கணினி களஞ்சிய அகராதி இரண்டாம் தொகுதி/M

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
M

.ma : .எம்ஏ ஓர் இணைய தள முகவரி மொராக்கோ நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

MacBinary : மேக்பைனரி : கோப்புப் பரிமாற்ற நெறிமுறை. மெக்கின்டோஷ் கணினிகளில் உருவாக்கப்பட்டு மெக்கின்டோஷ் அல்லாத கணினிகளில் சேமிக்கப் படும் கோப்புகளின் குறிமுறை யைப் பாதுகாக்கப் பயன்படுகிறது. இக்கோப்புகளில் கோப்பின் உள்ளடக்கப் பகுதி, தகவல் பகுதி, ஃபைண்டர் எனும் தேடுநிரலுக்கான பகுதி எனப் பிரிவுகள் இருக்கும்.

machine, accounting : கணக்குப் பொறி, கணக்கிடு எந்திரம்.

machine interruption : எந்திரக் குறிக்கீடு; எந்திர இடையீடு.

machine operator : எந்தர இயக்கர், பொறி இயக்குநர்.

machine time, available : கிடைக்கக் கூடிய எந்திர நேரம்; கிடைக்கும் பொறி நேரம்.

Macintosh Application Environemnt : மெக்கின்டோஷ் பயன்பாட்டுச் சூழல் : எக்ஸ் விண்டோஸின் சிஸ்டம் சாளரத்துக்குள்ளேயே மெக்கின் டோஷ் இடைமுகத்தை வழங்கக் கூடிய, ரிஸ்க் (RISC) செயலி அடிப் படையிலான முறைமைகளுக்குரிய ஒரு செயல்தள அமைப்பு (system shell). இது மேக் மற்றும் யூனிக்ஸ் ஆகிய இரு முறைமைகளுக்கும் ஒத்தியல்பானது. மெக்கின்டோஷில் செயல்படும் அனைத்துவகை செயல் தளத் தயாரிப்புகளுக்கும் ஏற்றது.

Macintosh File System : மெக்கின் டோஷ் கோப்பு முறைமை : தொடக்க காலங்களில் தட்டைக் கோப்பு முறைமையே (Flat File System) பயன் பாட்டில் இருந்தது. அதன்பிறகு படி நிலைக் கோப்பு முறைமை (Hierarchical File System) அறிமுகப் படுத்தப்பட்டது.

Mac OS : மேக் ஓஎஸ் : மெக்கின் டோஷ் இயக்க முறைமை எனப் பொருள்படும் Macintosh Operating System என்ற தொடரின் சுருக்கம். 1994 செப்டம்பரில் வெளியிடப் பட்ட 7.5 ஆம் பதிப்புக்குப் பின்னரே மெக்கின்டோஷ் இயக்க முறைமை மேக்ஓஎஸ் என அழைக்கப்படலா யிற்று. அப்போதிருந்துதான் ஆப்பிள் நிறுவனம் பிற கணினி உற்பத்தி யாளர்களுக்கும் இதனை உருவாக்கு வதற்கான உரிமம் வழங்கத் தொடங்கியது.

Macromedia Flash : மேக்ரோ மீடியா பிளாஷ்.

macros : குறுமங்கள்.

macro virus : மேக்ரோ நச்சுநிரல்; குறும நச்சுநிரல் : ஒரு பயன் பாட்டு மென்பொருளுடன் தொடர்புடைய குறும மொழியில் எழுதப்பட்ட ஒரு நச்சுநிரல். ஓர் ஆவ ணக் கோப்புடன் இந்த மேக்ரோ நச்சு நிரல் எடுத்துச் செல்லப்படும். ஆவணத்தைத் திறக் கும்போது நச்சுநிரல் இயக்கப்படும்.

Mac TCP : மேக் டீசிபீ : மெக்கின் டோஷ் கணினிகளில் பயன்படுத்தப் படும் டீசிபீ/ஐபீ நெறிமுறையின் மேக் வடிவம்.

magazine : இதழ்; சஞ்சிகை. magnetic cartridge : காந்தப் பொதியுறை.

magnetic cell : காந்தக் கலம்.

magnetic core, bistable: இருநிலைக் காந்த அச்சு; இரட்டை நிலை காந்த உள்ளகம்; இருநிலைக் காந்த வளையம்.

magnetic data storage device: காந்த முறை தகவல் சேமிப்புச் சாதனம்.

magnetic memory: காந்த நினைவகம்.

magnetic store: காந்த சேமிப்பகம்; காந்தத் தேக்ககம்.

magneto optical disk: காந்த ஒளி யியல் வட்டு; காந்த ஒளிவ வட்டு.

magneto-optical features : காந்த ஒளியியல் கூறுகள்.

magneto optical recording : காந்த ஒளிவப் பதிவு : ஒளிவ வட்டுகளில் தகவலைப் பதிவதற்கான ஒரு வகைத் தொழில்நுட்பம். வட்டின் மீது பூசப்பட்டுள்ள காந்தப் பரப்பின் ஒரு மிகச்சிறு பகுதியை லேசர் கற்றை வெப்பமூட்டும். இந்த வெப்பம் பலவீனமான காந்தப் புலத் தின் திசையை மாற்றியமைக்கும். இவ்வாறு தகவல்கள் வட்டில் எழுதப்படுகின்றன. இதே நுட்பத் தைப் பயன்படுத்தி வட்டிலுள்ள தகவலை அழித்து மீண்டும் எழுதவும் முடியும்.

magneto optic disc : காந்த ஒளிவ வட்டு : சிடி ரோம் வட்டுகளை ஒத்த மிக அதிகக் கொள்திறன் உள்ள அழித்தெழுத முடிகிற சேமிப்பக வட்டு. இதில் தகவலைப் பதிய லேசர் கற்றையைப் பயன்படுத்தி வெப்பமூட்டி வட்டின் ஒரு புள்ளி யில் உள்ள காந்தப் புலத்தின் திசையை மாற்றி தகவல் துண்மி (பிட்)யைப் பதிவு செய்வர்.

magnification : பெரிதாக்கும்; உருப் பெருக்கம்.

magnitier : உருப்பெருக்கி; பெரிதாக்கி.

mail : அஞ்சல்.

mail bomb1 : அஞ்சல் குண்டு1 : மின்னஞ்சல் மூலமாக பயனாளர் ஒருவரின் அஞ்சல் பெட்டியை நிலைகுலையச் செய்தல். பல்வேறு வழிமுறைகளில் இதனை நிறை வேற்றலாம். ஏராளமான மின்னஞ் சல்களை ஒருவருக்கு அனுப்பியோ, மிகநீண்ட மின்னஞ்சலை அனுப் பியோ அவருக்கு இனி வேறெந்த அஞ்சலும் வரவிடாமல் செய்து விடலாம்.

mailbomb2 : அஞ்சல் குண்டு2 : பயனாளர் ஒருவருக்கு அஞ்சல் குண்டு அனுப்புதல். இதில் இரண்டு வகை உண்டு. ஒரேயொரு நபர் ஒரு மிகப்பெரிய மின்னஞ்சலைப் பயனாளர் ஒருவருக்கு அனுப்பலாம். இரண்டாவது வகை, ஏராளமான பயனாளர்கள் சேர்ந்து அறிமுக மில்லாத பயனாளர் ஒருவருக்கு ஒரே நேரத்தில் சாதாரண அளவிலான பலநூறு அஞ்சல்களை அனுப்பி வைத்தல்.

mail bot : மெயில்பாட்; அஞ்சல்பாட்: மின்னஞ்சல்களுக்கு தானாகவே மறுமொழி அனுப்பிவைக்கும் ஒரு நிரல். அல்லது அஞ்சல் செய்தி களுக்கு இடையே இருக்கும் கட்டளைகளுக்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ளும் ஒரு நிரல். அஞ்சல் பட்டியல் மேலாண்மை நிரல் ஒர் எடுத்துக்காட்டு.

mailing list manager : அஞ்சல் பட்டியல் மேலாளர் : ஒர் இணைய அல்லது அக இணைய அஞ்சல் முகவரிப் பட்டியலை மேலாண்மை செய்யும் மென்பொருள். வாடிக்கை யாளர்கள் அனுப்பும் செய்திகளை இந்த மென்பொருள் ஏற்கும். பயனாளர்களின் கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை மேற்கொள்ளும். எடுத்துக்காட்டாக, அஞ்சல் பட்டிய லில் பெயரை இணைத்துக்கொள்ளு தல், நீக்கி விடுதல், லிஸ்ட்செர்வ் (LISTSERV), மேஜர்டெமோ (Major Domo) போன்றவை பரவலாகப் பயன்பாட்டில் உள்ள அஞ்சல் பட்டியல் மேலாளர்கள் ஆகும்.

mail receipient : அஞ்சல் பெறுநர்.

mail reflector : அஞ்சல் பிரதிபலிப்பு: ஒரு அஞ்சல் பட்டியலுக்கு அனுப்பப் பட்ட செய்திகளை செய்திக்குழு வடி வத்துக்கு மாற்றியமைத்து வைக்கப் பட்டுள்ள ஒரு செய்திக்குழு.

mail server : அஞ்சல் வழங்கன்.

mailto : மெயில்டூ : ஒரு ஹெச்டீ எம்எல் கோப்பில் மின்னஞ்சல் அனுப்புவதைக் குறிப்பிடும் மீத்தொடுப்பு (Hyperlink) HREF என்னும் குறி சொல்லால் (Tag) இது குறிப்பிடப்படும். எடுத்துக்காட்டாக, குமரேசன் என்பவரின் மின்னஞ்சல் முகவரி kumar@.yahoo.com என்று வைத்துக்கொள்வோம். ஹெச்டீ எம்எல் ஆவணத்தில்,

<A HREF = "maito :

   kumar@yahoo.com">

E-mail : Kumaresan </A>

பயனாளர் E-mail : Kumaresan என்ற மீத்தொடுப்பின் மீது சுட்டியால் சொடுக்கினால்போதும். பயனாள ரின் கணினியிலுள்ள மின்னஞ்சல் மென்பொருள் இயங்கத் தொடங் கும். அதில் To என்ற இடத்தில் kumar@yahoo.com என்ற முகவரி இடம் பெற்றிருக்கும்.

main body : மைப் பகுதி; முதன் மைப் பகுதி ; ஒரு கணினி நிரலில் துணை நிரல்களை இயக்கும் கட்டளைகளும் பிற இன்றியமை யாக் கட்டளைகளும் அடங்கிய நிரலின் முதன்மைப் பகுதி.

mainframe computer : பெருமுகக் கணினி; மையச் சட்டக் கணினி : மிகச் சிக்கலான கணக்கீட்டுப் பணிகளை நிறைவேற்றுவதற்கென உருவாக்கப்பட்ட உயர்நிலைக் கணினி. இவ்வகைக் கணினி அமைப்பில் பெரும்பாலும் நூற்றுக் கணக்கான (சிலவற்றில் பல்லாயிரக் கணக்கில்) முனையங்கள் இணைக் கப்பட்டு ஒரே நேரத்தில் ஏராளமான பயனாளர்கள் பணிபுரிவர்.

main function : மூல/முதன்மை/முக்கிய/மையச் செயல்கூறு : ஒரு கணினி நிரலில் முக்கிய பகுதி. செயல்கூறு அடிப்படையிலான நிரலாக்க மொழிகளில் எழுதப்படும் நிரல்களில் ஏனைய செயல்கூறுகளை அழைத்து, பணியை நிறை வேற்றும் முதன்மையான செயல்கூறு. (எ-டு) சி-மொழியில் ஒரு நிரலில் எத்தனை செயல்கூறுகள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் main() என்கிற செயல்கூறு கட்டாயம் இருக்க வேண் டும். ஒரு நிரலானது அதில்தான் தொடங்கி முடியும்.

main loop : முக்கிய/மைய மடக்கி : ஒரு கணினி நிரலில் முதன்மைப் பகுதியில் இடம் பெற்றுள்ள மடக்கி. நிரலின் முக்கிய பணியை இந்த மடக்கிதான் நிறைவேற்றும். ஒரு குறிப்பிட்ட நிபந்தனை சரி அல்லது தவறாக இருக்கும்வரை இந்த மடக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கும். நிகழ்வு முடுக்க நிரலாக்கத்தில் (Event Driven Programming) இந்தப் பிரதான மடக்கி, இயக்க முறைமையிட மிருந்து பெறப்படும் நிகழ்வுகளுக் காகக் காத்திருந்து அவற்றைப் பெற்றுச் செயல்படுத்தும்.

main menu : முதன்மைப் பட்டியல்.

main method : முதன்மை வழிமுறை.

main segment : முக்கிய/முதன்மை/ மையத் துண்டம் : மெக்கின் டோஷ் கணினிகளில் ஒரு நிரலின் முதன்மை யான குறிமுறைப் பகுதி. அந்த நிரல் நிறைவேற்றப்பட்டு முடியும்வரை இப்பகுதி நினைவகத்தில் ஏற்றப் பட்டு அழியாமல் இருக்கும்.

maintenance, file : கோப்புப் பராமரிப்பு.

maintenance programming : பராமரிப்பு நிரலாக்கம்.

maintenance, updating and file : இற்றைப்படுத்தலும் கோப்புப் பேணலும்.

maintenance wizard : பராமரிப்பு வழி காட்டி.

MajorDomo : மேஜர்டோமோ : இணையத்தில் அஞ்சல் பட்டியல் களை மேலாண்மை செய்யும் செல் வாக்குப் பெற்ற மென்பொருள்.

major geographic domain : பெரும் புவிப்பிரிவுக் களம் : இணையக் களப் பெயர்களில் (Domain names) ஈரெழுத்து முகவரி. இணைய தளப் புரவன்(Host) அமைந்துள்ள நாட்டின் பெயரைக் குறிக்கும். தளப் பெயர் களில் புவிப்பிரிவுக் களப்பெயர் பெரும்பாலும் இறுதியில் இடம் பெரும். (எ-டு) uiuc.edu.us - அமெரிக்காவில் உள்ள இல்லி னாய்ஸ் பல்கலைக் கழக இணையத் தளம். cam.ac.uk - இங்கிலாந்தி லுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத் தளப்பெயர். நாட்டுக் குறி முறை என்றும் அழைக்கப்படும்.

make MDE file: எம்டிஇ கோப்பு உரு வாக்கு. எம்எஸ் அக்செஸில் உள்ள பட்டித் தேர்வு.

make new connection : புதிய இணைப்பை உருவாக்கு.

malice programme : தீய நிரல். தீச் செயல்முறை: தீய கட்டளைத் தொடர்.

management information service : மேலாண்மைத் தகவல் சேவை : ஒரு நிறுவனத்தில் ஒரு பணிப்பிரிவாக இயங்கும் துறை. தகவல் தொடர் பான அனைத்துப் பணிகளையும் கவனித்துக்கொள்ளும்.

manipulation instruction, data : தகவல் முனைப்படுத்தல் ஆணை : தகவல் கையாள்தல் ஆணை.

manual speed : கைமுறை வேகம்; கைச்செயல் வேகம்.

MAP : மாப்பி; எம்ஏபீஐ : செய்திவழி பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் என்று பொருள்படும் Messaging Application Programming Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒற்றைக் கிளையன் வழியாக மின்னஞ்சல், குரலஞ்சல் தொலைநகல் போன்ற வெவ்வேறு செய்திப் பரிமாற்ற மற்றும் பணிக் குழு பயன்பாடுகள் செயல்பட வழி வகுக்கும், மைக்ரோசாஃப்ட் வகுத்துள்ள இடைமுக வரன்முறை. விண்டோஸ் 95/என்டி முறைமை களில் மைக்ரோசாஃப்ட் எக்ஸேஞ்ச் என்ற பெயரில் இவ்வசதி உள்ளது.

map memoray : தொடர்புறுத்து நினைவகம். mapped drives : தொடர்புறுத்திய இயக்ககங்கள்/வட்டகங்கள் : 1. விண் டோஸ் சூழலில், உள்ளக இயக்கக (Local drive) எழுத்துகளைத் தாங்கி யுள்ள பிணைய வட்டகங்கள் அங்கிருந்தே அணுக முடியும். 2. யூனிக்ஸில், இயக்க முறைமைக்கு அறிமுகப்படுத்தபட்டுச் செயல்படும் நிலையிலுள்ள வட்டகங்கள்.

mark, tape : நாடா குறியீடு.

marker, end of file : கோப்பு இறுதிக் குறியீடு.

marginal min. value : குறைந்தபட்ச மதிப்பு.

marginal max. value : அதிகபட்ச மதிப்பு.

markup language : குறியிடு மொழி : ஒர் உரைக் கோப்பில் உரைப் பகுதியை எந்த வடிவமைப்பில் அச்சுப்பொறியிலோ அல்லது திரைக் காட்சியாகவோ வெளிக்காட்ட வேண்டும், எவ்வாறு வரிசைப் படுத்தி அதன் உள்ளடக்கத்தை தொடுத்துக் காட்டவேண்டும் என கணினிக்கு அறிவுறுத்தும் குறியீடு களின் தொகுதியைக் கொண்ட மொழி. (எ-டு): மீவுரைக் குறியீடு மொழி (HTML) வலைப்பக்கங்களை வடிவமைக்கப் பயன்படுகிறது. 2. செந்தரப் பொதுமைக் குறியீடு மொழி (SGML) அச்சுக் கோத்தல் மற்றும் கணினிப் பதிப்பகப் பணி களுக்கும் மின்னணு ஆவணங்களுக் கும் பயன்படுகிறது. இதுபோன்ற குறியிடு மொழிகள் பணித்தளம் சாரா ஆவணங்களை/கோப்புகளை உரு வாக்கப் பயன்படுகின்றன. பல்வேறு பயன்பாடுகளுக்கிடையே கையாண்டு கொள்ளவும் வழி செய்கின்றன.

marquee : நகர் தொடர்; திரையில் இடவலமாக வலஇடமாக நகர்ந்து செல்லும் சொல்தொடர்.

mask bit : மறைப்புத் துண்மி : கணக்கீட்டில் இடம்பெறும், இரும துண்மிகளால் (Binary Bits) ஆன ஒரு தரவு மதிப்பினை ஒரு குறிப்பிட்ட தருக்கச் செயற்குறி (logical operator) மூலம் செயல்படுத்தும்போது, தரவு மதிப்பிலுள்ள அனைத்து 1-களையும் அப்படியே தக்கவைக்குமாறு செய்ய முடியும் அல்லது அனைத்து 1-களை யும் 0-ஆக மாற்றிவிடவும் முடியும். மறைப்பு மதிப்பில் இப்பணியைச் செய்யும் அந்தக் குறிப்பிட்ட துண்மி, மறைப்புத் துண்மி எனப்படுகிறது. (எ-டு): தரவு மதிப்பு 00001111 என்க. மறைப்பு எண் 11111111 என்க. இந்த இரண்டு எண்களையும் (உ-ம்) (AND) செய்வோம் எனில் விடை, 00001111 எனக் கிடைக்கும். இங்கே மறைப்பு எண்ணில் உள்ள கடைசி நான்கு துண்மி(bits)களும் மறைப்பு துண்மி களாக செயல்படுகின்றன. இவை தரவு மதிப்பிலுள்ள நான்கு 1-களையும் மாற்றமின்றி அனுமதிக்க உதவுகின்றன.

massively parallel processing : பெருமளவு இணைநிலைச் செய லாக்கம் : ஏராளமான செயலிகள் இணைக்கப்பட்ட ஒரு கணினிக் கட்டுமானத்தில் நடைமுறைப் படுத்தப்படும் செயலாக்க முறை. ஒவ்வொரு செயலிக்கும் தனித்த ரோம் (RAM) நினைவகம் இருக்கும். அதில் இயக்க முறைமையின் நகல் இருக்கும். பயன்பாட்டு மென் பொருளின் நகலும் அதில் ஏற்றப் பட்டிருக்கும். அவை தனித்துச் செயல்படுத்தக் கூடிய தகவல் பகுதி, ரோமில் இருக்கும். master copy : மூலப்படி.

master key : முதன்மை விசை; முதன்மைத் திறவி : மென்பொருள் அல்லது தகவல் பாதுகாப்புக்கான வழங்கன் (server) அடிப்படை யிலான ஆக்கப் பொருள்கூறு (component). சில கணினி அமைப்பு களில் தகவல் அல்லது பயன்பாடுகள் ஒரு வழங்கன் கணினியில் சேமிக்கப் பட்டிருக்கும். கிளையன் (Client) கணினியில் அவற்றைப் பதிவிறக்கிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு கிளையன் கணினி தகவல் கேட்டுக் கோரிக்கை அனுப்பும் போது தொடர்வுத் திறவியை (session key) அனுப்பி வைக்கும். தொடர்வுத் திறவி, முதன்மைத் திறவியுடன் பொருந்தியிருப்பின், கிளையன் கேட்ட தகவல் பொதியை வழங்கன் அனுப்பி வைக்கும்.

master/slave system : தலைமை/ அடிமை முறைமை.

master/slave arrangement : தலைமை/ அடிமை அமைப்புமுறை; தலைவன்/ பணியாள் அமைப்பு முறை : (எ-டு) கணினியானது ஏனைய புறச் சாதனங் களைக் கட்டுப்படுத்தும் முறை.

master volume : முதன்மைத் தொகுதி.

match case : வடிவப் பொருத்தம் பார்.

mathematical expression : கணிதத் தொடர், கணிதக் கோவை : முழு எண்கள், நிலைப்புள்ளி எண்கள் மற்றும் மிதவைப்புள்ளி எண்களை யும் கூட்டல்/கழித்தல்/பெருக்கல்/ வகுத்தல் போன்ற கணிதச் செயற் குறிகளையும் கொண்ட ஒரு தொடர் அல்லது கோவை. 5+1.2x4-8/ 2+1.3.x10-3 .

mathematical function : கணிதச் செயல்கூறு : ஒன்று அல்லது மேற் பட்ட மதிப்புகள் அல்லது கோவை களின் மீது பல்வேறு கணிதச் செயல் பாடுகளை நிகழ்த்தி ஒர் எண்வகை மதிப்பைத் திருப்பியனுப்பக்கூடிய ஒரு செயல்கூறு.

matrix : அணி : தொடர்புள்ள உருப் படிகளை (எண்களாக இருக் கலாம், விரிதாள் கலங்களாக இருக்கலாம், மின்சுற்று உறுப்புகளாக இருக்க லாம்) கிடக்கைகளாகவும் நெடுக்கை களாகவும் (Rows and Columns) அடுக்கி வைக்கும் ஒர் ஒழுங்கமைப்பு. செவ்வக வடிவிலான எண் தொகுதி களைக் கையாளக் கணிதத்தில் அணி கள் பயன்படுத்தப்படுகின்றன. கணிப் பணி(Computing)யிலும் கணினிப் பயன்பாடுகளிலும் (Computer Applications) தகவலை அட்டவணை வடிவில் கையாள அணிகள் பயன் படுகின்றன. கணினி வன்பொருள் களிலும் அணிகளின் பயன்பாடு உண்டு. திரைக் காட்சியில் எழுத்து கள் படப்புள்ளிகளின் (pixels) அணி யாகவே காட்சியளிக்கின்றன. அச்சுப் பொறியில் எழுத்துகள் புள்ளிகளின் அணியாகவே அச்சிடப்படுகின்றன. மின்னணுவியலில் டயோடு, டிரான் சிஸ்டர்களின் அணி அடிப்படையில் தருக்க மின் சுற்றுகளின் பிணைய அமைப்பு உருவாக்கப்படுகிறது. தகவலின் குறியாக்க (Encoding), குறி விலக்கப் (Decoding) பணிகளுக்கு இவை பயன்படுகின்றன.

matrix data : அணித் தரவு.

.ma.us : .எம்ஏ.யுஎஸ் : ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டு மாசாசூஸட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

matrix printer : புள்ளியணி அச்சுப் பொறி. maximize : பெரிதாக்கு; உச்சப் படுத்து : வரைகலைப் பயனாளர் இடைமுகத்தில் (GUI) ஒரு சாளரத்தை விரிவாக்கி தாய்ச் சாளரம்அல்லது கணினித் திரை முழுமையும் பரவும் வண்ணம் செய்தல்.

maximize button : பெரிதாக்கு பொத்தான் : விண்டோஸ் 3.x, விண் டோஸ் 95/98 மற்றும் விண்டோஸ் என்டி ஆகியவற்றில் ஒரு சாளரத்தின் மேல் வலது மூலையில் அமைந் துள்ள ஒரு பொத்தான். தாய்ச் சாளரம் அல்லது கணினித் திரை முழுமையும் பரவும் வண்ணம் ஒரு சாளரத்தைப் பெரிதாக்க, இந்தப் பொத்தான் மீது சொடுக்கினால் போதும்.

maximize and minimize buttons : பெரிது, சிறிதாக்கும் பொத்தான்கள்.

maximum value : அதிகபட்ச மதிப்பு.

.mb.ca : .எம்பி.சிஏ : ஒர் இணைய தள முகவரி கனடா நாட்டின் மின்டோப் மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

MBONE or Mbone : எம்போன் : பல் முனை முனைப் பரப்புகை முதுகெலும்பு என்று பொருள்படும் Multicast back BONE என்ற தொடரின் சுருக்கம். பல் இணைய தளங்கள் இணைந்த சிறிய தொகுதி. ஒவ்வொரு தளமும் நிகழ் நேர கேட்பொலி மற்றும் ஒளிக் காட்சித் தகவல்களை பிற தளங் களுக்கு ஒரே நேரத்தில் பரப்பும் திறன்பெற்றவை. ஒன்றிலிருந்து பல வற்றுக்கு பல்முனைப் பரப்புகை ஐபீ (Multicast-IP) நெறிமுறையைப் பயன் படுத்தி அதிவேகத் தகவல் பொதி களை அனுப்பவும் பெறவும் உதவும் தனிச்சிறப்பான மென்பொருளை எம்போன் தளங்கள் பெற்றுள்ளன. ஒளிக்காட்சிக் கலந்துரையாடல் களுக்கு (video conferencing) எம்போன் பயன்படுகிறது.

Mbps : எம்பிபீஎஸ் : ஒரு வினாடியில் இத்தனை மெகா பிட்டுகள் என்று பொருள்படும் Megabits per second என்பதன் சுருக்கம். ஒரு மெகாபிட் என்பது ஏறத்தாழ பத்து இலட்சம் துண்மிகளைக் கொண்டது.

.mc : .எம்சி : ஒர் இணைய தள முக வரி மொனாக்கோ நாட்டைச் சேர்ந் தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

MCGA : எம்சிஜிஏ : பல்வண்ண வரை கலைக் கோவை எனப் பொருள் படும் Multicolour Graphics Array என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். கணினித் திரைக்காட்சிக்கான மின்சுற்று அட்டை.

MC : எம்சிஐ : 1. ஊடகக் கட்டுப் பாட்டு இடைமுகம் எனப் பொருள் படும் Media Control Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். விண்டோஸ் இயக்க முறை மையின் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (Windows API). பல்லூடகச் சாதனங்களை நிரல் மூலமாகக் கட்டுப்படுத்த உதவு கிறது. 2. தொலைதூரத் தொலை பேசி சேவை வழங்கும் ஒரு மிகப் பெரும் நிறுவனம். Microwave Communications Inc., என்பது அந் நிறுவனப் பெயர்.

.md : .எம்டி : ஒர் இணைய தள முகவரி மால்டோவாக் குடியரசைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

MDA : எம்டிஏ : ஒற்றைநிறத் திரைக் காட்சித் தகவி என்று பொருள்படும் Monochrom Display Adapter என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். 1981-ல் ஐபிஎம் பீசிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒளிக்காட் சித் தகவி. எம்டிஏ-யில் ஒரேயொரு ஒளிக்காட்சிப் பாங்கு மட்டுமே உண்டு. 25 வரிகள் 80 எழுத்துகள். ஒவ்வொரு எழுத்துகளுக்கும் அடிக் கோடு உண்டு; மின்னுதல் மற்றும் ஒளிர்தல் (Bright) பண்புகளும் உண்டு.

MD : எம்டிஐ : பல் ஆவன இடை முகம் என்று பொருள்படும் (Multi Document Interface) என்ற தொடரின் தலைப்பெழுத்து குறும்பெயர். சில பயன்பாட்டு மென்பொருள்களில் இருக்கும் பயனாளர் இடைமுகம். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆவணங்களைத் திறக்க உதவுகிறது. மைக்ரோசாஃப்ட் வேர்டு, எக்செல் தொகுப்புகளில் உள்ளது. நோட்பேடு, வேர்பேடு ஆகியவற் றில் கிடையாது.

.md.us : .எம்டி.யுஎஸ் : ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டின் மேரிலாந்து மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

machanics : விசையியல், எந்திரவியல்.

media : ஊடகம் : கணினி அடிப் படையிலான தகவலைப் பதிவு செய்வதற்கான தாள், வட்டு, நாடா போன்ற பருப்பொருள்கள். கம்பி கள், கம்பி வடங்கள், ஒளிவ இழை வடங்கள், நுண்ணலை, வானொலி அலை போன்றவை தகவல் பரிமாற்றத்துக்கான ஊடகங்களாகப் பயன்படுகின்றன. மீடியம் - ஒருமை; மீடியா - பன்மை.

media access control : ஊடக அணுகு கட்டுப்பாடு.

media filter : ஊடக வடிகட்டி : 1. குறும்பரப்புப் பிணையங்களில் இரு வேறு வகை ஊடகங்களுக்கிடையே பொருத்தியாகப் பயன்படுத்தப் படும் சாதனம். (எ-டு): ஆர்ஜே-45 இணைப்பி, இணையச்சு வடத்திற் கும், உறையிடா முறுக்கிணை (UTP) வடத்திற்கும் இடையே பயன் படுத்தப்படுகிறது. ஊடக வடிகட்டி கள் செயல்பாட்டில் அனுப்பி வாங்கி களை ஒத்தவை. 2. தகவல் பிணையங் களில் சுற்றுச்சூழலிலிருந்து வரும் மின்னணு இரைச்சலை வடிகட்டி நீக்க இணைக்கப்படும் சாதனம். (எ-டு) இணையச்சு வட அடிப்படை யிலமைந்த புறப் பிணையங்களில் (Extranet) அருகமைந்த மின்னணுக் கருவிகளின் இடையூறு காரணமாய் தகவல் இழப்பு ஏற்படாமல் தவிர்க்க ஊடக வடிகட்டிகள் உதவும்.

medium model : நடுத்தர மாதிரியம் : இன்டெல் 80x86 செயலிக் குடும்பத் தில் பயன்படுத்தப்படும் நினைவக மாதிரியம். இந்த மாதிரியத்தில் தகவலுக்காக 64 கிலோபைட் நினைவக இடமே ஒதுக்கப்படும். நிரல் கட்டளைகளுக்கு ஒரு மெகா பைட் வரை இடம் ஒதுக்கப்படும்.

medium pitch : உறுப்பு; உறுப்பினர் : பொருள்நோக்கு நிரலாக்கத்தில் ஒர் இனக்குழுவில் (class) வரையறுக்கப் படும் ஒரு மாறி (variable) அல்லது ஒரு வழிமுறை (mothod).

memory, associate: சார் நினைவகம்.

memory, bubble : குமிழி நினைவகம்.

memory core : உள்ளக நினைவகம்.

memory cartridge : நினைவகப் பொதியுறை : தகவல் அல்லது நிரல் களை இருத்தி வைக்க உதவும் ரோம் (RAM) சில்லுகளைக் கொண்ட, செருகி எடுக்கவல்ல ஒரு பொதி யுறை. இவை பெரும்பாலும் கையி லெடுத்துச் செல்லும் கணினிகளில் பயன்படுத்தப்படுகின்றன. வட்ட கங்களுக்கு மாற்றாக இந்தச் சிறிய எடை குறைந்த (ஆனால் விலை அதிகமான) பொதியுறைகள் பயன் படுகின்றன. நினைவகப் பொதி யுறைகளில் இருத்திவைக்கும் தகவல் அழியாமல் பாதுகாக்க இரு வகை நுட்பங்கள் பயன்படுத்தப்படு கின் றன. மின்சாரம் துண்டிக்கப்பட்ட பின்னும் உள்ளடக்கத்தை இழக்கா மல் பாதுகாக்கும் அழியா ரோம் பயன்படுத்தப்படுகிறது. அல்லது மறு பொதியுறைக்குள்ளேயே வைக்கப்பட்டிருக்கும் மறு மின்னூட்ட மின்கலன்களின் துணை யுடன் ராம் தகவல் அழியாமல் பாதுகாக்கப்படுகிறது.

memory check : நினைவக சரிபார்ப்பு.

memory dump : நினைவகச் சேமிப்பு; நினைவகத் திணிப்பு; நினைவு கொட்டல்.

memory, external : புற நினைவகம்.

memory, internal : அக நினைவகம்.

memory, magnetic : காந்த நினைவகம்.

memory main : முதன்மை நினைவகம்.

memory management programme : நினைவக மேலாண்மை நிரல் : 1. தகவல் மற்றும் நிரல் ஆணைகளை முறைமை நினைவகத்தில் இருத்தி வைத்தல், அவற்றின் பயன்பாட்டை கண்காணித்தல், விடுவிக்கப்படும் நினைவகப் பகுதியை மறு ஒதுக்கீடு செய்தல் போன்ற பணிகளைச் செய்யும் ஒரு நிரல். 2. நிலைவட்டின் (Hard Disk) ஒரு பகுதியை ரோம் நினைவகத்தின் நீட்டிப்பாய் பயன் படுத்திக் கொள்ளும் ஒரு நிரல்.

memory management unit : நினைவக மேலாண்மையகம் : மெய்நிகர் நினைவக முகவரிகளை (Virtual Memory Address) மெய்யான நினைவக முகவரிகளுக்குப் பொருத்துகின்ற திறன்பெற்ற வன்பொருள். 68020 செயலியை அடிப்படையாகக் கொண்ட கணினி களில், செயலியும் நினைவக மேலாண்மையகமும் தனித்தனி யானவை. ஆனால் இன்றைய நவீனக் கணினிகளில் நினைவக மேலாண்மையகம் மையச் செயலகத் தில் உள்ளிணைக்கப்பட்டிருக்கும். இன்னும் சில கணினிகளில் இவை நுண்செயலிக்கும் நினைவகத்திற்கும் இடையே பாலமாகச் செயல்படும். இந்த வகை நினைவக மேலாண்மை யகங்கள் முகவரி ஒன்றுசேர்ப்புப் பணிக்குக் காரணமாயிருக்கின்றன. டி'ரோம்களில் புதுப்பிப்புச் சுழற்சி களுக்குக் காரணமாயுள்ளன.

memory model : நினைவக மாதிரியம் : ஒரு கணினி நிரலில் உள்ள தகவல் களையும் குறிமுறைகளையும் (கட்டளைகளையும்) நினைவகத் தில் ஏற்றுவது தொடர்பான ஒர் அணுகுமுறை. நினைவகத்தில் தகவலுக்கு எவ்வளவு இடம், கட்டளை களுக்கு எவ்வளவு இடம் என்பதை நினைவக மாதிரியம்தான் தீர்மானிக் கிறது. பொதுவாகத் தட்டை நினை வகப் பரப்பினைக் கொண்டுள்ள பல கணினிகள் ஒற்றை நினைவக மாதிரியத்தையே ஏற்கின்றன. துண்டம் துண்டமான நினைவகப் பரப்பினைக் கொண்டுள்ள கணினி கள் பெரும்பாலும் பல்வகை நினைவக மாதிரியங்களுக்கு இடம் தருகின்றன.

memory power : நினைவாற்றல்.

memory, random access : குறிப்பிலா அணுகு நினைவகம்.

memory size : நினைவக அளவு : ஒரு கணினியின் நினைவகக் கொள் திறன். பெரும்பாலும் மெகா பைட்டு களில் அளவிடப்படும்.

memory slot : நினைவகச் செருகு வாய்; நினைவகப் பொருத்துமிடம்.

memory, sniffing : முகர்வு நினைவகம்.

memory, volatile : நிலையா நினைவகம்.

menu : பட்டி : ஒரு பயனாளர் தாம் விரும்புகின்ற நடவடிக்கையை மேற்கொள்ள விருப்பத் தேர்வுகளின் பட்டியலிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்து இயக்க வாய்ப்பளிக்கும் ஒரு பட்டியல். ஒரு கட்டளையை நிறை வேற்றுதல் அல்லது ஒர் ஆவணத்தை வடிவமைத்தல் போன்ற பணியாக இருக்கலாம். வரைகலை இடை முகத்தை வழங்குகின்ற பல பயன் பாட்டு நிரல்கள், இதுபோன்ற தேர்வுப் பட்டியை பயன்படுத்துகின்றன.

பயனாளர்கள் நிரல்கட்டளை களையும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகளையும் நினைவில் வைத்துக் கொள்ள அவசியமில்லாத ஒர் எளிய மாற்று வழியை இதுபோன்ற பட்டி கள் வழங்குகின்றன.

menu application : பட்டிப் பயன்பாடு.

menu block : பட்டிப் பகுதி.

menu defnitions : பட்டி வரையறைகள்.

menu driven : பட்டி வழிச் செலுத்தி; பட்டி முடுக்கம்.

menu option : பட்டித் தேர்வு..

merge cell : கலம் இணைத்தல் : கலம் சேர்த்தல் : சொல்செயலிப் பயன்பாடு களில் ஒர் அட்டவணையில் ஒன்றுக்கு மேற்பட்ட கலங்களை ஒரே கலமாக்க உதவும் கட்டளை.

merge document : ஆவணச் சேர்ப்பு; இணைப்பு ஆவணம்; ஆவண இணைப்பு.

merge workbooks : பேரேடுகளை ஒன்றிணை.

mesa : மேடு : ஜெர்மானியம் அல்லது சிலிக்கான் தகடுகளில் அவற்றைச் செதுக்கும்போது பாது காக்கப்பட்டு அதன் காரணமாய், செதுக்கப்பட்ட சுற்றுப் பகுதிகளை விட சற்றே உயரமாய்த் தோற்ற மளிக்கும் ஒரு பகுதி.

message box : தகவல் பெட்டி; செய்திப் பெட்டி.

message of the day : இன்றையச் செய்தி : ஒரு பிணையத்தில் அல்லது பல் பயனாளர் கணினிகளில் அல் லது பிற பகிர்வு முறைமைகளில் அனைத்துப் பயனாளர்களுக்கும் அறிவிக்கப்படும் தினசரிச் செய்தி அறிக்கை. பெரும்பாலானவற்றில், பயனாளர் கணினி அமைப்பிற்குள் நுழையும்போதே இச்செய்தி காட்டப் பட்டுவிடும்.

message panes : செய்திப் பலகங்கள்.

message reflection : செய்தி பிரதி பலிப்பு : பொருள்நோக்கு நிரலாக்கச் சூழலில், குறிப்பாக விசுவல் சி++, ஒஎல்இ, ஆக்டிவ்எக்ஸ் போன்றவற் றில் ஒரு கட்டுப்பாடு தன்னுடைய சொந்த செய்தியையே கையாள வழி செய்யும் ஒரு செயல்கூறு. message security protocol : செய்திப் பாதுகாப்பு நெறிமுறை : இணை யத்தில் பரிமாறப்படும் செய்தி களுக் கான ஒரு நெறிமுறை. பாதுகாப்புக் கருதி மறையாக்கம் (encryption) மற்றும் சரிபார்ப்பு (verification) போன்ற உத்திகளைக் கையாளும் நெறிமுறை. ஒரு மின்னஞ்சலை ஏற்கவோ புறக்கணிக்கவோ வழங்கன் கணினியில் அனுமதி பெற வேண்டும் என்பதுபோன்ற பாது காப்பு நடைமுறைகளை மேற் கொள்ள இந்நெறிமுறை வழி செய்கிறது.

message transfer agent : செய்திப் பரி மாற்று முகவர்.

messaging : செய்தியனுப்பல் : கணினி மற்றும் தகவல் தொடர்புக் கருவிகள் வழியாக மின்னஞ்சல், குரலஞ்சல் அல்லது தொலைநகல் மூலமாக ஒருவர் இன்னொருவருக்கு தகவல் அனுப்பும் முறை.

messaging application : செய்தி யனுப்பு பயன்பாடு : பயனாளர்கள் தமக்குள் செய்திகளை (மின்னஞ்சல் அல்லது தொலைநகல்) பரிமாறிக் கொள்ளப் பயன்படும் ஒரு மென் பொருள்.

messaging client : செய்தியனுப்பு கிளையன் : மின்னஞ்சல், தொலை நகல் வழியாக பயனாளர் ஒருவர் செய்திகளை அனுப்பிவைக்க உதவும் ஒரு பயன்பாட்டு நிரல். தொலை தூரத்தில் இயங்கும் வழங்கன் கணினி இதற்காகப் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

messager : தூதுவர்; தகவலர்; செய்தி கொண்டு செல்பவர்.

messager for mail: அஞ்சல் தகவலர்; அஞ்சல் தூதுவர்.

meta content format : மீ உள்ளடக்க வடிவம் : ஒரு வலைப்பக்கம் ஒரு கோப்புத் தொகுதி, விண்டோஸின் முகப்புப் பக்கம், உறவுநிலைத் தரவுத் தளம் இவைபோன்ற கட்டமைப்பாயுள்ள தரவுகளின் உள்ளடக்கம் பற்றிய தகவலை விவரிக்கும் ஒரு திறந்தநிலை வடி வம். வரிசைமுறையாக்கம், அகராதி கள் மற்றும் விலைப்பட்டியல் களுக்கு இவ்வடிவத்தைப் பயன் படுத்திக்கொள்ள முடியும்.

meta data interchange specification : மீத்தரவு மாறுகொள் வரன்முறை : தகவல்களைப் பற்றிய தகவலை அதாவது மீத்தகவலை பரிமாறிக் கொள்ளல், பகிர்ந்துகொள்ளல், மேலாண்மை செய்தல் இவற்றைப் பற்றிய வரன்முறைகளின் தொகுதி.

metalanguage : மீமொழி : ஏனைய மொழிகளை விவரிக்கப் பயன்படும் ஒரு மொழி. நிரலாக்க மொழிகளை வரையறை செய்யப் பொதுவாக பேக்கஸ் நவுர் ஃபார்ம் (Backus Naur Form - BNF) என்னும் மீமொழி பயன் படுத்தப்படுகிறது.

meta - metalanguage : மீ-உயர் மொழி.

meta operating system : மீ இயக்க முறைமை : பல இயக்க முறைமை களை தனக்குக் கீழ் இயக்கவல்ல ஒர் இயக்க முறைமை.

metropolitan area exchange : மாநகரப் பரப்பு இணைப்பகம் : ஒரு மாநகரப் பரப்புக்குள் இணையச் சேவை நிலையங்கள் ஒன்றிணைக்கப் படும் இணைப்பகம். மாநகரப் பரப்புக்குள் இருக்கும் ஒரு பிணையத்திலிருந்து இன்னொரு பிணையத்துக்கு அனுப்பப்படும் தகவல் இணையத்தின் முதன்மை முதுகெலும்புப் பிணையம் வழியாகப் பயணிக்காது. மாநகர இணைப்பகமே இப்பணியை மேற்கொள்ளும்.

.mg : .எம்ஜி : ஒர் இணைய தள முகவரி மடகாஸ்கர் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

mget : எம்கெட் : பல்முனைப் பெறு தல் எனப் பொருள்படும் multiple get என்பதன் சுருக்கம். எஃப்டீபி (கோப்புப் பரிமாற்ற நெறிமுறை) கிளையன்களில் பயன்படுத்தப்படும் கட்டளை. இதன்மூலம் ஒரு பயனாளர் ஒரே நேரத்தில் பல்வேறு கோப்புகளை அனுப்பி வைக்கும்படி கோரிக்கை வைக்க முடியும்.

.mh : எம்ஹெச் : ஒர் இணைய தள முகவரி மார்ஷல் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

microimage : நுண்படிமம் : ஒளிப் படமாக்கிச் சிறிதாக்கப்பட்ட படிமம். பொதுவாக நுண்படச் சுருள் களில் சேமித்து வைக்கப்படும். மிகவும் சிறிதாக இருக்கும். உருப் பெருக்கி வழியாகத்தான் பார்க்க முடியும்.

Micro Channel Architecture : நுண் தடக் கட்டுமானம் : ஐபிஎம் பீஎஸ்/2 கணினிகளில் (25 மற்றும் 30 மாதிரிகள் தவிர) உள்ள பாட்டை களின் வடிவமைப்பு. இத்தகைய பாட்டைகள் ஐபிஎம் பிசி/ஏடீ கணினிகளின் பாட்டை அமைப் புடன் இணைப்பு அடிப்படையிலும் மின்சார அடிப்படையிலும் ஒத்தியல் பற்றவை. பீசி/ஏடீ பாட்டை போலன்றி நுண்தடப் பாட்டைகள் 16துண்மி (bit), அல்லது 32 துண்மி(bit) பாட்டைகளாகச் செயல்படுகின்றன. பல்பாட்டை நுண்செயலிகளினால் தனித்த முறையிலும் இவற்றை இயக்க முடியும்.

microcircuit : நுண்மின்சுற்று : ஒரு குறைக்கடத்திச் சிப்பு மீது செதுக் கப்பட்ட மிகச்சிறு மின்னணுச் சுற்று. டிரான்சிஸ்டர்கள், ரெசிஸ்டர்கள் போன்ற மின்பொருள்கூறுகள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு நுண்மின் சுற்று உருவாக்கப்படு கிறது. இது, வெற்றிடக் குழாய்களின் ஒரு தொகுதியாகவோ, தனித்தனி டிரான் சிஸ்டர்களின் இணைப்பாகவோ இல்லாமல் ஒர் ஒற்றை அலகாக வடிவமைக்கப்படுகிறது.

microkernel : நுண் கருவகம் : 1. ஓர் இயக்க முறைமையின் வன்பொருள் சார்ந்த நிரல்பகுதி. வெவ்வேறு வகை யான கணினிகளில் ஒர் இயக்க முறைமையைச் செயல்படுத்தும் நோக்கத்தில் நுண்கருவகம் அமைக்கப்படுகிறது. நுண்கருவகம் இயக்கமுறைமையுடன் ஒரு வன் பொருள் சாரா இடைமுகத்தை வழங்குகிறது. எனவே ஒர் இயக்க முறைமையை வெவ்வேறு பணித் தளங்களில் செயல்பட வைக்க வேண்டுமெனில் நுண்கருவகத்தை மட்டும் மாற்றி எழுதினால் போதும். 2. ஒர் இயக்க முறைமையின் மிக அடிப்படையான பண்புக் கூறுகளை மட்டுமே கொண்டு வடிவமைக்கப் பட்ட ஒரு கருவகம்.

micro virus : நுண் நச்சுநிரல்

microminiature : நுண்சிறுமம் : மிகமிகச் சிறிய மின்சுற்று அல்லது மின்னணு பொருள்கூறு. குறிப் பாக, எற்கெனவே மிகச் சிறிதாக்கப்பட்ட ஒர் உறுப்பின் திருத்தப்பட்ட வடிவம்.

microphone : நுண்பேசி : 1. ஒலி அலைகளை தொடர்முறை (analog) மின்சாரச் சமிக்கைகளாய் (signals) மாற்றித் தரும் சாதனம், நுண்பேசி யின் வெளியீட்டை ஒரு கூடுதல் வன் பொருள், கணினி ஏற்கத்தகு இலக்க முறைத் தகவலாய் மாற்றித்தரமுடியும். (எ-டு) பல்லூடக ஆவணங்களைப் பதிவு செய்தல்; ஒலிச் சமிக்கைகளை பகுத்தாய்தல். 2. ஆப்பிள் மெக்கின் டோஷ் கணினியில் இயங்கும் ஒரு தகவல் தொடர்பு நிரல்.

microprocessor chips : நுண் பகுப்புச் சிப்புகள்; நுண்பகுப்புச் சில்லுகள்.

microspace justification : நுணிஇட ஓரச்சீர்மை : உரை ஆவணங்கள் இரு ஒரங்களிலும் சீராக இருப்பின் அழகான தோற்றத்தைத் தரும். இவ்வாறு ஆவணங்களின் உரைப் பகுதியின் ஒரங்களைச் சீராக ஆக்கும் பொருட்டு சொற்களின் இடையே யும் ஒரு சொல்லில் எழுத்துகளுக் கிடையேயும் மெல்லிய இட வெளியை இட்டு நிரப்புதல். இதனை துண் ஓரச்சீர்மை என்றும் கூறுவர். சொல்லில் இடம்பெறும் அதிகப்படி யான இடவெளி சொல்லின் தோற்ற அழகைத் தோற்கடித்துவிடும்.

microtransaction : நுண் பரிமாற்றம் : 5 டாலருக்கும் குறைவான தொகைக் கான ஒரு வணிகப் பரிமாற்றம் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

microwave relay : நுண்ணலை பரப்புகை : ஒரு கிகா ஹெர்ட்ஸுக் கும் கூடுதலான அலைவரிசையில் இரு முனைகளுக்கிடையே வான் அலைபரப்பின் மூலம் ஏற்படுத்தப் படும் தகவல் தொடர்பு இணைப்பு.

middle level language : இடைநிலை மொழி. எந்திர மொழி போன்ற அடி நிலை மொழிகள் திறனும் வேகமும், பிற உயர்நிலை மொழிகளின் எளி மையும் கொண்டிருப்பதால் சி- மொழி இவ்வாறு அழைக்கப் படுவதுண்டு.

middleware : இடைப்பொருள்; இடைமென்பொருள் : இரண்டு அல்லது மேற்பட்ட வகை மென் பொருள்களுக்கு இடையே இருந்து தகவலை மொழி பெயர்த்துத் தரும் ஒருவகை மென்பொருள். இது பலவகைப்படும். பொதுவாக ஒரு பயன்பாட்டுக்கும் ஒர் இயக்க முறைமைக்கும் இடையே செயல் படும். அல்லது ஒரு பயன்பாட்டுக் கும் ஒரு தரவுத் தள மேலாண்மை முறைமைக்கும் இடையே இருந்து செயல்படும். (எ-டு) கோர்பா மற்றும் பிற பொருள் முகவர் நிரல் கள், பிணைய மென்பொருள்கள் மற்றும் கட்டுப்பாட்டு நிரல்கள்.

MIDI : மிடி; எம்ஐடிஐ : இசைக் கருவி இலக்கமுறை இடைமுகம் என்று பொருள்படும் Musical Instrument Digital Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இசை ஒருங்கிணைப்பிகள், இசைக் கருவிகள் இவற்றை கணினிகளுடன் இணைக்கும் ஒரு நேரியல்(serial) இடைமுக தர வரையறை. மிடி வரை யறை பாதி வன்பொருள் அடிப்படை யிலானது. பாதி, இசையும் ஒலியும் எந்த முறையில் குறியாக்கப்பட்டு மிடிச் சாதனங்களுடன் தொடர்பு படுத்தப்படுகின்றன என்ற விளக்கத்தை கொண்டிருக்கும். இது, ஒலியின் தொனி மற்றும் ஒலி அளவுபோன்ற பண்புக் கூறுகள் 8 துண்மி (bit) இலக்கமுறைத்(digital) தகவலாய் மாற்றப்பட்ட குறி முறையாகும்.

.mil : .மில்; .எம்ஐஎல் : அமெரிக்க நாட்டு இராணுவ அமைப்புகளின் இணைய தள முகவரிகளை அடை யாளம் காட்டும் களப் பெயர். .mil என்பது தளமுகவரியின் இறுதியில் இடம்பெறும்.

milicent technology : மில்லிசென்ட் தொழில்நுட்பம் : டிஜிட்டல் எக்யூப் மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் உருவாக்கிய இணைய நெறிமுறைத் தொகுதி. மிகச் சிறிய அளவிலான வணிகப் பரிமாற்றங்களைப் பற்றி யது. ஒருசென்டுக்கும் குறைவான விலையில் தகவல் குறிப்புகளை வாங்குவது தொடர்பான வணிக நடவடிக்கைகளைக் கையாள்வதற் கான நெறிமுறை.

MILNET : மில்நெட் : இராணுவப் பிணையம் என்று பொருள்படும் Military Network என்ற தொடரின் சுருக்கம். தொடக்க கால ஆர்ப்பா நெட்டின் இராணுவப் பிரிவை உருவகிக்கும் விரிபரப்புப் பிணை யம். அமெரிக்க நாட்டு இராணுவத் தகவல் போக்குவரத்துக்கானது.

MIMD : எம்ஐஎம்டி : பல் ஆணை பல் தரவு தாரைச் செயலாக்கம் எனப் பொருள்படும் (Multiple Instruction Multiple Data Stream Processing) என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். இணைநிலைச் செயலாக் கத்தை நடைமுறைப்படுத்தும் ஒரு வகை கணினிக் கட்டுமானம். இக் கணினி அமைப்பிலுள்ள ஒவ்வொரு மையச் செயலகமும் தனித்தனியே ஆணைகளைக் கொணர்ந்து தகவல் களின்மீது செயல்படுத்தும்.

MIME : மைம் : பல்பயன் இணைய முறையாகும். அஞ்சல் நீட்டிப்புகள் எனப் பொருள் படும் Multiple Internet Mail Extensions என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஆஸ்கி வடிவத்தில் மாற்றி அமைக்காமலேயே ஒலி, ஒளிக்காட்சி மற்றும் இரும (பைனரி) கோப்புகளை இணைய மின்னஞ்சல் வழியாக அனுப்ப வகை செய்யும் தர வரையறை. இது எஸ்எம்டீபீ (SMTP. Simple Mail Transfer Protocol) யின் நீட்டிப்பாகும். ஒர் ஆவணத்தின் உள்ளடக்கத்தை மைம் வகை சுட்டு கிறது. மைம் ஒத்தியல்புள்ள பயன் பாடு ஒரு கோப்பினை அனுப்பி வைக்கும்போது அந்தக் கோப்புக்கு ஒரு மைம் வகையைக் குறிப்பிட்டு அனுப்புகின்றது. பெறுகின்ற பயன் பாடும் மைம் ஒத்தியல்பானதாய் இருக்க வேண்டும். மைம் வகை/உள் வகைப்பட்டியலுடன் ஒப்பிட்டு, பெற்ற ஆவணத்தின் உள்ளடக் கத்தைச் சரியாகத் தீர்மானிக்கிறது. மைம் வகை உரை(text) எனில், சாதா (plain), ஹெச்டீஎம்எல் (html) என்ற இரு உள்வகை உள்ளன. மைம் வகை உரை/ஹெச்டீஎம்எல் எனில் அதை ஒர் ஹெச்டீஎம்எல் ஆவணமாக உலாவிகள் அடையாளம் காணும்.

mini : சிறு; குறு.

minimal : குறுமம்.

minimize button : சிறிதாக்கு பொத்தான் : விண்டோஸ் 3. x, விண்டோஸ் 95/98/ என்டி இயக்க முறைமைகளில் ஒரு சாளரத்தின் மேல் வலது மூலையில் உள்ள ஒரு பொத்தான். இதன்மீது சுட்டியால் சொடுக்கும்போது சாளரம் மறைந்து கொள்ளும். விண்டோஸ் 3.x மற்றும் விண்டோஸ் என்டி 3.5 ஆகியவற்றில் முகப்புத் திரையிலேயே ஒரு சின்ன மாக அமர்ந்து கொள்ளும், விண் டோஸ் 95/98 மற்றும் விண்டோஸ் என்டி 4.0 மற்றும் அதற்குப் பின்வந்த விண்டோஸ் இயக்க முறைமைகளில் திரையின் அடிப்பகுதியிலுள்ள பணிப்பட்டையில் (Taskbar) சாளரப் பெயர் ஒரு பொத்தானாக அமர்ந்து கொள்ளும். அந்தப் பொத்தான்மீது சொடுக்கும்போது சாளரம் முந்தைய அளவுக்கு விரியும்.

minimal pairs : குறும இணை ஒலிச் சொல் பட்டியல்.

minimum value : குறைந்தபட்ச மதிப்பு.

miniport drivers : சிறுதுறை இயக்கி கள் : ஒரு குறிப்பிட்ட சாதனம் குறித்த தகவலைக் கொண்டுள்ள இயக்கிகள். இவை சாதனம் சாரா துறை இயக்கி களுடன் தொடர்புகொண்டு அவற்றின் வழியாக கணினி முறைமையுடன் பேசிக்கொள்ளும்.

minitower : சிறு நெடுபெட்டி : தரை யில் செங்குத்தாய் நிற்கும் கணினி நிலைப்பெட்டி (cabinet). பொதுவாக கணினி முறைமைப் பெட்டி 24 அங்குல உயரம் இருக்கும். இதனை நெடுபெட்டி என்பர். சிறுநெடு பெட்டி 13அங்குல உயரமே இருக்கும்.

MIP mapping : மிப் பொருத்துகை; மிப் படமாக்கம் : குறைவில் நிறைய என்று பொருள்படும் Multi-turn Is Parvo (Much in Little என்பதன் லத்தீன் தொடர்) என்பதன் சுருக்கமே MIP எனப்படுகிறது. படமாக்கிய ஒரு படிமத்தைச் சுற்றுத் தொலைவி லிருந்தே முன்கணக்கிட்டு ஒரு வரைகோல (Texture) படமாக்கியில் பயன்படுத்தப்படுகிறது. படப்புள்ளி மாற்றுகை மனிதக் கண்புலனுக்

கேற்ப நிறங்களை மாற்றித்தரும் என்பதால், படமாக்கிய உருவங் களின் இதமான வரை கோலத்திற்கு வழிவகுக்கும்.

mirror site : பிம்பத் தளம் : ஒரு கோப்பு வழங்கன் கணினி. பிணை யத்திலுள்ள முக்கிய வழங்கன் கணினியிலுள்ள கோப்புகளின் நகல் களைக் கொண்டிருக்கும் தகவல் போக்குவரத்துச் சுமையைப் பகிர்ந்து கொள்வதற்காகவும், அதிகமான தகவல் போக்குவரத்தைக் கையாள உயர்திறன் வழங்கனின் தேவையைப் தவிர்ப்பதற்காகவும் பிம்பத் தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

missconvergence : காட்சித் திருப்பம்.

misspelled words : பிழைச் சொற்கள்.

.mi.us : .எம்ஐ .யுஎஸ் : ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டு மிச்சி கன் மாநிலத்தைச் சேர்ந்தது என் பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.

mixed cell reference : கலப்புக் கலக் குறிப்பு : விரிதாள்களில் ஒரு கலம் பற்றிய குறிப்பு. (ஒரு வாய் பாடினைக் கணக்கிட்டு விடை காணத் தேவைப்படும் ஒரு கலத்தின் முகவரி). கலத்தின் கிடக்கை (Row) அல்லது நெடுக்கை தொடர்புறு (Relative) குறிப்பாக இருக்கும் (வாய் பாட்டினை நகலெடுத்தாலோ நகர்த் தினாலோ தானாகவே மாறிக் கொள் ளும்). மற்றது நிலையாக இருக்கும். (வாய்பாட்டினை நகலெடுத்தாலோ நகர்த்தினாலோ மாறாதது).

mixing : ஒலிக் கலவை.

mix with file : கோப்புடன் சேர்.

.mk : எம்கே : ஒர் இணைய தள முகவரி மாசிடோனியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.ml : .எம்எல் : ஒர் இணைய தள முகவரி மாலி நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.

.mm : .எம்எம் : ஒர் இணைய தள முகவரி மியன்மார் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

MMX : எம்எம்எக்ஸ் : பல்லூடக நீட்டிப்புகள் எனப் பொருள்படும் (Multimedia Extensions) என்ற தொடரின் சுருக்கம். இன்டெல் 80x86 குடும்பச் செயலிகளில் ஒரு குறிப் பிட்ட வகைச் செயலிகள். பல்லூடக மற்றும் தகவல் தொடர்புப் பயன் பாடுகளுக்கான கூடுதல் திறன் கொண்டவை. இவற்றின் ஆணைத் தொகுதியில் அதற்கான கூடுதல் ஆணைகளைக் கொண்டவை.

.mn : .எம்என் : ஒர் இணைய தள முகவரி மங்கோலியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

MNP10 : எம்என்பீ10 : மைக்ரோகாம் பிணைய நெறிமுறை என்று பொருள் படும் (Microcom Networking Protocol Class 10) என்ற தொடரின் சுருக்கம். தொடர்முறை செல் தொலைபேசி (Analog Cellular Telephone) களுடன் இணைக்கப்படும் மோடம் இணைப்பு களுக்கான தொழிலகச் செந்தரத் தகவல் தொடர்பு நெறிமுறை.

.mn.us : .எம்என்.யுஎஸ் : ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டு மின்னசோட்டா மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.mo : .எம்ஓ : ஒர் இணைய தள முகவரி, மக்காவ் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

mobile computing : நடமாடும் கணிப்பணி; பயணக் கணிப்பணி : பயணம் செய்து கொண்டிருக்கும் போது கணினியைப் பயன்படுத்தும் செயல்பாடு. பயணக் கணிப் பணிக்கு மேசைக் கணினியைவிட மின்கலத் தில் இயங்குகின்ற, கையிலெடுத்துச் செல்லத்தக்க கணினியே ஏற்றது.

model dialog : உருப்படிவ உரையாடல்.

mode, batch processing : தொகுதிச் செயலாக்க பாங்கு.

mode, reset : மாற்றமைவு பாங்கு.

modec : மோடெக் : தொலை தகவல் தொடர்பில், இலக்கமுறையில் (digital) மோடத்துக்குரிய தொடர் முறைக் சமிக்கைகளை உருவாக்கும் சாதனம். மாடுலேட்டர், டீமாடுலேட் டர் ஆகிய சொற்கள் இணைந்ததே மோடம். கோடர், டீகோடர் ஆகிய சொற்கள் இணைந்தது கேடெக். மோடம், கோடெக் ஆகிய சொற்கள் இணைந்து உருவானது மோடெக்.

model geometric : வடிவ மாதிரியம்.

modem bank : இணக்கி வங்கி; மோடம் வங்கி : ஒர் இணையச் சேவையாளர் அல்லது ஒரு பிபிஎஸ் சேவை இயக்குநர் பராமரிக்கின்ற வழங்கன் கணினியுடன் அல்லது தொலைஅணுகு வேன் (WAN) பிணையத்தில் இணைக்கப்பட்ட இணக்கி (மோடம்)களின் தொகுப்பு இவ்வாறு அழைக்கப்படுகிறது. தொலைதுாரப் பயனாளர்கள் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட ஒற்றைத் தொலைபேசி எண்ணை அழைத் தாலே, அப்போது பயன்பாட்டில் இல்லாத தொகுதியிலுள்ள வேறொரு எண்ணுக்கு திசைமாற்றித் தரும் வகையில் பெரும்பாலான இணக்கி (மோடம்) வங்கிகளின் இணக்கிகள் உள்ளமைக்கப்பட்டுள்ளன.

modem port : இணக்கித் துறை : ஒரு சொந்தக் கணினியில் புற இணக்கி யை (மோடத்தை) இணைத்துப் பயன்படுத்தக்கூடிய ஒரு நேரியல் (Serial port).

moderated : கண்காணிக்கப்பட்ட முறைப்படுத்தப்பட்ட : செய்திக் குழு, அஞ்சல் பட்டியல் அமைப்பு களிலும், அல்லது பிற செய்திப் பரி மாற்ற அமைப்புகளிலும் பொருத்த மில்லாத சர்ச்சைக்கு இடமாகும் கட்டுரைகள் அல்லது செய்திகள் உறுப்பினர்களுக்கு அனுப்பப்படு வதற்கு முன்னரே நீக்கிவிடும் உரிமை அக்குழுவின் கண்காணிப் பாளருக்கு உண்டு. இத்தகைய குழுச் செய்திப் பரிமாற்றங்களில் அனை வரும் ஏற்றுக் கொள்ளத்தக்க நாகரி கமான கருத்துரைகளையே அஞ்சல் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்க.

moderated discussion : முறைப் படுத்தப்பட்ட உரையாடல் : அஞ்சல் பட்டியல், செய்திக் குழு அல்லது பிற நிகழ்நிலை மன்றங்களில் நடைபெறு வது. கண்காணிப்பாளர் ஒருவரால் முறைப்படுத்தப்படும் தகவல் பரி மாற்றம். உரையாடலில் ஒருவர் தன் செய்தியை அனுப்பியதும், அச் செய்தி நடைபெற்றுக் கொண்டிருக் கும் உரையாடலுக்கு பொருத்த மானதா என்பதை கண்காணிப்பாளர் முடிவு செய்வார். பொருத்தமானது எனில் அச்செய்தியை குழு முழுமைக்கும் சமர்ப்பிப்பார். முறைப்படுத்தப்படாத உரையாடல் களைவிட முறைப்படுத்தப்பட்ட உரையாடல் அதிக மதிப்புடையது. ஏனெனில் முறையற்ற செய்திகளை கண்காணிப்பாளர் ஒரு காவலாளி போல் இருந்து தடுத்து விடுகிறார். சிலவேளைகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் ஆபாசச் செய்திகளையும் அவர் வடிகட்டி விடுவார்.

moderator : இடையீட்டாளர், நடுவர், கண்காணிப்பாளர் : சில இணைய செய்திக் குழுக்களிலும், அஞ்சல் பட்டியல்களிலும் செய்திகளை குழு உறுப்பினர்களுக்கு சமர்ப்பிக்கப் படும்முன் தணிக்கை செய்து முறைப் படுத்துபவர். பொருத்தமற்ற, முறை யற்ற செய்திகளைத் திருத்துவார், புறக்கணிப்பார் அல்லது வடிகட்டித் தடுத்து நிறுத்திவிடுவார்.

modification : திருத்தியமைத்தல்; மாற்றியமைத்தல்.

modification, address : முகவரி மாற்றியமைத்தல்; முகவரி திருத்தி அமைத்தல்.

modified frequency modulation encoding : திருத்தப்பட்ட அதிர் வலைப் பண்பேற்றக் குறியாக்கம் : சுருக்கமாக எம்எஃப்எம் குறியாக்கம் எனப்படுகிறது. வட்டுகளில் தகவலைச் சேமிக்கப் பரவலாகப் பயன்படும் ஒரு வழிமுறை. இது ஏற்கெனவே உள்ள அதிர்வலைப் பண்பேற்றக் குறியாக்கத்தை அடிப் படையாகக் கொண்டது. ஆனால், ஒத்திசைவுத் தகவலுக்கு அவசிய மில்லாத காரணத்தால் செயல் திறனில் மேம்பட்டது. முந்தைய அதிர்வலைப் பண்பேற்றக் குறியாக் கத்தைவிட அதிக அளவான தகவலை ஒரு வட்டில் பதிய முடி யும். பெருவாரியான நிலைவட்டு களில் இம்முறையே பயன்படுத்தப் படுகிறது. எனினும் ஆர்எல்எல் (RLL-Runlength Limited) குறியாக்க முறையைக் யைக் காட்டிலும் திறன் குறைந்ததே.

modifier : திருத்தியமைப்பி; மாற்றி

modifier, character : எழுத்து மாற்றி யமைப்பி.

modifier key : மாற்றம் செய் விசை : விசைப் பலகையிலுள்ள ஒரு விசை; அதை அழுத்திக் கொண்டு வேறொரு விசையை அழுத்தினால் அதன் இயல்பான பணியைச் செய்யாமல் வேறு பணியைச் செய்யும்.

modular : கூறுநிலை.

modular design : கூறுநிலை வடிவ மைப்பு : வன்பொருள் அல்லது மென் பொருள் வடிவமைப்பில் ஒர் அணுகு முறை. இம்முறையில் ஒரு திட்டப் பணி சிறுசிறு கூறுகளாகப் பிரிக்கப் பட்டு ஒவ்வொரு கூறும் தனியே உருவாக்கப்பட்டு, சோதிக்கப்பட்டு, இறுதியில் ஒருங்கிணைக்கப்பட்டு இறுதி வடிவம் பெறும். ஒவ்வொரு கூறும் ஒரு குறிப்பிட்ட பணியை நிறைவேற்றுமாறு வடிவமைக்கப் படும். இம்முறையினால் உருவாக்க நேரமும், பரிசோதனை நேரமும் மிச்சமாகும். சிலபல கூறுகளை ஒன்றுக்கு மேற்பட்ட திட்டப் பணி களுக்கும் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.

modular element : கூறுநிலை உருப்பு.

modulate : பண்பேற்று : ஒரு சமிக் கையின் சில பண் பியல்புகளை ஒரு நோக்கத்துடன் மாற்றியமைத்தல். பொதுவாக தகவலை வேறிடங் களுக்கு அனுப்பிவைக்கும் பொருட்டு இவ்வாறு பண்பேற்றம் செய்வதுண்டு.

modulatanty : கூறு நிலைமை.

modulation/demodulation : பண்பேற் றம்/பண்பிறக்கம்.

modulation protocol : கூறுநிலை நெறிமுறை.

moire : மங்கல்; தெளிவின்மை : பொருத்தமற்ற தெளிவுக்கூறுடன் ஒரு படிமம் திரையில் காட்டப்படும் போது அல்லது அச்சிடப்படும்போது மங்கலாக, மினுக்கலுடன் தெளி வின்றி இருத்தல். தெளிவின்மைக்கு பல அளபுருக்கள் காரணமாய் உள்ளன. படிமத்தின் அளவும் தெளிவும், வெளியீட்டுக் கருவியின் அளவு-தெளிவுடன் ஒத்தில்லாத போது இந்த நிலை ஏற்படும்.

molecules : மூலக்கூறுகள்.

monitor programme : கண்காணிப்பு நிரல்.

monochrome adapter : ஒற்றைநிறத் தகவி : ஒரேயொரு முன்புல நிறத் தில் ஒளிக்காட்சிக் சமிக்கையை உருவாக்கும் திறனுள்ள ஒர் ஒளிக் காட்சி ஏற்பி. சிலவேளைகளில் ஒற்றை நிறத்தையே வெவ்வேறு அடர்வுகளில் காண்பிக்கும், சாம்பல் அளவீட்டைப் போன்றது.

monodic boolean operator : ஏக பூலி யன் இயக்கர்; ஏக பூலியன் செயற் குறி.

monochrome display : ஒற்றைநிறத் திரைக்காட்சி : 1. ஒற்றை நிறத்தில் மட்டுமே தோன்றும் ஒளிக்காட்சித் திரைக்காட்சி. அந்த ஒற்றைநிறம், பயன்படுத்தப்படும் பாஸ்பரைப் பொறுத்தது. அனேகமாக பச்சை அல்லது ஆம்பர் நிறமாக இருக்கும். 2. ஒரே நிறத்தையே வெவ்வேறு அடர்வுகளில் காண்பிக்கும் திறன் பெற்ற திரைக்காட்சி.

monochrome printer : ஒற்றை நிற அச்சகப்பொறி.

monographics adapter : ஒற்றை வரை கலைத் தகவி : ஒற்றைநிற உரை மற்றும் வரைகலைப் படங்களை மட்டுமே காட்டமுடிகிற ஒளிக்காட் சித் தகவி. செயல்பாட்டின் அடிப் படையில் ஹெர்க்குலிஸ் வரைகலை அட்டை (HGC)யுடன் ஒத்தியல்பு உடையது.

monolingual : ஒற்றைமொழி.

monolingual coding : ஒற்றைமொழிக் குறிமுறை.

monolithic kernel : ஒரு சீரானகருவகம்.

monospace font : சமஇட எழுத்துரு : தட்டச்சில் பயன்படுத்தப்படும் எழுத்துருவைப் போன்றது. ஒவ் வோர் எழுத்தும் கிடைமட்டத்தில் ஒரே அளவான இடத்தை அடைத்துக் கொள்ளும். (எ-டு) i மற்றும் m ஆகிய இரண்டு எழுத்துகளும் அவற்றின் அகலம் எப்படி இருப்பினும் அடைத்துக் கொள்ளும் இடம் ஒரே அளவானதாக இருக்கும்.

.montreal.ca : .மான்ட்ரீல்.சிஏ : ஒர் இணைய தள முகவரி கனடா நாட்டு மான்ட்ரீலைச் சேர்ந்தது என் பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.

M00 : மூ : பொருள்நோக்கான மட் என்று பொருள்படும் MUD, Object Oriented என்ற தொடரின் சுருக்கம். MUD என்பது Multiuser Dungeon என்பதன் சுருக்கம். ஒரு பொருள் நோக்கு மொழியை உள்ளடக்கிய மட், மூ என்றழைக்கப்படுகிறது. பயனாளர்கள் தனிப்பரப்புகளையும் அதில் பொருள் உறுப்புகளையும் உருவாக்க முடியும். மூ, மட் பயன் பாட்டைவிட விளையாட்டுகளை உருவாக்கவே அதிகம் பயன்படுகிறது.

.moow : மூவ்; .எம்ஓஓவி : மெக்கின் டோஷ் கணினிகளில் பயன்படுத்தப் படும் குவிக்டைம் மூவி ஒளிக் காட்சிக் கோப்புகளைக் குறிக்கும் கோப்பின் வகைப்பெயர் (tile extension).

M00V : மூவ் : மெக்கின்டோஷின் குவிக்டைம் திரைப்படங்களுக்கான ஒரு கோப்பு வடிவம். உரை, கேட் பொலி, ஒளிக்காட்சி, கட்டுப்பாடு அனைத்தையும் ஒத்திசைந்த தடங்களில் சேமித்து வைக்கும்.

morpher : உருமாற்றி.

most significant bit : மிகு மதிப்பு பிட்: எண்ணின் ஒன்று அல்லது மேற் பட்ட பைட்களின் (bits) ஒர் இரும தொடர்ச்சியான துண்மிகளின் வரிசையில் அதிக இட மதிப்புக் கொண்ட துண்மி (bit). (அடையாள துண்மியைத் தவிர்த்து).

most significant character : மிகு மதிப்பு எழுத்து : ஒரு சரத்திலுள்ள இடது ஓர எழுத்து. MSC என்பது இத்தொடரின் சுருக்கம்.

motion JPEG : நகர்வு ஜேபெக் : நகர்வு ஒளிக்காட்சித் தகவலைச் சேமித்து வைப்பதற்கான தர வரை யறை. ஒளிப்பட வல்லுநர் குழு ஒருங்கிணைப்பு (JPEG) முன் வைத்தது. ஒளிக்காட்சித் தகவலின் ஒவ்வொரு சட்டத்தையும் ஜேபெக் தர வரையறைப்படி இறுக்கிச் சுருக்கும். motion capture : அசைவுப் பதிவு.

mount : பொருத்து; நிறுவு : ஒரு கணினியில் பொருத்தப்பட்ட ஒரு வட்டினை அல்லது நாடாவை கணினி அடையாளங்கண்டு அவற்றை கோப்பு முறைமையில் இணைத்துக் கொள்ளும்படி செய்தல். இச்சொல் பெரும்பாலும் ஆப்பிள் மெக்கின் டோஷ் மற்றும் யூனிக்ஸ் அடிப்படை யிலான கணினிகள் வட்டுகளை அணுகச் செய்வதைக் குறிக்கப் பயன் படுகிறது.

mousekeys : சுட்டி விசைகள் : மைக்ரோசாஃப்ட் விண்டோஸில் உள்ள ஒரு வசதி. பயனாளர், சுட்டிக் குறியை நகர்த்த விசைப்பலகையின் எண்களடங்கிய விசைத் தொகுதி யைப் பயன்படுத்த அனுமதிக்கப் படுகிறது. வழக்கமான சுட்டியை நகர்த்துவதில் இடர்ப்பாடு உள்ளவர் களுக்காகவே இத்தகைய வசதி தரப்பட்டுள்ளது.

mouse port : சுட்டித் துறை : 1. பொதுவாக பீசியையொத்த கணினி களில் சுட்டி அல்லது அதுபோன்ற சுட்டுக் கருவியை இணைப்பதற் கென்றே உள்ள பொருத்துவாய். சுட்டிக்கென ஒரு துறை இல்லை யெனில், ஒரு நேரியல் துறையில் சுட்டியை இணைத்துக் கொள்ள லாம். 2. ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில் ஆப்பிள் டெஸ்க்டாப் பாட்டைத் துறையைக் குறிக்கும்.

mouse sensitivity : சுட்டி உணர்வு : சுட்டியின் நகர்வுக்கும் திரையில் காட்டியின் (Cursor) நகர்வுக்கும் இடையேயுள்ள உறவு. அதிக உணர் வுள்ள சுட்டியை அதிக தொலைவு நகர்த் தினால்தான் திரையில் காட்டி (cursor) சிறிது தொலைவு நகரும். சுட்டிக்கான இயக்கி நிரலில் உணர்வினைக் கூட்டினால் திரையில் காட்டி மெது வாக நகரும். இதனால் பயனாளர் தம் விருப்பப்படி காட்டியை நகர்த்த முடியும். கேட்/ கேம் (CAD/CAM) பணிகளில் துல்லிய தன்மைக்கு அதிக உணர்வுள்ள சுட்டி உகந்தது.

mouse trails : சுட்டிச் சுவடுகள் : சுட்டியை நகர்த்தும்போது திரையில் நகரும் சுட்டிக் குறி (mouse pointer) நகர்ந்து வந்த பாதையில் தெரிகின்ற சுவடுகள். மடிக்கணினி, கைஏட்டுக் கணினி ஆகியவற்றில் சுட்டிச் சுவடு கள் மிகவும் பயன்படும். ஏனெனில் அவற்றில் இயங்கா அணித் திரைக் காட்சி (passive matrix display) முறை உள்ளது. சுட்டிக் குறி நகர்வது, சுவடுகள் இருந்தால்தான் நன்கு தெரியும். பழைய ஒற்றைநிறத் திரை களுக்கும் சுவடுகள் இருப்பின் நல்லது. விண்டோஸ் இயக்க முறை மையில் தேவையெனில் சுவடுகள் தெரியும்படி வைத்துக்கொள்ளலாம்.

.mow : .எம்ஓவி : ஆப்பிளின் குவிக் டைம் வடிவிலுள்ள திரைப்படக் கோப்புகளின் வகைப்பெயர்.

move/copy : நகர்த்தல்/நகலெடுத்தல்.

move/copy sheet : தாள் நகர்த்து/ நகலெடு.

.mpeg : .எம்பெக் : எம்பெக் (MPEG) வடிவில் அமைந்த வரைகலைப் படிமக் கோப்புகளை அடையாளங் காட்டும் கோப்பு வகைப்பெயர். (MPEG-Moving Pictures Experts Group).

MPEG : எம்பெக் : 1. திரைப்பட வல்லுநர்கள் குழு எனப் பொருள் படும் Moving Pictures Experts Group என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சித் தகவல்களை இறுக்கிச் சுருக்குவதற்கான தரவரையறைகள். தகவல் தொழில்நுட்பத்துக்கான ஐஎஸ்ஓ/ஐஇசி கூட்டுத் தொழில் நுட்பக்குழு உருவாக்கியவை. எம்பெக் தர வரையறை பல்வகைப் பட்டவை. வெவ்வேறு சூழ்நிலை களில் செயல்படுவதற்கென வடி வமைக்கப்பட்டவை.

MPEG1 : எம்பெக்1 : சிடிரோம் தொழில்நுட்பத்துக்கான மூல எம்பெக் தர வரையறை. ஒளிக்காட்சி மற்றும் கேட்பொலித் தகவல்களைச் சேமிக்கவும் மீட்டெடுக்கவும் வடிவமைக்கப்பட்டது. 1.5 எம்பி பீஎஸ் வரையிலான நடுத்தர அலைக் கற்றை இரண்டு கேட்பொலித் தடங் கள், பின்னலுறா ஒளிக்காட்சி ஆகிய வற்றை எம்பெக்-1 வரையறுக்கிறது.

MPEG2 : எம்பெக்2 எம்பெக்-1 தர வரையறையின் நீட்டித்த வடிவம். தொலைக்காட்சி அலைபரப்புக்காக (ஹெச்டிடீவி உட்பட) வடிவமைக் கப்பட்டது. 40 எம்பிபீஎஸ் வரை யிலான உயர்நிலை அலைக் கற்றையை, ஐந்து கேட்பொலித் தடங்கள், பலதரப்பட்ட சட்ட அளவு கள் மற்றும் பின்னலுறு ஒளிக் காட்சிகளை வரையறுக்கிறது.

MPEG3 : எம்பெக்3 : தொடக்கத்தில் உயர் வரையறைத் தொலைக் காட்சிக்கான (HDTV) எம்பெக் தர வரையறையாகும். ஆனால் இதற்குப் பதிலாக எம்பெக்-2 பயன்படுத்த முடியும் என்பதால், எம்பெக்-3 மதிப்பிழந்தது.

MPEG4 : எம்பெக்4 : ஒளிக்காட்சித் தொலைபேசிகள் மற்றும் பல்லூட கப் பயன்பாடுகளுக்காக வடிவ மைக்கப்படும் தர வரையறை. எம்பெக்-4 64 கேபிபீஎஸ் வரையி லான அடிநிலை அலைக்கற்றையை வழங்குகிறது.

.mpg : .எம்பீஜி : எம்பெக் குழுவினர் வரையறுத்த வடிவமைப்பைப் பயன் படுத்தி இறுக்கிச் சுருக்கப்பட்ட கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சித் தகவலைக் கொண்ட, குறியாக்கம் செய்யப்பட்ட தரவுத் தாரைகளை அடையாளம் காட்டும் கோப்பு வகைப்பெயர்.

MP/M : எம்பீ/எம் : நுண்கணினிகளுக் கான பல்பணி நிரல் எனப் பொருள் படும் Multi tasking Programme for Micro Computers என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். சிபீ/எம் இயக்கமுறைமையின் பல்பணி பல்பயனாளர் பதிப்பாகும்.

MPOA : எம்பீஒஏ : ஏடீஎம் வழியாக பல் நெறிமுறை என்று பொருள் படும் Multi Protocol Over ATM என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். ஏடீஎம் குழு முன்வைத்த வரன்முறையாகும் இது. (ஏடீஎம் என்பது ஒத்திசையா பரிமாற்றல் பாங்கு என்று பொருள்படும் Asynchronous Transfer Mode என்பதன் சுருக்கம். ஏடீஎம் பயனாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இணைந்த அமைப்பே ஏடீஎம் குழு). தற் போதுள்ள ஈதர்நெட், டோக்கன் ரிங் மற்றும் டீசிபி/ஐபீ பிணையங்களு டன் ஏடீஎம்மை ஒருங்கிணைப்பதற் கான வரன்முறைகளாகும்.

ΜΡR ΙΙ : எம்பீஆர் ll : விஎல்எஃப் கதிர்வீச்சு உட்பட ஒளிக்காட்சித் திரையகத்திலிருந்து உமிழப்படும் காந்த மற்றும் மின்புலத்தைக் கட்டுப் படுத்தும் தர வரையறை ஆகும். 1987இல் அளவீடுகள் மற்றும் சோதனைகளுக்கான சுவிஸ் கழகம் (Swedish Board for Measurement and Testing) உருவாக்கிய தன்முனைப்புத் தர வரையறை ஆகும். 1990இல் புதுப்பிக்கப்பட்டது.

.mq : .எம்.கியூ : ஒர் இணைய தள முகவரி மார்ட்டினிக் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.mr : .எம்ஆர் : ஒர் இணைய தள முகவரி மெளரிட்டானியா நாட் டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

MR : எம்ஆர் : மோடம் (இணக்கி) தயார் எனக்குறிக்கும் Modem Ready என்ற தொடரின் சுருக்கம். மோடத் தின் முன்பக்கப் பலகத்தில் (Panel) எரியும் ஒரு சிறு விளக்கு. மோடம் தயார் நிலையில் உள்ளதை உணர்த்துகிறது.

.ms : .எம்எஸ் : ஒர் இணைய தள முகவரி மான்ட்செர்ரட் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

MS-DOS mode : எம்எஸ் டாஸ் பாங்கு: விண்டோஸ் 95/98/என்டி போன்ற 32-பிட் இயக்க முறைமைகளில் பாவிக்கப்படும் எம்எஸ்டாஸ் பணிச் சூழலை வழங்கும் ஒரு செயல்தளம் (shell).

MS-DOS shell : எம்எஸ் டாஸ் செயல் தளம் : பயனாளர் எம்எஸ் டாஸ் இயக்க முறைமையில் அல்லது எம்எஸ் டாஸில் பாவிக்கும் பிற இயக்க முறைமைகளில் செயலாற்ற அனுமதிக்கும் ஒரு சூழல்.

MSDOS.SYS : எம்எஸ்டாஸ்.சிஸ் : எம்எஸ்டாஸ் இயக்கத் தொடங்கு வட்டுகளில் மறைத்து வைக்கப் பட்டுள்ள இயக்க முறைமைக் கோப்புகளில் ஒன்று. இயக்க முறைமையின் கருவகமாய் (kernel) விளங்கும் மென்பொருள் இது.

.ms.us : .எம்எஸ்.யுஎஸ் : ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டு மிஸிஸிப்பி மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.mt : எம்டி : ஒர் இணைய தள முகவரி மால்ட்டா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.mu : .எம்யு : ஒர் இணைய தள முகவரி மொரீசியஸ் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

MUD : மட்; எம்யுடி : பல்பயனாளர் நிலவறை என்று பொருள்படும் Multiuser Dungeon என்ற தொடரின் சுருக்கம். இணையத்தில் பல பயனாளர்கள் ஒரே நேரத்தில் பங்கு கொண்டு நிகழ்நிலையில் ஒருவரோடு ஒருவர் ஊடாடி மகிழும் விளையாட்டு. இணையத்தில் நிலவும் ஓர் மெய்நிகர் சூழல்.

multi-access system : பன்முக அணுகு முறைமை.

multicast-backbone : பல்முனைப் பரப்பு முதுகெலும்பு.

multicasting : பல்முனைப் பரப்புகை : ஒரு பிணையத்தில், ஒரே நேரத்தில் ஒரு செய்தியை ஒன்றுக்கு மேற் பட்ட இலக்குகளுக்கு அனுப்பி வைக்கும் செயல்முறை.

multidrop network : பல்முனையப் பிணையம். multidimensional : பல்பரிமாண.

multifile sorting : பல்கோப்பு வரிசை யாக்கம் : ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளில் உள்ள தகவல்களை வரிசையாக்கம் செய்யும் முறை.

multifinder: பல்பணி இயக்கி; மல்ட்டி ஃபைண்டர் : ஆப்பிள் மெக்கின் டோஷின் ஃபைண்டர் பயன்பாட் டின் ஒரு பதிப்பு. பல்பணிகளை ஒரே நேரத்தில் இயக்க வழிசெய்யும். ஒரே நேரத்தில் பல்வேறு பயன்பாடுகள் நினைவகத்தில் தங்கியிருக்க வகை செய்வதே இதன் முதன்மையான பயன். ஒற்றைச் சுட்டிச் சொடுக்கில் பயன்பாடுகளுக்கிடையே மாறிக் கொள்ளலாம். ஒரு பயன்பாட்டி லுள்ள தகவலை இன்னொன்றுக்கு நகல் எடுக்கலாம். இயக்கத்தில் இருக்கும் பயன்பாடு மெய்யான பல பணிச் செயல்பாட்டை அனுமதிக்கு மெனில் பின்புலத்தில் வேறொரு பணியை இயக்க முடியும்.

multi lounching : பல்முனை ஏவல்.

multilink point - to - point protocol : பல்தொடுப்பு முனைக்கு முனை நெறிமுறை : இணையத்தில் கணினி கள் தமது அலைக்கற்றைகளை ஒருங் கிணைக்க தம்டையே பல மெய்ம் மைத் தொடுப்புகளை (real links) ஏற்படுத்திக் கொள்ள அனுமதிக்கும் நெறிமுறை. ஒற்றை மெய்ம்மைத் தொடுப்பின் கொள்திறனை விட அதிகக் கொள்திறனுள்ள ஒரு மெய் நிகர் தொடுப்பை (virtual link) இந்த நுட்பம் உருவாக்குகிறது.

multimedia : பல்லூடகம் : உரை, ஒலி, வரைகலை, அசைவூட்டம், ஒளிக்காட்சி ஆகியவற்றின் தொகுப்பு. கணினி உலகில் பல்லூடகம் என்பது மீஊடகத்தின் (hypermedia) ஓர் அங்கமாக விளங்கு கிறது. மீ ஊடகம் என்பது மேற் காணும் ஐந்து ஊடகங்களையும் மீஉரையுடன் (Hypertext) இணைக்கிறது.

multimedia conference : பல்ஊடக கருத்தரங்கு; பல்லூடகக் கலந்துரை யாடல்.

multimedia distributed parallel processing : பல்ஊடக பகிர்ம இணைச் செயல்பாடு.

multimedia PC : பல்லூடக பீசி (கணினி) : பல்லூடக வசதிபெற்ற சொந்தக் கணினி. இதற்கான மென் பொருள், வன்பொருள் தர அளவீடு களை பல்லூடக பீசி விற்பனைக் குழு (Multimedia PC Marketing Council) நிர்ணயம் செய்துள்ளது. ஒரு பீசியின் ஒலி, ஒளிக்காட்சி, சிடி-ரோம் இயக்கத் திறன்களின் குறைந்தபட்ச அளவீடுகளை இது வரையறுத்துள்ளது.

multinode computer : பல்கணு கணினி : பல செயலிகளைப் பயன் படுத்தும் ஒரு கணினி, மிகச் சிக்கலான பணியில் கணக்கீடுகளை இவை பகிர்ந்துகொள்ளும்.

multipart forms : பல்பகுதி படிவங்கள் : பல்லடுக்குப் பல்தாள் படிவங்கள்: கணினியில் தொட்டச்சுப் பொறி களில் (impact printers) அச்சுக்குப் பயன்படுத்தப்படும் ஒருவகைத் தாள் தொகுதி. இருதாள்களுக்கிடையே கரியத் தாள் (carbon paper) இருக்கும். அல்லது ஒவ்வொரு தாளின் பின் பக்கமும் ஒருவகை வேதிப்பொருள் பூசப்பட்டிருக்கும். இது கரியத்தாள் போன்றே செயல்படும். கடைசித் தாளில் இப்பூச்சு இருக்காது. ஒரே அச்சில் பல படிகளை எடுக்க இத் தாள் பயன்படுகிறது. ஒரு தொகுதி யில் மொத்தம் எத்தனை படிகள் எடுக்க முடியும் என்பதைக் கொண்டு இத்தாளின் பல்லடுக்கு (multipart) கணக்கிடப்படுகிறது.

multiple access message : பன்முக அணுகு செய்தி.

multiple access points : பன்முக அணுகு முனைகள.

multiple inheritance : பல்வழி மரபுரிமம்; பன்முக மரபுரிமை : சில பொருநோக்கு நிரலாக்க மொழி (Object Oriented Programming Languages)களில், காணப்படும் பண்புக்கூறு. ஏற்கெனவே உரு வாக்கப்பட்டுள்ள ஒன்றுக்கு மேற் பட்ட இனக்குழுக்களை அடிப்படை யாகக் கொண்டு புதிய இனக் குழுவை உருவாக்க அனுமதிக்கும் செயல்முறை. இருக்கும் தரவு இனங்களை நீட்டிக்கவும் இணைக்க வும் பல்வழி மரபுரிமம் வழி வகுக் கிறது. சி++ மொழியில் இத்தகு வசதி உள்ளது. ஆனால் ஜாவா மற்றும் சி# மொழிகளில் பல்வழி மரபுரிமம் அனுமதிக்கப்படுவதில்லை.

multiple page preview : பன்முகப் பக்க முன்காட்சி; பலபக்க முன்காட்சி.

multiple programme loading : பன்முக நிரல் சுமை.

multiple selection : பன்முகத் தெரிவு.

multiplication : பெருக்கல்.

multi processing arithmetic : பன்முக செயலாக்க எண்கணிதம்.

multiple recipients : பல்பெறுநர்கள் : ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை ஒற்றைவரியில் குறிப் பிட்டு ஒன்றுக்கு மேற்பட்ட பயனா ளர்களுக்கு மின்னஞ்சல்களை ஒரே நேரத்தில் அனுப்பி வைக்கும் திறன். முகவரிகளுக்கிடையே காற்புள்ளி அல்லது அரைப்புள்ளி, பிரிப்புக் குறி யீடாகப் பயன்படும்.

multiple selection : பல்முனைத் தேர்வு.

multiplexing : ஒன்றுசேர்த்தல்; ஒருங் கிணைத்தல் : தகவல் தொடர்பிலும், உள்ளிட்டு/வெளியீட்டுச் செயல்பாடு களிலும் ஒற்றைத் தகவல் தடத்தில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வெவ்வேறு தகவல் சமிக்கைகளை (signals) அனுப்பி வைக்கப் பயன் படுத்தப்படும் ஒரு நுட்பம். ஒரே தடத்தில் பயணிக்கும் வெவ்வேறு தகவல் சமிக்கைகள் ஒன்றோ டொன்று கலந்துவிடாமல் இருக்க நேரம், இடைவெளி அல்லது அலை வரிசை - இவற்றில் ஒன்றால் பிரிக்கப் பட்டு அனுப்பப்படுகின்றன. இவ்வாறு சமிக்கைகளை ஒன்றிணைக்கப் பயன்படும் சாதனம் ஒன்றுசேர்ப்பி அல்லது ஒருங்கிணைப்பி (multiplexer) என்றுஅழைக்கப்படுகிறது.

multiplexor, data channel : தரவுத் தட ஒன்று சேர்ப்பி.

multiplier : பெருக்கி; பெருக்கெண் : 1. கணக்கீட்டில் ஒர் எண்ணை எத்தனை முறை பெருக்க வேண்டும் என்பதைக் குறிக்கும் எண். 4x5 என்பதில் 4 என்பது பெருக்கப்படு எண். 5 என்பது பெருக்கெண். 2. கணினியில் இருக்கும் ஒரு மின்னணு சாதனம். மையச் செயலகத்தின் புறத்தே இருப்பது. பெருக்கல் கணக்கீடுகளை இது செய்யும். தொடர் கூட்டல் முறையில் இது நிறைவேற்றப்படும். 4x5 எனில் 4 என்ற எண் 5 முறை கூட்டப்படும்.

multipiler, digital : இலக்கப் பெருக்கி. multipoint configuration : பல்முனை தகவமைவு : ஒரு தகவல் தொடர்பு இணைப்பு. பல நிலையங்கள் தொடர்ச்சியாக ஒரே தகவல் தொடர்புத் தடத்தில் இணைக்கப் பட்டிருக்கும். பொதுவாக, தகவல் தொடர்பு இணைப்பை ஒரு முதன்மை நிலையம் (ஒரு தலைமைக் கணினி) நிர்வகிக்கும். இணைக்கப்பட்ட ஏனைய நிலையங்கள் அதன் கட்டுப் பாட்டின்கீழ் இயங்கும்.

multi processor : பல் செயலி.

multi programming : பல் நிரலாக்கம்.

multi reel file : பல்சுருள் கோப்பு.

multi syllabus approach : பன்முகப் பாடத்திட்ட அணுகுமுறை.

multisync monitor : பல் ஒத்திசைவுத் திரையகம் : பலதரப்பட்ட செங்குத்து மற்றும் கிடைமட்ட ஒத்திசைவு வீதங்களுக்கு ஈடுகொடுக்கும் திறன் பெற்ற ஒரு கணினித் திரையகம். அத்திரையகங்களுக்கு பல்வேறு வகைப்பட்ட தகவிகளைப் (Adapters) பயன்படுத்திக்கொள்ள முடியும். ஏனெனில் அவை ஒளிக்காட்சிக் சமிக்கையில் ஒத்திசைவு வீதத்துக்கு ஏற்ப தாமாகவே தகவமைத்துக் கொள்ளும் திறன் பெற்றவை.

multi task : பல் பணி.

multithreaded application : பல்புரிப் பயன்பாடு : ஒரே நேரத்தில் ஒரு நிரலில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட கிளைப்பணிகள், கிளைநிரல் புரி களாகப் பிரிந்து ஒரே நேரத்தில் செயல்படுத்தப்படுவது. இந்த முறை யில் செயலி வாளா இருக்கும் நேரம் குறைக்கப்படுகிறது.

multi user file processing : பல் பயனாளர் கோப்புச் செயலாக்கம்.

multiway branching : பல்வழி கிளை பிரித்தல்.

MUSE : மியூஸ் : பல்பயனாளர் பாவிப்புப் பணிச்சூழல் என்று பொருள்படும் Multi User Simulation Environment என்பதன் சுருக்கம்.

mute : ஒலி நிறுத்தம்.

mutual exclusion : பரஸ்பர விலக்கம்: ஒரு நிரலாக்க நுட்பம். ஒரு நினைவக இருப்பிடம் அல்லது உள்ளீட்டு/ வெளியீட்டுத் துறை அல்லது ஒரு கோப்பு போன்ற ஏதேனும் ஒரு கணினி வளத்தை ஒரு நேரத்தில் ஒரு நிரல் அல்லது நிரல்கூறு மட்டுமே அணுகுவதை உறுதிப்படுத்தும் முறை. அறைக் கதவில் நான் வேலை யாய் இருக்கிறேன்; இடையூறு செய் யாதீர் என்று ஒர் அறிவிப்புப் பலகையை வைத்துவிட்டு உள்ளே பணிகளை மேற்கொள்ளும் முறை யை ஒத்தது. ஒர் அறிவிப்புக் குறிப்பு அல்லது குறியீடு (semaphores/flags) மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட நிரல் களின்/நிரல்கூறுகளின் நடவடிக்கை கள் முறைப்படுத்தப்படுகின்றன.

.mv : .எம்வி : ஒர் இணைய தள முகவரி மாலத் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

MVC architecture : எம்விசி கட்டுமானம்.

.mw : எம்டபிள்யூ : ஓர் இணைய தள முகவரி மாலாவி நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.mx : .எம்எக்ஸ் : ஒர் இணைய தள முகவரி மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர். .my : .எம்ஒய் : ஓர் இணைய தள முகவரி மலேசியா நாட்டைச்சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

My Computer : என் கணினி. விண்டோஸ் 95/98 இயக்கமுறைமையில் முகப்புத் திரையில் இருக்கும் ஒரு கோப்புறை.

My Documents : என் ஆவணங்கள். விண்டோஸ் 95/98 இயக்கமுறைமையில் முன்னியல்பாய் இருக்கும் ஒரு கோப்புறை.

MYOB : .எம்யோப் : உன் வேலையைப் பார் எனப்பொருள்படும் Mind Your Own Business என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மின்னஞ்சல் மற்றும் செய்திக்குழுக்களில் பயன்படுத்தப்படுவது.

my two cents : என் பங்களிப்பு: மை டூ சென்ட்ஸ் : செய்திக் குழுக் கட்டுரைகளிலும் அவ்வப்போது மின்னஞ்சல் செய்திகளிலும் அஞ்சல் பட்டியலிலும் பயன்படுத்தப்படும் ஒரு தொடர். குறிப்பிட்ட செய்தி, நடந்து கொண்டிருக்கும் விவாதத்தில் எழுத்தாளரின் பங்களிப்பு என்பதைக் குறிப்பிடுவது.

.mz : எம்இஸட் : ஓர் இணைய தள முகவரி மொஸாம்பிக் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.