கணினி களஞ்சிய அகராதி-2/W
drawing : வரைதல் : ஒரு கணினியின் வரைகலை திறன்களைப் பயன்படுத்தி வரைகலை முறையில் வடிவங்களை உருவாக்குதல். கணினி வரைகலை அமைவினால் கோடுகளை உருவாக்குதல் அல்லது வடிவம் மற்றும் வண்ணம் அளிக்கும் நிரலாக்கத் தொடர்களுடன் ஒரு துல்லியமான வரைபடம் வரையமுடியும்.
drawing programme : ஓவிய நிரல் : பொருள் அடிப்படையிலான வரை கலைப் படங்களைக் கையாள்வதற்கான ஒருநிரல். படப்புள்ளிகளால் (pixels) வரையும் படங்களைக் கையாள்வதிலிருந்து மாறுபட்டது. எடுத்துக்காட்டாக, ஒவிய நிரலில், பயனாளர் கோடு, சதுரம், செவ்வகம், வட்டம், ஒர் உரைத் தொகுதி ஆகியவற்றை தனித்த பொருள்களாகக் கையாளலாம். அவற்றைத் தேர்வு செய்து நகர்த்தலாம், மாற்றலாம், வண்ணம் தீட்டலாம் (எ-டு) விண்டோஸ் 95/98 இயக்க முறையில் உள்வினைக்கப்பட்டுள்ள பெயின்ட் (Paint).
draw perfect : முழுநிறைவு வரைபடம் : IBM இசைவுடைய நுண் கணினிகளுக்கான ஒருவரைவுச் செயல் முறை. இந்த வரைபடச் செயல்முறை 256 வண்ணங்களைக் கொடுக்கிறது. இது, இருபரிமாண பட்டை, கலவை அச்சுப்படிவ, வரைபட படங்களை உருவாக்குகிறது.
DRDW : டிஆர்டிடபிள்யூ : எழுதும் போதே நேரடியாகப் படித்தல் என்னும் பொருள்படும் Direct Read During Write என்ற சொல்தொடரின் தலைப்பெழுத் துக் குறும்பெயர். ஒர் ஒளி வட்டில் எழுதும்போதே பதிவின் துல்லியத்தை சரிபார்க்க இத்தொழில்நுட்பம் பயன்படுகிறது.
dribbleware : முன்னோட்ட மென்பொருள் : விற்பனைக்குவெளியிடப் படுவதற்கு முன்னதாகவே பகிரங்கமாகக் காட்சிக்கு வைக்கப்பட்டுப் பொது மக்களால் பார்க்கப்படும் மென்பொருள். இது, மறை மென்பொருள் (vapourware) என்பதிலிருந்து ஒரு படி அபபாற்பட்டது.
drift : விலகல் : ஒரு மின்சுற்றின் வெளியீட்டில் எற்படும் மாற்றம் மெதுவாக ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படும்.
dril down : துருவிச் செல்லுதல் : சுருக்கத் தரவுகளிலிருந்து அதை உருவாக்கிய விவரமான தரவுகளுக்கு ஆழமாகத் துருவிச் செல்லுதல்.
drill-and-practice programme : துருவிப் பழகும் செயல்முறை : பழைய பாடங்களை வலுப்படுத்தும் மென்பொருள்களைக் கற்பித்தல்.
drive : இயக்கி;முடுக்கி : வட்டு அல்லது டிஸ்கில் தரவுகளை எழுதவும் அல்லது தரவுகளைப் படிக்கவும் தேவையான பருப்பொருள்.
drive bay : இயக்கித் தடம் : ஒரு கணினிப் பேழையில் வட்டு இயக்கிக்காக உள்ள துளை விளிம்பு.
drive change : இயக்ககம் மாற்று.
drive converter : இயக்கக மாற்றி.
drive cartridge : இயக்கக பேழை.
drive, disk : வட்டு இயக்ககம்.
drive door : இயக்கிக் கதவம் : ஒர் வட்டு இயக்கியில் ஒரு வட்டினைப் பூட்டி வைக்கப்பயன் படுத்தப்படும் சேணம், வாயில் அல்லது நெம்புகோல். ஒரு 13. 33 செ. மீ. செருகுவட்டு இயக்கியில் இந்தக் கதவம் ஒரு நெம்புகோல். இது வட்டினைச் செருகிய பிறகு தடத்தின் மீது கீழ்நோக்கி திருப்பப்படுகிறது.
drive identified : இயக்கி அடையாளம் காட்டி.
drive letter : இயக்கக எழுத்து : ஐபிஎம் மற்றும் ஒத்திசைவுக் கணினிகளில் இயக்ககங்களுக்கான பெயரைத் தேர்வு செய்யும் மரபுமுறை. இயக்ககங்களுக்கு A-யில் தொடங்கி பெயர்கள் சூட்டப்படுகின்றன. எழுத் துக்குப்பின் முக்காற்புள்ளி இடப்பட வேண்டும். (எ-டு). A : , C : , D :
drive mapping : இயக்ககப் பெயரீடு : ஒரு கணினியிலுள்ள இயக்ககங் களுக்கு பெயர் சூட்டல். ஒரெழுத்தாகவும் இருக்கலாம். ஒரு பெயராகவும் இருக்கலாம். இயக்க முறைமை அல்லது பிணைய வழங்கன் இந்தப் பெயரைக் கொண்டே அந்த வட்டகத்தை அடையாளம் காணும். எடுத்துக்காட்டாக, பீசிக்களில் எப்போதுமே நெகிழ்வட்டு இயக்ககங்கள் A : , B என்றும், நிலை வட்டகம் C : என்றும் பெயர் பெறுகின்றன.
drive number : இயக்கி எண்;இயக்கக எண் : கணினி அமைப்பில் உள்ள வட்டு இயக்கிகளில் ஒன்றுக்குக் கொடுக்கப்படும் எண் மதிப்பு.
driver : இயக்கி;செலுத்தி : கணினியில் ஒரு சாதனத்தை இயக்கும் அல்லது கட்டுப்படுத்தும் அல்லது முறைப்படுத்தும் இன்னொரு வன்பொருள் சாதனம் அல்லது மென்பொருள் நிரல், எடுத்துக்காட்டாக, ஒரு தட இயக்கி, தொலை தொடர்புத் தடத்தில் அனுப்பப்படும் சமிக்கைகளை திறன் மிகுத்துத் தரும். விசைப்பலகையிலுள்ள விசைகள் இன்ன விதமாக இயங்க வேண்டும் என் பதை அதற்குரிய இயக்கி நிரலே தீர்மானிக்கிறது. அதனை விசைப்பலகை இயக்கி (keyboard driver) என்று அழைக்கிறோம். இதுபோல அச்சுப் பொறியை வழிநடத்த இயக்கி உள்ளது. கணினி, அதனுடன் இணைக்கப்பட்ட புறச் சாதனங்களோடு ஒத்திசைவுடன் செயல் பட உதவும் இயக்கிகள் சாதன இயக்கிகள் (Device Drivers) எனப்படுகின்றன.
driver manager : இயக்கி மேலாளர்.
drive specifier : இயக்கி குறியீடு : ஒரு வட்டு இயக்கியை A, B போன்ற வடிவில் பெயர் கட்டுகிறது. ஒர் இரு எண்மி (எட்டியல்) நெறியம்.
drive Z : இயக்கி-Z : ஒரு IBM அல்லது IBM இசைவுடைய சொந்தக் கணினியின் மீதான கடைசித் தருக்கமுறை நிலை வட்டு இயக்கி வடிவமைப்பி. கோட்பாட்டு முறையில், ஒரு சொந்தக் கணினியில் அல்லது சொந்த இசைவுக் கணினியில், A முதல் Z வரையிலான 26 செருகு மற்றும் நிலை வட்டுகளைக் கொள்ளலாம்.
driving chains : இயக்கு சங்கிலி.
DRO : டிஆர்ஓ : Destructive Read 0ut என்பதன் குறும்பெயர்.
droid : மனித எந்திரம்;எந்திரன் : மனிதரைப் போன்ற தோற்றமுள்ள எந்திர மனிதன், ராய்டு ஆண் அல்லது கைனாய்டு பெண் உருவாக்கப்படுதல்.
drop : தொங்கட்டம்;இணைப்பு முனை : ஒர் இணையத்தில் ஒரு சேய்மை முனைய அமைவிடம். ஒரு கணினி காகிதத்தின் உச்சிக்கும் அடிக்குமிடையிலுள்ள தொலைவு. இது மில்லி மீட்டரில் அல்லது அங்குலத் தில் அளவிடப்படுகிறது.
drop cap : தொங்கல் முகடு : அச்செழுத்துருவாக்கக் கலையில், முதல் வரிக்குக் கீழே தொங்கிநிற்கும் ஒரு பெரிய முதலெழுத்து.
drop dead halt : மீளா நிலை;உயிரற்ற நிறுத்தம் விழுதல் : மீண்டும் சரி செய்ய முடியாதவாறு நிறுத்தப்படுதல்.
drop down menu : கீழ்தொங்குப் பட்டியல் : நிரந்தரமாக திரையில் தெரிந்து கொண்டிராத ஒரு பட்டியல், ஒர் உயர்நிலைப் பட்டியல் தூண்டப்படும்போது மட்டுமே ஒரு கீழ் தொங்கு பட்டியல் தோன்றுகிறது. drop in : உரு பிழையுரு : ஒன்று அல்லது மேற்பட்ட துண்மிகளை வட்டு இயக்கி அல்லது நாடா இயக்கி, தவறாகச் சேமித்தல் அல்லது படித்தலின் விளைவாக, ஒரு கோப்பில் அல்லது ஒரு அச்சுவெளியீட்டில் அல்லது ஒரு காட்சித்திரையில் தோன்றும் பிழையான எழுத்துகள்.
droplet : டிராப்லெட் : 1. குவார்க் எக்ஸ்பிரஸ் தொகுப்பில் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ள ஒரு வசதி. ஃபைண்டரிலிருந்து கோப்புகளை இழுத்து வந்து ஆவணத்தின் ஒரு பக்கத்தில் இணைத்துவிட முடியும். 2. ஃபிரன்டியர் (Frontier) தொகுப்பில் உள்ள வசதி. ஒரு பயன்பாட்டினுள்ளே கட்டளை வரி களை உள்ளிணைத்து, அப்பயன் பாட்டினை இரட்டைக் கிளிக் செய்யும்போது, கட்டளை வரிகள் இயங்குமாறு செய்ய முடியும். 3. ஒரு கோப்பினை இழுத்து வந்து போடுவதற்கு அனுமதிக்கிற எந்தவொரு ஆப்பிள் ஸ்கிரிப்ட் நிரலும் இப்பெய ராலேயே அழைக்கப்படுகிறது.
drop out : விடுபிழையுரு : 1. தரவு அனுப்புவதில், சமிக்கை திடீரென்று காணாமல் போதல். இரைச்சல் அல்லது அமைப்பில் செயற்கோளாறு ஏற்படுவதன் காரணமாகவே இது ஏற்படுகிறது. 2. ஒன்று அல்லது மேற் பட்ட துண்மிகளை வட்டு இயக்கி அல்லது நாடா இயக்கி தவறாகப் படித்து அல்லது சேமித்ததன் விளைவாக, காட்சித்திரையில் அச்சு வெளியீடு அல்லது கோப்பில் இருந்து மறைந்துபோகும் எழுத்து.
drop shadow : தொங்கல் நிழல்.ஒர் உருக்காட்சிக்குப் பின்புறம், கிடைமட்டத்தில் சற்றே பக்கவாட்டிலும், செங்குத்தாகவும் விழும்படி செய்யப் பட்டுள்ள ஒரு நிழல். இது, உச்சியிலுள்ள உருக்காட்சியானது பக்கத்தின் மேற்பரப்பிலிருந்து உயர்த்தப்பட்டிருப்பது போன்ற முப்பரிமாண தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
dross : பயனற்ற வரி : மோசமான செயல்முறைப்படுத்துதல்/உத்தி அல்லது அடிக்கடி செய்த மாற்றமைவுகள் காரணமாக ஒரு செயல் முறையில் விட்டு விடப்பட்டுள்ள தேவைக்கு மிகையான குறியீட்டு வரிகள்.
drouple : தொழில் முனைவர் : செயல் முறையாளர்கள், தரவு செய்முறைப்படுத்தும் தொழில் முறையாளர்களின் மத்தியில் நேரங்கழிக்க விரும்பும் ஆள்.
drum : உருளை : 1. தொடக்ககாலப் பெருமுகக் கணினிகளில் தரவுகளைச் சேமித்து வைக்கும் காந்த ஊடகமாகப் பயன்பட்டது. 2. சில அச்சுப்பொறிகளிலும், வரைவு பொறிகளிலும் (Plotter) பயன்படுத்தப்படும் சுழலும் உருளை. 3. லேசர் அச்சுப்பொறியில் ஒளிமின் பொருள் பூசப்பட்ட சுழலும் உருளை பயன்படுகிறது. லேசர் கதிர்கள் ஒளிமின் பூச்சின்மீது தாக்கும்போது, அந்த இடம் மின்னுட்டத்தைத் தக்கவைத்துக் கொள்கிறது. உருளையின்மீது மின்னூட்டம் பெற்ற பகுதிகள், மைப்பொடித் துகள்களை ஈர்க்கின்றன. பின் உட்செலுத்தப் படும் தாளின்மீது அத்துகள்கள் படிய வைக்கப்படுகின்றன.
drum, magnetic : காந்த உருளை.
drum plotter : உருளை வரைவி : தானியங்கியாகக் கட்டுப்படுத்தப்படும் பேனாக்களைக் கொண்டு காகிதத்தில் வரை கலைகள், படங்கள், திட்டப் படங்கள் போன்றவற்றை வரைகின்ற வெளியீட்டுச் சாதனம். சிலிண்டர் வடிவ உருளையில் கற்றப்பட்டுள்ள காகிதம் முன்னும், பின்னுமாக மாறுபடும் வேகங்களில் செல்ல, மேல்கீழாக நகரும் பேனாக்கள் காகி தத்தில் படங்களை வரைந்துகொண்டே செல்கின்றன.
drum printer : உருளை அச்சுப்பொறி : அகரவரிசை எண் எழுத்துகளை உடைய உருளையைப் பயன்படுத்தும் அச்சிடும் சாதனம், ஒரு நிமிடத்தில் பல்லாயிரம் வரிகள் அச்சிடும் வரி அச்சுப்பொறி.
drum scanner : உருளை வருடு பொறி : வருடுபொறிகளில் ஒரு வகை. வருடப்படவேண்டிய அச்சடித்த தாள் உருளையின்மீது சுற்றப்பட்டுத் தரவு கணினிக்கு அனுப்பப்படுகின்றது.
drum sorting : உருளை பிரிப்பு : பிரிக்கும்போது துணை சேமிப்பகமாக காந்த உருளைகளைப் பயன்படுத்தும் பிரிக்கும் நிரலாக்கத்தொடர்.
drum storage : உருளைச் சேமிப்பகம்.
. drv : . டிஆர்வி : இயக்கிக்கோப்புகளின் வகைப்பெயர்..
dry plasma etching : உலர் பிளாஸ்மா செதுக்கல்;உலர் மின்மப் பொறிப்பு : ஒரு மென் தகட்டின் மீது மேற்பகுதியை ஏற்படுத்துதல்.
dry run : உலர் ஒட்டம் : எழுதப் நிரல்களிலிருந்து நிரலாக்கத் தொடர் அமைத்து, குறியீடு இடுதல், பின்னர் அதன் இயக்கத்தின் ஒவ்வொரு நிலை யிலும் முடிவைச் சோதித்துப் பதிவு செய்தல். கணினியில் நிரலாக்கத் தொடரை செயல் படுத்துவதற்கு முன் செய்யப்படும், நிரலாக்கத் தொடர் சோதிக்கும் தொழில் நுட்பம்.
dry running : உலர் ஓட்டம்;வெள்ளோட்டம்.
DSA : டிஎஸ்ஏ : கோப்பக முறைமை முகவர் அல்லது கோப்பக வழங்கன் முகவர் என்று பொருள்படும் Directory System Agent/Directory Server Agent என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். எக்ஸ். 500 வழங்கன்களில் பயன் படுத்தப்படும் ஒருநிரல். டியூஏ (DUA-Directry User Agent) என்னும் கிளையன் நிரல் அனுப்பும் கோரிக்கையின் அடிப்படையில் பிணையத்தில் ஒரு பயனாளரின் முகவரியைத் தேடித் தரும் நிரல்.
DՏԼ : டிஎஸ்எல் : Dynamic Simulation Language என்பதன் குறும்பெயர்.
DSR : டிஎஸ்ஆர் : தரவுத் தொகுதி தயார் என்று பொருள்படும் Data Set Ready என்ற சொல் தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். தொடர் வரிசைத் தரவுத் தொடர்பில் அனுப்பப்படும் ஒரு சமிக்கை. ஒர் இணக்கி அது இணைக்கப்பட்டுள்ள கணினிக்கு தான் பணியாற்றத் தயாராக இருக்கும் நிலையைத் தெரிவிக்கும் சமிக்கை. ஆர்எஸ்-232-சி இணைப்புகளில் தடம் 6-ல் அனுப்பப்படும் வன்பொருள் சமிக்கை.
DTE : டிடீஇ : தரவு முனையக் கருவி என்று பொருள்படும் Data Terminal Equipment என்ற சொல் தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஆர்எஸ்-232-சி வன்பொருள் தர வரையறையில், ஒரு வடத்தில் அல்லது ஒரு தரவுத்தொடர்புத் தடத்தில், தகவலை இலக்க முறை வடிவில் அனுப்பத் திறன்வாய்ந்த நுண்கணினி அல்லது முனையம் போன்ற ஒரு சாதனத்தைக் குறிக்கிறது.
DTL : டிடிஎல் : Diode Transistor Logic என்பதன் குறும்பெயர். அரைக்கடத்தி டையோடுகள் மற்றும் மின்மக் கடத்திகளுக்கு இடையிலான நுண் மின்னணு அளவை முறை சார்ந்த இணைப்புகள்.
DTV : டிடீவி : மேசைக் கணினி ஒளிக்காட்சி என்று பொருள்படும் Desk Top Video என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பிணையத்தில் நிகழ்படக் கலந்துரையாடலுக்காக ஒளிப்படக் கருவியின் பயன்பாட்டைக் குறிக்கிறது. DUA : டியூஏ : கோப்பகப் பயனாளர் முகவர் என்று பொருள்படும் Directory User Agent என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இது ஓர் எக்ஸ். 500 கிளையன் நிரல். இது, பிணை யத்திலுள்ள ஒரு பயனாளரின் முகவரியைத் தேடித் தருமாறு டிஎஸ்ஏ-வுக்குக் கோரிக்கை அனுப்பும்.
dual boot : இரட்டைச் செயல்பாடு : இரு மாறுபட்ட செயற்பாட்டுப் பொறியமைவுகளில் ஏதாவதொன்றுடன் தொடங்கப் படக்கூடிய கணினி.
dual channel controller : இரட்டை தடக்கட்டுப் பாட்டுப் பொறி : ஒரே நேரத்தில் ஒரு சாதனத் தில் இருந்து படித்தல், எழுதுதல் ஆகிய இரண்டை யும் இயங்கச் செய்யும் கட்டுப்பாட்டுப் பொறி.
dual density : இரட்டை அடர்த்தி : 1. அடர்த்தி யாக தரவுகளைப் பதிவு செய்ய உதவும் காட்சி வட்டின் நாடாக்களைக் குறிப்பிடுகிறது. 2. இரு புறமும், பதியக்கூடிய திறனுள்ள வட்டுத் (ஃபிளாப்பி) தட்டு.
dual disk drive : இரட்டை வட்டு இயக்ககம் : ஒரு கணினியிலுள்ள இரண்டு நெகிழ்வட்டு இயக்ககங்களைக் குறிக்கிறது.
dual in line package : DIP : இரட்டை வரிசைப் படிப்பொதிவுகள் : சிப்பு ஏற்றப்பட்டிருக்கும் புகழ் பெற்ற ஒருங்கிணைந்த மின்சுற்றுவகை. சிப்புவை மின்சுற்று அட்டையில் சொருகுவதற்கு வேண்டிய பின் இணைப்புகளையும் ஒருங்கிணைந்த மின் சுற்றுக்கான பாதுகாப்புக் கவசம்.
dual intensity : இரட்டைத் திறன் : வழக்க மான அல்லது தடித்த எழுத்துகளில் எழுத்துகளை வெளியிடும் திறனுள்ள அச்சுப்பொறிகள் அல்லது முனையங்கள்.
dual port memory : இருதிற நினைவுப் பதிப்பி : இரு மாறுபட்ட வழிகளில் ஒரே சமயத்தில் அணுகக்கூடிய நினைவுப் பதிப்பி,
dual processing : இரட்டைச் செயலகம் : ஒரு கணினி அமைப்புக்குள் இருந்து கொண்டு ஒரே நேரத்தில் வேலை செய்யும் திறனுடைய இரண்டு மையச் செயலக அலகுகள். இரண்டு நுண் செயல கங்களும் ஒரே நுண்கணினியில் இருந்துகொண்டு இரண்டு சிப்புகளிலுமே செயல்படுமாறு வடிவமைக் கப்பட்ட மென்பொருள்.
dual processor : இரட்டைச் செயலி;இரட்டைச் செய்முறைப்படுத்தி. dual scan display : இரட்டை வருடு திரைக்காட்சி : மடிக்கணினிகளில் பயன்படுத்தப்படும் எல்சிடி (LCD-Liquid Crystal Display) காட்சித் திரையின் தொழில்நுட்பம். இயங்காஅணி (Passive Matrix) அடிப்படையிலான நுட்பம் இது. திரையின் புதுப்பித்தல் விகிதம் மற்ற காட்சித் திரைகளைவிட இரு மடங்கு வேகம் ஆகும். இயங்கு அணி (Active Matrix) அடிப்படையிலான தொழில்நுட்பத்தோடு ஒப்பிடுகையில், இரட்டைவருடு திரைக்காட்சி மிகவும் சிக்கனமானது;குறைந்த அளவு மின்சாரத்தையே எடுத்துக் கொள்ளும். ஆனால் அதேவேளையில், தெளிவு குறைவாகவும், குறைந்த பார்வைக் கோணமும் கொண்டதாக இருக்கும்.
dual sided disk drives : இருபுற வட்டு இயக்கிகள் : வட்டின் மேல், கீழ் ஆகிய இருபுறங்களிலும் தரவுகளைச் சேமிக்கவும் திரும்பிப் பெறவும் இரண்டு படி/எழுதுமுனைகளைப் பயன்படுத்தும் வட்டு இயக்கிகள்.
duct : செல்வழி : அகற்றக்கூடிய பொதியுறையினையுடைய கம்பி களுக்கான ஒரு செல்வழி.
dump, automatic hardware : தானியங்கு வன்பொருள் திணிப்பு.
dumb quotes : ஊமை மேற்கோள்;மருங்கல் மேற்கோள் : ஒரு சொல் அல்லது தொடரின் தொடக்கத்தில் இருக்கும் மேற்கோள் குறியும், இறுதியில் இருக்கும் மேற்கோள் குறியும் ஒன்று போலத் தோற்றமளித் தல் (தட்டச்சுப் பொறியில் இருப்பதுபோல). கணினிவிசைப் பலகையிலும் ஒற்றை மேற்கோள் குறியும், இரட்டை மேற்கோள் குறியும் ஒரு பக்கக் குறியாகவே இருக்கும். அவற்றை என்பது போல இருபக்கக் குறிகளாக மாற்றுவதற்கு எம்எஸ்வேர்டு போன்ற மென்பொருள் தொகுப்பு களில் வசதி உண்டு. இருபக்கக்குறிகளை துடிப்பான மேற்கோள் (smart quotes) என்பர்.
dumb terminal : ஊமை முனையம்;ஊமை முகப்பு : குறைந்த உள்ளீடு/ வெளியீடு திறன்களும் செயலாக்கத் திறமைகள் எதுவுமின்றி வரும் ஒளிக்காட்சி முனையம்.
dummy : போலி;வெற்று : குறிப்பிட்ட நிபந்தனைகளை நிறைவேற்று வதற்காகவென்றே நுழைக்கப்படுகின்ற செயற்கை வாக்குவாத நிரல், முகவரி அல்லது தரவுப் பதிவேடு.
dummy argument : போலி வாக்குவாதம்;வெற்று இணைப்புரு;போலி வாத முறை : எந்த மதிப்புகளும் இல்லாத செயல் வாக்குவாதங்களாகப் பயன்படுத்தப்படும் மாறிகள்.
dummy instruction : போலி நிரல்;வெற்று நிரல் : 1. நிரலாகச் செயல்படுத்தப்படுவதைத் தவிர ஒரு நோக்கத்திற்காக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள செயற்கை நிரல் அல்லது முகவரி, 2. ஒரு வழக்க நிரலில் உள்ள நிரல். தானாக அது எதையும் செய்யாது. ஆனால், ஒரு நிரலாக்கத் தொடரினை முடித்து வைப்பதற்கு ஒரு முனையாக அமையும்.
dummy module : வெற்று அடுக்கு;போலி மிச்சவகை (மாடுல்) : உண்மையான செயலாக்கம் இல்லாத நுழைதல் அல்லது வெளியேறுதலைக் கொண்ட மிச்ச வகையின் (மாடுலின்) மாதிரி. கீழ்நிலை, கீழ்ப்பணிகள் ஒருங்கிணைய தயாராக இல்லாத நிலையில் மேலிருந்து கீழாகச் சோதனை செய்வதற்கு இது குறிப்பாகப் பயன்படுகிறது.
dummy routine : வெற்று துணை நிரல்;வெற்று வாலாயம் : இந்தத் துணைநிரல் எப்பணியையும் செய்யாது. ஆனால் ஒரு துணை நிரலுக்குரிய சொல் தொடர் அமைப்புகளைப் பெற்றிருக்கும். செயல்பாட்டுப் பகுதி மட்டும் வெற்றாக இருக்கும். (எ-டு) ). Private Sub Command-Click End Sub என்பது விசுவில் பேசிக்கில் ஒரு வெற்றுத் துணை நிரல். பின்னாளில் வெற்றுத் துணைநிரலில் கட்டளை வரிகளைச் சேர்த்து அதனைப் பயனுள்ள துணைநிரலாய் மாற்றிக் கொள்ளலாம். மேலிருந்து கீழ் (Top-Down) நிரலாக்க முறையில் இது போன்ற வெற்றுத் துணை நிரல்களை உருவாக்கி வைத்துக் கொண்டு, நிரலாக்கம் வளர்ச்சி பெறும் கட்டத்தில் அவற்றைப் பயனுள்ள துணை நிரல்களாய் மாற்றியமைப்பர்.
dummy variables : வெற்று மாறியல் மதிப்புருக்கள்;போலி மாறியல் மதிப்புருக்கள் : செயற்பணி வாதவுரைகளுக்கு குறித்தளிக்கப்படும் உறவு நிலைகளை ஏற்படுத்துகிற, DEFFN கட்டளையிலுள்ள மாறியல் மதிப்புருக்கள். ஒரு மாறியல் மதிப்புருவின் பெயராகப் பயன்படுத்த வேண்டிய ஒர் அமை விடத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மாறியல் மதிப்புருவையும் இது குறிக்கும். ஆனால் அந்த மாறியல் மதிப்புருவின் உள்ளடக்கத்தினால் செயல்முறையில் எந்த விளைவும் ஏற்படுவதில்லை. dump : சேமிப்பு;திணி;கொட்டு : திணிக்கும் செயலாக்கத்தின் விளைவாக ஏற்படும் தரவுகள் ஒரு சேமிப்பகச் சாதனத்திலிருந்து வேறொரு சேமிப்பகச் சாதனத்திற்கோ அல்லது அச்சுப் பொறிக்கோ உள்ளடக்கங்களை மாற்றி நக லெடுப்பதை இது குறிப்பிடுகிறது.
dumping : திணித்தல்;கொட்டுதல் : சேமிப்பகத்தில் உள்ளவை முழுவதும் அல்லது பகுதியை நகலெடுத்தல். கணினியின் உள்சேமிப்பகத்திலிருந்து துணை சேமிப்பகத்திற்கோ அல்லது வரி அச்சுப்பொறிக்கோ மாற்றுவதை இவ்வாறு குறிக்கலாம்.
duodecimal : இரட்டை பதிமம் : நிலைகள் அல்லது இலக்கங்களுக்கு உள்ள 12 மாறுபட்ட மதிப்பளவுகள் உள்ளன. இவற்றிலிருந்து தேவை யானதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
duplex : இருதிசை இயங்கு வழித்தடம்;இருவழித்தடம் : ஒரே நேரத்தில் இரண்டு திசைகளிலும் தரவுத்தொடர்பு அனுப்புவதை அனுமதிக்கும் தரவுத் தொடர்பு வழித்தடம்.
duplex channel : இருதிசைத் தடம் : இருதிசையிலும் தரவை அனுப்பப்/பெற வசதியுள்ள தரவுத் தொடர்பு இணைப்பு.
duplexing : மாற்றமைத்தல்;இரட்டை வழியாக்கம் : ஒரு கருவி செயலிழந்தால் மாற்றுக் கருவியைக் கொண்டு கணினி தொடர்ந்து இயங்கச் செய்ய மின் சுற்று அல்லது கணினியின் வெளிப்புறக் கருவிகளுக்கு மாற்றுக் கருவியைப் பயன்படுத்துதல்.
duplex operation : இருமடிச் செயற்பாடு : தரவுகள் இருதிசைகளிலும் செல்வதற்கு அனுமதிக்கும் ஒர் அனுப்பீட்டு முறை. இது, அச்சடித்த எழுத்தினைக் கணினிக்கு அனுப்புகிற அதே சமயத்தில் திரையிலும் காட்சி யாகக் காட்டுகிறது. பாதி இருமடி என்பது இரு திசைகளிலும் செல்ல அனுமதிக்கிறது;ஆனால் ஒரே சமயத்தில் அன்று.
duplex printer : இருதிசை அச்சுப்பொறி : பொதுவாக, அச்சுப்பொறிகளில் அச்சு முனை (print head) ஒரு திசையில் மட்டுமே அச்சிடும். இடப்புற மிருந்து வலப்புறம் அச்சிட்டுச் செல்லும். பிறகு அச்சுமுனை அச்சிடாமல் இடப்பக்கம் திரும்பி வரும். பிறகு முன் போல வலப்பக்கம் வரை அச் சிட்டுச் செல்லும். சில அச்சுப்பொறிகளில் இரு திசைகளிலும் அச்சிடும்படி அமைத்திருப்பர்.
duplex printing : இருமடி அச்சடிப்பு : ஒரு தாளின் இரு பக்கங்களிலும் ஒர் ஆவணத்தை அச்சடித்தல். இதனால், ஆவணம் கட்டுமானம் செய்யப்பட்ட பிறகு, இட, வலப்பக்கங்கள் ஒன்றையொன்று எதிர்நோக்கியவாறு இருக்கும்.
duplexed system : இருவழியாக்க பொறியமைவு;இருமடியாக்கிய பொறியமைவு : செயற்பணியில் ஒரு படித்தாக இருக்கும் இரு பொறியமைவுகள். அவை இரண்டும், ஒரே செயற்பணியைச் செய்யலாம்; அல்லது மற்றொன்று செயலிழக்கும் போது ஒன்று செயற்பட ஆயத்த மாக இருக்கும்.
duplicate : நகலெடு : மூல வடிவம் போலவே பரு வடிவத்தில் முடிவுகள் ஒன்றாக இருக்கும் வண்ணம் நகல் எடுத்தல். மூல டிஸ்கெட்டில் உள்ள அதே வடிவமைப்பில், அதே தரவுவைக் கொண்டதாக புதிய வட்டினை உருவாக்குதல்.
duplicate keys : இருமடி விடைக்குறிப்புகள் : ஒரு கோப்பிலுள்ள ஒரு படித்தான விடைக் குறிப்புகள். கணக்கு எண் போன்ற அடிப்படை விடைக் குறிப்புகளை இருமடியாக்கம் செய்யமுடியாது. ஏனென்றால், இரு வாடிக் கையாளர்களுக்கு அல்லது பணியாளர்களுக்கு ஒரே எண்ணைக் குறித்தளிக்க முடியாது. தேதி, பொருள், நகர் போன்ற துணை விடைக்குறிப்புகளை கோப்பில் அல்லது தரவுத் தளத்தில் இருபடியாக்கம் செய்யலாம்.
duplication check : இரட்டிப்பாதல் சோதனை;மறு சரிபார்ப்பு : ஒரே இயக்கத்தை இரண்டுமுறை தனித்தனியாகச் செய்தபோதிலும் அதன் விளைவுகள் ஒரே மாதிரியாக இருக்கும் என்பதற்கான சோதனை. வேறொரு கருவியில் ஒரே நேரத்தில் இதைச் செய்யலாம் அல்லது அதே கருவியில் வெவ்வேறு தடவைகளில் செய்யலாம்.
duration : கால நீட்சி : ஒரு பணியைச் செய்து முடிப்பதற்கு எடுத்துக் கொள்ளப்படும் செயற்பணி நேர அளவு.
dust cover : தூசு உறை;தூசு காப்புறை : நுண்கணினிகள், வட்டு இயக்கிகள், முகப்பு அச்சுப்பொறிகள் போன்றவற்றின் மோசமான எதிரிகளிட மிருந்து அவற்றைக் காப்பாற்றப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தூசு உறைகள்.
DVD : டிவிடி : Digital Versatile DisC/Digital Video DisC என்பவற்றின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். DVI or DV-I : டிவிஐ/டிவி-ஐ : இலக்க முறை ஒளிக்காட்சி இடைமுகம் என்று பொருள்படும் (Digital Video interface) என்ற சொல்தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஒரு கணினியின் நிலைவட்டில் அல்லது குறுவட்டில் ஒளிக் காட்சி, கேட்பொலி, வரைகலை மற்றும் பிற தரவுகளைப் பதிவு செய்வதற்குரிய வன்பொருள் அடிப்படையிலான இறுக்கும்/விரிக்கும் தொழில் நுட்பம். 1987ஆம் ஆண்டு ஆர்சிஏ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு 1988இல் இன்டெல் நிறுவனத்தால் வாங்கப்பட்டது. அதன்பிறகு இன்டெல் டிவிஐ-யின் மென்பொருள் பதிப்பை இன்டியோ (Indeo) என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.
Dvorak keyboard : டிவிஓஆர்ஏகே விசைப்பலகை : ஆகஸ்ட் என்பவரால் உருவாக்கப்பட்ட விசைப்பலகை. அதிகமாகப் பயன்படுத்தப்படும் எழுத்து களை விசைப்பலகையில் நடுவில் வைத்து வலுவான விரல்களால் அடிக்கச் செய்வதன் மூலம் பிழைகளைக் குறைத்து வேகத்தையும் வசதியையும் டிவிஒஆர்ஏகே விசைப்பலகை அளிக்கிறது. வழக்கமான கியூடபிள்யூஇ ஆர்டிஒய் (QWERTY) யைவிட இதில் விரல் அசைவுகள் 90 விழுக்காடு குறைகின்றன. 1936இல் இந்தமுறை பேடன்ட் செய்யப்பட்டாலும் 1982இல் அன்சியால் ஏற்கப்பட்ட பிறகே இது புகழ் பெற்றது. இந்த விசைப் பலகைதான் உயிர் எழுத்துகளான AEI0U-க்களை ஒன்றாக அமைத்துள்ளது. மைய வரிசையில் இடதுகையில் உயிர் எழுத்துகளும், வலதுகையில் DHTNS என்னும் அதிகமாக பயன்படுத்தப்படும் எழுத்துகளும் அமைந்துள்ளன.
dyadicஇருவினை;இரட்டை : இரண்டு இயக்கிகளைப் பயன்படுத்தும் இயக்கமுறை பற்றியது.
dyadic operation : இருவினை;இரட்டை இயக்கம் : இரண்டு இயக்கப் பொருளைக் கொண்ட இயக்கம்.
dyadic two : இரட்டை இணை : இரு அமைப்பிகளைப் பயன்படுத்து வதைக் குறிக்கும் தொடர்.
dye polymer recording : சாய மீச்சேர்மப் பதிவு : சாயமிட்ட பிளாஸ்டிக் படுகைகளைப் பதிவு ஊடகமாகப் பயன்படுத்தும் ஒளியியல் பதிவு உத்தி. சில ஒருமுறை எழுதி பன்முறை படிக்கப்படும் WORM சாதனங்களில் ஒற்றைச் சாய மீச்சேர்மப் படுகை பயன்படுத்தப்படுகிறது. அழித்திடக்கூடிய ஒளியியல் வட்டுகளில் உச்சி இருத்தி வைப்புப் படுகை, அடிநிலை விரிவாக்கப் படுகை என்ற இரு சாயமிட்ட பிளாஸ்டிக் படுகை கள் பயன்படுத்தப்படுகின்றன.
Dynaload drivers : நிகழ்நேர இயக்கிகள் : ஐபிஎம் பீசி டாஸ் 7 இயக்க முறைமையில் Dynaload என்ற கட்டளை உண்டு. டாஸ் சின்னத்தில் இக்கட்டளையைத் தந்து, சில சாதன இயக்கிகளை நினைவகத்தில் ஏற்றிக் கொள்ள முடியும். பொதுவாக, சாதன இயக்கிகள் config. sys என்னும் தானியங்கிக் கட்டளைக்கோப்பு மூலமாகவே நினைவகத்தில் ஏற்றப் படுகின்றன. கணினி இயக்கப்படும்போதே இது நிகழ்ந்து விடும். புதிதாக சாதன இயக்கி எதனையும் ஏற்ற வேண்டுமெனில் config sys கோப்பில் திருத்தம் செய்து மீண்டும் கணினியை இயக்கவேண்டும், ஆனால் Dynaload மூலம் config. sys கோப்பினைத் திருத்தாமலே சாதன இயக்கியை நினைவகத்தில் ஏற்ற முடியும்.
dynamic : இயங்குநிலை : மாஸ் (MOS) தாங்கிகளில் தரவு மின் சக்தியாக மாற்றும் மின்சுற்று. பொதுவாக நிலையற்ற தன்மைபுடைய, இதை அடிக்கடி புதுப்பிக்க வேண்டும்.
dynamic address translation (DAT) : இயங்குநிலை முகவரி மொழி பெயர்ப்பு (டாட்) ;இயங்கு நிலை முகவரி மாற்றம்;மெய்த்தோற்ற சேமிப்பு அமைப்புகளில், மெய்த்தோற்ற சேமிப்பு முகவரிகளை உண்மை சேமிப்பு முகவரிகளாக நிரல் இயக்கத்தின் மூலம் மாற்றுதல்.
dynamic allocation : இயங்கு நிலை ஒதுக்கீடு;நிகழ்நேர ஒதுக்கீடு : ஒரு நிரல் இயங்கிக் கொண்டிருக்கும்போதே தேவைக்கேற்ப நினைவகத்தில் இடம் ஒதுக்கீடு செய்தல். அவ்வாறு ஒதுக்கப்பட்டி நினைவகத்தை, நிகழ்நேரத்திலேயே விடுவிக்கவும் முடியும். இதனால் நிகழ்நேரத்தில் தேவையான தரவுக் கட்டமைப்புகளை உருவாக்கிக் கையாண்டு பின் விடுவிக்க முடிகிறது. பாஸ்கல், சி, சி++ போன்ற மொழிகளில் இதற்கான வழிமுறைகள் உள்ளன.
dynamic binding : இயங்கு நிலை கட்டுமானம் : ஒரு கண நேரத்திலுள்ள நிலைமைகளின் அடிப்படையிலான ஒட்ட நேரத்தில் ஒரு நிரல்கூறை அல்லது பொருளை இணைத்தல்.
dynamic caching : இயங்குநிலை இடைமாற்று : நிகழ்நேர இடைமாற்று : அடிக்கடி கையாள வேண்டிய தகவல்களை