கணினி களஞ்சிய அகராதி இரண்டாம் தொகுதி/N

விக்கிமூலம் இலிருந்து
N

.na : .என்.ஏ : ஒர் இணையதள முகவரி, நமீபியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

named anchor: பெயரிட்ட நங்கூரம்: ஹெச்டிஎம்எல் மொழி ஆவணத்தில் பயன்படுத்தப்படும் ஒரு குறி சொல். ஒரு மீத்தொடுப்புக்கான இலக்கைக் குறிக்கிறது. பெயரிட்ட நங்கூரங்கள் பயனுள்ளவை. ஏனெனில் ஒர் ஆவணத்துக்குள்ளேயே ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு ஒரு தொகுப்பின் மூலம் தாவிச் செல்லப் பயன்படுகிறது. பெயரிட்ட இலக்கு என்றும் அழைக்கப்படும்.

name and location: பெயரும்,இருப்பிடமும்

name box : பெயர்ப்பெட்டி

name,file : கோப்புப்பெயர்

name of the font : எழுத்துருவின் பெயர். name value pair :பெயர் மதிப்பு இணை : பேர்ல் (Perl) நிரலாக்க மொழியில் ஒரு தகவல் தொகுதியில் தகவலானது ஒரு குறிப்பிட்ட பெயருடன் தொடர்புடையதாயுள்ளது.

NAMPS : நாம்ப்ஸ் : குறுங்கற்றை தொடர்முறை நடமாடும் தொலை பேசிச் சேவை என்று பொருள்படும் Narrow Band Analog Mobile Phone Service என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். மோட்டோரோலோ நிறுவனம் முன்வைத்த தர வரையறை. தற்போதைய ஆம்ப்ஸ் (AMPS) செல் தொலைபேசி தரவரையறையை இலக்கமுறைக் சமிக்கைத் தகவலுடன் இணைத்து உருவாக்கப்பட்டது. உயர் செயல் திறன் மற்றும் அதிக ஆக்கத்திறனும் கிடைக்கும்.

narrow SCSI:குறுகிய ஸ்கஸ்ஸி: ஒருநேரத்தில் எட்டு துண்மி (bit) தகவலை மட்டுமே அனுப்பவல்ல ஸ்கஸ்ஸி அல்லது ஸ்கஸ்ஸி-2 இடைமுகம்.

NAT:நேட் :பிணைய முகவரி பெயர்ப்பு எனப் பொருள்படும் Network Address Translation என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். அக இணையம் (Intranet) அல்லது பிற தனியார் பிணையங்களுக்குள் பயன்படுத்தப்படும் ஐபீ முகவரிகளையும் இணையத்தின் ஐபீ முகவரிகளையும் பெற இந்த அணுகுமுறை உதவுகிறது.

National Attachment Point : தேசிய இணைப்பு முனை : அமெரிக்காவில் தேசிய அறிவியல் கழகத்தினர் (National Science Foundation) இணையப் போக்குவரத்துக்கு அமைத்த நான்கு இணைப்பக முனைகளில் ஒன்று. இணையச் சேவையாளர்கள் தங்களுடைய பிணையத்தை ஏதேனும் ஒரு தேசிய இணைப்பு முனையில் இணைத்துக்கொள்ள வேண்டும். அதன்மூலம் பிற இணையச் சேவை யர்களுடன் தகவலை பரிமாறிக் கொள்ள முடியும். நான்கு தேசிய இணைப்பு முனைகள் இருக்குமிடங்கள். (1) சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப்பகுதி (பசிபிக் பெல் நிறுவனம் இயக்குகிறது) (2)

சிகாகோ (அமெரிடெக் நிறுவனம்) (3) நியூயார்க் (ஸ்பிரின்ட் நிறுவனம்) (4) வாசிங்டன் டி.சி. (என் எஃப்எஸ் அமைப்பு).

National Information Infrastructure : தேசிய தகவல் உள்கட்டமைப்பு : வருங்கால உயர் அகல்கற்றை (Broad Band) விரிபரப்புப் பிணையம். அமெரிக்க அரசு முன்வைத்துள்ள திட்டம். அமெரிக்கா முழுவதும் உள்ள பயனாளர்களுக்கு தகவல், தொலைநகல், ஒளிக்காட்சி மற்றும் குரல் ஆகியவற்றை எடுத்துச் செல்லும். பெரும்பாலும் தனியார் நிறுவனங்களே இப்பிணையத்தை நிறுவ உள்ளன. இணையத்தில் கேட்டவுடன் ஒளிக்காட்சி கிடைக் கக்கூடிய சேவையை பயனாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். இத்தேவை தனியார் நிறுவனங்களை இத்திசை நோக்கித் தூண்டும் என அமெரிக்க அரசு கருதுகிறது. இதன்மூலம் கிடைக்கக்கூடிய சேவைகள் என முன்வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான சேவைகள் இணையத்திலேயே இப்போது கிடைக்கத் தொடங்கி விட்டன.

National Science Foundation:தேசிய அறிவியல் கழகம் : அமெரிக்க அரசின் முகமை. அறிவியல் ஆய்வுக்கென அமைக்கப்பட்டது. ஆய்வுத் திட்டப் பணிகளுக்கும் அறிவியல் தகவல் தொடர்புத் திட்டப்பணிகளுக்கும் நிதியுதவி அளிக்கப்பட்டது. முன்னாளில் இணையத்தின் முதுகெலும்பாய் விளங்கிய என்எஸ் எஃப்நெட் இதன் படைப்பே.

native : உள்ளார்ந்த : தொடக்கத்தில் இருந்த வடிவில் நிலவக்கூடிய ஒன்றின் பண்புக் கூறு. (எ-டு) மென்பொருள் பயன்பாடுகள் பல்வேறு கோப்பு வடிவங்களைக் கையாளும் திறன் படைத்தவை. ஆனாலும் அவை உள்ளார்ந்த நிலையில் தன் சொந்த வடிவமைப்பையே பயன்படுத்திக் கொள்கின்றன. வேறு வடிவமைப்பில் உள்ள கோப்புகள் பயன்பாட்டு மென்பொருளின் உள்ளார்ந்தவடிவமைப்புக்கு மாற்றப்பட வேண்டும்.

native application :உள்ளார்ந்த பயன்பாடு : ஒரு குறிப்பிட்ட வகை நுண்செயலிக்காக உருவாக்கப்பட்ட நிரல். அந்த நுண்செயலியில் மட்டுமே செயல்படும். உள்ளார்ந்த பயன்பாடு அல்லாத பயன்பாடுகளைவிட அதிவேகமாகச் செயல்படும். அல்லாத பயன்பாடுகள் வேறொரு இடைநிலை நிரலின் உதவியுடன்தான் செயல்பட முடியும்.

native code : உள்ளார்ந்த குறிமுறை: ஒரு குறிப்பிட்ட கணினி அல்லது செயலிக்காக எழுதப்பட்ட கட்டளைத் தொகுதி.

native data base : உள்ளார்ந்த தரவுத்தளம்.

native file format: உள்ளார்ந்த கோப்புவடிவம் : ஒரு பயன்பாடு உள்ளார்ந்த நிலையில் தகவலை கையாளப் பயன்படுத்தும் கோப்பு வடிவம். பிற வடிவமைப்புகளில் உள்ள கோப்புகளை உள்ளார்ந்த அமைப்புக்கு மாற்றிய பின்னரே கையாள முடியும். (எ-டு) ஒரு சொல்செயலி மென் பொருள், ஆஸ்கி (ASCI) உரை வடிவில் உள்ள உரைக்கோப்புகளை அடையாளம் காணும். ஆனால் அவற்றை தனக்கேயுரிய சொந்த 

natural language

304

.navy,mill


|

வடிவமைப்புக்கு மாற்றிய பின்னரே அவற்றைத் திரையில் காட்டும்.

natural language :இயற்கை மொழி: மனிதர்கள் பேசுகின்ற அல்லது எழுதுகின்ற மொழி. கணினி நிரலாக்க மொழி மற்றும் எந்திர மொழியிலிருந்து மாறுபட்டது. கணினி அறிவியலில் செயற்கை நுண்ணறிவு என்ற பிரிவில், இயற்கை மொழிகளை கணினி புரிந்து கொள்வது, அதனைக் கணினிச் சூழலுக்கேற்ப பயன்படுத்துவது ஆகியவை பற்றிய ஆய்வுகள் அடங்கும்.

natural language processing : இயற்கை மொழியாய்வுச் செயலாக்கம் : கணினி அறிவியல் மற்றும் மொழியியல் ஆகியவற்றில் ஒரு ஆய்வுப் புலம். எழுதப்படும் அல்லது பேசப்படும் மனித மொழியை அறிந்துகொள்ளும் மனித மொழிக்கு மறுமொழியிறுக்கும் கணினி அமைப்புகள் பற்றி ஆராயப்படுகின்றன.

natural language query :இயற்கை மொழி வினவல் : ஒரு தரவுத் தள முறைமையில் தகவலைப் பெற இயற்கை மொழிகளின் (ஆங்கிலம், தமிழ் போன்ற) கட்டளைகள் மூலம் உருவாக்கப்பட்ட வினவல். (எ-டுஃ. எண்பதுக்குமேல் மதிப்பெண் பெற்றவர் எத்தனை பேர்? வினவல் கட்டளைத் தொடர்அமைப்பு குறிப்பிட்ட இலக்கண விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். அப்போதுதான் கணினி அதைப் பகுத்து அறிந்து செயலாற்ற முடியும்.

natural language support :இயற்கை மொழி ஆதரவு : மனிதர்களின் குரலை அறிந்துகொள்ளும் கணினி. பயனாளர் குரல் கட்டளைகளை அவரின் சொந்த மொழியிலேயே தரலாம், கணினி அதற்கேற்ப செயலாற்றும்.

natural language system :இயற்கை மொழியாய்வு அமைப்புகள்: இயற்கை மொழியாய்வு முறைமை.

natural number: இயற்கை எண்:சுழி அல்லது அதைவிடக் கூடுதல் மதிப் புள்ள ஒரு முழு எண்.

navigation வழிநடத்தல்:வழி நடத்தல்; வழி செலுத்தல்; வழி கண்டறிதல்.

navigation bar :வழிநடத்து பட்டை: இணையத்தில் உலாவர அல்லது ஒரு குறிப்பிட்ட வலைத் தளத்தைச் சுற்றி வர மீத்தொடுப்புகளைத் தொகுத்து முகப்புப் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள பட்டை.

navigation button :வழி செலுத்து பொத்தான்.

navigation keys :வழி நடத்து விசைகள் : திரையில் காட்டியின் (cursor) நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் அல்லது வழிநடத்தும் விசைகள். விசைப்பலகையில் உள்ள நான்கு அம்புக்குறிகள், பின் இடவெளி (backspace),முடிவு (End),தொடக்கம் (Home), மேல்பக்கம் (Page Up), கீழ்ப் பக்கம் (Page Down) ஆகிய விசைகள் இவற்றில் அடங்கும்.

navigator : நேவிக்கேட்டர் : நெட்ஸ் கேப் நிறுவனம் உருவாக்கிய இணைய உலாவி மென்பொருள் (Browser),

navigator for e-mail :மின்னஞ்சல் வழிசெலுத்தி.

.navy.mil : நேவி.மில் : ஒர் இணைய தள முகவரி அமெரிக்கக் கப்பற் படையைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக்

களப்பெயர். 

.nb.ca

305

nest


|

.nb.ca : .என்.பி.சி.ஏ : ஒர் இணைய தள முகவரி கனடா நாட்டைச் சேர்ந்த நியூ புருன்ஸ்விக் மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

NBP : என்பிபீ : பெயர் பிணைப்பு நெறிமுறை என்று பொருள்படும் Name Binding Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஆப்பிள்டாக் குறும்பரப்புப் பிணையத்தில் பயனாளருக்குத் தெரிந்த கணுக் கணினிகளின் பெயர்களை ஆப்பிள்டாக் முகவரிகளாக மாற்றும் பயன்பாட்டு நெறிமுறை.

.nc : என்சி : ஒர் இணைய தள முகவரி நியூ காலிடோனியா நாட் டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

NCSA server : என்சிஎஸ்ஏ வழங்கன் : இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்திலுள்ள மீத்திறன் கணிப்பணிப் பயன்பாடுகளுக்கான தேசிய மையம் (National Center for Super Computing Applications) NCSA என சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இவ்வமைப்பு உருவாக்கிய ஹெச்டீடீபீ வழங்கன் கணினியும் இதுவும், செர்ன் (CERN) ஆய்வுக் கூடத்தில் உருவாக்கிய வழங்கன் கணினியும்தாம் வைய விரிவலைக்காக உலகிலேயே முதன் முதலாக உருவாக்கப்பட்ட ஹெச்டீடீபீ வழங்கன் கணினிகளாகும். பயனாளர்கள் இவற்றிலுள்ள தகவலை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

NCSA telnet : என்சிஎஸ்ஏ டெல்நெட்: மீத்திறன் கணிப்பணிப் பயன்பாடு களுக்கான தேசிய மையம் (National Center for Super Computing Applications) உருவாக்கி விநியோகித்த ஒர் இலவச டெல்நெட் கிளையன் மென்பொருள்.

.nc.us : .என்.சி.யு.எஸ் : ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டின் வடக்கு கரோலினா மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

NDMP : என்டிஎம்பீ: பிணையத் தரவு மேலாண்மை நெறிமுறை என்று பொருள்படும் Network Data Management Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். பிணைய அடிப்படையிலான கோப்பு வழங்கன் கணினிகளுக்கான ஒரு திறந்தநிலை நெறிமுறை. பணித்தளம் சாராதகவல் சேமிப்பை அனுமதிக்கிறது.

.ne : .என்இ : ஒர் இணைய தள முகவரி நைஜர் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.

near leter quality printer : ஏறத்தாழ எழுத்துத் தரம் ஒத்த அச்சுப்பொறி.

needle, sorting : வரிசைப்படுத்தும் ஊசி: வகைப்படுத்தும் ஊசி.

negation : எதிர்நிலை : இரு நிலைகளில் நிலவும் (இரும) சமிக்கை (signal) அல்லது துண்மி தோரணியை (bit pattern) அதற்கு எதிர்நிலையாக மாற்றியமைத்தல். (எ-டு) 1001 என்னும் துண்மிகளை 0.110 என மாற்றியமைத்தல்.

negative entry : குறையெண்/எதிரெண் உள்ளீடு : ஒரு கணிப்பானில் உள்ளிடு செய்யப்பட்ட எண்ணுக்குக் குறை (Negative) அடையாளமிட்டு அவ்வெண் மதிப்பை குறையெண் மதிப்பாக மாற்றியமைத்தல்.

nest :வலை: வலைப்பின்னல்;ஒன்றுக்குள் ஒன்று: ஒரு கட்ட மைப்புக்குள் அதேபோன்ற கட்டமைப்பை இடம்பெறச் செய்தல். (எ-டு) 1. ஒரு தரவுத் தளத்தில் உள்ள அட்டவணைக்குள் வேறோர் அட்டவணை இருக்கலாம். 2. ஒரு நிரலில் உள்ள செயல்முறைக்குள் இன்னொரு செயல்முறை வரை யறுக்கப்படலாம். 3. ஒரு தரவுக் கட்டமைப்பில்(data structure),ஓர் ஏட்டிலுள்ள (record) ஒரு புலம் (field) இன்னோர் ஏடாக இருக்கலாம்.

nested transaction:வலைபின்னல் பரிமாற்றம் : ஒரு நிரலில், ஒரு பரந்த பரிமாற்றச் செயல்பாட்டினுள் வேறொரு செயல்பாடு அல்லது செயல்பாடுகளின் வரிசை இடம்பெறலாம். புறத்தே இயங்கும் பெரிய பரிமாற்றத்தை முடிவுக்குக் கொண்டுவராமலே உள்ள இயங்கும் சிறிய பரிமாற்றத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியும்.

nesting loop : ஒன்றுள் ஒன்றான மடக்கி, .net : .நெட் : 1. இணையக் களப்பெயர் அமைப்பில் மேல்நிலை களத்தைக் குறிக்கும் சொல். இணையச் சேவையாளர் என்பதை அடையாளங் காட்டும் .நெட் என்பது முகவரியின் இறுதியில் இடம் பெறும். 2. மைக்ரோசாஃப்ட் அறிமுகப்படுத்தியுள்ள புதிய தொழில் நுட்பம். மொழிசாரா பணித்தளத்தை (Language Independent Platform) வழங்கும் ஒரு தொழில்நுட்பம். விசுவல் பேசிக்/விசுவல் சி++, சி#, விபிஸ்கிரிப்ட், ஜேஸ்கிரிப்ட் போன்ற மொழிகளில் எழுதப்படும் நிரல்களை மொழிமாற்றம் செய்து இடைநிலை மொழி நிரலாக மாற்றியமைத்து பொதுமொழி இயக்கச் சூழலில்(Common Language RuntimeCLR) இயக்க முடியும்.

net1 : வலை; இணையம் : இணையத்தில் மக்களையும், நிறுவனங்களையும் குறிக்கப் பயன்படும் முன்னொட்டு (Prefix) (எ-டு) இணையச் சமூகத்தில் மிகவும் மரியாதைக்குரிய நபரை இணையக் கடவுள் (net.god) என அழைப்பர்.

net2 : நெட் வலை : 1. இணையம் (Internet) என்பதன் சுருக்கம். 2. யூஸ்நெட் (Usenet)-டின் சுருக்கம்.

net address: வலை முகவரி; இணைய முகவரி: வைய விரி வலை (World Wide Web)-யின் முகவரி. இதனை யூஆர்எல் என்றும் அழைப்பர். உலகளாவிய வள இடங்காட்டி. (Universal Resource Locator)என்பதன் சுருக்கம். தனித்த (Unique) அல்லது சீரான (Uniform) வள இடங்காட்டி என்று கூறுவாரும் உண்டு.

NetBEU : நெட்பிஇயுஜ : நெட் பயாஸ் மேம்பட்ட பயனாளர் இடை முகம் (Net BIOS Enhanced User Interface) என்பதன் சுருக்கம். பிணைய இயக்க முறைமைகளுக்கான மேம்படுத்தப்பட்ட நெட் பயாஸ் நெறிமுறை. லேன் மானேஜர் (Lan Manager) வழங்கன் கணினிகளுக்காக ஐபிஎம் நிறுவனம் உருவாக்கியது. இப்போது வேறுபல பிணையங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

netBSD : நெட்பிஎஸ்டி : தன்னார்வ முயற்சியினால் உருவாக்கப்பட்ட பிஎஸ்டி யூனிக்ஸ் இயக்க முறைமையின் இலவசப் பதிப்பு. நெட் பிஎஸ்டி பல்வேறு வன்பொருள் பணித்தளங்களில் செயல்படக் கூடியது. போஸிக்ஸ் (POSIX) தர வரையறைக்கு ஒத்திசைவானது.

net.god இணையச் இணையக் கடவுள் :இணைய சமூகத்தில் மிகவும் செல்வாக்குப் பெற்ற மரியாதைக் குரிய நபர்.

nethead : வலைக்கிறுக்கன் இணையப் பைத்தியம் : 1. இணையத்துக்கு அடிமையானவர் போல எந்நேரமும் இணையத்திலேயே மூழ்கிக் கிடப்பவர். 2. rec. music.gdead செய்திக்குழுவில் அல்லது அதுபோன்ற அமைப்பில் கலந்துகொள்ளும் சுவைஞர்.

net history: வலை வரலாறு.netiquette வலைப் பண்பாடு; இணைய நாகரிகம் : பிணைய நாகரிகம் என்று பொருள்படும் Network Etiquette என்பதன் சுருக்கச் சொல். மின்னஞ்சல் மற்றும் யூஸ்நெட் (செய்திக் குழுக்கள்) கட்டுரைகள் போன்ற மின்னணுச் செய்திகளை அனுப்பும்போது கடைப்பிடிக்க வேண்டிய பண்பு நெறிகள் பற்றிய கோட்பாடுகள். இணைய நாகரிகத்துக்கு ஒவ்வாத செயல்பாடுகள் சில: சர்ச்சைக்குரிய கருத்துகள் மன உணர்வுகளைப் புண்படுத்தும் செய்திகள் தனிப்பட்ட முறையில் சாடுதல் - தொடர்பில்லாத ஏராளமான குப்பைச் செய்திகளை அனுப்பி வைத்தல் ஒரு திரைப்படம், தொலைக்காட்சிப் படம், புதினம் போன்றவற்றின் கதைமுடிவை முன்பே அறிவித்துவிடல் தீங்கு விளைவிக்கும் செய்திகளை மறை யாக்கம் செய்யாமல் வெளியிடல் -தொடர்பில்லாத அஞ்சல் குழுவுக்கு தொடர்பில்லாத செய்திகளை அனுப்புதல்.

netizen : வலைவாசி; இணையக் குடிமகன் : இணையத்தில் அல்லது பிற பிணைய அமைப்புகளில் நிகழ்நிலைத் தகவல் தொடர்புகளில் பங்குபெறும் ஒருவர். குறிப்பாக இணையக் கலந்துரையாடல், அரட்டை போன்றவற்றில் பங்கு பெறுபவர்.

Net Meeting : நெட் மீட்டிங்: இணையக் கலந்துரையாடலுக்கான மைக்ரோசாஃப்டின் மென்பொருள்.

net news :நெட் நியூஸ் :ஒரு இணைய நிரல்.

NetPC : வலைப்பீசி; இணையக்கணினி : 1996ஆம் ஆண்டில் மைக் ரோசாஃப்ட் மற்றும் இன்டெல் நிறுவனங்கள் உருவாக்கிய ஒரு கணினிப் பணித்தள வரன்முறை. குறிப்பாக விண்டோஸ் என்டி வழங்கன் அடிப் படையிலான பயன்பாட்டு நிரல்களை இயக்கும் கணினிகளுக்கானது. கிளையன் கணினிகளில் இயங்கும் பயன்பாடுகளைக் குறிக்காது. net personality :வலைநபர் ;இணையத் திலகம்; இணையத் தளபதி : இணையத்தில் ஒரளவு செல்வாக்குப் பெற்ற நபரைக் குறிக்க வழங்கும் பேச்சுவழக்குச் சொல்.

net police : வலைக் காவலர்: இணையத்தில் நடைபெறும் தகவல் பரிமாற்றத்தை ஒழுங்குபடுத்த தம்மைத்தாமே காவலர்களாய் நியமித்துக் கொண்டு தாங்கள் சரியென நினைக்கும் விதிமுறைகளை நடைமுறைப் படுத்த முயல்பவர்கள். இணையப் பண்பாட்டை மீறுபவர்களுக்கு எதிராக இவர்களின் நடவடிக்கைகள் அமையும். மின்னஞ்சல் வழியாக விருப்பத்துக்கு எதிரான விளம்பரங்களை அனுப்புபவர்களையும் இவர்கள் விட்டுவைப்பதில்லை. செய்திக் குழுக்கள் அல்லது அஞ்சல் பட்டியல்களில் தவறான அரசியல் கருத்துரைகளை வெளியிடுபவர்களையும் கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்.

Netscape Communicator :நெட்ஸ் கேப் கம்யூனிகேட்டர் : இணைய உலாவி,மின்னஞ்சல், வலைப்பக்கம் உருவாக்கி போன்ற பயன்பாடுகள் அடங்கிய கூட்டுத் தொகுப்பு. நெட்ஸ் கேப் நிறுவனத் தயாரிப்பு.

Netscape Navigator :நெட்ஸ்கேப் நேவிக்கேட்டர் : நெட்ஸ்கேப் நிறு வனம் வெளியிடும் இணைய உலாவி மென்பொருள். இணையப் பயனா ளர்கள் பலரும் விரும்பிப் பயன்படுத்துவது. விண்டோஸ் 3.1, விண்டோஸ் 95, விண்டோஸ் என்டி, விண்டோஸ் 2000, மெக்கின்டோஷ் மற்றும் யூனிக்ஸின் பல்வேறு வகை இயக்க முறைமைகளுக்குமான தனித் தனி நேவிக்கேட்டர் பதிப்புகள் உள்ளன. என்சிஎஸ்ஏ நிறுவனத்தின் மொசைக் இணைய உலாவிதான் வைய விரிவலைக்கான முதல் உலாவி. மொசைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் நெட்ஸ் கேப் நேவிக்கேட்டர். இப்போது நெட்ஸ்கேப் கம்யூனிக்கேட்டரின் ஒர் அங்கமாக வெளியிடப்படுகிறது.

netspeak : நெட்ஸ்பீக் வலைப்பேச்சு: மின்னஞ்சல், இணைய அரட்டை, செய்திக் குழுக்கள் ஆகியவற்றில் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவது பற்றிய மரபுகளின் தொகுதி. பெரும்பாலும் தலைப்பெழுத்துக் குறும்பெயர்களாக இருக்கும். (எ-டு).IMHO, ROFL. நெட்ஸ்பீக்கை எப்படிப் பயன்படுத்துவது என்பதை இணையப் பண்பாடு நிர்ணயிக்கிறது.

net telephone : வலைத் தொலைபேசி.

net-top box வலைப்பெட்டி: இணையப் பெட்டி வலைக் கணினி: குறைந்த அளவு வன்பொருள் பாகங்கள் கொண்ட ஒருவகை சொந்தக் கணினி. இணையத்தில் கிடைக்கும் மின்னஞ்சல், வலை உலா மற்றும் டெல்நெட் இணைப்பு போன்ற பல்வேறு சேவைகளை குறைந்த செலவில் நுகர்வதற்கென உருவாக்கப்பட்ட கணினி. இக் கணினிகளில் நிலைவட்டு இருக் காது. நிறுவப்பட்ட நிரல்கள் எதுவும் கிடையாது. ஆனால் தேவையான தகவல்களை, மென்பொருள் பயன்பாடுகளை இக்கணினி இணைக்கப் பட்டுள்ள பிணையத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். network card :பிணைய அட்டை.

networkd client:பினையக் கிளையன்.

network computer : பிணையக் கணினி: பிணையத்தில் இணைத்துக் கொள்வதற்குத் தேவையான வன்பொருள், மென்பொருள்களைக் கொண்ட ஒரு கணினி.

network control programme :பிணையக் கட்டுப்பாட்டு நிரல் : பெருமுகக் கணினி அடிப்படையிலான ஒரு தகவல் தொடர்புப் பிணையத்தில் பொதுவாக தகவல் தொடர்பு கட்டுப்படுத்தியில் தங்கியிருக்கும் நிரல். தகவல் தொடர்புப் பணிகளை இது நிறைவேற்றி வைக்கிறது. தகவல்களை திசைவித்தல், பிழைக்கட்டுப்பாடு, தடக்கட்டுப் பாடு, முனையங்களை அவை தகவல் அனுப்புகின்றனவா எனச் சோதித்தல் இவை போன்ற பணி களை மேற்கொள்கிறது. இதன் காரணமாய் தலைமைக் கணினி பிற செயல் பாடுகளில் கவனம் செலுத்த முடிகிறது.

network database:பிணையத் தரவுத்தளம் : 1. ஒரு பிணையத்தில் செயல்படும் தரவுத் தளம். 2. ஒரு பிணையத்தின் பிற பயனாளர்களின் முகவரிகளைக் கொண்டுள்ள தரவுத்தளம். 3. தகவல் மேலாண்மையில் தகவல் ஏடுகள் ஒன்றோடொன்று ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் தொடர்பு கொண்டுள்ள ஒருவகைத் தரவுத் தளம். பிணையத் தரவுத் தளம் படிநிலைத் தரவுத் தளம் போன்றது. ஒர் ஏட்டுக்கும் இன்னோர் ஏட்டுக்கும் தொடர்ச்சியான உறவுமுறை இருக்கும். சிறிய வேறுபாடும் உண்டு. கடுமையான கட்டமைப்பு இல்லாதது. எந்தவொரு ஒற்றை ஏடும் ஒன்றுக்கு மேற்பட்ட ஏடுகளைச் சுட்ட முடியும். இரண்டு ஏடுகளுக்கிடையே ஒன்றுக்கு மேற்பட்ட பாதைகள் இருக்க முடியும். ஆனால் படிநிலைத் தரவுத் தளத்தில் இரு ஏடுகளுக்கு இடையே ஒரேயொரு பாதைதான். பெற்றோர் ஏட்டி லிருந்து குழந்தை ஏட்டுக்குப் பாதை உண்டு.

network device driver :பிணையச் சாதன இயக்கி: பிணையத்தில் இணைக்கப்பட்ட கணினியிலுள்ள பிணையத் தகவி அட்டையின் செயல் பாட்டைக் கட்டுப்படுத்தும் மென்பொருள். இது, பிணைய தகவி அட்டைக்கும் கணினியின் ஏனைய வன்பொருள் மற்றும் மென் பொரு ளுக்கும் இடையேயான தகவல் தொடர்பினை ஒழுங்குபடுத்துகிறது.

network diagram :பிணைய வரைபடம்: பிணைய வரிப்படம் .

network directory: பிணையக் கோப்பகம் : குறும்பரப்புப் பிணை யத்தில் பயனாளர் பணிபுரியும் கணினி அல்லாத வேறொரு கணினியின் வட்டில் இடம்பெற்றுள்ள கோப்பகம். பிணையக் கோப்பகம் என்பது பிணைய இயக்ககம் (drive) என்பதிலிருந்து மாறுபட்டது. பயனாளர் கோப்பகத்தை மட்டுமே அணுகமுடியும். வட்டினில் அக் கோப்பகம் தவிர பிற பகுதிகளையும் பயனாளர் அணுக முடியுமா என்பது, பிணைய நிர்வாகி அவருக்கு வழங்கியுள்ள அணுகுரிமைகளைப் பொறுத்தது. ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினியில் பிணைய கோப்பகம் பகிர்வுக் கோப்புறை (shared tolder) என்றழைக்கப்படுகிறது.

Network File System : Slsosoruš கோப்பு முறைமை : சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனம் உருவாக்கிய பகிர்ந்தமை கோப்பு முறைமை ஆகும். விண்டோஸ் என்டி மற்றும் யூனிக்ஸ் பணிநிலையங்களின் பயனாளர்கள் தொலைதூரப் பிணையத்திலுள்ள கோப்புகளையும் கோப்பகங்களையும் அணுக முடியும்.

network interface card : பிணைய இடைமுக அட்டை.

network laser printer : பிணைய லேசர் அச்சுப்பொறி, பிணைய ஒளி யச்சுப்பொறி.

network latency :பிணைய நேரம் : ஒரு பிணையத்தில் இரண்டு கணினி களுக்கிடையே தகவலைப் பரிமாறிக் கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரம்.

network layer :பிணைய அடுக்கு : ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ மாதிரியத்தில் உள்ள ஏழு அடுக்குகளில் மூன்றாவது அடுக்கு. கணினிகளுக்கு இடையே யான தகவல் தொடர்புகளை வரை யறுக்கிறது. தரவுத் தொடுப்பு (Data link) அடுக்குக்கு மேல் இருக்கும். நிர்ணயிக்கப்பட்ட இலக்குக்குத் தகவல் சென்றடைவதை உறுதி செய்கிறது. ஒரு சாதனத்திலிருந்து இன்னொரு சாதனத்துக்கு தகவல் இடம் பெயர்வதை ஒழுங்குபடுத்தும் மூன்று அடுக்குகளுள் (தரவுத் தொடுப்பு, பிணையம், போக்கு வரத்து) நடுவில் உள்ளது.

network model : பிணைய மாதிரியம்: தரவுத் தளக் கட்டமைப்புக்கான பல்வேறு மாதிரியங்களில் ஒன்று. அவற்றுள் (1) பிணைய மாதிரியம் (2) படிநிலை மாதிரியம் (3) உறவு முறை மாதிரியம் ஆகியவை மிகவும் முக்கியமானவை. பிணைய மாதிரியம், ஏறத்தாழ படிநிலை மாதிரியம் போன்றது. ஒரேயொரு முக்கிய வேறு பாடு உண்டு. பிணைய மாதிரி யத்தில் ஒர் ஏடு ஒன்றுக்கு மேற்பட்ட சேய் ஏடுகளைக் கொண்டிருக்க முடியும். பிணைய மாதிரிய அடிப்படையிலான ஒரு தரவுத் தள மேலாண்மை அமைப்பினை படி நிலை மாதிரியத்தைபோல மாற்றி யமைக்க முடியும்.

network modem :பிணைய இணக்கி: ஒரு பிணையத்தில் பயனாளர்கள் பகிர்ந்து கொள்ளும் இணக்கி. (எ-டு) ஒரு நிகழ்நிலைச் சேவையாளரை, ஓர் இணையச் சேவையாளரை, ஒரு சேவை அமைப்பை அல்லது பிற நிகழ்நிலை வளங்களை அணுக பயனாளர்கள் தொலைபேசி மூலம் அணுகும்போது இந்தப் பிணைய இணக்கிப் பயன்படுகிறது.

network neighbourhood : நெட்வொர்க் நெய்பர்குட் : பிணையச் சுற்றம்: விண்டோஸ் 95/98 இயக்க முறைமையில் முகப்புத் திரையில் இடம்பெற்றுள்ள சின்னம். network news : பிணையச் செய்தி : இணையத்தில் இருக்கும் செய்திக் குழுக்கள். குறிப்பாக யூஸ்நெட் படிநிலையில் வந்த செய்திக் குழுக்களைக் குறிக்கும்.

network operation center:பிணையச் செயல்பாட்டு மையம் : ஒரு நிறு வனத்தில் பிணையப் பாதுகாப்புக்கு பொறுப்பான அலுவலகம். பிணை யத்தின் செயல்திறனை மேம்படுத்தும் அதேவேளையில் பிணைய அமைப்பின் செயலிழப்பு நேரத்தைக் குறைக்கவும் முயலும்.

network protocol : பிணைய நெறிமுறை : ஒரு கணினிப் பிணையத்தில் தகவல் தொடர்பினை சாத்தியமாக்குவதற்கு வரையறுக்கப்பட்ட விதிகள் மற்றும் அளபுருக்களின் தொகுதி.

network services பிணையச் சேவைகள் : 1. ஒரு நிறுவனச் சூழலில் பிணையம் மற்றும் கணினி களைப் பராமரிக்கும் பணிப்பிரிவு. 2. விண்டோஸ் பணிச்சூழலில், பிணைய அச்சிடல் மற்றும் கோப்புப் பகிர்வு போன்ற பிணையச் செயல்பாடுகளைச் சாத்தியமாக்கும் இயக்க முறைமையின் நீட்டிப்புகள்.

network software :பிணைய மென்பொருள்:ஒரு பிணையத்தில் வேறொரு கணினியை இணைத்துக் கொள்ள அல்லது பங்குபெற உதவும் மென்பொருள்.

network structure : பிணைய கட்டமைப்பு : ஒரு குறிப்பிட்ட பிணைய மாதிரியத்தில் பயன்படுத்தப்படும் ஏடுகளின் ஒழுங்கமைவு.

network terminator : பிணைய முடி வறுத்தி :பிணையச்சாதன இணைப்பி: ஒரு ஐஎஸ்டிஎன சாதனம. ஐஎஸ் டிஎன் தொலைபேசி இணைப்புத் தடத்திற்கும், முனைய தகவிகளுக்கும்(Terminal Adapter) அல்லது ஐஎஸ்டிஎன் தொலைபேசி போன்ற முனைய சாதனங்களுக்கும் இடயே இடைமுகமாய்ச்செயல்படும் சாதனம்.

network termination :பிணைய முடிப்பு.

Network Time Protocol : பிணைய நேர நெறிமுறை : ஒர் இணைய நெறி முறை. இணையத்தில் இணைக்கப் பட்டுள்ள கணினிகளின் ஒத்திசையா கடிகாரங்களுக்கான நெறிமுறை.

network of networks : பிணையங்களின் பிணையம். இணையத்தைக் குறிக்கும்.

network transport protocol :பிணைய போக்குவரத்து நெறிமுறை.

network virtual terminal : மெய்நிகர் முனையப் பிணையம்.

neural network : நரம்பணுப் பினையம்: மனித மூளையானது தகவலைக் கையாளுதலைக் கற்றுக் கொள்ளல், நினைவில் இருத்தல் போன்ற பணிகளை எவ்வாறு செய்கிறதோ அதே அடிப்படையில் அமைக்கப்படும் ஒரு செயற்கை நுண்ணறிவு அமைப்பு. மனித நரம்பு மண்டலத்திலுள்ள நரம்பு செல்களான நியூரான்களின் செயல்பாட்டை ஒத்தவாறு இதன் செயல்பாடு அமையும். நரம்பணுப் பிணையம் என்பது சிறுசிறு செயலாக்க உறுப்புகளின் ஒருங்கிணைப்பு ஆகும். ஒவ்வோர் உறுப்பும் சிறு எண்ணிக்கையில் உள்ளீடுகள்/ வெளியீடுகளைக் கொண்டிருக்கும். இந்தச் செயலாக்க உறுப்புகள் உள் வீடுகளின் தன்மையைக்கொண்டு கற்றுக்கொள்ளும் திறன் படைத் தவை. எனவே இதன்மூலம் விரும்பிய வெளியீட்டைப் பெற முடியும். நரம்பணுப் பிணையங்கள் தோரணி உணர்தல், பேச்சுப் பகுப்பாய்வு மற்றும் பேச்சு ஒருங்கிணைவு போன்ற துறைகளில் பயன்படுகின்றன.

.ne.us : .என்.இ.யுஎஸ் : ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டின் நெப்ரஸ்கா மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

new : புதிது.

new card : புதுய அட்டை;புது அட்டை.

new database : புதிய தரவுத் தளம்.

new file : புது கோப்பு.

new message : புது செய்தி.

new option : புதிய விருப்பத் தேர்வு.

next : அடுத்த.

next page button : அடுத்த பக்க பொத்தான்.

newbie : புதுமுகம்; கற்றுக்குட்டி : 1. இணையத்தில் அனுபவமில்லாத பயனாளர். 2. ஏற்கெனவே அடிக் கடிக் கேட்கப்படும் கேள்விகளுக் கான பகுதியில் விளக்கங்கள் இருந்த போதும் அதைப்பற்றி அறியாமல் அதே தகவலை ஐயமாகக் கேட்கும் அனுபவமில்லாத யூஸ்நெட் பயனாளர் குறித்து கிண்டலாகக் கூறப்படும் சொல்.

newline character : புதியவரி எழுத்து குறியீடு : திரைக்காட்சி அல்லது அச்சுப்பொறியில் காட்டியை அடுத்த வரியின் தொடக்கத்துக்கு நகர்த்தும் கட்டுப்பாட்டுக் குறியீடு. செயல் பாட்டளவில் புதியவரிக் குறியீடு என்பது நகர்த்தியின் திரும்புகை (carriage return), வரியூட்டல் (line feed) ஆகிய இரண்டு குறியீடுகளும் இணைந்த ஒன்றாகும். new/open/close : புதிய/திற/மூடு:அனைத்து மென்பொருள்களிலும் கோப்பு (File) பட்டியில் இருக்கும் தேர்வுகள்.

new record : புதிய ஏடு.

news feed or newsfeed : செய்தி ஊட்டல்; செய்தி உள்ளிடல் : செய்தி வழங்கன்களில் செய்திக்குழுக் கட்டுரைகளை விநியோகித்தல், பரிமாறிக்கொள்ளல், பரப்புதல்.என்என்டிபீ நெறிமுறை அடிப்படையில் பிணைய இணைப்புகள் மூலமாக தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும், செய்தி வழங்கன்களுக்கிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்தி இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

new search :புதிய தேடல்.

newsgroup : செய்திக் குழு: இணையத்தில் குறிப்பிட்ட தலைப்புகளில் உறுப்பினர்கள் கலந்துரையாடும் மன்றம். ஒரு செய்திக் குழுவில் கட்டு ரைகள் இடம்பெறும். அவற்றுக்கான ஐயங்கள், பதில்கள், மறுப்புரைகள் இடம் பெறலாம். ஒவ்வொரு செய்திக்குழுவுக்கும் ஒரு பெயர் உண்டு. படிநிலையில் தொடர்ச்சியான சொற்களினால் (இடையே புள்ளியிட்டு) கருப்பொருளின் உட் பிரிவுகள் குறிப்பிடப்பட்டிருக்கும். (எ-டு)) rec.crafts.textiles.needlework.

news : செய்திகள்.

news master :செய்திப் பொறுப்பாளர் ;செய்தித் தலைவர் : இணை யத்தில் ஒரு குறிப்பிட்ட புரவன் கணினியில் செய்தி வழங்கனைப் பராமரிக்கும் பொறுப்பில் இருக்கும் நபர். newsmaster@domain.name என்ற முகவரிக்கு அனுப்பப்படும் அஞ்சல்கள் இவருக்குப் போய்ச் சேரும்.

.newsrc: நியூஸ்ஆர்சி:யூனிக்ஸ் அடிப்படையிலான செய்தி வாசகர்களுக்கான நிறுவு கோப்பினை அடையாளங் காட்டும் கோப்பு வகைப்பெயர் (File extention).இந்த நிறுவுகோப்பு, பயனாளர் உறுப் பினராயுள்ள செய்திக் குழுக்களின் பட்டியலையும் ஒவ்வொரு செய்திக் குழுவிலும் பயனாளர் ஏற்கெனவே வாசித்த கட்டுரைகளின் பட்டியலையும் கொண்டிருக்கும்.

newsreader :நியூஸ்‌ரீடர்:ஒரு யூஸ்நெட் கிளையன் நிரல். யூஸ்நெட் செய்திக் குழுவில் பயனாளர் உறுப்பினராகவும், கட்டுரைகளைப் படித் தறியவும், பதில்களை அனுப்பவும், மின்னஞ்சல் மூலம் பதில் அனுப்ப வும், கட்டுரைகளை அனுப்பவும் உதவும். இன்றைக்கு பல இணைய உலாவிகளும் இத்தகைய வசதிகளைத் தருகின்றன.

news server : செய்தி வழங்கன்: இணையத்திலுள்ள செய்திக் குழுக் களின் தகவல்களை நியூஸ் ரீடர் கிளையன்களுக்கும் ஏனைய வழங் கன்களுக்கும் பரிமாறிக் கொள்ளும் ஒரு கணினியை அல்லது நிரலை இவ்வாறு அழைக்கலாம்.

newton : நியூட்டன் : ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட சொந்த இலக்க முறைத் துணைவன் (Peronal Digital Assistant) சாதனத்தின் பெயர் ஆப்பிள் நியூட்டன் மெலேஜ்பேடு எனப்பட்டது.

Newton OS :நியூட்டன் ஓஎஸ் : ஆப்பிள் நியூட்டன் மெலேஜ்பேடு எனப்படும் சொந்த இலக்கமுறைத் துணைவனில் செயல்படும் இயக்க முறைமை.

NeXT : நெக்ஸ்ட் : நெக்ஸ்ட் கம்ப்யூட்டர்(NeXT Computer)என்ற நிறு வனத்தின் தயாரிப்பு. இந்த நிறுவனம் பின்னாளில் நெக்ஸ்ட் சாஃப்ட்வேர் நிறுவனம் என்றழைக்கப்பட்டது. ஸ்டீவன் ஜாப்ஸ் (Steven Jobs) என்பவர் 1985இல் நிறுவிய ஒரு கணினித் தயாரிப்பு மற்றும் மென்பொருள் உருவாக்க நிறுவனம். இந்த நிறுவனத்தை 1995ஆம் ஆண்டு ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம் விலைக்கு வாங்கியது.

.nf : .என்.எஃப் : ஒர் இணைய தள முகவரி நார்ஃபோல்க் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.nt.ca : என்எஃப்.சி.ஏ : ஒர் இணைய தள முகவரி கனடா நாட்டின் நியூஃபவுண்ட்லாண்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.ng : .என்ஜி : ஒர் இணைய தள முகவர் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.nh.us : என்ஹெச்.யுஎஸ் : ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டின் நியூ ஹேம்ப்ஸைர் மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.ni: என்ஐ : ஒர் இணைய தள முகவரி நிகராகுவா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

NIC : நிக் : 1. பிணைய இடைமுக அட்டை என்று பொருள்படும் Network Interface Card என்பதன் சுருக்கம். 2. பிணையத் தகவல் மையம் என்று பொருள்படும் Network Information Center என்ற தொடரின் சுருக்கம். ஒரு பிணையத்தைப் பற்றியும் அதிலிருந்து பெறப்படும் சேவைகள் பற்றியும் பயனாளர் களுக்கு தகவல் வழங்கும் அமைப்பு. இணையத்தின் முதன்மை நிக், இன்டர்நிக் எனப்படுகிறது. அக இணையம் மற்றும் பிற தனியார் பிணையங்கள் தமக்கென தனியான நிக் அமைப்புகளைக் கொண்டிருக்கும்.

nickel cadmium battery : நிக்கல் கேட்மியம் மின்கலன்:கார மின்பகுப்புத் திரவம் கொண்ட மின்னூட்டத்தகு மின்கலம். இதே போன்ற ஈய அமில மின்கலன்களை விட நிக்கல் கேட்மியம் மின்கலன்கள் நீண்டநாட்கள் செயல்படுபவை. நீண்ட நாட்கள் சேமிக்க வல்லவை.

nickel metal hydride battery: நிக்கல் உலோக ஹைடிரைடு மின்கலன் : நிக்கல் கேட்மியம், காரப்பொருள் மின்கலன்களைவிட அதிக வாழ்நாளும் உயர்ந்த செயல்திறனும் கொண்ட மறு மின்னூட்டத்தகு மின்கலம்.

nickname : புனைபெயர்; செல்லப் பெயர் : மின்னஞ்சலில் பெறுநர் முகவரி இடம் பெறும் இடத்தில் ஒன்று அல்லது மேற்பட்ட முழுப் பிணைய முகவரிகளைத் தருவதற்குப் பதில் சுருக்கமாகப் பயன் படுத்தும் பெயர். (எ-டு) kumar@annauniv.edu ஏன்பதற்கு பதிலாக kumar என்பது புனைபெயராக இருக்கலாம். நிரலில் புனைபெயர் நிலைப்படுத்தப்பட்டது எனில், முழுப் பெயரையும் கொடுப்பதற் குப் பதில் kumar என்று மட்டும் குறிப்பிட்டால் போதும். கணினித் துறையில் பணியாற்றுபவர்களின் முகவரிகள் name@computer. annauniv.edu என்றிருக்கலாம். computer faculty என்னும் புனைபெயர் கணினித் துறையைச் சார்ந்த அனைவரையும் குறிப்பதாக இருக்கலாம்.

nis : நிஸ்; என்ஐஎஸ் : பிணைய தகவல் சேவை எனப்பொருள்படும் Network Information Service stairp தொடரின் சுருக்கம்.

.nl : .என்எல் : ஒர் இணைய தள முகவரி நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும்புவிப்பிரிவுக் களப்பெயர்.

NMOS OR N-MOS :என்-மாஸ் ; என்மாஸ்: N-தட உலோக ஆக்ஸைடு குறைகடத்தி எனப் பொருள்படும் NChannel Metal Oxide Semiconductor என்பதன் சுருக்கப் பெயர். மாஸ்ஃபெட் (MOSFET-Metal Oxide Semiconductor Field Effictive Transistor) களில் மின் இணைப்புத்தடம் துளைகளின் நகர்வுகளால் ஏற்படுவதில்லை (மின்னணு ஓர் அனுவிலிருந்து இன்னோர் அணுவுக்கு இடம் பெயர்வதால் ஏற்படும் வெற்று இடம் துளை (hole) எனப்படுகிறது. மின்னணு இடம் பெயர்வதால்தான் துளை ஏற்படுகிறது. துளைகளைவிட மின்னணு வேகமாக இடம்பெயரும் என்பதால் என்மாஸ், பீமாலைவிட வேகமானது ஆனால் என்மாஸை வடிவமைப்பது கடினமானது அதிகச்செலவு பிடிக்கும்.

NNTP : என்என்டீபீ : பிணையச் செய்திப் பரிமாற்ற நெறிமுறை என்று பொருள்படும் Network News Transfer Protocal என்ற தொடரின் சுருக்கச் சொல். செய்திக் குழுக்களின் பரப்புகையை இந்த இணைய நெறிமுறை நிர்வகிக்கிறது.

nonconticuous data structure: தொடர்பறு தரவுக் கட்டமைப்பு : நினைவகத்தில் தொடர்ச்சியில்லாமல் உறுப்புகள் இருத்தப்படுகின்ற ஒரு தகவல் கட்டமைப்பை இவ்வாறு குறிக்கிறோம். வரைபட, மர வகையைச் சார்ந்த தகவல் கட்டமைப்புகளின் உறுப்புகள் நினைவகத்தில் தொடர்ச்சியின்றி ஆங்காங்கே இருத்தப்படுகின்றன. அடுத்தடுத்த உறுப்புகள் முகவரிச் சுட்டுகள் (pointers) மூலம் அறியப் படுகின்றன.

nondestructive readout : அழிவிலாப் படிப்பு : நினைவகத்தில் உள்ள தகவலைப் படித்தவுடன் அழிந்து போகாமல் படிக்கும் முறை. தகவலை அழியவிடாமல் இருத்தி வைக்கும் சேமிப்புத் தொழில்நுட்பம் அல்லது படித்தவுடன் தகவலை மீண்டும் புதுப்பிக்கும் தொழில் நுட்பம் மூலம் அழிவிலாப் படிப்பு இயல்வதாகிறது.

none : எதுவுமில்லை.

nonmaskable interrupt : மறைக்கவியலாக் குறுக்கீடு : மென்பொருள் மூலம் மற்றும் விசைப்பலகை அல்லது அதுபோன்ற சாதனங்களின் மூலம் உருவாக்கப்படும் குறுக்கீட்டுக் கோரிக்கைகளை மீறி முன்னுரிமை எடுத்துக் கொள்கின்ற ஒரு வன்பொருள் குறுக்கீடு இவ்வாறு அழைக்கப்படுகிறது. இத்தகைய குறுக்கீட்டை பிற சேவைக் கோரிக்கைகள் மீறிவிட முடியாது. மிக மோசமான நினைவகப் பிழை நிகழும்போது அல்லது மின் தடங்கலின்போது மட்டுமே இத்தகு மறைக்கவியலாக் குறுக்கீடு நுண் செயலிக்கு அனுப்பப்படும். nonprocedural language : செயல் முறைசாரா மொழி: தொடர் கட்டளைகள், துணை நிரல்கூறுகள் செயல்கூறு அழைப்புகள் மற்றும் கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள் கொண்ட நிரலாக்க மொழிகளை செயல்முறைசார் மொழி என்றழைக்கிறோம். இவ்வாறில்லாமல் சில மெய்ம்மைகள், அவற்றுக்கிடை யேயான உறவுமுறைகள் அடிப்படையில் வினவல்கள் மூலமாகக் குறிப்பிட்ட விடையைப் பெறும் மொழிகளை செயல்முறைசாரா மொழிகள் எனலாம். டி'பேஸ் ஃபாக்ஸ்புரோ, எஸ்கியூஎல் போன்ற மொழிகள் இவ்வகையில் அடக்கம். இவற்றை நான்காம் தலைமுறை மொழிகள் என்றும் கூறுவர்.

nontrivial : எளிதற்ற(து): எளிதான முறையில் தீர்வு காண முடியாதது. மிகவும் கடினமான பிரச்சினைக்கு சிக்கலான நிரலாக்கச் செயல்முறை மூலம் தீர்வு காண்பதை எளிதற்ற தீர்வுமுறை என்கிறோம்.

non uniform memory architecture : ஒழுங்கிலா நினைவகக் கட்டுமானம் : சீக்குவென்ட் (Sequent)-இன் சீரிலா அணுகு நினைவகத்திற்காக வடி வமைக்கப்பட்ட முறைமைக் கட்டுமானம். ஒரு பகிர்வு நினைவக வகை. மையப்படுத்தப்பட்ட ஒற்றை நினைவகச் சில்லாக இல்லாமல் பல பகிர்வு நினைவகத் துண்டங்களைக் கொண்டதாக இருக்கும்.

.no : என்ஒ : ஒர் இணைய தள முகவரி நார்வே நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

nonbreaking space :முறிவிலா இடவெளி : ஒரு சொல்லின் இரு பகுதிகள் அல்லது இரு சொற்கள் வரியின் இறுதியில் வரும்போது பிரிந்துவிடாமல் இருக்க வழக்கமான இடவெளி(Space)-க்குப்பதிலாக இடம்பெறச் செய்யும் குறியீடு. இரு பகுதிகளும் பிரியாமல் ஒரே வரியில் இருக்கச் செய்யும். திரு. அறிவரசு என்ற சொற்கள் வரியின் இறுதியில் வரும்போது இடமில்லாமையால் திரு. என்பது முந்தைய வரியிலும் அறிவரசு அடுத்த வரியிலும் இடம் பெறும். திரு. அறிவரசு என்ற சொற்கள் இணைபிரியாமல் ஒரே வரியில் நிற்கவேண்டுமெனில் இரு சொற் களுக்குமிடையே முறிவிலா இடவெளியை இடம்பெறச் செய்ய வேண்டும்.

non impact print : தொடா அச்சு: தாக்குறவிலா அச்சு.

nonvolatile memory : அழியா நினைவகம் : மின்சாரம் துண்டிக்கப்பட்ட பின்னும் அழியாமல் வைத்திருக்கும் சேமிப்புச் சாதனம். ரோம், இப்ரோம், ஃபிளாஷ் நினைவகம், குமிழ் நினைவகம் அல்லது மின் கலத்தினால் பாதுகாக்கப்படும் சீமாஸ் ரோம் போன்ற உள்ளக நினைவகத்தைக் குறிக்கும் சொல். சில வேளைகளில் வட்டுகளைக் குறிப்பதும் உண்டு.

No-op : செயற்படா; செயலிலா; வினையிலா.

NOP : No operation என்பதன் குறும் பெயர். செயலிலா என்பது பொருள்.

NOR circuit : இல் அல்லது மின்சுற்று.

NOR operation : இல்-அல்லது வாயில் செயலாக்கம்.

normal : இயல்பான. normal view button :இயல்பான காட்சிப் பொத்தான்.

normalise : இயல்பாக்கு.

Norton anitvirus: நார்ட்டன் ஆன்டி வைரஸ். நச்சுநிரல் எதிர்ப்பு மென் பொருள்.

notation base : தளக் குறிமானம்.

notation, binary coded decimal :இருமக் குறியீட்டுப் பதின்மக் குறி மானம்.

notation, octal :எண்மக் குறிமானம்.

notation, radix:அடிஎண் குறிமானம்.

note book computer : கையேட்டுக் கணினி.

notelead : குறிதாள் அட்டை

Notepad : நோட்பேடு : ஒர் உரைத் தொகுப்பான் மென்பொருள். விண் டோஸ் 95/98-இல் உள்ளது.

Novel NetWare :நாவெல் நெட்வேர்: நாவெல் நிறுவனம் தயாரிக்கும் குறு பரப்புப் பிணைய இயக்க முறைமையின் மென்பொருள் தொகுதிகள். ஐபி எம்பீசி மற்றும் ஆப்பிள் மெக்கின் டோஷ் கணினிகளில் செயல்படக் கூடியவை. பிணையப் பயனாளர்கள் கோப்புகளையும், நிலைவட்டுகள் மற்றும் அச்சுப்பொறிகள் போன்ற முறைமை வளங்களையும் பகிர்ந்து கொள்ள நாவெல் நெட்வேர் அனுமதிக்கிறது.

.np : என்பீ : ஒர் இணைய தள முகவரி நேபாள நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.

NPN transistor : என்பீஎன் மின்மப்பெருக்கி : மின்மப் பெருக்கிகளில் ஒருவகை. N-வகைப் பொருளால் ஆன உமிழிக்கும் திரட்டிக்கும் இடையில் பின்னப்பட்ட P-வகை பொருளால் ஆன அடிவாய் (Base) கொண்டது. அடிவாய், உமிழி, திரட்டி ஆகிய மூன்று முனையங் களின் வழியே மின்னோட்டம் பாய் கிறது. N-P.N மின்மப் பெருக்கிகளில் மின்னணுக்கள்தாம் மின்னூட்டச் சுமப்பிகளாய்ச் செயல்படுகின்றன. அவை உமிழியிலிருந்து திரட்டியை நோக்கிப் பாய்கின்றன.

.nr . .என்.ஆர் : ஒர் இணைய தள முகவரி நெளரு நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

NSAP : என்எஸ்ஏபிஐ : நெட்ஸ்கேப் வழங்கன் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் எனப் பொருள்படும் Netscape Server Application Programming Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். நெட்ஸ்கேப் ஹெச்டீடீபி வழங்கனுக்கும் ஏனைய பயன் பாட்டு நிரல்களுக்கும் இடையே யான இடைமுகத்துக்கான வரன் முறைகளை இது குறிக்கிறது. ஒரு வலை உலாவியிலிருந்து வலை வழங்கன் மூலமாகப் பயன்பாட்டு நிரல்களை அணுகுவதற்கு இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

.ns.ca : .என்.எஸ்.சி.ஏ : ஒர் இணைய தள முகவரி கனடா நாட்டின் நோவா ஸ்காட்டியா மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

NSFnet என்எஸ்எஃப்நெட் :அமெரிக்க நாட்டின் தேசிய அறிவியல் கழகம்(National Science Foundation) உருவாக்கிய விரிபரப்புப் பிணையம். ஆர்ப்பாநெட்டுக்குப் (ARPAnet) பதிலாக சிவில் பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டது.1995 ஆண்டுவரை இணையத்தின் முதுகெலும்பாய்த் திகழ்ந்தது. அமெரிக்க நாட்டில் இணையத்துக் கான முதுகெலும்புச் சேவைகளை இப்போது தனியார் பிணையங்கள் வழங்கி வருகின்றன.

.nt.ca : .என்.டி.சி.ஏ : ஒர் இணைய தள முகவரி கனடா நாட்டின் வட மேற்கு பிரதேசத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

ΝΤFS :என்டீ.எஃப்எஸ் : என்டி கோப்பு முறைமை என்று பொருள் NT File System என்பதன் சுருக்கம். விண்டோஸ் என்டி இயக்க முறைமைக்கென தனிச்சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட உயர்நுட்பக் கோப்பு முறைமை. இதில், நீண்ட கோப்புப் பெயர் இயலும். முழுமையான பாதுகாப்புள்ள அணுகல் கட்டுப்பாடு, கோப்பு முறைமை மீட்பு, மிகப் பரந்த சேமிப்பு ஊடகம் மற்றும் விண்டோஸ் என்டி போசிக்ஸ் (POSIX) துணை முறைமைக்கான சிறப்புக் கூறுகளை உள்ளடக்கியது. பொருள் நோக்குப் பயன்பாடுகளையும் ஏற்கிறது. அனைத்துக் கோப்புகளையும் பயனாளர் மற்றும் முறைமை வகுத்த பண்புக் கூறுகள் கொண்ட பொருள்களாகவே கருதிச் செயல்படுகிறது.

NTP : என்டீபீ : பிணைய நேர நெறி முறை என்று பொருள்படும் Network Time Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு கணினியின் உள்ளமை நேரத்தையும் அது தொடர்புகொள்ளும் வழங்கன் கணினி அல்லது வானொலி, செயற்கைக்கோள் வாங்கி, மோடம் போன்ற பிறவற்றின் நேரத்தையும் ஒத்திசைவாக்கப் பயன்படுகிறது. குறும்பரப்புப் பிணையங்களில் ஒரு மில்லி வினாடிக்குள்ளானதுல்லியம் பெற முடியும். விரிபரப்புப் பிணையங்களில் துல்லியம் சில பத்து மில்லி வினாடிகள்.

N-type semiconductor : என்-வகை குறைகடத்தி : மின்சாரக் கடத்தல் மின்னணு மூலம் நடைபெறும் குறை கடத்திப் பொருள். P-வகை குறை கடத்திகளில் மின்கடத்தல், துளைகள் (holes - electron vacancies) மூலம் நடைபெறுகிறது. மிகை மின்னணுக் கொண்ட மாசுப்பொருள் சேர்த்து N-வகைக் குறைகடத்திகள் தயாரிக்கப்படுகின்றன.

.nய : .என்யு : ஒர் இணைய தள முகவரி நியூ (Niue) நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

nudge shadow : தள்ளு நிழல்.

nuke : அழி, முறி : 1. ஒரு கோப்பினை, கோப்பகத்தை அல்லது நிலைவட்டு முழுமையையும் அழித்தல். 2. ஒர் இயக்க முறைமையின், ஒரு பயன்பாட்டின் அல்லது ஒரு நிரலின் செயல்பாடு ஒன்றை நிறுத்தி வைத்தல்.

null instruction :பயனிலாஆணை: வெற்று ஆணை.

null value : வெற்று மதிப்பு.

number base : எண் ஆதாரம்.

number crunching :எண் நொறுக்கல்; எண் அரைத்தல்: ஏராளமான எண்வகைத் தகவல்களின் கணக்கீடு களைக் குறிக்கிறது. மீண்டும் மீண்டும் செய்கிற கணக்கீடாக இருக்கலாம். கணிதமுறையில் மிகச் சிக்கலானதாக இருக்கலாம். அல்லது இரண்டும் சேர்ந்ததாயிருக்கலாம். ஆனாலும் தகவல் உள்ளிட்டு வெளியீட்டுச் செயல்பாடுகளை இது குறிப்பதில்லை. கணினியுள் நடை பெறும் அகநிலைச் செயலாக் கத்தையே குறிக்கிறது. எண்ணியல் துணைச் செயலிகள் இதுபோன்ற பணிகளை மேற்கொள்கின்றன. இதனால் கணினிகளின் செயல்திறன் பெருமளவு அதிகரிக்கப்படுகிறது.

number generator : எண் இயற்றி.

numlock key : எண் பூட்டு விசை.

number system, binary : இரும எண் முறைமை.

numbers, random: குறிப்பிலா எண்கள்.

numerical expression : எண்முறைத் தொடர்.

Numeric Lock Key : எண்பகுதி பூட்டுவிசை :நிலைமாற்று விசை. நிகழ்த்தும்போது (turned on) விசைப் பலகையிலுள்ள எண்பகுதியை செயல்பாட்டுக்குக் கொண்டு வருகிறது. அதன்பின் எண் விசைகளை ஒரு கணிப்பான் (Calculator) பாணியில் தகவல் உள்ளீடு செய்யப் பயன்படுத்த முடியும்.

numeratorldenominator :பின்ன எண் பகுதி|விகுதி. numeric type : எண் வகை.

.nyc.ny.us : என்ஒய்சி.என்ஒய்.யுஎஸ் : ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாநிலத்திலுள்ள நியூயார்க் நகரைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.ny.us : என்ஒய்.யுஎஸ் : ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.nz : என்இஸட் : ஒர் இணைய தள முகவரி நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.