கணினி களஞ்சிய அகராதி-2/V

விக்கிமூலம் இலிருந்து

நேரடி எண் கட்டுப்பாட்டு முறை என்ற இந்த முறையில் கணினி கட்டுப்பாட்டில் தொடர்ச்சியாக எண்களை செயலாக்கம் செய்வதற்குப் பதில் தனித்தனி தரவுகளில் தானியங்கி எந்திரக் கருவிகள் மூலம் கட்டுப்பாடு செய்யப்படுகின்றன.

DNS : டிஎன்எஸ் : 1. களப்பெயர் முறைமை என்று பொருள்படும் Domain Name System என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்திலிருக்கும் புரவன் கணினிகளின் களப்பெயர் (md2. vsnl. net. in) மற்றும் ஐபி முகவரி (202. 54. 6. 30) இவற்றை உடைய அமைப்பு. களப்பெயர் எளிதாகப் புரியக் கூடியது. பயனாளர்கள் பயன்படுத்துவது. இப்பெயர் தாமாகவே ஐபி முகவரியாக மாற்றப்பட்டு இணையத்தின் தரவு போக்கு வரத்துக்குப் பயன்படுத்தப்படும். 2. களப்பெயர் சேவை எனப்பொருள்படும் Domain Name Service என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். களப்பெயர் முறைமையை நடைமுறைப்படுத்தும் இணையப் பயன்பாடு, டிஎன்எஸ் வழங்கன்கள் (பெயர் வழங்கன் என்றும் அழைக்கப்படுவதுண்டு) களபெயரும் அதற்கிணையான ஐபி முகவரியும் இணைந்த ஒர் அட்ட வணையைக் கொண்டுள்ளன.

DNS server : டிஎன்எஸ் வழங்கன் : களப் பெயர் சேவையைக் கவனித்துக் கொள்ளும் ஒரு கணினி. இணையத்திலிருக்கும் புரவன் கணினிகளின் பெயர்களையும் அதற்கிணையான ஐபி முகவரிகளையும் கொண்ட அட்ட வணையை வைத்துள்ளன. microsoft. com என்பது இணையத்திலுள்ள ஒரு களப்பெயர் எனில், அதற்குரிய நிறுவனக் கணினியின் ஐ. பீ முகவரியைத் தரும்.

. do : டிஒ : இணையத்தில் ஒர் இணைய தளம் டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெருங்களப் பெயர்.

DOA : டிஓஏ : Dead On Arrival என்பதன் குறும்பெயர். உற்பத்தியாளர் அல்லது விற்பனையாளரிடமிருந்து வாங்கி எடுத்து வந்ததும் வேலை செய்யாத ஒரு பொருளைப்பற்றிக் குறிப்பிடுவது.

. doc : . டாக்;டிஓசி : ஒரு சொல் செயலியில் உருவாக்கப்படும் கோப்பு களின் இயல்பான வகைப்பெயர். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வேர்டு தொகுப்பில் உருவாக்கப்படும் கோப்புகளின் வகைப்பெயர்.

dock : பொருத்து;இணை;பிணை : 1. ஒரு மடிக் கணினியை ஒரு நிலைக் கணினியில் பொருத்துதல் 2. விண்டோஸ் பணித்தளத்தில் செயல் படும் ஒரு பயன்பாட்டுத் தொகுப்பில், கருவிப்பட்டையை, பயன்பாட்டுச் சாளரத்தின் விளிம்புக்கு இழுத்துச் சென்றால், கருவிப்பட்டை அச்சாளரத்தில் பொருந்திவிடும். பயன்பாட்டுச் சாளரத்தின் ஒரு பகுதியாகவே தோற்ற மளிக்கும். விண்டோஸ் பயன்பாடுகளில் தாய்ச் சாளரத்துள் சேய்ச் சாளரமாக ஆவணச்சாளரம் திறக்கப்படும். ஆவணச் சாளரத்தை பெரிதாக்கினால் (Maximize) அது தாய்ச் சாளரத்துடன் பொருந்தி ஒரே சாளரம் போல் தோற்றமளிக்கும்.

docking station : பொருத்து நிலையம் : ஒரு மடிக்கணினியை எங்கும் எடுத்துச் செல்லலாம். காரில், ரயிலில், விமானத்தில் செல்லும் போதுகூட வைத்துப் பயன்படுத்தலாம். ஆனாலும் அதிலுள்ள திரை, விசைப்பலகை போன்ற புறச்சாதனங்கள் கைக்கு அடக்கமாக மிகச் சிறியதாகவே இருக்கும். வீட்டில்/அலுவலகத்தில் இருக்கும்போது, மடிக்கணினியை ஒரு மேசைக்


பொருத்து நிலையம்

பொருத்து நிலையம் கணினியைப் போலப் பயன்படுத்த விரும்பலாம். ஆனால் அதற்கு மேசைக் கணினியின் காட்சித்திரை, விசைப்பலகை, சுட்டி பற்றும் பிற சாதனங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் வசதி வேண்டும். இவ்வசதிகளைக் கொண்டது தான் பொருத்து நிலையம். இக்கருவியில் ஒரு மடிக்கணினி, காட்சித் திரை, விசைப்பலகை, அச்சுப்பொறி, சுட்டி ஆகியவற்றைப் பொருத்திக்கொள்ள வசதி இருக்கும்.

doctype : ஆவணவகை;ஆவண இனம் : எஸ்ஜிஎம்எல் (SGML) ஆவணத்தின் தொடக்கத்தில் குறிப்பிடப்படும் அறிவிப்பு. ஒவ்வொரு எஸ்ஜிஎம்எல் ஆவணத்திலும் ஆவண வகையின் வரையறை (Document Type Difinition) குறிப்பிடப்பட வேண்டும்.

document : ஆவணம் : 1. கையால் எழுதப்பட்ட, தட்டச்சு செய்யப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட தரவுகள் கொண்ட காகிதம். 2. தரவு அல்லது உரை நடையின் தொகுதியைக் குறிப்பிடுதல் அது மனிதர்கள் படிப்பதாக இருந்தாலும் அல்லது எந்திரம் படிப்பதாக இருந்தாலும்.

documentation : ஆவணப்படுத்தல்;ஆவணமாக்கம்;ஆவணச்சான்று : 1. அமைப்பு ஆய்வு மற்றும் நிரலாக்கத் தொடர் அமைத்தலில், அமைப்பு, தயாரிக்கப்பட்ட நிரலாக்கத்தொடர்கள் மற்றும் பின்னர் செய்ய வேண்டிய மாற்றங்கள் உள்ளிட்டவற்றை பற்றி விவரிக்கும் ஆவணங்கள். 2. குறிப்புகள், கருத்துரைகள் போன்ற வடிவில் உள்ளே அமைக்கப்படும் ஆவணப்படுத்தல்.

documentation aids : ஆவணப்படுத்தல் உதவிப்பொருள்கள் : ஆவணப் படுத்தல் செயல்முறைகளைத் தானியங்கியாகச் செய்ய உதவும் பொருள்கள். நிரலாக்கத் தொடர் வர்ணனை குறிப்புகள், ஒடு படங்கள், ஹிப்போ நிரலாக்கத் தொடர் ஒட்டங்கள், போலி குறியீடுகள் போன்றவை.

documentation and versioning : ஆவணமாக்கமும் பதிப்பாக்கமும்.

documentation, programme : நிரல் ஆவணமாக்கல்.

document centric : ஆவணமையமானது : இது ஒர் இயக்க முறைமையின் பண்புக்கூறு ஆகும். முன்பிருந்த இயக்க முறைமைகள் நிரலை மைய மாகக் கொண்டவை. அதாவது, ஒர் ஆவணத்தைத் திறக்குமுன் அந்த ஆவணம் உருவாக்கப்பட்ட பயன்பாட்டுத் தொகுப் பைத் திறக்க வேண்டும். பிறகு அதனுள்ளேதான் ஆவணத்தைத் திறக்க வேண்டும். ஆனால் இப்போதுள்ள மெக்கின்டோஷ்,விண்டோஸ் இயக்க முறைமைகளில் ஒர் ஆவணத்தைத் திறப்பதற்குக் கட்டளை தந்தால் போதும். அந்த ஆவணம் உருவாக்கப்பட்ட பயன்பாடு தானாகவே திறக்கப்பட்டு அதனுள்ளே ஆவணம் திறக்கப்படும். எடுத்துக்காட்டாக,விண் டோஸ் இயக்கமுறைமையில் எம்எஸ்வேர்டு தொகுப்பில் உருவாக்கப்பட்ட ஒர் ஆவணத்தை சுட்டியால் இரட்டை கிளிக் செய்து திறந்தால்,வேர்டு தொகுப்பு, தானாகவே திறக்கப்பட்டு அதனுள்ளே வேர்டு ஆவணம் திறக்கப்படும். ஒர் ஆவணம் எந்தத் தொகுப்பில் உருவாககபபடடது என்பதை அறியாமலே அந்த ஆவணத்தைப் பயனாளர் திறக்கமுடியும்.

document close button:ஆவண மூடு பொத்தான்.

Document Content Architecture(DCA);ஆவண உள்ளடக்க உருவமைவு (டிசிஏ):மாறுபட்ட உருவமைவுகளுக்கிடையே தரவுகளை(வாசகங்கள்) மாற்றுவதற்குப் பயன்படும் ஒரு வாசகக் கோப்பு உருவமைவு.

document distribution:ஆவணப் பகிர்மானம்.

document file:ஆவணக்கோப்பு:ஒரு சொல் பகுப்பி மூலம் உருவாக்கப்பட்ட கோப்பு. இது,ஒரக் கோடுகள்,உள்வரிகள்,தலைப்புகள், அடிக் குறிப்புகள் ஆகியவற்றுடன் உருவமைவு செய்யப்பட்டிருக்கும்.

document image processing:ஆவணப் படிமச் செயலாக்கம்.

document interchange architecture(DIA):ஆவண மாறுகொள் கட்டமைப்பு.

document management:ஆவண மேலாண்மை:ஒர் நிறுவனத்துக்குள் கணினிவழியாகப் பரிமாறிக் கொள்ளப்படும் மின்னணு ஆவணங்களை உருவாக்குதல்,வினியோகித்தல் போன்ற பணிகளுக்கான கோப்பு மேலாண்மை அமைப்பு.

document mark:ஆவணக் குறியீடு:நுண்வரைகலையில்,நுண் படச்சுருளின் ஒவ்வொரு சட்டகத்திலுள்ள ஒரு சிறிய ஒளியியல் வடிவம். இது சட்டகங்களைத் தானாகவே எண்ணுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

document minimise button:ஆவணச் சிறிதாக்கு பொத்தான்.

documentor:ஆவணப்படுத்தி:நிரலாக்கத் தொடர்,ஒடு படங்கள், உரைநடைப்பொருள் மற்றும் பிற பட்டியல் அல்லது வரைகலை தரவுகளை உருவாக்குதல், பராமரித்தலுக்காக தரவு செயலாக்க முறைகளைப் பயன்படுத்தும் வடிவமைக்கப்பட்ட நிரலாக்கத் தொடர்.

document processing : ஆவணச் செய்முறைப்படுத்துதல் : சொல் பகுப்பியில் செய்வது போன்று, வாசக ஆவணங்களைச் செய் முறைப் படுத்துதல். ஆவண உள்ளடக்கம் அடிப்படையிலான வாசக மீட்புக்கான அட்ட வணைப்படுத்தும் முறைகளையும் உள்ளடக்கும்.

document reader : ஆவணப் படிப்புப் பொறி;ஒரு குறிப்பிட்ட அளவு தரவைப் படிக்கும் ஒசிஆர் அல்லது ஒஎம்ஆர் கருவி.

document restore button : ஆவண மீட்டாக்கப் பொத்தான்.

document retrieval : ஆவணம் திரும்பப் பெறல் : சேமிப்புச் சாதனங் களிலிருந்து தரவுகளைப் பெறும் செயல்முறை. தரவுகளைக் கையாளுதல் மற்றும் பின்னர் அறிக்கை தயாரித்தலும் இதில் அடங்கும்.

document routing : ஆவணம் திசைவித்தல்.

document Scanner : ஆவண வருடு பொறி.

document source : ஆவண மூலம் : வைய விரிவலையில் (www) காணப்படும் அனைத்து ஆவணங்களும் ஹெச்டிஎம்எல் மொழியில் உருவாக்கப்பட் டவை. அவை சாதாரண உரைக் கோப்புகள் ஆகும். <HTML>, <HTML>, , , , என்பது போன்ற குறி சொற்களுடன் (Tags) உருவாக்கப் படுகின்றன. ஹெச்டிஎம்எல் மொழியில் உருவாக்கப் பட்ட உரைக் கோப்பினை ஒர் இணைய உலாவியில் (Browser) பார்வையிடும்போது அழகான வடிவமைப்புடன் தோற்றமளிக்கும். ஹெச்டிஎம்எல் மூல உரைக்கோப்பு, ஆவணமூலம் எனப்படுகிறது. இணையத்தில் (வைய விரிவலையில்) பார்வையிடுகின்ற மீவுரை (Hyper Text) ஆவணங்களின் மூல வரைவினை (Source Code) அதாவது ஆவண மூலத்தைப் பார்வை யிட உலாவியிலேயே வசதி உண்டு. document style semantics and specification language : ஆவண பாணி தொடரிலக்கணம் மற்றும் வரையறுப்பு மொழி : உருவாகிக் கொண்டி ருக்கும் ஐஎஸ்ஓ தர வரையறை. ஒரு குறிப்பிட் வடிவாக்கம் அல்லது செயலாக்கம் சாராத ஒர் ஆவணத்தின் உயர்தர வடிவாக்கம் தொடர்பான தொடரிலக்கணம் பற்றியது. தொடரிலக் கணத்துக்கான எஸ்ஜிஎம்எல் வரையறைக்குச் செழுமை சேர்ப்பதாய் அமையும். document window : ஆவணச் சாளரம் : மெக்கின்டோஷ், விண்டோஸ் போன்ற வரைகலைப் பணித்தளத்தில் எந்தவொரு பயன்பாட்டுத் தொகுப்பும் ஒரு சாளரத்தினுள்ளேதான் காட்சியளிக்கும். அதுபோலவே அத்தொகுப்பில் ஒர் ஆவணத்தை உருவாக்குதலும் பார்வையிடுதலும் ஒரு தனிச் சாளரத்தி னுள்ளேதான் நடைபெறும். சில தொகுப்புகளில் இவையிரண்டும் இணைந்து ஒரே சாளரமாகத் தோற்றமளிப்பதும் உண்டு. வரைகலைப் பணித்தளத்தில் ஒர் ஆவணம் தோற்றமளிக்கும் சாளரம் ஆவணச்சாளரம் எனப்படுகிறது. docuterm : ஆவண வாசகம் : ஆவணத்தின் உள்ளடக்கங்களை அடையாளங் காண்பதற்கு ஒரு வாசக ஆவணத்தில் பயன் படுத்தப்படும் சொல் அல்லது சொற்றொடர். DOE : மின்னணுவியல் துறை : Department of Electronics என்பதன் குறும்பெயர். மின்னணுவியல் துறை என்று பொருள்படும். Do loop : செய் மடக்கி : பெரும்பாலான கணினி மொழிகளில், ஒரு குறிப்பிட்ட பணியைத் திரும்பத் திரும்பப் பலமுறை செயல்படுத்த கட்டுப்பாட்டு மடக்கி (control loop) என்னும் கட்டளை வடிவம் பயன் படுத்தப்படுகின்றது. For.. Next, While.. Wend, Do.. Enddo போன்ற பல்வேறு கட்டளை வடிவங்கள் உள்ளன. DO என்னும் மடக்கி, ஃபோர்ட்ரான், விசுவல்பேசிக், சி, சி++, சி ஷார்ப் ஜாவா மொழிகளில் உள்ளது. domain : செயற்களப்பகுதி : 1. தொடர்புகளுடைய பொருள்கள் தமது மதிப்புகளைப் பெறும் தரவுத் தொகுதி. 2. ஆர்வம் உள்ள எந்தச் சிக்கல் துறையும் இதில் அடங்கும். domain expert : செயற்கள வல்லுநர் : ஒரு நிபுணத்துவப் பொறியமைவை உருவாக்க உதவுகிற ஒரு மனித வல்லுநர். domain knowledge : கள அறிவு : பயன்பாட்டுச் சூழ்நிலையின் அறிவு. domain name : களப் பெயர்;தினைப் பெயர் : ஒரு பினையத்தில் ஒரு குறிப்பிட்ட வழங்கன் அல்லது புரவன் கணினியின் உரிமையாளரை அடையாளம் காட்டும் பெரும் படிமுறை அமைப்பில் அம்முகவரி அமையும். எடுத்துக் காட்டாக www chennai telephones. gov. in என்ற முகவரி இந்தியாவிலுள்ள (in), அரசுக்குச் சொந்தமான (gov), சென்னைத் தொலைபேசி நிறுவனத்தின் வலை வழங்கன் (web server) என்பதைக் குறிக்கிறது. in என்பது புவியியல் பெரும் களம் (major geographical domain) எனவும், gov என்பது வகைப்படு பெருங்களம் எனவும், chennai telephcnes என்பது உட்களம் (minor domain) எனவும் அறியப்படுகிறது. கணிமொழி. வணி, தமிழ். வலை, யாகூ. நிறு. இந் என்பதுபோன்று தமிழ்மொழியிலேயே களப் பெயர்களை அமைத்துக் கொள்ளும் தொழில் நுட்பமும் வந்து விட்டது. domain name address : களப்பெயர் முகவரி : இணையத்திலோ அல்லது ஏதேனும் ஒரு டீசிபீ/ஐபீ பிணையத்திலோ இணைக்கப்பட் ஒரு கணினியின் முகவரி. குறிப்பாக, ஒரு வழங்கன் கணினியை அல்லது நிறுவனத்தை அடையாளம்காண, எண்களுக்குப் பதிலாக சொற்களை முகவரியாகப் பயன்படுத்தும் முறை. domain name server : களப்பெயர் வழங்கன். domain name system : களப்பெயர் முறைமை. Domain Naming Services (DNS) "களப் பெயரிடு சேவை. domain tip : கள முனை : இலக்கமுறை தரவைச் சேமிக்க மெல்லிய திரைப்படங்களைப் பயன்படுத்தும் ஒரு வகை சேமிப்புச் சாதனம். dominant carrier : முனைப்பு நிலை ஊர்தி : ஒரு குறிப்பிட்ட அங்காடி யின் பெரும்பகுதிமீது கட்டுப்பாடு கொண்டுள்ள தொலைத் தொடர்புப் பணிக்கருவி. dongle : வன்பூட்டு. door : கதவம் : ஒரு BBS கணினியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு பயன்பாட்டினை இயக்குவதற்கு ஒரு தொடுப்புப் பயனாளரை அனுமதிக்கும் ஒரு நுழைவாயில் அல்லது இடைமுகப்பு. dopant : ஒட்டுப்பொருள்;மாசுப் பொருள் : உள்ளியம் சார்ந்த அல்லது பாஸ்பரஸ் போன்று ஒட்டும்போது பயன்படுத்தும் ஒரு பொருள். dope vector : ஒட்டுச் சரம் : இணைப்புப் பட்டியலில் உள்ள ஒரு அணு, அந்தப் பட்டியலில் உள்ள பிற அணுக்களின் உள்ளடக்கங்களைக் கூறும் ஒரு அளவுச் சரம் (வெக்டார்). doping : ஒட்டல்;மாசு ஊட்டல் : அரைக்கடத்தியை உருவாக்கும் போது தூய சிலிக்கானின் படிக அமைப்பில் துய்மையற்ற பொருள்களைச் சேர்க்கும் செயல்முறை. doping vector : மாசு நெறியம்;மாசு திசையம். DOS : டாஸ் : Disk Operating System என்பதன் குறும்பெயர். இது வட்டு இயக்க அமைப்பு ஆகும். வட்டத் தகட்டுச் செயற்பாட்டு முறை அல்லது வட்டுச் செயற்பாட்டு பொறியமைவுமாகும். பயன்படுத்துவோருக்கும் கணினியின் வட்டு இயக்கத்துக்கும் இடையில் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ளும் இணைப்பை ஏற்படுத்தும் வட்டு சார்ந்த ஒரு சிறப்பு நிரலாக்கத் தொடர். DOS box : டாஸ் பெட்டி : ஒஎஸ்/2 இயக்க முறைமையில், எம்எஸ்-டாஸ் நிரல்களை இயக்குவதற்குத் துணைபுரியும் ஒரு செயலாக்கம். DOS extender : டாஸ் நீட்டிப்பான் : டாஸ் இயக்க முறைமையில் டாஸ் பயன்பாட்டு நிரல்கள் பயன்படுத்திக்கொள்ள, 640 கேபி மரபு நினைவகத்தை நீட்டிப்பதற்காக உருவாக்கப்பட்ட நிரல். ஒளிக் காட்சி தகவி, ரோம் பயாஸ், உ/வெ துறைகள் போன்ற கணினி உறுப்புகளுக்காக ஒதுக்கப்பட்ட நினைவகத்தை டாஸ் நீட்டிப்பான் பயன்படுத்திக் கொள்ளும். DOS prompt : டாஸ் தூண்டி : எம்எஸ்-டாஸ் இயக்க முறைமையில், பயனாளரின் கட்டளையை ஏற்கத் தயாராக இருக்கும் நிலையை உணர்த்தும் அடையாளச் சின்னம். டாஸின் கட்டளைச் செயலி இதனை வழங்குகிறது. பெரும்பாலும் இச்சின்னம் இருப்பு வட்டகம்/கோப்பகத்தைச் சுட்டுவதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, A\>, C\>. D.\DBASE> என்பது போல இருக்கும். பயனாளர், தன் விருப்பப்படி இச்சின்னத்தை மாற்றி அமைத்துக் கொள்ளவும் முடியும். Prompt என்ற கட்டளை அதற்குப் பயன் படுகிறது. dot : டாட்;புள்ளி : 1. யூனிக்ஸ், எம்எஸ்-டாஸ், ஒஎஸ்/2 போன்ற இயக்க முறைமைகளில் கோப்பின் முதற்பெயரையும், வகைப்பெயரையும் பிரிக்கும் குறியீடு.(எ-டு)text.doc.இதனை டெக்ஸ்-டாட்-டாக் என்று வாசிக்க வேண்டும். 2.கணினி வரைகலையிலும் அச்சடிப்பிலும் புள்ளிகள் தாம் ஒரு படத்தையோ எழுத்தையோ உருவாக்குகின்றன. கணினித் திரையில் காணப்படும் உருவப்படங்கள் புள்ளிகளால் ஆனவையே அவை படப்புளிளிகள்(pixels-picture elements)எனப்படுகின்றன. அச்சுப்பொறியின் திறன் ஒர் அங்குலத்தில் எத்தனைப் புள்ளிகள்(dots per inch-dpi)என்று குறிக்கப்படுகிறது. 3. இணைய தள முகவரியின் வெவ்வேறு பகுதிகளை புள்ளிகளே பிரிக்கின்றன (எ-டு) www.vsnl.com. dot addressable:புள்ளி முகவரியாக்கம்:தனித்தனிப் புள்ளி ஒவ் வொன்றையும்,ஒரு ஒளிப் பேழைக் காட்சியில்,புள்ளிக் குறி அச்சுவார்ப்புரு அச்சடிப்பியில் அல்லது லேசர் அச்சடிப்பியில் செயல்முறைப்படுத்தும் திறம்பாடு. dot Chart:புள்ளிக்குறி வரைபடம்:சிதறல் வரைபடம் போன்றது. dot commands:புள்ளி ஆணைகள்:புள்ளிக் கட்டளைகள்:வடிவமைப்பு நிரல்களை அளித்து சொல் பகுப்பியில் பதிவேடுகளை தயார் செய்தல். அச்சிடும் போதுதான் அந்த ஆணைகள் செயல்படுத்தப்படும். வேர்டு ஸ்டார் தொகுப்பில் இவை பயன்படுத்தப்படுகின்றன. dot file:புள்ளிக் கோப்பு:யூனிக்ஸ் இயக்க முறைமையில் புள்ளியில் தொடங்கும் பெயரைக் கொண்ட கோப்பு. (எ-டு)profile ஒரு கோப்பகத் திலுள்ள கோப்புகளின் பட்டிபலைத் திரையிடும்போது,புள்ளிக் கோப்புகள் இடம் பெறா. பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட பயனாளருக்கான நிரல்களின் நிலைபாடுகளை இருத்தி வைக்கப் பயன்படுகின்றன. dot gain:புள்ளிக்குறி ஈட்டம்:ஒவ்வொரு மைப் புள்ளிக்குறியின் வடிவளவும்,வெப்பநிலை,மை,காகிதத்தின் தரம் காரணமாக பெருக்க மடைதல். dot graphic:புள்ளிக்குறி வரைகலை: புள்ளிக்குறிகளின் உரு வகைகளினால் உருவாக்கப் பட்ட ஒரு வரைகலை வடிவமைப்பு. dot matrix:புள்ளி அச்சு முறை;புள்ளி அணி;புள்ளி அச்சு எந்திரம்;குத்துசி அச்சு எந்திரம்:எழுத்துகளைக் குறிப்பிட புள்ளிகளைத் தேர்ந்தெடுத்து அவைகளை செவ்வக வடிவில் அச்சிடத் தயார் செய்யும் தொழில் நுட்பம். dot matrix character : புள்ளிக்குறி அச்சுவார்ப்புரு எழுத்து : புள்ளிக்குறி அச்சுவார்ப்புரு உருவமைப்பில் நெருக்கமாக அச்சடிக்கப்பட்ட எழுத்துகள். நெருக்கமாக அச்சடிக்கப்பட்டிருப்பதால், இது ஒரு திண்மத் தோற்றத்தைக் கொடுக்கும். dot matrix printer : புள்ளி வரிசை அச்சுப்பொறி;புள்ளிக்குறி அச்சு வார்ப்புரு அச்சடிப்பி : நெருக்கமாக அமைக்கப்பட்ட தொடர்புள்ளிகளாக எழுத்துகள் மற்றும் வரைகலைகளை உருவாக்கும் அச்சுப் பொறி, அச்சிடும் தலை காகிதத்திற்கு நேராக வரும் சரியான நேரத்தில் சுத்தியால் அடிக்கும் ஊசி தொழில் நுட்பம். மலர்ச் (டெய்சி) சக்கர அச்சுப்பொறி தரத்தில் நுட்பமாக அழகிய அச்சுகளை சில பொறிகள் உருவாக்கும். dot operator : புள்ளிச் செயற்குறி. dot per inch : ஓர் அங்குலத்தில் புள்ளிகள். dot pitch : புள்ளி இடைவெளி : ஒரு முகப்புத்திரையில் தனிப்பட்ட புள்ளிகளுக்கு இடையிலுள்ள இடைவெளி மில்லிமீட்டரில் கூறப்படுகிறது. புள்ளி இடைவெளி குறையக் குறைய, இடம் பெறவேண்டிய புள்ளிகள் அதிகமாகி படம் மேலும் தெளிவாகத் தெரியும். dot prompt : புள்ளிக்குறி நினைப்பூட்டல் : இது தரவுத் தள நினை வூட்டுதல். இது ஒரு புள்ளி ('. '). இதற்கு எதிராக தரவுத் தள நிரல்கள் கொடுக்கப் பட வேண்டும். டிபேஸ் தொகுப்பில் இது பயன்படுத்தப் பட்டுள்ளது. Dots Per Inch (DPI) : அங்குலவாரிப் புள்ளிக்குறி : ஒர் அங்குல நீளத்தில் ஒர் அச்சடிப்பி எத்தனை புள்ளிக் குறிகளை அச்சடிக்கும் என்பதை அளவிடுவ தற்கான நீட்டலளவை. எடுத்துக்காட்டாக 300 DPI என்றால், ஒரு காகிதத்தில் ஒவ்வொரு கிடைமட்ட அல்லது செங்குத்து அங்குலத்திலும் 300 புள்ளிக்குறி களை அச்சடிப்பி அச்சடிக்கும் என்று பொருள். இது எழுத்துகளை உருவாக்கப் புள்ளிக்குறி அச்சுவார்ப்புருக்களைப் பயன்படுத்தும் அச்சடிப்பிகளுக்கு மட்டுமே பொருந்தும். எடுத்துக் காட்டு : புள்ளிக்குறி அச்சுவார்ப்புரு அச்சடிப்பிகள்;லேசர் அச்சடிப்பி;அனல் அச்சடிப்பி. double : இரட்டையளவு : இரட்டிப்பளவு. double buffering : இரட்டை இடைநிலைத் தாங்குதல்;இரட்டை இடைநிலை வைப்பக முறை : கணினிக்கும் வெளிப்புறச் சாதனங் களுக்கும் இடையில் தரவுவை மாற்றுவதற்கான வன்பொருள் அல்லது மென்பொருள் தொழில்நுட்பம். ஒரு தாங்கியில் உள்ள தரவுவை கணினி செயலாக்கம் செய்யும் போது, அடுத்த ஒன்று, தரவுவை வெளியே அனுப்பும் அல்லது உள்ளே வாங்கும். double-click : இரட்டை கிளிக்கி;இரட்டை அமுக்க முறை : சுட்டுப் பொத்தானைப் பயன்படுத்தி நிரல் உருவாக்கும் முறை. இடஞ்சுட்டி அல்லது கர்சரை காட்சித்திரையில் சரியான நிலையில் வைத்துக் கொண்டு வேகமாக அடுத் தடுத்து இரண்டுமுறை சுட்டுப் பொத்தானை அழுத்தினால் நிரல் செலுத்தப்படும். double-dabble : இரட்டை மாற்று முறை : ஈரிலக்க எண்களை அவற்றுக்கு நிகரான பதின்ம எண்களாக மாற்றுகிற ஒரு படி நிலை முறை. double density : இரட்டை அடர்த்தி : வழக்கமான வட்டு அல்லது நாடாவின் சேமிப்புத் திறனைப்போல் இரண்டு மடங்கு திறன் உடையதாக இருருத்தல். தனி அடர்த்தி வட்டு அல்லது நாடாவில் உள்ளது போன்ற இரண்டு மடங்கு சேமிக்கும் திறன். double density disk : இரட்டை அடர்த்தி வட்டு;இரட்டைச் செறிவு வட்டு; இரட்டைக் கொள்திறன் வட்டு : முந்தைய வட்டுகளைப்போல் இரண்டு மடங்கு கொள்திறன் (ஒர் அங்குலப் பரப்பில் கொள்ளும் துண்மிகள்) உள்ள வட்டுகள். முற்கால ஐபிஎம் பீசியில் பயன்படுத்தப்பட்ட நெகிழ்வட்டுகளின் கொள்திறன் 180 கே. பி. இரட்டைக் கொள்திறன் வட்டுகளில் 360 கேபி தகவலைப் பதியலாம். இவ்வட்டுகள் தரவைப் பதிய, திருத்தப்பட்ட அலைவரிசைப் பண்பேற்றக் குறியீட்டுமுறை பயன்படுத்தப் பட்டது. double dereference : இரட்டைச் சுட்டுவிலக்கம் : p என்பது a என்னும் மாறிலியின் முகவரியைக் குறிக்கும் சுட்டு (Pointer) எனில், *P என்பது a-யில் இருத்தி வைக்கப்பட்ட மதிப்பினை நேரடியாகச் சுட்டும். இதில் * என்னும் அடையாளம் சுட்டு விலக்கக் குறியீடாகப் பயன்படுகிறது. q என்பது p-யைச் சுட்டும் சுட்டு எனில், *q என்பது p-யின் மதிப்பைச் (அதாவது அதில் இருத்தி வைக்கப்பட்டுள்ள a-யின் முக வரியை) சுட்டும். **q என்பது a-யின் மதிப்பை நேரடியாகச் கட்டும். இதனை இரட்டைச் கட்டு விலக்கம் என்கிறோம். double linked list : இருமுனைத் தொடுப்புப் பட்டியல். double precision : இரட்டைத் துல்லியம்;இரட்டைச் சரி நுட்பம் : எண்கள் கூடுதல் துல்லியத்தைப் பெற கணினி சொற்களைப் பயன்படுத்துதல் பற்றியது. double precision arithmetic : இரட்டைச் சரிநுட்பக் கணக்கீடு;இரட்டைத் துல்லியக் கணக்கீடு. double punch : இரட்டை துளை : ஒரு அட்டையின் பத்தி ஒன்றில் செய்யப்படும் ஒன்றுக்கு மேற்பட்ட எண் துளை. double scan : இரட்டை நுண்ணாய்வு;இரட்டை வருடல் : வண்ண வரைகலைத் தகவமைவு (CGA) மென்பொருள் சுற்றுவழியில் வண்ண வரை கலைத் தகவமைவுத் திண்மத்தை அதிகரிக்கும் அமைவு. double sided : இருபுற. double sided disk : இருபுற வட்டு : அதன் இரண்டு மேற்புறங்களிலும் தரவுவை சேமிக்கும் திறனுடைய காந்த வட்டு. double sided floppy disk : இரட்டைப் பக்க செருகுவட்டு. double strike : இரட்டை அச்சடிப்பு : ஒவ்வொரு எழுத்தினையும் இருமுறை அச்சடிக்கும் ஒரு அச்சடிப்பு முறை. இரண்டாவது அச்சடிப்பு முதலாவதற்குச் சற்றுக் கீழே இருக்கும். double striking : இரட்டை அச்சடிப்பு. double surface : இரட்டை வட்டுப் பரப்பு. double width : இரட்டை அகற்சி : ஒவ்வொரு எழுத்தும் இயல்பான எழுத்துகளைப் போல் இருமடங்கு அகலமாக இருக்கக் கூடிய அச்சு அகற்சி. இந்த இரட்டை அகற்சி முதலில் 'விரிவாக்க அகற்சி'என அழைக்கப்பட்டது. double word : இரட்டைச் சொல் : இரண்டு சொற்கள் நீளமுள்ள சேமிப்பகப் பொருள். doubly linked list : இருமுனைத் தொகுப்புப் பட்டியல்;இருவழி இணைப்புப் பட்டி : பட்டியலின் ஒவ்வொரு உறுப்பிலும் முந்தைய மற்றும் அடுத்துவரும் அணுவைப் பற்றிய தரவுவைக் கொண்டுள்ள பட்டியல். do until : அதுவரை செய் : அமைக்கப்பட்ட நிரலாக்கத் மாறுபாடுகளில் ஒன்றான சுற்று அமைப்பு. ஒரு குறிப்பிட்ட பணியைத் திரும்பத் திரும்பச் செய் வதற்காக, ஓர் நிரலாக்கத் எழுதப்படும் தொடரின் பழைய தொடரில் கட்டளை அமைப்பு. do while : அப்போதெல்லாம் செய் : அமை க்கப்பட்ட நிரலாக்கத் தொடர்முறையின் மாறு பாடுகளில் ஒன்றான பழைய சுற்று முறை. dow jones information service : டோ ஜோன்ஸ் தரவுப் பணியம் : பங்கு போன்ற நடப்பு நிதி யியல் செய்திகளைக் கொண்டிருக்கிற ஒரு கணினி தரவுத் தளம். இதனை, சந்தாதாரர்கள், துண்கணினிகள், மோடெம்கள் மூலம் அணுகலாம் down : செயலிழந்த நிலை : மென்பொருள் அமைப்பில் தவறு ஏற்படுவதால் அல்லது வன்பொருள் மின்சுற்றுகள் செயல்பட முடியாமல் குறிக்கும். ஒரு கணினி செயலிழந்த நிலை என்றால் அது செயல்பட வில்லை என்பதே பொருள் down arrow : கீழ்நோக்கு அம்புக் குறி. down line processor : துணை நிலைச் செயலகம் : செய்தித் தரவு தொடர்புக் கட்டமைப்பின் முகப்பு முனையில் அல்லது அதற்கு அருகில் இருந்து தரவுகளை அனுப்பி வைக்கும் செயலகம். down link : தரை இணைப்பு : பூமியிலுள்ள ஒரு நிலையத்துடன் ஒரு செயற்கைக்கோளி லிருந்து ஏற்படுத்தப்பட்டுள்ள செய்தித்தொடர்பு வழி. இது, 'வான்இணைப்பு' (Uplink) என் பதிலிருந்து வேறுபட்டது. down load : கீழிறக்கு : தரவு இறக்கம் : தரவுவை, பெரிய மையக் கணினி பிலிருந்து சிறிய, தொலைதூர கணினி அமைப்புக்கு மாற்றும் செயல்முறை. downloadable font : பதிவிறக்கத்தகு எழுத்துரு : ஓர் ஆவணத்தை அச்சிடும்போது, அந்த ஆவணத்தின் தரவு, அச்சுப் பொறியின் நினைவகத்தில் ஏற்றப்படும். அச்சுக்குரிய எழுத் துருவும் கணினியின் நிலை வட்டிலிருந்து அச்சுப் பொறிக்கு அனுப்பப்படும். பதிவிறக்கத் தகு எழுத்துருக்கள் மிகப்பரவலாக லேசர் அச்சுப் பொறிகளிலும் பக்க அச்சுப் பொறிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. சில புள்ளியணி அச்சுப் பொறிகளும் இத்தகைய எழுத்துருக்களை ஏற்கின்றன. down loading : தரவிறக்கம் : ஒரு பெரிய கணினியிலிருந்து ஒரு சிறிய கணினிக்குத் தரவுகளை மாற்றும் செய்முறை. எடுத்துக்காட்டு : முதன்மைப் பொறியமைவிலிருந்து ஒரு சொந்தக் கணினிக்கு மாற்றம் செய்தல். ஒரு சொந்தக் கணினியிலிருந்து ஒரு சாதனத்திற்குத் தரவுகளை மாற்றுவதையும் இது குறிக்கும். எடுத்துக்காட்டு : லேசர் அச்சடிப்பிக்கு மாற்றம் செய்தல். தரவுவிறக்கம் என்பது கணினியின் வடிவளவினைக் குறிப்பதில்லை. ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்குத் தரவுகளை மாற்றுவதையே குறிக்கும்.'தரவுவேற்றம்' (uploading) என்பது இதற்கு எதிர் மாறானது. downsizing : சிறிதாக்கம் : ஒரு நிறுவனத்தில் கணினிச் செயல்பாடுகள் முழுவதையும் பெருமுகக் கணினி (mainframe) சிறு கணினி (mini), போன்ற பெரிய கணினி அமைப்பிலிருந்து குறுங்கணினி அல்லது நுண்கணினி (micro) அமைப்புக்கு மாற்றியமைத்தல். பெரும்பாலும் இம்மாற்றம் செலவைக் குறைக்க, அல்லது புதிய மென்பொருளுக்கு மாறுவதற்காக இருக்கலாம். சிறிய கணினி அமைப்பு என்பது பீசிக்கள், பணி நிலையங்கள் இணைந்த கிளையன் (client) வழங்கன் (server) அமைப்பாக இருக்கலாம். ஒன்று அல்லது சில குறும் பரப்பு/விரிபரப்புப் பிணையங்கள் இணைக்கப்பட்ட பெருமுகக் கணினியாகவும் இருக்கலாம். downstream : கீழ் தாரை;கீழ் ஒழுக்கு;கீழ்பாய்வு : ஒரு செய்திக் குழுவுக்கான செய்தி, ஒரு செய்தி வழங்கனிலிருந்து இன்னொன்றுக்கு அனுப்பி வைக்கப்படும் திசை வழியைக் குறிக்கிறது. down time : முடக்க நேரம்;செயல்படா நேரம் : ஒரு கணினி அமைப்பு அல்லது அதனோடு தொடர்புடைய வன்பொருள், இருக்கும் நேரம்/நேரத்தின் விழுக்காடு எதிர்பாராவிதமாக வன்பொருள் பழுதுபட்டுச் செயல்படாமல் இருந்த நேரமாக இருக்கலாம். அல்லது திட்டமிட்டுப் பராமரிப்புக்காக செயல்படாமல் நிறுத்தி வைத்த நேரமாகவும் இருக்கலாம். downward compatible : சூழ்நிலைப் பொருத்தமுடைய : முந்தைய தலை முறையைச் சேர்ந்த அல்லது சிறிய கணினியுடன் ஏற்புடைய கணினி பற்றியது. DΡΜ : டிபீஎம்ஏ : Data processing Management Association என்பதன் குறும்பெயர். DPMA certification : டிபீஎம்ஏ சான்றிதழ் : ஒருவர் தரவு செயலாக்கத் துறையில் குறிப்பிட்ட அளவு திறனை அடைந்து விட்டார் என்பதைக் குறிக்கும் வகையில் தரவுச் செயலாக்க மேலாண்மைச் சங்கம் (DPMA) முன்பு அளித்துவந்த சான்றிதழ். ஆண்டுதோறும் நடத்தப்படும் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு இந்தச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இப்போது ஐ. சி. சி. பி (Institute for Certification of Computer Professionals) இந்தச் சான்றிதழை வழங்குகிறது. DPMI : டிபீஎம்ஐ : பாதுகாக்கப்பட்ட டாஸ் செயல்பாட்டு இடைமுகம் என்று பொருள்படும் Dos Protected Mode Interface என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 3. 0 பதிப்புக்காக உருவாக்கிய மென்பொருள் இடைமுகம். 80286 மற்றும் அதனினும் கூடுதல் திறன் நுண்செயலிகளில் எம்எஸ்-டாஸ் அடிப்படையி லான பயன்பாட்டு நிரல்கள் பாதுகாக்கப்பட்ட முறையில் செயல்பட உதவும் மென்பொருளாகும் இது. பாதுகாக்கப்பட்ட செயல்முறையில் நுண்செயலி பல்பணிகளை ஒரே நேரத்தில் நிறைவேற்றும். சாதாரணமாக எம்எஸ் டாஸில் செயல்படும் நிரல்களுக்கு எம்பி நினைவகம் மட்டுமே கிடைக்கும் ஆனால் பாதுகாக்கப்பட்ட செய்முறையின் போது 1எம்பிக்குக் கூடுதலான நினைவகப் பரப்பையும் பயன் படுத்திக் கொள்ள முடியும். DPMS : டிபீஎம்எஸ் : திரைக்காட்சி மின்சார மேலாண்மை சமிக்கை முறை என்று பொருள்படும் (Display Power Management Signaling) என்ற சொல் தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கணினி செயல்படாத போது காட்சித்திரை ஒய்வு அல்லது இடைநிறுத்த நிலையில் இருக்கும். அப்போது மிகக்குறைந்த மின்சாரத்தையே எடுத்துக் கொள்ளும். வேஸா (VESA) நிறுவனத்தின் தர வரையறையாகும் இது. draft : வரைவு நகல். draft mode : நகல் பாங்கு : பெரும்பாலான புள்ளியணி அச்சுப் பொறிகளில் இருக்கின்ற குறைந்த தரமுடைய அதிவேக அச்சுக்கான அச்சுமுறை. draft quality : வரைவு தரம் : அச்சிடப்பட்ட வெளியீடுகளின் தரத்தின் அளவு அதிவேக அச்சிடும் முறையை இது குறிப்பிடுகிறது. அதிவேக அச்சிடல் என்பதால் எழுத்துகள் தெளிவாக இல்லாமல் இருக்கும். வேலை செய்யும் பிரதிகள் எடுக்க சரியாக இருக்கும். ஆனால், இறுதி நகலுக்கு ஏற்றதல்ல. drag : இழு : பொத்தானைக் கீழே வைத்துப் பிடிக்கும்போது 'மெளஸ்' எனும் சுட்டியை (அம்புக்குறி) நகர்த்தும் செயல். கணினி காட்சித் திரையில் பொருள்களை கையாள அல்லது நகர்த்தப் பயன்படுத்தப் படுகிறது. drag and drop : இழுத்து விடுதல்;இழுத்துப் போடுதல் : வரைகலைப் பணித்தளத்தில் மேற்கொள்ளப்படும் ஒரு செயல்பாடு, திரையில் தோன்றும் ஒரு பொருளை சுட்டியின் மூலம் இழுத்துச் சென்று வேறிடத்தில் இருத்திவைத்தல். (எ-டு) விண்டோஸ் இயக்க முறைமையில் ஒரு கோப்பினை அழிக்கவேண்டுமெனில், கோப்புக்கான சின்னத்தை இழுத்துச் சென்று Recycle Bin எனப்படும் மீட்சிப் பெட்டியில் போட்டு விடலாம். மெக்கின்டோஷில் கோப்புச் சின்னத்தை Trashcan எனப்படும் ஒழிவுப் பெட்டியில் போட்டு விடலாம். dragging : இழுத்துவரல் : காட்டப்படும் வரைகலைப் பொருள் சுட்டும், இடஞ்சூட்டும் கருவியை (கர்சரை) பின் பற்றி வருமாறு செய்யும் தொழில் துட்பம். சுட்டுக் கருவி பொத் தானைக் கீழிறக்கிப் பிடித்து சுட்டும் கருவியை நகர்த்தும் போது இவ்வாறு செய்யுமாறு சில கணினிகள் இயங்குகின்றன. drain : சேரிடம்; வடிகால் : களச் செயல்பாட்டு மின்மப் பெருக்கிகளுடன் இணைக்கும் முகப்புகளில் ஒன்று. மற்ற இரண்டும் மூல மற்றும் வாயில் மின்மப் பெருக்கி. சக்தி எடுத்து வருபவை நேர் மின்னாக இருந்தால், மின்சக்தி மூல இடத் திலிருந்து சேரிடத்திற்குப் போய்ச் சேரும். DRAM : டிராம் : Dynamic RAM என்பதன் குறும்பெயர். 'DRAW : டிரா : எழுதியபின் நேரடி வாசிப்பு என்று பொருள் படும் Direct Read After Write என்ற சொல் தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஒர் ஒளிவட்டில் எழுதப்பட்ட தர வின் துல்லியத்தைச் சோதித் தறிய, வட்டில் எழுதப்பட்டவு டனே, சரியாக உள்ளதா என் பதைப் பரிசோதிப்பர். இதற் கான தொழில் நுட்பமே டிரா ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கணினி_களஞ்சிய_அகராதி-2/V&oldid=1085162" இலிருந்து மீள்விக்கப்பட்டது