உள்ளடக்கத்துக்குச் செல்

கணினி களஞ்சிய அகராதி-2/I

விக்கிமூலம் இலிருந்து

முனைக்கு அனுப்பி வைக்கவும் பரிந்துரை செய்த நான்கு பிரிவிலான நெறிமுறைகள். முதலிரண்டு பிரிவுகள் தொடர்முறை (analog) சாதனங்களுக்கும் 3, 4-வது பிரிவு நெறி முறைகள் இலக்கமுறை (digital) சாதனங்களுக்கும் ஆனவை.

ccNUMA : சிசிநூமா : நினைவக அணுகலில் ஒரு வழிமுறை. Cache Coherent Non-Uniform Memory Access என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். ஒத்தியைந்த பல்செயலாக்கக் கணினி முறைமைகள் (Symmetric, Multiprocessing System) பலவற்றை, அதிவேக/அகல அலைக்கற்றையுடைய வன்பொருள் ஊடகம் மூலம் ஒருங்கிணைத்து ஒரே கணினி அமைப்பாகச் செயல்பட வைக்கும் ஒரு தொழில்நுட்பம்.

CCP : சிசிபீ : Certification in Computer Programming என்பதன் குறும்பெயர். கணினி நிரலாக்கத்தில் சான்றிதழ் என்பது பொருள். அமெரிக்கா, கனடா மற்றும் பல பன்னாட்டு கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் ஆண்டுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. நிரலாக்க அறிவையும், வணிக, அறிவியல் மற்றும் சிறப்பு பயன்பாடுகள் உருவாக்கம் போன்ற திறன் குறித்தும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. தரவு, கோப்பு முறைமை, நிரலாக்க மொழி, தொழில்நுட்பம், வன்பொருள் - மென்பொருள்களுக்கிடையே பரிமாற்றம், மக்களுடன் பரிமாற்றம் போன்ற துறைகளில் அறிவு வலியுறுத்தப்படுகிறது.

C3L : சி3எல் : Complementary Constant Current Logic என்பதன் குறும்பெயர்.

CD1 : சிடி (CD) : கோப்பகம் மாறு என்று பொருள்படும் change directory என்ற தொடரைக் குறிக்கும் கட்டளைச் சொல். எம்எஸ்டாஸ், யூனிக்ஸ் மற்றும் எஃப்டீயீ கிளையன் நிரல்களில் இக்கட்டளை பயன்படுத்தப்படுகிறது. இக்கட்டளைச் சொல்லையடுத்துத் தரப்படுகின்ற பாதையுடன்கூடிய இன்னொரு கோப்பகத்துக்கு மாறிக்கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக, C : \VB> CD \VC\Project மூலம் VB என்னும் கோப்பகத்திலிருந்து, VC என்னும் கோப்பகத்திலுள்ள Project என்னும் உள்கோப்பகத்துக்கு மாறிக் கொள்ள முடியும். பிறகு அங்கிருக்கும் கோப்புகளையும் பயன்பாடுகளையும் எளிதாகக் கையாள முடியும். CD2 : சிடி : 1. மின்சாரம் அறியப்பட்டது என்று பொருள்படும் Current Detected என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒர் இணக்கியிலிருந்து, இணைக்கப்பட்ட ஒரு கணினிக்கு அனுப்பப்படும் சமிக்கை. இணக்கி, தகவலை ஏற்கத் தயார் நிலையில் இருப்பதை உணர்த்துவது. காண்க DCD. 2. குறுவட்டு என்று பொருள்படும் Compact Disc என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

CDC : சிடிசி : Call Directing Code என்பதன் குறும்பெயர். ஒரு செய்தி அல்லது ஆணையை தானாகவே வழி நடத்திச் செல்லும் மூன்று அல்லது இரண்டு எழுத்துகளைக் கொண்ட ஒரு குறியீடு.

C-Drive : சி - இயக்ககம் : கணினியின் உள்ளே நிலையாகப் பொருத்தப்பட்டுள்ள தரவு சேமிப்பு வட்டு இயக்ககம், எப்போதும் 'சி' என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

cdev : சிடெவ் : மெக்கின்டோஷ் கணினிகளில் பயன்படுத்தப்படும் ஒரு பயன்பாட்டு நிரல். கணினிச் சாதனங்களை நம் விருப்பப்படி அமைத்துக் கொள்வதற்குப் பயன்படுகிறது. மேக் பதிப்பு 6 (Mac OS 6) -ல் இந்த நிரல், முறைமைக் கோப்புறையில் வைக்கப்பட்டிருந்தது. விசைப்பலகை மற்றும் சுட்டிக்கான சிடெவ்கள் கணினியை இயக்கும்போதே நிறுவப்பட்டுவிடும். ஏனைய சிடெவ்கள் அந்தந்த மென்பொருள் தொகுப்புகளுடன் இணைந்து வருகின்றன. மேக் பதிப்பு 7இல் சிடெவ்கள் கன்ட்ரோல் பேனல்கள் என்று அழைக்கப்பட்டன.

CDFS : சிடிஎஃப்எஸ் : 1. குறுவட்டில் பயன்படுத்தப்படும் கோப்பு முறைமை. 32 துண்மி (பிட்) பாதுகாப்பு முறையில் இது அமைந்துள்ளது. இந்த அடிப்படையிலேயே விண்டோஸ் 95/98 ஆகிய இயக்க முறைமைகளில் குறுவட்டின் உள்ளடக்கத்தை அணுகும் முறைகள் வரையறுக்கப்படுகின்றன. 2. யூனிக்ஸ் இயக்க முறைமையில், ஒரு கோப்பு முறைமை, படிக்க மட்டுமேயான, கழற்றி எடுக்கப்படும் ஒர் ஊடகத்தில் (குறிப்பாக குறுவட்டு) அமைந்துள்ளது என்பதைக் குறிக்கும் தகுதிச் சொல். குறுவட்டு ஐஎஸ்ஓ 9660 தர நிர்ணயப்படி அமைந்தது என்பதை இச்சொல் குறிக்கும். நிலைவட்டு, நாடா, தொலைவுப் பிணைய இயக்ககங்கள் மற்றும் குறுவட்டு இயக்ககங்களை யூனிக்ஸ் கணினியில் நிறுவும் போது இது போன்ற கட்டளைச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

CD-I : சிடி-ஐ : ஊடாடும் குறுவட்டு என்று பொருள்படும் Compact Disk-Interactive என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒளிவ வட்டு (optional disk) த் தொழில்நுட்பத்தில் வன்பொருள்/மென்பொருள் பற்றிய தர நிர்ணயம். படஉருவக் காட்சி, உருத்தெளிவு, அசைவூட்டம் கேட்பொலி மற்றும் சிறப்பு விளைவுகள் ஆகிய கூறுகளை சிடி-ஐ உள்ளடக்கியது. இத் தர நிர்ணயம் தரவுவைக் குறியீடாக்கல், இறுக்கிச் சுருக்குதல், சுருக்கியவற்றை விரித்தல், பதிவான தரவுவை திரையிடல் ஆகிய செயல்முறைகளையும் உள்ளடக்கியது.

C DOT : சி-டாட் : Centre for Development of Telematics (Telecommunications) என்பதன் குறும்பெயர். இந்திய அரசு நிறுவனம்.

CDP : சிடிபீ : தரவு செயலாக்கத்தில் சான்றிதழ் படிப்பைக் குறிக்கும் Certificate in Data Processing என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கணினி மற்றும் நிரலாக்கம், மென்பொருள் உருவாக்கம், முறைமை ஆய்வு உட்பட, கணினி தொடர்பான துறைகளில் சில தேர்வுகளை எழுதித் தேர்ச்சிபெறும் தனி நபர்களுக்கு இன்ஸ்டிடியூட் ஃபார் சர்ட்டிஃபிகேஷன் ஆஃப் கம்ப்யூட்டர் புரொஃபஷனல்ஸ் என்ற நிறுவனம் இந்தச் சான்றிதழை வழங்குகிறது.

CD Player : சிடி இயக்கி.

CD plus : சிடி பிளஸ் : குறுவட்டில் தரவுவைப் பதியும் முறை. கணினித் தரவுகளையும் கேட்பொலிப் பதிவுகளையும் ஒரே குறுவட்டில் பதிய இம்முறை வழிவகுக்கிறது. தரவு பகுதியைப் படிக்கும்போது கேட்பொலிப் பதிவுகளோ, கேட்பொலிப் பகுதியை இயக்கும்போது தரவு பகுதியோ பாதிக்கப்படுவதில்லை.

CD-R : சிடி-ஆர் : பதிதகு குறுவட்டு எனப் பொருள்படும் Compact Disk Recordable என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். குறுவட்டு எழுதி (CD writer) மூலம் தகவலைப் பதிப்பித்து, குறுவட்டகத்தில் வைத்துப் படிக்க முடிகிற ஒரு வகைக் குறுவட்டு.

CD Recorder : குறுவட்டெழுதி : குறுவட்டுப் பதிவி : ஒரு குறுவட்டில் எழுதும் சாதனம். குறு
குறுவட்டெழுதி

வட்டில் இந்த சாதனம் மூலம் ஒருமுறை எழுதப்பட்டு பலமுறை படிக்கப்படுகிறது. நிரந்தரத் தரவு சேமிப்புக்காகவும், பாதுகாப்பு நகலாக (Backup) பயன்படுத்தவும், மென்பொருள்களை பல நகல்கள் எடுத்து வினியோகிக்கவும் குறுவட்டெழுதி மூலம் வட்டில் தரவுகள் எழுதப்படுகின்றன.

CD-ROM : சிடி-ரோாம் : படிக்க மட்டுமேயான குறுவட்டு என்று பொருள்படும் Compact Disk - Read Only Memory என்ற‌ தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். விவரச் சேமிப்பகத்தில் ஒருவகை. அதிகக் கொள்திறன் உள்ளது (650 MB). தரவுவைப் படிக்க மின்காந்த முறைக்குப் பதில் லேசர் கதிர் பயன்படுத்தப்படுகிறது. ஒரு முறை எழுதப்பட்டு பலமுறை படிக்கப்படுகிறது (Write Once Read Many Times).

CD-ROM Changer : சிடி ரோம் மாற்றி.

CD-ROM drive : குறுவட்டகம்; குறுவட்டு இயக்ககம் : படிக்க மட்டுமேயான தரவுகள் பதியப்பட்டுள்ள குறுவட்டினை கணினியில் வைத்துப் பயன்படுத்தக்கூடிய வட்டகம் அல்லது வட்டு இயக்ககம்.

CD-ROM juke box : குறுவட்டு தொகுதிப் பெட்டி : குறுவட்டுகளின் தொகுதியை கணினியுடன் இணைத்துக் கையாள வழி செய்யும் வட்டியியக்குச் சாதனம். 200 குறுவட்டுகள் வரை இதில் வைத்துப் பயன்படுத்த முடியும். பயனாளர் எந்த வட்டிலுள்ள தரவுவையும் கையாள விரும்பலாம். இச்சாதனம் அக்குறிப்பிட்ட வட்டினைத் தேடிக் கண்டறிந்து தரவுவை எடுத்துத் தரும். ஒரு நேரத்தில் ஒரு குறுவட்டு மட்டுமே பயன்பாட்டில் இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட குறுவட்டினைக் கையாளும் திறனுள்ள கணினியெனில், தொகுதிப் பெட்டியிலுள்ள வட்டுகளில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் கையாள முடியும்.

CD-ROM/XA : சிடி‍-ரோம்/எக்ஸ்ஏ; குறுவட்டு/எக்ஸ்ஏ : சிடி-ரோம் எக்ஸ்டெண்டடு ஆர்க்கிடெக்சர் என்பதன் சுருக்கச் சொல். ஒரு விரிவாக்கப்பட்ட குறுவட்டுத் தரவு பதிவுமுறை. ஃபிலிப்ஸ், சோனி, மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் இணைந்து இதனை உருவாக்கியுள்ளன. சிடி-ரோம்/எக்ஸ்ஏ, ஐஎஸ்ஓ 9660 தர நிர்ணயத்திற்கு ஒத்தியல்பானது.

CDV : சிடிவி : 1. இறுக்கப்பட்ட இலக்கமுறை ஒளிக்காட்சி என்று பொருள்படும் Compressed Digital Video என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். அதிவேக ஊடகங்களில் அனுப்பி வைப்பதற்கு ஏற்ப இறுக்கிச் சுருக்கப்பட்ட ஒளிக்காட்சி உருவப்படங்கள். 2. குறுவட்டு ஒளிக்காட்சி என்று பொருள்படும் Compact Disc Video என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். 5 அங்குல விட்டமுள்ள வட்டினைக் குறிக்கிறது.

CE : சிஇ : வாடிக்கையாளர் பொறியாளர் எனப் பொருள்படும் Customer Engineer என்பதன் குறும்பெயர்.

cell : கலம்; சிற்றம் : 1. ஒரு எழுத்து, ஒரு பைட் அல்லது ஒரு சொல்போன்ற தகவலின் ஒரு அலகை மட்டும் சேமிக்குமிடம். 2. ஒரு மின்னணு விரிதாளின் அணிபோன்ற அமைப்பில் கிடைக்கையும் நெடுக்கையும் சந்திக்கும் இடம்.

cell address : கல முகவரி : விரிதாள் செயல்முறையில் நெடுக்கையின் பெயர் (ABC..) மற்றும் கிடக்கை எண் (1, 2, .....) இரண்டும் சேர்ந்த முகவரி. A1, G22, J320 என அமையும்.

Cell animation : கலை அசைவூட்டம் : ஒரு அசைவூட்டத் தொழில்நுட்பம். இதில் ஒரு ஓவியம் பின்னணியில் நிலையாக இருக்கும். அசைவூட்டப்பட்ட உருவங்கள் ஓவியத்தின் மீது நகரும்போது அவை இயல்பாக நகர்வது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகிறது. கல ஆசை வூட்டத்துக்கென பயன்பாட்டுத் தொகுப்புகள் கிடைக்கின்றன.

cell array : கலக்கோவை : GKSஇல் அடிப்படை வெளியீடுகளில் ஒன்று. சிறிய பாலிகன் வரிசை முறையை அமைத்து ஒவ்வொன்றுக்கும் தனி நிறம் தருகிறது.

cell contents : கல உள்ளடக்கம் : ஒரு விரிதாள் கலத்தில் உள்ள எழுத்துச் சரம், மதிப்பு, வாய்பாடு அல்லது செயல்கூறு.

cell definition : சிற்றம் வரைவிலக்கணம்; கல வரையறை.

cell pointer : சிற்றம் சுட்டு; கலச்சுட்டு.

cellular automata : செல்பேசித் தானியங்கு கொள்கை.

Cellular Digital Packet Data : செல்பேசி இலக்கமுறைப் பொதி தரவு : ஏற்கெனவேயுள்ள செல்பேசித் தடங்களின் வழியே வினாடிக்கு 19. 2 கிலோபிட் வேகத்தில் இருதிசை விவரப் பொதி தரவு பரிமாற்றத்திற்கான தர நிர்ணயம்.

cellular phone : செல்லிடப்பேசி; செல்பேசி; கைத் தொலைபேசி :

cellular radio : செல்லிட வானொலி : முழு நிலப் பரப்புக்கும் அதிக சக்தியுள்ள நிலையான வானொலி நிலையம் அமைப்பதற்குப் பதிலாக சிறுசிறு பகுதிகளாகப் பிரித்து சேவை அளிப்பது. ஒருசில கிலோ மீட்டர்கள் மட்டுமே கேட்பதாக அவை இருக்கும். நடமாடும் தொலைபேசியின் தேவை அதிகரிப்பதால் கல அமைப்பின்மூலம் நிலைமையை ஈடு கட்டலாம். பல இயங்கும் சேவைகள், குறும் பகுதிக்குள் கொண்டுவரப்பட்டு கலத்தின் அளவு குறைக்கப்படுகிறது. ஒவ்வொரு கலத்திலும் தனி பல்லிணைப்பு அலைவரிசை பரப்பி வாங்கி ஆகியவை அமைக்கப்படுகின்றன. பரப்பிகட்கு குறைவான மின்சக்தியே தேவைப்படுகிறது. இதனால் வானொலி அலைவரிசைக் கற்றை (பாண்டு) களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி சில நூறு பேர்களுக்குப் பதிலாக பல்லாயிரவர் பயன் பெறமுடியும்.

center : மையம் : தட்டச்சு செய்யப்படும் தரவுவை வரியின் மையத்தில் இடம்பெறச் செய்யும் விசைப் பலகையின் பணி.

Centre for Development of Advanced Computing : உயர்நிலை கணிப் பணி மேம்பாட்டு மையம் : சுருக்கமாக சி - டாக் (CDAC) என அழைக்கப்படுகிறது. மைய அரசு நிறுவனம்.

center vertically : செங்குத்து மையப்படுத்து.

centering cone : மையப்படுத்தும் கூம்பு : 5. 25 நெகிழ்வட்டை (ஃபிளாப்பி) இயக்கி அச்சாணியில் எற்றப் பயன்படுத்தும் சிறிய செயற்கை இழை அல்லது உலோகக்கூம்பு. இயக்ககக் கதவை மூடியவுடன், இது வட்டின் மையக் குழியில் நுழைக்கப்படுகிறது.

centi : சென்டி : நூறாவது என்பதைக் குறிக்கும் மெட்ரிக் அளவை முன் சொல். நூறு என்பதைக் குறிக்கும் ஹெக்டோவுடன் வேறுபடுத்திப் பார்க்க.

centi second : சென்டி நொடி : ஒரு நொடியில் நூறில் ஒரு பங்கு.

central control unit : மைய கட்டுப்பாட்டகம்.

central information file : மைய தரவு கோப்பு : முக்கிய தரவு சேமிப்பு அமைப்பு.

central office : மைய அலுவலகம் : தரவு தொடர்பு அமைப்பில் வாடிக்கையாளர்களின் தரவு தொடர்புத் தடங்கள் ஒன்றுக்கொன்று இணைக்கப்படும் இணைப்பு மையம்.

central processing : மையச் செயலாக்கம்.

central processing unit : மையச் செயலகம்.

central processor : மையச் செயலி; மையச் செய்முறைப்படுத்தி; மையச் செயலாக்கி.

central site : மையத் தளம் : பகிர்ந்தமை செயலாக்க அமைப்பில் முக்கிய கருவிகள் உள்ள இடம்.

central spindle : மையச் சுழல் தண்டு.

central tendency : மையப் போக்கு : எதிர்பார்க்கப்பட்ட மதிப்புகளுக்கு ஏற்றதாக தரவுகள் அமையக் கூடிய வாய்ப்பு.

central terminal : மைய முனையம் : கணினிக்கும் தொலை தூர முனையத்துக்கும் இடையே தரவு தொடர்பு கொள்வதற்கு இடைப்பட்ட ஊடகமாகப் பயன்படும் வன்பொருள் தாங்கி.

centralized data processing : மையப்படுத்தப்பட்ட தரவு செயலாக்கம் : ஒரு நிறுவனம் தன்னுடைய கணினி கருவிகளையெல்லாம் ஒரே இடத்தில் வைத்திருக்கும் கோட்பாடு. கள அலுவலகச் செயல்பாடுகளில் தரவு செயலாக்கம் இல்லாத நிலை.

centrafized design : மையப்படுத்தப்பட்ட வடிவமைப்பு : ஒரு நிறுவனத்தின் தரவுச் செயலாக்க வசதிகளை, ஒரு தனி தரவுச் செயலாக்கத் துறையே வழங்கும் தரவு அமைப்பு.

centralized network configuration : மையப்படுத்தப்பட்ட பிணையத் தகவமைவு : ஒரு மையக் கணினியின் தொடர்புடன் பெரும்பாலான பணிகளைச் செய்யும் ஏற்பாடுள்ள கணினிப் பிணையம். நட்சத்திரப் பிணையம் என்றும் அழைக்கப்படுகிறது.

centralized processing : மையப்படுத்தப்பட்ட செயலாக்கம் : ஒரு தனி, மைய இடத்திலிருந்து ஒன்று அல்லது மேற்பட்ட கணினிகளை இணைத்து செயலாக்கம் செய்தல். இதன் பொருள் என்னவென்றால் தரவு மையத்துடன் நிறுவனத்தின் அனைத்து முனையங்களையும் இணைத்து செயல்பட வைக்கப்படுகிறது என்பதே.

centred text : மையப்படுத்திய‌ உரை : சொல்லமைவுகளை ஒரு வரியின் மையத்தில் அமைத்தல். ஒரு பக்கத்தில் இடது ஓரம் அல்லது வலது ஓரத்தில் இல்லாமல் மையத்தில் இடம் பெறும் சொல் அல்லது சொற்றொடர்.

centronics interface : சென்ட்ரானிக்ஸ் இடைமுகம் : கணினிகளையும் அச்சுப் பொறிகளையும் இணைக்கும் புகழ் பெற்ற ஒரேநேர பரிமாற்ற அமைப்பு. கணினிகளுக்கும் அச்சுப் பொறிகளுக்கும் இடையில் தரவு தொடர்புக்கு ஒரே நேரத்தில் சேர்ந்தியங்கும் திட்டத்தைச் செயல்படுத்திய அச்சுப்பொறி உற்பத்தி நிறுவனம் சென்டிரானிக்ஸ்.

centronics parallel interface : சென்ட்ரானிக்ஸ் இணைவழி இடைமுகம் : கணினிக்கும் அதன் புறச்சாதனங்களுக்கும் இடையேயான இணைவழி தரவு பரிமாற்றப் பாதைகளுக்கான தர நிர்ணயம். அச்சுப் பொறிகளை உற்பத்தி செய்யும் சென்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்தத் தர நிர்ணயத்தை முதலில் உருவாக்கியது. சென்ட்ரானிக்ஸின் இணைவழி இடை முகம், எட்டு இணைவழி தரவு தடங்களையும் கட்டுப்பாடு மற்றும் நிலையறி தரவுக்கான கூடுதல் தடங்களையும் வழங்குகிறது. censorship : தணிக்கைமுறை : ஒரு தரவு தொடர்பு ஊடகத்தின் வழியே ஆட்சேபத்துக்குரிய செய்திகளைப் பரப்பக் கூடாது எனத் தடை செய்யும் முறை. இணையத்தில் செய்யப்படும் தரவு பரப்புகைக்கு இத்தகைய தணிக்கை முறை கிடையாது. ஆனால் இணையத்தில் சில குறிப்பிட்ட பகுதிகள் பலவிதமான‌ கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகின்றன. எடுத்துக்காட்டாக, இணையத்தில் செய்திக் குழுக்களில் alt என்னும் பிரிவில் முழுவதுமோ, alt. sex அல்லது alt. music write-power ஆகிய பிரிவுகளில் வெளியிடப்படும் ஆபாசமான ஆட்சேபத்துக்குரிய செய்திகள் செய்திக் குழுவின் இடையீட்டாளரால் (moderator) தணிக்கை செய்யப்படுகின்றன. சிலநாடுகளில் அந்நாடு பின்பற்றும் தேசியக் கொள்கை அடிப்படையில் சில அரசியல் மற்றும் பண்பாட்டு வலைத் தளங்களை அந்நாட்டுப் பயனாளர்கள் பார்வையிட அனுமதிப்பதில்லை.

CEO : முதன்மை மேலாண் அலுவலர்.

CERN : செர்ன் : அணு இயற்பியலுக்கான ஐரோப்பிய ஆய்வுக்கூடம் என்று பொருள்படும் Conseil Europeen Pour La Recherche Nucleaire (The European Laboratory for Particle Physics) என்ற பெயரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் செர்ன் ஆய்வுக் கூடம் அமைந்துள்ளது. 1989-ஆம் ஆண்டில் இந்த ஆய்வுக் கூடத்தில்தான் டிம் பெர்னர்ஸ்-லீ வையவிரிவலையை (World Wide Web) உருவாக்கினார். அறிவியல் ஆய்வு அறிஞர்களுக்கிடையே தரவு தொடர்பு வசதியை ஏற்படுத்தித் தருவதே இதன் நோக்கமாய் இருந்தது.

CERN server : செர்ன் வழங்கன் கணினி : செர்ன் ஆய்வுக் கூடத்தில் டிம் பெர்னர்ஸ்-லீ உருவாக்கிய ஹெச்டிடிபீ (HTTP) வழங்கன் கணினிகளில் ஒன்று. இணையம் முழுவதிலும் இப்போதும் செர்ன் கணினிகள் பயன்பாட்டில் உள்ளன. அதன் சேவைகள் இலவசமாகவே கிடைக்கின்றன.

'CERT : செர்ட் : கணினி அவசர நடவடிக்கைக் குழு என்று பொருள்படும் Computer Emergency Response Team என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையப் பயனாளர்களுக்கு 24 மணி நேரமும் கணினிப் பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கும் நிறுவனம் இது. புதிய நச்சுநிரல் (Virus) மற்றும் வேறெந்த கணினிப் பாதுகாப்பு அபாயம் குறித்தும் ஆலோசனைகள் பெறலாம்.

certification : சான்றளிப்பு : 1. ஒரு மென்பொருள் அதன் செயல்திறன் எண்பிக்கப்பட்ட பிறகு ஏற்றுக் கொள்ளல். 2. ஒருவர் குறிப்பிட்ட அளவு தொழில் முறையிலான தகுதியை அடைந்து விட்டார் என்று கடுமையான தேர்விற்குப் பிறகு அவருக்கு அங்கீகாரம் அளித்தல்.

. cf : . சிஏஃப் : மத்திய ஆஃப்ரிக்கக் குடியரசில் செயல்படும் இணைய தள முகவரிகளில் குறிப்பிடப்படும் பெரும் புவிக்களப் பெயர்.

. cg : . சிஜி : இணைய தள முகவரி, காங்கோ நாட்டில் பதிவுசெய்யப்பட்டது என்பதைக் குறிப்பதற்கான பெரும் புவிக்களப் பெயர்.

CGA : சிஜிஏ : வண்ண வரை கலைத் தகவி என்று பொருள்படும் Colour Graphics Adapter என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். 1981இல் ஐபிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஒளிக்காட்சித் தகவிப் பலகை சிஜிஏ, பல்வேறு எழுத்து மற்றும் வரை கலைக் காட்சி முறைகளைத் தர வல்லது. எழுத்து முறைகளில் 16 நிறங்களில் 25 வரிகள், 80 எழுத்துகள், 25 வரிகள்/40 எழுத்துகள் காண்பிக்கும் முறைகளும் உண்டு. 2 நிறங்களில் 640 கிடைமட்ட படப் புள்ளிகளும் (pixels), 200 செங்குத்துப் படப் புள்ளிகளும் இடம்பெறும் வரைகலைக் காட்சி முறையும், 320x200 படப்புள்ளி, நான்கு நிறக் காட்சி முறையும் உண்டு.

CGI : சிஜிஐ : பொது நுழை வாயில் இடைமுகம் எனப் பொருள்படும் Common Gateway Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஹெச்டீடீபீ போன்ற தரவு பரிமாற்ற வழங்கன் (Server) கணினிகளுக்கிடையேயும், தரவு தளம் மற்றும் ஏனைய பயன்பாட்டு மென்பொருள் தொடர்பான விவரப் பரிமாற்றம் செய்துகொள்ளும் புரவன் கணினிகளுக்கிடையேயும் நடைபெறும் தரவு தொடர்புக்குரிய செந்தரக்கட்டுப்பாடுகளை இது குறிக்கிறது.

cgi-bin : சிஜிஐ-பின் : Common Gateway Interface-binaries என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஹெச்டீடீபீ வழங்கன் கணினிகளில் சிஜிஐ நிரல்களின் மூலம் இயக்கப்படும் புறநிலைப் பயன்பாடுகள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கோப்பகம் (directory).

CGI script : சிஜிஐ உரைநிரல்.

. ch : . சிஹெச் : இணைய தளங்களில் சுவிட்சர்லாந்து நாட்டுத் தளமுகவரியில் குறிப்பிடப்படும் பெரும் புவிப்பிரிவு களப்பெயர்.

Chad : காகிதத் துண்டு : சேமிப்புச் சாதனத்தில் துளையிடப்பட்டவுடன் தனியாக விழும் நாடா அல்லது தொடர் எழுதுபொருளில் துளையிட்டவுடன் வெளியே விழும் துண்டுக் காகிதம்.

chain : சங்கிலி : 1. கட்டுகள் மூலம் ஏடுகளை இணைத்தல். கடைசி ஏட்டுக்கும் முதல் ஏட்டுக்கும் இதன் மூலம் இணைப்பு ஏற்படுத்தப்படும். 2. வரிசையாகச் செய்ய வேண்டிய செயல் முறைகள்.

chained file (s) : இணைக்கப்பட்ட கோப்புகள் : ஒவ்வொரு பிரிவு தரவு கட்டமும் அடுத்த ஒன்றுக்கு அழைத்துச் செல்லும் கோப்பு பாயின்டர் எனப்படும் சுட்டுகளைப் பயன்படுத்தி தரவு கட்டங்களை இணைத்துள்ள தரவு கோப்பு.

chained files : சங்கிலியிடப்பட்ட‌ கோப்புகள் : சுட்டுக் கருவிகள் மூலம் தொடராக இணைக்கப்பட்ட தரவு கோப்புகள்.

chained list : சங்கிலியிடப்பட்ட‌ பட்டியல் : ஒவ்வொன்றும் அடுத்து வருவதைக் குறிப்பிடும் பட்டியல், சேமிக்கப்பட்ட அதே வரிசையிலேயே அதைத் திரும்பப் பெறவேண்டிய தேவையில்லை.

chain field : சங்கிலிப் புலம் : சேமிப்புச் சாதனத்தில் அடுத்ததாக சேர்க்கப்படாவிட்டாலும் ஆரம்பப் பதிவேட்டுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு பதிவேட்டில் உள்ள புலத்தின் வரையறை.

chaining : சங்கிலியிடல் : 1. நிரல்கள் அல்லது செயல் முறைகள் அல்லது ஏடுகளை வரிசையாக இணைக்கும் முறை. கணினியின் முதன்மை நினைவகத்தைவிடப் பெரிதான நிரல்களை பகுதி பகுதியாகப் பிரித்து செயல்படுத்துதல். இதில் பல சிறிய பணிக்கூறுகளாக (modules) உருவாக்கப் பட்டு அவை கணினியில் ஏற்றப்பட்டு வரிசையாக செயல்படுத்தப்படும்.

chaining search : சங்கிலிமுறைத் தேடல் : பதிவேட்டில் உள்ள முகவரிகளைப் பயன்படுத்தி, ஒரு கோப்பில் தரவு தேடும் நுட்பம். இதில் சங்கிலி முறையில் ஒவ்வொரு பதிவேடும் அடுத்த பதிவேட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

chaining printer : சங்கிலி அச்சுப் பொறி : அச்சிடும் இடங்களில் செங்குத்தாகச் சுற்றும் சங்கிலியில் எழுத்துகளை அமைத்துள்ள அச்சுப் பொறி, அச்சுக் சங்கிலியில் அமைக்கப்பட்டுள்ள எழுத்துகளின் மீது ஒரு அச்சு சுத்தி அடிப்பதன் மூலம் காகிதத்தில் அச்சிடுகிறது.

chain printing : சங்கிலி அச்சுப்பதிவு.

Challenge Handshake Authentication Protocol : சேப் : (CHAP) : பீபீபீ (ppp - point to point protocol) நெறிமுறை வழங்கன் : கணினிகளில் இணைப்பு ஏற்படுத்திக் கொள்பவரின் அடையாளத்தை இணைப்பு ஏற்படுத்தும் போதோ அல்லது அதன்பிறகோ அடையாளம் காண்பதற்காகப் பயன்படுத்தப்படும் சான்றுறுதி நெறிமுறைத் திட்டமுறை.

chamfer : சமன் விளிம்பு : இரண்டு சந்திக்கும் கோடுகளுக்கு இடையில் சமன்படுத்தப்பட்ட விளிம்பு.

change : மாற்று.

change agent : மாற்ற உதவியாளர் : ஒரு நிறுவனத்தின் மாற்றத்திற்கு எதிர்ப்பு ஏற்படின் அதைச் சமாளிக்கும் முறைமைப் பகுப்பாய்வாளர் (System Analyst).

change all : அனைத்தும் மாற்று.

change directory command : கோப்பக மாற்று ஆணை : டாஸ், யூனிக்ஸ் முறைகளில் செயல்படும் கட்டளை.

change dump : மாற்றுத் திணிப்பு : முன்பு பதிவு செய்த நிகழ்வினை அடுத்து ஏற்பட்ட மாற்றங்கள் பற்றிய நினைவகத்தின் அனைத்து தன்மைகளையும் வெளியிடல்.

change file : மாற்றக் கோப்பு : மாற்றப்பட்ட தரவு கோப்பு. தலைமைக் கோப்பைப் புதுப்பிக்கப் பயன்படும் செயல் பரிமாற்றக் கோப்பு.

change of control : கட்டுப் பாட்டு மாற்றுகை.

channel : இணைப்பு : வழி : தடம்; அலைவரிசை : 1. இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட முனைகளை இணைக்கும் மின்சார அல்லது மின்னணு தரவு பயணிக்கும் பாதை. 2. துணைச் சாதனங்களை கணினியுடன் இணைக்கும் தரவு தொடர்பு பாதை.

channel adapter : தடத் தகவி : பல்வேறு வன்பொருள் சாதனங்களின் வழிகளிடையே தரவு தொடர்பினை ஏற்படுத்தும் சாதனம்.

channel capacity : தடக் கொள்ளளவு/கொள்திறன்; தட வேகம்; தட இணைப்புத் திறன் : ஒரு தரவு பரிமாற்றத் தடத்தின் வேகம் அது ஒரு வினாடி நேரத்தில் எத்தனை துண்மிகளை (bits) அல்லது எத்தனை பாடுகளை (bauds) அனுப்பி வைக்கிறது என்ற அடிப்படையில் அளக்கப் படுகிறது.

channel command : இணைப்புக் கட்டளை : ஒரு உள்ளீட்டு/வெளியீட்டு இணைப்பைச் செயல்படுத்தும் கட்டளை.

channel, communication : தரவு தொடர்புத் தடம்.

channel emitter : தட ஒளிர்வு; தட உமிழி.

channel guide : தட வழித் துணை.

channel hop : தடத் தாவல் : இணையத்தில் தொடர் அரட்டையில் (IRC) ஈடுபட்டுள்ளவர் ஒர் அரட்டைத் தடத்திலிருந்து இன்னொரு தடத்திற்கு அடிக்கடி மாறிக் கொண்டிருப்பது.

channel, information : தரவு தடம்.

channel, input/output : உள்ளீட்டு வெளியீட்டுத் தடம்.

channel mар : இணைப்பு அமைபடம் : மிடி (midi) இணைப்புச் செய்திகளுக்குச் சேரவேண்டிய இணைப்புகள், வெளியீட்டுச் சாதனங்கள் மற்றும் ஒட்டு அமைபடங்களைக் குறிப்பிடுகிறது.

channel op : தட நிர்வாகி; தட மேலாளர்; தட இயக்குநர் : channel Opearator என்பதன் குறுக்கம். இணையத் தொடர் அரட்டையில் ஒவ்வொரு தடத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரட்டை உரையாடல்களை ஒருவர் மேற்பார்வை செய்து கொண்டிருப்பார். விரும்பத்தகாத அநாகரிகமான உரையாடலில் ஈடுபடுவோரை அரட்டைத் தடத்திலிருந்து நீக்கிவிட இவருக்கு அதிகாரம் உண்டு.

Channel, peripheral interface : புறச்சாதன இடைமுகத் தடம். channel programme : தட நிரல் : ஒரு அதிவேக வெளிப்புற செயல்பாட்டு ஆணைகளின் தொகுதி. உள்ளீட்டு/வெளியீட்டு இயக்கத்தைத் தொடக்கும் நிரலின் ஆணை. இணைப்பு நிரலைத் தனியாக இணைப்பு செயல்படுத்தும். அதேவேளையில் மற்ற இயக்கங்கள் கணினியால் செய்யப்படும்.

channel, read/write : படி/எழுது தடம்.

channels : தடங்கள், வழிகள்.

character : எழுத்து வகை; வரி வடிவம் : கணினி சாதனத்தில் சேமித்து, செயலாக்கப்படும் ஏதாவது ஒரு குறியீட்டெண், நிறுத்தக் குறியீடு அல்லது வெற்றிடம்.

character-at-a-time printers : ஒரு நேரத்தில் ஒரு எழுத்து அச்சுப் பொறிகள் : தொடர் அச்சுப் பொறிகள் என்று அழைக்கப்படும். ஒரு நேரத்தில் ஒரு எழுத்தினை மட்டுமே அச்சிடும் அச்சுப் பொறிகள்.

character based programme : எழுத்து சார் நிரல்.

character, binary code : இருமக் குறிமுறை எழுத்து.

character cell : எழுத்துக் கலம்; எழுத்துச் சிற்றறை : காட்சித் திரை அல்லது அச்சுப் பொறியில் ஒரு தனி எழுத்தை அமைக்கப் பயன்படும் புள்ளிகளின் அமைப்பு 8x16 எழுத்துச் கலங்களில் 16 கிடைவரிசைகள் இருக்கும். ஒவ்வொரு வரிசையிலும் 8 புள்ளிகள். இப்புள்ளிகளின் இணைப்பின் மூலமே எழுத்து உருவாகிறது.

character checking : எழுத்துச் சரிப்பார்ப்பு : எல்லா எழுத்துகளையும் ஒரு குழு அல்லது புலமாகச் சோதித்து ஒவ்வொரு எழுத்தையும் சரிபார்த்தல்.

character code : எழுத்துக் குறிமுறை : எழுத்துத் தொகுதி ஒன்றைக் குறிப்பிடும் ஒரு எண் குறியீடு.

character data : எழுத்துத் தரவு : எழுத்து அல்லது எழுத்து எண்களால் ஆன விவரம்.

character definition table : எழுத்து வரையறை அட்டவணை : கணினித் திரையில் புள்ளிகளால் ஆன எழுத்துகளையும், துண்மிவரைவு எழுத்து வடிவங்களையும் காண்பிக்க அடிப்படையாக விளங்கும் தோரணிகள் (patterns) அடங்கிய அட்டவணை. கணினிகள் நினைவகத்தில் இந்த அட்டவணையை இருத்தி வைத்துச் செயல்படும்.

character density : எழுத்து அடர்த்தி : சேமிப்புச் சாதனங்களில் தகவல்களின் அடர்த்தி. ஒரு ச. செ. மீ. அல்லது ச. அங்குலத்திற்கு எத்தனை எழுத்துகள் என்பதைக் குறிப்பிடுகிறது.

character device : எழுத்துச் சாதனம் : ஒரு நேரத்தில் ஒரு எழுத்து என்ற அளவில் தரவுகளை அனுப்பிப் பெறும் சாதனம்.

character emitter : எழுத்து ஒளிர்வு; வரிவடிவ உமிழி.

character field : எழுத்துப் புலம் : எழுத்து அல்லது எண், எழுத்துகளைக் கொண்டிருக்கும் தரவு புலம். Numeric field-க்கு எதிர்ச்சொல்.

character fill : எழுத்து நிரப்பு : இடங்களை நிரப்பப் பயன்படும் வெற்றிடம் அல்லது பிற குறியீடுகள்.

character generator : எழுத்து இயற்றி; எழுத்து உருவாக்கி : ஒரு திரை அல்லது அச்சுப் பொறியில் எண் அல்லது எழுத்துகளை ஏற்படுத்தும் மின்சுற்று.

character graphics : எழுத்து வரைகலை : அகர வரிசை எழுத்துகளைப் போல வரைகலையை உருவாக்க சிறப்புக் குறியீடுகளை ஒன்றாகக் கோத்தல். சான்றாக, தொடரும் எழுத்து வரைகலையினைப் பயன்படுத்தி படிவங்கள், வரைபடம் மற்றும் எளிய வரைகலைகள் அச்சிடப்படுகின்றன. ஆஸ்கி (ASCII) எழுத்துகளின் பகுதியாக இவை அமைகின்றன.

character image : எழுத்துப் படிமம்; எழுத்து உருக்காட்சி : ஓர் எழுத்தின் வடிவில் ஒழுங்கமைக்கப்படும் துண்மிகளின் (பிட்) தொகுப்பு. ஒவ்வொரு எழுத்தின் உருவமும் செவ்வக வடிவத்தில் அமைந்த கட்டங்களுக்குள் அடங்கியுள்ளது. ஓரெழுத்தின் உயரமும் அகலமும் அதன் மூலமே நிர்ணயிக்கப்படுகின்றன.

characteristic : பண்பியல்புகள்.

characater layout : எழுத்து உருவரை.

character, least significant : குறை மதிப்பெழுத்து.

character machine : எழுத்து எந்திரம் : ஒரு பைட்டை ஓர் எழுத்தாகக் கையாளும் எந்திரத்தைக் குறிப்பிடுகிறது.

character map : எழுத்து அமை படம் : காட்சித்திரையில் உள்ள கட்டங்களின் தொகுதி. இதில் உள்ள ஒவ்வொரு கட்டமும் ஒரு எழுத்து, எண் நிறுத்தக் குறியீடு அல்லது சிறப்பு எழுத்தைக் குறிப்பிடுகிறது.

Character mode terminal : எழுத்துப் பாங்கு முனையம்.

character modifier : எழுத்து மாற்றமைப்பி.

character, numeric : எண்வகை எழுத்து.

character oriented : எழுத்து அடிப்படையிலான.

character pattern : எழுத்துத் தோரணி.

character pitch : எழுத்து இடைவெளி : ஒரு வரியில் ஒரு அங்குலத்திற்கு இத்தனை எழுத்து என்று குறிப்பிடுவது.

character printer : எழுத்தச்சுப் பொறி : 1. ஒரு நேரத்தில் ஒரு எழுத்தை அச்சடிக்கும் அச்சுப்பொறி. வழக்கமாகப் பயன்படுத்தப்படும் புள்ளியணி அச்சுப்பொறியும், டெய்ஸி-சக்கர அச்சுப்பொறியும் எடுத்துக் காட்டுகள். வரி அச்சுப்பொறி, பக்க அச்சுப்பொறி ஆகியவற்றோடு ஒப்பிட்டு அறிக. 2. வரைகலைப் படங்களை அச்சிடவியலாத புள்ளியணி அச்சுப்பொறிகளையும், டெய்ஸி சக்கர அச்சுப்பொறிகளையும், லேசர் அச்சுப்பொறிகளையும்கூட இச்சொல் குறிக்கிறது. இத்தகைய அச்சுப்பொறி கணினியிலிருந்து எழுத்து வடிவிலான விவரங்களைப் பெற்று அப்படியே எழுத்து வடிவில் அச்சிடும். வரைகலை அச்சுப்பொறியோடு ஒப்பிட்டு அறிக.

character reader : எழுத்துப் படிப்பி.

character reader magnetic ink : காந்த மை எழுத்துப் படிப்பி.

character recognition : எழுத்துணர்தல்; எழுத்தறிதல் : கணினியில் ஓர் எழுத்தை வெவ்வேறு எழுத்துருக்களில் (fonts) வெவ்வேறு பாணிகளில் (styles) (a : த : ஒ) பயன்படுத்துகிறோம். ஒரு தாளில் அச்சிடப்பட்ட எழுத்தை வருடுபொறி மூலம் வருடி கணினிக்குள் செலுத்தும்போது, கணினி அந்த எழுத்தை அடையாளம் கண்டுகொள்வதில் பிழை நேர வாய்ப்புண்டு. பிழையின்றி அறிய வேண்டுமெனில் எழுத்துகள் இந்த வடிவமைப்பில்தான் இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் சில கணினி அமைப்புகளில் உள்ளன. ஆனால் சில கணினிகள், தோரணி ஒப்பீட்டு (pattern matching) தொழில்நுட்ப அடிப்படையில் அமைந்த மென்பொருளின் உதவியுடன்
எழுத்துச் செவ்வகம்

எப்படிப்பட்ட வடிவமைப்பிலுள்ள எழுத்துகளையும் அடையாளம் கண்டுகொள்ளும்.

character rectangle : எழுத்துச் செவ்வகம் : ஒர் எழுத்தின் வடிவத்தை வரைகலை வடிவில் படப்புள்ளிகளால் எடுத்துக் கொள்ளப்படும் செவ்வகப் பரப்பு.

character set : எழுத்துரு தொகுதி.

characters per inch : ஓர் அங்குலத்தில் எழுத்தெண்ணிக்கை : ஓர் அங்குல நீளத்தில், குறிப்பிட்ட உருவளவில் (size) அமைந்த, ஒரு குறிப்பிட்ட எழுத்துரு வடிவில் எத்தனை எழுத்துகள் இடம்பெற முடியும் என்கிற அளவீடு. இந்த எண்ணிக்கை எழுத்து வடிவின் இரண்டு பண்பியல்புகளினால் பாதிக்கப்படுகிறது. ஒன்று அதன் புள்ளி (பாயின்ட்) அளவு. அடுத்தது, அந்தக் குறிப்பிட்ட எழுத்துருவில் எழுத்துகளின் அகலம். ஒற்றையிட எழுத்துருக்களில் எழுத்துகள் சமமான அகலத்தைக் கொண்டிருக்கும். தகவுப் பொருத்தமுள்ள எழுத்துருக்களில் எழுத்துகளின் அகலம் வேறுபடும். எனவே ஓர் அங்குலத்தில் எத்தனை எழுத்துகள் என்பது சராசரியாகக் கனக்கிடப்படும். ஓர் அங்குலத்தில் எழுத்துகள் என்று பொருள்படும் character per inch என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர் சிபீஐ (CPI) எனப்படுகிறது.

character space : எழுத்து இடவெளி.

characters per second : ஒரு நொடிக்கு இத்தனை எழுத்துகள் : குறைந்த வேக தொடர் அச்சுப் பொறிகளின் வெளியீட்டை அளக்கும் அலகு. CPS என்று சுருக்கிக் கூறப்படுகின்றது.

characters, special : சிறப்பு எழுத்துகள்.

character string : எழுத்துச் சரம் : எழுத்து-எண் அல்லது இரண்டும் கொண்ட சரம். character style : எழுத்தின் பாணி; எழுத்தின் அழகமைவு : தடித்த எழுத்து, சாய்வெழுத்து, அடிக் கோட்டெழுத்து, சிறிய எழுத்து, பெரிய எழுத்து என எழுத்துகளின் பாங்கு மாறுபடுகிறது. எழுத்துரு (font) என்பதையும் எழுத்தின் பாங்காகச் சேர்ப்பது, இயக்க முறைமையையும் அந்தக் குறிப்பிட்ட மென்பொருளையும் சார்ந்ததாகும்.

character template : எழுத்துப் வார்ப்படம் : மின்னணு ஒளிக்கற்றை காட்சித் திரையில் எண்ணெழுத்துகளாக மாற்றித் தரும் ஒரு சாதனம்.

character terminal : எழுத்து முனையம் : வரைகலை திறனில்லாத காட்சித் திரை.

character type field : எழுத்து வகைப் புலம்.

character user interface : எழுத்து வழி பயனாளர் இடைமுகம்; எழுத்தமைப் பணிச் சூழல் : சியுஐ - Character User Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். வெறும் எழுத்துகளை மட்டுமே திரையில் காட்டவல்ல பயனாளர் இடைமுகம், கணினிப் பணிச்சூழல். வரைகலைப் பணிச்சூழலுடன் ஒப்பிட்டு அறிக.

character view : எழுத்துத் தோற்றம்.

Charactron : கேரக்ட்ரான் : திரையில் எழுத்து அல்லது எண் எழுத்துகளையும், சிறப்பு குறியீடுகளையும் காட்டும் சிறப்பு வகை எதிர்மின் கதிர்க் குழாய்.

charge : மின்னேற்றம் : ஒரு பொருளில் உள்ள சமநிலைப்படுத்தப்படாத மின்சக்தியின் அளவு.

charge back systems : மின் கட்டண அமைப்புகள் : இறுதிப் பயனாளர் துறைகளுக்கு செலவுகளை ஒதுக்கீடு செய்யும் முறை. பயன்படுத்திய தரவு அமைப்பு மூலாதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் செலவின் மதிப்பீடு செய்யப்படுகிறது.

charge card : மின்னூட்ட அட்டை : 286 பீ. சி. வகைகளை உற்பத்தி செய்யும் ஆல் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் வன்பொருள் நினைவக மேலாளர். 286 சிப்புவை வெளியே எடுத்து மின்னூட்ட அட்டையில் பொருத்தி அதை துளையில் பெருத்தலாம்.

Charge Coupled Device (CCD) : மின்னூட்டப் பிணைப்புச் சாதனம் (சிசிடி). charges magnetically : காந்த‌ முறை மின்னூட்டம்.

Charles Babbage Institute . சார்லஸ் பாபேஜ் இன்ஸ்டிடியூட் : வரலாற்றுக் கண்ணோட்டத்தில் தரவுப் புரட்சியை ஆராய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட நிறுவனம். தகவலின் வரலாறு மற்றும் தொன்மைப் பொருள்கள் பற்றிய ஆராய்ச்சிகளுக்கான மைய நிறுவனமாகத் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு.

chart : நிரல் படம்; வரைபடம் : செங்குத்தான அல்லது கிடைமட்டமான கோடுகளாகவோ, அல்லது பட்டையாகவோ வட்டப் படமாகவோ, தரவுவை சிறுசிறு துண்டுகளாகப் பிரித்து படமாக அமைத்துக் காட்டுதல்.

chart chassis நிரல்பட அடிக்கட்டகம் : ஒர் உலோகச் சட்டம். இதன் மீது கம்பியிழுத்தல், துளைகள் மற்றும் பிற மின்னணு தொகுப்புகளைப் பொருத்த முடியும்.

chart of accounts : கணக்குகளின் நிரல்படம் : பொதுப் பேரேடு கணக்கீட்டு அமைப்பில் குறிப்பிட்ட தலைப்புகள் அல்லது கணக்குகளின் எண்ணிக்கை.

chart options : நிரல்பட விருப்பத் தேர்வுகள்.

chart recorder : நிரல்பட பதிவி : பதிவேடு வைக்கும் சாதனம். பேனாவை வலது அல்லது இடது புறமாகத் திருப்பி அடியிலிருக்கும் காகிதத்தில் வரைபடங்கள் வரைவது.

chart, system : முறைமை நிரல்படம்.

chart type : நிரல்பட வகை.

chassis : அடிக் கட்டகம்; அடிப் பகுதி : ஒரு மின்னணு சாதனத்திற்கான கம்பிகளை இணைக்கும் வசதி அமைக்கப்பட்டுள்ள உலோக அடிப்பாகம்.

chat : அரட்டை : கணினி வழியாக நடைபெறும் நிகழ்நேர உரையாடல். அரட்டையில் பங்குபெறும் ஒருவர் ஒரு வரியை விசைப் பலகையில் தட்டச்சு செய்து 'என்டர்' விசையை அழுத்தியதும், மறு முனையில் இன்னொருவரின் கணினித் திரையில் அச்சொற்கள் தெரியும். அதற்குரிய பதிலுரையை அவரும் தட்டச்சு செய்து அனுப்பலாம். இவ்வாறு உரையாடல் தொடரும். நிகழ் நேரச் சேவைகள் வழங்கும் கணினிப் பிணையங்களில் பெரும்பாலும் அரட்டை வசதி உண்டு. இணையத்தில் ஐஆர்சி (IRC) என்பது தொடர் அரட்டைச் சேவையாகும். தற் போது இணையத்தில் குரல் அரட்டை (Voice Chat) வசதியும் உள்ளது.

தேர்வுசெய் பெட்டி

chat mode : அரட்டைப் பாங்கு : தரவு தொடர்பு முறை பயன்படுத்துபவர்கள் இதில் செய்திகளை ஒருவருக்கொருவர் தட்டச்சு செய்து பெறலாம். ஒவ்வொரு விசையை அழுத்தியவுடன் அது அனுப்பப்பட்டு விடும்.

chat page : அரட்டைப் பக்கம்.

chat room : அரட்டை அரங்கம்.

cheapernet : மலிவுப்பிணையம்.

check : சரிபார்ப்பு.

check, arithmatic : கணக்கீட்டுச் சரி பார்ப்பு.

check bit : சரிப்பார்ப்பு பிட்; சரி பார்ப்புத் துண்மி : சமநிலைத் துண்மி போன்ற‌ இரும எண் சோதனை இலக்கம்.

check box : தேர்வு செய் பெட்டி : ஆம் அல்லது இல்லை என்னும் பதிலைப் பயனாளரிடமிருந்து பெறப் பயன்படுத்தப்படும் ஒரு சிறிய சதுரப் பெட்டி. சிறிய பெட்டியில் எக்ஸ் அல்லது டிக் குறியீடு போட்டால் அதைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதை உணர்த்தும்.

check character : சரிபார்ப்பு எழுத்து : ஒரு தரவு தொகுதியின் இறுதியில் சேர்க்கப்படும் எழுத்து. சோதனை செய்யப்படும்போது இதைப் பயன்படுத்துகிறோம்.

check digits : சரிபார்ப்பு இலக்கங்கள் : எண் வடிவ தரவு தொகுதியை அனுப்பும்போது அதனுடன் சேர்க்கப்படும் ஒன்று அல்லது இரண்டு இலக்கங்கள். தரவு எழுதும்போதோ அல்லது அனுப்பும் போதோ ஏதாவது தவறு ஏற்பட்டால் பிழை என்பதற்கான அடையாளம் தோன்றும்.

checked objects : தேர்வு செய்த பண்பு.

checked property : சரிபார்ப்புப் பொருள்.

check, even parity : இரட்டைச் சமன் சரிபார்ப்பு.

check indication : சரிபார்ப்புப் அறிகுறி : ஒரு பதிவகத்தில் 1 அல்லது 0 துண்மியை அமைத்து அதில் பிழை ஏற்பட்டதா இல்லையா என்று குறிப்பிடச் செய்தல்.

check indicator : சரிபார்ப்புப் அறிகுறி : ஒரு சாதனத்தில் ஒலி அல்லது ஒளி மூலம் அதன் இயக்கத்தில் பிழை அல்லது கோளாறு ஏற்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிடுதல்.

check now : இப்போது சரிபார்.

check, odd parity : ஒற்றைச் சமன் சரிபார்ப்பு.

check out : சரிபார்த்து அனுப்புகை.

check, parity : சமன் சரிபார்ப்பு.

check plot : சரிபார்ப்பு வரைவு : இறுதி வெளியீட்டை அளிப்பதற்கு முன் ஒளிச் சோதனை மற்றும் திருத்துவதற்காக ஒளிக் காட்சிச் சாதனம் தானாக உருவாக்கும் ஒரு வரைவு.

check point : சரிபார்ப்பிடம் : கையால் இயக்கும்போதோ அல்லது கட்டுப்பாட்டுச் செயல் முறையிலோ ஒரு நிரலைத் தடுத்து நிறுத்தும் குறிப்பிட்ட இடம். பிழை தீர்க்கும் நிரல்களில் உதவுவதற்காக பெரும்பாலும் பயன்படுத்தப்படும்.

checkpoint / restart : சரிபார்ப்பிடம் / மீளியக்கம் : கணினி அமைப்பின் கோளாறிலிருந்து வரும்முறை. கணினி நினைவகத்தில் தரவு பதிவு செய்யப்படும்போது அங்கங்கே வைக்கப்படும் புள்ளி. கணினியில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால், கடைசி சரிபார்ப்பிடத்திலிருந்து மீண்டும் துவக்கலாம். கடைசி சரிபார்ப்பிடத்திற்குப் பிறகு துழைக்கப்பட்டவை எல்லாம் தொலைந்து போய்விடும்.

check problem : சரிபார்ப்புச் சிக்கல் : ஒரு கணினி அல்லது கணினி நிரல் சரிவர இயங்குகிறதா என்பதை முடிவு செய்வதற்காக செயற்கையாக உருவாக்கப்பட்ட சிக்கல்.

check register : சரிபார்ப்புப் பதிவேடு. check spelling : எழுத்துப் பிழையறி.

check sum : சரிபார்ப்புக் கூட்டுத்தொகை : சோதனைக்காகப் பயன்படுத்தப்படுகின்ற துண்மிகள் அல்லது எண்களின் கூட்டுத் தொகை. தானாக ஏற்படுத்தப்படும் விதிகளின்படி கூட்டல் நடைபெறுகிறது. தரவு சரியாக இருக்கிறதா என்பதை சோதிக்கப் பயன்படுகிறது.

check, validity : செல்லுபடிச் சரிபார்ப்பு.

chemical collissions : வேதி மோதல்கள் : பிபிசி அக்கார்ன் அல்லது இந்திய எஸ். சி. எல் யூனிக்கார்ன்-க்கான ஒரு கல்வி மென்பொருள். வரைகலை முறையில் வேதி கலவைகளில் ஏற்படும் எதிர் வினைகளின் பல்வேறு தன்மைகளை இது கூறும்.

chicken-and-egg-loop : கோழியா முட்டையா மடக்கு.

chicklet keyboard : சுண்டு விசைப்பலகை : விரைவாகத் தட்டச்சு செய்யமுடியாத அளவில் சிறிய, சதுர விசைகள் உள்ள விசைப்பலகை.

chief information officer : தலைமை தரவு அலுவலர் : நீண்ட கால தரவு திட்டமிடல் மற்றும் உத்தியில் கவனம் செலுத்தி ஒரு நிறுவனத்தின் தரவு தொழில் நுட்பப் பணிகள் அனைத்தையும் மேற்பார்வையிடும் ஒரு மூத்த நிர்வாகப் பதவி.

chief programmer : தலைமை நிரலர் : ஒரு நிரலர் குழுவுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டவர். திட்டம் முழுவதும் வெற்றிகரமாக முடிக்கப்பட வேண்டும் என்பதற்காக முழுப் பொறுப்பையும் ஏற்றிருப்பவர்.

chief programmer team : தலைமை நிரலர் குழு : கணினி நிரலாக்கத்துக்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. ஒரு தலைமை நிரலர், ஒரு மாற்று நிரலர், ஒரு நிரலர் நூலகர் / செயலாளர் உள்ளிட்ட குழுவின் தலைமையை ஒரு தொழில்நுட்ப நிரலர் ஏற்றிருப்பார். தேவைப்பட்டால், இரண்டு அல்லது மூன்று கூடுதல் உறுப்பினர்கள் சேர்க்கப்படலாம் அல்லது வல்லுநர்கள் ஆலோசனை பெறலாம். நிரலர் எழுதுவதை ஒரு தனியார் கலையாகக் கருதாமல் அதை ஒரு பொறியியல் தொழிலாக மாற்றுவதும், திறமைமிக்க படைப்பாளி தன் படைப்புத் திறனில் கவனம் செலுத்தி ஊக்கம் அளிப்பதும் இதில் முக்கிய கோட்பாடுகளாகும். child process : துணைச் செயலாக்கம் : ஒரு கணினி செயலாக்கத்தின் கட்டுப்பாட்டில் இன்னொரு செயலாக்கத்தைத் தொடங்குதல். ஒரு நிரலின் கட்டுப்பாட்டில் இன்னொரு நிரலை இயக்குதல்.

child programme : துணைநிலை நிரல் : ஒரு நிரலின் உள்ளேயே இயக்கப்பட்டு, அதன் இயக்கம் தீர்ந்தவுடன் தனியாக செயல்படும் ஒரு நிரல். முதன்மை நிரலினால் அழைக்கப்பட்டு நினைவகத்தில் ஏற்றப்படும் இரண்டாம் நிலை அல்லது துணைநிலை நிரல்.

child record : சேய்ஏடு; கீழ் நிலை ஏடு : வரிசைக்கிரம தரவுகள் அமைப்பில் இரண்டு அடுத்தடுத்த நிலையிலுள்ள பதிவேடுகளில் கீழ்நிலை ஏடு. ஏற்கெனவே இருக்கும் பெற்றோர் ஏடு ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பதிவேடுகளின் உள்ளடக்கங்களைச் சார்ந்து உருவாக்கப்படும் தரவு பதிவேடு.

chimes of doom : சாவு மணி; இறுதி மணியோசை : மெக்கின்டோஷ் கணினிகளில், மிகமோசமான பழுது ஏற்பட்டு செயல்படாத நிலையேற்படும்போது தொடர்ந்து மணியொலிக்கும்.

சில்லு (அ) சிப்பு

chip : சில்லு; சிப்பு : சிப்பு ஏராளமான மின்னணுச் சுற்றுகளைக் கொண்டுள்ள ஒரு சிறிய சாதனம். ஒருங்கிணைக்கப்பட்ட மின்சுற்றுகள் வடிவத்தில் மின்னணு பாகங்கள் மெல்லிய சிலிக்கான் தகட்டின்மீது வைக்கப்படுகின்றன. கணினியை உருவாக்குபவை சிப்புகளே. கணக்கிடல், நினைவகம், கட்டுப்பாடு போன்ற பல்வேறு பணிகளை அவை செய்கின்றன.

chipcard : சிப்பு அட்டை; சில்லு அட்டை.

chip carrier : சிப்பு சுமப்பி : சிப்பு செய்வதற்கு ஈயம் போன்ற உலோகத்தில் அதன் அச்சை ஏற்றுதல். எல்லா திசைகளிலும் இணைப்பிகள் உள்ள சிப்புப் பொதிவுகள். chip family : சிப்புக் குடும்பம் : தொடர்புடைய சிப்புகளின் குழு. முதலாவது சிப்புவிலிருந்து ஒவ்வொரு சிப்பும் உருவாக்கப்படுகிறது.

chipper : சிப்பாக்கி; சில்லு ஆக்கி.

chips : சிப்புகள்; சில்லுகள்.

chip select : சிப்புத் தேர்வு : சிப்புப் பெட்டியிலிருந்து வெளியே வரும் முனை. சிப்புவிற்கோ அல்லது சிப்புவிலிருந்தோ தரவுகளை எழுதுவதையும், படிப்பதையும் இது செயலற்றதாக்கும்.

chip set : சிப்புத் தொகுதி : ஒரு பணியைச் செய்வதற்காக சேர்ந்து இயங்க வடிவமைக்கப்பட்டுள்ள சிப்புகளின் குழு.

chip, silicon : சிலிக்கான் சிப்பு; சிலிக்கான் சில்லு.

choice : தேர்வு : ஒரு டாஸ் (DOS) கட்டளை. அது பயனாளர் விசையழுத்தக் காத்திருக்கிறது. ஆணையின் உள்ளேயே ஏற்றுக் கொள்கிற விசைகளின் பட்டியல் குறிப்பிடப்படுகிறது.

choose : தேர்ந்தெடு : சாளரத்தில் ஒரு செயலைச் செய்வதற்குச் சுட்டி அல்லது விசைப் பலகையை தேர்ந்தெடுப்பது. பட்டியலில் உள்ளபடி கட்டளைகளைத் தேர்ந்தெடுத்து பணிகள் செய்யப்படுகின்றன. பயன்பாடுகளை இயக்க 'ஐக்கான்' (icons) களைத் தேர்ந்தெடுக்கலாம்.

chooser : தேர்பவர் : மெக்கின்டோஷ் மேசை துணைப்பொருள், அச்சுப்பொறி, ஃபைல் சர்வர் அல்லது கட்டமைப்பு மோடம் போன்றவற்றை தேர்ந்தெடுக்க அனுமதிப்பது.

chop : நீக்கு; வெட்டு : தேவைப்படாத தரவுவை வெளியேற்றுதல்.

chorus : குழு ஒலி.

chroma : நிறமி : வண்ணங்களை ஏற்படுத்த உதவும் நீர்மம், நிழல், சாயல் போன்றவை.

chromaticity : நிறப்பொலிமை : வண்ணத்தின் தூய்மை மற்றும் மீதுான்றும் அலைநீளம் இவற்றை அளக்க முடியும் என்பதுடன் பிரகாசம் எவ்வளவாயினும் அதன் நீர்மை மற்றும் சாயலுக்கு ஏற்றதாக அமையும்.

chrominnance : நிறப்பொலிவு : வண்ணத்தைக் கட்டுப்படுத்தும் ஒளிக்காட்சி சமிக்கையின் பகுதிகள்.

chunking : தொகுத்தல் : இரும எண் முகவரிகளை பதினறும இலக்கத்துக்கு மாற்றும் முறை. 0011 1100 என்ற இரும எண்ணை பதினறும முறையில் 3C என்று மாற்றலாம்.

chunking along : தொகுத்துச் செல்லல் : நீண்ட நேரம் செல்லும், நம்பிக்கைமிக்க நிரலின் செயல்பாட்டைக் குறிப்பிடும் குழுக் குறிசொல்.

churing : கடைதல்.

churn rate : உதிரும் வீதம்; குறையும் வீதம், ஒதுங்கு வீதம் : செல்பேசி பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், நிகழ்நேர வணிகத்தில் ஈடுபடும் வாடிக்கையாளர்கள் மற்றும் இது போன்றோர் அடிக்கடி தங்கள் சந்தாவைப் புதுப்பிக்காமல் விட்டுவிடுவர். இதனால் அக்குறிப்பிட்ட நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 2 முதல் 3 விழுக்காடு வரை அவ்வப்போது குறைந்து விட வாய்ப்புண்டு. இந்த எண்ணிைக்கை அதிகமாகும் எனில் அந்நிறுவனத்துக்கு புதிய செலவுகளை உருவாக்கும். விளம்பரம் மற்றும் பல நடவடிக்கைகள் மூலம் புதிய வாடிக்கையாளர்களை உருவாக்க நிறையப் பணம் செல வழிக்க வேண்டும்.

. ci : . சிஐ : இணைய தள முகவரியில் ஐவரி கோஸ்ட் நாட்டைச் சேர்ந்த தளத்திற்கான பெரும் புவிபிரிவுக் களப் பெயர்.

CICS : சிஐசிஎஸ் : வாடிக்கையாளர் தகவல் கட்டுப்பாட்டு அமைப்பு எனப் பொருள்படும் Customer Information Control System என்பதன் குறும்பெயர். தொலைவிலிருந்து செயலாக்கம் புரியும் முனையங்களில் அதிகம் பயன்படுவது.

CIM : சிஐஎம் : கணினி உள்ளீட்டு நுண்படலம் எனப் பொருள்படும் Computer Input Microfilm என்பதன் குறும்பெயர்.

cipher : சைஃபர்; மறையெழுத்து : கணினி பாதுகாப்பாகத் தகவலைக் குறிப்பிட உதவும் இரகசிய முறை.

cipher system : மறையெழுத்து முறை.

cipher text : மறையெழுத்து உரை.

CIPS : சிஐபீஎஸ் : கனடியத் தரவு செயலாக்க கழகம் எனப் பொருள்படும் Canadian Information Processing Society என்பதன் குறும் பெயர்.

circle : வட்டம் : ஒளிக்காட்சி முகப்பில் வட்டங்களை வரைவதற்கான பேசிக் / கியூபேசிக்கில் உள்ள ஒரு கட்டளை.

circuit : மின்சுற்று; மின் இணைப்பு : 1. மின்னணுக்
மின்சுற்று அட்டை

களைக் கட்டுப்பாடான முறையில் செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட பாதை 2. மின் சக்தி செல்லக்கூடிய கடத்திகள் மற்றும் அது தொடர்பான மின்சாதனங்களின் அமைப்பு 3. இரண்டு அல்லது கூடுதல் இடங்களிடையே ஏற்படும் தரவு தொடர்பு இணைப்பு.

circuit analyzer : மின்சுற்று பகுப்பாய்வி : ஒரு மின்னணு மின்சுற்று செல்லத்தக்கதா என்று சோதித்துக் கூறும் சாதனம்.

circuit, AND : உம்மை மின்சுற்று.

circuit board : மின்சுற்று அட்டை : தொடர்ச்சியான நுண் சிப்புகளையும், பல்வேறு மின்னணுச் சாதனங்களையும் ஏற்றிப் பொருத்தக்கூடிய அட்டை. அட்டையின் மேற்பரப்பில் மின்சுற்று அமைப்புகள் அச்சிடப்படுகின்றன. printed circuit board என்றும் அழைக்கப்படுகிறது.

circuit breaker : மின்சுற்று துண்டிப்பி : அதிக மின்னோட்டம் ஏற்படுவதை உணர்ந்து மின்சுற்றைத் துண்டிக்கும் பாதுகாப்புச் சாதனம். ஃப்யூஸ் போல் அல்லாது, இதை மீண்டும் சரி செய்ய முடியும்.

circuit capacity : மின்சுற்றுக் கொள்திறன் : ஒரே நேரத்தில் ஒரு மின்சுற்று கையாளக் கூடிய வழித் தடங்களின் எண்ணிக்கை.

circuit card : மின்சுற்று அட்டை.

circuit, control : கட்டுப்பாட்டு மின்சுற்று.

Circuit Data Services : மின்சுற்று தரவு சேவைகள் : மின்சுற்று தொடர்பிணைப்புத் தொழில்நுட்ப அடிப்படையில், மடிக்கணினி மற்றும் செல்பேசி வாயிலாக அதிவேக தரவு பரிமாற்றத்தை வழங்குதல்.

circuit diagram : மின்சுற்று வரிப் படம்.

circuit elements : மின்சுற்று உறுப்புகள்; மின் இணைப்புக் கூறுகள்.

circuit, leastable : ஈருறுதி மின் சுற்று.

circuit, NOR : இல் அல்லது மின்சுற்று.

circuitry : மின்சுற்றுத் தொகுதி : அமைப்புகளுக்கு உள்ளேயும், இடையிலும் ஏற்படும் இணைப்புகளை விவரிக்கும் மின்சுற்றுகளின் தொகுதி.

circuit switching : மின்சுற்று இணைப்பாக்கம் : ஒரு மின்சுற்றின் அகலப் பாதையை, இணைப்பு நிறுத்தப்படும்வரை செயல்படுத்தும், தரவு தொடர்பு கட்டமைப்பின் இரண்டு முனைகளுக்கிடையிலான இணைப்பு.

circuit, virtual : மெய்நிகர் மின்சுற்று.

circular list : வட்டப் பட்டியல் : சுழல் பட்டியல் : தொடுக்கப்பட்ட பட்டியல். பெரும்பாலும் ஒன்றன்பின் ஒன்றாய்த் தொடுப்பது. இதில் கடைசி உறுப்புக்கும் முதல் உறுப்புக்கும் இணைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும். Ring (வளையம்) என்றும் அழைக்கப்படுகிறது.

circular queue : வட்டச் சாரை; சுழல் சாரை : தரவுகளை ஒரு முனையில் நுழைத்து மற்றொன்றில் எடுக்கின்ற ஒரு வகை தரவுக் கட்டமைப்பு. சாரையின் இருபுறமும் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும். சுட்டுகள் இரண்டும் நடப்பின் முன் பகுதியையும், பின் பகுதியையும் கவனித்துக் கொண்டே இருக்கும்.

circular reference (CIR) : சுழல் குறிப்பு : விரிதாளில் ஒரு கலத்தில் அதனுடைய முகவரியையே வாய்பாட்டின் பகுதியாகப் பயன்படுத்தும் வாய்பாடு. சான்றாக கலம் IV25-இன் வாய்பாடு @sum (IV12 : IV25) என்று படிக்கப்படும். இது தன்னைத்தானே தொடர்ந்து கூட்டிக் கொண்டு மிகப்பெரிய எண்ணை உருவாக்கும்.

circular shift : சுழல் நகர்வு : ஒரு முனையிலிருந்து வெளியேற்றப்படும் துண்மிகள் அல்லது எழுத்துகள் பதிவகத்தின் எதிர் முனையில் சென்று சேரும்படி இடமாற்றும் செயல்

"https://ta.wikisource.org/w/index.php?title=கணினி_களஞ்சிய_அகராதி-2/I&oldid=1085132" இலிருந்து மீள்விக்கப்பட்டது