கணினி களஞ்சிய அகராதி-2/J

விக்கிமூலம் இலிருந்து

முறை. End around shift என்றும் சொல்லப்படுகிறது.

circulating register : சுழற்சிப் பதிவகம்.

circulations : சுழற்சிகள்.

CISC architecture : சிஸ்க் கட்டுமானம் : சிக்கல் துணைத் தொகுதி கணிப்பணிக் கட்டுமானம் என்று பொருள்படும் Complex Instruction Set Computing Architecture என்பதன் குரும்பெயர்.

CIU : சிஐயு : கணினி இடைமுக அலகு எனப் பொருள்படும் Computer Interface Unit என்பதன் குறும்பெயர்.

. ck : . சிகே : இணைய தள முகவரியில், குக் தீவின் தளங்களைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

. cl : . சிஎல் : (cl) : இணைய தள முகவரியில், சிலிநாட்டுத் தளங்களைக் குறிக்கும் பெரும் புவிபிரிவுக் களப் பெயர்.

cladding : மூடுதல் : ஒளி இழைகளில், ஒளி இழை சாதனத்தின் இரண்டாவது அடுக்கு, ஒளி அலையை அந்த சாதனத்தின் மையப் பகுதிக்கு அனுப்பும் முறை.

clamping ring : பிடிக்கும் வளையம் : வளையத்திற்குள் நெகிழ் வட்டைத் தள்ளிவிடும் 5. 25" நெகிழ்வட்டு இயக்கக் மையக் கூம்பின் ஒரு பகுதியாகவே இது இருக்கும்.

clari newsgroups : கிளாரி செய்திக் குழுக்கள் : இணையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு முக்கிய செய்திக்குழு. கிளாரி நெட் செய்திக் குழுவை தரவு தொடர்பு நிறுவனம் பராமரித்து வருகிறது. ராய்ட்டர்ஸ் (Reutuers), யுனைட்டட் பிரஸ் இன்டர்நேஷனல் ஒயர் சர்வீசஸ், ஸ்போர்ட்ஸ் டிக்கர், காமர்ஸ் பிசினஸ் டெய்லி மற்றும் பிற செய்தி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட செய்திக் கட்டுரைகளை இதில் காணலாம். மற்ற செய்திக் குழுக்களைப் போலன்றி, கிளாரிநெட் செய்திக் குழுவில் உறுப்பினராகக் கட்டணம் உண்டு. இச்சேவையைக் கட்டணம் செலுத்தி வாங்கியுள்ள இணையச் சேவை நிலையங்கள் மூலமாகவே இச்செய்திக் குழுவை அணுக முடியும்.

clarion : கிளாரியன் : கிளாரியன் மென்பொருள் கார்ப்பரேஷனின் பீ. சி. பயன்பாட்டு உருவாக்க மென்பொருள் Professional Development என்பதே முக்கிய தயாரிப்பு. இதில் பாஸ்கல் போன்ற நிரலாக்க மொழியும், டிபி எம்எஸ் மற்றும் புரோட்டோ டைப்பிங் ஜெனரேட்டரும் அடக்கம். Personal Developer என்பது நிரலர் அல்லாதவர்களுக்கு.

Claris CAD : கிளாரிஸ் கேட் : கிளாரிஸ் கார்ப்பரேஷனிடமிருந்து மெக்கின்டோஷ-க்காக உருவான முழுத்தன்மையுள்ள இரு பரிமாண "கேட்" மென் பொருள் பயன்படுத்துவதற்கு எளிது.

CLASS1 : கிளாஸ்1 : Computer Literacy And School Studies Project என்பதன் குறும்பெயர். இந்திய அரசின் NCERT நடத்திய திட்டப்பணி.

class2 : கிளாஸ்2 : இனக்குழு வகுப்பு : பொருள்நோக்கு நிரலாக்கத்தில், தரவுக் கூறுகளும், அவற்றை கையாளும் வழிமுறைகளும் அடங்கிய ஒரு புதிய தரவினத்தின் வரையறை, ஓர் இனக் குழுவைச் சார்ந்த இனப்பொருள்களை உருவாக்கி நிரல்களில் கையாளப்படும்.

class and objects : இனக்குழுவும் இனப் பொருட்களும்.

Class A network : ஏ-பிரிவு பிணையம் : 16, 777, 215 புரவன் (Host) கணினிகள் வரை இணைக்கத்தக்க ஒர் இணையப் பிணையம். ஏ-பிரிவு பிணையங்கள், ஒரு பிணையத்தை அடையாளங்குறிக்க ஐபி (IP) முகவரியின் முதல் எண்மியைப் (பைட்) பயன்படுத்திக் கொள்கிறது. முதல் துண்மியை (பிட்) சுழியாக (0) மாற்றி விடும். புரவன் கணினி கடைசி மூன்று எண்மிகளால் குறிக்கப்படும். ஏ-பிரிவு முகவரியிடல் தற்போது 128 பிணையங்கள்வரை ஏற்றுக் கொள்கிறது. மிகச்சில பிணையங்களையும் ஆனால் அதிக எண்ணிக்கையிலான புரவன் கணினிகளையும் கொண்ட மிகப்பெரிய அரசு மற்றும் கல்வி நிறுவனங்களின் இணைய தளங்களுக்கு ஏ-பிரிவு முகவரிமுறை ஏற்றது.

class category : இனக்குழு வகைப் பிரிவு : பொருள்நோக்கு நிரலாக்கத்தில், குறிப்பிட்ட இனக்குழுக்களின் தொகுப்பு. சில இனக்குழுக்கள் மற்றவற்றுக்கு தெரியும். மற்றவை மறைக்கப்பட்டிருக்கும்.

class hierarchy : இனக்குழுப் படிநிலை; வகுப்பு தொடர்முறை.

classic style : மரபுப் பாணி.

classifications : வகைப்படுத்துதல்கள் : கணினிகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். இலக்கமுறை, ஒப்புமை மற்றும் கலப்பினம். classify : வகைப்படுத்து : தரவுகளை வகை வாரியாகப் பிரித்தல் அல்லது ஒத்த தன்மைகளை உடையனவற்றை ஒரே வகையில் சேர்த்தல்.

classless interdomain routing : பிரிவிலாக் களங்களுக்கிடையே திசைவித்தல் : இணையத்தில் உயர்நிலை திசை செலுத்து அட்டவணைகளின் உருவளவைச் சிறிதாக்க, ஒருங்கிணைப்புச் செயல் தந்திரத்தைப் பயன்படுத்தும் ஒரு முகவரி அமைப்பு முறை. முதன்மை திசைவிகள் (Routers) ஏந்திச் செல்லும் தரவுகளின் அளவைக் குறைக்கும் பொருட்டு, பல்வேறு திசை வழிகள் குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன. இந்தத் திட்ட முறை செயல்பட இதனை ஏற்றுக் கொள்ளும் திசைவித்தல் நெறிமுறைகளைப் பயன்படுத்த வேண்டும். எல்லை நுழை வாயில் நெறிமுறை (Border Gate way Protocol-BGP) யின் பதிப்பு 4 மற்றும் ஆர்ஐபீயின் பதிப்பு 2 (RIPV-2) இவற்றுள் சில. இத்திட்டமுறையின் தலைப்பெழுத்துக் குறும்பெயர் CIDR ஆகும்.

'class library : இனக்குழு நூலகம் : மூன்றாம் நபர்கள் கொடுக்கின்ற பொருள் நோக்கு நிரலாக்கத்துக்கான இனக்குழுக்களின் தொகுப்பு.

class methods : வகுப்பு வழிமுறைகள்; இனக்குழு வழிமுறைகள்.

class module : வகுப்பு கூறு; இனக்குழு கூறு.

class path : வகுப்புப் பாதை; இனக்குழுப் பாதை : ஜாவா மொழியில் நூலக இனக் குழுக்களைச் சேமித்து வைத்துள்ள கோப்பகத்தைக் குறிக்கும்.

class structure : இனக்குழு கட்டமைப்பு : ஒரு அமைப்பின் வரிசை முறை. செங்குத்துக்கோடுகள் இக்குழுக்களையும், ஆரங்கள் இனக்குழுக்களுக்குள் உள்ள உறவு முறைகளையும் காட்டும் வரைபடம். இனக்குழு வரைபடத் தொகுதியின் மூலம் ஒரு கணினி அமைப்பின் வகுப்பு வரைபடத்தைக் குறிப்பிடலாம்.

class variable : இனக்குழு மாறி : ஓர் இனக்குழுவின் பண்பு கூறுகள் ஒரு இனக்குழுவின் மாறிகள் கூட்டாக அதன் வடிவமைப்பை உண்டாக்குகின்றன. ஓர் இனக்குழுவில் உருவாக்கப்படும் அனைத்து இனப்பொருள்களுக்கும் இனக் குழு மாறி பொதுப்பண்பாக விளங்குகிறது.

Claud P. Shannon : கிளாட் பி. ஷானான் : அமெரிக்காவின் எம்ஐடியில் படித்த பட்டதாரி மாணவன். இணைப்பாக்க (ஸ்விட்சிங்) மின்சுற்றுகளின் முதல் தலைமுறையை விவரிக்க பூலியன் தருக்க இயற்கணிதத்தைப் பயன்படுத்தியவர்.

clean boot : தூய‌ இயக்கம் : இயக்க முறைமையின் குறைந்த எண்ணிக்கையிலான கோப்புகளின் துணைகொண்டு கணினியை இயக்கி வைக்கும் முறை. கணினிச் செயல்பாட்டில் ஏற்பட்ட பழுதினைக் கண்டறிய இம்முறை பயன்படுகிறது. கணினியில் செயல்படுத்திய ஒரு குறிப்பிட்ட மென்பொருளின் காரணமாகத்தான் சிக்கல் ஏற்பட்டது என்பதைப் பிரித்தறிய முடியும்.

cleaning disk : தூய்மை வட்டு.

clean install : தூய நிறுவுகை; முழு நிறுவுகை : கணினியில் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள ஒரு மென்பொருளை மீண்டும் நிறுவும்போது, முன்பே நிறுவப்பட்டுள்ள கோப்புகளை நிறுவாமல் விட்டுவிடும். ஒரு மென்பொருள் செயல்பாட்டில் சிக்கல் நேரும்போது, இவ்வாறு மறு நிறுவுகை செய்வது பயன் தராது. முன்னால் நிறுவிய போது இருந்த பயன்பாட்டு அல்லது முறைமைக் கோப்புகள் எதுவும் இல்லாத வகையில் மறுநிறுவுகை செய்ய வேண்டும். இதன் மூலம் குறிப்பிட்ட மென்பொருளினால் ஏற்பட்ட சிக்கல் தீர வாய்ப்புண்டு.

clear room : தூய்மையான அறை : கணினிக் கருவியை உற்பத்தி செய்யப் பயன்படும் பகுதி. இதில் நுழைவதற்குக் கட்டுப்பாடு, சுகாதாரத்திற்குத் தனிக்கவனம், சிறப்பு குளுகுளு வசதி, காற்றைத் துய்மைப்படுத்தும் அமைப்பு போன்றவை அமைந்திருக்கும்.

clear : அழி; துடை : காட்சித் திரையில் உள்ளவற்றைத் துடைக்கும் விசைப் பலகையின் பணி.

clear/delete/remove : அழி/நீக்கு/அகற்று.

clear down : துடைத்தெறி.

clearing : துடைத்தல்; அழிதல்; நீக்குதல் : பதிவகம், சேமிப்பிடம், அல்லது சேமிப்பு அலகுகளில் உள்ள தகவலை வெளியேற்றி பூஜ்யங்கள் அல்லது வெற்றிடங்களால் நிரப்புதல்.

Clear key : துடைக்கும் விசை; விலக்கு விசை : சில விசைப் பகுதிகளில் எண்முறை விசைப் பலகையின் மேல்பக்க இடது மூலையில் உள்ள விசை. நடப்பில் தெரிவு செய்த பட்டியலைத் துடைக்கவோ நடப்பில் தெரிவு செய்ததை நீக்கவோ பயன்படும்.

clear memory : நினைவகம் துடை : குறிப்பிலா அணுகு நினைவகம் (RAM) மற்றும் வன்பொருள் பதிவகங்கள் அனைத்தையும் பூஜ்யம் அல்லது வெற்றிட நிலைக்கு மீண்டும் அமைத்தல். கணினியை 'ரிபூட்' செய்தால் நினைவகம் துடைக்கப்படலாம் அல்லது துடைக்கப்படாமல் போகலாம். ஆனால், கணினியை நிறுத்தி மீண்டும் துவக்கினால் நினைவகம் நிச்சயமாக காலியாகும்.

clear method : துடைப்பு வழிமுறை.

clear outline : சுற்றுக்கோடு நீக்கு.

clear print area : அச்சுப் பரப்பெல்லை நீக்கு.

clear request packet : துடைத்தெறி வேண்டுகோள் பொதி.

click : சொடுக்கு : சுட்டியின் (மெளஸ்) பொத்தானை அழுத்தும் முறை.

clicking : சொடுக்குதல் : சுட்டியின் (Mouse) மேல் பொத்தானை அழுத்துதலைக் குறிப்பிடும் ஒரு சொல்.

click speed : சொடுக்கு வேகம் : பயனாளர் சுட்டியின் மேலுள்ள பொத்தானை அல்லது வேறு சுட்டும் சாதனத்தை முதலாவது தடவை அழுத்தியதற்கும் இரண்டாவது தடவை அழுத்தியதற்கும் இடையிலுள்ள எந்த குறுகியகால இடைவெளி, இரட்டைச் சொடுக்காக (double click) எடுத்துக் கொள்ளப்படுமோ, அந்தக் காலஅளவு, சொடுக்கு வேகம் எனப்படும். இரண்டு ஒற்றைச் சொடுக்குகளாக எடுத்துக் கொள்ள இயலாததாக ஆக்கும் விரைவான கால இடைவெளி.

click stream : சொடுக்குத் தாரை : வலைத்தளம் ஒன்றில் ஒன்றைத் தேடும்போது பயனாளர் செல்லும் வழி. வலைப்பக்கத்தில் செய்யப்படும் ஒவ்வொரு தனித்தனித் தேர்வும் தாரையில் ஒரு சொடுக்கைச் சேர்த்துவிடும். தேவையானதைக் கண்டுபிடிக்க இயலாமல் மேலும் பயனாளர் சொடுக்குத் தாரையில் போவாரானால் அவர் வேறு வலைத் தளத்துக்குத் திசைமாறிச் செல்லக் கூடும். பயன்படுத்தும் போக்குகளை ஆய்ந்தால் வலைத்தளம் உருவமைப்போர் இணக்கமான தள அமைப்புகள், இணைப்புகள், தேடு வசதிகள் போன்றவற்றை வழங்க முடியும்.

client : கிளையன்; வாடிக்கையாளர் : 1. வன்பொருளுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=கணினி_களஞ்சிய_அகராதி-2/J&oldid=1085135" இலிருந்து மீள்விக்கப்பட்டது