulletin Board Service என்பதன் குறும்பெயர். கணினிமய செய்தி அறிக்கை சேவை என்பதன் சுருக்கப் பெயர்.

CBEMA : சிபிஇஎம்ஏ : Computer and Business Equipment Manufacturers Association என்பதன் குறும்பெயர். கணினி மற்றும் வணிகக் கருவி உற்பத்தியாளர்களின் சங்கம் என்பதன் சுருக்கம்.

CBI : சிபிஐ : Charles Babbage Institute என்பதன் குறும்பெயர்.

CBL : சிபிஎல் : Computer Based Learning என்பதன் குறும்பெயர்.

CBT : சிபிடீ : கணினி அடிப்படையிலான பயிற்சி என்ற பொருள்படும் Computer Based Training என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கணினியையும் இதற்கென்றே உருவாக்கப்பட்ட மென்பொருளையும் பயன்படுத்திக் கற்பிக்கும் முறை. இம்முறையில் உரைக் கோவை மட்டுமின்றி, வண்ண மிக்க வரைகலைப்படங்கள், அசைவூட்டப் படங்கள் மற்றும் குரல் மூலமான விளக்கங்கள் உட்பட பயனாளரை ஈர்க்கும் வண்ணம் பாடங்கள் அமைக்கப்பட்டிருக்கும். பயன்படுத்த எளிமையானதாகவும் நுட்பமானதாகவும் இருக்கும். ஒரு மென்பொருள் தயாரிப்பாளர் தன் மென்பொருளைப் பயன்படுத்துபவருக்கு அம்மென்பொருளைப் பயன்படுத்தும் வழிமுறைகளையே ஒரு சிபிடீயாகத் தயாரிக்க முடியும். ஒரு மேலாண்மைத்துறைக் கருத்தரங்கில் சிபிடீ-யை ஒரு சிறந்த கற்பித்தல் கருவியாகப் பயன்படுத்தலாம்.

CC : சிசி, நகல் : உண்மை நகல் என்று பொருள்படும் Carbon Сору அல்லது Courtesу Сору என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். ஒருவருக்கு அனுப்பும் மின்னஞ்சல் செய்தியை அப்படியே இன்னொருவருக்கு அனுப்ப, மின்னஞ்சல் மென்பொருளில் வழியுள்ளது. To என்பதில் அஞ்சல் பெறுபவரின் முகவரியைத் தரவேண்டும். CC என்பதில் வேறு ஒருவரின் அல்லது பலரின் முகவரியைத் தரலாம். அவர்களுக்கும் அஞ்சல் சென்று சேரும். CC-யில் தரப்பட்ட முகவரிதாரர்கள் அனைவரும் இந்த மடல் வேறு எவருக்கெல்லாம் அனுப்பப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளவும் முடியும். இந்த வகையில் bcc என்று குறிப்பிட்டு இன்னும் சிலருக்கு அதே மடலை அனுப்பிவைக்கும் முறையிலிருந்து மாறுபடுகிறது. bcc-யில் குறிப்பிடப்படும் முகவரி தாரர்களுக்கும் மடல் கிடைக்கும். ஆனால், இந்த மடல் எவருக்கெல்லாம் அனுப்பப்பட்டுள்ளது என்பதை அவர்கள் அறிய முடியாது. (bcc-blind carbon Copy).

. cc : . சிசி : இணையத்தில் தள முகவரி காகஸ் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் களப்பிரிவு.

CCD : சிசிடி : மின்னூட்டச் சேர்ப்பு சாதனம் என்று பொருள்படும் Charge Coupled Device என்பதன் குறும்பெயர். மின்னுட்டப் பிணைப்பு சாதனம் என்பதன் சுருக்கப் பெயர்.

CCFT : சிசிஎஃப்டி : Cold Cathode Fluorescent Tube என்பதன் குறும்பெயர். பின்புற ஒளி வரும் திரையில் ஒளி உண்டாக்கும் வகைகளில் ஒன்று. மற்ற பின்புற ஒளிகளைவிட அதிக எடையுடனும், அதிக மின்சாரம் வாங்குவதாகவும் இது உள்ளது.

CCITT : சிசிஐடீடி : Consultative Committee International Telegraph and Telephone என்பதன் குறும்பெயர். பன்னாட்டுத் தந்தி மற்றும் தொலைபேசி ஆலோசனைக் குழு என்பதன் சுருக்கப் பெயர். உலகளாவிய தர நிர்ணயங்களை தரவு தொடர்புத் துறையில் உருவாக்குவதற்காக ஐக்கிய நாடுகள் பேரவை உருவாக்கியுள்ள ஒரு நிறுவனம்.

CCITT Groups 1-4 : சிசிஐடீடீ 1-4 விதிகள் : பன்னாட்டுத் தந்தி - தொலைபேசி ஆலோசனைக் குழு (International Telegraph and Telephone Consultative Committee) தொலைநகல் எந்திரங்களின் மூலமாக பட உருவங்களை குறியீடுகளாக்கவும் மறு