கணினி களஞ்சிய அகராதி-2/K

விக்கிமூலம் இலிருந்து

மென்பொருளுக்கும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. ஒரு வழங்கன் (server) கணினியுடன் இணைத்துக்கொண்டு செயல்படும் ஒரு கிளைக் கணினி அல்லது ஒரு வழங்கன் மென்பொருளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு செயல்படும் ஒரு கிளை அல்லது உறவு மென்பொருள் (எ. டு.) மின்னஞ்சல் கிளையன். 2. முறைமை பகுப்பாய்வுக்காக‌ (System analysis) ஒப்பந்தம் செய்யப்படும் தனி நபர் அல்லது ஒரு நிறுவனம்.

client application : கிளையன் பயன்பாட்டுத் தொகுப்பு.

client computer : கிளையன் கணினி : பிணையத்தில் இணைக்கப்பட்டுள்ள கிளைக் கணினி.

client error : வாடிக்கையாளர் பிழை; வாடிக்கையாளர் தவறு; கிளையன் பிழை : கட்டளை ஒன்றைப் பொருள் கோள் செய்வதில் உள்ள சிரமத்தின் விளைவாக அல்லது சேய்மை புரவன் கணினியுடன் சரிவர இணைக்க இயலாமையின் விளைவாக எழும் சிக்கல்.

client/server : கிளையன் / வழங்கன் : கேட்கும் கணினி வாடிக்கையாளராகவும், கொடுக்கும் எந்திரம் வழங்குபவராகவும் உள்ள கட்டுமான அமைப்பு. வழங்கன் பயன்பாட்டுச் செயல்பாடுகளைச் செய்ய, வழங்கன் தரவுத் தளத்தை வைத்திருந்து தேவையான தரவுகளை வழங்கும். ஒன்று மற்றொன்றிலிருந்து தரவுகளைக் கேட்டுப் பெறலாம்.

client server protocol : கிளையன் / வழங்கன் நெறிமுறை : ஒரு கட்டமைப்பில் ஒரு பணி நிலையத்திற்கும் (கிளையன்) வழங்கனுக்கும் இடையே வேண்டுகோள்களுக்கான அமைப்பை வழங்கும் தரவு தொடர்பு நெறிமுறை. ஓஎஸ்ஐ (OSI) மாதிரியத்தில் 7 வது அடுக்கை இது குறிக்கும்.

client - server relationship : கிளையன்-வழங்கன் உறவுமுறை.

client-server system : கிளையன்/வழங்கன் முறைமை.

client side image maps : கிளையன் பக்க படிமப் பதிலீடுகள் : வலைத் தளப் பக்கக் கிளையன் (எ. டு வலை உலாவி) தெரிவு செய்ய உதவும் சாதனம். இதன்மூலம் ஒரு படிமத்தின் பல பகுதிகளைச் சுட்டி சொடுக்கி விருப்பத் மூலம் தேர்வின்படி பயனாளரால் தெரிவு செய்யப்பட்டவற்றைக் காட்டலாம். சின்னத்தைச் சொடுக்கி பட்டியலில் விரும்பிய படங்களைப் பார்ப்பதை ஒத்தது. தொடக்க காலத்தில் (1993) படிமங்களை வலைத் தளத்தில் நடைமுறைப்படுத்தியது போன்று கிளையன் பக்க படிமத்தை அனுப்ப வலை வழங்கனை ஒருங்கிணைக்காது. ஆனால் செயல்பட வைக்கும். பொதுவாக பதிலீட்டு வேகத்தை மேம்படச் செய்யும்.

clients/server architecture : கிளையன்|வழங்கன் கட்டுமானம்.

clik art : கிளிக் கலை : கணினியால் உருவாக்கப்படும் ஆவணங்களில் பயன்படுத்துவதற்கும் எடுத்துக்கொள்வதற்கும் தயாராக உள்ள ஒவியங்கள் மற்றும் படங்களின் பட்டியல்.

CLIP : க்ளிப் : குறிமுறை மொழித் தரவு செயலாக்கம் எனப் பொருள்படும் Coded Language Information Processing என்பதன் குறும்பெயர். ஊடு கதிர்களை எக்ஸ்ரேயில் சேர்ப்பதற்கு கதிரியக்க மருத்துவர்கள் பயன்படுத்தும் ஒரு திட்டம்.

clip art : துணுக்குப்படம்; நறுக்குப் படம் : வெட்டிப் பயன்படுத்தக்கூடிய வரைகலைப்படம். வரைகலை மென்பொருள் பயன்பாடாக அளிக்கப்படுவது. இதில் கணினி உருவாக்கும் கலைப் பொருட்கள் உள்ளன. சான்றாக, உருவங்கள், அறிவிப்புப் படங்கள், விலங்குகள், கருத்துப் படங்கள் போன்றவை. துணுக்குப் படத்திலிருந்து ஒன்றை எடுத்து பின்னர் பயன்படுத்துவதற்காக நகல் எடுக்கலாம்.

clipboard : இடைநிலைப் பலகை; துணுக்குப் பலகை; நறுக்குப் பலகை : ஒரு கோப்பிலிருந்து மற்றொரு கோப்புக்கு மாற்றி அனுப்பப்படும் தரவுகளைச் சேமித்து வைப்பதற்காகவென்றே ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள கணினியின் நினைவகத்தில் உள்ள பகுதி.

clipboard computer : பிடிப்புப் பலகைக் கணினி : எந்த இடத்துக்கும் எடுத்துச் செல்லக் கூடிய கணிணி. தோற்றத்திலும் செயல்பாட்டிலும் மரபுமுறைப் பிடிப்புப் பலகையை ஒத்தது. பிடிப்புப் பலகைக் கணினியில் நீர்மப் படிகக் காட்சித்திரை (LCD) உள்ளிட்டுச் சாதனத்துக்குப் பதிலாக ஒரு பேனா இருக்கும். பயனாளர் பேனாவைத் தொட்டுச் செயல்படுத்துவர். பிடிப்புப் பலகையில் பதிவான தரவு கம்பி வடம் அல்லது இணக்கியின் வழியாக வேறு கணினிக்கு மாற்றப்படுகிறது. மரபுமுறைப் பிடிப்புப் பலகை யைப் பயன்படுத்துவது போலவே, களப்பணி, தரவு சேகரிப்பு, கூட்டம் போன்றவற்றில் பிடிப்புப் பலகைக் கணினியும் பயன்படுத்தப்படும்.

clipboard object : இடைநிலைப் பலகைப்பொருள்கள்.

clipboard view : இடைநிலைப் பலகைத் தோற்றம்.

clipper : கிளிப்பர் : 'கம்ப்யூட்டர் அசோசியேட்ஸ்' - சின் பயன்பாட்டு உருவாக்க மென்பொருள். முதலில் தரவுத் தள (dbase) மொழி மாற்றியாக இருந்து, பின்னர் தனித்து இயங்கும் பல சிறப்புத்தன்மைகள் உள்ள பயன்பாட்டுத் தொகுப்புகளை உருவாக்கும் பணித்தளமாக உருவெடுத்தது. நான்டுக்கட் கார்ப்பரேஷன் இதை உருவாக்கியது.

Clipper Chip : கிளிப்பர் சிப்பு : துள்ளல் வகை இணைப்பு நெறி முறையையும், மறைக் குறியீடுகளைக் கொண்ட நெறிமுறையையும் அமல்படுத்துகிற ஒருங்கிணைந்த மின்சுற்று. அமெரிக்க தேசிய பாதுகாப்புக் கழகம் உண்டாக்கியது. 64 துண்மி தரவு தொகுதிகளையும், 80 துண்மிகளுக்கான திறவிகளையும் கொண்டது. தொலைபேசித் தரவுகளை இரகசியக் குறியீடுகளாக வைக்க அமெரிக்க அரசு இதனை உருவாக்கியது. மறைக் குறியீடுகள் என்ன குறிப்பிடுகின்றன என்பதை அமெரிக்க அரசு அறிய முடியும். அந்த மின்சுற்றைத் தன் நாட்டில் கட்டாயமாக்க முயன்ற அமெரிக்க அரசின் எண்ணம் நிறை வேறவில்லை.

clipping : நறுக்குதல்; செதுக்குதல் ; சீரமைத்தல் : காட்சித் திரை எல்லைகளின் வெளிப்பகுதியில் உள்ள படத்தின் பகுதிகளை நீக்குதல். scissoring என்றும் அழைக்கப்படும்.

clipping level : சீரமை அளவு : தன்னுடைய காந்தத் தன்மைகளைக் காத்து உள்ளடக்கங்களை வைத்துக் கொள்ளும் வட்டின் திறன். அதிக தரமுள்ள அளவு என்பது 65-70%; குறைந்த அளவு என்பது 55%-க்குக் கீழே.

clipping path : கிளிப்பிங் வழி : ஆவணமொன்றின் ஒரு பகுதியை மூடிமறைக்கப் பயன்படுத்தும் பல் கோண வடிவம் அல்லது வளைவு. ஆவணத்தை அச்சிடும்போது கிளிப் வழியில் உள்ளது மட்டுமே தோன்றும்.

clobber : மெழுகுதல் : ஒரு கோப்பில் உள்ள நல்ல தரவுவின் மேற்பகுதியில் புதிய தரவுவை எழுதியோ அல்லது ஒரு கோப்பில் உள்ளவற்றை எப்படியாவது சேதப்படுத்தியோ அதைப் பயனற்றதாக்குதல். ஒரு கோப்பை ஒழித்து விடல்.

clock : கடிகாரம் : மின் துடிப்பு : 1. ஒரே நேரக் கட்டுப்பாட்டில் இயங்கும் கணினியின் அனைத்துச் செயல்பாடுகளின் நேரத்தைக் கட்டுப்படுத்த உதவும் தொடர்ச்சியான அடிப்படை சமிக்கையை உருவாக்கும் சாதனம். 2. உண்மையான நேரம் அல்லது அதன் மதிப்பீட்டில் சிலவற்றின் மாற்றத்தைப் பதிவு செய்யும் சாதனம். இதன் செயல்பாடு கணினி நிரலுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

clock/calendar : கடிகாரம்/ நாட்காட்டி : சரியான நேரம் மற்றும் தேதி காட்டுவதற்கு நுண்கணினியினுள் நேரக்கணக்கு கொண்ட தனியான சுற்று பயன்படுத்தப்படுகிறது. மின் கலம் அளிக்கும் மின்சாரத்தின் மூலம் அது இயங்குகிறது. கணினியை நிறுத்திவிட்டாலும் அது தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும். இயக்க முறைமை நேரம்/தேதியைப் பயன்படுத்த இயலும் சான்றாக, கோப்புகளை உருவாக்கிய தேதியைப் பதிக்கலாம். கோப்பினைப் படித்த நேரம், திருத்தம் செய்த நேரம் எல்லாம் குறிக்கலாம். எந்தவொரு பயன் பாட்டுத் தொகுப்பும் அதைப் பயன்படுத்த இயலும். சான்றாக, ஒர் ஆவணத்தில் அன்றைய தேதி மற்றும் நேரத்தைக் குறிக்க உதவும்.

clock, digital : இலக்கமுறை கடிகாரம்.

clock doubling : இரட்டிக்கும் கடிகாரம்; இரட்டிக்கும் மின்துடிப்பு : சில இன்டெல் நுண்செயலிகள் பயன்படுத்தும் தொழில்நுட்பமுறை. அதன்மூலம் தரவுகளையும், ஆணைகளையும் அமைப்பு முறையின் மீதப் பகுதியைவிட இரட்டை அளவு வேகத்தில் சிப்பு செயல் முறைப்படுத்த இயலும்.

clock frequency : கடிகார அலை வரிசை.

clocking : நேரம் அளவிடல்; நேரப்படுத்துதல்; நேர இசை வாக்கம் : தரவு தொடர்புச் சாதனம் அனுப்புகின்ற, பெறுகின்ற வேலையை ஒரே கால முறைப்படி ஒழுங்குபடுத்தப் பயன்படும் தொழில் நுட்பம். அதிக வேகத்தில் குறிப்பிட்ட நேரப்படி அனுப்புவதற்கு உதவுகிறது.

clock input : கடிகார உள்ளீடு : மேலுள்ள உள்ளீட்டு முனையம். நேரக்கட்டுப்பாடு கடிகார

"https://ta.wikisource.org/w/index.php?title=கணினி_களஞ்சிய_அகராதி-2/K&oldid=1085137" இலிருந்து மீள்விக்கப்பட்டது